பார்ப்பனருக்கும் தமிழருக்கும் ஒத்த நாகரிகம்

பார்ப்பனருக்கும் தமிழருக்கும் ஒத்த நாகரிகம்

சாமி சிதம்பரனார்
 
பேராசிரியர் சாமி சிதம்பரனார் மாபெரும் தமிழறிஞர். பெரியாரின் வரலாற்றை முதன் முதலில் பெரியார் உயிருடன் இருந்தபோது எழுதி, பெரியரால் சரிபார்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. அந்த அளவிற்கு பெரியாருக்கும் – அவரது இயக்கத்தோடும் தொடர்ந்த செயல்பூர்வமான தொடர்பை வைத்திருந்தவர்.

இறுதியில் பெரியாரின் திராவிட இயக்கத்தில் இருந்து வெளியேறி பொதுவுடைமை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். தமிழகத்தில் இவரது வரலாறும் – இவர் எழுதிய பல புத்தகங்களும் மறைக்கப்பட்டும் – மறக்கப்பட்டும் வருகிறது. இவரது எழுத்துக்கள் மிக எளிமையானது. இலக்கியம் அறியாதவர்கள் கூட, மிக எளிமையாக இவரது எழுத்தின்பால் கவர்வர். அந்த அளவிற்கு இவரது எழுத்திற்கு வலிமையுள்ளது.

அத்தகைய மூத்த ஆய்வாளரான சாமி சிதம்பரனார் அவர்கள் திராவிட கொள்கை குறித்து எழுதியவற்றை, அதாவது -தொல்காப்பிய தமிழன்- நூல் அறிமுகம் ஒன்றை விசுவாமித்திரர் எழுதி – திண்ணையில் வெளி வந்துள்ளது. திராவிடம் குறித்து சூடு பறக்கும் இணையதளத்தில் உலா வருவதால் இதனை மறு பதிப்பாக இங்கே வெளியிடுகிறேன். நன்றி திண்ணை, விசுவாமித்திரர்.
சந்திப்பு : கே. செல்வப்பெருமாள்
 
“தமிழர்களைப் பற்றித் தமிழ் இலக்கிய உண்மைகளை உணராதவர்களால் எழுதப்பட்ட வரலாறுகளே இன்று மலிந்து கிடக்கின்றன. தமிழர் வரலாற்றைப் பற்றி வெளிநாட்டினர் பலவாறு கூறுகின்றனர். பழந்தமிழ் இலக்கியங்களிலே பயிற்சியில்லாத சரித்திரக்காரர்கள் என்னென்னவோ சொல்கின்றனர். இவர்கள் கூறுவதைவிடப் பழந்தமிழ் நூல்களைக் கொண்டு தமிழர் நாகரிகத்தை ஆராய்ந்தறிவதே சிறந்த முறையாகும்.”

“தொல்காப்பியர் காலத்துத் தமிழர் வாழ்வைப்பற்றி அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். குறிப்பாகத் தமிழ்மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இதனால் பழந்தமிழர் வாழ்வைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்; பழந்தமிழர் வரலாறு, நாகரிகம் ஆகியவைகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம். தமிழ் இலக்கியத்தின் சிறப்பைப் பற்றியும், வளர்ச்சியைப் பற்றியும் புரிந்துகொள்ள முடியும். இதுவே இந்நூலை எழுதியதின் நோக்கம்.”

“தமிழகத்திலே இன்று இனவெறுப்பு தலைவிரித்தாடுகிறது. மொழிவெறுப்பு முறுக்கேறி நிற்கின்றது. நாகரிக வெறுப்பு நடனமாடுகின்றது. வரலாறு, நாகரிகம், பண்பாடு என்ற பெயர்களைச் சொல்லித் தமிழ்மக்களிடையே கலகத்தீயை மூட்டிவிடுகின்றனர் சிலர். இத்தகைய வெறுப்புத்தீ அணைக்கப்பட வேண்டும். அப்போதுதான் தமிழர் முன்னேற்றமடைவர்; தமிழ்மொழி வளர்ச்சியடையும்.”

“இன்று நடப்பது விஞ்ஞான யுகம். விஞ்ஞான வளர்ச்சி காரணமாகப் பண்டைய பழக்கங்கள் சிலவற்றைத் தவறு என்று சொல்லுகின்றோம். பண்டைய மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைகள் சிலவற்றை மூடநம்பிக்கைகள் என்று மொழிகின்றோம். விஞ்ஞான அறிவுக்கு ஒத்துவராத சில பழக்கங்களும் நம்பிக்கைகளும் பண்டைக்கால மக்களிடம் இருந்தன. நாகரிகம் பெற்ற எல்லா இனத்தினரிடமும் இவைகள் இருந்தன. தமிழர்களிடமும் இத்தகைய பழக்கங்களும், நம்பிக்கைகளும் இருந்தன என்பதில் வியப்பில்லை.”

“தமிழ் இலக்கியங்கள் நன்றாகக் கற்றவர்களுக்கு இவ்வுண்மை தெரியும். இவ்வுண்மையை உணர்ந்த புலவர்களில் கூடச் சிலர் இதை மறைக்கின்றனர். ‘தமிழர்களிடம் எவ்விதமான பொருந்தாப் பழக்கமும் இருந்ததில்லை. எந்தக் குருட்டு நம்பிக்கையும் இருந்ததில்லை. இன்றைய விஞ்ஞான அறிவுபெற்ற பகுத்தறிவாளர்களைப் போலவே அன்றும் வாழ்ந்தனர். தமிழ்நாட்டிலே புகுந்த ஆரியர்கள்தாம் பொருந்தாப் பழக்கவழக்கங்களையும், குருட்டு நம்பிக்கைகளையும் தமிழர்களிடம் புகுத்தினர் ‘ என்று கூறுகின்றனர். இவர்கள் கூற்று வெறுப்பையே அடிப்படையாகக் கொண்டது. இவர்கள் வடமொழியில் கொண்டிருக்கும் வெறுப்பும் இதற்கொரு காரணம்.”

“ஆரியர்கள்தாம் பொருந்தாப் பழக்கவழக்கங்களையும் மூடநம்பிக்கைகளையும் தமிழரிடையே புகுத்தினர் என்பது உண்மையன்று.”

“தொல்காப்பியர் காலத்திலேயே தமிழர்களிடையே இருந்த நாகரிகம் தமிழர் நாகரிகம் என்றுதான் எண்ண வேண்டும். அந்த நாகரிகம் ஆரியருக்கும், தமிழருக்கும் ஒத்த நாகரிகமாகத்தான் காணப்படுகின்றது. தொல்காப்பியத்தில் ஆரியர் என்ற பெயரோ, திராவிடர் என்ற பெயரோ காணப்படவில்லை.”

சாமி சிதம்பரனார் மேலும் சொல்கிறார்:

“இந்தியாவின் அடிப்படை நாகரிகம் ஒன்றுதான் என்று கூறும் சரித்திராசிரியர்கள் உண்டு. ‘இந்தியமக்கள் வணங்கும் தெய்வங்கள், பிறப்பு, இறப்பு பற்றிய நம்பிக்கைகள், நீதி, அநீதி இவைகளைப் பற்றிய முடிவுகள், பாவபுண்ணியம், மோட்சம், நரகம் பற்றிய கொள்கைகள் இவைகள் எல்லாம் ஒன்றாகவே இருக்கின்றன. இந்திய மக்கள் அனைவருக்கும் இவைகளைப் பற்றிய கருத்து ஒன்றுதான். இவைகள்தாம் பண்பாட்டுக்கு அடிப்படையானவை. அவரவர்கள் வாழும் இடத்தைப் பொறுத்து நடை, உடை, பாவனைகளும், மொழிகளும் வேறுபட்டிருக்கலாம். இதனால் இந்தியமக்களின் பண்பாடு வெவ்வேறு என்று சொல்லிவிட முடியாது ‘ என்பதே இச்சரித்திராசிரியர்களின் கொள்கை. இந்தக் கொள்கைக்குத் தொல்காப்பியம் ஆதரவளிக்கிறது.”

“இந்த நூலில் விளக்கப்படும் செய்திகள் கற்பனையோ, ஊகமோ அன்று. ஒவ்வொரு செய்தியும், தொல்காப்பியச் சூத்திரத்தின் மேற்கோளுடன் எழுதப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு சூத்திரத்தின் இறுதியிலும் அச்சூத்திரத்தின் எண், அதிகாரம், இயல் ஆகியவை குறிக்கப்பட்டிருக்கின்றன.” – என்றும் முன்னுரையின் இறுதியில் அழுத்தமாய்க் குறிப்பிடுகிறார் சாமி சிதம்பரனார்.

இந்த நூலில் திராவிடஸ்தான் அரசியல்வியாதிகள் காலம்காலமாய் அப்பாவித் தமிழ்மக்களை ஏமாற்றி ஏய்ப்பதற்குச் சொல்லிவரும் பல பொய்கள் உடைத்தெறியப்பட்டுள்ளன.

 1. நால்வகை வகுப்புப்பிரிவுகள் வெளிநாட்டினர் கொண்டுவந்ததல்ல என்ற உண்மையை புறத்திணை இயல்சூத்திர ஆதாரத்தைக் கொண்டு நிரூபிக்கிறார் ஆசிரியர். (பக்கம் – 55,56)
 2. தொல்காப்பியர் ‘அந்தணர் மறைத்தே ‘ என்று குறித்திருப்பதும், எட்டுவகை (கந்தருவம் உள்ளிட்ட) மணங்களைக் குறிப்பிட்டிருப்பதும் அவை (தொல்காப்பியர் சொல்லும் மறை என்பது) வடமொழி வேதங்கள்தாம் என்பதற்குப் போதுமான சான்றாகும். அவை தமிழ்வேதங்கள் என்பது பொருந்தாது. (பக்கம் – 81-84)
 3. தொல்காப்பியம் கடவுளையும் வேறுபல தெய்வங்களையும் மறுக்கவில்லை. தொல்காப்பியர் கடவுள் நம்பிக்கை உள்ளவர் என்று துணிந்து கூறலாம். (பக்கம் – 86)
 4. தொல்காப்பியர் காலத்திலே திருமால், சேயோன், வருணன், வேந்தன், கொற்றவை, சூரியன், சந்திரன், அக்கினி முதலிய தெய்வங்கள் வணங்கப்பட்டன. இன்னும் கூற்றுவன், தேவர்கள், பேய்பிசாசுகளும் இருப்பதாகவும் தமிழர்கள் நம்பினர். தெய்வ வணக்கம் தமிழ்நாட்டிலிருந்தது. தமிழர்கள் பல தெய்வங்களை வணங்கி வந்தனர் என்பதற்கு இவை போன்ற பல ஆதரவுகள் தொல்காப்பியத்திலே காணப்படுகின்றன. இவ்வழக்கம் தமிழர்களிடம் இயற்கையாகவே தோன்றியதாகும். வேறு எவராலும் புகுத்தப்பட்டதும் அன்று. போதிக்கப் பட்டதும் அன்று. (பக்கம் – பக்கம் 92,93)
 5. ‘பண்டைத் தமிழகத்திலே உருவ வணக்கம் இருந்ததில்லை; அது இந்நாட்டிலே குடிபுகுந்த ஆரியரால் புகுத்தப்பட்ட வழக்கம் ‘ என்று சிலர் சொல்லுகின்றனர். இதற்கு ஆதரவு ஒன்றுமில்லை. இது வெறுப்பைத் தூண்டும் வீணான கூற்று. உருவ வணக்கமுறை எல்லா நாடுகளிலும் இருந்தது. பழைய பைபிளைப் படிப்போர் இதைக் காணலாம். பல நாட்டு வரலாறுகளிலும் இதைக் காணலாம். தமிழ்நாட்டிலும் உருவ வணக்கமுறை தொன்றுதொட்டே ஏற்பட்டிருந்தது என்பதைத் தொல்காப்பியத்தால் அறியலாம். (பக்கம் – 94)
 6. தமிழ்மொழி தொல்காப்பியத்துக்கு முன்பாகவே பிறமொழிச் சொற்களை ஏற்று வளர்ந்து வந்திருக்கிறது என்பதையும் ஆதாரத்துடன் காட்டுகிறார்: பழந்தமிழ்ச் செல்வமாகிய தொல்காப்பியத்திலேயே பல வடசொற்கள் கலந்திருப்பதைக் காணலாம். திசை, பூதம், பிண்டம், ஏது (ஹேது), பயம், மந்திரம், நிமித்தம், தாபதம், அவிப்பலி, அமரர், மங்கலம், மாயம், காரணம், கருமம், கரணம், அந்தம், அந்தரம், புதல்வன், வதுவை, பதி, மாத்திரை, படலம், அதிகாரம், வைசிகள் இவைகள் எல்லாம் வடசொற்கள் என்று கருதப்படுகின்றன. இன்னும் பல வடசொற்களும் தொல்காப்பியத்தில் பலவிடங்களில் காணப்படுகின்றன. இன்றுள்ள தமிழ்நூல்களிலே தலைமையான நூல் என்று எண்ணப்படும் தொல்காப்பியத்திலேயே இவ்வாறு வடசொற்கள் கலந்திருப்பது குறிப்பிடத்தக்கது. (பக்கம் – 130)

இறுதியாய் இன்றைய தமிழர்களுக்கு சாமி சிதம்பரனார் மிகுந்த வருத்ததுடன் கூறுவது:

“இன்று குறிக்கோளைப்பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் அடுக்குச் சொற்களைச் சேர்த்து எழுதுவதையே இலக்கியம் என்று எண்ணுகின்றனர். மற்றொரு சாரார் மறுமலர்ச்சி இலக்கியங்கள் என்ற பெயரில் எழுதும் வெறும் காமவிகாரத்தை வளர்க்கும் கட்டுக்கதைகளே இப்பொழுது மலிந்து வருகின்றன. தமிழர் நாகரிகம், தமிழர் பண்பாடு என்று எதை எதையோ எழுதிக் குவித்து வருகின்றனர். தனித்தமிழ் அன்பர்களும், காதல் வெறியர்களும் எழுதி வெளியிடும் புத்தகங்களிலே பெரும்பாலானவை தமிழையோ, தமிழ் இலக்கியங்களையோ வளர்ப்பதற்கு வழிகாட்டவேயில்லை. இவைகளிலே பெரும்பாலான புத்தகங்கள் மொழிவெறி, சாதிவெறி, இனவெறி இவைகளையே அடிப்படையாக வைத்துக்கொண்டு எழுதப்படுவன. மக்களிடம் இன்று வேரோடியிருக்கும் இத்தகைய வெறிகள் எல்லாம் அழிந்துபட வேண்டும் என்னும் ஆர்வத்தில் எழுதப்படும் புத்தகங்கள் மிகச்சிலதான்.

ஆதலால் இன்று வெளிவரும் மறுமலர்ச்சித் தமிழ்ப்புத்தகங்களிலே பல, மக்களிடம் நேசப் பான்மையை நிலைநிறுத்த உதவுவதில்லை. இதற்கு மாறாக வெறுப்பையும், விரோதப்பான்மை யையுமே வளர்த்து வருகின்றன.

இது தமிழ்வளர்ச்சியா ?
இலக்கிய வளர்ச்சியா ?

தமிழர் பண்பாட்டை எடுத்துக்காட்டும் வழியா ?”

இதே போன்று இவர் சிலப்பதிகாரக் காலத்து தமிழ் நாடு என்ற நுல்லையும் எழுதியுள்ளார். அதிலும் இது போன்ற கருத்துக்களை அழுத்தமாகச் சொல்லியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இணையத்தில் மலிவான எழுத்துக்களைப் பரப்பிவரும் ஈவேராவின் சீடர்கள்தான் இந்தக் கேள்விகளுக்குத் தக்க பதில்களைத் தேட வேண்டும்.

நூல் வெளியீடு:

தொல்காப்பியத் தமிழர் – சாமி சிதம்பரனார்,
நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை – 600 098.

நூலிலிருந்து: 
சிலப்பதிகாரத்தை வைத்துக் கொண்டு சிலர் வேற்றுமைப் பேச்சுப் பேசுகின்றனர். தமிழர் நாகரிகம் தனிப்பட்டது; தென்னாட்டு நாகரிகம் வேறு; ஆரியர் நாகரிகம் வேறு; வடநாட்டு நாகரிகம் வேறு என்றெல்லாம் பேசுகின்றனர். இவ்வாறு பேசி, அமைதியுள்ளம் படைத்த தமிழ் மக்கள் உள்ளத்திலே ஆத்திரத்தையும் வெறுப்பையும் திணிக்க முயல்கின்றனர். சிலப்பதிகாரத்தைப் படிப்போர் இத்தகையோரின் முயற்சிக்கு இரையாக மாட்டார்கள் என்பது உறுதி.
சிலப்பதிகாரத்தைப் பொறுத்தவரையிலும் பிரிவினைப் பேச்சுக்கு இடமேயில்லை. பாரத நாட்டு மக்கள் அனைவரும் ஒரே பண்பாடுள்ளவர்கள் என்பதற்குத்தான் சிலப்பதிகாரம் ஆதரவு அளிக்கின்றது. இந்த ஒற்றுமைப் பண்பாட்டைத்தான் சிலப்பதிகார ஆசிரியர் உரைக்கின்றார். இந்நூலின் மங்கல வாழ்த்து முதலில் திங்களையும், இரண்டாவது ஞாயிற்றையும், மூன்றாவது மழையையும் போற்றுகின்றது. சந்திரன், சூரியன், மழை இவைகளை இந்திய நாட்டு மக்கள் அனைவரும் வணங்கி வழிபட்டார்கள். வட நூல்களிலும் வேதங்களிலும் சந்திர, சூரிய, வருண வணக்கப்பாடல்களைக் காணலாம். வருணனை வணங்குவதும், மழையை வணங்குவதும் ஒன்றேதான்.
சிலப்பதிகார காலத்திலேயே இந்திர விழாவைப் பற்றிக் கூறப்படுகின்றது. தேவர்களுக்கு அரசனாகிய இந்திரனைப் பற்றி வடநூல்களும் வேதங்களும் கூறுகின்றன. இந்திரனைக் குறித்த விழாக்கள், வேள்விகள் வடநாட்டிலும் நடைபெற்றன; தென்னாட்டிலும் நடைபெற்றன. இந்திரனை மருத நிலத்து வழிபடு தெய்வமாகக் கொண்ட மக்கள் தங்களை இந்திரகுலத்தோர் என சொல்லிக்கொண்டன. இன்றும் தமிழகத்தில் இந்திர குலத்தைச் சேர்ந்த மக்கள் வாழ்கின்றனர். இந்திரன் தமிழர்களாலும் வணங்கப்பட்ட தெய்வம்; வடவர்களாலும் வணங்கப்பட்ட தெய்வம்; பாரத நாட்டு பழந்தெய்வம்.
மற்றும் சிவபெருமான், திருமால், முருகன், பலதேவன், காளி, மன்மதன், இலக்குமி, நாமகள், பிரமன், இராமன், கிருஷ்ணன், வாமனன், திரிவிக்கிரமன் முதலிய தெய்வங்களைத் தமிழரும் வணங்கினர்; ஆரியர் என்று சொல்லப்படும் வடவரும் வணங்கினர்.
இராமாயணம், பாகவதம், பாரதம், கந்த புராணம் போன்ற கதைகளை வடவரும் போற்றிப் பாராட்டுகின்றனர். சிலப்பதிகாரத் தமிழர்களும் போற்றிப் பாராட்டுகின்றனர்….வடதிசையைத் தமிழர்கள் “புண்ணிய திசை”யென்று போற்றியிருக்கின்றனர்.புண்ணிய திசைமுகம் போகிய அந்நாள் (இந்திர விழவு.94) என்பதனால் இதைக் காணலாம்.
பொதியத்தையும் இமயத்தையும் தமிழர்கள் ஒன்றாகவே கருதினர். காவிரியாறும் கங்கை நதியும் ஒரே விதமான புனித நதிகள் என்றே போற்றினர்.
“அழியாத சிறப்புடைய பொதியமலையிலே கல் எடுத்தாலும் சரி, சேரர்களின் வில் முத்திரையைப் பெற்ற பெரிய இமயமலையிலே கல் எடுத்தாலும் சரி – அது கண்ணகியின் உருவம் அமைப்பதற்கு ஏற்றதாகும். கங்கையாகிய பெரிய ஆற்றிலே நீர்ப்படை செய்தாலும், காவிரி ஆற்றிலே நீர்ப்படை செய்தாலும் ஒரே சிறப்புடையதுதான்.
ஒல்கா மரபின் பொதியில் அன்றியும்
வில்தலைக் கொண்ட வியன்பேர் இமயத்துக்
கல்கால் கொள்ளினும் கடவுள் ஆகும்;
கங்கைப்பேர் யாற்றினும் காவிரிப் புனலினும்
தங்கிய நீர்ப்படை தகவோ உடைத்து
(காட்சி. 116-120)இவ்வடிகள் மேலே கூறிய உண்மையை விளக்கின.
தென்னாடுடைய சிவனே போற்றி என்று வணங்கப்பட்டாலும் அச்சிவபெருமான் இருக்கும் இடம் திருக்கைலாயம். அது வடநாட்டில் உள்ளது; இமயமலையின் மேல் இருப்பது என்ற நம்பிக்கை தமிழரிடமும் உண்டு; வடவரிடமும் உண்டு. மந்திரத்திலே தமிழருக்கும் நம்பிக்கை உண்டு; வடவருக்கும் நம்பிக்கை உண்டு.
நால்வகை வருணங்கள் வடநாட்டிலும் உண்டு; அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற நால்வகைப் பிரிவுகள் தமிழ்நாட்டிலும் உண்டு.
வடநாட்டில் வடமொழி வேதங்கள் தெய்வீகத்தன்மையுள்ளவைகளாக மதிக்கப்பட்டன. நான்முகனால் இயற்றப்பட்டனவாக எண்ணப்பட்டன. தென்னாட்டிலும் அவ்வாறே எண்ணப்பட்டன. வடநாட்டிலும் வேதங்கள் ஓதப்பட்டன. தென்னாட்டிலும் வேதங்கள் ஓதப்பட்டன.
வடநாட்டிலும் வேத வேள்விகள் நடைபெற்றன; தமிழகத்திலும் வேதவேள்விகள் நடைபெற்றன.
…பாரத நாட்டுப் பண்பாட்டை விளக்கும் நூல்தான் சிலப்பதிகாரம். சிலப்பதிகார காலத்திலே இது தமிழர் பண்பு இது ஆரியர் பண்பு என பிரிக்கமுடியாமல் இருவர் பண்பாடும் ஒரே பண்பாடாகத்தான் திகழ்ந்தது.
வடவரும் தென்னவரும் பழக்க வழக்கங்களிலே வேறுபட்டிருக்கலாம்; மொழியிலே வேறுபட்டிருக்கலாம்; நடைஉடைகளில் வேறுபட்டிருக்கலாம். ஆனால், உள்ளத்திலே – நம்பிக்கைகளிலே – அறநெறியிலே வேறுபட்டவர்கள் அல்லர். இவ்வுண்மையைச் சிலப்பதிகாரத்தைப் படிப்போர் தெளிவாகக் காணலாம்.
 
செப்பும் மொழி பதினெட்டு உடையாள் -எனின் 
சிந்தனை ஒன்று உடையாள்

என்று பாரதியார் சொல்லியிருப்பது உண்மை. சிலப்பதிகாரத்தைப் பார்த்த பின் – படித்த பின்தான் இவ்வாறு பாடினாரோ என்று எண்ணுவதிலே தவறில்லை.

தமிழும் சம்ஸ்கிருதமும்
 
இஸ்ரேலின் ஜெருசலேம் ஹீப்ரு பல்கலை கழக  பல்கலைக் கழக பேராசிரியர்  டேவிட் ஷுல்மன் தமிழ் மொழியின் சுயசரிதை என நூல் வெளியிட்டுள்ளார். தமிழும் சம்ஸ்கிருதமும் நம்மிடம் இலக்கியம் உள்ள காலம் முழுவதும் இணைந்தே இருந்துள்ளது, தமிழ் தனித்து இயங்கியதான ஏதும் வரலாற்றில் இல்லை, என்கிறார்.
பெர்கிலியின் கொலம்பியா பல்கலை கழக பேராசிரியர் திரு.ஜியார்ஜ் ஹார்டு மற்றும் இஸ்ரேலின் ஜெருசலேம் ஹீப்ரு பல்கலை கழக  பேராசிரியர் திரு.டேவிட் ஷுல்மன்; இருவரும் தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் புலமை உள்ளவர்கள்; இருவருமே சங்க இலக்கியம் முதல் இன்றுவரை தமிழ் இலக்கியம சமஸ்கிருதத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டு பெற்றும் கொடுத்தும் வளர்ந்து வந்துள்ளது, தொல்காப்பியம் சமஸ்கிருத இலக்கணத்தை பல இடங்களில் பயன்படுத்தி உள்ளது என்பர்

2008 – 09 காலகட்டத்தில் உலகளாவிய பொருளாதார தேக்க நிலை காரணமாக இந்தியாவிலும் பொருளாதாரம், பங்குச் சந்தை, ஏற்றுமதி, சிறு மற்றும் குறுந்தொழில் என சகலமும் மிக மோசமானதொரு வீழ்ச்சியை சந்தித்தன.
ஆட்டோமொபைல் செக்டார் மிக பலமாக அடி வாங்கியது அப்போது தனியார் வங்கியொன்றில் எஸ்எம்ஈ பிரிவில் ரிலேஷன்ஷிப் மேனேஜராக பணியாற்றி வந்த எனக்கும் என் கலீக்ஸும் படாத பாடுபட்டோம். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் நீங்கலாக அனைத்து தனியார் வங்கிகளும் தொழில் முனைவோர் மற்றும் வியாபாரிகளுக்கு கடன் வழங்குவதை அடியோடு நிறுத்தின. பல தனியார் வங்கிகள் மற்றும் என்பிஎஃப்ஸி நிறுவனங்கள் பணியாளர்களை வேலையிலிருந்து வீட்டுக்கு அனுப்பும் பணியில் மும்முரமாக ஈடுபட்டன. கடன் வாங்கிய ஏராளமான வாடிக்கையாளர்கள் கடனை திருப்பி செலுத்த முடியாமல் தடுமாறினார்கள். 
ஏராளமான சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் சூழலை உணர்ந்து கடன்களை ரீ ஸ்ட்ரக்ச்சர் செய்வது, கடன் தவணைகளை செலுத்த வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் அவகாசம் தருவது போன்ற அனுசரணையான நடவடிக்கைகளை எடுத்தன.
விற்பனை சரிவு, டர்ன் ஓவர் இல்லை, உற்பத்தி இல்லை என்று சொல்லி தனியார் நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் வழங்கியிருந்த கேஷ் கிரெடிட் லிமிட்டைக் குறைத்தது. மேலும் வட்டி கட்ட முடியாதவர்களை நெருக்கியது. பலர் தங்கள் தொழிற்சாலைகளை, வீடுகளை, தொழிற் கூடங்களில் உள்ள இயந்திரங்களை வந்த விலைக்கு விற்று கடன் அடைத்து நொடிந்து போனார்கள்.
தேசமே இப்படித் தத்தளித்த போது, தனியார் வங்கிகள் கடன் வழங்கும் சேவையை அடியோடு நிறுத்திய போது எங்கள் வங்கி வாய்ப்பைப் பயன்படுத்தி வொர்க்கிங் கேபிடல் (கேஷ் கிரெடிட்/ ஓவர் டிராஃப்ட்) லிமிட்சை அதிகமாக வாடிக்கையாளர்களுக்கு வழங்க சொன்னது.
தேர்ந்தெடுக்க வேண்டிய வாடிக்கையாளர்கள் என்று அவர்கள் சொன்னவை :

 1. எஃப்எம்ஸிஜி டிஸ்டிரிபியூட்டர்ஸ் 
 2. சூப்பர் மார்க்கெட்டுகள் / மளிகைக் கடைகள் 
 3. உணவகம் நடத்துபவர்கள் 
 4. ஹூண்டாய் மற்றும் ஹீரோ மோட்டார் நிறுவனத்திற்கு வாகன உதிரிபாகங்களை சப்ளை செய்யும் டயர் 1 மற்றும் டயர் 2 பிரிவின் கீழ் உள்ள உற்பத்தியாளர்கள்
  முதல் மூன்று பிரிவின் கீழ் வருபவர்களை அதிகமாக இனங்கண்டு நான் பணிபுரியும் வங்கியின் வாடிக்கையாளராக மாற்றத் துவங்கினேன்.
  குஜராத்தைப் பூர்வீகமாகக் கொண்ட உயர் அதிகாரி ஒருவர் சொன்னது என் மனதில் பதிந்து போனது. அது :
  “எல்லா தொழிலிலும் ஏற்றம், இறக்கம், லாபம், நஷ்டம் வரும் அதற்கு முக்கிய காரணம், தொழில் செய்பவர்களின் நிர்வாக முறை அதே சமயம் எல்லா செக்டாரும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் கீழ விழத்தான் செய்யும் ஆனால் எந்த சமயத்திலும் கீழே விழாத ஒரு செக்டார்னா அது உணவு சார்ந்த தொழில் மற்றும் எஃப்எம்ஸிஜி தான். இந்த தொழில் செய்பவர்கள் பலர் நஷ்டப்பட்டிருக்கலாம் அது அவர்களின் நிர்வாகக் கோளாறால் இருக்குமே தவிர இந்த ஃபீல்ட் கீழ இருக்கு தேக்க நிலையில் இருக்கு அதனால் தான் என்ற காரணம் மட்டும் எப்போதும் இருக்காது”
  இதை தாரக மந்திரமா மனசுல வெச்சுக்கிட்டேன். சுய தொழில் ஆரம்பித்த போதும் வாடிக்கையாளர்களில் இந்த துறையின் கீழ் இருப்பவர்கள் இடம் பிடிக்கிற மாதிரி பார்த்துக்கிட்டேன்.
  நாலு எஃப்எம்ஸிஜி டிஸ்டிரிபியூட்டர்ஸ், நாலஞ்சு நிறுவனங்களின் தயாரிப்பை கொள்முதல் செய்து கடைகளுக்கு சப்ளை செய்யும் ஒரு வணிகர், அரிசி, பருப்பு, தானியங்களை மொத்தமா வாங்கி விற்கும் ஒரு மெர்ச்சண்ட்னு பேஸ் அமைந்தது.
  இவங்க கூட ஏழு வருஷமா தொடர்பு இருக்கு. வரி தொடர்பான சேவைகளை நான் தரேன். ஆரம்பத்தில் இருந்து எஃப்எம்ஸிஜி, உணவு போன்ற துறைகள் மீது தீரா காதல் இருந்ததால் இதில் இறங்கி ஏதாவது செய்யனும்னு ஆசை இருந்தது. இது தவிர நிறைய ஆன்லைன் போர்ட்டல் பார்த்து மளிகைப் பொருட்கள் மலிவா யாராவது தராங்களான்னு பார்த்து அதிலும் அப்டேட்டடா இருக்க ஆரம்பிச்சேன்.
  இவ்வளவு நாள் அலைந்து திரிந்து வீட்டுக்கு மளிகைப் பொருட்களை குறைவான விலைக்கு வாங்கிக்கிட்டு இருந்த நான் இப்போ அதையே வியாபாரமா செய்யவும் முடிவு எடுத்து இந்த சுதந்திர தினத்தில் இருந்து பிள்ளையார் சுழி போட்டு துவங்கி இருக்கேன்.
  இது வரைக்கும் நான்கு வாடிக்கையாளர்கள் இந்த வியாபாரத்தில் இணைந்திருக்காங்க. மாசா மாசம் அவங்க கேட்கற மளிகைப் பொருட்களை குறைவான விலைக்கு விற்பனை செய்யறதை இலக்கா வெச்சுருக்கேன்.
  நண்பர்கள் தங்களுக்குத் தேவையான மாதாந்திர மளிகைப் பொருட்களை தாராளமா என் மூலமா மலிவான விலைக்கு வாங்கலாம். அது பிராண்டட் பொருளா இருந்தாலும் சரி, பிராண்டட் அல்லாத லூஸ் ஜீனி, பருப்பு போன்ற பொருட்களாக இருந்தாலும் சரி…
  ஊரப்பாக்கம் முதல் மணலி வரை (சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்) விற்பனை உண்டு
  மேலதிகத் தகவல்களுக்கு இன்பாக்ஸிலோ அல்லது “Bhuvan Provison Mart” நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரிக்கோ தொடர்பு கொள்ளுங்கள்.
  மின்னஞ்சல் முகவரி : bhuvanprovisionmart@gmail.com
  Sathya GP, Raja Sankar மற்றும் 61 பேருடன் இருக்கிறார்.
  22 நிமிடங்கள் · 
   
  2008 – 09 காலகட்டத்தில் உலகளாவிய பொருளாதார தேக்க நிலை காரணமாக இந்தியாவிலும் பொருளாதாரம், பங்குச் சந்தை, ஏற்றுமதி, சிறு மற்றும் குறுந்தொழில் என சகலமும் மிக மோசமானதொரு வீழ்ச்சியை சந்தித்தன.
  ஆட்டோமொபைல் செக்டார் மிக பலமாக அடி வாங்கியது அப்போது தனியார் வங்கியொன்றில் எஸ்எம்ஈ பிரிவில் ரிலேஷன்ஷிப் மேனேஜராக பணியாற்றி வந்த எனக்கும் என் கலீக்ஸும் படாத பாடுபட்டோம். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் நீங்கலாக அனைத்து தனியார் வங்கிகளும் தொழில் முனைவோர் மற்றும் வியாபாரிகளுக்கு கடன் வழங்குவதை அடியோடு நிறுத்தின. பல தனியார் வங்கிகள் மற்றும் என்பிஎஃப்ஸி நிறுவனங்கள் பணியாளர்களை வேலையிலிருந்து வீட்டுக்கு அனுப்பும் பணியில் மும்முரமாக ஈடுபட்டன. கடன் வாங்கிய ஏராளமான வாடிக்கையாளர்கள் கடனை திருப்பி செலுத்த முடியாமல் தடுமாறினார்கள். 
  ஏராளமான சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் சூழலை உணர்ந்து கடன்களை ரீ ஸ்ட்ரக்ச்சர் செய்வது, கடன் தவணைகளை செலுத்த வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் அவகாசம் தருவது போன்ற அனுசரணையான நடவடிக்கைகளை எடுத்தன.
  விற்பனை சரிவு, டர்ன் ஓவர் இல்லை, உற்பத்தி இல்லை என்று சொல்லி தனியார் நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் வழங்கியிருந்த கேஷ் கிரெடிட் லிமிட்டைக் குறைத்தது. மேலும் வட்டி கட்ட முடியாதவர்களை நெருக்கியது. பலர் தங்கள் தொழிற்சாலைகளை, வீடுகளை, தொழிற் கூடங்களில் உள்ள இயந்திரங்களை வந்த விலைக்கு விற்று கடன் அடைத்து நொடிந்து போனார்கள்.
  தேசமே இப்படித் தத்தளித்த போது, தனியார் வங்கிகள் கடன் வழங்கும் சேவையை அடியோடு நிறுத்திய போது எங்கள் வங்கி வாய்ப்பைப் பயன்படுத்தி வொர்க்கிங் கேபிடல் (கேஷ் கிரெடிட்/ ஓவர் டிராஃப்ட்) லிமிட்சை அதிகமாக வாடிக்கையாளர்களுக்கு வழங்க சொன்னது.
  தேர்ந்தெடுக்க வேண்டிய வாடிக்கையாளர்கள் என்று அவர்கள் சொன்னவை :
 5. எஃப்எம்ஸிஜி டிஸ்டிரிபியூட்டர்ஸ் 
 6. சூப்பர் மார்க்கெட்டுகள் / மளிகைக் கடைகள் 
 7. உணவகம் நடத்துபவர்கள் 
 8. ஹூண்டாய் மற்றும் ஹீரோ மோட்டார் நிறுவனத்திற்கு வாகன உதிரிபாகங்களை சப்ளை செய்யும் டயர் 1 மற்றும் டயர் 2 பிரிவின் கீழ் உள்ள உற்பத்தியாளர்கள்
  முதல் மூன்று பிரிவின் கீழ் வருபவர்களை அதிகமாக இனங்கண்டு நான் பணிபுரியும் வங்கியின் வாடிக்கையாளராக மாற்றத் துவங்கினேன்.
  குஜராத்தைப் பூர்வீகமாகக் கொண்ட உயர் அதிகாரி ஒருவர் சொன்னது என் மனதில் பதிந்து போனது. அது :
  “எல்லா தொழிலிலும் ஏற்றம், இறக்கம், லாபம், நஷ்டம் வரும் அதற்கு முக்கிய காரணம், தொழில் செய்பவர்களின் நிர்வாக முறை அதே சமயம் எல்லா செக்டாரும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் கீழ விழத்தான் செய்யும் ஆனால் எந்த சமயத்திலும் கீழே விழாத ஒரு செக்டார்னா அது உணவு சார்ந்த தொழில் மற்றும் எஃப்எம்ஸிஜி தான். இந்த தொழில் செய்பவர்கள் பலர் நஷ்டப்பட்டிருக்கலாம் அது அவர்களின் நிர்வாகக் கோளாறால் இருக்குமே தவிர இந்த ஃபீல்ட் கீழ இருக்கு தேக்க நிலையில் இருக்கு அதனால் தான் என்ற காரணம் மட்டும் எப்போதும் இருக்காது”
  இதை தாரக மந்திரமா மனசுல வெச்சுக்கிட்டேன். சுய தொழில் ஆரம்பித்த போதும் வாடிக்கையாளர்களில் இந்த துறையின் கீழ் இருப்பவர்கள் இடம் பிடிக்கிற மாதிரி பார்த்துக்கிட்டேன்.
  நாலு எஃப்எம்ஸிஜி டிஸ்டிரிபியூட்டர்ஸ், நாலஞ்சு நிறுவனங்களின் தயாரிப்பை கொள்முதல் செய்து கடைகளுக்கு சப்ளை செய்யும் ஒரு வணிகர், அரிசி, பருப்பு, தானியங்களை மொத்தமா வாங்கி விற்கும் ஒரு மெர்ச்சண்ட்னு பேஸ் அமைந்தது.
  இவங்க கூட ஏழு வருஷமா தொடர்பு இருக்கு. வரி தொடர்பான சேவைகளை நான் தரேன். ஆரம்பத்தில் இருந்து எஃப்எம்ஸிஜி, உணவு போன்ற துறைகள் மீது தீரா காதல் இருந்ததால் இதில் இறங்கி ஏதாவது செய்யனும்னு ஆசை இருந்தது. இது தவிர நிறைய ஆன்லைன் போர்ட்டல் பார்த்து மளிகைப் பொருட்கள் மலிவா யாராவது தராங்களான்னு பார்த்து அதிலும் அப்டேட்டடா இருக்க ஆரம்பிச்சேன்.
  இவ்வளவு நாள் அலைந்து திரிந்து வீட்டுக்கு மளிகைப் பொருட்களை குறைவான விலைக்கு வாங்கிக்கிட்டு இருந்த நான் இப்போ அதையே வியாபாரமா செய்யவும் முடிவு எடுத்து இந்த சுதந்திர தினத்தில் இருந்து பிள்ளையார் சுழி போட்டு துவங்கி இருக்கேன்.
  இது வரைக்கும் நான்கு வாடிக்கையாளர்கள் இந்த வியாபாரத்தில் இணைந்திருக்காங்க. மாசா மாசம் அவங்க கேட்கற மளிகைப் பொருட்களை குறைவான விலைக்கு விற்பனை செய்யறதை இலக்கா வெச்சுருக்கேன்.
  நண்பர்கள் தங்களுக்குத் தேவையான மாதாந்திர மளிகைப் பொருட்களை தாராளமா என் மூலமா மலிவான விலைக்கு வாங்கலாம். அது பிராண்டட் பொருளா இருந்தாலும் சரி, பிராண்டட் அல்லாத லூஸ் ஜீனி, பருப்பு போன்ற பொருட்களாக இருந்தாலும் சரி…
  ஊரப்பாக்கம் முதல் மணலி வரை (சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்) விற்பனை உண்டு
  மேலதிகத் தகவல்களுக்கு இன்பாக்ஸிலோ அல்லது “Bhuvan Provison Mart” நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரிக்கோ தொடர்பு கொள்ளுங்கள்.
  மின்னஞ்சல் முகவரி : bhuvanprovisionmart@gmail.com
About editor 3017 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply