பண்டைக் காலத்து தமிழ் நாணயங்கள்

பண்டையகாலத்து இலங்கையின் பணம் இதுதானா?

https://assets.roar.media/assets/46PVmatmNDkWZpau_37950043_445312819289206_9008640211973832704_n.jpg

இலங்கை ஆரம்ப காலம் தொட்டே நீண்டதொரு வரலாறு கொண்ட நாடென்பது நாம் அறிந்ததே. அதில் கலாசாரம் மற்றும் பொருளாதார வரலாற்றிலும் இலங்கைக்கு முக்கிய இடமுண்டு. கிழக்கு முதல் மேற்கு வரை வியாபித்திருக்கும் கடலுக்கு மத்தியில் இலங்கை அமைந்துள்ளதால் பண்டைய காலங்களில் கடல்வழி மற்றும் தரைவழியினூடாக வர்த்தகம் செய்வதற்கும் ஏதுவான நாடாக இருந்துள்ளதென கல்வெட்டுக்கள், வம்சக்கதைகள், பண்டைய கடித ஆவணங்கள் மற்றும் ஏனைய தொல்பொருளியல் சான்றுகளின் ஊடாக அறிந்து கொள்ளலாம். இச்சான்றுகளில் நாணயங்கள் மற்றும் கல்வெட்டுக்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. அந்தவகையில் நாட்டின் வெவ்வேறு காலப்பகுதியில் பயன்படுத்தப்பட்ட நாணயக் குற்றிகள் அந்நாட்டின் வரலாற்றினை தெரிந்து கொள்வதற்கு ஏதுவாய் அமைகின்றன.

அனுராதபுர காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள்

கஹபான
படஉதவி : cbsl.gov.lk 

“கஹபான” இலங்கையின் மிகப்பழைய நாணயமாகும். இவை சமஸ்கிருதத்தில் புராண எனவும் ஆங்கிலத்தில் எல்டிங்கஸ் எனவும் அழைக்கப்பட்டிருக்கிறது. வட்டம், சதுரம், செவ்வகம் மற்றும் நீண்ட செவ்வகம் போன்ற வடிவங்களைக் கொண்டது.

சுவாஸ்திக நாணயங்கள் 
படஉதவி : cbsl.gov.lk 

“சுவாஸ்திக நாணயங்கள்” ஒரு பக்கத்தில் நடக்கும் யானையொன்றின் உருவத்தையும், அரை பிறை அடையாளங்கள் மற்றும் தாது கோபுரங்கள் , ஸ்வஸ்திகவையும், சதுரக் கோட்டுடன் கூடிய மூன்று கிளைகளைக் கொண்ட அரச மரமொன்றையும் கொண்டிருக்கும்.

பிடரிமயிர் இல்லாத சிங்கக் நாணயங்கள்
படஉதவி : cbsl.gov.lk 

செப்பு உலோகத்திலிருந்து தயாரிக்கப்பட்ட பிடரிமயிர் இல்லாத சிங்கக் நாணயங்கள் ஒரு பக்கத்தில் சிங்க உருவமும் மறு பக்கத்தில் சிறிய மூன்று அல்லது நான்கு புள்ளிகழளும் கொண்டு காணப்படும். கி.பி. 3 – 4 ஆம் நூற்றாண்டுகளில் பயன்படுத்தப்பட்ட இந்நாணயங்கள் அநுராதபுரம் அகழ்வுகளின்போதும் வட பிராந்திய அகழ்வுகளின் போதும் பெருமளவு கண்டெடுக்கப்பட்டுள்ளன.

லக்ஷ்மி பளிங்குக்கல்
படஉதவி : cbsl.gov.lk 

“லக்ஷ்மி பளிங்குக்கல்” கி.மு. 3ஆம் மற்றும் கி.பி. 8 ஆம் நூற்றாண்டுகளில் பெண்ணின் உருவத்துடன் கூடிய நாணயங்கள் முதற் தடவையாக இலங்கையில் சுற்றோட்டத்தில் காணப்பட்டன. நாணயங்களின் முகப்பில் காணப்படுகின்ற பெண் லக்ஷ்மி என கருதப்படுகின்றது. ஆதலால் இந்நாணயங்கள் லக்ஷ்மி தகடு நாணயங்கள் என அழைக்கப்படுகின்றன. 

கஹவானு அல்லது லங்கேஸ்வரா நாணயங்கள்
படஉதவி : cbsl.gov.lk 

“கஹவானு அல்லது லங்கேஸ்வரா நாணயங்கள்” சிங்களவர்களின் தங்க நாணயம் ‘ஹகவனு’ என அறியப்பட்டதுடன் இது கி.பி 7ஆம் நூற்றாண்டிலிருந்து 8ஆம் நூற்றாண்டு வரை பயன்படுத்தப்பட்டது. இவை தங்க உலோகத்தினாலும் தங்க முலாம் பூசப்பட்டும் தயாரிக்கப்பட்டிருந்ததோடு, பெறுமதிக்கு ஏற்ப “கஹவனு”,  “அட் கஹவனு”, “தெஹக” மற்றும்”அக” என்றவாறு பயன்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கை கப்பல்துறை மத்திய நிலையமாக காணப்பட்டதால் சர்வதேச வர்த்தகத்தின்போது கொடுக்கல் வாங்கலுக்காகப் பயன்படுத்தப்பட்ட கிரேக்க, உரோம, சீன, அரேபிய மற்றும் இந்திய நாணயங்கள் பலவும் அநுராதபுரம், மிகிந்தலை, சீகிரியா, குருணாகல், மாத்தறை, அகுருகொட மற்றும் பதுளை ஆகிய பிரதேசங்களிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்திய கிரேக்க  நாணயம்
படஉதவி : cbsl.gov.lk 
பல்லவர் நாணயம், சசானியன் சபூர் நாணயம், குசான் நாணயம்
படஉதவி : cbsl.gov.lk 
உரோம நாணயங்கள்
படஉதவி : cbsl.gov.lk 
சீன நாணயங்கள்
படஉதவி : cbsl.gov.lk 

பொலன்னறுவை முதல் கோட்டை இராச்சியம் வரை பயன்படுத்தப்பட்ட நாணயங்கள்

செப்பு பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட இக்காலத்து நாணயங்களில் அப்போது ஆட்சியிலிருந்த மன்னர்களின் பெயர் அச்சிடப்பட்டிருந்தமை இவற்றில் காணப்பட்ட விஷேட அம்சமாகும். முதன் முதலில் ஆட்சியாளரின் பெயருடன் நாட்டில் வெளியிடப்பட்ட நாணயங்களும் இக்காலங்களில் தான் என்கிறது வரலாறு.

பொலநறுவை காலத்தில் பயன்படுத்தப்பட்ட மோசா நாணயம்
படஉதவி : cbsl.gov.lk 
பொலநறுவை காலத்தில் பயன்படுத்தப்பட்ட மோசா நாணயம்
படஉதவி : cbsl.gov.lk 
பொலநறுவை காலத்தில் பயன்படுத்தப்பட்ட மோசா நாணயம்
படஉதவி : cbsl.gov.lk 

சோழர்களின் ஆதிக்கத்தை முறியடித்து நாட்டை ஒரு கொடியின் கீழ் கொண்டுவந்ததுடன் பொலன்னறுவை இராசதானியை ஆரம்பித்து வைத்த முதலாவது விஜயபாகு மன்னரும் ‘கஹவனு’ நாணயங்களை வெளியிட்டுள்ளார். அவர் நாணயங்களை தயாரிக்கின்றபோது அவற்றின் மேல் தமது பெரையும் பொறித்துள்ளார். இதன்படி நாணயங்களில் தமது பெயரைப் பொறித்து அவற்றை வெளியிட்ட முதலாவது சிங்கள மன்னர் முதலாவது விஜயபாகு மன்னராவார். அந்த நாணயம் ‘மஸ்ஸ’ என அழைக்கப்பட்டுள்ளது.

தம்பதெனிய காலத்து நாணயங்கள்

 4ஆம் பராக்கிரமபாகு ஆட்சியில் பயன்படுத்திய சிங்க நாணயம்
படஉதவி : cbsl.gov.lk

இக்காலத்து நாணயங்களில் உள்ளடங்கியுள்ள உருவப் படங்கள் அநேகமாக அநுராதபுர காலகட்டத்தில் வெளியிடப்பட்ட நாணயங்களை ஒத்தவையாகக் காணப்படுகின்றன. நாணயத்தின் ஒரு பக்கத்தில்ஆடை ஒரு மனிதன் வலதுபுறம் நோக்கியவாறு உருவமொன்று பொறிக்கப்பட்டுள்ளது. செப்பினால் தயாரிக்கப்பட்ட ‘மஸ்ஸ’ நாணயத்திலும் அதே உருவத்தைக் காணக்கூடியதாக உள்ளது. நாணயத்தின் மறுபக்கத்தில் அமர்ந்த நிலையிலுள்ள ஒரு உருவம் காணப்படுகின்றது. அதேபோன்று நாணயத்தின் இருபுறத்திலும் பல்வேறு விதத்திலான அடையாளங்களும் குறியீடுகளும் காணப்படுகின்றன.

கண்டிய காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள்

வறகம நாணயம்
படஉதவி : cbsl.gov.lk
வௌ்ளி லரின் – 1
படஉதவி : cbsl.gov.lk
வௌ்ளி லரின் – 2
படஉதவி : cbsl.gov.lk

பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில் ‘ரிதி (மஸ்ஸ)’ மற்றும் ‘பணம’ எனப்படும் வெள்ளியினாலான இரண்டு நாணய வகைகள் பயன்பாட்டுக்கு வந்தன. ஆயினும் காலமளவில் ‘ரன் பணம’ மற்றும் ‘ரன் மஸ்ஸ’ ஆகிய தங்க நாணயங்கள் ஓரளவு பயன்பாட்டில் காணப்பட்டன. அதன் பின்னர் ‘தங்கம் மஸ்ஸ’, ‘பொடி தங்கம்’, ‘ரிதிய’ ஆகிய நாணயங்கள் பயன்படுத்தப்பட்டன.பதினெட்டாம் நூற்றாண்டுகளில் இந்திய வராக நாணயங்கள் இலங்கையில் பயன்படுத்தப்பட்டது.

ஒல்லாந்தர் காலத்தில் இலங்கையில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள்

படஉதவி : cbsl.gov.lk
படஉதவி : cbsl.gov.lk
படஉதவி : cbsl.gov.lk

ஒல்லாந்தர் காலத்தில் கொடுக்கல் வாங்கல்களின்போது அதிகமாக ‘தொய்த்து’ நாணயங்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை மிகச் சிறிய செப்பு நாணய வகையாகும். அளவில் சிறியதாக காணப்பட்டதால் பெருந் தொகையான பணபரிமாற்றத்துக்கு கடினமாக இருந்துள்ளது. இந்த வசதியீனத்திலிருந்து மீள்வதற்கு 1737 ஆம் ஆண்டளவில் ‘தொய்த்து’ நாணயங்களை 8, 16, 24 வீதம் நாணயக் கோர்வைகளாக சிங்களவர்களின் ‘துட்டு’ 2, 4, 6 பெறுமதியினைக் கொண்டதாக கொடுக்கல் வாங்கல்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஒல்லாந்தர் காலத்தில் இலங்கையில் பயன்பாட்டில் இருந்த நாணயங்கள்  
படஉதவி : cbsl.gov.lk
ஒல்லாந்தர் காலத்தில் இலங்கையில் பயன்பாட்டில் இருந்த நாணயங்கள்  
படஉதவி : cbsl.gov.lk
ஒல்லாந்தர் காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட முதலாவது நாணயத் தாள்
படஉதவி : cbsl.gov.lk

இலங்கையின் முதலாவது நாணயத் தாள் 1785 மே மாதம் 10 ஆம் திகதி அச்சிடப்பட்டுள்ளது. அந்த முதலாவது நாணயத் தாள் தொகுதி பதாக 50, 100, 500, மற்றும் 1000 பெறுமதிகளைக் கொண்டிருந்தது. 

பிரித்தானியர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள்

பிரித்தானியர் காலத்தில் இலங்கையில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள் 
படஉதவி : cbsl.gov.lk
பிரித்தானியர் காலத்தில் இலங்கையில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள் 
படஉதவி : cbsl.gov.lk
பிரித்தானியர் காலத்தில் இலங்கையில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள் 
படஉதவி : cbsl.gov.lk

இலங்கையின் கொடுக்கல்வாங்கல்களுக்காக ஆங்கிலேயர்கள் முதலில் இரண்டு வகை நாணயங்களைப் பயன்படுத்தினர். அதில் ஒன்று, அப்போது அவர்கள் சென்னையில் வார்த்த ‘தாரகை பகோடி’ எனும் தங்க நாணயமாகும். அது 45 பணத்துக்கு அல்லது 180 சிங்கள துட்டுக்கு சமமாகக் காணப்பட்டது.

பிரித்தானியர் ஆட்சியின் போது இலங்கையில் பாவனையில் இருந்த சதங்கள்
படஉதவி : cbsl.gov.lk
பிரித்தானியர் ஆட்சியின் போது இலங்கையில் பாவனையில் இருந்த சதங்கள்
படஉதவி : cbsl.gov.lk
பிரித்தானியர் ஆட்சியின் போது இலங்கையில் பாவனையில் இருந்த சதங்கள்
படஉதவி : cbsl.gov.lk

பிரித்தானியர் ஆட்சியில் பார்தீன், பிரித்தானிய துட்டு, பதாக (வெள்ளி நாணயம்), பணம், இந்திய ரூபாய், அரை ரூபா, கால் ரூபாய் ஆகியன பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர ரூபாவைவிடக் குறைந்த பெறுமதியிலான நாணயங்களாக ஒரு சதம், இரண்டு சதம், ஐந்து சதம், பத்து சதம், இருபத்தைந்து சதம், ஐம்பது சதம் ஆகியனவும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கையில் பாவனையிலிருந்த பழைய நாணய தாள்கள்

இலங்கையில் பாவனையில் இருந்த 5 ரூபாய்,10 ரூபாய் மாற்றம் 20 ரூபாய் நாணயத்தாள்கள்
படஉதவி : blogspot.com

இலங்கையில் தற்போது சுற்றோட்டத்திலுள்ள பழைய நாணயத் தாள்கள்

இலங்கையில் தற்போது சுற்றோட்டத்திலுள்ள பழைய நாணயத் தாள்கள்
படஉதவி : blogspot.com

இலங்கையில் தற்போது பாவனையிலுள்ள புதிய நாணயத் தாள்கள்.

இலங்கையில் தற்போது சுற்றோட்டத்திலுள்ள புதிதாக அச்சிடப்பட்ட நாணயத் தாள்கள்
படஉதவி : cbsl.gov.lk

https://roar.media/tamil/main/history/history-of-srilanka-old-coins

வரலாற்றுத் தகவல்கள்

24 ஏப்ரல் · 

அனுராதபுர தமிழ் மன்னன் எல்லாளன் வெளியிட்ட நாணயம்
பேராசிரியர் ப. புஸ்பரட்ணம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்__________________________________

வரலாற்றுத் தொடக்ககாலத்தில் இலங்கையில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள் தமிழகத்தில் சங்ககால மூவேந்தர் வெளியிட்ட சதுரவடிவ நாணய மரபை ஒத்ததாகக் காணப்படுகின்றது. சதுரவடிவில் நாணயங்களை வெளியிடும் மரபு சங்ககாலத்திற்குரிய தனிச் சிறப்பம்சமாகக் கூறப்படுகின்றது. இதனால் இலங்கையில் பயன்படுத்தப்பட்ட சதுர வடிவிலமைந்த நாணயங்கள் தமிழக மரபைப் பின்பற்றி வெளியிடப்பட்டவை எனக் கூறலாம். இலங்கையில் பயன்படுத்தப்பட்ட இந்நாணய முன்பக்கத்தில் கோட்டுருவில் அமைந்த சதுரமான பெட்டிக்குள் நிற்கும் நிலையில் காளை உருவமும், அதன் தலைப்பகுதிக்கு கீழே பலிபீடம் போன்ற உருவமும் காணப்படுகின்றது. நாணயத்தின் பின்பக்கத்தில் சதுரமான கோட்டுக்குள் வட்டமும், அவ்வட்டத்திற்குள் சிலவற்றில் மூன்றும், வேறுசில நாணயங்களில் நான்கு புள்ளிகளும் காணப்படுகின்றன. இந்நாணயங்கள் பற்றி ஆராந்த அறிஞர்கள் பலரும் நாணயத்தின் வடிவமைப்பு சமகாலத்தில் சங்ககால மூவேந்தர்கள் வெளியிட்ட நாணய வடிவமைப்பை ஒத்திருப்பதால் இவை தமிழகத்துடன் கொண்டிருந்த அரசியல், வாணிபத் தொடர்பால் இலங்கைக்கு வந்ததாகக் கூறுகின்றனர். அவ்வாறு கூறியமைக்கு யாழ்ப்பாண அரசு தோன்றுவதற்கு முன்னர் இலங்கைத் தமிழரிடையே அரச உருவாக்கம் தோன்றவில்லை என்ற நம்பிக்கையும் முக்கிய காரணமாகும்.
ஆயினும் இவ்விடத்தில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய முக்கிய அம்சம் தமிழகத்தில் சங்ககால மூவேந்தர் வெளியிட்ட நாணயங்களின் பின்பக்கத்தில் பாண்டியருக்கு மீனும், சோழருக்குப் புலியும், சேரருக்கு அம்பும் வில்லும், அதியமான் போன்ற குறுநில அரசுக்கு ஆற்றுச் சின்னமும் அரச இலட்சனைகளாகப் பொறிக்கப்பட்டுள்ளன. ஆனால் இலங்கையில் பயன்பாட்டிலிருந்த சதுர நாணயங்களின் பின்பக்கத்தில் இச்சின்னங்களைக் காணமுடியவில்லை. மாறாக நாணயத்தின் பின்பக்கத்தில் சதுரமான கோட்டுக்குள் வட்டமும், அவ்வட்டத்திற்குள் நான்கும் சில நாணயங்களில் மூன்று புள்ளிகளும் காணப்படுகின்றன. தமிழகத்தில் சங்க காலம் தொட்டு வெளியிடப்பட்ட நாணயங்கள் சமகாலத்தில் இலங்கையில் உபயோகத்தில் இருந்ததற்குப் பல ஆதாரங்கள் காணப்படுகின்றன. ஆனால் இலங்கையில் பயன்படுத்தப்பட்ட மேற்குறித்த நாணயம் ஒன்றுதானும் தமிழகத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. உண்மையில் இந்நாணயம் சங்ககால மன்னர்களால் வெளியிடப்பட்டிருந்தால் இலங்கையைக் காட்டிலும் தமிழகத்திலேயே அதிக எண்ணிக்கையில் கிடைத்திருக்க வேண்டும். இந்நாணயத்தில் காணக்கூடிய இன்னொரு அம்சம் பிற்பட்டகாலத்தில் அநுராதபுர ஆட்சியாளராக இருந்த சில சிங்கள மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களில் முன்பக்கத்தில் சிங்கமும், இந்நாணயத்தின் பின்பக்கத்தில் காளை உருவம் பொறித்த நாணயத்தின் பின்பக்கத்தில் காணப்படுவதை ஒத்த சின்னங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றில் இருந்து அநுராதபுரத்தில் ஆட்சி செய்த தமிழ் மன்னர்கள் காளை உருவத்தையும், சிங்கள மன்னர் சிங்க உருவத்தையும் தமது குலச் சின்னமாக அல்லது அரச சின்னமாக பயன்படுத்தியுள்ளனர் எனக் கூறலாம். நாணயங்களின் பின்பக்கத்தில் இரு மன்னர்களும் ஒரேவகையான சின்னங்களைப் பயன்படுத்தியமைக்கு இவை அநுராதபுர அரசை அல்லது நாட்டைக் குறிப்பதற்காக இருக்கலாம்.

சிங்கள மன்னர்கள் சிங்கத்தை தமது குலமரபாகவும், அரச சின்னமாகவும் கருதும் மரபு விஜயன் வருகை பற்றிய கதையுடன் இணைந்த ஒன்று. இச்சின்னத்தைப் பிற்கால சிங்கள மன்னர்களும் நாணயங்களில் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் அவர்கள் வெளியிட்ட நாணயங்களில் காளையை அரச சின்னமாகவோ, புனித சின்னமாகவோ பயன்படுத்தியமைக்கு ஆதாரங்கள் காணப்படவில்லை. மாறாக அச்சின்னத்தை பௌத்த சிங்களப் பண்பாட்டில் ஒரு கலைவடிவாகவே பயன்படுத்தியுள்ளனர். இதற்கு உதாரணமாக பௌத்த ஆலயங்களில் வாசல் பகுதியில் காணப்படும் சந்திரவட்டக்கல்லில் மலர்கள், பறவைகள், மிகங்கள் முதலான சின்னங்களுடன் காளையும் ஒரு சின்னமாகச் செதுக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிடலாம். ஆனால் தமிழர் பண்பாட்டில் காளைப் புனிதச் சின்னமாகக் கருதும் மரபு நீண்டகாலமாக இருந்து வருகின்றது. இதற்கு யாழ்ப்பாண அரசு காலத்தில் வெளியிடப்பட்ட நாணயங்களில் காளை (நந்தி) ஒரு புனித சின்னமாகவும், அரச இலட்சனையாகவும் பயன்படுத்தி உள்ளதை உதாரணமாகக் குறிப்பிடலாம். இந்நிலையில் அநுராதபுர அரசில் ஆட்சிபுரிந்த தமிழ் மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களில் காளை உருவம் பொறிக்கப்பட்டிருப்பது யாழ்ப்பாண இராசதானிக்கு முன்னரே அம்மரபு இலங்கையில் ஆட்சி புரிந்த தமிழ் மன்னர்களால் பயன்படுத்தி வந்துள்ளதைக் கோடிட்டுக்காட்டுவதாக உள்ளது.
அநுராதபுர இராசதானியில் முதல் 200 ஆண்டு காலப்பகுதியில் ஆட்சியிலிருந்த பத்து தமிழ் மன்னர்கள் எண்பது ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி புரிந்துள்ளனர். அவர்களுள் எல்லாள மன்னன் 44 ஆண்டுகள் (கி.மு 161—105) நீதி தவறாது ஆட்சி புரிந்தவன் எனப் பாளி இலக்கியங்கள் கூறுகின்றன. இவனே இலங்கையில் நீண்ட காலம் ஆட்சிபுரிந்த முதல் மன்னனாவான். ஆயினும் .தேரவாத பௌத்த மதத்தை முதன்மைப்படுத்திக் கூறும் பாளி இலக்கியங்கள் அம்மதத்திற்குப் பணி செய்த மன்னர்களின் வரலாற்றையே முதன்மைப்படுத்திக் கூறுகின்றன. உதாரணமாக 26 ஆண்டுகள் மட்டும் ஆட்சி செய்த துட்டகாமினி மன்னனின் வரலாற்றை 821 செய்யுளில் கூறும் மகாவம்வம் 44 ஆண்டுகள் ஆட்சி செய்த எல்லாள மன்னனின் வரலாற்றை வெறும் 21 செய்யுளில் மட்டுமே கூறுகின்றது. இதனால் பாளி இலக்கியங்களில் இருந்து எல்லாளனின் வரலாற்றையும், அவனது வரலாற்றுப் பணிகளையும் குறைந்தளவுதானும் அறியமுடியவில்லை. ஆயினும் அவனது நீண்டகால ஆட்சிக்கு பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைத்தமைக்கு அவன் மக்களுக்கு ஆற்றியபணிகளே காரணமாக இருந்துள்ளது எனக் கூறலாம். இதனால்தான் எல்லாளனை வெற்றி கொண்ட துட்டகாமினி அவன் இறந்த இடத்தில் சமாதி எழுப்பி அச்சமாதியை மக்கள் வழிபடவேண்டும் என ஆணை பிறப்பிக்க காரணமாகும்.

அண்மையில் தென்னிலங்கையில் அக்குறுகொட என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 2200 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்ப் பிராமியில் எழுதப்பட்ட சில நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒரு நாணயத்தில் திஸபுரம் என்ற இடத்தில் ஆட்சி செய்த சடநாகராசன் என்ற வாசகம் காணப்படுகின்றது. இவற்றில் இருந்து தென்னிலங்கையில் தமிழ்ச் சிற்றரசர்களின் ஆட்சி இருந்தமையும், அவர்கள் நாணயங்கள் வெளியிட்டமையும். தெரியவந்துள்ளன. மகாவம்சத்தில் கூட எல்லாளன் ஆட்சிக்கு சார்பாக தென்னிலங்கையில் 32 தமிழச் சிற்றரசர்களின் ஆட்சி இருந்தது பற்றிக் கூறுகின்றது. தென்னிலங்கையில் சிற்றரசர்களாக இருந்த சிலரே பின்னர் அநுராதபுர மன்னர்களாக ஆட்சியைக் கைப்பற்றியதற்கு மகாவம்சத்தில் பல ஆதாரங்கள் காணப்படுகின்றன. இங்கே எல்லாள மன்னன் அநூராதபுரத்தில் ஆட்சியிலிருந்த காலமும் காளை உருவம் பொறித்த நாணயம் பயன்பாட்டிலிருந்த காலமும் ஏறத்தாழ ஒரே காலமாகக் காணப்படுகின்றது. இதனால் இந்நாணயத்தை எல்லாள மன்னன் அநுராதபுர மன்னனாக இருந்து வெளியிட்ட நாணயமாகக் கொள்வதே பொருத்தமாகும்.

https://www.facebook.com/1907275756166097/posts/2880399258853737/

About editor 3099 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply