தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியே எனது வெற்றி எம் அனைவரினதும் வெற்றி!
அன்பிற்குரிய முகநூல் நண்பர்களுக்கு சுமந்திரன் எழுதுவது!
போரோய்ந்த கையோடு நாமிருந்த நிலையிலும் பார்க்கத் தமிழ் இனத்தின் தற்போதையை நிலை நிச்சயம் முன்னேற்றகரமானது. அடைந்த நன்மையான மாற்றங்கள் அனைத்தின் பின்னாலும் இயங்கிய தமிழரது அமைதியான, நிதானமான ஜனநாயகப் பிரதிநிதியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உங்கள் தீர்ப்பிற்காகக் காத்து நிற்கின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பத்தாண்டுப் பயணத்தில் தடைகள் இருந்திருக்கின்றன. குறைகள் இருந்திருக்கின்றன. தாமதங்கள் இருந்திருக்கின்றன.
ஆனால் நாம் சரியான திசையில் தான் பயணிக்கின்றோம். இதற்கு இப் பயணத்தில் நாம் அடைந்த முக்கியமான வெற்றிகள் இதற்குச் சான்று.
காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுவிப்பு, மீள் குடியேற்றம், ஜனநாயக வெளித் திறப்பு, இராணுவக் கெடுபிடிகள் குறைப்பு என எம் அன்றாட வாழ்வில் நாம் இந்த முன்னேற்றங்களை உள்ளார உணர்ந்திருக்கிறோம்.
கடந்த பாராளுமன்றத்தில் நாம் பத்து வீதப் பிரதிநிதித்துவத்தைக் கூடக் கொண்டிருக்கவில்லை. அமைச்சரைப் பதவிகளைப் பெற்றிருக்கவில்லை. ஆனால் பலவற்றைச் சாதித்தோம்.
19 ஆம் திருத்தச் சட்ட வரைபு; மடிவலை மீன்பிடித் தடைச் சட்ட வரைபு; காணாமலாக்கப்பட்டோர் அலுவலகச் சட்டம் என்பன எமது நேரடிப் பங்களிப்பால் உருவானவை. இராணுவம் கையகப்படுத்தியிருந்த தமிழர் நிலங்களில் 75% ஆனவற்றை விடுவித்தோம். வலி வடக்கு, சம்பூர் போன்ற இடங்களில் எம் மக்களது பல்லாண்டு காலம் நீடித்த மீள் குடியேற்றத்திற்கான போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தோம். ஜனாதிபதியோடும், பிரதமரோடும் பல சுற்றுப் பேச்சுக்களை நடத்தி இணக்கப்பாட்டை எய்தினோம். அரசியற் கைதிகள் விபரங்களை சிறைகளுக்கு நேரடியாகச் சென்று கோவைப்படுத்தினோம். அரைவாசிக்கும் அதிகமானோரை விடுவித்தோம்.
முக்கியமான பொருளாதாரத் திட்டங்களான பலாலி விமான நிலைய மீள் திறப்பு மற்றும் சர்வதேச தர உயர்த்தல், மயிலிட்டித் துறைமுக விடுவிப்பு மற்றும் புனரமைப்பு, பருத்தித்துறை மீன்பிடித் துறைமுக அபிவிருத்தித் திட்டம், காங்கேசன்துறைத் துறைமுக மீள் கட்டுமானம் என்பவை கூட்டமைப்பின் நேரடி முன்மொழிவு, பேரம்பேசல், அழுத்தங் கொடுத்தல் என்பவற்றூடு நடைமுறைக்கு வந்தவை.
இவையனைத்திலும் எனது பங்களிப்பு நிறைவானது. சாதித்தவற்றை விளம்பரப்படுத்துவதில் கூட்டமைப்பும், நானும் தவறியிருக்கிறோம் என்பது ஏற்க வேண்டிய குற்றச்சாட்டே. இதைச் சரி செய்யவென இந்தப் பக்கத்தில் இவை பற்றிய தெளிவூட்டல்களை எனது அணியினர் முன்னெடுத்திருந்தார்கள்.
இவை ஒரு புறமிருக்க, நான் சென்ற முறை தேர்தலில் போட்டியிட்ட போது அரசியலமைப்பு உருவாக்கத்தை முன்னிறுத்தியே போட்டியிட்டேன். ஆகவே, இந்த விடயத்தில் கூட்டுப்பொறுப்பைத் தாண்டி என் தனிப்பட்ட செயற்பாட்டைக் கோடிட்டுக் காட்டுவது பொருத்தமானது என எண்ணுகிறேன்.
எமது நீண்ட கால அரசியற் பிரச்சினைக்குத் தீர்வாக தமிழர் நாம் இந்த நாட்டில் சுயகொளரவத்துடன், சம அந்தஸ்துள்ள பிரஜைகளாக எமக்கே உரித்துடைய சுயநிர்ணய உரிமையை அர்த்தமுள்ள வகையில் பிரயோகிக்கும் சமஷ்டி அடிப்படையிலான தீர்வை நாம் எமது தேர்தல் அறிக்கையில் முன்மொழிந்திருந்தோம்.
தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கும், எனக்கும் தந்த ஆணைக்கு உண்மையாய் கடந்த ஐந்தாண்டு நாம் செயற்பட்டோம் என்பதை என்னால் இங்கு உறுதிபடக் கூற முடியும்.
ஆழ்ந்த அர்ப்பணிப்போடு அரசியலமைப்பு வழி நடத்தல் குழுவிற்கு நான் இணைத் தலைமை வழங்கினேன். மொத்தம் இருபத்தொரு அங்கத்தவர்களைக் கொண்ட அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவில் எம் கட்சியில் இருவரே அங்கத்துவம் வகித்தோம். இந்தச் சூழலில் இயங்கி அதிகாரப் பகிர்வென்ற விடயத்தில் அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்திய சர்வ கட்சி இணக்கப்பாட்டை இலங்கையின் வரலாற்றில் முதற் தடவையாக எய்தினோம். இது நாம் ஈட்டிய முக்கியமானதொரு வெற்றி.
பராளுமன்றத்தில் மாத்திரமல்ல. அரசியலமைப்பு நிறைவேற வெகுசன வாக்கெடுப்பிலும் நாம் வெற்றியடைய வேண்டுமென்பதை முன்-உணர்ந்தவனாக சிங்கள மக்கள் மத்தியில் எமது அரசியல் நிலைப்பாடுகளை விளங்கப்படுத்தவும், அவற்றின் தார்மீக அறத்தை நியாயப்படுத்தவும் விளைந்தேன். இதற்கெனவே என் சிங்கள மொழிப் பேச்சாற்றலை விருத்தி செய்தேன். சிங்கள மக்கள் மத்தியில், சிங்கள மொழியில் எமது தரப்பு நியாயங்களை முன்வைத்தேன். நூற்றுக்கும் மேற்பட்ட கூட்டங்களை ஒழுங்கு செய்து பேசினேன். சிங்கள ஊடகங்களில் நேர்காணல்கள் மற்றும் விவாதங்களில் தொடர்ச்சியாகக் கலந்து கொண்டேன்.
இந்த முயற்சிகளின் பயனாக சமஷ்டியின் அடிப்படைகளான நிறைவான, மத்தியின் குறுக்கீடு இல்லாத, மத்தியால் ஒரு தலைப்பட்சமாக மீளப் பெற்றுக்கொள்ள முடியாத அதிகாரப் பகிர்வை உள்ளடக்கிய வரைபை நாம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தோம். அதிக சிரத்தையுடன் உருவாக்கப்பட்ட இந்த வரைபை அரசியலமைப்பாக நிறைவேற்றுவதற்கு முன்பாக தேசிய அரசாங்கத்திலிருந்த இரு கட்சிகளும் ஒன்றுகொன்று மோதத் துவங்கியதில் காரியம் கை நழுவி விட்டது. இது துரதிஷ்டவசமானது. எமது நேரடிக் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டது.
ஆட்சிக்கு வரவிருக்கும் ராஜபக்ச அரசாங்கமும் புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டுமென்பதை முன்னிறுத்தியே போட்டியிடுகிறார்கள். ஏற்கனவே நாம் வரைந்து சமர்ப்பித்த வரைபிலுள்ள அதிகாரப் பகிர்வு முன்மொழிவுகளுக்கு அவர்களும் இணங்கியிருக்கிறார்கள். புதிய அரசியலமைப்பை உருவாக்க 2/3 பெரும்பான்மை தேவைப்படும். எம்மோடு அவர்களுக்குப் பேரம் பேச வேண்டி வரும். அந்தக் கட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் பலமான அணியாக இருக்க வேண்டும்.
எம் மக்களுக்கு அரசியற் தீர்வு எவ்வளவிற்கு அவசரமாகத் தேவையோ அந்தளவிற்கு வாழ்வாதார விருத்தியும், அபிவிருத்தியும் அவசியம். இளைஞர் தம் பிரதேசங்களை விட்டகன்று, தெற்கிலும், வெளிநாடுகளிலும் பொருளாதாரக் காரணங்களுக்காக தஞ்சமடையும் நிலமை மாறாத பட்சத்தில் எமது தேசியக் கோஷங்களில் வெறுமையே எஞ்சும். எம் இனம் பலயீனமாகவேயிருக்கும். இதை நாம் உணர்ந்திருக்கிறோம். இது விடயம் குறித்து நாம் முற்போக்காக செயற்பட வேண்டுமென்பதில் குறியாகவிருக்கிறோம். எமக்கெனத் தனித்துவமானதொரு பொருளாதார நிரலை உருவாக்கி, குறிப்பாக எம் இளைஞர் தம் பிரதேசங்களிலே மனநிறைவோடு வாழத்தக்க சூழலை நாம் உருவாக்குவோம். இதில் நான் தனிப்பட்ட அக்கறை கொண்டு செயற்பட உறுதி பூண்டுள்ளேன்.
எல்லாவற்றிற்கும் மேலாக, எம் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வை அடையவே அரசியலிற்கு வந்தேன். தீர்விற்காகவே அதிகம் உழைத்தேன். தீர்விற்காகவே மீண்டும் போட்டியிடுகிறேன். நான் தலைமை தாங்கி வரைந்த வரைபு முடிந்த கதையன்று. அந்த நம்பிக்கையை நான் இழக்கும் போது, அரசியலில் இருந்து ஒதுங்குவேன்.
இலங்கைக்குள்ளே, இலங்கைப் பாராளுமன்றத்திற்குள்ளே, அனைத்து இன இணக்கப்பட்டுடன் மாத்திரமே நிரந்தரமான அரசியற் தீர்வைப் பெற முடியும். இந்த அடிப்படையைப் பற்றித்தான் சர்வதேச அழுத்தமும் இருக்கும். இந்த அடிப்படை உண்மையைக் கூடப் புரியாதவர்களால் அல்லது தெரிந்து கொண்டும் சுயஇலாப அரசியலுக்காக இதை மறைத்து, மழுப்பி அரசியல் செய்பவர்களால் எமக்கு விமோசனம் கிட்டாது.
ஆகஸ்ட் ஐந்தாம் திகதி தமிழ் மக்கள் திரளாகச் சென்று உங்கள் ஆணையை எமக்கு மீண்டும் வழங்க வேண்டும். கூட்டமைப்பின் பத்தாண்டுப் பயணத்தின் திசையும், அறமும் சரியென நீங்கள் உணர்த்த வேண்டும். அடுத்த கட்சிகளை திட்டுவதை மாத்திரமே தமது ஒரே அரசியற் திட்டமாகக் கொண்ட கட்சிகளை நீங்கள் உதறித் தள்ள வேண்டும்.
செல்லுமிடமெல்லாம், ஏறிய மேடை எல்லாம் எனது தளராத ஒரே கோரிக்கையாக இருந்தது ‘தவறாது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களியுங்கள்’ என்பதே. அதையே மீண்டும் இங்கு அழுத்திக் கேட்டு விடைபெறுகின்றேன்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியே எனது வெற்றி. எம் அனைவரினதும் வெற்றி!
நான் அல்ல. நாம்.
நமக்காக நாம்.
என்றும் உங்கள் நண்பன்,
ம.ஆ.
————————————————————————————–
மீண்டும் பதிவு செய்கிறேன்! அனைவரும் வாசியுங்கள்!
அன்பிற்குரிய முகநூல் நண்பர்களுக்கு, சுமந்திரன் எழுதுவது!போரோய்ந்த கையோடு நாமிருந்த நிலையிலும் பார்க்கத் தமிழ் இனத்தின் தற்போதையை நிலை நிச்சயம் முன்னேற்றகரமானது. அடைந்த நன்மையான மாற்றங்கள் அனைத்தின் பின்னாலும் இயங்கிய தமிழரது அமைதியான, நிதானமான ஜனநாயகப் பிரதிநிதியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உங்கள் தீர்ப்பிற்காகக் காத்து நிற்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பத்தாண்டுப் பயணத்தில் தடைகள் இருந்திருக்கின்றன. குறைகள் இருந்திருக்கின்றன. தாமதங்கள் இருந்திருக்கின்றன. ஆனால் நாம் சரியான திசையில் தான் பயணிக்கின்றோம். இதற்கு இப் பயணத்தில் நாம் அடைந்த முக்கியமான வெற்றிகள் இதற்குச் சான்று. காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுவிப்பு, மீள் குடியேற்றம், ஜனநாயக வெளித் திறப்பு, இராணுவக் கெடுபிடிகள் குறைப்பு என எம் அன்றாட வாழ்வில் நாம் இந்த முன்னேற்றங்களை உள்ளார உணர்ந்திருக்கிறோம். கடந்த பாராளுமன்றத்தில் நாம் பத்து வீதப் பிரதிநிதித்துவத்தைக் கூடக் கொண்டிருக்கவில்லை. அமைச்சரைப் பதவிகளைப் பெற்றிருக்கவில்லை. ஆனால் பலவற்றைச் சாதித்தோம். 19 ஆம் திருத்தச் சட்ட வரைபு; மடிவலை மீன்பிடித் தடைச் சட்ட வரைபு; காணாமலாக்கப்பட்டோர் அலுவலகச் சட்டம் என்பன எமது நேரடிப் பங்களிப்பால் உருவானவை.
இராணுவம் கையகப்படுத்தியிருந்த தமிழர் நிலங்களில் 75% ஆனவற்றை விடுவித்தோம். வலி வடக்கு, சம்பூர் போன்ற இடங்களில் எம் மக்களது பல்லாண்டு காலம் நீடித்த மீள் குடியேற்றத்திற்கான போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தோம். ஜனாதிபதியோடும், பிரதமரோடும் பல சுற்றுப் பேச்சுக்களை நடத்தி இணக்கப்பாட்டை எய்தினோம். அரசியற் கைதிகள் விபரங்களை சிறைகளுக்கு நேரடியாகச் சென்று கோவைப்படுத்தினோம். அரைவாசிக்கும் அதிகமானோரை விடுவித்தோம். முக்கியமான பொருளாதாரத் திட்டங்களான பலாலி விமான நிலைய மீள் திறப்பு மற்றும் சர்வதேச தர உயர்த்தல், மயிலிட்டித் துறைமுக விடுவிப்பு மற்றும் புனரமைப்பு, பருத்தித்துறை மீன்பிடித் துறைமுக அபிவிருத்தித் திட்டம், காங்கேசன்துறைத் துறைமுக மீள் கட்டுமானம் என்பவை கூட்டமைப்பின் நேரடி முன்மொழிவு, பேரம்பேசல், அழுத்தங் கொடுத்தல் என்பவற்றூடு நடைமுறைக்கு வந்தவை.
இவையனைத்திலும் எனது பங்களிப்பு நிறைவானது. சாதித்தவற்றை விளம்பரப்படுத்துவதில் கூட்டமைப்பும், நானும் தவறியிருக்கிறோம் என்பது ஏற்க வேண்டிய குற்றச்சாட்டே. இதைச் சரி செய்யவென இந்தப் பக்கத்தில் இவை பற்றிய தெளிவூட்டல்களை எனது அணியினர் முன்னெடுத்திருந்தார்கள். இவை ஒரு புறமிருக்க, நான் சென்ற முறை தேர்தலில் போட்டியிட்ட போது அரசியலமைப்பு உருவாக்கத்தை முன்னிறுத்தியே போட்டியிட்டேன். ஆகவே, இந்த விடயத்தில் கூட்டுப்பொறுப்பைத் தாண்டி என் தனிப்பட்ட செயற்பாட்டைக் கோடிட்டுக் காட்டுவது பொருத்தமானது என எண்ணுகிறேன்.எமது நீண்ட கால அரசியற் பிரச்சினைக்குத் தீர்வாக தமிழர் நாம் இந்த நாட்டில் சுயகொளரவத்துடன், சம அந்தஸ்துள்ள பிரஜைகளாக எமக்கே உரித்துடைய சுயநிர்ணய உரிமையை அர்த்தமுள்ள வகையில் பிரயோகிக்கும் சமஷ்டி அடிப்படையிலான தீர்வை நாம் எமது தேர்தல் அறிக்கையில் முன்மொழிந்திருந்தோம். தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கும், எனக்கும் தந்த ஆணைக்கு உண்மையாய் கடந்த ஐந்தாண்டு நாம் செயற்பட்டோம் என்பதை என்னால் இங்கு உறுதிபடக் கூற முடியும். ஆழ்ந்த அர்ப்பணிப்போடு அரசியலமைப்பு செயலகத்திற்கு நான் இணைத் தலைமை வழங்கினேன்.
மொத்தம் இருபத்தொரு அங்கத்தவர்களைக் கொண்ட அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவில் எம் கட்சியில் இருவரே அங்கத்துவம் வகித்தோம். இந்தச் சூழலில் இயங்கி அதிகாரப் பகிர்வென்ற விடயத்தில் அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்திய சர்வ கட்சி இணக்கப்பாட்டை இலங்கையின் வரலாற்றில் முதற் தடவையாக எய்தினோம். இது நாம் ஈட்டிய முக்கியமானதொரு வெற்றி. பராளுமன்றத்தில் மாத்திரமல்ல. அரசியலமைப்பு நிறைவேற வெகுசன வாக்கெடுப்பிலும் நாம் வெற்றியடைய வேண்டுமென்பதை முன்-உணர்ந்தவனாக சிங்கள மக்கள் மத்தியில் எமது அரசியல் நிலைப்பாடுகளை விளங்கப்படுத்தவும், அவற்றின் தார்மீக அறத்தை நியாயப்படுத்தவும் விளைந்தேன். இதற்கெனவே என் சிங்கள மொழிப் பேச்சாற்றலை விருத்தி செய்தேன். சிங்கள மக்கள் மத்தியில், சிங்கள மொழியில் எமது தரப்பு நியாயங்களை முன்வைத்தேன். நூற்றுக்கும் மேற்பட்ட கூட்டங்களை ஒழுங்கு செய்து பேசினேன். சிங்கள ஊடகங்களில் நேர்காணல்கள் மற்றும் விவாதங்களில் தொடர்ச்சியாகக் கலந்து கொண்டேன். இந்த முயற்சிகளின் பயனாக சமஷ்டியின் அடிப்படைகளான நிறைவான, மத்தியின் குறுக்கீடு இல்லாத, மத்தியால் ஒரு தலைப்பட்சமாக மீளப் பெற்றுக்கொள்ள முடியாத அதிகாரப் பகிர்வை உள்ளடக்கிய வரைபை நாம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தோம்.
அதிக சிரத்தையுடன் உருவாக்கப்பட்ட இந்த வரைபை அரசியலமைப்பாக நிறைவேற்றுவதற்கு முன்பாக தேசிய அரசாங்கத்திலிருந்த இரு கட்சிகளும் ஒன்றுகொன்று மோதத் துவங்கியதில் காரியம் கை நழுவி விட்டது. இது துரதிஷ்டவசமானது. எமது நேரடிக் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டது. ஆட்சிக்கு வரவிருக்கும் ராஜபக்ச அரசாங்கமும் புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டுமென்பதை முன்னிறுத்தியே போட்டியிடுகிறார்கள். ஏற்கனவே நாம் வரைந்து சமர்ப்பித்த வரைபிலுள்ள அதிகாரப் பகிர்வு முன்மொழிவுகளுக்கு அவர்களும் இணங்கியிருக்கிறார்கள்.
புதிய அரசியலமைப்பை உருவாக்க 2/3 பெரும்பான்மை தேவைப்படும். எம்மோடு அவர்களுக்குப் பேரம் பேச வேண்டி வரும். அந்தக் கட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் பலமான அணியாக இருக்க வேண்டும். எம் மக்களுக்கு அரசியற் தீர்வு எவ்வளவிற்கு அவசரமாகத் தேவையோ அந்தளவிற்கு வாழ்வாதார விருத்தியும், அபிவிருத்தியும் அவசியம். இளைஞர் தம் பிரதேசங்களை விட்டகன்று, தெற்கிலும், வெளிநாடுகளிலும் பொருளாதாரக் காரணங்களுக்காக தஞ்சமடையும் நிலமை மாறாத பட்சத்தில் எமது தேசியக் கோஷங்களில் வெறுமையே எஞ்சும். எம் இனம் பலயீனமாகவேயிருக்கும். இதை நாம் உணர்ந்திருக்கிறோம். இது விடயம் குறித்து நாம் முற்போக்காக செயற்பட வேண்டுமென்பதில் குறியாகவிருக்கிறோம்.
எமக்கெனத் தனித்துவமானதொரு பொருளாதார நிரலை உருவாக்கி, குறிப்பாக எம் இளைஞர் தம் பிரதேசங்களிலே மனநிறைவோடு வாழத்தக்க சூழலை நாம் உருவாக்குவோம். இதில் நான் தனிப்பட்ட அக்கறை கொண்டு செயற்பட உறுதி பூண்டுள்ளேன். எல்லாவற்றிற்கும் மேலாக, எம் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வை அடையவே அரசியலிற்கு வந்தேன். தீர்விற்காகவே அதிகம் உழைத்தேன். தீர்விற்காகவே மீண்டும் போட்டியிடுகிறேன். நான் தலைமை தாங்கி வரைந்த வரைபு முடிந்த கதையன்று. அந்த நம்பிக்கையை நான் இழக்கும் போது, அரசியலில் இருந்து ஒதுங்குவேன். இலங்கைக்குள்ளே, இலங்கைப் பாராளுமன்றத்திற்குள்ளே, அனைத்து இன இணக்கப்பட்டுடன் மாத்திரமே நிரந்தரமான அரசியற் தீர்வைப் பெற முடியும். இந்த அடிப்படையைப் பற்றித்தான் சர்வதேச அழுத்தமும் இருக்கும். இந்த அடிப்படை உண்மையைக் கூடப் புரியாதவர்களால் அல்லது தெரிந்து கொண்டும் சுயஇலாப அரசியலுக்காக இதை மறைத்து, மழுப்பி அரசியல் செய்பவர்களால் எமக்கு விமோசனம் கிட்டாது.ஆகஸ்ட் ஐந்தாம் திகதி தமிழ் மக்கள் திரளாகச் சென்று உங்கள் ஆணையை எமக்கு மீண்டும் வழங்க வேண்டும். கூட்டமைப்பின் பத்தாண்டுப் பயணத்தின் திசையும், அறமும் சரியென நீங்கள் உணர்த்த வேண்டும். அடுத்த கட்சிகளை திட்டுவதை மாத்திரமே தமது ஒரே அரசியற் திட்டமாகக் கொண்ட கட்சிகளை நீங்கள் உதறித் தள்ள வேண்டும்.
செல்லுமிடமெல்லாம், ஏறிய மேடை எல்லாம் எனது தளராத ஒரே கோரிக்கையாக இருந்தது ‘தவறாது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களியுங்கள்’ என்பதே. அதையே மீண்டும் இங்கு அழுத்திக் கேட்டு விடைபெறுகின்றேன்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியே எனது வெற்றி. எம் அனைவரினதும் வெற்றி!நான் அல்ல. நாம். நமக்காக நாம். என்றும் உங்கள் நண்பன்,எம். ஏ. சுமந்திரன்.
Leave a Reply
You must be logged in to post a comment.