தேசிய சிக்கலைத் தீர்ப்பதில் துணை நிற்கும் பரந்த மனப்பான்மை

தேசிய சிக்கலைத் தீர்ப்பதில் துணை நிற்கும் பரந்த மனப்பான்மை

ஜெஹான் பெரேராரா

(இலங்கையின் தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர்)


பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலி அமைப்பைச் சேர்ந்த  நீண்டகாலக் கைதிகள் 8 பேரின் விடுதலையானது யாரும்  எதிர்பாராதது. சனாதிபதி இரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் போராட்ட இயக்கத்துடன் தொடர்புடைய சுமார் 4,000 பேரைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளது. ஆனால்  அவர்களில் பெரும்பாலானோருக்கு பிணை  வழங்கப்பட்டுள்ளது.  இருந்தும்  பல நூற்றுக்கணக்கானவர்கள், ஏன் அதைவிட  அதிகமாமானவர்கள்   தொடர்ந்தும் பல மாதங்களாக தடுப்புக்காவலில் வாடுகின்றனர். அவர்களைத் தேசிய மற்றும் பன்னாட்டு  மனித உரிமைகள் அமைப்புகளால்  விடுவிக்க அல்லது பொதுமன்னிப்புக்கான அழைப்புகளை அரசாங்கம் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. குறிப்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட மாணவர் தலைவர் வசந்த முதுலிகே மற்றும் மாணவர் இயக்கத்தின் தலைமையில் செயற்படும் இளம்  வண.கலவேவா ஸ்ரீதர்ம தேரர்  இருவரது கைதுகள் பரவலான கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது. அண்மையில்  நாட்டின் மனித உரிமைகள் ஆணையம் இந்தக் கைதுகளைக் கண்டித்துள்ளளது.  இது ஒரு அரச அமைப்பாக இருந்தாலும் போற்றுதற்குரிய சுதந்திர உணர்வை வெளிப்படுத்தி வருகிறது.

Presidential pardon for 197 prisoners on Independence Day

எட்டு விடுதலைப் புலி உறுப்பினர்களை அரசாங்கம் விடுவித்தமை பாராட்டப்பட வேண்டியதொன்றாகும். அவர்களை விடுவிக்க வேண்டும் என்பது  தமிழ் சமூகம் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் நீண்ட கால கோரிக்கையாகும். இது தேசிய நல்லிணக்கத்திற்கான சூழலை உருவாக்குவதற்கு உதவியாக இருக்கும்.  அவர்களது குடும்பத்தினர் மற்றும் தேசிய மற்றும் பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளின் எதிர்ப்புகள் மற்றும் வேண்டுகோள்கள் இருந்தபோதிலும், குறைந்தபட்சம் நான்கு முந்தைய அரசாங்கங்கள் இவர்களை விடுதலை செய்வதிலிருந்து பின்வாங்கியிருந்தன.  விடுவிக்கப்பட்டவர்களில் மூவர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை படுகொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டவர்கள்.  குண்டுத் தாக்குதலில்  சந்திரிகா குமாரதுங்க ஒரு கண் பார்வையை இழந்தவர். ஜனாதிபதி இரணில் விக்ரமசிங்கவின் கையொப்பமிடப்பட்ட ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் மூலம் அவர்களை விடுவிப்பதற்கு முன்னர், அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அவர்களது உணர்வுகளை கேட்டறிந்து அவரது ஒப்புதலைப்  பெற்றிருந்தது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தன்னைப் படுகொலை செய்ய முயற்சித்த விடுதலைப் புலி உறுப்பினருக்கு மன்னிப்பு வழங்கியது போன்று, முன்னாள் ஜனாதிபதி குமாரதுங்க, சித்திரவதைக்குள்ளாகி பிளவுபட்ட எமது நாடும் மக்களும் நலம்பெறத் தேவையான பெருந்தன்மையை வெளிப்படுத்தியுள்ளார்.

எட்டுக் கைதிகளில் நால்வர் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தண்டனையை விட நீண்ட காலம் சிறைத்தண்டனை அனுபவித்தவர்கள் என்று ஜனாதிபதி செயலகம் ஒரு திடுக்கிடும் ஒப்புதலைத்  தெரிவித்துள்ளது. “மூன்று கைதிகளுக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதில் அவர்கள் 22 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்து விட்டார்கள். ஒரு கைதிக்கு  10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால்  14 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்து விட்டார்.  இரண்டு கைதிகளுக்கு  5  ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்து விட்டார்கள்.   இவர்கள்  ஜனாதிபதியின் மன்னிப்பைப் பெற்றவர்களில் அடங்குவர். இது ஒரு கடுமையான மனித உரிமை மீறலாகவும், அவர்களை இவ்வாறு சிறையில் அடைத்து வைத்திருந்தவர்கள் சகிக்க முடியாத அதிகார வரம்புமீறலை இளைத்துள்ளார்கள்.  இது எப்படி நடந்தது என்பதை அரசாங்கம் விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கும், தேசிய மற்றும் பன்னாட்டு  சமூகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டும்.  இந்த நீதிக்கு மாறான  கூடுதல் நீதித்துறை தடுப்பு,  ஜெனீவா போன்ற பன்னாட்டு  மன்றங்களில் கூறப்படும் கூற்றுகளை நியாயப்படுத்த முனைகிறது.  மேலும் எந்த நீதித்துறை ஆணையின்றி இன்னும் எத்தனை பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்ற கேள்வியையும் எழுப்புகிறது.

இடிதாங்கி

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அரசாங்கம் பயன்படுத்துவதற்கும் வரம்புமீறல்  செய்வதற்கும் முன்னால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் சக்தியின்மை மற்றும் அவர்கள் குறைக்கப்படக் கூடிய பரிதாபமான அவலநிலையை புலிகளின் கைதிகள் விடயத்தில் காணலாம். மனித உரிமைகள் ஆணையம், “1979 ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) எண் .48 இன் பிரிவு 9 (l) இன் கீழ் திருத்தப்பட்டது.  அமைச்சர் எந்த ஒரு நபருடன் தொடர்புடையவர் அல்லது அக்கறை கொண்டுள்ளார் என்று நம்பவோ அல்லது ஐயப்படவோ காரணம் உள்ளது. எந்தவொரு சட்டத்திற்குப் புறம்பான செயலும், அமைச்சரால் தீர்மானிக்கப்படும் அத்தகைய இடத்தில் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, அத்தகைய நபரை முதல் நிகழ்வில் மூன்று மாதங்களுக்கு மிகாமல் தடுத்து வைக்குமாறு அமைச்சர் கட்டளையிடலாம். தடுப்புக்காவலின் மொத்தக் காலம் பன்னிரெண்டு மாதங்களுக்கு மிகாமல் இருக்கும் பட்சத்தில், ஒரு முறை மூன்று மாதங்களுக்கு மிகாமல் ஒரு காலத்திற்கு அத்தகைய உத்தரவு அவ்வப்போது நீட்டிக்கப்படலாம்.  43 ஆண்டுகளாக பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டம் இந்த முறையில் பயன்படுத்தப்பட்டு  வரம்புமீறப்பட்டு  வருகிறது.  மேலும் நீதித்துறை உத்தரவு இல்லாமல் மக்களை சிறையில் அடைக்க அனுமதிக்கும் வகையில் இது ஒரு கொடூரமான சட்டம் என்று  சரியாகவே அழைக்கப்படுகிறது.

இந்த ஆண்டு  யூலை மாதம் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி இரணில் விக்கிரமசிங்க பெரும்பான்மை வாக்குகளால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.  உடனேயே அரசாங்கம் பாதுகாப்பு படையினர் ஊடாக எதிர்ப்பு இயக்கத்தை கடுமையாக ஒடுக்கியது. மூன்று மாதங்களுக்கும் மேலாக நிலவி வந்த போராட்டத் தளங்கள், உலகெங்கிலும் உள்ள ஊடகங்களில் மக்களின் அகிம்சையின் ஆற்றலுக்குச் சான்றாகக் காட்டப்பட்டிருந்தன. பதாதைகள்  கிழித்தெறியப் பட்டன.  தெருக்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது  தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இது அவர்கள் தப்பி ஓடும் வரை நீடித்தது.  இது போன்ற கடுமையான சம்பவங்கள்,   தடைச் செயல்கள்,  சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றுக்கான உரிமைகளை மீறல்கள்  வெகு விரைவில் வெகுமக்கள் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவந்தது. இன்னும் மோசமானது, வன்முறையில் ஈடுபட்டதாகவோ அல்லது அதற்கு சதி செய்ததாகவோ காட்டப்படாதவர்களை சிறையில் அடைக்க அரசாங்கம் கொடுரமான  பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தியது.

இன்று நாட்டில்  மேலோட்டமாகப் பார்க்கும் போது  இயல்பு நிலை உள்ளது.  எதிர்ப்புகளை வலுக்கட்டாயமாக அடக்குவதன் காரணமாக, சுற்றுலாப் பயணிகளும்   அவர்களின் டொலர்களும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு உதவியாக இருக்கும். ஆனால் உண்மையில் ஜனாதிபதியும் அரசாங்கமும் பொருளாதாரப் பற்றாக்குறை மற்றும் வெகுமக்கள் அனுபவிக்கும் அநீதி உணர்வின் எரிமலைக்கு – அது எந்த நேரத்திலும் வெடிக்கலாம் – தலைமை தாங்குகின்றனர். போராட்ட இயக்கத்தில் உள்ளவர்கள், தங்கள் சக போராட்டக்காரர்கள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதை நன்கு அறிவார்கள். அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தூண்டிவிட்டு, அதில் பங்குகொண்ட அரசாங்கத்துடன் இணைந்த கைக்கூலிகள் தங்கள் சுதந்திரத்தை தொடர்ந்து அனுபவித்து, அவர்களின் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இப்படியான இரட்மை நிலைப்பாடுகளைப் பார்க்கும்போது  அரசாங்கத்தின் மற்றும் அதன் தலைமையின் நம்பகத்தன்மையை தொடர்ந்து சிதைத்து வருவதோடு, எதிர்கால எதிர்ப்புகளை அணிதிரட்ட மின்னல் கடத்தி போல்  செயல்பட முடியும்.

செயலற்ற எழுச்சி

போராட்ட இயக்கம் என்பது பொது வெளியில் வந்து முழக்கம்  எழுப்பி போக்குவரத்திற்கு இடையூறு விளைவிப்பவர்கள் மற்றும் பலத்தை காட்டுபவர்களை மட்டும் கொண்டிருக்கவில்லை. பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டு, தங்கள் குடும்பங்களுக்கு சம்பாதிப்பதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய மிகப் பெரிய போராட்ட இயக்கம் தற்போது செயலிழந்துள்ளது. எழுபது முதல் 100 விழுக்காட்டைத் தாண்டிய பணவீக்கத்தால் மக்களின் உண்மையான வருமானம் குறைந்தது பாதியாகச் சுருங்கிவிட்ட நிலையில் ஒரு சில அத்தியாவசியப் பொருட்களின் விலையை அரசு குறைத்தால் மட்டும் போதாது. பொருளாதாரச் சரிவுக்குக் காரணமானவர்கள் சுதந்திரமாகவும் அதிகாரத்திலும் உள்ளனர்.  ஆனால் புதிய ஜனாதிபதியும் புதிய அரசாங்கமும் பதவியேற்க வேண்டும் என்று எதிர்ப்புத் தெரிவித்து போராடியவர்கள்தான்    தண்டிக்கப்பட்டுள்ளார்கள்.

வசந்த முதலிகே மற்றும் வண. கல்வேவ ஸ்ரீதம்மா ஆகியோர் அரசாங்கத்தால் அதிகாரமற்றவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியின் அடையாளங்களாக மாறிவிட்டனர். அவர்கள் இருவரும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்டனர். பயங்கரவாதத் தடைச் சட்டம் என்பது பயங்கரவாதத்தைப் பற்றியது மற்றும் பயங்கரவாதத்தைத் தடுப்பதற்காகவே உள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழு பயங்கரவாதத்தை வரையறுத்துள்ளது, “எந்தவொரு நபரும் அச்சுறுத்தல் அல்லது பலத்தைப் பயன்படுத்துதல் மற்றும் வன்முறையைப் பயன்படுத்துவதன் மூலம் சட்டத்திற்குப் புறம்பாக பொதுமக்கள் அல்லது பொதுமக்களின் ஒரு பிரிவினினரிடம் அரசியல், கருத்தியல் அல்லது மதக் காரணமாக   அச்சத்தை பரப்பும் நோக்கம் கொண்டது. 

இந்த நியமத்தைப் பிரயோகித்து, ஒகஸ்ட் 18 ஆம் திகதி முதல், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், வசந்த முதலிகே மற்றும் வண.  ஸ்ரீகல்வேவ ஸ்ரீதம்மா ஆகியோரைக் கைது செய்தல், தடுத்து வைத்தல் மற்றும் தொடர்ந்து சிறையில் அடைத்திருப்பது “நியாயமற்றதும்  மற்றும் நியாயயப்படுத்த முடியாததுமாகும்” என்று மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. அவர்கள் இருவரும் உடல்நிலை சரியில்லாமல் உள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் மோசமான நிலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், குறிப்பாக வண. ஸ்ரீதம்மா டெங்கு வைரஸ் தொற்றுக்கு ஆளாகக் கூடும் எனவும்  அது அவருக்கு எமனாக முடியும் என்றும் நம்பப்படுகிறது.    அவர்கள் மீது இன்னும் குற்றம் சாட்டப்படவில்லை. அவர்கள் பன்னாட்டு சமூகத்திற்கு அரசாங்கம் முழுவதுமாக இரத்து செய்வதாக உறுதியளித்த பயங்கரவாத தடைச் சட்டத்தின் கடுமையான விதிகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இன நல்லிணக்கத்தை நோக்கமாகக் கொண்டு ஜனாதிபதி இரணில் விக்கிரமசிங்க  விடுதலைப் புலிக்  கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது போல இவர்களுக்கும் ஜனாதிபதி  பொது மன்னிப்பு ஒன்றைப் பிரகடனப்படுத்த  வேண்டும். அது நாட்டை பீடித்துள்ள நோயைத் தீர்ப்பதற்க  உதவும்.

(ஆங்கிலத்தில்  த ஐலன்ட் நாளேட்டில் வெளிவந்த  Spirit of magnanimity to accompany national problem solving என்ற ஆங்கிலக் கட்டுரையின் மொழியாக்கம் இது. https://island.lk/spirit-of-magnanimity-to-accompany-national-problem-solving/  என்ற இணையதள முகவரியில் மூலத்தை படிக்கலாம். தமிழாக்கம் கனடா நக்கீரன்)

——————————————————————————————————————–

Spirit of magnanimity to accompany national problem solving

2022/11/01

by Jehan Perera

The release of eight long term LTTE prisoners held under the Prevention of Terrorism Act by the government was unexpected.  The government led by President Ranil Wickremesinghe has arrested and detained about 4,000 people associated with the protest movement though it has permitted bail to be granted to most of them.  But several hundreds, if not more, continue to languish in detention for several months.  The government has so far not been receptive to calls for their release, or amnesty, by national and international human rights organisations.  In particular, the arrest of Wasantha Mudulige, a student leader, and Ven.Galwewa Siridhamma Thero, a young Buddhist monk active in the leadership of the student movement, both charged under the Prevention of Terrorism Act, has elicited widespread condemnation most recently from the country’s Human Rights Commission, which has been demonstrating a sterling sense of independence for a state body.

 The release of the eight LTTE members by the government needs to be commended as it is a long standing demand from the Tamil community and Diaspora and will be helpful in creating a climate for national reconciliation. At least four previous governments have balked from doing this despite protests and pleadings from their families and national and international human rights organisations.  Three of those released had been convicted of trying to assassinate former President Chandrika Kumaratunga who was blinded in an eye by the bomb attack.  Prior to releasing them through a presidential pardon signed by President Ranil Wickremesinghe, the government has ascertained the sentiments of the former president and obtained her consent.  In a manner similar to her former protégé President Maithripala Sirisena who pardoned an LTTE member who had tried to assassinate him, former president Kumaratunga demonstrated the magnanimity that is required to bring healing to our tortured and divided country and people.

 In a startling admission the presidential secretariat stated that four of the eight prisoners had served longer prison terms than their court-ordered sentences.  “Three prisoners had been sentenced to 30 years in prison and had served 22 years, one prisoner who had been sentenced to 11 years and had served 14 years, one who has been sentenced to 10 years and had also served 14 years, two prisoners who were sentenced to five years but had served 14 years, were among those who received a presidential pardon.” This would appear to be a serious violation of human rights and an intolerable abuse of power by those who kept them incarcerated in this manner. The government would need to conduct an inquiry and offer an explanation to the victims as well as the larger national and international communities how this happened.  The extra judicial detention would tend to justify the claims made at international forums such as Geneva and also raises the question of how many more are incarcerated without any judicial mandate.

 LIGHTNING ROD

 The powerlessness of victims and their families in the face of the government’s use and abuse of the Prevention of Terrorism Act, and the pathetic plight they can be reduced to can be seen in the case of the LTTE prisoners.  The Human Rights Commission has pointed out that “Under section 9 (l) of the Prevention of Terrorism Act (PTA) No.48 of 1979 as amended, where the Minister has reason to believe or suspect that any person is connected with or concerned in any unlawful activity, the Minister may order that such person be detained for a period not exceeding three months in the first instance, in such place and subject to such conditions as may be determined by the Minister. Any such order may be extended from time to time for a period not exceeding three months at a time, provided that the aggregate period of detention does not exceed twelve months.”  The PTA has been used and abused in this manner for 43 years and is rightly called a draconian law as it permits people to be incarcerated without a judicial order.

 No sooner had President Ranil Wickremesinghe been elected President by a majority vote in Parliament in July this year the government cracked down hard on the protest movement through the security forces. Protest sites that had been in existence for over three months and which had been shown on media throughout the world as a testament to the power of non-violence by masses of people, were torn down and protestors on the streets were baton charged and tear gassed till they fled. Severe incidents such as this are deterrent actions, in violation of the rights to freedom of association and freedom of expression, soon brought the mass protests to a halt.  Worse still, the government has used the dreaded Prevention of Terrorism Act to incarcerate those who have not been shown to have engaged in violence or to have plotted it.

 Today the country has a veneer of normality, due to the forcible suppression of protests, which can be helpful in bringing tourists and their dollars back to the sustenance of the economy.  But in reality the president and government are presiding over a powder keg of economic deprivation and sense of injustice suffered by the masses of people. Those in the protest movement are well aware that many of their fellow protestors have been arrested and are in prison.  Their sense of injustice rankles when they see government-affiliated hoodlums who instigated and took part in attacks against peaceful protestors continue to enjoy their freedom and engage in their corrupt practices.   The double standards being practiced continues to erode the credibility of the government and its leadership and can act as a lightning rod to mobilise future protests.

 DORMANT UPRISING

 The protest movement does not consist of only those who come out publicly onto the streets to shout slogans and obstruct traffic and make a show of strength.  There is a much larger protest movement that is currently dormant, who are suffering due to the collapse of the economy and who have to give priority to earning for their families.  It is not enough that the government should reduce the price of a few essential commodities when the real income of the people has shrunk by at least a half due to inflation rates that exceed 70 to 100 percent.  There is also a need to assuage the sense of injustice that those who caused the economic collapse are free and in power but those who protested and ensured that a new president and new government should take over are the ones being punished.

Wasantha Mudalige and Ven Galwewa Siridhamma have become symbols of the injustice perpetrated against those who are powerless by the government.  Both of them were arrested under the Prevention of Terrorism Act (PTA).  The PTA is about terrorism and is meant to prevent terrorism.  The Human Rights Commission has defined terrorism to be where “Any person by the use of threat or use of force and violence by unlawfully targeting the civilian population or a segment of the civilian population with the intent to spread fear thereof in furtherance of a political, ideological or religious cause commits terrorism.”

 Applying this standard, the Human Rights Commission has asserted that the arrest, detention and continued incarceration of Wasantha Mudalige and Ven Galwewa Siridhamma from August 18 onwards under the PTA is “unreasonable and without justification.”  Both of them are in poor health, are reportedly kept in appalling conditions, and Ven Siridhamma in particular has been hospitalised due to the possibility of him contracting the dengue virus which can prove fatal.  They have not yet been charged for any offense and are being detained under the draconian provisions of the PTA that the government has pledged to repeal in its entirety to the international community.  An amnesty to them declared by President Ranil Wickremesinghe can exert a healing influence in the same way as intended for ethnic reconciliation by the pardons granted to the LTTE prisoners.

About editor 3017 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply