இவருக்கோ எமது வாக்கு?

இவருக்கோ எமது வாக்கு?’ -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

லகமெலாம் அதிர்வுகொள உண்மை வேண்டிஉய்வதற்கு வழிதேடி தமிழர்வாடஇலங்கை யதன் பாராளுமன்று தன்னின்எழுச்சியுறும் தேர்தலதும் வந்ததாலேநலம் சிதைய அணி பிரிந்து பதவி வேண்டிநம்தலைவர் தமக்குள்ளே பகைத்து நின்றார் குலம் அழிக்க வந்தவர்போல் ஒருவர் வீட்டின்கூரையதைப் பிய்த்தேதான் இழிவு செய்தார். நீதியதன் பதியெனவே நின்ற ஏந்தல்நீசர்களின் கைப்பொம்மையான பின்னர்பாதிமதி நீறணிந்த சிவனைப் போலபகல்வேஷம் போட்டேதான் வெளியில் வந்துசேதிபல பொய்யோடு சேர்த்துச் சொல்லிசிறப்பான இனம் சிதைக்க முன்னே வந்தார்ஆதியிலே மண்ணுக்காய் உயிரை நீத்தஅற்புதரைத் தம் உறவாய்ப் பேசி நின்றார் மாகாண சபையதனில் மண்ணைக் கௌவிமாண்புகளைத் தொலைத்திட்ட மதியில் வேந்தர்’ஆகா! நான் அது செய்வேன் இதுவும் செய்வேன்அடுத்த சில நாட்களிலே ஈழம் பெற்றுபாகாகக் கொணர்ந்திடுவேன்’ என்று பொய்யைப்பலர் அறிய விற்கின்றார்

பதவிக்காகவாகாக நம் இனத்தை வளைக்க எண்ணிவற்றாது பொய்யுரைத்து நிற்கின்றாரே. நேற்று வரை பகை என்று சொன்னோர் தம்மைநேசமுடன் கையணைத்துப் பதவிக்காகவேற்றுமைகள் இல்லார் போல் விரும்பி நின்றார்விரும்பியவர்  வெறுத்தேதான் விலக்கி நின்றார்சோற்றுக்கா வழியில்லை? இவர்க்கு ஏன்தான் சொல்லதனுள் பொய் புதைத்து விற்கும் வேலைசாற்றுகிற புகழ் இவர்க்கு வேண்டாமாமோ?சகதியிலே அகப்பட்டு இழிந்து போனார். ஆற்றல் இலை நிர்வாகம் தன்னில் என்றஅவ்வுண்மை வெளிப்படையாய்த் தெரிந்த பின்னும்ஊற்றெடுக்கும் பதவியதன் ஆசைதன்னால்ஊர் கெடுத்து வாழ்வுபெற விரும்பி நின்றார்ஏற்றபெரும் பதவியதன் நினைவு மாறிஇழிவதனின் எல்லை தொட முனையும் இந்ததேற்றமிலா மனிதர் தனை என்ன சொல்ல?தேரிழுத்துத் தெருவ தனில் விட்டுவிட்டார். தனை அணைந்த அமைச்சர் தனைக் காக்கவேண்டிதப்பில்லா அமைச்சரையும் தண்டித்தேதான்வினை இழிவு செய்ததனால் மன்றில் இன்றுவீணாகத் தலைகுனிந்து நிற்கின்றாராம்.பனைமரம் போல்  நின்று உருவில் உயர்ந்து என்ன?பண்பதனில் புல்லாகி வளைந்து போனார் இணையதிலா தலைவனைத் தன் ‘தம்பி’ என்று இவர் கூறும் நகைச்சுவையை என்ன சொல்ல? 

சுன்னாகத் தண்ணீரின் சுவையை மாற்றிசொல்லவொணா இழிவுதனைச் செய்த அந்த விண்ணர்களைக் காப்பதற்காய்ப் பொய்கள் கூறிவேற்றுமைகள் பல செய்து ஆய்வின் பேரால்மண்ணதனின் மக்களெலாம் மடியும்  வண்ணம் மனமொத்துச் செய்த பெருந்துரோகம் தன்னைஎந்நாளும் எங்கள் இனம் மறந்து போமோ?இவர்க்கோ எம் வாக்கதனை ஈயப்போறோம்? தங்களது உறவுகளில் மனதை வைத்துதமிழரினம் சிதைத்திடவே வழிகள் செய்யும்பங்கமிகு இவர் அறிவை என்ன சொல்ல?

பண்பின்றித் தமிழர்களைப் பிரித்து நின்றார்மங்களத்து வடிவொன்றே போதும் இந்தமடையர் இனம் ஈர்ப்பதற்கு என்று எண்ணும்பொங்குகிற இவர் வஞ்சம் புகுந்தேவிட்டால்போய்த் தொலையும் எங்கள் இனம் மறந்திடாதீர்! எதிரிகளாம் என்றுரைத்த அரசை நாடிஎனக்கீயும் ‘ஜீப்’ என்று இரந்து நின்றார்நிதி பெறவே மக்கள் அவை முன்னே வந்தும் நீட்டினராம் கைகள்தனை நாணமின்றிவிதியதனால்த் திசைமாறி வாழ்வுக் கேங்கிவிம்முகிற ஏழைகளோ இவர்க்கு ஈவார் மதிநிறைந்த தமிழரினம் மயங்கிப்போயும்மானமதை விட்டிவரை ஏற்குமாமோ?

http://www.uharam.com/news/-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81–%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-/625

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply