Is Sri Lanka A Buddhist Country? – A Critical Reflection Of Sri Lankan Buddhism

இலங்கை பவுத்த நாடா?  இலங்கைப் பவுத்தம் பற்றிய ஒரு விமர்சனப் பார்வை

ரெஹான் பெர்னாண்டோ 

(குறிப்பு – இலங்கையில் பவுத்தம் பற்றிய தவறான புரிதல் தமிழ் மக்களிடையே காணப்படுகிறது.  பவுத்தம்  கிமு மூன்றாம் நூற்றாண்டு  தொடக்கம் கிபி 9 ஆம் நூற்றாண்டுவரை  தமிழகத்தில் பரவிச் செல்வாக்குப் பெற்றிருந்தது. காஞ்சிபுரம், உறையூர், வஞ்சி, மதுரை முதலிய நகரங்கள் பவுத்த கோயில்கள் இருந்தன. பவுத்தம்  தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு பெருந்தொண்டாற்றியுள்ளது. ஐம்பெரும் காப்பியங்களில் மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி பவுத்த காப்பியங்களாகும்.  பவுத்த மதத்தின் வளர்ச்சிக்கு சங்கமித்திரர், நாதகுந்தனார், தர்மபாலர், போதிதருமர் போன்ற தமிழ்த்  தேரர்கள் பெரும் தொண்டாறியிருக்கிறார்கள். சீனா நாட்டில் பவுத்தத்தைப் பரப்பியவர் போதிதருமர் ஆவர். இலங்கையில் காணப்படும் பவுத்தம், சிங்கள – பவுத்தமாகும். கடந்த நூற்றாண்டில் பவுத்த மதம் பற்றிய ஆய்வு நூல்கள் நூற்றுக் கணக்கில் வெளிவந்தன. பவுத்த மதத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள இந்த நூல்கள் துணைநிற்கின்றன.)

இலங்கை ஒரு பவுத்த நாடாக அறியப்படுகிறது.  அதன் பாரம்பரியம் பல பவுத்த மரபுகளையும் பேசுகிறது. எவ்வாறாயினும், இலங்கை ஒரு நாடாக பவுத்தத்தின் உண்மையான தத்துவத்தை சொந்தமாக வைத்திருக்கிறதா அல்லது அதன் வெளித்தோற்றத்தில் அது பவுத்தம் என்று பாசாங்கு செய்கின்றதா என்பதை ஆராய இந்த கட்டுரை ஒரு விமர்சன மதிப்பீடாக இருக்கும்.

கௌதம புத்தரின் எண்வகை வழிகளும் - துன்பத்திற்கு காரணம் ஆசையே என்ற கோட்பாடும்

பவுத்தம் என்பது ஒரு வாழ்க்கை முறை. சத்யா (உண்மை) நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் வாழ்க்கை முறை.  பவுத்தம் ஒருபோதும் ஒரு மதமாக கருதப்படவில்லை.  அல்லது அப்படிக் கருத முடியாது.  அதேசமயம் அது ஒரு தத்துவம். புத்தர் தனது வாழ்நாளில் எந்த மதத்தையும் உருவாக்கவில்லை. மாறாக, அவர் வாழ்க்கையின் முதன்மையான யதார்த்தங்களைப் பற்றிச்  சிந்தித்து, நாம் விடுதலை அடையக்கூடிய பாதையைக் காட்டினார். கெட்டகாலத்துக்கு  இலங்கை பவுத்தர்கள் மத வன்முறை மற்றும் மத மூடநம்பிக்கைகளைக் காட்டும் தவறான திருப்பத்தில் (ஒரு மூடநம்பிக்கை புராண வாழ்க்கை அமைப்பு) வாழ்கின்றனர். பவுத்தம் என்றால் என்ன என்பதை விளக்குவது அல்ல, இலங்கை எப்படி பவுத்தத்தைக் கையாண்டது என்பதை விமர்சனரீதியாக காட்டுவதே கட்டுரையின் நோக்கமாகும்.

புத்தரின் நடைமுறை

புத்தரின் நடைமுறை பற்றின்மை தவிர வேறில்லை. ஆகவே, நம் வாழ்வில் உள்ள தேவையற்ற பற்றுதல்கள், உண்மையான விடுதலையை அனுபவிக்க நமக்கு உதவாது. இது நாம் விரும்பிச் சுமக்கும் அடிமைத்தனம். பவுத்தத்தின் புனிதத்தின் ஆழமான மதிப்புகள் (சர தர்மம்) மிதமிஞ்சிய பற்றுதல்களின் வாழ்க்கையை நடத்த ஒருபோதும் நமக்குக் கற்பிக்காது. புத்த தம்மத்தைப் (அறநெறியை) புரிந்துகொள்வது இந்தச் சூழலில் மிகவும் முக்கியமானது. என் கருத்துப்படி, எல்லா மதங்களும் தோல்வியடைந்துவிட்டன. குறிப்பாக அதன் சடங்குகள், விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் மனித ஆசைகளுடன் எந்தத் தொடர்பும் இல்லை. எனவே, புனித நூல்களின் போதனைகளின்படி வாழ்வதற்கு நாம் ஒரு விருப்பத்தை உருவாக்க வேண்டிய தம்மம்  (தர்மம் என்ற சொல்லுக்கு பிராகிருதம், பாலி இருமொழிகளிலும் தம்ம, தம்மோ என்றுதான் உச்சரிப்பு. தர்மம் என்ற சொல்லின் தமிழ் வடிவமே அறம் என்பது.)

கெட்டகாலமாக , இலங்கைப்  பவுத்தர்களில் பெரும்பான்மை யானவர்களுக்கு புத்தரின் நடைமுறை  என்றால் என்னவென்று தெரியாது. புத்தரின் அடிப்படைப் போதனைகளை அவர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அவர்கள் புத்தரை வணங்குபவர்களாகவே மாறிவிட்டனர். ஆனால் உண்மையாகப்  பின்பற்றுபவர்கள் அல்ல. முதன்மையான தவறான கருத்து என்னவென்றால், இலங்கை வெறும் வழிபாட்டு தேசம்  ஆனால்  சிந்திக்கும் தேசம் அல்ல. இவ்வாறான நிலையில், உண்மையான பவுத்தத்தையும் அதன் செழுமையான தத்துவத்தையும் பிரதிபலிக்கவோ அல்லது புரிந்துகொள்ளவோ ​​மக்கள் முயற்சி செய்வார்கள் என்று நான் நினைக்கவில்லை. இது நமது தொடக்கக் கல்வியில் நன்கு வெளிப்படுத்தப்பட்டு ஏற்பாடு செய்யப்பட வேண்டும். இலங்கைப் பவுத்தர்கள் தங்கள் அறியாமை, மத அடிப்படைவாதம் மற்றும் தேசியவாதம் ஆகியவற்றால் புத்த மதத்தை அழித்துள்ளனர். இந்த தேசத்தின் முக்கிய நோய்கள் இவைதான்.  இன்று குணப்படுத்த முடியாத புற்றுநோயாக மாறிவிட்டது.

Altar Inside Of The Sri Dalada Maligawa Or The Temple Of The Sacred Tooth  Relic A Buddhist Temple In The City Of Kandy Sri Lanka Which Houses The  Relic Of The Tooth

பல்பொருள் அங்காடி- பவுத்த கோவில்கள்

புத்தர் தன்னைத் தானே வெறுமையாக்கும் வாழ்க்கையை நடத்தினார். அது அவருடைய விடுதலைக்கான நடைமுறை. நிரந்தரமான எதையும் அவர் கட்டியதில்லை. இன்று அப்படி ஒன்று நடந்தால் அது பவுத்தத்தின் அடிப்படை போதனைக்கு எதிரானது. இலங்கையில், பல்பொருள் அங்காடியாக மாறிய பல புத்த கோவில்களை நாம் காண்கிறோம். கோவில்கள் கட்டப்படும் சொத்துக்கள், ஆயிரமாயிரம் கட்டிடங்கள், வண்ணமயமான ஒளி அமைப்புகள், கவர்ச்சிகரமான புத்தர் சிலைகள், விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் பல. இந்தப் பொருட்கள் ஒரு பல்பொருள் அங்காடியை நமக்கு நினைவூட்டுகின்றன. இதனால் பவுத்த கோயில்கள் வழிபாட்டிற்கான இடமோ அல்லது புத்த மதத்தைக் கடைப்பிடிப்பதற்கான ஒரு அழகான இடமோ அல்ல. உண்மையான பவுத்தத்தை நாம் உணர்ந்திருந்தால் ஆலயம் எளிமையாக இருக்க வேண்டும். எளிமையாக இருக்கும் இடம் அரண்மனை நிலைக்குச் சென்றால்,  அதில் ஏதோ பெரிய தவறு இருக்கிறது.

பெரும்பாலான பவுத்த தேரர்கள் பல்பொருள் அங்காடி உரிமையாளர்களாக வாழ்கிறார்கள் –   புத்தரின் சீடர்களாக அல்ல. எடுத்துக்காட்டாக, அவர்கள் நாளாந்த  உணவுக்காகப் பிச்சை எடுக்க வேண்டும்.  இதுதான் பண்டைய பாரம்பரிய வாழ்க்கை முறையாகும். மாறாக, இன்று இலங்கைத் துறவிகள் தங்கள் அன்றாட உணவுக்கான பட்டியலை (கிராம மக்களுக்கு)  அனுப்புகிறார்கள். அவற்றைச்  சாதாரண மக்கள் வழங்குகிறார்கள். இந்த வகையான வாழ்க்கை முறையானது, சித்தார்த்தாரின் சுய-வெற்று நடைமுறை வாழ்க்கை முறைக்கு எதிரானது ஆகும்.  இலங்கைப் பவுத்த பிக்குகள் நிரந்தர அரண்மனை போன்ற மாளிகைகளில் வாழ்கிறார்கள். ஆக பவுத்த கோயில்கள் கள்ளச் சந்தைகள் போல்  மாறிவிட்டன.  சுயமறுப்பு வாழ்க்கைக்குப் பதிலாக, அவர்கள் சுயஆதாய வாழ்க்கையை நடத்துகிறார்கள். இது பவுத்தம்  எப்படிச் சிதைக்கப்பட்டுவிட்டது என்பதைக் காட்டுகிறது.

இலங்கையில் உள்ள பவுத்த கோவில்கள் மெத்தா, கருணா, முதிதா மற்றும் உபேக்கா (அன்பான கருணை, பரிவு, இரக்கம் மற்றும் பரோபகார இன்பம்) ஆகியவற்றைக் காட்டுவதில்லை. இவை பவுத்தத்தின் முக்கிய இயக்க சக்திகள் ஆகும்.  அவை நம் நல்வாழ்வுக்கு வழிகாட்டுகின்றன. சமசசீர் மற்றும் உடல்நலமான ஆன்மிக வாழ்வைப் பேணுவதற்கான பவுத்தத்தின் சாரத்தை பன்சில் (ஐந்து கட்டளைகள்) மேலும் காட்டுகிறது. துறவிகள் இந்த முதன்மைப்  போதனைகள் மற்றும் நடத்தைகள் மூலம் வாழ்க்கைக்கு பொருள் கொடுக்க வேண்டும். கெட்டகாலத்துக்கு, அவர்கள் தங்கள் நலனில் மட்டுமே அக்கறை கொண்டுள்ளனர். அதனால், கோவில்கள் கறுப்புச் சந்தையாக மாறிவிட்டன. சுயமரியாதை வாழ்க்கைக்குப் பதிலாக, அவர்கள் சுயலாப வாழ்க்கையை நடத்துகிறார்கள்.

தன்னலமற்ற தன்மையின் அடையாளம் ‘போதி’ மரம்

போதி மரம் (இலங்கையில் அரசமரம்) மிகவும் பிரபலமானது.   இதனை இலங்கையின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் காணலாம். ஆனால், இந்த மரத்தின் செய்தியை நாம் உணர்ந்திருக்கிறோமா என்பது மிகப்பெரிய கேள்வி ஆகும்.  புத்தர் இந்தப் போதி  மரத்தின் கீழ் வாழ்க்கையின் பல உண்மைகளை அறிந்து கொண்டு  இறுதியில் நிர்வாணத்தை அடைந்தார். இது சுயநலமற்ற மற்றும் வெறுமையின் அடையாளம ஆகும். .

ஆனால், இந்த நாட்டில் குறிப்பாக கோவில்களில் நாம் பார்ப்பது, தங்க வேலிகளால் கூட அலங்கரிக்கப்பட்டு மூடப்பட்டிருக்கும் ஒரு மரத்தைத்தான். ஒரு விதத்தில் இது மிகவும் விசித்திரமாகத் தெரிகிறது, மறுபுறம், போதி மரத்தைப் பார்ப்பதில் ஊக்குவிக்கப்பட வேண்டிய ஆன்மீகம் இதுவல்ல. சீலம்,  சமாதி மற்றும்  ப்ரக்ஞை (அறநெறி, சிந்தனை, விழிப்புணர்வு) ஆகியவற்றைப் பிரதிபலிக்க இந்த மரம் ஒரு அடையாளமாக இருக்கலாம். இது பவுத்தர்களின் விடுதலைக்கான வழி.

ஆனால் இந்த அடிப்படை ஆன்மீகத்தை இலங்கையில் எங்கே காணலாம்? பவுத்த மதம், சடங்குகளை நிறைவேற்றுதல், வழிபாடு, பாசாங்கமான புனிதம் என்று  மக்களின் பாசாங்குக்கு வெறும் அடையாளமாகவே போதி மரம் இருந்து வருகிறது. உண்மையான புனிதம் என்பது சுய-வெறுமை வாழ்க்கை மற்றும் தன்னலமற்ற தன்மையிலிருந்து வருகிறது.

பவுத்தம் மதத்திற்கு ஆதரவானதா அல்லது மதத்திற்கு எதிரானதா? 

இது மிகவும் சச்சரவுக்குரிய தலைப்பாகும். ஆனால் அதைப் புரிந்துகொள்வது சிக்கலானது அல்ல. பவுத்தம் எந்த மதத்தையும்  மறுக்கவில்லை. இங்கே, பவுத்தம் என்பது ஒரு தத்துவம், ஒரு வாழ்க்கை முறை, மற்றும் ஒரு விடுதலைக்கான நடைமுறை ஆகும்.  பவுத்தத்தை மதச் சூழலுக்குப் பயன்படுத்துவதில் மிதமிஞ்சிய சிக்கலை உருவாக்கியவர்கள் கல்வியறிவற்ற இலங்கையர்களே. அவர்கள் தங்கள் சொந்த நலனுக்காக ஒரு பாசாங்கு ஆன்மீகத்தை முன்வைத்துள்ளனர். அது பவுத்தத்தின் விடுதலை நடைமுறையல்ல. எடுத்துக்காட்டாக, புத்த கோவில்களில் இந்துக் கடவுள்கள் மற்றும் தெய்வங்களின் சிலைகள் உள்ளன. உண்மையான பவுத்தத்தில் இதற்கு இடம் உண்டா? பணம் சம்பாதிப்பது ஒரு சிறந்த வணிகப் போக்கு என்பதால், பவுத்த அதிகாரிகள் பவுத்தத்தின் இத்தகைய பதிப்புகளை ஆதரிக்கின்றன.

பவுத்தம் + மதம்= தேசிய நோய்

இந்த நாட்டில் பவுத்தம் பொதுவாக ஒரு மதமாகப் பயன்படுத்தப்படுகிறது. பவுத்தர்கள் பவுத்தத்தின் வளாகத்திற்குள் ஒரு பாசாங்கு மதத்தைக் காட்ட விரும்புகிறார்கள். இந்தச்  செயல்பாட்டில் உள்ள ஆபத்து என்னவென்றால்,  அரசியல் அடிப்படையிலும் மத அடிப்படையிலும்  தேசியவாதம் முன்னெடுக்கப் படுகிறது. இது தேசியவாதத்தை வளர்ப்பதற்காகன இலங்கையர்களின் நோய். பவுத்தம் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப மதமாக தோன்ற முடியாது. கடந்த நான்கு தசாப்தங்களாக சோகமான நினைவுகளை கொண்டு வந்த தேசியவாதத்தை வளர்ப்பதற்காக இந்த நாட்டில் பல அரசியல் மற்றும் மத அதிகாரிகளால் உருவாக்கப்பட்ட முகமூடி இது.

பவுத்தம் பல்வேறு சமூகங்களால் வரவேற்கப்படும்  மதமாக விளங்கவேண்டும்.  பன்முகத்தன்மை மதிக்கப்படும்  ஒரு வாழ்க்கை முறையாக இருக்க வேண்டும்.  சகோதரத்துவத்தையும் சகோதரித்துவத்தையும் வளர்ப்பதற்காக அதன் போதனைகளைப் பயிற்சி செய்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.   இலங்கையில் பவுத்த மதமானது ஒரு தேசிய நோயாகக் காணப்படுகிறது. இது புற்றுநோயைப் போலவே மக்களிடையே பரவலாக உள்ளது. இத்தகைய நெருக்கடியிலிருந்து விடுபட ஒரே தீர்வு தொடக்கக் கல்வி முறைகளில் தொடங்கி சாதாரண மக்களுக்கு கல்வி கற்பிப்பதுதான், இது கிராம அளவிலான முயற்சியாக இருக்க வேண்டும். மேலும் இது ஒரு கற்பித்தல் முறையை விட ஒரு பெரிய கற்றல் செயல்முறையாக இருக்கும்.

முடிவுரை

மேற்குறிப்பிட்ட கூறுகளை கவனத்தில் கொண்டால், இலங்கை ஒரு பவுத்த நாடாக இருக்க முடியாது என்பது வெளிப்படை. இலங்கையில் உண்மையான பவுத்த நடைமுறையை நிரூபிக்க இதைவிட சிறந்த தரமான சைகை எதுவும் இல்லை. வன்முறையை ஊக்குவிப்பதில் வெறும் அரசியல் மற்றும் மத நிகழ்ச்சி நிரல்களுக்காக பவுத்தம் நாளும்  விற்கப்படுகிறது. உண்மையில், பவுத்தர்களை வெறும் சடங்குகள் மூலம் (மற்ற மதங்களைப் போலவே) தங்கள் வணிக வகையிலான மத நடத்தைகளை நடித்துக் காட்டுவதைப் பார்த்து நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன். புத்த மதத்தின் தற்போதைய பதிப்பு, பவுத்த – சிங்கள நாடு என்று அழைக்கப்படும் இந்த நாட்டில் உள்நாட்டுப் போர் மற்றும் படுகொலைகளை நோக்கி நம்மை இட்டுச் சென்றுள்ளது. அப்படியானால், போலியான நற்செயல்களில் நல்லது என்று தோன்றியதை உடனடியாக மாற்ற வேண்டும். எனவே, அதை எப்படிச் செய்வது, எப்போது செய்வது என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும். (ஆய்கில மூவம் https://www.colombotelegraph.com/index.php/is-sri-lanka-a-buddhist-country-a-critical-reflection-of-sri-lankan-buddhism/. தமிழாக்கம் கனடா நக்கீரன்)
 

Is Sri Lanka A Buddhist Country?  A Critical Reflection Of Sri Lankan Buddhism

Rehan Derrick Fernando

Sri Lanka is known as a Buddhist country and its heritage speaks of so many Buddhist traditions as well. However, this article will be a critical evaluation to see through whether Sri Lanka as a country owns real philosophy of Buddhism or if it just pretends to be Buddhism in outer appearance. 

Buddhism is a way of life, a life that leads us toward Satya (truth). Buddhism is never or cannot be considered a religion, whereas it is a philosophy. Buddha never invented any religion as such during his lifetime, instead, he reflected on the primary realities of life and showed a path in which we could attain liberation. Unfortunately, Sri Lankan Buddhists are living in a wrong turn (a superstitious mythological life setting) that shows religious violence and religious superstitious. The article aims not to explain what Buddhism is, but to critically show how Sri Lankan has manipulated its Buddhism. 

Buddha praxis

Buddha’s praxis is none other than detachment. The unnecessary attachments in our life, therefore, will not help us to experience true liberation. It is a bondage that we carry willingly. The depth values of Buddhism’s holiness (Sara dharma) will never teach us to lead a life of superfluous attachments. Understanding Buddha-Dhamma is very important in this context. In my opinion, all religions have failed, especially because their rituals, rubrics, and regulations have nothing to do with human desires. Hence, what matters is Dhamma in which we must make an option to live according to the teachings of the sacred texts. 

Regrettably, the majority of Sri Lankan Buddhists never know what Buddha praxis is. They have not properly applied themselves and their lifestyle in the basic teachings of Buddha. They have become mere worshipers of buddha but not true followers. The primary misleading conception is that Sri Lanka is a mere worshipping nation but not a thinking nation. In such a situation, I do not think that people would make the effort of reflecting or understanding of true Buddhism and its rich philosophy. It must be well articulated and arranged in our primary education. Sri Lankans have destroyed Buddha praxis with their ignorance, religious fundamentalism, and nationalism. These are the major sicknesses of this nation and they have become an uncurable cancer today. 

Supermarket-Buddhist Temples

Buddha led a life of self-emptying. It was His praxis of liberation. He never built anything that is permanent. If such a thing happens today, it is against the basic teaching of Buddhism. In Sri Lanka, we come across so many Buddhist temples that have become a type of supermarket. The property in which temples are built is full of mega buildings, colourful light systems, attractive Buddha statues, expensive materials, and so on. These items remind us of a supermarket but not a place for worship or a charming place to exercise Buddhism. Temple must be a place of simplicity if we have grasped true Buddhism as such. If a place of simplicity goes to the level of a palace, then there is something radically wrong. Most of the Buddhist monks live like supermarket owners but not as Buddha’s disciples. For an instance, they are supposed to beg for their daily meals, which is an ancient tradition of this way of life. Instead, today, Sri Lankan monks send the menu for their daily meals so that ordinary people would supply it. This type of life pattern shows how Siddhartha’s self-emptying praxis has been distorted by Sri Lankan Buddhist monks with permanent residential palaces. 

Buddhist temples in Sri Lanka do not show metta, karuna, mudita, and upekkha (loving, kindness, compassion, and gladness). These are the major operative forces of Buddhism. They guide us for our well-being. The pansil (five precepts) further shows the essence of Buddhism to maintain a balanced and healthy spiritual life. Monks are supposed to give life examples through these primary teachings and conducts. Unfortunately, they are only concerned of their well-being. So, temples have become black markets. Instead of a self-denial life, they lead a self-gaining life. Ads by FatChilli

Bo’ tree as a sign of selflessness

Bo tree is so popular, and it can be seen in every nook and corner in Sri Lanka. But the fact is that whether we have realized the message of this tree is a huge question. Buddha reflected a lot of realities of life under this Bo tree and attained Nirvana eventually. It is a sign of selflessness and emptiness. 

However, what we see in this country, especially in the temples is a tree that is decorated and covered with even gold fences. On one way it looks very odd, on the other hand, this is not the spirituality that is to be promoted in seeing the Bo tree. This tree can also be a sign for us to reflect on sila, samadhi, and prajna (morality, contemplation, wisdom). It is the way of liberation of Buddha’s praxis. 

But where can we find this basic spirituality in Sri Lanka? Bo tree has been a mere symbol to pretend peoples’ so-called Buddhist religiosity, ritual fulfilment, worship, and pretended holiness. Real holiness comes from self-emptying life and selflessness. 

Buddhism for religion or against religion

This is a very controversial topic. But it is anyway not complicated to understand. Buddhism does not deny any religion as such. Here, the point is Buddhism is a philosophy, a way of life, and a liberational praxis. It is Sri Lankans especially, uneducated Sri Lankans who have created a superfluous problem in applying Buddhism to a religious atmosphere. They have presented a pretending spirituality for their own sake. That is not the liberative praxis of Buddhism. For instance, there are statues of Hindu gods and goddesses in Buddhist temples. Does it make sense with true Buddhism? Because it is a better commercial trend to earn money, Buddhist authorities support and promote such versions of Buddhism.

Buddhism + Religion= national sickness

Buddhism is commonly used as a religion in this country. Buddhists want to show a pretended religiosity within the premises of Buddhism. The danger in this process is that nationalism has become an outcome politically and religiously. This is a sickness of Sri Lankans. Buddhism cannot be appearing as a religion according to the will of the people. It is a mask created by many political and religious authorities in this country to promote nationalism, which has brought sad memories for the last four decades. 

Buddhism must be a way of life where different communities are welcome, and diversity is respected. Its teachings can be exercised and shared with others in order to foster brotherhood and sisterhood. What prevails in Sri Lanka as a Buddhism is a national sickness. It has widespread among people just like cancer. The only solution to get rid of such a crisis is to educate ordinary people beginning with primary education methods, which must be a village-level effort. And it is going to be a huge learning process rather than a teaching methodology.

Conclusion

If the above-mentioned elements are taken into serious consideration, it is obvious that Sri Lanka can never be a Buddhist country. There is a no better qualitative gesture to prove real Buddhist practice in Sri Lanka. Buddhism is being sold out daily for mere political and religious agendas in promoting violence. In fact, I am quite tired of seeing Buddhists who act and pretend their business type of religious conduct through mere rituals (same with other religions too). The present version of Buddhism has even led us toward civil war fares and massacres in this so-called Buddhist-Sinhala country. If so, what is appeared to be good in the form of fake goodness must be immediately changed. Thus, people will have to decide how to do that, and when to do that

About editor 3017 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply