பாலியல் வழக்கு… மோசடி குற்றச்சாட்டு…! மறக்க முடியாத ‘சர்ச்சை சாமியார்கள்’
ஆன்மீக சொற்பொழிவு மற்றும் சிந்தனைகள் மூலம் மக்களிடம் அறிமுகமாகி பின் சர்ச்சை, வழக்கு, தண்டனை பெற்றவர்கள் சிலரை நம்மால் மறக்க முடியாது. அவர்களில் முக்கியமானவர்கள் தான் இவர்கள்.
நித்யானாந்தா : சர்ச்சைகளுக்கும் பரபரப்புகளுக்கும் பஞ்சாமில்லாதவர் நித்யானாந்தா. பாலியல் வழக்கு, குஜராத் ஆசிரமத்தில் சிறுமிகள் கடத்தல் உள்ளிட்ட புகார்களில் போலீசார் அவரை தேடி வருகின்றனர். இதிலிருந்து தப்பிக்க போலி பாஸ்போர்ட் மூலம் இந்தியாவிலிருந்து தப்பி சென்றிருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் ஈக்குவாடாரில் ஒரு தீவை விலைக்கு வாங்கி ‘கைலாசா’ என்ற புதிய நாட்டை நித்யானாந்தா உருவாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கல்கி பகவான் : கல்கி பகவான்.. அம்மா பகவான்..ஸ்ரீ பகவான்.. என்றெல்லாம் அழைக்கப்படும் இவரின் உண்மை பெயர் விஜயகுமார். கல்கி சாமியார் மற்றும் அவரது மகன் தொடர்புடைய நிறுவனங்களில் நடைபெற்ற வருமான வரித்துறையினர் சோதனையில் கோடி கணக்கான பணம் மற்றும் வெளிநாட்டு பணங்கள் சிக்கியது. ரியல் எஸ்டேட் துறையில் இவரது அறக்கட்டளைக்கு அளிக்கப்பட்ட நன்கொடை பயன்படுத்தப்பட்டதாக புகார் உள்ளன.
சுவாமி பிரேமானந்தா : இலங்கையில் நடந்த உள்நாட்டு போர் காரணமாக தனது ஆதராவளர்களுடன் இந்தியாவில் தஞ்சமடைந்தவர். 1994ம் ஆண்டு சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கினார் என புகார் கொடுத்தார். இந்த புகாரில் 1997ம் ஆண்டு தண்டனை பெற்றார்.
ராம்பால் : ஹரியானாவில் உள்ள ஹிசார் மத்திய சிறையில் ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகிறார். இவர் தன்னை கபீரின் அவதாரம் என்று தன்னை பிரகடனம் செய்தவர். 5 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை கொலை செய்யப்பட்ட புகாரில் 2014ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
ராதே மா : மும்பை போரிவலி பகுதியில் உள்ள ஸ்ரீ ராதே மா அறக்கட்டளையின் தலைவர். பெண் மற்றும் அவரது கணவரை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சித்ரவதை செய்த புகாரில் சிக்கியவர். 2015ம் ஆண்டு வெளியான ஒரு வீடியோவில் இவர் ஆபாசமாக பேசியது மற்றும் மோசடி செய்ததாக வழக்கும் இவர் மீது பதிவுசெய்யப்பட்டுள்து.
இச்சாதரி சந்த் சுவாமி பீமானந்த் : இவரது உண்மையான பெயர் சிவ் முராத் திவேதி. கடவுளின் மறு அவதாரம் என்று தன்னை பிரகடனப்படுத்தியவர். டெல்லி மற்றும் மும்பையில் பாலியல் வழக்கில் 2 முறை கைது செய்யப்பட்டுள்ளார்.
நிர்மல் பாபா : ஆன்மீக சொற்பொழிவு மற்றும் சிந்தனைகளால் பலரை கவர்ந்தவர். போலியான சாதுக்களின் பெயரை இவர் குறிப்பிட்டு இருந்ததால் சர்ச்சையில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஆசாரம் : இந்தியாவிலும் வெளிநாட்டிலும் சுமார் 400 ஆசிரமங்களை நிறுவி உள்ளார். 1970-ல் இவர் மீதான குற்றச்சாட்டுகள் வெளி உலகத்திற்கு தெரிய வந்தது. 2018ம் ஆண்டு சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த குற்றத்திற்காக தற்போது ஜோத்பூர் சிறையில் ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகிறார்.
சுவாமி சதாச்சாரி சாய் பாபா ஓம்ஜி : இவர் மீது டெல்லி காவல்துறையினர் ஆயுத சட்டம் மற்றும் தடா பிரிவுகளின் மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சல்மான் கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமடைந்தவர். தொலைக்காட்சி நிகழ்ச்சியின் ஒரு பெண்ணை அடித்த சர்ச்சையும் இவர் மீது உள்ளது.
குர்மீத் ராம் ரஹீம் சிங்: தேரா சச்சா சவுதாவின் தலைவர். 2017ம் ஆண்டு பத்திரிகையாளர் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் 2019 ஜனவரி மாதம் தண்டனை பெற்றார்.
Leave a Reply
You must be logged in to post a comment.