அறிந்துகொள்ளவேண்டிய இரு காதல் கதைகள்!
காதல் தந்த பரிசுகள் யாழ் இராமநாதன் கல்லூரி, திருக்கோணமலை சண்முகா மகளிர் வித்தியாலயம்
ஈழ மண்ணில் இரு பெண்களின் காதலும் அவர்களின் காதல் பரிசுகளும்
ஒருவர் #திருமதி_லீலாவதி_இராமநாதன்
சேர்.பொன்.இராமநாதனின் காதலி. அவுஸ்ரேலியாவை தாய்நாடாகக் கொண்ட ஆங்கிலேயப் பெண்மணி. இராமநாதன் அவரகள் உயில் எழுதப்போகிறேன் என்றபொழுது தானும் சேர்ந்து தன் கை, காதுகளில் இருந்த வைர ஆபரணங்கள் அனைத்தையும் பூஜை அறைக்கு முன்னால் கழற்றி வைத்துவிட்டு இனிமேல் இவற்றை தான் அணியப்போவது இல்லை இனி அனைத்தும் தர்மச்சொத்துக்கள் என்று “பார்வதி பரமேஸ்வரர் சாட்சியாக திரு.சேர்.பொன்னம்பலம் இராமநாதன் மற்றும் அவர்தம் பாரியார் ஆகிய திருமதி. லீலாவதி இராமநாதன் ஆகிய நாங்கள்
எழுதும் உயில்……………………………. “ என தானும் தனது சொத்துக்கள் அனைத்தையும் தன் கணவரின் இறுதிக்கால கனவாகிய பரமேஸ்வராக் கல்லூரிக்கும் இராமநாதன் மகளிர் கல்லூரிக்கும் அர்ப்பணித்தவர். தன் கணவரின் மறைவுக்குப் பின்னாலும் ஒரு தனிப் பெண் ஆளுமையாக நின்று அந்த இரு பெரும் கல்லூரிகளையும் வடிவமைத்து நிர்வகித்தவர். அதற்காகவே அம்மையாருக்கு இலங்கைப் பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதிப்பட்டம் வழங்கிக் கௌரவித்தது ( இலங்கைப் பல்கலைக்கழக வரலாற்றில் வழங்கப்பட்ட முதலாவது கௌரவக் கலாநிதிப் பட்டம்)
மற்றையவர் #திருமதி_தங்கம்மா_சண்முகம்பிள்ளை
திரு.சண்முகம்பிள்ளை அவர்களின் காதலி. திருகோணமலையை பிறப்பிடமாகக் கொண்ட ஈழத்தமிழ்ப் பெண். ஒரு முறை திருமலைக் காதல் தந்த பரிசு யாழ் இராமநாதன் கல்லூரி, திருக்கோணமலை சண்முகா மகளிர் வித்தியாலயம்
கடலோரத்தில் இந்துசமுத்திர அலைகள் பட்டு உருவாகும் அந்த மெல்லிசையை இரசித்தபடி இருவரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது சண்முகம்பிள்ளை “யாழ்ப்பாணத்தில் இணுவிலில் இராமநாதன் மகளிர் கல்லூரி என்று ஒரு பெண்கள் பாடசாலை இருக்கிறதே அதைப்போல் திருகோணமலையிலும் பெண்பிள்ளைகள் தனியாக கல்விகற்க ஒரு பாடசாலை வேண்டும்” என்ற தன் ஆசையை தன் மனைவிடம் சொல்லுகின்றார். தன் கணவனின் கனவை நிறைவேற்ற அவரின் மறைவைத் தொடர்ந்து தன் சொத்துக்கள் அனைத்தையும் அர்ப்பணித்து ஒரு தனிப் பெண்ணாக நின்று ஒரு பெரும் பாடசாலையை வடிவமைத்து கட்டுவித்து அதற்கு தன் கணவரின் பெயரையே ( திருகோணமலை ஶ்ரீ / @சண்முகா மகளிர் கல்லூரி ) சூட்டி அழகுபார்க்கின்றார்.
வரலாற்றின் பக்கங்களில் பெண்களுக்காக ஆண்கள் கொடுத்த காதல் பரிசுகளுக்கு மத்தியில் ஆண்களுக்காக பெண்கள் கொடுத்த இரு உன்னத காதல் பரிசுகள்.

Leave a Reply
You must be logged in to post a comment.