இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க சர்வதேசத்திடமும் ஆயுதம் உண்டு அதை உடனடியாகச் செய்வார்கள் என சம்பந்தன் முன்பாக சுமந்திரன் உறுதி

இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க சர்வதேசத்திடமும் ஆயுதம் உண்டு அதை உடனடியாகச் செய்வார்கள் என சம்பந்தன் முன்பாக சுமந்திரன் உறுதி
(எஸ்.நிதர்சன்)

யாழ்ப்பாணம்,

பெப்ரவரி 23, 2020

(ததேகூ இன் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சம்பந்தன் ஐயா,  தமிழ் அரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும்  அவர்களும் ததேகூ இன் பேச்சாளர் சுமந்திரன் அவர்களும் கலந்து கொண்டார்கள். எழுப்பப்பட்ட பல கேள்விகளுக்கு சம்பந்தரும சுமந்திரனும் பதில் இறுத்தார்கள். ததேகூ சர்வதேச விசாரணையைக் கேட்கவில்லை, சிறிலங்கா அரசுக்கு கால அவகாசம் கொடுத்து சுமந்திரன் அரசை காப்பாற்றிவிட்டார் என எமது அரிசயல் எதிரிகளால் பரப்பப்படும் பொய்யுரைக்கு விரிவான விளக்கம் சுமந்திரன் அவர்கனால் கொடுக்கபட்டது)

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் தீர்மானத்தை இலங்கை நிராகரித்தாலும், வேறு வழிகள் மூலமாக – அழுத்தங்கள் மூலமாக – இலங்கையை வழிக்குக் கொண்டு வந்து, விடயங்களை நடை முறைப்படுத்தச் செய்வற்கான ஆயுதங்கள் சர்வதேசத்தின் கைகளில் உள்ளன. அந்த ஆயுதங்கள் சிலவற்றை மாற்று வழிகளாக உப யோகிப்பதற்கு எங்களோடு அவர்கள் பேச்சு நடத்தியிருக்கிறார்கள். அதை உடனடியாக செய்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். – இவ்வாறு நேற்று யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவர் இரா. சம்பந்தனை வைத்துக் கொண்டு பகிரங்கமாக அறிவித்தார் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊடக சந்திப்பு ஒன்றை யாழிலுள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் நேற்று மாலை நடாத்தியது. இதன் போது கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் மற்றும் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.Image result for TNA press conference in Jaffna

இச்சந்திப்பில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் செயலாளர் துரைராஜசிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். ஜெனீவா குறித்தே கருத்து இந்த ஊடக சந்திப்பில் ஜெனீவா விவகாரங்கள் தொடர்பிலேயே சம்பந்தனும் சுமந்திரனும் கருத்து வெளியிட்டிருந்தனர். ஏனைய விடயங்கள் குறித்தான கேள்விகளுக்குப் பதிலளிக்க அவர்கள் மறுத்துவிட்டனர்.

இந்தச் சந்திப்பில் இரா சம்பந்தன் முதலில் தெரிவித்தவை வருமாறு:

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற யுத் தம் ஒரு முடிவிற்கு வந்தது. அந்த யுத்தம் முடிவிற்கு வந்த பொழுதும் அதற்கு முன்பதாகவும் சர்வதேச மனித உரிமைச் சட்டமும் சர்வதேச மனிதாபிமானச் சட்டமும் மிக வும் மோசமாக மீறப்பட்டு பல போர்க்குற்றங் கள் நிகழ்த்தப்பட்டன எனக் கூறப்பட்டது.

மஹிந்தவின் உறுதிமொழி

யுத்தம் முடிவிற்கு வந்த சில நாள்களில் ஐக்கிய நாடுகள் சபையினுடைய செயலாளர் நாயகம் பான்கீமூன் இலங்கைக்கு வந்திருந்தார். யுத்தம் சம்பந்தமாகக் களநிலைமைகளை அறிவதற்காகவும் சில நடவடிக்கைகளை எடுப்பதற்காகவுமே அவர் இலங்கைக்கு வந்திருந்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவைச் சந்தித்த பொழுது அவர்களுக்கிடையில் நடைபெற்ற பேச்சுகளின் தொடர்ச்சியாக பொறுப்புக் கூறல் சம்பந்தமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவால் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு சில உறுதிமொழிகள் வழங்கப்பட்டன. அவருடைய பத்திரிகை அறிவிப்பில் அந்தக் கருமம் குறிப்பிடப் பட்டிருந்தது.

ஆனால், அதைத் தொடர்ந்து இவ்விடயம் சம்பந்தமாக இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளில் தாமதம் ஏற்பட்டது. ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் என்ற அடிப்படையில் பான் கீ மூன் இந்த விடயம் சம்பந்தமாக விசாரணை நடத்தித் தனக்கு ஆலோசனை வழங்குவதற்கு நிபுணர் குழுவொன்றை நியமித்தார். அதாவது, பொறுப்புக் கூறல் விடயத்தை முன்னெடுப்பதற்காக அந்தக் குழு அமைக்கப்பட்டிருந்தது.

மஹிந்த நியமித்த குழு

இதனைத் தொடர்ந்து இந்த விடயம் சம்பந்தமாக விசாரணை நடத்துவதற்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் ஒரு குழுவை நியமித்தார். செயலாளர் நாயகம் நியமித்த குழு தங்களுடைய அறிக்கையைச் சமர்ப்பித்தது. இந்தக் கருமங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற பொழுது இவ்விடயம் சம்பந்தமாக நாங்கள் எடுத்த சில முயற்சிகளின் காரணமாக – விசேடமாக அமெரிக்க இராஜாங்க அமைச்சருடன் தொடர்பு கொண்டு இந்தக் கருமங்கள் சம்பந்தமாக முறையான விசாரணையொன்று நடைபெற வேண்டுமென நாங்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் – அமெரிக்காவினால் 2012 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினுடைய மனித உரிமைகள் கவுன்ஸிலில் ஒரு பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

கால அவகாசங்கள் அந்தப் பிரேரணை சம்பந்தமாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்ஸில் கூட்டங்களில் பேச்சுகள் நடைபெற்றன. விவாதங்கள் நடைபெற்றன. இறுதியில் 2015 ஆம் ஆண்டு ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது தான் 30/01 என்ற தீர்மானம். 2015 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டிருந்தது.

பொறுப்புக் கூறல் மற்றும் கையாள வேண்டிய கருமங்கள் சம்பந்தமாக அந்தத் தீர்மானத்தில் விரிவாகக் கூறப்பட்டிருந்தது. அதற்கமைய இலங்கை அரசாங்கத்திற்கு இரண்டு வருட கால அவகாசமும் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த இரண்டு வருட கால அவகாசம் முடிவடைந்த பிறகு இலங்கை அரசாங்கம் 2017 ஆம் ஆண்டு மீண்டும் கால அவகாசம் கேட்டது.

இதற்கமைய 2019 வரையில் அந்தக் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அந்தக் காலத்திற்குள்ளும் இந்தக் கருமத்தை நிறைவிற்குக் கொண்டு வராமல் 2019 ஆம் ஆண்டும் மீண்டும் கால அவகாசம் கேட்டு இன்னும் இரண்டு வருடங்களுக்கு அது நீடிக்கப்பட்டிருக்கின்றது. அந்தத் தீர்மான விடயங்களை நிறைவேற்றுவது சம்பந்தமான கடமைகளைக் கையாளுவதற்கு அவர்களுக்கு தற்போது 2021 ஆம் ஆண்டு பங்குனி மாதம் வரையில் கால அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

இவ்வாறான சூழலில்தான் யுத்தம் நடைபெற்ற பொழுது ஆட்சியில் இருந்தவர்கள் தற்போது மீண்டும் ஆட்சிக்குத் திரும்பி வந்து அந்தத் தீர்மானத்தில் இருந்து விலகுகிறார்கள் என்று இன்றைக்கு அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.

2015 ஆம் ஆண்டு இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்ட பொழுது பலவிதமான பேச்சுகளுக்குப் பிறகு அவர்களும் அந்தப் பிரேரணைக்கு தங்களுடைய இணை அனுசரணையை வழங்குகின்றார்கள் என்று கூறி அந்தப் பிரேரணையை ஏற்றுக் கொண்டார்கள். அது தீர்மானமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

விலகும் அரசின் அறிவிப்பு

இன்றைக்கு அந்தத் தீர்மானத்தில் இருந்து தாங்கள் விலகுகின்றோம்  என அவர்கள் கூறுகின்றார்கள். ஆனால் நிறைவேற்றப்பட்ட தீமானத்தில் இருந்து ஒருவர் விலகலாம். அது அவர்களுடைய விருப்பமாக இருக்கலாம். ஆனால் அந்த விலகல் என்பது அந்த தீர்மானத்தை எவ்விதமாகவும் பாதிக்க முடியாது. ஆகையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தீர்மானமாகவே இருக்கும்.

ஒருவர் அதிலிருந்த விலகுகின்றார் என்ற காரணத்தின் நிமித்தம் அந்தத் தீர்மானம் செயலிழக்காது. அதாவது தனது தகுதியை அது இழக்காது என்றார் சம்பந்தன். இந்த விடயம் சம்பந்தமாக மேலதிக விளக்கத்தை சுமந்திரன் வழங்குவார் என்றார் அவர்..

சுமந்திரன் கருத்து

இதன் போது கருத்து வெளியிட்ட சுமந்திரன் சம்பந்தன் ஐயா கூறிய பின்னணியில் தான் என்னுடைய கருத்துக்களை வெளிப்படுத்துகிறேன். கடந்த 2015 ஆம் ஆண்டு 30/01 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதைத் தொடர்ந்து 34/01 என்ற தீர்மானம் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிறை வேற்றப்பட்டது. 40/01 என்ற தீர்மானம் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிறை வேற்றப்பட்டது.

இந்த தீர்மானங்கள் மூன்றும் ஒரே தீர்மானங்கள்தான். ஒரே வசன நடை. அதே தீர்மானங்கள்தான். அதில் மாற்றமில்லை. 2015 இல் 30 ஆவது கூட்டத் தொடரில் அது நிறைவேற்றப்பட்டதால் அதற்கு இலக்கம் 30/01 என்று கொடுக்கப்பட்டது. 34 ஆவது கூட்டத் தொடரில் அடுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் அது 34/01. 40 ஆவது கூட்டத் தொடரில் அடுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் அதற்கு 40/01 என்று பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது.Image result for UNHRC Geneva

இவ்வாறான நிலையில் இப்போது ஆரம்பமாகி நடக்கப் போகும் கூட்டத் தொடர் 44 ஆவது கூட்டத் தொடராக இருக்கிறது.

ஏற்கனவே நடந்து முடிந்த கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சம்பந்தமாக இப்போது நடக்கப் போகின்ற கூட்டத் தொடரில் இன்னொரு தீர்மானம் நிறைவேற்றுவதில்லை. அது அந்தக் கூட்டத்தொடரிலே நிறைவேற்றிய தீர்மானமாகவே இருக்கும். கட்சித் தலைவர் சம்பந்தன் ஐயா கூறியது போல அதனுடைய வலு எந்த வகையிலும் இழக்கப்பட மாட்டாது. அது நிறைவேற்றப்பட்ட தீர்மானம். இலங்கையும் அதற்கு இணை அனுசரணை கொடுத்தபடியால் வாக்கெடுப்பு இல்லாமல் அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

ஆனால் அதற்கு முதலில் (இலங்கை தொடர்பாக) மூன்று தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டிருந்தன. குறிப்பாக 2012, 2013, 2014 ஆம் ஆண்டுகளில் அப்படியாக இல்லாமல், இலங்கை எதிர்க்கத்தக்கதாக வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாக அவை இருக்கின்றன. இலங்கை எதிர்க்கிறது என்ற காரணத்திற்காக அந்தத் தீர்மானங்கள் வலுவிழந்த தீர்மானங்கள் அல்ல.

விசேடமாக 2014 இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்பது வாக்கெடுப்பில் நிறை வேற்றப்பட்ட தீர்மானம். அதில் ஒரு சர்வதேச விசாரணையயொன்று நடத்தும் படியாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு ஆணையொன்று கொடுக்கப்பட்டது. ஆயினும் இலங்கை அந்தத் தீர்மானத்தை எதிர்த்தது. ஆனால் அந்த தீர்மானத்திற்கமைய சர்வதேச விசாரணை நடைபெற்றது.

ஆகையினால் இலங்கை எதிர்த்ததன் காரணமாக அது வலுவிழக்கவில்லை. உலகத்தில் உயர் பதவிகளில் இருந்தவர்களினால் அந்த சர்வதேச விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு அந்த விசாரணையினுடைய அறிக்கை 2015 ஆம் ஆண்டு செம்ரெம்பர் மாதம் 16 ஆம் திகதி ஜெனிவா வில்( ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்) இளவரசர் செயிட்டினால் வெளி யிடப்பட்டது.

வலு இழக்காத தீர்மானம்

ஆகவே இலங்கை எதிர்த்ததன் காரணமாக அந்தத் தீர்மானங்களில் ஒரு தீர்மானமும் வலுவிழக்கவிலலை. ஆனபடியால் சம்பந்தன் ஐயா சொன்னமை போல இலங்கை அத்தீர்மானத்திலிருந்த விலகலாம். அவர்கள் இனி நாங்கள் ஒத்துழைக்க மாட்டோம் என்றும் சொல்லலாம். விலகுகிறோம் என்று சொல்ல வேண்டிய அவசியம் கூட இல்லை. ஒத்துழைக்காமல் விடலாம்.

ஏனென்றால் இந்த மனித உரிமைகள் கவுன்ஸிலில் நிறைவேற்றுகின்ற தீர்மானங்கள் எதுவும் எந்த நாட்டையும் கட்டுப்படுத்தாது. ஆகவே கட்டுப்படுத்தாத தீர்மானங்களில் நாங்கள் ஒத்துழைக்க மாட்டோம் என்று சொல்லிவிட்டால் போதும்.

ஆனால் அவர்கள் விலகுகிறோம் என்று சொல்லுவதற்கான காரணம் என்னவென்றால் சிங்கள மக்கள் மத்தியில் இந்தத் தேர்தலில் தங்களைப் பெரிய வீரர்களாகக் காட்டிக் கொள்வதற்குத்தான். அதாவது சர்வதேச சமூகத்தினுடைய தீர்மானத்திற்கு நாங்கள் அடிபணியவில்லை, நாங்கள் எங்களுடைய நாட்டு விவகாரங்களை நாங்களே கையாளுவோம், இந்த விடயத்தில் பழைய அரசாங்கம் தவறான முடிவை எடுத்தது, ஆனால் நாங்கள் அதிலிருந்த விலகுகிறோம் என்று சொல்லுகிறார்கள்.Image result for UNHRC Geneva

அவ்வாறு விலகுகிறோம் என்று சொல்வதற்கு அர்த்தம் கிடையாது. ஆனால் இப்படி இவர்கள் செய்வார்கள் என்று நாங்கள் ஏற்கனவே சந்தேகித்திருந்தோம். ஆன படியினால்தான் இந்தத்  தடவை நான் ஜெனீவாவிற்குச் சென்ற போது – பெப்ரவரி 14 ஆம் திகதி ஜெனீவாவிலே உறுப்பு நாடுகளோடு நடத்தப்பட்ட கலந்துரையாடல்களிலே – நான் இந்த விடயத்தைச் சொல்லியிருந்தேன்.

இப்படியாக வெளிவிவகார அமைச்சர் ஆரம்ப கட்டத்திலே வந்த பேசுவார்கள். அதிலே ஒரு நாட்டின் வெளிவிவகார அமைச்சர் வந்து எதனையும் பேசலாம். அதைப் பற்றி எந்தவோர் விவாதமும் நடக்காது. அப்படியான ஒரு சந்தர்ப்பத்தை உபயோகித்து தினேஷ் குணவர்த்தன ஜெனீவாவில் அறிவிப்பைச் செய்து விட்டுப் போவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன என நான் ஏற்கனவே அவர்களுக்கு எச்சரிக்கை கொடுத்திருக்கிறேன்.

அப்படிச் செய்தால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை என்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்பதைப் பற்றி கலந்துரையாடல்கள் நடந்திருக் கின்றன. உங்கள் எல்லாருக்கும் தெரிந்தபடி கடந்த மூன்று, நான்கு வருடங்கள் கூட்டத் தொடர் ஆரம்பமாவதற்கு இரண்டு வாரங்கள் முன்னரே நான் ஜெனீவாவிற்குப் போவது வழக்கம். ஏனென்றால் அந்த உறுப்பு நாடுகள் என்னை அழைப்பார்கள்.

கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே கலந்தாலோசனைகள் நடந்தால் தான் அவர்கள் தங்களுடைய தலை நகரங்களோடு ஆலோசனை செய்து  இது சம்பந்தமாக ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடியும். கூட்டத் தொடர் தொடங்கிய பின்னர் அவர்கள் தீர்மானிக்க முடியாது.

ஆகவே இந்தத் தடவையும் பிரித்தானியாவும் கனடாவும் என்னை அழைத்திருந்தனர். இதற்கமைய நான் முதலிலே கனடாவிற்குச் சென்று வெளிவிவகார அமைச்சிலே சில பேச்சுகளை நடத்தி, அதுக்குப் பிறகு பிரித்தானியாவிற்கு வந்து இலண்டனிலே வெளியுறவுத்துறை அமைச்சில் சில பேச்சுகளை நடத்தி, இறுதியாக ஜெனீவாவிலே இரண்டு நாடுகளும் (பிரிட்டன்,கனடா) சேர்ந்து நடத்திய – மற்றைய உறுப்பு நாடுகளும் அழைக்கப்பட்டிருந்த – கூட்டத்தில் கலந்த கொண்டு அவர்களோடு நாங்கள் ஒரு கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தோம்.

இலங்கை அப்படியாக நாங்கள் விலகுகிறோம் என்று சொன்னால் – அல்லது ஒத்துழைக்க மாட்டோம் என்று ஏற்கனவே சொல்லி விட்டார்கள், அப்படியாகச் சொன்னால் – இந்தத் தீர்மானத்தினுடைய உண்மையான நிலைப்பாட்டை அவர்கள் வெளிப்படுத்த வேண்டுமென்று நாங்கள் கேட்டிருக்கின்றோம்.

விசேடமாக சிங்கள மக்களுக்கு விளங்கத்தக்கதாக அவர்கள் நிலைமையை வெளிப்படுத்த வேண்டும். தீர்மானம் இருக்கிறது, தீர்மானத்தில் இருக்கிற கூறுகள் இருக்கின்றன, அவை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதிலே சர்வதேச சமூகத்திற்கு மாற்றுக் கருத்தில்லை என்பதை வெளிப்படுத்த வேண்டுமென்று கேட்டிருக்கின்றோம்.

வாய்மூலமான அறிக்கை

இந்தத் தடவை இந்தத் தீர்மானத்தினுடைய இறுதிக் கட்டம் இது அல்ல. இது அரைவாசித் தூரத்திற்கு வந்திருக்கிறது. 40/01 என்கின்ற தற்போதைய தீர்மானம் சம்பந்தன் ஐயா சொன்னதைப் போல பங்குனி 2021 வரைக்கும் செல்லும். ஒரு வருட காலத்திற்குள்ளே ஒரு வாய்மூலமான அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வழங்குவார்.Image result for Mullivaikkal massacre

அந்த அறிக்கை வருகின்ற பொழுது சம்பந்தமான கலந்தரையாடல் மிகவும் சொற்ப நேரத்தில்தான் நடைபெறும். பல நாடுகளைப் பற்றிப் பேசுகிற பொழுது இலங்கை சம்பந்தமாகவும் ஒரு ஐந்த நிமிடம் அல்லது பத்த நிமிடம்தான் அந்தக் கலந்துரையாடல் நடக்கும். அதில் இலங்கைக்கு அந்தச் சந்தர்ப்பத்தைக் கொடுப்பார்கள். மற்றவர்களுக்கு பேசுவதற்கு நேரம் இருக்காது என்கின்ற ஒரு பிரச்சினை இருந்தது.

அதனாலே இந்த இலங்கை சம்பந்தமான தீர்மானத்திற்குப் பின்னால் ஐந்த நாடுகள் இருக்கின்றன. பல நாடுகள் சேர்ந்து இயங்கினாலும் நேரடியாக இதை முன்னெடுத்துச் செல்கின்ற வகையில் ஐந்து நாடுகள்தான் இருக்கின்றன. முன்னர் அமெரிக்கா அதிலே இருந்தது. ஆனால் கவுன்ஸிலில் இருந்து அமெரிக்கா விலகிய பிற்பாடு பிரித்தானியா அதற்குத் தலைமை தாங்குகிறது. கனடா, மசிடோனியா, மொன்றிநிக்காரோ, ஐரோப்பிய ஒன்றியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஜேர்மனி ஆகிய ஐந்து நாடுகளும் சேர்ந்து எழுத்துமூலமான ஒரு கூட்டு அறிக்கையை வெளியிடுவதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

ஏனென்றால் அங்கே வாய்மூலமாகச் சொல்வதற்கு நேரம் போதாமல் இருந்தால் தங்களுடைய நிலைப்பாட்டை ஏற்கனவே தயாரித்து ஓர் அறிக்கை கொடுப்பார்கள் எனச் சொல்லியிருக்கிறார்கள். அதை அவர்கள் செய்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். தொடர்பிலே இருக்கிறோம்.

விசேடமாக இந்த நாட்டிலே தேர்தலிலே சிங்கள மக்கள் மத்தியில் தங்களை வீரர்களாகக் காட்டிக் கொள்வதற்காகச் செய்யப்படுகின்ற இந்த முனைப்புக் குறித்து சர்வதேச சமூகம் ஒரு விளக்கம் கொடுக்க வேண்டும்.

அது மட்டுமல்ல, சம்பந்தப்பட்ட நாடு இந்தத் தீர்மானத்திலே அவர்கள் பொறுப்பெடுத்துக் கொண்ட விடயங்களை செய்யாமல் – ஒத்துழைக்காமல் – விட்டால் அடுத்த நடவடிக்கை என்ன என்ற கேள்வி இருக்கிறது.

இது எங்களுடைய மக்கள் மத்தியிலும் பெரிய ஆதங்கமாக இருக்கிறது. ஒவ்வொரு தடவையும் இலங்கைக்குக் கால அவகாசம் என்று கேட்டபோது நாங்கள் இன்னொரு புதிய தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு ஆதரவைக் கொடுத்தோம். ஏனென்று சொன்னால், இன்னொரு தீர்மானம் நிறைவேற்றப்படாவிட்டால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு இந்த விடயங்கள் தொடர்பில் செயற்படுவதற்கு எந்த ஆணையும் இருக்காது. எந்த தகுதியும் இருக்காது. அது 30/01 தீர்மானம் 2017 மார்ச்சோடு முடிவடைந்திருக்கும். அதற்குப் பிறகு சர்வதேச மேற்பார்வையே இருந்திருக்காது.

இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க உலகளாவிய நியாயாதிக்கம் உண்டு

ஆகவே சர்வதேச மேற்பார்வையை நீடிப்பதற்காக நாங்கள் ஒவ்வொரு தடவையும் புதிய தீர்மானங்கள் நிறைவேற்றப் படுவதற்கு ஆதரவைக் கொடுத்தோம். அது தேவையாகவும் இருந்தது. இல்லையென்றால் இந்த மேற்பார்வை இருந்திருக்காது.

ஆனால் இனிமேல் புதிய அரசாங்கம் இதோடு நாங்கள் ஒத்துழைக்கவே மாட் டோம் என்று வெளிப்படையாகவே சொல்லு கிற பொழுது அந்த மேற்பார்வை என்பது இந்தத் தீர்மானம் சம்பந்தமாக இருப்பதில் அர்த்தமில்லை. ஆகையினாலே மாற்று வழிகள் சம்பந்தமாக நாங்கள் பேசியிருக்கிறோம்.

ஏற்கனவே பழைய அரசாங்கம் கூட பல விடயங்களில் இழுத்தடித்த காரணத்தி னாலே – நாங்களும் அது குறித்துப் பல முறைப்பாடுகள் கொடுத்த காரணத்தினாலே – இளவரசர் செயிட் உயர்ஸ்தானிகராக இருக்கிற பொழுதே சில மாற்று வழி களை அவர் பிரேரித்திருக்கிறார்.

அதிலே ஒரு மாற்று வழியாகத்தான் இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பதற்கு உலகளாவிய நியாயாதிக்கத்தை உறுப்பு நாடுகள் பயன்படுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

இதை அவர் இரண்டு வருடங்களுக்கு முன்னரே பிரேரித்திருந்தார். அதைத்தான் இப்பொழுது அமெரிக்கா செய்திருக்கிறது. இராணுவத் தளபதி சவேந்திர சில்வா சம்பந்தமாக ஒரு பயணத் தடையை அவர்கள் அமுல்படுத்துவது தங்களுடைய உலகளாவிய நியாயாதிக்கத்தை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். இது ஐக்கிய நாடு கள் மனித உரிமைகள் கவுன்ஸிலில் உயர்ஸ்தானிகர் சில வருடங்களுக்கு முன்னர் சொன்ன ஒரு மாற்றுவழி.

அமெரிக்க சார்பு நாடுகள் பின் தொடர்ந்து நடவடிக்கை

அமெரிக்க சார்பு நாடுகள் இதைப் பின்தொடர்ந்து தாங்களும் தங்களுடைய நாடுகளிலே பயணத் தடைகளைக் கொண்டு வருவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கி றோம். அவர்களுடைய நாடுகளிலே அந்தச் சட்டங்கள் இருக்கின்றன. ஆகவே, ஒருவ ருக்கு மட்டுமல்ல, பலருக்கு எதிராகக் கொண்டு வரலாம். இது குறித்து இலங்கை அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டிய அவசியம் கிடையாது.Image result for Mullivaikkal massacre

ஏனென்றால் அவரவர்கள் தங்கள் தங்களுடைய நாட்டுச் சட்டத்தின்படி இதை நடைமுறைப்படுத்துவார்கள். உலகத்தில் எந்தப் பகுதியில் என்றாலும், சர்வதேச நாடுகளைப் பொறுத்தவரையில், குற்றங்கள் புரிந்தவர்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் உள்ளவர்கள் தங்களு டைய நாட்டிற்குள் வர முடியாது என்ற சட்டம் இருக்கிறது. ஆகவே அவர்கள் தங்கள் நாட்டுச் சட்டத்தின் பிரகாரம் இப்படியான வர்கள் எங்கள் நாட்டிற்குள் வர முடியாது என்று சொல்லுவது ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தும்.

அதைப் போல, வேறு பல மாற்று வழி களைக் குறித்தும் நாங்கள் பேசியிருக்கி றோம். அவற்றை விவரமாக, பகிரங்கமாக நான் இப்பொழுது சொல்வில்லை. ஆனால் இலங்கையை இந்தப் பொறுப்புக்கு – அதாவது சம்பந்தன் ஐயா சொன்ன, 2009 ஆம் ஆண்ட மே மாதம் 23 ஆம் திகதி கண்டி யில் வைத்த மஹிந்த ராஜபக்சவும் ஐ.நா. செயலாளர் நயகம் பான் கீ மூனும் செய்த ஒப்பந்தம் இதுதான்(அந்த அறிக்கையை காட்டுகிறார்). இதில் அவர் சில பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

மனித உரிமை மீறல்கள், மனிதாபிமானக் குற்றங்கள் சம்பந்தமாக நான் விசாரணை நடத்துவேன் என்று மஹிந்த ராஜபக்ச அப்போது சொல்லியிருக்கின்றார். அவ்வாறு எடுத்தக் கொண்ட பொறுப்பை இப்பொழுது 11 வருடங்கள் ஆகின்ற நிலைமையிலும் அதனை இலங்கை செய்யவில்லை. அதைச் செய்யாமல் விடுகிறபொழுது – சர்வதேசத்திற்குக் கொடுத்த வாக்குறுதியை அவர்கள் இப்படியாகக் கைவிடுகிற பொழுது – சர்வதேச மட்டத்திலே சில வழிகள் இருக்கின்றன. சில பொறி முறைகள் இருக்கின்றன. அது ஒரு நாட்டிலே இருக்கின்ற சட்டத்தைப் போல உடனடியாக அமுல்படுத்தக் கூடிய பொறிமுறையாக இருக்காது.

(இலங்கை போன்ற) ஒவ்வொரு நாட்டிற்கும் சுயாதீனம் இருக்கிறது. அவர்களுக்குரிய சுதந்திரம் இருக்கிறது. ஆகையினாலே அதைக் கட்டுப்படுத்துகின்ற தீர்மானங்களை (ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸில் போன்றவற்றில்) கொண்டு வருவது கஷ்டம்.

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் தீர்மானத்தை இலங்கை நிராகரித்தாலும், வேறு வழிகள் மூலமாக – அழுத்தங்கள் மூலமாக – இலங்கையை வழிக்குக் கொண்டு வந்து, விடயங்களை நடைமுறைப்படுத்தச் செய்வற்கான ஆயுதங்கள் சர்வதேசத்தின் கைகளில் உள்ளன. அந்த ஆயுதங்கள் சிலவற்றை மாற்று வழிகளாக உபயோகிப்பதற்கு எங்களோடு அவர்கள் பேச்சு நடத்தியிருக்கிறார்கள். அதை உடனடியாக செய்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

இலங்கை அரசாங்கம் தங்களுடைய தேர்தல் வெற்றிக்காகவும், சிங்கள மக்கள் மத்தியிலே தாங்கள் பிரபல்யம் அடைவதற்காகவும் செய்கிற இந்தச் செயற்பாடு நாட்டிற்கு ஓர் அவப் பெயரைத்தான் கொண்டு வரும். சர்வதேச பொறுப்புக் கூறல் என்று சொல்லுவது இந்தத் தீர்மானங்களில் இருந்து மட்டும் எழுகிறவை அல்ல.

இந்த 30/01, 34/01, 40/1 ஆகிய தீர்மா னங்களில் இருந்து மட்டும் எழுகிறவை அல்ல. இதில் சர்வதேச நியமங்கள் என்று பல இருக்கின்றன. அந்த சர்வதேச நியமங்களிலே இலங்கைக்குப் பல பொறுப்புக்கள் இருக்கின்றன. அவை ஏற்கனவே உறுதியாக உலகத்திலே நிர்மாணிக்கப்பட்டவை. ஆகவே அவற்றிலிருந்தும் இலங்கை விலகுகிறது. அப்படியாக விலகுகிற பொழுது பல பின்விளைவுகள் நாட்டிற்கு ஏற்படும். சிங்கள மக்களுக்கும் பாதிப்பாகத்தான் அது இருக்கும்.

ஒரு மாற்று வழியாக நாட்டிற்கு எதிராகப் பொருளாதாரத் தடையைக் கொண்டு வருவது. அப்படியாகப் பொருளாதாரத் தடை வருமாக இருந்தால் அது எல்லாரையும் பாதிக்கும். ஆகவே சிங்கள மக்களுக்கு இந்த விடயங்கள் தெளிவாகச் சொல்லப்பட வேண்டும். சர்வதேசத்திலே சர்வதேச சட்டங்களுக்கு இணங்கி நாங்கள் செயற்படுவதன் முக்கியத்துவம் என்னவென்பது தெரிந்திருக்க வேண்டும்.

வெறுமனே இது நாட்டிற்கு எதிரானது, எங்களுடைய சுயாதீனத்திற்கு எதிரானது என்று சொல்லி சிங்கள மக்களைப் பிழையான வழியிலே அரசாங்கம் கொண்டு செல்கின்ற செய்தியையும் சிங்கள மக்கள் மத்தியிலே நாங்கள் சொல்லவும் வேண்டும். இந்தத் தடவை ஜெனீவாவிலே இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் வந்து இப்படியாக நாங்கள் விலகுகிறோம் என்று சொல்லுவது இந்த நாட்டிற்கு ஒரு பெரிய கேடைக் கொண்டு வரும் – என்றார் சுமந்திரன்.

சுமந்திரனை வழிப்படுத்திய மாவை

இவ்வாறு சுமந்திரன் தெரிவித்திருந்த பின்னர் சுமந்திரன் தெரிவித்த கருத்து தொடர்பில் மாவை சேனாதிராசா சுமந்திரனின் கவனத்துக்குச் சில கருத்துக்களைச் சொன்னார். அதனையடுத்து மீண்டும் பேசிய சுமந்திரன் சர்வதேசத்திடம் ஆயுதங்கள் இருப்பதாகக் கூறியிருந்தேன். அது ஆயுதம் என்றில்லை. சர்வதேசத்திடம் சில பொறிமுறைகள் அல்லது கருவிகள் இருக்கின்றன என்றுதான் கூறுகிறேன். கருவிகள் என்றதைத்தான் ஆயுதங்கள் என்று கூறி விட்டேன் என்றார்.Image result for Mullivaikkal massacre

சம்பந்தன் கருத்து

இதன்பின் பேசிய சம்பந்தன் இன்றைக்கு இலங்கை அரசாங்கம் இந்தத் தீர்மானத்தில் இருந்து விலகுவதாகக் கூறியிருக்கின்றார்கள். மிக விரைவில் வெளிவிவகார அமைச்சர் அங்கே சென்று இந்தக் கருத்தைக் கூற இருக்கிறார்கள் என நாங்கள் அறிகின்றோம்.

அவர்கள் பகிரங்கமாக இதனைக் கூறுகின்ற காரணம் என்னவென்றால், இந்தத் தீர்மானம் யுத்தத்தை நடத்திய தமது போர் வீரர்களுக்கு – அதாவது இராணுவ வீரர்களுக்கு ஓர் அவமானம், அவர்கள் இந்தத் தேசத்தைப் பாதுகாப்பதற்காகப் போரை நடத்தினார்கள், விசேடமாகப் பெரும்பான்மை மக்களுடைய உரிமைகளைப் பாதுகாப்பதற்காகப் போரை நடாத்தினார்கள், அவ்விதமான வீரர்களுக்கு இவ்விதமான இடைஞ்சல் ஏற்படுவதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. அந்தக் காரணத்தின் நிமித்தம்தான் நாங்கள் விலகுகிறோம் என்று அவர்கள் கூறுகின்றார்கள்.

அது அவர்களுக்கும் தேர்தலுக்கும் உதவியாக இருக்கும். தேர்தலில் நாங்கள்தான் பெரும்பான்மையான மக்கள் சார்பாக ஒரு துணிச்சலான முடிவை எடுத்திருக்கிறோம் என்று கூறுவதற்கு அவர்களுக்கு வசதியாக இருக்கும். ஆனால் நாங்கள் கூறுவது என்னவென்றால் இவ்விதமாக விலகுவதன் மூலமாக அந்தத் தீர்மானத்தை நீங்கள் வலுவிழக்கச் செய்யலாம் என்று நீங்கள் நினைத்தால் அது நடக்காது.

அதற்கு முக்கியமான காரணம் போர் நடந்த பொழுது போர் நடந்தவிதம் சம்பந்தமாக பொறுப்புக் கூற வேண்டியவர்கள் இராணுவ வீரர்கள் மாத்திரமல்லர். அவர்களையும் பார்க்க கூடுதலாகப் பொறுப்புக் கூறக் கூடியவர் ஜனாதிபதி. அவர்தான் நாட்டின் இராணுவத்தின் கட்டளைத் தளபதி. பாதுகாப்பு அமைச்சர் என அவ்விதமாகப் பலர் சம்மந்தப்படுகின்றனர்.

தனியே யுத்தத்தில் ஈடுபட்டவர்கள் இராணுவ வீரர்கள் மாத்திரமல்லர், அவர்களையும் பார்க்க மேலதிகமாக பொறுப்புக் கூற வேண்டியவர்கள், அவ்விதமான பதவியில் இருந்தவர்கள். யுத்தத்தை வழிநடத்தியவர்கள். யுத்தத்தின் போது பலவிதமான கட்டளைகளை ஏற்படுத்தியவர்கள். யுத்தத்தின் போது எந்த விதமாக யுத்தம் நடைபெற வேண்டும் எனத் தீர்மானித்தவர்கள்.

யுத்தம் நடந்த போது பாதுகாப்பு வலயங்கள் என்று சொல்லப்பட்ட சில பிரதேசங்களுக்கு பொது மக்களைப் போகச் சொன்னார்கள். அவ்விதமாக மக்களும் போனார்கள். ஆனால் அந்த இடங்கள் தாக்கப்பட்டன. பொது மக்கள் கொல்லப்பட்டார்கள்.

மிகக் குறைந்த அளவு உணவே வன்னிக்கு அனுப்பப்பட்டன.

அந்த யுத்தப் பிரதேசத்தில் அறுபதினாயிரம் மக்களே இருக்கின்றனர் எனக் கூறினார்கள். ஆனால் யுத்தத்தின் முடிவில் வெளியில் வந்த மக்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து தொண்ணூறு ஆயிரம். அறுபது ஆயிரம் மக்கள்தான் அங்கு இருக்கிறார்கள் என்று அரசாங்கம் கூறி யது. ஆனால் 2,90,000 மக்கள் வெளியில் வந்தார்கள். ஆக அறுபதினாயிரம் மக்கள் என்று சொல்லிக் கொண்டு உணவு, மருந்து அனுப்பியது அறுபதினாயிரம் மக்களுக்குதான்.

எப்படி அந்த மருந்து, உணவுகளை இரண்டு லட்சத்து தொண்ணூறு ஆயிரம் மக்களும் பாவிப்பது? எங்களுடைய கணிப்பின்படி அந்தப் பிரதேசத்தில் அந்தக் காலத்தில் குறைந்தது மூன்றரை லட்சம் மக்கள் இருந்தார்கள். இந்த விடயங்கள் சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் அந்தந்த நேரங்களில் நாங்கள் பேசியிருக்கின்றோம்.

யுத்த காலத்தில் நடைபெற்ற அத்தனை விடயங்களையும் நாங்கள் அந்த நேரங்களிலேயே பேசியிருக் கின்றோம். மருந்து லொறிகள், உணவு லொறிகள் திருப்பி அனுப்பபட்டன. மக்கள் வாழ்வதற்காக அனுப்பட்ட வீட்டுப் பொருள்கள் – அதாவது தற்காலிக வீடுகள் கட்டுவதற் குத் தேவையான பொருள்கள் – திருப்பி அனுப்பபட்டன. மக்களுக்கு அந்த உத விகளைச் செய்யக் கூடாது என அரசாங்கம் எல்லாவற்றையும் தடுத்திருந்தது. சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால் விடுதலைப் புலிகளுக்கு மாறாக நடந்த யுத்தம் என்று அரசாங்கம் கூறிய பொழுதும் கூட இது தமிழ்மக்களை அடக்கி, ஒடுக்கி, உரிமைகள் கேட்காமல் வாயை மூடிக் கொண்டு இருங்கள் என்ற நோக்கத்தில் தமிழ் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டதே இந்த யுத்தம்.

விடுதலைப் புலிகளை அரசு எதிர்ப்பதற்கு, அவர்களை மக்கள் மனதாரப் புகழ்வது ஒரு காரணமாக இருந்தாலும் கூட, அதோடு தமிழ் மக்கள் இந்த விடயம் சம்பந்தமாக மேலதிகமாக பிரச்சினைகள் கிளப்பாமல் இருப்பதற்காக, தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி ஆளுவதற்காக. முன்னெடுக்கப்பட்ட யுத்தம். ஆனபடியால் இந்த விடயங்கள் சம்பந்தமாக இந்தக் கருமங்களை நாங்கள் வெளிக் கொணர வேண்டிய கடமை இருக்கிறது. அதை நாங்கள் செய்வோம்.

ஆனால், அதை நாங்கள் சிங்கள மக்களுக்கு மாறாகச் செய்யவில்லை. இராணுவத்திற்கு மாறாகச் செய்யவில்லை. சிங்களம், தமிழ் என்ற வேறுபாட்டுக்காகவும் இல்லை.

மனித உரிமைகள் மீறப்பட்டன. சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் மீறப்பட்டன. சர்வதேச மனிதாபிமானச் சட்டங்கள் மீறப்பட்டன. சிவிலியன் மக்கள் கொலை செய்யப்பட்டார்கள். அவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றி உண்மையை அறிய வேண்டும். அது எங்களுடைய பொறுப்பு. கடமை. அதிலிருந்த எவரும் விலக முடியாது என்றார்.

மாவையின் கருத்து

இதன் பின்னர் கருத்து வெளியிட்ட மாவை சேனாதிராசா இந்த இடத்தில் ஒரு விடயத்தைச் சொல்ல வேண்டும். அந்தக் காலத்தில் நாங்கள் போரை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்று சொல்கின்றார்கள். ஆனால் பல நடவடிக்கைளை எடுத்தோம்.

அத்தோடு ராஜபக்சவின் வரவு செலவுத் திட்ட அறிக்கை வாசித்துக் கொண்டிருக்கையில் நாங்கள் எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் அங்கு உண்ணாவிரதம் செய்தோம். அதைப் போல பலமுறை செய்திருக்கிறோம்.

அதாவது போரை நிறுத்த வேண்டும், அங்குள்ள மக்களுக்கு உணவு மற்றும் மருந்து அனுப்ப வேண்டுமென்று கோரியிருந்தோம். அதை இந்தச் சந்தர்ப்பத்தில் குறிப்பிட விரும்புகிறேன்.

சர்வதேச நடவடிக்கை முடிந்து விட்டதா?

கேள்வி :-சர்வதேச விசாரணை முடிந்து விட்டதாக நீங்கள் கூறுகின்ற நிலையில் அது முடியவில்லை என்று தமிழ்த் தரப்பு கட்சிகளே சொல்கின்றனவே?

சுமந்திரன்:- நான் சொன்னது போல சர்வதேச விசாரணை என்பது 2014 ஆம் ஆண்டு தீர்மானத்தில் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு அந்த ஆணை கொடுக்கப்பட்டது. இன்றைக்கும் விசாரணை முடியவில்லை என்று சொல்கின்றவர்கள் அந்த வேளையில் சர்வதேச விசாரணை அந்த தீர்மானத்தில் இல்லை என்று பிரச்சாரம் செய்தார்கள்.

அந்த நேரத்தில் சம்பந்தன் ஐயாவிடம் பிபிசி தமிழ் சேவை ஒரு பேட்டி எடுத்தது.

அந்தப் பேட்டியிலே ஜெனீவாத் தீர்மானத்திலே சர்வதேச விசாரணை இருக்கிறதா என்று கேட்டார்கள். அத்தோடு அவ்வாறு சர்வதேச விசாரணை இல்லை என்றும் சொல்லுகிறார்களே நீங்கள் என்ன சொல்கிறீர்கள் எனக் கேட்டார்கள். அதற்கு இந்த விசாரணையை நடத்தப் போவது யார் என்று திருப்பி சம்பந்தன் ஐயா ஒரு கேள்வி கேட்டார். அதற்கு ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்தான் என்று அவர் சொன்னார். இதன் பின் அது என்ன உள்ளக விசாரணையா, உள்நாட்டு விசாரணையா என ஐயா மீண்டும் கேட்டார். அதோடு அந்தக் கேள்வி பதில் முடிந்துவிட்டது.Image result for Mullivaikkal massacre

ஆகவே அது முழுமையான ஒரு சர்வதேச விசாரணை. அதில் உள்நாட்டு எனச் சின்னக் கூறு கூட இருக்கவில்லை. நான் ஏற்கனவே சொன்ன ஆள்கள் எல்லாம் அதற்கு மேற்பார்வை செய்தவர்கள். அந்த அறிக்கை 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளிவர இருந்த பொழுது புதிதாக வந்த அரசாங்கம் அந்த அறிகை யைத் தாமதிக்கும்படி கேட்டார்கள்.

அதற்கான நியாயங்களைச் சொன்ன போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்ஸிலும் அதற்கு இணங்கியது. அந்த வேளையில் இப்படிக் கருத்துக்களைச் சொல்பவர்கள் காலத்தைத் தாமதிக்க விடக் கூடாது என்று சொன்னார்கள். அது உடனடியாக வெளிவர வேண்டுமென்று ஒரே பிடியாக நின்றார்கள். அது தாமதிக் கப்பட்டு செப்ரெம்பர் மாதம் 16 ஆம் திகதி ஜெனீவாவில் ஓர் ஊடகவியலாளர் சந்திப்பில் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

அது கறுப்பும் வெள்ளையுமாக எழுத்தில் இருக்கிறது. அது தமிழில் மொழி பெயர்க்கப்பட்டும் இருக்கிறது. முழுமை யான சர்வதேச விசாரணை அறிக்கை யொன்று இருக்கின்ற போது சர்வதேச விசாரணை நடக்கவில்லை என்று சொல்லுவது எங்களுக்கு எதிரான ஒரு கூற்று. அது, மிக முக்கியமான ஓர் அறிக்கை. அதாவது மனித உரிமைகள் மீறல்கள் நடந்தன, சர்வதேச குற்றங்கள் இழைக்கப்பட்டன என்று சர்வதேச நிபுணர்களால் ஓத் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கின்ற போது அது இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தால் அது யாருக்கு சார்பான கூற்று? அது அரசாங்கத்திற்குச் சார்பான கூற்றுத்தான். இராணுவத்திற்குச் சார்பான கூற்று. அதைத்தான் இவர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள்.Image result for Mullivaikkal massacre

அந்த விசாரணை முடிவடைந்தது. அதன் அறிக்கை வந்திருக்கின்றது. அந்த அறிக்கையின் அடிப்படையில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கான நீதிமன்றப் பொறிமுறை நடக்க வேண்டும். அது வேறு விடயம். ஆனால் அவர்கள் வேண்டு மென்றே இந்த இரண்டையும் குழப்பி யார் தண்டிக்கப்பட்டார்கள் என்று கேள்வி யெல்லாம் கேட்கின்றார்கள். நீதிமன்றப் பொறிமுறை மூலமாக ஒருவர் தண்டிக் கப்பட வேண்டுமாக இருந்தால் அது அந்த நாட்டு சட்டத்திற்குள்ளேயே உள்வாங்கப்பட வேண்டும். இல்லையென்று சொன்னால் ஒருவரும் தண்டிக்கப்பட முடியாது. ஆனபடியினால் தான் இந்தக் கலப்பு நீதி மன்றப் பொறிமுறை என்பது இந்தத் தீர்மானத்திற்குள் கொண்டு வரப்பட்டது.

சர்வதேச பங்களிப்போடு உள்நாட்டுக்குள்ளேயே அந்த நீதிமன்றப் பொறிமுறை ஏற்படுத்தப்பட வேண்டுமென்று இந்த இணை அனுசரைணை கொடுத்த தீர்மானங் களில் இருக்கிறது. அதற்கு இலங்கை அரசாங்கம் இப்போது இணங்காமல் இருக்கலாம். ஆனால் சர்வதேச விசாரணை என்பது முடிந்தது. முழுமையான அறிக்கை இருக்கிறது. அதற்கு அடுத்ததாக வர வேண்டிய நீதிமன்றப் பொறிமுறை இன்னமும் செய்யப்படவில்லை.

ஆனால் இலங்கை ஒரு தடவையல்ல, மூன்று தடவைகள் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்போடு அதைச் செய்வதாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் அந்த சர்வதேச விசாரணை நடந்த போது அந்த விசாரணையாளர்கள் இலங்கைக்கு வருவதற்கு அனுமதி கேட்டார்கள். இலங்கை அரசாங்கம் அனுமதி மறுத்தது. ஏனெனில் இங்கு சாட்சியங்களை பெற்றுவிடுவார்கள் என்பதற்காகவே அரசாங்கம் மறுத்திருந்தது. ஆனால் இங்கே இருக்கிறவர்களின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டு அந்த விசாரணைக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை வைத்துத்தான் அவர்கள் தீர்மானம் எடுத்திருக்கிறார்கள்.

கேள்வி:- நீதிமன்றப் பொறிமுறை அரசினூடாகவே நடக்குமென்று நீங்கள் கூறுகின்ற நிலையில், இணை அனுசரணை வழங்கிய போதே அதற்கான நடவடிக்கையை அந்த அரசாங்கம் முன்னெடுக்காத நிலையில், இணை அனுசரணையில் இருந்து இந்த அரசாங்கம் விலகுகின்ற சூழலில், அந்தப் பொறிமுறை எவ்வாறு நடக்கும் என எப்படி எதிர்பார்க்க முடியும்?

சுமந்திரன்:-நடக்குமென்று எதிர் பார்க்கவில்லை. ஆனால் இலங்கை அதற்கான பொறுப்பை ஏற்றிருக்கிறது. அவ்வாறு ஏற்காவிட்டாலும் கூட நான் முதல்லே சொன்னது போல சர்வதேச நியமங்களின் அடிப்படையில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென்பதை எந்த நாடும் புறக்கணிக்க முடியாது. இலங்கை புறக்கணிக்கின்றதால் அடுத்து என்ன நடக்கப் போகிறதென்று நான் எதிர்வு சொல்லவும் முடியாது.

ஆனால் அதற்கான பின் விளைவுகள் இருக்கின்றன. பல அறிக்கைகள் இருக்கின்றன. அதில் சிலவற்றில் சாட்சியங்களும் பதிவு செய் யப்பட்டிருக்கின்றன. அந்த அறிக்கைகள் இரண்டில் வெளிப்படையாக சர்வதேசக் குற்றங்கள் இழைக்கப்பட்டிருக்கின்றன என்பது சொல்லப்பட்டிருக்கிறது. அதற்கான தண்டனைப் பொறிமுறை செய்யப்பட வேண்டுமென்றும் சொல்லப்பட்டுள்ளது. அதை இலங்கை அரசாங்கம் செய்யாமல் இருந்தால் அதற்கான பின் விளைவுகள் இருக்கின்றன. விசேடமாக இந்த அரசாங்கம் வந்த பின்னர் அது நடக்குமென்று நாங்கள் எதிர்பார்க்க முடியாது.

கடந்த அரசாங்கமே இணை அனுசரணை கொடுத்தும் நீதிமன்றப் பொறி முறைக்கு மறுப்பு தெரிவித்திருந்தது. இதில் ஒரு பிரச்சினையும் இருக்கிறது. ஆனாலும் இவ்வளவு தூரம் நாங்கள் வந்திருக்கிறோம். இன்னும் கொஞ்சத் தூரம் நாங்கள் போவோம். ஏனெனில் சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் சர்வதேசக் குற்றங்கள் புரிந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் சர்வதேசம் உறுதியாக இருக்கும். – என்றார் சுமந்திரன்.

மீண்டும் சம்பந்தன் கருத்து

இதன் பின்னர் மீண்டும் கருத்த வெளியிட்ட சம்பந்தன் கூறியவை வருமாறு:யுத்தம் இடம்பெற்ற போது என்ன நடைபெற்றது என்ற விடயம் சம்பந்தமாக உண்மை வெளி வர வேண்டும். பிரேரணை நிறைவேற்றப்பட்டது அதனை அடைவதற்காகத்தான். இலங்கை விலகுகின்ற காரணத்தின் நிமித்தம் அந்தத் தீர்மானம் அர்த்தமற்றதாகப் போக முடியாது. சர்வதேச சமூகத்திற்கும் கடமை இருக்கிறது. அதாவது யுத்தம் நடைபெற்ற போது என்ன நடந்தது, பொறுப்புக் கூற வேண்டிய கடமை சர்வதேசத்திற்கு இருந்தால் அதை நிறைவேற்றுவ தற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும். இதைச் செய்ய வேண்டும் என்ற விடயம் சம்பந்தமாக சர்வதேசம் ஒரு தீர்மானம் எடுத்து அந்த உண்மையை வெளிக் கொணர வேண்டுமென்ற பொறுப்பு அதற்கு உள்ளது. அதில் நாங்கள் விலக முடியாது.

 சுமந்திரன் பதில் கேள்வி:Image result for Mullivaikkal massacre

கேள்வி – இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்குக் கொண்டு செல்ல முடியுமா?

சுமந்திரன்:- சர்வதேச குற்றவியல் நீதி மன்றுக்குப் போவதற்கு இரண்டே இரண்டு வழிகள்தான் உள்ளன. அதில் முதலாவது ரோம் சட்டத்திற்கு அந்த நாடு இணங்கியிருக்க வேண்டும். இல்லையென்று சொன்னால் பாதுகாப்பு சபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அந்த இரண்டுக்கும் மாறான வேறு வழிகள் இப்போதைக்கு இல்லை. ஏனெனில் இலங்கை அரசாங்கம் ரோம் சட்டத்திற்குக் கைச் சாத்திடவில்லை.

கேள்வி:- மியன்மார் விடயத்திலும் இத்தகைய நிலைமைகள் இருக்கத்தக்கதாக விவகாரம் சர்வதேச குற்றவியல் நீதி மன்றுக் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறதே.?

சுமந்திரன்:-மியன்மார் விடயத்தில் நடந்த விடயம் சம்பந்தமாக இந்த தடவை என்னுடைய விஜயத்தில் சர்வதேச நாடுகளுடன் நாங்கள் பேசியிருக்கின்றோம். ஆகவே அது குறித்தான எல்லா விடயத்தையும் இங்கு நான் சொல்ல விரும்ப வில்லை. இவ்வாறு சுமந்திரன் பதிலளித்தார். (நன்றி – காலைக்கதிர்)  

About editor 2996 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply