அபிவிருத்தி என்னும் போர்வையில் தீர்வை அரசு மூடி மறைக்கமுடியாது

அபிவிருத்தி என்னும் போர்வையில் தீர்வை அரசு மூடி மறைக்கமுடியாது

ஜனாதிபதி செயலணிக் கூட்டத்தில் சம்பந்தன் காட்டம்

கொழும்பு, ஓக்ஸ்ட் 28

“அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழருக்கான தீர்வு விடயத்தை அரசு மூடி மறைக்க முடியாது. அபிவிருத்திக்குக் கூட்டமைப்பு வழங்கும் ஆதரவு தீர்வுக்கான வாசலைத் திறப்பதற்கானதேயன்றி அதில் வேறெந்த நிகழ்ச்சி நிரலும் கிடையாது.”

– இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நேற்றுக் காட்டமாகக் கருத்து வெளியிட்டார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன்.

“தமிழ் மக்களின் பலத்த ஆதரவுடன் கொண்டு வரப்பட்ட இந்த அரசு, வடக்கு மாகாண எல்லைப் பகுதியில் மகாவலித் திட்டத்தின் “எல்’ வலயப் அபிவிருத்தி வடக்கு – கிழக்கு அபிவிருத்தி
தொடர்பான ஜனாதிபதி செயலலணியின் இரண்டாவது கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை இடம் பெற்றது.

இதன்போதே கூட்டமைப்பின் தலைவர் இவ்வாறு காட்டமாகக் கருத்து வெளியிட்டார்.

அவர் தனது உரையில் மேலும் தெரிவித்தவை வருமாறு,

தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுதான் எப்போதும் முதன்மை யானது. அதில் கூட்டமைப்புக்கு மாற்றுக் கருத்துக் கிடையாது. தீர்வை எட்டுவதன் மூலமே நல்லிணக்கத்தையும் நிரந்தர அமை
தியையும் ஏற்படுத்த முடியும். ஆயினும் நாங்கள் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்லர். விவசாயம், கல்வி, சுகாதாரம், மீன்பிடி, வேலைவாய்ப்பு, கட்டுமாணம், பொருளாதார அபிவிருத்தி
ஆகிய விடயங்களில் எமது மக்கள் புறக்கணிப்படும் சூழலே தொடர்ந்து காணப்படுகின்றது. அபிவிருத்தி என்ற பெயரால் அரசு எமது பிரச்சினைக்கான தீர்வைப் பின் தள்ளிக் கொண்டு
செல்ல முடியாது. தீர்வுக்காக அரசு இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.

நாங்கள் அபிவிருத்திக்காக அரசுக்கு வழங்கும் ஆதரவானது இனப் பிரச்சினைத் தீர்வுக்கான வாசலைத் திறப்பதேயன்றி வேறேந்த நிகழ்ச்சி நிரலும் அதில் கிடையாது. ஜனாதிபதியும், அரசும் இதனை நன்கு புரிந்து கொண்டு செயற்படவேண்டும்.

நான் இங்கு சில விடயங்களைக் கட்டாயம் குறிப்பிட்டாக வேண்டும். இதனையிட்டு யாரும் குறை நினைக்க வேண்டாம். முஸ்லிம் அமைச்சர்கள் முஸ்லிம்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்புக்களை வழங்கியுள்ளனர். அவர்கள் தமிழர்களுக்கு வேலை வாய்ப்புக் கொடுக்கவில்லை. நல்லாட்சி அரசும் 2 வீதமான தமிழர்களுக்கு கூட வேலை வாய்ப்புக் கொடுக்க
வில்லை.

மகாவலி அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். முல்லைத்தீவு தமிழர்களின் சொந்த மண். அது எமது வரலாற்றுப் பூமி. மகாவலி அபிவிருத்தி என்ற பெயரில் அங்கு சிங்களக் குடியேற்றங்கள் அமைக்கப்படுவதையோ, காணிகள் சுவீகரிக்கப்படுவதையோ கூட்டமைப்பு ஒரு போதும் அனுமதிக்காது. இந்த நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவதற்கு ஜனாதிபதியும் அரசும் காத்திரமான நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ள வேண்டும். அத்துடன் தமிழரின் பூர்வீக நிலமான கேப்பாபிலவுக் காணிகளை விடுவிக்கக் கோரி 500 நாள்களுக்கு மேலாக மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள். இதனை அரசு கண்டு கொள்ளாமல் இருந்து வருகின்றது.

மக்கள் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு வழங்காமல் அரசினால் நல்லிணக்கத்தை ஒரு போதும் உருவாக்கி விட முடியாது. எனவே, அபிவிருத்திக்கு நாங்கள் வழங்கும் ஆதரவு மூலம் அரசு தமிழருக்கான தீர்வு விடயத்தைத் துரிதப்படுத்த வேண்டும்  என்றார். (காலைக்கதிர் 28-08-2018)



About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply