சிங்களக் குடியேற்றங்களால் விழுங்கப்பட்டு வரும் தமிழீழ மண் (1)

சிங்களக் குடியேற்றங்களால் விழுங்கப்பட்டு வரும் தமிழீழ மண்
நக்கீரன்
(1)HTML clipboard


(கடந்த  யூலை 4 ஆம் நாள் கனடா ஸ்ரீ அய்யப்பன் கோயில் மண்டபத்தில் தமிழ்த் தேசீயக் கூட்டமைப்பு (கனடா) மற்றும் கனடியத் தமிழ் அரசியல் செயல் அவையும் இணைந்து நடத்திய சமகால அரசியல் பற்றிய கருத்தரங்கில் திரு சிவஞானம் சிறீதாரன், நாஉ., திரு சீனித்தம்பி யோகேஸ்வரன், நாஉ.,  திரு சேரன் உருத்திரமூர்த்தி, நக்கீரன் தங்கவேலு ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
அங்கு உரையாற்றிய ததேகூ (கனடா) அமைப்பின் தலைவர் திரு தங்கவேலு நக்கீரன் பேசுகையில் “இலங்கை சுதந்திரம் பெறுமுன்னரும் பெற்ற கையோடும் அப்போது பிரதமராக இருந்த டி.எஸ். சேனநாயக்கா பாரிய சிங்களக் குடியேற்றத் திட்டங்களை உருவாக்கி காணியற்ற விவசாயிகளுக்குக் காணிகொடுத்தல் என்ற போர்வையில் தென்னிலங்கையில் வாழ்ந்த சிங்களக் குடும்பங்களை ஆயிரக்கணக்கில் கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்டுக் குடியேற்றினார். பின்னர் வந்த சிங்கள அரசுகள் கிழக்கில் மட்டுமல்ல வடக்கிலும் சிங்களக் குடியேற்றத்தை விரிவு படுத்தினர். கல் ஓயா (பட்டிப்பளை) அல்லை – கந்தளாய், வெலி ஓயா (மணல் ஆறு) போன்ற சிங்களக் குடியேற்றத்திட்டங்கள் வட – கிழக்குக் குடிப்பரம்பலில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன” எனக் குறிப்பிட்டார். அவர் பேசியதையும் பேச நினைத்ததையும் கீழே படிக்கவும்.)

சிங்களக் குடியேற்றம் மூலம் தமிழர்களது மண்ணைப் பறிப்பது என்பது இன்று நேற்றுத் தொடக்கப்பட்டதல்ல. இலங்கை சுதந்திரம் பெறு முன்னரும் பெற்ற கையோடும் அதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டன. இன்று கிழக்கை விழுங்கிய சிங்களக் குடியேற்றம் வடக்கை விழுங்கத் தொடங்கியுள்ளது. வடக்கில் வெள்ளம் கழுத்தளவுக்கு ஏறிவிட்ட காரணத்தால் நிலப்பறிப்புப் பற்றிப் பேசத் தொடங்கியுள்ளோம். அறுபது ஆண்டுகளுக்கு மேலாக நடந்துவரும் சிங்களக் குடியேற்றம் பற்றிப் பேச நீண்ட நேரம் தேவை. கிழக்கிலும் வடக்கிலும் நடந்தேறிய 3 முக்கிய சிங்களக் குடியேற்றத் திட்டங்கள் பற்றி மட்டும் சுருக்கமாகப் பேச விரும்புகிறேன்.

பொதுவாகக் குடியேற்றம் என்பது ஒரு நாட்டுமக்கள் இன்னொரு புதிய நாட்டிற்குக் குடியேறுவதையே குறிக்கும். ஆனால் இலங்கையைப் பொறுத்த மட்டில் அந்தச் சொல் அரசினால், அரச செலவில் குறித்த ஒரு இனத்தவர் (தமிழர்) செறிந்து வாழும் பகுதியில் வேறு இனத்தவரை (சிங்களவரை) பெருமளவில் கொண்டுவந்து குடியிருக்க வைப்பதையே குறிக்கிறது.

இப்படியான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தினால் தமிழ்மக்கள் கிழக்கு மாகாணத்தில் ஒரு குறுகிய காலத்தில் சிறுபான்மை இனமாக மாற்றப்பட்டு விட்டனர். இப்போது வடக்கிலும் சிங்களக் குடியேற்றங்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன. கிழக்கில் பெரும்பாலும் முடிக்குரிய தரிசு நிலத்திலேயே குடியேற்றம் தொடக்கப்பட்டது. ஆனால் இதற்கு எதிர்மாறாக வடக்கில் பெரும்பாலும் தமிழர்களுக்குச் சொந்தமான காணிகளில் சிங்களவர்கள் குடியேற்றப்படுகிறார்கள். இதனால் தமிழ் மக்களுடைய மொழி, பண்பாடு, சமூக - பொருண்மிய கட்டுமானம் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டு வருகிறது. தமிழினத்தின் தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை கேள்விக் குறியாகி வருகிறது.
1931 ஆம் ஆண்டு நடந்த முதற் சட்டசபைத் தேர்தலின் பின்னர் ஆட்சி அதிகாரம் பெரும்பான்மைச் சிங்களவர்கள் கைக்குப் போனது. அவர்களே பெரும்பான்மை அமைச்சர்களாகவும் இருந்தனர். இவர்களுள் டி.எஸ். சேனநாயக்கா (20-10-1884 - 22-03-1952) முக்கியமானவர். திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தின் சூத்திரதாரி இவரே ஆவார். சட்டசபை அமைச்சர் வாரியத்தில் (Board of Ministers)  டி.எஸ். சேனநாயக்கா விவசாய மற்றும் காணி அமைச்சராக இருந்தார்.   பின்னர் 1948 இல் அவர் பிரதமராகப் பதவி ஏற்றபோது காணி விவசாய அமைச்சராகத் தனது மகன் டட்லி சேனநாயக்காவை நியமித்தார்.Image result for Galo oya Sri Lanka
சிங்களக் குடியேற்றத் திட்டங்கள் தென்னிலங்கையில் ஈரலிப்பு (நன்செய் – Wet Zone)  வலயத்தில் வாழ்ந்த காணியில்லாத விவசாயிகளது சிக்கலைத் தீர்த்து வைக்க உருவாக்கப்பட்டது என்று  சொல்லப்பட்டது. இப்படி மேலுக்குச் சொல்லப்பட்டாலும் அந்தப் போர்வையில் வறண்ட பிரதேசமான (புன்செய் –   Dry Zone) கிழக்கில் சிங்களவர்களைப் பெருமளவில் குடியேற்றுவதே டி.எஸ். சேனநாயக்காவின் உள்நோக்கமாக இருந்தது. அதனை ஒப்பேற்ற மிகவும்  தந்திரமாக அவர் காய்களை நகர்த்தினார்.
பிரித்தானிய ஆளுநர் சேர் கியூ கிளிப்போட் (British Governor Sir Hugh Clifford) அவர்கள் தான் 1927 இல் ஈரலிப்பு வலயத்தில் வாழ்ந்த காணியில்லாத மக்களை வறண்ட வலயத்தில் குடியேற்றலாம் என்ற யோசனையை முதலில் முன்வைத்தவர். ஆனால் காணிப் பங்கீடு என்பது வேறுபட்ட கமூகங்களுக்கு இடையே எளிதில் உணர்ச்சியைத் தூண்டிவிடக் கூடிய ஒரு பொருள் என்பதால் அதுபற்றிக் கவனமாக இருக்க வேண்டும் என்று அவர் எச்சரிக்கை செய்தார். சேர் கியூ கிளிப்போட்டின் யோசனை 1927 இல் சட்டசபையால் உருவாக்கப்பட்ட காணி ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆணையத்தின் அறிக்கை 1932 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டது. அந்த ஆணையம் அபிவிருத்தி செய்யப்படாத பெருமளவு காணிகள் குருநாக்கல், அனுராதபுரம், திருகோணமலை, மன்னார், முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணத்தில் இருப்பதாக அடையாளம் காட்டியது.
1933 ஆம் ஆண்டு விவசாயம் மற்றும் காணி அமைச்சராக இருந்த டி.எஸ். சேனநாயக்கா காணி மேம்பாட்டுச் சட்டம் ஒன்றைக் கொண்டுவந்தார். அந்தச் சட்டம் உணவு உற்பத்தியைப்  பெருக்கவும் அரசின் செலவில் புதிய குடியேற்றத் திட்டங்களைத் தயாரிக்கவும் பாழடைந்த நீர்ப்பாசனக் குளங்களைத் திருத்தவும் வழி வகுத்தது. ஈரலிப்பு வலயத்தில்  10,000 – 15,000  ஏக்கருக்கும் இடையிலான போதிய நிலம் இருந்தும் அரசியல் நோக்கம் காரணமாக குடியேற்றத்துக்கு வறண்ட வலய நிலமே தேர்ந்தெடுக்கப்பட்டது. சுதந்திரத்துக்கு முன் புத்தள மாவட்டமும் அனுராதபுர மாவட்டத்தின் எல்லைப் புறங்களுமே குடியேற்றத் திட்டத்தில் அடங்கின.
முதலில் மின்னேரியாவில் சிங்கள விவசாயக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டன.  அதனைத் தொடர்ந்து வட மாகாணம் கிளிநொச்சியில் விவசாயக் குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டன. சிங்களவர்கள் பொலநறுவை மற்றும் அனுராதபுரத்தில் குடியமர்த்தப்பட்டார்கள். சிங்களவர்கள், சிங்களப் பெரும்பான்மை இடங்களிலும் தமிழர்,  தமிழர் பெரும்பான்மை இடங்களிலும் குடியமர்த்தப்பட்டார்கள். இந்தக் குடியமர்வுகள் நியாயமாகவும் நீதியாகவும் காணப்பட்டது. இதனால் இந்தக் குடியமர்வுகளைச் சிங்களவர் போல் தமிழர்களும் வரவேற்றார்கள். ஒவ்வொரு குடும்பத்துக்கும் 8 ஏக்கர் நிலமும் பணமும் கொடுக்கப்பட்டன.
ஆனால் 1949 ஆம் ஆண்டில் குடியமர்வுக் கோட்பாட்டில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டது. அந்த ஆண்டு பெப்ரவரி மாதம் டி.எஸ். சேனநாயக்கா அவரது நிரந்தரச் செயலாளராக இருந்த சேர் கந்தையா வைத்தியநாதன், நீர்ப்பாசன திணைக்களத்தின் இயக்குநராக இருந்த ரி. அழகரத்தினம் மற்றும் நில அளவையாளர் நாயகம் கலாநிதி எஸ். புரோகியர் (Surveyor General Dr. S. Brohier) ஆகியோரை அழைத்துப் பட்டிப்பளை ஆற்றை மறித்து அதில் ஒரு அணை கட்டுவதற்கான தனது யோசனையை முன்வைத்தார்.  இந்த நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் நிலமில்லாத தமிழ் விவசாயக் குடும்பங்கள் குடியமர்த்தப்படுவர் என்றும் எஞ்சிய நிலத்தில் நிலமில்லாத சிங்கள விவசாயிகள் குடியமர்த்தப்படுவர் எனவும்  விளக்கினார். இந்தத் திட்டம் பற்றி ஓரு சாத்திய அறிக்கையை (feasibility report)  தயாரிக்குமாறு டி.எஸ் சேனநாயக்கா ரி. அழகரத்தினத்தைக் கேட்டுக் கொண்டார்.
பிற்காலத்தில் அழகரத்தினம் வீரகேசரிக்குக் கொடுத்த ஒரு நேர்காணலில் இந்தத் திட்டம் பற்றித் தானும் சேர் கந்தையா வைத்தியநாதனும் மிகவும் ஆர்வம் அடைந்ததாகவும் பிரதமர் சேனநாயக்கா அந்தத் திட்டத்தை முன்மொழிந்த போது "தமிழர் நிலங்களை அபகரிப்பதே அவரது உண்மையான நோக்கம் என்பதை நாங்கள் கனவிலும் எதிர்பார்க்கவில்லை" எனக் கூறியிருந்தார்.
திரு அழகரத்தினம் மற்றும் அவரது திணைக்களப் பொறியாளர்கள் முஸ்லிம் ஊரான சம்மாந்துறைக்குப் பயணப் பட்டார்கள். அங்கிருந்து மாட்டு வண்டிகளில் பட்டிப்பளை ஆற்றோரமாகப்  பயணித்தார்கள். பட்டிப்பளை ஆறு பதுளையில் உள்ள மடுசீமா என்ற மலைத் தொடரில் உற்பத்தியாகிக் கீழே 85 கிமீ ஓடி வங்காள விரிகுடாவில் கலக்கிறது. பின்னர் அந்த ஆய்வுக் குழு பட்டிப்பளை ஊருக்குப் பயணித்தது. பட்டிப்பளை கிமு 3 ஆம் நூற்றாண்டில் இருந்து வரலாற்றில் இடம் பிடித்த ஒரு செழிப்பான ஊர் ஆகும்.  அங்கிருந்து இங்கினியாக்கலைக்குக் குழு  புறப்பட்டது. அங்கு அணை கட்டுவதற்கான ஒரு இடம் தெரிவு செய்யப்பட்டது. அந்த இடத்தில் நீர்ப்பாசன திட்டம் ஒன்றை உருவாக்குவதற்கான பரிந்துரையை திரு அழகரத்தினம் குழு பரிந்துரைத்தது.
மத்தியதர வகுப்பைச் சார்ந்த தமிழ் அரச ஊழியர்கள் ஆங்கிலேயர் காலத்தில் தங்கள் வேலைகளை அவர்களது மனங்கோணாமல் கெட்டித்தனமாகச் செய்கின்ற மனப்பான்மையை வளர்த்து வைத்திருந்தார்கள். அதனால் தமிழர்கள் கடுமையான உழைப்பாளிகள் என்ற பாராட்டை வெள்ளைக்கார உயர் அதிகாரிகளிடம் இருந்து  பெற்றார்கள். இந்த மனப்பான்மை இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னரும் நீடித்தது. அதனைச் சிங்கள ஆட்சியாளர்கள் முறையாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். சேர் கந்தையா வைத்தியநாதனுக்கு சேர் கொத்தலாவலையின் அமைச்சரவையில் வீடு மற்றும் சமூகநலன் அமைச்சர் பதவி (ஜி.ஜி. பொன்னம்பலத்தின் விலகலை அடுத்து) கொடுக்கப்பட்டது. இப்படி உயர்பதவி வகித்த தமிழ் ஊழியர்களிடம் இருந்து வேலை வாங்கும் போக்கு சனாதிபதி இரணசிங்க பிரேமதாசா காலம்வரை நீடித்தது.
திரு அழகரத்தினம் குழு செய்த பரிந்துரையின் அடிப்படையில் ஒரு சிறப்பு சபையை உருவாக்குவதற்கான சட்டத்தை சேனநாயக்கா நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றினார். பட்டிப்பளை என்ற அழகு தமிழ்ப் பெயர் கல் ஓயா எனச்  சிங்களத்தில் மாற்றப்பட்டது. இதன் பின்னர் திருகோணமலை மாவட்டத்தில் சிங்களக் குடியேற்றங்கள் முடுக்கிவிடப்பட்டன. இவற்றின் மூலம் பெருவாரியான சிங்களவர்கள் கிழக்கில் குடியேற்றப்பட்டார்கள். இதன் விளைவாக தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த கிழக்கு மாகாணத்தில் இன்று தமிழர்கள் சிறுபான்மை ஆக்கப்பட்டுவிட்டனர்.
ஓகஸ்து 23, 1949 இல்  கல்லோயா (பட்டிப்பளை) பள்ளத்தாக்குத் திட்டம் பிரதமர் டி.எஸ். சேனநாயக்காவால் தொடக்கப்பட்டது. அடுத்த ஆண்டு முடியுமுன்னர் நீர்த்தேக்கத்தின் பணிகள் நிறைவு பெற்றது. இந்த நீர்த்தேக்கம் சேனநாயக்கா சமுத்திரம் என்று பெயர் இடப்பெற்றது. இலங்கையில் மனித உழைப்பால் உருவாக்கப்பட்ட மிகப் பெரிய நீர்த்தேக்கம் இதவாகும்.

கல் ஓயா திட்டத்தின் கீழ் 120,000 ஏக்கர் நிலப் பரப்பில் 40 கொலனிகளில் 20,000 சிங்களவர்கள் முதற்கட்டமாகக் குடியேற்றப்பட்டனர். ஒவ்வொரு கொலனியிலும் 150 குடும்பங்கள் குடியமர்த்தப் பட்டன. ஒவ்வொரு குடும்பத்துக்கும் 3 ஏக்கர் காணி நெற்காணியும் 2 ஏக்கர் மேட்டுக் காணியும் ஆக மொத்தம் 5 ஏக்கர் காணி கொடுக்கப்பட்டது. எண்ணி 6 கொலனிகளே தமிழ்க் குடும்பங்களுக்குக் கொடுக்கப்பட்டது. இவர்களும் 1956 இல் இடம்பெற்ற இனக்கலவரத்தின் போது சிங்களவர்களால் விரட்டி அடிக்கப்பட்டனர். திரும்பக் குடியேறிய பலர் 1958 இல் இடம்பெற்ற இனக் கலவரத்தின் போது விரட்டி அடிக்கப்பட்டனர். எஞ்சியவர்கள் 1990 ஆம் ஆண்டு சிங்கள இராணுவத்தால் துரத்தப்பட்டனர். இன்று அந்த காணிகளில் சிங்களவர்கள் குடியேறியுள்ளனர். தமிழர்கள் இனச் சுத்திகரிப்புக்குப் பலியாகி விட்டனர்.

கல் ஓயா மேம்பாட்டுக் குடியேற்றத்திட்டம் தொடக்கப்பட்ட போது 50 விழுக்காடு உள்ளுர் மக்களுக்கும் மிகுதி 50 விழுக்காடு வெளியாருக்கும் என்ற  உறுதிமொழி கொடுக்கப்பட்டது. பின்னர் அது மீறப்பட்டது.

கல் ஓயா மேம்பாட்டு வாரியம் 67.2 மில்லியன் டொலர்களை இந்தத் திட்டத்திற்குச் செலவழித்தது. அன்றைய கால கட்டத்தில் இந்தத் தொகை மிகப் பெரியதாகும். அமெரிக்க பொறியாளர்கள் Morrison Knudsen of San Francisco   இந்தத்திட்டத்தை 1947 இல் கட்டி முடித்தார்கள்.

1949 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 இல் அது உத்தியோக அடிப்படையில் தொடக்கி வைக்கப்பட்டது.
1948 ஆம் ஆண்டு நாடாளுமன்றம் தூர்ந்து கிடந்த பல குளங்களை மீள்செப்பமிட உரூபா 700 மில்லியனை ஒதுக்கியது.

மீள்செப்பமிடத் தயாரித்த குளங்களின் பட்டியலில் பதவிக்குளம், கந்தளை, குறுலுவேவா, கந்தலாமா மற்றும் கதுல்லா குளங்களும் அடங்கும்.

1951 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 இல் கொண்டாடப்பட்ட சுதந்திர நாள் அன்று டி.எஸ். சேனநாயக்கா நாட்டு மக்களுக்கு விடுத்த உரை ஒலிபரப்பப்பட்டது.

D.S. Senanayake in his independence day anniversary broadcast on February 4, 1951, declared, “Colonization of land development activities are going at full speed and we are now able to bring more [Sinhala] colonists to lands that have been fully developed and provided with irrigation and other facilities than we have ever done before.”

அந்த உரையில் அவர் கூறியதாவது “காணி மேம்பாடு மற்றும் குடியேற்ற நடவடிக்கைகள் முழு வீச்சாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முன் எப்பொழுதும் யாரும் செய்யாதவாறு நீர்ப்பாசனம் மற்றும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு முழுதாக மேம்படுத்தப்பட்ட காணிகளில் இப்போது அதிகளவு சிங்களக் குடியேற்ற வாசிகளை கொண்டுபோக முடிகிறது.”

பெப்ரவரி 4, 1951  இல் நடந்த சுதந்திரநாள் விழாவில் துரித கெதியில் கிழக்கு மாகாணத்தில் உருவாக்கப்பட்ட நீர்ப்பாசனத் திட்டங்கள் அரசின் முக்கிய சாதனை என டி.எஸ்.சேனநாயக்கா நாட்டுமக்களுக்குத் தெரிவித்தார்.

கிழக்கில் திட்டமிட்ட அரச ஆதரவு சிங்களக் குடியேற்றத்திட்டங்கள் மூலம் தமிழர் நிலங்களை விழுங்குவதற்கு முன்னோடியாக இருந்த டி.எஸ். சேனநாயக்கா சிங்களவர்களாலும் சிங்கள அறிவுப்பிழைப்பாளர்களாலும் தேச பிதா எனப் போற்றப்படுகிறார். இதில் வேடிக்கை அல்லது வேதனை என்னவென்றால் தமிழ் அமைச்சர்களைத் தனது பக்கத்தில் அல்லது கக்கத்தில் வைத்துக் கொண்டே டி.எஸ். சேனநாயக்கா கிழக்கில் தனது சிங்களக் குடியேற்றத் திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றினார் என்பதுதான்.

தந்தை டி.எஸ். சேனநாயக்கா (04.02.1948 - 30.03.1952)  அவரது மகன் டட்லி சேனநாயக்கா அமைச்சரவையில் (30.03.1952 - 19.06.1952) ( 19.06.1952 - 11.10.1953) திருவாளர் ஜி.ஜி. பொன்னம்பலம் மீன்பிடி கைத்தொழில் அமைச்சராக (1948 -1953) வீற்றிருந்தார். அவரைப் போலவே திருவாளர்கள் க. சிற்றம்பலம் (26-09-1947 - 1952) அஞ்சல் தொலைத் தொடர்பு அமைச்சராகவும் செ. சுந்தரலிங்கம் (26-09-1947 - 10-12-1948) வாணிகம் மற்றும் வியாபார அமைச்சராகவும் கொலுவிருந்தனர்.

இந்தத் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களே வட - கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்துக்குத் தன்னாட்சி உரிமை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததற்கு முக்கிய காரணிகளில் ஒன்றாகும்.

இந்தத் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தின் விளைவாக 10-4-1961  இல் அம்பாரை மாவட்டம் என்ற புதிய மாவட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்டது.  அதற்கு முன்னர் 1959 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட தேர்தல் தொகுதி மறுநிருணய ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் 19-03-1960  இல் சிங்களவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு புதிய தொகுதி (அம்பாரை) உருவாக்கப்பட்டது. பின்னர் அதன் பெயர் டிகமடுல்ல என மாற்றம் செய்யப்பட்டது.

கல் ஓயா குடியேற்றத் திட்டம் தொடங்கி சரியாக 11 ஆண்டுகளில் ஒரு புதிய தேர்தல் தொகுதியும் பின்னர் ஒரு ஆண்டு கழித்து ஒரு புதிய மாவட்டமும் சிங்களவர்களுக்குப் பிரித்து எடுக்கப்பட்டது கவனிக்கத்தக்கது.

1961 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் நிலப்பரப்பு 4,431 ச.கிமீ (1,775 ச.மைல்) ஆகும்.  பிரிக்கப்படாத மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலப்பரப்பு  7,064  ச.கிமீ ஆகும்.  எனவே எஞ்சிய 2,633 ச.கிமீ (37.28 விழுக்காடு) நிலப்பரப்பே மட்டக்களப்பு மாவட்டத்துக்கு உரியதாகும்.  அம்பாறை மாவட்டத்தின் நிலப்பரப்பு விழுக்காடு 62.72 ஆகும்.

1911 ஆம் ஆண்டு குடி மதிப்பீட்டின் படி அம்பாரை மாவட்டம் முஸ்லிம் பெரும்பான்மை (36,843 - 55 விழுக்காடு) மாவட்டமாக இருந்தது. தமிழர் (24,733 - 37 விழுக்காடு) இரண்டாவதாகவும் சிங்களவர் (4,762 - 07 விழுக்காடு) மூன்றாவதாகவும் இருந்தனர். 1921 ஆம் ஆண்டு குடி மதிப்பீட்டின் படி முஸ்லிம்கள் 31,943, தமிழர் 25,203, சிங்களவர் 7,285 ஆக இருந்தனர். 1953 இல் முஸ்லிம் 37,901, தமிழர் 39,985, சிங்களவர் 26,459 ஆக இருந்தனர்.

1963 ஆம் ஆண்டில் முஸ்லிம்கள் 46.11  விழுக்காடாகவும், சிங்களவர்கள் 29.28  விழுக்காடாகவும், தமிழர் 23.85  விழுக்காடாகவும் காணப்பட்டனர். ஆனால் 2007 ஆம் ஆண்டு சிங்களவர்கள் 37.49  விழுக்காடாக  அதிகரித்து விட்டனர். அதேவேளை, தமிழர்கள் 18.34 விழுக்காடாக வீழ்ச்சியடைந்துள்ளனர். முஸ்லிம்கள் 43.99 விழுக்காடாகக் குறைந்துவிட்டனர்.  கீழ்க்கண்ட அட்டவணை அம்பாரை மாவட்டத்தின் குடிப்பரம்பலில் ஏற்பட்ட மாற்றத்தைக் காட்டுகிறது.

அம்பாரை மாவட்டம் குடிப்பரம்பல் 1963 – 2007

ஆண்டு

சிங்களவர்

தமிழர்முஸ்லிம்ஏனையோர்

மொத்தம்

No.

%No.%No.%No.%No.

%

1963

61,996

29.2849,18523.8597,62146.111,6180.76211,732

100

1971

82,280

30.1860,51922.85126,36546.351,6700.61272,605

100

1981

146,943

37.7877,82620.37161,56841.541,2220.31388,970

100

2001

236,583

39.90109,18818.53244,62041.251,8910.32592,997

100

2007 மதிப்பீடு

228,938

37.49111,94818.34268,63043.991,1450.19610,719

100

மூலம்: குடி மதிப்பீட்டுத்  திணைக்களம்  

திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் என்பது புற்று நோய் போன்றது. 
(2)

திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் என்பது புற்று நோய் போன்றது. நோயைத் தீர்க்க எடுத்த முயற்சி வெற்றி பெறவில்லை. சிறுபான்மை மக்கள் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்துக்கு எதிராக அவ்வப்போது குரல் எழுப்பலாம். அமைதியான வழியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தலாம். முழக்கங்களை முழங்கலாம். ஆனால் பெரும்பான்மை இனம் தான் நினைத்ததைத் தங்குதடையின்றி, கேட்டுக் கேள்வியின்றிச் செய்கிறது. கேட்டால் மக்களாட்சி முறைமையில் பெரும்பான்மை மக்களுக்கே ஆட்சி அதிகாரம் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. அந்த வாதம் ஒரு நாட்டில் ஒரே இன மக்கள் வாழ்ந்தால் பொருந்தி வரும். ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட இனம், மொழி, சமயம், பண்பாடு எனப் பல்லின மக்கள் வாழும் நாட்டில் அது பொருந்தி வராது. சிறுபான்மை இனத்துக்கு அரசியல் அமைப்பில் பாதுகாப்பு இல்லாவிட்டால் பெரும்பான்மை இனம் சிறுபான்மை இனத்தை அடக்கி ஆள வழிவகுத்துவிடும். அப்போது அது கொடுங்கோன்மை ஆட்சியாக மாறிவிடுகிறது. உண்மையான மக்களாட்சி முறைமையின் சிறப்பு அந்த ஆட்சியின் கீழ் சிறுபான்மை மக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதைப் பொறுத்தது என்கிறார் மகாத்மா காந்தி. அரசியல் பேச்சுச் சுதந்திரம், பேச்சுரிமை சுதந்திரமான ஊடகம், ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகள், முறைக்கு முறை தேர்தல் ஆகியவை மட்டுமே மக்களாட்சி முறைமையாகிவிடாது. அவை வெறும் வெளித்தோற்றங்கள். உள்ளடக்கம்தான் முக்கியம்.

1940  இல் இருந்து தமிழ் மக்களின் நாடாளுமன்ற மற்றும் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் முகமாக சிங்களக் குடியேற்றங்கள் தமிழ் மக்கள் வாழ்ந்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டன. மேலே செல்லுமுன் மண் பறிப்புப் தொடர்பான சில புள்ளி விபரங்களைப் பார்ப்போம். இந்தப் புள்ளி விபரங்கள் இந்தத் தொடரைப் படித்து விளங்கிக் கொள்வதற்குத் துணையாக இருக்கும்.

இலங்கையின் மொத்த நிலப்பரபு 65,610 ச.கிமீ (25,332 ச.மைல்) ஆகும். வடக்கு கிழக்கு மாகாணங்கள் இரண்டும் 01.10.1833 இல் கோல்புறூக் - கமரூன் சீர்திருத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட போது மொத்தம் 18,880 ச.கிமீ (7,289 ச.மைல்) நிலப்பரப்பினைக் கொண்டிருந்தன. அதாவது 29 விழுக்காடு நிலப்பரப்பு தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சொந்தமாக இருந்தது. இதில் வடக்கு மாகாணத்தின் நிலப்பரப்பு 8,884 (3,430 ச.மைல்) ஆகும்.  கிழக்கு மாகாணத்தின் மொத்த பரப்பளவு 9,996 ச.கிமீ (3860 ச.மைல்) ஆக இருந்தது. கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டம் 4431.4   ச.கிமீ (1,775 ச.மைல்) நிலப்பரப்பையும் மட்டக்களப்பு மாவட்டம் 2854 கிமீ (1,102 ச.மைல்) நிலப்பரப்பையும் திருமலை மாவட்டம் 2727  ச.கிமீ (1,053 ச.மைல்) நிலப்பரப்பையும் கொண்டிருந்தன. காலப்போக்கில் மாவட்டங்களின் எல்லகைள், பிரதேச சபைகளின் எல்லைகள் என்பன சிங்களப் பெரும்பான்மை சமூகத்தின் வசதிக்கும் தேவைக்கும் ஏற்றவாறு மாற்றி அமைக்கப்பட்டன.

1981 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் முறையாக இந்த ஆண்டுதான் (பெப்ரவரி 27 - மார்ச் 21, 2012)    நாடுதழுவிய  குடித்தொகை மதிப்பு நடந்துள்ளது. போர்ச் சூழல் காரணமாக இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களில் 18 மாவட்டங்களில் மட்டும் குடித்தொகை மதிப்பு மேற்கொள்ளப்பட்டது.  யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்கள் முற்றாகவும் மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்கள் ஓரளவும் குடித்தொகை மதிப்பு மேற்கொள்ளப்பட்டன. எனவே இந்த மாவட்டங்களின் 2012 இல் நடைபெற்ற குடிக்கணக்கின் இறுதி முடிவுகள் இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை. மொத்த மக்கள் தொகை பற்றிய தொடக்க (preliminary) முடிவுகள் வெளிவந்துள்ளன. அதன் அடிப்படையில் இலங்கையின் மொத்த குடித்தொகை மதிப்பு மற்றும் ஆண்டு வளர்ச்சி கீழேயுள்ள அட்டவணை 1 காட்டுகிறது.

அட்டவணை 1

இலங்கை குடித்தொகை மதிப்பு மற்றும் ஆண்டு வளர்ச்சி விழுக்காடு (1871 - 2012)
 ஆண்டு


 குடித் தொகை


 நிகர குடித் தொகை வளர்ச்சி
 
 ஆண்டு

 வளர்ச்சி விழுக்காடு
 எண்ணிக்கை
 விழுக்காடு
 
1871 மார்ச் 27
2,400,380
                -
   -
-
1881 பெப்ரவரி 17
2,759,738
                           359,358
       15.0
1.4
1891 பெப்ரவரி 26
3,007,789
248,051 
9.0
0.9
1901 மார்ச் 10
3,565,954
                          558,165
       18.6
1.7
1911  மார்ச் 10
4,106,350
                        540,396
      15.2
1.4
1921 மார்ச் 18
4,498,605
                       392,255
     9.6
0.9
1931 பெப்ரவரி 26
5,306,871
                    808,266
    18.0
                      1.7
1946 மார்ச் 16
6,657,389
                1,350,468
   25.4
                     1.5
1953 மார்ச்
8,097,895
                1,440,556
    21.6
                   2.8
1963 யூலை 08
 10,582,064
               2,484,169
   30.7
                  2.6
1971 ஒக்தோபர் 09
 12,689,897
              2,107,833
    19.9
                 2.2
1981 மார்ச் 17
 14,846,750
             2,156,853
    17.0
                1.7
2001 யூலை 17
 18,797,257
             3,950,507
     26.6
               1.2
2012 மார்ச் 20
 20,277,597
              1,480,340
     7.9
             0.7
 
கீழே உள்ள அட்டவணை இலங்கை இன அடிப்படையில் குடித்தொகை மதிப்பைக் காட்டுகிறது. மேலே குறிப்பிட்டது போல 1981 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நாடு தழுவிய குடித்தொகை எடுக்கப்படவில்லை. பெப்ரவரி - மார்ச் 2012 இல் எடுத்த குடித்தொகை மதிப்பு இன்னும் வெளிவரவில்லை. 1901 இல் 26.69  விழுக்காடாக இருந்த தமிழர் 1981 இல் 18.22 விழுக்காடாகத் தேய்ந்து போனது கவனிக்கத்தக்கது.  மொத்தம் 525,000 மலையகத் தமிழர் சிறீமா - சாத்திரி உடன்பாட்டின் கீழ் நாடு கடத்தப்பட்டது இந்த தேய்வுக்கு முக்கிய காரணமாகும். 2012  குடித்தொகை மதிப்பு வரும் போது புலப்பெயர்வு காரணமாக இலங்கைத் தமிழரது விழுக்காடு 2   அல்லது 3 விழுக்காடு குறைந்து காணப்படும் என எதிர்பார்க்கலாம்.

அட்டவணை 2
இலங்கை இனவாரி குடித்தொகை மதிப்பு (1881 - 1989)
 ஆண்டு
 சிங்களவர்
 இலங்கைத் தமிழர்
 மலையகத் தமிழர்
 முஸ்லிம்
 ஏனையோர்
 மொத்தம்
 தொகை
 %
 தொகை
 %
 தொகை
 %
 தொகை
 %
 தொகை
 %
 No.
  %
1881
1,846,600
66.91
687,200
24.90
 
184,500
6.69
41,400
1.50
2,759,700
100
1891 
2,041,200
67.86
723,900
24.07
 
197,200
6.56
45,500
1.51
3,007,800
100
1901 
2,330,800
65.36
951,700
26.69
 
228,000
6.39
55,500
1.56
3,566,000
100
1911 
2,715,500
66.13
528,000
12.86
531,000
12.93
233,900
5.70
98,000
2.39
4,106,400
100
1921 
3,016,200
67.05
517,300
11.50
602,700
13.40
251,900
5.60
110,600
2.46
4,498,600
100
1931  மதிப்பீடு
3,473,000
65.45
598,900
11.29
818,500
15.43
289,600
5.46
126,000
2.37
5,306,000
100
1946 
4,620,500
69.41
733,700
11.02
780,600
11.73
373,600
5.61
148,900
2.24
6,657,300
100
1953 
5,616,700
69.36
884,700
10.93
974,100
12.03
464,000
5.73
158,400
1.96
8,097,900
100
1963 
7,512,900
71.00
1,164,700
11.01
1,123,000
10.61
626,800
5.92
154,600
1.46
10,582,000
100
1971 
9,131,300
71.96
1,424,000
11.22
1,174,900
9.26
828,300
6.53
131,400
1.04
12,689,900
100
1981 
10,979,400
73.95
1,886,900
12.71
818,700
5.51
1,046,900
7.05
114,900
0.77
14,846,800
100
1989  மதிப்பீடு
12,437,000
73.92
2,124,000
12.62
873,000
5.19
1,249,000
7.42
142,000
0.84
16,825,000
100
2001 
  
வட கிழக்கு மாகாணங்களில் முடுக்கிவிடப்பட்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் தமிழ்மக்களை மூன்று தளங்களில் தாக்கத்தை ஏற்படுத்தின. தமிழர்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த அவர்களது தாயகத்தின் குடிப்பரம்பலின் வடிவமைப்பை, குறிப்பாக கிழக்கு மாகாணத்தில், மாற்றிவிட்டது. இரண்டாவதாக கமச் செய்கைக்கு உகந்த செழிப்பான மண் தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்டுவிட்டது. மூன்றாவது நாடாளுமன்றத்தில் தமிழர்களது பிரதிநித்துவம் குறைக்கப்பட்டுவிட்டது. நான்காவதாக வட தமிழீழத்துக்கும் தென் தமிழீழத்துக்கும் இடையில் உள்ள நிலப்பரப்பு துண்டிக்கப்பட்டு விட்டது.
அட்டவணை 3
இலங்கை நாடாளுமன்றத்தில் இனவாரியான பிரதிநித்துவம்
ஆண்டு
 1947
 1952
 1956
 1960
 1965
 1970
 1977
மொத்த இருக்கைகள்
 95 + 6
 95 + 6
 95 + 6
 151
151
 151
 168
சிங்களவர்
68
75
76
122
123
124
136
தமிழர்
20
12
18
18
18
18
19
முஸ்லிம்கள்
7
          8
7
11
10
9
12
சோல்பரி ஆணைக் குழு சிங்களவர்களுக்கு 58, இலங்கைத் தமிழர்களுக்கு 15, மலையகத் தமிழர்களுக்கு 14, முஸ்லிம்களுக்கு 8 என எதிர்பார்த்தது. ஆனால் தேர்தல் முடிவுகள் வேறுவிதமாக இருந்தது. டி.எஸ். சேனநாயக்கா ஆணைக்குழுவினரை ஏமாற்ற சிங்களப் பிரதிநித்துவத்தைக் குறைத்துக் காட்டினார்.

வட கிழக்கு மாகாணங்களில் உள்ள     8 மாவட்டங்களின் மொத்த குடித்தொகை மதிப்புப் புள்ளிவிபரத்தைக் கீழேயுள்ள அட்டவணை 4 எடுத்துக் காட்டுகிறது.

அட்டவணை 4
வட - கிழக்கு மாகாண குடித்தொகை (2012)

மாகாணம்

குடித் தொகை

விழுக்காடு

வட மாகாணம்

1,060,023

5.2

           யாழ்ப்பாணம்

582,995

2.9

மன்னார்

99,063

0.5

  வவுனியா

172,730

0.9

          முல்லைத்தீவு

92,228

0.5

   கிளிநொச்சி

112,872

0.6

கிழக்கு மாகாணம்

1,547,377

7.6

     மட்டக்களப்பு

525,186

2.6

அம்பாறை

645,825

3.2

              திருகோணமலை

376,366

1.9

வட மாகாணத்தில் உள்ள     5 மாவட்டங்களின் இனவாரியான குடித்தொகை மதிப்பைக் கீழேயுள்ள அடடவணை 5 எடுத்துக் காட்டுகிறது.

அட்டணை 5
வட மாகாண குடிப் பரம்பல் மற்றும் நிலப்பரப்பு (2011)

நிருவாக

 மாவட்டம்

மாவட்ட

செயலகப்

பிரிவுகள்

கிராம

சேவகப்

பிரிவுகள்

மொத்த நிலப்

பரப்பு

 

                                                      குடித்தொகை (2011 மதிப்பீடு)

மக்கள்

செறிவு

ச.கிமீ

இலங்கைத்

தமிழர்

முஸ்லிம்

சிங்களவர்

மலையகத் தமிழர்

மற்றவர்கள்

மொத்தம்

ச.கிமீ ச.மைல்       

யாழ்ப்பாணம்

15

4351,025396560,9051,8747463,550154 567,229553

கிளிநொச்சி

4

951,279494101,5857741381,19426 103,717

81

மன்னார்

5

1531,99677177,65316,1304551,13656 95,430

48

முல்லைத்தீவு

5

1272,617101059,5402,3903,96659634 66,526

25

வவுனியா

4

1021,967759134,70911,49116,5551,956141 164,852

84

மொத்தம்

33

912 8,884 3,430 934,392 32,659 21,860 8,432 411 997,754

112

விழுக்காடு

    93.653.272.200.850.03100 
கிழக்கு மாகாணத்தில் உள்ள     3 மாவட்டங்களின் இனவாரியான குடித்தொகை புள்ளிவிபரத்தை கீழேயுள்ள அட்டவணை 6 எடுத்துக் காட்டுகிறது. திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்களது எண்ணிக்கை 95,652 ஆகவும் முஸ்லிம்களது எண்ணிக்கை 151,692 ஆகவும் இருப்பது கவனிக்கத்தக்கது.   1981 இல் தமிழர்களின் எண்ணிக்கை 93,510 (36.4 விழுக்காடு) ஆகவும் முஸ்லிம்கள் 74,403 (29.0 விழுக்காடு) ஆகவும் சிங்களவர்கள் 86,341 (33.6 விழுக்காடு) ஆகவும் காணப்பட்டனர். இந்த மாவட்டங்களில் ஏற்பட்ட மாற்றத்தை அறிந்து கொள்ள இந்தப் புள்ளி விபரம் துணையாக இருக்கும். தென் தமிழீழத்தில் தமிழர்களது எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சி அடைந்ததற்கு சிங்களக் குடியேற்றமே முக்கிய காரணமாகும். அடுத்து புலப்பெயர்வும் காரணமாகும். தமிழ்நாடு ஏதிலி முகாம்களில் வாழும் 70,000 மக்களில் சரி பாதிக்கு மேல் திருகோணமலையைச் சேர்ந்தவர்கள் எனக் கருதப்படுகிறது.
அட்டவணை 6
கிழக்கு மாகாண குடிப் பரம்பல் மற்றும் நிலப்பரப்பு (2011)
நிருவாக

 மாவட்டம்
மாவட்ட 

செயலகப் 

பிரிவுகள்
கிராம 

சேவகப்

பிரிவுகள்
மொத்த நிலப்

பரப்பு

ச.கிமீ
நிலப்பரப்பு

ச.கிமீ
                                                      மக்கள் தொகை (2011 மதிப்பீடு)
மக்கள் 

செறிவு

ச.கிமீ
இலங்கைத்

தமிழர்
%
முஸ்லிம்
%
சிங்களவர்
%
மலையகத் தமிழர்
மற்றவர்கள்
மொத்தம்
அம்பாறை
15
435
 4,415
 4,256
111,948
18.33
268,630
 43.99
228,938
 37.49
58
1,145
 610,719
553
மட்டக்களப்பு
4
95
 2,854
 2,636
381,841
74.02
128,964
 25.00
2,397
 25.00
143
2,512
 515,857
81
திருகோணமலை
5
153
 2,727
 2,650
95,652
45.37
151,692
 25.35
84,766
 25.35
490
1,763
 334,363
48
மொத்தம்  
5
127
 9,996
 9,542
589,441
 40.35
549,286
 37.60
316,101
 21.64
691
5,420
 1,460,939
 150
முன்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் குடித்தொகை மற்றும் விழுக்காடு பற்றிய புள்ளி விபரத்தைக் கொடுத்திருந்தோம். இப்போது 1827 தொடக்கம் 1953 வரையிலான  குடிப்பரம்பல் விழுக்காட்டை அட்டவணை 7 இல் பார்க்கலாம். இந்தப் புள்ளிவிபரம் மாவட்ட குடிப்பரம்பலில் ஏற்பட்ட மாற்றத்தை அறிந்து கொள்ளத் துணையாக இருக்கும். அம்பாறை மாவட்டம் 1961 இல்தான் உருவாக்கப்பட்டது. எனவே அதற்கு முந்திய ஆண்டுகளின் குடித்தொகை விழுக்காடு திருத்திக் கணிக்கப்பட்டுள்ளது.
அட்டவணை 7
மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டம் குடிப்பரம்பல் 1827 – 2007
 ஆண்டு
மட்டக்களப்பு 
அம்பாறை
 சிங்களவர்
 தமிழர்
 முஸ்லிம்
 
 சிங்களவர்
 தமிழர்
 முஸ்லிம் 
        
1827
-
69.5
30.2
    
1901
5.2
55.0
37.3
    
1921
4.6
53.3
39.8
    
1946
5.8
50.3
42.2
    
1953
11.5
48.2
39.4
    
 1963 
3.4
72.2
23.4
 
29.4
23.8
46.5
 1971 
4.5
70.7
24.0
 
30.2
22.8
46.6
 1981 
3.2
72.0
24.0
 
37.6
19.9
41.5
 2001 
    
39.9
18.53
41.25
 2007 மதிப்பீடு 
    
37.49
18.34
43.99
மூலம்: குடித்தொகை மதிப்பு திணைக்களம்
மூலம்: குடித்தொகை மதிப்பு திணைக்களம்

கிழக்கு மாகாணத்தில் காலாகாலமாகக் காடுகளை வெட்டி வியர்வை சிந்திக் கமத் தொழிலில் ஈடுபட்டு வந்த தமிழ்ப் பேசும் மக்கள் அவர்களுக்குச் சொந்தமான மண்ணிலிருந்து கடந்த அரை நூற்றாண்டு காலமாக பல்வேறு கட்டங்களாக விரட்டப்பட்டு வருகின்றனர். (வளரும்)

வரலாறு காணாதவாறு சிங்கள மயமாக்கல், இராணுவ மயமாக்கல், பவுத்த மயமாக்கல் தங்குதடையின்றி இடம்பெற்று வருகிறது

நக்கீரன்
(3)
இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு ஆட்சிக்கு வந்த பச்சை - நீல நிறக்கட்சிகள் தமிழர் தாயகத்தில் சிங்களவர்களைக் குடியேற்றுவதில் தமக்குள் இருந்த வேற்றுமைகளை ஒருபக்கம் ஒதுக்கி வைத்துவிட்டு கண் துஞ்சாது, பசிநோக்காது, எவ்வெவ்வருமையும் பாராது கருமமே கண்ணாகி ஒற்றுமையோடு உழைத்து வந்திருக்கின்றன. என்னென்ன சிங்களக் குடியேற்றத் திட்டங்கள் எந்த ஆட்சியாளர்களது காலத்தில் இடம்பெற்றன என்ற பட்டியலைப் பார்த்தால் இந்த உண்மை விளங்கும்.
கல்ஓயா (பட்டிப்பளை)         - டி.எஸ். சேனநாயக்கா
கந்தளாய்                                  - டி.எஸ். சேனநாயக்கா
அல்லை                                    - டி.எஸ். சேனநாயக்கா - டட்லி சேனநாயக்கா
பதவியா (பாவற்குளம்)       - SWRD பண்டாரநாயக்கா
மொறவேவா (முதலிக்குளம்)                - சிறீமாவோ பண்டாரநாயக்கா
மகாடிவுலுவேவா (விளாத்திக்குளம்) - ஜே.ஆர். ஜெயவர்த்தனா - காமினி திசநாயக்கா
வெலி ஓயா (மணல் ஆறு)                      - ஜே.ஆர். ஜெயவர்த்தனா - ஆர். பிரேமதாச - காமினி திசநாயக்கா.
ஆனால் இன்று இவர்கள் எல்லோரையும் மகிந்த இராசபக்சே தூக்கிப் சாப்பிட்டுவிட்டார்! மே 18, 2009 க்குப் பின்னர் வடக்கிலும் கிழக்கிலும் வரலாறு காணாதவாறு சிங்கள மயமாக்கல், இராணுவ மயமாக்கல், பவுத்த மயமாக்கல் தங்குதடையின்றி இடம்பெற்று வருகிறது.  கரையுடைத்த காட்டாறு போல் சிங்களக் குடியேற்றம் அங்கிங்கின்னாதபடி எங்கும் பரவுகிறது. தமிழர்களது காணி பூமியில் இராணுவ முகாம்கள், இராணுவ குடியிருப்புக்கள், இராணுவ நினைவாலயங்கள், சுற்றுலா உல்லாச விடுதிகள், பவுத்த விகாரைகள், பவுத்த தூபிகள், புத்தர் சிலைகள் நிறுவப்பட்டு வருகின்றன.
முல்லைத்தீவு மாவட்டம் திருமுருகண்டி - கொக்காவில் பகுதிக்கும் இடைப்பட்ட கிழக்குப் பக்கமாகவுள்ள காட்டுப் பகுதியில்  4,000 ஏக்கர் நிலத்தில் “போர் வீரர் வீட்டுத் திட்டம்" (War Heroes Housing Scheme) என்ற பெயரில் 8,000 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. அரை ஏக்கர் காணியில் கட்டப்படும் இந்த வீடுகளில்  போரில் உறுப்புகளை இழந்த படையினர் குடியேற்றம் செய்யப்படுவர். இந்தக் குடியேற்றம் ஒட்டிசுட்டான் பிரதேச சபைப் பகுதிக்குள் வருகிறது. போர் வீரர் வீட்டுத்திட்டம் என்ற பெயரில் 50,000 வீடுகள் கட்டப்படும் என மகிந்த இராசபக்சே அறிவித்துள்ளார். மின்சாரம், குடிதண்ணீர், கழிவறை, வீதிகள், மருத்துவமனைகள், வங்கிகள், சந்தைகள், பள்ளிக்கூடங்கள் எனச் சகல வசதிகளையும் கொண்ட இந்த வீட்டுத் திட்டத்தில் ஒவ்வொரு வீடும் 15 இலட்ச உரூபாய் செலவில் கட்டப்படும்.

அதே சமயம் திருமுருகண்டியில் வாழ்ந்த 126 குடும்பங்கள் இன்று ஏதிலிகளக இடைத்தங்கல் முகாம்களில் தறப்பாள் கொட்டில்களில் வாழ்கிறார்கள்.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் 15 ஏக்கர் தனியார் காணிகள் இராணுவத்தால் வல்வளைப்புச் செய்யப்பட்டு அதில் பாரிய இராணுவ முகாம் உருவாக்கப்பட்டுள்ளது. மாங்குளத்தில் சிறீலங்கா இராணுவத்தின் மூன்றாவது பிரிவு இராணுவ தளம் ஒன்றை உருவாக்க 98 ஏக்கர் (39.67 கெக்டர்) நிலத்தை அபகரிக்கத் திட்டமிட்டுள்ளது.

முள்ளிவாய்க்காலில் சுமார் 2,200 ஏக்கர் நிலப்பரப்பு படையினரால் அவர்களது தேவைகளுக்காக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றது. இதனால் இடம்பெயர்ந்த மக்களை அவர்களது இடத்தில் குடியேற்றுவது சாத்தியமில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கிய துணுக்காயில் சிங்கள இராணுவம் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை அபகரித்துள்ளது. தேரங்கண்டலில் 350 ஏக்கர், அமைதிபுரத்தில் 200 ஏக்கர், கோட்டைகட்டியகுளத்தில் 150 ஏக்கர், ஆலங்குளத்தில் 112 ஏக்கர், பழைய முருகண்டியில் 50 ஏக்கர், தென்னியன்குளத்தில் 50 ஏக்கர் ஆகியவையே அபகரிக்கப்படும் நிலங்களாகும்.

எட்டாவது படையணி கைவேலியில் 800 ஏக்கர் காணியை அபகரித்துள்ளது. 68-3 பிரிகேட் வல்லிபுனத்தில் 800 ஏக்கர் காணியை அபகரித்துள்ளது.

தமிழ்மக்கள் அவர்களது சொந்தக் காணிகளில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டு அவர்களது காணிகளில் சிங்களவர்கள் குடியேற்றப்படுகிறார்கள். இதனால் வன்னிக் கடலோரப் பகுதியில் சிங்களக் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதே சமயம் ஆறாயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் தடுப்பு முகாம்களில் அவர்களது விருப்பத்துக்கு மாறாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். ஒரு சாரார் அவர்களது விருப்பத்துக்கு மாறாக கோம்பாவில் - திம்பிலி பகுதியில் குடியமர்த்தப் பட்டுள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லையோர கிராமங்களில் பொதுமக்களுக்குச் சொந்தமான 1500 ஏக்கர் வரையான விவசாய நிலம் படையினரால் திட்டமிடப்பட்ட வகையில் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளார்கள். அடுத்த இரு ஆண்டுகளில் எல்லையோரக் கிராமங்களிலிருந்து தமிழ் மக்கள் துரத்தப்படும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். மாவட்டத்தின் எல்லையோரக் கிராமங்களான கொக்கிளாய் கொக்குத்தொடுவாய் கருநாட்டுக்கேணி ஆகிய கிராமங்களுக்குச் சொந்தமான மேற்படி விவசாய நிலங்களில் கண்ணிவெடிகள் அகற்றப்படவில்லை என்ற காரணத்தை கூறி மக்கள் தமது சொந்த நிலங்களுக்குச் செல்வதற்கான அனுமதியைப் படையினர் தொடர்ந்தும் மறுத்து வருகின்றனர்.

முல்லைத்தீவு முகத்துவாரம் பகுதியில் உள்ள தமிழ் மக்களின் காணிகள் தொடர்ந்தும் தெற்கில் இருந்து வந்த சிங்களவர்களால் அபகரிக்கப்பட்டு வருகிறது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அண்மைக் காலத்தில் இப் பகுதியில் 240 ற்கும் மேற்பட்ட சிங்கள குடும்பங்கள் குடியேறியுள்ளன. இந்தக் காணிகள் அனைத்தும் பலதலைமுறைகளாகத் தமிழர்கள் வாழ்ந்த காணிகள். அதற்கு அரசினால் வழங்கப்பட்ட சட்ட ஆவணங்களும் தம்மிடம் உள்ளதாக தமிழ்மக்கள் தெரிவிக்கின்றனர்.

1983 ஆம் ஆண்டுக்கு முன்னர் சிங்களக் குடும்பங்களே தொழில் நிமித்தம் முகத்துவாரம் பகுதியில் தங்கியிருந்தன. எனினும் தற்போது நீர்கொழும்புப் பகுதியைச் சேர்ந்த 240 ற்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்கள் முகத்துவாரம் பகுதியில் உள்ள தமிழர்களின் காணிகளை அபகரித்து அடாத்தாகக் குடியமர்ந்துள்ளன.

அத்துடன் முகத்துவாரம் கடற்பகுதியையும் அவர்கள் முழுமையாகத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து அங்கு தொழில்களை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு நீர்கொழும்பு மற்றும் ஏனைய பகுதிகளிலும் சொந்தமான வீடுகள், காணிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தென்னிலங்கையில் இருந்து சிங்கவர்களை வடக்கில் குடியேற்றுவதற்கு வசதியாக சீனா பல நெடுஞ்சாலைகளை அமைத்துக் கொடுத்துள்ளது.

இது தொடர்பான மேலதிக தரவுகளை http://www.tamilnet.com/pic.html?path=/img/publish/2012/07/Vanni_landgrab_Karaithuraippattu.jpg&width=1764&height=2172&caption=Data%20from%20Karaithu'raipattu%20(Maritime-pattu)%20DS%20division%20[Click%20on%20the%20image%20to%20enlarge%20it] என்ற  இணையதள முகவரியில் படிக்கலாம்.

இந்தத் தீவிர சிங்கள மயமாக்கலுக்கு வீதிகள், கிராமங்கள், குளங்கள் தப்பவில்லை. வீதிகளுக்குச் சிங்களப் பெயர்கள் சூட்டப்படுகின்றன. பெயர்ப்பலகைகள் சிங்களத்தில் மட்டும் எழுதப்படுகிறது. தமிழிலும் எழுதும் போது பிழையாக எழுதப்படுகின்றன. எழுவாய் பயனிலை பொருத்தமின்மை, பால் வழுக்கள், ஒருமை பன்மை தவறுகள். கால வழு, செய்வினை செயற்பாட்டுவினை சிக்கல்கள், வேற்றுமை உருபு இடைச்சொல் குளறுபடிகள் என எண்ணில் அடங்காத எழுத்துப்பிழைகளோடும் கருத்துப்பிழைகளோடும் வட - கிழக்கிலும் ஏனைய மாகாணங்களிலும் அரச, அரச சாற்பற்ற பொது நிறுவனங்களினதும் சமூக அமைப்புக்களினதும் பெயர்ப் பலகைகள் காற்றில் ஆடிக்கொண்டிருக்கின்றன. சப்ரகமுவ மாகாண கட்டடத் தொகுதி என்பது சபரமுவா மாகாண கட்டிடந் தொகுதி என்று பல்லிளித்துக் கொண்டிருக்கிறது. கொழும்பு, கொழ்ம்பு, கொழுப்பு என கொலை செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டம் நெலுக்குளம் பகுதியில் 400 க்கும் அதிகமான சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளன. கொக்குளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி போன்ற கரையோரக் கிராமங்களில் நூற்றுக் கணக்கான சிங்கள மீனவர்கள் மீள்குடியேற்றம் என்ற போர்வையில் நிரந்தரமாகக் குடியேற்றப்பட்டுள்ளார்கள். இவர்களை மீன்பிடிப் படகுகளைப் பயன்படுத்தி பெருவாரியான மீன்களை அள்ளுகிறார்கள். இதனால் கரவலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்கும் தமிழ் மீனவக் குடும்பங்கள் தமது தொழிலைச் செய்ய முடியாது அல்லல்படுகின்றன.

ஆமையன்குளம், உத்தராயன்குளம், அடையக்கறுத்தாள், பூவாமடுக்கண்டல், எரிஞ்சகாடு, நாய்கடிச்சமுறிப்பு, தட்டாமலை சகலாத்து வெளி, சுவந்தா முறிப்பு ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்குச் சொந்தமான சுமார் 1500 ஏக்கர் வரையான விவசாய நிலம் கடந்த 1984 ஆம் ஆண்டு தொடக்கம் படையினர் கட்டுப்பாட்டிற்குள் இருந்து வருகின்றது. இந்நிலையில் போரின் பின்னர் மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் தமக்குச் சொந்தமான நிலங்களில் விவசாயத்தை மேற்கொள்ள முயற்சித்தபோதும் இதற்கான அனுமதியைப் படையினர் தொடர்ந்தும் மறுத்து வருகின்றனர்.
2007 - 2012 வரையிலான காலகட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தின் மக்கள் தொகை நாலில் ஒரு பங்கு குறைந்துவிட்டது. இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களில் முல்லைத்தீவு மாவட்டமே மிகக் குறைந்த மக்கள் (92, 228) வாழும் மாவட்டமாக மாறியுள்ளது! அடுத்த இடத்தில் மன்னார் மாவட்டம் (99,063) இருகிறது. இதே காலகட்டத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தின் குடித்தொகை 734,474 இல் இருந்து 583, 017 ஆகக் (20 விழுக்காடு) குறைந்துள்ளது.

இலங்கையிலே குடித்தொகை அடர்த்தி மிகக் குறைந்த 5 மாவட்டங்களில் 4 மாவட்டங்கள் வடக்கிலேயே உள்ளன. யாழ்ப்பாணம் தவிர்ந்த வடக்கின் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகியனவையே அவை ஆகும்.  2001 குடித்தொகை மதிப்பீட்டின்படி இலங்கையின் சராசரி குடித்தொகை அடர்த்தி ஒரு ச.கிமீ 300 பேர். குடித்தொகை அடர்த்தி மிகக் குறைந்த மன்னாரில் ஒரு ச.கிமீ இல் 50 பேர் வாழ்கின்றனர். கொழும்பில் ச.கிமீ க்கு 3,300 பேரும் யாழ்ப்பாணத்தில் ச.கிமீ க்கு 530 பேரும் வாழ்கின்றனர்.

2009 குடித்தொகை மதிப்பீட்டின்படி வடக்கு- கிழக்கு இலங்கையின் நிலப்பரப்பில் 29 விழுக்காடு (18,880 ச.கிமீ) ஆகும். இங்கு மொத்த குடித்தொகையில் 13 விழுக்காடு (27,26,000 பேர்) தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் வாழ்கின்றனர். வடக்கை மட்டும் எடுத்துக்கொண்டால் 13 விழுக்காடு (8,880 ச.கிமீ) நிலப்பரப்பில் 6 விழுக்காடு மக்கள் (11,87,000 பேர்) வாழ்கின்றனர்.

திருகோணமலை மாவட்டம் சம்பூர் கிராமம் சிங்களப் படையினால் 2007 ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்டது. அன்றுதொட்டு இன்றுவரை அந்தக் கிராமத்தில் வாழையடி வாழையாக வாழ்ந்த மக்கள் தெருவோரம் குடிசைகள் அமைத்து வாழ்கிறார்கள். சம்பூர் கிராமத்தில் 10,000 ஏக்கர் நிலம் உயர்பாதுகாப்பு வலயமாக இராணுவம் அறிவித்துள்ளது. அந்த மக்களை (7,000 பேர்) அவர்களது சொந்த வீடு வாசல்களில் மீள்குடியமர்த்த மகிந்த இராசபக்சே பிடிவாதமாக மறுத்துவருகிறார்.

பக்கத்தில் வாகரையில் உள்ள பட்டிப்பளை பிரிவில் 107 சிங்களக் குடும்பங்களை அரசு குடியேற்றியுள்ளது. இதனால் மீன்பிடித் தொழில் செய்து வந்த தமிழ்க் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

தென்தமிழீழத்தில் சிங்கள அரசும் மகிந்த இராசபக்சே குடும்பமும் நில அபகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. திருகோணமலையில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சீனன்குடா விமான நிலையம் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களின் எல்லைப் பகுதியான வாகரையில் விமான நிலையமொன்றை அமைப்பதற்காக சிறீலங்கா விமானப்படை காணிகளை அபகரித்துள்ளது.
சுமார் 21 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு இதற்காக கையகப்படுத்தப்பட்டு அப்பிரதேசத்தை சுற்றி முட்கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. வடக்குக் கிழக்கின் தொடர்பிற்கான உயிர்ப்பாதையெனக் கருதப்படும் வாகரையில் இவ் விமான நிலையத்தை அமைப்பதன் மூலம் அது தொடர்பிலான சிங்கள குடியேற்றங்களை அப்பகுதியில் மேலும் அமைக்கும் சாத்தியக்கூறுகள் அதிகரிக்கும்.

அறுகம்குடா, பாசிக்குடா, தென்னையடிக் குடா ஆகிய பிரதேசங்களை உல்லாசபுரிகளாக்கும் முயற்சியில் அதற்கான போக்குவரத்து மற்றும் வணிகத் தொடர்புகளை அதிகரிக்கவே இந்த முயற்சி செய்யப்படுகிறது.

பாசிக்குடாவில் தற்போது இயங்கிவரும் நாமல் இராசபக்சேயின் மூன்று நட்சத்திர உல்லாச விடுதி மேம்படுத்தப்படும் அதேவேளை, பசில் இராசபக்சேயின் உல்லாச விடுதியொன்றும் துரிதகதியில் இப் பகுதியில் கட்டப்பட்டு வருகிறது. இந்த உல்லாசப் பயணத்துறை வணிகத்தில் இராசபக்சேயின் குடும்பத்தினரும் அவர்களின் நெருங்கிய உறவினர்களும் ஈடுபடுவதாலேயே அரச இயந்திரம் அசுர வேகத்தில் இயங்குகிறது!

வெளிநாட்டவர்களைக் கவரும் வகையில் பல மாடிகளைக் கொண்ட இந்த உல்லாச விடுதிகளில் தென்னை ஓலைகளால் வேயப்பட்ட குடிசைகள் பலவும் அமைக்கப்பட்டு வருகின்றது. இப்போதே இப்பகுதிகள் சிங்களப் பயணிகளால் நிரம்பி வழிவது இங்கு குறிப்பிடத்தக்கது. முல்லைத்தீவில் அமையவிருக்கும் உல்லாசக் கடற்கரைக்கான தொடக்க வேலைகளைத் தொடங்கியுள்ள சிங்கள அரசு அதனை அண்டிய சுமார் 3 ச. கிமீ பரப்பளவிலான காணிகளை இராசபக்சே குடும்பத்துக்கு நெருக்கமான சிங்களவர்களுக்கு மிகவும் குறைந்த விலைக்கு விற்று வருகிறது.
உல்லாச விடுதிகள் கட்டுவோருக்கு 20 ஏக்கர் நிலப்பரப்பும் கடைகள் மற்றும் இதர வணிகங்களை அமைப்பவர்களுக்கு 1 முதல் 5  ஏக்கர் காணியும் வழங்கப்பட்டு வருகின்றன. குச்சவெளியில் 40 உல்லாசவிடுதிகள் கட்டியவர்களுக்கும் இதே சலுகைகள் வழங்கப்பட்டன. முல்லைத்தீவு உல்லாச நகருக்கு வெளிநாட்டு சுற்றுலாவிகள் தங்களின் படகுகளில் சென்று பார்த்துத் திரும்பும் வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேபோன்ற திட்டத்தை கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தின் எல்லைப் பகுதியான சாட்டியிலும் உல்லாசப் படகுகளின் துறையாக கிளிநொச்சி மன்னார் தொடுவாய்களிற்கு இடைப்பட்ட பூநகரி - கவுதாரிமுனையை அண்டிய கடற்பகுதியில் உருவாக்கும் முயற்சியும் இடம்பெறுகிறது.

கிழக்கு மாகாணத்தில் துரித மகாவலி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 159,000 ஏக்கர் அல்லது 44,312 காணித் துண்டுகள் அதன் கீழ் வருகிறது. கெட ஓயா திட்டத்தின் கீழ் மேலும் 100,000 சிங்களவர்கள் குடியமர்த்தப்பட இருக்கிறார்கள். இது நிறைவேறும் போது கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களது விழுக்காடு 55 ஆக அதிகரிக்கும். துரிதமகாவலி அபிவிருத்தி திட்டத்தின் ஊடாகவே வட - கிழக்கின் நீர் நிலவளங்கள் அபகரிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஒலுவில் மற்றும் தீகவாபியை மையப்படுத்தி நான்கு புதிய சிங்களப் பிரிவுகளை அம்பாறையில் உருவாக்கும் முயற்சிகள் நடைபெறுகிறது.
அம்பாறை மாவட்டத்தில் தொல்லியல் ஆணையாளர் 43 பவுத்த மத இடங்களை இனம் கண்டுள்ளார். 1940 ஆம் ஆண்டளவில் தீகவாபி சைத்தியம் (பவுத்த கோயில்) இருந்த இடத்திற்கு ஒரு பவுத்த தேரர் வந்து சேர்ந்தார். அவருக்குத் தானம் கொடுக்க பவுத்தர்கள் இல்லாததால் முஸ்லிம்கள் தானம் கொடுத்தார்கள். சைத்தியத்தைச் சுற்றித் தேரர் தென்னங்கன்றுகளை நட்டு வளர்த்தார்.  சடுதியாக 1960 இல் இந்த சைத்தியத்தைச் சுற்றியுள்ள 500 ஏக்கர் காணியை சிஙகள அரசு கையேற்க வேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டது. 1968 இல் சிங்கள அரசு அன்றைய நிலவளவு ஆணையர் இரணதுங்க தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழு 500 ஏக்கர் காணியை அரசு கையேற்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது. அதற்கு மேல் நிலம் கையேற்கப்படமாட்டாது என்ற உறுதிமொழி வழங்கப்பட்டது. ஆனால் பவுத்த சிங்களவர்கள் மேலும் 1,000 ஏக்கர் நெற்செய்கைக் காணி வேண்டும் என்று அடம்பிடித்ததை அடுத்து சிங்கள அரசு முஸ்லிம்களுக்குச் சொந்தமான நெற்காணியை எந்த அறிவித்தலுமின்றிக் கைப்பற்றியுள்ளது.ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டிய கதையாக பவுத்த தேரரின் வருகை மாறியது.

அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்களின் மொத்த எண்ணிக்கை 65 விழுக்காடாகும்.  இருந்தும் நிருவாகம் சிங்களத்தில் மட்டும் நடைபெறுகிறது. 2006 ஆம் ஆண்டு வட - கிழக்கு பிரிக்கப்பட்ட பின்னர் கிழக்கு மாகாணத்தின் நிருவாகம் சிங்களவர்கள் சார்பாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஆளுநர் ஓய்வு பெற்ற கடற்படைத் தளபதி மோகன் விஜயவிக்கிரம, ஆளுநரின் செயலாளர் கப்டின் பற்றிக் ஜெயசிங்கி, அம்பாறை அரசாங்க அதிபர் சுனில் கனங்காரா, கிழக்கு மாகாண சபைச் செயலாளர், மாகாண சபை பொதுச் சேவை செயலாளர் எல்லோரும் சிங்களவர் ஆவர். இவர்கள் எல்லோரும் படைத்துறையில் இருந்து ஓய்வு பெற்ற தளபதிகளாவர். இவர்கள் சிங்கள மயப்படுத்தல் நடவடிக்கைக்கு மிகவும் உறுதுணையாக இருந்து வருகிறார்கள் என்பதைச் சொல்லத் தேவையில்லை. (http://www.sangam.org/2008/01/Sinhalisation.php?uid=2700)

கிழக்கு மாகாணத்தின் மொத்த நிலப்பரப்பு 9,996 ச.கிமீ (3,860 ச.மைல்) ஆகும். அம்பாறை மாவட்டம் உருவாக்கப்படு முன்னர்   மட்டக்களப்பு மாவட்டத்தின் பரப்பளவு 7,269 ச.கிமீ (2,807 ச.மைல்) ஆகும். மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து அம்பாறை பிரிக்கப்பட்ட பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலப்பரப்பளவு 2,854  ச.கிமீ (1,102 ச.மைல்) ஆகவும் அம்பாறை மாவட்டப் பரப்பளவு 4,415 ச.கிமீ (1,705 ச.மைல்) பரப்பளவாகவும் காணப்பட்டது.  திருகோணமலை மாவட்டத்தின் நிலப்பரப்பு 2,727 ச.கிமீ (1,053 ச.மைல்) ஆகும். 1921 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட குடித்தொகை மதிப்பின் படி திருகோணமலையில் சிங்களவர் தொகை 3 விழுக்காடாகவும் மட்டக்களப்பில் சிங்களவர் தொகை 4.5 விழுக்காடாகவும் காணப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களது தொகை 4 விழுக்காடாக இருந்தது.

1981 ஆம் ஆண்டு குடிமதிப்பின் அடிப்படையில் அம்பாறையில் சிங்களவரது விழுக்காடு 37.78 ஆக இருந்த போது அவர்களுக்கு 660 ச.மைல் நிலப்பரப்புத்தான் ஒதுக்கப்பட வேண்டும். ஆனால் அவர்களுக்கு 1,340 ச.மைல் (76 விழுக்காடு) ஒதுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் 41.54 விழுக்காடு முஸ்லிம்களுக்கு வெறுமனே 264 ச.மைல் (14 விழுக்காடு) நிலப்பரப்பும் 20.37 விழுக்காடு தமிழர்களுக்கு எஞ்சிய 172 ச.மைல் (10 விழுக்காடு) நிலப்பரபும் ஒதுக்கப்பட்டுள்ளது. வேறு விதத்தில் சொல்வதென்றால் சிங்களவர்களுக்கு மேலதிகமாக 680 ச.மைல் நிலப்பரப்பும் முஸ்லிம்களுக்கு 464 ச.மைல் குறைவாகவும் தமிழர்களுக்கு 216 ச.மைல் குறைவாகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அம்பாறை தேர்தல் தொகுதி உருவாகிய காலம் (1960) தொட்டு ஒரு சிங்களவர் அந்த தொகுதியை பிரதிநித்துவப்படுத்தி வருகிறார். விகிதாசார தேர்தல் முறை 1978 இல் அறிமுகமான போது அப்போதிருந்த 160 தொகுதிகளுக்குப் பதில் 22 மாவட்ட தேர்தல் தொகுதிகள் உருவாக்கப்பட்டன.  1989 இல் விகிதாசார தேர்தல் முதல் முறை அறிமுகப்படுத்தப் பெற்றது. அந்தத் தேர்தலில் அம்பாறைக்கு ஒதுக்கப்பட்ட மொத்தம் 6 இருக்கையில் 4 சிங்களவர்கள்,  1 முஸ்லிம் 1 தமிழர் தெரிவு செய்யப்பட்டனர்.  1994 இல் நடந்த தேர்தலில் 4 சிங்களவர், 2 முஸ்லிம் தெரிவு செய்யப்பட்டனர். தமிழர் தெரிவு செய்யப்படவில்லை. 2000 இல் நடந்த தேர்தலில் 3 சிங்களவர், 3 முஸ்லிம் 1 தமிழர் தெரிவு செய்யப்பட்டனர். 2001 இல் நடந்த தேர்தலில் 2 சிங்களவர், 4 முஸ்லிம்கள் 1 தமிழர் தெரிவுசெய்யப்பட்டனர். மீண்டும் 2004 இல் நடந்த தேர்தலில் 2001 இல் நடந்த தேர்தலில் அதே எண்ணிக்கையில் தெரிவு செய்யப்பட்டனர். 2010 இல் நடந்த தேர்தலில் 3 சிங்களவர்,  3 முஸ்லிம்,  1 தமிழர் தெரிவு செய்யப்பட்டனர். அட்டவணை 1  ஒரே பார்வையில் அம்பாறைத் தொகுதியில் இனவாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் காட்டுகின்றது.

அட்டவணை 1
அம்பாறை மாவட்டம்
 இனவாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை (1989 - 2010)
ஆண்டு
சிங்களவர்
தமிழர்
முஸ்லிம்கள்
மொத்தம்
1989

4

11

6

1994

4

02

6

2000

3

13

7

2001

2

147
2004

2

14

7

2010314

7

20153137
திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் காரணமாக தமிழர் நிலத்தை மட்டுமல்ல நாடாளுமன்ற பிரதிநித்துவத்தையும் படிப்படியாக இழந்து வருகின்றனர்.
தமிழினம் சிங்கள - பவுத்தர்களது இனச் சுத்திகரிப்புக்கு உள்ளாகி வருகிறது. ஒரு இனம் தனது மொழியை இழந்தால் அதனை மீளப்பெறலாம். யூதர்கள் இஸ்ரேல் நாட்டில் இருந்து துரத்தப்பட்டதன் காரணமாக அவர்களது தாய்மொழியான ஹீபுரு மொழியைப் பேச மறந்து போனார்கள். அதற்குப் பதில் ஹீப்ரூ,  அராமிக், ஜெர்மன், ஸ்லோவாக்கிய போன்ற மொழிகளின் கலப்பு மொழியான யிடிஷ் (Yiddish) மொழியைப் பேசினர். சிலர் எந்த நாட்டில் குடிபுகுந்தார்களோ அந்த நாட்டு மொழியைப் பேசினர். இஸ்ரேல் உருவாகிய சொற்ப காலத்தில் ஹீப்புரூ மொழி உத்தியோக மொழியாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நிலம் அப்படியல்ல. நிலத்தை இழந்தால் அதனைத் திரும்பப் பெறுவது கடினம். ஓயாது, ஓழியாது போராடித்தான் பெற வேண்டும். ஒவ்வொரு தமிழனும் இந்த உண்மையை மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். (வளரும்)

தாயகக் கோட்பாட்டைச்  சிதைக்கும் சிங்களக் குடியேற்றங்கள்
நக்கீரன்
(4)

கடந்த அரை நூற்றாண்டு காலமாக திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்துக்கு எதிராக இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவை எடுத்த முயற்சிகள் வெற்றி அளிக்கவில்லை. அவை கரை புரண்டு ஓடிவரும் வெள்ளத்தை  வெறும் கையால் அணை போட்டுத் தடுத்த கதையாகி விட்டது.

வி.புலிகள் காலத்தில் சிங்கள அரசின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களின் வேகம் சற்றுத் தணிந்திருந்தது. வட - கிழக்கில் மூன்றில் இரண்டு பங்கு நிலப்பரப்பு வி.புலிகள் கட்டுப்பாட்டில் இருந்தது அதற்கான முக்கிய காரணம். ஆனால் வெலி ஓயா (மணல் ஆறு) குடியேற்றத்திட்டம் வி.புலிகள் காலத்தில் தான் நடந்தது. தியாகி திலீபன் செப்தெம்பர் 15, 1987  அன்று 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சாகும் வரை உண்ணா மறுப்புப் போராட்டத்தை மேற்கொண்டார். அதில் மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்பது முதல் கோரிக்கையாகும்.

நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல் ஈழப்போர் நான்கு முடிவுக்கு வந்த பின்னர் தமிழர்களது நிலம் நாளும் பொழுதும் சிங்கள இராணுவத்தினால் விழுங்கப்பட்டு வருகிறது. அது பற்றிய செய்திகள் நாள்தோறும் வந்த வண்ணம் உள்ளன.

இதை எழுதிக் கொண்டிருக்கும் போது வவுனியா வடக்கு (நெடுங்கேணி) பிரதேச செயலாளர் பிரிவின் பட்டிக்குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட தமிழர் மரபுவழிக்  கிராமமான அரியகுண்டான், அதாவெட்டுவெவ என்று சிங்களப் பெயரிடப்பட்டு வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அங்கு 65 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். கடந்த மூன்று மாதங்களுள் குடியேற்றப்பட்ட இச்சிங்கள குடியேற்ற வாசிகளுக்கு தற்காலிக, நிரந்தர வீட்டு வசதிகள் வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவின் நேரடிக்கண்காணிப்புக்குள் வேலைத்திட்டமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

போர்க்கால இடப்பெயர்வுகளுக்கு முன்னர் நெடுங்கேணியைச் சேர்ந்த பட்டிக்குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவின் கீழ்வரும் பட்டிக்குடியிருப்பு, பாவற்காய்க்குளம், விண்ணாங்குப்பிட்டி, அரியகுண்டான், தனிக்கல்லு, வண்ணான்கேணி, துவரங்குளம், வயல்குடியிருப்பு ஆகிய கிராமங்களில் 203 குடும்பங்களைச் சேர்ந்த 606 பேர் வசித்ததாக மாவட்ட திட்டமிடல் செயலகப் புள்ளிவிபரக் கையேடு தெரிவிக்கின்றது.

அரியகுண்டான் குளத்தின்கீழ் 175 ஏக்கர் பாசனக்காணியும் சூழவுள்ள ஏனைய பத்து சிறுகுளங்களின்கீழ் 500 ஏக்கர் வயற்காணிகளும் உள்ளன. கல்லடிக்குளத்தில் 300 ஏக்கரும் வண்ணாகரிச்சகுளத்தில் 250 ஏக்கரும் சேனப்பன்குளத்தில் 250 ஏக்கரும் தனிக்கல்லு மற்றும் எருக்கலம்புலவில் தலா 450 ஏக்கரும் தமிழ் மக்களுக்குச் சொந்தமாக இருந்ததுடன் டொலர்பாம், கென்பாம், சிலோன் தியேட்டர் பண்ணை உரிமையாளர்களுக்கு முறையே ஆயிரம் ஏக்கர் காணிகளும் பயிர்ச்செய்கைக்கு உட்படுத்தப்பட்டிருந்தன. இவற்றோடு இப்பிரதேசத்தில் 80 க்கும் மேற்பட்ட தமிழ்க் கிராமங்கள் காணப்படுவதுடன் இங்கு உறுதிகள் மூலம் உரிமையளிக்கப்பட்ட காணிநிலங்கள் உள்ளன. இங்குள்ள கிராமங்கள், ஆறுகள், மலைகள் என்பன வரலாற்றுக்காலம் முதல் தமிழ்ப் பெயருடன், தமிழர்கள் மரபுவழி  வாழ்ந்த பிரதேசமாகும்.

1983 ஆம் ஆண்டு யூலை இனக்கலவரத்தின் பின்னர் அன்றைய ஆட்சியாளர்களால் இப்பிரதேசம் மகாவலி 'எல்' வலயம் என  அரசிதழ் அறிவித்தலின் மூலம் ஆக்கிரமிக்கப்பட்டு தென்னிலங்கைச் சிங்களவர்கள் இங்குக் குடியேற்றப்பட்டனர்.  மரபுவழித்  தமிழர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். மணலாறு பிரதேசமும் விழுங்கப்பட்டது.

ஒவ்வொரு இனக்கலவரமும் ஓய்வுக்கு வரும்வேளையில், தமிழர் பிரதேசத்தில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தை மேற்கொள்வதையே சிங்கள அரசு தனது நிகழ்ச்சி நிரலாகக் கொண்டுள்ளது. அதனைப்போன்றே தற்போது போர் ஓய்ந்த பின்னர் நெடுங்கேணி,அரியகுண்டான், கொக்கைச்சாண்குளம் மற்றும் ஏனைய தமிழ்க் கிராமங்களிலும் அதே பாணியிலேயே சிங்களக் குடியேற்றங்கள் ஆட்சியாளர்களால் வெகு இலாவகமாக மேற்கொள்ளப்படுகின்றன.

நெடுங்கேணியின் பட்டிக்குடியிருப்பு, ஒலுமடு,கற்குளம் பிரிவுகளில் மீள்குடியேறியோருக்குச் சொந்தமான தனிக்கல்லு, இலுப்பைக்குளம் மற்றும் ஒதியமலை ஆகிய மூன்று குளங்களின்கீழ்வரும் 500 ஏக்கர் வயற்காணிகளின் உரிமையாளர்களை விரட்டிவிட்டு, வெலிஓயா சிங்களவர்களை இங்கு பயிர்ச்செய்கைக்கு அனுமதித்த வெலிஓயா உதவி அரசாங்க அதிபர் உட்பட இராணுவ அதிகாரி மற்றும் சிவில் அதிகாரி ஆகியோரால் தமிழ் விவசாயிகள் அழைக்கப்பட்டு, இந்தக் காணிகள் யாவும் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தினுள் உள்வாங்கப்பட உள்ளதாகவும் இவர்கள் அனைவரும் வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவிற்குள் வருமாறும் மறுப்பவர்களின் காணி அனுமதி ஆவணங்கள்  இரத்துச் செய்யப்பட்டு காணிகள் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தினுள் கொண்டுவரப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டனர்.

முல்லைத்தீவு மாவட்டம் நெலுக்குளம் பகுதியில் 400 க்கும் அதிகமான சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளன. கொக்குளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி போன்ற கரையோரக் கிராமங்களில் நூற்றுக் கணக்கான சிங்கள மீனவர்கள் மீள்குடியேற்றம் என்ற போர்வையில் நிரந்தரமாகக் குடியேற்றப்பட்டுள்ளார்கள். இந்தக் குடியேற்றத்தால் தமிழ் மீனவக் குடும்பங்கள் மீன்பிடித் தொழில் செய்து வாழமுடியாது இருக்கிறது.

பக்கத்தில் வாகரையில் உள்ள பட்டிப்பளை பிரிவில் 107 சிங்களக் குடும்பங்களை அரசு குடியேற்றியுள்ளது. இதனால் மீன்பிடித் தொழில் செய்து வந்த தமிழ்க் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

வாகரைப்பகுதியில் இரண்டு கரையோரத் தமிழ்க் கிராமங்கள் சிங்களக் கிராமங்களாக மற்றப்பட்டுள்ளன. மூதூர் மற்றம் சம்பூர் பகுதிகள் நிரந்தரமாக மக்களிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளன.

கூடவே திருகோணமலை நிலாவெளிப் பகுதிகளில் உள்ள தமிழரது வெற்று நிலங்கள் சிங்கள முதலீட்டாளர்களால் உல்லாச விடுதிகள் கட்டவென தொடக்கப்பட்டுள்ளன. அம்பாரை அறுகங்குடாப் பகுதிகளில் உள்ள காணிகள் சிங்கள முதலீட்டாளர்களினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

சிங்கள அரசுக்குத் தாம் தமிழர்களைப் போரில் வென்று விட்டதால் எதையும் செய்யலாம் எப்படியும் செய்யலாம் என்ற ஆதிக்க மனப்பான்மை வேரூன்றியுள்ளது. கன்னியாவில் உள்ள உலக வரலாற்றுப் புகழ் படைத்த ஏழு இயற்கை வெந்நீர் ஊற்றுக் கிணறுகளை இரவோடு இரவாக (ஒக்தோபர் 2010)  திருகோணமலை அரசாங்க அதிபர் தொல்லியல் திணைக்களத்தின் சார்பாகத் தனது கையில் எடுத்துக் கொண்டார். திருகோணமலை பட்டினமும் சூழலும்  (Trincomalee Town and Gravets) பிரதேச சபை மன்றத்தால புதிதாக எழுதி வைக்கப்பட்ட பழைய அறிவித்தல் பலகையில் தவறான வரலாறு எழுதப்பட்டுள்ளதாகக் காரணம் காட்டி திருகோணமலை அரச அதிபர் ஓய்வு பெற்ற இராணுவ தளபதி இரஞ்சித் டி சில்வா அவர்களால் வெந்நீர் ஊற்றுக் கிணறுகள் கைப்பற்றப்பட்டன. அதற்குப் பதில் ஆங்கிலம், சிங்களம் ஆகிய இரு மொழிகளில் மட்டுமே அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அங்கே வழங்கப்படும் நுழைவுச் சீட்டில் அந்தப் பிரதேசம் ஒரு பவுத்த மதப் பிரதேசம் என எழுதப்பட்டுள்ளது. பக்கத்தில் ஒரு பவுத்த விகாரை கட்டப்பட்டு அதில் ஒரு பவுத்த தேரர் நிரந்தரமாகக் குடியேறியுள்ளார்.

இந்த வெந்நீர் ஊற்றுக் கிணறுகள் இலங்கை வேந்தன் இராவணன் தனது தாயாருக்கு இறுதிக் கடன் செய்வதற்காக உடைவாளை உருவி ஏழு இடங்களில் குத்தியதாகவும் அந்த இடங்களில் இந்த வெந்நீர் ஊற்று உருவாகியதாகவும் ஓர் அய்தீகம் உண்டு.

திருகோணமலை வெருகல் பிரதேசச் செயலாளர் பிரிவில் அமைந்துள்ள இலங்கைத் துறைமுகத்துவார கிராமத்தின் குஞ்சிதபாத மலையில் உள்ள பாலமுருகன் ஆலயம் இடிக்கப்பட்டு பவுத்த விகாரை கட்டப்பட்டிருக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் புராண இதிகாசத்துடன் தொடர்புபட்ட குரங்கு மாலைபோட்ட மலை உடைக்கப்பட்டு வீதிப் புனரமைப்புக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மண் பறிப்பு எங்கள் காலத்தில் எங்கள் கண்களுக்கு முன்னால் நடந்தேறியுள்ளது. நடந்தேறுகிறது. சிங்கள அரசின் மண்பறிப்புக்கு எதிராகத் தமிழர்கள் நடாத்தும் அமைதி வழிப் போராட்டங்களை அரசு அலட்சியம் செய்து வருகிறது.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை செயலாளர் பிரிவில் உள்ள கணபதிபுரம் என்ற ஊரில் சிறீலங்கா இராணுவம் 60 ஏக்கர் காணியில் பாரிய இராணுவ குடியிருப்பைக் கட்டுகிறது. இந்தக் காணி 350  அடிமட்ட தமிழ்க் குடும்பங்களுக்குச் சொந்தமானது. இவர்கள் கடந்த 22  ஆண்டுகளாக இடப்பெயர்வுக்கு ஆளாகி வருபவர்கள்.

1990 இல் சிங்கள காவல்துறை இந்த மக்களை அவர்களது வீடு வாசல்களில் இருந்து அடித்துத் துரத்தியது. இதற்கு முஸ்லிம் ஊர்காவல் படையினரை சிங்கள காவல்துறை பயன்படுத்தியது. அதன் பின்னர் சிங்கள அரசு சார்பான முஸ்லிம் அரசியல்வாதிகள் பல்கலைக் கழகம் கட்டுவதற்குத் காணி தேவைப்படுவதாகக் கூறி அபகரித்துக் கொண்டார்கள். இப்போது அதே காணியில்தான் இராணுவம் பாரிய குடியிருப்பைக் கட்டுகிறது. ஏற்கனவே 4 கிமீ தொலைவில் உள்ள கொண்டைவெட்டவான் என்ற  இராணுவ முகாம் இருக்கிறது.

இதே சமயம் இராசபக்சே சார்பு முஸ்லிம் அரசியல்வாதிகள் சம்மாந்துறையில் உள்ள புதிய வளத்தாப்பிட்டி கிராமத்தில் வாழும் தமிழ்மக்களின் காணிகளை அபகரிப்பதில் ஈடுபட்டுள்ளனர்.

பதினெட்டுச் செயலகப் பிரிவுகளையும் 7,000 வாக்காளர்களையும் கொண்ட மல்வத்தைப் பகுதியில் தமிழர்களுக்குத் தனியான செயலாளர் பிரிவை உருவாக்க வேண்டும் என்ற வேண்டுகோளை சிங்கள அரசு அலட்சியப்படுத்தி வருகிறது.

அதே சமயம் மல்வத்தைப் பகுதியை விடக் குறைந்த மக்களைக் கொண்ட இறக்காமம் கிராம சிங்களவர்களுக்கு சிங்களம் மட்டும் செயலகப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.  (TamilNet August 07, 2012)

அம்பாறை மாவட்டத்தில் உள்ள 15  செயலகப் பிரிவுகளில் வாழும் 3,500 தமிழ்க் குடும்பங்கள் அவர்களது வீடு வாசல்களை இழந்த நிலையில் உள்ளார்கள். ஏப்ரில் 13, 1967 க்குப் பின்னர் தமிழர்களிடம் இருந்து 6,500 ஏக்கர் வயற்காணி, 3,500 ஏக்கர் தென்னங்காணி, 2,000 ஏக்கர் கரும்புச் செய்கைக் காணி அபகரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணம் சிங்கள இராணுத்தினால் கைப்பற்றப்பட்ட பின்னர் சிறீலங்கா சிறப்பு அதிரடிப் படையினரால் பவுத்த தூபிகள் காளான்கள் போல் எங்கும் முழைத்துள்ளன. அதே சமயம் 15 க்கும் மேற்பட்ட இந்து வழிபாட்டுத்தலங்கள் அழிக்கப்பட்டு விட்டன.

அம்பாறையில் பதினைந்து செயலகப் பிரிவுகளில் இருந்து தமிழர்கள் விரட்டி அடிக்கப்பட்டுள்ளனர். சம்மாந்துறை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, பொத்துவில், கல்முனை, சாய்ந்த மருது, இறக்காமம், அம்பாறை, ஆலையடிவேம்பு, காரதீவு, நாவிதன்வெளி, திருக்கோயில், உகண மற்றும் லகுகலை ஆகியவே அந்தச் செயலகப் பிரிவுகளாகும்.

1983 ஆம் ஆண்டு இனக் கலவரத்தின் போதுதான் தமிழர்கள் அவர்களது வாழ்விடங்களில் இருந்து சிங்களக் காடையர்களால் விரட்டி அடிக்கப்பட்டார்கள்.

தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் 1985 இலும் 1990 இலும் கலவரங்கள் இடம் பெற்றன. அழுத்தம் காரணமாக பல தமிழ்க் குடும்பங்கள் தங்கள் காணிகளை விற்றுவிட்டார்கள்.

தமிழர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நிலத்தில் சிங்கள இராணுவம் புதிய பவுத்த விகாரைகளைக் கட்டியுள்ளது.

போர்க் காலத்தில் மக்களிடம் இருந்து அடாத்தாகப் பறிக்கப்பட்ட வீடு வாசல்கள், காணிகள் திருப்பி அவர்களிடம் ஒப்படைக்கப்படும் என நீதி அமைச்சர் இராவ் ஹக்கீம் தன்னைச் சந்தித்த வெளிநாட்டுத் தூதுவர்களிடம் தெரிவித்துள்ளார். இது நடக்குமா நடக்காதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். (TamilNet, Sunday, 05 August 2012)

வட - கிழக்கு மாகாணத்திலுள்ள 70 பிரதேச செயலர் பிரிவுகளில் 14 சிங்களப் பிரிவுகளாக மாறியுள்ளன. 18,880 ச.கிமீ நிலப்பரப்பில் தோராயமாக 6,000  ச.கிமீ நிலப்பரப்பு சிங்களவர்களுக்கு உரியது என்ற வகையில் 31.77 விழுக்காடு நிலப்பரப்பை தமிழ்மக்கள் முழுமையாக இழந்துள்ளார்கள். (வளரும்)

எல்லாம் பவுத்த மயம்! எங்கும் புத்தர் சிலைகள்!
நக்கீரன்
(5)

எல்லாப் போர்களும் நிலப்பறிப்புப் பற்றியதுதான். மாதுறு ஓயா இல் (சிங்கள) மக்களை குடியமர்த்துவதன் மூலம் மட்டக்களப்பு வலையத்தைத் தனிநாட்டுக்கு எதிரான ஆட்களால் நிரப்புவதுதான் எமது திட்டம்" இவ்வாறு மகாவலி அமைச்சின் சிங்கள அதிகாரியான ஹேர்மன் குணரத்தின சிறீலங்கா சண்டே ரைம்ஸ் செய்தித்தாளில் (ஓகஸ்ட் 26,1990 இல்) எழுதியிருந்தார்.

“All wars are fought for land.. By settling the (Sinhala) people in the Maduru Oya we were seeking to have in the Batticaloa zone a mass of persons opposed to a separate state.” Sinhala Mahaveli Ministry Official, Herman Gunaratne in the Sri Lanka Sunday Times, 26 August 1990. “

சிங்கள – பவுத்த அரசுகள் சிங்களக் குடியேற்றங்களை எப்படியெல்லாம் சிந்தித்துச் செயற்படுத்துகிறது என்பதை ஹேமன் குணரத்தினாவின் ஒப்புதல் வாக்கு மூலம் வழியாக நாம் அறிந்து கொள்ளலாம். ஹேமன் குணரத்தினாவைப் போல் எத்தனை பேர் வெளியில் சொல்லாமல் பூடகமாகச் செயல்படுகிறார்கள் என்பதையும் நாம் ஊகித்துக் கொள்ளலாம்.

“எல்லாப் போர்களும் நிலப்பறிப்புப் பற்றியதுதான். 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற இனக் கலவரத்துக்கு முன்பதாகவே யான் ஓயா மற்றும் மல்வத்து ஓயா நீர்த்தேக்கங்களில் (சிங்கள) மக்களைக் குடியேற்றும் திட்டத்தைத் தயாரித்துவிட்டோம். உண்மையில் இந்தத் திட்டத்தை வடிவமைத்தவர்கள் மகாவலி அமைச்சில் பணிபுரிந்த, அவர்களில் பலர் பன்னாட்டு நிறுவனங்களில் உயர் பதவிகளில் இருப்பவர்கள், கூரிய மூளைசாலிகள் ஆவர். எனது பங்கு நிறைவேற்றாளர் என்ற பாத்திரத்தை வகித்ததே ………….

நாங்கள் இந்தத் திட்டத்தைக் கருத்தரித்து அதனை நடைமுறைப்படுவதன் மூலம் நீண்ட காலத்துக்கு சிறீலங்காவின் ஆட்புலக் கட்டுறுதியைப் பத்திரப்படுத்தலாம் என நினைத்தோம். நாங்கள் மாதுறு ஓயாப் படுக்கையின் மட்டக்களப்பு மற்றும் பொலநறுவ மாவட்டங்களுக்கு காணிக்குத் தவண்டை அடித்துக் கொண்டிருந்த 45,000 சிறு விவசாயிகளை நகர்த்தினோம். இரண்டாவது கட்டமாக யான் ஓயா படுக்கையில் இதே மாதிரி குடியேற்றத்தை மேற்கொள்வது எனத் திட்டமிட்டோம். மூன்றாவது கட்டம் மல்வத்து ஓயாவின் கரையோரம் ஈழத்துக்கு எதிரான மக்களைக் குடியமர்த்துவது எமது திட்டம் ஆகும்.

மாதுறு ஓயா இல் (சிங்கள) மக்களைக் குடியமர்த்துவதன் மூலம் மட்டக்களப்பு வலையத்தை தனிநாட்டுக்கு எதிரான ஆட்களால் நிரப்புவதுதான் எமது திட்டம்……..யான் ஓயா இல் தனிநாட்டுக்கு எதிரானவர்களைக் கொண்டு நிரப்பினால் குடிமக்கள் தொகை மேலும் 50,000 ஆக உயர்ந்துவிடும். அதன் மூலம் திருகோணமலையைக் கிளர்ச்சியாளர்களிடம் இருந்து முற்றாகக் கைப்பற்றிவிடலாம்……”

“All wars are fought for land…The plan for settlement of people in Yan Oya and Malwathu Oya basins was worked out before the communal riots of 1983. Indeed the keenest minds in the Mahaveli, some of whom are holding top international positions were the architects of this plan. My role was that of an executor…

We conceived and implemented a plan which we thought would secure the territorial integrity of Sri Lanka for a long time. We moved a large group of 45,000 land hungry (Sinhala) peasants into the Batticaloa and Polonnaruwa districts of Maduru Oya delta. The second step was to make a similar human settlement in the Yan Oya basin. The third step was going to be a settlement of a number of people, opposed to Eelam, on the banks of the Malwathu Oya.

By settling the (Sinhala) people in the Maduru Oya we were seeking to have in the Batticaloa zone a mass of persons opposed to a separate state…Yan Oya if settled by non separatists (Sinhala people) would have increased the population by about another 50,000. It would completely secure Trincomalee from the rebels…”

நிலத்துக்காகப் போர் என்பதற்குப் பாரதப் போர் தொடங்கி ஈழப் போர் வரையான போர்கள் நல்ல எடுத்துக்காட்டாகும். அய்ந்து நாடு கேட்டு அது மறுக்கப்பட்ட போது அய்ந்து ஊர் கேட்டு அதுவும் மறுக்கப்பட்ட போது அய்ந்து வீடு கேட்டு அதுவும் மறுக்கப்பட்ட போதுதான் பாரதப் போர் தொடங்கியது. இரண்டாவது உலகப் போர் பக்கத்து நாடுகள் ஜெர்மானியருக்குச் சொந்தமானவை எனக் கூறி அவற்றை இட்லர் பிடித்த போதுதான் வெடித்தது.

இலண்டனில் இருந்து 7,913 மைல் (12,734 கிமீ) களுக்கு அப்பால் இருந்த வோக்லாந்து என்ற சின்ன தீவுக்காகவே பிரித்தானியா ஆர்ஜென்தீனா போர் மூண்டது.

வோக்லாந்து தீவுக்கூட்டத்தின் பரப்பளவு 4,700 ச.மைல் (12,173 ச.கிமீ) மக்கள் தொகை 3,140. மொத்தம் 74 நாள் நீடித்த போரில் 649 ஆர்ஜென்தீனா வீரர்களும் 255 பிரித்தானிய வீரர்களும் இறந்தார்கள். இரு தரப்பும் பல போர்க்கப்பல்களையும் போர் விமானங்களையும் இழந்தன. பலர் சிறை பிடிக்கப்பட்டனர்.

பொதுவாக சிங்கள அரசியல்வாதிகளின் உள்நோக்கங்களை நாம் அலசிப் பார்ப்பதில்லை. குடியேற்றத்தினால் வரும் ஆபத்துக்களைப் பற்றிப் பேசுவதோடு சரி. அதற்கு எதிராகத் திட்டம் தீட்டி குறுகிய கால - நீண்ட கால நோக்கில் செயல்படுவதில்லை. கடந்த யூன் 26 ஆம் நாள் திருமுருகண்டியில் தமிழர்களுக்குச் சொந்தமான 4,000 ஏக்கர் காணியில் சிங்கள இராணுவத்தினருக்கு வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்துக்கு எதிராகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதனைத் தொடர்ந்து மன்னாரில் காணி பறிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் காணியைப் பறிகொடுத்த தமிழ்மக்களும் கலந்து கொண்டனர். இப்படியான எதிர்ப்புப் போராட்டம் ஏனைய மாவட்டங்களுக்கு விரிவாக்கம் செய்யப்படும் எனச் சொல்லப்பட்டுது. ஆனால் மன்னாரில் நடைபெற்ற போராட்டத்துக்குப் பின்னர் வேறு போராட்டம் எதுவும் நடைபெறவில்லை. கிழக்கு மாகாண சபைத் தேர்தல் குறுக்கிட்டது அதற்கொரு காரணமாக இருக்கலாம்.

கன்னியா வெந்நீர் ஊற்றுக் கிணறுகளைத் தொல்பொருள் திணைக்களம் கையகப்படுத்தியதற்கு எதிராக ஒரு அடையாள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் கூட நடைபெறவில்லை. இது தொடர்பாக முஸ்லிம் சமூகத்திடம் இருந்து தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் பலவுண்டு.

நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் புற்றுநோய்போல் எமது மண்ணை அரித்துக் கொண்டிருக்கிறது. திருமுருகண்டியில் இராணுவ வீரர்களுக்கு சகல வசதிகளோடு கட்டிக் கொடுக்கும் வீடுகள் போன்று மொத்தம் 50,000 வீடுகளைக் கட்ட சிங்கள - பவுத்த பேரினவாத அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக சீனா 100 மில்லியன் டொலர்களைக் கடனாகக் கொடுத்துள்ளது. சீன கட்டட நிறுவனமே வீடுகளைக் கட்டிக் கொடுக்க இருக்கிறது. ஏற்கனவே சீனா பாரிய இராணுவதளங்களையும் வீடுகளையும் கட்டிக் கொத்துள்ளது.

இது ஒரு புறம் இருக்க வடக்குக் கிழக்கில் பவுத்த விகாரைகளும் புத்தர் சிலைகளும் வாரந்தோறும் நிறுவப்பட்டு வருகின்றன. இதில் என்ன கொடுமை என்றால் தமிழர்களுக்குச் சொந்தமான காணியில் அரசு செலவில் இராணுவமே இந்தக் கைங்கரியத்தை செய்து வருகிறது.

கடந்த வாரம் (ஓகஸ்ட் 20) கனகராயன்குளத்தில் சிறீலங்கா இராணுவத்தினால் அமைக்கப்பட்டுள்ள புதிய பவுத்த வழிபாட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா இராணுவத்தின் 56 ஆவது பிரிவின் தளபதி பிரிகேடியர் இரணவக்கவின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டுள்ள இந்த வழிபாட்டிடத்தில் புத்தர்சிலை ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. அதன்பின்பறமாக போதி மரம் (அரசு) ஒன்றும் நாட்டப்பட்டுள்ளது.

சிறீ சம்புத்தரஜ விகாரை என்ற பெயரில் இங்கு பாரிய பவுத்த விகாரை ஒன்றைக் கட்டுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்முதற்கட்டமாகவே புத்தர் சிலையுடன் கூடிய வழிபாட்டு அறை மற்றும் போதி மரத்துக்கு அமைக்கப்பட்ட வேலி ஆகியன கடந்த திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டன.

வடமத்திய மாகாண பிரதி சங்க நாயக்கர் வண எட்டம்பகஸ்கட கல்யாண திஸ்ஸ நாயக்க தேரர், வன்னிப் படைத்தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் கே.எஸ்.பெரேரா ஆகியோர் இந்த வழிபாட்டு அறை மற்றும் போதி மர வேலி ஆகியவற்றைத் திறந்து வைத்தனர். இந்த நிகழ்வுகளில் சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பங்கேற்றுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளையும் பவுத்த மயப்படுத்துவதில் மகிந்த இராசபக்சே அரசு முனைப்புக் காட்டிவருகிறது. இதனால் இந்து வழிபாட்டுத் தலங்களுக்கும் கடவுளர்க்கும் ஆபத்து வந்துள்ளது.

கடந்த ஏப்ரில் மாதம் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திற்கு எதிரே உள்ள பேரூந்து நிலையத்திற்கு முன்பாக பவுத்த மத வழிபாட்டுக்கு புதிய புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. பேரூந்து நிலையத்திற்கு அருகில் சிறீலங்கா இராணுவம் பவுத்த விகாரை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இதனைவிட தன்ணீரூற்று நெடுங்கேணி வீதியில், பழம்பாசிக்கும் தண்டுவானிற்கும் இடைப்பட்ட வீதியில் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கிறார்கள்.

ஒட்டுசுட்டான் கற்சிலைமடு சிவன் கோயில் வளாகத்தில் புத்தர் சிலை ஒன்று சிறிலங்காப் படையினரால் நிறுவப்பட்டுள்ளது. கற்சிலைமடுவிலுள்ள பெரியமுறிப்புக் குளத்திற்கு அருகில் தொன்மை வாய்ந்த சிவன் கோயில் ஒன்று உள்ளது. அக் கோயிலின் வளவினுள் உள்ள ஒரு அரச மரத்தின் கீழ் சிவபெருமானை வைத்து மக்கள் நீண்டகாலமாக வழிபட்டு வருகின்றனர். இப்போது சிறீலங்கா இராணுவம் அரச மரத்தின் கீழ் சிறிய பவுத்த கோவில் அமைத்து அதில் புத்தரின் சிலையையும் வைத்திருக்கிறது.

புத்தர் கடவுள் இல்லை. அவர் மனிதராகப் பிறந்து மனிதராக மறைந்தார். அவர் வாழ்நாளில எந்த அற்புதமும் செய்து காட்டியதில்லை. அவரே 'நான் தேவனோ, அவதாரமோ இல்லை. புத்த நிலையை அடைந்த ஒரு மனிதனே நான். புவியில் பிறந்த மானிதராகிய நீங்கள் அனைவருமே இந்த புத்த நிலையை அடைய முடியும்" என்று சொன்னார். பசியும், தூக்கமும், வலியும், மரணமும் கொண்ட மனிதர்கள் யாருமே கடவுள் ஆகமுடியாது.

மேலும் பவுத்தம் என்பது ஒரு நெறியே தவிர, மதம் அல்ல. துன்பத்திலிருந்து விடுதலை பெறும் வழியை மட்டுமே புத்தர் காட்டினார். மக்களுக்குப் பிறப்பில்லா மோட்சத்தை அளிப்போம் என்று கூறி அவர்கள் தங்களிடம் எதையும் கேட்காமல் சரண் அடைந்துவிட வேண்டும் என்று கேட்கும் மற்ற தத்துவஞானிகள், போதகர்கள் போலன்றி, தன்னிடம் சரண் அடையவேண்டாம் என்று புத்தர் திரும்பத் திரும்ப மக்களைக் கேட்டுக் கொண்டார்.

புத்தம் சரணம் கச்சாமி என்றால் தலைவனை உண்மையாகப் பின்பற்று என்பது பொருள். தம்மம் சரணம் கச்சாமி என்றால் அந்தக் கொள்கைகளை உண்மையில் பின்பற்று என்று பொருள். சங்கம் சரணம் கச்சாமி என்றால் இயக்கத்திடம் உண்மையில் பற்றுடன் இரு என்பதே பொருள்! எனவே புத்தம் என்பது ஒரு மதமல்ல ஒரு நெறியேயாகும்.

பெண்ணாசைக்குக் கடவுளைக் காரணம் சொல்லியவர்களிடம் புத்தர் சொன்னார் "முன்னோர்கள் சொன்னார்கள் என்பதற்காக எதனையும் நம்பாதே; முன்னோர்கள் எழுதினார்கள் என்பதற்காக எதையும் நம்பாதே; முன்னோர்கள் செய்தார்கள் என்பதற்காக எதையும் நம்பாதே" என்றார்.

கடவுளைப்பற்றிச் சொல்லப்படுகின்ற சர்வ வல்லவன், சர்வ வியாபி, சர்வ தயாளன் என்ற கருத்துக்களைப் புத்தர் ஏரண அடிப்படையில் மறுக்கிறார். வேதங்களைப் படித்த பிராமணர்களைப் பார்த்து புத்தர் கேட்கிறார் "நீங்கள் கடவுளைப் பார்த்ததுண்டா?" அவர்கள் இல்லை என்று சொல்கின்றார்கள். உடனே புத்தர், "பிறகு பிரம்மா இருக்கிறார் என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்" என்று கேட்கிறார்.

எல்லாம் அவன் செயல் என்று சொன்னால் மனிதன் முயற்சியுள்ளவனாக இருக்க முடியுமா என்றும் புத்தர் கேட்டார்!

புத்தர் கேட்கிறார், கடவுள் மனிதனை உண்டாக்கினான் என்றால், அவன் ஏன் பைத்தியக்காரனை, திருடனை, கொலைகாரனை உண்டாக்க வேண்டும்? புத்தர் மேலும் கேட்கிறார் "கருணையே வடிவான கடவுள் என்றால் அவன் இதயத்தில் இவ்வளவு அநீதியினை உண்டாக்கியிருக்கலாமா? கடவுள் உலகத்தை உண்டாக்கியிருக்கிறான் என்று சொன்னால், எதிலிருந்து உண்டாக்கினான்? சூனியத்திலிருந்து உண்டாக்கினானா? அல்லது வேறு ஒரு பொருளிலிருந்து உண்டாக்கினானா? சூனியத்திலிருந்து ஒரு பொருளை உண்டாக்கவே முடியாது. வேறு ஒரு பொருளிலிருந்து உலகத்தை உண்டாக்கினான் என்றால் இந்தக் கடவுளுக்கு முன்பே, இன்னொருவனால் அந்த வேறு ஒரு பொருள் உண்டாக்கப்பட்டதா?"

இதுதான் புத்தரின் வாதம். எவ்வளவு ஆழமான, ஆராய்ச்சி பூர்வமான, எவராலும் மறுக்க இயலாத தர்க்க அடிப்படை வாதம். கடவுளை நம்புவதை விட  மிகப் பெரிய அபாயமான செயல் வேறு ஒன்றும் இல்லை (The most dangerous thing) என்று கூறுகிறார் புத்தர். நம்பிக்கையை விட, கேள்வி கேட்டு ஆய்வு செய்யும் பகுத்தறிவை மேலானதாக புத்தர் மதித்தார். சிந்தனையாளர்கள்தான் வேண்டும் என்று அவர் விரும்பினாரேயன்றி, கண்மூடிப் பின்பற்றுவர்கள் வேண்டும் என்று அவர் விரும்பவில்லை.

இவ்வளவு தூரம் கடவுள் மறுப்பாளராக இருந்த புத்தரை இன்று (சிங்கள) பவுத்தர்கள் கடவுளாக்கி விட்டார்கள்! கண்ட கண்ட இடமெல்லாம் அவரது சிலைகளை வைத்து பவுத்த கோயில்கள் எழுப்பி அவரை வழிபடுகிறார்கள்!
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கொக்குளாய் எனும் ஊரில் தனியார் ஒருவருக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து பாரிய பவுத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். சிங்கள மக்களின் கால் தடமே இதுவரை பதியப்படாத இவ்விடத்தில் தற்போது படையினர் இவ்வாறு பாரிய பவுத்த விகாரை அமைப்பதற்கான காரணம் என்ன என மக்கள் கேள்வி எழுப்பியதுடன், இனிவரும் காலங்களில் இப்பகுதியில் சிங்களக் குடியேற்றங்கள் தொடக்கத்தில் இருந்ததாகக் கூறிச் சிங்கள மக்களை குடியேற்ற எத்தனிக்கும் முயற்சியின் தொடக்க நடவடிக்கையே இது என அப்பகுதி மக்கள் நினைக்கிறார்கள்.
2010 ஆம் ஆண்டு செப்தெம்பர் மாதம் நடுப்பகுதியில் இப்பகுதியில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டனர். எனினும் தற்போது பவுத்த விகாரை ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதியில் மக்கள் குடியேறச் சென்ற போது குறித்த பகுதி பவுத்த விகாரை அமைப்பதற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் கூறியுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாகக் காணிச் சொந்தக்காரர் பல தரப்பினருடனும் முறையிட்டும் எந்த விதமான பலனும் கிடைக்கவில்லை எனக் கண்ணீர் மல்கக் குறிப்பிட்டார்.
போரின் போது எமது உடமைகள் மற்றும் வாழ்வாதாரம் என அனைத்தையும் இழந்தோம். ஆனால் எமது நிலம் இருக்கின்றது என்ற நம்பிக்கையில் வந்தோம். ஆனால் அதுவும் தற்போது கனவாகிப் போய்விட்டதாகவும் வேதனையுடன் குறிப்பிட்டார்கள் (நெருடல் - ஓகஸ்ட் 28, 2012)
கொக்கிளாய் மருத்துவமனைக் காணியின் ஒரு பகுதி கொக்கிளாய் துணைஅஞ்சலகக் காணியின் ஒரு பகுதி மற்றும் தனியார் ஒருவரது காணி என்பவற்றை இணைத்து இந்த விகாரை அமைக்கப்படவுள்ளது.

ஏற்கனவே அரசடிப் பிள்ளையார் ஆலயம் இந்தப் பகுதியிலிருந்து அழிக்கப்பட்டு அவ்விடத்திலேயே விகாரை அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பகுதியில் பவுத்த பிக்கு ஒருவர் தென்னிலங்கையிலிருந்து அழைத்து வரப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தனியான சிங்கள பிரதேச செயலர் பிரிவு தொடக்கப்பட்டுள்ளது. கருநாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய், கொக்கிளாய், தண்ணிமுறிப்பு, குமுழமுனை, தென்னமரவாடி போன்ற தமிழ் ஊர்களை உள்ளடக்கி வெலிஓயா என்ற பிரதேச செயலர் பிரிவொன்று போன செப்தெம்பர் (2011) மாதம் தொடக்கப்பட்டுள்ளது.

பவுத்த வழிபாட்டுத் தலங்கள், பவுத்த தேரர்கள் தங்குமிடம் போன்றன அமைக்கும் பணிகளும் துரிதமாக நடந்துவருகிறது. தமிழ் ஊர்களுக்குச் சிங்களப் பெயர் சூட்டல், நிலப்பறிப்பு, வளப்பறிப்பு போன்றனவும் அமைச்சர்களினதும் அரச திணைக்கள அதிகாரிகள் சிலரது ஒத்துழைப்புடன் இடம் பெற்று வருகின்றது.

ஆனால் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு காணிகள் கூடத் துப்புரவு செய்து கொடுக்கப்படாத நிலையில் அடர்ந்த பற்றைகளுக்கு நடுவில் அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

1984 ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லையோரக் கிராமங்களில் இருந்து தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டபோது கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் சுமார் 11 சிங்களக் குடும்பங்களே தொழில் நோக்கத்திற்காகத் தங்கியிருந்தனர்.

தற்போது குறித்த முகத்துவாரம் பகுதியில் 280 சிங்களக் குடும்பங்கள் வாழ்ந்துவருகின்றன. இவர்கள் தங்கியிருக்கும் பகுதியில் அநேகமானவை தமிழர்களுக்குச் சொந்தமானவை என்பதுடன் குறித்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாடசாலைக் காணியும் தமிழர்களுக்குச் சொந்தமானது.

இதேவேளை கொக்கிளாய் ஏரி, முகத்துவாரம் கடற்பகுதி போன்றன தற்போது சிங்கள மக்களின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளது.

இந்தப் பகுதியில் கூட்டுவலை பயன்படுத்தப்படுகின்றது. இதனால் மீன் வளம் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றது, குறிப்பாக இந்த வலை பயன்படுத்தப்படுகின்றபோது சிறிய மீன்குஞ்சு முதல் பிடிக்கப்படுகின்றது. இந்த ஆற்றில் 18 அடி படகுகள் முதற்கொண்டு நூற்றுக்கணக்கில் படகுகள் பயன்படுத்தப்படுகின்றன.

மேலும் இந்த ஆற்றில் தொழில் செய்வதற்கான உரிமம் புளியமுனை கிராமத்திலுள்ள தமிழ் மக்களிடமே உள்ளது. இதற்குக் காவல்துறையோ, கடற்றொழில் திணைக்களமோ எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கமுடியாத நிலை காணப்படுகின்றது. காரணம் குறித்த மீனவர்கள் கடற்றொழில் அமைச்சின் அனுமதிக் கடிதங்களை வைத்திருப்பதுடன் நேரடியாக கடற்றொழில் அமைச்சின் செல்வாக்குப் பெற்றவர்களாகவும் உள்ளனர்.

இதேபோல் கொக்கிளாய், கிராமத்தில் சுமார் 10 வரையான பவுத்த விகாரைகள் இதுவரையில் அமைக்கப்பட்டுள்ளன. இதில் கொக்கிளாய் தொடக்க நல்வாழ்வு நிலையத்திற்கும், தபாலகத்திற்கும் இடையிலுள்ள தமிழருக்குச் சொந்தமான நிலத்தில் பவுத்த மதகுரு குடியேறியுள்ளார். இதற்கு முன்னால் பவுத்த வழிபாட்டிடம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் கருநாட்டுக்கேணி ஊரில் கடந்த 30 ஆண்டுகளாக மக்கள் நடமாட்டமில்லாததால் அடர்ந்து வளர்ந்த காடுகளுக்குள் சென்று மக்கள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். அரை நிரந்தர வீடுகளோ, மீள்குடியேற்ற நிதியோ வழங்கப்படாத நிலையில் மக்கள் தறப்பாள் கூடாரங்களுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு விவசாயம் செய்வதற்கு அல்லது சுயதொழில் செய்வதற்கு வேண்டிய நிதியுதவி செய்யப்படாவிட்டால் மறுபடியும் ஏதிலி முகாம்களுக்குத் திரும்பிவிடும் அபாயம் இருக்கிறது. கருநாட்டுக்கேணி ஊருக்குள் நுழையும் வாயிலில் பாரிய படைமுகாமொன்று அமைக்கப்பட்டுள்ளது.

எல்லாம் பவுத்த மயம் எங்கும் புத்தர் சிலைகள் என்பதே நியதியாகி வருகிறது. (வளரும்)


	
About editor 3017 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply