கருப்பு யூலை – சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும்  இடையிலான இடைவெளி அதிகரித்துள்ளது!

கருப்பு யூலை – சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும்  இடையிலான இடைவெளி  அதிகரித்துள்ளது!

நக்கீரன்

சிங்கள அரசு, அதன்  பாதுகாப்புப் படைகள், சிங்களக் காடையர்கள் கைகோர்த்து தமிழர்களை படுகொலை செய்த நாள் அரங்கேறி  31 ஆண்டுகள் கழிந்து விட்டன.   ஆனால் எமது  மக்களின் அல்லல்கள், அவலங்கள், துன்பங்கள், துயரங்கள் தொடர்கின்றன.  கருப்பு யூலை ஏற்படுத்திய இழப்புக்கள், வடுக்கள்,  வலிகள் ஒரு முடிவுக்கு வருவதாக இல்லை.  மாறாக அவை கூடிக் கொண்டே போகின்றன.  தமிழ்மக்களுக்கு ஆண்டில் உள்ள எல்லா மாதங்களுமே இன்று கருப்பு மாதங்களாகி விட்டன.

ஈழப் போர்  முடிந்து  5 ஆண்டுகளுக்கு மேலாகியும் எமது மக்களில் பெரும்பான்மையோர் வறுமையில் வாடுகிறார்கள். ஆயிரக்கணக்கான குடும்பங்கள் மீள் குடியமர்த்தப்படவில்லை.  காரணம் அவர்களது காணிகளை சிங்கள இராணுவம் பறித்துள்ளது. பறித்த காணிகளில் இராணுவம் இராணுவ  முகாம்களை நிறுவியுள்ளது.  ஆடம்பர ஹோட்டல்கள்,  உல்லாச விடுதிகள், உணவு விடுதிகள், நீச்சல் தடாகங்கள்,  குடியிருப்புக்கள், விளையாட்டு  மைதானங்கள், போர் நினைவுத் தூண்கள், பவுத்த விகாரைகள் நிறுவப்பட்டுள்ளன. அவற்றை தென்னிலங்கை சிங்களச் சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் சென்று தரிசித்துத் திரும்புகிறார்கள். அரசு அதை ஊக்குவிக்கிறது.

இராணுவ பிரசன்னம், பவுத்த விகாரைகள்  தமிழர்களது பண்பாடு சிதைக்கப்படுவதற்கு காரணமாக இருக்கின்றன.  மேலும் தமிழ்மக்களது அடையாளத்தை முற்றாக அழித்தொழிக்க தென்னிலங்கைச் சிங்களவர்கள் வடக்கில் குடியேற்றப்படுகிறார்கள்.

மொத்தம் உள்ள 19 இராணுவப் படைப் பிரிவுகளில்  14 பிரிவுகள் வடக்கிலும் 2 பிரிவுகள் கிழக்கிலும் ஆக மொத்தம் 16 இராணுவப் பிரிவுகள் வட – கிழக்கில் நிறுத்தி வைக்கப்பட்டிக்கின்றன. இவற்றை விட 2 செயலணிகள் (Task Force) கிளிநொச்சியிலும்  முல்லைத்தீவிலும் நிலை கொண்டுள்ளன.

 ஆயிரம் அரசியல் கைதிகள்  பூசா, கொழும்பு, அனுராதபுரம், வவுனியா போன்ற சிறைகளில் ஆண்டுக்கணக்காக அடைக்கப்பட்டுள்ளார்கள்.  இவர்களில் பலர் வி.புலிகளுக்கு தேநீர், இடியப்பம் கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள்.

மே 18, 2009 இல் இராணுவத்திடம் சரணடைந்த எழிலன், யோகி, பாலகுமார், கவிஞர் இரத்தினதுரை, திலகர், பேபி சுப்பிரமணியன் உட்பட சுமார் 50 பேர்  இராணுவத்தால் பேருந்துகளில் ஏற்றிச் செல்லப்பட்டார்கள்.  அதனைப் பார்த்த கண்கண்ட சாட்சிகள் இருக்கின்றன. பிடித்துப் போகப்பட்டவர்கள் என்ன ஆனார்கள்? எங்கிருக்கிறார்கள்?   உயிரோடு இருக்கிறார்களா? இல்லை கொல்லப்பட்டார்களா? சிங்கள அரசு இதுபற்றித் தனக்கு ஒன்றும் தெரியாது எனக் கையை விரித்துள்ளது. காணாமல் போனவர்கள், காணமல் போனவர்கள்தான் அவர்களைப் பற்றிப் பேசிப் பயனில்லை என்கிறது இராணுவம். 

வட மாகாண சபையின் வினையாற்றல் சிங்கள அரசினால் முடக்கப்பட்டுள்ளது.  வடக்கு மாகாண ஆளுனர் சி.ஏ. சந்திரசிறீ சர்வாதிகாரி போல் நடந்து கொள்கிறார்.  வட மாகாண சபைக்கு ஆளுநராக ஒரு சிவிலியனை நியமிக்குமாறு ததேகூ முன்வைத்த வேண்டுகோளுக்கு முன்னர் சம்மதித்த மகிந்த இராஜபக்சே இப்போது சந்திரசிறீயின் பதவிக் காலத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்துள்ளார்.  இப்படி  கொடுத்த வாக்குறுதியை மீறி முன்னாள் இராணுவ அதிகாரியான சந்திரசிறீயை சிறிலங்கா அதிபர் மகிந்த இராஜபக்சே நியமித்துள்ளது, தான்தோன்றித்தனமான, கேவலமான, அசிங்கமான நடவடிக்கை என ததேகூ இன் தலைவர் இரா. சம்பந்தன் சீற்றத்தோடு கண்டித்துள்ளார். 

அபிவிருத்தித் தேவைகளுக்காக மக்களிடமிருந்து காணிகளை பலாத்காரமாக பறிக்க வேண்டாமென்று ஜனாதிபதி மகிந்த இராஜபக்சே  அரச அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். கடந்த வாரம் இரத்தினபுரியில்  இடம்பெற்ற அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நிலத்தைப் பறித்து மக்களை தெருவில் விட மாட்டோம் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.  ஆனால் அவரது அறிவுரை  வட  – கிழக்கில்  நடைமுறைப் படுத்தப் படும் சாத்தியம் இல்லை.

தமிழர்களது வாழ்வும் வளமும் திட்டமிட்டு துடைத்து அழிக்கப்பட்டு வருகின்றது.  அவர்களது அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றது. இரண்டாம் தர மக்களாக தமிழர்கள் நடத்தப்படுகிறார்கள்.  இதனால் அவர்கள்  நாட்டை விட்டு அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு  உயிரைப் பணயம் வைத்து படகுகளில் ஓடுகிறார்கள்.

ஒரு காலத்தில் வடக்கு மாகாணம் கல்வியில் முன்னிலையில் இருந்தது. இப்போது பின்தங்கிவிட்டது. 2011 ஆம் ஆண்டு சாதாரண தர தேர்வில் வடமாகாணம் கடைசி இடத்தில் இருந்தது. 2012 இல் கடைசிக்கு (சப்புரகம மாகாணம்) முந்திய  இடத்தைப் பிடித்துள்ளது.

2011 – 2012 ஆண்டுகளில் நடந்த உயர்தர தேர்வில்  முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா  மாவட்டங்கள் கடைசி நான்கு இடங்களைப் பிடித்தன. திருகோணமலை 6 ஆவது இடத்தையும்  மட்டக்களப்பு 7 ஆவது இடத்தையும் பிடித்தன.  

பொருளாதாரத்திலும் வடக்கும் – கிழக்கும் பின்தங்கியுள்ளன.  இலங்கையின் மொத்த உள்ளூர் உற்பத்திக்கு வடமாகாணத்தின் பங்களிப்பு 3.3 விழுக்காடு மட்டுமே. வேலை வாய்ப்பு மிகக் குறைவாக உள்ளது. இருக்கிற வேலை வாய்ப்பையும் தென்னிலங்கையில் இருந்து வரும் சிங்களவர்களால் அபகரிக்கப்படுகிறது.

வடக்கையும் கிழக்கையும் இராணுவப் பிடிக்குள் வைத்திருக்க வசதியாக  ஓய்வு  பெற்ற சிங்கள  இராணுவ தளபதிகளை ஆளுநராகவும் அரச அதிபர்களாகவும் நியமித்துள்ளது. மட்டக்களப்பு ஆளுநர்  முன்னாள் கடற்படைத் தளபதி  மொஹான் விஜயவிக்கிரம. இவர் 2007 இல் நியமிக்கப்பட்டவர்.   திருகோணமலை மாவட்ட அரச அதிபர்  ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்  இரஞ்சித் டி சில்வா. இவர் 2006 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டவர். 1799 ஆம் ஆண்டுக்குப் பிறகு அரச அதிபர் பதவியில் ஒரு இராணுவ தளபதி நியமிக்கப்பட்டது இதுதான் முதல் தடவை. சுதந்திரத்துக்குப் பிறகு  திருகோணமலை அரச அதிபராக தமிழர் ஒருவர் இதுவரை நியமிக்கப்படவில்லை.  அம்பாரை மாவட்ட அரச அதிபர் நீல் டி அல்விஸ்.  மன்னார் மாவட்ட அரச அதிபர்  எம்.வை.எஸ்.தேசப்பிரிய.  வவுனியா மாவட்ட அரச அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய.  வட கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களில் நான்கு மாவட்டங்களில் அரச அதிபர்களாக சிங்களவர்களே நியமிக்கப்பட்டுள்ளார்கள்.  எஞ்சிய 17 மாவட்டங்களில் ஒரு தமிழர் கூட அரச அதிபர் பதவியில் இல்லை.

போர் முடிந்து விட்டது,   இனிமேல் நிம்மதியாக வாழலாம் என்ற மக்களின் எதிர்பார்ப்பில் சிங்கள அரசு மண்ணை அள்ளிக் கொட்டியுள்ளது.   இராணுவத்தின் கெடு பிடிக்குள்ளும் நெருக்குவாரத்துக்குள்ளும் தமிழ்மக்கள் நரக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பெண்பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் நெருப்பை மடியில் கட்டி வைத்துக் கொண்டு தவிக்கிறார்கள். இந்த வாரம் கூட யாழ்ப்பாணம், காரைநகரில் 11 அகவை  சிறுமியொருவர் அப்பகுதியில் நிலைகொண்டுள்ள கடற்படைச்  சிப்பாய் ஒருவரால் தொடர்ச்சியாக 12 நாட்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார். இப்போது குறித்த சிறுமி யாழ்ப்பாண மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வடக்கிலும் கிழக்கிலும் வறுமை காரணமாக தற்கொலை செய்து கொள்பவர்கள் பற்றிய செய்திகள் அடிக்கடி வந்து கொண்டிருக்கின்றன. அண்மையில் யாழ்ப்பாணத்தில் வறுமை காரணமாக  16 அகவை பாடசாலை மாணவன் கருணாகரன் லிம்சன் தற்கொலை செய்து கொண்டார்.

லிம்சன்  குடும்பம்  வாழ்ந்துவரும் வீடு யாழ்ப்பாணத்தில் அடுக்கு மாடிகள் கட்ட  கட்டிடக்காரரால்  கட்டப்படும்  கொட்டில்களை விட மோசமானது. லிம்சனின்  பரிதாப மரணத்தின் பின்னரும் கூட  அவனது குடும்பம் அடிப்படை வசதிகள் ஏதுமற்ற நிலையில் கரவெட்டி இராஜகிராமத்தில் வாழ்ந்து வருகின்றது.

இதில் சோகம் என்னவென்றால் லிம்சனின் தந்தையான கருணாகரன் வி.புலிகளது அமைப்பில் இருந்தவர். மாவீரர் நாளையிட்டு  சுவரொட்டிகளை ஒட்டியதாக மீண்டும் கைதாகி புனர்வாழ்வு மையத்தினில்   சிறிலங்கா  இராணுவத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

லிம்சனின் குடும்பம் போல் வடக்கிலும் கிழக்கிலும்  ஆயிரக்கணக்கான குடும்பங்கள் குடிநீர் வசதிகளோ மலசலகூட வசதிகளோ  இன்றி  கொட்டில்களில் ஏழ்மையில் வாழ்ந்து வருகின்றன.   போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு வீட்டைத்தன்னும் மகிந்த இராஜபக்சே அரசு கட்டிக் கொடுக்கவில்லை. வீடு வேண்டாம் ஒரு கழிவறையைக்  கூட  அரசு கட்டிக் கொடுக்கவில்லை. ஆனால் சிறிலங்கா  அரசோ மீளக்குடியமர்த்திய குடும்பங்கள் மாலோகமாக வாழ்வதாக உலகத்துக்குக்   கூறிக்கொண்டிருக்கின்றது.

கருப்பு யூலையை இனக் கலவரம் என்று பலர் அழைக்கிறார்கள். இது தவறான சொல்லாட்சி ஆகும். காரணம் கலவரம் என்றால் சிங்களவரும் தமிழரும் மோதிக் கொண்டார்கள், சண்டை பிடித்தார்கள் எனப் பொருள்படும். ஆனால் 1983 கருப்பு  யூலை ஆயுதம் கையில் இல்லாத தமிழர்களை ஆயுதபாணிகளான சிங்களக் காடையர்கள் தாக்கி இனப் படுகொலை செய்த மாதமாகும்.

கருப்பு யூலை இனப்படுகொலை என்பது யாழ்ப்பாணத்தில் 13 படையினர் வி.புலிகளால் கொல்லப்பட்டதற்கு   சிங்களவர்களால் மேற்கொள்ளப்பட்ட  எதிர்வினை எனச் சொல்லப்பட்டாலும்  இந்தப் படுகொலை முன்கூட்டியே நன்கு திட்டமிட்டு நிறைவேற்றப்பட்ட வெறியாட்டம் ஆகும்.  சிங்களக் காடையர்கள் இலங்கை முழுதும் வீதிகளில்  இறங்கித் தமிழர்களை ஆயுதங்களால் தாக்கிக் கொன்றார்கள்.  அவர்களது சொத்துக்களை தீயிட்டுக் கொளுத்தினார்கள். அல்லது கொள்ளை அடித்தார்கள்.

தேர்தல் இடாப்புகளைக் கையில் வைத்துக் கொண்டு மஞ்சள் அங்கி அணிந்த பவுத்த பிக்குகள் தமிழர்களது வீடுகளையும் அங்காடிகளையும் இனம் காட்ட சிங்களக் காடையர்கள் அவற்றச் சூறையாடிவிட்டுக் கொளுத்தினார்கள்.

அதிவுயர் பாதுகாப்பு  வெலிக்கடைச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மொத்தம் 53 தமிழ் அரசியல் கைதிகள் சக சிங்களக் கைதிகளால் குத்தியும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டனர். இப்படுகொலையைச் செய்த எவரும் இதுவரையில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுத்  தண்டிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை.

யூலை 23, 1983 அன்று 35 தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப்பட்டனர். பின்னர் யூலை 28 இல் மேலும் 18 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். மொத்தம் 53 அரசியல் கைதிகள் – அரசின் பொறுப்பில் இருந்தவர்கள் – கொல்லப்பட்டார்கள்.

1983 கருப்பு யூலையின் போது  கொலை, வெட்டு,  தீ வைப்பு, கத்திக் குத்து இடம்பெற்றன.  கொலைக்குக் கத்திகள், பொல்லுகள்,  துப்பாக்கிகள்,  கைக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டன.  நானூற்றுக்கும் – 3000 க்கும் இடையிலான மக்கள் கொல்லப்பட்டார்கள். இருபத்தாயிரம் மக்கள் காயப்பட்டார்கள்.

புலம் பெயர்ந்த தமிழர்கள் இந்த இனப் படுகொலையை நினைவு கூரும் அதேவேளை  அய்.நா. மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் நிமித்துள்ள 3 பேர் அடங்கிய விசாரணைக் குழுவுக்கு  2002 – 2009 காலப் பகுதியில் நடந்த மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் மற்றும் அது தொடர்பான குற்றங்கள் பற்றிய சாட்சியங்களை அந்த விசாரணைக் குழுவுக்கு கொடுத்து உதவ வேண்டும்.  இந்த வாய்ப்பை எக்காரணம் கொண்டும் நாம் தவறவிடக் கூடாது. எமக்காக வாதாட  மனித உரிமை சட்டங்களில் கை தேர்ந்த வழக்கறிஞர்களை அமர்த்த வேண்டும். அதற்குச் செலவாகும் பெருந்தொகை நிதியை மக்கள் கொடுத்து உதவ வேண்டும். 

முள்ளிவாய்க்காலில் அரங்கேறிய  இனப் படுகொலை திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டதையும் அப்படியான இனப் படுகொலை 1983 க்குப் பின்னரும் தொடர்கிறது என்பதையும் நாம்  விசாரணைக் குழுவுக்கு  எடுத்துச் சொல்ல வேண்டும்.  ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதத்தின் பாசீச  முகத்தை அந்த விசாரணைக் குழுவுக்கு தோலுரித்திக் காட்ட வேண்டும்.

1983  இனக் கலவரத்தின் போது சிங்களக் காடையர்களாலும் சிங்களப் படையினராலும் நடத்தப்பட்ட  கொலைவெறி ஆட்டத்துக்கு அஞ்சி  தமிழ்நாட்டுக்கு அகதிகளாக ஓடித்  தஞ்சம் அடைந்த 120,000  மக்கள் இன்றும் நாடு திரும்ப முடியாது அகதி முகாம்களில் வாடுகிறார்கள். நாடு திரும்பித்  தங்கள் சொந்த வீடுவாசல்களில் மீள்குடியமருவதற்கு வேண்டிய சூழலை உருவாக்கிக் கொடுக்க சிறீலங்கா அரசு மறுத்துவருகிறது. அவர்களைப் பற்றிச் சிறிதேனும் அரசு அக்கறை காட்டுவதாக இல்லை.

கனடாவிற்கு ஓடிவந்து அரசியல் தஞ்சம் புகுந்தவர்களில் பலர் இன்று தாங்கள் பிறந்த மண்ணையும் மக்களையும் வேகமாக மறந்து வருகிறார்கள். சிலர் முற்றாக மறந்து விட்டார்கள். அங்கே எமது உடன்பிறப்புக்கள் ஒரு நேர உணவுக்கு அல்லாடும் போது இங்கே  ஆடம்பரத் திருமணங்கள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள், நட்சத்திர விழாக்கள், தேர், திருவிழா போன்றவற்றில் பணத்தைப் பல்லாயிரக் கணக்கில் செலவழித்துப் பாடுபட்டு உழைத்த பணத்தை வறிதே வீணாக்குகிறார்கள். இன்னும் சிலர் மலிவான பொழுது போக்குக்காக மிகுந்த பொருட் செலவில் திரைப்பட நடிகர்கள், நடிகைகள், பாடகர்களை வரவழைத்து தமிழர்களது பணம் கொள்ளை போக வழி சமைக்கிறார்கள். ஒரு சினிமா நடிகையைக் கொண்டு வந்து கடையைத் திறந்தால்த்தான் வியாபாரம் நடக்கும் என்ற மனப்பான்மை வளர்ந்து வருகிறது.

தமிழரின் தாயகமான வட கிழக்கில் 89,000  கும் மேலான குடும்பத் தலைவனை இழந்த தாய்மார்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து வருகிறார்கள். தாயை அல்லது தந்தையை அல்லது தாய் தந்தை இருவரையும் இழந்த பிள்ளைகள் ஆயிரக் கணக்கில் வட – தென் தமிழீழத்தில் இருக்கிறார்கள். இவர்களில் ஒரு சிறு பகுதியினரை மட்டும் சாரதா இல்லம், அன்பு இல்லம்,  செஞ்சோலை, விபுலானந்தர் இல்லம், குருகுலம், காந்தி நிலையம் போன்ற  இல்லங்கள் காப்பாற்றி வருகின்றன.

கொடை உள்ளம் படைத்த ஒரு சில  தமிழர்களே  கைம்பெண்களின் மறுவாழ்வுக்கும் சிறார்களின் பராமரிப்புக்கும் பொருள் உதவி செய்து வருகிறார்கள். ஈழநாடு  வார ஏடும் சிறார்களின் உணவுக்கு வாசகர்களிடம் இருந்து பொருள் பெற்று உதவி வருகிறது.

போரினால் இடம் பெயர்ந்த மக்களில் அண்ணளவாக 93,000 பேர் இன்னமும் மீள் குடியமர்த்தப்படவில்லை.  

யாழ்ப்பாணக் குடாநாட்டில் மட்டும் 44 ஆயிரத்து 559 பேர் தொடர்ந்தும் அகதி வாழ்க்கை வாழ்ந்து வருவதாக இடம்பெயர்ந்தோர் நலன்புரி அமைப்புக்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இவர்கள் அனைவரும் 12 ஆயிரத்து 459 குடும்பங்களை சேர்ந்தவர்களாவர். இவர்களில் பெரும்பாலானோர் 53 நலன்புரி நிலையங்களினிலும் உறவினர் நண்பர்கள் வீடுகளிலும் அடைக்கலம் புகுந்துள்ளனர்.

வலிகாமம் வடக்கு மற்றும் வலிகாமம் கிழக்கில் மட்டும் 1990 இல் இராணுவத்தினால் வெளியேற்றப்பட்ட தென்மூலை, வடமூலை, கரம்பக்கடவை, குடியிருப்பு, மாரிசிட்டி, வசாவிளான் சந்தி, தோலகட்டி போன்ற கிராமங்கள் உட்பட சுமார் 28 கிராமசேவகர் பிரிவுகளை இராணுவம் ஆக்கிரமித்துள்ளது. அங்கிருந்து      வெளியேற்றப்பட்ட மக்கள்   தனியார் நிலங்களில் உள்ள நலன்புரி நிலையங்களில் அகதி வாழ்வு வாழ்ந்து வருகின்றனர்.  மொத்தம் 7,800 குடும்பங்களைச் சேர்ந்த  29,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் வாழ்ந்த  6,381 ஏக்கர் (25.8 சதுர கிமீ)  நிலப் பரப்பை இராணுவம் கையகப்படுத்தியுள்ளது. இவ்வாறு கையகப்படுத்தியுள்ள நிலப்பரப்பு, கொழும்பு நகரத்தின் மூன்றில் இரண்டு பகுதிக்கு ஒப்பானது!

இராணுவம் கையகப்படுத்தியுள்ள  நிலப்பரப்பு உப உணவுப் பயிர்களின் உற்பத்திக்கு மிகச் சிறந்த காணியாகும்.  இந்தப் பகுதி  மக்கள் கடந்த காலங்களில் தமது நிலத்தில் பயிர் செய்ததன் மூலம் மாதாந்தம் கணிசமான வருவாயைப் பெற்று வசதியோடு வாழ்ந்தவர்கள்.   இப்போது அவர்களது காணிகளில் இராணுவம் காய், கறித் தோட்டச் செய்கையில் ஈடுபட்டு அதில் வரும்  காய், கறிகளை தமிழர்களுக்கு விற்று இலாபம் ஈட்டுகிறது!

இதே பகுதியில்தான் மிகச் சிறந்த மயிலட்டி மீன்பிடி ஊர் அமைந்துள்ளது. கடந்த 24 ஆண்டு காலமாக அந்த ஊர்  மக்கள் ஏதிலிகளாக வெளி ஊர்களில் வாழ்கிறார்கள்.

காணி அபகரிப்புக்கு எதிராக இராணுவ அச்சுறுத்தல், கெடுபிடி, நெருக்குவாரம் போன்றவற்றின் மத்தியிலும் மக்கள்  ஆர்ப்பாட்டங்களையும் வாழ்வாதாரப் போராட்டங்களையும்  செய்தார்கள்.  உண்ணா நோன்பு இருந்தார்கள்.  நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்தார்கள். ஆனால் அரசு அவற்றைக் கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து அரசு காணிகளைக் கையகப்படுத்துவதில் முனைப்பாக  இருக்கிறது.

சிங்கள இனவாத அரசுக்குப் பல்லக்குத் தூக்கும் தமிழ் அடிவருடிகளும் கைக்கூலிகளும் தமிழர்களது  வீடுவாசல்கள் பறிபோவதைக் கண்டு கொள்ளவே இல்லை. 

உண்மை என்னவென்றால் தமிழ்மக்கள் வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத ஒரு இராணுவ கொடுங்கோல் ஆட்சியில் அகப்பட்டு மூச்சுவிட முடியாத நெருக்கடிக்குள் வாழ்கிறார்கள்.   சிங்கள இராணுவம் தம்மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவதாக தமிழ்மக்கள் முறைப்படுகிறார்கள்.  தங்களது அடிப்படை சுதந்திரங்கள் பறிக்கப்பட்டு அடிமைகளாக நடத்தப்படுவதாக எண்ணுகிறார்கள்.

தமிழர்கள் சிங்களவர்களோடு ஒரே நாட்டில் கூடி வாழ முடியாது என்ற நிலைமை  1983 இல் இருந்ததை விட 2014 இல்  பல மடங்கு அதிகரித்துள்ளது. மீளிணக்கம் ஏட்டுச் சுரக்காய் ஆகிவிட்டது.  கானல் நீராகிப் போய்விட்டது. மகிந்த இராஜபக்சே தென்னாபிரிக்காவின் மத்தியத்தம் தேவையில்லை என்று சொல்லி  அந்த நாட்டின் பதில் ஜனாதிபதி ராம போசாவை அவமானப்படுத்தி திருப்பி அனுப்பியுள்ளது. 

இன்று சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும்  இடையிலான இடைவெளி பலமடங்கு அதிகரித்துள்ளது.  இதுதான் இன்றைய யதார்த்தமாகும். (2014)

———————————————————————————————————-

Black July after 31 Years the Sinhalese and Thamils Remain Deeply Polarized

Veluppillai Thangavelu

Thirty one (31) years ago on July 24, 1983 Sinhalese mobs executed an orgy of violence that surpassed all other previous pogroms executed in 1956, 1958, 1977, 1979 and 1981.  

The events of July 1983 are poignant for the entire Thamil population around the world. Between July 24 and 29, Thamils were systematically targeted with violence in Colombo and many other parts of Sri Lanka.

The pogrom was a backlash by Sinhalese extremists following the mass funeral of 13 Sinhalese soldiers killed in an ambush on the previous day in Jaffna by members of the Liberation Tigers of Thamil Eelam (LTTE). In a deliberate attempt to inflame racial passions the GOSL gave wide publicity to the killings by televising, broadcasting and publishing the news. On the contrary, the reprisal killings in execution-style of innocent Thamils went unreported in contrast to the wide publicity given to the killing of the 13 soldiers in Jaffna.  

Below is a synopsis of how the 1983 riots unfolded with all its fury:

Sri Lankan Governments officials categorized the violence as uncontrollable race riots instigated by the killing of 13 Sinhala soldiers on the night of July 23. However, history and the course of events during Black July illustrate the Sri Lankan Government’s undeniable involvement in the genocidal acts against Thamils.

July 24 (Day 1): At 1 o’clock in the morning of July 24, the army rounded up hundreds of Thamils in Trincomalee, Mannar, and Vavuniya in the Northeast who had fled the anti-Thamil riots of 1977 and 1981. These Thamils were forcibly taken and left without possessions in the central hills.

Before the riots broke out in Colombo, the army in Jaffna went on rampage in Jaffna. According to the report of the Presidential Truth Commission on Ethnic Violence (1981 – 1984) the army in Jaffna, in revenge for the killing of the 13 soldiers, killed 10 Thamil civilians on Sunday, 24 July 1983. By the evening, the number rose to 51 reprisal killings of Thamil civilians. They were all random killings just opening fire at the whims and fancy of marauding army personnel.

Evidence was placed before the Commission that if the news of these reprisals had been published, the riots may have been avoided. But incredibly, the country’s media went silent on the fact that 51 (Thamil civilians) had already been killed in response to the killing of the 13 Sinhalese soldiers.

In Trincomalee, similar violence broke out as members of the Navy randomly shot at civilians and burnt down Thamil property.

In the evening in Colombo, the state funeral was organized for the soldiers. Thousands of people arrived at the cemetery but the bodies failed to appear. After waiting several hours, the crowd objecting the burial in Kanatte demanded the bodies to be returned to the next of kin. As the large crowd began to leave the grave, a new group of people (identified as government gangs) entered the Borella junction and raised anti–Thamil slogans. As the anti-government cry subsided and anti-Thamil cries became dominant, arson and murdering of Thamils broke out.

July 25 (Day 2): After the midnight lull, mobs were led by people with voter registration lists in hand torched Thamil homes, looted and destroyed Thamil businesses. All traffic was searched, and any Thamils found were killed, maimed, or burned alive. Cyril Matthew, Minister of Industries, was seen directly pinpointing shops to be burned down.

In Colombo, Sinhalese thugs armed with electoral lists and led by Buddhist monks in yellow robes burnt and looted Thamil homes, business and industrial establishments under the very nose of the armed forces. Thamil civilians were hunted down like dogs and killed. Children were thrown into burning cauldron of tar barrels. Clouds of smoke from burning Thamil homes blackened Colombo skies and soon the violence spread to other cities and towns.

Although, policemen were deployed throughout the city they tacitly stood and watched the unfolding mayhem.  Witnesses recall lorry loads of armed troops leisurely waving to looters who waved greetings back. Curfew was only declared by the President late in the afternoon after the worst was over. However, the violence continued unabated. Tens of thousands of Thamils, who were homeless, sought refugee in schools and places of worship.

In Welikada prison, 35 Thamil political prisoners who were awaiting trial under the Prevention of Terrorism Act were massacred by Sinhalese prisoners with the complicity of jail guards using improvised spikes, clubs and iron rods.

The violence spread rapidly throughout the country, engulfing towns like Gampaha, Kalutura, Kandy, Matale, Nuwara Eliya and Trincomalee. One town was completely wiped out – the Indian Thamil town of Kandapola, near Nuwara Eliya.

July 26 (Day 3): Government imposed strict censorship of media reporting on the anti-Thamil violence. Word spread of Sri Lanka’s state of disorder as eye witness accounts and photographs taken by returning tourists illustrated the scale of violence. They described how Thamil motorists were dragged out of their vehicles and hacked to pieces while others were drenched with petrol and set alight in full view of the security forces. The International Airport in Colombo was closed. The violence spread to the country’s second largest city Kandy on 26 July. By 2.45pm Delta Pharmacy on Peradeniya Road was on fire. Soon afterwards a Thamil owned shop near the Laksala building was set on fire, and the violence spread to Castle Street and Colombo Street.  The police managed to get control of the situation but an hour later a mob armed with petrol cans and Molotov cocktails started attacking Thamil shops on Castle Street, Colombo Street, King’s Street and Trincomalee Street. The mob then moved on to nearby Gampola. A curfew was imposed in Kandy District on the evening of 26 July.

In Trincomalee false rumours started spreading that the LTTE had captured Jaffna, the Karainagar Naval Base had been destroyed and that the Naga Vihara had been desecrated. Sailors based at Trincomalee Naval Base went on a rampage, attacking Central Road, Dockyard Road, Main Street and North Coast Road. The sailors started 170 fires before returning to their base. The Sivan Hindu temple on Thirugnasambandan Road had been attacked.

July 27 (Day 4): 18 more prisoners at Welikada Prison were hacked to death just two days after the prison massacre. Their bodies were piled before the statue of Buddha inside the prison.  A total of surviving 36 political prisoners were transferred to other prisons. Rioting continued and the curfew was extended. Witnesses of the violence reported that charred and mutilated corpses of Thamil victims lined the streets of Colombo. In the Central Province the violence spread to Nawalapitiya and Hatton. Badulla, the largest city in neighbouring Uva Province, had so far been peaceful. At around 10.30am on 27 July a Thamil owned motorcycle was set on fire in front of the clock tower in Badulla. Around midday an organised mob went through the city’s bazaar area, setting shops on fire. The rioting then spread to the city’s residential areas where the homes of many Thamils were burnt down. The mob then left the city in vans and buses they had stolen and headed for Bandarawela, Hali-Ela and Welimada where they set properties on fire. The riot had spread to Lunugala by nightfall.

July 28 (Day 5):   Vigilantes set up make-shift roadblocks in villages across the island, searched cars and buses for Thamil passengers. In one incident, a Sinhalese mob burnt to death about 20 Thamils on a minibus as European tourists looked on in horror.

After remaining mute and deaf for 5 days President J.R. Jayewardene appeared on television and addressed the nation for the first time since the outbreak of the anti-Thamil pogrom.  His speech poured oil into the fire or rubbed salt into the wounds inflicted on Thamil civilians.  He fanned the flames of anti-Thamil sentiments by stating that legislation would be brought before Parliament to bar political parties that espouse separation from entering the Legislature and to deprive members of such parties of their civic rights: ‘We are very sorry that this step should be taken. But I cannot see, and my Government cannot see, any other way by which we can appease the natural desire and request of the Sinhala people to prevent the country being divided, and to see that those who speak for division are not able to do so legally.’  There was no remorse and no apology to the victims of the violence from the head of state.  On the contrary, Jayewardene brazenly justified the orgy of violence by declaring that the attacks were “not a product of urban mobs but a mass movement of the generality of the Sinhalese people.” and that “the time had come to accede to the clamour and the national respect of the Sinhalese people to prevent the country from being divided.”

J.R. Jayewardene made good on the promise to bring in legislation to bar political parties that espouse separation.  The 6th Amendment was passed on August 03, 1983. The Amendment outlawed support for a separate state within Sri Lanka and required all Members of Parliament to take an oath of allegiance “to the unitary state” of Sri Lanka.

July 29 (Day 6): Wild rumours started spreading around Colombo that the army was engaged in a battle with the Thamil Tigers. Panicking workers fled in any mode of transport they could find. Mobs started gathering in the streets, armed with axes, bricks, crowbars, iron rods, kitchen knives and stones, ready to fight the Tigers.  The Tigers never came so the mobs turned their attention to fleeing workers. Vehicles were stopped and searched for Thamils. Any Thamil they found were attacked and set on fire. 

A Thamil was burnt alive on Kirula Road.  Eleven Thamils were burnt alive on Attidiya Road.  The police found an abandoned van on the same road which contained the butchered bodies of two Thamils and three Muslims.

Thamils in Colombo began evacuating by cargo ship to the Northern city of Jaffna. Hundreds more internally displaced persons waited anxiously for the next cargo ship to transport them to Jaffna.

July 30 (Day 7): Violence was reported in Nuwara Eliya, Kandapola, Hawa Eliya and Matale on 30 July.  But elsewhere violence began to subside.  That night the government banned three left-wing political parties – Communist Party of Sri Lanka, Janatha Vimukthi Peramuna and Nava Sama Samaja Party – scape coating them for inciting the riots. The banning of the JVP led to another armed uprising between 1987 and 1989.

The orgy of violence continued till August 03, 1983. Although, the Government claimed that the attack on Thamil civilians was a spontaneous backlash by ordinary Sinhalese, but the scale and intensity of the killing sprees belied that claim.  There were at least 3 powerful cabinet ministers seen instigating the violence. Some Sinhalese did risk their lives to save Thamil neighbours and friends from the marauding mobs, but the overwhelming majority just looked on.

The 11 days of unmitigated violence propelled Sri Lanka into an era of war and destruction that  lasted for 24 years, costing 140,000 lives or more and leaving the economy of the North and East in tatters.

About 3,000 (official estimates 358) lives were lost and more than a 100,000 (75 per cent of them from Colombo) were rendered homeless and ended up in refugee camps. More than 100,000 fled to neighbouring India as refugees. Several thousand more fled the country seeking refuge in the West, including Canada. In sheer scale and intensity the Black July pogrom surpassed all previous pogroms in 1956, 1958, 1977 and 1979.

Thamils fearing persecution by the state on grounds of ethnicity and religion fled the country in droves.  They sought refuge in countries like Canada, Europe, Australia and the U.S.  The exodus resulting in a million-strong Thamil Diaspora perceived by the Sri Lankan government as terrorists and sympathizers of the defeated LTTE.   Even after the end of a bloody war in May 2009, Thamils continue fleeing to Australia in boats where they are intercepted and arrested by the Australian Navy in mid-seas.  

Today, Northern and Eastern provinces are under the occupation of the armed forces. Sixteen out of 20 Divisions are deployed in the North (14) and East (2). In addition, there are 2 Task Forces one each in Kilinochchi and Mullaitheevu. The demand by Thamils to withdraw the army of occupation or reduce its presence substantially has gone unheeded.

The government after much pressure held elections to the Northern Province in September 2013. But the Council with a Sinhalese Retd. Army Major General as executive Governor remains largely dysfunctional. A cold war is going on between the Chief Minister and Council on one side and the executive Governor on the opposite side. As a consequence, there are two parallel administrations one under the executive Governor and the other under the Chief Minister. In fact, there are three, if we include the Government Agent, Jaffna district. 

Black July 83 saw the parting of the ways irrevocably by the Sinhalese and the Thamils politically and psychologically. Since then, the polarization between the Thamils and the Sinhalese has remained antagonistic and the divide widened, especially after Mahinda Rajapaksa assumed office as president in 2005. 

The one positive outcome of the Black July pogrom is the rise of Thamil militancy and Thamil nationalism and the demand for an independent state.  Though the armed struggle by the LTTE has been defeated, the causes which led to it in the first place remain unresolved.

Last month,  there was a repeat of Black July in a miniature form in Aluthgama, Beruwela, Dharka Town and Panandura. This time the target was not Thamils but Muslims who through  out the war years  supported fully the government war efforts against the LTTE.  Now the Muslims believe the latest attack on Muslim homes and businesses is government-backed.  In fact, Sri Lanka’s Deputy Representative in Geneva blamed Muslim extremists for starting the riots.  Further attacks on Muslims cannot be ruled out going by past experience.

As was the case in 1983, one of the main objectives for the attacks is to destroy the emerging economic clout of the Muslim community.


Thirty years on: Remembering Black July

By M. A. Sumanthiran, Member of Parliament
Tamil National Alliance

July 26, 2013

For the past 30 years, July 23, 1983, has been remembered in Sri Lanka as ‘Black July’. It marks the tragedy and horror of thousands of Tamil people being attacked by rioting mobs acting with impunity. Hundreds of Tamils were killed and thousands of homes and businesses destroyed. Many Tamil people who survived these attacks fled the country, fearing they would never be able to see their home again. The repercussions of these brutal actions are still felt by the Tamil people in Sri Lanka and abroad. The ’83 pogrom is widely seen as a trigger to Sri Lanka’s civil war.

The importance of remembering such atrocities cannot be underestimated. It is the only remembrance of such tragedy that will, one hopes, ensure that such horrors will never again take place. It is only such remembrance that will ensure that action is taken to prevent Sri Lanka ever having to face yet another ‘Black July’.

It is, however, most unfortunate that we, as Sri Lankans, have not seemed to come very far from ‘Black July’. Instead of dealing with, and eradicating the root causes of the conflict, we seem to be intent on exacerbating them. Today, more than four years after the end of a bloody war, reconciliation amongst Sri Lanka’s peoples is still very far away. In fact, sadly, 30 years later, not much has changed.

Black July was widely recognised as a genocidal act unleashed against the Tamil people; as Sri Lanka’s holocaust. This was recognised as Genocide not merely because a large number of Tamil people were killed and injured, but also because assets and property owned by Tamils – Tamil homes and businesses – were attacked and demolished. Thirty years on, we are still seeing such genocidal acts being committed against the Tamil people. It is internationally recognised that the term Genocide includes acts that force a community of people to leave the land that has been traditionally occupied by them for several generations. This is taking place in our country today, with the mass land grabs by the government and the military in the North and East.

The horrendous killings of Tamils during Black July 30 years ago are largely believed to have been carried out with the support of the government of that day. The rioting mobs that attacked Tamil homes and businesses acted with impunity. In fact, even in the then President J.R. Jayewardene’s first speech on the event made on July 27, 1983, he offered little sympathy to what the Tamil people had faced.

Today, four years after the end of the civil war, the incumbent President has declared that Sri Lanka has ‘no minorities’. The reality, however, is vastly different. The government turns a blind eye to the repeated attacks against various minority groups. Today, that includes not only the Tamil people but the Muslim people as well. One of the recent incidents was an attack carried out against a Muslim owned business. Video footage was taken during this attack clearly showed a Buddhist monk vandalising the building in question while policemen looked on, doing nothing. Other religious minorities also continue to come under attack, with threatening and violent acts being committed against not only mosques but churches as well. Following the events of Black July, despite rioting mobs openly attacking Tamil civilians for several days, no perpetrators were apprehended or held accountable for these brutal actions. Today too, few, if any, of the individuals responsible for attacks against members of minority groups are ever apprehended. Hate speeches against minority groups are made; processions threatening minority groups are openly conducted, and the government does nothing.

The blind eye of the government is turned not merely to attacks against minorities, but to other quarters as well. Scores of journalists have been attacked, seriously injured, killed and made to disappear, but the perpetrators of these attacks are almost never apprehended and brought to justice. The crime rate in the country has risen dramatically over the past months and years. The riots in July 1983 were symptomatic of a complete breakdown in the Rule of Law of the day. It is indeed disheartening to see that breakdown today as well.
 

The ‘83 pogrom is seen as a determined effort by a portion of the majority community, backed by the government of the day, to teach the Tamil people who had been for a long time calling for meaningful power-sharing, a lesson. Until 1983, these calls had been for the most part, non-violent. Following the attack in 1983, the violence by Tamil youth increased significantly. It is this that led to the 26-year long conflict in our country. To date, the Sri Lankan state has been unable to address the Tamil question in a meaningful way. The only concession to power-sharing in Sri Lanka’s Constitution is the 13th Amendment. Even this has, to date, not been fully implemented despite the government’s repeated promises to its people and to members of the international community that it will do so. In fact, the government now proposes to do away with it altogether! Instead of making a real effort to arriving at a meaningful power-sharing arrangement through genuine, constructive political dialogue, the government now proposes to take away even the limited concession to power-sharing in the constitution. The Tamil National Alliance has stated, time without number that the solution to the ethnic conflict cannot be by military means, but by political ones. However, 30 years on, the Sri Lankan government seems more unwilling than ever to either engage in any meaningful, genuine process to this end.

In 2004, then President Chandrika Bandaranaike Kumaratunge acknowledged the role played by the government and made a public apology for the atrocities of ’83. Despite being seen by many as 21 years too late, in my opinion, the gesture was tremendously significant. For Sri Lanka and its peoples to move past ’83, this acknowledgement, and with it the accountability for the atrocities committed, was absolutely necessary. Today, four years after the end of a bloody civil war, despite assurances given to the international community and its own peoples, the government of Sri Lanka has yet to put in place any credible process for accountability for what occurred during the war. The tragedy of ‘83 should have taught us that in order for us as a country to move past the tragedy of the civil war, there must be accountability for atrocities committed on both sides. 

Thirty years on, the environment and circumstances that made Black July possible have not changed in any significant way. War has ended, but we have failed to address, far less eradicate, the root causes of the conflict behind it. If anything, we have exacerbated them. Thirty years on, can we claim to have come very far from Black July at all?


It is not the number but the intent that really counts.

Masterminding the massacres and the manner the murders were executed sure speak volumes!

1)  Eye witness count of ‘THE WELIKADE PRISON MASSACRE’:                                                                       

By Mr S.A. David, the president of the Ghandiyam movement.

http://www.globalpeacesupport.com/globalpeacesupport.com/post/2010/07/29/THE-WELIKADE-PRISON-MASSACRES.aspx

2)    THE WELIKADE PRISON MASSACRES:

http://www.globalpeacesupport.com/globalpeacesupport.com/post/2010/07/29/THE-WELIKADE-PRISON-MASSACRES.aspx
About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply