அருண்மொழி-தமிழ்ச்செல்வி திருமணவிழா தமிழ்த் திருமண அழைப்பிதழ்

அருண்மொழி-தமிழ்ச்செல்வி திருமணவிழா
 தமிழ்த் திருமண அழைப்பிதழ்  

அன்புடையீர்

நிகழும் திருவள்ளுவராண்டு 2033, ஆவணித் திங்கள் 18 ஆம் நாள், ஞாயிற்றுக் கிழமை  (18-08-2002) காலை 10 மணி முதல் 12 மணிவரையுள்ள  நல்வேளையில்,
 
எமது அருமை மகன்                                   எமது அருமை மகள்
திருநிறைச்செல்வன்                                      திருநிறைச்செல்வி
  அருண்மொழி                                          தமிழ்ச்செல்வி
அவர்களுக்கும்                                           அவர்களுக்கும் 
No. 231 Milner Ave . Scarborough (Milner/Markham)  இல் அமைந்திருக்கும்  Peter & Paul Banquet இல்  இத் திருமண விழாவுக்கு டாக்டர் ஆதி கணபதி சோமசுந்தரம் அவர்கள் தலைமை  தாங்கித் தமிழ்மறை ஓதி தமிழ்மரபுத் திருமணத்தினை  இனிதுநடத்தி வைப்பார்.
திருமண விழாவுக்குத் தாங்களும் தங்கள் இல்லத்தவரும் வருகை தந்து மணமக்களை வாழ்த்திச் சிறப்பிக்கும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.  
 இங்ஙனம் தங்கள் நல்வரவை நாடும் 
 
திரு. திருமதி தங்கவேலு குடும்பம் திரு. திருமதி சிற்றம்பலம் குடும்பம்
56, Littles Road, 409-55 Road, Greenbrae Circle
Scarborough. Scarborough.
416)- 281 5846                                (416)  431 2739    
                   அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
  பண்பும் பயனும் அது.       
     (குறள் -45)
 


     தமிழ்த் திருமண விழா  


மணமகன்                              மணமகள்
திருவளர் செல்வன்                                  திருவளர் செல்வி
அருண்மொழி                                           தமிழ்ச்செல்வி 
காலம் – திருவள்ளுவராண்டு 2033, ஆவணித் திங்கள் 18 ஆம் நாள், ஞாயிற்றுக்கிழமை (18-08-2002)
நேரம் – காலை 10 மணி முதல் 
இடம் – No. 231 Milner Ave . Scarborough (Milner/Markham)

யாயும் ஞாயும் யாராகியரோ!
எந்தையும் நுந்தையும் எம் முறை கேளிர்!
யானும் நீயும் எவ்வழி அறிதும்!
செம்புலப் பெயல் நீர்போல் அன்புடை
நெஞ்சம் தாம் கலந்தனவே!                   (குறுந்தொகை- 40)
 
தமிழ்த் தெய்வ வணக்கம்
(பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா)
நீர் ஆரும் கடல் உடுத்த நிலமடந்தைக்கு எழில் ஒழுகும்
சீர் ஆரும் வதனம் எனத் திகழ்பரதக் கண்டம், இதில்
தக்க சிறு பிறை நுதலும் தரித்த நறும் திலகமுமே
தெக் கணமும், அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
அத் திலக வாசனைபோல் அனைத்து உலகும் இன்பம் உற
எத் திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழ் அணங்கே! 
பல் உயிரும் பல உலகும் படைத்து அளித்துத் துடைக்கினும் ஓர்
எல்லை அறு பரம்;பொருள்முன்  இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன் உதரத்து உதித்து எழுந்தே ஒன்றுபல  ஆயிடினும்
ஆரியம்போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதையா உன்;
சீர் இளமைத்  திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!
(மனோன்மணியம் தமிழ்ப் பேராசிரியர் சுந்தரனார்)

*காலை 10.00- மணமகன் தோழன் மற்றும் சுற்றம் சூழவந்து அவையோரை வணங்கி  இருக்கையில் அமர்தல் 
* காலை 10.10- மணமகள் தோழி மற்றும் சுற்றம் சூழ வந்து அவையோரை வணங்கி   இருக்கையில்  அமர்தல் 
* காலை 10.15 – மனோன்மணியம் தமிழ்த் தெய்வ வணக்கம்
* காலை 10..20 -தலைவரை முன் மொழிந்து வழி மொழிதல்.  
* காலை 10.25 – வரவேற்புரை  
* காலை 10.35- தலைமையுரை (டாக்டர் ஆதி கணபதி சோமசுந்தரம்) 
* காலை 10.45 – மங்கலநாணை அவையினர் வாழ்த்துதல் 
* காலை 10.50 – மணமகள் கூறை மாற்றி உடுத்தல் 
*காலை 11.10 – திருக்குறள் ஓதி வாழ்க்கை ஒப்பந்தம் செய்து கொள்ளல்  
 * காலை 11.20 – மணமக்கள் மாலை மாற்றிக் கொள்ளல் 
 * காலை 11.30 – மணமக்கள் தாய் தந்தையர்,  பாட்டன் பாட்டியரை வணங்குதல் 
 * காலை 11.35 – சான்றோர் வாழ்த்துரை 
 *மதியம் 12.35 – அவையோர்  மணமக்களை வாழ்த்துதல்
 * காலை 10.55 – மணமக்களின்  பெற்றோர் மணமகளின் கையை மணமகன் கையில்    வைத்து “எங்கள்  அருமை மகளான தமிழ்ச்செல்வியை  மனமுவந்து   உமக்கு இந்ந நன்னாளில்   தருகின்றோம்.  நீவிர் இருவரும் என்றும்    நிலைத்த அன்புடன் ஈருயிரும் ஓருடலும் போல் பல்லாண்டு பல்லாண்டு இனிது நீடு  வாழ்வீர்களாக!” என்று  வாழ்த்தி இருவர் மீதும் மலர்களைத் தூவுதல்.  
 * காலை 11.05 – தலைவர் மங்கல நாணை வாழ்த்தி மணமகனிடம் கொடுக்க, மணமக ன் அதனை இரு கைகளாலும் அவரிடம் இருந்து பெற்று  மணமகளின் கழுத்தில் அணிதல். 

வாழ்க்கை ஒப்பந்தம்
மணமக்கள் மணவிழாவில் எடுத்துக் கொள்ளும் உறுதி மொழி 
மணமகன்
பெருமதிப்புக்குரிய மணவிழாத் தலைவர் அவர்களே, பேரன்புமிக்க பெரியோர்களே, தாய்மார்களே!
உங்கள் அனைவர்க்கும் எனது அன்பு கனிந்த வணக்கம்.
யாழ்ப்பாணம்   தமிழீழத்தை  பிறப்பிடமாகக் கொண்ட  திரு.திருமதி வேலுப்பிள்ளை தங்கவேலு ஆகியோரின் மகனாகிய அருண்மொழி என்னும் நான்  இந்நன்னாளில் இங்கு கூடியுள்ள அவையோர் முன்னிலையில் திரு. திருமதி சிற்றம்பலம் ஆகியோரின் மகளாகிய தமிழ்ச்செல்வி ஆகிய தங்களை இன்றுமுதல் தமிழ் மரபுப்படி எனது வாழ்க்கைத் துணைவியாக முழுமனதுடன் ஏற்றுக் கொள்ளுவதுடன். அன்புடனும், வாழ்வில் ஏற்படும் இன்ப துன்பங்களில் ஒத்தபங்கு ஏற்றும்  வள்ளுவனும் வாசுகியும் போல்  இல்லறக் கடமையாற்றி வாழ்நாள் எல்லாம் உற்ற துணைவனாக இணைபிரியாது  வாழ்வேன் எனத்  தமிழ்மறை தந்த தெய்வப்புலவர் திருவள்ளுவர் சான்றாகஉறுதி கூறுகின்றேன்.
   

மணமக்கள் மணவிழாவில் எடுத்துக் கொள்ளும் உறுதி மொழி 

மணமகன்

பெருமதிப்புக்குரிய மணவிழாத் தலைவர் அவர்களே, பேரன்புமிக்க பெரியோர்களே, தாய்மார்களே!

உங்கள் அனைவர்க்கும் எனது அன்பு கனிந்த வணக்கம்.

யாழ்ப்பாணம்   தமிழீழத்தை  பிறப்பிடமாகக் கொண்ட  திரு.திருமதி வேலுப்பிள்ளை தங்கவேலு ஆகியோரின் மகனாகிய அருண்மொழி என்னும் நான்  இந்நன்னாளில் இங்கு கூடியுள்ள அவையோர் முன்னிலையில் திரு. திருமதி சிற்றம்பலம் ஆகியோரின் மகளாகிய தமிழ்ச்செல்வி ஆகிய தங்களை இன்றுமுதல் தமிழ் மரபுப்படி எனது வாழ்க்கைத் துணைவியாக முழுமனதுடன் ஏற்றுக் கொள்ளுவதுடன். அன்புடனும், வாழ்வில் ஏற்படும் இன்ப துன்பங்களில் ஒத்தபங்கு ஏற்றும்  வள்ளுவனும் வாசுகியும் போல்  இல்லறக் கடமையாற்றி வாழ்நாள் எல்லாம் உற்ற துணைவனாக இணைபிரியாது  வாழ்வேன் எனத்  தமிழ்மறை தந்த தெய்வப்புலவர் திருவள்ளுவர் சான்றாகஉறுதி கூறுகின்றேன்.   

மணமகள்
பெருமதிப்புக்குரிய மணவிழாத் தலைவர் அவர்களே, பேரன்புக்குரிய பெரியோர்களே, தாய்மார்களே!

உங்கள் அனைவர்க்கும் எனது அன்பு கனிந்த வணக்கம்.

யாழ்ப்பாணம்   தமிழீழத்தை  பிறப்பிடமாகக் கொண்ட, திரு.திருமதி முருகேசு சிற்றம்பலம் ஆகியோரின் மகளாகிய தமிழ்ச்செல்வி ஆகிய நான் இங்கு கூடியுள்ள அவையோர் முன்னிலையில் திரு. திருமதி வேலுப்பிள்ளை தங்கவேலு ஆகியோரின் மகனாகிய அருண்மொழி ஆகிய தங்களை இன்று முதல் தமிழ்மரபுப்படி என் வாழ்க்கைத் துணைவராக முழுமனதுடன் ஏற்றுக் கொள்வதுடன் வாழ்நாள்  முழுதும் அன்புடனும், ஒத்த உரிமை பாராட்;டும் தோழமையுடனும் வாழ்வில் ஏற்படும் இன்ப  துன்பங்களில் சமபங்கு ஏற்று எஞ்ஞான்றும் இணைபிரியாது காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்டதே  இன்பம் என்ற தமிழ்மகள் ஒளவையாரின் திருவாக்குக்கு ஒப்ப இல்லறம் என்னும் நல்லறத்தை இனிது நடத்தி வாழ்நாள் எல்லாம் உற்ற துணைவியாக  வாழ்வேன்  எனத் தமிழ்மறை தந்த தெய்வப்புலவர் திருவள்ளுவர் சான்றாக உறுதி கூறுகிறேன். 

திருக்குறள் ஓதல் 
 மண விழாவின் போது மங்கலநாணை   மணமகன் மணமகள் கழுத்தில் கட்டியபின்  இருவரும் தலைவர் சொல்லிக் கொடுக்க சேர்ந்து ஓதும் திருக்குறள் பாக்கள். 
 1) அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
    பண்பும் பயனும் அது.      
    இல்லற இயல் (2) – இல்வாழ்க்கை (5) – (குறள் 45) 
 (ஒருவன் இல்வாழ்க்கையில்  தன் துணைவி மேல் செய்யத்தகும் அன்பினையும், பிறர்க்குப் பகுத்து உண்டல் ஆகிய அறத்தினையும் உடைத்தானால் அதுவே இல்வாழ்க்கையின் பண்பும் பயனும் ஆகும். கணவன்-மனைவி அன்புடன் வாழ்வதே இல்வாழ்க்கையின் பண்பு. அறத்தைப் போற்றி வாழ்வதே இல்வாழ்க்கையின் பயன்) 

1) If a householder leads a life of love and virtue, that life alone will be fruitful and cultured. ( 2. On Home and Duty, Household Life(5) -Kural 45)

(2)அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றிற்
    போஓய்ப் பெறுவது எவன்?
    இல்லற இயல் (2) இல்வாழ்க்கை (5) – (குறள் 46)
 (ஒருவன் இல்வாழ்க்கையை அறத்தின் வழியே செலுத்துவன் ஆயின்  அவன் அதற்குப் புறம் ஆகிய நெறியில் போய்ப் பெறும் பயன் யாது? அறநெறியில் இல்வாழ்க்கை நடாத்தினால் போதும். வேறு வழியில் போய்ப் பெறத்தக்க பயன் ஒன்றும் இல்லை. ) 

2) If one leads a householder’s life, keeping himself steady in virtue, that itself is best. What new reward is to be had, following the path of a recluse and the like? (2. On Home and Duty, Household Life (5) – Kural 46) 

 3) அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை, அஃதும்
    பிறன்பழிப்பது இல்லாயின் நன்று.  
    இல்லற இயல் (2) இல்வாழ்க்கை (5) – (குறள் 49) 
 (இருவகை அறத்தினும் நூல்களால் அறன் என்று சிறப்பித்துச் சொல்லப் பட்டது இல்வாழ்க்கையே. ஏனைத் துறவறமோ எனின், அதுவும் பிறனால் பழித்துப் பேசாதில்லையானால்அவ்; இல்வாழ்க்கையோடு ஒரு தன்மைத்தாக நன்று.) 

3) The term  ‘virtue’ signifies only the householder’s life, and if that life is led without blemish, it will be most glorified. (2. On Home and Duty, Household Life (5) -Kural 49) 

 4) வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன், வான்உறையும்
 தெய்வத்துள் வைக்கப் படும்.
  இல்லற இயல் (2) இல்வாழ்க்கை (5)- (குறள் 50) 
 இல்லறத்தோடு  கூடிவாழும் இயல்பினால் வையத்தின்கண் வாழ்பவன்,  வையைத்தானே எனினும் வானின்கண் உறையும் தேவருள் ஒருவனாக வைத்து நன்கு மதிக்கப்படும்.  

4) The householder who lives, never straying from the path of virtue, will be famed like a celestial, as long he lives in this world, and he will attain the world of the celestials after the close of this life. (2. On Home and Duty, Household Life (5) – Kural 50) 

 5) மனைத்தக்க மாண்புடையன் ஆகித்தற் கொண்டான்
    வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.   
    இல்லற இயல் (2)-வாழ்க்கைத்துணை நலம் (6) – (குறள் 51)             
 (இல்லறத்துக்குத் தக்க நற்குண, நற்செய்கையுடன் கணவன் வரவுக்குத் தக்க வாழ்க்கை நடத்துபவள் வாழ்க்கைத் துணை ஆவாள். நற்குணங்களாவன: துறந்தார் பேணலும்,  விருந்து அயர்தலும், வறியார்மாட்டு அருளுடைமையும் முதலாயின. நற்செய்கைகளாவ  ன வாழ்க்கைக்கு வேண்டும் பொருள்கள் அறிந்து கடைப்பிடித்தலும்,  

5) She alone will be a true wife, who is compassionate and runs the household, keeping the expenses within he husband’s income.(2. On Home and Duty, The Wife (6)- Kural 51) 

 6) மனைமாட்சி இல்லாள் கண் இல்லாயின் வாழ்க்கை
   எனைமாட்சித் தாயினும் இல்.
 இல்லற இயல் (2) வாழ்க்கைத்துணை நலம் (6)- (குறள் 52) (மனையறத்துக்கு உள்ள நற்குண நற்செய்கைகள் அனைத்தும் இல்லாள் இடத்து இல்லையாயின், அந்த இல்வாழ்க்கை எத்துணை சிறப்பு உடையதாயினும் பயன் இல்லை.  அது வாழ்வு ஆகாது.)

7) If the wife is virtuous, a prosperous life is assured; if the wife chances to be otherwise, life will prove to be of no worth. (2. On Home and Duty, The Wife (6)- Kural 53) 

 7) இல்லதென் இல்லவள் மாண்பானால்,
 உள்ளதென்  உள்ளவள் மாணாக் கடை.   
  இல்லற இயல் (2) வாழ்க்கைத்துணை நலம் (6) – (குறள்  53)  
 (ஒருவனுக்கு மனைவி நற்குண, நற்செய்கை உடையவளானால் வாழ்க்கையில் இல்லாத  து என்ன? நற்பண்பு இல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது என்ன?) 

 8) தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
    சொற்காத்துச் சோர்விலாள் பெண்.  
  இல்லற இயல் (2) வாழ்க்கைத்துணை நலம் (6)     – (குறள்56)                                                       
 (தன்னைத் தக்கபடி காத்துத்  தன்னைக்  கொண்டவனை காத்து, இருவர் மாட்டும் நன்மை அமைந்த புகழ்  நீங்காமல் காத்து நற்குண நற்செய்கைகளை  உடையாளே பெண்ஆவாள்)

7) If the wife is virtuous, a prosperous life is assured; if the wife chances to be otherwise, life will prove to be of no worth. (2. On Home and Duty, The Wife (6)- Kural 53) 

8) Only she who safeguards in the right way, her husband and his hard-won fame, as well as herself, though the power of her chastity can be truly called a woman. (2. On Home and Duty, The Wife (6)- Kural 56) 

 9) சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும்? மகளிர்
    நிறை காக்கும் காப்பே தலை. 
   இல்லற  இயல் (2) வாழ்க்கைத்துணை நலம்(6) – (குறள் 57)                                                             
 (மகளிரைத் தலைவர் சிறையால் காக்கும் காவல் என்ன பயனைச் செய்யும்? அவர் தமது நிறையால் காக்கும் காவலே தலையானது. நிறை- நெஞ்சைக் கற்பு நெறியில் நிறுத்தல். ) 

9) Nothing will be gained by trying to guard a woman through captivity; the best security is her guard herself through chastity. (2. On Home and Duty, The Wife (6)- Kural 57) 

 10) மங்கலம் என்பது மனைமாட்சி, மற்றதன்
    நன்கலம் நன்மக்கட் பேறு.  
 இல்லாற இயல் (2) வாழ்க்கைத் துணை நலம்(6) – குறள் (60) 
 (மனைவியின் நற்குண நற்செய்கையே இல்வாழ்க்கைக்கு மங்கலம். நல்ல மக்களைப் பெறுதலே இல்வாழ்க்ககைக்கு அணிகலம்)

10)Blessed with a wife dedicated to the service of the husband and the quality of chastity, a person will assuredly attain the celestial regions after this life.
(2. On Home and Duty, The Wife (6)- Kural 59)

About editor 3188 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply