இரணைமடுக் குளம்


Read more at https://globaltamilnews.net/2018/107431/


இரணைமடுக் குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு நீரை கொண்டு செல்லுவதற்கு விவசாயிகள் எதிர்ப்பை தெரிவிக்கின்றார்கள்!

சுரேஸ்

சில காலங்களில் குளத்திலிருந்து அதிகமான அளவில் நீர் திறந்துவிடப்படுவது உண்மையென்றாலும் வரட்சியான காலங்களும் ஏற்படுவதுண்டு. இந்த ஆண்டும் நாம் வரட்சியை எதிர்கொண்டுள்ளோம்.

குளத்தைப் புனரைக்க வேண்டிய தேவை இருந்தாலும் அது விவசாயிகளின் நன்மைக்காகவே அமைய வேண்டும். இந்த நிலையில் நாங்கள் யாழ்ப்பாணத்துக்கு குடிநீர் கொண்டு செல்லும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்தத் திட்டத்தை ஏற்க முடியாது என்றார்.

 


இரணைமடு குளம்
Iranamadu Tank2.jpg

இரணைமடுக் குளத்திலிருந்தது மேலதிக நீர் வான் கதவுகள் மூலம் வெளியேற்றப்படுகிறது
அமைவிடம் வட மாகாணம்
ஆள்கூறுகள் 09°18′50″N80°26′50″Eஆள்கூற்று09°18′50″N 80°26′50″E
வகை Reservoir
ஆற்று மூலங்கள் கனகராயன் ஆறு
வடிநிலம் 227 சது மை (588 km2)
மேலாண்மை முகமை Department of Irrigation,
வட மாகாண சபை
கட்டியது 1921
 
அதிகபட்ச நீளம் 6 mi (10 km)
அதிகபட்ச அகலம் 1 mi (2 km)
அதிகபட்ச ஆழம் 34 ft (10 m)
நீர் அளவு 106,500 acre·ft (131,365,816 m3)
கடல்மட்டத்திலிருந்து மேற்பரப்பின் உயரம் 101 ft (31 m)

இரணைமடுக்குளம் இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள மிகப்பெரிய பெரிய நீர்த்தேக்கம் ஆகும். இரணைமடு என்ற பெயர் அது இயற்கையாக கனகராயன் ஆறு பண்டைக்காலத்தில் இரு குளங்களாக இருந்ததன் அடிப்படையில் வந்தது. மடு என்பது நீர்த்தேக்கம். சிறந்த ஒரு வண்டல் வெளியான இரணைமடுப் படுகை தொல்லியல் மையமாகவும் உள்ளது. 3000 ஆண்டுகள் தொன்மையான தொல்பொருட்களும் இரணைமடு படுகையில் உள்ளன.

வரலாறு

ஆங்கிலேயே ஆட்சிக்காலத்தில் இரணைமடு படுகையில் கனடா- பிரித்தானிய அதிகாரியான சேர் ஹென்றி பாட் 1885 இல் அப்போதைய பிரித்தானிய அரச அதிபர் டேக்கிற்கு இரணைமடு நீர்த்தேக்கத்தை அமைக்கும் ஆலோசனையை முன் வைத்தார். 1866 இல் பிரித்தானிய நீர்ப்பாசன பொறியிலாளரும் தொல்பொருள் தேடலாளருமான ஹென்றி பாக்கர் என்பவர் இரணைமடு நீர்த்தேக்கத்துக்கான திட்டத்தை வரைந்தார். அவரின் திட்டத்தில் இரணைமடுவின்கீழ் 20 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கையை மேற்கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது. 1900 ஆம் ஆண்டில் நீர்ப்பாசன பிரித்தானியப் பொறியிலாளர் று. பிரவுன் வரும்வரை இரணைமடு கட்டுமானம் வரைவு மட்டத்திலேயே இருந்தது. பொறியிலாளர் பிரவுன் அப்போதிருந்த கரைச்சிப் பகுதியில் வாழ்ந்த வெற்றிவேலு என்பவரைச் சந்தித்து இரணைமடு படுகை காட்டை முழுமையாக ஆராய்ந்தார்.

இரணைமடு கட்டுமானத்தை மேற்கொள்ள பெரும் மனிதவலு வேண்டும் என்பதற்காக ஒரு குடியிருப்பை நிறுவும் முயற்சியில் முதலில் பிரவுன் ஈடுபட்டார். இவர் தற்போதுள்ள கிளிநொச்சி நகரிலுள்ள ‘ரை’ ஆறு குளம் என்ற தேக்கத்தை உருவாக்கி அதன் கீழ் மக்கள் குடியிருப்பை உருவாக்கினார். இந்த ‘ரை’ ஆறு குடியிருப்பு குஞ்சுப்பரந்தன் மக்களைக் கொண்டே இரணைமடு கட்டுமானம் ஈழத்தமிழரின் முழுமையான வியர்வையால் கட்டப்படத் தொடங்கியது 1902 இல் ஆகும்.

1920 இல் 19 லட்சத்து 4 ஆயிரம் ரூபா செலவில் இரணைமடு முதல் கட்டமாக முழுமையாக்கப்பட்டது. அப்போது இரணைமடுவின் கொள்ளளவு 44 ஆயிரம் ஏக்கர் அடி, ஆழம் 22 அடி. 1954ல் இரண்டாம் கட்டக் கொள்ளளவு அதிகரிப்பு நடைபெற்றது. அப்போது கொள்ளளவு 82 ஆயிரம் ஏக்கர் அடியாகும். இதன்மூலம் குளத்தின் நீர்மட்ட ஆழம் 30 அடியாக உயர்த்தப்பட்டது. 3 ஆம் கட்டமாக கொள்ளளவு அதிகரிப்பு 1975ல் நடைபெற்றது. 1977ல் முழுமையடைந்த அக்கொள்ளளவு அதிகரிப்பின்போது இரணைமடுவின் கொள்ளளவு 1 லட்சத்து 6500 ஏக்கார் அடியாக அதிகமானது. ஆழம் 34 அடியாகும்.

1977 இல் முடிவடைந்த இந்தப்பணிக்குப்பின் இரணைமடு முழுப் புனரமைப்புக்கு இதுவரை உட்படுத்தப்பட்டவில்லை. 1977ல் தான் இப்போதுள்ள வான் கதவுகள் கொண்ட தோற்றத்தை இரணைமடு பெற்றது. 227 சதுரமைல்கள் நீரேந்து பரப்புக்கொண்ட இரணைமடு கனகராயன் ஆறு, கரமாரி ஆறு என இரு ஆறுகளின் மூலம் நீரைப் பெறுகின்றது. 9 கிலோ மீற்றர் நீளம் கொண்டது. இதன் அணை 2 கிலோ மீற்றர் நீளமுடையது. இதன்மூலம் 20 882 ஏக்கர் நிலப்பரப்பு பயன்பெற்றுள்ளது.

மொத்தம் 32.5 மைல்கள் நீள வாய்க்கால்கள் மூலம் இரணைமடு கிளிநொச்சியை வளப்படுத்துகின்றது. இரணைமடு மூலமே கிளிநொச்சியில் பெருமளவில் குடியேற்றங்கள் நடந்தன.

போர்க்காலத்தில்

இடதுகரை வலதுகரை என இரு வாய்க்கால்களைக் கொண்ட இரணைமடுவின் வலதுகரையில் ஊரியான்குளம் அதன் ஊட்டக்குளமாக உள்ளது. இடதுகரையில் ஊட்டக்குளமாக கிளிநொச்சிக்குளம் அல்லது ரை ஆறு குளம் உள்ளது. இதிலிருந்துதான் கிளிநொச்சி நகருக்கான குடிநீர் வழங்கல் முன்னர் நடைபெற்றது. இதைவிட திருவையாறு என்ற மேட்டுநீர் பாசன குடியிருப்பு பயிர்செய் நிலங்களுக்கான ஏற்றுப்பாசன பம்பி இடது கரையில் இருக்கின்றது.

1980கள் முதல் 2009 வரை இடம்பெற்ற போர்ச் சூழ்நிலை கிளிநொச்சி மக்களின் இடம்பெயர்வுக்குக் காரணமானது. யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் இருந்து மக்கள் கிளிநொச்சிக்கு இடம் பெயர்ந்தனர். இதனால் இரணைமடுக் குளத்தின் சிதைவடைந்தன. இருக்கும் வளங்களைக் கொண்டே இயலுமான பராமரிப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. 1990 அளவில் சிதைவடைந்த இந்நீர்த்தேக்கம் மீளவும் இயங்கவில்ல

உசாத்துணை

  1. ↑ 1.0 1.1 Statistical Information of the Northern Province – 2014வட மாகாண சபை. பக். 92.
  2. ↑ 2.0 2.1 2.2 “Kilinochchi farmers weep over what they sowed as Iranamadu tank dries up”The Sunday Times (Sri Lanka). 9 September 2012.
  3.  Sooriasegaram, M. (8 January 2015). “Another tragedy in the offing”Ceylon Today.

வெளி இணைப்புகள்

https://ta.gowikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D

 


 

கிளிநொச்சி மாவட்டத்தின் உயிர்நாடி இரணைமடுக் குளம்

 

ந.லோகதயாளன்.

கிளிநொச்சி மாவட்டத்தின் முத்து என வர்ணிக்கப்படும் இரணைமடுக் குளம் அந்த மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் தேசிய வருமானத்திற்கும் பெருதும் உதவுவதோடு அந்த மாவட்டத்தின் வாழ்வுக்கும் உயிர்நாடியாக இருப்பது இந்த இரணைமடுக் குளம்  என்றால் அது மிகையாகாது.

இவ்வாறு காணப்படும் குளமானது 1906ம் ஆண்டு முதன் முதலாக கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 1922ம் ஆண்டு நீர்ப்பாசனத்திற்காக திறந்து வைக்கப்பட்டது. இவ்வாறு முதன் முதல் மேற்கொண்ட குள அமைப்புப் பணியானது முழுமையாக மனித வலுவால் அமைக்கப்பட்டது. இவ்வாறு 1922ம் ஆண்டு அமைக்கப்பட்ட குளமானது 22 அடி கொள்ளவாக காணப்பட்டது. அதன் பின்னர் 1951ம் ஆண்டு குளத்தில் பாரிய அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டு அதன் கொள்ளவு 30 அடியாக உயர்த்தப்பட்டது.

இவ்வாறு 30 அடியாக்க் காணப்பட்ட குளம் மீண்டும் 1954ம் ஆண்டு முதல் 1956ஆம் ஆண்டுவரை புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 32 அடியாக கொள்ளவு அதிகரிக்கப்பட்டது. இதன் நிறைவிலேயே அப்போதைய பிரதமர் டி..எஸ்.சேனநாயக்கா வருகை தந்து நினைவுக் கல் ஒன்றையும் திறந்து வைத்தார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2 ஆயிரத்து 130 மில்லியன் ரூபா செலவில் 2016ஆம் ஆண்டு ஆரம்பமான அபிவிருத்திப் பணிகள்   2018ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நிறைவுற்றது. இவ்வாறு இடம்பெற்ற அபிவிருத்திப் பணியின் மூலமே 34 அடி கொள்ளவாக காணப்பட்ட இரணைமடுக் குளமானது அதன் கொள்ளவு 36 அடியாக உயர்த்தப்பட்ட நிலையில் குளமும் 36 அடி நீரை முழுக் கொள்ளவாக காணப்படுகின்றது.

2000ஆம்  ஆண்டு முதன் முதல் கோரிக்கை விடப்பட்டு  சமாதான காலத்தில் இரணைமடுக் குள அபிவிருத்தி, யாழ்ப்பாணம் கிளிநொச்சி குடிநீர்த் திட்டம், யாழ்ப்பாண மாநகர சபைப் பிரதேச பாதாள சாக்கடைத் திட்டம் என ஒருங்கிணைந்த 3 திட்டங்களாக செயல்படுத்த ஆரம்ப மதிப்பீடுகள், திட்ட முன்மொழிவுகள், மாதிரிப் படத் தயாரிப்புக்கள் இடம்பெற்ற வேளையில் போர் ஆரம்பித்த காரணத்தினால் திட்டம் தாமதப்பட்டது.

குளப் புனரமைப்பிற்கான ஒப்பந்தம்.

இவ்வாறு தற்போது அபிவிருத்தி செய்யப்பட்ட இரணைமடுக் குளத்தின் புனரமைப்பிற்காக  2007- 07-13 அன்று தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்தானபோதும் போரால் திட்டம் முன்னெடுக்கப்படவில்லை.

இதன் பின்னர் போர் முடிவுற்ற நிலையில் ஆரம்பிக்க முற்பட்டநிலையில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி குடிநீர்த் திட்டம் தொடர்பில் எழுந்த எதிர்ப்பினால் இரணைமடு அபிவிருத்தி மட்டும் முன்னெடுக்கப்பட்டது.

இவ்வாறு  முன்னெடுக்கப்பட்ட இரணைமடுக் குளத்தினையே  திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கடந்த 2018-12-07 அன்று  வருகை தந்தார்.

இனத்தையே அழித்தவர்கள் இன்று வரலாற்றையும் அழித்தனர்


அதாவது 1954ஆம் ஆண்டு முதல் 1956ம் ஆண்டு வரை இடம்பெற்ற அபிவிருத்திப்  பணிகள் நிறைவடைந்த நிலையில் இலங்கையின் அன்றைய பிரதமர் டட்லி சேனநாயக்க குளத்தை திறந்து வைக்கப்பட்ட நிலையில் அன்றைய நாளில் ஓர்  நினைவுக் கல்லையும் திறந்து வைத்தார்.

இதேநேரம் இவ்வாறு வடக்கு மாகாணத்திலேயே மிகப்பெரும் சொத்தாக காணப்படும் இந்த இரணைமடுக் குளத்தை  நம்பியே ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து பலர் கிளிநொச்சியில் சென்று குடியேறிய வரலாறுகளும் உண்டு. இதேநேரம் கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 65 ஆயிரம் ஏக்கர் வயல் நிலம் உள்ள போதிலும் தற்போது 21 ஆயிரத்து 800 ஏக்கர் நிலத்திற்கே நீர்ப்பாச்சும் வாய்க்கால் வழிப்பாதைகளும் குறித்த அளவு நிலங்களிற்கு மட்டுமே சட்ட பூர்வமான பதிவுகள் உண்டு.

இரணைமடுக் குளத்தினால் முழு மாவட்டமே நன்மை அடையும்.

அதாவது  இக் குளத்தின் பாச்சல் தறைகளின் ஓரம் மேலும் 10 ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளபோதும் இதற்கு நீர்ப்பாச்சும் வசதி இன்னும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை.  இதேநேரம் இரணைமடுக் குளத்தின் கீழ் 1965 ஆம் ஆண்டு முதன் முதலாக திருவையாறுக் கிராமத்திற்கு ஏற்று நீர்ப்பாசனம்  வழங்கப்பட்டது. இதன் பின்னர் மீண்டும் 1977 ஆம் ஆண்டு மேலும் பெருப்பிக்கப்பட்டு அது ஆயிரத்து 200 ஏக்கர் மேட்டு நிலப் பயிர் செய்கைக்கும் நீர் வழங்கப்பட்டது. இவ்வாறு வழங்கப்பட்டு வந்த ஏற்று நீர்ப்பாசனம்  2ம் கட்ட ஈழப்போருடன் முழுமையாக அழிவடைந்தது.

அவ்வாறு அழிவடைந்த ஏற்று நீர்ப்பாசனமும் தற்போது புனரமைக்கப்பட்டு சுமார் 600 ஏக்கர் நிலத்திற்கு நீர் பாச்சும் வசதி ஏற்படுத்தப்படுகின்றது. இவ்வாறு காணப்படும் இரணை மடுக் குளத்தில் இரு நன்னீர் மீன் பிடிச் சங்கங்கத்தின் ஊடாக சுமார் 180 மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவை அனைத்திற்கும் அப்பால் தற்போது இரு பெரிய நீர்த்தாங்கிகள் கட்டப்பட்டு குடிநீர் வசதிகளும் வழங்கப்படும் அதேநேரம் மேலும் சில பகுதிகளிற்கு விஸ்தரிக்கும் முயற்சியும் இடம்பெறுகின்றது.

இவ்வாறு மாவட்டத்தின் பல தேவைகளை நிறைவேற்றும் கிளிநொச்சியில் அமைந்துள்ள முத்து இன்று வட மாகாணத்திற்கே சொத்தாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


INTRODUCTION
1.1
The Mahaweli Ganga
Mahaweli Ganga rises in the central mountains at an elevation of 8,000ft. above M.S.L. and flows down to Koddiar Bay in the east coast of the Island south of Trincomalee. The river is
about 207 miles long and has a drop of 8,000ft. The mean annual runoff of the river is 7.2  million acre feet. This is over 20c/o of the total runoff of all the rivers in the Island.

The total drainage area of the river 4,034 sq. miles which are about 16c/o of the total land area of the Island. The mean annual precipitation in the area is high being 75 to 217 inches in the upper
820 sq. miles of the catchment which lie in the wet zone and 65 to 75 inches in the lower reaches of 3,214 sq. miles which lie in the dry zone.


 

About editor 3000 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply