தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு

தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு

சில பாடல்களைக் கேட்கும்போது நெஞ்சில் பெருமிதம் பொங்கும். ரோஜா படத்தின் தமிழா தமிழா பாடல் உணர்வுகளை அசைத்து நெஞ்சை நெகிழ வைத்தது. நரம்புகள் முறுக்கேறும் உணர்வை அடைந்தேன். இன்னும் சில பாடல்கள் நரம்புகளை நெகிழச் செய்து மனதில் பெருமையைப் பொங்கச் செய்யும். அந்த வகையில் ஒரு பாடலாக டூயட் படத்தில் வரும் இந்தப் பாடலைச் சொல்வேன்.

மிக இயல்பான காட்சிகளுடன் இப்பாடல் படமாக்கப் பட்டிருப்பது சிறப்பு. குறிப்பாக ஒரு காட்சியில் தீபாராதனை செய்துவிட்டு தீபத்தட்டுடன் பூஜையறையிலிருந்து அம்மா வெளிப்பட எதிர்படும் பிரபு சட்டென்று விலகி நின்று கையை நெஞ்சருகில் வைத்துக்கொள்வது மிக இயல்பாக அமைந்திருக்கும். ஒரு சந்தோஷமான குடும்ப அமைப்பின் காட்சியமைப்பாக இப்பாடலைப் பார்க்க முடிகிறது.

கத்ரி கோபால்நாத் அவர்களின் சாக்ஸ் இசையும் மிருதங்கமும் ட்ரம் வாத்தியமும் பின்னிப் பிணைந்து அருமையான தாளகதியைக் கொடுக்க, கம்பர் எழுதிய சரஸ்வதி அந்தாதியில் வரும் செய்யுளின் வரிகளைத் தேனினும் இனிய தெய்வீகக் குரலுடன் பாடித் தொடங்குகிறார் சுசீலா. பின்பு தமிழை நினைத்து ஒவ்வொரு தமிழனும் கம்பீரப்படும் பாடியான தொனியில் கம்பீரமாகப் பாடுகிறார் பாலு. ஒரு கட்டத்தில் கத்ரியின் சாக்ஸபோனும் பாலுவின் குரலும் அருமையான ஓட்டப்பந்தயத்தை நமக்குக் காட்டுகின்றன. இரண்டாவது சரணம் முடிந்ததும் வரும் ஸ்வர வரிசையைச் சொல்கிறேன் (மன்னிக்க. முழுதும் எழுத இயலவில்லை!).

என்னவோ தெரியவில்லை.

//நம் மண்ணுக்கும் விண்ணுக்கும் பாலம் செய்க
நலம் பெற வேண்டும் என்றால் நன்மை செய்க
நம் பூமி மேலே புது பார்வை கொள்க
நம் இயற்கை மேல் இன்னும் இச்சை கொள்க
//

என்ற வரிகளைக் கேட்கும்போது என்னையறியாமலேயே கண்ணீர் துளிர்க்கிறது. தொலைத்த காலங்களை நினைத்துக் குற்ற உணர்வோ?

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கு மென்னம்மை – தூய
வுருப் பளிங்கு போல் வாள் என் உள்ளத்தின்
உள்ளே இருப்பள் இங்கு வாராது இடர்

படிக நிறமும் பவளச் செவ்வாயும்
கடிகமழ்பூந் தாமரை போற் கையுந் – துடியிடையும்
அல்லும் பகலும் அனவரத முந்துதித்தால்
கல்லுஞ்சொல் லாதோ கவி.

தானனா தானானானா தன்னன்னானா தர தானனானா தானனானா தன்னன்னானா

தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு
ஒரு சரக்கிருக்குது முறுக்கிருக்குது மெட்டுப் போடு

எத்தனை சபைகள் கண்டோம்
எத்தனை எத்தனை பகையும் கண்டோம்
அத்தனையும் சூடங்காட்டிச் சுட்டுப் போடு

மெட்டுப் போடு மெட்டுப் போடு
என் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு
மெட்டுப் போடு மெட்டுப் போடு
அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு

தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு
ஒரு சரக்கிருக்குது முறுக்கிருக்குது மெட்டுப் போடு

எத்தனை சபைகள் கண்டோம்
எத்தனை எத்தனை பகையும் கண்டோம்
அத்தனையும் சூடங்காட்டிச் சுட்டுப் போடு

மெட்டுப் போடு மெட்டுப் போடு
என் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு
மெட்டுப் போடு மெட்டுப் போடு
அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு

இது மக்கள் பாட்டு தன்மானப் பாட்டு
இது போராடும் உங்கள் வாழ்க்கைப் பாட்டு
கல்லூரிப் பெண்கள் பாடும் கன்னிப்பாட்டு
சபைகளை வென்று வரும் சபதம் போட்டு
நாம் கட்டும் பாட்டு ஈரம் தட்டும் பாட்டு
கட்டிச் செந்தேனாய் நெஞ்சில் சொட்டும் பாட்டு
தாய்ப்பாலைப் போல் ரத்தத்தில் ஒட்டும் பாட்டு
தமிழ் மக்கள் வீட்டைச் சென்று தட்டும் பாட்டு

மெட்டுப் போடு மெட்டுப் போடு
என் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு
மெட்டுப் போடு மெட்டுப் போடு
அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு

இனி கண்ணீர் வேண்டாம் ஒரு கவிதை செய்க
எங்கள் கானங்கள் கேட்டுக் காதல் செய்க
நம் மண்ணுக்கும் விண்ணுக்கும் பாலம் செய்க
நலம் பெற வேண்டும் என்றால் நன்மை செய்க
நம் பூமி மேலே புது பார்வை கொள்க
நம் இயற்கை மேல் இன்னும் இச்சை கொள்க
கொஞ்சம் நிலவுக்கு நேரம் வைத்து தூக்கம் கொள்க
பாறைக்குள் வேரைப் போலே வெற்றி கொள்க

மெட்டுப் போடு மெட்டுப் போடு
என் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு
மெட்டுப் போடு மெட்டுப் போடு
அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு

தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு
ஒரு சரக்கிருக்குது முறுக்கிருக்குது மெட்டுப் போடு
எத்தனை சபைகள் கண்டோம்
எத்தனை எத்தனை பகையும் கண்டோம்
அத்தனையும் சூடங்காட்டிச் சுட்டுப் போடு

மெட்டுப் போடு மெட்டுப் போடு
என் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு
மெட்டுப் போடு மெட்டுப் போடு
அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு

ஸாஸநிதப பாபமகரிகரிநி ஸம ஸபா ஸநீ பமகரிஸ
ஸகரிக மநிபம கமப
பஸநிதமபா
ஸமகரிநிதா
கமபமபா
நிஸகநிஸா
ஸநிதப
கரிநிதா
பபநீ
கரிஸா
பநீ
கமா
பாமாகாரி ஸாநீதாப கரிகமாபதா பஸகரிநிஸ மாகரிஸ

http://myspb.blogspot.ca/2006/08/blog-post_03.html

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply