மியன்மார் மக்கள் மீண்டும் இராணுவ சர்வாதிகார ஆட்சியின் பிடிக்குள் சிக்குண்டுள்ளார்கள்!

மியன்மார் மக்கள் மீண்டும் இராணுவ சர்வாதிகார ஆட்சியின் பிடிக்குள் சிக்குண்டுள்ளார்கள்!

நக்கீரன்

கடந்த 10 ஆண்டுகளில் 40 க்கும் மேற்பட்ட நாடுகளின்   இராணுவம் புரட்சி  மூலம்  ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இதில் இராணுவப்  புரட்சி செய்ய முனைந்து தோல்வியடைந்த நாடுகளும் உண்டு. 

நைசீரியாவில்   18 பெப்ரவரி 2010 இல் புரட்சி மூலம் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.  அதற்கு முன்னரும் நைசீரியாவில் இராணுவம் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றி ஆட்சி செய்து வந்திருக்கிறது. முதல் இராணுவப் புரட்சி 04 சனவரி 1966 இல் இடம்பெற்றது. இதன் பின்னர் 1993 வரை ஏழுமுறை இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றி ஆண்டுவந்தது. 1999 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மக்களாட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.

இப்போது  01 பெப்ரவரி, 2021 இல் மியன்மாரில்  புரட்சி மூலம் இராணுவம் ஆட்சியை  கைப்பற்றியுள்ளது.  இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது இது முதல் தடவையல்ல.1962 இல் முதல் இராணுவப் புரட்சி நடந்தேறியது.  அதன் பின்னர் 26 ஆண்டுகள்  சோசலீச நிகழ்ச்சி நிரல் கட்சி என்ற பெயரில் இராணுவ சர்வாதிகார ஆட்சி  நடைபெற்று வந்தது. 2011 இல் இராணுவ ஆட்சி  உத்தியோகபூர்வமாகக் கலைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடந்து  பொதுத் தேர்தலில்  மக்களாட்சி அரசாங்கம் நிறுவப்பட்டது.

மியன்மார் இராணுவம் அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது தேசிய விவகாரங்களில் தனது மேலாதிக்கத்தினை உறுதி செய்யும் வகையில் சில நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. அரசியலமைப்பு விதிகளின் படி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 25 விழுக்காடு இடங்கள் இராணுவத்திற்கு ஒதுக்கப்பட வேண்டும் எனவும் அதனைவிட மேலதிகமாக 25 விழுக்காடு  இடங்களைக் கைப்பற்றுவதற்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு ஒர் அரசியல் கட்சி மூலம் முனையலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.Myanmar military coup amid alleged election irregularities has U.S.  threatening action against coup leaders | War Is Boring

இராணுவப் புரட்சியை அடுத்து ஆங் சான் சூ கி (Aung San Suu Kyi )  தலைமையில் ஆண்டு கொண்டிருந்த சனநாயகத்துக்கான தேசிய லீக்கின்  தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சனாதிபதி வின் மைண்ட் (Win Myint) மற்றும் மாநில ஆலோசகர் ஆங் சான் சூகி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த  நொவெம்பர் 08 இல் 2020 நடைபெற்ற தேர்தலில்  நாடாளு மன்றத்தின்  கீழ்ச் சபையிலும் மேல் சபையிலும் சூகி  தலைமை தாங்கிய  சனநாயகத்துக்கான தேசிய லீக்  476 இடங்களில் 396 இடங்களை கைப்பற்றி மகத்தான வெற்றி ஈட்டியது. 2020 தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் மியான்மர் நாடாளுமன்றம் சத்தியம் செய்யவிருந்ததற்கு முந்தைய நாள் ஆட்சிக் கவிழ்ப்பு நிகழ்ந்தது,

அமைச்சர்கள்,  துணை அமைச்சர்கள்  மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சனாதிபதி வின் மைண்ட்  மற்றும்  ஆங் சான் சூகி  ஆகியோர்  இரண்டு வாரங்களுக்குத்  தடுத்து வைக்கப்பட்டனர். 

இராணுவம் நொவெம்பர் 2020 இல் நடந்த பொதுத் தேர்தலின் முடிவுகள்  செல்லாது என்று அறிவித்ததுடன், அவசரகாலத்தின் முடிவில் ஒரு புதிய தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடு செய்யப்படும் எனவும்   கூறியது.

பெப்ரவரி 3, 2021 அன்று, இயற்கைப்  பேரழிவு மேலாண்மை சட்டத்தின் 25 வது பிரிவின் கீழ் பரப்புரை  வழிகாட்டுதல்கள் மற்றும் COVID-19 தொற்று கட்டுப்பாடுகளை மீறியதற்காக வின் மைன்ட் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அவசரகால COVID-19 சட்டங்களை மீறியதற்காகவும், வானொலி மற்றும் தகவல்தொடர்பு சாதனங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்ததற்காகவும், குறிப்பாக அவரது பாதுகாப்புக் குழுவிலிருந்து ஆறு ICOM சாதனங்கள் மற்றும் ஒரு வாக்கி-டாக்கி, மியன்மாரில் தடைசெய்யப்பட்டவை மற்றும் இராணுவம் தொடர்பான அனுமதி தேவை என்பதற்காகவும் ஆங் சான் சூகி மீது குற்றம் சாட்டப்பட்டது. பிப்ரவரி 16 அன்று, தேசியப்  பேரிடர் சட்டத்தை மீறியதற்காக சூகி  மீது கூடுதல் குற்றவியல் குற்றச்சாட்டு போடப்பட்டது.  Myanmar news: Myanmar army chief says coup was 'inevitable' | World News -  Times of India

பர்மா என்று முன்னர் அழைக்கப்பட்ட மியன்மார் 1948 இல் பிரிட்டனில் இருந்து சுதந்திரம் பெற்றது. அன்றிலிருந்து  அரசியல் உறுதியின்மைக்கு அது ஆளாகிவருகிறது. 1958 மற்றும் 1960 க்கு இடையில், நாட்டின் சனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதம மந்திரி யு நுவின் வேண்டுகோளுக்கு இணங்க  இராணுவம் ஒரு தற்காலிக காப்பந்து  அரசாங்கத்தை அமைத்தது.  பர்மிய பொதுத் தேர்தலை நடத்திய பின்னர் இராணுவம் தானாக முன்வந்து மக்களாட்சி  அரசை மீளமைத்தது.  ஆனால் இரண்டு ஆண்டுகள் நிறைவடையு முன்னர் 1962 இல்   இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியது, இதனால் நே வின் (Ne Win) தலைமையில் 26 ஆண்டுகால இராணுவ ஆட்சி நீடித்தது.


1988 ஆம் ஆண்டில் நாட்டில் நாடு தழுவிய போராட்டங்கள் வெடித்தன. ‘8888 எழுச்சி’ என அழைக்கப்பட்ட இந்தப் போராட்டம்  உள்நாட்டு அமைதியின்மை பொருளாதார முறைகேடுகளால் தூண்டப்பட்டது, இதனால் நே வின் பதவி விலகினார். 01 செப்டம்பர் 1988 இல், இராணுவத்தின் உயர்மட்டத்  தலைவர்கள் மாநில சட்டம் ஒழுங்கு மறுசீரமைப்பு சபையை ((SLORC) உருவாக்கினர். உருவாக்கிய  பின்னர் இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியது. ஆங் சான் சூகி நாட்டின் நவீன நிறுவனர் என அழைக்கப்படும் ஆங் சானின் மகள் ஆவர். இந்தக் காலகட்டத்தில் ஆங் சான் சூகி குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய  சனநாயக சார்பு ஆர்வலராக இருந்தார். 1990 ஆம் ஆண்டில் இராணுவத்துக்கு மக்களது ஆதரவு இருக்கிறது என்ற அனுமானத்தின் கீழ் இராணுவம் சுதந்திரமான  தேர்தல் வைப்பதை  அனுமதித்தது.  இறுதியில், தேர்தல் முடிவுகள் ஆங் சான் சூ கி கட்சியின் சனநாயகத்திற்கான தேசிய லீக்கிற்கு மகத்தான வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது. இருப்பினும், இராணுவம் அதிகாரத்தைக்  கைவிட மறுத்து.  அவரை வீட்டுக் காவலில் வைத்தது.

2020 இல் நடந்த தேர்தலில் வாக்கு மோசடி நிகழ்ந்தது என்று கூறி இராணுவம் முடிவுகளை ஏற்க மறுத்தது. ஆட்சிக்  கவிழ்ப்பு முயற்சி இடம் பெறுப் போவதாக பல நாட்கள்  வதந்தி உலாவியது.  இதனைத் தொடர்ந்து ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற மேற்கத்திய நாடுகள்  கவலை  தெரிவித்து அறிக்கைவிட்டன.

மனித உரிமைகள் பாதுகாவலர்கள், ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சாதாரண மக்களைக் கைது செய்வதற்கும் தடுத்து நிறுத்துவதற்கும், வழக்குத் தொடுப்பதற்கும் மியன்மார்  இராணுவம்

Myanmar/Burma | European Civil Protection and Humanitarian Aid Operations தொடர்ந்து பரந்த மற்றும் தெளிவற்ற சொற்களைப் பயன்படுத்துகின்றது.

இந்த இடத்தில் மியன்மார் பற்றிய முக்கிய தரவுகளைச் சுருக்கமாகப்  பார்ப்போம்.

பெயர்                          –      மியன்மார்
பரப்பளவு                     –     653, 080 ச.கிமீ
கரையோரம்                 –    1,930 கிமீ
மக்கள் தொகை            –    57,069,099 (யூலை 2020 மதிப்பீடு)
எல்லைகள்                   –    பங்காளதேசம் 271 கிமீ, சீனா – 2129, இந்தியா 1468 கிமீ, லாவோஸ்-238 கிமீ, தாய்லாந்து – 2416 கிமீ
இனக்குழுக்கள்             –    பர்மன் (பாமர்) 68%, சாண் 9%, கரன் 7%
மொழிகள்                     –    பர்மீஸ் (உத்தியோக மொழி)
மதங்கள்                        –   பவுத்தம் 87.9%, கிறிஸ்தவர் 6.2 7%, முஸ்லிம் 4.37%, இந்து 0.57%
இயற்கை வளங்கள்     –   பெட்ரோலியம், மரம், தகரம், ஆண்டிமனி, துத்தநாகம், தாமிரம், டங்ஸ்டன், ஈயம், நிலக்கரி, பளிங்கு, சுண்ணாம்பு, விலைமதிப்பற்ற கற்கள், இயற்கை எரிவாயு, நீர் சக்தி, விளைநிலங்கள்
தனியொருவரின் மொத்த வருமானம்  – அ.டொலர் 1,408 (2019)

மியன்மார் என்றால்  ரோஹிங்யா முஸ்லிம்  ஏதிலிகள்  நினைவுக்கு வருவார்கள். அவர்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் பல ஒற்றுமை உண்டு. இருசாரருமே பவுத்த தீவிரவாதத்துக்கு இலக்காகி வருபவர்கள். 15 ஆம் நூற்றாண்டுகளில் இருந்தே மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் வாழ்ந்து வந்துள்ளார்கள். 

2017 ஆம் ஆண்டு முதல் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது மியன்மார் இராணுவம் மேற்கொண்ட தாக்குதல் காரணமா சமார்  700,000 இலட்சம் மக்கள் அண்டை நாடான பங்காளதேசத்துக்கு இடம்பெயர்ந்தார்கள்.

2012 தொடக்கம் பவத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் நடைபெறும் தாக்குதல்காரணமாக 1,20,000  ரோஹிங்யா முஸ்லிம்கள் பங்காள தேசம் உட்பட அயல்நாடுகளில் அகதி முகாம்களில்  அடிப்படை வசதிகள் இன்றி அவர்கள் தவித்துவருகிறார்கள்.UPDATE: Thailand Deputy PM responds to Myanmar army coup | The Thaiger

ரோஹிங்யா முஸ்லிம்கள் பவுத்தத்தை மதிக்காதவர்கள், அவர்கள் இம்மண்ணில் வாழத் தகுதியற்றவர்கள் என்று அறைகூவல் விடுப்பதன் மூலம் பவுத்த  பேரினவாதம் அவர்களைத் தரம் பிரித்து  முற்றாக அழித்தொழிக்கும் செயற்திட்டத்தை  969 பவுத்த தீவிரவாத இயக்கம் நடத்தி வருகிறது. அதன் தலைவர் அசின் விராது தேரர் என்பவர் மியன்மாரில்  பவுத்த மதத்தை பாதுகாக்க வேண்டுமென்ற கூச்சலோடு  செயற்பட்டு வருகிறார்.

மியன்மாரில் இராணுவ ஆட்சியைத்  தோல்வியடையச் செய்ய  ஐ.நா சபையால் எவற்றையெல்லாம்  செய்ய முடியுமோ அவற்றையெல்லாம்  செய்வோம் என ஐ.நா சபையின் பொதுச் செயலாளர் அன்டொனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளார்.

“மியன்மாரில் அரசியலமைப்புச் சட்டம் மீண்டும் நிறுவப்பட வேண்டும். சர்வதேச சமூகத்தில் இருக்கும் முக்கிய நாடுகள் மூலம் மியன்மார் மீது கடுமையான அழுத்தம் கொடுக்கப்படும். மியன்மார் மக்களின் மனதையும், தேர்தல் முடிவுகளையும் மறுப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. நாட்டை இப்படி நடத்தக் கூடாது. இப்படி முன்னெடுத்துச் செல்லக் கூடாது என்பதை மியன்மார் இராணுவத்துக்குப் புரிய வைக்க முடியும் என நம்புகிறேன்” எனக் குட்ரெஸ்  கூறினார்.

ஐ.நா பாதுகாப்புச் சபையில் வீட்டோ பலம் கொண்ட சீனா, மியன்மார் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பைக் கண்டிக்க மறுத்துவிட்டது. இதனால்  பாதுகாப்புச் சபையில் ஒரு பொது நிலைப்பாட்டை எட்ட முடியாதுள்ளது.  சீனா பல சகாப்தங்களாக மியன்மார் இராணுவ ஆட்சியாளரோடு  நெருக்கமான உறவைப் பேணி வந்திருக்கிறது

கடந்த பல ஆண்டுகளாக மியன்மாரை, சீனா சர்வதேச விசாரணையிலிருந்து பாதுகாத்துக் கொண்டிருப்பதும் இங்கு நினைவு கூறத்தக்கது. ரோஹிங்யா  முஸ்லிம்கள்  சிக்கலில்  சீனா, உருசியாவோடு  இணைந்து மியன்மாரை சர்வதேச விமர்சனங்களிலிருந்து பாதுகாத்து வருகின்றது.

மியன்மார் இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் அமைதியான முறையில் போராடி வருகிறார்கள். இருந்தும் பொலீஸ் சுட்டதில் 50 க்கும் மேலான ஆர்ப்பாட்டக்காரர்கள் இதுவரை இறந்துள்ளார்கள். பொதுப் பேரணிகளின் பொருட்டு, மக்கள் ஒன்று கூடுவதற்குத்  தடை விதிக்கப்பட்டு இன்றுடன் நான்காவது நாளாகின்ற போதிலும் எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் அங்கு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சனநாயக அறிவுறுத்தல்கள் செயற்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை வன்முறைகளை நிராகரிப்பதாகவும் மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் எனவும் அடிப்படை மனித சுதந்திரத்திற்கு இடமளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள ஆங் சாங் சூ கி உள்ளிட்டவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதுடன், சனநாயகம் மீண்டும் நிலைநாட்டப்பட வேண்டும் என அமெரிக்கா, சீனா உள்ளிட்ட உறுப்பின நாடுகள் பாதுகாப்பு பேரவையினூடாக மியன்மார் இராணுவத்துக்கு  கோரிக்கை விடுத்துள்ளன.

மேலும் மியான்மாரின் இறையாண்மை, அரசியல் சுதந்திரம், பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் ஒற்றுமை ஆகியவற்றில் தங்கள் வலுவான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.

மியான்மார் மக்கள் பாவப்பட்டவர்கள்.  அவர்கள் மீண்டும் இராணுவ சர்வாதிகார ஆட்சியின் பிடிக்குள்  சிக்குண்டுள்ளார்கள்!

சனநாயக ஆட்சிமுறைமை வழங்கும்  சுதந்திரம், சமத்துவம், நீதி மற்றும் அடிப்படை மனித உரிமைகளை  முழுதாக அனுபவிக்க முடியாதபடித்  தள்ளப்பட்டுள்ளார்கள்.


Biden-Harris Administration Actions in Response to the Coup in Burma

FEBRUARY 11, 2021 • STATEMENTS AND RELEASES

Today, President Biden is taking significant steps in response to the military coup in Burma, and the unjust detention of President Win Myint, State Counsellor Aung San Suu Kyi and other civilian officials, as well as human rights defenders, journalists, and civil society leaders.

Together with allies, partners, and international organizations, we will stand with the people of Burma as they reaffirm their support for democracy through peaceful protest.
 

Today, President Biden is taking concrete actions to hold those responsible for the February 1 coup to account, and to reaffirm the United States’ support for the democratic aspirations of the people of Burma.

In a democracy, force should never overrule the will of the people or erase the outcome of a credible election.  For almost a decade, the people of Burma have been steadily working to establish credible elections, civilian governance, and the peaceful transfer of power. That progress must be respected.

Today’s sanctions need not be permanent.  Burma’s military should immediately restore power to the democratically elected government, end the state of emergency, release all those unjustly detained, and ensure peaceful protestors are not met with violence.  The results of Burma’s November 8, 2021 elections must be respected, and Parliament should be convened at the earliest opportunity.  Myanmar

The United States will continue to work with our allies, partners, and international organizations as we condemn the actions of the Burmese military, and call for the immediate restoration of democracy.  We view this coup as a direct assault on the country’s transition to democracy.

Today, and in the coming days, President Biden will issue directives and sign actions:

Holding Those Involved in the Coup to Account

Immediately after reports of the coup surfaced, the Administration made clear that the United States opposes any attempt to alter the outcome of Burma’s recent elections or impede the country’s democratic transition, and that there will be consequences for those who fail to stand with the people of Burma at this critical time.

Imposing new sanctions on military individuals and entities:

Today, President Biden launched a new sanctions regime targeting the Burmese military and its leaders, as well as their business interests. The U.S. Department of the Treasury designated 10 individuals and three entities for their association with the military apparatus responsible for the coup.  Among these individuals are six members of the National Defense and Security Council, including Commander-in-Chief of the Burmese military forces Min Aung Hlaing and Deputy Commander-in-Chief of the Burmese military forces Soe Win, as well as four members of the State Administration Council.  Under the new Executive order signed by President Biden, Treasury can also target the spouses and adult children of these individuals.   

Three entities, including Myanmar Ruby Enterprise and Myanmar Imperial Jade Co., LTD. which are wholly owned subsidiaries of a conglomerate owned or controlled by the Burmese military, have also been designated.

Imposing immediate export restrictions:

Also today, the Department of Commerce is taking immediate action to limit exports of sensitive goods to the Burmese military and other entities associated with the recent coup. A series of immediate export restrictions is being imposed on Burma’s Ministry of Defense, the Ministry of Home Affairs, armed forces, and security services in response to their recent activities. We will continue to assess and develop additional regulatory amendments to impose further export restrictions on the Burmese military to ensure that entities involved in the dismantling of democratic norms and institutions do not have access to U.S. technologies. 

Restricting U.S. based assets: 

As the President announced yesterday, the U.S. government is taking steps to prevent the generals from improperly accessing more than $1 billion in Burmese government funds held in the United States.
While the United States removed sanctions on Burma over the past decade based on Burma’s progress toward democracy, today’s sanction actions provide punitive measures against those who seek to thwart the will of the Burmese people towards democracy.

Working with Allies, Partners and Like-Minded Institutions

Building international support: The United States will continue to work with our partners throughout the region and the world to support the restoration of democracy and the rule of law, as well as to hold accountable those responsible for overturning Burma’s democratic transition.

The United States’ close coordination with allies, partners, and like-minded institutions at every level has resulted in consistent and strong messages on the coup as an affront to the Burmese people. Last week, the United States helped bring together the UN Security Council, which issued a strong statement of support for Burmese democracy. On February 12, we will join a session of the UN Human Rights Council to highlight the need for the military to end human rights abuses.  And President Biden has also spoken about Burma directly with leaders in the region, including Prime Minister Modi and President Xi. We remain in close contact with like-minded nations, and welcome statements from the G7, ASEAN and several of Burma’s neighbours that have strongly condemned the actions of the Burmese military.

Prioritizing the People of Burma

Ensuring U.S. assistance directly supports the people of Burma: 

In addition, as the President said, through U.S. development and foreign assistance agencies, we are freezing U.S. assistance that benefits the Burmese government. We will, however, maintain our support for healthcare, civil society groups, and other areas that benefit the Burmese people directly. We will also continue our support for Rohingya and other vulnerable populations.

As part of today’s actions, USAID will redirect $42.4 million of assistance away from work that benefits the Government of Burma, including support for reforming economic policy, to programs that support and strengthen civil society and the private sector.

USAID will continue its support to the people of Burma with approximately $69 million in bilateral programs that provide direct benefits to sustain and improve the health of the people of Burma, including efforts to maintain democratic space, foster food security, support independent media, and promote peace and reconciliation in conflict-affected regions.

About editor 3016 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply