கவியரசர் கண்ணதாசன்

கவியரசர் கண்ணதாசன் பேரவை தமிழ்நாடு

அக்டோபர், 2019  

கண்ணதாசன்: எழுதிய கடைசி கவிதை.. நீண்ட காலம் எடுத்து எழுதிய பாடல்.. சீக்கிரம் எழுதிய பாடல்..சிவாஜிக்கு நீண்ட இடைவெளிக்குப் பின் எழுதிய பாடல்..**கவியரசர் கண்ணதாசனின் நினைவு நாள் இன்று.*என்றுமே நினைத்திருக்க வேண்டிய ஒப்பற்ற கவிஞர் “கன்னியின் காதலி” படத்தின் “கலங்காதிரு மனமே உன் கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே” பாடல் மூலம் திரைத்துறையில் நுழைந்தார். 4000-க்கும் அதிகமான சாகா வரம்பெற்ற பாடல்கள் தந்த அவரின் கடைசி படப்பாடல் “மூன்றாம் பிறை” படத்தில் இடம் பெற்ற “கண்ணே.. கலைமானே..கண்டேன் உனை நானே” சரி.இதெல்லாம் தெரிந்ததுதானே என்கிறீர்களா? அவர் கடைசியாக எழுதிய கவிதை எது தெரியுமா?

அது இதுதான்..”மனிதரில் ஒன்றுபட்டுச் சேர்ந்திருப்பீர் – இங்குமழலைகள் தமிழ் பேச செய்துவைப்பீர்தமக்கென கொண்டு வந்ததேதுமில்லை – பெற்றதமிழையும் விட்டுவிட்டால் வாழ்க்கையில்லை!’அமெரிக்காவின் சியாட்டில் மருத்துவமனையில் தன்னைப் பார்க்க வந்திருந்த தமிழ் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்த அவர், அவர்களின் குழந்தைகளிடம் பேச முற்படும்போது அவர்களுக்குத் தமிழ் தெரியவில்லை. அப்போது, ஒரு தாள் எடுத்து இந்த நான்கு வரிகளை எழுதி அவர்களிடம் கையளித்தார் கவிஞர். இதுதான் அவர் எழுதிய கடைசிக் கவிதை.ஒருமுறை மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் கவிஞரிடம் “நான் எந்த தத்தகாரத்தை போட்டாலும் உங்களால பாட்டு எழுத முடியுமா?”என்று கேட்டார்.

“ஏன் முடியாது?”“அப்ப இந்த டியூனுக்கு பாட்டு எழுதுங்க பாப்போம்..”‘டொயிங்.. டொயிங்.. டொயிங்..’ என்று தம்பூராவை மீட்டச் செய்கிறார்.கவிஞர் யோசிக்க ஆரம்பிக்கிறார்.விஸ்வநாதன் “என்ன?” என்பது போல தலையை ஆட்டுகிறார்.“பொன்னென்பேன்” கவிஞர் சொல்கிறார்…விஸ்வநாதன் அதே போல மேலும் வாசிக்க“சிறு பூவென்பேன்…”“அண்ணே..” என்று கவிஞரை கட்டிப்பிடித்துக் கொள்கிறார் விஸ்வநாதன்.சில சமயம் டியூனும் அமையாது, பாட்டும் அமையாது. அந்த மாதிரி நேரத்தில் ஒரு இறுக்கம் ஏற்படும். இது ஒருசில பாடல்களுக்கு மட்டுமே நடந்திருக்கிறது. அப்படி ஒரு பாடல் இயக்குனர் ஸ்ரீதரின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் இடம் பெற்ற ‘நெஞ்சம் மறப்பதில்லை அது தன் நினைவை இழப்பதில்லை…’ என்ற பாடல்.பாடலுக்கான சூழலை சொல்லிவிட்டு இயக்குனர் ஸ்ரீதர் “அடுத்த மாதம் படப்பிடிப்பு. உடனே பாடலைப் பதிவு செய்ய வேண்டும்” என்று கூறினார்.விஸ்வநாதன் பல டியூன்களைப் போட்டார். கவிஞரும் பல பல்லவிகளைக் கொடுத்தார். ஆனால் ஸ்ரீதருக்கு எதுவும் பிடிக்கவில்லை. இப்படியாக இரண்டு மூன்று நாட்கள் போய்விட்டன.இறுதியில் ஒருவழியாக ஒரு டியூனை தேர்வு செய்தார் ஸ்ரீதர். கவிஞருக்கு ஏனோ ‘மூட்’ வரவில்லை. அவர் சொன்ன வரிகள் ஸ்ரீதருக்குப் பிடித்தமானதாக இல்லை. அப்புறமும் ஒன்றும் நடக்கவில்லை.இதற்கிடையில் படப்பிடிப்புக்கான நாளும் நெருங்கியது. பதட்டமானார் ஸ்ரீதர்.ஒரு நாள் கோபத்தின் உச்சிக்கு சென்று “என்னமோ செஞ்சு தொலைங்க…” என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.

பிறகு கவிஞரும் விஸ்வநாதனுமாக உட்கார்ந்து போராடினார்கள்.கவிஞர் ஒரு பல்லவியைச் சொல்ல, உள்ளே டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஸ்ரீதரின் காதில் அது விழுந்து விட்டது.சாப்பிடுவதை விட்டுவிட்டு வேகமாக வெளியே ஓடிவந்து “இதுதான் பல்லவி… சூப்பர்… மேல எழுதுங்க” என்று சத்தமாகச் சொன்னார்.‘அப்பாடி… ஸ்ரீதருக்குப் பிடித்துவிட்டது’ என்று அதே வேகத்தில் மொத்த பாடலையும் எழுதி முடித்து ஸ்ரீதரை வரச் சொல்லி வாசித்து பாடிக் காட்டினார்கள்.“இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்” என்று ஸ்ரீதர் சந்தோஷத்துடன் அவர்களைக் கட்டிப்பிடித்துக் கொண்டார்.ஒரு வழியாக 21 நாட்களுக்குப் பிறகு பாடல் எழுதப்பட்டுவிட்டது. தன் வாழ்நாளிலேயே அதிக நேரம் எடுத்துக்கொண்டு கவிஞர் எழுதிய பாடல் இதுதான்.தன் வாழ் நாளில் அதிக நேரம் எடுத்துக்கொண்டு கவிஞர் எழுதியது ஸ்ரீதரின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் என்றால், கவிஞர் மிகவும் குறைந்த நேரத்தில் எழுதிய பாடலும் இயக்குனர் ஸ்ரீதரின் படத்தில் தான்.‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தை ஸ்ரீதர், தனது சித்ராலயா நிறுவனத்தின் மூலம் தயாரித்தார்.

ஒரு ஆஸ்பத்திரி செட் போடப்பட்டு, படத்தின் பெரும்பாலான காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டன.படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடந்துகொண்டிருக்கும் போது படத்தைப் பார்த்த இயக்குனர் ஸ்ரீதர், அதில் இன்னொரு பாடலைச் சேர்த்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்தார்.படம் இன்னும் ஒரு வாரத்தில் வெளியாகிறது என்ற விளம்பரமும் பத்திரிகைகளில் வந்துவிட்ட நிலையில், அவருக்கு இந்த யோசனை தோன்றியது.உடனடியாக எம்.எஸ்.விஸ்வநாதனை ஆபீசுக்கு வரவழைத்து டியூன் போடச் செய்து, டியூனும் தேர்வாகிவிட்டது.இப்போது பாடல் எழுத கண்ணதாசன் வரவேண்டும்.இன்றைக்குப் போல செல்போன் இல்லாத காலம் அது. கவிஞரை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.ஒருவழியாக கவிஞரை கண்டு பிடித்தபோது, அவர் அரசியல் பொதுக்கூட்டத்திற்காக ஊருக்கு கிளம்பிக்கொண்டு இருந்தார்.“நேரமாகிவிட்டது, நான் போகிற வழியில் சித்ராலயாவுக்கு வந்துவிட்டுப் போய் விடுகிறேன்” என்று சொல்லிவிட்டார்.

தயாரிப்பு நிர்வாகி சண்முகத்திற்கு நம்பிக்கை போய்விட்டது. ‘இந்தப் பாட்டோடு படம் வெளியாக வேண்டும் என்றால், இந்தத் தேதியில் வெளிவராது. சொன்ன தேதியில் வெளியாக வேண்டும் என்றால், ஸ்ரீதர் எடுக்க விரும்புகின்ற பாடல் இல்லாமல் தான் வெளியாகும்’ என்ற முடிவோடு வாசலிலேயே உட்கார்ந்து இருந்தார்.

கூட்டத்திற்குக் கிளம்பிய கவிஞர் “சண்முகம் வா போகலாம்” என்று அவரையும் அழைத்துக்கொண்டு சித்ராலயாவுக்கு வந்தார்.கவிஞர் வந்தவுடன் அங்கு பரபரப்பு பற்றிக்கொண்டது.ஸ்ரீதர் சூழலைச் சொல்ல எம்.எஸ்.விஸ்வநாதன் டியூன் போட, சரியாக பத்து நிமிடங்களில் “முத்தான முத்தல்லவோ” பாடலை எழுதி விட்டு, “ஸ்ரீ, நான் ஊருக்குப் போறேன். ஒரு அஞ்சு ரூபா வேணும்” என்று கேட்டார்.பாடல் அற்புதமாக வந்துவிட்ட மகிழ்ச்சியில் இருந்த ஸ்ரீதர், “இதோ” என்று பணத்தைத் தந்துவிட்டார்.அன்று இரவே பாடல் பதிவு செய்யப்பட்டு, இரவோடு இரவாக செட் போடப்பட்டு, நடிகர்களுக்கும் கால்ஷீட் சொல்லி மறுநாள் காலையில் தொடங்கி மாலைக்குள் பாடல் படமாக்கப்பட்டு படத்தில் சேர்க்கப்பட்டு விட்டது.ஒரு படத்திற்கு கவிஞர், கதை – வசனம் – பாடல்கள் எழுதினார். ஆனால் படப்பிடிப்பு தொடங்கி சில நாட்களிலேயே அந்தப் படம் நின்றுபோனது.அந்தப் படம் ஒரு வித்தியாசமான கதை அமைப்பை கொண்டிருந்ததால், அந்தப் படத்தின் கதையும் அதற்கு எழுதிய இரண்டு பாடல்களும் கவிஞரின் நினைவில் அப்படியே பதிந்துபோனது.

அந்தக்கதை இதுதான்- ஒரு அழகான கிராமம். அங்கே அருகருகே இரண்டு வீடுகள். அந்த இரண்டு வீடுகளுக்கும் வாசல் பகுதியிலும், பின் பகுதியிலும் அழகான பூந்தோட்டம். ஒரு வீட்டில் ஒரு சிறு குடும்பம் தலைமுறை தலைமுறையாய் வசித்து வருகிறது. தற்போது அங்கே ஒரு கணவன்-மனைவி, அவர்களின் இரண்டு மகள்களுடன் வசித்து வருகின்றனர். அந்த இரண்டு பெண்களும் திருமண வயதை அடைந்தவர்கள்.பக்கத்து வீட்டிற்கு ஒரு இளைஞன் அவனது பெற்றோருடன் குடி வருகிறான். அந்த இளைஞன் ஒருநாள் அவர்கள் வீட்டு தோட்டத்தில் நின்று கொண்டிருக்கும் போது, பக்கத்து வீட்டில் இருந்து ஒரு அற்புதமான பாடல் கேட்கிறது. ஆர்வம் தாங்காமல் எட்டிப் பார்க்கிறான்.பக்கத்து வீட்டில் ஒரு அழகான இளம்பெண், பூப்பறித்துக் கொண்டே பாடிக்கொண்டு இருக்கிறாள். அந்தப் பாட்டில் மனதைப் பறிகொடுத்து விடுகிறான்.

தினமும் அதே நேரத்தில் பக்கத்து வீட்டில் இருந்து வரும் பாட்டுக்காக காத்துக் கொண்டிருக்க ஆரம்பிக்கிறான்.ஒரு கட்டத்தில் அவளை திருமணம் செய்து கொள்ள விரும்பி, தன் பெற்றோரைப் பெண் கேட்கச் சொல்கிறான். பெண்ணின் பெற்றோர் ஏதோ சொல்ல வரும்போதெல்லாம், “எங்களுக்கு உங்களைப் பற்றி எல்லாமும் தெரியும்” என்று அவர்களை பேச விடாமல் செய்து விடுகிறார் அந்த இளைஞனின் தந்தை. திரு மணம் நடக்கிறது.முதலிரவில் அந்த இளைஞன் அவளை பாடச்சொல்ல, அப்போதுதான் அவள் வாய்பேச முடியாதவள் என்று தெரியவருகிறது.அதிர்ச்சி அடையும் அவன் கோபத்துடன் அவளிடம் ஏதோ கேட்கப் போகும்போது, வெளியே இருந்து அதே பாட்டு கேட்கிறது.வேகமாக அவன் அந்த அறையை விட்டு வெளியே வந்து பார்த்தால் அவன் மனைவியின் தங்கை பாடிக்கொண்டிருக்கிறாள். அதே இனிமையான குரல்.அக்கா பூப்பறிக்கும் போது தங்கை பாடுவாள், அந்தப் பாட்டினால் ஈர்க்கப்பட்டு அக்காவும் மவுன மொழியில் மனதுக்குள் பாடி, தங்கை பாடுவதற்கேற்ப வாயசைப்பாள் என்பது தெரியவருகிறது.மனைவியை பிரிய நினைக்கிறான். தங்கை அவனிடம், தன் அக்காளுக்கு வாழ்வு கேட்டு கெஞ்சுகிறாள்.“உன் பாட்டில் மனம் பறிகொடுத்து, அதைப் பாடியது உன் அக்கா என்று நினைத்து அவளை திருமணம் செய்து கொண்டேன். நீ திருமணம் செய்துகொள்ளாமல் எங்கள் கூடவே இருந்து தினமும் பாட ஒப்புக்கொண்டால் உன் அக்காளுடன் வாழ்கிறேன்” அன்று அவன் சொல்லி விடுகிறான்.வாய்பேச முடியாத அக்காவுக்காக தங்கை ஒத்துக் கொள்கிறாள். இந்த நிலையில் அக்காவுக்குக் குழந்தை பிறக்கிறது.அக்காவின் குழந்தைக்கு தங்கை தாலாட்டுப் பாடுகிறாள். இதுதான் பாட்டுக்கான சூழல்.

கவிஞர் எழுதிய பாட்டின் பல்லவி இது…“தாய் பேச நினைப்பதெல்லாம்நீ பேச வேண்டும்தாய் தூங்கத் தாலாட்டுநீ பாட வேண்டும்நீ பாடும் தாலாட்டைதாய் கேட்க வேண்டும்தன் நிலை மாறி அவள்கூடமொழி பேச வேண்டும்”அந்தப் படம் நின்று போனதால், அதை அப்படியே விட்டுவிட்டார்.

பின்நாளில் ‘பாலும் பழமும்’ படத்திற்கு பாடல் எழுத அமர்ந்த போது, பாட்டுக்கான சூழல் சொல்லப்பட்டது. முன்பு தாலாட்டாக தான் எழுதிய பாடலை, இந்த இடத்தில் காதல் பாட்டாக மாற்றி எழுதினால் என்ன என்று கவிஞருக்குத்தோன்றியது. பிறகு அதையே மாற்றி எழுதித் தந்தார், அந்தப் பாடல்தான் இது..“நான் பேசநினைப்பதெல்லாம்நீ பேச வேண்டும்நாளோடும்பொழுதோடும்உறவாட வேண்டும்நான் காணும் உலகங்கள்நீ காண வேண்டும்நீ காணும் பொருள்யாவும்நானாக வேண்டும்”வாய்பேச முடியாத தன் அக்கா மனவருத்தத்தில் இருக்கும்போது, அவள் மனதுக்கு ஆறுதலாக தங்கை பாடுவதாக இதே படத்திற்கு கவிஞர் இன்னொரு பாடல் எழுதி இருந்தார். அதன் பல்லவி-“மண்ணில் கிடந்தாலும்மடியில் இருந்தாலும்பொன்னின் நிறம் மாறுமோ…”என்று தொடங்கும் பாடல்.

பின்நாளில் ‘பாசமலர்’ படத்திற்கு அதே டியூனுக்கு வார்த்தைகளை மாற்றி எழுதித் தந்தார். அந்தப் பாடல்தான்…“மலர்ந்தும் மலராதபாதி மலர் போலவளரும் விழி வண்ணமே” என்ற பாடலாகும்.“ஏன் பிறந்தாய் மகனே… ஏன் பிறந்தாயோ…”பட்டிதொட்டி எங்கும் ஒலித்த பாடல் இது. இன்றும் கண்ணதாசனின் புகழ் பாடிக்கொண்டிருக்கின்ற பாடல்களிலே அதுவும் ஒன்று.இந்தப் பாடல் கண்ணதாசனின் திரை வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய பாடல் என்றால் நம்ப முடிகிறதா?ஒரு படத்தின் அனைத்து பாடல்களையும் தானே எழுத வேண்டும் என்ற ஆசையில், ‘கண்ணதாசன் பிலிம்ஸ்’ என்ற பெயரில் ஜனகா பிலிம்சுக்காக ‘மாலையிட்ட மங்கை’ படத்தை கவிஞர் தயாரித்தார். பாடல்கள் சூப்பர் ஹிட். ஆனாலும் பாடல் எழுத குறைவான வாய்ப்புகளே அவருக்கு வந்து கொண்டிருந்தன.‘தெனாலிராமன்’ படத்தின்போது கவிஞருக்கும், சிவாஜிக்கும் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக, சிவாஜியின் படங்களுக்கு கவிஞர் பாடல் எழுதவில்லை.

‘கண்ணதாசன் எழுத வேண்டாம்’ என்று சிவாஜி சொல்லவில்லை. ஆனால் பிரச்சினையைப் பற்றி தெரிந்ததால், தயாரிப்பாளர்கள் ‘நமக்கு ஏன் வம்பு’ என்று அழைக்காமல் இருந்துவிட்டார்கள்.அதே சமயம், கவிஞர் பாடல்களை விட வசனம் தான் அதிகமாக எழுதிக்கொண்டிருந்தார். இந்த சமயத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மிகமிக பிஸியாக பாடல்கள் எழுதிக்கொண்டு இருந்தார்.அவரிடம் ‘பாகப்பிரிவினை’ படத்திற்கான பாடல்களை எழுதும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது. அவரும் இரண்டு பாடல்களை எழுதித் தந்தார்.மூன்றாவது பாடல் வேண்டும் என்று கேட்டபோது, “நான் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களுக்கு பாடல் எழுத வேண்டும். நிச்சயம் அதற்கு இரண்டு வாரங்கள் ஆகிவிடும். நீங்கள் அவசரம் என்று கேட்கிறீர்கள். ஆகவே இந்தப் பாடலை கண்ணதாசனை வைத்து எழுதிக்கொள்ளுங்கள். நான் வேண்டுமானால் அவரிடம் பேசுகிறேன்” என்றார்.சிவாஜியின் ஒப்புதல் இல்லாமல் கண்ணதாசனை வைத்து பாடல் எழுத முடியாது. மற்ற பாடலாசிரியர்களால் குறுகிய காலத்தில் பாடல் எழுத முடியாது. எனவே சிவாஜியிடமே கேட்டு விடுவோம் என்று அவரிடம் சென்று முழு விவரத்தையும் சொல்லிக் கேட்டார்கள்.“எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அவன் ஒத்துக்கிட்டான்னா எழுதட்டும்” என்று சிவாஜி சொல்லி விட்டார். “அவர் சரின்னு சொல்லிட்டாரு…

கண்ணதாசன் சொல்லணுமே…” தயக்கத்துடன் வந்து கவிஞரை சந்திக்கிறார்கள்.கவிஞர் சிறிது நேரம் யோசித்துவிட்டு, “எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை, எழுதுறேன்” என்று சொல்லி விட்டார். ‘பாகப்பிரிவினை’ படத்திற்கு கவிஞர் எழுதிய முதல் பாடல், “ஏன் பிறந்தாய் மகனே..”.அடுத்த பாடலை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களை எழுதச் சொல்லி இருந்தார்கள். ஆனால் விதியின் கொடுமை… தவறாக செய்யப்பட்ட ஒரு அறுவை சிகிச்சையின் காரணமாக, பட்டுக்கோட்டையார் தனது 29-ஆவது வயதில் காலமானார்.தன் சொந்த சகோதரனே இறந்து போனது போன்ற சோகம் கவிஞருக்கு.
“சின்ன வயதுமகன்சிரித்தமுகம் பெற்றமகன்அன்னைக் குணம்படைத்தஅழகுமகன் சென்றானேகன்னல்மொழி எங்கேகருணைவிழி தானெங்கே?
மன்னர் மணிமுடியில்வாழ்ந்திருந்த செந்தமிழை(த்)
தென்னவர் பொருளாக்கித்தீங்கவிதை தந்தமகன்கண்மூடித் தூங்குகிறான்கனவுநிலை காணுகிறான்தன்னுயிரைத் தருவதனால்தங்கமகன் பிழைப்பானோ?
என்னுயிரைத் தருகின்றேன்எங்கே என் மாகவிஞன்?”

என்று தன் சோகத்தைக் கவிதையாக்கினார்.பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மட்டும் அன்று, “கண்ணதாசன் எழுதட்டும்” என்று சொல்லாமல் இருந்திருந்தால், தமிழ் சினிமாவிற்கும், சிவாஜிக்கும், கண்ணதாசனுக்கும் மிகப்பெரிய இழப்பாக இருந்திருக்கும்.

பிறகு திரையுலக நண்பர்கள் கவிஞரையும் சிவாஜியையும் தனியே சந்திக்க வைத்தார்கள். இருவரும் மனம்விட்டுப் பேசி சமாதானம் ஆனார்கள். அதன் பிறகு நடந்ததெல்லாம் சரித்திரம்!

*அம்ரா பாண்டியன்**மன்னை*


சின்ன வயதுமகன்சிரித்தமுகம் பெற்றமகன்அன்னைக் குணம்படைத்தஅழகுமகன் சென்றானேகன்னல்மொழி எங்கேகருணைவிழி தானெங்கே?மன்னர் மணிமுடியில்வாழ்ந்திருந்த செந்தமிழை(த்)தென்னவர் பொருளாக்கித்தீங்கவிதை தந்தமகன்கண்மூடித் தூங்குகிறான்கனவுநிலை காணுகிறான்தன்னுயிரைத் தருவதனால்தங்கமகன் பிழைப்பானோ?என்னுயிரைத் தருகின்றேன்எங்கே என் மாகவிஞன்?”என்று தன் சோகத்தைக் கவிதையாக்கினார்.

பேரவை தமிழ்நாடு

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply