ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்

குறள் 131

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்.[அறத்துப்பால், இல்லறவியல், ஒழுக்கமுடைமை] பொருள்

ஒழுக்கம் – நடை, முறைமை; நன்னடத்தை, ஆசாரம்; சீலம்; உலகம்ஓம்பியநெறி; உயர்ச்சி; தன்மை; குலம்.

விழுப்பம் – சிறப்பு; நன்மை; குலம்; இடும்பை.
தரலான் – தருதல் – Giving, கொடை
ஒழுக்கம் – நடை, முறைமை; நன்னடத்தை, ஆசாரம்; சீலம்; உலகம் ஓம்பியநெறி; உயர்ச்சி; தன்மை; குலம்.
உயிர் – காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில் 4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்
உயிரினும் – உயிரை விட
ஓம்பப் – ஓம்புதல் – காப்பாற்றுதல், பாதுகாத்தல், பேணுதல், வளர்த்தல்; தீங்குவாராமற்காத்தல்; போற்றுதல்; உபசரித்தல்; சீர்தூக்குதல்; பரிகரித்தல்; தவிர்த்தல்; விலக்கல்; நீக்குதல்; உண்டாக்குதல்.
படும் – படுதல் – உண்டாதல்; தோன்றுதல்; உதித்தல்; நிகழ்தல்; மனத்தில்தோற்றுதல்; பூத்தல்; ஒன்றன்மீதுஒன்றுஉறுதல்; மொய்த்தல்; அகப்படுதல்; புகுதல்; பெய்தல்; பெரிதாதல்; மேன்மையடைதல்; அழிதல்; சாதல்; மறைதல்; புண்காய்தல்; சாய்தல்; வாடுதல்; துன்பமடைதல்; தொங்குதல்; ஒலித்தல்; பாய்தல்; புதைக்கப்படுதல்; உடன்படுதல்; ஒத்தல்; பொறுத்தல்; முட்டுதல்.
முழுப்பொருள்உயிரைவிட சிறந்தது ஒழுக்கம்இவ்வுலகிலே விலைமதிப்பில்லாதது உயிர். அவரவர் அவரவர் உயிருக்கு விலை இல்லை என்றே கூறுவர். உலகிலேயே மிக உயர்ந்த பொருள் எது என்று கேட்டால் யாரும் தயங்காமல் சொல்லும் பதில் அவர்களுடைய உயிர் தான்.
உயிரைவிட சிறந்த பொருள் ஒன்று இருக்கிறது என்கிறார் வள்ளுவர்.  அது தான் ஒழுக்கம். உயிர் போனால் வராது. ஒழுக்கமும் போனால் வராது. 
உயிர் போன பின் நமக்கு வலி இல்லை. ஒரு வேளை போகும் போது வலிக்கலாம். ஆனால் ஒழுக்கம் போன பின்பும் நாம் வாழ வேண்டி இருக்கும். அது மிகுந்த வேதனையை தரும். உயிர்ப் பிரிந்து விட்டால் மற்றவர் நம்மக்காக அழுவார்கள். ஆனால் ஒழுக்கம் பிரிந்து விட்டால் நமக்கு நாமே அழுவோம். எனவே, ஒழுக்கம் உயிரினும் மேலானாதாகக் கருதப்படும். 
ஒழுக்கம் சிறப்பை தரும். உயிர் சிறப்பை தராது. எத்தனையோ பேர் உயிரோடு இருக்கிறார்கள். யாருக்குத் தெரியும்? உயிரோடு இருப்பவனெல்லாம் உயர்ந்தவனல்ல. ஒழுக்கத்தோடு இருப்பவன் தான் உயர்ந்தவன் என்று சொல்வதற்க்காக தான் உயிரினும் ஒம்பப் படும் என்கிறார். 

ஒழுக்கம் விழுப்பம் தரலாம்

ஒழுக்கம் விழுப்பம் தரலாம். அதற்கு மூன்று பொருள்கள் உண்டு. ஒன்று சிறந்தது, நன்மை, இடும்பை.முதலாவதாக விழுப்பம் என்றால் இடும்பை என்று எடுத்துக்கொள்வோம். ஒழுக்கத்தை பின்பற்றுவதால் சில துன்பங்களை சிறிய காலத்திற்கு நாம் அனுபவிக்க நேரிடும். அதாவது ஒழுக்கம் உனக்கு துன்பத்தை தரலாம்(தரக்கூடும்). உதாரணமாக சில அசௌகர்யங்கள். ஆயினும் ஒழுக்கத்தை பேணு. ஏனெனில் வாழ்வில் ஒழுக்கமே உனக்கு சிறப்பைத் தரும்.ஒழுக்கத்தை பின்பற்றுவதால் உனக்கு உலகியல் நன்மை கிடைக்காமல் போகலாம். ஆனால் நீ ஒழுக்கத்தை பின்பற்றினால் உனக்கு தீங்கு நேராது. விழுப்பம் என்றால் சிறந்தது, உயர்ந்தது என்று பொருள்.  ”வேத விழுப்பொருளைக் கண்ணுக் கினியானைப்” என்பார் மணிவாசகர். வேதத்தின் சிறந்த பொருள் அவன் என்ற அர்த்தத்தில். (முழுப் பாடலும் கீழே) 
ஒழுக்கம் சிறப்பை தரும். உயிர் சிறப்பை தராது.

உயிரினும் ஓம்பப்படும்

உயிர் இருக்கும் வரை தான் நமக்கு பேர், வணக்கம், மரியாதை எல்லாம். உயிர் போய் விட்டால் “பேரினை நீக்கி பிணம் என்று பெயரிட்டு ” என்று பட்டினத்தார் கூறியது போல நாம் பிணம். ஆனால் ஒழுக்கத்தோடு இருந்தால், உயிர் போன பின்னும், நம் பேர் நிலைத்து நிற்கும். வாழும் காலம் மட்டும் அல்ல, அதற்கு பின்னும் நமக்கு சிறப்பை தருவதால், ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் 
வேதம் ஓதுவதனால் மட்டும் நீ சிறந்தவன் ஆகிவிட மாட்டாய். உன் ஒழுக்கம் கெடுகின்ற சூழ்நிலையிலே நீ ஒழுக்கத்துடன் இருந்தால் உனக்கு நன்மை கிடைக்கும். இல்லை என்றால் உன் பிறப்பே சந்தேகத்திற்கு உள்ளாகும்.

வீடு தீபிடித்துக் கொண்டால், போட்டது போட்டபடி உயிரை காத்துக் கொள்ள வெளியே ஓடுவோம். உயிரை விட எதுவும் பெரியது அல்ல. எனவே, மற்றவை போனாலும் பரவாயில்லை, உயிரை காத்துக் கொள்ள ஓடுகிறோம்.

உயிரா ஒழுக்கமா என்ற கேள்வி வந்தால்? வள்ளுவர் விடை தருகிறார். ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். 
ஓம்புதல் என்றால் பாதுகாத்தல். உயிரை பாதுகாக்க வேண்டும். உயிரினும் ஓம்பப்படும் என்று கூறியதால், அதைவிட கவனமாக, உயிரை விட கவனமாக ஒழுக்கத்தை காக்க வேண்டும்.

சரி. ஏன் ஒழுக்கம்?

ஒழுக்கம் ஏன் முக்கியம் என்று இதுவரை பார்த்தோம். அதனால் நாம் பெறக்கூடிய சிறப்பை எல்லாம் பார்த்தோம். இன்னும் சற்று ஆழமாக பார்ப்போம். 

நமது உடல், மனம் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. (Our body and mind are connected. One and the same). அவற்றை ஒழுங்குடன் வைத்துக்கொண்டால் நாம் விரும்பியவற்றை எல்லாம் பெறமுடியும். 

உடலை ஒழுங்குடன் வைத்துக்கொள்வது என்றால் சீராக சுவாசிப்பது (பிராணாயமம் மட்டும் அல்ல. பொதுவாகவே சீராக ஆழமாக சுவாசிப்பது (Deep Diaphragmatic breathing), உடற்பயிற்சி செய்வது, சுறுசுறுப்பாக இயங்குவது, ஆரோக்கியமான உணவுகளை சமச்சீராக சாப்பிடுவது, நிதாணமாக ஆழ்ந்து சாப்பிடுவது, வயிற்றில் உள்ள நுண்கிருமிகளை சமச்சீராக வைத்துக்கொள்வது.

(There number of microbiomes in your stomach is more than the number of cells (which is trillion cells) in your body. Your brain starts from your gut. You are what you eat. Hence, keep the microbiome healthy and balanced. Do not take many antibiotics. Don’t eat many processed foods which have lot of preservatives that kill the bacteria), நன்கு உறங்குவது என்று பலவற்றை கூறலாம். 

மனதை ஒழுங்குடன் வைத்துக்கொள்வது என்றால் நமது எண்ணங்களை சிந்தனைகளை ஒழுங்குடன் வைத்துக் கொள்வதாகும். எண்ணங்கள் ஒழுங்காக இருந்தால் நமது உணர்ச்சிகளும் சீராக இருக்கும். எண்ணங்களும், உணர்ச்சிகளும் சீராக இருந்தால், நமது ஆக்க சக்தியும் சீராக இருக்கும். நமது குறிக்கொள்களுக்கு செயல்களுக்கு ஒத்துழைக்கும். 
இவ்வாறு உடலையும் மனதையும் ஒழுங்குடன் வைத்துக்கொண்டால், கல்பவிருக்ஷம் மரம் நாம் விரும்பியவற்றை எல்லாம் தருவதுப்போல் நாமும் நாம் விரும்பியவற்றை எல்லாம் பெறலாம். 

பதஞ்சலி யோகாவில், ஒரு நல்ல ஒழுங்குடன் கூடிய மனதை கல்பவிருக்ஷம் மரம் (விரும்பியவற்றை தரும்) மனம் என்றுகூறுவர். நமது உடலையும், மனதையும், உணர்ச்சிகளையும், ஆக்கசக்தியையும் சீர் செய்து ஒழுங்குடன் வைத்து ஒரு திசையில் செலுத்தினால், நாம் இவ்வுலகில் அடைக்கூடிய பல நன்மைகள் மிக உயர்ந்தது.  [In Yoga, a well-established mind is referred to as a Kalpavriksha or a “wishing tree.” Sadhguru explains that if you organize your body, mind, emotions and energy in one direction, your ability to create and manifest will be phenomenal.]
அதனால் தான் ஒழுக்கம் சிறந்தது. உயிரவிட பேணவேண்டியது.

எழுத்தாளர் ஜெயமோகன் உரை (பெண் ,ஒழுக்கம், பண்பாடு:இரு கேள்விகள் – சுட்டியை தட்டவும்)அறம் வேறு ஒழுக்கம் வேறு என்ற புரிதல் நமக்குத்தேவை. மானுடகுலத்தை உருவாக்கும் சில மாறா அடிப்படைகள்தான் அறம் என்று சொல்லப்படுகின்றன. எளியோனை வலியோன் அழித்தல் கூடாது என்ற அறத்தின் அடிப்படையில்தான் சமூகமே உள்ளது. அதைப்போல பல அறங்கள் உள்ளன. உண்மை, கருணை, சமத்துவம் போன்று பல அறங்களால் ஆனது நம் வாழ்க்கை.

ஒழுக்கம் என்பது அறத்தின் அடிப்படையில் அமைந்திருக்கையில் அது நல்லொழுக்கம். அறமீறலை நிகழ்த்தும் என்றால் அது தீய ஒழுக்கம். இவ்வாறே ஒழுக்கத்தைப் புரிந்துகொள்ள முடியும். ஒரு பாலியல்போக்கு என்பது பிறரை ஏமாற்றுவதாகவோ, சுரண்டுவதாகவோ அமையுமென்றால் அதை ஒழுக்கமின்மை என்று கொள்ளலாம்.
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்உயிரினும் ஓம்பப் படும்
என்ற குறள் ஒழுக்கத்தின் நோக்கத்தைச் சொல்கிறது. அது மேலான வாழ்க்கையை அளிக்கிறது. ஒரு செயல்பாடு விழுப்பம் அளிக்குமென்றால் அது ஒழுக்கமே ஆகும்.
ஜெ

நேற்றைய ஒழுக்கங்கள் ; இன்றைய ஒழுக்கங்கள்

நாம் பொதுவாக இன்று பேசுவது நேற்றைய ஒழுக்கங்கள். நமது முன்னோர் பின்பற்றிய ஒழுக்கங்கள். ஆனால், இன்றைய ஒழுக்கங்களை நாம் பேசுவது மிக குறைவு. இன்றை ஒழுக்கங்களில், வாகன போக்குவரத்து விதிகளை பின்பற்றுதலில் தொடங்கி, நாம் எத்தனை மணி நேரம் அலைபேசியில் நேரத்தை செலவிடுகிறோம், நாம் ஒரு நாளை/நேரத்தை எவ்வாறு திட்டமிடுகிறோம், ஆழ்ந்த செயல் (deep work) புரிவது, செயல்களில் தீவிரமாக செயல்படுவது என்று பல தளங்களில் ஒழுக்கத்தைப் பற்றி பேசலாம் பின்பற்றலாம்.

திருவெம்பாவை பாடல் 

ஒள்நித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோவண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோஎண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதேவிண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம் உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்தென்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்.

(திருவாசகத்திற்கு உருகார், ஒரு வாசகத்திற்கும் உருகார் )ஒப்புமை1. ஒழுக்கினும் குலத்தினும் விழுப்ப மிக்கமை (பெருங். 3.22:36)2. ஒன்றுரைத் துயிரினும் ஒழுக்கம் நன்றெனப்பொன்றில புரவலன் பொருவில் சேனையே (கம்ப.கிளைகண்டு.24)3. அறநெறிச்சாரம் இதே கருத்தை இவ்வாறு வலியுறுத்துகிறது.“தானத்தில் மிக்க தருமமும் தக்கார்க்குஞானத்தில் மிக்க உசாத்துணையும் – மானமழியா ஒழுக்கத்தின் மிக்கதூஉ மில்லைபழியாமல் வாழும் திறம்
மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை

[அஃதாவது, தத்தம் வருணத்திற்கும் நிலைக்கும் ஓதப்பட்ட ஒழுக்கத்தினையுடையர் ஆதல்.இது, மெய்ம்முதலிய அடங்கினார்க்கு அல்லது முடியாது ஆகலின் , அடக்கம் உடைமையின்பின் வைக்கப்பட்டது.)
ஒழுக்கம் விழுப்பம் தரலான் – ஒழுக்கம் எல்லார்க்கும் சிறப்பினைத் தருதலான், ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் – அவ்வொழுக்கம் உயிரினும் பாதுகாக்கப்படும். (உயர்ந்தார்க்கும் இழிந்தார்க்கும் ஒப்ப விழுப்பம் தருதலின், பொதுப்படக் கூறினார். சுட்டு வருவிக்கப்பட்டது. அதனால், அங்ஙனம் விழுப்பந் தருவதாயது ஒழுக்கம் என்பது பெற்றாம். ‘உயிர் எல்லாப் பொருளினும் சிறந்தது ஆயினும், ஒழுக்கம் போல விழுப்பம் தாராமையின் உயிரினும் ஓம்பப்படும்’ என்றார்.).
மணக்குடவர் உரை

ஒழுக்கமுடைமை சீர்மையைத் தருதலானே, அவ்வொழுக்கத்தைத் தனது உயிரைக் காட்டினும் மிகக் காக்க வேண்டும். இஃது ஒழுக்கம் மேற்கூறிய நன்மையெல்லாந் தருமாதலின், அதனைத் தப்பாமற் செய்யவேண்டுமென்று வலியுறுத்திற்று.

மு.வரதராசனார் உரை

ஒழுக்கமே எல்லார்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாகப் போற்றப்படும்.
சாலமன் பாப்பையா உரைஒழுக்கம், அதை உடையவர்க்குச் சிறப்பைத் தருவதால் உயிரைக் காட்டிலும் மேலானதாக அதைக் காக்க வேண்டும்.

வ.உ.சிதம்பரனார் உரை

பொருள்: ஒழுக்கம் விழுப்பம் தரலான் – ஒழுக்கம் (தன்னை யுடையார்க்கு) மேன்மையைத் தருதலால், ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் – ஒழுக்கத்தை (த் தமது) உயிரினும் (மிகப்) பேண வேண்டும்.

அகலம்: பரிமேலழகர் பாடம் ‘தரலான்’. மற்றை நால்வர் பாடம் ‘தரலால்’.

கருத்து: தன் உயிரைக் காத்தலினும் மேலாக ஒருவன் தன் ஒழுக்கத்தைக் காக்கக் கடவன்.

Kalpavriskha – The Wishing Tree [Inner Engineering – Sadhguru Jaggi Vasudev]Kalpavriksha – Lit. a wishing tree. In yoga, a well-established mind is referred to as a kalpavriksha
The reason why success comes so easily and naturally for one person, and is a struggle for someone else, is essentially this: one person has organized his or her mind to think the way he or wants, and another thinks against his or her own interests.
A well-established human mind is referred to as a kalpavriksha, or a wishing tree that grants any boon. With such a mind, whatever you ask for becomes a reality. All you need to do is to develop the mind to a point where it becomes a wishing tree, rather than a source of madness. A mind that can manifest whatever it chooses is described in yoga as being in a state of samyukti. This is a skillfulness that arises out of equanimity.
Once your thoughts get organized, your emotions will also get organized. Gradually, your energies and body get organized in the same direction as well. However, the order in which you address these dimensions could vary, depending on what you are ready for. Considering the realities of the day, most people are not ready for any system unless they are first intellectually convinced of it. Eventually, once your thoughts, emotions, body, and energy are channelled in one direction, your ability to create and manifest what you want is incredible.

Today modern science is proving that this whole existence is just a reverberation of energy, an endless vibration. Thoughts too are a reverberation. If you generate a powerful thought and let it out, it will always manifest itself.

For this to happen, it is important that you do not impede and weaken your thought by creating negative and self-defeating thought patterns. Generally, people use faith as a means to banish negative thoughts. Once you become a thinking human being, however, doubts invariably surface. The way your mind is made, if God appears right here this moment, you will not surrender to him or her. Instead, you will want to conduct an investigation to find out whether this is a genuine article or not.
There is an alternative to faith, which is commitment. If you simply commit yourself to create what you really care for, now once again your thoughts get organized in such a way that there are no hurdles. Your thoughts flow freely toward what you want, and once this happens, the manifestation of your desire is a natural consequence.

To create what you really care for, your desire must first be well manifested in your mind. Is that what you really want? Think this through carefully. How many times in your life have you thought, “This is it.” The moment you got there you realized that was not it at all! So, first, explore what it is that you really want. Once that is clear and you are committed to creating it, you generate a continuous process of thought in that direction. When you maintain a steady stream of thought without changing direction, it will manifest as a reality in your life.

There are yogic processes by which you can touch another dimension of intelligence, unsullied by memory, called Chitta, which we have mentioned earlier. Realizing the power of Chitta is called chit shakti, a simple and powerful process through which you can access the very source of creation within you.

நன்றி: செல்வி மஞ்சரி (Star Vijay – தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு)ஒழுக்கமுடைமை தான் மனிதர்களுக்கு உடைமை.எது ஒழுக்கம் ? கடைசி வரை தன் கைத்தடியைப் போல தன் கொள்கையையும் வலையாமல் வைத்திருந்தாரே காந்தி – அது ஒழுக்கம். பாரதியின் பாட்டு ஒழுக்கம்; பாரதியுன் பார்வை ஒழுக்கம்; பாரதியுன் மீசைக் கூட ஒழுக்கம். தன் கரைப் படாத சட்டைப் போல் கடைசிவரை தன் கரங்களையும் கரைப் படாமல் வைத்திருந்தாரே காமராசர். அவர் ஒழுகியது ஒழுக்கம். 
அதனால் தான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் என்றார் திருவள்ளுவர்

ஏன் ஒழுக்கத்திற்கு உவமையாக உயிரனை சொன்னார் திருவள்ளுவர் ?
உயிர் எல்லாப் பொருளினும் சிறந்தது ஆயினும், ஒழுக்கம் போல விழுப்பம் தாராமையின் உயிரினும் ஓம்பப்படும். அதாவது, உலகத்தில் உயிர்த் தான் சிறந்தது என்று எண்ணிக்கொண்டு இருக்கின்ற மனிதர்களே! இதைக் காட்டிலும் சிறந்தது ஒன்று இருக்கின்றதடா. அது தான் ஒழுக்கம்.
உயிர் சென்று விட்டால் உயிர் மறுபடியும் வரும். ஆனால் ஒழுக்கம் சென்று விட்டால் மறுபடியும் வராது. உயிர்ப் பிரிந்து விட்டால் மற்றவர் நம்மக்காக அழுவாரகள். ஆனால் ஒழுக்கம் பிரிந்து விட்டால் நமக்கு நாமே அழுவோம்
உயிர் போன பின் நமக்கு வலி இல்லை. ஒரு வேளை போகும் போது வலிக்கலாம். ஆனால் ஒழுக்கம் போன பின்பும் நாம் வாழ வேண்டி இருக்கும். அது மிகுந்த வேதனையை தரும். எனவே, ஒழுக்கம் உயிரினும் மேலானாதாகக் கருதப்படும். 
உயிரோடு இருப்பவனெல்லாம் உயர்ந்தவனல்ல. ஒழுக்கத்தோடு இருப்பவன் தான் உயர்ந்தவன் என்று சொல்வதற்க்காக தான் உயிரினும் ஒம்பப் படும் என்கிறார். வேதம் ஓதுவதனால் மட்டும் நீ சிறந்தவன் ஆகிவிட மாட்டாய். உன் ஒழுக்கம் கெடுகின்ற சூழ்நிலையிலே நீ ஒழுக்கத்துடன் இருந்தால் ஒழுக்கம் உயிரினிம் ஒம்பப் படும். உன் பிறப்பே சந்தேகத்திற்கு உள்ளாகும்.

மேலும் – குகன் அருள்

இத் திருக்குறளுக்கு விளக்கமாக, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய “முதுமொழிமேல் வைப்பு” என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்….
தில்லை மறையோர் சிவசமயம் சார்ந்து ஒழுகிஇம்மையே சாரூபம் எய்தினார் நல்லஒழுக்கம் விழுப்பம் தரலான், ஒழுக்கம்உயிரினும் ஓம்பப் படும்.                       
தில்லை மறையோர் —  தில்லை வாழ் அந்தணர்கள்.  இவ் அந்தணர்கள் தத்தமக்கு விதிக்கப்பட்ட நெறியில் ஒழுகியதோடு, இறைவழிபாட்டில் நின்றார்கள். இவர்கள் இம்மையிலேயே சிவசாரூபம் எய்தினமை, திருஞானசம்பந்தப் பெருமானுக்கு இவர்கள் சிவகணங்களாகத் தோன்றியமையினால் விளங்கும்.
அண்டத்து இறைவர் அருளால், அணிதில்லைமுண்டத் திருநீற்று மூவாயிர வர்களும்தொண்டத் தகைமைக் கணநாதராய்த் தோன்றக்கண்டு, அப்பரிசு பெரும்பாணனார்க்கும் காட்டினார்.
எனச் சேக்கிழார் பெருமான் பாடி உள்ளதை அறிக.
அடுத்ததாக, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, “திருப்புல்லாணி மாலை” என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்…
பழுக்கும் பழமொழி பார், ஒழுக்கம் விழுப்பம் தரலால்,ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்று உரைப்பர், நெஞ்சே!செழிக்குந் திருப்புல்லை மால்பதத்து அன்பில் திருந்துவையேல்இழுக்கம் இல்லாமை ஒழுக்கம் விழுப்பம் எல்லாம் தருமே.
உலகில் சிறந்து விளங்கும் பழமொழியான திருக்குறள், ஒழுக்கம் சிறப்பைத் தருதலால், அந்த ஒழுக்கமானது உயிரினும் மேலானதாகப் பாதுக்காக்கப்படும் என்று வழங்குவதாகச் சொலவர். எனவே, நெஞ்சமே! சிறந்த நிலையில் விளங்கும் திருமாலின் திருவடிகளில் அன்பு பொருந்தி இருப்பாயானால், கீழ்மை ஏதும் இல்லாதபடிக்கு, அந்த ஒழுக்கமானது மேன்மை எல்லாவற்றையும் தரும்.
பழுக்கும் பழமொழி – சிறந்து விளங்கும் பழமொழியாகிய திருக்குறள். மால் பதத்தன்பில் – திருமாலின் திருவடி அன்பில்.  திருந்துவையேல் – பொருந்தி நிற்பாயானால்.  இழுக்கமில்லாமை – கீழ்மைத்தனமில்லாமை. விழுப்பம் – மேன்மை.                                                              பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்திருத்தலைக் காணலாம்…  விழுப்பமும் கேள்வியும் மெய்ந்நின்ற ஞானத்தொழுக்கமும் சிந்தை உணர்கின்ற போதுவழுக்கி விழாவிடில் வானவர் கோனும்இழுக்கின்றி எண்ணிலி காலம தாமே. 
— திருமந்திரம்.

இதன் பொழிப்புரை —
`உண்மையான கல்வியும், கேள்வியும், ஞானச் செய்தியும் யாவை` என்று ஒருவனது உள்ளம் ஓர்கின்ற காலத்து, அது பிழைபட்டுப் பொய்ம்மையில் விழாதிருப்பின், சிவபெருமான் அவனுக்குத் தடையின்றிக் காலம் கடந்த பொருளாய் வெளிப்பட்டு நிற்பன்.
குறிப்புரை :  வழுக்கி விழுதலாவது, பொய்யை மெய்யெனத் துணிதல்.  மெய்ம்மையான கல்வி கேள்வி ஞானச் செய்திகளை உடையார் காலத்தானும், இடத்தானும் வரையறுக்கப்படாத இறை நிறைவை எய்துவர்` என்றது. இதனால், மயக்க நூலைக் கற்றலும், மயக்க உரைகளைக் கேட்டலும், அவற்றின்வழி அறிந்த நெறியின் நிற்றலும் ஆகாமை கூறப்பட்டது.
தானத்தின் மிக்க தருமமும், தக்கார்க்குஞானத்தின் மிக்க உசாத்துணையும் — மானம்அழியா ஒழுக்கத்தின் மிக்கதூஉம் இல்லை,பழியாமல் வாழும் திறம்.   

   
— அறநெறிச்சாரம்.

இதன் பதவுரை —
தானத்தின் மிக்க தருமமும் — உயர்ந்தோரை நாடி அவர்க்கு வேண்டுவன உதவுதலைக் காட்டினும் சிறந்த அறமும், தக்கார்க்கு — பெரியோர்க்கு, ஞானத்தின் மிக்க — அறிவைக் காட்டிலும் சிறந்த, உசாத்துணையும் — ஆராயுந் துணைவனும், மானம் அழியா ஒழுக்கத்தின் மிக்கதூஉம் — பெருமை கெடாத ஒழுக்கத்தைக் காட்டிலும் சிறந்த நல்லொழுக்கமும், இல்லை —இல்லை, பழியாமல் வாழுந் திறம் — இம்மூன்றும் பிறர் பழியாமல் வாழ்வதற்கேற்ற செயல்களாகும்.

பிறப்பு, நெடுவாழ்க்கை, செல்வம், வனப்பு,நிலக்கிழமை, மீக்கூற்றம், கல்வி, நோயின்மை,இலக்கணத்தால் இவ்எட்டும் எய்துப என்றும்ஒழுக்கம் பிழையாதவர்.     —  ஆசாரக் கோவை.
இதன் பதவுரை —
என்றும் — எப்பொழுதும், ஒழுக்கம் பிழையாதவர் — ஒழுக்கத்தில் தவறாதவர், பிறப்பு — நற்குடிப்பிறப்பு, நெடு வாழ்க்கை — நீண்ட வாழ்நாள், செல்வம் — பொருட் செல்வம், வனப்பு — அழகுடைமை, நிலக்கிழமை — நிலத்திற்கு உரிமை, மீக்கூற்றம் — சொல்லின் மேன்மை, கல்வி — படிப்பு, நோய் இன்மை — பிணியில்லாமை, இ எட்டும் — இந்த எட்டு வகையினையும், இலக்கணத்தால் — அவற்றிற்குரிய இலக்கணங்களுடன், எய்துப — அடைவர்.
நற்குடிப் பிறப்பு, நெடிய வாணாள், செல்வம், அழகுடைமை, நிலத்துக்கு உரிமை, சொற்செலவு, கல்வி, நோயின்மை என்று சொல்லப்பட்ட இவ்வெட்டினையும் இலக்கணத்தோடு நிரம்பப் பெறுவர் என்றும் ஆசாரம் தப்பாமல் ஓழுகுவார். ஒழுக்கம் தவறாதவர்கள் மேற்கூறிய எட்டு வகையையும் எய்துவர்.

திருஒக்கும் தீதில் ஒழுக்கம், பெரியஅறன் ஒக்கும் ஆற்றின் ஒழுகல், — பிறனைக்கொலை ஒக்கும் கொண்டுகண் மாறல், புலைஒக்கும்போற்றாதார் முன்னர்ச் செலவு.
                                —  நான்மணிக்கடிகை.

இதன் பதவுரை —
தீது இல் ஒழுக்கம் திரு ஒக்கும் — தீமை கலவாத நல்லொழுக்கம் செல்வத்தை ஒக்கும்; ஆற்றின் ஒழுகல் பெரிய அறன் ஒக்கும் — நெறிமுறைப்படி ஒழுகுதல் சிறந்த அறச் செய்கையோடு ஒக்கும்; பிறனைக் கொண்டு கண் மாறல் கொலை ஒக்கும் — பிறனொருவனை நட்பாகக் கொண்டு, பின்பு அந் நட்பு மாறிப் புறங் கூறுதல், அவனைக் கொலை செய்தலைப் போன்றதாகும்; போற்றாதார் முன்னர் செலவு புலை ஒக்கும் — தம்மை மதியாதாரிடத்தில் சென்று ஒன்றை விரும்புதல், இழி தகைமையை ஒப்பதாகும்.
நல்லொழுக்கம் செல்வம் போன்றது; பிறரைப் புறங்கூறல் அவரைக் கொலைசெய்தல் போல்வதாம்; தம்மை மதியாரைத் தாம் மதித்தல் இழிதகைமையாகும்.
கண்மாறல் : ஒரு சொல்; கருத்து மாறலென்பது பொருள்.

வன் தெறு பாலையை மருதம் ஆம் எனச்சென்றது; சித்திரவடம் சேர்த்ததால் -ஒன்ற உரைத்து, ‘உயிரினம் ஒழுக்கம் நன்று’ எனப்பொன்றிய புரவலன் பொரு இல் சேனையே.      —  கம்பராமாயணம், திருவடி சூட்டு படலம்.
இதன் பதவுரை —
‘உயிரினம் ஒழுக்கம் நன்று என ஒன்று உரைத்து — உயிரை விட நல்லொழுக்கமே சிறந்து விளங்குவது எனக் கருதிச் சத்தியம் ஒன்றையே உரைத்து; பொன்றிய புரவலன் — உயிர்விட்ட சக்கரவர்த்தியாகிய தயரதனது; பொரு இல் சேனை — ஒப்பற்ற சேனையானது; வன்தெறு பாலையை — கொடிய அழிக்கவல்ல பாலை நிலத்தை; மருதம் ஆம் எனச் சென்றது — (முன் கூறியவாறு  நீரும் நிழலும் பெற்றுக் குளிர்ந்தமையால் மருதநிலம் ஆகும் என்று கருதி எளிதாகக் கடந்து சென்று;) சித்திரகூடம் சேர்ந்தது — சித்திரகூட மலையை அடைந்தது.     பாலை மருதமாயினது. யானைகளின் மதநீர்ப் பெருக்கால் வழி வழுக்கிச் சேறானதாலும், மன்னர் குடை நிழலால் குளிர்ச்சி ஆனதாலும் ஆம் என மேற் கூறினார்.

Thirukkural – Management – Personality Development – Self DisciplineSelf-discipline is the best discipline according to Kural 131. Self-discipline is important as it brings a person name, fame, health, and greater achievements. Therefore, self-discipline must be considered greater than one’s life and preserved for greater achievements.
Right Conduct leads to excellence and Must be guarded above life.
Self-discipline helps us gain self-control.

இந்திய தத்துவ ஞானம் (லட்சுமனன்)

ஒழுக்கத்துக்கு முதன்மைஒழுக்கத்தைப் பாதுகாப்பதே வருணன் எனப்படும் தெய்வத்தின் கடமை என்பதையும், தெய்வங்களுக்கு வருணன் வழங்கப்பட்ட முதன்மையையும் வேதம் கூறுவதாக அறிவோம்.  இதிலிருந்தே, வேதங்களிலே ஒழுக்கம் எவ்வளவு முக்கியமாகக் கருதப்பட்டதென்பதும் புலனாகும். வேதங்கள் மனிதனுடைய கடமைகளை ஐந்தாகப் பிரித்துள்ளன. தெய்வம், ஞானிகள், பிதிரர், உடன் வாழும் ஏனைய மனிதர் ஆகிய நான்கு பகுதியினருக்குமட்டுமின்றிப் பிராணிகளுக்கும் தன்னால் ஆவன செய்ய ஒவ்வொரு மனிதனும் கடமைப்பட்டுள்ளான் என்பது வேதவாக்கு. “தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்றாங்க ஐம்புலத்தா றோம்பல்தலை” என் வள்ளுவர் கூறுவது இங்கு ஒப்பிடத்தக்கது. பிதிர்கள், தெய்வம், விருந்தினர், உறவினர், தான் ஆகிய ஐவருக்கும் செய்ய வேண்டிய கடமையைக் செய்வது ஒருவனுக்கு அறம் என்பதே இக்குறளின் கருத்து. வேதங்களும் ஐந்து கடமைகளைக் கூறுகின்றன. குறளும் ஐந்து கடமைகளைக் கூறுகின்றது. வேதமும் ஐந்து கடமைகளைக் கூறுகின்றது. அவற்றுள் தென்புளத்தார் தெய்வம் விருந்து ஆகிய மூவரையும் பேண வேணுமென்பது இரண்டுக்கும் பொதுவாயுள்ளது. ஆனால், குறள் ஒருவன் தன்னையும் தன் உறவினரையும் பேணவேணுமெனக் கூரியதற்கும் பதிலாக, வேதங்கள் ஞானிகளையும், மக்கலாலாத ஏனைய பிராணிகளையும் பேணுவது ஒருவனுக்கு அறம் எனக் கூறியிருப்பது ஒப்பிடத்தக்கது.

ஒருவன் தன்னைப் பேணுவதை ஓர் அறமாக வேதங்கள் கருதாதது இங்குச் சிந்திக்கத்தக்கது. தன்னைப் பேணுவது பிறரைப் பேணுவதற்குத் தான் நிலைக்களனாய் நின்று பயன்படும் பொருட்டே. எனவே, தன்னைப் பேணுவதும் ஒரு அறமாகுமென வாதாடலாம். எனினும், சுயநலமின்மையே எல்லாவற்றுள்ளும் தலையாய அறமாக வேதங்கள் பேசுவதை இங்குக் குறிப்பிடல் வேண்டும். சதபத பிராமணத்தில் ஒருவன் தனக்குரிய எல்லாவற்றையும் தியாகம் செய்தலே வீடுபேற்றுக்கு வழி எனக் கூறப்பட்டுள்ளது. சுயநலமின்மை, தியாகம் ஆகிய இவற்றோடு சேர்த்து அன்பையும் விருந்தோம்பலையும் மிக முக்கியமான அறங்களாக வேதங்கள் பேசுகின்றன. சூதாடல், பிறன்மனை விழைதல், பொய் பேசுதல் ஆகியவற்றைப் பெரும்பாவங்களாக வேதங்கள் கண்டிக்கின்றன. 

இந்திய தத்துவ ஞானம் (லட்சுமணன்)”செல்வத்தைப் புறக்கணிக்க வேண்டா. வந்த விருந்தினரைத் தெய்வமாகக் கருது. உனக்காக மட்டும் உணவு உண்டாக்கினால் போதாது. நாட்டுக்குப் பயன்படுமாறு உணவு ஏராளமாக உண்டாக்கு. பொருள் உண்டாக்குவது உனக்காக அல்ல. மற்றவர்களுக்காக. எவருக்கும் இடமில்லை என்று சொல்லாதிருப்பாயாக. இதுவே ஒழுக்கம்” இவை உபநிடதங்களிலே காணப்படும் உபதேசங்களுக்குச் சில உதாரணங்கள்
எழுத்தாளர் ஜெயமோகனின் வெண்முரசு-இமைக்கணம்-32 இல் ஒரு வரி இப்படி வருகிறதுசற்றுநேரம் எங்களிடையே சொல் ஏதும் எழவில்லை. பின்னர் நான் அவனிடம் “உண்மையில் நான் யார்? அதை கண்டுசொல்ல உன் நிமித்த நூலில் இடமுண்டா?” என்றேன். “நிமித்த நூலின்படி மானுடர் அறுபடா தொடர்ச்சிகள். இங்கிருப்போர் வேறெங்கோ இருப்பவர்களின் மறுவடிவங்கள். அதை அறிய சில கணக்குகள் உள்ளன. ஆனால் அதை அறிந்து பயனில்லை” என்றான்.

நான் “ஏன்?” என்றேன். “அதை அறிவதனால் நாம் எதையும் மாற்றிக்கொள்ளப் போவதில்லை.” நான் சீற்றத்துடன் “நான் மாற்றிக்கொள்கிறேன்” என்றேன். அவன் மறுமொழி சொல்லவில்லை. “ஏன்?” என்று சற்று தணிந்து கேட்டேன். “நாம் பழக்கத்தாலேயே வாழ்கிறோம். உளப்பழக்கம் உடற்பழக்கம். அறிவால் அல்ல.” நான் “இல்லை, என்னால் என் அறிதலை அன்றாடமென்றாக்கிக்கொள்ள முடியும்” என்றேன். “அவ்வண்ணமென்றால் ஆகுக!” என்றான். நான் “சொல்க!” என்றேன்.

https://dailyprojectthirukkural.blogspot.com/2013/12/blog-post_14.html

https://nakkeran.com/wp-admin/post-new.php

About editor 3046 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply