மதுரக் குரலால் மக்களை மயங்க வைத்த உலகின் முன்னணிப் பாடகர் பாலசுப்ரமணியம் காலமானார்

மதுரக் குரலால் மக்களை மயங்க வைத்த உலகின் முன்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்

மதுரக் குரலால் மக்களை மயங்க வைத்த உலகின் முன்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார். இறக்கும் போது அவருக்கு அகவை 74 ஆகும்.

இன்று (செப்.25, 2020 ) வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.04 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது என்று சென்னை தனியார் மருத்துவமனையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

16 மொழிகளில் 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ள அவர், உலகின் முன்னணி பாடகராக வலம் வந்தார். அவரது இழப்பு உலக இசை அரங்குக்கு பேரழிப்பாகும்.ஆந்திராவின் நெல்லூரில் 1946 ஆம் ஆண்டு ஜூன் 4ஆம் திகதியன்று பிறந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம் 1966 இல் தெலுங்குப் படத்தில் பாடியதன் மூலம் பின்னணிப் பாடகராகத் திரையுலகில்
அறிமுகமானார். பிறகு கன்னடம், தமிழ், மலையாளம் என தென்னிந்திய மொழிப் படங்களில் பாடிய எஸ்.பி.பி., ஹிந்திப் படங்களிலும் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார்.

TFI is in hands of some big producers: SP Balasubramaniam

1969 இல் எம்.ஜி.ஆருக்காக அடிமைப் பெண் படத்தில் ஆயிரம் நிலவே வா என்கிற பாடலைப் பாடி மிகப்பெரிய திருப்புமுனையைப் பெற்றார். 16 மொழிகளில் 40,000க்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். கன்னட இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காக 1981 பிப்ரவரி 8 அன்று ஒலிப்பதிவுக்கூடத்தில் ஒரே நாளில் 21 பாடல்களைப் பாடி சாதனை நிகழத்தினார்.

ஆறு தேசிய விருதுகள் பெற்றுள்ள எஸ்.பி.பி., சங்கராபரணம் என்கிற தெலுங்குப் படத்துக்காக முதல்முறையாகத் தேசிய விருதைப் பெற்றார்.

1981இல் ஏக் துஜே கேலியே படத்தின் மூலம் ஹிந்தி திரையுலகில் நுழைந்த எஸ்.பி.பி., இதற்காக தனது 2ஆவது தேசிய விருதைப் பெற்றார்.
பிறகு இரு தேசிய விருதுகளைத் தெலுங்குப் படப் பாடல்களுக்காகவும் தலா ஒருதேசிய விருதை தமிழ், கன்னடப் படப்பாடல்களுக்காகவும் பெற்றார்.

2001இல் பத்மஸ்ரீ, 2011இல் பத்மபஷன் விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன. கோரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சென்னை
யில் உள்ள எம்ஜிஎம் யஹல்த்கோ மருத்துவமனையில் ஓகஸ்ட் 5 ஆம் திகதி முதல் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடாந்து சிகிச்சை பெற்று வந்தார்.
கோரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த நிலையில் எஸ்.பி.பிக்கு வெண்டிலேட்டர், எக்மா  கருவிகளுடன் தொடாந்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்டுவந்தது.

இந்நிலையில் மருத்துவமனையில் 51 நாள்களாகச் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பி. இன்று காலமானார்.

இத்தகவலை அவருடைய மகன் தெரிவித்துள்ளார். இதனால் தமிழ்த் திரையுலகமும் இரசிகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். எஸ்.பி.பி.யின் மறைவுக்குச் சமூகவலைத் தளங்களில் இரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

பொதுவாக இசைக் கலைஞர்களுக்கு தான் என்ற கர்வம் இருக்கும். மற்றவர்களை மதிக்கமாட்டார்கள். இதற்கு முற்றிலும் விதிவிலக்கு பாடகர் பாலசுப்பிரமணியம். மேடையில் மிகவும் பணிவாக நடந்து கொள்வார்கள். மற்றவர்களை வஞ்சகம் இல்லாமல் பாராட்டுவார். தான் முறையாக கருநாடக இசையைக் கற்றவன் அல்ல என்பதை பகிரங்கமாகச் சொல்வார். இசைக் கலைஞர்கள் என்றால் தங்கள் குரலை பாதுகாக்க உணவு, தண்ணீர் போன்றவற்றில் கண்டிப்பாக இருப்பார்கள். பாலசுப்பிரமணியம் அவற்றை பொருட்படுத்துவதில்லை. 50 க்கும் மேற்பட்ட படத்தில் நடித்திருக்கிறார். அவர் தெலுங்கில் பாடிய சங்கராபரண படப்பாடல்கள் மிக அருமையாக இருக்கும். மொழி தெரியாவிட்டாலும் அவரது குரல் வளத்தை இரசிக்கலாம். இசைக்கு மொழியில்லை என்பதை எண்பித்திருப்பார். தமிழில் சங்கராபரணம் போன்று தமிழ் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்த படத்தை யாரும் தயாரிக்கவில்லை. சிந்துபயிரவியில் பாலசந்தர் தமிழிசைக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பார்.

——————————————————————————————————————–

எஸ்.பி. பாலசுப்ரமணியம் சித்ராவை அழ வைத்தது உங்களுக்கு தெரியுமா?

25 செப்டெம்பர் 2020

சித்ரா

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள்…தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்…

இந்த அழகிய பாடலுக்கு உயிர் கொடுத்த எஸ். பி. பாலசுப்ரமணியம் இன்று உயிருடன் இல்லை. ஆனால், அவர் பாடியதுபோல அவரின் தமிழ் பாடல்கள் மட்டுமல்ல பிற மொழி பாடல்களையும் பல்லாண்டுகாலம் நாம் கேட்டுக் கொண்டிருப்போம்.

சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக 35 ஆயிரத்திற்கும் மேலான பாடல்களை பல்வேறு மொழிகளில் பாடியிருக்கிறார் எஸ்.பி.பி. இன்னிசை காதல் பாடல்களுக்கு மிகவும் பெயர்போனவராக இருந்தவர்.

காதல் என்பது அவரது பாடல்களில் மட்டும் இருக்கவில்லை. அவரது சொந்த காதல் கதையுமே மிகவும் சுவாரஸ்யமானது.

இளம் வயதிலேயே காதலித்து வீட்டில் எதிர்ப்பு இருந்ததால், தனது காதலியை விஷாகப்பட்டினத்தில் உள்ள கோயிலுக்கு அழைத்துச் சென்று, 6 நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார் எஸ்.பிபி.

“வாழ்வில் காதல் இருக்கவில்லை என்றால், பாடல்களில் என்னால் அதை வெளிப்படுத்தியிருக்க முடியாது” என தனியார் தொலைக்காட்சிக்காக நடிகை குஷ்பூ எடுத்த பேட்டியில் அவர் கூறியிருப்பார்.

அதே போல அவருக்கு கிரிக்கெட் என்றால் உயிர். சச்சின் டெண்டுல்கர், டிராவிட், அனில் கும்ப்ளே கையெழுத்திட்டுக் கொடுத்த பேட்களை அவர் இன்றும் வீட்டில் வைத்திருக்கிறார்

இசைத்துறையின் ஜாம்பவான்

நூற்றுக்கணக்கான பாடகர்கள் இருக்கிறார்கள். ஆனால், இசை சக்ரவர்த்தியாக மக்கள் எஸ்.பி.பியை கொண்டாடுவது ஏன்?

குத்துப்பாடல்கள், காதல் பாடல்கள், மூச்சு விடாமல் பாடுவது என எந்த வகையான பாடல்களை பாடினாலும், அதன் உணர்ச்சிக்கு ஏற்ப பாடி மக்களை மகிழ்விப்பது அவரின் தனி சிறப்பு.

உதாரணமாக மின்சார கனவு படத்தில், “தங்கத் தாமரை மகளே…” பாடல் பாடியதும் எஸ்பிபிதான், சிந்து பைரவி படத்தில் “சிங்காரி சரக்கு, நல்ல சரக்கு” பாடல் பாடியதும் அவரேதான்

“எனக்கு மற்ற பாடகர்களுக்கு இல்லாத ஒரு சாதகமான விஷயம் ஒன்று இருக்கிறது. நான் நடிகரும்கூட. அதனால் என்னால் உணர்ச்சியை அதிகமாகவும் சிறப்பாகவும் வெளிப்படுத்த முடியும்.

நான் நடிப்பை தீவிரமாக எடுத்துக்கொண்டு நடித்திருக்க வேண்டும் என்று என் நண்பர்கள் கூறுவார்கள். ஆனால், எத்தனை விஷயங்களை ஒருவர் தீவிரமாக எடுத்துக்கொள்ள முடியும்” என் தி இந்து நாளிதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியிருப்பார்.

மேலும், எஸ்பிபிக்கு இருந்த பன்மொழி புலமை அவரை தமிழ், தெலுகு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற பல்வேறு திரைத்துறைகளில் இருந்து நீக்க முடியாத ஒரு நபராக உருவாக்கியிருக்கிறது.

பல மொழிகள் பேசுவது பெரிய விஷயமல்ல. அதன் உச்சரிப்புதான் மிகவும் முக்கியம்.

இது குறித்து “தி இந்து” நாளிதழ் நேர்காணலில் பேசிய எஸ்பிபி, “நான் பாடலாசிரியர்களுடன் அமர்ந்து, அவர்கள் அந்த பாடல் வழியாக என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை கேட்டு உள்வாங்கிக் கொள்வேன். அப்போதுதான் அந்த உணர்ச்சிகளை என்னால் வெளிப்படுத்த முடியும். என்னால் அதனை சரியாக உச்சரிக்க முடியாது என்று தெரிய வந்தால், நான் அந்தப்பாட்டில் இருந்து விலகிக்கொள்வேன்” என்றார்.

எஸ்பிபி
நடிகரான அனுபவம்

பாடகர் பாலசுப்ரமணியத்திற்கு தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்த பல திரைப்படங்கள் உதவின. அதில் முக்கியமான ஒன்று “காதலன்” திரைப்படம். இன்றும் நம் பலரின் மனதிலும் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறது.

“பிரபு தேவாவிற்கு அது முதல்படம். இயக்குநர் ஷங்கருக்கும் “காதலன்” முதல் படம் போன்றது என்று சொல்லலாம். படப்பிடிப்பு அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்” என ஒரு நேர்காணலில் குறிப்பிட்ட அவர், அந்தப்படத்தில் பிரபு தேவாவுடன் நடனமாடிய நினைவுகளையும் பகிர்ந்தார்.

“இந்தியாவின் மைக்கெல் ஜாக்சனான பிரபு தேவாவுடன் என்னை நடனமாட வைத்தார்கள். பிரபுதேவா என்னிடம் “நான் ஓடி. ஓடி என்ன நடனம் ஆடுகிறேனோ அதை நீங்கள் ஒரே இடத்தில் இருந்து ஆடுங்கள். உங்களுக்குதான் கைதட்டல் வரும்” என்று கூறினார். இறுதியில் அப்படிதான் நடந்தது.”

அதோடு பல முன்னணி நட்சத்திரங்களுக்கு பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார் எஸ்.பி.பி.

பாக்கியராஜ், கமல்ஹாசன் போன்றவர்களின் படங்கள் தெலுங்கில் மொழிபெயர்ப்பாகி வெளியானபோது, அவர்களுக்கு பின்னணிக்குரல் கொடுத்தவர் இவர்தான்.

தசாவதாரத்தின் தெலுங்கு படத்தில் கமல்ஹாசனின் அனைத்து வேஷங்களுக்கும் இவர்தான் குரல் கொடுத்திருக்கிறார். பெண்ணாக பாட்டி வேஷத்தில் வரும் கமல்ஹாசனுக்கும் இவரின் குரலே.

சில்மிஷத்திற்கு சொந்தக்காரர்

வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே எஸ்.பிபியின் குறிக்கோளாக இருந்தது.

“துறவி போல வாழ்க்கை வாழ்வதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. நான் பாடகராகும் முன்பு அதிகமாக புகைப்பிடித்துக் கொண்டிருந்தேன். பாடகரான பிறகு நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசையால் அந்த பழக்கத்தை விட்டேன். நடுவில் எனக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதால் என் எடை கூடியது. கடினமான நேரங்களையும் தாண்டி வாழ்க்கை அழகானது” என இந்து நாளிதழுக்கு பேட்டியளித்த எஸ்பிபி கூறியிருந்தார்.

அவர் எவ்வளவு மகிழ்ச்சியான, வேடிக்கையான மனிதர் என்பதை இந்த சம்பவம் மூலம் தெரிந்து கொள்ளலாம். இது பாடகி சித்ரா தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்து கொண்டது.

“இது நடந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்போது எனக்கு தெலுங்கு மொழி அவ்வளவாக தெரியாது. என்னுடன் பாட இருந்த எஸ்.பி.பியிடம் உதவி கேட்டேன். அவர் எனக்கு சில வரிகளை எழுதி கொடுக்க, நான் அதனை ஸ்டூடியோவில் சென்று பாட ஆரம்பித்தவுடன் அங்கிருந்த அனைவரும் சிரிக்க தொடங்கிவிட்டனர். எனக்கு என்னவென்று தெரியவில்லை. பிறகுதான் தெரியவந்தது அவர் என்னை கிண்டல் செய்ய தப்பு தப்பாக வரிகளை எழுதிக் கொடுத்திருக்கிறார் என்று” என சித்ரா தெரிவித்தார்.

இதுதொடர்பாக பேசியிருந்த எஸ்.பி.பி, “சித்ரா பாடத் தொடங்கியதும் அனைவரும் சிரிக்கத் தொடங்கிவிட்டனர். நான் மட்டும் முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு எதற்கு சிரிக்கிறார்கள் என மீண்டும் மீண்டும் கேட்டேன். அந்தப்பாட்டில் அந்தப் படத்தின் இயக்குநரை விளையாட்டுக்காக திட்டுவது போல வரிகள் எழுதியிருந்தேன். அந்த இயக்குநர் சித்ராவை பார்த்து, என்ன கோபம் இருந்தாலும், பாட்டு எழுதி திட்டுவியா மா நீ என்று கேட்டார். சித்ரா பயந்துவிட்டார். அழ ஆரம்பித்துவிட்டார். எஸ்.பி.பி தான் பாட்டு எழுதி கொடுத்தார். அதைத்தான் நான் பாடினேன் என்று சொன்னார். இயக்குநர் என்னைப்பார்த்து ‘உன் வேலையா இது’ என்று கேட்டார். சும்மா விளையாட்டுக்காக செய்தேன் சார் என்று சொன்னேன்” என்றார் அவர்.

ரெக்கார்டிங் எல்லாம் முடிந்தபிறகு, சித்ரா அவரிடம் வந்து “ஏன் இப்படி செய்தீர்கள்? நீங்கள் இப்படி செய்யலாமா?” என்று கேட்டு அழ, விளையாட்டுக்காகத்தான் செய்தேன் என்று கூறி அவரை சமாதானப்படுத்தினார் எஸ்.பிபி.

இன்று எஸ்.பி.பிக்காக ஒரு பெரும் ரசிகர் பட்டாளமே அழுது கொண்டிருக்கிறது. ஆனால், சமாதானப்படுத்தத்தான் அவர் இல்லை.

https://www.bbc.com/tamil/arts-and-culture-54294122

எஸ்.பி.பி என்ற “பன்முக கலைஞன்” – “பாடும் நிலா” மறைந்தது

25 செப்டெம்பர் 2020, 07:56 GMT

எஸ்.பி.பி. எனப்படும் பன்முகக் கலைஞன்

40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கும் எஸ்.பி. பாலசுப்ரமணியம், நடிகர், இசையமைப்பாளர், திரைப்பட தயாரிப்பாளர் என பல துறைகளிலும் சாதனை படைத்தவர். 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட திரை ரசிகர்களின் நெஞ்சங்களைத் தாலாட்டும் குரல் வல்லமை படைத்தவர்.

இந்திய திரையுலகில் பின்னணி பாடகர்களுக்கென ஒரு நீண்ட பாரம்பரியம் உண்டு. முஹம்மது ராஃபி, கிஷோர் குமார், ஆஷா போஸ்லே, கே.ஜே. ஏசுதாஸ், டி.எம். சௌந்தர்ராஜன், எஸ். ஜானகி, லதா மங்கேஷ்கர் என நீளும் புகழ்பெற்ற வரிசையில் முன்னணி சில பெயர்களில் இடம்பெறத் தக்கவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் எனப்படும் ஸ்ரீபதி பண்டிதராத்யுல பாலசுப்ரமணியம்.

தந்தை எஸ்.பி. சாம்பமூர்த்தி ஒரு ஹரிகதா கலைஞர். தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் ஆந்திரப் பிரதேச எல்லையில் அமைந்துள்ள கொனேட்டம்பட்டுதான் எஸ்.பி.பியின் சொந்த ஊர். 1946 ஜூன் 4ஆம் தேதி பிறந்த, எஸ்.பி.பி., சிறு வயதிலேயே இசையில் ஆர்வம் கொண்டிருந்ததால், அதன் சில கூறுகளைக் கற்றுக்கொண்டிருந்தார்.

பிறகு, பொறியியல் படிப்பதற்காக அனந்தபூரில் உள்ள ஜேஎன்டியு பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார். பிறகு அங்கிருந்து விலகி, சென்னையில் உள்ள அசோஸியேட் மெம்பர் ஆஃப் தி இன்ஸ்ட்டிடியூஷன் ஆஃப் எஞ்சினீயர்ஸில் இணைந்து பொறியியல் படிப்பை படித்தார்.

Banner image reading 'more about coronavirus'
Banner

படிக்கும் காலத்திலேயே பல்வேறு பாட்டுப்போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பாலசுப்ரமணியம், 1964ல் மெல்லிசைக் கச்சேரி குழுக்களுக்கான பாட்டுப் போட்டி ஒன்றில் கலந்துகொண்டு முதல் பரிசைப் பெற்றார். அந்தப் போட்டிக்கு நடுவர்களாக இருந்தது தெலுங்கு இசையமைப்பாளர் எஸ்.பி. கோதண்டபாணியும் பாடகர் கண்டசாலாவும்.

எஸ்.பி.பி. எனப்படும் பன்முகக் கலைஞன்

இந்த நிகழ்வுக்குப் பிறகு எஸ்.பி. கோதண்டபாணி இவருக்கு குருவும் வழிகாட்டியுமானார். அவர் இசையமைத்த “ஸ்ரீஸ்ரீஸ்ரீ மரியாத ராமண்ணா” என்ற தெலுங்கு படத்தில் தன் முதல் பாடலைப் பாடினார் எஸ்.பி.பி.

இந்தப் படம் 1966 டிசம்பரில் வெளியானது. இதற்குப் பிறகு தமிழில் எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைத்த ‘ஹோட்டல் ரம்பா’ என்ற படத்தில் எல்.ஆர். ஈஸ்வரியோடு இணைந்து ‘அத்தானோடு இப்படி இருந்து எத்தனை நாளாச்சு’ என்ற பாடலைப் பாடினார்.

ஆனால், அந்தப் படம் வெளியாகவேயில்லை. நடுவில் கன்னட திரைப்படங்களில் பாட ஆரம்பித்திருந்தார் எஸ்.பி.பி.

தமிழில் இவர் பாடி வெளியான முதல் பாடல், எம்.ஜி.ஆர். நடித்த அடிமைப் பெண் படத்தில் வரும் ‘ஆயிரம் நிலவே வா’ பாடல்தான்.

இந்தப் பாடல் வெளியாவதற்கு முன்பாகவே ‘இயற்கையெனும் இளைய கன்னி’ பாடலை சாந்தி நிலையம் படத்திற்காகப் பாடியிருந்தார். அந்தப் படம் 1969 மே 23ஆம் தேதி வெளியானது.

ஆனால், “அடிமைப்பெண்” மே 1ஆம் தேதியே வெளியாகிவிட்டதால், தமிழில் எஸ்.பி.பி பாடி முதலில் வெளியான பாடல், ‘ஆயிரம் நிலவே வா’ என்ற பாடல்தான். இதற்குப் பிறகு மலையாளத் திரையுலகிலும் அறிமுகமானார் எஸ்.பி.பி.

எஸ்.பி.பி. எனப்படும் பன்முகக் கலைஞன்

எஸ்.பி. பாலசுப்ரமணியம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான காலகட்டத்தில் தமிழ் திரையிசைப் பாடல்களில் டி.எம். சௌந்தர்ராஜனின் குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்தது. எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகிய இரு உச்ச நட்சத்திரங்களுக்குமே டி.எம்.சௌந்தர்ராஜனே பாடிக்கொண்டிருந்தார்.

உச்ச நட்சத்திரங்கள் இருவருக்கும் வேறு குரலை பாட வைத்தால் ரசிகர்கள் ஒப்புக்கொள்வார்களா என்ற தயக்கம் இயக்குனர்களுக்கும் இசை அமைப்பாளர்களும் இருந்ததால், நீண்ட காலமாக டி.எம்.சௌந்தர்ராஜனுக்கு மாற்றே இல்லை என்ற நிலை இருந்தது. இந்த நிலையில்தான் அடிமைப் பெண் படத்திற்குப் பிறகு, எல்லாவிதமான பாடல்களையும் உயிரோட்டத்துடன் பாடும் தன்னுடைய திறனால் மெல்ல மெல்ல தமிழ்த் திரையுலகில் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தார் எஸ்.பி.பி.

எஸ்.பி.பி. எனப்படும் பன்முகக் கலைஞன்

1970களின் பிற்பகுதியில் அப்போதுதான் அறிமுகமாகியிருந்த இளையராஜாவின் இசையில் பாட ஆரம்பித்தார் எஸ்.பி.பி. இளையராஜா – எஸ்.பி. பாலசுப்ரமணியம் – எஸ். ஜானகி என்ற இந்தக் கூட்டணியில் அமைந்த பாடல்கள், தமிழ் திரையிசை ரசிகர்களால் ஒரு போதும் மறக்க இயலாதவை.

சுருக்கமாகச் சொன்னால், தமிழ், தெலுங்கு, கன்னட சினிமா பாடல்களில் கடந்த நூற்றாண்டின், கடைசி முப்பது ஆண்டுகள் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தினுடையது.

ஒரு கட்டத்தில் ஒரே நாளில் 15க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கிறார் எஸ்.பி.பி.

1981 பிப்ரவரி எட்டாம் தேதியன்று உபேந்திர குமார் இசையமைத்த 17 கன்னடப் பாடல்களை காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணிக்குள் பாடி முடித்தார். ஒரே நாளில் 19 தமிழ், தெலுங்கு பாடல்களையும் இந்தி இசையமைப்பாளர் ஆனந்த் மற்றும் மிலிந்த் இசையமைத்த 16 இந்திப் பாடல்களையும் ஒரே நாளில் பாடி சாதனை படைத்தார்.

1980ல் வெளிவந்த சங்கராபரணம் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் புகழை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது. கே.வி. மகாதேவன் இசையமைத்திருந்த இந்தப் படம் சாஸ்த்ரீய இசையை அடிப்படையாகக் கொண்டிருந்த படம். எஸ்.பி. சாஸ்த்ரீய இசையை முறைப்படி படித்தவர் இல்லை என்றாலும் இந்தப் படத்திற்காக சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதை வென்றார் எஸ்.பி.பி.

தெலுங்கில் சிரஞ்சிவி நடித்த படங்களுக்கும் தமிழில் ரஜினிகாந்த் நடித்த படங்களுக்கும் பெரும்பாலான டைட்டில் பாடல்கள் எஸ்பிபி பாடியதுதான்.

எஸ்.பி.பி. தன் பாடல்களுக்காகத்தான் பெரிதும் அறியப்பட்டவர் என்றாலும் அவர் ஒரு சிறந்த இசையமைப்பாளரும்கூட. தவிர, நல்ல நடிகர், சிறப்பான பின்னணி குரல் கொடுப்பவர் என பன்முகத் தன்மை கொண்ட கலைஞர் எஸ்பிபி. தமிழ், தெலுங்கு, கன்னடம் என 45க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார் எஸ்.பி.பி.

எஸ்.பி.பி. எனப்படும் பன்முகக் கலைஞன்

ஒரு சிறந்த பாடகராக அறியப்பட்டதாலோ என்னவோ, கிட்டத்தட்ட 45க்கும் மேற்பட்ட படங்களுக்கு அவர் இசையமைத்திருக்கிறார் என்பது பலரால் கவனத்தில் கொள்ளப்பட்டதில்லை. குறிப்பாக தமிழில் அவர் நடித்து, இசைமைத்த “சிகரம்” திரைப்படம், இதில் உச்சகட்டம்.

சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருதை இதுவரை ஆறு முறை வென்றிருக்கிறார் எஸ்பிபி. இவர் பெற்ற மாநில அரசு விருதுகளுக்கும் தனியார் விருதுகளுக்கும் கணக்கே கிடையாது. தன்னுடைய ஐம்பதாண்டு கால தொழில் வாழ்க்கையில் எல்லா மொழிகளிலும் சேர்த்து கிட்டத்தட்ட 40,000 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கும் எஸ்.பி.பி. கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றவர்.

நான்கு பல்கலைக்கழகங்களால் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப் பட்டவர். மேலும் இந்திய அரசின் பத்மபூஷணன் விருதையும் பெற்றவர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என இந்தியாவில் உள்ள 14 மொழிகளில் பாடியிருக்கும் எஸ்.பி.பி. சமஸ்கிருதப் பாடல்களையும் பாடியிருக்கிறார்.

சாகரசங்கமம், ஸ்வாதிமுத்யம் ஆகிய இரண்டு படங்கள் தவிர, கமல்ஹாசன் நடித்து தமிழில் இருந்து தெலுங்கிற்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட எல்லாப் படங்களில், கமல்ஹாசனுக்கு குரல் கொடுத்தவர் எஸ்.பி.பிதான். ரஜினிகாந்திற்கும் சில தெலுங்கு படங்களில் குரல் கொடுத்திருக்கிறார்.

பின்னணி பாடுவதில் மட்டுமல்லாமல், திரைத்துறையின் பல்வேறு அம்சங்களிலும் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அளித்த பங்களிப்புக்கு இணையாக வெகு சிலரையே காட்ட முடியும். இப்போதும் ஒவ்வொரு இரவிலும் அவரது குரலைக் கேட்காமல் தூங்கச் செல்லும் இல்லங்கள் தமிழ்நாட்டில் மிகக் குறைவு. அவர் இருக்கிறாரா, மறைந்துவிட்டாரா என்பதெல்லாம் இதில் பொருட்டே இல்லை.

——————————————————————————————————

நான்கு பல்கலைக்கழகங்களால் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டவர். மேலும் இந்திய அரசின் பத்மபூஷணன் விருதையும் பெற்றவர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என இந்தியாவில் உள்ள 14 மொழிகளில் பாடியிருக்கும் எஸ்.பி.பி. சமஸ்கிருதப் பாடல்களையும் பாடியிருக்கிறார்.

சாகரசங்கமம், ஸ்வாதிமுத்யம் ஆகிய இரண்டு படங்கள் தவிர, கமல்ஹாசன் நடித்து தமிழில் இருந்து தெலுங்கிற்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட எல்லாப் படங்களில், கமல்ஹாசனுக்கு குரல் கொடுத்தவர் எஸ்.பி.பிதான். ரஜினிகாந்திற்கும் சில தெலுங்கு படங்களில் குரல் கொடுத்திருக்கிறார்.

பின்னணி பாடுவதில் மட்டுமல்லாமல், திரைத்துறையின் பல்வேறு அம்சங்களிலும் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அளித்த பங்களிப்புக்கு இணையாக வெகு சிலரையே காட்ட முடியும். இப்போதும் ஒவ்வொரு இரவிலும் அவரது குரலைக் கேட்காமல் தூங்கச் செல்லும் இல்லங்கள் தமிழ்நாட்டில் மிகக் குறைவு. அவர் இருக்கிறாரா, மறைந்துவிட்டாரா என்பதெல்லாம் இதில் பொருட்டே இல்லை.

https://www.bbc.com/tamil/arts-and-culture-53818956

About editor 3047 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

1 Comment

  1. பொதுவாக இசைக் கலைஞர்களுக்கு தான் என்ற கர்வம் இருக்கும். மற்றவர்களை மதிக்கமாட்டார்கள். இதற்கு முற்றிலும் விதிவிலக்கு பாடகர் பாலசுப்பிரமணியம். மேடையில் மிகவும் பணிவாக நடந்து கொள்வார்கள். மற்றவர்களை வஞ்சகம் இல்லாமல் பாராட்டுவார். தான் முறையாக கருநாடக இசையைக் கற்றவன் அல்ல என்பதை பகிரங்கமாகச் சொல்வார். இசைக் கலைஞர்கள் என்றால் தங்கள் குரலை பாதுகாக்க உணவு, தண்ணீர் போன்றவற்றில் கண்டிப்பாக இருப்பார்கள். பாலசுப்பிரமணியம் அவற்றை பொருட்படுத்துவதில்லை. 50 க்கும் மேற்பட்ட படத்தில் நடித்திருக்கிறார். அவர் தெலுங்கில் பாடிய சங்கராபரண படப்பாடல்கள் மிக அருமையாக இருக்கும். மொழி தெரியாவிட்டாலும் அவரது குரல் வளத்தை இரசிக்கலாம். இசைக்கு மொழியில்லை என்பதை எண்பித்திருப்பார். தமிழில் சங்கராபரணம் போன்று தமிழ் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்த படத்தை யாரும் தயாரிக்கவில்லை. சிந்துபயிரவியில் பாலசந்தர் தமிழிசைக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பார்.

Leave a Reply