Sri Lanka to release soldier from prison for massacre of Tamils

Sri Lanka to release soldier from prison for massacre of Tamils

The Sri Lankan government is reportedly set to release a soldier who was sentenced to death over the massacre of eight Tamil civilians, according to an opposition parliamentarian who applauded the move.

“Now we have got information that the government has taken measures to release 34 members of the intelligence and Sunil Ratnayake, as mentioned during the Gotabaya Rajapaksa election campaign,” said UNP MP Ajith Perera.

“That is how a leader who does what they say works,” continued Perera. “Therefore I would like to extend my gratitude to president Gotabaya Rajapakse and Minister of Justice Nimal Siripala De Silva for taking this decision.”

It is unclear as to whether the soldier has actually been released as of yet, and whether he has received a presidential pardon.

Staff Sergeant Sunil Rathnayake was sentenced to death in 2015 for the murder of the 8 Tamils, including 2 children, in the town of Mirusuvil. The Tamils had been arrested by Sri Lankan security forces on the10th of December 2000. The following day their bodies were found in a mass grave with their throats slashed, according to the District Medical Officer’s post-mortem report. All but two of the bodies had been stripped naked. The youngest to have been murdered was a 5-year-old child.

The killings have since been dubbed the Mirusuvil massacre.

Ponnathurai Maheswaran, who managed to survive and escape from the army, testified in court and identified at least five of the soldiers responsible. After a lengthy court process only Ratnayake, a member of the military’s elite Long Range Reconnaissance Patrol (LRRP), had been sentenced. The other men were cleared of all charges.

As mentioned by Perera, current Sri Lankan president Gotabaya Rajapaksa made repeated pledges to release soldiers that had been convicted of rights abuses. His regime has also vowed not to abide by a UN Human Rights Council resolution that mandates a hybrid accountability mechanism to prosecute those responsible for rights violations.

The case of Rathnayake, one of the few convictions of Sri Lankan soldiers for abuses of Tamils, drew particularly widespread support amongst the Sinhala south.

At the time of the 2015 conviction, Together Against Genocide released a statement welcoming the sentencing, but added “much more” needed to be done to end impunity on the island.

“Even though the war has ended, the racial hatred is far from resolved,” TAG said.

“The open support for the convicted soldier as a ‘War Hero’ clearly shows that racial tensions are still extremely high. This racial hatred prevents justice for the Tamil victims of this and other massacres. There is a clear reluctance among the majority ethnic Sinhala population to hold SLA forces responsible for their war crimes.”

The names of those killed in the massacre are listed below.

Kathiran Gnanachandran (35)
Gnanachandran Santhan
Baskar Gnanabasakaran (19)
Sellamuttu Theivakulasingham (31)
Vilvarajah Pratheepan (15)
Sinniah Vilvarajah (41)
Nadesu Jeyachandran (21)
Vilvarajah Prasath (5)

கொழும்பின் கொடூரப் போக்கை முரசறையும் மன்னிப்பு விடுதலை

மிருசுவிலில் எட்டுத் தமிழர்களைப் படுகொலை செய்த குற்றத்துக்காகத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரி ரத்நாயக்கா இன்று சுதந்திர மனிதர். மூன்று நீதிபதிகளைக் கொண்ட “ட்ரயல்’ அட்பர்’ நீதிமன்றத்தினால் குற்ற வாளியாகத் தீர்க்கப்பட்டு அவருக்கு மரணதண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டது. 2000ஆம் ஆண்டு டிசெம்பர் 19ஆம் திகதி, இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இருந்த மிருசுவில் பிரதேசத்தில் தமது வீடுகளைப் பார்க்கச் சென்ற எட்டு அப்பாவிப் பொதுமக்கள் சுட்டும், வெட்டியும் படுகொலை செய்யப்பட்டு, மலசல கூடக் குழிக்குள் சமாதியாக்கப்பட்டனர்.

அந்தக் கொடூரத்தின் அருந்தப்பில் தப்பிய மகேஸ்வரன் என்ற இளைஞரின் சாட்சியத்தின் அடிப்படையில் உண்மை கள் அம்பலமாகின. இந்த வழக்கில் ஐந்து சிப்பாய்கள் மீது குற்றம் சுமத்தப்பட்ட போதிலும், மகேஸ்வரனினால் மற்றைய சிப்பாய்கள் சரியாக அடையாளம் காட்டப்படாத பின்புலத்தில், லான்ஸ் கோப்ரல் ரத்நாயக்கா மட்டுமே “ட்ரயல் அட் பார்’ மன்றி னால் குற்றவாளியாகக் காணப்பட்டார். ஏனைய நால்வரும் போதிய ஆதார மின்மையால் விடுவிக்கப்பட்டனர்.

அந்தத் தீர்ப்பு 2015 ஜுன் 25 ஆம் திகதி வழங்கப்பட்டது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக லான்ஸ் கோப்ரல் ரத்நாயக்கா சார்பில் உயர் நீதி மன்றத்தில் ஐந்து நீதியரசர்கள் கொண்ட ஆயத்திடம் மேன்முறையீடு செய்யப்பட்டது. ஐந்து நீதியரசர்களைக் கொண்ட ஆயத்தின் முன்னால் 2018 செப்டெம்பர், ஒக்டேபர் மாதங்களில் விசாரணைகள் நடைபெற்றன. 2019 ஏப்பர் 25ஆம் திகதி பிரதம நீதியரசர் எச்.என்.ஜே.பெரேரா உட்பட ஐந்து நீதியரசர்கள் ‘ட்ரயல் அட் பார்’ வழங்கிய மரண தண்டனைத் தீர்ப்பை ஏகமனதாக உறுதிப்படுத்தித் தமது தீர்ப்பை அளித்தனர்.

அவ்வாறு எட்டுத் தமிழர்களை சுட்டும் வெட்டியும் படுகொலை செய்தவர் என மூன்று நீதிபதிகளை கொண்ட மேல் நீதிமன்ற ஆயத்தினால் குற்றவாளியாகக் காணப்பட்டு, மரணதண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஐந்து நீதியரசர்களைக் கொண்ட உயர் நீதிமன்ற ஆயத்தினால் அந்தத் தீர்ப்பு முற்றிலும் சரியானதே என்று ஏகமனதாக உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலேயே, அந்தக் கொடூரக் குற்றம் இழைத்தவருக்கு முன்னாள் இராணுவ அதிகாரியான கோட்டாபய ராஜபக்சவினால் இப்போது பொது மன்னிப்பும் விடுதலையும் அளிக்கப்பட்டிருக்கின்றது.

தற்போதைய பாதுகாப்புச் செயலாளரும் மற்றொரு முன்னாள் மூத்த இரா ணுவ அதிகாரியுமான மேஜர் ஜெனரல் கமல் குணரட்ண தாமே நேரடியாகச் சிறைச்சாலைக்குச் சென்று, மேற்படி ரத்நாயக்காவின் விடுதலையை உறுதி செய்து, அங்கிருந்து அனுப்பி வைத்திருக்கின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் சுட்டிக்காட்டியமை போன்று இந்த மன்னிப்புத் தொடர்பான விவகாரத்தில் பின் வரும் விடயங்கள் நோக்கத் தக்கவை:

தமிழர்களுக்கு எதிராக இராணுவத் தரப்பில் இது போன்ற பல்லாயிரம் கொடூரங்கள் புரியப்பட்ட போதிலும் அவை எவற்றுக்கும் யாரையும் பொறுப்புக் கூறும் வகையில் வழக்குகள் தொடுக்கப்படக் கூடவில்லை.

தொடுக்கப்பட்ட ஒரு சில வழக்குகளும் கூட முறையாக நடத்தப்படவில்லை. மீ அல்லது மேன்முறையீட்டில் குற்றம் சுமத்தப்பட்டவர் தப்பிப் போக இடமளிக் கப்பட்டது.

இந்த வழக்கில்தான் மேல்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளும், மேன் முறையீட்டில் உயர்நீதிமன்றத்தின் ஐந்து நீதியரசர்களும் ஏகமனதாகக் குற்ற வாளி மீதான குற்றத்தை உறுதிப்படுத்தி நின்றனர். அந்தக் குற்றவாளியும் கூட சட்டத்தின் ஆட்சியையும் மீறி பின்கதவால் விடுதலையாகி சுதந்திர மனிதராகி விட்டார்.

ராஜபக்rக்களின் ஆட்சியின் கீழ் தமிழர்களுக்கு எதிராகக் குற்றம் புரிந் தனர் என்ற தவறுக்காக எந்தப் படையினர் மீது பொறுப்புக் கூறல் சுமத்தப்பட மாட்டாது, அவர்கள் புரிந்த குற்றங்கள் எதற்கும் தண்டனை இல்லை என்ற “அரச நிலைப்பாடு’ மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

சர்வதேச சமூகமே கொரோனா பீதியில் உறைந்து கிடக்க இந்த மன் னிப்பு நாடகம் சத்தம் சந்தடியின்றி அரங்கேறியிருக்கின்றது. சர்வதேச கண்டனங்களைத் தவிர்ப்பதற்கு இந்த சமய சந்தர்ப்பம் பொருத்தமானது என்று “கோட்டாபய அண்ட் கோ’ தீர்மானித்திருக்கும் போல.

இலங்கையில் இராணுவத்தினருக்கு எதிரான பொறுப்புக்கூறல் முறைமை கிஞ்சித்தும் நடைமுறைப்படுத்தப்பட மாட்டது என்பது மீண்டும் தெளிவுபடுத் தப்பட்டுள்ளது.

மனிதாபிமானத்திலும் பாரபட்சம் – பரிதாபத்திலும் பாகுபாடு – என்பதும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. எட்டுத் தமிழர்களை சுட்டும், வெட்டியும் கொன்ற வருக்குப் பொதுமன்னிப்பு. தம் இனத்துக்காப் போராடிய சுதந்திரப் போராளிகளுக்கு கொடூர – சட்ட ரீதியில் மிருகத்தனமான – பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மிக மிக மோசமான தண்டனைகள். அவற்றில் அழுந்தி அந்த அரசியல் கைதிகள் சாக வேண்டும் என்பது அவர்கள் தொடர்பில் அரசின் முடிவு. இலங்கையின் நீதி, சட்டத்துறையின் மாண்புக்கே உலை வைக்கும் தீர்மானத்தை எதேச்சாதிகாரமாக எடுத்து நேற்று செயற்படுத்தியிருக்கின்றார் இலங்கையின் இராணுவப் போக்கு ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ச. இந்தக் கொடூரப் போக்கின் விளைவுகளை இலங்கை நாடு எதிர்கொண்டு அனுபவிப்பதற்கு அதிக நாள்கள் பிடிக்கா. அதுவரைப் பொறுத்திருப்போம்!

About editor 3160 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply