யாழ்ப்பாணத்தில் தகவல் தொழில் நுட்பப் பூங்கா நிறுவ இந்தியா அ.டொலர் 1.4 மில்லியன் அன்பளிப்பு
கொழும்பு
பெப்ரவரி 22, 2019 (நியூ ஏசியா)
கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண்ததில் ஒரு வணிக மையத்தை நிறுவ இந்தியா ரூபா 250 மில்லியன் (US$ 1. 4 million) நன்கொடையாகக் கொடுத்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை இந்தியா – இலங்கை இரு நாடுகளின் பிரதிநிதிகளால் கைச்சாத்திடப்பட்டது.
இந்தப் புரிந்துணர்வு உடன்பாட்டில் இந்தியாவின் சார்பில் சிறிலங்காவிற்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சந்துவும் சிறிலங்கா சார்பாக பன்னாட்டு வணிகம் மற்றும் மேம்பாட்டு உத்திகள் அமைச்சின் செயலாளர் எஸ்.ரி. கொடிக்கார இருவராலும் அலரிமாளிகையில் முதன்மை அமைச்சர் கொரவ இரணில் விக்கிரமசிங்க மற்றும் துணை அமைச்சர் கௌரவ மலிக் சமரவிக்கிரம இருவரின் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கௌரவ நலீன் பண்டார ஜயமகா, நா.உ கௌரவ மாவை சேனாதிராச, ஏற்றுமதி மேம்பாட்டு வாரியத்தின் தலைவர் திருமதி இந்திரா மல்வத்த, பல விருந்தினர்கள் மற்றும் சிறிலங்காவின் மூத்த அரச அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.
மக்கள் சார்ந்த மேம்பாட்டுத் திட்டங்களில் இந்தத் திட்டமும் ஒன்றாகும். இந்தியா தொடர்ந்து இதுபோன்ற பல மேம்பாட்டுத் திட்டங்களுக்கு சிறிலங்கா அரசுக்கு உதவி வருகிறது. இந்த வாணிக மையம் வடக்கில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் (ஐசிரி) மற்றும் தொழில்சார் சேவைகளுக்கு வாய்ப்பளிக்கும்.
இந்தப் பிரதேசத்தில் வேறு பல மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ் இந்திய அரசு மொத்தம் 46,000 வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளது. 1990 அவசர நோய்காவு சேவைகள் இந்த மாகாணத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. வட மாகாணத்தில் இந்தியாவின் உதவி நிதியின் கீழ் நடைபெற்று வரும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு இந்திய அரசு யாழ்ப்பாணத்தில் ஒரு பண்பாட்டு மையம், 27 பள்ளிக் கூடங்களுக்கு கட்டிடங்க, மழைநீரை அறுவடை செய்யும் அலகுகள் மற்றும் 600 வீடுகள் உட்பட 25 மாதிரி கிராமங்கள் அமைத்துக் கொடுத்துள்ளது.
இந்திய நாடு முழுதும் 70 மக்கள் சார்ந்த மேம்பாட்டுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் 20 மேம்பாட்டுத்திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிறிலங்காவுக்கு இந்தியாவின் ஒட்டுமொத்த மேம்பாட்டு உதவிக்கான நிதி அ.டொலர் 3 பில்லியன் (3,000 கோடி ரூபா) ஆகும். இதில் அ.டொலர் 560 மில்லியன் அறுதியான நன்கொடை உதவியாகும்.
Leave a Reply
You must be logged in to post a comment.