கிராமப் புரட்சித் திட்டத்தின் கீழ் ததேகூ உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் வட கிழக்கு அபிவிருத்தி

செம்பியன் பற்று பாடசாலைக்கு சுமந்திரனின் நிதியில் வகுப்பறை!

செம்பியன் பற்று அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் நிதி ஒதுக்கீட்டில் வகுப்பறைக் கட்டடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கம்பெரலியா திட்டத்தின் கீழ் ஏராளமான நிதிகள் கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்டன. இதனால் வடக்கின் சகல பிரதேசங்களும் துரித அபிவிருத்தியை எதிர்கொண்டு வருகின்றன.

அந்தவகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமாகிய எம்.ஏ.சுமந்திரன், தனக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் ஓர் அங்கமாக செம்பியன்பற்று அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு ஒரு மில்லியன் ரூபாவை கம்பெரலியா திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்துள்ளார்.

அந்த நிதியில் மேற்படி வகுப்பறை அமைக்கப்பட்டு நேற்று நாடாளுமன்ற உறுப்பினiரைக் கல்லூரிச் சமூகம் வரவேற்று அவரூடாகக் கட்டடத்தைத் திறந்துவைத்துள்ளது. இந்த நிகழ்வில் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ச.சுகிர்தனும் கலந்துகொண்டார்.

செம்பியன் பற்று பாடசாலைக்கு சுமந்திரனின் நிதியில் வகுப்பறை!

 


காரைதீவு அபிவிருத்திக்காக 01கோடி ரூபா நிதியினை ஒதுக்கினார் பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன்

2018 ம் ஆண்டு கம்பரலிய வேலை திட்டத்தின் கீழ் காரைதீவு பிரதேசத்திக்கு பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் அவர்களினால் காரைதீவு மக்களின் வேண்டுகோளிற்கு இணங்க சுமார் 20 லட்சம் பெறுமதியான 04 வீதிகள் கொங்கிறீட்டு பாதையாக செப்பனிட 80 லட்சம் ரூபா நிதியினையும் 20லட்சம் ரூபா காரைதீவு சித்தனைக்குட்டி ஆலய அனாதரவு அற்றோருக்கான கட்டட நிதிக்கும் வழங்கப்பட்டது. 85லட்சம் ரூபா நிதியினை ஒதுக்கப்பட்ட போது கடந்த அரசியலில் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக தடுத்து வைத்திருந்த போது குறிப்பிட்ட விதிகளில் வசிக்கின்ற மக்களும் காரைதீவின் நலன் விரும்பிகளும் இணைந்து பாராளுமன்ற உறுப்பினரிடம் மீண்டும் அவ் வீதிகளை புனரமைத்து தருமாறு கேட்டுக்கொண்டதிற்கு இணங்க தமது அயராத முயற்சியின் பேரில் காரைதீவு விஷ்ணு வித்தியாலய 03ம் குறுக்கு வீதி காரைதீவு விஷ்ணு வித்தியாலய 02ம் குறுக்கு வீதி ,இளங்கோ குறுக்கு வீதி, வடிவேல் வீதி குறுக்கு வீதி என்பன புனரமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்காக எதிர்வரும் தினங்களில் கையளிக்க பட காத்திருக்கின்றது.

இது சம்பந்தமாக காரைதீவு நலன் விரும்பிகளும் குறிப்பிட்ட வீதியை சேர்ந்த மக்களும் மனமார்ந்த நன்றியை பா .உ கோடீஸ்வரன் அவர்களுக்கு நன்றி செலுத்தினர்.

அத்தோடு எதிர்வரும் காலங்களில் ஏனைய செப்பனிடப்பட வேண்டிய வீதிகள் அனைத்தும் தற்போது மதிப்பீடு அறிக்கையினை பெற்று கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள இருக்கின்றது.இந்த மதிப்பீட்டு அறிக்கையினை மேற்கொண்ட பிறகு இந்த அபிவிருத்தி பணிகளை காரைதீவு மக்களுக்கு செய்து முன்னெடுப்பார் என கருதப்படுகின்றது.

காரைதீவு அபிவிருத்திக்காக 01கோடி ரூபா நிதியினை ஒதுக்கினார் பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன்

 


 

கட்டைக்காடு றோ.க.த.கவின் மேல்தளத்தை திறந்துவைத்தார் சுமந்திரன் எம்.பி.!

கட்டைக்காடு றோமன் கத்தோலிக்க தமிழ்க் கவைன் பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட மேல் தளக் கட்டடத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமாகிய எம்.ஏ.சுமந்திரன் இன்று திறந்து வைத்தார்.

கட்டைக்காடு றோமன் கத்தோலிக்க வித்தியாலய சமூகம் நாடாளுமன்ற உறுப்பினரிடம் மேல்தளம் அமைப்பதற்கான கோரிக்கையை முன்வைத்திருந்தனர். அவர்களது கோரிக்கை தொடர்பில் கரிசனை எடுத்த நாடாளுமன்ற உறுப்பினர், மேல் தளத்துக்கான நிதியை நெடுஞ்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்துமத விவகார அமைச்சிலிருந்து ஒதுக்கீடு மேற்கொண்டு கட்டத்தை நிறைவுசெய்துகொடுத்தார்.

இன்று அந்த மேற்தள கட்டட திறப்புவிழா நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனைப் பிரதமவிருந்தினராகக் கொண்டு திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் யாழ்.மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், பிரதேச செயலர்கள், பிரதேசசபை தவிசாளர், வித்தியாலய சமூகம் எனப் பலர் கலந்துகொண்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினருக்கு வித்தியாலய சமூகத்தால் நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.


அருனோதயக் கல்லூரி உட்கட்டுமானத்துக்கு மாவை சேனாதிராசா 34 லட்சம் நிதி ஒதுக்கீடு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறைத் தொகுதித் தலைவருமாகிய மாவை சோ.சேனாதிராசாவால் அளவெட்டி அருனோதயக் கல்லூரிக்கு 34 லட்சம் ரூபா நிதி உட்கட்டுமான வேலைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி, வலி.வடக்கு பிரதேசசபை அளவெட்டி வட்டார உறுப்பினர் க.மயூரதனின் வேண்டுகோளுக்கிணங்க, வலி.வடக்கு பிரதேசசபை தவிசாளர் சோ.சுகிர்தனின் சிபாரிசுக்கமைய நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசா  அருனோதயக் கல்லூரிக்கு ஒதுக்கித் தந்துள்ளார்.

இந்த நிதிமூலம் 15 லட்சம் ரூபாவில் மிகப்பெரிய மண்டபத்திற்கான மேடை அமைப்பதற்க்கான ஆரம்ப வேலைகளுக்கும் 10 லட்சம் ரூபா நிதி மதில் அமைப்பதற்காவும் தலா 4 லட்சம் ரூபா  வீதம் உட்புற வீதிக்கும் விளையாட்டுத்துறை அபிவிருத்திக்கும் என செலவிடப்பட உள்ளது. கட்டடங்களுக்கான கட்டுமான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு பூர்த்தியடையும் நிலையை அடைந்துள்ளன.

http://www.newsuthanthiran.com/2019/01/05/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D/


Share the Post
About editor 3118 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply