தமிழர் திருமணம்


தமிழர் திருமணம்
நக்கீரன்

பதிப்பு – பங்குனி 2000
விலை – பத்து (கூ 10) டொலர்
தமிழ்த் தெய்வ வணக்கம்
(பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா)
நீர் ஆடும் கடல் உடுத்த நிலமடந்தைக்கு எழில் ஒழுகும்
சீர் ஆரும் வதனம் எனத் திகழ்பரதக் கண்டம், இதில்
தக்க சிறு பிறை நுதலும் தரித்த நறும் திலகமுமே
தெக் கணமும், அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
அத் திலக வாசனைபோல் அனைத்து உலகும் இன்பம் உற
எத் திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழ் அணங்கே
பல் உயிரும் பல உலகும் படைத்து அளித்துத் துடைக்கினும் ஓர்
எல்லை அறு பரம்;பொருள்முன்  இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன் உதரத்து உதித்து எழுந்தே ஒன்றுபல  ஆயிடினும்
ஆரியம்போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதையா
உன்; சீர் இளமைத்  திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே! (மனோன்மணியம் தமிழ்ப் பேராசிரியர் சுந்தரனார்)

அருண்மொழி தமிழ்ச் செல்வி தமிழ்த் திருமணம்
வள்ளுவர் செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக்கு ஒரு நீதி… (மனோன்மணியம் சுந்தரனார்)  
எனக்குச் சரியாக நினைவு தெரியாத (முகம் மட்டும் மனத் திரையில் மங்கலாகத் தெரிந்த) வயதில் மறைந்த ஆனால் காலடிக் கொலுசின் ஓசை மட்டும் இன்னும் என் காதில் நன்றாக ஒலித்துக் கொண்டிருக்கும் என் தாயாரின் பொன்னடிகளுக்;கும் என்னைப் படிக்க வைத்து ஆளாக்கிய அருமைத் தந்தையாரின் திருவடிக்களுக்கும்  இந்த நூல் எனது படையல். 
என்னுரை
எனது அருமை மகன் இராசேந்திரன் -மருமகள் இந்துமதி இருவரும் அண்மையில் வெற்றிகரமாகவும் உணர்வுபூர்வமாகவும் செய்து கொண்ட தமிழ் மரபுத் திருமணம் நான் எதிர்பார்த்ததைவிட பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இரண்டொரு திருமணங்கள் ஏற்கனவே புரோகிதர் இல்லாது நடைபெற்றிருந்தாலும் என் வீட்டுத் திருமணம் சில வட்டாரங்களில் பலரது புருவங்களை உயர்தியுள்ளது. 
இன்று நாம் காணும் வைதீக முறைத் திருமணங்கள் இருநூறு ஆண்டுகளுக்கு  முன்னரே தமிழகத்தில் விஜயநகர மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் வழக்குக்கு வந்தது. பெரும்பாலும் புரோகிதர்கள் வருவாய் கருதியே இப்படியான திருமணங்களை செய்ய ஆரம்பித்தார்கள். அப்படித் திருமணங்களை செய்து வைத்த புரோகிதர்கள் பிராமண சமூகத்தினால் ஒதுக்கி வைக்கப் பட்டார்கள். 
தமிழ் மரபுத் திருமணம் மிகவும் பழைமையானது. சங்க காலம் தொட்டு வருவது. இடைக் காலத்தில் பிற மொழி, பண்பாட்டுப் படை எடுப்பால் அப்படியான திருமணங்கள் வழக்கொழிந்து போயிற்று. இருந்தும் அது முற்றாக வழக்கொழிந்து போகவில்லை. சங்க காலத்தில் நெல்லும் பூவும் தூவி வாழ்த்தும் வழக்கம் வைதீகத் திருமணங்களில் மஞ்சள் அரிசியைத் தூவி வாழ்த்துவதாக மாறியது. தமிழகத்தில் இன்று கூட புரோகிதர்கள் இல்லாத  திருமணங்கள் கிராமப் புறங்களிலும், குறிப்பிட்ட சில வட்டார மக்களிடமும் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.
இந்த நூற்றாண்டின் நடுவில் பெரியார், மறைமலை அடிகள்,  பாரதிதாசன், அண்ணா போன்றோர் தமிழ் மரபுத் திருமணங்களை மக்களிடை  ஊக்கிவித்ததன் விளைவாக வடமொழி மந்திரங்கள், புரோகிதர்கள் இல்லாத திருமணங்கள் பரந்துபட்ட அளவில் நடைபெற்று வருகின்றன.  
1967ல் தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரத்தை  அறிஞர் அண்ணாவின் தலைமையிலான தி.மு.க. கைப்பற்றியதன் விளைவாக சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டது. 
திருமண விழாவில் நான் வரவேற்புரை நிகழ்த்தியபோது எனது திருமணமே 37 ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டு மாலை, ஒரு சொற்பொழிவாளரோடு மிக எளிய முறையில் நடந்தேறியதைக் குறிப்பிட்டேன். 
அப்போது நான் மட்டும் அல்லாது நண்பர்கள்  ஈழவேந்தன், ந.பொ.இராசதுரை போன்றோரும் சீர்திருத்தத் திருமணம் செய்து கொண்டார்கள். பின்னால் கே.ஏ. மகேந்திரன், கனக மனோகரன் போன்றோரும் அவ்வாறே திருமணம் செய்து கொண்டார்கள்.  
அண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் தேசியத் தலைவர் பிரபாகரன் தலைமையில் தமிழ் மரபுத் திருமணம் செய்து கொண்டது நாளேடுகளில் செய்தியாக  வந்தது. 
தமிழ்நாட்டில் பெரியார், பாரதிதாசன், அண்ணா போன்றோர் தோற்றுவித்த திராவிட மறுமலர்ச்சி பகுத்தறிவு சிந்தனைகளே வடமொழி மந்திரம், புரோகிதர் இல்லாத தமிழ் மரபுத் திருமணங்களை செய்து கொள்ளத் தூண்டு கோலாயிருந்தன. முதல் சுயமரியாதைத் திருமணம் பெரியார் தலைமையில் 28-05-1928ல் அருப்புக் கோட்டைக்கு அருகேயுள்ள சுக்கிலநத்தம் என்னும் ஊரில் இடம்பெற்றது. அத்திருமண விழாவில் மறைந்த முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம், பட்டுக்கோட்டை அழகிரி ஆகியோரும்  கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். 
தமிழ்நாட்டில் சீர்திருத்தத் திருமணங்கள் ஆல்போல் தளைத்து அறுகுபோல் வேரோடிப் பல்கிப் பெருகி வளர்ந்து கொண்டிருந்த போதும்  என்ன காரணத்தாலோ தமிழீழத்தில் அந்தப் போக்கு நீடிக்கவில்லை. அத்தி பூத்தாற்போல் அங்கொன்று இங்கொன்றாக சில திருமணங்கள் மட்டுமே நடந்தன.  
எனது வீட்டில் இதற்கு முன்னர் எனது பிள்ளைகள் செய்து கொண்ட திருமணங்கள்  
வைதீகத் திருமணங்களாகவே அமைந்தன. அதற்குப் பல காரணங்கள் உண்டு. முதலில் வழமையென்ற பெயரில் ஊரோடு ஒத்துப்போக வேண்டும் என்ற எண்ணம். மற்றது திருமண்ம் என்பது இரண்டு வீட்டாரது சம்மதத்துடனும் ஒத்துழைப்புடனும் நடக்க வேண்டிய மங்களகரமான நிகழ்ச்சி. அதில் கருத்து வேற்றுமை எழக்கூடாது என்ற முன்சாக்கிரதை காரணமாக சீர்திருத்தத் திருமணம் பற்றியே சிந்திக்கவில்லை.
அப்படியென்றால் இராசேந்திரன் -இந்துமதி  திருமணம் மட்டும் தமிழர் திருமணமாக அமைந்தது எப்படி? 
உண்மை என்னவென்றால் நான் கேட்காமலேயே எனது மகன் தானாக இப்படியொரு திருமணத்தை செய்ய முன்வந்தார். நல்லகாலமாக பெண் வீட்டாரும் அதனை  மகிழ்ச்சியுடன்  வரவேற்று ஒப்புதலும் ஒத்துழைப்பும் நல்கினார்கள்.  
அப்பா வழியில் தானும் தமிழ்த் திருமணம் செய்து கொள்ளவேண்டும்  என்ற எண்ணத்தை விட வைதீகத் திருமணங்கள் நடைபெறும் முறைகள், சம்பிரதாயங்களை நேரில் பார்த்து அவை மனதுக்குப் பிடிக்காது போனது இந்தத் தமிழ்மரபுத் திருமணத்துக்கு முக்கிய காரணமாக இருந்தது. 
இந்தத் திருமணத்துக்கு யாரை தலைமை வகிக்க அழைக்கலாம் என்று நாங்கள் யோசித்த போது எங்கள் கண்ணுக்கு முன் வந்து நின்றவர் டாக்டர் ஆதி கணபதி சோமசுந்தரம் அவர்களே. இவரா அவரா என்ற பேச்சே எழவில்லை. ஒருவரையே நினைத்தோம் அந்த ஒருவரையே தலைமை தாங்க அழைத்தோம். அவரும் எந்த மறுப்பும் இன்றி உடன் தனது ஒப்புதலைத் தந்து விட்டார். 
இந்த மணவிழாவுக்கு தலைமை தாங்க டாக்டர் ஆதி கணபதி சோமசுந்தரம் அவர்களைத் தேர்ந்தெடுத்த காரணங்களை நான் எடுத்துச் சொல்லத் தேவையில்லை என்று நினைக்கிறேன். இருந்தும் இரண்டொரு வார்த்தை அதைப்பற்றிச் சொல்ல வேண்டும். 
தமிழர்களுக்கு இடையில் தொழில் துறையில் வெற்றி கண்டவர்கள் பலர் இருந்திருக்கிறார்கள். கல்வித்துறையில் கரை கண்டவர்கள் இருந்திருக்கிறார்கள்,  ஆனால் சமூக சிந்தனையுள்ளவர்களை, சமூக உணர்வுள்ளவர்களை, தமிழ் இனப்பற்றுள்ளவர்களை, தமிழ்மொழிப் பற்றுள்ளவர்களை இன்றைய கால கட்டத்திலும் காண்பது மிகவும் அரிதாகும். 
பெரும்பாலோர்  தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்ற சிறு வட்டத்தோடு நின்று விடுகிறார்கள். அவர்கள் தாம் பிறந்த இனத்தைப் பற்றிச் சிந்திப்பதில்லை. தம் மொழியைப் பற்றிச் சிந்திப்பதில்லை. பிறந்த மண்ணைப்பற்றிச் சிந்திப்பதில்லை. அவை எக்கேடு கெட்டாலும் கெட்டுப் போகட்டும் என்று இருந்து விடுகிறார்கள்.
இன்றைக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் அரச உத்தியோகத்தில் பல தமிழர்கள் கொடிகட்டி வாழ்ந்தார்கள். கிட்டத்தட்ட எல்லா அரச திணைக்கள, அமைச்சுக்களின் தலைவர்களாக, நிரந்தரச் செயலாளர்களாகத்  தமிழர்களே இருந்தார்கள். ஆனால் அவர்களில் யாருமே சேவையில் இருந்த போதும்சரி, சேவையில் இருந்து இழைப்பாறிய பின்னரும் சரி தங்களது நேரத்தையும் நினைப்பையும் தமிழினத்தின் மேம்பாட்டுக்காக, தமிழ்மொழியின் உயர்வுக்காக, ஏன் சமயத்துக்காக வேனும்  செலவழிக்கவில்லை. நான் அறிந்த அளவில் சேர் கந்தையா வைத்தியநாதன் ஒருவரே தேவாரப் பாடல்பெற்ற திருக்கேதீசுவர ஆலயத்தை புதுப்பிப்பதற்கு தனது நேரம், பொருள் இரண்டையும் செலவழித்தவர். கடைசிக் காலத்தில் ஒரு சமயத் துறவியாக வாழ்ந்து மறைந்தவர். இன்னொருவர் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த திரு. இராசதுரை அவர்கள். இவர்களது பொதுப் பணியை நன்றி அறிதலோடு இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கிறேன். 
பொதுப் பணியைப் பற்றிய அக்கறையின்மை இன்றும் தொடருகிறது. சென்ற ஆண்டுக் கடைசியில் நான் வெளிநாடு போயிருந்தேன். நாட்டின் பெயரைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். அந்த நாடு அவுஸ்திரேலியா. அந்த நாட்டுக்கு இரண்டு தலைமுறைக்கு முன்பின்னாகப் புலம்பெயர்ந்த தமிழர்கள் செல்வத்தோடும், செல்வாக்கோடும் அங்கு வாழ்கிறார்கள். ஆனால் அவர்களால் தமிழ் மக்களுக்கோ அல்லது தமிழ் இனத்துக்கோ ஒரு செப்புக்காசுகூட பயனில்லாதவாறு தாமுண்டு தங்கள் மனைவி பிள்ளைகள் உண்டு என்ற போக்கில் வாழ்கிறார்கள். அங்கு நடந்த மாவீரர் விழாவிற்கு  ஐம்பது டாக்டர்களுக்குக் குறைவில்லாமல் தனித் தனி மடல் எழுதி அவர்களுக்கு அழைப்பு அனுப்பினோம். சொன்னால் நம்ப மாட்டீர்கள். அவர்களில் ஒருவர் கூட அந்த அழைப்பை ஏற்று  விழாவுக்கு வருகை தரவில்லை!  
எதற்கும் விதி விலக்குண்டு. ஒரு சிலர் விடுதலை உணர்வோடு இருக்கிறார்கள். அதில் பேராசிரியர் கிறிஸ்டி ஜெயரட்ணம் எலியேசரும் அவரது துணைவியார் இராணி எலியேசர் குறிப்பிடத்தக்கவர்கள். பேராசிரியர் தனது எண்பதாவது அகவையிலும் தமிழின உணர்வோடும், தமிழ்மொழி உணர்வோடும் வாழ்கிறார். அவருக்கு உற்ற துணையாக அவரது துணைவியார் இருந்து வருகிறார். கற்றாரைக் காண்பதுவும் நன்றே அவர் சொல் கேட்பதுவும் நன்றே என்பதற்கு இணங்க இந்த இருவரையும் மெல்போர்ன் நகரில் நேரில் சந்தித்து அளவளாவியதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.   இராணி எலியேசர் எனது ஆசிரியையும் கூட என்பதால் பல ஆண்டுகள் கழித்து அவரைச் சந்தித்ததில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. 
டாக்டர் ஆதி கணபதி சோமசுந்தரம் அவர்கள் காதும் காதும் வைத்ததுபோல, ஓசைப்படாமல் பல நல்ல தொண்டுகளைச் செய்து வருகிறார். அதையிட்டு நான் அதிகம் சொல்ல  வேண்டிய அவசியம் இல்லை. அப்படிச் சொல்ல முன்வந்தால் அது அவருக்கே சங்கடமாக இருக்கும். தனி  மனிதனது நோயைப் போக்கும் வைத்தியராகப் பணியாற்றுவதோடு தமிழ் இனத்தின் நோய் தீர்க்கும் வைத்தியராகவும் இருந்து வருகிறார். அவரது பணி மேலும் தொடர வேண்டும்.
திருக்குறளே தமிழர்களது பொதுமறை, அதுவே தமிழ்மக்களின் வாழ்க்கை வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதில் நான் திடமான நம்பிக்கை வைத்திருக்கிறேன். திருக்குறளில் சொல்லாத பொருளில்லை. அதில் இல்லாத பொருளில்லை. ஒரு குறள் ஒருவனிடம் உள்ள செல்வம் எப்படியான செல்வமாக இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் சொல்கிறது. 
ஊருணி நீர் நிறைந்தற்றே, உலகவாம்
பேரறிவாளன் திரு ( குறள் 215) 
மற்றவர்களுக்கு உதவும் பெரிய அறிவாளனது செல்வம் ஊரின் நடுவே உள்ள நீர் நிறைந்த குளம் மக்களுக்கு எப்படி  உதவுகிறதோ அது போன்று நன்மை பயக்கவல்லது.
இந்தக் குறளில் ஊரின் நடுவே உள்ள குளத்தை பேரறிவாளனது செல்வத்துக்கு ஒப்பிட்ட வள்ளுவர் அடுத்த குறளில் (216வது குறளில்) உள்@ரில் பழுத்துக் குலுங்கும் பழமரத்தோடு ஒப்பிடுகிறார். பிறருக்கு உதவிசெய்து வாழ்பவன் இடத்தில் உள்ள செல்வம் உள்@ரில் பழுத்த பழமரம் மற்றவர்களுக்குப் பயன் அளிப்பதுபோன்றது என்கிறார்.  
பயன்மரம் உள்ளுர்ப் பழுத்தற்றால், செல்வம்
பயனுடை யான் கண்படின் (குறள் 216) 
இதற்கும் மேலாக டாக்டர் அவர்கள் தன்னாலான தமிழ்ப் பணியையும் சமயப் பணியையும் ஆதி அருள்மறை மன்றத்தை நிறுவி அதன் ஊடாக இனிது செய்து வருகிறார். உயர் தனிச் செம்மொழியான தமிழ் மொழியை என்னைப்போலவே அவரும்  மனதார உளமார நேசிக்கிறார். திருக்கோவில்களில் ஞானசம்பந்தர் மெச்சிப் போற்றிய சங்கமலி செந்தமிழில் மட்டும் பூசை நடைபெற வேண்டும் என்று வெளிப்படையாகக் கூறிவருகிறார்.  அதுதான் என்னைப் போன்ற தமிழ் உணர்வாளர்களது ஆசையும் ஆகும்.
இரண்டாவது காரணம். தமிழர்களுடைய வாழ்வியலில் எங்கள்  தாய்மொழியான தமிழ்மொழிக்கே சீரும் சிறப்பும், பேரும் இடமும் கொடுக்க வேண்டும். தொட்டில் தொடங்கி கட்டில் வரை, வீடு தொடங்கி காடுவரை தமிழ்மொழிக்கு ஏற்றம் கொடுப்பதன் மூலமே எங்களை நாங்கள் உயர்த்திக் கொள்ள முடியும். எப்போது செந்தமிழை ஒதுக்கிவிட்டு பிறமொழிகளுக்கு இடம் கொடுக்கிறோமோ, அது எந்த மொழியென்றாலும் சரி,  அப்போது நாங்கள் எங்களையே தாழ்த்திக் கொள்கிறோம் என்பது எனது நிலைப்பாடாகும். 
இன்று தமிழ்மொழிக்குச் சிறப்பிடம் கொடுக்கத் தமிழர்கள் தயங்குவதற்கு நானூறு ஆண்டுகால அடிமை வாழ்வும், அதனால் ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மையும் காரணமாகும்,  
இன்று உலகில் பேசப்படும் பழைய மொழிகளான கிரேக்கம், சீனம், இலத்தின், சமஸ்கிருதம் போன்றவற்றில் தமிழ்மொழியும் ஒன்று. தமிழ் மொழிக்குள்ள இலக்கிய இலக்கணச் சிறப்பு வேறு எந்த மொழிக்கும் கிடையாது. தமிழில் இன்றுள்ள மிகப் பழைய நூல் தொல்காப்பியம். எழுத்து, சொல், பொருள் இந்த மூன்றுக்கும் இலக்கணம் சொல்லும் தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல் வேறு எந்த மொழியிலும் கிடையாது. ஏன் தமிழில் கூட தொல்காப்பியத்தை வெல்லும் இலக்கண நூலொன்று இதுகாலவரை எந்த இலக்கண  ஆசிரியராலும் படைக்கப்படவில்லை! 
சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை பத்துப்பாட்டில் மட்டும் 2381; பாடல்கள்; சின்னதும் பெரியதுமாக இருக்கின்றன. பத்துப்பாட்டு 8552 வரிகளையும், எட்டுத்தொகை 2426 தனிநிலைச் செய்யுள்களையும் தன்னகத்தே கொண்டுள்ளன. இவற்றைப் பாடிய புலவர்களின் தொகை 575. இதில் பெயர் தெரிந்து புலவர்கள் எண்ணிக்கை 473. பெயர் தெரியாத புலவர்களது தொகை 102. கபிலர் என்ற புலவர் மாத்திரம் 235 பாடல்கள் பாடியுள்ளார்.
எட்டுத்தொகை, பத்துப்பாட்டோடு சங்கம் மருவிய காலத்து பதிணென் கீழ்க்கணக்கு நூல்களையும் சேர்த்தால் (3251 பாடல்கள்) மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை 5,632 ஆக உயர்கிறது. இத்தகைய நீண்ட இலக்கிய இலக்கண வரலாறும் வளமும் உலகில் வேறு எந்தமொழிக்கும் இல்லை. ஆன காரணத்தினால் தமிழ்த் தெய்வ வணக்கம் பாடிய பேராசிரியர் மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை அவர்கள் “ஆரியம்போல் உலக வழக்கு அழிந்தொழிந்து சிதையாவுன்; சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே” என்று தமிழ்த் தாயைப் போற்றுகிறார்.  
இந்தியாவில் இன்று பேசப்படும் மொழிகளில் மக்கள் எண்ணிக்கையில் தமிழ் மொழி ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. மிகக் கூடுதலாக இந்தி மொழி பேசுவோர் நூற்றில் 39 விழுக்காடாகவும், அதற்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் வங்காளி மொழி பேசுவோர் 8 விழுக்காடாகவும், மூன்றாவதாக தெலுங்கு மொழி பேசுவோர் 7.7 விழுக்காடாகவும், அதற்கு அடுத்ததாக நான்காவது இடத்தில் மராத்தி மொழி பேசுவோர் எண்ணிக்கை 7 விழுக்காடாகவும்,  ஐந்தாவது இடத்தில் தமிழ்மொழி பேசுவோர் எண்ணிக்கை 6.2 விழுக்காடாகவும் இருக்கிறது. அதாவது கிட்டத்தட்ட 6 கோடி தமிழர்கள் இந்திய உபகண்டத்தில் வாழ்கிறார்கள். 
இத்தனை சிறப்பு வாய்ந்த மொழியின் சொந்தக்காரர்கள் நாம். எனவே தமிழர் வீட்டுத் திருமணங்கள் தமிழ் மொழியிலேயே நடைபெறுதல் வேண்டும். எங்களுக்குப் புரியாத, அதுவும் வழக்கொழிந்த ஒரு மொழியில் திருமணம் நடைபெறுவதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. அது போலவே தீ வலம் வருதல், அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல் போன்ற பிற பண்பாட்டுச் சடங்குகளையும் நாம் ஏற்றுக் கொள்ளக் கூடாது. தமிழ் மரபுத் திருமணம் என்பது தமிழில் மட்டும் நடைபெறும் திருமணம் மட்டும் அல்ல. வைதீக சடங்குகள் இல்லாத திருமணமாகவும் இருக்க வேண்டும். அதாவது தமிழ்த் திருமணம் அல்ல தமிழ் மரபுத் திருமணமாக விளங்க வேண்டும். 
ஒவ்வொருவனுக்கும் அவனைப் பத்துமாதம் வயிற்றில் சுமந்து பெற்றெடுத்துப் பாலூட்டி, சீராட்டி, தாலாட்டி, அம்புலி காட்டி வளர்த்த தாயே தெய்வத்தின் இடத்தில் வைத்துப் போற்றப்படுகிறாள்.  
ஒருவனுக்கு அடுத்த வீட்டுத் தாய் எவ்வளவுதான்  அழகானவராக இருந்தாலும் அவனுக்கு அவள் தாயாக மாட்டாள். தாயாகவும் முடியாது. அது போலவே தமிழர்களுக்கு தமிழே தாயாவாள். திருமண வீடுகளில் மட்டுமல்ல திருக்கோவில்களிலும் தமிழே ஒலிக்கவேண்டும். இந்த நிலை இப்போது இல்லை. ஆனால் இந்த நிலை மாறவேண்டும். மாற்றப்பட வேண்டும். 
தமிழர்கள் தமிழ்மொழியின் சிறப்புத் தெரியாத காரணத்தால் வேற்று மொழிகளுக்கு ஏற்றம் கொடுக்கிறார்கள். நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பாரதியார்- 
சேரன் தம்பி சிலம்பு இசைத்ததும்
தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும்
பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள்
பாரளித்து தர்மம் வளர்த்ததும்
அன்ன யாவும் அறிந்திலர் பாரதர்
ஆங்கிலம் பயில் பள்ளியுட் போகினர்
(பாரதியார் பாடல்கள் – சுயசரிதை) 
என்று கவலையோடு பாடினார். இன்றுகூட பாரதியாரின் கவலைகள் தொடர்கதையாகவே இருக்கிறது. எத்தனை தமிழர்கள் வீட்டில் சேரன் தம்பி இசைத்த சிலப்பதிகாரம் இருக்கிறது? எத்தனை தமிழர்கள் வீட்டில் தெய்வ வள்ளுவன் செய்த வான்மறை இருக்கிறது? இந்தக் கேள்விக்கான பதிலை உங்கள் மனட்சாட்சிக்கே விட்டு விடுகிறேன். 
தமிழ்மொழி உண்மையிலேயே இனிமையான மொழியா என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கிறது. அவரவருக்கும் அவரவரது மொழி இனிமையாகவே இருக்கும். தமிழ்மொழி தமிழருக்கு இனிமையாக இருப்பது போல் சீனமொழி சீனர்களுக்கு இனிமையாக இருக்கும் அல்லவா? என்று கேட்கிறவர்கள் இருக்கிறார்கள். இப்படியான சந்தேகத்திற்கு, கேள்விக்கு மகாகவி பாரதியார் எப்போதோ பதில் இறுத்தி இருக்கிறார். 
பாரதியாருக்கு அவரது தாய்மொழியான தமிழைவிட வடமொழி தெரிந்திருந்தது. புதுச்சேரியில் பல ஆண்டு வாழ்ந்ததால் அவருக்கு பிரான்சு மொழி தெரிந்திருந்தது. காசி சர்வகலாசாலையில் ஆசிரியராகப் பணியாற்றியபோது இந்தி மொழி படிக்கும் வாய்ப்புக் கிட்டியது. இவை எல்லாவற்றிற்கும்  மேலாக ஆங்கில மொழியில் புலமை இருந்தது. எனவே பல மொழி தெரிந்த பாரதியார்-
“நாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்று அறுதியிட்டுக் கூறியிருக்கிறார். 
தமிழ் இனிமையான மொழி என்ற காரணத்தாலேயே “இருந்தமிழே உன்னால் இருந்தேன், உம்பர் விருந்தமிழ்தம்  என்றாலும் வேண்டேன்” என்று தமிழ்விடு தூதுப் புலவர் பாடினார். கல்வியில் பெரிய கம்பன் “என்றுமுள்ள தென்தமிழ்” என்று சிறப்பித்துள்ளார். 
தமிழுக்கு உள்ள அடைமொழிகள் போல் வேறு எந்த மொழிக்கும், வடமொழி உட்பட, இல்லை. செந்தமிழ், சங்கமலி செந்தமிழ், இசைமலி தமிழ்,  பைந்தமிழ், தீந்தமிழ், வண்டமிழ், ஒண்டமிழ், தண்டமிழ், தண்ணார் தமிழ், நற்றமிழ்,  பூந்தமிழ், மூவாத்தமிழ், தேமரு தமிழ், ஞானத்தமிழ்,  முத்தமிழ்…….. இப்படி அடிக்கிக் கொண்டு போகலாம்.  
திருமண விழாவில் நான் அவசரத்தில் எழுதி வழங்கிய இந்தத் தமிழர் திருமணம் என்ற சிறு நூலைத் தருமாறு பல நண்பர்கள் கேட்ட வண்ணம் உள்ளார்கள். கொடுப்பதற்கு அதன் படிகள் என்னிடம் இல்லை. என்னிடம் மட்டுமல்ல அதனை அச்சுச் செய்து கொடுத்த டாக்டர் சோமசுந்தரம் அவர்களிடமே இல்லை. எனவே பலரது ஆசையை நிறைவேற்ற அதனை நல்ல முறையில் மீள் பதிப்புச் செய்திருக்கிறோம்.  
எதனையும் சும்மா கொடுத்தால் அதனை வாங்குபவருக்கு அதன் பெறுமதி தெரிய நியாயம் இல்லை என்று நினைக்கிறவன் நான். எனவே இந்த நூலுக்கு ஒரு விலையை நிர்ணயித்துள்ளோம். இதில்  இலாபம் கிடைத்தால் அது தமிழர் புனர் வாழ்வுக் கழக நிதிக்குச் சேர்ப்பிக்கப்படும். 
இந்த நூலை நான் விரித்து எழுத வேண்டும் என்றும் அதனை ஈழநாடு பதிப்பக வெளியீடாக வெளியிட வேண்டும் என்பதும் ஈழநாடு கிழமை ஏட்டின் ஆசிரியர் திரு. பரமேசுவரன் அவர்களது விருப்பமாகும். அவர் கேட்டவாறு விரித்து எழுதலாம் என்று உட்காரும்போது வேறு சோலிகள் குறுக்கே வந்து விடுகின்றன. நேரமும் காலமும் வரும்போது விரித்து எழுத  இருக்கிறேன்.  தற்போதைக்கு நூலில்  சிற   மாற்றங்கள் மட்டும் செய்துள்ளேன். ‘உயிரே தமிழே வணக்கம்’ என்ற பகுதி நான் வேறொரு சந்தர்ப்பத்தில் எழுதி ‘நம்நாடு’ பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையாகும்.  
“என்னுரை” நீண்டு விட்டது. ஆனால் காரணத்தோடுதான் நீண்ட  முன்னுரை  எழுதியுள்ளேன். இந்த நூல் ஊடாகத்  தமிழ்ப் பண்பாட்டின் சிறப்பையும், தமிழ் மொழியின் நீர்மையையும், தமிழ் மறையின் அருமையையும் ஓரளவாவது தமிழ் மக்கள் அறிந்து கொண்டு, அவற்றைப் போற்றிப் பயன்பெற வேண்டும் என்ற ஆர்வத்தை சற்றேனும் தூண்ட உதவியிருந்தால் நான் மெத்த மகிழ்ச்சி அடைவேன்.
எனது மகனின் திருமணத்தைப் பின்பற்றி சுவிஸ் நாட்டைச் சேர்ந்த  இரமணன் தமிழ் மரபுத் திருமணம் செய்து கொண்டுள்ளார். சென்ற ஆண்டு இறுதியில் நடந்த இத்திருமணத்துக்கு ஆயிரம் தமிழர்கள் வருகை தந்து சிறப்பித்திருந்தார்கள். இத் திருமணத்தின் போது நான் எழுதிய ‘தமிழர் திருமணம்” என்ற நூல் அழகாகப் பதிப்பித்து வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இராசன், இரமணன் போல் மேலும் இளையோர்கள் தமிழ் மரபுத் திருமணங்களைச் செய்து தமிழர் பண்பாட்டைக் கட்டிக் காக்க முன்வரவேண்டும். வணக்கம்.
 
நக்கீரன்
கனடா
பங்குனி  23, 2000

———————


 
பொருளடக்கம் 
 

1. பொற்காலம்  பக்கம் 11 
2. சங்ககால இலக்கியங்கள் பக்கம் 16     
3. ஒல்காப் புகழ் தொல்காப்பியம் பக்கம் 19 
4. பொது மறை பக்கம் 29 
5. அகத்துறை புறத்துறை இலக்கணம் பக்கம் 35 
6. களவியல் – கற்பியல் பக்கம் 41 
7. சங்க காலத்  திருமணம் பக்கம் 44     
8.  திருமண உறவு முறை  பக்கம் 52 
9.  வைதீகத் திருமணத்தின் தோற்றம பக்கம் 55 
10. தமிழே உயிரே வணக்கம் பக்கம் 60  
11. இவை இனியவை பக்கம் 67 
12. பின்இணைப்பு பக்கம் 74
 

 
தமிழர் திருமணம்
 
1. பொற்காலம் 
உலக வரலாற்றைப் படிப்பவர்கள் ஒவ்வொரு இனத்துக்கும் ஒவ்வொரு பொற்காலம் இருந்திருப்பதை அறிந்து கொள்ளலாம். 
புதிய உலக நாகரீகத்தின் தொட்டில் என வர்ணிக்கப்படும் கிரேக்கர்களுக்கு கி.மு. 7ம் நூற்றாண்டு தொடக்கம் கி.மு. 4ம் நூற்றாண்டு வரையிலான காலம் பொற்காலமாக இருந்திருக்கிறது.  
உலகம்  மந்திரம், தந்திரம் மாயம் நிறைந்த சடப்பொருள் என்ற மாயையில் இருந்து விடுபட்டு உலகத் தோற்றம், வளர்ச்சி பற்றி அறிவியல் அடிப்படையில் ஆராய முற்பட்ட பெருமை கிரேக்கர்களையே சாரும். அறிவியல் சார்ந்த எல்லாத்துறைகளிலும் கிரேக்கர்களது கை வண்ணத்தையும் கலை வண்ணத்தையும் காணலாம்.  
மனிதன் கடவுளால் படைக்கப்பட்டவன் என்ற எண்ணத்தை மாற்றி கடவுளைத் தனது உருவத்தில் படைக்க ஆரம்பித்தவர்களும் கிரேக்கர்களே. உலகம் உட்பட எல்லாவற்றையும் எண்ணங்களாகவும் (concepts)  உருவங்களாகவும் (figures)  கிரேக்கர்கள் பார்த்தார்கள்.  
இந்தக் கால கட்டத்திலேயே புகழ்பெற்ற தத்துவ ஞானிகளான தேல்ஸ் (Thales)( கி.மு 640-546),  அறிவு ஆசான் சோக்கரட்டிஸ் (Socrates – கி.மு. 469-399)  பிளாட்டோ அரிஸ்ரோட்டல் (Aristotle – கி.மு 384-322), போன்றவர்கள் தோன்றினார்கள். ( Plato-கி.மு. 427-347)
“வரலாற்றின் தந்தை” (“Father of History)  என அழைக்கப்படும் ஹெரடோரஸ் (Herodotus), சொற்பொழிவாளர்  டெமொதீனஸ் (Demosthenus) (கி.மு 384-322), “ஒவ்வொரு நோய்க்கும் இயற்கையான காரணம் உண்டு” (every llness டைடநௌள hயள ய யெவரசயட உயரளந�) என்று கூறிய மருத்துவத்தின் தந்தை (“குயவாநச ழக ஆநனiஉiநெ�)  என்று போற்றப்பட்ட கிப்போகிறேட்ஸ் (ர்ippழஉசயவநள – கிமு 460-377) மகதீனஸ் (ஆயபயவாநநௌ) இதே காலத்தைத் சேர்ந்தவர்கள்தான். கணித விற்பன்னர்களான பைத்தோகரஸ் (Pலவாயபழசயள) , இகுலிட் (நுரஉடனை)இ ஆர்கிமிடிஸ் (யுசஉhiஅநனநள) போன்றவர்கள் வாழ்ந்த காலமும் இதுதான்.  
எகிப்து, பாரசீகம், வட மேற்கு இந்தியா இவற்றின் மீது படையெடுத்து வெற்றி கண்ட மகா அலெக்சாந்தர் (யுடநஒயனெநச வாந புசநயவ)  காலமும் இதுதான். மகா அலெக்சாந்தரின் ஆசிரியர் அரிஸ்ரோட்டல் என்பது குறிப்பிடத் தக்கது.  
இந்தக் கால கட்டத்தில் எழுதப்பட்ட பௌதீகம், வேதியல், தத்துவம், கணிதம், மருத்துவம், இலக்கியம், சமயம்,  இசை, நாடகம், சிற்பம், ஓவியம் சம்மந்தமான நூல்களை மொழிபெயர்த்துப் படித்ததினாலேயே ஐரோப்பா அறியாமை என்ற இருண்ட காலத்தில் இருந்து (னுயசம யுபந)  அறிவுடமை  நிறைந்த நாகரிக உலகத்துக்கு (கி.பி. 4வது – 11வது நூற்றாண்டு) காலடி எடுத்து வைக்க முடிந்தது.  
ஐரோப்பிய மொழிகளின் அரிச்சுவடி கிரேக்க மொழியிலிருந்து சிறிய மாறுதலுடன் உருவாக்கப் பட்டதாகும். ஆங்கிலத்தில் உள்ள பல கலைச்சொற்கள் (னநஅழஉசயஉலஇ யசளைவழஉசயஉலஇ pளலஉhழடழபல) கிரேக்கத்தில் இருந்து நேரடியாக ஒலிமாற்றம் செய்யப்பட்டவையாகும்.  
மேற்கூறியவற்றிலிருந்து உலக நாகரிக வளர்ச்சிக்கு கிரேக்கர்களது பங்களிப்பை ஓரளவு தெரிந்து கொள்ளலாம். 
ஆங்கிலேயரை எடுத்துக் கொண்டால் அவர்களது பொற்காலம் விக்டோரியா அரசியாரின் (1819-1901) 65 ஆண்டு கால நீண்ட ஆட்சிக் காலம் (1837-1901)என்று சொல்லலாம். பிரித்தானியாவின் கடல் கடந்த சாம்ராஜ்யம் இவரது காலத்திலேயே வலுப்பெற்றது. இந்தியாவின் சக்கரவர்த்தினியாக 26 ஆண்டுகள் (1976-1901)அரசு கட்டிலில் இருந்திருக்கிறார். பிரித்தானியாவின் தொழிற்புரட்சி இவரது காலத்திலேயே ஏற்பட்டது. அறிவியல், போர், பொருளாதாரம், கலை, இலக்கியத் துறை போன்ற எல்லாத் துறைகளிலும்  பிரித்தானியா கொடி கட்டிப்பறந்தது. உலக ஏகாதிபத்தியத்தின் மொத்த உருவமாக இருந்த  பிரித்தானியா சூரியன் அஸ்தமிக்காத நாடு என்று வர்ணிக்கப் பட்டது.
தமிழினத்தைப் பொறுத்தளவில் சங்க காலமே தமிழர்களது பொற்காலம் எனப் போற்றப்படுகிறது. தமிழர்களது நீண்ட கால வரலாற்றை உய்த்து உணர்ந்து ஆராய்பவர்கள் இந்த உண்மையை எளிதில் ஒப்புக் கொள்வார்கள். 
சங்ககாலத்தில்  ஆட்சி புரிந்த  அரசர்களே தமிழ் மன்னர்களாக விளங்கினார்கள். அவர்கள் மட்டுமல்ல அவர்களது பெயர்களும் தூய தமிழில் இருந்தன.  
சங்கப் புலவர்களால் படைக்கப் பட்ட எட்டுத்தொகை, பத்துப் பாட்டு நூல்களும், சங்கம் மருவிய காலத்தில் எழுந்த பதிணென் கீழ்க்கணக்கு நூல்கள் தமிழர்களது நாகரிகச் சிறப்புக்கும், கலை, பண்பாட்டிற்கும், இயற்கையோடு இசைந்த வாழ்வுக்கும் கட்டியங் கூறுகின்றன. 
சங்க காலத்தில் பிற்காலத்தில் பிறமொழிப் பண்பாட்டுப் படையெடுப்பால் எழுந்த சாதி, சமய, வேறுபாடுகள் இருக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் அமைப்பு ரீதியான சமயம் இருக்கவில்லை. பேய், பிசாசு, மந்திர தந்திரம், சகுனம், மேல் உலகங்கள், கீழ் உலகங்கள், நரகம், சொர்க்கம் போன்ற மூடநம்பிக்கைகள் இருக்கவில்லை. பொது மக்கள் மத்தியில் இந்த நம்பிக்கைகள் இருந்திருக்கலாம். ஆனால் படித்தவர்கள் மத்தியில் இருக்கவில்லை.  
மேலே குறிப்பிட்ட சங்க இலக்கியங்களை சமூகத்தின் பல படிகளிலும் இருந்த புலவர்கள் படைத்திருக்கிறார்கள். புவி ஆண்ட மன்னர்கள் தொடக்கம் கூலவாணிகர்கள்  ஈறாக கவி பாடியுள்ளார்கள். ஆடவரும் பெண்டிரும், அந்தணரும், வணிகரும், குறவனும் குறத்தியும் என்று பல்வேறுபட்ட புலவர்கள் பாடல்கள் பாடியுள்ளார்கள். சங்கப் புலவர்களின் மொத்த எண்ணிக்கை 500க்கும் அதிகமாகும். வேறு எந்த நாட்டிலும் காணாதவாறு பெண்பால் புலவர்கள் மட்டும் 50க்கும் அதிகமாக இருந்திருக்கிறார்கள். இது சங்க காலத்தில் ஆண்களைப் போலவே பெண்களும் ஒத்த கல்விகற்று ஒத்த உரிமையோடு வாழ்ந்திருந்த உயர்ந்த வாழ்க்கைமுறையைக் காட்டுகிறது. 
“உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலையாது கற்றல் நன்றே”  
என்று பாடிய ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன்,  
“யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய”  
என்று பாடிய  குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவன்,
“பிச்சை புகினும் கற்க நன்றே”  
என்று பாடிய அதிவீரராம பாண்டியன்,
“உண்டாலம்ம இவ்வுலகம்”  
உட்பட பரிபாடலில் பதினைந்து பாடல்களைப் பாடிய இளம்பெருவழுதி,   
படைப்புப் பல படைத்து பலரோடு உண்ணும்
உடைப்படும் செல்வராயினும்இ இடைப்படக்
குறு குறு நடந்துஇ சிறுகை நீட்டி……
என்று தொடங்கும் புறப்பாடலைப் பாடிய பாண்டியன் அறிவுடைநம்பி,   பாலை பாடிய பெருங்கடுங்கோ, கலித்தொகையில் முல்லைக்கலியின் இயல்பைப் பதினேழு பாடல்களில் நயமாகத் தீட்டிய சோழன் நல்லுருத்தன் இவர்கள் எல்லோரும் புவி ஆண்ட அரசராவர்.  
சங்கப் புலவர்களான கடியலூர் உருத்திரங் கண்ணனார், உறையூர் முடமோசியார், கபிலர், நக்கீரர், பரணர் போன்றோர் அந்தணராவர். 
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார், கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் போன்றோர் வணிகப் பெருமக்கள் ஆவர்.  
ஆதிமந்தியார், பூதப்பாண்டியனின் அரசியார் பெருங்கோப்பெண்டு அரசகுலத்தில் பிறந்த கவியரசிகள் ஆவர்.  
அதியமான் நெல்லிக் கனி ஈந்த அவனது அரசவைப் புலவர் ஒளவையார், காக்கைபாடினியார், ஒக்கூர் மாசாத்தியார், காமக்கண்ணியார், போன்றோர் பெண்பால் புலவர்களில் சிலராவர்.
சைவ சமயத்தைச் சார்ந்த நக்கீரர், புத்தசமயத்தைச் சேர்ந்த இளம்போதியார், சமண மதத்தைச் சார்ந்த உலோச்சனார் இலக்கியம் படைத்துள்ளார்கள்.
இங்கே ஒன்றைக் குறிப்பிட வேண்டும். சங்கப் பாடல்களைப் பாடிய புலவர்கள் ஒத்த காலத்தவரோ அல்லது ஓரிடத்தவரோ அல்ல. கி.மு. நாநூறு ஆண்டுகள் தொடங்கி கி.பி. முதல் நூற்றாண்டு கால இடைவெளியில் வாழ்ந்த புலவர்கள் இப்பாடல்களைப் பாடியதாகத் தெரிகிறது. அது மட்டும் அல்லாமல் பாடிய காலம் வேறு பின்னர் அப்பாடல்கள் தொகுக்கப் பட்ட காலம் வேறாக இருந்திருக்கிறது. மிகச் சிறந்த பாடல்களே தொகுக்கப் பட்டிருக்க வேண்டும். அப்படித் தொகுக்கப் படாது விடுபட்ட பாடல்கள் ஆயிரக்கணக்கில் இருந்திருக்கும். அவையெல்லாம் காலவெள்ளத்தில் அழிந்து போயின. ஏன் முதல் சங்கம், இடைச் சங்க காலத்தில் எழுதப்பட்ட பல நூல்களும் இன்று இல்லை.  

2. சங்ககால இலக்கியங்கள் 
எட்டுத்தொகை, பத்துப் பாட்டு, பதிணென் கீழ்க்கணக்கு இவையே சங்க கால, சங்கம் மருவிய கால இலக்கியங்கள் என மேலே கூறினோம். 
எட்டுத்தொகை நூல்கள் எவையெவை என்பதைக் குறிக்க ஒரு பழம் வெண்பாப் பாடல் உள்ளது. அந்தப் பாடல் இது. 
நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் போற்றும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்து எட்;டுத் தொகை. 
இவற்றுள் ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை, அகநாநூறு, கலித்தொகை அகப்பொருள் பற்றியன. புறநானூறும், பதிற்றுப் பத்தும் புறப்பொருள் நூல்களாகும். மொத்தம் 2426 தனிநிலைச் செய்யுள்களை எட்டுத்தொகை கொண்டுள்ளது. இந்த எட்டினுள் அகநானூறும் புறநானூறும் தமிழர்களது அகவாழ்க்கையினையும் புறவாழ்க்கையினையும் படம்பிடித்துக் காட்டுகின்றன. பண்டைய தமிழர்களின் வாழ்க்கை முறையை இந்தப் பாடல்களின் மூலம் அறிந்து கொள்ளலாம். அது மட்டும் அல்லாது பல அரிய வரலாற்றுச் செய்திகளையும் இவை உள்ளடக்கி இருக்கின்றன.
பத்துப் பாட்டு நூல்கள் பின்வருமாறு. 
பாட்டுடைத் தலைவனாக முருகனை வைத்து நக்கீரர் பாடிய (1) திருமுருகாற்றுப் படை. 
காவிரிக்கு அணைகட்டிய கரிகால் சோழனைப் பாட்டுடைத் தலைவனாக வைத்து  முடத்தாமக் கண்ணியார் பாடிய (2) பொருநராற்றுப் படை. 
நல்லியக் கோடனை பாட்டுடைத் தலைவனாக வைத்து  நத்தத்தனார் பாடிய (3) சிறுபாணாற்றுப் படை. 
சேரமன்னன் இளந்திரையனைப் பாட்டுடைத் தலைவனாக வைத்து உருத்திரங்கண்ணனார் பாடிய (4) பெரும்பாணாற்றுப் படை. 
நன்னன்சேய் நன்னனைப் பாட்டுடைத் தலைவனாக வைத்து பெருங்கௌசிகனார் பாடிய (5) மலைபடுகடாம் (கூத்தராற்றுப் படை).  
ஆரிய அரசன் பிரகத்தனுக்கு தமிழ்மொழியைச்  சொல்லிக் கொடுக்க கபிலர் பாடிய (6) குறிஞ்சிப் பாட்டு. 
ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனை பாட்டுடைத் தலைவனாக வைத்து நப்பூதனார்  பாடிய (7) முல்லைப் பாட்டு. 
கரிகாலனைப் பாட்டுடைத் தலைவனாக வைத்து உருத்திரங்கண்ணனார் பாடிய (8) பட்டினப்பாலை. 
பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாக வைத்து நக்கீரர் பாடிய  (9) நெடுநல் வாடை. 
பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாக வைத்து மாங்குடி மருதனார் பாடிய (10) மதுரைக் காஞ்சி. 
இந்தப் பத்துப் பாட்டு நூல்;கள் மொத்தம் 8552 வரிகளைக் கொண்டது.  பத்துப் பாட்டு எட்டுத்தொகை இரண்டையும் சேர்த்து ஏறத்தாழ 461 புலவர்கள் இயற்றியுள்ளார்கள். இவர்களில் கபிலர், பரணர், ஒளவையார், நக்கீரர் போன்றோர் பெரும்பான்மையான பாடல்களைப் பாடியுள்ளார்கள்.  
சங்க காலத்தில் ஊன் உண்பதும், மது அருந்துவதும், பரத்தையரோடு இன்புற்றிருப்பதும் இயல்பான பண்பாடாக எண்ணப்பட்டது. அதியமான் துஞ்சியபோது அவனது பிரிவை ஆற்றமுடியாத ஒளவையார் இனித் தனக்கு யார் கள் தரப்போகிறார்கள் என்ற பொருள்படப் பாடல் பாடியுள்ளார்.
ஆனால் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எழுந்த சங்க காலத்துக்குப் பிந்திய சங்கம் மருவிய காலத்தில் ஊன் உண்பது, கள் குடிப்பது, பரத்தையர் சேரிநாடிப் போவது மிக வன்மையாகக் கண்டிக்கப் படுகிறது. கணக்கு என்ற சொல் நூலைக் குறிப்பதாகும்.
இந்தக் காலகட்டத்தில் தமிழகத்தில் காலூன்றிய சமண, பௌத்த மதக் கொள்கைகளின் தாக்கங்கள்  காரணமாகவே இந்த மாறுதல் ஏற்பட்டதாக நாம் கொள்ளலாம். பௌத்த மதம் கொல்லாமையை மட்டும் வற்புறுத்த சமணம் கொல்லாமை, புலால் உண்ணாமை இரண்டையும் கடுமையாக வலியுறுத்தியது. அகிம்சைக் கோட்பாடு பௌத்தம் சமணம் இரண்டின் அச்சாணியாக விளங்கியது குறிப்பிடத்தக்கது.  
இதனால் சங்க காலத்தில் பாடுபொருளாகக் கொள்ளப்பட்ட அகத்துறை, புறத்துறையோடு அறத்துறையும் சேர்ந்து கொள்கிறது. 
மேலும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில்   வடசொல் கலப்பு சங்க காலத்தை விட அதிக விழுக்காடு உடையதாக இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.  இது சங்க காலத்தில் தலைகாட்டிய  ஆரிய மொழி ஆதிக்கம், சமயப் பண்பாட்டுக் கோட்பாடுகள் சங்கம் மருவிய காலத்தில் நன்றாகக் கால்கொள்ளத் தொடங்கி விட்டதைக் காட்டுகிறது.  
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எவையெவை என்பதற்கும் ஒரு பழம் வெண்பாப் பாடல் உள்ளது. அது இது. 
நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப்
பால்கடுகங் கோவை பழமொழி – மாமூலம்
இன்னிலைசொல் காஞ்சியோடு ஏலாதி என்பதூஉம்
கைந்நிலையுமாம் கீழ்க் கணக்கு. 
இந்தப் பாடலில் திருக்குறள் முப்பால் எனக் குறிப்பிடப் படுவது கவனிக்கத்தக்கது. இத் தொகுப்பில் ஏறத்தாழ 3,250 செய்யுட்கள் அடங்கியுள்ளன.  இவற்றுள் நாலடி, நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், ஏலாதி, முதுமொழிக் காஞ்சி, முப்பால், ஆசாரக்கோவை, பழமொழி, சிறுபஞ்ச மூலம் ஆகிய பதினொன்றும் அறவொழுக்கம் பற்றிய நீதி நூல்களாகும். ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணை மாலை நூற்றைம்பது, கைந்நிலை, கார் நாற்பது அகப்பொருள்பற்றிய நூல்களாகும்.  
திருக்குறள் சங்கம் மருவிய காலத்து பதினெண்கணக்கு நூல்களில் ஒன்றாகச் சேர்க்கபட்டாலும் காலத்தால் திருக்குறள் தொன்மை வாய்ந்தது. அது மட்டும் அல்லாது   மற்ற எல்லா அறநூல்களையும் விடக்  கருத்தாளத்திலும், சொல் நயத்திலும் உயர்ந்து நிற்கிறது. திருக்குறளின் சிறப்பை திருவள்ளுவர் மாலை எடுத்துரைக்கிறது. வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு நோக்கும்போது வள்ளுவரின் குறள் தமிழ் என்ற சொல் பயன்படுத்தப்படா விட்டாலும்  அது தமிழ்ப் பண்பாட்டுக்கும் நாகரிகத்துக்கும்  வரைவிலக்கணம் கூறிய மறைநூல் என்று கொள்ளலாம். இதையிட்டுப் பின்னர் விளக்கிக் கூறுவோம். 
சங்க காலப் புலவர்கள் வாழ்க்கையின் உறுதிப் பொருட்கள் மூன்றென மொழிவர். அவையாவன அறம், பொருள், இன்பம். இந்த உறுதிப் பொருட்கள் மூன்றுமே தமிழ் இலக்கியப் படைப்புக்கு அடித்தளமாக இருந்தன. தமிழ்மொழியில் இன்று உள்ள மிகத் தொன்மையான இலக்கணக்கண நூலான தொல்காப்பியத்தின் ஆசிரியர் தொல்காப்பியர் இந்த உறுதிப் பொருட்களைப்பற்றி மிக விரிவாக எழுதியிருக்கிறார். 
தொல்காப்பியரைப் பின்பற்றி  திருவள்ளுவர் இந்த மூன்று உறுதிப் பொருட்களையும் அணுவைப் பிளந்து எழுகடலைப் புகுத்துமாப் போல் நூற்றிமுப்பது மூன்று அதிகாரங்களில், அதிகாரத்துக்குப் பத்துக் குறள் வீதம் ஆயிரத்து முன்னூற்று முப்பது குறட்பாக்களில்  எடுத்துச் சொல்லியிருக்கிறார்.  
தமிழ்மகள் என  மகாகவி பாரதியாரால் போற்றப்பட்ட ஒளவையார் அதே மூன்று உறுதிப்பொருட்களை மூன்றே மூன்று அடிகளில் சுருங்கச் சொல்லி விளங்க வைப்பார். பாடல் இது. 
ஈதல் அறம், தீவினை நீக்கி ஈட்டல் பொருள்
காதலர் இருவர் கருத்தொருமித்து
ஆதரவு பட்டது இன்பம்.  
அறம், பொருள், இன்பம் என்ற மூன்றினுள்ளும் இன்பப் பகுதியே (இல்லறவாழ்க்கை) மனித வாழ்;க்கையின் உயிர்நாடியாக விளங்குகிறது. இன்பம் பற்றியே மனிதன் பொருளைத் தேடுகிறான். பொருள் கொண்டு அறம் செய்கிறான்.
தொல்காப்பியர்  தொல்காப்பியத்தின் மூலம் தமிழ்மொழிக்கு இலக்கணவேலி அமைத்தார் என்றால்  முன்னர் கூறியதுபோல திருவள்ளுவர் திருக்குறளின் வாயிலாக தமிழ்ப் பண்பாட்டுக்கு வேலி போட்டார். 

3. ஒல்காப்புகழ் தொல்காப்பியம்  
உலகில் பேசப்படும் தொன்மையான மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்றாகும். இந்தியாவில் வழங்கும் மொழிகளில் தமிழ் மொழிமட்டுமே இலக்கிய, இலக்கணச் சிறப்போடு விளங்குகிறது. இச்சிறப்பின் காரணமாக தமிழ்மொழி உயர்தனிச் செம்மொழி என அழைக்கப்படுகிறது. தமிழ்மொழி போலவே வடமொழிக்கு இலக்கிய – இலக்கணச் சிறப்பிருந்தும் அது கிறித்து சகாப்தத்திற்கு முன்னரே பேச்சு வழக்கை இழந்து விட்டது.  
செம்மொழி என்றால் செம்மையான, திருத்தமான மொழி எனப் பொருள்படும். தமிழ்மொழி ஏனைய பல மொழிகள்போல் அழிந்தொழியாது அல்லது பேச்சு வழக்கு இழக்காது சீரிளமையோடு எத்திசையும் புகழ்மணக்க கொலுவீற்றிருப்பதற்கு காரணம் அதன் இலக்கணக் கட்டமைப்புக்களே. 
தமிழ்மொழியில் இன்று காணப்படும் நூல்களில் மிகப் பழைமையானது தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியம் என்ற இலக்கண நூலேயாகும். 
தமிழர் தம் மொழி, இலக்கியம், இலக்கணம் பற்றியது மட்டும் அல்லாது தமிழரின் வாழ்வு, பண்பாடு, நாகரிகம் இவற்றை எடுத்துக்காட்டும் வரலாற்று நூலுமாகும். 
தொல்காப்;பியம் இயற்றப்பட்ட காலம் எதுவென்று அறிதியிட்டுச் சொல்லமுடியாது இருக்கிறது. அது கி.மு. ஐந்து நூற்றாண்டு பழமையானது என்பது அறிஞர்கள் பொதுவாக ஒத்துக்கொண்ட கருத்தாகும். இதனைவிட தொல்காப்பியம் பழமையானது, முதல், இடை, கடைச் சங்கங்களில் தொல்காப்பியம் இடைச்சங்;கத்தை சார்ந்த நூல் என்று கூறுவாரும் உளர். 
எது எப்படி இருப்பினும் தொல்காப்பியம் தமிழ் மக்களின் மிகப் பழமையான ஒரு சமூக அமைப்பைப் படம்பிடித்துக்காட்டுவதால் அது உண்மையிலேயே ஒரு தொன்மையான நூல் என்பதில் ஐயமில்லை.
தொல்காப்பியம் தோன்றிய காலத்தில் இந்திய மொழிகளிலோ, வேறு எந்த உலக மொழிகளிலோ அதுபோன்ற ஒரு இலக்கண நூல் தோன்றவில்லை என்று துணிந்து சொல்லலாம். 
பிறமொழியும், பிறபண்பாடும் தமிழ் மொழியோடும் தமிழ்ப் பண்பாடோடும் உறவுகொள்ளத் தொடங்கிய காலத்தில்தான் தொல்காப்பியம் தோன்றியிருக்கிறது. தமிழ் மொழியின் தனித்தன்மைகளையும், தமிழ்மக்களது பண்பாட்டின் தனித்தன்மைகளையும் பாதுகாத்து அவற்றிற்கு வேலிபோடவும், பிறமொழியாளர்களும், பிறபண்பாட்டாளர்களும் தமிழ்மொழியைப்பற்றியும், தமிழ்மக்களது பண்பாட்டைப் பற்றியும் அறிந்து கொள்ளும் நோக்கிலும் தொல்காப்பியம் உருவாகியிருக்கிறது.
எள்ளிலிருந்து எண்ணெய் பிறப்பது போல் இலக்கியத்தில் இருந்தே இலக்கணம் பிறக்கும என்று கூறுவார்கள். இதன் அடிப்படையில் தொல்காப்பியத்துக்கு முன்னர் ஏராளமான இலக்கிய இலக்கண நூல்கள் தமிழில் கட்டாயமாக இருந்திருக்க வேண்டும். 
பேராசிரியர் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் இந்த உண்மையைப் பின்வருமாறு எடுத்து இயம்புவார்:
வுhழடாயிpலையஅ ளை ய டிழழம ழn phழழெடழபலஇ பசயஅஅயச யனெ pழநவiஉள. வுhநசநகழசநஇ வை iஅpடநைள வாந pசழைச நஒளைவநnஉந ழக வுhயஅiணா டவைநசயவரசந. வுhநசந ளை ய னளைவinஉவழைn அயனந வாநசநin டிநவறநநn டவைநசயசல டயபெரயபந யனெ உழடடழஙரயைட ழச ழெn-டவைநசயசல டயபெரயபந- உநலலரடு யனெ எயடயமுமரஇ வாரள iஅpடலiபெ உநசவயin டவைநசயசல உழnஎநவெழைளெ ழெவ ழடெல in பசயஅஅயவiஉயட கழசஅள டிரவ யடளழ in டவைநசயசல கழசஅள யனெ ளரடிதநஉவ அயவவநச�� 
தொல்காப்பியரே தனது நூற்பாக்களில் கூறப்படும் விதிகளுக்கு தனக்கு முன்னரும் தனது காலத்திலும்  இருந்த புலவர்களது கூற்றுக்களைச் சான்றாகக் காட்டுவார். இப்படி ஏறத்தாழ 260 இடங்களில் தான் முன்னைய புலவர்களது நெறிகளையே தாம் எடுத்துரைப்பதாகக் கூறுவார். 
என்ப
என்மனார் புலவர்
யாப்பென மொழிப யாப்பறி புலவர்
தோலென மொழிப தொன்மொழிப் புலவர்
இயல்பு உணர்ந்தோரே
என்ப குறியறிந்தோரே 
என்று நூலின் இடையிடையே பரவலாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் தொல்காப்பியர் “நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும், பாடல் சான்ற புலநெறி வழக்கம்” என்று தமக்கு முற்பட்ட இலக்கிய மரபைக் குறிப்பிடுகிறார். இதனால் அவருக்கு முன்பே இலக்கண நூல்கள் இருந்திருக்கிறதென்பதைத் துணிந்து சொல்லலாம்.  
தொல்காப்பியம் என்ற சொல் நூலைக் குறிக்கும் போது ஒரு சொல்லாக இருந்தாலும், பொருளை விளக்கும் போது அதைத் தொல் சக காப்பு சக இயம் எனப் பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும். தொல் என்றால் பழமை – பழமையை, தமிழரின் தொன்மையைக் காத்து இயம்பும் நூல் என்று பொருள்படும். 
தொல்காப்பியன் என்ற பெயர் குடிப்பெயராகத்தான் இருக்க வேண்டும். தொல்காப்பியத்தை எழுதியதால் தொல்காப்பியன் என்று பெயர் பெற்றார் என்று தெரிகிறது. 
தொல்காப்பியத்திற்கு பாயிரம் பாடிய பனம்பாரனார்- 
வடவேங்கடம் தென்குமரி ஆயிடை
தமிழ்கூறும் நல் உலகத்து,
வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி,
செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தோடு
முந்து நூல் கண்டு, முறைப்பட எண்ணி
புலம் தொகுத்தோனே–போக்கு அறு பனுவல்
நிலம் தரு திருவின் பாண்டியன் அவையத்து
அறம் கரை நாவின் நான் மறை முற்றிய
அதங்கோட்டு ஆசாற்கு அரில் தபத் தெரிந்து
மயங்கா மரபின் எழுத்து முறைகாட்டி,
மல்கு நீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த
தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றி,
பல் புகழ் நிறுத்த படிமையோனே”
“எனத் தன் பெயர் தோற்றி” என்பதால்  “தொல்காப்பியன் எனப் பெயர் வைத்துக் கொண்டார்” என்பது தெளிவாகிறது.  
இந்த பாயிரம் மூலமே பண்டைய தமிழகத்தின் எல்லை வடக்கே வேங்கடம் (இன்றைய திருப்பதி) தெற்கே குமரி  என்பதும், தொல்காப்பியத்தின் ஆசிரியர் தொல்காப்பியனார் என்பதும், தொல்காப்பியம் அரங்கேறிய இடம் நிலந்தரு திருவிற் பாண்டியன் அவை என்பதும், அந்த அவைக்கு தலைமைதாங்கிய புலவர் அதங்கோட்டாசான் என்பதும் தொல்காப்பியர் அவர் காலத்து வழங்கிய ஐந்திரநெறியைப் பின்பற்றி தொல்காப்பியத்தை இயற்றினார் என்பதும் தெரிவிக்கப்படுகிறது.
தொல்காப்பியம் வழிநூல் என்றும் அதன் முதல் நூல் அகத்தியம் என்றும் சொல்லப்படுவது உண்டாயினும் அதற்கு இந்தப் பாயிரத்திலோ அல்லது தொல்காப்பியத்திலோ சான்றுகள் இல்லை. 
அகத்தியம் இன்று அழிந்துபட்டு விட்டது. இருந்தும் அகத்தியம் என்ற இலக்கண நூல் முதற்சங்க காலத்தில் இருந்ததற்கும், அது இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழுக்கும் இலக்கணம் கண்டதற்கும் புறச் சான்றுகள் உள. இறையனாரகப்பொருளுரை அகத்தியர் முதற்சங்கத்து தலைமைப் புலவரென்றும், தலைச்சங்கத்தாருக்கு அகத்தியமே முதல்நூலாக இருந்ததென்றும், இடைச்சங்கத்தாருக்கு அகத்தியமும் தொல்காப்பியமும் இலக்கண நூல்களாக இருந்ததெனவும் தெரிவிக்கின்றது.  
இலக்கண உரையாசிரியர்களும் அகத்தியம் முதல்நூல், தொல்காப்பியம் அதன் வழிநூல் என்றும், அகத்தியர் தொல்காப்பியரின் ஆசிரியர் என்றும் தத்தம் உரைகளில் குறிப்பட்டுள்ளார்கள்.
அகத்தியம் பன்னீராயிரம் சூத்திரங்களைக் கொண்ட நூல் என்பர். இதனால் இதற்கு பேரகத்தியம் என்ற காரணப் பெயரும் உண்டாகிற்று.  
தொல்காப்பியம், நன்னூல், சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி உரையாசிரியர்கள் அகத்திய நூற்பாக்களை மேற்கோள் காட்டி உரை செய்துள்ளார்கள். இப்படி மேற்கோள்காட்டி எழுதிய மொத்தம் 26 நூற்பாக்கள் மட்டும் இன்று கிடைத்துள்ளன. 
தொல்காப்பியம்  எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரமும் முறையே ஒன்பது இயல்களைக் கொண்டது. மொத்தம் 1,610 நூற்பாக்களை உள்ளடிக்கியது.  
பொருளதிகாரம்  வேறு எந்த உலகமொழி இலக்கணங்களில் காணப்படாத சிறப்பிலக்கணமாகும். ஏனைய இலக்கண நூல்கள் எழுத்து, சொல் இவற்றுக்கு மட்டும் இலக்கணம் சொல்லும் போது தொல்காப்பியம் பொருளுக்கும் இலக்கணம் நவில்கிறது. 
“செந்தமிழ் மாணவன்” என்று தனது கல்லறையில் எழுதி வைக்குமாறு பெருமையாகக் கூறிக்கொண்ட பு.ரு. போப் ஐயர் தொல்காப்பிய நூலின்  சிறப்பைப்பற்றி பின்வருமாறு கூறுகிறார்: 
�வுhந யnஉநைவெ பசயஅஅயவiஉயட றழசமள நஒளைவiபெ in வுயஅடை யனெ வைள றழனெநசகரட அநவசiஉயட ளலளவநஅ pசழஎநள வைள யளளனைரழரள உரடவiஎயவழைn கழச யபநள. யுn நடயடிழசயவந ளஉநைவெகைiஉ ளநசநைள ழக அநவசநள ளரஉh யள வுயஅடை படழசநைள ளை யனயிவநன வழ நஎநசல ளவலடந யனெ வாநஅந ழக உழஅpழளவைழைn ளை வாந பசழறவா ழக உநவெரசநைள. ஊடயளளiஉயட வுயஅடை டிநயசள நஎநசல அயசம ழக ளடழற யனெ யெவரசயட நஎழடரவழைn.� (பு.ரு. Pழிந- வுhயஅடையச ஊhயசiவாவசயஅ-ளுறயஅi புயெnயிசயபயளயச).
போப்பையர் போலவே தொல்காப்பியத்தின் பெருமையையும், சிறப்பையும் முனைவர் வ.சுப. மாணிக்கம் அவர்கள் அதற்கு எழுதிய உரையின் தொடக்கத்தில்  பின்வருமாறு கூறுவார். 
“தொல்காப்பியம் என்ற உலகக் களஞ்சியம் மொழியிலும் அகவாழ்விலும் புறச்சூழலிலும் கட்டுப்பாடு, வளர்ச்சி, தூய்மை வேண்டும் வரம்பு நூல். தொல்காப்பியம் என்ற தமிழ் முதனூல், வழிவந்த பழமைத் தடங்காட்டி, நிகழ்காலச் செவ்வி சேர்த்து, வளரும் எதிர்காலப் புதுமைப் புரட்சிக்கு இடம் வகுக்கும் இயக்க நூல்.  
தொல்காப்பியம் என்ற மறைநூல்  பிறப்பு, மதம், பால், குழு, இடம், பொருள் நிலை வேற்றுமைகளைப் பற்றாது இயற்கைஅறம், மறம், வெற்றி, அமைதி, காதல் இன்பம் என்னும்இவ்வுலகியங்களை மானிடத்திற்கு எடுத்துக்காட்டும் உலக வாழ்வு நூல். இயக்க வாழ்வுப் பெருமறையான தொல்காப்பியத்தை ஈன்றவள் தமிழ்த்தாய்.
தமிழர்களாகிய நாம் மூவாயிரம் ஆண்டுத் தொன்மையுடைய இந்நூலை நம் தாய்மொழியிலே இன்றும் படிக்கும் எளிய இனிய நேர்வாய்ப்பினைப் பெற்றிருக்கிறோம். இதுவே தமிழ்ப்பிறப்பின் ஒரு சிறப்பென உணர்க. மேலும் தொல்காப்பியத்துக்கு இன்றுகாறும் பின்தோன்றிய பெரிய சிறிய இலக்கிய, இலக்கண நூல்களிலெல்லாம் தொல்காப்பிய நீரோட்டம் உண்டு. ஆதலின் தொல்காப்பிய நினைவும் தொல்காப்பியக் கருத்தறிவும் பெறுதல் தமிழன் என்பான் ஒவ்வொருவனின் பிறப்புக் கடமையாகும்.” 
எல்லாச் சொற்களுக்கும் பொருள்தான் அடிப்படை. பொருள் இலக்கணத்தை விளக்க சொற்கள் தேவைப்படுகின்றன. அச் சொற்கள் எழுத்துக்களினால் ஆனவை. எனவே பொருள் இலக்கணத்தைச் சொல்லத்தான் தொல்காப்பியர் எழுத்து இலக்கணத்தையும், சொல் இலக்கணத்தையும் சொன்னார்.  
பொருளதிகாரம் உலகத் தோற்றம், உயிர்களின் வகைப்பாடு, வெவ்வேறு நிலம், அந்த நிலத்துக்குரிய தெய்வங்கள், மக்கள், மக்களின் அகவாழ்க்கை, புறவாழ்க்கை நெறிகள், ஆடவர்க்குரிய பண்புகள், பெண்களுக்குரிய பண்புகள், மரங்கள், விலங்குகள், இலக்கிய வகைகள், இலக்கியக் கோட்பாடுகள், இலக்கிய மரபுகள், இலக்கியத் திறனாய்வுகள், உடலிலும் உள்ளத்திலும் தோன்றும் மெய்ப்பாடுகள் இப்படி ஒட்டு மொத்த சமூகத்தைப் பற்றிச் சொல்கிறது,
தொல்காப்பியம் சொல்லும் பொருள் இலக்கணம் தமிழர்களுக்கு மட்டும் சொன்ன இலக்கணம் அன்று. உலக மக்களுக்குச் சொன்ன இலக்கணமாகவும் அது விளங்குகிறது. 
எடுத்துக்காட்டாக தொல்காப்பியம் சொல்லும் எட்டுவகை மெய்ப்பாடுகளான நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம் உலகத்தவர் யாவருக்கும் பொருந்துவனவாகும். 
பெருமிதத்துக்கு இலக்கணம் சொல்ல வந்த தொல்காப்பியர்- 
கல்வி தறுகண் இசைமை கொடை எனச்
சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே
என்று சொல்வது எல்லா மக்களுக்கும் பெருமிதம் ஏற்படுவதற்கு அடிப்படையானவை கற்ற கல்வி, அஞ்சாமை,  புகழ், கொடுத்தலாகிய அறம் பொதுவானதாகும்.  
எழுத்ததிகாரத்தில் நூல் மரபு, மொழிமரபு, பிறப்பியல், புணரியல், தொகைமரபு, உருபியல், உயிர் மயங்கல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியல் என ஒன்பது இயல்கள் விரித்துக் கூறப்பட்டுள்ளன.
முதலாவது இயலான நூல் மரபில் தமிழ் மொழியிலுள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை, எழுத்துக்களை ஒலிக்கும் கால அளவு, ஒலியின் அடிப்படையில் எழுத்துக்களின் வகைப்பாடு, அவற்றின் பெயர்கள், எழுத்துக்கள் ஒன்றோடொன்று சேர்ந்து வருகின்ற சேர்க்கை நிலை முதலான செய்திகள் தரப்பட்டுள்ளன. இப்படியே ஏனைய இயல்களும் மிக நுட்பமாக விளக்கப்படுகின்றன. 
சொல்லதிகாரமும் ஒன்பது இயல்களைக் கொண்டது. கிளவியாக்கம், வேற்றுமையியல், வேற்றுமைமயங்கியியல், விளிமரபு, பெயரியல், வினையியல், இடையியல், உரியியல், எச்சவியல் என்பனவே அந்த ஒன்பது இயல்களாகும்.  
ஐந்து தொடக்கம் எட்டுவரையிலான இயல்கள் முறையே பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் ஆகிய நால்வகைச் சொற்களுக்கும் இலக்கணம் கூறுகின்றன.    
தொல்காப்பியத்துக்கு உரை எழுதியோர் பலராவர். அவற்றில் இன்று எமது கைக்குக் கிடைத்திருப்பது ஒரு சிலரது உரைகளே ஆகும். 
ஏறக் குறைய 10-ஆம் நூற்றாண்டின் பின்னரே தொல்காப்பியத்துக்கான உரைகள் தோன்றுகின்றன. தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் இம் மூன்றுக்கும் இளப்பூரணர் எழுதிய உரை கிடைத்திருக்கிறது. தொல்காப்பியத்துக்கு முதலாவது தோன்றிய உரையும் முழுமையாகக் கிடைத்திருக்கும் உரையும் இதுவே ஆகும்.  
தொல்காப்பிய உரைகளில் முந்தியது இளம்பூரணர் உரையாகும். காலத்தால் பிந்தியது நர்ச்சினார்க்கினியரது உரை. எழுத்து அதிகாரத்துக்கு இளம்பூரணார் உரை நீங்கலாகக் கிடைத்திருக்கும் உரை நச்சினார்கினியரது உரையே. 
சொல் அதிகாரத்துக்கு இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார், கல்லாடர் என்பவர்கள் எழுதிய உரைகள் தற்போது கிடைக்கின்றன. பொருள்  அதிகாரத்துக்கு ஏற்கனவே கூறியவாறு இளம்பூரணர் எழுதிய உரையை விட பொருள் அதிகாரத்தின் முதல் ஐந்து இயல்களுக்கும் செய்யுள் இயலுக்கும் நச்சினார்க்கினியர் உரை உள்ளது. பேராசிரியர் பொருள் அதிகாரம் மெய்ப்பாட்;டியல், உவம இயல், செய்யுள் இயல், மரபு இயல் நான்கிற்கும் உரை எழுதியுள்ளார். உண்மையில் பேராசிரியர் தொல்காப்பியத்தின் மூன்று அதிகாரங்களுக்கும் உரை எழுதியதாக நம்பப்படுகிறது. பொருள் அதிகாரத்தின் மொத்த இயல் ஒன்பதில் நாலுக்கு உரை எழுதியவர் முதல் ஐந்தையும் விட்டு விட்டு கடைசி நான்குக்கு  மட்டும் உரைசெய்திருப்பார் என்று சொல்ல முடியாது. 
உரையாசிரியர்களைப்பற்றி இவ்வாறு விரிவாகக் கூறுவதற்குக் காரணம் இந்த உரையாசிரியர்கள் தொல்காப்பியத்துக்கு உரை செய்திராது விட்டிருந்தால் குறைந்தது இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டு பழமை வாய்ந்த தொல்காப்பியத்தைப் படித்து அதன் உட்கருத்தை உள்ளவாறு உணர்ந்து கொள்வது சிரமமாக இருந்திருக்கும். 
கிடைக்கிற உரைகளும் பத்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு செய்தவையே. இதனால் தொல்காப்பியர் சூத்திரவடிவில் இறுக்கமாகச் சொல்வதற்கு அவர் கையாண்ட அவரது காலத்து சொல்லாட்சிகளுக்கு பொருள் காண்பதில் கருத்து வேறுபாடு இருக்கின்றன. 
எடுத்துக் காட்டாகச் சொல்ல வேண்டுமென்றால் பொருளதிகாரம,; புறத்திணையியல் (27)- 
கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே.
கொடிநிலை, கந்தளி, வள்ளி இந்தச் சொற்களுக்குப் பொருள் என்ன? இளம்பூரணர் கொடிநிலை, கந்தளி, வள்ளி இவற்றிற்கு நேரடியாகப் பொருள் சொல்லாது புறப்பாடல்களை உதாரணம் காட்டி, “இது கொடிநிலை”,  “இது கந்தளி” என்று சொல்வார். 
வடு நீங்கு சிறப்பின் கொடிநிலை கந்தழி என்ற முதலான மூன்றும் – குற்றம் தீர்ந்த சிறப்பினையுடைய கொடிநிலை முதலாகச் சொல்லப்பட்ட முற்பட்ட மூன்றும்,  கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே – பாட்டுடைத் தலைமகனைச் சார்த்தி வருங்காலத்துக் கடவுள் வாழ்த்தி வரும். 
கொடிநிலை என்றால் கீழ்த்திசைக் கடவுள். கந்தளி – பற்றுக் கோடற்ற தெய்வம். வள்ளி என்றால் வள்ளல்தன்மை. ஆனால் இந்தச் சொற்களுக்கு வேறுவிதமாகவும் உரை சொல்வர். “கதிர், தீ, மதி இம்மூன்றையும் வாழ்த்துவதும் கடவுள் வாழ்த்துப் போலவே எண்ணப்படும்” என்றும் உரை செய்யப்பட்டுள்ளது. 
தொல்காப்பியர் காலத்தில் ஆட்சியிலிருந்த சில சொற்கள் பின்னர் வழக்கொழிந்து போயின. உதாரணம் “இதோளி”, “அதோளி”, “உதோளி”, “எதோளி” என்ற சொற்கள் இன்று வழக்கில் இல்லை.  
இந்த இடத்தில் ஒன்றைக் கூறவேண்டும். தொல்காப்பியர் கடவுள் என்ற சொல்லை தேவர் என்ற பொருளில்தான் கையாள்கிறார். “எல்லாம் கடந்த மெய்ப்பொருள் கடவுள்” என்ற சொல்லாட்சி அவர் காலத்தில் இல்லை. தொல்காப்பியம் குறிப்பிடும் கடவுள் வாழ்த்தென்பதற்கு “அமரர் வாழ்த்து” என்பதுதான் பொருள். 
காமப் பகுதி கடவுளும் வரையார்
ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர் 
(தொல்.பொருள்-புறத்திணையியல் -சூத்திரம் 23) 
“இன்பப் பகுதிகளைக் கடவுளிடமிருந்தும் நீக்கமாட்டார்கள். மக்களிடத்தும் இருந்து நீக்க மாட்டார்கள் என்று புலவர் கூறுவர்” என்பதே இதன் பொருள். அது கடவுள் மாட்டுக் கடவுட் பெண்டிர் நயப்பனவும், அவர் மாட்டு மானிடப் பெண்டிர் நயபனப்பவும், கடவுள் மானிடப் பெண்டிரை நயப்பனவும், பிறவும் ஆம்” என்பது நச்சினார்க்கினியர் உரை.   
இஃது கடவுள் என்ற சொல் தேவர்களைக்  குறித்ததைக் காட்டுகிறது. 
தொல்காப்பியர் காலத்தில் தமிழகத்தில் பல தெய்வ வணக்கங்கள் இருந்தன. திருமால், முருகன், இந்திரன், வருணன், கொற்றவை, ஞாயிறு, திங்கள், தீ முதலியவைகளைத் தமிழர்கள் தெய்வங்களாக வணங்கி வந்தனர். இமையவர்கள் என்ற தேவர்களையும் தெய்வங்களாகக் கொண்டிருந்தனர்.  
மிகவும் வியப்பான செய்தி என்னவென்றால் தொல்காப்பியர் காலத்தில் சிவ  வழிபாடு இருக்கவில்லை. சிவனைக் குறிக்கும் சொல் 1610 தொல்காப்பிய நூற்பாக்களில் ஒன்றிலும் இல்லை. (நால் வேதங்களில் முதல் வேதமான இருக்கு வேதமும் சிவனைக் குறிக்கவில்லை என்பது ஈங்கு குறித்தற்பாலது.)  
சேயோன் என்ற சொல் சிவனைக் குறிப்பதாகச் சிலர் சொல்கிறார்கள். சேயோன் என்றால் செம்மை, சிவந்த நிறத்தோன், எனவே சேயோன் சிவனைக் குறிக்கிறது என்பர். 
குறிஞ்சி நிலத்துத் தெய்வத்தை சேயோன் என்று தொல்காப்பியர் குறிப்பதை முன்னர் பார்த்தோம். குறிஞ்சி நிலத்து தெய்வம் முருகன், செவ்வேள், சேயோன் என்பதே தொன்று தொட்டு வரும் வழக்கமாகும். குறிஞ்சி நில மக்கள் குறவர், குறத்தியர் எனத்  தொல்காப்பியம் நவிலும். முருகன் திருமணம் செய்து கொண்டது குறப்பெண்ணான வள்ளி என்பது புராண வழக்கு. இதனாலேயே முருகன் தமிழ்க் கடவுள் என்று போற்றப்படுகிறார் போலும். 
எனவே “இலக்கிய வழக்கிலும், உலகியல்  வழக்கிலும் குறிஞ்சித் தெய்வம் முருகனாகவே எண்ணப்படுகிறான். சிவபெருமான் குறிஞ்சித் தெய்வம் என்பதற்கு இலக்கிய வழக்கும் இல்லை. உலக வழக்கும் இல்லை.” இருந்திருந்தால் தொல்காப்பியர் நிச்சயம் சுட்டியிருப்பார். 
இதனால் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் தமிழகத்தில் சிவன் என்ற தெய்வமோ சிவமதமோ இருக்கவில்லை என்;பது சாமி சிதம்பரனார் போன்ற தமிழறிஞர்களது துணிபாகும். 
தொல்காப்பியத்துக்குப் பிந்திய கடைச்சங்க இலக்கிக்கியங்கள் சிவனைக் குறிக்கின்றன. “முக்கட் செல்வர் நகர்” எனப் புறநானூற்றின் 6 ஆம் பாடல் குறிக்கிறது. நூற்றித் தொண்ணூற்றெட்டாவது பாடல் திருமாலை “ஆல் அமர் கடவுள்” எனக் குறிக்கிறது. 
எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான புறநானூறு வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பாகும். தொகுத்தவர், தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை. இதில் காணப்படும் பழைய – புதிய பாடல்களிற்கு இடையில் 400 – 600 ஆண்டு இடைவெளி இருப்பதாக நம்பப்படுகிறது.  
தொல்காப்பியம் தமிழர்களுக்கு கிடைத்த புதையலாகும். அதன் சிறப்புக் காரணமாகவே ஆயிரக்கணக்கான  இடைச் சங்க, கடைச் சங்க இலக்கிய, இலக்கண நூல்கள் பல காலவெள்ளத்தில் அள்ளுண்டு அழிந்தொழிந்து போகத் தொல்காப்பியம் தப்பிப் பிழைத்தது. 
தொல்காப்பியத்துக்குப் பின்னர் நூற்றுக்கும் அதிகமான இலக்கண நூல்கள், பல வழிநூல்களாக, எழுதப் பட்டுள்ளன. அவற்றில் ஒன்றேனும் தொல்காப்பியர் படைத்த தொல்காப்பியத்தின் கொடுமுடியை எட்டிப் பிடிக்க முடியவில்லை. 
தமிழில் பிற்காலத்தில் எழுந்த புராணங்கள் புனைகதைகளையும், பகுத்தறிவுக்குப் பொருந்தாத கற்பனைகளையும் மனம்போன போக்கில் சொல்லியுள்ளன. 
இந்த உலகத்தை ஒரு அசுரன் பாயைப்போலச் சுருட்டிக் கொண்டுபோய் கடலில் ஒளித்துப் போட்டதாக சொல்லும் புராணக் கதை இருக்கிறது. பூமிக்கு மேலே ஏழுலுலகம், பூமிக்குக் கீழே ஏழுலுலகம், சொர்க்கலோகம், நரகலோகம், தேவலோகம் என்ற எண்ணிறந்த உலகங்களை புராணிகர்கள் கற்பனைக்கு எட்டியவாறு படைத்திருக்கிறார்கள். 
இதனை மனதில் வைத்துத்தான் மகாகவி பாரதியார் பின்வருமாறு பாடுவார்.   
கடலினைத் தாவும் குரங்கும் – வெங்
கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும்
வடமலை தாழ்ந்ததனாலே – தெற்கில்
வந்து சமன்செயும் குட்டை முனியும்
நதியி னுள்ளேமுழு கிப்போய் – அந்த
நாகர் உலகிலோர் பாம்பின் மகளை
விதியுற வேமணம் செய்த – திறல்
வீமனும் கற்பனை என்பது கண்டோம்.
ஒன்று மற் றொன்றைப் பழிக்கும் – ஒன்றில்
உண்மையென் றோதிமற் றொன்றுபொய் யென்னும்
நன்று புராணங்கள் செய்தார் – அதில்
நல்ல கவிதை பலப்பல தந்தார்.
கவிதை மிக நல்ல தேனும் – அக்
கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்
புவிதனில் வாழ்நெறி காட்டி -நன்மை
போதிக்கும் கட்டுக் கதைகள் அவைதாம். (பாரதியார் புதியபாடல்கள்) 
எனவே புராணங்கள் எல்லாம் நல்ல கவிதைகள் என்றாலும் அவையெல்லாம் கட்டுக் கதைகள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அவற்றை வேதம் எனக் கருதி பாமரர்கள் அல்லல்பட்டு அலைகிறார்கள்.  
சங்ககாலத் தமிழர்கள் இயற்கையோடு இணைந்து, இயற்கையைக் கண்டு மகிழ்ந்து இயற்கை வாழ்க்கை வாழ்ந்தார்கள்.  அந்த இயற்கை வாழ்க்கையையே பாடல்களுக்குப் பாடு பொருளாகக் கொண்டார்கள். 
தொல்காப்பியர் காலத்தில் இந்த உலகத்தின் தோற்றத்தைப்பற்றியும், உலகிலுள்ள உயிர்களின் வளர்ச்சி பற்றியும் ஆராய்ந்து அறிவுபூர்வமாக தொகுத்து  மரபியலில் எழுதியிருக்கிறார். மரபியல் என்பது  பரம்பரையாக, வழிவழியாக வரும் முறைமை, வழக்குகள் பற்றிக் கூறுவதாகும். 
“நிலுமும், நீரும், காற்றும், விண்ணும் கலந்ததொரு மயக்கமான நிலையில் உலகம் உண்டாயிற்று. இவையாவும் ஓர் எல்லைக்கு உட்பட்டு இயங்கிக் கொண்டிருந்த நிலையில் உயிர்கள் தோன்றிற்று” எனத் தொல்காப்பியர் கூறுகிறார். 
நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்
இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாஅமைத்
திரிவுஇல் சொல்லொடு தழாஅல் வேண்டும்.  (தொல். மரபியல் 1589) 
(இவ்வுலகம் நிலம், தீ, நீர், காற்று, வான் என்ற ஐம்பூதங்களின் கலவைதான். அதனால் உயர்திணை, அல்திணை, ஆண், பெண், பலர், ஒன்று, பல என்ற இருதிணை, ஐந்து பால்களின் இயல்பினி;ன்றும் வழுவாது, திரிபு இல்லாத சொற்களால் கூறித் தழுவிக் கொள்ளல் வேண்டும்.) 
உயிரின் தோற்றத்தையும் அதன் பாகுபாட்டையும் பின்வருமாறு தொல்காப்பியர் சொல்வார். 
ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே
இரண்டு அறிவதுவே அதனொடு நாவே
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்து அறிவதுவே அவற்றொடு  செவியே
ஆறு அறிவதுவே அவற்றொடு செவியே
ஆறு அறிவதுவே அவற்றோடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே. (தொல். மரபியல் -1526) 
(உடம்பால் மட்டும் அறிவன ஓர் அறிவு உயிர்கள். உடம்பாலும் நாவாலும் அறிவன இரண்டு அறிவுயிர்கள். உடம்பு, நா, மூக்கு மூன்றாலும் அறிவன மூஅறி உயிர்கள். உடம்பு, நா, மூக்கு, கண், இவை நான்காலும் அறிவன நாலறி உயிர்கள். உடம்பு, நா, மூக்கு, கண், காது என்னும் ஐந்தால் அறிவன ஐவறி உயிர்கள். உடம்பு, நா, மூக்கு, கண், காது, மனம் இந்த ஆறோடும் அறிவன ஆறறி உயிர்கள். இவற்றைத் தெளிவாக உணர்ந்தோர் நெறி முறையாக உணர்த்தி உள்ளனர்.) 
தொல்காப்பியரின் இந்தச் சூத்திரம் பண்டைய தமிழர்களுக்கு கூர்தல் அறம் (மனிதனின் பரிணாம வளர்ச்சி) தெரிந்திருந்ததைத் தெளிவாகக் காட்டுகிறது.  
இதனை அடுத்து ஓரறிவு முதல் ஆறறிவு உயிர்களுக்கு எடுத்துக்காட்டுக் காட்டுகிறார். 
புல்லும், மரமும் ஓர் அறிவு,
சங்கு, நத்தை, சிற்பி  ஈரறிவு,
கறையான், எறும்பு  மூன்றறிவு,
நண்டும், தும்பியும் நான்கறிவு,
விலங்குகள், பறவைகள் ஐந்தறிவு,
மனித இனம் மட்டுமே ஆறறிவு, 
தொல்காப்பியர் காலத்தில் காகிதம், அச்சு, மை, நவீன எழுதுகோல் கண்டுபிடிக்கப் படவில்லை. ஆராய்ச்சி செய்ய உதவும் உபகரணங்கள் வெப்பமானி, உருப்பெருக்கி, தொலைப்பெருக்கி எதுவும் கண்டு பிடிக்கப் படவில்லை. அப்படியான ஒரு கால கட்டத்தில் இவ்வளவு ஆராய்ந்து கூறியிருப்பது வியப்பாக இருக்கிறது. 
தொல்காப்பியர் மனித இனத் தோற்றம் பற்றிச் சொல்வது டார்வினின் கூர்தல்; கொள்கைக்கு ஏறக்குறைய ஒத்துள்ளது. இவ்வளவு ஆராய்ச்சி செய்த தமிழன்பற்றி பெருமைப்படக் காரணம் இருந்தாலும்  பிற்காலத்தில் அவற்றை வளர்க்காமல் விட்டு, சொர்க்கம், நரகம், வீடுபேறு பேரின்பம், பாவ புண்ணியம், யாகம் (வேள்வி) வேதாந்த- சித்தாந்த ஆராய்ச்சியில் தமிழன் இறங்கி “வாழ்வாவது  மாயம், மண்ணாவது திண்ணம்” என்ற திண்ணைப் பேச்சுப் பேசி அறியாமையில் மூழ்கியது  கவலையைத்  தருகிறது.    
அரசியல் பண்பாட்டுத் தளத்தில் தாய்த் தமிழகம் எழுநூறு ஆண்டுகள் அந்நியரால் அடிமை கொள்ளப்பட்டது. சேய்த் தமிழகம் நானூறு ஆண்டுகள் அந்நிய ஆட்கிக்கு அடிமைப்பட்டது. இதனால் தமிழினம் கலப்பினமாகி வாழ்வும் வளமும் இழந்தது. 
தமிழினம் இன்று தன்னை மீழ்கண்டு பிடிக்கும் முயற்சியில்,  புகழ் பூத்த தனது பழையகால வரலாற்றைப் திருப்பிப் பார்க்க  விரும்புகிறது. நாகரிகத்தின் கொடு முடியைத் தொட்ட இனம் பிற்காலத்தில் பாதாளத்தில் வீழ்ந்து விட்டதற்கு தொல்காப்பியம் தரும் தரவுகள் சான்றாக உள்ளது. இறந்த காலத்தில் இருப்பதற்காக அல்ல இறந்தகாலம் புகட்டும் பாடத்தைப் படித்து எதிர்காலத்தை செப்பனிடவே தமிழர்கள் தொல்காப்பியம், மற்றும்சங்ககால் இலக்கியங்களை கொஞ்சம் முயற்சி செய்து   படிக்க வேண்டும். தமிழனது அரசியல், பண்பாடு, கலை இவற்றின் மறுமலர்ச்கிக்கு அத்தகைய  இலக்கண இலக்கிய வரலாற்று உணர்வு கைகொடுக்கும்.  
தொல்காப்பியம் இலக்கண நூல் என்பதால் அதைத் தொட விரும்பாதவர்கள் இருக்கிறார்கள். ஆனால் தொல்காப்பியத்தை தமிழர்களது மொழி நாகரிகச் சிறப்பை அறிய உதவும் காலக் கண்ணாடி என்ற உணர்வோடு படித்தால் தொல்காப்பியம் நிச்சயம் இனிக்கும். அந்த ஆவலைத் தூண்டவே ஒல்காப்புகழ் தொல்காப்பியத்தை, பெரும்பாலும் பொருள் அதிகாரத்தை இங்கு மேலோட்டமாக ஆனால் சற்று விரிவாக அறிமுகம் செய்திருக்கிறேன். இதன் மூலம் தொல்காப்பியத்தின் அருமையும் சிறப்பும் கருதி மேலும் அதனைக் கற்க ஆர்வம் ஏற்படும் என நம்புகிறேன்.
 
4. பொது மறை 
இலக்கணம் என்பதற்காக தொல்காப்பியம் காலம் காலமாகப் புலவர்களால் போற்றப்பட்டு வந்திருப்பது போல் சிறந்த அறநூல் என்ற காரணத்துக்காக திருக்குறள் போற்றப்பட்டு வந்திருக்கிறது. இவ்வாறு புலவர் பெருமக்களால்  போற்றப்பட்டு வந்த காரணத்தாலேயே  இந்த இரண்டு நூல்களும் சிதைவுறாது முழுமையாக இன்று எமக்குக் கிடைத்திருக்கிறது என்று சொல்லலாம்.
அந்நிய மொழி, பண்பாட்டுப் படையெடுப்பினாலும், அரசுரிமை இழந்ததினாலும்  தமிழர்களே தமிழ்மொழியின் சிறப்பையும் தமிழர்களின் வரலாற்றுப் பெருமையையும் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாது போய்விட்டது. இன்றைய எமது தாழ்வுக்கும் வீழ்ச்சிக்கும்  இந்த அறியாமை முக்கிய காரணியாகும்.
வள்ளுவர் செய் திருக்குறளே தமிழர்களின் நாகரிகச் சிறப்பையும் பண்பாட்டின் உயர்வையும் உலகுக்கு எடுத்துச் சொல்கிறது. இதன் காரணமாகவே திருக்குறள் தமிழர்களின் மறையாகப் போற்றப்படுகிறது. 
திருக்குறளில்  மொத்தம் 133 அதிகாரம் உண்டு. இதில் முதல் 4 அதிகாரங்கள் பாயிரம் என்று தலைப்பிட்டு முறையே கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை,  அறன் வலியுறுத்தல் பற்றிப் பேசுகின்றன, அடுத்து அறத்துப் பாலில் 38 அதிகாரங்கள் உண்டு என்று முன்னரே பார்த்தோம். எஞ்சிய 34 அதிகாரங்களில் 20 அதிகாரங்கள் இல்லற இயலைப்பற்றிப் பேசுகிறது. அடுத்து 13 அதிகாரங்கள் துறவற இயல்பற்றிப் சொல்கிறது. கடைசி அதிகாரமான  ஊழ் இயல் ஊழ்பற்றிப் பேசுகிறது.  பொருள் பாலில்  70 அதிகாரங்களும் காமத்துப்பாலில் எஞ்சிய 25 அதிகாரங்களும் காணப்படுகின்;றன.  இதில் இருந்து தெரிவது என்னவென்றால் மொத்தம் 133 அதிகாரங்களில் கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் இந்த நான்கோடு துறவறம் பற்றிய 13 அதிகாரங்களையும் சேர்த்து மொத்தம் 17 அதிகாரங்களே அறவோர்க்கும் துறந்தோர்க்கும் ஒதுக்கி இருக்கிறார்.  எஞ்சிய 95 அதிகாரங்களும் இந்த உலக வாழ்க்கைக்குத் தேவையான பொருள் பற்றியும் இன்பம் பற்றியும் சொல்வதற்கு ஒதுக்கி இருக்கிறார்.  
வள்ளுவர் செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக்கு ஒரு நீதி..
என்று திருக்குறளின் நிறையையும் மனுதர்ம சாத்திரத்தின் குறையையும் தமிழ்த் தேசியத்துக்கு திருப்பள்ளியெழுச்சி பாடிய மனோண்மணியம் ஆசிரியர் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை ஒப்புநோக்கிச் சொல்வார். ஒரு குலத்துக்கு ஒரு நீதி வகுத்து நால்வருண சாதி முறையையும் பிராமண மேலாண்மையைப் பாதுகாப்பதே மனுதர்மத்தின் நோக்கமாகும்.   
கடந்த 2000 ஆண்டுகளாக திருக்குறள் அரச மட்டத்தில் இருட்டடிப்புச் செய்யப்பட்டு வந்துள்ளது. இராமாயணம், பாரதம் போன்ற பிற பண்பாட்டு இதிகாசங்கள், கற்பனைப் புராணங்கள்,  ஒரு குலத்துக்கு ஒரு நீதி பேசும் மனுசாத்திரங்கள்  தமிழர் வாழ்வில் கலந்தது போல் திருக்குறள் கலக்கவில்லை. வர்ணாச்சிர தர்மத்;;;;;;;;;;தையும் அதன் உட்பிரிவான சாதி அமைப்பையும் தூக்கிப் பிடிக்கும் பகவத்கீதை தமிழ் சமூகத்தில் அறிமுகப்படுத்தப் பட்டது போல் வாழ்க்கைக்கு வழிகாட்டும்  திருக்குறள் அறிமுகப்படுத்தப் படவில்லை. புறப் பண்பாட்டுச் சேற்றில் தமிழ் சமூகம் அமிழ்ந்து அழிந்து பட்டதே இதற்குக் காரணமாகும். 
திருக்குறள் முப்பால்பற்றி மட்டும் பேசியது. ஆரிய வேதங்கள் நாற்பால் பற்றிப் பிதற்றின. ஆரிய வேதம் நாட்டிய நால்வர்ணம் நாலாயிரம் சாதியைக் கற்பித்தது. திருக்குறள் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று முழங்கியது.  வள்ளுவர் காலத்தில் பலர் பிறப்பு அடிப்படையில் தங்களை அந்தணர் என்று சொல்லியும், பிறப்பால் உயர்ந்தவர்கள் என்று சொல்லியும்  உலா வந்திருக்க வேண்டும். அதனால் அந்தணர் யார் என்பதற்கு திருவள்ளுவர் வரைவிலக்கணம் வகுக்க வேண்டியிருந்தது.  “அந்தணர் என்போர் அறவோர், மற்று எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான்” என்று பறையறைந்தது திருக்குறள்.. இங்கே பிறப்பால் மட்டும் ஒருவன் உயர்வு கணிக்கப்படும் என்ற ஆரியக் கோட்பாட்டை முற்று முழுதாக உடைத்து எறிகிறார் வள்ளுவர். 
ஆரிய வேதம் அவி சொரிந்து ஆயிரம் வேள்விகள் நடாத்தியது. ஏமாந்த அல்லது ஏமாற்றப்பட்ட சங்க கால மூவேந்தர்களே இந்த வேள்விகள் செய்தால் சொர்க்கம் கிடைக்கும், சுகபோகம் கிடைக்கும் என்ற  மூடநம்பிக்கையில் வேத வேள்விகள் செய்தார்கள். பிராமணர்களுக்கு முற்றும் அடிமையாகித் தமிழகத்தைப் பாழாக்கிய பாண்டியருள் தலைசிறந்த அரசர்களில் ஒருவனான பெருவழுதிக்கு “பல்யாகசாலை முதுகுடிமிப் பெருவழுதி” என்ற பட்டமே இருந்தது.  
வேத வேள்விகளைக் கணக்கற்றுச் செய்ததாலும்,  வேதமோதிய பார்ப்பனர்களை எல்லாம் முனிவர் என்று கூறி, அவருக்குத் தன் குடிமி அவிழ்த்து விழுமாறு தலை குனிந்து வணங்கும்படி, முதுகுடுமிப் பெருவழுதியை காரிக்கிழார் என்ற தமிழ்ப் புலவர் வேண்ட அப்படியே அவன் செய்ததாலும்  அவனுக்கு இந்தப் பட்டம் கிடைத்தது போலும். அன்றைய நிலமையைப் பார்க்கும் போது இக்காலம் நற்காலம்போல் தோன்றுகிறது. 
இறைஞ்சுக பெருமநின் சென்னி சிறந்த
நான்மறை முனிவ ரேந்துகை யெதிரே   (புறம் 6)
இறைஞ்சுக – வணங்குக. நின்சென்னி – நினது முடி. சிறந்த நான்மறை முனிவர் எந்து கை எதிரே – மிக்க நான்கு வேதத்தினையுடைய அந்தணர் நின்னை நீடு வாழ்கவென்று எடுத்த கையின் முன்னே.  
வேத வேள்விகளின் போது  கொட்டப்பட்ட நீரினால் நிலம் சேறாகிப் போய்விட்டதாக இன்னொரு புறப்பாடல்  தெரிவிக்கிறது.
ஆனால் தமிழ்  வேதம் என்று போற்றப்படும் திருக்குறளோ “அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின், ஒன்றன் உயிர் செருத்து உண்ணாமை நன்று” என்று  சாற்றியது. வேதத்தைக் காதால் கேட்பது சூத்திரனுக்கு அடாது என்று வேதசாத்திரங்கள் தமிழன் மூளைக்கு விலங்கு போட்ட போது திருக்குறள் “எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு” என்ற இடித்துச் சொல்லியது. இப்படி ஆரிய வேதத்திற்கும் பொதுமறை பேசும் திருக்குறளுக்கும் உள்ள  வேறுபாடுகள் மலைக்கும் மடுவுக்கும் இடையில் உள்ள வேறுபாடுகள் போன்றவை. வெண்ணெய்க்கும் சுண்ணாம்புக்கும் உள்ள வேறுபாடு போன்றவை. வைரத்துக்கும் கூழாங்கற்களுக்கும் உள்ள வேற்றுமை போன்றது. இப்படி ஆயிரம் வேறுபாடுகளை அடுக்கிக் காட்டலாம். 
அண்மையில் கன்னியாகுமரியில் காலத்தால் அழியாத பொதுமறை தந்த திருவள்ளுவருக்கு 133 அடி உயர நினைவுச் சிலையை தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி திறந்து வைத்தார். கோலாகலமாக நடந்த இந்தச் சிலைத் திறப்பு விழாவில் பேசிய  தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தமிழ்க்குடிமகன் உரையாற்றும்போது-  
கி. பின்னும் முன்னும்  கடந்த 2000 ஆம் ஆண்டுகாலமாக களப்பிரர், பல்லவர், சோழர் ஆட்சி நடந்தது. கி.பி. 1310 வரை தமிழர் ஆட்சி நீடித்தது. பின்னர் தமிழர் வீழ்ச்சி அடைந்தனர். தமிழர் வீழ்ந்தால் எழப் பல நூற்றாண்டு ஆகும். சோழர், பாண்டிய மன்னர் ஆட்சி வள்ளுவர் காட்டிய நெறி முறைப்படி நடக்கவில்லை. பண்டைய காலக் கல்வெட்டில் கூறப்பட்டுள்ள சொற்கள், வார்த்தைகளில் வள்ளுவர் நெறி முறைப்படி ஆட்சி செய்யவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. 
1891 இல் மனோன்மணியம் சுந்தரனார் தமிழக வரலாற்றை சரியாக எழுத வேண்டும் என்று கூறினார். அவர் பெயரில் நெல்லையில் பல்கலைக் கழகம் உருவாக்கி உள்ளார் கலைஞர். அவரது பாடல்தான் தமிழ்த்தாய் வாழ்த்தாக உள்ளது. வேத காலங்களில் வேதம் ஓதுதலை காதில் கேட்டாலே அது குற்றமாகக் கருதப்பட்டது. 
அப்படியே தப்பித் தவறிக் கேட்பவர்களுக்கு கடும் தண்டனையும் வழங்கப்பட்டது. திருக்குறளின் தொடக்கத்தில் வள்ளுவர் எல்லாம் இயற்கை விதிப்படி நடக்கும் என்றார். இறுதியில் கயமைத்தனம் அதிகாரம் தொடங்கும் போது விரக்தி  நிலைக்குச் சென்றுள்ளார்.” (தினபூமி – 2-01-2000)  
தமிழ்வளர்ச்சி அமைச்சர் தமிழ்குடிமகனைத் தொடர்ந்து கல்வி அமைச்சர் பேராசிரியர் க. அன்பழகன் பேசினார்.  
“இங்கு நடக்கும் திருவிழா உலகத் தமிழர்களுக்கே திருநாள் விழாவாகும். தேய்ந்த திராவிடன் தலை நிமிர இவ்விழா உதவும். நெறி அறியா மக்களுக்கு நெறிகூறும் நன்னாள் இன்னாள் என்பதை மகிழ்ச்சியுடன் குறிப்பிட விரும்புகிறேன். கடத்தல்காரர்களிடம் இருந்து 160 பயணிகள் மீட்கப்பட்ட நல்ல செய்தி இத்திருநாளில் வந்தது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்தோன்றிய வள்ளுவர் கூட கடத்தப்பட்டார். வள்ளுவரின் கற்பனை வரலாற்றை யுவயுகம் கடத்திச் சென்றது. வள்ளுவர் குறித்து தவறான கருத்துக்களும் பரப்பப்பட்டது. திருக்குறள் கூட வேறு மொழியில் இருந்து மொழி பெயர்க்கப்பட்டதாகக் கதை கட்டப்பட்டது. தமிழுக்கு மனோன்மணியம் சுந்தரனார் எழுச்சியூட்டினார். பாரதியார் புரட்சி ஊட்டினார்.  
திராவிட இயக்கம்தான் திருக்குறளை மக்களிடம் கொண்டு சென்றது என்று வாழப்பாடியார் இங்கே குறிப்பிட்டார். குறள் குறித்த உயர்வு தமிழர்கள் மத்தியில் வேரூன்ற பாடுபட்டோம். வள்ளுவருக்குரிய பெருமை இந்தியாவில் இல்லைதான். மற்ற மாநில மக்கள் தங்கள் சொந்த மாநில வரலாற்றையும் கூட அறிய மாட்டார்கள். கன்னடம், ஆந்திரம் ஆகிய வற்றில் தமிழும் உள்ளது. வள்ளுவர் கூட அந்த மாநிலங்களுக்குப் புரவலராக இருந்துள்ளார். கர்நாடகாவில் கூட வள்ளுவர் தமிழ்நாட்டுக்காரர் என்பதால்தான் அவருக்கு சிலை அமைப்பதில் மாறுபாடு உள்ளது. வள்ளுவரின் குறள், மனிதனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது.
எந்த மதச் சார்பிலும் இல்லாத நூல் திருக்குறள். அது சமய நூல் அல்ல. அதற்கு அப்பாற்பட்டு எழுதப்பட்ட நூல். அதற்கு முன் கூட மன்னர் காலத்தில் திருக்குறள் அரங்கேறவில்லை. ஏனெனில் திருவள்ளுவர் தன்மானமிக்கவர். அவரது நூலை அரங்கேற்றும் அளவுக்குத் தகுதியானவர் அன்று எவரும் இல்லை.  
வள்ளுவர்கூட ஒரு மன்னராக இருந்துள்ளார். மக்களிடம் திருக்குறளை அரங்கேற்றிய பெருமை திமுகவையே சேரும். வள்ளுவரைப் போன்று இன்னொரு புலவன் உலகில் எங்கும் இதுவரை பிறக்கவில்லை. திருக்குறள் போன்று வேறு எந்த நூலிலும் தத்துவம் கிடையாது. மனிதன் நல்லபடி வாழ நல்ல கருத்தை குறள் வடிவில் சொன்னவர் வள்ளுவர். இது நமக்குக் கிடைத்த கருவூலம். இதனை நாம் நன்கு உணரவேண்டும். உணராததற்குக் காரணம் மதம், சாதி, தீண்டாமை.
வள்ளுவர் கூட துறவிகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று குறிப்பிடவில்லை. மனதில் நல்ல எண்ணங்கள் இருந்தாலே போதும். துறவிகள் என்றால் பிச்சை எடுத்து வாழ்பவர்கள் என்று இருந்த நிலையை எதிர்த்தவர் வள்ளுவர். குறளுக்கு கலைஞர் உரை எழுதினார். ஓவியம் வரைந்தார். எல்லாவற்றிற்கும் சிகரமாக விண்ணுயர் சிலை தந்தார். வள்ளுவரின் திருக்குறளைப் போல் கலைஞர் வாழ்வாங்கு வாழ விரும்புகிறேன்.”  
உலகில் நான் அறிந்தளவில் இரண்டு சிந்தனையாளர்கள் மட்டுமே  தாங்கள் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் உரைத்துப் பார்த்து அறிவிக்குச் சரியென்று பட்டால் மட்டுமே ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள்.  அதில் ஒருவர் கௌதம புத்தர். மற்றவர் திருவள்ளுவர்.  
திருக்குறளை ஊன்றிப் பகுத்தறிவுக் கண்ணோடு படிப்பவர்களுக்கு ஒரு உண்மை தெரியும். திருவள்ளுவர் முப்பால் என்ற ஒரு நூலை மட்டும் எழுதினார். அதனைப் பின்வந்த உரையாசிரியர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பல இயல்களாகப் பிரித்து, பத்துப் பத்துக் குறள்களைக் கொண்ட  அதிகாரங்களாக வகுத்தார்கள். இயல் பகுப்புகள் வேறு வேறாக இருப்பதற்கும், சில அதிகாரங்களின் தலைப்புகள் வேறுபட்டு இருப்பதற்கும், சில குறள்கள் இடம்மாறி இருப்பதற்கும் இதுதான் காரணம் எனபது வெளிப்படை.   எடுத்துக்காட்டாக பரிமேலளகரின் பகுப்பு முறைக்கும் திருக்குறளுக்கு உரைசெய்த இன்னொரு உரையாசிரியரான மணக்குடவர் வைப்பு முறைக்கும் வேறுபாடுள்ளது. பாடவேறுபாடும் இருக்கிறது.  
எடுத்துக்காட்டாக பொருட்பாலில் உள்ள 70 குறள்களையும் பரிமேலளகர் அரசியல்( 25), அங்க இயல (32);, ஒழிபு இயல் (13) என மூன்று இயலாக வகுக்க, உரையாசிரியர் மணக்குடவர் அதனை (பின்வரும்) ஆறு இயல்களாக வகுத்திருக்கிறார். 
1) அரசியல்        (25)
2) அமைச்சியல்  (10)
3) பொருள் இயல் (5)
4) நட்பு இயல்  (5)
5) துன்ப இயல்     (12)
6) குடியியல்       (13) 
“இதனுள் இறைமாட்சி முதலாக இடுக்கண் அழியாமை ஈறாகக் கூறிய அதிகாரம் இருபத்தைந்தும் பெரும்பான்மையும் அரசர்க்கு உரியவாதலின் அரசியல் என்றும், அமைச்சு முதலாக அவையஞ்சாமை ஈறாகச் கூறிய அதிகாரம் பத்தும் பெரும்பான்மை அமைச்சர்க்கு உரியவாதலின் அமைச்சியல்; என்றும், நாடு முதலாகப் படைச்செருக்கு ஈறாகக் கூறிய அதிகாரம் ஐந்தும் பொருட்பகுதியாதலின் பொருளியல் என்றும், நட்பு முதலாகக் கூடாநட்பு ஈறாகக் கூறிய அதிகாரம் ஐந்தும் நட்பின் பகுதியாதலின்  நட்பியல் என்றும், பேதமை முதலாக மருந்து ஈறாகக் கூறிய அதிகாரம் பன்னிரண்டும் கேட்டுக்குக் காரணமாதலின் துன்பவியலென்றும், குடி முதலாக கயமை ஈறாகக் கூறிய அதிகாரம் பதின்மூன்றும் மக்களது இயல்பு கூறுதலின் குடியியல் என்றும் ஆகப் பொருட்பால் கூறிய அதிகாரம் எழுபதாயிற்று” என்று மணக்குடவர் தான் செய்த அதிகாரப் பகுப்பிற்கான விளக்கத்தைக் கொடுத்துள்ளார். இந்த விளக்கம் ஏற்கக் கூடியதாக அமைந்துள்ளது.  
இனி பரிமேலளகர் – மணக்குடவர் இருவரது உரையிலும் குறள்கள் இடம்மாறி இருப்பதற்கு எடுத்துக் காட்டாக கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு என்ற முதல் இரண்டு அதிகாரங்களில் வரும் குறள் எண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. ஏனைய அதிகாரங்களில் வரும் எண்களின் வரிசை வேறுபாட்டை மூல நூல்களைப் படித்து அறிந்து கொள்ளவும். 
பரிமேலளகர்க்கும் மணக்குடவர்க்கும் இடையில் திருக்குறளில் உள்ள பாடபேதத்திற்கு எடுத்துக்காட்டாக பின்வரும் குறள்களைக் கூறலாம். 
செய்யாமல் செய்த உதவிக்கு, வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது                (குறள் 101) 
மணக்குடவர் பாடம்செய்த  திருக்குறளில் “செய்யாமல்” என்ற சொல் “செய்யாதார்” என்று காணப்படுகிறது. அதாவது “செய்யாதார் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது” என்று காணப்படுகிறது. இதே போல்-  
இலனென்று தீயவை செய்யற்க, செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து              (குறள் 205) 
மணக்குடவர் பாடம்செய்த உரையில் “இலன்” என்பது “இலம்” என்று காணப்படுகிறது. இவ்வாறே பெறல் – பெறற்கு(213 ),  செயும் நீர- செயல்நீர் (219), வித்தகர்க்கு – வித்தகற்கு (235), ஒன்றன் – ஒன்றின் (259),  ஆசையுள் – ஆசையில் (266)  என்ற குறள்களில் பாட பேதம் காணப்படுகிறது. 
பொதுவாக உரை என்பது ஒரு செய்யுளை எடுத்துக் கொண்டு அரும்பத உரை முதல்  பொழிப்புரை வரை அனைத்தையும் விளக்கிப் பொருள் கூறுவதாகும். திருக்குறளுக்கு முதன் முதலில் உரை செய்தவர்கள் பதின்மர் (பத்துப்பேர்). அவர்கள்
1) தருமர்,
2) மணக்குடவர்,
3) தாமத்தர்,
4) நச்சர்,
5) பருதி,
6) திருமலையர்,
7) மல்லர்,
8) பரிப்பெருமான்,
9) காலிங்கர்,
10) பரிமேலளகர்.  
இந்தப் பதின்மரில் திருக்குறளுக்கு முதலில் உரைசெய்தவர் தருமர். இறுதியாக உரைசெய்தவர் பரிமேலளகர் என்பதை அறிஞர் உலகம் நிறுவியுள்ளது. இவர்களது காலம் கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் இருந்து 13 ஆம் நூற்றாண்டு ஈறாக எனக் கணிக்கப்பட்டுள்ளது. அதாவது திருவள்ளுவருக்குப்பின் ஆயிரம் ஆண்டு கழித்து வாழ்ந்தவர்களே திருக்குறளுக்கு உரை செய்துள்ளனர். 
திருவள்ளுவர் நூல் செய்த முறை, அவரது உண்மையான உள்ளக்கிடக்கை எது, அவர் கையாண்ட அறம், ஆதிபகவன், வடபுலத்தார், தென்புலத்தார், வானவர், விசும்பினர், இமயவர், தெய்வம், புத்தேள், தேவர், இம்மை, மறுமை, தாமரைக்கண்ணான் உலகு, ஆபயன், எழுமை, இப்படி எண்ணற்ற சொற்களுக்கான சரியான பொருள் என்ன என்பதில் அறிஞர்கள் மத்தியில் ஆழமான கருத்து வேறுபாடு நிலவுகிறது. இதற்கு ஒரு காரணம் குறளின் அமைப்பு.  
தமிழில் உள்ள மிகச் சிறிய யாப்பு இதுதான். அதனால் ஏற்பட்டுள்ள சொற்சிக்கனமும் பொருட் செறிவும். மற்றது இடம், பொருள், கால வேறுபாடு. ஒரு பெரிய கருதுகோளை ஏழுசீர் கொண்ட இரண்டு அடிக்குள்  அடக்கி திருவள்ளுவர் குறள் செய்துள்ளார். அதனை விரிக்கப் போகும்போது கருத்து முரண்பாடு எழுகிறது. இதன் விளைவாகத்தான் இதுகாலவரை முந்நூற்றுக்கும் அதிகமானவர்கள் திருக்குறளுக்கு உரை செய்துள்ளார்கள். மிக அண்மையில் திருக்குறளுக்கு புதிய விளக்க நூல் ஒன்றை சாலமன் பாப்பையா எழுதி வெளியிட்டுள்ளார். 
திருவள்ளுவரது உள்ளக்கிடக்கை என்ன என்பதை, அவர் காலத்துப் பகைப்புலத்தில் வைத்து, அன்றைய சமூக பொருளாதார அமைப்பைக் கருத்தில் கொண்டு ஒரு உரை தமிழ் அறிஞர்கள் பெருமக்களால் ஆராய்ந்து உவத்தல் காய்தல் இன்றி உரை எழுதப் பட வேண்டும். அதில் மதவாடையும் இருக்கக் கூடாது, பகுத்தறிவு கண்ணோட்டமும் இருக்கக் கூடாது. திருவள்ளுவர் கூற வந்தது என்ன என்பதை உள்ளவாறு கூறவேண்டும். அவரது கருத்துக்கள் இந்தக் காலத்துக்குப் பொருந்திவரா என்பதற்காக அவரது கருத்துக்களைச்  சிதைக்கக் கூடாது. அவரது கருத்துக்கள் பொருந்தி வராது விட்டால், பொருந்தி வராத குறள்கள் இருக்கின்றன, அவற்றை நாம் விட்டுவிடலாம். ஆனால் குரான் போன்று ஒரே ஒரு அங்கீகரிக்கப்பட்ட குறள் மட்டுமே இருக்க வேண்டும்.  
எனது முன்னுரையில் குறிப்பிட்டது போல் தமிழர்களது வாழ்க்கை திருக்குறளின் அடிப்படையில் அமைய வேண்டும். திருக்குறளை ஒரு பூசைக்குரிய வழிபாட்டு நூலாகக் கொள்ளாமல் அதனை வாழ்க்கையின் வழிகாட்டு நூலாகத் தமிழர்கள் கைக்கொள்ள வேண்டும்.  
திருக்குறள் எம்மிடம் உள்ள மதிப்பற்ற சொத்து மட்டும் அல்லாமல் அது தமிழர் உலகுக்கு கொடுத்த பொதுமறையுமாகும். 
5. அகத்துறை- புறத்துறை இலக்கணம்  
சங்ககாலப் புலவர்கள் வாழ்க்கையை அகம், புறம் என இரண்டாக வகுத்தனர். இன்பம் பற்றியவை அகம் என்றும் (உள்ளத்தே எழும் உணர்வான காதல்பற்றியது) மற்றவை ( வீரம், புகழ், கல்வி, கொடை) புறம் என்றும் பெயர் சூட்டப்பட்டன. 
தொல்காப்பியருக்கு முற்பட்ட புலவர்களும் ஆசிரியர்களும் வகுத்த அகம், புறம் என்னும் வாழ்க்கை முறையை தம்  காலத்து மாறுதல்களையும் உள்ளடக்கித்தான் தொல்காப்பியர் பொருள் இலக்கணம் எழுதினார். அதனை இலக்கணமாகவும், அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை முதலிய தொகை நூல்களையும், குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை முதலிய பத்துப்பாட்டு நூல்களையும் இலக்கியமாகவும் கொண்டு ஆராய்ந்தால் சங்ககாலத் தமிழர்கள் கட்டியெழுப்பிய அகப்பொருள் வாழ்க்கையைக் கண்டு களிக்கலாம்.
இவற்றோடு பக்தி இயக்கம் பரவிய காலத்தில் எழுந்த மாணிக்கவாசகரின் திருவெம்பாவை,திருக்கோவையையும்  ஆண்டாளின் திருப்பாவைiயும் படித்தால் சங்ககால தலைவன் -தலைவி  அகப்பொருள் இலக்கணத்தை எப்படி நாயகன் -நாயகி உறவுக்கு இவர்கள்  உயிர்நாடியாகக் கொண்டிருந்தார்கள் என்பதை எளிதில் காணலாம். 
அரசனுக்குப் பதில் இறைவன்  பாட்டுடைத் தலைவனாகப் கொண்டாடப்பட்டான். காதலுக்குப் பின்னணியாக இருந்த இயற்கை வர்ணனை இறைவனின் திருத்தலைத்தை வர்ணிக்க பயன்படுத்தப் பட்டது. அரசனின் கொடை, வீரம், ஆற்றல் இறைவனின் கருணை, திருவுருவ அழகு, திருவிளையாடல், திருவருட்செயல் இவற்றைப் போற்ற மேற்கொள்ளப்பட்டது. மானிடக் காதலை விளக்கிய அகத்திணை இலக்கணம் பக்தி உணர்வை எடுத்துச் சொல்லும் நாயக-நாயகி பாவமாக மாறியது. இந்த மாறுதல் தமிழில் பக்தி இலக்கியத்துக்கு வித்திட்டது.
முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
பேர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசார ரத்தை
தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தானே! (அப்பர் தேவாரம் -6501) 
வாரணம் ஆயிரம் சூழ வலஞ் செய்து
நாரணன் நம்பி நடக்கின்றான் என்று எதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறம் எங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழி நான்! (ஆண்டாள் பாசுரம் -557) 
உலக மொழிகள் அத்தனையிலும் தமிழ்மொழியிலேயே அதிகளவு பக்தி இலக்கியம் இருக்கிறது என்ற உண்மை உணரத்தக்கது. நால்வர் என அழைக்கப்படும் சைவ நாயன்மார்கள் அப்பர், சுந்தரர், ஆளுடைப்பிள்ளையார், அருள்மொழிவாசகர் இயற்றிய தேவாரங்கள் அழிந்தது போக இன்று எஞ்சியிருப்பவை ஏறக்குறைய எண்ணாயிரம் ஆகும். பன்னிரு வைணவ ஆழ்வார்கள் பாடியவை நாலாயிரத் திவ்வியப்பிரபந்தமாகும். இது வைணவர்களால் (தென்கலை) தமிழ் வேதம் எனப் போற்றிப் புகழப்படுகிறது.  
ஆண்டாளின் (ஆறாம் நூற்றாண்டு) திருப்பாவையும், மாணிக்கவாசகரின்  (ஒன்பதாம் நூற்றாண்டு) திருவெம்பாவையும் சிறந்த தமிழ் இலக்கியமாகக் கருதப்படுகிறது.  தமிழின் சொல்நயம், ஓசைநயம், பொருள் நயம் இவற்றிற்கு இந்த இரண்டு திருப்பள்ளியெழுச்சிப் பாவைகளும் எடுத்துக் காட்டாகத் திகழ்கின்றன.  
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம்போல் முகத்தாள்
நாராயணநே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய!;
என்று திருப்பாவை தொடங்குகிறது. 
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கன்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மி விம்மி மெய்மறந்து
போதார் அமளியின்மேன் நின்றும் புரண்டுஇங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடடந்தாள் என்னே னெ;னே
ஈதேஎம் தோழி பரிசுஎலோர் எம்பாவாய்! 
என திருவெம்பாவை தொடங்குகிறது. 
வாழ்க்கையை அகம், புறம் என இருவகையாகப் பிரித்த புலவர்கள்  “இன்பம், என்பதை அகம் என்றும், ஏனைய “அறம், பொருள்” ஆகிய இரண்டையும் “புறம்” என்று வகுத்த பின்னர்  புலவர்கள் அகத்தை மீண்டும் களவியல், கற்பியல் என இரண்டாகப்  பிரித்தனர். 
களவியல், கற்பியல் பொருள் இலக்;கணம் பண்டைய தமிழ் மக்கள் மணம் செய்து கொண்ட முறைமை, அவர்தம் காதல் வாழ்க்கை, தலைவனையும் தலைவியையும் இணைத்து வைக்கும் பாங்கன், தோழி, களவுப் புணர்ச்சியில் தலைவனும் தோழியும் தலைவனைச் சோதிக்கும் முறைகள், தனக்கு ஏற்படும் துன்பங்களைப் பொருட்படுத்தாது தலைவியை அடைவதில் தலைவன் எடுத்துக் கொள்ளும் முயற்சி,  
காதல் வயப்பட்ட தலைவி பித்துப்பிடித்தவள்போல் இருப்பதைக் காணும் தாய் தன்மகளது “நோய்” இன்னதென்று அறியாது ஏதோ “பேய்”; பிடித்திருக்கலாம் என்ற நினைப்பில் வேலனை அழைத்து குறிகேட்கும் பேதமை,  காதலர்க்குள் ஏற்பட்ட களவைத் தோழி தலைவியின் தாய்க்கு குறிப்பால் உணர்த்தும் திறமை, களவு வெளிப்படின் இருதிறத்துப் பெற்றோரும் ஒன்றுகூடி அவர்களுக்கு ஊரறிய  திருமணம் செய்து வைக்கும் முறைகளையும், பெற்றோர் திருமணத்துக்கு உடன்படாது குறுக்கே நிற்கும் காலை தோழி தலைவியைத் தலைவனோடு கூட்டி அனுப்புதல், அங்ஙனம் சேர்த்து அனுப்பும் போது தோழி தலைவனிடம் எடுத்துக் கூறும்  வாழ்க்கைக்குத் தேவையான அறிவுரை இவற்றையெல்லாம் அறிந்து கொள்ளலாம். 
தமிழ் மொழியில் இன்றுள்ள மிகப் பழைய இலக்கண நூலான தொல்காப்பியம் களவியல், கற்பியல் திருமணங்களைப் பற்றி விரிவாகக் கூறுகி;ன்றது. தொல்காப்பியம் என்ற காலக் கண்ணாடி மூலம்  தமிழ்ச் சமூகத்தின் பழைய நாகரிகம், பண்பாடு இவற்றைக்  கண்டு மகிழவும் பெருமைப்படவும் வாய்ப்பளிக்கிறது.  
உலகத்துப் பொருள்களை முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என மூன்றாக இலக்கண நூலாசிரியர்கள் பகுத்தனர். 
முதற்பொருள் எனப்படுவன நிலமும் காலமும் ஆகும். கரிப்பொருளாவன உயிர்ப் பொருளும் (தெய்வம்,  மக்கள், விலங்குகள்,……)உயிரல் (மரம், செடி, கொடிகள், ஊர்….)பொருளும் ஆகும். உரிப்பொருளாவன மக்கட்கு உரிய பொருள், அஃது அகத்திணை, புறத்திணை எனப்படும். திணையென்றால் ஒழுக்கம். அகத்தில் நிலவும் ஒழுக்கத்தை அகத்திணைகள் என்றும் புறத்தில் நிகழும் நிகழ்ச்சிகளை புறத்திணை என்றும் கூறுவர்.
அகமாவது இன்பம் நுகர்தலால்  உள்ளத்தில் எழும் உணர்ச்சிகளின் வெளிப்பாடு ஆகும்.அகத்தில் நிகழ்வதால் அகம் எனப் பட்டது. வேறு வார்த்தைகளில் சொன்னால் ஆணும் பெண்ணும் ஒன்றுகூடி அன்போடு வாழும் காதல் வாழ்க்கை. 
முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றே
நுவலுங்காலை முறை சிறந்தனவே
பாடலுள் பயின்றிவை நாடும் காலை. (தொல்.பொருள் – அகத்திணை 3) 
கருத்துரை- முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என முறையாகச் சொல்லும் நிலையில், இலக்கியத்துள் வழங்கியவற்றைக் கருதி அமைத்துக் கொண்டனர். 
அகம் களவியல், கற்பியல் என இரண்டாகப் பகுக்கப்படும்.  அகத்திணைகள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை என எழுவகைப்படும்.  
இவற்றிற்கான உரிப்பொருள்கள் முறையே – 
குறிஞ்சித் திணைக்குக் கூடல்- களவு திருமணத்துக்கு முதல் கூடி மகிழ்ந்திருத்தல்.  
முல்லைத் திணைக்கு  இருத்தல் – காதலன் பிரிந்தபோதும் (ஓதல், பகை, பொருள், தூது, அறப்புறங் காவல் நிமித்தம்) மீண்டும் வருவான் என்ற நம்பிக்கையோடு திரும்பி வரும்வரை காதலி பொறுமையுடன் காத்திருத்தல். 
மருதத் திணைக்கு ஊடல் – கூடியிருக்கும் போது ஒருவரோடு ஒருவர் காட்டும் பொய்க் கோபம், அல்லது பரத்தையோடு உறவு கொண்டுவிட்டுப் பின் இல்லம் திரும்பும் போது காதலி காதலனோடு கருவிக் கொள்வது..
நெய்தல் திணைக்கு இரங்கல்- தலைவன் பிரிவால் வாடிய தலைவி அவனது வருகைக்காக ஏங்கிக் கலங்கி அரற்றுதல், நைந்து உருகுதல்,
பாலைத் திணைக்குப் பிரிதல் – பொருள், தூது, கல்வி  காரணமாகத் தலைவன் பிரிந்த போது  பிரிவினால் காதலி கொள்ளும்  வருத்தமும், வெம்மையும், புழுக்கமும்.  
இந்த ஒழுகலாறுகளான கூடல், இருத்தல், ஊடல், இரங்கல், பிரிதல்  ஐவகை நிலத்துக்கும் உரியனவேயாயினும்  இலக்கிய மரபு ஒவ்வொரு திணைக்கும் ஒவ்வொரு ஒழுக்கத்தினை சிறப்பித்துக் கூறியதாகப் பொருள் கொள்ளலாம்.     
புறமாவது அறஞ்செய்தலும், மறஞ்செய்தலும், பொருளீட்டலும் ஆகும், அவற்றால் ஆய பயன் பிறர்க்குப் புலனாதலின் புறம் எனப் பட்டது.  
அகம்போலவே புறத்திற்கான திணைகள் எழுவகைப்படும். அவையாவன வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண்.  
வெட்சித் திணை என்பது குறிஞ்சி என்ற அகத்திணைக்குப் புறத் திணை ஆகும்.  
வஞ்சித் திணை முல்லைக்குப்  புறத்திணை.  
உழிஞை திணை மருதத்துக்குப் புறன். 
தும்பைத் திணை நெய்தலுக்குப் புறன். 
வாகை பாலைக்குப் புறத் திணை ஆகும்.  
காஞ்சி பெருந்திணைக்குப் புறம்.  
பாடாண் புறத்திணை கைக்கிளை என்ற அகத்திணைக்குப் புறன். 
அறம், பொருள், இன்பம் என்ற மூன்றும் வாழ்க்கையின்  உறுதிப் பொருள்கள் எனவும், ஒழுக்கலாறுகள் எனவும் பெயர் பெறும்.   
முதற்பொருளின்  ஒரு கூறாகச் சொல்லப்டும் நிலம் ஐவகையானது. இந்த ஐவகை நிலத்துக்குரிய தெய்வம், மக்கள், ஒழுக்கம்பற்றி தொல்காப்பியச் சூத்திரம் விரித்துக் கூறும். 
மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய  மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே.      (தொல்.பொருள் 951) 
(மாயோன் – திருமால், சேயோன் – முருகன், வேந்தன் – இந்திரன், மேய – விரும்புகின்ற, உலகம் – நிலம், மைவரை – மேகம் சூழந்த மலை, தீம்புனல் – மிகுந்த நீரையுடைய) 
காடும் காடு சார்ந்த நிலம் முல்லை. மலையும் மலைசார்ந்த நிலம் குறிஞ்சி, வயலும் வயல்சார்ந்த நிலம் மருதம், கடலும் கடல் சார்ந்த நிலம் நெய்தல் எனப்படும்.  
குறிஞ்சியும் முல்லையும் வானம் பொய்த்த காலத்தில் வரட்சியுற்று நிலைமாறும் போது அது பாலை எனப் பெயர் பெறும். 
அகத்திணை ஏழாகப் பிரிக்கப்பட்டது. ஒருவன் ஒருத்தி என்னும் இருவரிடையே உண்டாகும் கூட்டுறவை கைக்கிளை, ஐந்திணை, பெருந்திணை என வகுப்பது தொல்காப்பிய மரபு. அகத்திணைக்குரியார் தலைமக்கள் எனச் சுட்டப் பெற்றனர். கிழவன்-கிழத்தி, தலைவன்-தலைவி,  தலைமகன்-தலைமகள் என்னும் சொல்லாட்சி இதன்வழி எண்ணப்பெற்றது. 
கைக்கிளை ஒருதலைக் காமத்தைக் குறிக்கும். பெருந்திணை பொருந்தாக் காமத்தைக் குறிக்கும். எஞ்சிய திணைகளான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஐந்தும் அன்பின் ஐந்திணை எனச் சிறப்பிக்கப்பட்டுள்ளது.  
இருவரன்பும் ஒத்த நிலைமையாகிய நடுவண் ஐந்திணைக் கண்ணும் புணர்ப்பும், பிரிதலும்,இருத்தலும் இரங்கலும், ஊடலுமாகிய உரிப்பொருள் களவு, கற்பு என்னும் இருவகைக் கைகோளினும் நிகழும்.  
புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்
ஊடல், அவற்றின் நிமித்தம் என்றிவை,
நேருங்காலை, திணைக்குரிப் பொருளே.  (தொல்.பொருள் -அகத்திணை இயல் 16) 
தொல்காப்பியர்  தமிழ்மரபுக்குப் புறத்தான வடநூலார் வகுத்த எட்டுவகைத் திருமணங்களைக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.  
இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்
காமக் கோட்டம் காணும் காலை
மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்
துறையமை நல்யாழ்த் துணையமோர் இயல்பே. (தொல்.பொருள் -களவியல் 3,1) 
(மறையோர்- அந்தணர். தேஎம் – நூல்) 
இன்பமும், பொருளும் அறமும் என்று சொல்லப்பெற்ற, அன்போடு இணைந்த ஐந்து ஒழுக்கங்களைப் பகுத்துரைத்தல் தமிழ் மரபு. பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந்தருவம், அசுரும், இராக்கதம், பைசாசம் என மணமுறைகளை  எண்வகையாக பகுத்தோதல் ஆரியர் மரபு. எனவே இவ்வெண்வகை மணமுறைகளும் தமிழர்க்கு உரியனவல்ல என்பது போதரும். 
தமிழரின் களவு ஒழுக்கமும், ஆரியரின் கந்தருவ மணமும் ஒன்றென சில உரையாசிரியர்கள் குறிப்பிடுவர். ஆனால் உண்மை அதுவல்ல. 
தமிழரின் களவு ஒழுக்கமும், ஆரியரின் கந்தருவ மணமும் நம்பியும் நங்கையும் தாமே ஒருவரை ஒருவர் சந்தித்துச் சேர்தல் என்ற ஒரு வகையில் மட்டுமே ஒத்திருப்பன, நடைமுறைகளும் நோக்கமும் முற்றிலும் வேறுபட்டவை. களவு மணம் தலைவனும் தலைவியும் மறைந்து சந்திப்பதாகிய தொடக்க நிலையை மட்டும் குறிக்கும். கந்தருவமோ பிறரறியாமர் இருவரும் திருமணம் செய்து கொள்வதைக் காட்டும். 
களவுச் சந்திப்பு உள்ளப் புணர்ச்சி ஒன்றையே குறிக்கும். ஊரறியத் திருமணம் நடைபெற்ற பின்னரே மக்கள்ப் பேற்றிற்கான உடல் கூடல் நிகழும். கந்தருவ மணத்தில் திருமணம் என்ற ஒன்று இல்லை. திருமணம் இன்றியே கூடுதல் நிகழ்ந்து விடுகிறது.  
ஆரியக் கந்தருவம் கற்பின்றியும் அமையும். தமிழ்ப் பண்பாட்டிலே கற்பில்லாத களவு அறமாகக் கருதப் படுவதில்லை. அறம் என்ற ஆட்சியை ஒழுக்கம் என்ற பொருளிலேயே தொல்காப்பியரும் திருவள்ளுவரும் கையாண்டுள்ளனர். அறத்தைக் குறிக்கும் தர்மம் என்ற வட சொல் அறத்தின் சிறப்பை முழுதும் உணர்த்தாது. 
மனதுக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன். அஃதொழிந்த சொல்லும் வேடமும் அறன் எனப்படாது என்பார் வள்ளுவர். மேலும் அழுக்காறு ( பொறாமை), அவா(பேராசை), வெகுளி ( கோபம்), இன்னாச்சொல் (கடுஞ்சொல்) இந்நான்கும் கடிந்து நடப்பதே அறமாகும் என்பார்.  
6. களவியல்- கற்பியல் 
களவு என்பது வஞ்சனையாற் பிறர்க்குரிய பொருளைக் கவர்ந்து கொள்ளுதலாகிய உலகியல் களவல்ல. தலைவனும் தலைவியும் நல்லூழின் செயலால் தாமே எதிர்ப்பட்டு உலகத்தார்அறியாது மறைந்தொழுகுதல் ஆகும். பிறர் அறியாமல் உளங் கலந்து பழகும் பெருங்கேண்மையாதலால் இக்களவு அறத்தின் பாற்பட்டது. இக்களவினை மறைந்தொழுக்கம், மறை, அருமறை என்ற சொற்களால் வழங்குவர் தொல்காப்பியர். 
தமிழர் கூறும் களவொழுக்கம் அன்பின் மிகுதியால் தான் அவள் என்ற வேற்றுமையின்றி இருவரும் ஒருவராய் ஒழுகும் உள்ளப்புணர்ச்சியாகும். ஒருவரை ஒருவர் மணந்து வாழும் கற்பென்னும் திண்மை தமிழர் ஒழுகலாறாகிய களவொழுக்கத்தின் முடிந்த பயன் என்பர்.என்றும் கற்பினின்று வழுவாமல் அன்பினாற் இணையும் உள்ளப் புணர்ச்சியே களவொழுக்கத்தின் சிறப்பியலாகும்.  இதுவே தமிழியல் வழக்கமாகிய களவுக்கும் வடநூல் மணமாகிய கந்தருவத்துக்கும் உள்ள அடிப்டை வேறுபாடாகும். 
கற்பியல்   
தலைவன் தன்னோடு அன்பு காட்டும் தலைவியைப் பெற்றோர் கொடுப்பப் பலர் அறிய மணந்து வாழும் மனைவாழ்க்கையே கற்பெனச் சிறப்பித்து உரைக்கப்படும். இதனைக் கரணம் என்ற சொல்லால் தொல்காப்பியர் வழங்குவார்.  
கற்பு எனப்படுவது கரணமொடு புணரக்
கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுமே. 
(தொல். பொருள் -கற்பியல் 4, சூத்திரம் 1) 
கற்பு என்று கூறப்பெறுவது, வதுவைச் சடங்குடன் பொருந்திக் கொள்வதற்குரிய மரபினுடைய தலைவன், தலைவியைக் கொடுப்பதற்குரிய மரபினையுடையோர் கொடுப்பது கொள்ளுவது.
(கரணம் – சடங்கு, வதுவை -மணம், கிழவன் கிழத்தி – தலைவன் தலைவி, ) 
கொடுப்போரின்றியும் மணம் உண்டு. பெற்றோரது உடன்பாடின்றி களவொழுக்கத்தில் இணைந்து தலைவனும் தலைவியும் ஊர்விட்டு ஊர் போதல் உண்டு. இது உடன்போக்கு எனப்படும்.  
கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே
புணர்ந்து உடன் போகிய காலையான.

(தொல்.பொருள்-கற்பியல்  2)  
தலைமகளது மனத்தின்கண் அமைந்த கலங்கா நிலையாகிய திண்மையே கற்பெனப்படுவது. தொல்காப்பியர் காலத்திலும் அதற்கு முன்னரும் இத்திருமணச் சடங்கு எல்லா மக்களுக்கும் விதிக்கப் படவில்லை. சேர, சோழ, பாண்டியராகிய மூவேந்தர் குடும்பத்திற்கே முதன் முதல் விதிக்கப்பட்டது. பின்னர் ஏனையோர்க்கும் அது விதிக்கப்ட்டது.

களவு மணத்தில் பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் பெரியோர்கள் கணவனும் மனைவியும் பல்லோர் முன்  இணைந்து வாழ்தற்குரிய மணச்சடங்கான கரணத்தை பெரியோர்கள் வகுத்தார்கள். 
பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப. (தொல். பொருள் -கற்பியல் 4,- 4)
(வழு – குற்றம், ஐனர் – பெரியோர்) 
இல்லறம் 
இல்லற வாழ்க்கையின் பயன் என்ன? இல்லற வாழ்க்கையின் இறுதிக் காலத்து,  பெருமை பொருந்திய மக்களுடன் நிறைந்து, அறத்தினை விரும்பிய சுற்றத்தோடு தலைவனும், தலைவியும், சிறந்ததாகிய செம்பொருளை இடைவிடாது நினைத்தல் மனையறத்தின் கடந்த காலப் பயனாகும். தமிழர்கள் இல்லறத்துக்குப் பின்புதான் துறவறத்தை மேற்கொண்டனர். குடும்பத்ததைப் பிரிந்து தனித்து வாழும் துறவறம் தமிழ் மக்களிடம் இருந்ததில்லை. இதனை-
காமம் சான்ற கடைக் கோட் காலை
ஏமம் சான்ற மக்களொடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே
(nhhல். கற்பியல் 4, – 51) 
தொல்காப்பியர் மெய்ப்பாட்டியலில் தலைவன்-தலைவிக்கு இடையில் இருக்க வேண்டிய பத்துப் பொருத்தத்தை பின்வருமாறு கூறுவார். 
பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டோடு,
உருவு, நிறுத்த காமவாயில்,
நிறையே, அருளே, உணர்வொடு, திருஎன
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே
(தொல். பொருள்- மெய்ப்பாட்டியல் 6, சூத்திரம் 25) 
1. குலப்பிறப்பு 2. ஒழுக்கம் -பண்பாடு 3.ஆள்வினையுடைமை 4. வயது 5. வடிவம் -வனப்பு 6. காமஒழுக்கத்திற்குரிய உள்ளக் கிளர்ச்சி 7. சால்பு 8. அருளுடைமை 9. உள்ளக் குறிப்பை அறிந்தொழுகும் நுண்ணறிவு 10. தெய்வப்பொலிவு என்ற பத்துப் பொருத்தம்.
பிறப்பென்பது குடிப்பிறத்தல். அதற்குத்தக்க ஒழுக்கம் குடிமை எனப்படும். அடுத்து அறிவுடையோர் விலக்க வேண்டாதன பத்தும் எவையெவை என்பதனை தொல்காப்பியர் தொகுத்துச் சொல்வார்.  
நிம்பிரி, கொடுமை, வியப்பொடு, புறமொழி,
வன்சொல், பொச்சாப்பு, மடிமையொடு குடிமை
இன்புறல், ஏழமை மறப்போடு, ஒப்புமை
என்றிவை இன்மை என்மனார் புலவர் 
(தொல்.பொருள்- மெய்ப்பாட்டியல் 6 -சூத்திரம் 26) 
நிம்பிரி –  அழுக்காறு
கொடுமை        –  அறனழியப் பிறரைச் சூழும் சூழ்ச்சி.
வியப்பு          –  தம்மைப் பெரியராக நினைத்தல்
புறமொழி – புறங்கூறல்
வன்சொல் — கடும்சொல்
பொச்சாப்பு –   சோர்வு
மடிமை –  முயற்சியின்மை
குடிமை இன்புறல் – தன் குலத்தினாலும் தன் குடிப்பிறப்பினாலும் தம்மை மதித்து 
இன்புறல்
ஏழமை மறப்போடு – பணிவுடமையை மறத்தல்
   ஒப்புமை – ஒப்பிட்டு நோக்கல் 
தொல்காப்பியப் பொருளதிகாரம் ஒன்பது இயல்களில் முதல் ஆறு இயல்களும் அகத்திணை, புறத்திணை பற்றி விரித்துக் கூறுகின்றன. தமிழ்மொழியின் இலக்கணச் சிறப்பையும்,தமிழர்களின் பண்பாடு, நாகரிகச் சிறப்புக்களையும் ஒல்காப்புகழ் தொல்காப்பியம் இலக்கிய நயத்தோடு விரிவாக எடுத்துக் கூறுகிறது. படித்துப் பொருள் கொள்வது அருமையாக இருந்தாலும் தொல்காப்பிய உரைகளின்  துணையோடு அதனைப் படித்து மகிழலாம்.  


7. சங்க காலத் திருமணம்
 
தமிழினம் தொன்மை வாய்ந்த இனம். தமிழ்மொழி இன்று உயிர்த் துடிப்போடுள்ள உலக மொழிகளில், மிகப் பழமையான மொழிகளில் தமிழ்மொழியும் ஒன்று. தமிழ்; மொழிக்கு இருக்கும் இலக்கிய வளம் ஏனைய மொழி இலக்கியங்களைவிடச் சிறந்தது. உயர்வானது. இந்தியருள் தமிழர் மொழியாலும், நாகரிகத்தினாலும் சிறந்தவர் என்பது மொழி ஆராய்ச்சியாலும், அகழ்வாராய்ச்சியாலும் நிறுவப்பட்ட உண்மைகளாகும்.

கல்வியில் சிறந்த தமிழ்நாடு -புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு …
வள்ளுவன் தன்னை உலகினிக்கே -தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு- நெஞ்சை
யள்ளும் சிலப்பதிகார மென்றோர்- மணி
யாரம் படைத்த தமிழ்நாடு

என்று மகாகவி பாரதியார் போற்றிப் பாடுவார்.

ஆனால் அவரே தன் காலத்துத் தமிழர்கள் தங்கள் பழம் பெருமையையும் புகழையும் தெரியாது நாமமது தமிழராய் இருப்பதையிட்டுக் கழிவிரக்கப்படுவார்.

சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்
தெய்வ வள்ளுவன் வான்மறை கண்டதும்
பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள்
பாரளித்ததும், தர்மம் வளர்த்ததும்
முன்னர் நாடு திகழ்ந்த பெருமையும்
மூண்டிருக்குமிந் நாளின் இகழ்ச்சியும்
அன்ன யாவும் அறிந்திலர் பாரதத்
தாங்கிலம்பயில் பள்ளியுட் போகுநர்!

ஒவ்வொரு இனத்திற்கும் ஒவ்வொரு காலம் பொற்காலமாகத் திகழ்ந்திருக்கிறது. தமிழினத்தைப் பொறுத்தளவில் சங்ககாலமே தமிழரது பொற்காலமாகும். பாரதியார் வார்த்தையில் கூறவேண்டும் என்றால் உண்மை இது வெறும்புகழ்ச்சி இல்லை.

முடியுடை வேந்தர்கள் மூவரும் கொற்றம் வைத்து சீரோடும் சிறப்போடும், பேரோடும் புகழோடும், அறத்தோடும் மறத்தோடும் பாராண்ட காலம் அது.
சங்க இலக்கியங்களான எட்டுத் தொகை, பத்துப்பாட்டு, பதிணென்கீழ்க்கணக்கு நூல்கள் தமிழரின் ஒப்பற்ற நாகரிகச் சிறப்புக்கு சான்று பகருவன.

கள்ளையும் தீயையும் சேர்த்து- நல்ல காற்றையும் வானவெளியையும் சேர்த்துத் தௌ;ளு தமிழ்ப் புலவோர் செய்த தீஞ்சுவைக் காவியங்களான ஐம்பெரும் காப்பியங்கள் தமிழ் அன்னையின் புகழை திக்கெட்டும்மணம்வீசிப் பரப்பின.

காலில் சிலம்பு, இடையில் மேகலை, காதில் குண்டலம், கையில் வளை, மார்பில் சிந்தாமணி அவளின் இயற்கை அழகுக்கு அழகு சேர்த்தன.

தமிழரின் மொழி வேறு, கலை வேறு, வாழ்க்கை முறை வேறு. தமிழர் ஆரியரின் ( வடமொழியாளரின்) நின்று முற்றிலும் வேறு பட்டவர் என்பது ஆராய்ச்சியால் போந்த உண்மை. பண்டைச் சங்க இலக்கியங்கள் இதற்கு சான்று பகருகின்றன.

இடைக்காலத்தில் தமிழ்மரபுக்கு மாறான வாழ்க்கைமுறை தமிழரிடம் புகுந்து விட்டது. தமிழரின் பழக்க வழக்கங்கள் மாறின. மணமுறை மாறிவிட்டது. பிற சடங்குகள் பெருகின. இவற்றின் பயனாக இன்றுள்ள தமிழர் நாமமது தமிழராக இருக்கின்றாரே தவிர மெய்த் தமிழராக -சங்ககால தமிழர்தம் வழித்தோன்றலாக இல்லை. இதனை நாம் ஒத்துக்கொண்டே ஆகவேண்டும்.

நாம் தாய்மொழியைப் போற்றாது விட்டோம். தமிழ்க் கலையை வளர்க்காது விட்டோம். தமிழினத்தின் மரபைக் காவாது விட்டோம். வடமொழிக்கு அடிமையானோம். எனவேதான் வீழ்ச்சியுற்ற தமிழகத்தில் மீண்டும் எழுச்சி வேண்டும், விசையொடிந்த தேகத்தில் வன்மை வேண்டும், சூழ்ச்சிதனை வஞ்சகத்தை பொறாமைதன்னைத் தொகையாக எதிர் நிறுத்தித் தூள் தூளாக்கும் காழ்ச் சிந்தை மறச் செயல்கள் மிகவும் வேண்டும் என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் முழங்குவார்.

வீழ்ச்சியுற்ற தமிழகத்தில் மீண்டும் எழுச்சி வேண்டும்!
விசை ஒடிந்த தேகத்தில் வன்மை வேண்டும்!
சூழ்ச்சிதனை வஞ்சகத்தைப் பொறாமை தன்னைத்
தொகையாக எதிர்நிறுத்தித் தூள் தூளாக்கும்
காழ்ச்சிந்தை, மறச் செயல்கள் மிகவும் வேண்டும்!
கடல்போல் செந்தமிழைப் பெருக்க வேண்டும்!
கீழ்ச் செயல்கள் விட வேண்டும்! இராவணன்தன்
கீர்த்தி சொல்லி அவன் நாமம் வாழ்த்த வேண்டும்!         (பாரதிதாசன் கவிதைகள்)

பாவேந்தர் பாரதிதாசனின் ஆசையை இன்று தமிழீழம்தான் செயல்படுத்தி நிறைவு செய்து வருகிறது. தமிழகம் பாரதி, பாரதிதாசன் காலத்திலேயே இன்றும் இருக்கிறது.

இன்றைய தமிழரின் மணமுறை பண்டைத் தமிழர் மரபுக்கு முற்றும் மாறானாதாக இருக்கிறது. இதனைத் தமிழ் இலக்கியச் சான்று கொண்டு காட்டலாம்.

அன்றைய தமிழருடைய திருமணம் எளிமையாக நிகழ்ந்தது. அதில் சடங்குகள் எதுவும் இல்லை. எரியோம்புதல் இல்லை. தீவலம் வருதல் இல்லை. அருந்ததி பார்த்தல் இல்லை. புரோகிதர் இல்லை.

அகநாநூறு எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. அதில் உள்ள 400 பாடல்கள் வௌ;வேறு காலத்தில் வெவ்வேறு புலவர்களால் பாடப்பட்டவை. இதில் காணப்படும் இரண்டு பாடல்கள் பழந்தமிழரின் திருமணமுறையை வர்ணிக்கின்றன. அவற்றுள் பாடல் 86 நல்லாவூர் கிழார் என்ற செந்தமிழ்ப் புலவர் பாடிய பாடல். மணமகன் தனக்கு முன்பு நிகழ்ந்த திருமணத்தைக் கூறுவதாகப் பாடப்பெற்றதாகும். இதனில் கூறப் பெறும் திருமணமுறையைக் காண்போம்.

உழுந்துதலைப் பெய்த கொழுந்கனி மிதவை
பெருஞ்சோற் றமலை நிற்ப நிரைகால்
தண்பெரும் பந்தர்த் தருமணல் ஞெமரி
மனைவிளக் குறுத்து மாலை தொடரிக்
கனையிருள் அகன்று கவின் பெறு காலைக்
கோள்கால் நீங்கிய கொடுவெண் திங்கள்
கேடில் விழப்புகழ் நாடலை வந்தென
வுச்சிக் குடந்தர் புத்தகல் மண்டையர்
பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தரப்
புதல்வற் பயந்த திதலையவ் வயிற்று
வாலிழை மகளிர் நால்வர் கூடிக்
‘கற்பினின் வாழாஅ நற்பல வுதவிப்
பெற்றோற் பெட்கும் பிணையை ஆகென
நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி
பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
வதுவை நன்மணம் கழிந்த பின்றைக்
கல்லென் சும்மையர் ஞெரேரெனப் புகுதந்து
‘பேரில் கிழத்தி யாகென’ தமர் தர
ஓரில் கூட்டிய வுடன்புணர் கங்குற்
கொடும்புறம் வளைஇக் கோடிக் கலிங்கத்
தொடுங்கினள் கிடந்த வோர்புறந் தமீஇ
முயங்கல் விருப்பொடு முகம்புதை திறப்ப
வஞ்சினள் உயிர்த்த காலை யாழநின்
நெஞ்சம் படர்ந்த தெஞ்சா துரையென
வின்னகை யிருக்கைப் பின்யான் வினவலிற்
செஞ்சூட் டொண்குழை வண்காது துயல்வர
அகமலி யுவகைய ளாகி முகனிகுத்
தொய்யென விறைஞ்சி யோளே மாவின்
மடங்கொண் மதைஇய நோக்கின்
ஒடுங்கீ தோதி மாஅ யோளே.                   (அகநானூறு பாடல் 86)

கனையிருள் அகன்ற – பூர்வபக்கத்தையுடைய காலை.
கொடும் புறம்             – நாணத்தால் வளைந்த உடம்பு.
சதுர்த்தியறை             – நான்காம் நாள் பள்ளியறை.
மதைஇய நோக்கு     – செருக்கின பார்வை

‘எங்கள் திருமணநாளன்று உழுந்தம் பருப்புடன் கூட்டிச் சமைத்த, பக்குவமாகக் குழைந்த பொங்கலோடு, மலைபோல் குவிந்த பெருஞ் சோற்றினை உண்பவர்கள் கூட்டம் நிறைந்திருந்தது.

வரிசையாக கால்களை நட்டுக் குளிர்ந்த மணப் பந்தல் முழுதும் வெளியிலிருந்து கொண்டுவந்த வெண்மணல் பரப்பப் பட்டிருந்தது.

மனையில் விளக்கு ஏற்றி மலர் மாலைகளை பந்தல் முழுதும் நெருக்கமாகத் தொங்க விட்டு மிகஅழகாக அலங்கரித்துள்ளார்கள். திருமண வீட்டில் மனைவிளக்குகளை ஏற்றி வைத்து ஒளிபெறச் செய்துள்ளார்கள்.

புகழினையுடைய திங்களுடன் கூடிய உரோகிணி நன்னாள் குற்றமற்றதும் வாழ்விற்கு நல்லது பயக்கும் அடர்ந்த இருள் நீங்கி, விடியல் தொடங்கும் வனப்பு மிகு நேரத்தில் திருமண விழா தொடங்குகிறது.

தலையில் நன்நீர்க் குடத்தினைத் தாங்கியும், கையில் அகன்ற பாத்திரத்தை ஏந்திக் கொண்டும், திருமணத்தை செய்து வைக்கும், கலகலப்புடன் கூடிய முதிய மங்கல வாழ்வரசியர் நீர்க் குடங்களை முன்னேயும் பின்னேயும் முறைமுறையாகத் தந்திட மணமகளை நன் நீராட்டினர்.

நல்ல மக்களைப் பெற்று அடி வயிற்றில் வரி வரியாகத் தழும்புகள் கொண்ட மணிவயிறு வாய்ந்த மங்கல மகளிர் நால்வர் தூய ஆடைகளையும் அணிகளையும் அணிந்து கூடிநின்ற மணமகளிடம் ‘உன்னை அடைந்த கணவனை விரும்பிக் கூடிக் ‘கற்பு நெறியின்றும் தவறாமல் நல்லறங்களைச் செய்து, கணவன் விரும்பத்தக்க மனைவியாhக அவனை வாழ்நாள் முழுதும் நன்கு பேணிக் காத்து வாழும் எண்ணத்தைக் கைக் கொண்டு வாழ்வாயாக!’

என்று நீருடன் குளிர்ந்த இதழ்கள் உள்ள பூக்களையும் புதிய நெல்லையும் தூவி வாழ்த்தியதால் மணமளின் அடர்த்தியான கரிய கூந்தலில் அவை தோற்றமளிக்க, திருமணம் இனிதே நிகழ்கிறது.

அதன்பின் ஆர்வத்துடனும், ஆரவாரத்துடனும் சூழ்ந்த உறவினர் ‘இன்று முதல் நீயும் பெரிய மனைக் கிழத்தி ஆகிவிட்டாய்’ என்று கேலி பேசி மணமகளுக்கு கோடியுடுத்தி மெல்லிய அலங்காரங்களைச் செய்து, வனப்புடன் கூடிய முதலிரவு அறைக்குள் உடன் கூடிய புணர்ச்சிக்குரிய அன்றிரவே அவளை அனுப்பி வைத்தனர். அவ்வறைக்குள் நுழையும் மணமகள் உடுத்திய புதிய புடவைக்குள் தன்னை ஒடுக்கிக் கொண்டு, தன் இனிய கணவன் இருக்கும் இடம் நோக்கிச் செல்கின்றாள்.

அப்போது அவள் புத்தாடையில் ஒடுங்கி முகம் புதைத்துக் கிடந்தாள். அவளைத் தழுவும் விருப்பத்தோடு முகத்தை மூடிய துணியைச் சற்றே விலக்க அவள் அதற்கு அஞ்சி பெருமூச்சு விட்டாள். நடுங்கி ஒடுங்கினாள். ‘ஏன் பயந்தனை, உன் மனதில் உள்ளதை உள்ளவாறு என்னிடம் கூறு’ என வினாவினேன்.

அப்போது மானைப்போல் மடமை கொண்டவளும், செருக்கினையுடைய நோக்கினையுடையவளும், குளிர்ந்த கூந்தலையுடையவளும், மாநிறத்தினை உடையவளுமாகிய மணமகள், அகம் மலர்ந்த மகிழ்ச்சியளாய் முகம் தாழ்த்தி என் காதலி மெலிந்த மடல் கொண்ட காதில் அணிந்திருந்த சிவந்த மணிகள் பதித்த அழகிய குழைகள் அசைய விரைந்து வந்து தனக்குரியவனை வணங்கினாள். ஆதலால் அவள் எக்காலத்தும் என்பால் அன்புடையவள். அதனை நீ அறியாய்” என்று தோழியிடம் கூறினான்.

(பதவுரை)
உழுந்து                                 – பருப்பு
களிமிதவை                         – குழைதலையுடைய கும்மாயம்
கோள்                                  – அசுப கிரகங்கள்
கால்                                     – இடம், சகடம்
திங்களையுடைய நாள்      – திருமண நாள்
பொது – திருமணம். எல்லாரும் புகுதற்கு யோக்கிய மாதலால் அதனைச் செய்கிற ஆரவாத்தினையுடைய செவ்விப் பெண்டிர்
முன்னவும் பின்னவும் – முற்படக் கொடுப்பனவும் பிற்படக் கொடுப்பனவும் முறை முறையாகக் கொடுக்க
புதல்வர் பயந்த                     – பிள்ளைகளைப் பெற்ற மகளிர்
அலரி                                      – பூ
வதுமை நன்மணம்             – வதுவைத் திருமணம்
ஓரில்                                     – சதுர்த்தியறை
உடன்புணர்தல்                   – கூடப்புணர்கிற
நெஞ்சம் நினைந்தது எஞ்சாதுரை                   – மறையாதுரை
கொடும்புறம்                                                     – நாணத்தால் வளைந்த உடம்பு
சதுர்த்தியறை                                                     – நான்காம் நாள் பள்ளியறை

சங்ககாலத் தமிழரது திருமண நெறியை பாடலில் படம்பிடித்து வைத்த புலவர் நல்லாவூர் கிழார் அவர்களுக்கு நாம் நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளோம். அவரது சொல்லோவியத்தைப் படிக்கும்போது எமது முன்னோரது நாகரிகச் சிறப்பை, பகுத்தறிவை எண்ணி மனம் பூரிப்படைகிறது.

புலவர் நல்லாவூர் கிழார் காதலால் பிணைக்கப்பட்ட தலைவன் – தலைவியது முதல் இரவை எப்படி மிக நாகரீகமாக, மிக நளினமாக தலைவன் கூற்றாகச் எடுத்துச் சொல்கிறார் என்பதும் எண்ணி மகிழத்தக்கது.

இந்த அகப்பாடல் புணர்தலைக் குறிப்பதால் முதலில் சொன்ன மருதத் திணைக்கு உரிய உரிப்பொருளாகும்.

வீட்டு முற்றத்தில் போடப்படும் திருமணப் பந்தலில் வெண்மணல் பரப்புவது, பூச்சரம் கட்டுவது இன்றும் யாழ்ப்பாணத்தில் வழக்கில் இருந்து வருவது எண்ணி வியக்கத் தக்கது.

மகமகளை வாழ்த்தும் போது ‘இன்று முதல் நீயும் பெரிய மனக்கிழத்தி ஆகிவிட்டாய்’ (‘பேரில் கிழத்தி ஆகுஎனத்’) இதில் வரும் பெரிய மனக்கிழத்தி என்ற சொல்லாட்சியை இன்றும் ‘பெரிய பிள்ளையாகி விட்டாள்’ என்று பெண் பூப்பெய்தும் போது சொல்லும் வழக்கில் காணலாம்.

அகநானூற்றின் மற்றைய பாடலையும் இப்போது பார்ப்போம். இந்தப் பாடலைப் பாடியவர் விற்றூற்று மூதெய்யினார் என்ற சங்கப் புலவர். இதில் சொல்லப்படும் மணச் செய்தியும் மணமகன் சொல்வதாகவே புனையப்பட்டுள்ளது.

மைப்புறப் புழுக்கி னெய்க்கனி வெண்சோறு
வரையா வண்மையொடு புரையோர்ப் பேணிப்
புள்ளுப் புணர்ந் தினிய வாகத் தௌ;ளொளி
அங்கண் இருவிசும்பு விளங்கத் திங்கள்
சகடம் மண்டிய துகடீர் கூட்டத்துக்;
கடிநகர் புனைந்து கடவுள் பேணிப்
படுமண முழவொடு பரூஉப்பணை யிமிழ
வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்றுப்
பூக்கணும் இமையார் நோக்குபு மறைய
மென்பூ வாகைப் புன்புறக் கவட்டிலை
பழங்கன்று கறிக்கும் பயம்பம லறுகை
தழங்குரல் வானின் தலைப்பெயற் கீன்ற
மண்ணுமணி யன்ன தாயிதழ்ப் பாவை
தண்ணறு முகையொடு வெண்ணூல் சூட்டித்
தூவுடைப் பொலிந்து மேவரத் துவன்றி
மழைபட் டன்ன மணமல்லி பந்தர்
இழையணி சிறப்பிற் பெயர்வியர்ப் பாற்றித்
தமர்நமக் கீந்த தலைநாள் இரவில்
நுவர் நீங்கு கற்பினெம் முயிருடம் படுவி
முருங்காக் கலிங்க முழுவதும் வளைஇப்
பெரும் புழுக் குற்றநின் பிறை நுதல் குறுவியர்
உறுவளி யாற்றச் சிறுவரை திறவென
வார்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்
உறைகழி சாளின் உருவு பெயர்ந் திமைப்ப
மறைதிற னறியா ளாகிப் பையென
நாணினள் இறைஞ்சி யோளே பேணிப்
பரூஉப்பகை யாம்பற் குரூஉத் தொடை நீவிச்
சுரும்பிமிர் ஆய்மலர் வேய்ந்த
இரும்பல் கூந்தல் இருண்மறை யொளித்தே.            (அகநானூறு பாடல் 136)

இதன் பொழிப்புரை பின்வருமாறு.
செம்மறியாட்டின் பின் சந்தினை ஆக்கிய கறியொடு நெய்யாளாய வெளிய சோற்றினை இவ்வளவினதென்று கூறப்படாத வண்மையுடனே ஆன்றோரை விரும்பியளித்து வண்டுகள் வந்து கூடி இனிய இசையெழுப்ப அழகிய இடமகன்ற ஆகாயம் விளக்கமடையத் திங்கள் உரோகிணியிற் சேர்தலால் தெளிந்த ஒளியுடைய குற்றந்தீருங் கூடுதலுடைய நாளிலேகாவலையுடைய மாளிகையை அலங்கரித்து வழிபடு கடவுளை வணங்கி மார்ச்சனையமைந்த குடமுழவும்,

மத்தளமும் பருத்த பலவாச்சியமும் ஒலிப்ப வதுவை நிமித்தமாக அலங்கரிக்கப் பெற்ற தாதர்கள் விருப்புற்றுப் பூப்போலும் கண்கள் இமையாமல் நோக்கி ஒதுங்க, மெல்லிய பூவையுடைய அறுகம் புல்லின் ஒலிக்கும் இடிக் குரலுடைய மேகத்தின் முதற் பெயல் பெய்து விட்டவுடன் முளைத்து வளர்ந்த கடைந்த நீலமணியன்ன பெரிய இதழ்களை உடைய பாவை போன்ற பூவினது குளிர்ந்த நறிய அரும்புகளுடனே சேர வெள்ளிய நூலாற் கட்டியதனைச் சூட்டி தூய ஆடையை உடுத்தி பொருந்துதல் வர நெருங்கி வந்து வெளியே மேகத்தைப் பரப்பினால் ஒத்த மணல் பரப்பிய பந்தரின் கண்ணே கலன்களை நெருங்க அணிந்த சிறப்பினால் உண்டாகும் வியர்வையைப் போக்கி இவளை நோக்கி வெறுப்பொழிந்த கற்பினையுடைய எமது உயிருடன் பொருந்திய பெண்ணே!

வளையாத புதிய ஆடை முழுவதையும் உடுத்திக் கொண்டு பெரிய புழுக்கத்தையுற்ற நின் பிறை போன்ற நெற்றியின் கட்டோன்றிய வியர்ப்பை மிக்க காற்றினால் ஆற்றவேண்டிச் சிறிது பொழுது திறப்பாயாக, என்ற ஆசையுற்ற நெஞ்சுடனே இவள் போர்த்திருந்த போர்வையை நான் வாங்குவதால் உடனே உறையின்று கழித்த வாளைப்போலக் கண் மருண்டு இமைப்ப அதனை மறைக்கும் திறத்தை அறியாளாய் விருப்ப மிகுத்துப் பருத்து எதிர் எதிர் பிணைத்த ஆம்பலின் அழகிய மாலையை நீக்கி, ஒலிக்கின்ற அழகிய மலரைச் சூடிய பெரிய பலவாகிய கூந்தலையுடையவள் இருளின் கண்ணே ஒதுங்கி ஒளித்து நின்று மெல்ல நாணமுற்றுத் தலை கவிழ்ந்து நின்றவள், இப்போது ஊடா நின்றனள் காண்.

(பதவுரை)

மைப்புறப் புழுக்கின்             – கருகப்புழுக்கின தூய நெய்
பரூப்பணை                            – பெரிய முரசு ஒலிக்க
சகடம்                                     – உரோகிணி
முழவு                                      – மத்தளம்
பயம்பு                                    – குழி
அமலுதல்                               – நெருங்குதல்
விதுப்பு                                   – ஆசை
மேவர                                     – பொருந்துதல் வர
துவன்றி                                  – நெருங்கி
படுவி                                      – விளி
முருங்கா                                  – வளையாத
உருவு                                      – கண்ணின் வடிவு
ஒய்யென                                 – மெல்ல

தொல்காப்பியத்துக்கு உரைசெய்த நர்ச்சினார்க்கினியர் அகநாநூறு 86ம் பாடலையும், 136ம்பாடலையும் –

கற்பு எனப்படுவது கரணமொடு புணரக்
கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுமே
பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப

என்னும் கற்பியல் சூத்திரங்களுக்கு எடுத்துக் காட்டாகக் காட்டியுள்ளார். காட்டி ‘இதனுள் வதுவைக்கு ஏற்ற கரணங்கள் நிகழ்ந்தவாறும் தமர் கொடுத்தவாறும் காண்க. சுற்றம் சூழ்ந்து நின்றது. தமர் அறிய மணவறையை மணமக்கள் சேர்ந்தனர்’ எனக் கூறியுள்ளார்.
முன்னர் கூறியவாறு இந்த இரண்டு சங்க காலத் திருமணங்களிலும் இன்றைய திருமணங்களில் உள்ள –

(1) பொருள் புரியாத வட மொழி மந்திரங்கள் இல்லை.
(2) புரோகிதர் இல்லை.
(3) எரி ஓம்பல் இல்லை.
(4) தீவலம் இல்லை.
(5) அம்மி மிதித்தல் இல்லை.
(6) அருந்ததி காட்டல் இல்லை.
(7) கோத்திரம் கூறல் முதலியன இல்லை.

இவ்விரு திருமணங்களைப் பற்றிக் கூறுமிடத்துக் காலம் சென்ற சரித்திரப் பேராசிரியர் திரு. பி.டி.சீனிவாச அய்யங்கார் அவர்கள் ‘ இப்பண்டைத் திருமண நிகழ்ச்சிகளில் எரிவளர்த்தல் இல்லை, தீவலம் இல்லை, இது முற்றும் தமிழர்க்கே உரிய திருமணம்,” எனக்குறித்திருத்தல் மகிழத்தக்கது.

தொல்காப்பிய வழியில் சங்;க இலக்கியம் உணர்த்தும் அகப் புறக் கோட்பாடு உலக இலக்கிய கோட்பாட்டுக்கு தமிழர்கள் வழங்கிய முதிசம் என்று கூறலாம்.

காதலின் பல்வேறு உணர்ச்சிகளை உரிப்பொருளாக வைத்துக் கொண்டு அவற்றிற்குப் பின்னணியாக இயற்கைக் காட்சிகளையும், நிலவகைகளையும், காலங்களையும்; அமைத்து காலத்தை வென்று நிற்கும் இலக்கியங்களை சங்கப் புலவர்கள் படைத்துள்ளார்கள். முதற் பொருள் இல்லாமலும், கருப்பொருள் இல்லாமலும் பாடல்கள் இருக்கலாம். ஆனால் உரிப்பொருள் இல்லாது பாடல்கள் இல்லை.

உள்ளுறை உவமம் என்ற உத்தியை சங்கப் புலவர்கள் கையாண்டுள்ளார்கள். வர்ணனை இயற்கைக் காட்சியாக இருக்கும், ஆனால் அடிப்படையில் அது தலைவன் – தலைவி இருவருக்கும் இடையில் ஏற்படும் உறவைத்தான் மறைமுகமாக வர்ணிக்கும்.

சங்க இலக்கியம் உலகின் தலைசிறந்த இலக்கியங்களோடு ஒப்பிட்டு ‘ஒப்புமையில்லாதது’ எனப் பாராட்டப்பட்டுள்ளது. பிரித்தானிய கலைக்களஞ்சியம் (Encyclopaedia of Britannica) தமிழ் இலக்கிய வளம் நிறைந்த மொழி என்று புகழ்ந்து பேசுகிறது.

In the Tamil sangam Literature, the poems are classified by theme into ‘akam’ and ‘puram’. Both the akam and the puram had well defined genres called ‘thinais’ that  paralleled one another, the same poets, for example Paranar and Kapilar wrote great  poems in both genres. Each landscape a repertoire of images anything in it may evokes a special feeling. The natural scene implicitly evokes the human scene. For example bee-making honey out of Kurinji flowers evokes the love of union. Not only is the poet’s language Tamil, but the landscapes, the personae and the appropriate moods and situations formulate the realities of the Tamil world into a code of symbols. For some five or six generations, the Sangam poets spoke this common language of symbols creating a body of lyrical poetry probably unequalled in passion, maturity and delicacy by anything in any Indian literature.   

8. திருமண உறவுமுறை

சங்ககாலத் திருமணங்கள் தந்தை வழியிலும், தாய் வழியிலும் நடைபெற்றது. மாமன் – மாமி மகளை மணக்கும் வழக்கம் நெடுங்காலமாக இருந்து வந்துள்ளது. தமிழ் நாட்டில் மாமன்-மாமி வழக்கோடு தாய் மாமனை மணக்கும் வழக்கமும் இருக்கிறது. மாமன், மாமி என்ற சொற்கள் இளங்கோ அடிகளாலும், பல்லவ மன்னர் காலத்து ஆண்டாளாலும், நாயன்மார்களாலும், கையாளப்பட்டுள்ளது.

திருநாவுக்கரசர் ‘அப்பன்நீ அம்மைநீ ஐயனும்நீ, அன்புடைய மாமனும்நீ மாமியும்நீ, ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ’ எனப் பாடுகிறார்.
சங்க காலத்திலும் இம்மரபு இருந்திருக்கிறது. ஆனால் தொல்காப்பியமும் சங்க இலக்கியமும் நேரிடையாக இந்த உறவுமுறைபற்றிக் கூறவில்லை. குறுந்தொகையில் உள்ள பாடலொன்று தந்தை, தாய் உறவுடையாரே திருமணம் செய்து கொள்ளல்வழக்கம் என்பதை எதிர்மறையில் சான்று பகருகிறது.

அந்த இனிய பாடல் இது.

யாயும் ஞாயும் யாரா கியரோ!
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்!
யானும் நீயும் எவ்வழி அறிதும்!
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே                   (குறுந்தொகை – பாடல் 40)

என் தாயும் உன்தாயும் யார் யாரோ?
என் தந்தையும் நின் தந்தையும் எவ்வழிpயில் உறவுடையார்?
நானும் நீயும் இப்பொழுது கண்டு காரலானதன்றி
வேறு எவ்வழியில் முன்னர் அறிந்துள்ளோம்?
ஆயினும் நாம் கண்ட அளவிலே நமது நெஞ்சங்கள்
செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர்
அம்மண்ணின் நிறத்துடனும் மணத்துடனும்
பிரிக்க முடியாதவாறு கந்து விடுவது போன்று
இரண்டறக் கலந்து ஒன்றாகவே ஆகிவிட்டன வன்றோ!

பதவுரை

யாயும்                                – என்னுடைய தாயும்
ஞாயும்                               – உன்னுடைய தாயும்
யார் ஆகியர்                     – எந்த வகையில் உறவினர் ஆவார்?
எந்தையும்                         – என்னுடைய தந்தையும்
நுந்தையும்                         – உன்னுடைய தந்தையும்
எம் முறை கேளிர்             – எந்த முறையிலே உறவினர்?
யானும் நீயும்                   – இப்பொழுது ஒன்று சேர்ந்திருக்கும் நானும் நீயும்
எவ்வழி அறிதும்              – இதற்கு முன்னர் எந்த இடத்தில் பார்த்துப் பழகி அறிந்திருக்கிறோம்?
செம்புலம்                          – செம்பாடு (செம்மண் பூமி)
பெயல்நீர் போல              – பெய்த மழைத் தண்ணீரைப் போல
அன்பு உடை நெஞ்சம்     – அன்புள்ள நமது உள்ளம்
தாம் கலந்தனவே             – தாமாக ஒன்றோடு ஒன்று கலந்து விட்டன.

இந்தப் பாடலைப் பாடிய புலவர் பெயர் செம்புலப் பெயல் நீரார். இது அவரது இயற்பெயரல்ல. காரணப் பெயர். பாட்டெழுதிய புலவரது இயற்பெயர் தெரியாதவிடத்து அவர் பாடிய பாடலில் வருகிற பாட்டின் அடி, பெரும்பாலும் உவமை ஒன்றினால், அவர் அழைக்கப்படுவது மரபு.

தலைவனும் தலைவியும் சந்தித்துக் கூடிய பின்னர், இவன் தம்மைப் பிரிவானோ என்று எண்ணி ஏங்குகிறாள் தலைவி. அவள் உள்ளக் குறிப்பை உணர்ந்த தலைவன் அவளுக்கு ‘செந்நிலத்திலே பெய்த மழைத் தண்ணீர் எப்படி அதனோடு கலந்து விட்டதோ அந்தத் தண்ணீரைப் போல அன்பு நிறைந்த நம் உள்ளங்கள் இரண்டும் தாமாகவே கலந்து விட்டன. ஆதலால் இனிப் பிரிய மாட்டோம்’ என உறுதி மொழி பகர்கிறான். திணைவகையால் இது குறிஞ்சித்திணை. குறுந்தொகைப் பாடல்கள் நாநூறிலும் இது ஒரு ஒளி விளக்கு. பண்டைத் தமிழரின் நாகரிகச் சிறப்புக்குப் கட்டியம் கூறும் பாடல்.

சங்ககாலத்து சான்றோர் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தார்கள். நிலத்தை வைத்தே தெய்வத்தைக் குறிப்பிட்டார்கள். நிலத்தை வைத்தே ஒழுக்கத்தை வரையறுத்தார்கள். புலவர்கள் இயற்கை நிகழ்வுகளையே உவமானமாகக் கையாண்டார்கள். அதீத கற்பனை இருக்கவில்லை. தெய்வ நம்பிக்கை இருந்தது. ஆனால் மூட நம்பிக்கை இருக்கவில்லை. இல்லறமே எல்லா அறங்களிலும் சிறந்த அறம் என்றார்கள். அறம் அவர்களின் வாழ்க்கையின் ஒரு கூறாக இல்லாமல் வாழ்க்கை முழுவதுமே அறமாக இருந்தது.

சிலப்பதிகாரம் தமிழில் தோன்றிய முதல் காப்பியமாகும். ஐம்பெரும் காப்பியங்களில் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என்ற சிறப்பைப் பெறுகின்றன. காப்பிய அமைப்பில் மட்டும் அல்லாது இளங்கோவி அடிகளின் சிலப்பதிகாரம் கோவலன் -கண்ணகி, கோவலன் உள்ளத்தைக் கொள்ளைகொண்ட ஆடலரசி மாதவி இவர்களைப்பற்றிப் பாட, மணிமேகலை கோவலன் -மாதவியின் காதலில் கனிந்த மகள் மணிமேகலைபற்றி சாத்தனாரின் மணிமேகலை பேசும்.

காப்பியம் என்பது தூய தமிழ் சொல். அது வட சொல்லான ‘காவ்யா’ என்றதன் திரிபல்ல.பாப்பியம், காப்பியாறு, காப்பியக்குடி என்பன முறையே நூல், ஆறு, குடிப்பெயர்களைக் குறிப்பன.

சிலப்பதிகாரத்துக்கு முத்தமிழ்க் காப்பியம் என்ற சிறப்புப் பெயரும் உண்டு. காப்பியத்தில் உரைநடை, இசைப் பாடல்கள், நாடகப்பாங்கு மூன்றம் இருப்பதால் இப்பெயர் பெற்றது. இன்னும் ஒரு சிறப்பு என்னவென்றால் ‘முடிகெழு வேந்தர் மூவர்க்குமுரியது அடிகள் நீரே அருளுக’ என்றதற்கு ஒப்ப முடியுடை மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்களையும், வஞ்சி, புகார், மதுரையாகிய தலை நகரங்களையும் சிலப்பதிகாரம் நடுநிலைமையுடன் புகழ்ந்து பாடும். காப்பியத்தின் தலைவன் – தலைவி (கோவலன் – கண்ணகி) பெருங்குடிப் பிறந்த மக்களாதலால் சிலப்பதிகாரம் குடிமக்கள் காப்பியம் என்ற விருதையும் பெறுகிறது.

தொல்காப்பியர் மெய்ப்பாட்டியலில் எட்டுவகை மெய்ப்பாடுகளை வரையறை செய்து அவற்றிற்கு இலக்கணம் இயம்புவார்.

நகையே, அழுகை, இளிவரல், மருட்கை,
அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை, என்று
அப் பால் எட்டே மெய்ப்பாடு’ என்ப                     (தொல்.பொருள் – மெய். 6 சூத்திரம் 3)

பதவுரை
நகை                         – சிரிப்பு
அழுகை                     – அவலம்
இளிவரல்                 – இழிபு
மருட்கை                  – வியப்பு
அச்சம்                       – பயம்
பெருமிதம்                 – வீரம்
வெகுளி                    – சினம்
உவகை                    – மகிழ்ச்சி

இந்த மெய்ப்பாடுகள் ஒவ்வொன்றையும் நான்காகப் பெருக்கி அவற்றின் விரிவு முப்பத்திரண்டு என்று தொல்காப்பியம் கூறும்.

இந்த முப்பத்திரண்டு மெய்ப்பாட்டுச் சுவைகளை சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் அற்புதமாக அமைத்துள்ளார்.

சங்ககாலப் பாடல்கள் புலவர்கள் தம்போன்ற புலவர்களுக்கு எழுதிய இலக்கியம் என்ற தோற்றத்தைக் கொடுக்கிறது. ஏட்டில் எழுத்தாணி கொண்டு எழுதியதால் கூற வேண்டியவற்றை சுருக்கமாகவும் இறுக்கமாகவும் எழுத வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இயல்பாகவே இருந்தது. இதன் காரணமாகவே உரையாசிரியர்களின் துணையில்லாமல் சங்கப் பாடல்களை படித்து உணர்வது இயலாத காரியமாகும்.

சிலப்பதிகாரம் இதற்கு பெரிதும் விதிவிலக்கு. கொஞ்சு தமிழில் படிப்போர் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் வண்ணம் இளங்கோ சிலப்பதிகாரம் என்னும் பாட்டுடைச் செய்யுளை படைத்துள்ளார். பாரதியார் சிலப்பதிகாரத்தை ‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ என்னுமோர் ஆரம்’ என்று வர்ணித்தது முற்றிலும் பொருத்தமானதே. தமிழ் இனிமையான மொழி என்பதை ஒப்பிவிப்பதற்கு சிலப்பதிகாரத்தைச் சான்றாகக் காட்டலாம்.

(9) வைதீகத் திருமணம் அறிமுகம்

சங்கம் மருவிய காலத்தில் (கி.பி. 2ம் நூற்றாண்டு) எழுந்த சிலப்பதிகாரத்தில் தமிழர் திருமணம் சங்ககால மரபை மீறி வைதீக நெறிப்படி நடந்தேறியதை முதன் முதலாகப் பார்க்கிறோம்.

சிலப்பதிகாரம் பெண்ணின் பெருமையையும் கற்பின் மாண்பையும் பேச வந்த காப்பியம் என்பதால் இளங்கோ அடிகள் முதலில் கண்ணகியையும் பின்னர் கோவலனையும் அறிமுகம் செய்து வைக்கிறார்.

கண்ணகி புகார் நகரத்து வான்நிகர் வண்கை மாநாய்க்கன் குலக் கொழுந்து. அது போலவே கோவலன் இருநிதிக் கிழவன் மாசாத்துவான் மகன்.
போதில் ஆர் திருவினாள் புகழ் உடை வடிவு என்றும்
தீதுஇலா வடமீனின் திறம் இவள் திறம் என்றும்
மாதாரார் தொழுது ஏத்த வயங்கிய பெரும் குணத்துக்
காதலாள், பெயர் மன்னும் கண்ணகி என்பார் மன்னோ.
(சிலம்பு. மங்கல வாழ்த்துப் பாடல் 25)
இருவரது பெற்றோரும் சேர்ந்து மனமகிழ்வோடு கோவலன் கண்ணகிக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். திருமணப் பந்தலின் அழகு, மறை வழியில் திருமணம் நடந்தமை, திருமணத்துக்கு வந்திருந்த பெண்டிரின் நலன்கள் இவற்றை எல்லாம் கூறி, மகளிர் கோவலன் கண்ணகியை மங்கல நல் அமளியில் ஏற்றியதைக் கூறிப் பின்பு இமயத்தை வென்ற சோழன் பெருமையைக் கூறி மணமக்களை வாழ்த்துகின்றனர்.

இருபெரும் குரவரும் ஒருபெரு நாளால்
மணஅணி காண மகிழ்ந்தனர், மகிந்துழி
யானை எருத்தத்து அணிஇழையார் மேல் இரீஇ
மாநகர்க்கு ஈந்தார் மணம்.

திருமண அறிவிப்பை யானை மேல் அணிகள் பூண்ட மகளிரை ஏற்றி இருத்தி புகார் நகரில் உள்ளோருக்கு மணச் செய்தியை அறிவிக்கின்றனர்.
 

அவ்வழி முரசு இயம்பின, முருடு அதிர்ந்தன, முறை எழுந்தன பணிலம், வெண்குடை தரசு எழுந்தது, ஓர்படி எழுந்தன, அகலுள் மங்கல அணி எழுந்தது
மாலை தாழ் சென்னி வயிர மணித் தூணகத்து
நீலவிதானத்து, நித்திலப் பூம் பந்தர்கீழ்,
வான் ஊர் மதியம் சகடு அணைய வானத்துச்
சாலி ஒரு மீன் தகையாளைக் கோவலன்
மாமுது பார்ப்பான் மறை வழி காட்டிட
தீவலம் செய்வது காண்போர் நோன்பு என்னை!             (சிலம்பு. மங்கல வாழ்த்து 45-53)

பெரிய, முதிர்ச்சியுடைய அந்தணன், வணிகர்க்குரிய மறை நெறிகளின் படி வழிகாட்ட, மணமக்கள் தீவலம் வந்தனர். அக் காட்சியைக் காண்பவர் கண்கள் என்ன நோன்பு செய்தனவோ?!

இதனை அடுத்து மணமக்களை வாழ்த்தி மங்கல அமளி ஏற்றினார்கள். ஏற்றி மணமக்களை வாழ்த்தும்போது பின்னர் கண்ணகிக்கு வர இருக்கும் துன்பத்தை முன்னரே எதிர்மறையில் வாழத்தியோர் வாய்மூலம் இளங்கோவடிகள் கூறிவிடுகிறார்.

காதலன் பிரியாமல், கவவுக்கை ஞெகிழாமல்
தீது அறுக!” என ஏத்தி, சின்மலர் கொடு தூவி
அம் கண் உலகின் அருந்ததி அன்னாளை
மங்கல நல் அமளி ஏற்றினார்.                             (சிலம்பு. மங்கல வாழ்த்து 61-63)

பின்பு சோழன் வாழ்த்தப்படுகிறான்.

தங்கிய
இப்பால் இமயத்து இருத்திய வாள் வேங்கை
உப்பாலைப் பொன்கோட்டு உழையதா, எப்பாலும்
செருமிகு சினவேல் செம்பியன்
ஒரு தனி ஆழி உருட்டுவோன் எனவே.             (சிலம்பு. மங்கல வாழ்த்து 64-68)

‘என்றும் நிறைபெறும் இமயத்தின் இப்பக்கத்தில் பொறித்த சோழனின் புலிக்கொடி, அப்பக்கத்திலலும் இருக்கும்படி மலையைத் திரித்தான், போர்வல்ல சினம் பொருந்திய வேலையுடைய சோழன். தன் ஒப்பற்ற ஆணைச்சக்கரத்தை செலுத்துவானாக’ என – வாழ்த்தினர்.

திருமணமான முதனாள் இரவு கோவலன் கண்ணகியைப் பார்த்து அவளது அழகினை போற்றி உரைக்கும் சிலப்பதிகார வரிகள் வேறு எந்த உலக இலக்கியத்திலும் காணப்படாத சுவை உடையது. புது மணமகன் நெட்டுருச் செய்து வைத்து தனது இல்லக்கிளத்தியைப் பார்த்து அடிக்கடி சொல்ல வேண்டிய பாடல்வரிகள். அது இது.

மாசறு பொன்னே! வலம்புரி முத்தே!
காசறு விரையே! கரும்பே! தேனே!!
அரும்பெறற் பாவாய்! ஆருயிர் மருந்தே!
பெருங்குடி வாணிகன் பெருமட மகளே!
மலையிடப் பிறவா மணியே என்கோ?
அலையிடப் பிறவா அமிழ்தே என்கோ?
யாழிடைப் பிறவா இசையே என்கோ?
தாழ்இருங் கூந்தல் தையால் நின்னை! (சிலம்பு மனையறம்படுத்த காதை 73-80)
குற்றமற்ற பசும்பொன்னே! வலம்புரிச் சங்கிலே பிறந்த முத்துப் போன்றவளே!
குற்றமற்ற விரைபோன்ற மணம் உடையவளே!
கரும்பினும் இனிய சுவையுடையவளே!
தேனினும் இனிமை உடையவளே!
பெறுவதற்கு அருமையான பாவையே!
என் அரிய உயிருக்கு அமிழ்தம் போன்றவளே!
பெருங்குடி வாணிகனின் பெருமை பொருந்திய இளமகளே!
நின்னை
‘மலையில் பிறவாத மணியே’ என்று சொல்வேனோ?
‘அலையிடப் பிறவாத அமிழ்தம்’ என்று அழைப்பேனோ?
‘யாழிடைப் பிறவாத இசையோ’ என்று இயம்புவேனோ?
தாழ்ந்த கருமையான கூந்தலையுடை பெண்ணே!
நின்னை எவ்வாறெல்லாம் சொல்லித்தான் பாராட்டுவேனோ?”
இளங்கோ அடிகள் யாத்த சிலப்பதிகாரம் –
அரசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற்று ஆவதூஉம்
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூம்…

என்ற மூன்று கருத்துக்களை நாட்ட எழுந்த பாட்டுடைச் செய்யுள் ஆகும்.

கண்ணகியை வள்ளுவர் இலக்கணம் சொன்ன ‘தெய்வம் தொழாள் கொழுநற் தொழுதெழுவாள் பெய்யனப் பெய்யும் மழை’ என்றதற்கு அமைய இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில் படைத்துள்ளார். இதனால் கண்ணகியை பலகாலும் பலவாறு புகழ்ந்து பாடியுள்ளார்.

கற்புக் கடம்பூண்ட இத்தெய்வம் அல்லது
பொற்புடைத் தெய்வம் யாம் கண்டிலம்;
எனக் கவுந்தி அடிகள் வாயிலாகவும்
இவளோ, கொங்கச் செல்வி, குடமலை ஆட்டி
தென்தமிழ்ப்பாவை, செய்த தவக் கொழுந்து
ஒருமா மணியாய் உலகிற்கு ஓங்கிய
திருமாமணி எனத் தெய்வம் உற்று உரைப்ப…..
என சாலினி வாயிலாகவும் போற்றிப் புகழ்ந்துள்ளார்.
கோவலனைப் பிரிந்த கண்ணகியை –
அம்செம் சீறடி அணிசிலம்பு ஒழிய
மென்துகில் அல்குல் மேகலை நீங்க
கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்
மங்கல அணியின் பிறிது அணி மகிழாள்
கொடுங்குழை துறந்து படிந்து வீழ் காதினள்
திங்கள் வாள்முகம் சிறு வியர்ப்பு இரியச்
செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்பப்
பவள வாள் நுதல் திலகம் இழப்பத்
மை இரும் கூந்தல் நெய் அணி மறக்கக்
கையறு நெஞ்சத்துக் கண்ணகி அன்றியும் –                             (சிலம்பு. அந்திமாலைச் சிறப்பு 4757)

எனச் சொற்சித்திரம் தீட்டிக் காட்டுவார் இளங்கோ அடிகள். இந்திராவிழாவை அடுத்து கண்ணகி கெட்ட கனாக் காண்கிறாள். அதனைத் தனது தோழி தேவந்திக்குக் கூறுகிறாள். அவள் கண்ணகிக்குத் தேறுதல் கூறுகிறாள்.

காவிரி கடலொடு கலக்கும் இடத்தில் மலருகின்ற நெய்தல் நில அழகிய கடற்கரைச் சோலையில் இரண்டு தடாகங்கள் உள்ளன. அவை சோம குண்டம், சூரிய குண்டம் என அழைக்கப் பெறும். அப் பொய்கைகளில் மூழ்கி மன்மதன் கோயில் சென்று தொழுதால் கணவரொடு மகிழ்வாக இருப்பர் மகளிர். நாம் ஒரு நாள் அங்குபோய் அப் பொய்கைகளில் நீராடுவோம் என்று கூறுவாள்.

இதனைக் கேட்ட கண்ணகி இரண்டே இரண்டு சொற்களில் தனது தோழிக்குப் பதில் இறுக்கிறாள். அப்படிக் காமன் கோவில் சென்று வழிபடுவது எனக்கு ‘பீடு அன்று’ என்பது அவளது பதில்.

சிலப்பதிகார காலத்தின்பின் கி.பி. 7 அல்லது 8 ஆம் நூற்றாண்டில் தோன்றிய பெருங்கதையில் தீவலம் வருதல், அம்மி மிதித்தல், அரிசி தூவல், பிராமணர் ஆசி, அருந்ததி காட்டல் ஆகியவை இடம் பெறுகிறது.

இதனை அடுத்து கி.பி. 9ஆம் நூற்றாண்டினதான சூளாமணியில் பெண்ணின் தந்தை தாரை வார்த்தல் (கன்னிகாதானம்) தீவலம் செய்தல், அம்மி மிதித்தல், அருந்ததி காட்டல் ஆகியவை கூறப்படுகிறது. தாரைவார்த்துக் கொடுத்தல் இதிலேதான் முதன்முறையாகப் பேசப்படுகிறது.

சிந்தாமணியிலும் மணமகள் நீராட்டு, கல்பதித்த தோடு நீக்கல், காப்பு அணிவித்தல், மாலை சூட்டல், பெண்ணின் தந்தை நீர் அட்டிக் கொடுத்தல் ஆகியவை இடம் பெறுகின்றன.

ஆதியில் இல்லை பாதியில் வந்தது

எனவே வைதீக திருமணங்கள் ஆதியில் இல்லாது பாதியில் வந்தவை. அவை தமிழ்ப் பண்பாட்டுக்கு எதிரானவை. செந்தமிழை ஒதுக்கி உயிரற்ற வடசொல் கூச்சலுக்கு முன்னுரிமை கொடுப்பவை. கன்னிகாதானம் பெண் அடிமையை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது. பார்ப்பனர்களின் பழக்க வழக்கங்கள், நாகரிகம் இவைகளைச் சித்தரிக்க எழுதப்பட்ட புராணங்கள் அத்தனையும் கட்டுக்கதைகளே. இதனை நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் வடலூர் வள்ளலார் உறைப்பாகச் சொல்லிப் போந்துள்ளார்.

‘உலகியல் சன்மார்க்க முறைப்படி திருமணம், பூப்பு நன்னீராட்டல் முதலிய விழாக்களில், இருட்சாதி தத்துவச் சாத்திரக் குப்பைகளை எல்லாம் தள்ளி, கண்மூடி வழக்கங்களைஎல்லாம் மண்மூடிப் போகவிட்டு, ஒழுக்கமும் அறிவுமுள்ள பெரியார் ஒருவரை முன்னதாகக் கொண்டு, அவர் முன்னிலையில் பதி விளக்கு, குடவிளக்கு முதலிய திருவிளக்குகளை ஏற்றி சுமங்கிலிப் பெண்களால் எல்லாச் கடங்குகளையும் செய்வித்து, ஆண்டவரை வழிபாடு செய்து, தாலி கட்டுதல்-நன்னீராட்டுதல் முதலிய விழாக்களைச் செய்வித்தல் வேண்டும். சாதி, சமய பேதங்கள் ஒன்றும் பாராட்டலாகாது.’

தமிழர்களின் வாழ்வியலில் அங்கிங்கென்னாதபடி எங்கும் தமிழ்மொழியும் தமிழ்ப் பண்பாடும் கோலோச்ச வேண்டும்.

ஆலயங்களில் தமிழ் ஒலிக்க வேண்டும். அப்பரும், சுந்;தரரும், ஆளுடைப் பிள்ளையாரும்,அருமணிவாசகரும் பாடிய தேவார திருவாசகங்கள் அர்ச்சனை மந்திரங்களாக முழக்கப்பட வேண்டும். ”செய்ய தமிழ் மாலைகள், நாம் தெளிய ஓதித் தெளியாத மறை நிலங்கள் தெளிதல் வேண்டும்.”

தமிழர் திருமணங்களில் வண்ணத் தமிழ் ஒலிக்க வேண்டும். தமிழர் திருமணங்கள் தமிழ்மரபுத் திருமணங்களாகத் திகளவேண்டும்.

தமிழர்களது இசை தமிழிசையாகவே இருக்க வேண்டும். இசை மேடைகளில் பைந்தமிழிலேயே தமிழ்க் கலைஞர்கள் பாட வேண்டும்.

தமிழர்களது பெயர்கள் செந்தமிழில் இருக்க வேண்டும். தமிழ் உறவு முறைகளை வண்டமிழில் சொல்ல வேண்டும்.

வள்ளுவர் செய் திருக்குறளே தமிழர்களது பொது மறையாக இருக்க வேண்டும். அதுவே தமிழர்களது வாழ்க்கைக்கு வழிகாட்டியாக விளங்க வேண்டும்.

பெரியார், அண்ணா, பாரதி, பாரதிதாசன் இவர்களது கனவு இன்று தமிழீழத்தில் நனவாகிக் கொண்டிருக்கறது. அந்தக் கனவு முழுதாகக் கைப்படல் வேண்டும். சங்க காலம் மீண்டும் வரவேண்டும். வங்கக் கடலில் சோழனின் புலிக் கொடி நீக்கமற மீண்டும் பட்டொளி வீசிப் பறக்க வேண்டும்.

வாழிய செந்தமிழ் ! வாழ்கநற் றமிழர் !
வாழிய தமிழீழ மணித்திரு நாடு !

10. தமிழே உயிரே வணக்கம்!

தமிழ்நாட்டில் தமிழ்மொழியில் கல்வி, தமிழ்மொழியில் வழிபாடு, தமிழிமொழியில் இசை இவற்றிற்கு பெரிய போராட்டமே நடாத்த வேண்டியுள்ள அவலம் இன்றும் தொடர்கதையாகவே இருக்கிறது. தமிழகத்தை 1967ம் ஆண்டு தொடக்கம் இந்தி எதிர்ப்பை முதலாக வைத்து ஆட்சியைப் பிடித்த திராவிடக் கட்சிகள் மாறி மாறி ஆண்டு வந்தாலும் ”எங்கும் தமிழ் எதிலும் தமிழ்” என்பது இன்னும் தொலைவானத்தில் தெரியும் வானவில்லின் வர்ண ஜாலங்களாகவே இருந்துவருகிறது.

தமிழ்நாட்டில் இசை அரங்குகளில் தமிழிசையே ஒலிக்கவேண்டும் என்ற போராட்டம் தொடங்கி இன்றைக்கு அரைநூற்றாண்டுக்கு மேலாகிவிட்டது. இருந்தும் வேற்றுமொழிகளின் ஆதிக்கம், குறிப்பாக தெலுங்கு மொழி ஆதிக்கம் குறைந்தபாடாக இல்லை.

இவ்வளவிற்கும் இசைத் தமிழ் முத்தமிழில் ஒரு கூறாகப் பாராட்டப்பட்டு வந்திருக்கிறது. இறைவனையே ஏழிசையாய், இசைப்பயனாய் கண்டு களித்துப் போற்றியவர்கள் நாளும் தமிழ் வளர்த்த நாயன்மார்கள். தமிழ்மக்களின் வாழ்வோடு இசை இரண்டறக் கலந்திருந்தமையை தமிழ்மொழியில் இன்றிருக்கும் மிகப் பழைய இலக்கண நூலான தொல்காப்பியத்திலும் சங்ககால இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களிலிருந்தும் தெரிந்து கொள்ளலாம். இசைக்கு இலக்கண நூல்கள் இருந்ததை-

அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிகை நீடலும்
உளவென மொழிப இளையொடு சிவணிய
நரம்பின் மறைய என்மனார் புலவர்..

என்னும் தொல்காப்பிய சூத்தி;ரத்தினால் அறியலாம். ‘இயற்றமிழில் உயிர் எழுத்தும் ஒற்றெழுத்தும் ஒலிக்கும் நிலை வேறு, அவ்வெழுத்துக்கள் இசைத்திழில் ஒலிக்கும் ஒலிநிலைவேறு, அதனை அவ்விசை நூல்களில் கண்டுகொள்க” என்கிறார் தொல்காப்பியர். ‘மறை’ என்றால் நூல் என்று பொருள். தொல்காப்பியர் வண்ணம் இருபது வகை என்பார். ”வண்ணம் என்பது சந்த வேறுபாடு” என்பார் பேராசிரியர். இதுபோலவே சங்க இலக்கியங்களில் இசைச் பண்கள், இசைக்கருவிகள், இசைக் கலைஞர்கள் பற்றிய ஏராளமான செய்திகள் இடம் பெறுகின்றன.

தமிழர் ஐவகை நிலத்துக்கும் குறிஞ்சிப்பண், முல்லைப்பண், மருதப்பண், நெய்தற்பண், பாலைப்பண் கண்டனர். அதேபோல் அந்த ஐவகை நிலத்துக்கும் அதே பெயரில் ஐவகை யாழையும், தொண்டகப்பறை (குறிஞ்சி), ஏறுகோட்பறை(முல்லை), மணமுழவு (மருதம்) மீன்கோட்பறை (நெய்தல்), நிரைகோட்பறை (பாலை) என ஐவகைப் பறையையும் கண்டனர்.

பண்ணும் பறையும் கண்டதோடு நில்லாமல் இன்ன பண் இன்ன பொழுது பாடத்தக்கது என இலக்கணமும் வகுத்தனர். யாமம் குறிஞ்சிப் பண்ணுக்குரியது. மாலை முல்லை சாதாரிப் பண்ணுக்குரியது. விடிகாலை மருதப் பண்ணுக்குரியது. நண்பகல் பாலைக்கு உரியது.
எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான புறனாநூற்றில் வள்ளல்களில் ஒருவனான நள்ளி அள்ளிக்கொடுத்த பரிசுகளின் மயக்கத்தால் பாணர் காலையில் பாடும் மருதப் பண்ணை மாலையிலும், மாலையில் பாடும் செவ்வழிப் பண்ணை காலையிலும் முறைமாறிப் பாடுகிறார்களாம். வன்பரணர் பாடிய அந்தப் பாடல் இது.

நள்ளி வாழியோ நள்ளி நன்ளென்
மாலை மருதம் பண்ணிக் காலைக்
கைவழி மருங்கில் செவ்வழி பண்ணி
வரவெமர் மறந்தனர் அதுநீ
புரவுக்கடன் பூண்ட வண்மை யனே!                                 (புறம் 149)

தமிழில் எழுந்த இசைநூல்கள் பல இறந்துபட்டன. பரிபாடல் (முதற்சங்கம்), முதுநாரை, முதுகுருகு, களரியாவினை, வெண்டாளி, வியாழமாலை போன்ற இசை நூல்கள் இன்று இல்லை. இழந்த இந்த இசை இலக்கண நூல்களை சிலப்பதிகாரத்துக்கு உரையெழுதிய அடியார்க்கு நல்லார் பட்டியல் இட்டுக் காட்டிவிட்டு தம் காலத்து இருந்த சிகண்டி, இசைநுணுக்கம், இந்திரகாளியம் முதலான இசைநூல்களைக் குறிப்பிடுகிறார். வேதனை என்னவென்றால் இவற்றையும் இப்போது இழந்துவிட்டோம்! நம் முன்னோர்கள் அளித்த செல்வங்களை பாதுகாக்கத் தெரியாது நீருக்கும் நெருப்புக்கும் காலம்தோறும் இழந்துவிடுவது தமிழினத்தின் சாபக்கேடாக இருந்துவருகிறது.

தமிழ்நாட்டு இசை மேடைகளில் வேற்று மொழியில் பாடுவது என்ற வியாதி மகாகவி சுப்பிரமணிய பாரதியார் காலத்திலிருந்தே வருகிறது. ‘நானும் பார்த்துக்கொண்டே வருகிறேன், பாட்டுக் கச்சேரி தொடங்குகிறது, வித்துவான் ‘வாதாபி கணபதிம் என்று ஆரம்பம் செய்கிறார்.’ராமநீ ஸமான மெவரு’ ‘மரியாத காதுரா’. ‘வரமு லொஸாகி’ ……. ஐயையோ ஐயையோ ஒரே கதை.

எந்த ஜில்லாவுக்குப் போ, எந்த கிராமத்திற்குப் போ. எந்த ‘வித்துவான்’ வந்தாலும் இதே கதைதான். தமிழ்நாட்டு ஜனங்களுக்கு இரும்புக்காதாக இருப்பதால் திரும்பத் திரும்பத் திரும்ப இந்த ஏழெட்டுப் பாட்டுக்களை வருஷக்கணக்காகக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். தோற்காது உள்ள தேசங்களிலே இந்த துன்பத்தைப் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.” இது பாரதியார் சுமார் எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் சுதேசமித்திரனில் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி. முழுக்கட்டுரையையும் படித்தால் மட்டுமே பாரதியார் காலத்தில் தமிழிசை இருந்து கோலம் இல்லை அலங்கோலம் தெரியும்.

தமிழில் இசையில்லை, இசையென்றால் அது தெலுங்கு இசைதான் என்ற மாயை வெகு காலமாக இருந்து வருகிறது.

ஆனால் இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், தமிழரின் பொற்காலம் என வர்ணிக்கப்படும் சங்க காலத்தில் தமிழில் தமிழிசை வெள்ளமாகப் பரவிப் பாய்ந்தோடியிருந்திருக்கிறது. கலிப்பாவும் அதன் உறுப்புகளாகிய தரவு, தாழிசை, சுரிதம், வண்ணகம், அம்போதரங்கம் போன்ற இசைப்பாக்கள் இருந்திருக்கின்றன. அதே போல் பதிற்றுப்பத்தும் இசைப் பாடல்களே. ஒவ்வொரு பாட்டின் நிறைவிலும் துறை, வண்ணம், தூக்கு, பெயர் என்னும் நான்கு குறிப்புக்கள் இடம் பெற்றுள்ளன.

சிலப்பதிகாரம் முழுதும் பழுதற்ற ஒரு முத்தமிழ்க் காப்பியம். அதில் காணப்படும் இசைநுட்பங்களையும் இசைக்கருவிகளையும் தென்தமிழீழத்தின் மீன்பாடும் தேனாடு பெற்றெடுத்த விபுலானந்த அடிகள் தாம் எழுதிய ‘யாழ்நூல் என்ற இசைத்தமிழ் நூல்” (1947) வாயிலாக வெளிக் கொணர்ந்து தமிழிசைக்கு அரும்பெரும் தொண்டாற்றியுள்ளார்.

தேவாரம், திருவாசகம், திருக்கோவையார், திருவிசைப்பா, திருவாய்மொழி, திருப்புகழ், திருநேரிசை, திருவிருத்தம், திருக்குறுந்தொகை, திருத்தாண்டகம், தாயுமானவர் கண்ணிகள், வள்ளலாரின் திருவருட்பா, காவடிச்சிந்து, சித்தர்பாடல்கள், குறவஞ்சி, பள்ளு, கீர்த்தனைகள் இவை யாவும் தமிழிசைப் பாடல்களே.
பிங்கல நிகண்டு தமிழிசையில் 103 பண்கள் உண்டென்று செப்புகிறது. சைவ மடங்களில் ஓதப்படும் பண்கள் 21 என்றும் அவற்றை ஓதும் காலம் காலை, மாலை, பகல் என வகுக்கப்பட்டுள்ளன.
இன்றைய கர்நாடக சங்கீதம் தமிழிசையன்றி வேறல்ல. பன்னிரண்டாம் நூற்றாண்டில் சோமேஸ்வர புல்லோகமால் (1116-1127) என்ற மகாராஷ்டிர குறுநில மன்னன் தென்னிந்திய சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்டு ‘மானச உல்லாசம்’ என்ற இசை நூலொன்றை ஆக்கினான்.

தனது நாட்டிற்கு தெற்கேயுள்ள நாடுகளில் கர்நாடகம் மகாராஷ்டிரத்துக்கு அடுத்து இருந்ததால் தான் கண்டு போற்றிய தென்நாட்டுச் சங்கீதத்திற்கு ‘கர்நாடக சங்கீதம்’ என்று பெயர் வைத்தான். அவன் காலத்தில் தென்னாட்டில் இருந்த சங்கீதம் தமிழ்சங்கீதம் ஒன்றுதான்.

தமிழில் இருந்த ஏழிசைகளையே வடமொழியில் ‘சப்தசுரங்கள்’ என்று எழுதி வைத்தார்கள்.

குரல் முதல் சுரம் சட்ஜமம்                         (ச) என்றும்,
துத்தம் இரண்டாம் சுரம் ரிஷபம்              (ரி) என்றும்,
கைக்கிளை மூன்றாம் சுரம் காந்தாரம்     (க) என்றும்,
உழை நான்காம் சுரம் மத்திமம்                 (ம) என்றும்,
இளி ஐந்தாம் சுரம் பஞ்சமம்                      (ப) என்றும்,
விளரி ஆறாம் சுரம் தைவதம்                    (த) என்றும்,
தாரம் ஏழாம் சுரம் நிஷாதம்                      (நி) என்றும்
மாற்றி எழுதப்பட்டது.

இதேபோல் பண் இராகமாக மாற்றப்பட்டது. முல்லைப்பண் மோகனமாகவும், கோடிப்பாலை சங்கராபரணமாகவும், அரும்பாலை கரகரப்பிரியாவாகவும், செம்பாலை அரி காம்போதியாகவும், செவ்வழிப்பாலை யதுகுல காம்போதியாகவும், படுமலைப்பாலை கல்யாணியாகவும்,மேற் செம்பாலை நடைபைரவியாகவும், செந்துருத்தி மத்தியமாவதியாகவும், சாதாரி பந்துவராளியாகவும், குறிஞ்சிப்பண் நீலாம்பரியாகவும், புறநீர்மை பூபாளமாகவும் பெயர் மாற்றம்செய்யப்பட்டது.

முத்தமிழ்க் கல்வியும் வித்தகக் கவியும் கைவரக்கண்ட இளங்கோ அடிகள் யாத்த நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரத்தில் (கி.பி. இரண்டாம் நூற்றாண்டு) ஊர்காண் காதையில் மதுரை வீதிகளில் ஆடல், இசைப்பாடல்கள், வரிக்கூத்துக்கள், பாடல், ஏழுவகைத் தூக்குகள், அதனோடு இணைகின்ற தோற்கருவிகளின் கூறுபாடுகளை உணர்ந்து, நிற்றல், இயங்கல், இருத்தல், கிடத்தல், என்ற நால்வகை மரபுடைய அவினயக் கூத்துக்களையும் அறிந்து, குரல் முதலாக தாரம் ஈறாக உள்ள ஏழ்வகை இசைக் கூறுகளையும் விரிக்கும் இசைவல்லோர் இருந்தது விரிக்கப்படுகிறது.

ஆடலும், வரியும், பாணியும், தூக்கும்
கூடிய குயிலுவக் கருவியும் உணர்ந்து
நால்வகை மரபின் அவினயக் களத்தினும்
ஏழ்வகை நிலத்தின் எய்தியது விரிக்கும்
மலைப்பு அரும் சிறப்பின் தலைக்கோல் ……..         (சிலம்பு 14, 150-154)

‘ஏழ்வகை நிலத்தின் எய்தியது விரிக்கின்’ என்பதற்கு உரை எழுதிய நல்லார்க்கு அடியார் ‘எழுவகை நிலமாவன சரிகமபதநி என்னும் எழுவகைப்பட்ட எழுத்தடியாகப் பிறக்கும் குரல் முதல் தாரம் ஈறாக ஏழும்’ என விரித்துiசூரக்கிறார்.

மீண்டும் ஆச்சியர் குரவையில் ஏழு இளம் பெண்களுக்கு இடைக்குல முதுமகளாகிய மாதரி இந்த ஏழு சுரங்களையும் தான் விரும்பிய பெயர்களாகச் சூட்டியதாகக் குறிக்கப்பட்டுள்ளது.

இடைமுதுமகள் இவர்க்குப்
படைத்துக் கோள் பெயர் இடுவாள்
குடமுதல் இடமுறையாக், குரல், துத்தம்
கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என
விரிதரு பூங்குழல் வேண்டிய பெயரே.                             (சிலம்பு 17, 18-22)

புராதன தமிழ் இசைக் கணிதத்தின்படி-

குரல்                 – ம
துத்தம்             – ப
கைக்கிளை     – த
உழை             –  நி
இளி               –  ச
விளரி             – ரி
தாரம்             – க

என வகுகப்பட்டுள்ளது.

இந்த ஏழு இசைகளின் ஓசைக்கு உவமை முறையே வண்டு, கிளி, குதிரை, யானை, குயில், தேனு, ஆடு என்பவையாகும். இந்த இசைகளின் சுவைக்கு உவமை முறையே தேன், தயிர், நெய், ஏலம், வாழைக்கனி, மாதுளங்கனி என்பவையாகும்.

திருவிசைப்பா பாடிய ஒன்பதிமருள் முதலாம் இராசராச சோழனின் (கி.பி. 1012-1044) பாட்டானார் கண்டாராதித்த தேவர் (கி.பி. 956-957) ஒருவர். முதலாம் இராசேத்திரனுடைய மகள் வயிற்றுப் பேரனும் கீழைச்சாளுக்கிய மன்னன் இராசராசனின் மகனுமாகிய முதலாம் குலோத்துங்கன் (கி.பி.1070-1120) ‘குலோத்துங்கன் இசை’ இசைநூலொன்றை எழுதியவன் என்பதும் அவனது அரசியாரின் பெயர் ஏழிசைவல்லபி என்பதும் வரலாறு.

கர்நாடக இசைக்கு முத்துசாமி தீட்சிதர் (1,1776-1,1835), தியாகையர் (1767-1847), சியாமா சாத்திரிகள் (1,762-1,827) மூவரும் மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

இந்த மூவரும் ஆந்திர நாட்டவர்கள் அல்ல. இவர்கள் பிறந்த ஊர் தமிழ்நாட்டிலுள்ள திருவாரூர். இவர்கள் கேட்ட இசையெல்லாம் தமிழிசையே. ஆனால் தியாகையரின் வீட்டு மொழி தெலுங்காக இருந்த காரணத்தால் தாம்கேட்ட தமிழிசையைத் தமது தாய்மொழியான தெலுங்கில் கீர்த்தனமாகப் பாடினார். திருவையாற்றில் ஆண்டுதோறும் அவருக்கு விழா எடுக்கப்படுகிறது. இந்த ஆண்டு தியாகையரின் 154வது ஆராதனை விழாவாகும். சியாமா சாத்திரிகள் தெலுங்கிலும் தமிழிலும் கீர்த்தனைகள் செய்தார். தீட்சிதர் சுத்தமாக வடமொழியில் பாடினார்.

இப்படிச் சொல்வதால் இந்த கருநாடக மும்மூர்த்திகள் தோன்றுமுன், கருநாடகக் கீர்த்தனைத் தமிழ்ப் பாடல்கள் இல்லையா? கீர்த்தனை பாடுபவர்கள் இல்லையா?

இந்த மும்மூர்த்திகளுக்கும் முன்னரே தமிழிசைக்கு மும்மூர்த்திகளாக சீர்காழி முத்துத் தாண்டவர் (கி.பி. 1,600), தில்லைவிடங்கன் மாரிமுத்தாப் பிள்ளை (1,712-1,787), சீர்காழி அருணாசலக் கவிராயர் (1,711-1,779) இருந்தார்கள். ஆனால் அவர்கள் பிறப்புக்காரணமாக அவர்கள் காலத்தில் அவர்களது இசைவல்லுமை அரங்கம் ஏறாது இருந்துவிட்டது. தெலுங்கு இசைக்கு இருந்த ஆதிக்கத்தினாலும் அதன்மீது விசயநகர ஆட்சியாளர்களுக்கு (16ம் நூற்றாண்டு) இருந்த மோகத்தாலும் அவர்களது புகழ் வெளிச்சத்துக்கு வராது போயிற்று.

தெருவில் வாரானோ – என்னைச் சற்றே
திரும்பிப் பாரானோ?
என்னும் முத்துத்தாண்டவர் கீர்த்தனம்,

காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே -எனைக்
கைதூக்கி ஆள் தெய்வமே!

என்னும் மாரிமுத்தாப்பிள்ளை கீர்த்தனமும்,

ஆரோ இவர் ஆரோ – என்ன
பேரோ அறியேனே!

என்னும் அருணாசலக் கவிரயார் கீர்த்தனமும் அன்று மிகவும் பிரபல்யமானவையாக இருந்தன. ஒருமுறை திருவையாற்றிலே தியாகராசர் விழாவிலே எம்.எம். தண்டபாணி தேசிகர் தமிழ் பாட்டொன்று பாடிவிட்டார். தியாகராசர் வளாகமே தீட்டுப்பட்டு விட்டது என்று தெலுங்கிசை பாடவந்த கூட்டம் போர்க்கொடி தூக்கிவிட்டது! இனி தீட்டுக் கழித்தால் அன்றிப் பாடமாட்டோம் என்று அரங்கத்தைவிட்டு அந்தக் கூட்டம் வெளியேறியது.

தமிழ்நாட்டு காற்றைச் சுவாசித்துக்கொண்டு, காவேரித் தண்ணீரைக் குடித்துக்கொண்டு, தமிழ்நாட்டு உப்பைத் தின்று கொண்டு வாழ்ந்த கூட்டம் தமிழ்நாட்டில் தமிழன் தமிழில் ஒரு பாட்டுப் பாடிவிட்டதைக் கண்டு தீட்டுப்பட்டு விட்டதாகக் கூப்பாடு போட்டது தமிழ் நாட்டில் தமிழிசைக்கு எந்தளவுக்கு ‘மரியாதை’ அன்றைக்கு இருந்தது என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு!

‘தமிழிசை என ஒன்றும் இல்லை இருப்பதெல்லாம் வேற்றிசையே’ என்றும் ‘இசைக்கு மொழி இல்லை’ என்றும் தமிழ்நாட்டின் வளத்தை அனுபவித்துக் கொண்டு தமிழிசைக்குப் பகைவர்கள் கேடு செய்து கொண்டிருந்த காலத்தில் தமிழிசையின் மறுபிறப்புக்கும், மறுமலர்ச்சிக்கும் தமிழிசைச் சங்கம் கண்டவரும் ‘தமிழிசையின் தந்தை’ என்று போற்றப்பட்டவருமான வள்ளல் ராஜா சேர் அண்ணாமலை அரசர், ஆர்.கே. சண்முகனார், தந்தை பெரியார், விபுலான அடிகள், என்.எஸ். கிருஷ்ணன் போன்றோர் வித்திட்டார்கள்.

இவர்களைத் தொடர்ந்து தமிழிசைக் காவலர் ராஜா சேர் முத்தையா, வ.சு.ப. மாணிக்கனார், டி.என். இராசரத்தினம், எம்.எம். தண்டபாணிதேசிகர், ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி, புரவலர் பொள்ளாச்சி மகாலிங்கம், போன்ற பலர் தமிழ் இசை வளர்ச்சிக்கு அளப்பரிய தொண்டு ஆற்றினார்கள். தமிழிசைப் பாடல்களை ஆக்கிய மகாகவி சுப்பிரமணியபாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், உடுமலை நாராயணகவி,சுத்தானந்தபாரதியார், கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை, கவியரசர் கண்ணதாசன் போன்ற கவிஞர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

இன்று சென்னை தமிழ் இசைச் சங்கம், மதுரை தமிழிசைச் சங்கம், பொள்ளாச்சி தமிழிசைச் சங்கம், பெரியார் முத்தமிழ் மன்றம், பெரியார் தமிழிசை மன்றம் தமிழ் இசையை நற்றமிழ் வாணர்கள் போற்றும் வண்ணம் நாடளாவிய அளவில் வளர்த்து வருகின்றன. சென்னை, மதுரை, காஞ்சி, வேலூர், சிதம்hரம் முதலாய இடங்களில் தமிழ்நாடு அரசின் இசைக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. தமிழிசைக் கலைஞர்களுக்கு மாத ஊதியம், ஆண்டு தோறும் விருது, பொற்கிழி வழங்கப்படுகின்றன.

கடந்த ஏழாண்டுகளாக இயங்கிவரும் பெரியார் தமிழிசை மன்றம் தமிழிசைப் பாடல்கள் பாகம் 1, பாகம் 11 என இரண்டு ஒலிநாடாக்களை வெளியிட்டுள்ளது. இந்தப் பெரியார் தமிழிசை மன்றத்தின் தலைவர் தமிழினப் பற்றாளர்களுக்கும், தமிழீழ விடுதலையாளர்களுக்கும் ஆலமரம் போல் நிழல் தரும் புரவலரும்;, நந்தன்; திங்கள் இருமுறை வெளியீட்டின் ஆசிரியருமான நா. அருணாசலம் என்பது மகிழ்ச்சி தரும் செய்தி.

இந்தத் தமிழிசைப் பாடல்களை கலைமாமணி புஷ்பவனம் குப்புசாமி, எம்.ஏ. எம்.எல். பிஎச்டி தனது கம்பீரமான குரலில் சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி பொழிந்தபோல் மிக இனிமையாகப் பாடியுள்ளார். பாடல்களை தமிழீழத் தேசியக் கவிஞர் காசி ஆனந்தன், புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன், கலைமாமணி முத்துக்கூத்தன் இயற்றியுள்ளார்கள். முதல் பாடல் கவிஞர் காசி ஆனந்தனின் ஆக்கம். பண் – மோகனம், தாளம் – ஆதி. பாடல் இது.

தமிழே! உயிரே வணக்கம்!
தாய்பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும் – தமிழே உயிரே
அமிழ்தே! நீ இல்லை என்றால்
அத்தனையும் வாழ்வில் கசக்கும் புளிக்கும்! – தமிழே உயிரே
தமிழே உன்னையே நினைக்கும்
தமிழன் என் செஞ்சம் இனிக்கும் இனிக்கும்! – தமிழே உன்னையே
அமிழ்தே! உன் எழில் நினைந்தால்
ஆயிரம் பூக்கள் சிரிக்கும்! சிரிக்கும்! – தமிழே உயிரே
தமிழே நீ என் இயக்கம்!
தாய்நீ துணைஎன் வழிக்கும்! நடைக்கும்! – தமிழே நீ
அமிழ்தே நீ தரும் இன்பம்…..
அடியேன் வாழ்வில்வே றெங்கே கிடைக்கும்? – தமிழே உயிரே
தமிழே இன்று உனை பழிக்கும்
தருக்கன் உலகில் இருக்கும் வரைக்கும் – தமிழே இன்று உனை
அமிழ்தே! நீ வாழும் மண்ணில்
அனலே தெறிக்கும்! அனலே தெறிக்கும்! – தமிழே உயிரே
தமிழே உனக்கேன் கலக்கம்?
தாயே! பொறம்மா முழக்கம் வெடிக்கும்! – தமிழே உயிரே
அமிழ்தே! உனை எவன் தொட்டால்
அவனை என் கைவாள் அழிக்கும்!முடிக்கும்! – தமிழே உயிரே

தமிழ் இசைக்கு இப்போது நல்ல காலம் பிறந்திருக்கிறது என்பதற்கு இந்த வெளியீடுகள் கட்டியம் கூறுகின்றன. பாடல்கள் தேனாகக் காதில் வந்து விழும்போது உள்ளமும் உடலும் மகிழ்ச்சி வெள்ளத்தில் குளிக்கிறது.

செந்தமிழர் வாழ்வில் தொட்டில் தொடக்கம் சுடுகாடுவரை வண்ணத்தமிழும், இன்பத்தமிழிசையும் அங்கிங்கு இன்னாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்க வேண்டும்.

11. தமிழ்ச் சோலையில் பறித்த பாமலர்கள்

பதினாறு பேறுகள்

அகிலமதில் நோயின்மை கல்விதனம் தானியம்
அழகுபுகழ் பெருமை இளமை
அறிவுசந் தானம்வலி துணிவுவாழ் நாள் வெற்றி
ஆகும் நல் வாழ்த்து கர்ச்சி
தொகைதரும் பதினாறு பேறும்தந் தருளிநீ
சுகானந்த வாழ்வளிப் பாய்

சுகிர்தகுண சாலிபரி பாலிஅநு கூலிதிரி
சூலிமங் களவி சாலி
மகவுநான் நீதாய் அளிக்கொணதாதோ மகிமை
வளர்திருக் கடவூ ரில்வாழ்
வாமிசுப தேமிபுகழ் நாமிசிவ சாமிமகிழ்
வாமிஅபி ராமி உமையே!
அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி)
காண்டல் இனிது
குழவி தளர்நடை காண்டல் இனிதே
அவர்மழலை கேட்டல் அமிழ்தினும் இனிதே
குழவி பிணிஇன்றி வாழ்தல் இனிதே
மனமாண்பு இலாதவரை அகறல் இனிதே
கடன் கொண்டும் செய்வன செய்தல் இனிதே
வருவாய் அறிந்து வழங்கல் இனிதே
பிச்சைபுக்கு ஆயினும் கற்றல் மிக இனிதே
பிச்சைபுக்கு உண்பான் பிளிறாமை முன்இனிதே   (மதுரை பூதஞ்சேந்தனார்-இனியவை நாற்பது)

பொதுமறை

எல்லாப் பொருளும் இதன்பால் உள- இதனால்
இல்லாத எப்பொருளும் இல்லையால் (திருவள்ளுவமாலை)

கைமாறு கருதாத கடவுள் வணக்கம்!

தீயினுள் தேறல் நீ! பூவினுள் நாற்றம் நீ!
கல்லினுள் மணியும் நீ ! சொல்லினுள் வாய்மை நீ!
அறத்தினுள் அன்பு நீ! மறத்தினுள் மைந்து நீ!
வேதத்து மறை நீ! பூதத்து முதலும் நீ!
வெஞ்சுடர் ஒளியும் நீ! திங்களுள் அளியும் நீ
அனைத்தும் நீ! அனைத்தினும் பொருளும் நீ! ஆதலின்
உறைவும் உறைவதும் இலையே, உண்மையும்
மறவியில் சிறப்பின் மாயமா ரனையை.                         (பரிபாடல் 3)

பொன்னல்ல பொருளல்ல
யாஅம் இரப்பவை
கொருளும் பொன்னும் போகமும் அல்ல, நின்பால்
அருளும் அன்பும் அறனும் மூன்றும்-
உருளிணர்க் கடம்பின் ஒலிதா ரோயோ!             (கலித்தொகை)

அபிராமி

கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
கபடுவா ராத நட்பும் கன்றாத வளமையும்
குன்றாத இளமையும் கழுபிணியி லாத உடலும்
சலியாத மனமும்அன் பகலாத மனைவியும்
தவறாத சந்தா னமும் தாழாத கீர்த்தியும்
மாறாத வார்த்தையும் தடைகள் வராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணத கோலுமொரு
துன்பமில்லாத வாழ்வும் துயப்பநின் பாதத்தில்
அன்பும் உதவிப் பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்,
அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே!
ஆதிகட வூபூரின் வாழ்வே! அமுதீதர் ஒரு பாகம்
அகலாத சுகபாணி! அருள்வாமி! அபிராமி யே!                 (அபிராமியம்மை பதிகம்)

கடவுளே காப்பாற்று!

அன்னம் பழித்த நடை ஆலம் பழித்த விழி
அமுதம் பழித்த மொழிகள்
பொன்னம் பெருத்த முலை கன்னங் கறுத்த குழல்
சின்னஞ் சிறுத்த இடை பெண்
என் நெஞ்சு உருக்க அவள்தன் நெஞ்சு
கற்றகலைஎன்என்று உரைப்பதினி நான்
சின்னஞ் சிறுக்கியவள் வில்லங்கம் இட்டபடி
தெய்வங் களுக்கு அபயமே! (விவேக சிந்தாமணி 76)
பறந்தது வண்டோ பழமோ…!
தேனுண்ணும் வண்டு மது தனை உண்டு
தியங்கியே கிடந்ததைக் கண்டு
தானதைச் சம்புவின் கனி என்று
தடங்கையில் எடுத்துமுன் பார்தத்hள்
வானுறு மதியும் வந்தது என்றெண்ணி
மலர்க்கரமம் குவியும் என்று அஞ்சிப்
போனது வண்டோ பற்ந்ததோ பழம் தான்
புதுமையோ இது எனப் புகன்றாள்.                             (விவேக சிந்தாமணி 19)

வாழி காவேரி

பூவார் சோலை மயில் ஆடப் புரிந்து குயில்கள் இசைபாட
காமார் மாலை அருகு அசைய நடந்தாய் வாழி காவேரி
காமர் மாலை அருககககு அசைய நடந்த எல்லாம் நின் கணவன்
நாமவேலின் திறம் கண்டே அறிந்தேன் வாழி காவேரி!                  (இளங்கோ பாடிய சிலப்பதிகாரம் – கானல் வரி )

மலர்கள்

ஒண்செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்
தண்கயக் குவளை, குறிஞ்சி. வெட்சி
செங்கொடு வேரி, தேமா, மணிச்சிகை,
குருநிலை, மருதம், விரிபூங் கோங்கம்
போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி
செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்!

ஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடிய குறிஞ்சிப்பாட்டு (62-75).
இப்படி 99 மலர்களின் பெயர்களை கபிலர் வரிசையாக அடுக்கிச் சொல்வார்.

மீனோ மீன் விழியோ?

தண்டுலாவிய தாமரைப் பொய்கையில்
மொண்டு நீரை முகத்தருகு ஏந்நதினான்
கெண்டை கெண்டை எனக்கரை ஏறினாள்
கெண்டை காண்கிலள் நின்று தயங்கினாள்! (விவேக சிந்தாமணி)

கங்கை ஆடிலென்?

கங்கை யாடிலென் காவிரி யாடிலென்
கொங்குதண் குமரித் துறை யாடிலென்
ஓங்கு மாகடல் ஓதநீர் ஆடிலென்
எங்கும் ஈசன் எனாதவர்க் கில்லையே!                       (அப்பர் தேவாரம்)

என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே.

உடம்பினை முன்னம் இழுக்கென்றி ருந்தேன்
உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டானென்
உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே.

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோபுர வாசல்
தௌ;ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே .

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதி யில்லைநுஞ் சித்தத்து
நின்றே நிலைபெற நீர் நினைந் துய்மினே!                           (திருமூலர் திருமந்திரம்)

அல்லதும் நல்லதும்

அல்லது செய்தல் ஒம்புமின்
நல்லது செய்தல் ஆற்றீ ராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின் (புறநானூறு)

துறைவ கேள்

தாழைப் பூமலர்ந்தவை போலப் புள் அல்கும் துறைவ கேள்
ஆற்றுதல் என்பது அலர்ந்தவர்க்கு உதவுதல்
போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை
பண்பெனப் படுவது பாடறிந் தொழுகல்
அன்பெனப் படுவது தன்கிளை செறா அமை
அறிவெனப் படுவது பேதையார் சொல் நோன்றல்
செறிவெனப் படுவது கூறியது மாறா அமை
நிறையெனப் படுவது மறைபிறர் அறியாமை
குறையெனப் படுவது கண்ணோடாது உயிர்வெளவல்
பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்                      (கலித்தொகை – 133)

காதல் பெரிது

நிலத்தினும் பெரிதே! வானிலும் உயர்ந்தன்று,
நீரினும் ஆர் அளவு இன்றே, சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே                       (புலவர் தேவகுலத்தார்; பாடியது-குறுந்தொகை -3)

எது ஈகை?

படமாடக் கோயில் பரமற்கொன்று ஈயின்
நடமாடக் கோயில் நம்பர்க்கங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்குஒன்று ஈயின்
படமாடக் கோயில் பரமர்க்கு அது ஆமே                                        (திருமூலர் திருமந்திரம் – 1857)

எது மந்திரம்?

நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறை மொழிதானே மந்திரம் என்ப                                                  (தொல்காப்பியர்)
 

நன்கலம் நன்மக்கட் பேறு

படைப்புப் பல படைத்து பலரோடு உண்ணும்
உடைப்பெரும் செல்வர் ஆயினும், இடைப்படக்
குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி,
இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும்,
நெய்உடை அடிசில் மெய்பட விதிர்த்தும்,
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத்தாம் வாழும் நாளே!                           (பாண்டியன் அறிவுடைநம்பி பாடியது -புறம் 188)

உடம்பும் உயிரும்

உடம்பொடு உயிரிடை என்ன? மற்றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு                                       (பொதுமறை – குறள் 1122)

குட்டு

யாண்டு பலவாக நரையில ஆகுதல்
யாங்கு ஆகியர் என வினவுதிர் ஆயின்
மாண்டஎன் மனைவியொடு மக்களும் நிரம்பினர்
யான்கணடு அனையர் என் இளையரும் வேந்தனும்
அல்லவை செய்யான் காக்கும் அதன்தலை
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர்யான் வாழும் ஊரே !                                          (பிசிராந்தையர் பாடியது – புறம் 191)

அறிவு ஒன்றே தெய்வம்

ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகாள்! – பல
ஆயிரம் வேதம் அறிவுஒன்றே தெய்வம் உண்டு
ஆம், எனல் கேளீரோ?                                                              (மகாகவி பாரதியார்)

மனைத்தக்க மனைவி

முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கம், கழா அது உடீஇக்,
குவளை உண்கண் குய்ப்புகை கமழத்
தான்குழந்து அட்ட தீம்புளிப் பாகர்
‘இனிது’ எனக் கணவன் உண்டலின்,
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒள்நுதல் முகனே!                              (குறுந்தொகை)

மகன் எங்கே என வினவுதி?

சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்
யாண்டு உளனோ என்று வினவுதி, என்மகன்
யாண்டுளன் ஆயினும் அறியேன், ஓரும்
புலிசேர்ந்து போகிய கல்அளை போல
ஈன்ற வயிறோ விதுவே,
தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே!                         (காவற்பெண்டு பாடியது – புறம் 86)

இந்திரர் அமிழ்தமும் வேண்டாம்!

உண்டால் அம்ம இவ்வுலகம், இந்திரர்
அமிழ்தம் இயைவது ஆயினும், இனிது எனத்
தமியர் உண்டலும் இலரே, முனிவு இலர்,
துஞ்சலும் இலர்பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழ்எனின் உயிரும் கொடுக்குவர், பழி எனின்
உலகு உடன் பெறினும் கொள்ளலர், அயர்வு இலர்,
அன்ன மாட்சி அனையர் ஆகித்,
தமக்குஎன முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே! (கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி பாடியது – புறம் 182)

வணிகன் அல்லன்

இம்மை செய்தது மறுமைக்கு ஆம்எனும்
அறவிலை வணிகன் ஆய் அலன்
சான்றோர் சென்ற நெறியென
ஆங்குப்பட் டன்று அவன் கைவண் மையே. (உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் -புறம் 134)
பண்பு எனப்படுவது….
ஆற்றுதல் என்பது ஒன்றலந்தவர்க்கு உதவுதல்
போற்றுதல் என்பது புணந்தாரைப் பிரியாமை
பண்பு எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல்
அன்பு எனப்படுவது தன்கிளை செறாஅமை
அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்
செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை
நிறைஎன்படுவது மறைபிறர் அறியாமை
முறை எனப்படுவது கண்ணோடாது உயிர்வெளவல்
பொறைஎனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்                       (நெய்தற்கலி)

கபாடம் திறமினோ?

செக்கச் சிவந்த கழுநீரும்
செகத்தில் இளைஞர் ஆருயிரும்
ஒக்கச் செருகுங் குழல்மடவீர்
உம்பொற் கபாடந் திறமினோ
வருவார் கொழுநர் எனத்திறந்தும்
வாரார் கொழுநர் எனவடைத்தும்
திருகுங் குடுமி விடியளவுந்
தேயுங் கபாடந் திறமினோ?

(செயம்கொண்டார் பாடியது – கலிங்கத்துப் பரணி)

அகப் பூசை

நெஞ்சமே கோயில் நினைவே சுகந்தம், அன்பே
மஞ்சனநீர் பூசைகொள்ள வாராய் பராபரமே!
எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே!                                        (தாயுமான சுவாமிகள்)

அபிராமி திருவடியே சரணம்

அகிலமதில் நோயின்மை கல்விதன தானியம்
அழகுபுகழ் பெருமை இளமை
அறிவுசந் தானம்வலி துணிவுவாழ் நாள் வெற்றி
ஆகும்நல் வாழ்ந்து கர்ச்சி
தொகைதரும் பதினாறு பேறும்;தந் தருளிநீ
சுகானந்த வாழ்வளிப் பாய்
சுகிர்தகுண சாலிபரி பாலி-அநு கூலிதிரி
சூலிமங் களவி சாலி
மகவுநான் நீதாய் அளிக்கொணாதோ மகிமை
வளர்திருக் கடவூ ரில்வாழ்
வாமிசுப நேமிபுகழ் நாமிசிவ சாமிமகிழ்
வாமிஅபி ராமி உமையே!                            (அபிராமி அந்தாதி)

அறம் எனப் படுவது

படமாடக் கோயில் பரமற்கு ஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே!                 (திருமூலர்)

பசிப்பிணி என்னும் பாவி

குடிப்பிறப் பழிக்கும் விழுப்பம் கொல்லும்
பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்;
நாண் அணி களையும் மாண்எழில் சிதைக்கும்
பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்
பசிப்பிணி என்னும் பாவி.

”மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே”
”மாதவர் நோன்பும் மடவார் கற்பும்
காலன் கால் இன்றெனின் இன்றால்”
”மயக்கும் கள்ளும் மன்னுயிர் கோறலும்
கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய்.”                      (மணிமேகலை சாத்தனார்)

தமிழமுதம்

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவதெங்கும் காணோம்!

தெள்ளுற்ற தமிழமுதின் சுவை கண்டார்
இங்கமரர் சிறப்புக் கண்டார்!                                        (மகாகவி பாரதியார்)

என்னுயிர் கண்ணம்மா

சுட்டும் விழிச்சுடர்தான் – கண்ணம்மா
சூரிய சந்திரரோ?
வட்டக் கரியவிழி            -கண்ணம்மா
வானக் கருமை கொல்லோ?
பட்டுக் கருநீலப்             -புடவை
பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில்         – தெரியும்
நட்சத் திரங்களடீ!                                                       (மகாகவி பாரதியார்)

தமிழோடு இசை

‘சலம் பூவொடு தூபம் மறந்தறியேன்
தமிழோடு இசை பாடல் மறந்தறியேன் ‘                     (அப்பர் தேவாரம்)

கண்ணம்மா

பிள்ளைக் கனியமுதே – கண்ணம்மா!
பேசும் பொற் சித்திரமே !
அள்ளி அணைத்திடவே – என் முன்னே
ஆடி வருந் தேனே !

வெண்ணிலவு நீ எனக்கு!
மேவு கடல் நானுனக்கு!
பண்ணு சுதி நீ எனக்கு!
பாட்டினிமை நானுனக்கு!                             (மகாகவி பாரதியார்)

காணி நிலம் வேண்டும் -பராசக்தி
காணி நிலம் வேண்டும் -அங்குத்
தூணில் அழகியதாய் – நனமாடங்கள்
துய்ய நிறத்தினதாய்-அந்தக்
காணிநிலத்திடையே – ஓர்மாளிகை
கட்டித் தரவேண்டும்- அங்குக்
கேணியருகினிலே -தென்னைமரம்
கீற்று இளநீரும்
பாட்டுக் கலந்திடவே -அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும் – எங்கள்
கூட்டுக் களியினிலே – கவிதைகள்
கொண்டுதர வேணும்!                                (மகாகவி பாரதியார்)

எங்கள் வாழ்வு

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே!

தமிழின் இனிமை

கனியிடை ஏறிய சுவையும்- முற்றல்
களையிடை ஏறிய சாறும்,
பனிமலர் ஏறிய தேனும் -காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்,
நனிபசு பொழியும் பாலும் – தென்னை
நல்கிய குளிரிள நீரும்,
இனியன என்பேன் எனினும் – தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்!

இன்பத் தமிழ்

தமிழுக்கும் அமுதென்று பேர்!        – அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர்!             -இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர்!         – இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழுக்கு மதுவென்று பேர்!         – இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்! (புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்)

ஒரு வாசகம்

தேவர் குறளும் திருநான் மறைமுடியும்
மூவர் தமிழும் முனிமொழியும் – கோவை
திருவாசகமும் திருமூலர் சொல்லும்
ஒரு வாசகம் என்றுணர்.                         (அவ்வையார்)

பயனில் அகரம் சிகரம்

அகரம் ஆயிரம் அந்தணர்க் கீயிலென்
சிகரம் ஆயிரஞ் செய்து முடிக்கிலென்
பகரு ஞானி பகலூண் பலத்துக்கு
நிகரிலை என்பது நிச்சயந் தானே!

சீவன் சிவலிங்கம்

உள்ளம் பெருங்கோவில் ஊனுடம் பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்துங் காளா மணிவிளக்கே!

இன்பமே எந்நாளும் துன்பமில்லை

நாமார்க்கும் குடி அல்லோம், நமனை அஞ்சோம்
நரகத்தில் கிடந்து இடர்ப்படோம், நடலை இல்லோம்
ஏமாப்போம், பிணியறியோம், பணிவோம் அல்லோம்
இன்பமே எந்நாளும் துன்பமில்லை.                 (திருநாவுக்கரசர்)

நான் பெற்ற இன்பம்

நான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைபொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே!                 (திருமந்திரம்)

கற்பகத்தின் பூங் கொம்போ

கற்பகத்தின் பூங் கொம்போ காமன்றன் பெருவாழ்வோ
பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ புயல் சுமந்து
விற்குவளை பவளமலர் மதிபூத்த விரைக் கொடியோ
அற்புதமோ சிவனருளோ அறியேன் என்று அதிசயித்hர்.                     (சேக்கிழார்)

அன்னாய் வாழி

அன்னாய் வாழி வேண்டன்னை நம்படப்பை
தேன்மயங்கு பாலினும் இனிய அவர்நாட்டு
உவலைக் கூவற் கீழ
மானுண்டெஞ்சிய கலிழி நீரே!                     (அகநானூறு 203)

இம்மை மாறி மறுமை யாயினும்
நீயா கியர் என் கணவனை
யானா கியர்நின் நெஞசுநேர் பவளே.         (குறுந்தொகை)

மருதம் வீற்றிருக்கு மாதோ

தண்டலை மயில்களாடத்தாமரை விளக்கம்தாங்கக்
கொண்டல்கள் முழவினேங்கக் குவளைகண் விழித்து நோக்கத்
தெண்டிரை எழினி காட்டத் தேம்பிழி மகர யாழின்
வண்டுகள் இனிதுபாட மருதம் வீற்றிருக்கு மாதோ.

பஞ்சியொளிர் விஞ்சு குளிர் பல்லவம் ஆட
செஞ்செவிய கஞ்சம் நிமிர் சீறடியளாகி
அஞ்சொல்இள மஞ்ஞைஎன அன்னமென மின்னும்
வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்.                     (கம்பர்)

அங்கையால் தடவிப் பார்த்தாள்

துப்புறச் சிவந்தவாய் ஊடிய பஞ்சணையின் மீதே
ஒப்புறக் கணவனோடே ஓர்லீலை செய்யும் போது
கற்பகம் சேர்ந்த மார்பில் கனதனம் இரண்டும் தைத்தே
அப்புறம் உருவிற்று என்றே அங்கையால் தடவிப் பார்த்தாள்                 (விவேக சிந்தாமணி)

நாராய் நாராய்

நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய்
நீயும் நின்மனைவியும் தென்திசைக் குமரியாடி
வடதிசை மேகு வீராயின் சிறந்த
சத்தி முற்ற வாவியில் தங்கி
பாடுபார்த்திருக்கும் என் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதி கூடலில்
ஆடை யின்றி வாடையில் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்தி
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனன் எதுமே.                             சத்திமுத்தப் புலவர்

என் தலைக்கடனே!

ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே!
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே!
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே!
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே!
ஒளிறு வால் அருஞ்சமம் முருக்கிக்
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே!                     (புறநானூறு பொன்முடியார்)

1. பின் இணைப்பு

திருமண அழைப்பு
பேரன்புடையீர்
நிகழும் மங்களகரமான திருவள்ளுவராண்டு 2030 ஆம் ஆண்டு வைகாசித் திங்கள் 8ம் நாள்( 23-05-1999) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணிவரையுள்ள நல் வேளையில்
எமது அருமை மகன்                                                                                                  எமது அருமை மகள்
திருநிறைச்செல்வன்                                                                                               திருநிறைச்செல்வி
இராசேந்திரன்                                                                                                                 இந்துமதி
அவர்களுக்கும்                                                                                                           அவர்களுக்கும்
 

91 East Park Blvd. Scarborough இல் அமைந்திருக்கும் Cedar Brook Community Centre மன்றிலில்; திருமணம் செய்ய பெரியோர்கள் நிச்சயித்து இருக்கிறார்கள். இருமனம் ஒருமனமாக இணையும் இத் திருமண விழாவுக்கு டாக்டர் ஆதிகணபதி சோமசுந்தரம் அவர்கள் தலைமை தாங்கி தமிழ்மறை  (திருக்குறள்) ஓதி தமிழ்மரபு (கற்பியல்) திருமணத்தினை இனிது நடாத்தி வைப்பார். திருமண விழாவுக்குத் தாங்களும் தங்கள் குடும்பமும் வருகை தந்து மணமக்களை வாழ்த்திச் சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இங்ஙனம் தங்கள் நல்வரவை நாடும்

திரு திருமதி தங்கவேலு குடும்பம்                                                                                             திரு திருமதி நவரத்தினம் குடும்பம்
 56, Littles Road, Scarborough                                                                                                                          2-710 Glamorgan Ave. Scarborough                                         (416)- 281 5846                                                                                                                                                              (416) 335 8607

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
                                   பண்பும் பயனும் அது.                                                             (குறள் 45)

 


மணவிழா நிகழ்ச்சி நிரல்

1) மணமகன் தோழர்கள் மற்றும் சுற்றம் சூழ வந்து இருக்கையில் அமர்தல்
2) மணமகள் தோழியர் மற்றும் சுற்றம் சூழ வந்து இருக்கையில் அமர்தல்
3) மனோன்மணியம் தமிழ்த் தெய்வ வணக்கம்
4) தலைவரை முன் மொழிந்து வழி மொழிதல்
5) வரவேற்புரை
6) தலைமையுரை
7) மங்கல நாணை அவையினர் வாழ்த்துதல்
8) மணமக்களின் பெற்றோர் மணமகளின் கையை மணமகன் கையில் வைத்து ”எங்கள் அருமை மகளான இந்துமதியை மனமுவந்து உமக்கு இந்நன் நாளில் தருகின்றோம். நீவிர் இருவரும் என்றும் நிலைத்த அன்புடன் ஈருயிரும் ஓருடலும் போல் பல்லாண்டு பல்லாண்டு இனிது நீடு வாழ்வீர்களாக!” என்று வாழ்த்தி இருவர் மீதும் மலர்களைத் தூவுதல்.
9) தலைவர் மங்கல நாணை வாழ்த்தி மணமகனின் பாட்டன் பாட்டியிடம் கொடுக்க, மண மகன் அதனை இரு கைகளாலும் அவர்களிடம் இருந்து பெற்று அதனை மணமகளின் கழுத்தில் அணிதல்.
10) திருக்குறள் படித்து (அதிகாரம் 5-6ல் உள்ள பத்துக் குறள்கள்) வாழ்க்கை ஒப்பந்தம் செய்து கொள்ளல்
11) மணமக்கள் மாலை மாற்றிக் கொள்ளல்
12) மணமக்கள் தாய் தந்தையர், பாட்டன் பாட்டியை வணங்குதல்
13) வாழ்த்துரை
14) அவையோர் மஞ்சள் அரிசியும் பூவும் தூவி மணமக்களை வாழ்த்துதல்
15) தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்கு மணமக்கள் நிதி அன்பளிப்பு
16) நன்றியுரை

”அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.” (குறள் 44)

ஒருவன் இல்வாழ்க்கையில் தன் துணைவி மேல் செய்யத்தகும் அன்பினையும், பிறர்க்குப் பகுத்து உண்டல் ஆகிய அறத்தினையும் உடைத்தானால் அதுவே வாழ்க்கையின் பண்பும் பயனும் ஆகும்.”

மனோன்மணியத் தமிழ்த் தெய்வ வணக்கம்
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகுஞ்
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டம் இதில்
தக்கசிறு பிறை நுதலுந் தரித்த நறுந் திலகமுமே
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநற் திருநாடும்
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துக் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்;பொருள்முன் இருந்தபடி யிருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்குங் கவின்மலையாளமுந் துளுவும்
உன்னுதரத் உதித்தெழுந்தே யொன்றுபல ஆய்விடினும்
ஆரியம்போல் உலக வழக்கு அழிந்தொழிந்து சிதையாவுன்;
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!                                   (மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை)

வாழ்க்கை ஒப்பந்தம்

மணமக்கள் மணவிழாவில் எடுத்துக் கொள்ளும் உறுதி மொழி

மதிப்புக்குள்ள அவைத் தலைவர் அவர்களே, பெரியோர்களே, தாய்மார்களே!
உங்கள் அனைவர்க்கும் எனது அன்பு கனிந்த வணக்கம்.

யாழ்ப்பாணம் தமிழீழத்தை பிறப்பிடமாகவும், கனடாவை வாழ்விடமாகவும் கொண்ட திரு. திருமதி வேலுப்பிள்ளை தங்கவேலு ஆகியோரின் செல்வன் இராசேந்திரன் ஆகிய நான் இந்நன்னாளில் இங்கு கூடியுள்ள பெரியோர் முன்னிலையில் திரு.திருமதி நவரத்தினம் ஆகியோரின் திருநிறைச்செல்வி இந்துமதி ஆகிய தங்களை இன்று முதல் தமிழ்மரபுப்படி வாழ்க்கைத் துணைவியராக ஏற்றுக் கொள்ளுவதுடன். வாழ்வில் ஏற்படும் இன்ப துன்பங்களில் சமபங்கு ஏற்று தமிழும் சுவையும் போல் இரண்டறக் கலந்து வள்ளுவனும் வாசுகியும் போல் உற்ற கணவன்-மனைவியாக இணைபிரியாது வாழ்வோம் என்று தமிழ்மறை தந்த தெய்வப்புலவர் திருவள்ளுவர் சான்றாக உறுதி கூறி.இந்த மங்கலநாணைஅணிவிக்கிறேன்.

மதிப்புக்குள்ள அiவாத் தலைவர் அவர்களே, பெரியோர்களே, தாய்மார்களே!
உங்கள் அனைவர்க்கும் எனது அன்பு கனிந்த வணக்கம்.

யாழ்ப்பாணம் தமிழீழத்தை பிறப்பிடமாகவும், கனடாவை வாழ்விடமாகவும் கொண்ட திரு.திருமதி பொன்னம்பலம் நவரத்தினம் ஆகியோரின் செல்வி இந்துமதி ஆகிய நான் திரு. திருமதிவேலுப்பிள்ளை தங்கவேலு ஆகியோரின் செல்வன் இராசேந்திரன் ஆகிய தங்களை இன்று முதல் தமிழ்மரபுப் படி என் வாழ்க்கைத் துணைவனாக ஏற்று திருமணம் செய்து கொண்டோம். காதலர்இருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்டதே இன்பம் என்ற தமிழ்மகள் ஒளவையாரின் திருவாக்குக்கு ஒப்ப வாழ்நாள் முழுதும் இருவரும் ஒருவராய் இல்லறம் என்னும் நல்லறத்தை இனிது நடாத்தி வாழ்வில் ஏற்படும் இன்ப துன்பங்களில் சமபங்கு ஏற்று பூவும் மணமும் போல் எஞ்ஞான்றும் உற்ற கணவன் – மனைவியாக ஊழிகாலமும் இணைபிரியாது இனிது வாழ்வோம் என்று தமிழ்மறை தந்த தெய்வப்புலவர் திருவள்ளுவர் சான்றாக உறுதி கூறுகிறேன்” எனக் கூறி. மணமகனுக்கு மாலையிடுதல்.

திருக்குறள் ஓதல்

மண நிகழ்வின் போது மங்கல நாணை மணமகன் மணமகள் கழுத்தில் கட்டியபின் இருவரும் தலைவர் சொல்லிக் கொடுக்க சேர்ந்து ஓதும் திருக்குறள் பாக்கள்.

1) அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.                                                        இல்லற இயல் (2) இல்வாழ்க்கை (5) – (குறள் 44)
( ஒருவன் இல்வாழ்க்கையில் தன் துணைவி மேல் செய்யத்தகும் அன்பினையும், பிறர்க்குப் பகுத்து உண்டல் ஆகிய அறத்தினையும் உடைத்தானால் அதுவே இல்வாழ்க்கையின் பண்பும் பயனும் அந்த வாழ்வே ஆகும். கணவன்-மனைவி அன்புடன் வாழ்வதே இல்வாழ்க்கையின் பண்பு. அறத்தைப் போற்றி வாழ்வதே இல்வாழ்க்கையின் பயன்)

2) அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றிற்
போஓய்ப் பெறுவது எவன்?                                                 இல்லற இயல் (2) இல்வாழ்க்கை (5) – (குறள் 45)
(ஒருவன் இல்வாழ்க்கையை அறத்தின் வழியே செலுத்துவன் ஆயின் அவன் அதற்குப் புறம் ஆகிய நெறியில் போய்ப் பெறும் பயன் யாது? அறநெறியில் இல்வாழ்க்கை நடாத்தினால் போதும். வேறு வழியில் போய்ப் பெறத்தக்க பயன் ஒன்றும் இல்லை. )

3) அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை, அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று.                                         இல்லற இயல் (2) இல்வாழ்க்கை (5) – (குறள் 49)
(இருவகை அறத்தினும் நூல்களால் அறன் என்று சிறப்பித்துச் சொல்லப் பட்டது இல்வாழ்க்கையே. ஏனைத் துறவறமோ எனின், அதுவும் பிறனால் பழித்துப் பேசாதில்லையானால் அவ்; இல்வாழ்க்கையோடு ஒரு தன்மைத்தாக நன்று.)

4) வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன், வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.                                                 இல்லற (2) இல்வாழ்க்கை (5)- (குறள் 50)
இல்லறத்தோடு கூடிவாழும் இயல்பினால் வையத்தின்கண் வாழ்பவன், வையைத்தானே எனினும் வானின்கண் உறையும் தேவருள் ஒருவனாக வைத்து நன்கு மதிக்கப்படும்.

5) மனைத்தக்க மாண்புடையன் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.                                         இல்லற இயல் (2), வாழ்க்கைத்துணை நலம் (6) – (குறள் 51)
(இல்லறத்துக்குத் தக்க நற்குண, நற்செய்கையுடன் கணவன் வரவுக்குத் தக்க வாழ்க்கை நடத்துபவள் வாழ்க்கைத் துணை ஆவாள். நற்குணங்களாவன துறந்தார் பேணலும், வறியார்மாட்டு அருளுடைமையும் முதலாயின. நற்செய்கைகளாவன வாழ்க்கைக்கு வேண்டும் பொருள்கள் அறிந்து கடைப்பிடித்தல், அட்டில் தொழில் வன்மையும், ஒப்புரவு செய்தலும் முதலாயின)

6) மனைமாட்சி இல்லாள் கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.                                                 இல்லற இயல் (2) வாழ்க்கைத்துணை நலம் (6)- (குறள் 52)
(மனையறத்துக்கு உள்ள நற்குண நற்செய்கைகள் இல்லாள் இடத்து இல்லையாயின், அவ் இல்வாழ்க்கை எத்துணை சிறப்பு உடையதாயினும் பயன் இல்லை. இல்வாழ்வுக்கான சிறப்புகள் அனைத்தும் மனைவியிடம் இல்லையானால், அந்த இல்வாழ்க்கையில் சிறப்பிருந்தாலும் அது வாழ்வு ஆகாது.)

7) இல்லதென் இல்லவள் மாண்பானால், உள்ளதென்
உள்ளவள் மாணாக் கடை.                                                     இல்லற இயல் (2) வாழ்க்கைத்துணை நலம் (6) – ( குறள் 53)
(ஒருவனுக்கு மனைவி நற்குண, நற்செய்கை உடையவளானால் வாழ்க்கையில் இல்லாதது என்ன? நற்பண்பு இல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது என்ன? இல்லாள் சிறந்தவளானால் இல்லாதது என்பது என்ன? இல்லவள் சிறந்தவள் அல்லாத போது உள்ளதுதான் என்ன?)

8) தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்து சோர்விலாள் பெண்.                                           இல்லற இயல் (2) வாழ்க்கைத்துணை நலம் (6) – (குறள் 56)
(கற்பினின்றும் வழுவாமல் தன்னைக் காத்துத் தன்னைக் கொண்டவனையும் உண்டி முதலியவற்றால் பேணி, இருவர் மாட்டும் நன்மை அமைந்த புகழ் நீங்காமல் காத்து மேற் சொன்ன நற்குண நற்செய்கை உடையவளானாள் வாழ்க்கையில் இல்லாதது என்ன? நற்பண்பு இல்லாதவளானாள் இல்வாழ்க்கையில் இருப்பது என்ன?)
9) சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும்? மகளிர்
நிறை காக்கும் காப்பே தலை.                                                     இல்லற இயல் (2) வாழ்க்கைத்துணை நலம்(6) – (குறள் 57)
(மகளிரைத் தலைவர் சிறையால் காக்கும் காவல் என்ன பயனைச் செய்யும்? அவர் தமது நிறையால் காக்கும் காவலே தலையானது. நிறை- நெஞ்சைக் கற்பு நெறியில் நிறுத்தல். காவல் இரண்டிலும் நிறைக்காவல் இல்லையெனின் சிறைக்காவலால் பயன் இல்லை என்பார்.)

10) பெற்றான் பெறின்பெறுவர் பெண்டிற் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.                                                                                    (இல்லற இயல் (2) வாழ்க்கைத்துணை நலம் (6)- (குறள் 58)
பெண்கள் தம்மை எய்திய கணவனை வழிபடுதல் பெறுவாராயின், புத்தேளிர் வாழும் உலகின் கண் அவரால் பெரும் சிறப்பினை பெறுவர். தம் கணவரைப் போற்றும் பெண்களைதேவர்கள் வணங்குவார்கள்.


English translation of Kural  

1) If a householder leads a life of love and virtue, that living alone will be fruitful and cultured. ( 2. On Home and Duty, Household Life(5) -Kural 45)

2) If one leads a householder’s life, keeping himself steady in virtue, that itself is best. What new reward is to be had, following the path of a recluse and the like? (2. On Home and Duty, Household Life (5) -Kural 46) 

3) The term  ‘virtue’ signifies only the householder’s life, and if that life is led without blemish, it will be most glorified. (2.On Home and Duty, Household Life (5) -Kural 49) 

4) The householder who lives, never straying from the path of virtue, will be famed like a celestial, as long he lives in this world and he will attain the world of the celestials after the close of this life. (2. On Home and Duty, Household Life (5) – Kural 50) 

5) She alone will be a true wife, who is compassionate and runs the household, keeping the expenses within he husband’s income.(2. On Home and Duty, The Wife (6)- Kural 51) 

6) If the wife has not the virtues suited to domestic life, of what avail will be wealth, however great, to the husband? (2. On Home and Duty, The Wife (6)- Kural 52) 

7) If the wife is virtuous, prosperous life is assured; if the wife chances to be otherwise, life will prove to be of no worth. (2. On Home and Duty, The Wife (6)- Kural 53) 

8) Only she who safeguards in the right way, her husband and his hard- won fame, as well as herself, though the power of her chastity can be truly called a woman. (2. On Home and Duty, The Wife (6)- Kural 56) 

9) Nothing will be gained by trying to guard a woman through captivity; the best security is her guard herself through chastity. (2. On Home and Duty, The Wife (6)- Kural 57) 

10)Blessed with a wife dedicated to the service of the husband and the quality of chastity, a person will assuredly attain the celestial regions after this life.
(2. On Home and Duty, The Wife (6)- Kural 59)


About editor 3017 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply