சனி பெயர்ச்சியில் குழப்பிய சோசியர்! தமிழர் அறிவியல் என்ன சொல்கிறது ? சோசியர்கள் அறிவார்களா?

 சனி பெயர்ச்சியில் குழப்பிய சோசியர்! தமிழர் அறிவியல் என்ன சொல்கிறது ? சோசியர்கள் அறிவார்களா?

astrology-planets-10301057நேற்று 18/12/ மாலை 6 -7 அஸ்ட்ரோ வானவில்லில் சனி பெயர்ச்சியில் இராசிகளுக்கு என்ன நடக்க போகிறது என்று சோதிடர் பாணியில் ஒரு மணி ஒரு மணி நேரம் பேசினார். இலக்கு தமிழர்களை நோக்கியது. என்றும் எதிலும் சோதிடம் என்ற அறியாமையால் தமிழர்கள் நிலை அந்தோ பரிதாபம். உலக அறிவியலை எப்படி வியாபரமாக்கினார்கள் வியப்புதான் மிஞ்சுகிறது !!

கடசியில் ஒரு அதற்சியான குறிப்பை தந்தார். அதாவது இராசிகளின் பலன்கள் அவரவர் பூர்வ ஜென்மம் , முந்திய பாவ புண்ணியங்கள் படி நல்லது கெட்டது நடக்கும். சனியை மட்டும் கும்பிடுங்கள் பலன் தரும் மற்ற தெய்வங்கள் , ஆஞ்சேநேயர் போன்ற தெய்வங்களின் பிரார்த்தனைகள் பரிகாரங்கள் உதவாது என்று போட்டார் ஒரு போடு!?

சனி என்பது ஒரு கிரகம். ஆனால் நம்மவர்கள் சனியன் “தைதரியம்” என்ற ஐயத்தில் ஜோதிட வியாபாரமும் .கோவில் பூஜைகளும் அறியாமையால் வியாபார சூடும் தலை தூக்கி பன்னெடுங்காலமாக ஓடுகிறது. நம்ம சமய பூசகர்கள் ஐயா முனைவர் நாகப்பன் , தர்மலிங்கம் போன்றோர்ர் ஏழரை சனி சனியன் பற்றி வாய் திறப்பதில்லை ஏன்?

“ஏழரை சனி” ஒரு விஞ்ஞானம். அறிவியல் என்ன சொல்கிறது ?

சோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் இப்பெயரைக் கேட்டாலே பயந்து நடுங்குகிறார்கள் அல்லது இவர்களை பயமுறுத்துவதற்காக தினசரிகள், வார இதழ்கள், சோதிடத்திற்கு மட்டுமென வெளிவரும் பத்திரிக்கைகள் உள்ளன. இவ்வாண்டு 2014 டிசம்பர் மாதம் 16ஆம் தேதி அதிகாலையில் துலாம் இராசியில் இருந்து விருச்சிக இராசிக்கு சனி இடம் பெயர இருக்கிறது. இதையொட்டி சனியால் எந்த இராசிக்கு என்ன பலன் என்றும் அதனால் வரும் விளைவுகளுக்கு பரிகாரத்தைத் தேடி காக்கையை தனது வாகனமாகக் கொண்டு திருநள்ளாரில் எழுந்தருளி இருக்கும் சனி பகவானின் நளன் குளத்தில் நீராடவும் மற்ற வகையான பரிகாரங்களை செய்யவும் ஆயத்தமாக இருக்கிறார்கள்.

இனி செய்திக்கு வருவோம் முதலில் இந்த சனிப்பெயர்ச்சி பஞ்சாங்க அடிப்படையில் ஒரே நாளில் நிகழ்கிறதா என்றால் இல்லை, திருக்கணித பஞ்சாங்கத்தின்படி நவம்பர் 2 ஆம் தேதி நடந்தது. வாக்கியப் பஞ்சாங்கத்தின் படி டிசம்பர் 16 ஆம் தேதி நடக்க இருக்கிறது, . இதில் என்ன நகைச்சுவை என்றால். பஞ்சாங்கத்திலேயே துல்லியமானது திருக்கணிதப் பஞ்சாங்கம் என கூறப்படுகிறது. ஆனால் சனிப்பெயர்ச்சி மட்டும் வாக்கியப் பஞ்சாங்கத்தின்படியே கணிக்கப்பட்டு 16 ஆம் தேதி திருநள்ளாரில் சனிப்பெயர்ச்சி மிகவும் விமரிசையாக நடத்தப்பட உள்ளது. இவ்வாறு முரண்பட்ட சோதிட நம்பிக்கையின் அடிப்படையில் நடைபெறும் சனிப்பெயர்ச்சியை சற்று அறிவியல் கண்ணோட்டத்துடன் அலசுவோம்.’

ஜாதகமும் ஜோதிடமும்

ஜாதகம் என்பது ஒருவன் பிறந்த நேரதில் வானில் காணப்பட்ட மேஷம் முதல் மீனம் வரையிலான 12 இராசிகள், 27 நட்சத்திரங்கள், 9 நவக்கிரகங்கள் ஆகியவற்றைக் கொண்டு பதியும் பதிவு அவ்வளவே. வானவீதியில் கோள்களின் இயக்கம் சீரான காலமுறையை (Uniform Motion) சார்ந்தது என்பதினால் ஜாதகம் என்பது நமது முன்னோர்கள் பயன்படுத்திய பிறப்பு பதிவு எனக் கொள்ளலாம். ஆனால் ஜாதகம் ஜோதிடத்தின் கருவியாக மாறும்போதுதான் சீரழிந்து புனைவுகளுக்கு ஆளாகிறது.

ஜோதிடத்தில் இராசி, நட்சத்திரங்கள் மற்றும் கோள்களுக்கு சில குணங்கள் இருப்பதாக கற்பிதம் செய்யப்படுகிறது. பொதுவாக ஜாதகமும், சோதிடமும் பழமையான பூமிக்கொள்கை (Geo System) எனப்படும் பூமியை மையமாக வைத்து கோள்கள் அனைத்தும் சுற்றி வருவதாகக் கொண்டே இன்றளவும் கணிக்கப்பட்டு வருகின்றது. இன்று அறிவியலால் நிரூபிக்கப்பட்டு உண்மையென எல்லோராலும் குறிப்பாக ஆன்மீகவாதிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சூரியனை சுற்றி அனைத்துக் கோள்களும் இயங்குகின்றன (Solar system) என்ற அறிவியல் உண்மைக்கு எதிராக இச்சோதிட தத்துவம் உள்ளது.

கோள்கள் (நவ கிரகங்கள்)         வரிசை எண்.  ஜாதகத்தில் உள்ளவை   சூரிய மண்டலத்தில் இருப்பவை

1. ஞாயிறு

2. சந்திரன், புதன்

3. செவ்வாய், பூமி

4. புதன், செவ்வாய்

5. குரு (வியாழன்), வியாழன்

6. சுக்கிரன்(வெள்ளி), சனி

7.சனி, யுரேனஸ்

8.இராகு, நெப்டியூன்

9. கேது, புளூட்டோ

இதில் நிலையாக பேராற்றல் உள்ள நட்சத்திரமான சூரியனும், ஆற்றல் ஏதும் இல்லாமல் பூமியை சுற்றும் துணைக்கோளான சந்திரனும், கோள்களே அல்லாத இராகுவும் கேதுவும் கிரகங்களாக குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் பூமி, யுரேனஸ், நெப்டியூன் போன்ற கோள்கள் இதில் இடம் பெறவில்லை (அப்போது தொலைநோக்கிகள் இல்லை அதனால் இருந்திருக்கும்). அதைப்போலவே இராசி என்பதும் வானில் உள்ள விண்மீன்களின் வடிவங்களின் கற்பனையான தராசு (துலாம் ராசி-Libra), வில்(தனுசு இராசி-Sagittarius) போன்ற வடிவங்களேயாகும். இந்த வடிவங்களிலான விண்மீன் கூட்டங்களுக்கென தனித்தனியே குணங்களும் ஆற்றலும் உள்ளது எனவும் சோதிடம் கூறுகிறது. இவற்றையே அடிப்படையாகக் கொண்டு அவரவர்களுக்கான தினம், வாரம், மாதம், வருடம் என வாழ்நாள் முழுதும் நல்லதும் கெட்டதுமான பலன்கள் அவ்வப்போது ஜோதிடர்களால் கணிக்கப்படுகிறது.

மீனம் 12, மேஷம் 1, ரிஷபம் 2, மிதுனம் 3, கும்பம் 11,

சோதிடம் கணிக்கும் இராசிக்கட்டம்

கடகம் 4, மகரம் 10, சிம்மம் 5, தனுசு 9, விருச்சிகம் 8, துலாம் 7, கன்னி 6

வர்ணாசிரம – பாலின பாகுபாடு

மனிதர்களிடையே ஜாதி பார்ப்பது போதாது என்று கோள்களையும் வர்ணப்பாகுபாடு செய்கிறது ஜோதிடம்

வர்ணம்                            கிரகங்கள்  

பிராமணர்                      வியாழன்(குரு), வெள்ளி

சத்திரியர்                        ஞாயிறு,செவ்வாய்

வைசியர்                         சந்திரன், புதன்

சூத்திரர்                           சனி, இராகு, கேது

ஆக ஜோதிடத்தை ஏற்பதன் மூலம் நால்வர்ணக்கொள்கையை ஆதரிப்பதாகவே கொள்ளவேண்டும்.

ஜாதகத்தில் எவ்வாறு கிரகங்கள் குறிக்கப்படுகின்றன?

ஒருவர் பிறக்கும்போது ராசி மண்டலத்தில் உள்ள கிரகங்களே கட்டத்தில் குறிக்கபடுகிரது. பூமியிலிருந்து பார்க்கும்போது கிரகங்கள் எந்த ராசியில் உள்ளதோ அதுவே ஜாதகத்தில் கிரகத்தின் நிலையாகும். ஜோதிடப்படி ஒவ்வொரு ராசிக்கும் ஒரு ஆட்சி கிரகம், பாலினம், ஜாதி, குணம், திசை உள்ளது. அவற்றை கீழ்கண்ட அட்டவணையில் காண்போம்.

எண்

ராசி

Sign அதிபதி திசை குணம் ஜாதி பாலினம்

உடல் பாகம்

1

மேஷம்

Aries செவ்வாய் கிழக்கு நெருப்பு, சரம் க்ஷத்ரிய ஆண்

தலை

2

ரிஷபம்

Taurus வெள்ளி தெற்கு மண், ஸ்திரம் வைஷ்ய பெண் முகம்

3

மிதுனம் Gemini புதன் மேற்கு காற்று, உபயம் சூத்திர ஆண்

தோள்

4

கடகம்

Cancer சந்திரன் வடக்கு நீர்,சரம் பிராமண பெண்

மார்பு

5>

சிம்மம்

Leo சூரியன் கிழக்கு நெருப்பு,ஸ்திரம் க்ஷத்ரிய ஆண்

இருதயம்,வயிறு

6

கன்னி

Virgo புதன் தெற்க்கு நிலம்,உபயம் வைஷ்ய பெண்

அடிவயிறு

7 துலாம் Libra வெள்ளி மேற்கு காற்று,சரம் சூத்திரர் ஆண்

அடிவயிறு

8 விருச்சிகம் Scorpio செவ்வாய் வடக்கு நீர்,ஸ்திரம் பிராமண பெண் பாலுறுப்பு
9 தனுசு Sagittarius வியாழன் கிழக்கு நெருப்பு,உபய ஷத்ரிய ஆண் தொடை
10 மகரம் Capricorn சனி தெற்கு நிலம்,சரம் க்ஷத்ரிய பெண் முழங்கால்
11 கும்பம் Aquarius சனி மேற்கு காற்று,ஸ்திரம் சூத்திரர் ஆண் கால்கள்
12 மீனம் Pisces வியாழன் வடக்கு நீர்,உபயம் பிராமண பெண்

பாதம்

இதில் குணம் என்னும் காலத்திற்கு கீழ் வரும் சரம், ஸ்திரம், உபயம் முறையே சர ராசி (Movable sign), ஸ்திர ராசி (Fixed sign), உபய ராசி (common sign) ஆகியவற்றை குறிக்கும்.

பூமி தன்னை தானே சுற்றிகொள்வதால் 24 மணி நேரத்தில் ராசி மண்டலத்தை முழுவதும் சுற்றிவிடுகிறது. ஒவ்வொரு ராசியும் கிழக்கே உதயமாகி மேற்கே மறைவதுபோல் தோன்றும். ஒரு ராசி சுமார் 2 மணி நேரம் உதயமாகும். ஜாதகத்தில் லக்னம் என்பது ஒருவர் பிறக்கும்போது கீழ்வானில் (Eastern horizon) உதயமாகும் ராசியாகும். லக்னம் என்பதே முதல் வீடாக ஜாதகத்தில் குறிக்கப்படுகிறது.

ஒருவர் பிறக்கும்போது சந்திரன் இருக்கும் ராசியே ஜன்ம ராசியாகும். சந்திரன் இருக்கும் நட்சத்திரமே ஜன்ம நட்சத்திரமாகும்.

இப்படி உயிரற்ற கிரகங்களுக்கும் நட்சதிரங்களுக்கும்கூட ஜோதிடத்தில் பாலின வேறுபாடு கற்பிக்கப்பட்டு உள்ளது.

சனிப்பெயர்ச்சி

இனி பெயர்ச்சி என்றால் என்னவென்று பார்ப்போம். பொதுவாக சோதிடத்தில் குருப்பெயர்ச்சியும், சனிப்பெயர்ச்சியுமே மிகவும் பிரபலமானதாகவும் முக்கியமானதாகவும் எடுத்துக்கொள்ளப்படுகிறது. சனி, குரு மட்டுமல்லாமல் எல்லா கிரகங்களுக்கும் பெயர்ச்சி உள்ளது. அந்தந்த கிரகங்கள் பூமியை/சூரியனை சுற்றி வரும் காலத்திற்கு ஏற்ப அட்டவணையில் உள்ளவாறு ஒரு இராசியில் இருந்து இன்னொரு இராசிக்கு இடம் பெயர காலம் எடுத்துக்கொள்ளும்.

மொத்தம் உள்ள 12 இராசிகளில் கோள்கள் இடம் பெயர எடுத்துக் கொள்ளும் காலம்

கோள்களின் பெயர்             சூரியனை சுற்றிவரும் காலம்       இடம் பெயரும் காலம்

சந்திரன்                                              27 நாட்கள்                                             2 ¼ நாள்

இராகு, கேது                                     18 ஆண்டுகள்                                       1 ½ வருடம்

குரு (வியாழன்)                                             12 ஆண்டுகள்                                                      ஒரு வருடம்

செவ்வாய்                                         18 மாதங்கள்                                          1 ½ மாதம்

சுக்கிரன், புதன்                                               ஒரு மாதம்

சூரியன்                                                             ஒரு மாதம்

சனிக்கோள் சூரியனை சுற்றிவர 30 ஆண்டுகள் ஆகும். 12 இராசிகள் உள்ள சூரியவீதியில் சனி ஒவ்வொரு இராசியிலும் சுமார் 2½ ஆண்டுகள் காணப்படும். இதனைத்தான் அந்த இராசியை சனி பிடித்துள்ளதாக கூறுகிறார்கள். 2½ ஆண்டுகள் கழித்து சனி அந்த இராசியில் இருந்து விலகி அடுத்த இராசிக்கு இடம் பெயரும். இதனைத்தான் சனிப்பெயர்ச்சி என்று கூறுகிறார்கள்.

ஏழரை சனி

ஏழரை நாட்டுச் சனி என்பது சனிக்கோளானது இராசிக்கும் அந்த இராசியின் முன் வீடு இராசியின் அடுத்த வீடு ஆகிய மூன்றிலும் உள்ளதைக் குறிக்கும். சனி கிரகமானது ஒரு இராசியில் இருந்து அடுத்த இராசிக்கு செல்வதற்கு 2½ ஆண்டுகள் ஆகும் என்பதை முன்னரே கண்டோம். இராசிக்கு முன் இராசியில் 2½ ஆண்டுகள், பிறந்த இராசியில் 2½ ஆண்டுகள், அடுத்த இராசியில் 2½ ஆண்டுகள் ஆக 7½ ஆண்டுகளைத்தான் ஏழரை நாட்டுச் சனி என்பர். உதாரணமாக தற்போது சனி கன்னி இராசியில் இருந்து துலாம் இராசிக்கு இடம் பெயர உள்ளது அடுத்து 2½ ஆண்டுகள் கழித்து விருச்சிக இராசிக்கு செல்லவிருக்கிறது. சோதிடத்தின்படி துலாம் இராசிக்காரருக்கு 2½ ஆண்டுகளுக்கு முன்னரே ஏழரை சனி ஆரம்பித்துவிட்டது இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்தே அவரை அது விடும். ஒருவரின் முப்பது ஆண்டுகால வழ்க்கையில் ஏழரை ஆண்டுகள் சனியின் தொல்லையில் கொடுமைக்கு ஆளாகவேண்டும் என்பது அவரின் விதி என்பதே ஜோதிடத்தின் நியதி ஆகும்.

சனிப்பலன்

நீண்ட கால வாழ்விற்கும், மரணத்திற்கும் காரணமாக இருப்பது சனி என்று சோதிடம் கூறுகிறது. வறுமை, கலகம், நோய், அவமரியாதை ஆகியவற்றின் காரணி சனியாகவே வருணிக்கப்படுகிறது. லக்னத்திற்கு 3.6,9,10,11 இடங்களில் சனி இருந்தால் குவியல் குவியலாக பணமும் பொருளும், வேலையாட்களுடன் கூடிய வாழ்வு அமையுமாம். லக்னத்திற்கு 2,4,8,12 இடத்தில் இருந்தால் துன்பமும், துயரமும், கஷ்ட நஷ்டங்களும் தொடர்கதையாய்த் தொடரும் எனக் கதை விடுகிறார்கள். இந்தியாவில் வறுமைக் கோட்டின் கீழ் 40 சதவீதத்திற்கு மேல் இருக்கிறார்கள் இவர்களின் வாழ்க்கை லக்னத்திற்கு 3,6,9,10,11 இடங்களில் சனி வராமல் இல்லை, ஆனால் நாளுக்கு நாள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டுதான் இருக்கிறது மறுபுறம் பெருமுதலாளிகளின் சொத்தும் பெருகிக்கொண்டுதான் இருக்கிறது. இதற்கு காரணம் சனிதான் என்று சொல்லி அதுதான் விதி விதிப்படிதான் நடக்கும் எனக்கூறி மக்களை ஏமாற்றி அவர்களின் போராட்டக் குணங்களை மழுங்கடிக்கச்செய்கிறது ஒரு கூட்டம் அதற்கு தூபம் போட ஏற்பட்டதே ஜோதிட குவியல்கள்.

சூரிய குடும்பத்தில் சனி

சனிக்கோள்   பூமியிலிருந்து தூரம்    127 கோடி கி.மீ

சூரியனிலிருந்து தூரம்                          142 கோடி கி.மீ

சுற்றளவு                                                     1,21,000 கி.மீ (பூமியைப் போல் 9 மடங்கு)

சுற்றிக்கொள்ளும் நேரம்                10½ மணி (பூமி 24 மணி)

சூரியனை சுற்றி வர காலம்                30 ஆண்டுகள் (பூமி ஒரு ஆண்டு)

குளிர் நிலை                                   -185oC

அடர்த்தி                                                     தண்ணீரை விட குறைவு (தண்ணீரில் மிதக்கும்)

துணைக்கோள்கள்                                31 (பூமிக்கு ஒரே ஒரு சந்திரன் மட்டும்)

சூரியனில் இருந்து உள்ள இடம்   6 (பூமி 3 ஆவது இடம்)

வடிவம்                                                    இரண்டாவது பெரிய கிரகம் (பூமியைவிட 1000 மடங்கு பெரியது)

தன்மை                                                     பெரும்பகுதி காற்றால் ஆனது (பூமி- நிலம், நீர், காற்றால் ஆகிய மூன்றால் ஆனது)

சனிக்கோளில் இருந்து வரும் ஒளி பூமியை வந்தடைய எடுத்துக் கொள்ளும் நேரம்  1 மணி 28 நிமிடம் (விநாடிக்கு 3,30,000 கி.மீ வேகம்)

வாயுக்கிரகமாக உள்ளதால் இதன் அடர்த்தி தண்ணீரைவிட மிகக்குறைவானது. சனியைவிட மிகப்பெரிய கடல் நம்மிடம் இருந்து அதில் சனியை தூக்கி போட்டால் சனி மூழ்காமல் மிதக்கும் என்பது ஆச்சரியமான உண்மை. இதன் காரணமாக மனிதன் அனுப்பும் செயற்கை கோள்கள் செவ்வாயிலும் சந்திரனிலும் தரை இறங்குவதைப்போல சனியில் தரை இறங்கமுடியாது. ஏனென்றால் இதற்கு உறுதியான தரைப்பரப்பு இல்லை குளிரால் ஆண்டு முழுவதும் வறண்டு கிடக்கும் இக்கோளை மிகவும் சக்தி வாய்ந்தது என்று கூசாமல் எப்படித்தான் பொய் சொல்கிறார்களோ?.

கோள்களிடம் உள்ள சக்தி

சோதிடத்தில் கிரகங்களுக்கு அளப்பறிய சக்தி உள்ளதாக சித்தரிக்கப்பட்டு உள்ளது. சனி, செவ்வாய், குரு போன்ற கிரகங்கள் மிகவும் சக்தி வாய்ந்ததாக காட்டப்பட்டுள்ளது. உண்மையில் சூரிய குடும்பத்தில் சக்தி உள்ள ஒன்று உள்ளதென்றால் அது சூரியனே ஆகும். சூரியன் மிகப்பெரிய அணுவுலையாகும். இதன் அளப்பரிய வெப்ப ஆற்றல், ஒளி ஆற்றல், காந்த ஆற்றல், ஈர்ப்பு விசை, புற ஊதாக்க்கதிவீச்சு போன்றவை மற்ற எந்த கிரகங்களுக்கும் இல்லை. உண்மையில் சூரியனுக்கு அடுத்த நிலையில் உள்ள கிரகம் பூமியே ஆகும். இதில் மனித உயிர்வாழ்க்கைக்குத் தேவையான தண்ணீரில் இருந்து, காற்று மண்டலமும் உள்ளது. வேறு எந்த கிரகமும் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் ஈர்ப்பு விசையைத்தவிர (அதுவும் குறிப்பிட்ட தூரத்திற்கு மட்டும்) வேறு சக்தி இல்லை. அவ்வளவு ஏன் சொந்தமாக ஓளி ஆற்றால்கூட இல்லை சூரியனிடம் இருந்து ஒளியை கடன்வாங்கி பிரதிபளிக்கக்கூடிய அளவிலேயே இவை உள்ளன. வெறும் வெற்று கிரகங்களான இவை அறிவியல் விதியான ஈர்ப்புவிசையின்படி சூரிய மண்டலத்தில் உள்ளனவே தவிர இவற்றிற்கு என எந்த சொந்த ஆற்றலும் இல்லை. இக்கிரகங்கள் பூமியில் இருந்து கோடிக்கணக்கான கி.மீ தூரத்தில் உள்ளதால் இந்த ஈர்ப்பு விசையும் பூமியை எட்டவே எட்டாது. ஆனால் சோதிடத்தில் பேராற்றல் உள்ள சூரியனும் டம்மி பீஸ்களாக செத்துப்போன எரிமலையும், வறண்டு போன ஆறுகளும், கடுங்குளிரும் கொண்ட மற்ற கிரகங்களும் சக்தி உள்ளவைப் போல் சித்தரிக்கப்பட்டு உள்ளது வேடிக்கையான ஒன்று.

கிரக நிலை மனிதனின் வாழ்க்கையை பாதிக்குமா?

1993 ஆம் ஆண்டுகளில் டெல்லியில் உள்ள சனிபகவானின் கோவிலுக்கு சனிக்கிழமைகளில் 100 முதல் 200 பேர் வந்து கொண்டிருந்தனர். ஆனால் தற்போது 1000 பேருக்கு மேல் வருவதாகக் கணக்கிட்டுள்ளனர். வந்தவர்களின் பிரச்சினைகள் தீர்ந்துள்ளதா எனக்கேட்டால், அப்படி ஒன்றும் இல்லை என்கின்றனர். பிரபலமான வானவியல் அறிவியலாளர் ஜெயாண்டி வி.நார்லிக்கர் கூறும்போது சனியைப் பற்றி பேசப்படும், சொல்லப்படும் கருத்துக்கள் அனைத்தும் தவறானது ஆகும். இதில் எந்தவித அறிவியல் உண்மையோ, செயல்பாடோ கிடையாது என்கிறார்.

உலகில் உள்ள மனிதர்களையும் ஜீவராசிகளையும் தங்களுடைய அதிகார பலத்தினால் ஆட்டிப்படைப்பவர்கள் இந்த ஒன்பது கிரகங்கள்தான் என்கிறது ஜோதிடம். இந்தியாவில் தற்போதைய மக்கள் தொகை 120 கோடி ஆகும். இவர்கள் அனைவரும் 12 இராசிக்குள்தான் வருவார்கள். அப்படி என்றால் ஒரு இராசியில் 10 கோடி பேர் உள்ளனர். இவர்களின் வாழ்க்கை நிலை ஒன்றுபோல் உள்ளதா? என்றால் இல்லை

சமுதாயத்தில் உள்ள சாதி, தீண்டாமை, ஏற்றத்தாழ்வு, வேலையின்மை, உலகமயம், தனியார் மயம், தாராள மயம் மற்றும் அரசு கடைபிடிக்கும் தவறான பொருளாதாரக் கொள்கைகள்தான் மனிதனின் வாழ்க்கையைப் பாதிக்கிறது. வறுமைக்கும் கூட இவைகள்தான் இன்றளவும் காரணமாகவுள்ளது.

அறிவியல் பார்வை

பழக்கத்தின் காரணமாக பிடிவாதமாக நமது முன்னோர்கள் நம்பி வந்த நம்பிக்கை இதுவரை தொடர்ந்து வந்துள்ளது. நம்மீது விடாப்பிடியாக உள்ள அந்த நம்பிக்கை மீது நாம் சந்தேகிக்க மறுக்கிறோம். வானவியலை நன்கு அறிந்துகொள்வதின் மூலம் நமக்கு உண்மை புலப்படும்.

உண்மையில் சனிக்கிரகத்தின் வளையமானது அதற்கு அழகைக் கூட்டுகிறது. சிறந்த ஓவியரால்கூட தீட்ட முடியாத வண்ணங்கள் அதில் உள்ளன. வேறு எந்த கிரகத்திற்கும் இல்லாத அழகும், அதிசயமும் சனிக்கிரகத்திற்கு மட்டும்தான் உண்டு.

இனி சனியன் என யாரும் திட்டினால் அதற்குக் கோபமோ, வருத்தப்படவோ வேண்டியதில்லை. சனியைப் பற்றிய முழு உண்மைத் தெரிந்தவர்கள் சனியன் என்றால் மிகவும் மகிழ்ச்சியடையலாம்.

ஜனவரி 17, 2015 அன்று, 12:40 காலை மணிக்கு

“மகாவிஷ்ணுவின் ஒன்பது அவதாரங்களையையும் (இது வரை), பிழிந்தெடுதிருக்கிரார்” என்பது திலீப்பின் கருத்து. வைதீக புராணங்களில் வரும் அவதாரக் கொள்கை சைவத்தில் இல்லை என்பதை முதலில் நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். வைதீக மதத்தில் அவதாரம் என்பது பரம்பொருளாகிய இறைவன் (இங்கே விஷ்ணு) ஆன்மாக்களுக்கு ஒரு கருத்தை உணர்த்த உயிர் குல வடிவனாக வந்தார். உயிர் குல வடிவினாக வருவதால் அவர் கோள்களின் நிலைப்பாட்டிற்கு ஏற்ப சோதிடம் சொல்லும் நல்வினை, தீவினை என்ற ஊழ்வினை கட்டுப்பாட்டுக்குள் வந்து விடுவார். அவ்வாறு வந்தவர் மனிதர்களாகிய நம்மை போன்று சோதிடம் சொல்லும் இன்ப துன்பங்களையும் அனுபவிப்பார். இதுதான் திலிப் அவர்கள் சொல்லியது. ஆனால் சைவத்தில் இந்த அவதார நம்பிக்கைகளுக்கு இடமில்லை. சைவத்தில் பரம்பொருளாகிய சிவ பெருமான் எவ்வொரு அவதாரமும் எடுப்பதில்லை. அதனால் ஆன்ம வர்க்கத்திற்கு உட்படாதவர். ஆன்ம வர்க்கத்திற்கு உட்படாத பரம்பொருளை அவரே படைத்த சடமான ஒரு கோள்/கிரகம் (‘planet’) எப்படி பற்றும். விளக்குங்கள் திலிப்!. எப்படி பரம்பொருளான சிவத்திற்கு “ஏலரையோன்” பிடிக்கும். இதைனையும் விளக்குங்கள்?. வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் இல்லை. தாங்கள் சொல்லப் போகும் கருத்திற்கு வேதத்திலோ, வேதாந்தத்தில் குறிக்கப் பட்ட ஆதாரங்ககளை கொண்டு விளக்குங்கள். தொடரும்.

ஜனவரி 17, 2015 அன்று, 12:42 காலை மணிக்கு

“ஆகையால் 12 ஜோதிர்லிங்கமாக தான் சிவம் அவதரித்து உள்ளார்”. இது வைதீர்களின் கருத்து. இதற்கு சைவ சித்தாந்தத்தில் இடமில்லை. மீண்டும் சொல்கின்றேன். சைவ சித்தாந்திற்க்கு புறம்பான புராணக் கதைகளுக்கு சைவத்தில் இடமில்லை. தொடரும்.

ஜனவரி 17, 2015 அன்று, 1:06 காலை மணிக்கு

“பிரம்மாவிற்கும் 7.5 சனி பிடித்து, மதி கெட்டு படைக்கும் கடவுளான அவரின் எல்லா வித புகழ்ச்சியையையும் இழந்தார், தெரியாதா?”. ஏன் பிரம்மாவிர்க்கும், விஷ்னுவிர்க்கும்/திருமாலுக்கும் “ஏலரையோன்” பிடிக்க வேண்டும்?. சைவத்தில் இவ்விருவரின் நிலை முத்திப் பெற்ற விஞ்ஞானக்கலர் “ஆன்மாக்கள்”. (தேவர்கள்). இவ்விருவர் சிவத்தின் அதிட்ட தெய்வமாக உருத்திரனுடன் இருந்து படைக்கும், காக்கும் தொழிலை செய்பவர்கள். இவர்கள் சிவத்தை மறந்து ஆணவச் செருக்கால் தாமே உயர்ந்தவர் என்று எண்ணி இருக்கையில், செவ்வொளியாகி நின்ற சிவத்தை அடி முடி தேடி கிடைக்காமல் சோர்வுற்று சிவபெருமானின் மேம்மையை ஒற்றுக் கொண்டார்களே அது தங்களுக்குத் தெரியாதோ?. அல்லது இப்படி ஒரு புராணக் கதை இல்லை என்று சாதிக்கப் போகின்றீர்களா?. அதைத்தானே திருஞானசம்பந்தர் தனது பெரும்பாலான பதிகங்களில் 9-வது பாடலில் உணர்த்தும் கருத்து. அவற்றில் ஒன்று கீழ்கானும்வாறு:

“மாலொடு அயன் அறியாத வண்ணமுள்ளது நீறு” (2.66.9) (வார்த்தைகள் பிரித்து எழுதப்பட்டுள்ளது).

இப்பொழுது தெரிகின்றதா ஏன் பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் பிடித்த “ஏலரையோன்” பரம்பொருளாகிய சிவத்திற்கு பிடிப்பதில்லை என்று. அறிந்து கொண்டு சிவத்தைப் போற்றுக. தொடரும்.

http://www.tamil.freehoroscopesonline.in/zodiac-ecliptic.php



ஜனவரி 17, 2015 அன்று, 1:14 காலை மணிக்கு

“உங்கள் சைவ சித்தாந்த போதனைகளை மட்டும் வியாபாரம் செய்ய ஆசை படுகிறீர்கள். அதனால் தான் உங்கள் வகுப்புகளை மறைமுகமாக இங்கே விளம்பரம் செய்கிறீர்கள்”. திலிப், சைவத்தின் மேன்மையை எம்மக்களாகிய தமிழர்களுக்கு செம்பருத்தியின் வழி உணர்த்த வாய்ப்பு கொடுத்தது தாங்களும், இந்து தருமருமே. சைவத்திற்கு எதிரான விமர்சனங்களை கொண்டு வந்தீர்கள். அதற்கு பதில் கொடுத்தேன். அதெப்படி இது விளம்பரமாகும்?. தங்கள் வாதம் சரியென்றால், தாங்களும் வைதீக மதத்தினை இங்கே விளம்பரம் செய்யத்தானோ எழுதினீர்கள்?. சைவத்தை வாழ வைத்த உங்கள் இருவருக்கும் அல்லவா யாம் நன்றிக் கடன் பட்டிருக்கின்றோம். எவ்வாறு தாங்கள் வைதீக மதத்தை முன்னிறுத்தி பேசுகின்றீர்களோ அவ்வாறே யாமும் தமிழர் கண்ட சைவத்தின் மேன்மையை முன்னிறுத்திப் பேசுகின்றேன். இதில் என்ன தவறு இருக்க முடியும். தொடரும்.

ஜனவரி 17, 2015 அன்று, 1:27 காலை மணிக்கு

“அதிலும் நீங்கள் விளக்கினால் தான் தோடுடைய செவியன் , தோடுடைய செவியனாக இருப்பார் என்றும் இணையம் விளக்கினால் அது மேலோட்டமானது என்றும், நான் விளக்கினால் அது தவறு என்றும் பறைசாட்ருகீரீர்கள்”. திலிப், தமிழில் இவ்வளவு புலமை பெற்றுள்ள தாங்கள் எப்படி சைவத்தின் திருமுறைகளையும், மெய்கண்ட சாத்திரங்களையும் கற்று அறியாமல் போனீர்கள்?. இதற்க்கு தாங்கள் முதலில் பதில் கொடுக்க வேண்டும். இவை தங்களைப் போன்று அல்லாத தமிழரின் படைப்புக்கள் என்பதால் தங்களுக்கு இவற்றில் ஆர்வமில்லாமல் போனதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றுமில்லை. அதனால்தான் சொல்கின்றேன், உண்மைச் சைவராக இருப்போருக்கு மட்டுமே சைவ அடியார் பெருமக்களின் உள் மனதை அறிய முடியும். அவ்வாறு அல்லாதவர்களுக்கு சைவத்தை பற்றிய மேற்போக்கான அறிவே இருக்கும். பின்னதில். நீங்களும் ‘saivam.org’ அடங்கும். சைவத்திருமுறைகளுக்கு விளக்கம் வேண்டுமாயின், ‘thevaaram.org’ –யில் பொழிப்புரையும், விளக்க உரையையும் படியுங்கள். அதிலும் வைதீகக் கலப்பு உள்ளதை நான் அறிவேன். இருந்தாலும் இணையத்தில் இருக்கும் திருமுறைப் பற்றிய தகவல்களுக்கு இதுவே சிறந்த இடம். தொடரும்.

சனவரி 17, 2015 அன்று, 1:38 காலை மணிக்கு

“இந்து மத போதகங்களின் தொகுப்பு ஒன்றை” இணையத்திலிருந்து எடுத்து ஆங்கிலத்தில் தொகுத்துக் கொடுத்தீர்கள்!. அதனால்தான் தங்களை இணைய யோக்கியன் என்றேன். ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது அப்பனே. ஒரு குருவை நாடி வேதாந்தத்தை முதலில் கற்று அறியவும். அப்புறம் தாங்கள் கற்ற வைதீக புராணங்களை எல்லாம் மறந்து விடுவீர்கள். தாங்கள் சொன்ன இந்து மத ஆங்கில தொகுப்பை எவ்வாறு எம் தமிழர்களிடம் கொடுத்து மீண்டும் ஆரிய மூளை சலவை செய்கின்றீர் என்பது தெளிவு. தமிழரின் சைவத்தைப் பற்றித் தெளிவில்லாமல் இருக்கும் தமிழரிடம், எதை விற்றாலும் விற்பனையாகும்!. அவ்வளவு மூடர்கள் அவர்கள். வாழ்க தங்கள் சமய வியாபாரம். தமிழரே அறிவீர், மேலும் ஒரு வைதீக மத வியாபாரி தங்களை நோக்கி வரவிருக்கின்றார்!. அபாயம்! அபாயம்!. எச்சரிக்கை மணி அடிக்கின்றேன்!.

ஜனவரி 17, 2015 அன்று, 1:44 காலை மணிக்கு

தேனீ அவர்களே, திட்டம் போட்டு ஏமாற்றுபவர்களிடம் பேசுவது என்பது தெரிந்தே நாம் சாக்கடையில் கை வைப்பது போல். ஏக இறைவன் என்று சைவ சமயம் கூறுகிறது ஆனால் இல்லை இல்லை இறைவன் பல அவர்களுக்கு பல தொழில்கள் உள்ளன மற்றும் குடும்பம் உண்டு என மூட தனமாக பேசுவோரிடம் எவ்வாறு அறிவுபூரமாக பேசமுடியும் ???? இதில் கோள்கள் வேறு….

இதுதான் “பிளான் ” பண்ணி எமற்றுவதோ ?

ஓன்று மட்டும் நிச்சயம் ஐயா, “ஏமாறுவார்கள் இருக்கும் வரையில் எமற்றுவர்கள் ஏமாற்றி கொண்டே இருப்பார்கள் ”

இண்டுதர்மன் மற்றும் திலிப் 2 , உங்களிடம் ஒரு கேள்வி,: உங்களின் முதல் வேதம் (ரிக் ) எந்த காலகட்டத்தில் எழுத பட்டது அதன் அடக்கம் என்ன? உங்கள் வேதத்தை எழுதிவர்கள் மாட்டு இறைச்சி உட் கொண்டார்களா இல்லையா ? ஏன் வட இந்தியர்களின் மரபணு தென் நாட்டவரிடமிருந்து வேறு பட்டுள்ளது ? ஆனால் தென் நாட்டவரின் மரபணு பிகார் மற்றும் சில மேற்கு இந்திய மாநிலங்களுடன் சமமாக உள்ளது (சில பகுதியில்) ? இவர்கள் அனைவரும் அவ்விடத்து பூர்வீக மக்களே ….ஏன் ?

நீங்கள் கூறிய கதைகளுக்கு வரலாற்று மற்றும் அறிவியல் மூலம் உங்கள் பதில்களை வைத்து ஆராய்வோம் ……..பாப்போம் உங்கள் பதில்களை …..

ஜனவரி 17, 2015 அன்று, 6:15 காலை மணிக்கு

தேனீ அவர்களே, “சைவ சித்தாந்திர்க்குப் புறம்பான எவ்வொரு புராணக் கதைகளுக்கும் சைவத்தில் இடமில்லை” என்று நீங்களே எழுதி விட்டு, இப்பொழுது அதை விளக்கு, இதை விளக்கு என்றால் நான் என்ன செய்ய ? சரி நான் விளக்கி விட்டால் மட்டும் தாங்கள் ஏற்று கொள்வீர்களா? இது நொள்ள, அது கிடையாது, இதை நாங்கள் ஏற்று கொள்ள மாட்டோம் என்று வாதாடுவீர். தாங்கள் இது வரை என் கேள்விக்கு எந்த ஒரு விளக்கமும் தராமல், அதை விளக்கு, இதை விளக்கு என்றால், என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை. தங்களால் விளக்க முடிந்தால் சைவ சித்தாந்தம் என்கிறீர்கள், முடிய வில்லை என்றால் சைவம் என்கிறீர்கள். பிறகு தமிழர் கண்ட சைவம் வேறு, வைதீக மத சைவம் வேறு என்கிறீர்கள். எனக்கே போரடித்து விட்டது ஐயா……… உங்களுக்கு விளக்குவதை விட ஒரு எருமை மாட்டிட்கு விளக்கியிருந்தால் இந்நேரம் இரண்டடியாவது நகர்ந்திருக்கும். இதில் இதை காட்டு அதை காட்டு என்று ‘டார்செர்’ வேறு. காரணம் இந்து மதம் ஒரு சமுத்திரம். அதில் ஒரு குறிப்பிட்ட சுலோகத்தை மட்டும் ஒரு குறிப்பிட்ட தருனதிர்க்கு காட்ட முடியாது; இதை தெரிந்து கொண்டு என்னை சீண்டுகிறீர்கள். தங்களின் மேல் மாடியில் என்ன தோன்றுகிறது என்றால், மட்ட்ரவர்கலைபோல் எல்லா விளக்கமும் சுலோகமாக தான் இருக்க வேண்டும்; இந்த வைதீக மதத்தில். புராணங்கள் சுலோகமாக எல்லா இடங்களிலும் இருக்காது. கேள்வி கேட்பதற்கு முன் கேள்வியை சரியாக கேட்க வேண்டும். தேனீ அவர்களே, சிவ புராணத்திலும், விஷ்ணு புராணத்திலும் தெளிவாக உள்ளதையா உரை நடைகள் (இந்து மதத்தில் 18 புராணங்கள் இருக்கிறது.

அவை: மஹா விஷ்ணுவுக்காக 6 புராணங்கள், சிவதிர்க்காக 6 புராணங்கள், பிரமனுக்காக 6 புராணங்கள் உள்ளன (விஷ்ணு, நரடிய, ஸ்ரீமத் பாகவட, கருட, பத்ம, வரஹா, பிரம்ம, பிராமண்ட, பிரம்மா வைவர்ட, மார்கண்டேய, பவிஷ்ய, வாமன, மத்ஸ்ய, குர்ம, லிங்க, சிவ, ஸ்கந்த மற்றும் அக்னி புராணங்கள்)). பிரம புராணத்தில் பிரம்மாவை சனி எப்படி எப்படி எல்லாம் ஆட்டிபடைதார் என்று இருக்கிறது. நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்கள். இந்து மதத்தில் 18 உபபுராணங்கள் இருக்கிறது (சனத்குமார, நரசிம்ஹா, பிரிஹன்னராடிய, சிவரகுஅஷ்ய, துர்வாச, கபில, வாமன, பார்கவ, வருண, களிக, சம்ப, நந்தி, சூர்ய, பரசர, வசிச்த, தேவி-பகவத , கணேச மற்றும் ஹம்ச உபபுராணங்கள்). இதில் இதிகாசங்கள் 4: அவை வால்மீகி ராமாயணம், யோகா வசிஹ்ட்ட, மகாபாரதம், ஹரிவம்ச புராணம். படைக்கும், காக்கும், அழிக்கும் கடவுள்களில் முவரில் யார் உயர்ந்தவர்கள் என்று அவர்களிடையே போட்டி வந்ததும், சிவ பெருமானின் சிரசை முதலில் யார் பார்கிறார்களோ அவர்களே மும்மூர்த்திகளில் முதல்வர் என்று தீர்மானம் ஆனது. நன்றாக படியுங்கள் “தீர்மானம் ஆனது”. அப்படியென்றால் சிவமும் அதற்கு ஒத்து கொண்டார் என்று பொருள். அப்படி என்றால் சிவனும் அதற்கு ஒத்து கொண்டு தங்களில் யார் முதல் மூர்த்தி என்று தெரிந்து கொள்ள ஆவலாய் இருந்திருக்கிறார். முடிவில் விஷ்ணு அவர்கள் வராக அவதாரம் பூண்டு, சிவனின் திருவடியை தீண்டி, சிரசை கண்டு, தானே மும்மூர்த்திகளில் முதல்வர் என்று நிரூபித்தார். மும்மூர்த்திகளில் முதல்வர் மஹா விஷ்ணுவே (இப்பொழுது தாங்கள் புது பஞ்சாயத்தை ஆரம்பிப்பீர்கள், தேனீ அவர்களே)……………………………………………….. இதில் தங்களிடம் இருந்து இப்படி ஒரு பொய்: “இவர்கள் (பிரம்மாவும் விஷ்ணுவும்) சிவத்தை மறந்து ஆணவச் செருக்கால் தாமே உயர்ந்தவர் என்று எண்ணி இருக்கையில், செவ்வொளியாகி நின்ற சிவத்தை அடி முடி தேடி கிடைக்காமல் சோர்வுற்று சிவபெருமானின் மேம்மையை ஒற்றுக் கொண்டார்களே அது தங்களுக்குத் தெரியாதோ?.”………………………………………………………..

இந்து மத போதகங்கள் மிகவும் நீளமானது; இதில் மூலமே சுலோகங்களை போல் இருக்கும், மற்றவை உரை நடைகலாக இருக்கும். உதாரனத்திற்க்கு, தேவி ஸ்ரீ புராணம் 18,000 சுலோகங்கள் கொண்டது. உபநிஷத் சுலோகங்கள், ஒவ்வொன்றும் குறைந்தது 700 ரில் இருந்து அதிகம் 12,000 வரை இருக்கும் (இப்பொழுது 108 உபநிஷத்தில் உள்ள சுலோகங்கள் எத்தனை?) நான்கு வேதங்களும் (ரிக், யஜுர், சாம, அதர்வண) 20380 சுலோகங்கள் கொண்டது. மகாபாரதம் 110,000 சுலோகங்கள் கொண்டது. ராமாயணம் 24,000 சுலோகங்கள் கொண்டது. பதஞ்சலியின் யோகா சாஸ்திரம் 4 புத்தக நீதி மொழி என்று 196 உரை நடைகள் உள்ளது. உபவேதங்கள்: 1) ஆயுர் வேதம் 100,000 சுலோகங்கள் கொண்டது, 2) அர்த்த சாஸ்திரம் 15 புத்தகங்களை கொண்டது – 70,000 சுலோகத்திற்கு மேல் உள்ளது, 3) காந்தர்வ சாஸ்திரம் 6000 சுலோகம் கொண்டது, 4) தனுர் வேதம் 226 உரை நடைகள் கொண்டது. சில விளக்கங்கள் சம்ஹிதா சாயலில் இருக்கும், அல்லது கேள்வி பதில் போல இருக்கும். பிரம சூதிரம் போல. தேனீ அவர்களே, நீங்கள் கேட்பது போல குறிபிட்டு சொல்வதென்றால், இவை அனைதையையும் நான் மனதில் வைத்திருக்க வேண்டும், நீங்கள் கேட்டவுடனே பரிசைக்கு ஒப்பிப்பது போல் ஒப்பிக்க வேண்டும். எனக்கு வேற வேலையில்லையா? [(பின் குறிப்பு: குரான் 6666 சுலோகங்களை மட்டுமே கொண்டது; பைபிள் 31,102 சுலோகங்களை மட்டுமே கொண்டது)] 1976 ஆம் ஆண்டு தசாவதாரம் என்று ஒரு தமிழ் படம். அதில் 10 மஹா விஷ்ணுவின் அவதாரங்களையும் விளக்கும் படம். அதில் சிவம் தோற்று, மஹா விஷ்ணு வெற்றி கொள்வார், மூவரில் யார் முதல்வர் என்ற போட்டியில். 8 கோடி தமிழ் நாட்டு தமிழர்களில் ஒருவர் கூட அதை எதிர்க்க வில்லை. உண்மையிலேயே பாவம் நீங்கள்; நிறுத்துங்கள் உங்கள் விதண்டாவாதத்தை! Youtube பில் இந்த தசாஅவதாரம் படம் இலவசமாக உள்ளது, உங்களை போன்றோர்களுக்கு.

 wrote on 17 January, 2015, 0:42

ஆகையால் 12 ஜோதிர்லிங்கமாக தான் சிவம் அவதரித்து உள்ளார்”. இது வைதீர்களின் கருத்து. இதற்கு சைவ சித்தாந்தத்தில் இடமில்லை. மீண்டும் சொல்கின்றேன். சைவ சித்தாந்திற்க்கு புறம்பான புராணக் கதைகளுக்கு சைவத்தில் இடமில்லை. தொடரும்……………..இப்படி சொல்லி விட்டு , விளக்கு விளக்கு விளக்கு என்றால் நான் என்ன செய்ய ?

ஜனவரி 17, 2015 அன்று, 8:45 காலை மணிக்கு

தமிழரே, தங்களின் 15 January, 2015, 14:28 – ல் பதிவேற்றிய கருத்தைக் கண்டேன். சைவத்தைப் புரிந்துக் கொண்டவர்களில் தாங்களும் ஒருவர் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகின்றேன். உலகியல் இன்பத்தை நோக்கியே வைதீக பண்பாடு நிற்கின்றது. இவர்கள், வேதாந்தம் உணர்த்தும் மெய்பொருளை மறந்து விட்டனர். இத்தகைய பண்பாட்டின் பயன் இம்மைக்கு மட்டுமே. இந்த பூத உடலுக்கு மட்டுமே. உயிருக்கு அல்ல. ஆணவ மலத்தில் கட்டுண்டு அறியாமை எனும் இருளில் கிடக்கும் உயிர், அவ்வறியாமையில் இருந்து நீங்கி, பக்குவப்பட்ட ஆன்மாவாக நின்று, மெய்பொருளை உணர்ந்து, அதனைச் சார்ந்து நிற்கவே, சிவ பெருமான் உயிர்களுக்காக தனு, கரண, புவன, போகங்களை படைத்தார் என்று விளக்கும் சைவ சித்தாந்தம். இந்த உண்மை நிலையை அறியாத மாக்கள் இப்பூவுலகிற்கு வந்த வேலையை மறந்து விட்டு பந்தக் காலை (உலகியல் இன்பத்தை) பிடித்துக் கொண்டு நிற்கின்றன. இதன் விளைவே, இந்து மதம் என்ற கூட்டுக் குடும்பத்தில் இன்று நரக வேதனை படுகின்றார் நம்மக்கள். சமயம் என்பதே இன்று ஒரு மாபெரும் வியாபாரம் ஆகி விட்டது. கற்று அறிந்தோர் இதன் விளைவாலே இந்து மதத்தை விட்டு, உலகியல் நற்பண்புகளை உணர்த்துகின்றோம் என்று கூறும் பாபா குழுமங்களுக்கு ஓடிக் கொண்டிருக்கின்றனர். அங்கே அவர்களின் தேவைக்கும் தேடுதலுக்கும் ஒரு தீர்வு (‘solution’) கிடைக்கின்றது என்கிறார்கள். இதன் விளைவு சித்தன் சொல்லுவது போல இந்நாட்டில் நமது பல ஆலயங்கள் பெரிய காட்சிப் பொருளாக விளங்குகின்றன ஆனால் அங்கே உயிர்கள் இல்லை என்பது நிதர்சன உண்மை.

ஜனவரி 17, 2015 அன்று, 8:55 காலை மணிக்கு

இந்து தருமரே, தங்களின் 15 January, 2015, 14:48- ல் பதிவிட்ட கருத்து பிழை. திலிப் அவர்கள் 12-1-2015-ல் பதிவிட்ட கருத்துக்கு பதிலாகவே சிவம் எனும் பரம்பொருளுக்கு “ஏலரையோன்” பிடிப்பதில்லை என்று உணர்த்தவே மறுமொழி எழுதினேன். யாம் திலீப்புக்கு போட்டுக் கொடுக்கவில்லை மாறாக வேட்டு வைத்தேன்.

ஜனவரி 17, 2015 அன்று, 9:00 காலை மணிக்கு

என் தாய் காட்டிய ஈசன் என் தந்தை காட்டிய ஈசன் என் ஆசான்,என் ஆசான் காட்டிய ஈசன் என் மகா ஈசன்(மகேசன்); பரம்பொருள்!

தாயிர்த்சிறந்த கோவிலும்மில்லை தந்தை சொல்மிக்க மந்திரமும் இல்லை.

ஜனவரி 17, 2015 அன்று, 9:08 காலை மணிக்கு

“சிவம் தன் மனைவி சக்தியை பிரிந்ததினால், எல்லாவட்ரையையும் இழந்து, பின்பு சக்தி இலையேல் சிவம் இல்லை என்று ஒப்பு கொண்டு, தன் உடம்பில் பாதியை தந்து, அர்த்தனாரீர்ஸ்வரர் அவதாரத்தை தர வில்லையா ? பாவம் சிவம் ! நிச்சயமாக இந்த சைவ சித்தாந்த வாதிகள் இந்த சிவத்திற்கு விவாகரத்து வாங்கி கொடுத்து விடுவார்கள்,” என்னே அறியாமையில் எழுதுகின்றீர் திலிப்?.

“அன்பும் சிவமும் இரண்டு என்பார் அன்பிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே. (திருமந்திரம் 10:270)

அன்பாகிய சத்தியும், அறிவாகிய சிவமும் ஒன்றே என்று உணர்த்துவது சைவத்தின் மாண்பு. இத்தத்துவத்தை பாமரர்களுக்கு உணர்த்த வந்ததே சிவ மஹா புராண கதைகள். தாங்கள் கதையை மட்டும் தெரிந்து வைத்திருக்கின்றீர்கள். ஆனால் அதற்கு மூலமான திருமந்திரத்தை அறிந்து வைத்திருக்கவில்லையே திலிப். திரோந்திரத்தையும் படியுங்கள். தங்கள் இணைய மின்னியல் மூளை இன்னும் வேகமாக செயல்பட உதவும்.

ஜனவரி 17, 2015 அன்று, 9:14 காலை மணிக்கு

இந்து தருமாறே, “எம்வுருவில் சிவமே வந்து பேசும்” பேசும் என்று சொன்னது, சிவத்தை நிந்திக்க, நிந்திக்க, எம்வுரு கோபக்கணையால் சிவக்கும் என்றேன். யாமே சிவமாகுவேன் என்பது சிற்றறிவு கொண்ட மானுடர்க்கு எட்டாது என்பதை அறியாதவர் அல்ல யாம். திருத்தி புரிந்துக் கொள்வீராக.

ஜனவரி 17, 2015 அன்று, 9:26 காலை மணிக்கு

“மேலும் நானாக வழியே வந்து, இந்த தமிழர்களை கொண்ட சைவ சித்தாந்த மார்க்கத்தை தொகுக்க உதவுகிறேன்,” என்னய்யா திலிப், சைவத்தைப் பற்றி இவ்வளவு பெரிய அறியாமைல் இருக்கின்றீர் என்பதை அறிந்து யாம் பிரமித்துப் போய் விட்டோம். சுத்த சைவ சித்தாந்தத்தின் கோட்பாடுகள் நெறிபடுத்தப்பட்டு, முறைபடுத்தப் பட்டு மெய்கண்ட சாத்திரங்களாக வந்தது கி.பி. 13-ம் மற்றும் கி.பி 14-ம் ஆண்டுகளில். இதை என்ன தாங்கள் தொகுப்பதும் நாங்கள் படிப்பதும்!. இது என்ன மடைமை. இதுதான் தாங்கள் கற்றது கை மண் அளவு என்பது. மின்னியல் முதுகலைப் பட்டத்தில் இந்த மெய்கண்ட சாத்திரங்களைக் கற்றுக் கொடுக்கவில்லை போலும்!. அப்படியானால் சைவத்தைக் கற்றுக் கொள்ள தாங்கள் மீண்டும் பாலர் பள்ளிக்கே போக வேண்டும் நைனா!. இதற்குத்தான் “அப்பனுக்கே பாடம் சொல்லித் தர போக வேண்டாம்” என்பது.

ஜனவரி 17, 2015 அன்று, 9:32 காலை மணிக்கு

“1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 என்பது அடிப்படை எண்களின் வருசை. இந்துகளின் கணித சாஷ்திரபடி: 1 = சூரியன், 2 = சந்திரன், 3 = அக்னி , 4 = பிரம்மா , 5 = நமசிவாய ,6 = சரவணபவ , 7 = விநாயகர் , 8 = மகாவிஷ்ணு , 9 = மகிஷாசுறமர்தினி (சக்தி), 0 = பிரபஞ்சம். வானவியல் சோதிடம்தான் இங்கே பிரச்சனைக்குரியது என்று கருத்து எழுத ஆரம்பித்தோம். இப்பொழுதோ திலிப் எண் கணிதத்திற்கும் சென்று விட்டார் போலிருக்கு. இந்த புது விதமான வியாகீனங்கலெல்லாம் தாங்கள் இணையத்தில் கண்டெடுத்த குப்பைகளோ. இன்றிரவு இதைப் பற்றி சொஞ்சம் அலசுவோம்.

ஜனவரி 17, 2015 அன்று, 9:47 காலை மணிக்கு

திலிப் தாங்கள் போட்ட எண் கணித கணக்கு வேதத்திலோ, வேதாந்த்திலோ அல்லது அதன் ஸ்மிருதி நூல்களிலோ எங்கு குறிக்கப் பட்டுள்ளது என்பதை குறிப்பிடவில்லையே!. தங்களின் இந்தக் கூட்டுக் கலைவை எண் கணிதத்திற்கு மூலம் வைதீக மதத்தின் எந்த நூலில் இருக்கின்றது?. இவை எல்லாம் புதிய எண் கணித சோதிட நிபுணர்கள் (?!) போட்ட கருத்தை இங்கே கொண்டு வந்து சமயத்தில் நுழைக்கின்றீர்களே. இது நியாயமா?. இத்தகையச் செயல் இந்து மத சமய அறிவை மேலும் கீழே கொண்டுச் செல்வதற்கு வழி விட்டு பல மாமங்கள் ஓடியாகி விட்டது. இன்று 1 -9 ல் இருந்து நம் வாழ்க்கையை அடைத்து விட்டார்கள் எண் கணித சோதிட நிபுணர்கள். அதில் “முத்தையா”, “முதையா” ஆனா கதையும் ஒன்று. அதில் தாங்களும் அடங்கி விட்டீர்கள் என்பது தங்கள் கருத்தில் இருந்து தெளிவாகின்றது. இன்றிரவு இதைப் பற்றி மேலும் அலசுவோம்.

ஜனவரி 17, 2015 அன்று, 12:29 மணி மணிக்கு

திலிப் வைதீக புராணங்களுக்கும் தமிழர் கண்ட சைவ சமயத்திற்கும் சம்பந்தம் இல்லாத போது அதெல்லாம் படியுங்கள் என்று ஏன் தமிழர்களை வற்புறுத்துகிண்றீர்கள்?. சைவ சமயம், வைதீக சமயத்திற்கு உட்பட்டதல்ல என்று நான் பல முறை சொல்லியும் தாங்கள் அது இந்து மதம் என்ற கூட்டுக் கலவையை கையில் எடுத்துக் கொண்டு படியுங்கள் என்பதில் அர்த்தம் ஏதும் உள்ளதோ?. ஆக, தாங்கள் சைவ சமயத்தின் ஆகமங்களையோ, திருமுறைகளையோ, மெய்கண்ட சாத்திரங்களையோ கற்று அறியமாட்டீர்கள். ஆனால், தமிழர்களாகியோர் ஆரிய வேதத்தையும், வேதாந்தத்தையும், ஸ்மிருதி நூல்களையும், ஆரிய புரானங்ககளையும் கற்க வேண்டும். அதன் படி நிற்க வேண்டும் என்பது எவ்வகையில் நியாயம் ஆகும் அன்பரே?. எங்களைப் பார்த்து தமிழில் மொழி பெயர்க்கப் பட்ட குர் ஆணை படியுங்கள், பைபிளைப் படியுங்கள், படித்து அதன்படி நில்லுங்கள் என்பதற்கு ஒப்பாகும் தங்களின் கூற்று. தமிழர்களை வைதீக மதமாகிய வேற்றொரு மதத்தில் நில்லுங்கள் என்பதே தங்கள் வாதமால் தாங்களும் ஒரு மத வியாபாரி என்பதை பச்சையாக ஒப்புக் கொள்ளுங்கள். மேற்கூறிய வைதீக நூலில் ஒன்றைக் கூட இந்து தருமர் என்போர் படித்திருப்பாரா என்பது சந்தேகமே!. தமிழில் உள்ள மெய் நூல்களை கற்று அறிய முடியவில்லை ஆனால் சமஸ்கிருதத்தில் இருந்து தமிழ் மொழிக்கு மொழிபெயர்த்த நூல்களைப் படித்தா இந்த தமிழர் பண்டிதர் ஆகப் போகின்றீர்?. கூரை ஏறி கோழி பிடிக்க பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போவானா?. ஆகின்றக் காரியத்தைப் பற்றி பேசுங்கள். ஆகாத காரியத்தைப் பற்றி பேசாதீர்கள்.

ஜனவரி 17, 2015 அன்று, 12:36 மணி மணிக்கு

“தேனீ அவர்களே, நீங்கள் கேட்பது போல குறிபிட்டு சொல்வதென்றால், இவை அனைதையையும் நான் மனதில் வைத்திருக்க வேண்டும், நீங்கள் கேட்டவுடனே பரிசைக்கு ஒப்பிப்பது போல் ஒப்பிக்க வேண்டும். எனக்கு வேற வேலையில்லையா?”. திலிப் இவ்வளவையும் தங்கள் மனதில் வைத்திருக்க முடியாது என்று தாங்களே ஒப்புக் கொண்டு அதையெல்லாம் தமிழர் படிக்க வேண்டும், அதன் படி நிற்க வேண்டும் என்பததேல்லாம் சிறுபிள்ளைத்தனமாக இல்லையா?. தங்களுக்கே தெரியாத பல விஷயங்கள் வைதீகத்தில் இருக்க தாங்கள் எமக்கு வைதீக மதத்தைப் பற்றி உபதேசிக்க வந்தது ஏனோ?. இங்கே வந்து மாட்டிக் கொண்டு எப்படி வெளியேறுவது என்று திக்கு முக்காடிப் போயிருக்கின்ரீர். அதனால் எம்மை எருமை என்றெலாம் திட்ட ஆரம்பித்து விட்டீர்கள். இப்பொழுது தங்களுக்கு வேர்த்து வடிய ஆரம்பித்து விட்டது என்பதை நான் கண் கூடாகவே பார்க்கின்றேன். “மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்.” துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடப் போகின்றீர்கள்.

ஜனவரி 17, 2015 அன்று, 12:47 மணி மணிக்கு

இந்த வான ஜோதிடத்தை (9 கோள்களை), விஷ்ணு புராணத்தில், 11 அத்யாயத்தில் தேடவும். ஆரியபாட்ட 1, 10, 100 என்று சுழியனை கொண்டு கணிதம் செய்திருக்கிறார். இவரே ‘குப்தா கணிதத்தில்’ இந்தியர்களின் அடிப்படை கணித மார்க்கத்தையையும் விளக்கி இருக்கிறார் (9 கடவுள்கள்). வான சாஸ்திரத்தை படிக்க சுலப கணிதம் தேவை. இரண்டும் பிரிக்க முடியாதவை. என்களையையும் கோள்களையையும் வான சாஸ்திரத்தில் பிரிக்க முடியாது. இது கூட விளங்க வில்லை இந்த தேனிக்கு ! ஆரியபாட்ட, கிரகங்களின் வட்ட பாதை, நீள் வட்ட பாதை, கிரகங்களின் சுழற்சி, இந்துக்களின் 60 ஆண்டு கால கணிதம், கால விரயம் (1 நாள் = 23 மணி 56 நிமிடம்), மேலும் இன்றைய மாடர்ன் கணிதத்தின் தந்தையாவார்: உதாரனத்திற்க்கு arithmetic, algebra , geometry , trigonometric, pascal trangle, optics, series, etc etc. இவர் தான் பூமியின் எடையை முதலில் கனகிட்டவர். அதுவும் 23 வயதில், 500 AD. இவரை மரியாதை செய்யவே இவர் பெயரிலேயே இந்தியாவில் ஒரு துணைக்கோள் (satellite) உள்ளது. இவரின் கணித தேடலை வழப் படுத்தியவர் லல்லா. ஐயா ஆண்டவன் மெய்பொருள் உணர்த்தவே மனிதர்களை படைதான் என்றால், ஏன் நாகரிகத்தை வளர்க்க உதவினான் ? இத்தனை ஆண்டுகள் பாடு பட்டு மனித குளம் அறிவியலில் தளைத்து நிற்கிறதே! இந்த இணையத்தளம் கூட அப்படி வந்ததுதான். சும்மா எதையாவது யோசிச்சு, எதையாவது பேசி …எங்கோ போனானாம் ஒருத்தன். அப்படி இருக்கிறது கதை. இந்த உலகில் எந்த ஒரு சாஸ்திரம் வந்தாலும் அது இனைய தளத்திற்கு வரகூடாது, அப்படியே வந்தாலும் தேனீ அவர்கள்தான் அதற்கு வியாக்கியானம் செய்வார் (“தோடுடைய செவியன் என்றால், சக்தியும் சிவமும் போல”- இது தேனியின் தத்துவம்: 001). மற்றவர்கள் செய்தால் அது குப்பை. அறிவியலின் முன்னெற்றம் இவரின் கருத்தை மட்டும் சொல்ல. மற்றவர் சொன்னால் அது குப்பை. “சைவ சித்தாந்திர்க்குப் புறம்பான எவ்வொரு புராணக் கதைகளுக்கும் சைவத்தில் இடமில்லை- இது தேனியின் தத்துவம்: 002” என்னமோ சைவத்தை இவர் தான் கண்டு பிடித்த மாதிரி! மேலும் “ஆகையால் 12 ஜோதிர்லிங்கமாக தான் சிவம் அவதரித்து உள்ளார்”. இது வைதீர்களின் கருத்து. இதற்கு சைவ சித்தாந்தத்தில் இடமில்லை (- இது தேனியின் தத்துவம்: 003) என்று தேனீ கூருவீர்களானால், இனிமேல் எந்த ஒரு சிவனாலயதிலும் லிங்கம் இருக்க கூடாது என்று தைரியமாக முழக்கம் இடுங்கள் பார்ப்போம். சைவத்தை தொகுக்க சொன்னது உங்களை. நான் வெளியில் உள்ள கருத்துக்களை முரண்படாமல் பாதுகாத்து ஆலோசனை கூர முடியும். ஒரு லட்சம் வியாக்கியானம் கொண்ட சிவா புராணத்தை, வேத வியாசர் 24,000 குறைத்தார். ஏன் என்று விளக்க முடியுமா தேனீ அவர்களே ? காரணம் அவை காலத்தால் சில ஏற்று கொள்ள முடியாதவைகளை உள்ளடைகியவையாய் ஆயின (Historical distortion). தேனீ அவர்களுக்கு கருத்தில் என்னவெல்லாம் தோன்றுகிறதோ அதையெல்லாம் எழுதுவதே ஒரு வேலை…… இதற்க்கு பதில் எழுதுவது என்பது, எனக்கு 7.5 சனி பிடித்திருக்கிறது என்று பொருள்.

ஜனவரி 17, 2015 அன்று, 5:21 மணி மணிக்கு

“இந்த வான ஜோதிடத்தை (9 கோள்களை), விஷ்ணு புராணத்தில், 11 அத்யாயத்தில் தேடவும். ஆரியபாட்ட 1, 10, 100 என்று சுழியனை கொண்டு கணிதம் செய்திருக்கிறார். இவரே ‘குப்தா கணிதத்தில்’ இதியர்களின் அடிப்படை கணித மார்க்கத்தையையும் விளக்கி இருக்கிறார் (9 கடவுள்கள்). வான சாஸ்திரத்தை படிக்க சுலப கணிதம் தேவை. இரண்டும் பிரிக்க முடியாதவை. என்களையையும் கோள்களையையும் வான சாஸ்திரத்தில் பிரிக்க முடியாது.”. இதைத்தான் திலிப் தங்கள் வாயாலே வர வேண்டும் என்று எதிர்பார்த்துக் கிடந்தேன். “சோதிடம் என்பது கோள்களின் நிலையை கணிதம் கொண்டு கணிப்பது”. இதுதானே உண்மை. அப்புறம் ஏன் அந்த உயிரற்ற சடமான கோள்களுக்கு “பகவான்” பெயரை வைத்து அவற்றையும் நவகிரக தெய்வமாக்க்கிக் கொண்டீர்கள்?. இதுதானே இக்கட்டுரையின் சாரமே. நாம் எல்லாம் கற்ற அறிவியல் பாடம் கோள்கள் சடமான பொருள். அவை தனது வட்டத்திற்குள்ளே சூரியனின் ஈர்ப்பு சக்தியால் சுழன்று கொண்டிருக்கின்றது. ஆகையால் அதற்கும் தெய்வத்திற்கும் மூன்று முடிச்சு போடுவதேன்?. ஆக, சோதிடத்திற்கு அதை முறைபடுத்தி எழுதிய ஆரியபட்டரோ, குப்தாவோ தெய்வத்துடன் மூன்று முடுச்சு போடவில்லை என்பதே உண்மை. சோதிடம் என்று வைதீகத்தில் ஒரு “அங்கமாக ” சேர்க்கப் பட்டதோ அதிலிருந்து தங்கள் மூதாதையர் அச்சோதிடத்தை தெய்வ சம்பந்தமாக்கிக் கொண்டீர். இதனை முதலிலேயே ஒப்புக் கொண்டிருந்தீர்களனால், நான் ஒரே சொல்லில் தங்கள் விவாதங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்திருப்பேன். “மூடு”.

ஜனவரி 17, 2015 அன்று, 6:34 மணி மணிக்கு

நான் அவசரமாக குடும்ப விவகாரமாக வெளியூர் செல்கிறேன், வந்ததும் எழுதுகிறேன்.

ஜனவரி 18, 2015 அன்று, 12:54 காலை மணிக்கு

திலிப் தங்களின் குடும்ப அலுவல்களை பார்த்து நிதானித்து வாருங்கள். அவசரமில்லை. இருந்தாலும் எம் கருத்தை எழுதி முடித்து விடுகின்றேன். சிவபெருமானின் ஆசிர்வதமோ என்னவோ தெரியவில்லை தாங்கள் தங்களின் வாயாலேயே வைதீகத்தில் விஷ்ணுதான் சிவத்தை விட உயர்ந்தவர் என்று புராணத்தின் அடிப்படையில் இப்படி ஒரு கருத்தைக் கூறினீர்:

“தசாவதாரம் என்று ஒரு தமிழ் படம். அதில் 10 மஹா

விஷ்ணுவின் அவதாரங்களையும் விளக்கும் படம்.

அதில் சிவம் தோற்று, மஹா விஷ்ணு வெற்றி கொள்வார்,”.

ஆகையால் வைதீகத்தில் வைணவம், சைவம் இரு கணங்கள் என்பது சைவர்களைக் குஷிப் படுத்தி காலை வாருவது போன்றதாகும்.

இதிலிருந்து இந்து தருமர் போன்ற தமிழர் தெரிந்துக் கொள்ள வேண்டியது பல உண்டு. (1) வைதீக மதத்தில் பரம்பொருள் ஒன்று என்ற கோட்பாடு உண்டு. வைதீகத்தில் ஓரிறைக் கொள்கையும் உண்டு. இது பகவத்கீதையிலும் உணர்த்தப் பட்டுள்ளது. (2) வைதீக மதத்தில் பரம்பொருள் என்று போற்றபடுவது விஷ்ணு ஒருவரே.

ஆகையால், தமிழர் கண்ட சைவத்தில் உள்ளதுபோல் அவர்கள் சிவத்தைப் பரம்பொருளாக போற்றுவதில்லை. அவ்வாறே, சிவன் சக்தியின் குமாரர்களாக வரும் முருகன், பிள்ளையாரும் வைதீகத்தில் சிறு தெய்வங்களே. இதனை அறியாமல் இந்து தருமர் போன்ற தமிழர் எது அவர்கள் பரம்பொருள் என்று சிறிதும் அறியாமல் இந்து மதம் என்ற கோளாறு பிடித்த கூட்டுக் குடும்பத்தில் குந்தி இருக்கின்றனர். அது அவரவர் ஏற்றுக் கொண்ட நிலை. தமிழர்க்கு எடுத்துச் சொல்வது எம் கடமை. ஏற்பதும், ஏற்காமல் போவதும் அவரவர் விருப்பம். மேலும் ஒன்று, இந்திய நாட்டில் தோன்றிய பல்வேறு மதங்கள் அவர்தம் பரம்பொருளோ அல்லது தெய்வமோ சிறந்தது என்று உணர்த்தவே பெரும்பால புராணக் கதைகள் எழுதப்பட்டன. அதனால்தான் புராணக் கதைகள் இந்திய சமய அரசியல் சாக்கடைக்கு ஒப்பாகும் என்றேன். திலிப் அவர்களோ அதுவே தனக்கு ஆதாரம் என்று எழுதிக் கொண்டிருந்தார். இறுதியில் இக்கட்டுரையின் கருப் பொருளான சோதிடம் என்பது கோள்களின் நிலையை கணிதம் கொண்டு கணிப்பது என்று ஏற்றுக் கொண்டார். அதுவே உண்மை என்று யாம் அறிந்ததும். ஆகையால், திலீப்பின் பிற வைதீக சமய கருத்துக்களுக்கு மறுமொழி எழுதுவது வீண் வேலை காரணம் அவர் இக்கட்டுரையின் கருப்பொருளுக்கு சம்பந்தம் இல்லாமல் அவர் மனம் போன போக்கிற்கு வைதீக மதத்தின் உட்கூறுகளை பற்றி மட்டுமே குறிக்கின்றார். இங்கே நமக்கு வேண்டியது சடப் பொருளான கோள்கள் பரம்பொருளை மீறிச் செயல்படுமா என்ற கேள்விக்கு பதிலே அன்றி வைதீக மதத்தின் பெருமையைப் பற்றியது அல்ல. இறுதியாக சிவாலயங்களில் இருந்து சிவலிங்கத்தை நீக்க முடியுமா என்று கேட்டும் சிவ நிந்தனையை ஏற்படுத்திக் கொண்டார். அது அவரின் வினைப்பயன். சைவத்தில் உயிர்களின்பால் கருணைக் கொண்டு அவற்றின் பொருட்டு தனது ஐந்தொழிலை ஆற்ற வேண்டி சொருப நிலையில் இருந்த தடத்த நிலைக்கு வரும்பொழுது கொண்ட அருவுருவத் திருமேனியே சிவலிங்கமாகும். அதனையே சைவர்கள் தங்களின் திருகோவில்களில் வழிப்பாடு திருவுருவமாக கொண்டனர். இதனை நீக்கச் சொல்ல எவருக்கும் அருகதை இல்லை. அப்படிச் சொன்னதே மாபெரும் தப்பாகும். அவர் திருந்துவாராக. சிவ, சிவ. .

ஜனவரி 24, 2015 அன்று, 12:04 காலை மணிக்கு

ஆண்டவனைப்பற்றிய விமர்சனம் மிக அருமை. நமக்குள்ள சிற்றறிவைக்கொண்டு பேரறிவை அறிவது முயலாத ஒன்று. ‘ அறிவு மெய்ஞ்சானத்துக்கு தடை’ என்று ஆன்றோர் கூறியுள்ளனர். நாம் அறிவைப் பயன்படுத்தும்வரை ஆண்டவனை அறியமுடியாது. சிந்தனை செயலற்று போகும்போது ஞானம் பிறக்கும். அப்போது எல்லாம் தெளிவாகிவிடும்.

ஜனவரி 25, 2015 அன்று, 3:30 காலை மணிக்கு

இங்கே நான் விளக்கம் ஏழுதி கொண்டே போகலாம்…… முடிவுறாது. ஆகையால் எங்காவது ஒரு இடத்தில யாரவது ஒருவர் நிறுத்துவதை தவிர வேறு வழியில்லை …. என் மனம் இன்னும் எழுதலாம் என்று பட படகுது…. ஆனாலும் அலுவல் காரணமாக நிறுத்துகிறேன். தேனீ தங்கள் கேட்ட அனைத்து விசயங்களும் இனைய தலத்தில் இலவசமாக கிடைக்கும். விரிவு படுத்துங்கள் உங்கள் தேடலை….. நன்றி !


சோதிடந்தனையிகழ்!

-சு.அறிவுக்கரசு

’விதியே வாழி! விநாயகா வாழி! பதியே வாழி! பக்தி வாழி! என்றெல்லாம் பாடிய பாரதியார், ஆத்திச்சூடியில் சோதிடந்தனை இகழ் எனக் கூறினார். இராசகோபாலாச்-சாரியாரும்கூட சோதிடம் ஒரு மூடநம்பிக்கையே என்றார். நம் வீட்டு எருமை, கன்று ஈந்த நேரத்தைக் குறித்துக் கொடுத்தால்கூட, ஜோதிடன் ஜாதகம் கணித்துக் கொடுப்பானே தவிர, இது எருமை சோதிடம் என்று கூறமாட்டான் என்றார் தந்தை பெரியார்.

அண்ணனின் ஜாதகத்தையும் தங்கையின் ஜாதகத்தையும் தந்து, பொருத்தம் பாருங்கள் என்று கூறினால், பத்துக்கு எட்டரைப் பொருத்தம் இருக்கிறது என்றுதான் சோதிடன் கூறுவானே தவிர, உடன் பிறந்தவர்களின் ஜாதகம் இவை என எந்த ஜோசியனும் கூறுவது இல்லை. ஆகவேதான் அதனை இகழ வேண்டும் என்றனர்.

மாறாக, அதனைப் பாடமாக்கி, கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் கற்பிக்கின்றனர் என்றால்… இந்தக் கொடுமை அரங்கேற்றப்பட்டது, பி.ஜே.பி. ஆட்சி ஆறாண்டுக் காலம் நடந்தபோது!

ஆர்.எஸ்.எஸ்.காரரான முரளி மனோகர் ஜோஷி கல்வித்துறையைக் கவனித்த அமைச்சராக இருந்தபோது மேடையை அமைத்தார். இந்த அறிவியல் படித்தால் பி.எஸ்.சி. பட்டம் வழங்கப்படும் என ஆணை பிறப்பித்தார். எல்லாரும் எதிர்த்தனர். இது எப்படி அறிவியலாகும் எனக் கேட்டனர்.

பதில் கூற முடியாத முரளி மனோகர் ஜோஷி பணிந்து பேசினார். பி.ஏ. பட்டம் தரப்படும் அதுவும் ஒரு கலை என்ற காரணத்தினால் என்றார். மேல்நாட்டார் ஒருவர் கொலைகூட ஒரு கலைதான் எனக் கூறினார் அல்லவா? கொலை ஒரு கலை அப்பா! என்று மந்திரிகுமாரி திரைப்படத்தில் எஸ்.ஏ.நடராஜன் என்ற நடிகர் கூறும் வசனத்தை கலைஞர் மு.க. எழுதியதைப் படம் பார்த்தவர்கள் நினைவில் வைத்திருப்பர்.

அதுபோல சோதிடத்தைப் புளுகுக்கலை எனக் கூறினாரோ? இந்தக் கலையைக் கற்றுத் தந்தால் பல்கலைக்கழக மான்யக் குழு (U.G.C.) நிதி கூடுதலாக வழங்கும் என்று தேன் தடவினார். பல்கலைக் கழகங்கள் சில ஈக்களாகச் சிக்கின. அதில் ஒன்று தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம்!

நாள், நட்சத்திரம் பார்த்து பிரும்மரிஷி வசிட்டன் ஜோதிடம் கூறியவாறு, இராமன் பட்டாபிஷேகம் நடைபெறவில்லை; காட்டுக்கு அனுப்பப்பட்டான். அக்மார்க் முத்திரை குத்தும் அருகதை பெற்றவன் வசிஷ்டன். அவன் கணித்ததே கவிழ்ந்து போனது கைகேயியால்!

முறைப்படியும் வழக்கப்படியும் ஜாதகப்படியும் அண்ணன் நாடாள முடியாது, தம்பிதான் நாடாள்வான் என்றான் ஜோதிடன். தம்பி துறவு மேற்கொண்டான். அண்ணன் ஆட்சியில் அமர்ந்தான். நிமித்தகன் சொன்னதை மாற்றிக் காட்டினான் சிலப்பதிகாரத்தில்! செங்குட்டுவன் சேரனானதை இளங்கோ அடிகள் அப்படித்தான் பாடினார்! சோதிடத்தைப் பொய் எனக் காட்டி இகழ்ந்த செய்திகளை ஏராளம் சுட்டிக்காட்டலாம்!

கேரளப் பகுத்தறிவாளர் ஏ.டி.கோவூர் 1969இல் விடுத்த அறைகூவலை ஏற்று, சோதிடம் அறிவியல் என்பதை எண்பித்துக்-காட்ட எவரும் முன்வரவில்லையே! பெங்களூர் நகரில் எட்டுக் கூட்டங்களில் பேசி இந்த அறைகூவலை 1978இல் புதுப்பித்தார் கோவூர். இங்கிலீஷில் ஜோசியம் கூறி, ஏடு நடத்திவந்த உலகப் புகழ்(!) பி.வி.இராமன் என்பவர்கூட பெங்களூர்க்காரர்தான். அறைகூவலை ஏற்கவில்லையே!

வைத்தீசுவரன் கோவில் என்ற ஊரில் நாடி ஜோதிடம் கூறிவந்த பூசமுத்து என்பவரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நுழைந்து கணக்கில் காட்டப்படாத பல இலட்ச ரூபாய்த் தொகையை அள்ளிப் போனார்கள்.

பசிக்காமலிருக்க வரம் தருவேன், எனக்குப் பழைய சோறு பிச்சை போடுங்கள் என்று ஒருவன் சொன்னதைப் போல என்பார் தந்தை பெரியார். அதைப் போல ஊருக்கு ஜோசியம் சொன்ன ஆள், தனக்கு வருவதை உணரவில்லையே!

காந்தியாரும் இந்திரா காந்தியும் சுடப்பட்டுச் சாவார்கள் என்று எந்த ஜோதிடனும் கூறவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஆபிரகாம் லிங்கனும், கென்னடியும் கொலை செய்யப்படுவார்கள் என்று அமெரிக்க நாட்டு ஜோதிடனும்கூடக் கூறவில்லையே! அங்கேயும்-கூட ஜோசியர்களும் சோதிடமும் இருக்கின்றன. முட்டாள்தனம் உலகுக்கே சொந்தம் என்றார் தந்தை பெரியார்.

வானவியல் (Astronomy) என்பது வேறு. சோதிடம் (Astrology) என்பது வேறு. முன்னது அறிவியல். பின்னது பொய்யியல். நோபல் பரிசு பெற்ற பல அறிவியலாளர் வெளிப்படையாக அறிவித்த பிறகும் அங்கேயே பலருக்கு அறிவு வரவில்லை எனும்போது, இந்தியாவில் எப்படி….?

வானவெளியில் ஒன்பது கிரகங்கள் மட்டுமே உள்ளனவா? ஹம்ஃப்ரி என்று பெயர் வைக்கப்பட்ட பத்தாம் கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சூரியனைச் சுற்றிவர 204 நாள்கள் ஆகிறது என்பது உட்படப் பலவற்றையும் கண்டறிந்து உள்ளனர்! இது ஜாதகத்தில் இடம் பெறவில்லை! இராகு, கேது, என்பவை ஆங்கில ஜோசியத்தில் இடம்பெறவில்லையே!

சூரியனைக் கிரகம் என்கிறது சோதிடம். அது நட்சத்திரம் என்பது அறிவியல்! சூரியன் ஏழிலிருந்து ஒன்பதாம் வீட்டுக்குப் போகிறார், ஆறிலிருந்து நாலுக்கு நடக்கிறார் என்கிறது சோதிடம். சூரியன் நகர்வதோ, சுற்றுவதோ இல்லை. நிலையாக நின்று எரிகிறது என்கிறது அறிவியல். பின் எப்படி சோதிடம் அறிவியல்?

சந்திரன் கோள் அன்று! துணைக் கோள்தான். ஆனால், அதனைக் கோள் என்றே கணக்குப் போடுகிறது சோதிடம்! பூமிக்கு ஒரு சந்திரன், செவ்வாய்க்கோளுக்கு இரண்டு சந்திரன், வியாழனுக்கு 16, சனிக்கு 22, யுரேனசுக்கு 15, நெப்டியூன் கோளுக்கு 3 என நூற்றுக்கும் மேற்பட்ட சந்திரன்கள் வானவெளியில் உண்டு. எந்தச் சந்திரன் சோதிடத்தில் சேர்த்தி? நாம் கண்ணால் காணும் சந்திரனை மட்டும் சேர்த்தால் போதுமா?

பூமி ஒரு கோள் (கிரகம்)! பூமியை சோதிடத்தில் கிரகமாகக் கணக்கில் சேர்க்கவில்லையே!

கோள்களின் பார்வை படுகிறது என்கிறது சோதிடம்! எட்டாம் வீட்டில் இருந்துகொண்டு சூரியன் பார்க்கிறான் என்கிறார்கள். அனுகூலப் பார்வை, வக்கிரப் பார்வை என்று பார்வையோ பலவிதம் என்கிறார்கள். பூமியிலிருந்து 15 கோடி கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் சூரியன்! 195 நாடுகளுக்கும் ஒரே சாயையும் ஒரே கிரணங்களையும் பதிவு செய்கிறது. நாடே இல்லாத, ஆளே இல்லாத துருவப் பகுதிகளிலும் சூரியக் காற்று சுமூகமாகவே வீசுகிறது. இந்த நிலையில் சூரியப் பார்வையில் வேறுபாடாம்! எப்படி அறிவியலாகும்?

உலகில் அரசியல் நிலையை சுக்கிரன் முடிவு செய்கிறதாம். போர்களைச் செவ்வாய் உண்டாக்குகிறதாம்! தர்மச் செயல்களுக்கு குருவாம்! அதர்மச் செயல்களுக்கு சுக்கிரன், செவ்வாய், இராகு கிரகங்களாம்!

நாடு பிடிக்கும் வெறியும், பேராசைகளும் உலகில் இதுவரை ஏற்பட்ட போர்களுக்குக் காரணிகள். அலெக்சான்டர், செங்கிஸ்கான், தொடங்கி பிஸ்மார்க், முசோலினி, டோஜோ, இட்லர் ஈறாகப் பல சர்வாதிகாரிகளின் மன வக்கிரங்கள், நாடு பிடிக்கும் பேராசைகள் போன்றவையே அரசியலையும் போர்களையும் ஆட்டிப் படைத்தன என்பதே உண்மை! நபர்களின் வக்கரிப்புகளுக்கு நாடு எப்படிப் பொறுப்பு? நாட்டின் ஜாதகம் எப்படிப் பொறுப்பு ஆக முடியும்?

மனிதர்களின் பிறந்த நேரம், கிரக நிலை இதனை வைத்து ஜாதகம் என்று கூறுகிறார்கள்! நாடுகளுக்கு எது பிறந்த நேரம்? இந்தியா எப்போது ஜனித்தது? 1947 ஆகஸ்ட் 15ஆம் நாளிலா? நள்ளிரவு 12-_01க்கு அல்லவா? இவர்களது பஞ்சாங்கம் 30 நாழிகைக்கு மட்டும்தானே கணித்து வைத்திருக்கிறார்கள்!

சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை உள்ள 12 மணிநேர, 30 நாழிகைக்கு மட்டும்தானே! உதயமோ, அஸ்தமனமோ சூரியனுக்குக் கிடையாது. அது, தோற்றப் பிழை! ஆனால், அதனடிப்படையில் எதையோ பிதற்றுவது அறிவியலா?

எவ்வளவோ வாதங்கள் உள. என்றாலும் ஈராயிரம், மூவாயிரம் ஆண்டுகளாக சோதிடப் பித்தலாட்டம் உலகில் இருக்கிறது. தமிழர் பிரித்த நானிலங்களில் மருத நிலத்துக்கு உரித்தான பரத்தமை உலகின் இரண்டாம் மூத்த தொழில் என்கிறார்கள். அப்படியானால் உலகின் மூத்த முதல் தொழில்? சோதிடம்!

சோதிடர்களை நற்செய்தி கூறுவோர் (Soothe Sayers) என்கின்றனர் ஆங்கிலேயர்கள்! இங்கோ, இந்தியாவிலோ, சோதிடர்கள்தாம் எல்லாமுமே! அத்தகைய மடமை ஒழிய வேண்டும். ஒழிக்கப்பட வேண்டும். கல்விச் சாலைகள் அறிவை வளர்க்க வேண்டும்.

பகுத்தறிவைப் பயன்படுத்திட படிப்போரை ஊக்குவிக்க வேண்டும். சிலகோடி நிதிக்காகப் பகுத்தறிவைப் பாழ்படுத்தும் பாடத் திட்டங்களை ஏற்கக் கூடாது, மறுதலித்திட வேண்டும்! அந்த நாளும் வந்திடாதோ?



 

About editor 3116 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply