India abstains during vote on resolution at UNHRC; urges Sri Lanka to fulfill its commitments
Ahead of the voting, India said that as an immediate neighbour, it has contributed to the relief, resettlement, rehabilitation and reconstruction process in Sri Lanka after 2009
India was among 14 countries which abstained from voting at UNHRC. (File/AP)
March 23, 2021
India, which abstained during the vote on a strong resolution against Sri Lanka’s human rights practices at the UNHRC, on Tuesday urged Colombo to fulfill its commitments on the devolution of political authority, to carry forward the process of reconciliation and address the aspirations of the Tamil community in the island nation.
The resolution titled ‘Promotion of Reconciliation Accountability and Human Rights in Sri Lanka’ was adopted by the UN Human Rights Council (UNHRC) after 22 members out of 47-member Council voted in favour of it, which gives the UN body a mandate to collect evidence of crimes committed during the country’s brutal three decade-long civil war against the LTTE.
Eleven members voted against the resolution tabled by the Core Group on Sri Lanka consisting of countries like the United Kingdom, Canada and Germany.
India was among 14 countries which abstained from voting.
Ahead of the voting, India said that as an immediate neighbour, it has contributed to the relief, resettlement, rehabilitation and reconstruction process in Sri Lanka after 2009.Explained |Sri Lanka at the UN rights council, another test for India
India’s approach to the question of human rights in Sri Lanka is guided by two fundamental considerations, Pawankumar Badhe, First Secretary, Permanent Mission of India in Geneva said in a statement.
“One is our support to the Tamils of Sri Lanka for equality, justice, dignity and peace. The other is in ensuring the unity, stability and territorial integrity of Sri Lanka.
“We have always believed that these two goals are mutually supportive and Sri Lanka’s progress is best assured by simultaneously addressing both objectives,” Badhe said.
“We would urge that the Government of Sri Lanka to carry forward the process of reconciliation, address the aspirations of the Tamil community and continue to engage constructively with the international community to ensure that the fundamental freedoms and human rights of all its citizens are fully protected,” he said.
He said India supports the call by the international community for the Government of Sri Lanka to fulfill its commitments on the devolution of political authority, including through the early holding of elections for Provincial Councils and to ensure that all Provincial Councils are able to operate effectively, in accordance with the 13th Amendment to the Sri Lankan Constitution.
The 13th Amendment provides for devolution of power to the Tamil community. India has been pressing Sri Lanka to implement the 13th amendment which was brought in after the Indo-Sri Lankan agreement of 1987.
The Sinhala majority hardliners of the ruling Sri Lanka People’s Party have been advocating a total abolition of the island’s provincial council system established in 1987.
At the same time, Badhe said, India believes that the work of Office of the Human Office of the United Nations High Commissioner for Human Rights (OHCHR) should be in conformity with mandate given by the relevant resolutions of the UN General Assembly.
Ahead of elections in Tamil Nadu next month, major political parties in the state had urged the Indian government to take a stand against Sri Lanka in the UNHRC session.
During External Affairs Minister S. Jaishankar visit to Sri Lanka in January, he underlined backing for Lanka’s reconciliation process and an “inclusive political outlook” that encourages ethnic harmony.
Jaishankar had met the Tamil leadership and discussed issues pertaining to the development and devolution and the role of provincial councils as part of national reconciliation.
“As we promote peace and well-being in the region, India has been strongly committed to the unity, stability and territorial integrity of Sri Lanka. Our support for the reconciliation process in Sri Lanka is longstanding, as indeed for an inclusive political outlook that encourages ethnic harmony,” he said during a joint media interaction with his counterpart Dinesh Gunawardena in Colombo.
“It is in Sri Lanka’s own interest that the expectations of the Tamil people for equality, justice, peace and dignity within a united Sri Lanka are fulfilled. That applies equally to the commitments made by the Sri Lankan government on meaningful devolution, including the 13th Amendment to the Constitution,” Jaishankar had said.
- Five security personnel killed in IED blast in Naxal-hit Narayanpur
- If NYAY successful in Kerala, will implement it across country: Rahul
- India files appeal against Cairn arbitration award
According to the Lankan government figures, over 20,000 people are missing due to various conflicts including the three-decade brutal war with Lankan Tamils in the north and east which claimed at least 100,000 lives.
The Tamils alleged that thousands were massacred during the final stages of the war that ended in 2009 when the government forces killed Liberation Tigers of Tamil Eelam (LTTE) chief Veluppillai Prabhakaran.
The Sri Lankan Army denies the charge, claiming it as a humanitarian operation to rid the Tamils of LTTE’s control.
——————————————————————————————————————–
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் ஐ.நா உறுப்பு நாடுகளுக்கு எழுதியுள்ள கடிதம்
27 பெப்ரவரி 2012
மனித உரிமை சபையின் 19வது மாநாடு ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்று வருவதைத் தொடர்ந்து அதில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளுக்கும் கடிதமொன்றினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் அனுப்பியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபை – 19 வது மாநாடு, ஜெனீவா, மார்ச் 2012
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராகிய நான் சிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வசிக்கும் தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி என்பதால் அவர்கள் சர்ர்பாக இந்த கடிதத்தினை உங்களுக்கு எழுதுகின்றேன். சிறிலங்காவில் அமைதி, நீதி, ஜனநாயகம் ஆகியவை நிலைக்க வேண்டும் என்பதற்காக தாங்கள் எடுத்து வரும் அனைத்து முயற்சிகளுக்கும் முதலில் என் நன்றியினை கூற கடமைப்பட்டிருக்கிறேன்,
போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விசாரணைகள் நடத்தப்படுவதோடு மக்களுக்கு உரிய தீர்வுகள் ஏற்படுத்தித் தரப்படும் என மே 2009 இல் சிறிலங்கா ஜனாதிபதி அளித்த உறுதிமொழிகளைத் தொடர்ந்து இந்த விடயம் குறித்து அறிவுறுத்த ஜூன் 2010 இல் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்று தலைமைச் செயலரால் நியமிக்கப்பட்டது.
31 மார்ச் 2011 அன்று இந்தக் குழுவினர் தங்கள் அறிக்கையை தாக்கல் செய்தனர். போரின் இறுதிக் கால கட்டங்களில் இரு தரப்பிலும் போர்க்குற்றங்களும், மனித உரிமை மீறல்களும் நடந்திருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஐ.நா வின் அறிக்கையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றதுடன் அதில் குறிப்பிடப்பட்டிருந்த பரிந்துரைகளை உடனடியாக செயல்படுத்துமாறும் கேட்டுக் கொண்டோம். உண்மையை அனைவருக்கும் விளங்கச் செய்வதும் அதற்கான பொறுப்புக்களை எடுத்துக் கொள்வதுமே இது போன்ற துயரங்கள் மீண்டும் நடக்காத வண்ணம் தடுக்கும் என்ற ஆறுதலும் அடைந்தோம்.
இதனிடையே சிறிலங்கா அரசின் சார்பில் சமரசத் தீர்வுகளுக்காக மே 2010 இல் அமைப்பு ஒன்றும் ஏற்படுத்தப்பட்டது. இந்தக குழுவினர் விசாரணை மேற்கொண்டு அறிக்கையை தாக்கல் செய்த பின்னர் உரிய தீர்வுகள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசு உறுதியளித்திருந்தது. நவம்பர் 2011 இல் இக்குழுவினர் தங்கள் அறிக்கையை தாக்கல் செய்தனர். இக்குழுவின் அறிக்கைகள் போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய தீர்வுகளை வழங்கும் வகையில் சர்வதேச தரத்தில் இல்லை என்பதை ஏற்கனவே அனைத்து நாடுகளுடனும் நாங்கள் பகிர்ந்து கொண்டுள்ளோம்.
இருப்பினும் போருக்குப் பின்னரும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் குவிக்கப்பட்டிருந்த பெருமளவிலான அரசப்படைகள் அகற்றப்பட வேண்டும். போரின் போது அரசப்படைகளின் மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகள் மற்றும் இது தொடர்பான தகவல்கள் அனைவருக்கும் அளிக்கும் வண்ணம் சட்டப்படியான அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட சில ஏற்புடைய பரிந்துரைகளையும் இந்த அமைப்பு வழங்கியிருந்தது. அதிகாரங்கள் பகிந்தளிக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை இந்த குழுவினர் உணர்ந்து தெரியப்படுத்திய பின்னரும் கூட அதற்கான நடவடிக்கைகள் அரசினால் மேற்கொள்ளப்படவே இல்லை. அரசியல் ரீதியான அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படாமல் இருப்பதே சிறிலங்காவின் தமிழர் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் ஆணிவேராக அமைந்துள்ளது என்பதை விளங்கப்படுத்திய பின்னரும் அரசினால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவின் பரிந்துரைகளை கூட குறிப்பிட்ட கால கட்டத்திற்குள் நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகள் ஏதும் அரசால் மேற்கொள்ளப்படவில்லை.
இராணுவத்தினால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளோரின் பட்டியலை அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்ற இடைக்கால அறிக்கையையும் செப்டம்பர் 2010 இல் இக்குழுவினர் வெளியிட்டனர். ஆனால் அதையும் செய்ய அரசு தவறி விட்டது. தொடர்ந்தும் இது போன்ற எந்த பரிந்துரைகளையும் கண்டு கொள்ளாமல் இருப்பதும் நாட்டில் மீண்டும் அமைதியையும் நீதியையும் நிலை நிறுத்தும் வகையிலான சமூக அரசியல் மாற்றங்களையும் அரசு உண்டாக்காமல் இருப்பதே தற்போது சிறிலங்காவில் வாழும் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான முக்கிய காரணம்.
சிறிலங்காவில் தொடர்ந்தும் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களும் , மனிதர்களுக்கான பாதுகாப்பற்ற ஒரு நிலையம் எங்களுக்கு பெரும் துன்பத்தை உண்டுபண்ணியுள்ளது. கடந்த சில மாதங்களிலும் கூட சிலர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். வர்த்தகம், மக்களின் தினசரி வாழக்கை, தமிழர்கள் வாழும் தெருக்கள் மட்டுமல்லாது ஆட்சியிலும் கூட ராணுவத்தின் குறுக்கீடு அதிக அளவில் உள்ளது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்குப் பகுதியில் நிர்வாகமும் சீர்கெட்டுப் போயுள்ளது. தனியாருக்குச் சொந்தமான நிலங்கள் அரசினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. வடக்குப் பகுதிகளில் மக்கள் மீண்டும் குடியேறிவரும் இடங்களிலும் அதிகப்படியான ராணுவ முகாம்களை அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது போன்ற விடயங்களிலிருந்தே சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்களின் சமூக மற்றும் அரசியல் சுதந்திரங்களில் நிலவும் ஒருதலைச் சார்பான நிலையை தெளிவாக அறிந்து கொள்ள முடியும். இராணுவத்தினால் பாதிக்கப்பட்டிருப்பவர்களில் அதிகப்படியானோர் பெண்களும், சிறார்களும் தான். போரினில் கணவனை இழந்த பெண்கள், உறவுகளை இழந்து அனாதைகள் ஆக்கப்பட்டவர்களை குறிவைத்தே வன்முறைகள் கட்டவிழ்த்து விடப் படுகின்றன. விடுதலைப்புலிகள் அமைப்பில் பணியாற்றிய பெண்கள் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த பெண்கள் துணை ராணுவப் படையினரால் கற்பழிக்கபட்டும், பெரும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டும் வருகின்றனர். ஆட்கடத்தல் , திட்டமிட்ட விபச்சாரம் உள்ளிட்டவற்றிலும் இவர்கள் பயன்படுத்தபடுகின்றனர்.
சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு கடந்த அறுபது ஆண்டுகளாகவே ஆளும் தரப்பினரால் மறுக்கப்பட்டே வந்துள்ளது. தற்போதும் தமிழ்மக்களின் ஜனநாயகம் குறித்த கேள்விகளுக்கு அரசு மௌனம் சாதித்து வருவதோடு சிறிலங்காவில் அதிகமாக தமிழர்கள் வாழ்ந்து வரும் வடக்கு மற்றும கிழக்கு பகுதிகளில் சிங்களவர்களை அதிக அளவில் குடியேற்றும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பொதுச் சேவை ஸ்தாபனங்களில் பணியாற்றி வரும் தமிழர்கள் அகற்றப்பட்டு வருவதோடு ராணுவத்தினை சேர்ந்தோருக்கு அந்த பணியிட வாய்ப்புக்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. வடக்கு, கிழக்கு பகுதிகளில் வசித்து வரும் தமிழ் மக்களின் கலாச்சாரம், மொழி, சமய நிகழ்வுகள் உள்ளிட்டவற்றிலும் ராணுவத்தினர் குறுக்கிட்டு வருகின்றனர். இந்துக்களின் வழிபாட்டுத் தலங்கள் பல அழிக்கப்பட்டு புத்த சமய கோவில்கள் புதிதாக அங்கு நிறுவப்பட்டு வருவது இதற்கு ஒரு சிறந்த சாட்சியம்.
தற்போது நிலவி வரும் நிலைகளுக்கு மாறாக வடக்கு, கிழக்குப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஆட்சி அதிகாரங்களை ஏற்படுத்திக் கொடுத்து இனப் பிரச்சனைகளுக்கு முடிவு ஏற்படும் வகையில் விரைந்து அரசு செயல்பட தயாராகும் பட்சத்தில் அவர்களுடனான பேச்சு வார்த்தைகளுக்கும் நாங்கள் தயாராகவே இருந்தோம். இது தொடர்பாக கடந்த ஜனவரி 2011 முதல் அரசுடன் நடத்தப்பட்ட இரு தரப்பு தொடர் பேச்சு வார்த்தைகளில் எந்த சுமூக முடிவும் எட்டப்படவில்லை. ஜனவரி 2012 இல் பொறுப்பற்ற வகையில் இரு தரப்பு பேச்சு வார்த்தைகளையும் அரசு விலக்கிக் கொண்டுள்ளது. ஒன்றுபட்ட தேசத்தில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய பயனுள்ள நிரந்தர அரசியல் தீர்வினை நாங்களும் ஏற்றுக் கொள்ளத் தயாராகவே உள்ளோம்.
போரின் இறுதிக் கால கட்டங்களில் இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களுக்கும், இழப்பீடுகளுக்கும் உணமையான நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதிலும் நாங்கள் உறுதியாகவே உள்ளோம். உணமையையும், நீதியையும் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது மக்களின் பிரதிநிதி என்ற முறையில் எங்கள் கடமை என்பதனையும் நன்கு உணர்ந்துள்ளோம். இந்த விடயத்தில் இது வரையிலும் நாங்கள் பின்னடைவையே சந்தித்து வந்து கொண்டிருக்கிறோம் என்பதை மறுக்க முடியாது. பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்தை சேர்ந்த மக்கள் அதிலிருந்து மீண்டு தங்கள் வாழக்கையை மீளக் கட்டியெழுப்ப அவசர உதவிகளை விரைந்து செய்வதற்கான முக்கியப் பொறுப்பும் அரசுக்கு உள்ளது. தனிப்பட்ட விருப்பு , வெறுப்புக்களை மறந்து மீண்டும் வன்முறை பாதைகளுக்கு செல்லாமல் அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய சமரசத் தீர்வினை உண்டாக்குவதே எங்கள் நோக்கம். இதற்காகவே இரு தரப்பிலும் போரின் இறுதிக் கட்டங்களில் நடந்த குற்றங்கள் குறித்தான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையினையும் நாங்கள் விடுத்து வந்தோம்.
அரசினால் அமைக்கப்பட்ட விசாரணை அமைப்பின் பரிந்துரைகள் இதுவரையிலும் அமல்படுத்தப்படாதது உள்ளிட்ட பல விடயங்களுக்கும் பொறுப்பான ஒரு பதிலும் உத்திரவாதமும் தற்போது ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் சபையின் 19 வது மாநாட்டில் எடுக்கப்படும் என நாங்கள் கருதுகிறோம். அரசினால் அமைக்கப்பட்ட விசாரணைக் அமைப்பின் பரிந்துரைகளை இதுவரையிலும் செயல்படுத்தாமல் அரசு புறக்கணித்து வந்துள்ளது என்பது தாங்கள் அறிந்ததே. எனவே தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் எடுக்கப்படவிருக்கும் முடிவு இதற்கான தீர்வினை ஏற்படுத்தித் தருவதற்கு சிறிலங்க அரசாங்கத்தை நிர்பந்தம் செய்யும் வகையும் அமைவதோடு தமிழ் மக்களுக்கான உரிய அங்கீகாரம் பெற்றுத் தரும் வகையிலும் அமைய வேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.
தங்கள் உண்மையுள்ள,
இரா. சம்பந்தன்,
தலைவர் , தமிழ் தேசியக் கூட்டமைப்பு.
——————————————————————————————————————–
Leave a Reply
You must be logged in to post a comment.