சுமந்திரன் என்பான் யாரோ?
சுமந்திரன் என்பான் யாரோ?
செருகிய தமிழர் வாழ்வைச்
சுமந்தவன் அவனே இற்றைச்
சூழ்நிலை அனைத்தும் வெல்ல
அமர்ந்தவன் பாராள் மன்றம்;
ஆர்த்திட மொழியே மூன்றும்
நிமிர்ந்தவன் நிகரே இல்லான்
நிலத்தையே மீட்ட மைந்தன்!
நீதிகாண்; மன்றம் தன்னில்
நேர்ச்சபை ஆட்;சி மன்றில்
வாதிடும் உலக மன்றில்
வரலாறு கூறும் மன்றில்
ஆதியிற் தமிழர் வந்த
அரங்கினைத் தெரிந்த செம்மல்
மேதினி அறிவோன் விஞ்சும்
வித்துவ ஒளியே கொண்டான்!
எழுபது ஆண்டு கால
இருந்தமிழ் அரசுக்; கட்சி
விழுமியம் காட்டும் இந்நாள்
மீதிலோர் சாணக் கியனே
தெளிவினைக் கருத்தை விள்ளும்
சிக்கலை அறிவில் மீட்கும்
பழுதிலான் இவனைக் கண்டு
பயப்படு கின்றார் பகையே!
தமிழவர் நலனே சார்ந்து
தகைத்துவா தாடி மன்றில்
எமதுயிர் மக்கள் மீண்டும்;
ஏற்றியே கொழும்புக் கிட்;டார்
சமயமோர் நீதி மன்றைச்
சட்டமிட் டதனை வென்ற
சுமந்திரன் ஒருவன் தானே
சிக்கிய நிலங்கள் மீட்டான்; !
சிங்கள மக்கட் கெல்லாம்
செத்திடும் தமிழர் வாழ்வை
அங்கவர் மக்கட் குள்ளே
அணித்திடச் சொன்ன போதும்;
பொங்குபே ரினத்தை விட்டு
பேணிடும் தீர்வு ஒன்றை
இங்குநாம் காண வேண்டில்
இயலிடா னெறும் சொன்னார்!
ஆயுதம் எடுத்த போதும்
அரசாட்சி யாரே செய்த
தேயமண் துரோகத் தாலே
சேர்ந்துஇம் நிலைக்கு வந்தார்
ஆயதோர் மைந்தர் கண்ட
ஆயுதம் எடுப்ப தற்குத்
தாயமாய் நின்ற ஆட்சித்
தர்க்கமே சரிதம் என்றார் !
சுமந்திரன் வாய்மை கண்டு
சொல்நயம்; தூய்மை கண்டு
குமைந்திடப் பெரிதாம் ஆட்சி
கொண்டது அச்சம் தானே
அமைந்திடும் தமிழர் ஏறே
ஆற்றுவீர் சரிதம் ஒன்றாய்
கமழ்ந்திடும் வீட்டுச் சின்னம்;
காத்திடும் தமிழர் நாடே!
நாடெனும் ஆட்சி மன்றம்
நவின்றிடும்; பணியின் உச்சம்
தேடலில்; அயினா மன்றம்
திரட்டிடும் வரலாற் றுண்மை
காடென நீதி மன்றம்
கண்டிடும் உரிமை யாக்கம்
ஊடக உலகத் தார்க்கு
ஒருகுரல் சுமந்தி ரன்னே!
நேரிலோர் நேர்மை இல்லார்
நிலத்திடைப் பொல்லார் வெட்கிப்
பேரினர் கையில் மாட்டும்
பெருங்குடை யாளர் பொங்கும்
வாரினம் தமிழை வைத்து
வாக்குகள்; கேட்பார் கேண்மின்;
ஆரெவர் வந்தால் என்ன
அறிஞனே சுமந்தி ரன்தான் !
தசரதன் ஆட்சி மன்றில்
தங்கமாய் அமைச்சர் பேரோன்
நிசமுறும் சம்பந்தர்க்கு
நிழலெனத் துணையே ஆவோன்
திசைதொறும் முழங்கும் ஆற்றல்
தொல்தமிழ் நிலத்தைக் காக்கும்
வசமுளான் தமிழர் வீடு
வாழ்த்திடும் வெற்றி தானே!
சுதந்திரன்-யாழ்ப்பாணம்
Leave a Reply
You must be logged in to post a comment.