இலங்கையின் உள்ளக சிக்கல்களுக்கு தீர்வு காண வெளியக பொறிமுறையொன்றை உருவாக்கும் அதிகாரம் ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு இல்லை!

இலங்கையின் உள்ளக சிக்கல்களுக்கு  தீர்வு காண    வெளியக  பொறிமுறையொன்றை உருவாக்கும் அதிகாரம் ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு இல்லை!

நக்கீரன்

மங்கை சூதகமானால் கங்கையில் குளிக்கலாம், கங்கை சூதகமானால் என்ன செய்வது?  சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராசாங்க அமைச்சர் லோஹன் இரத்வத்தை கடந்த 12 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) அநுராதபுரம்  சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ்க் கைதி ஒருவரை முழங்காலில் மண்டியிடச் செய்து அவரது தலையில் கைத்துப்பாக்கியை வைத்து மிரட்டியிருக்கிறார். 

அப்போது அவர் நிறைவெறியில் இருந்தார் என்று கூறப்படுகிறது.  இதில் வியப்பென்ன என்றால் இராசாங்க அமைச்சர் நிறவெறியில் இருந்தாலும் அவர் சிறுபான்மைத்  தமிழ்க் கைதிகளை இனம்கண்டு அவர்கள் தலைகளுக்கு குறிவைத்திருக்கிறார்.

கரவெட்டியைச் சேர்ந்த மதியரசன் சுலக்ஷன் (33) என்ற கைதியே அமைச்சர்  லோஹன் அவர்களால் குறிவைக்கப்பட்டவர் எனத் தெரிகிறது. இவர் கடந்த 2009 ஆம் ஆண்டில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட நிலையில் வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனை அடுத்து அனுராதபுரம் சிறையில் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ்க் கைதிகள் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் தங்களை யாழ்ப்பாணச்  சிறைச்சாலைக்கு மாற்றம் செய்யவேண்டும். 

அதற்கு முதல்நாள்  நிறவெறியில் இதே இராசாங்க அமைச்சர் தனது நண்பர்கள் புடைசூழ வெலிக்கடைச் சிறைக்குத் துப்பாக்கியுடன்  சென்று அடாவடித்தனத்தில் ஈடுபட்டார் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. சிறைச்சாலையில் இருந்த தூக்குமேடையைப் பார்க்க வேண்டும் என அடம் பிடித்துள்ளார். அவரோடு ஒரு அழகுராணியும் இருந்துள்ளார்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் தன்னால் மேற்கொள்ளப்பட்ட சம்பவங்களுக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டே, லோஹன் இரத்வத்த தனது பதவியை இராசினாமா செய்ததாக சனாதிபதி ஊடகப் பிரிவு நேற்றைய தினம் அறிவித்திருந்தது. ஆனால் இவர்  இரத்தினக்கல் மற்றும்  ஆபரணக் தைத்தொழில் அமைச்சின் இராசாங்க அமைச்சர் பதவியை இன்னும் துறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிறைச்சாலைக்குள் அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ்,  இராசாங்க அமைச்சர் லோஹன் இரத்வத்தயை  கைது செய்யுமாறு காவல்துறையில் சிறைக் கைதிகளின் பாதுகாப்புக்கான அமைப்பு முறைப்பாடு  செய்துள்ளது.

லோஹன் இரத்வத்தையின் குடும்பம் கொலை, சண்டைசச்சரவில் மாட்டுப்படுத்துவது இது முதல்தடவை அல்ல. 2001 ஆம் ஆண்டு உடதலவின்னவில் 10 முஸ்லிம் இளைஞர்களைக் கொன்றதாக லோஹான் இரத்வத்தயும் அப்போது பாதுகாப்பு அமைச்சின் துணை அமைச்சராக இருந்த அவரது தந்தை அனுருத்துவ இரத்வத்தை மீது குற்றம் சாட்டப்பட்டது. 2006 ஆம் ஆண்டு கொழும்பு உயர் நீதிமன்றத்தால் அனைத்து குற்றச் சாட்டுகளி லிருந்தும் அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள்.  ஆனால் இரத்வத்தை குடும்பத்தின் ஐந்து பாதுகாவலர்கள்  குற்றவாளிகள் எனக் காணப்பட்டு  மரண தண்டனை விதிக்கப்பட்டனர்.

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் கொலையோடு மாகன் இரத்வத்தை சம்பந்தப்பட்டிருந்தார் என்ற ஐயப்பாடு இருந்தது.  முன்னாள் சந்திரிகா குமாரதுங்க  22 டிசெம்பர், 1999 அன்று வி.புலிகள் விரைவில் அழிகப்படுவர், அவர்களது ஆதரவாளர்களின்  நாட்கள் எண்ணப்படுகின்றன எனப் பேசியிருந்தார். அதற்குச்  சில நாட்களுக்கு முன்னர் குமார் பொன்னம்பலம் சந்திரிகா குமாரதுங்காவின் பேச்சுத் தொடர்பாக நீண்ட கடிதம் ஒன்றை அவருக்கு அனுப்பியிருந்தார். அதையிட்டு மொறட்டுவ சாமன் மற்றும் ஆர்பிசி இரணசிங்க இருவரிடத்தும் “குமார் பொன்னம்பலம் போன்றவர்களை எப்படிச் சிங்களவர் உயிரோடு  விட்டிருக்கிறார்கள் (e ayi yakko sinhala minissu marannay, puluwannam ara Kumar Ponnambalam jathi wadi wagay thadi demelek marapanko.) என்ற சாரப்பட சொல்லியிருக்கிறார். இதில் ஆர்பிசி இரணசிங்க குமார் பொன்னம்பலம் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டார். குமார் பொன்னம்பலம்  05, சனவரி 2000  அன்று  கொழும்பில் கொல்லப்பட்டார்.

லோஹன் இரத்வத்தையை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்று மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சட்டத்தரணிகள், அரசியல்வாதிகள், ஊடகங்கள்  குரல் கொடுத்து வருகிறார்கள். லோஹன் இரத்வத்தையினதும் அவரது அடியாட்களது   அடாவடித்தனம் பல் கேள்விகளை எழுப்பியுள்ளது.

1) கொழும்பில் இருந்து அனுராதபுரத்துக்கு உலங்குவானுர்தியில் சென்றிருக்கிறார். இது அரசுக்குச் சொந்தமான உலங்குவானூர்தியா? அல்லது தனியார் உலங்குவானூர்தியா? அப்படியென்றால் அது பறப்பதற்கு உரிய அனுமதி பெறப்பட்டதா?

2) லோஹன் இரத்வத்தை பயன்படுத்திய கைத்துப்பாக்கி யாருக்குச் சொந்தம்? அதை வைத்திருப்பதற்கு உரிய அனுமதி இருந்ததா?

3) வெலிகட மற்றும் அனுராதபுர சிறைச்சாலை அதிகாரிகள் கைத்துப்பாக்கியோடு உள்நுழைந்த லோஹன் இரத்வத்தை ஏன் கைது செய்யவில்லை?

4) உலங்குவானூர்தியை செலுத்திய ஆள் யார்? அவரது பெயர் என்ன?

இதில் வேடிக்கை என்ன வென்றால்  ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின்  48 ஆவது அமர்வு நடந்து கொண்டிருக்கும் காலத்தில் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது ஆகும்.  இந்த அமர்வில்  ஐ.நா மனித உரிமை  ஆணையர்  மிச்சேல் பெச்சலட்   வாய்மூல அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.  அடிப்படை சுதந்திரங்கள் மீதான கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படலாம் என்ற அச்சம் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.

மேலும் 46/1 தீர்மானம் சென்ற 23 மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட பின்னர் வாய் மூலமான முன்னேற்ற அறிக்கையை அவர் சமர்ப்பித்தார். .நீண்ட காலமாக சிறிலங்காவுக்கு எதிராக வைக்கப்படும் உரிமை மீறல்களை மிச்சேல்   பெச்சலட் பட்டியல் இட்டார்.

(1) பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, மிக நீண்ட காலம் சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை இலங்கை அரசாங்கம் விரைவுப்படுத்த வேண்டும். 

(2) 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் மத தலைவர்கள் நியாயத்தை நிலைநாட்ட வேண்டும்.

(3)  சட்டத்தரணி ஹிஜாஷ் ஹிஸ்புல்லா, நம்பிக்கையில்லா சாட்சியங்கள் இல்லாது, நீதிமன்ற நடவடிக்கைகளின் ஊடாக 16 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

(4) 2008 மற்றும் 2009ஆம் ஆண்டில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கில், முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரணாகொடவிற்கு எதிரான வழக்கை தொடர முடியாது என சட்டமா அதிபர் அறிவித்தது,

(5) 2011ஆம் ஆண்டு அரசியல்வாதியின் கொலை குற்றத்திற்காக தண்டனை வழங்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு, சனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியது நீதி செயல்முறை மீதான நம்பிக்கையை இல்லாது செய்துள்ளது.

(5) பொலீஸ் தடுப்புக் காவலில் உள்ளவர்கள் உயிரிழப்பது, போதைப்பொருள் குற்றத்தில் ஈடுபடுவோர் மீதான துப்பாக்கி பிரயோகங்கள் மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகள் மீதான தொடர் சித்திரவதைகள் மற்றும் மோசமான நடத்தைகள்.

(6) காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்திலே, அவர்களுடைய உறவுகள் எதிர்பார்க்கிற நீதி வழங்கப்பட வேண்டும்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு இணையவழி காணொலி மூலம் பதிலளித்த வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தீர்மானம் 46/1 இன் கீழ் அமைக்கப்பட்ட  எந்தவொரு வெளிப்புற முன்முயற்சிகளுக்கான முன்மொழிவை சிறிலங்கா நிராகரிக்கும். அதே நேரத்தில், சம்பந்தப்பட்ட விடயங்களில் உள்நாட்டு செயன்முறைகள் கையாளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் கூறுகையில்-

(1) தீர்மானம் 30/1 இலங்கையில் வாழும்   சமூகத்தைத் துருவப்படுத்திவிடும்.

(2) மனித உரிமைகள் பேரவை அதன் தொடக்கக்  கொள்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

(3) என்றும், சம்பந்தப்பட்ட நாட்டின் ஒத்துழைப்பு இல்லாமல் தொடங்கப்பட்ட வெளிப்புற முயற்சிகளால் அந்த நாட்டினால் குறிப்பிட்ட இலக்குகளை அடைந்து கொள்ள முடியாது அது அரசியல்மயமாக்கலுக்கு உட்படுத்தப்படும்.

(4) உலகின் பல பகுதிகளில் மனிதாபிமான மற்றும் ஏனைய ஆக்கபூர்வமான நோக்கங்களுக்காக அவை (நிதி) அவசரமாகத் தேவைப்படும்போது, இந்த முயற்சியில் செலவிடப்பட்ட வளங்கள் தேவையற்றவை.

(5) 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் குற்றவாளிகள் மீது இலங்கை தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து, அனைத்து விதமான சட்ட நடைமுறைகளையும் பின்பற்றி வருகிறது. வதாக அவர் குறிப்பிடுகின்றார்.

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதிலும், அனைத்து மதங்களைச் சார்ந்த இலங்கையர்களைப் பாதுகாப்பதிலும் எப்போதும் போல தாம் விழிப்புடன் இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கோவிட்-19 வைரஸ் தொற்று நோயின் நாளாந்த சவால்கள் இருந்த போதிலும், உள்நாட்டு செயன்முறைகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தை இதன்போது பட்டியலிட்டு அவர் முன்னிலைப்படுத்தியிருந்தார்.

01. காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் அதன் முக்கிய செயற்பாடாக, ஏனைய நிறுவனங்களுடன் இணைந்து காணாமல் போனவர்களின் பட்டியலை இறுதி செய்கின்றது.

02. இழப்பீட்டு அலுவலகம் இந்த ஆண்டு 3775 கோரிக்கைகளை செயலாக்கியுள்ளது.

03. தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் அதன் 8 அம்ச செயற்றிட்டத்தைத் தொடர்கின்றது.

04. தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு அதன் ஆணையை நிறைவேற்றுகின்றது.

05. நிலையான அபிவிருத்தி இலக்கு 16 இன் கீழான வழிநடத்தல் குழுவொன்று சமாதானம், நீதி மற்றும் வலுவான நிறுவனங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

06. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மறுபரிசீலனை செய்வதற்கும், சர்வதேச விதிமுறைகள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப கொண்டு வரவும் அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் அமைச்சரவையில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

07. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள வழக்குகளை விசாரணை செய்யவும், இதுபோன்ற வழக்குகளை விரைவாக சமாளிப்பதற்கான பரிந்துரைகளை வழங்கவும் ஆலோசனைக் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

08. பொறுப்புக்கூறல் மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காகவும், முந்தைய ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை மறுபரிசீலனை செய்வதற்காகவும் உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை ஆணைக்குழு தனது இடைக்கால அறிக்கையை சனாதிபதியிடம் சமர்ப்பித்தது. இறுதி அறிக்கை அடுத்த 06 மாதங்களுக்குள் சமர்ப்பிக்கப்படும்.

09. நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தியை அடைந்து கொள்வதற்கு, நுண்ணறிவுகளைப் பெறுவதற்கும், ஆதரவைப் பயன்படுத்துவதற்கும் நாங்கள் சிவில் சமூகத்துடன் தீவிரமான ஈடுபாட்டைப்  பேணுகின்றோம்.

இலங்கையின் உள்ளக சிக்கல்களுக்கு தீர்வு காண    வெளியக  பொறிமுறையொன்றை உருவாக்கும் அதிகாரம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு இல்லை என்பதே சிறிலங்காவின் நிலைப்பாடாக இருக்கிறது.

தீர்மானம் 46-1 இலங்கையில் இழைக்கப்பட்ட  அட்டூழியங்களால் பாதிக்கப்பட்டோருக்கும், தப்பிப்பிழைத்தோருக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது. 

அப்படி என்றால் தீர்மானம் 46-1 இன் கீழ் 13 நிபுணர்கள்  அடங்கிய விசாரணைக் குழுவின் கதி என்னவாகும்?  அந்த நிபுணர் குழு இலங்கை வருவதை சிறிலங்கா அரசு அனுமதிக்காது என்கிறார் வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பீரீஸ்.   இலங்கைக்குச்  செல்லாது குறித்த நிபுணர் குழு சாட்சியங்களைத் திரட்டவும்  முடியாது.

இதனால் ஐநாமஉ பேரவையின் 46-1 தீர்மானத்தின் முக்கிய அம்சம் திரிசங்கு சொர்க்கத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. தீர்மானம் 46-1 முன்மொழிந்த நாடுகள் சிறிலங்கா அரசை வழிக்குக் கொண்டுவர எப்படிக் காய் நகர்த்தப் போகின்றன  என்பது கேள்விக் குறியாக மாறியுள்ளது.

——————————————————————————————————————–

‘Ratwatte’s boorish actions unbecoming of a Minister’

2021/09/17

DEW alleges cover-up, warns of dire consequences

By Shamindra Ferdinando

One-time Prisons Minister Dew Gunasekera yesterday (16) called for an immediate police investigation into SLPP lawmaker Lohan Ratwatte’s recent wild behaviour inside the Anuradhapura prison, where he issued death threats to two LTTEers incarcerated there.

Gunasekera pointed out that the minister had forcibly entered the Anuradhapura prison on 12 Sept. around 5.30 pm in the wake of the government turning a blind eye to his earlier drunken raid on Welikada prison on 06 Sept. Gunasekera served as the Prisons Minister after the end of the war in May 2009. The former minister stressed that on both occasions the State Minister in a state of inebriation had been armed with a pistol and was accompanied by several others. Law enforcement authorities couldn’t afford not to investigate the incident, the ex-minister said, referring to the presence of a woman among the crowd that entered Welikada and they went on to visit the gallows.

Prison sources said that Ratwatte had arrived at the Anuradhapura prison after being to week-long Sathi Pirith chanting ceremony at Anuradhapura sacred Mirisawetiya compound in order to invoke spiritual blessings for eradication of COVID-19 epidemic from Sri Lanka and the world. The pirith chanting culminated on the following day evening after conducting a special Buddha Pooja.

“Conduct a proper investigation or face the consequences,” the former General Secretary of the Communist Party told The Island, pointing out the responsibility on the part of the ruling SLPP to conduct its own inquiry.

SLPP General Secretary attorney-at-law Sagara Kariyawasam said that the matter could be taken up with Prime Minister Mahinda Rajapaksa, who is also the Chairman of the party on his return from an overseas visit. Lawmaker Kariyawasam said so when The Island asked him whether the party would initiate disciplinary action against Ratwatte.

Speaker Mahinda Yapa Abeywardena, also a member of the SLPP, should brief the Parliament on how he intended to address this issue, Gunasekera said. The outspoken political veteran said that the Police Headquarters should make a public statement on those incidents.

Gunasekera emphasiSed that the Anuradhapura incident could have been averted if the government took tangible measures in the wake of Ratwatte’s raid on Welikada prison several days before.

Alleging that the Prisons Department suppressed both Welikada and Anuradhapura incidents, Gunasekera questioned the rationale in Ratwatte being allowed to avoid a proper investigation by giving up Prison Management and Prisoners’ Rehabilitation portfolio and also queried how Ratwatte could be allowed to continue as the State Minister of Gem and Jewellery related Industries as if nothing had happened.

“I’m really disappointed and disgusted with the way the government handled Anuradhapura and Welikada affairs,” Gunasekera said.

Responding to queries, Gunasekera pointed out that the incidents placed Sri Lanka at an extremely embarrassing position at the Geneva-based United Nations Human Rights Council (UNHRC) ongoing 48th sessions.

Pointing out that UN Resident Representative in Colombo Hanaa Singer as well as the Tamil National Alliance (TNA), the Tamil National People’s Front (TNPF) and the Center for Policy Alternatives (CPA) roundly condemned Ratwatte’s actions; Gunasekera said the government would have to face grave consequences unless a proper investigation was conducted. The government should inquire into those incidents taking into consideration the ongoing Geneva confab and the forthcoming UNGA.

The former minister pointed out that the Prisons Media Spokesman and Commissioner Chandana Ekanayaka denied any knowledge of the incident.

Gunasekera welcomed the Human Rights Commission of Sri Lanka (HRCSL) launching an investigation into the incidents. Nihal Chandrasiri, HRCSL’s Acting Director – Research & Monitoring told The Island that the outfit initiated an inquiry on its own into the incidents that had taken place in Prisons. “Three Regional Coordinating Officers of the Human Rights Commission of Sri Lanka visited Anuradhapura Prison on 15th September 2021 to investigate the incidents that took place on 12th September 2021. The Human Rights Commission of Sri Lanka will summon all the responsible parties connected to these incidents as early as possible.”

The CP heavyweight recalled how thousands of LTTE cadres and suspects brought under the military and the Prisons system at the conclusion of the war in May 2009 were protected. Those who had been campaigning against Sri Lanka at the UNHRC and the UN would exploit Ratwatte’s actions, the former lawmaker said, adding that the ruling party seemed bent on causing its own destruction.

Gunasekera said that recently Defence Secretary Gen. Kamal Gunaratne and IGP C.D. Wickremaratne explained measures taken by the government to eradicate the underworld especially those directing the narcotics trade from within prisons. They assured the public of safety and security. However, Ratwatte’s raids on Welikada and Anuradhapura prisons underscored the reality, Gunasekera said and called on the Prisons Chief to explain his failure to address the Welikada incident.

Police headquarters hasn’t so far issued an official statement on incidents at Welikada and Anuradhapura.

Ratwatte was sworn in as the Prison Management and Prisoners’ Rehabilitation Minister in the wake of the Mahara Prison riot in late Nov 2020. Ratwatte succeeded Dr Sudarshini Fernandoplle.


About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply