புத்தாண்டை பற்றிய வரலாற்று உண்மைகள் ! [Historical truth of New Year]


புத்தாண்டை பற்றிய வரலாற்று உண்மைகள் ! [Historical truth of New Year]

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்

February 02, 2021

 வரலாற்றில் முதல் முதல் புத்தாண்டு மார்ச் மாதத்தில் கொண்டாடப்பட்டது உங்களுக்கு தெரியுமா ?

எளிய மற்றும் வசதியான சந்திரனின் “சுழற்சியை” அடிப்படையாக கொண்ட  முன்னைய அல்லது ஆரம்ப ரோமானிய நாட்காட்டி [Roman Calendar], தொடக்கத்தில் 10 மாதங்களை மட்டும் கொண்டு மொத்தம் 304 நாட்களை உள்ளடக்கி இருந்தன. அந்த பத்து மாதங்களும் மார்ச்சில் இருந்து டிசம்பர் வரை பெயரிட்டு இருந்தன [Martius, Aprilis, Maius, Junius, Quintilis, Sextilis, September, October, November and December]. ரோம் நகரத்தை கி.மு. 753ல் நிறுவியதாக கருதப்படும் முதலாவது மன்னன் ரோமுலஸ் [Romulus, the legendary first ruler of Rome] இந்த  நாட்காட்டியை கி.மு.700 இல் அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது.

மேலும் அவர்களின் பாரம்பரியத்தின் படி,  நுமா பாம்பிலியஸ் [நுமா பொம்பிலியஸ்] என்ற ஆட்சியாளரால் [the Roman ruler Numa Pompilius] ஜனவரி மற்றும் பெப்ரவரி சேர்க்கப்பட்டு, ஒரு ஆண்டின் மொத்த நாட்கள் 355 ஆக அதிகரித்தது. பண்டைய அறிஞர்களின் கூற்றுப்படி, ரோம் நிறுவப்பட்ட நாளிலேயே, நுமா பாம்பிலியஸ் பிறந்தார் –

கிமு 753 ஏப்ரல் 21. அவரது ஆரம்பகால வாழ்க்கையைப் பற்றி வேறு எதுவும் அறியப்படவில்லை. பின் கிமு 46 இல், ரோமானிய சர்வாதிகாரி ஜூலியஸ் சீசர், சில அதிக நாட்களை சேர்த்து புது ஜூலியன் நாட்காட்டியை [Julian Calendar] சூரியனின் “சுழற்சியுடன்” மறுசீரமைத்து அறிமுகப்படுத்தினார். ஆரம்ப ரோமன் நாட்காட்டி மார்ச் முதலாம் திகதியை புத்தாண்டின் தொடக்கமாக கருதியது. ஆனால் ஜூலியன் நாட்காட்டி,  ஜனவரி முதலாம் திகதியை புத்தாண்டாக கருதியது. இது 12 மாதங்களையும் 365 நாட்களையும் கொண்ட சாதாரண ஆண்டையும் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை பிப்ரவரியில் மேலதிக ஒரு நாளைக் கொண்ட நெட்டாண்டையும் கொண்டிருந்தது.

வெப்ப வலய சூரிய ஆண்டு உண்மையில் 365.25 நாட்களை விட 11 நிமிடங்கள் குறைவானதாகும். யூலியன் நாட்காட்டியில் இந்த மேலதிகமான  11 நிமிடங்கள் ஒவ்வொரு நான்கு நூற்றாண்டுகளிலும்  3 நாட்களை அதிகமாகத் தருகிறது. இந்த 3 நாள் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, கிபி 16ம் நூற்றாண்டளவில், சில நாட்காட்டி நாட்கள் அகற்றப்பட்டு, யூலியன் நாட்காட்டிக்கு பதிலாக  கிரிகோரியன் நாட்காட்டி அல்லது கிரேக்க நாட்காட்டி [Gregorian calendar] அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நாட்காடியில், இயேசு பிறந்ததாகக் கணிக்கப்பட்ட ஆண்டிலிருந்து ஆண்டுகள் இலக்கமிடப்பட்டன.

ஆங்கிலப் புத்தாண்டு என்றால், எல்லோரும் அது ஜனவரி முதலாம் திகதி என்று இன்று ஏற்றுக்கொள்ளும் நிலையில், தமிழ் புத்தாண்டு சித்திரையா [‘ஏப்ரல்’ மத்தியில் இருந்து ‘மே’ மத்தி தமிழரின் சித்திரை மாதம் ஆகும்]? தையா [‘ஜனவரி’ மத்தியில் இருந்து ‘பெப்ரவரி’ மத்தி தமிழரின் ‘தை’ மாதம் ஆகும்]? என்று குழப்பமும் கருத்து மாறுபாடும் காணப்படுகிறது. இதைப்பற்றி பிறிதொரு கட்டுரையில் அலசுவோம்.

குறைந்தது 4000 ஆண்டுகளாக, உலகெங்கிலும் உள்ள நாகரிகங்கள் புத்தாண்டை – ஆண்டின் தொடக்கத்தை – கொண்டாடி வருவதாக வரலாறு சான்றுபகிர்கிறது. இன்று கிரிகோரியன் நாட்காட்டியின் படி, டிசம்பர் 31 ஆம் திகதி தொடங்கி, ஜனவரி முதலாம் திகதி வரை புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறுகிறது. பொதுவான மரபு அல்லது வழமையின் படி,  விருந்துகளில் வழிபாடுகளில் கலந்துகொள்ளுதல், புத்தாண்டு சிறப்பு உணவுகளை உண்ணுதல், புதிய ஆண்டிற்கான தீர்மானங்களை உருவாக்குதல் [making resolutions for the new year] மற்றும் பட்டாசு கொளுத்துதல் அல்லது அந்த வான வேடிக்கைகளை பார்த்தல் போன்றவையில் மக்கள் ஈடுபடுகிறார்கள்.

உலகில் முதல் முதல் பதியப்பட்ட, வரலாற்று ரீதியான புத்தாண்டு விழாவை நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இன்றைய இராக் [Iraq] எனப்படுகிற நாட்டின் தென்பகுதியில், பண்டைய மெசொப்பொத்தேமியா [சுமேரிய] நாகரிகத்தின் முக்கிய அங்கமாக திகழ்ந்த பாபிலோனிய நாகரிகத்தில் காணக்கூடியதாக உள்ளது. ‘உத்தராயணம்’  [summer Solstice / Sanskrit words “uttara” (North) and “ayana” (movement)] என அழைக்கப்படும் சூரியன் வடக்கு முகமாகச் செல்லும் டிசம்பர் இறுதி பகுதியில் இருந்து [around 22 December] முதல் ஆறுமாத காலத்தில், பூமத்திய ரேகையை அது கடக்கும் நாளில் இரவும் பகலும் சமமாக இருக்கும்.

Image result for சம இரவு

சமயிரவு நாள்

இந்த சம இரவு நாளை ஆங்கிலத்தில் Equinox என்று அழைப்பர். ஆண்டுக்கு இரு முறை சூரியன் இவ்வாறு நிலநடுக்கோட்டினை [பூமத்தியரேகை, Equator] கடப்பது நிகழுவது வழக்கம். சாதாரணமாக உத்தராயணத்தில் மார்ச் 20 அல்லது 21அன்றும் மற்றும் தட்சிணாயத்தில் செப்தெம்பர்  22 அல்லது 23 அன்றும் இவை பொதுவாக நிகழும் [around 20 March and 23 September]. பாபிலோனியர்கள் மார்ச் மாத சம இரவு நாளுக்கு பின் வரும் முதல் அமாவாசையை [first New Moon after the vernal or spring equinox which was used to indicate the first day of spring] தமது புத்தாண்டாக கொண்டாடி னார்கள் என்று வரலாறு கூறுகிறது. இவர்களின் புதுவருட கொண்டாட்டம்  12 நாட்கள் நீடித்ததாக அறியமுடிகிறது. இதை அகிடு கொண்டாட்டம் [Akitu festival] என்றும் அழைக்கப் படுகிறது.

இந்த புத்தாண்டு தினத்தில், வசந்தக் காலத்தை வரவழைக்கும் பொருட்டும் விவசாயம் அதிக பயன் தரும் பொருட்டும், மேலும் இவற்றை உறுதி படுத்தும் பொருட்டும், உள்ளூர் மன்னன், கி மு 3000 ஆண்டு அளவில் ஆண்ட சுமேரியன் புராண மன்னன் துமுழி (Dumu Zi) அல்லது துமுஸ்/தம்முஸ் (Dumuz /Tammuz) என்ற ஆண் தெய்வகவும், உள்ளூர் பெண் மதகுரு, துமுஸின் காதலி ஈனன்ன ஆகவும், பங்காற்றி [ceremonial union of male [Dumuz] and female [Inanna] fertility gods] விழா நடத்தினார்கள். புது வருடத்தில் இந்த இருவருக்கும் இடையிலான  திருமணம் அல்லது ஆண் பெண் உறவு தான், இந்த பல நாட்கள் நடை பெரும் விழாவின் உச்சக் கட்டம் ஆகும். இந்த நேரத்தில்தான் ஒரு புதிய மன்னர் முடிசூட்டப் படுவார் அல்லது தற்போதைய ஆட்சியாளரின் தெய்வீக ஆணை அடையாளமாக புதுப்பிக்கப் படும் [the current ruler’s divine mandate was symbolically renewed]

இவ்வாறு, பழங்காலத்தில் உலகம் முழுவதும், அவர்களின் வாழ்வுடன் பின்னிப்பிணைந்த ஏதாவது ஒரு குறிப்பிட்ட நிகழ்வை அடிப்படையாக கொண்டு அதிநவீன நாட்காட்டிகள உருவாக்கியது தெரியவருகிறது. அந்த குறிப்பிட்ட நிகழ்வு அதிகமாக, ஆண்டின் முதல் நாளை, ஒரு விவசாய அல்லது வானியல் நிகழ்வுகளுடன் [an agricultural or astronomical event] சம்பந்தப் படுத்தி இருப்பது தெரியவருகிறது. உதாரணமாக, பண்டைய எகிப்து, நைல் நதிக்கு நன்றி சொல்லவும், அது தொடர்ந்து ஓடுவதற்காக பிரார்த்திப் பதற்காகவும் [to give thanks, and to pray for the Nile’s flow] தமது புத்தாண்டை கொண்டாடுகிறது.

The ancient wonder and veneration of the dog star Sirius | Ancient Origins

பொதுவாக இரவு நேரத்தில் ஒளிரும் நட்சத்திரங்களில் மிகவும் பிரகாசமானது சிரியஸ் [star Sirius] என்னும் நட்சத்திரம் ஆகும். இது அடிவானத்தில் முதல் தோன்றும் நாளே எகிப்தியர்களின் புத்தாண்டின் தொடக்கம் ஆகும். ஜூன் நடுப் பகுதியில் இருந்து ஜூலையின் ஆரம்பத்தில் [mid-June to early July] இது நடைபெறுகிறது. மற்றது இந்நாளிலேயே உலகிலேயே மிகப்பெரிய நதியான நைல் வெள்ளப் பெருக்கெடுக்க தொடங்கி எகிப்திய தேசத்தை வளப்படுத்துகிறது. இதை அவர்கள் வெபெட்-ரென்பெட் [Wepet-Renpet / “opening of the year”] கொண்டாட்டம் என்றும் அழைப்பர்.

அவ்வாறே வசந்த விழா என அழைக்கப்படும் சீனப் புத்தாண்டு (Chinese New Year) தட்சிணாயனத்தின் பின் வரும், இரண்டாவது அமாவாசையில் வருகிறது [occurred with the second new moon after the winter solstice]. இது அதிகமாக,  ஜனவரி 21 மற்றும் 20 பிப்ரவரி [between 21 January and 20 February] இடையே அமாவாசையை அடுத்து வரும் புதிய நிலவு தோன்றுவதுடன் ஆரம்பமா கின்றது.

இன்றும் கொண்டாடப்படும் பழமையான மரபுகளில் ஒன்று இந்த சீனப் புத்தாண்டு. இது ஷாங்க் வம்சத்தின் போது [during the Shang Dynasty], மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பமாகியது என்பது குறிப்பிடத் தக்கது.

பெரும்பான்மையான தமிழர்கள் மற்றும் இலங்கையர்கள் இன்று கொண்டாடும் சித்திரை மாதத்தில் [ஏப்ரல் நடுப்பகுதியில்] பிறக்கும் புத்தாண்டு வடநாட்டு மன்னனான சாலிவாகனன் என்பவனால் கிறிஸ்துவுக்கு பின் 78ஆம் ஆண்டில் வடநாட்டில் ஏற்படுத்தப்பட்டது. பின்னர் அது தமிழர்கள் மத்தியிலும் மெல்ல மெல்ல நடைமுறைக்கு வந்தது. இது அறுபது ஆண்டு சுழற்சி முறையையும் [The 60 Year Cyclic Calendar (Sexagenary Calendar)]  கொண்டது.

அதே போல சீன நாட்காட்டியும்  ஒரு அறுபது ஆண்டு சுழற்சி முறை நாட்காட்டி ஆகும். மேலும் அபிதான சிந்தாமணி என்ற நூலில் 1392ம் பக்கத்தில் அறுபது ஆண்டுகளுக்கான விளக்கம் நம்பமுடியாத புராண கதையாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அறுபது ஆண்டுகளுக்கும் ‘பிரபவ’ முதல் ‘அட்சய’ என்று அறுபது பெயர்கள் இருக்கின்றன. இந்த அறுபது பெயர்களில் ஒன்று கூட தமிழ்ப் பெயர் கிடையாது.

இன்றைக்கு எமக்கு கிடைக்கும் மிக மிகத் தொன்மையான தமிழ் நூல் தொல்காப்பியம் ஆகும். இது “காரும் மாலையும் முல்லை. குறிஞ்சி, கூதிர் யாமம் என்மனார் புலவர்” என்கிறது. ஆக, கார் காலம் [மழைக் காலம்] தான், முதல் காலமாகக் குறிக்கிறது தொல்காப்பியம்! எனினும் உறுதியாக, இது தான் புத்தாண்டின்  தொடக்கம் என நேரடியாக இங்கு கூறவில்லை? மற்றயது தமிழ் மாதம் ‘ஆவணி’, ‘புரட்டாசி’ பொதுவாக கார்காலம் என்பர். சங்க இலக்கியங்கள் இதில் மௌனமாக இருக்கிறது. மேலும் எட்டாம் ஒன்பதாம் நூற்றாண்டுகளுக்குப் பிந்திய நிகண்டுகளில் [thesauruses], தமிழ் மாதம் ‘ஆவணியே’ முதல் மாதம் என்ற குறிப்பைக் காணமுடிகின்றது. என்றாலும் அதன் போது புத்தாண்டு என்று பண்டிகை கொண்டாடப்பட்டதா என்பது தொடர்பாக போதிய சான்றுகள் கிடைக்கவில்லை.

உதாரணமாக, “காரே , கூதிர், முன்பணி, பின்பணி, சீர் இளவேனில்,  முதுவேனில் என்றாங்கு  இருமூன்று வகைய பருவம் அவைதாம் ஆவணி முதலா இரண்டிரண்டாக மேவின திங்கள் எண்ணினர் கொளலே.” என்று திவாகர நிகண்டு பாடுகிறது.

திருஞானசம்மந்தரும் கபாலீச்சரம் என்னும் கோயிலில் இறந்த ஒரு பெண்ணை உயிர்பிக்க, தேவாரம் பாடும் பொழுது, முதல் பாட்டில், “ஒட்டிட்ட பண்பி னுருத்திர பல்கணத்தார்க் கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்.”, நெருக்கமான அன்புடைய மாகேசுரர்களுக்குத் [மகேசுரராகிய சிவனை வழிபடும் அடியார்கள் மாகேசுரர் எனப்படுவர்கள்] திருவிழாக்காலங்களில் [தமிழ் மாதம் ஆவணி / பூரட்டாதியில் நிகழ்வது] அன்பர்கள் அமுது செய்விக்கும் காட்சிகளைக் காணாது செல்வது முறையோ? என்று தொடங்கி, “ஐப்பசி யோண விழாவு மருந்தவர்கள் துய்ப்பனவுங் காணாதே போதியோ பூம்பாவாய்” [ஐப்பசி ஓணம்], “தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும் விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்.” [கார்த்திகை விளக்கீடு], எனப் பாடி ,.. இறுதியாக, “பெருஞ்சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய்.” [பெருஞ்சாந்தி / நீர்முழுக்கு] என்று முடிக்கிறார்.

இங்கும் தமிழ் மாதம் ஆவணியில் இருந்து ஒரு ஆண்டில் நடக்கும் திருவிழாக்களை வரிசைப் படி குறிப்பிடுகிறார். எனவே, இங்கே கார்ப்பருவமாகிய தமிழ் மாதம் ஆவணியை முதலில் தொடங்கிக் கூறியிருப்பதில் ஏதோ பொருள் இருக்கிறது என நாம் ஊகிக்கலாம்?  பண்டைத் தமிழகத்தில் “மழை வருதலே”, முதன்மையாக / மங்களகரமாகக் கருதப்பட்டதோ என்னவோ?

எட்டுத் தொகை / பத்துப் பாட்டு போன்ற பல பாடல்களில் தமிழ் மாதம் தை திங்களும் தை நீராடலும் கூறப்பட்டு இருக்கிறது. ஆனால் எந்த ஒரு இடத்திலும் தமிழ் மாதம் தை தான் வருடத்தின் [ஆண்டின்] தொடக்கம் என நேரடியாக எங்கும் கூறவில்லை? எனினும் தமிழ் மரபில் & சங்க இலக்கியங்களில் ….. மிகச் சிறப்பாக / மிக அதிகமாகப் பேசப்படும் / போற்றப்படும் மாதமாக  = தமிழ் மாதம் தை!  அல்லது “தைஇத் திங்கள்” இருக்கிறது.

நக்கீரர் எழுதிய நெடுநல்வாடையில், “திண் நிலை மருப்பின் ‘ஆடு தலை’ ஆக, விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து,” [160 /161] என்ற இரு வரிகளை காண்கிறோம்.

இது, திண்ணிய நிலையினையுடைய கொம்பினையுடைய மேடராசியை முதலாகக் கொண்டு, விண்ணில் ஊர்ந்து திரிதலைச்செய்யும் மிகுந்த ஓட்டத்தையுடைய ஞாயிற்றோடு என்று பொருள் படும் [தலை = முதல்! (தலையாய = முதன்மையான)].

சூரியன் மேஷத்தில் புகுவது, தமிழ் மாதம் சித்திரை மாதம் ஆகும். இங்கு, நக்கீரர் மேஷம் [ஆடு / Aries ] தான் முதல் என்று கூறுகிறார். அதாவது ராசி மண்டலத்துக்கு முதல்! என்கிறார். ஆனால் எங்கும் ஆண்டுக்கு முதல் என்று கூறவில்லை? சிலப்பதிகாரம், இந்திர விழா வைப்பற்றி கூறும் பொழுது, “நடுக்கு இன்றி நிலைஇய நாள் அங்காடியில் சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென, ‘வெற்றி வேல் மன்னற்கு உற்றதை ஒழிக்க’ எனத் ” என்று சொல்கிறது.

இது தமிழ் மாதம் சித்திரை திங்களில், அதாவது  இளவேனில் காலத்தில் [வசந்த காலத்தில்] நடந்தது என்கிறது. அவ்வளவுதான்!. அது காமவேள் விழா / காதல் விழா (Valentines Day) என்று தான் சொல்கிறது. ஆனால் அதைப் “புத்தாண்டு” அல்லது வருடத்தின் தொடக்கம் என்று சொல்லவில்லை?  மேலும், அறுபது வருட சுற்றுகளின் பெயர்கள் சோழர் கல்வெட்டில் இருந்தாலும் .. அவை பிற்காலத்தில் சேர்க்கப்பட்டவையே ஆகும்?  எனவே, தமிழ்ப் புத்தாண்டு நாள் பண்டை இலக்கியங்களில் கிடையாது!  அவை பிற் கால சேர்க்கையே!

இலங்கை தமிழர்கள் தமது பாரம்பரிய புது வருடத்தை, தமிழ் மாதம் சித்திரை ஒன்றில், கை விஷேடத்துடன் கொண்டாடுகிறார்கள். “எவர் கையால் முதற் பணம் கிடைக்கிறதோ, அவரது கைவளம் பணக்காரனாக்கும்” என்ற நம்பிக்கையிலேயே கை வளம் (கை விஷேடம்) நடைமுறைப் புத்தாண்டு காலத்தில் பின்பற்றப்படுகிறது. இந்த நிகழ்வு ஏர் அல்லது கலப்பை (Plough) மூலம் நிலத்தைக் முதலாவதாகக் கிளறிப் புதுப் பயிர்ச் செய்கைக்கு உகந்ததாக மாற்றும்  நிகழ்வாகவும் கொண்டாடப்படுகிறது.

இந்த புது வருட புண்ணிய காலத்தில் சகலரும் “மருத்து நீர்” தேய்த்துக் குளித்து புது வருடத்தை ஆரம்பிப் பார்கள். போர்த் தேங்காய் உடைத்தலும் மாட்டு வண்டி பந்தயமும் கொண்டாட்டத்தை மெருகேற்றும். அது மட்டும் அல்ல குடும்ப வருகைகளும் நடைபெறும் என்றாலும் பழைய தமிழ் இலக்கியத்திலோ சரித்திரத்திலோ ,சித்திரை மாதத்தில் தான் புது வருடம் பிறக்கிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

பொதுவாக நாட்டு வழக்கில், “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற மூதுரை எல்லோரும் அறிந்த ஒன்றாகவே இருக்கிறது. சித்திரை உண்மையிலேயே வருடப் பிறப்பாக இருந்தால், ஏன் “சித்திரை பிறந்தால் வழி பிறக்கும்” என வழக்கில் இல்லாமல் இருக்கிறது? இதுவும் சிந்திக்க வேண்டிய ஒன்று?

பூமி ஒரு முறை கதிரவனைச் சுற்றிவரும் காலமே ஓர் ஆண்டாகும். இச்சுழற்சியில் ஒரு பாதிக் காலம் கதிரவன் வடதிசை நோக்கியும் மறுபகுதிக் காலம் தென்திசை நோக்கியும் செல்வதாகக் காணப் படுகிறது. இதனால் ஓராண்டில் சூரியனின் பயணம், வடசெலவு (உத்ராயணம்) என்றும் தென்செலவு (தட்சனாயணம்) என்றும் சொல்லப்படும். பலர் மகர சங்கராந்தி சமசுகிருதத்தில்  ‘சங்கரமண’ எனில் நகர ஆரம்பி எனப் பொருள் படும்] உத்தராயணத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது என தவறுதலாக கருதுகிறார்கள் [There is a common misconception that Makar Sankranti marks the beginning of Uttarayana] இது முற்றிலும் தவறு. மகர சங்கராந்தி, அல்லது சங்கராந்தி என்பது, சூரியன் தன் வான்வழிப் பயணத்தில் மகர ராசிக்கு மாறும் நாளாகும்.

தமிழ் செல்வா : 2014

இது ஆரம்பத்தில் குளிர்கால கதிர்த்திருப்பத்துடன் இயைந்திருக்கலாம். உதாரணமாக கி மு 272 இல், உத்ராயணத்தின் தொடக்கமும், மகர சங்கராந்தியும் ஒன்றாக இருந்தன, பின் முன்னோக்கி நகர்ந்து இன்று ஜனவரி 14 இல் அதிகமாக நிகழ்கிறது. [In 272 BC, Makar Sankranti was on Dec 21. In 1000 AD, Makar Sankranti was on Dec 31 and now it falls on January 14.] என்றாலும் இன்னும் டிசம்பர் 21 க்கும் ஜனவரி 14 க்கும் பெருமளவு வித்தியாசம் இல்லாததால், இந்த  தவறான கருத்து இன்னும் தொடர்கிறது.

இன்னும் 9000 ஆண்டுகளுக்குப் பின்பு மகர சங்கராந்தி ஜூனில் வந்து தட்சிணாயனத்தின் தொடக்கமாக மாறிவிடும் [Then Makar Sankranti would mark the beginning of Dakshinayana]. எது என்னவென்றாலும், மகர சங்கராந்தி இந்துக்களின் கொண்டாட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வேறுபாடையும் நீங்கள் நாட்காட்டியை சிந்திக்கும் பொழுது கருத்தில் கொள்ளவேண்டும். எனவே சூரியனின் அடிப்படையில் நாட்காட்டி உருவாக்கப்பட்டுள்ளது என்றால் சூரியனின் ஆரம்ப பயணத்தின் அடிப்படையில் ஒன்று டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரியில் [ஏறத்தாழ தை மாதத்தில்] இருக்க வேண்டும், அல்லது ஜூன் இறுதி அல்லது ஜூலையில் [ஏறத்தாழ ஆடி மாதத்தில்] புத்தாண்டு வர வேண்டும் அல்லவா? 

கி.மு. 2000 ஆண்டுகளுக்கு முன், தென் அமெரிக்காவில் வாழ்ந்த மாயன் மக்கள், கி.மு 400 ஆண்டளவில் தமது நாட்காட்டியை அறிமுகப் படுத்தினார்கள். இதன் படி, ஜூலை 26 இல் இவர்களின் புத்தாண்டு வருகிறது. அதாவது ஏறத்தாழ தமிழ் ஆடி மாதத்தில் வருவது குறிப்பிடத்தக்கது. இதுவும் நாம் சிந்திக்க வேண்டிய ஒன்று.

https://www.ttamil.com/2021/01/02_22.html?spref=bl

பிறக்கும் ஆண்டுகளின் தமிழ்ப் பெயர்கள்

Saturday, June 01, 2019  nonfNo commentsதமிழ் நாட்டில் அறுபதாண்டுப் பட்டியல் எப்போது வழக்கில் வந்தது என்பதற்கான தெளிவான சான்றுகள் இல்லைஎனினும் அவற்றின் ஒழுங்கு வராகமிகிரருக்குப் பின்பே அது தமிழகத்துக்கு அறிமுகமானதைச் சொல்கின்றதுதமிழகத்தைப் பொறுத்தவரைபொ.பி 14ஆம் 15ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த கல்வெட்டுகளிலேயே அறுபதாண்டுப் பெயர் பட்டியலை முதன்முதலாகக் காணமுடிகின்றதுதமிழில் அறுபது ஆண்டு வட்டங்களைப் பட்டியலிடும் மிகப்பழைய நூலான அறுபது வருட வெண்பா” இடைக்காடரால் பாடப்பட்டதாகச் சொல்லப்படுகின்றதுஇவர் காலம் பொ.பி 15ஆம் நூற்றாண்டு.  விவேக சிந்தாமணியிலும் அறுபதாண்டுப் பெயர்கள் மறைகுறியாகக் குறிக்கப்படும் பாடலொன்று வருகின்றது.

பிறக்கும் ஆண்டுகளின் தமிழ்ப் பெயர்கள்

Saturday, June 01, 2019 தமிழ் நாட்டில் அறுபதாண்டுப் பட்டியல் எப்போது வழக்கில் வந்தது என்பதற்கான தெளிவான சான்றுகள் இல்லை. எனினும் அவற்றின் ஒழுங்கு வராகமிகிரருக்குப் பின்பே அது தமிழகத்துக்கு அறிமுகமானதைச் சொல்கின்றது. தமிழகத்தைப் பொறுத்தவரை, பொ.பி 14ஆம் 15ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த கல்வெட்டுகளிலேயே அறுபதாண்டுப் பெயர் பட்டியலை முதன்முதலாகக் காணமுடிகின்றது. தமிழில் அறுபது ஆண்டு வட்டங்களைப் பட்டியலிடும் மிகப்பழைய நூலான “அறுபது வருட வெண்பா” இடைக்காடரால் பாடப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. இவர் காலம் பொ.பி 15ஆம் நூற்றாண்டு.

விவேக சிந்தாமணியிலும் அறுபதாண்டுப் பெயர்கள் மறைகுறியாகக் குறிக்கப்படும் பாடலொன்று வருகின்றது.

2008இல் புத்தாண்டுக் குழப்பம் உச்சமடைந்தபோது, அதில் பயன்படும் அறுபதாண்டுப் பட்டியல் தமிழ் அல்ல என்ற வாதம் கிளம்பியது. தமிழ்ப்புத்தாண்டு என்று கூறி அவை ஒவ்வொன்றுக்கும் வடமொழியில் பெயரிட்டுள்ளது ஏன் என்ற குற்றச்சாட்டு தைப்புத்தாண்டு ஆதரவாளர்களால் முன்வைக்கப்பட்டது. எவ்வாறெனினும், அறுபது ஆண்டுப்பட்டியல் தமிழர் காலக்கணக்கைப் பொறுத்தவரை வடமொழியின்  இடைச்செருகல் என்பதில் ஐயமில்லை. எனினும், சமயம்சார்ந்த தேவைகளில் தற்போதும் அறுபதாண்டுப் பட்டியல் பயன்படுவதால், தமிழ்ப்பற்றாளர்கள் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் பரிந்துரைத்த அறுபது தமிழ்ப்பெயர் பட்டியலை பயன்படுத்தி வருகின்றனர்.அவை பின்வருமாறு:

HTML clipboard

எண்.பெயர்பெயர் (தமிழில்)பெயர் (ஆங்கிலத்தில்)கிரகோரி ஆண்டு
     
01.பிரபவநற்றோன்றல்Prabhava1987–1988
02.விபவஉயர்தோன்றல்Vibhava1988–1989
03.சுக்லவெள்ளொளிSukla1989–1990
04.பிரமோதூதபேருவகைPramodoota1990–1991
05.பிரசோற்பத்திமக்கட்செல்வம்Prachorpaththi1991–1992
06.ஆங்கீரசஅயல்முனிAangirasa1992–1993
07.ஸ்ரீமுகதிருமுகம்Srimukha1993–1994
08.பவதோற்றம்Bhava1994–1995
09.யுவஇளமைYuva1995–1996
10.தாதுமாழைDhaatu1996–1997
11.ஈஸ்வரஈச்சுரம்Eesvara1997–1998
12.வெகுதானியகூலவளம்Bahudhanya1998–1999
13.பிரமாதிமுன்மைPramathi1999–2000
14.விக்கிரமநேர்நிரல்Vikrama2000–2001
15.விஷுவிளைபயன்Vishu2001–2002
16.சித்திரபானுஓவியக்கதிர்Chitrabaanu2002–2003
17.சுபானுநற்கதிர்Subhaanu2003–2004
18.தாரணதாங்கெழில்Dhaarana2004–2005
19.பார்த்திபநிலவரையன்Paarthiba2005–2006
20.வியவிரிமாண்புViya2006–2007
21.சர்வசித்துமுற்றறிவு யாவுந்திறல் [13]Sarvajith2007–2008
22.சர்வதாரிமுழுநிறைவுSarvadhari2008–2009
23.விரோதிதீர்பகைVirodhi2009–2010
24.விக்ருதிவளமாற்றம்Vikruthi2010–2011
25.கரசெய்நேர்த்திKara2011–2012
26.நந்தனநற்குழவிNandhana2012–2013
27.விஜயஉயர்வாகைVijaya2013–2014
28.ஜயவாகைJaya2014–2015
29.மன்மதகாதன்மைManmatha2015–2016
30.துன்முகிவெம்முகம்Dhunmuki2016–2017

https://www.ttamil.com/2019/06/blog-post_94.html

About editor 3099 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply