உள்ளவர் சிவாலயம் செய்வர்

புலையரைப் பற்றி சைவ சமயம் என்ன கூறுகிறது ??

saivastan93 / January 4, 2014

thirunalai povar

புலையர்கள் எனும் ஐந்தாம் வர்ணத்தவர்,இன்று தலித்துக்கள் என்று அழைக்கப்படுகின்றனர்..இவர்களைப் பற்றி சைவ சமயம் என்ன கூறுகின்றது என்று நாம் பார்ப்போம்.

தனித்திருத்தாண்டகப் பதிகம் ,பத்தாம் பாடலில்

” ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்  கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில்     அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவு ளாரே “

என்று அப்பர் சுவாமிகள் கூறுகிறார்…இதன் பொருள்,பசுக்கறி உண்ணும் புலைய சாயிதில் பிறந்தவரானாலும்,அவர் சிவபிரான் மீது உண்மை அன்புடையவராயின்,அவரை  சிவனாகவே வணங்குவதாக அப்பர் பிரான் கூறுகிறார்..சிவாகமங்களில்,சிவனடியார் எக்குலமாயினும்,அவரை அனுபுடன் உபசரிக்க வேண்டும்,அதை விடுத்து,அந்த சிவனடியாரை,அவர் தாழ்ந்தகுலம் என்பதால்,அவரை இகழ்ந்தார்,அது சிவபிரானை இகழ்வதற்கு சமம் என்று கூறப்படுகிறது..அதுமட்டுமின்றி,சிவனடியாரை,சிவனாகவே பார்க்கவேண்டும் என்றும் சிவாகமங்கள் கட்டளையிடுவதால்,அந்த சிவாகம கருத்தை,அப்பர் சுவாமிகள்,தமது பாடல் மூலம்,நமக்கு கூறுகிறார்..இனி,சிவதருமோத்தரத்தில் உள்ள ஒரு பாடலைப் பார்ப்போம் :

“புலையரே எனினும் ஈசன் பொலன்கழல் அடியில் புந்தி நிலையரேல் அவர்க்குப்பூசை நிகழ்த்துதல்நெறியே என்றும் “

என்று சிவதருமோத்தரம்,1157ஆம் பாடலின் முதல் இரண்டு வரி இவை…இதன் பொருள் ,”பறையராக (புலையர்) இருப்பினும், சிவபெருமானுடைய பொன்னாற் செய்த வீரக்கழலை அணிந்த திருவடிகளில் புத்தியை நிறுத்தி வழிபடும் அடியவராகில், அவரை வணங்குகதல் முறைமை ” என்பது … ஆக,இந்த சிவதருமோத்தர நூலும்,புலையர்கள்,சைவ சமயத்தை சார்ந்த சிவனடியார்கள் எனில்,அவர்களை சிவனாகவே வணங்க வேண்டும் என்று கூறுகிறது..28 சிவாகமங்களில் ஒன்றான,சர்வோக்தம ஆகமம் எனும் ஆகமத்தின்,உபாகமம்,சிவதருமோத்தரம் ஆகும்…இது வடமொழியில் இருக்கிறது..இதனை,16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த,ஸ்ரீ மறைஞான சம்பந்த தேசிகர்,தமிழுக்கு மொழியெயர்த்தார்..

இதேபோல்,முண்டக உபநிஷத்தில்,இவ்வாறு வருகிறது :

“சண்டாளனாய் இருப்பினும், `சிவ` என்று சொல்வானேல், ஒருவர் அவனோடு பேசுக; அவனோடு வசிக்க; அவனோடு இருந்து உண்க ” …

இந்த உபநிடத கருத்தை,பிற்காலத்திலுள்ளவர் சிலர்,அகற்றிவிட்டனர்…தற்பொழுது உள்ள முண்டக உபநிஷத்தில் இவ்வாக்கியம் இடம்பெறவில்லை…ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் சீடரான,ஸ்ரீ காசிவாசி செந்திநாத ஐயர்,இந்த கருத்தை கூறுகிறார்…இருப்பினும்,ஸ்ரீ நீலகண்ட சிவாச்சாரியார் செய்த பாஷ்யத்தில்,இந்த உபநிஷத் வாக்கியம் இடம்பெற்றுள்ளது…திராவிட மஹாபாஷ்யம் இயற்றிய ஸ்ரீசிவஞானயோகிகளும்,அந்த முண்டக உபநிஷத் வாக்கியத்தை அப்படியே தமிழில் மொழிபெயர்த்துள்ளார்,அது பின்வருமாறு :

“சிவனெனும் மொழியைக் கொடியசண் டாளன்  செப்பிடின் அவனுடன் உறைக  அவனொடு கலந்து பேசுக அவனோ  டருகிருந் துண்ணுக என்னும்  உவமையில் சுருதிப் பொருள்தனை நம்பா  ஊமரோ டுடன்பயில் கொடியோன்  இவனெனக் கழித்தால் ஐயனே கதிவே  றெனக்கிலை கலைசையாண் டகையே“

மேலும்,பெரியபுராணத்தில் தனியடியார் அறுபத்தி மூவரில்,புலையரான திருநாளைப் போவாரும் இடம்பெற்றிருக்கிறார்…

ஆகையினால்,சைவ நூல்களிலிருந்து இவ்வளவு ஆதாரங்களைப் பார்த்தோம்.புலையர்கள்,சைவ சமயத்தை சார்ந்து,சிவபெருமான் மீது உண்மை அன்பு உள்ள சிவனடியார் ஆகில்,அவரை,அனைத்து சைவர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும்,அவரை சிவனாகவே பார்க்க வேண்டும் என்று ,சைவ நூல்கள்  கூறுகின்றன…

About editor 3045 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply