ஐந்து நல்லொழுக்கப் போதனைகள்

பௌத்தம்: சிறந்த வினா – சிறந்த விடை

4. ஐந்து நல்லொழுக்கப் போதனைகள்

The Five Precepts

வினா: மற்ற சமயத்தினர் அவர்களது கொள்கைகளை, எது சரி, எது தவறென்ற கொள்கைகளை, ஒழுக்கங்களை, அவர்களது கடவுள் அல்லது கடவுளரின் கட்டளைகளிலிருந்து ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால், கடவுள் நம்பிக்கையற்ற பௌத்தர்களாகிய நீங்கள் எது சரி, எது தவறென எப்படிப் புரிந்து கொள்வீர்கள்?

விடை: பேராசை, வெறுப்பு, ஏமாற்றங்களிலிருந்து உருவான எண்ணங்கள், சொற்கள், செயல் முதலியன நிர்வாண நிலையிலிருந்து மிகத்தொலைவில் அழைத்துச் செல்லும் தீயவையாகும்.

அன்பு, அறிவு முதலியவற்றிலிருந்து உருவாகும் எண்ணங்கள், சொற்கள், செயல்கள் முதலியன நிர்வாண நிலையை அடைய உதவும் நல்லவையாகும்.

கடவுளை மையமாகக் கொண்ட சமயங்களில் எது சரியானது, எது தவறானது, என்பதை அறிய அச்சமயவாதிகள் சொல்வதை நாம் செய்ய வேண்டும்.

ஆனால் மனிதனை மையமாகக் கொண்ட பௌத்த சமயத்தில் எது சரி, எது தவறு என்பதை அறிய நம்மை முழுமையாகப் புரிந்து கொள்ளவும், உணர்ந்து கொள்ளவும் வேண்டும். இவ்வாறு நம்மை உணர்ந்து கொள்வதால் எழும் நன்னெறி ஒரு கட்டளையினால் உருவாக்கப்படும் நன்னெறியைவிட உறுதியானவையாகவும் பலம் வாய்ந்தவையாகவும் இருக்கும்.

ஆகையால், எது சரி, எது தவறென்பதையுணரப் பௌத்தர்கள் மூன்று செயல்களைப் பார்க்கின்றனர். அவையாவன: செய்கையின் பின் உள்ள நோக்கம் (பாலிமொழியில் சேதனா) அந்தச் செய்கையின் காரணமாக நமக்கு கிடைக்கும் பலன் அல்லது விளைவு, மற்றும் அந்த செய்கையின் காரணமாகப் பிறருக்குக் கிடைக்கும் பலன் அல்லது விளைவு.

எண்ணம் நல்லதாக இருந்தால் (மற்றவருக்குக் கொடுக்கும் தயாள குணம், அன்பு, மெய்யறிவு முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டிருந்தால்), அச்செயல் எனக்கு உதவுஞ் செயலாக இருந்தால், (என்னை மற்றவர்களுக்கு அதிகம் உதவச் செய்யும் குணம், அன்பு காட்டும் எண்ணம், மெய்யறிவை வளர்க்கும் செயல்) அது மற்றவர்களுக்கும் உதவிகரமாக இருந்தால் (அவர்களை அதிக அறஞ்செய்யத் தூண்டும் குணம், அவர்களின் அன்பை அதிகரிக்கும் எண்ணம், அவர்கள் மெய்யறிவை வளர்க்கும் செயல்) அச்செயல்களும், வினைகளும் ஆரோக்கியமானவை, சிறந்தவை, ஒழுக்கமுடையவை என்று கூறலாம்.

இவற்றுள் சில மாறுபாடுகளும் உண்டு; சில சமயங்களில் நான் நல்ல எண்ணத்தோடு சில செய்கைகளைச் செய்யலாம்; ஆனால் அச்செய்கை எனக்கும் நன்மையளிக்காமல், பிறருக்கும் நன்மை யளிக்காமற் போகலாம். சில சமயங்களில் என் எண்ணம் நற்செயலிலிருந்து வேறுபடலாம். எனினும் அச்செயல் பிறருக்கு நன்மையை விளைவிக்கலாம். சில நேரங்களில் நான் நல்ல எண்ணத்தோடு செயல்படலாம்; அது எனக்கு மட்டுமே நன்மை விளைவித்துவிட்டுப் பிறருக்குத் துன்பத்தை ஏற்படுத்தலாம். இப்படிப்பட்ட சமயங்களில், என் செயல்கள் ‘கலந்தவை’ (பாலிமொழியில் விதிமிஸ்ஸா) எனப் புத்தர் கூறுகிறார் – அதாவது சிறிது நன்மையும் சிறிது தீமையும் கலந்த செய்கை.

எப்போது குறிக்கோள்கள் தவறாக இருந்து அதனால் செய்யும் செயல் எனக்கும் மற்றவருக்கும் நன்மையளிக்கவில்லையோ, அப்படிப்பட்ட செயல்கள் தவறானவை. எப்போது குறிக்கோள்கள் சரியானவையாக இருந்து எனக்கும் மற்றவர்க்கும் நன்மையளிக்கும் செயல் எதுவோ அச்செயல் முழுவதும் நற்செயலாகும்.

QUESTION: Other religions derive their ideas of right and wrong from the commandments of their god or gods. You Buddhists don’t believe in a god, so how do you know what is right and wrong?

ANSWER: Any thoughts, speech or actions that are rooted in greed, hatred and delusion and thus lead us away from Nirvana are bad and any thoughts, speech or actions that are rooted in giving, love and wisdom and thus help clear the way to Nirvana are good. To know what is right and wrong in god-centred religions, all that is needed is to do as you are told. In a human-centred religion like Buddhism, to know what is right and wrong, you have to develop deep self-awareness and self-understanding. Ethics based on understanding are always stronger than those that are a response to a command. So to know what is right and wrong, the Buddhist looks at three things: the intention (cetana) behind the act, the effect the act will have upon oneself and the effect it will have upon others. If the intention is good (rooted in generosity, love and wisdom), if it helps me (helps me to be more giving, more loving and wiser) and help others (helps them to be more giving, more loving and wiser), then my deeds and actions are wholesome, good and moral.

Of course, there are many variations of this. Sometimes, I act with the best of intentions but it may not benefit either myself or others. Sometimes my intentions are far from good, but my action helps others nonetheless. Sometimes I act out of good intentions and my acts help me but perhaps cause some distress to others. In such cases, my actions are what the Buddha called ‘mixed’ (vitimissa) – a mixture of good and not-so-good. When intentions are bad and the action helps neither myself nor others, such an action is bad. And when my intention is good and my action benefits both myself and others, then the deed is wholly good.

வினா: அப்படியென்றால் பௌத்தத்தில் முறையான ஒழுக்க நெறிகளுக்கென ஒரு தொகுப்பு இருக்கிறதா?

விடை: ஆம், பௌத்தத்தில் ஒழுக்க நெறிகளுக்குத் தொகுப்பே இருக்கிறது. புத்தர் அருளிய ஐந்து நல்லொழுக்கப் போதனைகளுமே பௌத்த ஒழுக்க நெறிகளுக்கு அடிப்படையாகும்.

முதல் நெறி மற்ற உயிரினங்களைக் கொல்வதையும் அவற்றுக்குத் துன்பம் விளைவிப்பதையும் தவிர்ப்பதாகும்.

இரண்டாவது நெறி களவைப் – பிறர் பொருளைக் கவர்வதைத் தவிர்ப்பதாகும்.

மூன்றாவது நெறி, சோரம் போவதைத் தவிர்ப்பதாகும்;

நான்காவது நெறி பொய்மையைத் தவிர்ப்பதாகும்;

ஐந்தாவது நெறி போதை தரும் பொருள்களைத் தவிர்ப்பதாகும்.

QUESTION: So does Buddhism have a code of morality?

ANSWER: Yes, it does. The Five Precepts are the basis of Buddhist morality. The First Precept is to avoid killing or harming living beings, the second is to avoid stealing, the third is to avoid sexual misconduct, the fourth is to avoid lying, and the fifth is to avoid alcohol and other intoxicating drugs.

Yes, it does. The Five Precepts are the basis of Buddhist morality. The First Precept is to avoid killing or harming living beings, the second is to avoid stealing, the third is to avoid sexual misconduct, the fourth is to avoid lying, and the fifth is to avoid alcohol and other intoxicating drugs.

வினா: ஆனால், சில சமயங்களில் பிற உயிர்களைக் கொல்லுவது நமக்கு நன்மையளிப்பதாக இருக்கும். சான்றாக நோயைப் பரப்பும் கிருமிகளைக் கொல்வது, அல்லது யாரேனும் உங்களைக் கொல்ல வந்தால் அவரைக் கொல்லுவது நன்மையளிக்கலாமே?

விடை: இது உங்களுக்கு நன்மையளிக்கலாம். ஆனால், அவற்றுக்கோ அல்லது அந்த மனிதருக்கோ எப்படி நன்மையளிக்கும்? உங்களைப் போலவே அவையும் வாழ விரும்புபவை தானே. நோயைப் பரப்பும் கிருமிகளைக் கொல்ல வேண்டும் என்ற உங்கள் எண்ணத்தில் உங்கள் மீது அக்கறையும் (எனவே நல்ல எண்ணம்) அவற்றின் மீது அருவருப்பும் (எனவே தீய எண்ணம்) கலந்து உள்ளது. இச்செயல் உங்களுக்கு நன்மையளிக்கலாம் (நல்லது) ஆனால், நோய் பரப்பும் கிருமிகளுக்கு அது நன்மை அளிக்காது (கெட்டது). சில சமயங்களில் இவ்வாறு கொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டாலும், அச்செயல் ஏற்புடைய செயலன்று.

QUESTION: But surely it is good to kill sometimes, to kill disease-spreading insects or someone who is going to kill you?

ANSWER: It might be good for you but what about the insect or the person who is killed? They wish to live just as you do. When you decide to kill a disease-spreading insect, your intention is perhaps a mixture of self-concern (good) and revulsion (bad). The act will benefit yourself (good) but obviously, it will not benefit that being (bad). So at times, it may be necessary to kill but it is never wholly skilful.

வினா: பௌத்தர்களாகிய நீங்கள் எறும்புகளைப் பற்றியும் மூட்டைப் பூச்சிகளைப் பற்றியும் கூடக் கவலைப்படுகிறீர்களே!

விடை: பௌத்தர்கள் வேறுபாடு காட்டாது அனைவரிடமும் தயையும், கருணையும் காட்டிப் பேதமின்றி நேசிக்க முயற்சிக்கின்றனர். அவர்கள் உலகத்தை ஒருங்கிணைக்கப்பட்ட முழுமையாகக் காண்கின்றனர். அங்கு ஒவ்வொரு பொருளும், உயிர் வாழ்வனவும் தமக்கென ஓர் இடம் பெற்றிருக்கிறது; அவற்றுக்கான தனித்தனிச் செயல்களுமிருக்கின்றன.

எனவே இயற்கையின் மென்மையான சமநிலையைப் பாதிக்கும் எச்செயலைப் புரிந்தாலும் நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.

இயற்கையை முழுமையாக அழித்து ஒவ்வொன்றையும் கடைசிச் சொட்டு உள்ளவரை உறிஞ்சி, திரும்ப எதையும் கொடுக்காமல் அவற்றை வென்று அடக்கும் இன்றைய கலாச்சாரத்தைப் பாருங்கள்! விளைவு? இயற்கையே புரட்சி செய்கிறது! காற்றே நஞ்சாக மாறுகிறது! ஆறுகள் தூய்மை கெட்டு வற்றி விடுகின்றன! எவ்வளவோ அழகான பல விலங்கு இனங்கள், செடி கொடி வகைகள் அழிந்து போய் விட்டன! மலைச்சாரல்கள் வெறுமையாக மண்ணரித்துச் செல்லப்பட்டுக் கிடக்கின்றன. தட்ப வெப்பநிலைகள் கூட மாறி விடுகின்றன. மக்கள் அழிவையும் உருக்குலைப்பதையும் கொல்லுவதையும் தீவிரமாக்காமலிருந்திருந்தால், இந்நிலை உருவாகியிருக்காது. நாம் அனைவரும் எல்லா உயிர்கள் மீதும் சற்றுக் கருணை காட்டும் பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதனையே முதல் நல்லொழுக்கப் போதனை கூறுகிறது.

QUESTION: You Buddhists are too concerned about ants and bugs.

ANSWER: Buddhists try to develop a compassion that is undiscriminating and all-embracing. We see the world as a unified whole where each thing and creature has its place and function. We believe that before we destroy or upset nature’s delicate balance, we should be very careful. Where emphasis has been on exploiting nature to the full, squeezing every last drop out of it without putting anything back, conquering and subduing it, nature has revolted. The air is becoming poisoned, the rivers polluted and dead, so many animals and plants are heading for extinction, and the slopes of the mountains are barren and eroded. Even the climate is changing. If people were a little less anxious to crush, destroy and kill, this terrible situation might not have arisen. We should strive to develop a little more respect for all life. And this is what the First Precept is about.

* * * * * * * *

வினா: கருச்சிதைவைப் பற்றிப் பௌத்தம் என்ன கூறுகிறது?

விடை: புத்தப்பெருமான் கருத்தரிப்பிலிருந்தோ அல்லது அதன் பின் மிக விரைவிலோ உயிர் துவங்குவதாகக் கூறுகிறார். எனவே கருச்சிதைவு ஓர் உயிரை எடுப்பதற்குச் சமானமாகும்.

QUESTION: What does Buddhism say about abortion?

ANSWER: According to the Buddha life begins at conception or very soon after and so to abort a fetus would be to take a life.

* * * * * * * *

வினா: ஆனால் ஒரு பெண் கற்பழிக்கப்பட்டோ அல்லது அவளுக்குப் பிறக்கப்போகும் குழந்தை அங்கக் குறைபாட்டுடனோ பிறக்கப்போகிறது என்பது தெரியவந்தால் அக்கருவைக் கலைப்பது சரியான முடிவல்லவா?

விடை: மற்ற குழந்தைகளைப் போலவே கற்பழிக்கப்பட்டதனால் பிறக்கும் குழந்தைக்கும் வாழ்வதற்கும், அன்பையும் பாசத்தையும் எதிர்ப்பார்ப்பதற்கும் உரிமை உள்ளது. உயிர் கொடுத்த தந்தை செய்த குற்றத்திற்காக அக்கருவை அழிப்பது முறையல்ல. உருவக் குலைவுடனோ மன வளர்ச்சி குன்றியோ குழந்தை பிறக்குமேயானால் அது பெற்றோர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியைத் தருவது இயல்பே. ஆனால் அத்தகைய கருவைச் சிதைப்பது சரியென்றால் அங்கக் குறைபாட்டுடனோ அல்லது மனவளர்ச்சி குன்றியோ உள்ள சிறுவர்களை அல்லது முதியவர்களைக் கொல்வதும் சரியென்று ஆகிவிடாதா? தாயின் உயிரைக் காப்பாற்ற வேண்டியது போன்ற இக்கட்டான சூழ்நிலைகளில், கருச்சிதைவு செய்வது கருணையுள்ள மாற்று வழியாகத் தோன்றலாம். ஆனால், உண்மையில், பெரும்பான்மையான கருச்சிதைவு செய்வதன் நோக்கம் – பிரசவத்தால் வாழ்க்கையில் சிக்கல் ஏற்பட்டுவிடலாம் என்பதாலும், தர்ம சங்கடமான சூழ்நிலையில் கருவுற்றதாலும், அல்லது பெற்றோர் குழந்தை பெறுவதைத் தள்ளிப்போட முடிவு செய்வதாலும் தான். பௌத்தர்களுக்கு உயிரைச் சிதைப்பதற்கு இவை சரியான காரணங்களாகத் தோன்றாது.

QUESTION: But if a woman is raped or if she knows that her child is going to be deformed, wouldn’t it be better to stop the pregnancy?

ANSWER: A child conceived as the result of a rape is as entitled to live and be loved as any other child. He or she should not be killed simply because their biological father committed a crime. Giving birth to a deformed or mentally retarded child would be a terrible shock for the parents, but if it’s okay to abort a fetus like this then why not kill children or adults who are deformed or handicapped? There might be situations where abortion was the most humane alternative, for example, to save the life of a mother. But let’s be honest, most abortions are performed simply because the pregnancy is inconvenient, an embarrassment, or because the parents want to have the child later. To Buddhists, these seem very poor reasons to destroy a life.

* * * * * * * *

வினா: தற்கொலை செய்து கொள்பவர்கள், முதல் நல்லொழுக்கப் போதனையைக் கடைப்பிடிப்பதில்லை என்று கூறலாமா?

விடை: ஒரு மனிதன் இன்னொருவனைக் கொன்றால் அதற்குப் பயம், கோபம், வெறி, பேராசை போன்ற தீய உணர்ச்சிகளே காரணமாக இருக்கும். ஒருவன் தற்கொலை செய்து கொள்வதும் அதே காரணங்களாலும் அல்லது அது போன்ற தீய உணர்ச்சிகளான மனச்சஞ்சலம், தோல்வி மனப்பான்மை போன்ற காரணங்களாலும் தான். தீய உணர்ச்சிகளை மற்றவர் மீது காட்டுவது கொலையில் முடிகிறது. தீய உணர்ச்சிகளைத் தம் மீதே காட்டுவது தற் கொலையில் முடிகிறது. இதனால் தற்கொலை செய்து கொள்பவர்கள் முதல் நல்லொழுக்கப் போதனையை மீறுகின்றவரே ஆவர்.

அதற்காகத் தற்கொலை செய்ய நினைப்பவர்களிடமோ அல்லது செய்ய முயற்சித்தவர்களிடமோ அவர்கள் தவறு செய்து விட்டதாகச் சொல்லத் தேவையில்லை. அவர்களுக்குத் தேவை நமது உதவியும், ஆறுதலுமே. தற்கொலையினால் அவர்களது பிரச்சனை தீராது; அது தொடரவே செய்யும்; தற்கொலையினால் அவர்கள் பிரச்சனையிடம் சரணடைந்து விடுகின்றனர், ஆனால் பிரச்சனை முடிவுறப் போவதில்லை என்பதை அவர்களுக்குப் புரியவைப்பதுதான் முக்கியம்.

QUESTION: If someone committed suicide would they be breaking the First Precept?

ANSWER: When one person murders another they might do it out of fear, anger, fury, greed or some other negative emotions. When a person kills himself or herself they might do it for very similar reasons or because of other negative emotions like despair or frustration. So whereas murder is the result of negative emotions directed towards another, suicide is the result of negative emotions directed towards oneself, and therefore would be breaking the Precept. However, someone who is contemplating suicide or has attempted suicide does not need to be told that what they are doing is wrong. They need our support and our understanding. We have to help them understand that killing themselves is perpetuating their problem, surrendering to it, not solving it.

* * * * * * * *

வினா: இரண்டாம் நல்லொழுக்கப் போதனையைப் பற்றிக் கூறுங்கள்.

விடை: இந்த ஒழுக்கத்தை ஏற்றுக்கொண்டால் நமதல்லாத எப்பொருளையும் எடுப்பதைத் தவிர்க்கிறோம். பேராசையைக் கட்டுப்படுத்தி மற்றவர் உடைமைக்கு மதிப்புத் தருவது தான் இரண்டாம் நல்லொழுக்கப் போதனை.

QUESTION: Tell me about the Second Precept.

ANSWER: When we take this Precept we undertake to take nothing that does not belong to us. The Second Precept is about restraining our greed and respecting the property of others.

* * * * * * * *

வினா: மூன்றாம் நல்லொழுக்கப் போதனை தவறான பாலியல் உறவுகளில் ஈடுபடக் கூடாது என்று கூறுகிறது. தவறான பாலியல் உறவுகள் என்றால் என்ன?

விடை: வஞ்சித்தோ அல்லது செல்வாக்கைப் பயன்படுத்தியோ இரகசியங்களை வெளியிடுவதாக அச்சுறுத்தியோ அல்லது பலாத்காரப்படுத்தியோ ஒருவரை நம்முடன் உடலுறவு கொள்ள வைத்தால் அது தவறான பாலியல் உறவு எனலாம். விபசாரமும் ஒரு வகைத் தவறான பாலியல் உறவே. ஏனெனில் ஒருவரை மணம் புரியும் போது அவரிடம் விசுவாசத்தோடு இருப்போம் என்று சத்தியம் செய்கிறோம். விபசாரத்தில் ஈடுபட்டால் அந்த சத்தியத்தை மீறி நமது வாழ்க்கைத்துணையை ஏமாற்றுகிறோமல்லவா? உடலுறவு என்பது இருவரிடையே உள்ள நெருங்கிய நட்பையும் அன்பையும் உறுதி செய்வதாக அமைய வேண்டும். அப்படி அமைந்தால் அது நமது மனத்திற்கும் மன உணர்வுகளுக்கும் நன்மை புரிகிறது.

QUESTION: The Third Precept says we should avoid sexual misconduct. What is sexual misconduct?

ANSWER: If we use trickery, emotional blackmail or force to compel someone to have sex with us, then that can be said to be sexual misconduct. Adultery is also a form of sexual misconduct because when we marry we promise our spouse we will be loyal to them. When we commit adultery we break that promise and betray our partner’s trust. Sex should be an expression of love and intimacy between two people, and when it is it contributes to our mental and emotional well-being.

* * * * * * * *

வினா: திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வது ஒரு வகையான தவறான பாலியல் உறவா?

விடை: இருவருக்குமிடையே அன்பும், அன்னியோன்னிய உடன்பாடும் இருந்தால் அது தவறான பாலியல் உறவு அல்ல. ஆனால், உடலுறவின் முக்கிய நோக்கமே இனப்பெருக்கம் செய்வது தான். அப்படி இருக்க, திருமணமாகாத பெண் கர்ப்பமுற்றால், பல சிக்கல்கள் ஏற்படக்கூடும். எனவே சிந்தித்து முடிவெடுக்கும் திறனுடையோர் பலர் உடலுறவை திருமணத்திற்குப் பிறகு வைத்துக் கொள்வதுதான் சரி என்றே கருதுகின்றனர்.

QUESTION: Is sex before marriage a type of sexual misconduct?

ANSWER: Not if there is love and mutual agreement between the two people concerned. However, it should never be forgotten that the biological function of sex is reproduction and if an unmarried woman becomes pregnant, it can cause a great deal of problems. Many mature and thoughtful people think that it is far better to leave sex until after marriage.

* * * * * * * *

வினா: திருமணமான ஒருவன் திருமணமாகாத ஒரு பெண்ணுடன் பாலியல் உறவு வைத்திருந்தால் அவன் மூன்றாம் நல்லொழுக்கப் போதனையைக் கடைப் பிடிப்பதில்லை. ஆனால் அவளும் கடைபிடிப்பதில்லை என்று கூற முடியுமா?

விடை: ஒரு செயல் சரியானதா தவறானதா என்று தீர்மானிப்பது செய்வோரின் நோக்கம் தான். அந்தப் பெண்ணுக்கு அவன் திருமணம் ஆனவன் என்பது தெரியவில்லையென்றால் அவள் நல்லொழுக்கப் போதனையை முறிப்பதில்லை. ஆனால் அவளுக்கு அவன் திருமணமானவனாக இருக்ககூடும் என்ற ஐயம் இருந்தும் தன் பொறுப்பைத் தவிர்த்துக் கொள்ளும் நோக்கத்தோடு அதைப் பற்றி அவனிடம் கேட்காமலே இருந்தால் நல்லொழுக்கப் போதனையை மீறவில்லையென்றாலும் நல்ல எண்ணத்தோடு நடந்து கொள்ளாததால் நன்மையற்ற கர்ம வினைப்பயனைச் செய்தவளாகிறாள். முன் சொன்னது போல எந்த ஒரு செயலிலும் நூறு சதம் நல்லதும் இல்லை; நூறு சதம் கெட்டதும் இல்லை. நாம் செய்யும் பல செய்கைகள் நல்லதும், கெட்டதும், இரண்டும் அல்லாததுமாகக் கலந்து இருக்கின்றன. நாம் எப்போதும் நேர்மையோடும், உண்மையாகவும் ஏமாற்றாமலும் நடந்து கொள்ளவே முயற்சிக்க வேண்டும்.

QUESTION: If a married man committed adultery with an unmarried woman he would be breaking the Third Precept. But what about her? Would she be breaking the Precepts?

ANSWER: The main thing that determines whether an act is good or bad is one’s intention (cetana). If the woman did not know that the man was married she would not be breaking the Precept. However, if she suspected that he was married but decided not to ask him so that she never knew for sure and thus avoid responsibility, she may not have broken the Precept but she would have certainly acted in bad faith and made some negative Kamma for herself. As said before, not every deed is 100% good or 100% bad. Many of the things we do are a mixture of good, bad and neutral, and will have mixed kammic results. We should always try to act with straightforwardness, honesty and sincerity.

* * * * * * * *

வினா: குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளைப் பற்றிப் பௌத்தம் என்ன சொல்கிறது?

விடை: சில சமயங்கள் உடலுறவு கொள்வது இனப் பெருக்கத்திற்கு மட்டுமே என்று கருதுவதால், வேறு காரணங்களுக்கு உடலுறவு கொள்வது நெறிகெட்டவை என்றும், குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளும் தவறு என்றும் கூறுகின்றன. பௌத்தம் உடலுறவுக்குப் பல காரணங்கள் இருக்கின்றன என்பதை ஏற்றுக் கொள்கிறது. இனப் பெருக்கத்திற்காக, கேளிக்கைக்காக, இருவரிடையே அன்பையும் பாசத்தையும் காண்பிக்கும் செயலாகவும் அது இருக்கலாம். அதனால் கருச்சிதைவைத் தவிர, எல்லாவிதக் குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளையும் பௌத்தம் ஏற்றுக்கொள்கிறது. ஏன், இன்றைய வரம்பற்ற மக்கட் பெருக்கத்தினால் ஏற்படும் பெரும் பிரச்சினைகளின் காரணமாகப் பௌத்தம் குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளை ஒரு வரமாகவே கருதி வரவேற்கிறது என்று கூடச் சொல்லலாம்.

QUESTION: What does Buddhism say about birth control?

ANSWER: Some religions teach that having sex for any reason other than procreation is immoral and thus they consider all forms of birth control to be wrong. Buddhism recognizes that sex has several purposes – procreation, recreation, as an expression of love and affection between two people, etc. This being the case, it considers all forms of birth control except abortion to be alright. In fact, Buddhism would say that in a world where the population explosion has become a major problem, birth control is a real blessing.

* * * * * * * *

வினா: பொய் சொல்லுவது பற்றி என்ன கூறுகிறீர்கள்? பொய் சொல்லாது வாழ்வது சாத்தியமாகுமா?

விடை: சமூகத்தில் பொய் சொல்லாமல் வாழவோ ஒரு வணிகத்தைச் செய்யவோ முடியாது என்ற நிலை நிலவுமானால், அத்தகைய திகைப்பூட்டும் நேர்மையற்ற, வெறுக்கத்தக்க முறையை மாற்றி அமைத்தாக வேண்டும். பௌத்தர்கள் நடைமுறைக்குச் சாத்தியமானவற்றைச் செய்வதிலும், பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பதையே விரும்புகின்றனர்.

QUESTION: But what about the Fourth Precept? Is it possible to live without telling lies?

ANSWER: If it is really impossible to get by in society or do business without lying, such a shocking and corrupt state of affairs should be changed. A Buddhist is someone who resolves to do something practical about the problem by trying to be more truthful and honest.

* * * * * * * *

வினா: பூங்கா ஒன்றில் அமர்ந்திருக்கும் போது உங்களைக் கடந்து பதற்றத்தோடு ஒருவன் ஓடுகிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஒரு சில நொடிகளுக்குப்பின் கத்தியுடன் ஓடி வரும் இன்னொருவன் முதலில் வந்தவன் எத்திசையில் சென்றான் என்று கேட்டால், அவனிடம் உண்மையைச் சொல்வீர்களா அல்லது பொய் சொல்வீர்களா?

விடை: இரண்டாம் ஆள் முதலில் வந்தவனுக்குத் தீங்கு விளைவிப்பான் என்ற ஐயம் எழுந்தால், ஒரு அறிவுள்ள பொறுப்புள்ள பௌத்தர் பொய் சொல்வதற்குத் தயங்க மாட்டார். ஏற்கெனவே கூறியிருப்பதைப் போல், ஒரு செயல் சரியானதா தவறானதா என்பது செய்வோரின் நோக்கத்தை வைத்துத்தான் தீர்மானிக்கப் படுகிறது. இது போன்ற சூழ்நிலைகளில் ஒரு உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கம், பொய் சொல்லக் கூடாதென்ற நோக்கத்தைவிடப் பல மடங்கு நன்மை பயப்பதாகும். பொய் சொல்லியோ, குடித்தோ, ஏன் திருடியோ கூட ஒரு உயிரைக் காப்பாற்ற முடியுமானால் அதைச் செய்ய வேண்டும். பின்னர் நல்லொழுக்கங்களைக் கடைப்பிடிக்காததற்காக முறையான ஈடு செய்து கொள்ளலாம். ஆனால் உயிர் போய்விட்டால் அதைத் திரும்பப் பெற முடியாதல்லவா?

ஆனால் முன்னர் சொன்னது போல நமது வசதிக்கேற்ப, நினைத்த போதெல்லாம் நல்லொழுக்கப் போதனைகளை முரித்துக் கொள்ளத் தரப்பட்ட அனுமதிச் சீட்டாக இதைக் கருதக் கூடாது. நல்லொழுக்கப் போதனைகளை மிகவும் கவனத்துடன் கடைப் பிடிக்க வேண்டும். மிக அரிய சூழ்நிலைகளில் மட்டுமே அதை விட்டு விலகலாம்.

QUESTION: If you were sitting in the park and a terrified man ran past you and then a few minutes later another man carrying a knife ran up to you and asked if you had seen which way the first man had gone, would you tell him the truth or would you lie to him?

ANSWER: If I had good reason to suspect that the second man was going to do serious harm to the first I would, as an intelligent caring Buddhist, have no hesitation in lying. We said before that one of the factors determining whether a deed is good or bad is intention. The intention to save a life is many times more positive than telling a lie is negative in circumstances such as these. If lying, drinking or even stealing meant that I saved a life I should do it. I can always make amends for breaking these Precepts, but I can never bring back a life once it is gone. However, as said before, please do not take this as a license to break the Precepts whenever it is convenient. The Precepts should be practised with great care and only infringed in extreme cases.

* * * * * * * *

வினா: ஐந்தாம் நல்லொழுக்கப் போதனை நம்மை மது அருந்தவோ, பிற போதைப் பொருட்களைப் பயன் படுத்தவோ கூடாது எனக் கூறுகிறது. ஏன்?

விடை: பொதுவாக மனிதர்கள் சுவைக்காக மது அருந்துவதில்லை. அவர்கள் தனிமையில் குடிப்பது, தங்கள் பதட்டத்தைத் தணித்துக் கொள்ளவே. மற்றவர்களுடன் சேர்ந்து குடிப்பது பெரும்பாலும் அவர்களுடன் ஒத்துப் போகவே; சிறிதளவு குடிப்பது கூட நினைவை மறக்கடித்துக் கவனத்தைப் பிறழச் செய்கிறது. அதிகமாகச் சாப்பிட்டு விட்டாலோ, அவனையே பாழ்படுத்தி விடுகிறது. ஐந்தாம் நல்லொழுக்கப் போதனையை மீறினால் மற்ற அனைத்து ஒழுக்கப் போதனைகளையும் மீறுவது எளிதாகிவிடுகிறது என்று பௌத்தர்கள் கூறுவார்கள்.

QUESTION: The Fifth Precept says we should not drink alcohol or take other drugs. Why not?

ANSWER: People don’t usually drink for the taste. When they drink alone it is in order to seek release from tension and when they drink socially, it is usually to conform. Even a small amount of alcohol distorts consciousness and disrupts self-awareness. Taken in large quantities, its effect can be devastating. Buddhists say that when you break the Fifth Precept you can break all the other Precepts.

* * * * * * * *

வினா: ஆனால், சிறிதளவு மது குடிப்பது, அந்த ஐந்து ஒழுக்கங்களில் ஒன்றான போதைப் பொருளைத் தவிர்ப்பதைப் பாதிக்காதே? அல்லது பாதிக்குமா? குடிப்பது சிறிதளவுதானே?

விடை: ஆமாம். குடிப்பது சிறிதளவுதான். உங்களால் இந்தச் சிறிதளவு கூட ஒழுக்கத்தைக் காப்பாற்ற முடியாவிட்டால் உங்கள் வாக்குறுதியிலும் தீர்மானத்திலும் வலிமை இராதல்லவா?

QUESTION: But drinking just a small amount wouldn’t be really breaking the precept, would it? It’s only a small thing.

ANSWER: Yes, it is only a small thing and if you can’t practice even a small thing, your commitment and resolution aren’t very strong, is it?

* * * * * * * *

வினா: புகை பிடிப்பது ஐந்தாம் நல்லொழுக்கப் போதனையை மீறுவதாகுமா?

விடை: புகை பிடிப்பது உடலுக்குக் கெடுதலை விளைவித்தாலும் மனதுக்குச் சிறிய அளவில் தான் பாதிப்பு இருக்கும். புகை பிடித்தாலும் ஒருவர் விழிப்புடனும், கவனத்துடனும், தன்னுணர்வோடும் தான் இருப்பார். ஆகவே புகைப் பிடிப்பது ஏற்புடைய செயல் அன்றெனினும், அது நல்லொழுக்கப் போதனைகளை மீறும் செயல் அல்ல.

QUESTION: Would smoking be against the Fifth Precept?

ANSWER: Smoking certainly has a negative effect on the body, but its effect on the mind is very minor. One is able to smoke and still be alert, mindful and self-possessed. So while smoking might be inadvisable, it would not be against the Precepts.

* * * * * * * *

வினா: அந்த ஐந்து நல்லொழுக்கப் போதனைகளும் எதிர்மறையானவை! அவை இவற்றைச் செய்யாதே என்றுதான் கூறுகின்றன. இவ்விவற்றைச் செய் என்று கூறவில்லயே?

விடை: அந்த ஐந்து நல்லொழுக்கப் போதனைகளும் பௌத்த சமய அடிப்படை ஒழுக்க நெறிகளாகும். அவை பௌத்தத்தின் முழுமையான போதனைகளல்ல. நாம் நமது தீய வழக்க ஒழுக்கங்களையுணர்ந்து, அவற்றைத் தவிர்ப்பதற்குக் கடுமையாக முயல்கின்றோம். அதற்காகவே, அவ்வைந்து ஒழுக்கங்களும் போதிக்கப்பட்டன. தீமை செய்வதை நிறுத்திவிட்டோமேயானால், நன்மை செய்ய ஆரம்பித்து விடுவோம். சான்றாக நான்காவது நல்லொழுக்கப் போதனையை எடுத்துக் கொள்ளுங்கள். புத்தபெருமான் கூறுகிறார், “பொய் சொல்வதைத் தவிர்ப்பதிலிருந்து ஆரம்பியுங்கள்” என்கிறார். பிறகு நாம் உண்மை பேசவேண்டும்; பண்புடன் பேசவேண்டும்! மரியாதையாகப் பேசவேண்டும்; மேலும் பேசவேண்டிய நேரத்தில் மட்டுமே பேச வேண்டும்.

புத்த பெருமான் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:

“ஒருவன் பொய்யுரையைத் தவிர்த்து விட்டாலே, அவன் உண்மை பேசுபவனாகிவிடுகிறான்; நம்பகமானவனாகி விடுகிறான், பொறுப்பானவனாகி விடுகிறான்; எவரும் அவனை நம்பி வாழலாம். அவன் இவ்வுலகத்தை ஏமாற்ற மாட்டான். தீய எண்ணங் கொண்ட வார்த்தைகளை அவன் என்று விட்டு விட்டானோ, அன்றே அங்கு பேசுவதை இங்கும், இங்கு பேசுவதை அங்கும் புனைந்து, புறங்கூற மாட்டான். அவன் பிரிந்திருப்பவர்களை ஒன்று சேர்ப்பான்; நண்பர்களை மேலும் நெருங்கிய நண்பர்களாக்குவான்; ஒற்றுமையே அவனது மகிழ்ச்சி; ஒற்றுமையே அவனது தெளிவு; ஒற்றுமையே அவனது அன்பு; அவனது பேச்சுக்களின் நோக்கமே இவைதாம்: கடுஞ்சொற்களைத் தவிர்த்தல்; அவனது சொற்கள் குற்றமற்றவை; குறையற்றவை; காதுகளுக்கு இனிமையானவை; எல்லாராலும் ஏற்று கொள்ளக் கூடியவை; உள்ளத்தைத் தொடுபவை; நாகரிகமானவை; எல்லாராலும் விரும்பப்படுபவை; பயனற்ற பேச்சைத் தவிர்த்துச் சரியான நேரத்தில், சரியானவற்றை மட்டுமே அறத்தைப் பற்றியும் ஒழுக்கத்தைப்பற்றியும் பேச வேண்டியவை பற்றிமட்டுமே பேசுவான். அவன் பேசுஞ் சொற்கள் புதையலைப் போன்று காக்க வேண்டியவை; காலத்துக்குகந்தவை; சரியான காரணங்களுடையவை; எதை விளக்க வேண்டுமோ, அதைமட்டும் மிகச்சரியாக விளக்குபவை. “

QUESTION: The Five Precepts are negative. They tell you what not to do. They don’t tell you what to do.

ANSWER: The Five Precepts are the basis of Buddhist morality. They are not all of it. We start by recognizing our negative behaviour and then striving to stop it. That is what the Five Precepts are for. After we have stopped doing wrong, we then commence trying to do good. Take for example the fourth Precept. The Buddha said we should start by refraining from telling lies. After that, we should speak the truth, speak gently, politely and at the right time.

‘Giving up false speech he becomes a speaker of truth, reliable, trustworthy, dependable, he does not deceive the world. Giving up the malicious speech he does not repeat there what he has heard here nor does he repeat here what he has heard there in order to cause a variance between people. He reconciles those who are divided and brings closer together those who are already friends. Harmony is his joy, harmony is his delight, and harmony is his love; it is the motive of his speech. Giving up harsh speech his speech is blameless, pleasing to the ear, agreeable, going to the heart, urbane, and liked by most. Giving up idle chatter he speaks at the right time, what is correct, to the point, about Dhamma and about discipline. He speaks words worth being treasured up, seasonable, reasonable, well defined and to the point.’ M.I,179

https://sites.google.com/site/budhhasangham/gqgaindex/gqga4

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply