1,800 ஆண்டுகள் பழமை வாய்ந்த 9 அடி உயர பச்சைக்கல் ராமர் சிலை கிடைத்தது

1,800 ஆண்டுகள் பழமை வாய்ந்த 9 அடி உயர பச்சைக்கல் ராமர் சிலை கிடைத்தது

ஒக்ரோபர் 1, 2012

1,800 ஆண்டுகள் பழமை வாய்ந்த 9 அடி உயர பச்சைக்கல் ராமர் சிலை கோவில் திருப்பணிக்காக பள்ளம் தோண்டியபோது கிடைத்தது.

பனப்பாக்கம், செப்.30-

http://www.dailythanthi.com/article.asp?NewsID=761597&disdate=9/30/2012

கோவில் திருப்பணிக்காக பள்ளம் தோண்டியபோது, பச்சைக்கல்லில் செதுக்கப்பட்ட 1800 ஆண்டுகளுக்கு முந்தைய 9 அடி உயர ராமர் சிலை கிடைத்தது.

கோவில் திருப்பணி

வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கத்தில் அபயவரதராஜ பெருமாள் என்று அழைக்கப்படும் கோட்டை பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில், மூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வைணவ கோவிலாகும். முற்காலத்தில் காவேரிப்பாக்கத்தை ஆண்ட குறுநில மன்னர்களால் பராமரிக்கப்பட்டு வந்த இந்த கோவிலின் ராஜகோபுரம், மூலவர் விமானம் உள்ளிட்ட பல்வேறு சாமி சிலைகள் நாளடைவில் சிதைந்து போயின.

நீண்ட காலமாக பராமரிப்பின்றி பாழடைந்த நிலையில் இருந்து வந்த இந்த கோவிலை திருப்பணி செய்து புதுப்பிக்க ஊர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் முன்வந்துள்ளனர். அதைத்தொடர்ந்து, தற்போது ரூ.1 கோடி செலவில் திருப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

சிலை கிடைத்தது

கோவில் திருப்பணியின் ஒரு பகுதியாக, நேற்று ஜே.சி.பி. எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது ஜே.சி.பி. எந்திரத்தின் வாய் பகுதி ஒரு பெரிய பாறையில் சிக்கிக் கொண்டது. உடனே அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்களும், பக்தர்களும் அங்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு ஒரு பெரிய சிலை இருப்பது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து மிகவும் கவனமாக பள்ளம் தோண்டி மண்ணை அகற்றி, சிலையை பத்திரமாக வெளியே எடுத்தனர். பின்னர் தண்ணீர் ஊற்றி சிலையை சுத்தம் செய்தனர்.

9 அடி உயர பச்சைக்கல் ராமர் சிலை

அப்போது, அது 9 அடி உயரம் கொண்ட ராமர் சிலை என்பது தெரியவந்தது. மிகவும் அரிதான பச்சைக்கல்லினால் அந்த சிலை செதுக்கப்பட்டு உள்ளது.

அந்த சிலை, ராமரின் நெஞ்சு பகுதியில் சீதாதேவி வீற்றிருப்பது போன்று அமைந்திருப்பது சிறப்பு அம்சமாகும். மேலும், சிலையின் முதுகு பகுதியில் அம்புக்கூடு உள்ளது.

1,800 ஆண்டு பழமை

சுமார் 1,800 ஆண்டு காலம் பழமையான இந்த ராமர் சிலையின் வலது கையின் மணிக்கட்டிற்கு கீழும், இடது முழங்கையின் கீழும் உடைந்திருக்கிறது. காலின் பாதம் அருகிலும் சிறிது உடைந்து காணப்படுகிறது. ராமர் கிரீடம் அணிந்திருப்பது போன்று சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது.

மிகவும் நுட்பமாக கலைநயத்துடன் சிலை செதுக்கப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து கோவில் அறங்காவலர் ரவிச்சந்திரராஜா, கோவில் திருப்பணிக்குழு தலைவர் கங்காபாய் ஆகியோர் கூறுகையில், `இந்த சிலையை கோவிலில் வைக்க முடிவு செய்திருப்பதாக` தெரிவித்தனர்.

பூசை

திருப்பணிக்காக பள்ளம் தோண்டியபோது ராமர் சிலை கிடைத்த தகவல் அந்த பகுதியில் வேகமாக பரவியது.

உடனே ஏராளமான பக்தர்கள் அங்கு சென்று, ராமர் சிலைக்கு மாலை அணிவித்து பூஜை செய்து வணங்கினர்.

பிரிவுகள்:பார்ப்பான் திருக்குறள் அந்தணன் சங்க இலக்கியம் அந்தணர்கள் வேதம் மறைமொழி
முருக கடவுள் வழிபாட்டின் தொன்மை- சங்க இலக்கிய ஓளியில்.

செப்ரெம்பர் 5, 2012ankaraikrishnan5 பின்னூட்டங்கள்

சிவ பெருமானினும் பார்வதி அம்மையின் சேய் என்பதால் சேயோன் என்னும் பெயரில் தொல்காப்பியம் முருகனை அழைக்கிறது. சிவ மைந்தன் என்பதால் ஆலமர் செல்வன் எனவும் சங்க இலக்கியத்தில் காண்கிறோம்.

தாயார் தன் சக்தியை வேல் ஆக்கித்தர அதை வைத்துருப்பதால் வேலன் எனப் படுவார் முருகர்.

Karttikeya with Vel and Seval (rooster), coin of the Yaudheyas 200 BCE.
http://en.wikipedia.org/wiki/Murugan

அன்னையிடம் வேல் வாங்கி, முதன் முதலாக, திருக்கையில் வேல் ஏந்திய நாளே = தைப்பூசம்!

-Karttikeya_shrine_with_anteloppe_Yaudheya_Punjab_2nd_century_CE.jpg

வேலுடன் முருகரைப் பார்த்த சூரபன்மன் தன்னை மரமாக உருவெடுக்க வேலினால் மரத்தைப் பிளக்க சேவலும் மயிலுமாய் மாறி முருகனுடன் என்றும் இருக்குமாறு அருள் பெற்றான் அசுரன். இதை சங்க இலக்கியங்களில் தொன்மையான நூல்களிலும் காணலாம்.

A coin, around 200 BCE, of theYaudheyas with depiction of Karttikeya
A Stone vel at the entrance to theSangam period Murugan shrine at Saluvanakuppam near Mahabalipuram

Entrance to the Katirkāmam temple

Murugan Icons carried in procession during Thaipusam at Batu Caves

Lord Kartikeswar idol in Orissa

Shanmuga Temple Bangalore

மேலும் பொ.மு.200 வாக்கிலான வட இந்தியக் காசில் கார்த்திகேயன் வேலுடனும் சேவலுடனும் உள்ளார்.
சரவணன், கார்த்திகேயன், குமரன், கந்தன், வடிவேலன், சுப்ரமணியன், சுவாமிநாதன், செந்தில்நாதன், ஆறுமுகன் (சண்முகன்) போன்ற பல பெயர்களால் வணங்கப்படுகிறார்.

சிவ- பார்வதி மைந்தன் சேயோன் முருகனிற்கு ஆறு பெரும் கோயில்கள் அறுபடைவீடு என்பது சங்க காலத்திலிருந்தே தொடர்கிறது.
திருப்பரங்குன்றம் – சூரபத்மனை போரில் வென்ற பின் இந்திரன் மகளான தெய்வானையை மணந்த திருத்தலமிது.
திருச்செந்தூர் – அசுரன் சூரபத்மனோடு முருகன் போரிட்டு வென்று வெற்றி வாகைச் சூடிய திருத்தலமிது.
பழநி – மாங்கனிக்காக தமையன் விநாயகரோடு போட்டியிட்டு தோற்ற கோபத்தில் தண்டாயுதபாணியாக நின்ற திருத்தலமிது.
சுவாமிமலை – தன் தந்தை சிவனுக்கே பிரணவ மந்திரத்தை ஓதி தகப்பன்சுவாமியாக காட்சிதரும் திருத்தலமிது.
திருத்தணி – சூரனை வதம் செய்தபின் சினம் தணிந்து, குறவர் மகள் வள்ளியை மணந்த திருத்தலமிது.
பழமுதிர்சோலை – ஔவைக்கு பழம் உதிர்த்து, வள்ளி தெய்வானையோடு காட்சிதரும் திருத்தலமிது.
http://www.tamilvu.org/slet/l1270/l1270exp.jsp?x=142&y=146&bk=60&z=l12705u1.htm

சூர்மருங் கறுத்த சுடரிலை நெடுவேல்
1சினமிகு முருகன் தண்பரங் குன்றத்து
அந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை
இன்றீம் பைஞ்சுனை ஈரணிப் பொலிந்த அகநா. 59 : 10

10-5. சூர் மருங்கு அறுத்த சுடர்இலை நெடுவேல் – சூர பன் மாவினையும் அவன்

சுற்றத்தினையும் தொலைத்த ஒளி பொருந்திய இலைத் தொழிலையுடைய

நெடிய வேலினையுடைய, சினம் மிகு முருகன் தண் பரங்குன்றத்த – சினம்

மிக்க முருகன் தண் பரங்குன்றத்து – சினம் மிக் முருகனது தட்பம் வாய்ந்த

திருப்பரங்கன்றமாகிய, அந்துவன் பாடிய – நல்லந்துவனார் பாடிய, சந்துகெழு

தண்ணறுங் கழுநீர்ச் செண்ணியற் சிறுபுறம்

பிரிவுகள்:பார்ப்பான் திருக்குறள் அந்தணன் சங்க இலக்கியம் அந்தணர்கள் வேதம் மறைமொழி, semmozhi
சங்க இலக்கியம் போற்றும் வேதங்கள் -தமிழர் சமுதாயம்.

ஓகஸ்ட் 26, 2012ankaraikrishnan6 பின்னூட்டங்கள்

பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த
நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப
ஏம ஆன் துயில் எழிதல் அல்லதை,
வாழிய வஞ்சியும் கோழியும் போலக்
கோழியின் எழாது, எம் பேர் ஊர் துயிலே. பரிபாடல்-திரட்டு 8:7-12

பூவினுள் பிறந்தோன்- பிரம்மா

நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப- ரிக், யஜுர், சாம அதர்வண வேதங்களின் முழக்கம் அந்தணர் ஓத
வஞ்சியும் -சேர தலைநகர்- வஞ்சி

கோழியும்- உரையூர்- சோழ தலைநகர்

கோழியின் எழாது- சேவல் கூவலில் எழ
பாண்டி நாட்டு தலைநகர் மதுரைவாசி சொல்கிறா: சேர தலைநகர்- வஞ்சிவாழ் மக்களும், உரையூர் சோழ தலைநகர்வாழ் மக்களும் தினமும் அதிகாலை சேவல் கூவலில் எழுகின்றனர். நாங்கள் அதிகாலையில் அந்தணர் ரிக், யஜுர், சாம அதர்வண வேதங்களின் ஓதும் முழக்கம் கேட்டு எழுகிறோம் என பெருமை கொள்கின்றார்.

சங்க இலக்கியமான அகநானூறு 141-ஆம் பாடலில் தீபாவளி.

மழை கால் நீங்கிய மகா விசும்பில்
குறுமுயல் மறுநிறம் கிளர்மதி நிறைந்த
அறுமீன் சேரும் அகவிருள் நடுநாள்
மறுகு விளக்குறுத்து மாயை தூக்கிப்
பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
விழவுடன் அயர வருகத்தில் அம்ம !
அகநானூறு 141-ஆம் பாடல் இயற்றியவர் நக்கீரர்

அறுமீன் சேரும் அகவிருள் நடுநாள்- என்பது அமாவாசை நாளாம்.

கொல்லப்பட்ட அரக்கன் – தீமை வெல்லப்பட்டது.
இருள் நீங்கியது. ஓளி வருகிறதின் அடையாளமாக சங்க காலத்தில் விளக்குகள் ஏற்றி கொண்டாடினர்.
அறிவியல் ஞானம் பெருக- தீமை அழிவதைப் பட்டாசு கொழுத்தி கொண்டாடுகிறோம்.

இருதமிழ் மன்னர்கள் ஒற்றுமையாய் காணுதல் அரிது என்பதை விளக்க சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும், பாண்டியன் வெள்ளியம்பலத்து துஞ்சிய பெருவழுதியும் ஒன்றாக கண்டதை காவிரிப்பூம்பட்டினத்து காரிக்கண்ணனார் புறநானூறில் பாடுகின்றார்:

இருப்பெருந் தெய்வங்கள் கண்ணனையும் பலதேவனையும் ஒன்றாக பார்ப்பது போலுள்ளது என்கின்றார்.

பால்நிற உருவின் பனைக்கொடியோனும்
நீல உருவின் நேமியோனும் என்று
இருபெருந் தெய்வமும் உடன் நின்றாஅங்கு -புறநானூறு்:58:14 – 16

செங்கட்காரி! கருங்கண் வெள்ளை!
பொன்கட் பச்சை! பைங்கண் மாஅல்! – (பரி.3:81-82)

சிவந்த கண்களுடைய வாசுதேவனே! கரிய கண்களையுடைய சங்கருஷணனே! சிவந்த உடம்பினை உடைய பிரத்யும்நனே! பசிய உடம்பினையுடைய அநிருத்தனே! என்பது இதன் பொருளாகும்.

புவ்வத்தாமரை புரையும் கண்ணன்
வௌவல் கார்இருள் மயங்குமணி மேனியன்
எவ்வயின் உலகத்தும் தோன்றி அவ்வயின்
மன்பது மறுக்கத் துன்பம் களைவோன்-பரிபாடில்.15:49-52

கண்ணன் இந்த உலகின் துன்பத்தை போக்க இந்த பூமியில் அவதாரமாக வந்தருளும் முழுமுதல் கடவுளாம்.

சங்க இலக்கியமாகிய பரிபாடலில் கண்ணனின் லீலைகளைச் சுட்டி அவனை மாயோன், திருமால் என்று போற்றும் பாடல்களும், அவனது கோயில்கள் பற்றிய குறிப்புக்களும் உள்ளன.

சிலப்பதிகாரத்தில், மதுரைப் புறஞ்சேரியில் உள்ள ஆயர்கள், ஆய்ச்சிகள் அனைவரும் குரவையிட்டு கண்ணனை ஆராதிக்கிறார்கள்.
மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவி என்ன செவியே
திருமால்சீர் கேளாத செவி என்ன செவியே;
பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம் 2
விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியும் கையும் திருவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண்ணென்ண கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ண கண்ணே;
மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப்
படர்ந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே
நாராயணா வென்னா நாவென்ன நாவே; – சிலப்பதிகாரம் 17. ஆய்ச்சியர் குரவை

கொல்லப்பட்ட கொடுங்கோல் அரக்கன் – தீமை வெல்லப்பட்டது.
இருள் நீங்கியது. ஓளி வருகிறதின் அடையாளமாக சங்க காலத்தில் விளக்குகள் ஏற்றி கொண்டாடினர்.
அறிவியல் ஞானம் பெருக- தீமை அழிவதைப் பட்டாசு கொழுத்தி கொண்டாடுகிறோம்.

அனைத்து மன்ற உறவுகளுக்கும் எனது தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

ஆசிரியர் நல்லுவந்தனார் பரிபாடல் 11ம் பாடலில் வையை என வைகை ஆற்றின் சிறப்பைக் கூறுகையில்

பரிபாடல்2:76-87
ஞாயிறு காயா நளி மாரிப் பின் குளத்து,
மா ஆருந் திங்கள் மறு நிறை ஆதிரை
விரிநூல் அந்தணர் விழவு தொடங்க,
புரி நூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப,
‘வெம்பாதாக, வியல் நில வரைப்பு!‘ என 80

அம்பா ஆடலின் ஆய் தொடிக் கன்னியர்,
முனித் துறை முதல்வியர் முறைமை காட்ட,
பனிப் புலர்பு ஆடி, பரு மணல் அருவியின்
ஊதை ஊர்தர, உறை சிறை வேதியர்
நெறி நிமிர் நுடங்கு அழல் பேணிய சிறப்பின், 85

தையல் மகளிர் ஈர் அணி புலர்த்தர,
வையை! நினக்கு மடை வாய்த்தன்று.
மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து,
பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவர், அவர்
தீ எரிப் பாலும் செறி தவம் முன் பற்றியோ, 90

தாய் அருகா நின்று தவத் தைந் நீராடுதல்?
நீ உரைத்தி, வையை நதி!

மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரம் அன்று வேதமோதும் அந்தணர்கள் சிவபெருமானிற்கு திருவிழா செய்யத் தொடங்கினர்.
முப்புரி நூல் அணிந்த அந்தணர் பொன்கலத்தை ஏந்தி சென்றனர்.
அம்பா ஆடல் செய்யும் கன்னிப் பெண்கள்- முதிய அந்தணப் பெண்கள் வழிகாட்ட அதிகாலையில் நீராடினர்.
அதிகாலையில் நீராடிய இளம்பெண்கள், மார்கழியின் குளிர் வாட்ட, கரையில் வேதமந்திரங்கள் கூறி வளர்த்த வேள்வி அக்னியின் அருகில் சென்று தங்கள் ஈர ஆடையை காயச் செய்தனர். அந்தணர் வேத வேள்விகளால் மழை தொடர வைகை நீ பெருகுகிறாய்.

இவை மார்கழி மாதத்தின் பாவை நோன்பின் தொன்மையையும் திருவாதிரை பண்டிகை கொண்டாடுதலின் வழமையையும்மெய்பிக்கின்றது.

பரிபாடல்-திரட்டு 2ம் பாடல் வையை என்ற தலைப்பில்
தலைவன் கூற்று

‘புனலூடு போவது ஓர் பூ மாலை கொண்டை,
எனலூழ் வகை எய்திற்று’ என்று ஏற்றுக்கொண்ட
புனலூடு நாடு அறியப் பூ மாலை அப்பி,
நினைவாரை நெஞ்சு ஆடுக்கண் செய்யும் கனல்புடன்,
கூடாமுன், ஊடல் கொடிய திறம் கூடினால் …55

ஊடாளோ? ஊர்த்து அலர் வந்து ஊர்ந்து,
என ஆங்கு-

‘ஈப் பாய் அடு நறாக் கொண்டது, ஆவ் யாறு’ எனப்
பார்ப்பார் ஒழிந்தார், படிவு.
‘மைந்தர் மகளிர் மண விரை தூவிற்று’ என்று, 60

அந்தணர் தோயலர், ஆறு,
‘வையை தேம் மேவ வழுவழுப்பு உற்றென’
ஐயர், வாய்பூசுறார், ஆறு.
-பா¢பாடல்-திரட்டு 2:50-63
அந்தணர்கள் எல்லா மக்களும் சேர்ந்து கொண்டாடும் புதுநீர் விழாவின் போது, கேளிக்கைகளில் கலந்துகொள்ளாது ஒதுங்எயே வாழ்ந்தனர். கள் குடித்தவர்கள் உமிழ்கையில் கள்ளும்; பெண்களும் சிறுவர்கள் பயன்படுத்தும் நறுமணப் பொருட்கள், வழுவழுப்பான தேன் முதலியவை வைகை ஆற்றின் புதுப் புனலில் கலந்து வந்தது ஆகையால் ஒழுக்க நெறிப்பட்ட பார்ப்பனர்கள் புதுப் புனலின் போது வைகையில் குளிப்பதோ- வாய் கொப்பளிப்பதோ இல்லை. இங்கே பார்ப்பனர்- அந்தணர்-ஐயர் என்ற மூன்று பதங்களும் பிராமணர்களைக் குறிக்க சங்க காலத்திலே இருந்தது எனத் தெளிவாகிறது.
மேலும் சங்க காலத்தில் தமிழகத்தின் பக்திநிலை பற்றியும் உறுதி செய்கிறது.

தொல்காப்பிய நூற்பா களவியல்-1

இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்
காமக் கூட்டம் காணும் காலை
மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்
துறை அமை நல் யாழ்த் துணைமையோர் இயல்பே-

தமிழர் வீடுபேற்றுக்கு – அறம்-பொருள்- இன்பம் இவற்றை அன்போடு இணைத்து காதலர்கள் இணையுமுன் வைதீகர்கள் கூறும் 8 வித திருமண முறைகளான – 1. பிரம்ம முறை 2. தைவ 3. ஆர்ஷ 4. பிராஜாபத்யம் 5அஸ¥ர, 6.கந்தர்வ 7.ராக்ஷஸ மற்றும் 8. பைசாச முறை, இவற்றில் கந்தர்வமுறையில் மணம் செய்தபின் இணைவர்.

துறை அமை நல் யாழ்த் துணைமையோர்- கந்தர்வர்கள்.

இறையனார் அகப்பொருளுரை நேரடியாக கந்தர்வர்கள் என்கிறது.

அன்பின் ஐந்திணைக் களவென்பது படுவது
அந்தணர் அருமறை மன்றல் எட்டனுள்
கந்தர்வ வழக்கம் எனமனார் புலவர்- இறையனார் அகப்பொருளுரை

பிரிவுகள்:பார்ப்பான் திருக்குறள் அந்தணன் சங்க இலக்கியம் அந்தணர்கள் வேதம் மறைமொழி
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
செப்ரெம்பர் 8, 2011ankaraikrishnanபின்னூட்டமொன்றை இடுக
குறள் 560:
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின்.

மு.வ உரை:
நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும், அந்தணரும் அறநூல்களை மறப்பர்.

சாலமன் பாப்பையா உரை:
காவல் செய்யவேண்டிய ஆட்சியாளர் மக்களைக் காவாத, போனால், அறனற்ற அவர் நாட்டில் பால் வளம் குறையும். ஞானியர் நூல்களை மறந்துவிடுவர்.

Translation:
Where guardian guardeth not, udder of kine grows dry, And Brahmans’ sacred lore will all forgotten lie.

Explanation:
If the guardian (of the country) neglects to guard it, the produce of the cows will fail, and the men of six duties viz., the Brahmins will forget the vedas.

பதிற்றுப்பத்து பிராமணர்கள் ஆறு தொழிலை உடையவர்கள்.

“ஓதல் வேட்டல் அவை பிறர்ச் செய்தல்

ஈதல் ஏற்றல் என்று ஆறு புரிந்தொழுகும்

அறம் புரி அந்தணர்” – 24)

கேள்வி கேட்டுப் படிவம் ஒடியாது

வேள்வி வேட்டனை உயர்ந்தோர் உவப்பச் பாட்டு – 74

ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு

இரவின் இளிவந்த தில்.

மு.வ உரை: பசுவிற்கு நீர் வேண்டும் என்று அறம் நோக்கி இரந்து கேட்டாலும், இர த்தலை

விட நாவிற்கு இழிவானது மற்றொன்று இல்லை.

“பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, ‘பசுக்களும், பசுவின் இயல்பை ஒத்த அந்தணரும், பெண்களும், நோயுடையவர்களும், முன்னோர்களுக்கு விருப்பத்துடன் ஈமச் செயல்களைச் செய்வதற்குரிய பொன்னையொத்த ஆண் மக்களைப் பெறாதவர்களும் பாதுகாப்பான இடத்துக்குச் செல்லுங்கள்! நாங்கள் எங்கள் அம்புகளை விரைவாகச் செலுத்தப்போகிறோம்’ என்று அறநெறியோடு அறிவுறுத்திப் பிறகே போர் செய்யத் தொடங்கும் வலிமையும் மறமும் கொண்டவன். கொல்லுகின்ற யானை மீது எடுக்கப்பட்ட கொடிகள் ஆகாயத்தை மறைக்கும்; அத்தகைய சிறப்புடையவன் எம்முடைய வேந்தன். புலவர் நெட்டிமையார்,முதுகுடுமியின் அறப்போர் நெறியாக யார்யார் காப்பாற்றப்படுவதற்கு உரியவர் எனப் பட்டியலிடுதல்நோக்கத் தக்கது.

ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்

பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்

தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன்

இறுக்கும் பொன்போற் புதல்வர்ப்

பெறாஅ தீரும் எம்அம்பு கடிவிடுதும்

நும்மரண் சேர்மின்…… என்ற அடிகள் அக்காலத் தமிழர் போர் நெறி காட்டுவன.

இப்புறநானுறு பாடல்படியான மரபில் தானே வள்ளுவர் இகுறளும் கூறுகின்றது.

பசுக்கள் தரும் பால்- அதன் உப பொருட்கள் தயிர், வெண்ணெய் நெய்- இவை அனைத்துமே கர்ப்பிணி பெண்கட்கும், சிறு குழந்தைகட்கும் அவசியம். வேள்விகளிலும் அவசியம். நாட்டின் பலத்திற்கு வருங்காலத் தலைமுறையும் கடவுள் ஆசியும் அவசியம் என்பதையே கூறியுள்ளார். திருவள்ளுவர் சங்ககாலத் தமிழர் மரபுப்படிதான் திருக்குறளைத் தந்துள்ளார். அதில் அந்தணர் என்பது தொழில் வழியில் அந்தணர்களைத் தான்.

பிரிவுகள்:பார்ப்பான் திருக்குறள் அந்தணன் சங்க இலக்கியம் அந்தணர்கள் வேதம் மறைமொழி குறிச்சொற்கள்:ஆபயன் குன்றும், பார்ப்பான் திருக்குறள் அந்தணன் சங்க இலக்கியம் அந்தணர்கள் வேதம் மறைமொழி.

https://ankaraikrishnan.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85/

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply