கடும் போதைக்கு ஆளாகாதே கட்டுரை

 

கடும் போதைக்கு ஆளாகாதே

23 January 2018

நாளைமுதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்… ராத்திரிக்கு தூங்க வேணும் ஊத்திக்கிறேன் கொஞ்சம் என்று கவிஞர் கண்ணதாசன் சொன்னதை வேதவாக்காகஎடுத்துக்கொண்டு தினமும் குடிப்பதற்கு வியாக்கியனம் சொல்லிக்கொள்ளும் எம்மவருக்கு அரசாங்கம் புதன்கிழமை விடுத்த அறிவிப்பு மகிழ்ச்சியையேஅளித்தித்திருக்கும்.

ஆனால், நாலாப்புறமும் நீரினால் சூழ்ந்துள்ள குட்டி தீவான இலங்கை இனி போதையில் மிதக்கும் புட்டி தீவாக மாறிவிடுமோ என்ற அச்சத்தையும் அது ஏற்படுத்தாமல்இல்லை.

நல்லாட்சி அரசாங்கத்தின் 3 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் நாட்டு மக்களுக்கு கொடுத்த பரிசாகக்ககூட இதனை பார்க்க வேண்டியிருக்கின்றது.

கடந்த வாரம் “போதை”யுடன் தொடர்புடைய இரண்டு முக்கிய விடயங்கள் பேசுபொருளாக மாறியிருந்தன, இரண்டும் மதுபான நிலையங்களுடன் தொடர்புடையவை.அதாவது, மதுபான சாலைகளில் பெண்களையும் வேலைக்கமர்த்துவது மற்றும் மதுபான நிலையங்கள் திறந்திருக்கும் காலத்தை அதிகரிப்பது என்பதே பாலரதுகவனத்தையும் ஈர்த்துள்ளது.

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 3 வருடங்கள் நிறைவுற்ற நிலையில் மதுபானங்கள் விடயத்தில் முடிவ எடுக்கப்பட்ட இரண்டு முக்கிய சந்தர்ப்பங்கள் உள்ளன. புதிய நிதியமைச்சராக மங்கள சமரவீர பதவிக்கு வந்து சமர்ப்பித்த 2018ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் பியருக்கான விலையை குறைக்க அதிரடிதீர்மானமொன்றை முன்வைத்தார்.

இது கடந்த வருட இறுதிப்பகுதியில் பாரிய எதிர்ப்புகளை ஏற்படுத்தியிருந்தாலும், தற்போது அதனைப்பற்றி எவரும் பேசுவது இல்லை. இந்நிலையிலேயே மதுபானசாலைகள் திறந்திருக்கும் நேரங்களில் மாற்றத்தை ஏற்படுத்த தீர்மானித்துள்ளதா மற்றுமொரு போதை குண்டை கடந்த வார நடுப்பகுதியில் தூக்கிப்போட்டிருந்தார்.

அதன்படி, சில்லறையாக மதுபானம் விற்கும் நிலையங்கள் காலை 9 மணிமுதல் இரவு 10 மணிவரையும், மதுபானங்களை விற்பனை செய்யும் விடுதிகள் முற்பகல் 11 மணிமுதல் இரவு 11 மணிவரையும் திறந்திருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், சுற்றுலா விடுதியில் காலை 11 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை மதுபானம் விற்க அனுமதி வழங்கப்பட்டதுடன், சுற்றுலா விடுதியில் மதுபானம் விற்கஅனுமதிபத்திரம் பெற்ற உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தால் கால எல்லையை அதிகாலை 2 மணிவரை அதிகரிக்க தயாராக உள்ளதாகவும் நிதியமைச்சர்தெரிவித்திருந்தார்.

இந்த விடயங்களை பார்க்கும் போது ஒருபுறம் மதுபான விற்பனை ஊடாக அராசங்கம் அதிக வருமானம் பெற முயற்சிப்பதாக தோன்றுவதுன்ட, மறுபுறம் சட்டவிரோதமதுபான விற்பனை ஊடாக அரசாங்கத்துக்கு கிடைக்காமல் போகும் வரியை மீட்கும் ஒன்றாகவும் பார்க்கலாம்.

மதுபான விற்பனை நிலையங்கள் திறந்திருக்கும் காலத்தை அதிகரிப்பதானது, மதுபான சாப்பு சட்டத்துக்கு அமைவாகவே எடுக்கப்பட்டுள்ளது என்றும் நிதியமைச்சர்தெரிவித்திருந்ததுடன், அது தொடர்பான வர்த்மானியில் கையொப்பம் இட்டுமுள்ளார்.

அத்துடன், இதுவரை காலமும் மதுபான விற்பனை நிலையங்கள் தொடர்பில் சாப்பு சட்டம் உரிய முறையில் கடைப்பிடிக்கப்படவில்லை என்றும் அவரின் கருத்துஅமைந்திருந்தது. முன்னர் சாதாரண மதுபான விற்பனை நிலையங்கள் இரவு 10 மணிவரை திறந்திருந்த நிலையில்,பொதுமக்கள் போதைக்கு அடிமையாவதாகக்கூறிஇரண்டு 9 மணிவரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

எனினும், இந்த நடவடிக்கை கள்ளச்சந்தை அல்லது சட்டவிரோத மதுபான விற்பனையை அதிகரித்தமையை ஆதரவளித்தைமையே கண்கூடு.

உலக சுகாதாரை தாபனம் 2010 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையொன்றில் சராசரியாக இலங்கையர் ஒருவர் 8.5 லீற்றர் மதுபானம் பயன்படுத்துவதாகதெரிவிக்க்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் இலங்கையில் உள்ள சிறுவர் உள்ளிட்ட சகலரும் மதுபானம் அருந்துவது அல்ல, மாறாக இலங்கையில் பயன்படுத்தப்படும்மதுபானம் இலங்கையில் உள்ள பிரஜைகளின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டு கணிப்பிடப்படுகின்றது.

அத்துடன், இந்த 8.5 லீற்றர் மதுபானத்தில் 65 சதவீதானமை சட்டவிரோத மதுபானம் என்றும், 35 சதவீதமான மதுபானங்கள் அனுமதிப்பெற்ற செறிவு கூடியவை ஆகும்.இதில் 5 சதவீதம் பியரும் அடங்கும். இந்த விவரங்களை வைத்து பார்க்கும் போது, இலங்கையின் மதுபான தேவையில் பெருமளவு பகுதியை சட்டவிரோத மதுபானங்கள்பூர்த்தி செய்கின்றதா என்ற கேள்வி எழும்புகின்றது.

அத்துடன், போயா தினங்களில் மதுபான சாலைகள் மூடப்பட்டாலும் யாருமே அன்றைய தினம் மது அருந்துவது இல்லை என்று சொல்லவு முடியாது. அவ்வாறானநாட்களில் கள்ளச்ந்தை மற்றும் அனுமதிப்பெறாமல் மதுபான விற்பனைகள் இடம்பெற்றுக்கொண்டுதான் உள்ளளன.

மதுபானசாலைகள் தொடர்ச்சியாக மூடப்படும் நாட்களில் சட்டவிரோதமான முறையில் மதுபானவிற்பனையில் ஈடுபட்டவர்கள் கைதுசெய்த பல சம்பவங்களை நாம்அறிந்திருக்கின்றோம். அத்துடன், பாரியளவிலான மதுபான தொகைகையும் கைப்பற்றிய சம்பவங்களும் நடக்காமல் இல்லை.

மாதம் முழுவது குடிக்காதவர்கள் போலவும், அல்லது இனிமேல் குடிக்கவே மாட்டோம் என்பது போலவும் போயா தினங்கள் மற்றும் மதுபான விற்பனை நிலையங்கள்மூடப்பட்டுள்ள நாட்களில் மதுபானங்களை தேடி அலைபவர்களால் கள்ளச்சந்தை மற்றும் சட்டவிரோத மதுபான விற்பனைகள் ஊக்குவிக்கப்பட மிகமுக்கிய காரணமாகஅமைக்கின்றன.

திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதை போல மதுபானம் அருந்துபவர்கள் தானாக மனமாறாவிட்டால் அதனை ஒழிக்க முடியாதுஎன்பதும் உண்மை. எனினும், மதுபானங்களின் பாவனையை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக நினைத்து அரசாங்கம் மதுபானத்துக்கு வரிகளை அதிகரிக்கும் போது,அவர்கள் சட்டவிரோ அல்லது தரங்குறைந்த ஏனைய மதுபானங்களை அருந்துவதற்கு ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

இரவு ஒன்பது மணிக்கு மதுபான விற்பனை நிலையம் மூடப்படுவது தெரிந்தும் அந்த சந்தர்ப்பத்தில் மதுபான கடைகளுக்கு முன்னால் கூட்டம் அலைமோதுவதுவாடிக்கை. தேடி வந்தது கிடைக்காவிட்டால், பகீரதப் பிரயத்தனம் எடுத்தாவது அதனை பெற்றுவிட வேண்டும் என்று கள்ளச்சந்தையைநோக்கி இவர்கள்தள்ளப்படுகின்றார்.

வா குவாட்டர் கட்டிங் என்ன தமிழ் திரைப்படத்தில் அவர்கள் படும் அவஸ்தையை அழகாக சித்தரித்திருப்பார்கள். இவ்வாறான நிலையில், மதுபான விற்பனைநிலையங்கள் நீண்ட நேரம் திறந்திருப்பது சட்டவிரோத மது விற்பனை மற்றும் கள்ளசந்தையை ஒழிப்பதற்கு உதவும் என்று நம்பலாம். எனினும் உறுதி கிடையாது.

இது இவ்வாறு இருக்கையில், மறுபுறம் மக்களுக்கு இலகுவாக மதுபானம் கிடைக்கும் சந்தர்ப்பத்தை இது இன்னும் அதிகப்படுத்திவிடும் அபாயக்கதவுகளையும்திந்துவிட்டுள்ளது. இதனை அடைக்கும் உபாயத்தை அரசாங்கம் எடுக்குமா என்பது மில்லியன் டொலர் கேள்வி.

நாட்டின் ஏனையப்பகுதிகளை விட மலையகத்தை எடுத்துக்கொள்ளும் போது, அதிகமாக வருமானமில்லாத அம்மக்கள் மத்தியில் மதுபாவனை என்பது அதிகமாகவேஉள்ளது என்பதை யாராவது மறுக்க முடியுமா?, மலையக சூழலை நன்றாக அறிந்தவர்கள் எவரும் இதனை மறுக்க மாட்டார்கள்.

இவர்களிடம் பணம் இல்லாத நாட்களில், சட்டவிரோதமான மதுபானம் விற்போரை நாடி நிர்ணயிக்கப்பட்டதை விட அதிக விலைக்கு மதுபானத்தை பெற்றுக்கொண்டுசம்பளத்தில் முக்கால்வாசியை அவர்களிடம் இழக்கும் நபர்கள் ஏராளம். இதற்காக தாலியைக்கூட அடகு வைத்த கணவன்மார்களின் கதைகளை மலையக தாய்மார்களிடம்கேட்டால் தெரியும்.

இந்நிலையில், மதுபான பாவனையை ஒழிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்காமல் அதனை ஊக்கப்படுத்தும் வகையில் அரசாங்கம் செயற்படுகின்றதில் நிச்சயம் இலாபநோக்கம் இல்லாமல் இல்லை.

சிலவேளைகளில், கள்ள சந்தை மற்றும் சட்டவிரோத மதுபான விற்பனையால் யாரோ ஒரு தனிநபர் சுருட்டும் காசை ஏன் சட்டரீதியாக நாங்கள் பெற்றுக்கொள்ளக்கூடாதுஎன்ற எண்ணத்தின் வெளிப்பாடாக்ககூட இது இருக்கலாம் அல்லவா? ஏனென்றால், அரசாங்கம் அதிகமாக வருமானத்தை உழைக்கும் முக்கியமான ஒன்று மதுபானம்மற்றும் புகையிலை உற்பத்திகள் என்பதை உலக நாடுகள் ஏற்றுக்கொண்ட ஒன்று.

இது இவ்வாறு இருக்கு, மதுபானம் தொடர்பில் பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டமை சலசலப்பை ஏற்படுத்தியுள்ள மற்றுமொரு விடயமாகமாறியுள்ளது.

அதாவது, இதுவரைக்காலமும் பெண்கள், மதுபான உற்பத்தி நிலையங்கள் மற்றும் மதுபான விற்பனை நிலையங்களில் பணிக்கு அமர்த்தப்பட முடியாது என்பதுடன், மதுபானங்களை விற்பனை நிலையங்களில் பகிரங்கமாக கொள்வனவு செய்ய முடியாது என்ற தடை நீண்ட காலமாக காணப்படுகின்றது.

இந்நிலையில், பெண்களுக்கு எல்லா உரிமைகளையும் பெற்றுக்கொடுப்போம் எனும் திடீர் ஞானம் உதயமானதோ என்னவோ, மதுபானம் தொடர்பில் பெண்களுக்குஇருந்த தடையையும் அரசாங்கம் நீக்கியுள்ளது.

இதற்கான வர்த்தமானியில் நிதியமைச்சர் மங்கள சமரவீர கையெழுத்தும் வைத்துவிட்டநிலையில், வர்த்தமானி வெளியான பின்னர் இது நடைமுறைக்கு வந்துவிடும்.

அதவது, இனி பெண்கள் மதுபான உற்பத்தி நிலையங்கள் மற்றும் மதுபான விற்பனை நிலையங்களில் பணியில் அமர்த்தப்பட முடியும் என்பதுடன், மதுபானங்களைவிற்பனை நிலையங்களில் மதுபானங்களை கொள்வனவு செய்யவும் முடியும். (எதிர்காலத்தில், மதுபான நிலையங்களுக்கு முன்னால் ஆண், பெண் என தனித்தனியானவரிசைகள் அமைக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை)

இதிலும் ஒரு வியாபார உத்தி இருப்பதாகத்தான் தோன்றுகின்றது. இன்று அதிகளவான நிறுவனங்கள் தங்களது விளம்பர உத்தியாக பெண்களை பயன்படுத்துகின்றனர். அழகான பெண்கள் இருக்கும் இடங்களின் ஆண்கள் அதிக நேரம் இருப்பார்கள் என்ற நினைப்பில் இதைத்தான் காலாகாலமாக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மதுபான நிலையங்களில் பெண்களை வேலைக்கு அமர்த்தினால், ஆண்களை அங்கேயே அடிமைப்படுத்தி பையிலுள்ள பணத்தை தண்ணீராய் செலவுசெய்யவைக்க முடியும்.

அதுமட்டுமல்லாது, அங்கு பெண்களை வேலைக்கு அமர்த்தினால் அவர்களது பாதுகாப்பு குறித்த கேள்வியும் எழும்பலாம், சாதாரணமான நிலையிலேயே பெண்களைகேவலமாக பேசும் சில ஜென்மங்கள், போதை தலைக்கேறினால் எப்படி நடந்துக்கொள்வார்கள் என்று யோசித்து பாருங்கள்.

அத்துடன், ஆண்களை விட பெண்கள் குறைவான ஊதியத்துடன் பணிக்கு அமர்த்தலாம் என்று சில பணமுதலைகள் திட்டம் தீட்ட அரசாங்கம் அமைத்துக்கொடுத்தவழியாகக்கூட இது தோன்றுகின்றது.

கொழும்பிலுள்ள சில ஹோட்டல்களில் கூட பெண்களை வேலைக்கு அமர்த்தி, அதிக வேலை வாங்கி அவர்களை பிழிந்தெடுப்பதை பல முறை கண்டிருக்கின்றோம்.தேயிலை செடிக்கடியில் வாழ்நாளை அர்ப்பணிக்கும் பெண்களை போலவே இவர்களது நிலை குறித்து எவரும் ஏறெடுத்து பார்ப்பதில்லை.

இந்நிலையில், மதுபான சாலைகளின் பெண்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டால் அவர்களின் நிலை என்னவாகும் என்றும் யோசித்துபாருங்கள். அடுத்த வீட்டு பெண்கள்பணிபுரிவதை பாரத்து சிரிப்பதற்கு தயாராகும் முன்னர், நம் வீட்ட பெண்கள் அவ்வாறு வேலைசெய்ய அனுப்புவோமா என்று சிந்தித்துப்பாருங்கள்.

எது எவ்வாறாயினும், எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு என்பதை அறிந்துசெயற்பட்டால் போதும்.

மலிவாகவும் இலகுவாகவும் கிடைக்கிறது என்பதற்காக எதையும் அதிகமாக பயன்படுத்தினால் ஆபத்து என்பதுதான் உலக நியதி. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சுஎனும்போது மது மாத்திரம் விதிவிலக்கா என்ன? செம போத ஆகாத என்று மட்டும்தான் சொல்ல முடியும்? முடிவு உங்களிடம்.

ஜே.ஏ.ஜோர்ஜ்

https://nilavaram.lk/featured/392-do-not-get-intoxicated

About editor 3089 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply