யாழ்ப்பாணம்  அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து வரும் 17 ஆம் நாள் பறப்புகள் தொடக்கம்!

யாழ்ப்பாணம்  அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து வரும் 17 ஆம் நாள் பறப்புகள் தொடக்கம்!

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திலிருந்து வரும் 17ஆம் திகதி விமான பறப்புகள்  தொடக்கி  தொடக்கி வைக்கப்படும் என்று போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

பலாலி விமான நிலையத்தை யாழ்ப்பாணம் அனைத்துலக விமானநிலையமாக பெயர் மாற்றம் செய்யும், அமைச்சரவைப் பத்திரம் அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளது.
பலாலி விமான நிலையம் அனைத்துலக விமான நிலையமாக குறுகிய காலத்துக்குள் தரமுயர்த்தப்பட்டுள்ளது, அரசாங்கத்தின் முக்கியமானதொரு வெற்றியாகும் என்று அமைச்சர் அர்ஜூன ரண￾துங்க தெரிவித்தார்.

இந்த மாதத்தில் இருந்து பிராந்திய விமான சேவைகளை ஆரம்பிக்கும் வகையில், பலாலி விமான நிலையம் 22 பில்லியன் ரூபா செலவில் இலங்கையின் மூன்றாவது அனைத்துலக விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்பட்டு வருகிறது.

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தை ஒக்ரோபர் 17ஆம் திகதி சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைத்து விமான சேவைகளை
தொடக்கி வைக்கவுள்ளார்.

முதற் கட்டமாக இங்கிருந்து, தென்னிந்திய நகரங்களான திருச்சி, மதுரை, தினவனந்தபுரம் போன்றவற்றுக்கு விமான சேவைகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக பலாலி விமானநிலைய ஓடுபாதை 950 மீற்றருக்கு அபிவிருத்தி செய்யப்பட்டு, சி100 வகையைச் சேர்ந்த 72 பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடிய விமானங்கள் இயக்கப்படவுள்ளன.

இரண்டாவது கட்டமாக ஓடுபாதையின் நீளம் 1.5 கி.மீற்றராக விரிவாக்கப்பட்ட பின்னர், 1800 கி.மீ தொலைவு வரை பயணிக்கக் கூடிய விமானங்களை தரையிறக்கக் கூடியதாக இருக்கும்.

மூன்றாவது கட்டமாக, இந்த விமானநிலையத்தின் ஓடுபாதை 2.3 கி.மீற்றராக விரிவாக்கப்பட்டு, ஏ320 321 விமானங்களைத் தரையிக்கக் கூடிய வசதிகள் செய்யப்படும்.

அதேவேளை, யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்துடன், கொழும்பு இரத்மலானை விமான நிலையம், மட்டக்களப்பு விமான நிலையம் ஆகியனவும் அனைத்துலக விமான நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பலாலியிலிருந்து மதுரை, திருச்சி, திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்களுக்கு நேரடி விமானங்கள் இயக்க இந்திய அரசு விருப்பம் தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசு பலாலி பன்னாட்டு விமான நிலையத்தைத் தரம் உயர்த்துவதற்கு உரூபா 225 கோடி வெலவழித்துள்ளது. இந்தியா உரூபா 30 கோடி கொடுத்து உதவியுள்ளது.

கிழக்கு மாகாண சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செயயும் நோக்குடன் பிரதமர் இரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழு ஒன்று கடற்த 06 செப்தெம்பர் மட்டக்களப்புக்கு வருகை செய்திருற்தது.

இந்த வருகையின் போது முக்கிய விடயமாக மட்டக்களப்பு விமான நிலையத்தை  அளைத்துலன  விமான நிலையமாக தரமுயர்த்தல் தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல் புது நகரிலுள்ள விமான நிலையத்தில் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடல் கட்டுநாயக்க பன்னாட்டு விமான நிலைய உதவி நிறைவேற்றுப் பணிப்பாளர் பிரியந்த காரியபெருமதலைமையில் இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் மாவட்ட அரச அதிபர் மாணிக்கம் உதயகுமார், பிரதமர் அலுவலக உயர் அதிகாரிகள், பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலைய உயர் அதிகாரிகள், மட்டக்களப்பு விமான நிலைய உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட சுற்றுலாத்துறை விடுதி முகாமையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பிலிருந்து நேரடியாக இந்திய சுற்றுலாத் தலங்களைத் தரிசிக்கும் நோக்குடன் மட்டக்களப்பு, பலாலி மற்றும் மத்தள விமான நிலையங்கள் ஊடாகவும் எதிர்வரும் காலங்களில் பன்னாட்டுச் சேவைகளை முன்னெடுப்பது தொடர்பில் இதன் போது விமான நிலைய அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டது. மேலும் மட்டக்களப்பு பன்னாட்ட விமான நிலைய கட்டுமானப் பணிகளைத் தொடக்குவது தொடர்பாகவும் பிரதமர் விக்கிரமசிங்க தேவையான பணிப்புரைகளை விடுத்தார்.

இதேவேளை, விமான நிலையத்தின் ஓடு பாதைகளை பார்வையிட்ட பிரதமர், மாவட்டத்தின் சுற்றுலாத் துறையையும் பொருளாதார அபிவிருத்தியையும் உயர்த்தும் நோக்குடன் பல பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன எனத் தெரிவித்தார்.

இந்த விமான நிலையங்கள் பன்னாட்டு விமானநிலையங்களாக தரம் உயர்த்துவதால் எப்படி கட்டுநாயக்க பன்னாட்டு விமான நிலையம் காரணமாக கம்பகா மாவட்டம் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்ததோ அது போல யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு பன்னாட்டு விமான நிலையங்கள் காரணமாக இந்த இரண்டு மாவட்டங்களும் பொருளாதார வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கலாம்.

இதையடுத்து, சிறிலங்காவின் அனைத்துல  விமான நிலையங்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரிக்கவுள்ளன எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் தமது பகுதிகளில் விமானங்கள் பறக்கவுள்ள நாளை எதிர்பார்த்து காத்திருந்த யாழ்ப்பாண மக்களுக்கு இது ஒரு மகிழ்ச்சி தரும் செய்தியாக இருக்குமென்பது குறிப்பிடத்தக்கது.

இதே நேரம் யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான நிலையத்தினை  அனைத்துலக  விமான நிலையமாக மாற்றுவதற்கு மஹிந்த தரப்பினர் கடும் அதிர்ச்சியுடனான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது தெரிந்ததே.

மத்தல அனைத்துலக விமான நிலையத் திட்டத்தை பயனற்றது என்று விமர்சிக்கும் அரசாங்கம் பலாலி விமான நிலையத்தை அனைத்துலக விமான நிலையமாக அபிவிருத்தி செய்தது ஏன் என்றும் மஹிந்த தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அண்மையில் வடக்கிற்கு மூன்று நாள்  செலவு  மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க 20 பில்லியன் ரூபா செலவில் பலாலி விமான நிலையத்தை அனைத்துலக  விமான நிலையமாக தரமுயர்த்தும் திட்டம் குறித்து கலந்துரையாடியுள்ளார்.

மத்தல விமான நிலையம் பயன்படுத்தப்படாமல் இருக்கும் நிலையில்இ எதற்காக மூன்றாவது அனைத்துலக விமான நிலையம்? என மஹிந்த தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

”இந்த செயல் மிகவும் ஆச்சரியம் அளிக்கிறது. மத்தல விமான நிலையம் அமைக்கப்பட்ட போது நாட்டுக்கு இரண்டாவது அனைத்துலக விமான நிலையம் தேவையற்றது என்று கூறியவர்கள்இ திடீரென யாழ்ப்பாணத்தில் பலாலி விமான நிலையத்தை தரமுயர்த்த முனைவது ஏன்?” என்று சிறிலங்கா பொதுஜன முன்னணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் றோகித அபேகுணவர்த்தன கேள்வி எழுப்பினார்.

மேலும் கூறிய அவர்-

”பலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படுவதை நான் எதிர்க்கவில்லை. ஆனால் அனைத்துலக விமான நிலையங்கள் தொடர்பான அரசாங்கத்தின் முந்திய கொள்கைக்கும் தற்போதைய நிலைப்பாட்டுக்கும் இடையில் முரண்பாடு உள்ளது.

மத்தலவை விட பலாலி மிகவும் சிறந்தது என்றும் முதலீடுக்கு ஏற்ப சிறந்த வருவாய் கிடைக்கும் என்ற முடிவுக்கு அரசாங்கம் எப்படி வந்தது?

வடக்கில் ஒரு அனைத்துலக விமான நிலையம் இருப்பது எப்போதுமே நல்லது. ஆனால் அது பொது நிதியை வீணாக்குவதை விட வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்யும் ஒரு உண்மையான நோக்கமாக இருக்க வேண்டும்.

மத்தல விமான நிலையம் பெருமளவு நிதியைக் கொண்டு கட்டியெழுப்பப்பட்டது. அந்த திட்டம் வெற்றியளிப்பதை உறுதிப்படுத்தும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது.

பலாலியை அனைத்துலக விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு ஏற்படும் செலவை விட மத்தல விமான நிலையத்தை சாத்தியப்படுத்துவது செலவு குறைவானதாக இருக்கக் கூடும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மத்தல விமான நிலையம் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்க் கட்சித் தலைவருமான மஹிந்த இராஜபக்‌ஷவின் பெயரில் அப்போதைய அரசாங்கத்தால்  அனைத்துலக  விமான நிலையமாக கட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த நிலையில் தம்மால் கட்டப்பட்ட விமான நிலையத்தை மலினப்படுத்தும் விதமாகவே யாழ்ப்பாணம் அனைத்துலக அனைத்துலக விமான நிலையம் அமைந்துவிடும் என மஹிந்த தரப்பினர் சந்தேகிப்பதாக உள்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.


 

About editor 3116 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply