புலிகளின் ‘பேரூட் தளம்” மீது தாக்குதல்- (அவலங்களின் அத்தியாயங்கள்- 57 – 67

  இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது – 57

1987ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி நடைபெற்ற முதலாவது ஆயுத ஒப்படைப்பின் போது, விடுதலைப் புலிகள் தம்மிடம் இருந்த சுமார் 800 ஆயுதங்களை ஒப்படைத்திருந்தார்கள்.

அதேவேளை புலிகள் தம்வசம் வைத்திருக்கும் ஏனய ஆயுதங்களையும் மறுநாள் ஒப்படைத்துவிட வேண்டும் என்று இந்தியப்படைத் தளபதி புலிகளுக்கு அறிவித்திருந்தார்.புலிகளின் இரண்டாம் கட்ட ஆயுத ஒப்படைப்பு தொடர்பாக, புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும், இந்தியப்படை உயர் அதிகாரிகளுக்கும் இடையிலான ஒரு கலந்துரையாடல், ஆகஸ்ட் மாதம் 6ம் திகதி நடைபெற்றது. யாழ் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக அமைந்திருந்த புலிகளின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், மேஜர். ஜெனரல் ஹரிகிரத் சிங், பிரிகேடியர் பெர்ணான்டஸ் போன்றவர்களுடன் மற்றொரு இந்தியப்படை உயர் அதிகாரியும் கலந்துகொண்டார்.

சுமார் இரண்டு மணிநேரத்திற்கும் அதிகமாக இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடல் மிகவும் காரசாரமாக இருந்தது.

‘’புலிகள் தம்மிடம் மிகுதியாக உள்ள ஆயுதங்களை நாளை ஒப்படைக்கத் தவறும் பட்சத்தில், இந்தியப்படைகள் புலிகளிடம் இருந்து ஆயுதங்களைப் பலவந்தமாகப் பறிக்கவேண்டி இருக்கும்’’ என்று இந்திய அமைதி காக்கும் படையின் தளபதி ஹரிகிறத் சிங் புலிகளின் தலைவரிடம் உறுதியாகத் தெரிவித்தார்.

இதற்கான உத்தரவு புதுடில்லியில் இருந்து தமக்கு கிடைக்கப்பெற்றிருப்பதாகவும், புலிகளிடம் இருந்து ஆயுதங்களை உடனடியாக களையவேண்டும் என்ற நெருக்குதல்கள் தமது மேலிடத்தில் இருந்து தொடர்ந்து வந்துகொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தியப் படைகள் ஸ்ரீலங்காப் படைகளுடன் இணைந்து இந்த ஆயுதக் களைவு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும், அவர் தமது திட்டத்தை புலிகளின் தலைவரிடம் தெரிவித்தார்.

புலிகளை நீராயுதபாணிகளாக்கி செயலிழக்க வைத்துவிட்டு, பின்னர் களத்தில் இருந்து புலிகளை முற்றாகவே அகற்றிவிடும் இந்தியாவின் கபட திட்டத்தை, புலிகளின் தலைவர் நன்றாகவே அறிந்து வைத்திருந்தார்.

தமிழ் நாட்டில் தஞ்சம் அடைந்திருந்த மற்றய தமிழ் அமைப்புக்களை இலங்கைக்கு மீண்டும் அழைத்து வந்து, அவர்களுக்கு இந்தியா ஆயுதங்கள் வழங்கி இருந்ததையும் பிரபாகரன் அறிந்திருந்தார். ஈ.பி.ஆர்.எல்.எப்., டெலோ, ஈ.என்.டி.எல்.எப். போன்ற அமைப்புக்களை தமிழீழத்தில் பலப்படுத்தவேண்டுமானால், புலிகள் பலவீனப்படுத்தப்படவேண்டும் என்ற இந்தியாவின் நோக்கத்தையும் அவர் நன்றாகவே புரிந்துவைத்திருந்தார்.

எனவே, காரணத்தை காரணத்தினாலேயே உடைக்கவேண்டும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் காரியங்களை முன்னெடுக்க அவர் எண்ணியிருந்தார்.

எதிரிக்கு, அவனது பாணியிலேயே பதில் கொடுக்கவேண்டும் என்று தலைவர் பிரபாகரன் தீர்மானித்தார்.

தம்மிடம் உள்ள மற்றொரு தொகுதி ஆயுதங்களையும் ஒப்படைக்கச் சம்மதிப்பதாக இந்தியப்படை அதிகாரிகளிடம் கூறி, அவர்களை அனுப்பிவைத்தார்.

தலைவர் கூட்டிய நள்ளிரவுக் கூட்டம்:

அன்றய தினம் மாலை, புலிகளின் தலைவர் பிரபாகரன் போராளிகளுடனாக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார். விடுதலைப் புலிகளின் பிராந்தியத் தளபதிகள், பொறுப்பாளர்கள் உட்பட நூற்றிற்கும் அதிகமான போராளிகள் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார்கள்.

நள்ளிரவு வரை அந்தக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில், அங்கு வந்திருந்த விடுதலைப் புலி உறுப்பினர்களிடம் இருந்த ஆயுதங்கள், புலிகளின் அரசியல் பிரிவினரால் சேகரிக்கப்பட்டன. புலிகளின் யாழ் அரசியல் பொறுப்பாளர் திலீபன் மற்றும் அவரது உதவியாளர் நவீனன் போன்றவர்கள் இந்த ஆயுத சேகரிப்பை நெறிப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

இதேவேளை, புலிகளின் காரியாலயத்தில் என்ன நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது என்று கண்களில் எண்ணை விட்டுக்கொண்டு சிலர் நோட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். இந்திய மற்றும் ஸ்ரீலங்காப் படைகளுக்கு தகவல் வழங்குபவர்களும், சில ஊடகவியலாளர்களும், இந்தச் சம்பவத்தை அருகில் உள்ள கட்டிடங்களில் தங்கியிருந்து அவதானித்துக்கொண்டிருந்தார்கள்.

கைத்துப்பாக்கிகள், AK47, T56 ரக துப்பாக்கிகளை விடுதலைப் புலி உறுப்பினர்கள் அரசியல் பிரிவு பொறுப்பாளர்களிடம் ஒப்படைப்பதையும் அவர்கள் அவதானித்தார்கள். மறுநாள் இடம்பெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த 2வது ஆயுத ஒப்படைப்பின்போது ஒப்படைக்கப்படுவதற்காக இந்த ஆயுதங்கள் அவர்களது அரசியல் பிரிவினரால் சேகரிக்கப்படுவதாக, இந்த நிகழ்வை அவதானித்துக் கொண்டிருந்தவர்கள் நம்பினார்கள்.

தமது நம்பிக்கையை அப்படியே தமது மேலதிகாரிகளுக்கும், ஊடகங்களுக்கும் அறிவிக்கவும் செய்தார்கள்.

இரண்டாவது ஆயுத ஒப்படைப்பு:

ஆகஸ்ட் மாதம் 7ம் திகதி, புலிகளின் இரண்டாவது ஆயுத ஒப்படைப்பு இடம்பெற்றது. இம்முறை ஆயுத ஒப்படைப்பு யாழ் கோட்டையினுள் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் சார்பில், இராணுவத்தின் வடபிராந்திய நடவடிக்கைத் தளபதி கேணல் விஜய விமலரெட்ன கலந்துகொண்டார்.

விடுதலைப் புலிகள் சார்பில் இம்முறை புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் யோகி கலந்துகொள்ளவில்லை. பதிலாக, புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட இராணுவத் தளபதி குமரப்பா, மற்றும் புலிகளின் இராணுவப் பிரிவைச் சேர்ந்த நாராயன், ராஜு, ராஜா போன்றோர் கலந்து கொண்டார்கள்.

இதுவரை புலிகளின் அரசியல் பிரிவினரால் கையாளப்பட்டு வந்த புலிகளின் ஆயுத ஒப்படைப்பு விடயம், புலிகளின் இராணுவப் பிரிவினரின் கைகளுக்கு மாறிவிட்டிருந்ததை, புலிகளின் இந்த இரண்டாவது ஆயுத ஒப்படைப்பு நிகழ்வு வெளிப்படுத்தியது.

ஆயுதங்களில் உயிரை வைத்திருந்த போராளிகள்:

இது இவ்வாறு இருக்க, ஆயுத ஒப்படைப்பு தொடர்பான விடுதலைப் புலி உறுப்பினர்களின் மனவோட்டம் மிகவும் மறுபட்டதாகவே இருந்தது.

எந்தவொரு விடுதலைப் புலியும் இந்த ஆயுத ஒப்படைப்பை வரவேற்கவில்லை. மாறாக ஆயுத ஒப்படைப்பிற்கு தமது எதிர்ப்புக்களையே வெளிப்படுத்தி வந்தார்கள்.

புலிகள், ஆயுதங்களை தமது உயிரினும் மேலாக மதித்தார்கள். நேசித்தார்கள். சண்டைகளின் போது, எதிரியிடம் இருந்து ஒரு ஆயுதத்தைக் கைப்பற்றுவதற்காக பல உறுப்பினர்களை இழக்கும் அளவிற்கு புலிகள் ஆயுதங்களுக்கு முன்னுரிமை வழங்கி வந்தார்கள்.

புலிகள் அமைப்பைப் பொறுத்தவரையில், ஒரு போராளி, ஸ்ரீலங்கா படை வீரனைச் சுட்டுக்கொல்வது பெரிய விடயம் அல்ல. அவ்வாறு கொல்லப்பட்ட படை வீரனின் ஆயுதத்தை கவர்ந்து சென்று தனது பொறுப்பாளரிடம் காண்பிப்பதுதான் பாராட்டுக்குரிய ஒரு விடயமாக இருந்தது.

அக்காலத்தில் ஸ்ரீலங்காப் படையினருடனான சண்டைகளின் போது, புலிகள் தாம் சுட்டுத் தீர்த்த ரவைகளின் வெற்றுக் கூடுகளைக்கூடச் சேகரித்து செல்வது வழக்கம். அந்த வெற்று ரவைகளில் வெடிமருந்து நிறப்பி மீண்டும் பயன்படுத்துவதற்காகவே இவ்வாறு செய்துவந்தார்கள்.

அக்காலத்தில் துரோகிகளுக்கும் சமுக விரோதிகளுக்கும் தண்டனை வழங்க போராளிகளை அனுப்பும்போது, ’’எம்டி (empty) கொண்டு வா..” என்று கூறித்தான் பொறுப்பாளர்கள் அனுப்புவார்கள்.

குறிப்பிட்ட நபரைச் சுட்டு தண்டணை வழங்கிவிட்டு, வெற்றுத் தோட்டாவை எடுத்துக்கொண்டு திரும்பவேண்டும் என்பதே அப்போதைய நடைமுறையாக இருந்தது.

அந்த அளவிற்கு புலிகள் ஆயுதங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தார்கள்.

அப்படி புலிகள் மதித்த, நேசித்த தமது ஆயுதங்களை ஒப்படைப்பதென்பது, அதுவும் தமது ஜென்ம விரோதியிடமே ஒப்படைப்பதென்பது, புலி உறுப்பினர்களால் எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாகவே இருந்தது.

தமிழீழத்தை உயிரிலும் மேலாக நேசித்த புலிகள்:

அக்காலத்தில் புலிகளின் யாழ் மாவட்ட தளபதியாக இருந்த கிட்டு, 85 அல்லது 86ம் ஆண்டளவில் தெரிவித்ததாகக் கூறப்பட்ட ஒரு வசனம், தமிழ் மக்களிடையே பிரபல்யம் அடைந்திருந்தது.

புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் அப்பொழுது இந்தியாவில் தங்கியிருந்து விடுதலைப் போராட்டத்தை நெறிப்படுத்திக்கொண்டிருந்தார். அப்பொழுது இந்தியாவின் டில்லி, பெங்கலூர், திம்பு என்று அடிக்கடி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

த.வி.கூ. உட்பட பல அமைப்புக்களும் அந்தப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டன. பிரபாகரன் அவர்களும் அந்த பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டார். இலங்கையின் ஒற்றையாட்சியின் கீழ் தீர்வு பற்றி அக்கூட்டங்களில் ஆராயப்பட்டன.

அப்பொழுது யாழ்ப்பாணத்தில் இருந்த கிட்டு, ’’தமிழீழத்தை கைவிட்டு ’’தம்பி’’ வந்தாலும் வெடிதான்’’ என்று கூறிய வார்த்தைகள் அக்காலத்தில் போராளிகளிடையேயும், தமிழ் மக்களிடையேயும் மிகவும் பிரபல்யம் அடைந்திருந்தன.

கிட்டுவின் இந்த வார்த்தைகள், தலைமை மீதுள்ள தமது அவநம்பிக்கையை வெளிக்காண்பிப்பதாக அமையவில்லை. தமிழீழத்தின் மீது அவர் கொண்டிருந்த உறுதியை வெளிக்காண்பிப்பதாக அமைந்திருந்தன.

கூட்டனி மற்றும் ஏனைய அமைப்புக்களின் தலைவர்கள் தமிழீழக் கோரிக்கையை கைவிட்டு விடுவார்களோ என்று மக்கள் மத்தியில் எழும்பியிருந்த சந்தேகத்தை அடிப்படையாக வைத்து, தமிழீழம் பற்றிய புலிகளின் உறுதியை வெளிப்படுத்தவே கிட்டு இவ்வாறு தெரிவித்திருந்தார்.

புலிகள் தம்மிடம் உள்ள ஆயுதங்களை ஒப்படைப்பது தமிழீழத்தை கைவிடுவதற்கு சமம் என்பதால், ஆயுத ஒப்படைப்பு விடயத்தில் புலி உறுப்பினர்கள் எதிர்மாறான போக்கையே கொண்டிருந்தார்கள்.

ஆயுத ஒப்படைப்பை எதிர்த்து சில விடுதலைப் புலி உறுப்பினர்கள் ’’சயனைட்’’ உட்கொண்டதாகவும் அப்பொழுது செய்திகள் வெளிவந்திருந்தன.

ஆயுதங்களை ஒப்படைத்து சரனாகதி அடைவதைவிட, போரிட்டு வீரச்சாவடைவது மேல் என்றே பெரும்பாண்மையான போராளிகள் அபிப்பிராயம் கொண்டிருந்தார்கள். அதனை தமது தலைவரிடமும் எடுத்துரைத்தார்கள்.

ஆனால், எதிர்காலத்தை கச்சிதமாகக் கணக்கிடக்கூடிய ஒருவர் என்று அவரது எதிரிகளால் கூட மெச்சப்பட்ட புலிகளின் தலைவர் பிரபாகரனின் உள் மனதில் பல தீர்மானங்கள் ஏற்கனவே எடுக்கப்பட்டிருந்தன.

தமிழ் மக்களின் விடுதலைப் போருக்கும், தமிழீழத்தின் எதிர்காலத்திற்கும் எதிராக மாபெரும் சக்திகள் திரண்டிருக்கும் போது, புத்திசாதுர்யமாக, நிதானமாகத்தான் அவற்றை எதிர்கொள்ளவேண்டும் என்று புலிகளின் தலைவர் நினைத்தார். திட்டமிட்டார்.

ஆகஸ்ட் 6ம் திகதி நள்ளிரவு யாழ்பாணத்தில் புலிகளின் தலைமைக் காரியாலயத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரன் கூட்டிய கூட்டத்தில், புலிகளின் எதிர்கால நகர்வுகள் பற்றிய தனது திட்டத்தை போராளிகளுக்கு விளக்கினார்.

கூட்டத்தில் கலந்துகொண்ட புலி உறுப்பினர்களின் முகங்கள் பிரகாசித்தன.

தொடரும்..


 

ஈழமண்ணுக்கு மீண்டும் அழைத்துவரப்பட்ட தமிழ் அமைப்புக்கள் (அவலங்களின் அத்தியாயங்கள்- 57) – நிராஜ் டேவிட

  • April 20, 2013
ஈழ மண்ணில் புலிகளால் தடைசெய்யப்பட்டிருந்த மற்றைய தமிழ் அமைப்பு உறுப்பினர்களை இந்தியா மீண்டும் இலங்கைக்கு அழைத்து வந்திருந்தது. ‘அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட’ என்று கூறியே இந்த உறுப்பினர்கள் வந்திருந்தார்கள்.

இவர்கள் தமிழ் பிரதேசங்களில் முகாம்கள் அமைக்கவும், அலுவலகங்கள் அமைத்துச் செயற்படவும் இந்தியப்படை அனுமதி அளித்திருந்தது. இவர்களின் பாதுகாப்பிற்கென்று பெருமளவு ஆயுதங்களும் இந்தியப்படையினரால் வழங்கப்பட்டிருந்தன.யுத்த நிறுத்தம் பிரகடனப்படுத்தப்பட்டு, ஸ்ரீலங்காப் படைகள் முகாமிற்குள் முடங்கிக் கிடக்கும் நிலையில், இந்திய அமைதி காக்கும் படைகள் அனைத்து இடங்களிலும் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், இந்த அமைப்புக்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டிருந்தன. அதுவும் புலிகளிடம் இருந்து ஆயுதக் களைவு இடம்பெற்றுக் கொண்டிருக்கையில், மற்றய தமிழ் இயக்கங்களுக்கு இந்தியப்படை ஆயுதங்களை வழங்கி வந்தது நோக்கத்தக்கது.

புலிகளின் சந்தேகம்:

இந்த விடயம் புலிகளுக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது. களத்தில் எந்தவித ஆபத்தும் இல்லாத நிலையில், அரசியல் நடவடிக்கையில் ஈடுபடவென வந்த இந்த தமிழ் அமைப்புக்களுக்கு எதற்காக ஆயுதங்கள் வழங்கப்படவேண்டும் என்று புலிகள் கேள்வி எழுப்பினார்கள்.

மாற்று தமிழ் இயக்கங்களைக் கொண்டு விடுதலைப் புலிகள் அமைப்பை அழிக்கும் இந்திய ’’றோ’’ இனது திட்டம் புலிகளுக்கு நன்றாகவே புரிந்தது.

ஈழ மண்ணில் மக்கள் மத்தியில் இந்தியப்படைகள் போதிய புலனாய்வுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ளவும், புலிகளுக்கு எதிராக இந்தியா நடவடிக்கைகள் எடுக்கும் பட்சத்தில், மக்கள் மத்தியில் அதனை நியாயப்பபடுத்தவும், புலிகளுக்கு மாற்றீடாக பலம்வாய்ந்த அமைப்புக்கள் ஈழத்தில் இயங்கவேண்டியது அவசியம் என்று இந்திய உளவு அமைப்பான ~றோ| எண்ணியிருந்தது. அதற்காகவே இந்த அமைப்புக்களை அது திட்டமிட்டு ஈழத்திற்கு அழைத்து வந்திருந்தது.

தமிழ் அமைப்புக்களின் நடவடிக்கைகள்:

புலிகளால் தடைசெய்யப்பட்ட நிலையில் இந்தியாவிற்கு தப்பியோடிய மற்றய தமிழ் அமைப்புக்கள் இந்தியப்படையினரால் மீண்டும் ஈழமண்ணிற்கு அழைத்துவரப்பட்டதானது, அந்த அமைப்புக்களைப் பெறுத்தவரையில் ஒரு பாரிய வரப்பிரசாதமாகவே இருந்தது.

அரசியல் அனாதைகளாக, அகதிகள் போன்று அயல்நாட்டிற்கு தப்பியோடிய இந்த அமைப்புக்களின் உறுப்பினர்கள், அதிக அதிகாரங்களுடன் மீண்டும் தமிழீழம் திரும்பியது அவர்களுக்கு ஒரு பெரிய விடயமாகவே பட்டது. எனவே, இப்படியான கிடைத்ததற்கரிய சந்தர்ப்பத்தை அவர்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ளவே நினைத்தார்கள். இந்திப் படை அதிகாரிகளை திருப்திப்படுத்தும் நோக்கத்துடன் தமது நடவடிகளை அமைப்பதைத் தவிர இந்த அமைப்புக்களுக்கு வேறு மார்க்கமும் இருக்கவில்லை.

ஏற்கனவே புலிகளை எதிரிகளாக நினைத்து செயற்பட்ட இந்த அமைப்புக்கள், புலிகளை முற்றாகவே தமிழ் மண்ணில் இருந்து ஓரம்கட்டிவிடும் ’’றோ’’ இனது திட்டத்திற்கு முழுமூச்சுடன் துணைபோக ஆரம்பித்தன.

இந்த அமைப்புக்கள் ஈழத்தில் கால்வைத்தது முதல், புலிகளுக்கு எதிரான பிரச்சாரங்களை ஆரம்பித்திருந்தார்கள். தமது உறவினர்கள், ஆதரவாளர்கள், நன்பர்கள் என்று அரம்பித்த இவர்களது புலி எதிர்ப்புப் பிரச்சாரங்கள், படிப்படியாக வளர்ச்சி அடைந்து சந்திப்புக்கள், கலந்துரையாடல்கள், கருத்தரங்குள் என்று சென்றுகொண்டிருந்தன.

ஈ.பி.ஆர்.எல்.எப்., டெலோ, ஈ.என்.டி.எல்.எப். போன்ற மூன்று அமைப்புக்களும் இணைந்து ’’திறீ ஸ்டார்’’ என்ற பெயரில் தமது நடவடிக்கைளை மேற்கொள்ள ஆரம்பித்தார்கள்.

புலிகளுக்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொள்ளுவதுடன் மட்டும் இவர்கள் தமது பணிகளை நிறுத்திக்கொள்ளவில்லை. புலிகளின் ஆதரவாளர்களை மிரட்டுவது, கடத்துவது, பொதுமக்களிடம் இருந்து பணம் பறிப்பது என்று தமது செயற்பாடுகளை அதிகரித்துக்கொண்டே சென்றார்கள். ஆயுதங்களுடன் சென்ற இவர்கள் புலி உறுப்பினர்களையும் நேரடியாக மிரட்ட ஆரம்பித்திருந்தார்கள்.

புலிகள் அதிருப்தி:

மாற்றுத் தமிழ் அமைப்புக்கள் ஈழத்தில் இந்தியப்படையினரால் வளர்க்கப்பட்டு வருவது பற்றி விடுதலைப் புலிகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தார்கள்.

இது தொடர்பாக அந்நேரத்தில் புலிகள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ’’புலிகளிடம் இருந்து ஆயுதங்களைக் களைந்துவிட்டு, சமாதான முன்னெடுப்பொன்றை மேற்கொண்டுவரும் இந்த வேளையில், இந்தியப்படைகள் எதற்காக மாற்றுத் தமிழ் குழுக்களுக்கு ஆயுதங்களை வழங்கி தமிழ் கிராமங்களுக்கு அனுப்பி வருகின்றது? இது எங்களுக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விடயம், தமிழர் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டில் எங்களுக்கு மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்துவதாக இருக்கின்றது| என்று அந்த அறிக்கையில் புலிகள் தெரிவித்திருந்தார்கள்.

இதேபோன்று, மாற்று தமிழ் அமைப்புக்கள் தொடர்பாக புலிகள் தமது அதிருப்தியை பல சந்தர்ப்பங்களில் வெளியிட்டிருந்தார்கள்.

இந்தியப் படைகளின் தளபதி லெப்டினன்ட் ஜெணரல் திபீந்தர் சிங் ஒரு தடவை திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்ட பொழுது, அங்குள்ள தமிழ் அமைப்புக்களுடனான சந்திப்பொன்றை மேற்கொண்டார். அப்பொழுது திருகோணமலையில் நிலைகொண்டிருந்த இந்திய இராணுவத்தின் 54வது காலாட்படையின் துணைத்தளபதி பிரிகேடியர் குல்வந் சிங் இந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார். தமிழ் அமைப்புக்களின் பிராந்திய பொறுப்பாளர்கள் அந்தச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார்கள். விடுதலைப் புலிகள் சார்பாக, புலிகளின் திருகோணமலைப் பொறுப்பாளர் புலேந்திரனும் அங்கு வருகை தந்திருந்தார்.

புலிகளின் திருகோணமலைத் தளபதி புலேந்திரன்

சந்திப்பு ஆரம்பமாகி அங்கு பல விடயங்கள் விவாதிக்கப்பட்ட போதும், புலேந்திரன் வாய் திறக்கவில்லை. வழமைக்கு மாறாக, ஒரு அசாதிய அமைதியை அங்கு அவர் கடைப்பிடித்தார். இது அந்தச் சந்திப்பில் கலந்துகொள்ளவென வந்திருந்த அனைவருக்கும் பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.

சந்திப்பு முடிவடைந்த பின்னர் புலேந்திரனை தனியாகச் சந்தித்த இந்தியப்படை உயரதிகாரி திபீந்தர் சிங், புலேந்திரனின் அமைதிக்கான காரணத்தை வினவினார். அதற்கு பதிலளித்த புலேந்திரன், ’’நம்பிக்கைத் துரோகம் செய்யும் இதுபோன்ற கோழை அமைப்புக்களுடன் இணைந்து விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ள விரும்பவில்லை. இனிமேல் எதாவது பேசுவதாக இருந்தால், புலிகளுடன் தனியாகப் பேசுங்கள்’’ என்று இந்தியப்படை உயரதிகாரியிடம் தெரிவித்தார்.

தமிழ் அமைப்புக்கள் தொடர்பான புலிகளின் அதிருப்தியை, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் நேரடியாகவே, இந்தியப்படை உயரதிகாரிகளிடம் தெரிவித்திருந்தார்.

15.08.1987 அன்று இந்தியப்படை உயரதிகாரி திபீந்தர் சிங்குடன் யாழ்பாணத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது, புலிகளின் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்:

‘’புலிகள் மேற்கொண்டிருக்கும் ஆயுதக் கையளிப்பைத் தொடர்ந்து பலவீனமடைந்திருக்கும் புலி உறுப்பினர்கள் மீது மற்றய தமிழ் குழுக்களைக் கொண்டு தாக்குதல் நடாத்தும் நோக்குடன் ’’றோ’’ அமைப்பு செயற்படுவது பற்றி எங்களுக்கு பல தகவல்கள் வந்துள்ளன. குறிப்பாக ’’திறீ ஸ்டார்“ என்ற அமைப்பை இந்த விடயத்தில் “றோ“ தூண்டிவிட்டுள்ளதாக எங்களுக்கு தெரியவந்துள்ளது.’’ என்று பிரபாகரன் தெரிவித்திருந்தார். (இதுபற்றி, பின்னர் திபீந்தர் சிங் எழுதியிருந்த IPKF in SriLanka என்ற நூலிலும் குறிப்பிட்டுள்ளர்.)

இந்தியப்படை உயரதிகாரிகள் பிரபாகரனின் இந்தக் குற்றச்சாட்டை மறுத்திருந்தார்கள்.  புதுடில்லியும், இந்தக் குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்திருந்தது.

ஆனால், மாற்று தமிழ் குழுவினரால் புலிகளின் ஒரு முகாம்; சுற்றிவளைக்கப்பட்டு, துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் வெளித்தெரிந்தபோதுதான், புலிகளின் குற்றச்சாட்டுக்களில் இருந்த உண்மைத்தன்மையை அனைவரும் உனர்ந்துகொண்டார்கள்.

மன்னாரில் விடுதலைப் புலிகள் மூவர் புளொட் அமைப்பினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நிலமையை மேலும் சிக்கலாக்கியது. புலிகள் அமைப்பைச் சேர்ந்த கில்மன்(அடம்பன்), அர்ச்சுனா(கல்வியன்காடு), ரஞ்சன்(பிச்சைக்குளம்) போன்ற உறுப்பினர்கள் புளொட் அமைப்பினரால் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, புலிகள் தமது ஆயுதக் கையளிப்பு தொடர்பாக பகிரங்கமாகவே மாற்று நிலைப்பாடொன்றை எடுக்க ஆரம்பித்தார்கள்.

ஆயுதங்களை ஒப்படைப்பது தமது உறுப்பினர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும் என்று புலிகள் தெரிவித்தார்கள். தம்மிடம் இருந்து ஆயுதங்களை களைந்துவிட்டு, மாற்று அமைப்புக்களைக் கொண்டு தமக்கெதிரான வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் இந்தியாவின் எண்ணத்தை புலிகள் பகிரங்கமாக விமர்சிக்க ஆரம்பித்தார்கள்.

புலிகளின் கருத்துக்களில் அடங்கியிருந்த நியாயத்தை தமிழ் மக்களும் ஏற்றுக்கொள்ளவே செய்தார்கள்.

தொடரும்..


 

றோவை ஏமாற்றி ஆயுதம் சேகரித்தார்கள் விடுதலைப் புலிகள்!- (அவலங்களின் அத்தியாயங்கள்- 58): நிராஜ் டேவிட்

  • April 20, 2013
tamilTigerDM0306_468x252.jpg 
விடுதலைப் புலிகளிடம் இருந்து ஆயுதங்களைக் களைவதென்பது எப்பொழுதுமே சிக்கலான ஒரு விடயம்தான்.. புலிகளுக்கு எதிரான இந்தியாவின் முதலாவது ஆயுதக் களைவு 1986ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் திகதி சென்னையில் இடம் பெற்றது.

தமிழ் நாட்டுப் பொலிஸார் புலிகளின் அலுவலகங்களைச் சுற்றிவளைத்து, புலிகள் வசமிருந்த ஆயுதங்களையும், தொலைத்தொடர்பு கருவிகளையும் கைப்பற்றியிருந்தார்கள்.புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் மேற்கொண்ட சாகும் வரையிலான உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து பொலிசாரினால் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மீண்டும் புலிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்தச் சம்பவம் புலிகளுக்கு ஒரு பெரிய பாடத்தைக் கற்றுக் கொடுத்திருந்தது.

புலிகளிடம் ஆயுதங்கள் இருப்பதை இந்தியா தொடர்ந்து அனுமதிக்காது என்பதுடன், அந்த ஆயுதங்களை களையும் நடவடிக்கையை இந்தியா எந்தச் சந்தர்ப்பத்தில் வேண்டுமானாலும் மீண்டும் மேற்கொள்ளலாம் என்பதையும் புலிகளுக்கு அந்தச் சம்பவம் நன்றாக உணர்த்தியிருந்தது.

அதனால், தமது ஆயுதங்கள் விடயத்தில் புலிகள் மிகுந்த எச்சரிக்கையாகவே நடந்துகொள்ளத் தலைப்பட்டார்கள். அத்தோடு இந்தியா என்றாவது ஒரு நாள் புலிகளிடம் இருந்து ஆயுதங்களைக் களைவதற்கு முயற்சி செய்யும் என்பதை புலிகளின் தலைவர் தெளிவாகவே உணர்ந்திருந்தார்.

அதனால், இந்தியா புலிகளுக்கு ஆயுதங்களை வினியோகித்து வந்த காலத்திலேயே வேறு நாடுகளிடம் இருந்து புலிகள் இரகசியமாக பெருமளவு ஆயுதங்களை கொள்வனவு செய்து வந்ததுடன், தம்மிடமுள்ள ஆயுதக் கையிருப்பு விடயத்தில் இந்தியாவை பலவழிகளிலும் ஏமாற்றியும் வந்திருந்தார்கள்.

“றோ”வை ஏமாற்றிய புலிகள்

1980களின் ஆரம்பத்தில், புலிகள் உட்பட தமிழ் அமைப்புகளுக்கு பயிற்சி மற்றும் ஆயுதங்களை வழங்கும் பொறுப்பு “றோ” அமைப்பினரிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது.

“றோ” வும் தம்மால் பயிற்றப்பட்ட போராளிகளின் விபரங்கள், போராட்ட அமைப்புக்களுக்கு தம்மால் வழங்கப்பட்ட ஆயுத தளபாடங்களின் பட்டியல்கள் என்பனவற்றை மிகவும் கவனமாகவே பேணி வந்தது.

ஒவ்வொரு போராட்ட அமைப்பிடமும் எப்படியான ஆயுதங்கள் இருக்கின்றன. எத்தனை ஆயுதங்கள் இருக்கின்றன போன்ற விபரங்களை மாதாமாதம் கணக்கிட்டு கண்காணித்து வந்தது. இயக்கங்களும், தாம் பாவித்த மற்றும் தம்மிடம் வைத்துள்ள ஆயுதங்களின் விபரங்களை றோ அதிகாரிகளிடம் மாதாமாதம் தெரிவிக்கவேண்டும் என்றும் கேட்கப்பட்டிருந்தார்கள்.

சரியான சந்தர்ப்பத்தில் தமிழ் அமைப்புக்களிடம் இருந்து ஆயுதங்களை மீள பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடனே “றோ” இந்த ஏற்பாட்டைச் செய்திருந்தது.

விடுதலைப் புலிகளிடம் இருந்த ஆயுதங்களின் விபரங்களும், “றோ” அதிகாரிகளால் மிகவும் கவனமாக திரட்டப்பட்டன. புலிகளும் தம்மிடமுள்ள ஆயுதங்கள் பற்றிய விபரங்களை அவ்வப்போது “றோ” அதிகாரிகளிடம் வெளியிட்டே வந்தார்கள்.

இருந்த போதிலும், புலிகள் தம்மிடமுள்ள ஆயுதங்களின் கணக்குகளை வெளியிடும் விடயத்தில் “றோ” அதிகாரிகளை எவ்வாறு ஏமாற்றியிருந்தார்கள் என்ற விபரத்தை, “India’s Sri Lankan Fiasco” என்ற ஆய்வு நூல் விபரித்திருக்கின்றது.

“புலிகளிடம் உள்ள ஆயுத கையிருப்பு பற்றிய விபரங்கள் றோ விடம் இருந்தன. ஆனால் சண்டைக்குச் சென்று திரும்பும் புலிகள், சண்டைகளின்போது பாவித்த ரவைகள் மற்றும் இழந்த ஆயுதங்கள் போன்றனவற்றின் கணக்குகளை அதிகமாகவே “றோவிடம் வெளியிட்டுவந்தார்கள்.

அதேவேளை, சண்டைகளின் போது எதிரியிடம் இருந்து கைப்பற்றிய ஆயுதங்களின் உண்மையான விபரங்களை அவர்கள் வெளியிடுவதில்லை. இதனால், புலிகளிடம் உள்ள ஆயுதங்கள் தொடர்பான கணிப்பீடுகளில் றோ அதிகாரிகளுக்கு பலத்த தடுமாற்றம் இருந்துவந்தது.

“டெலோ” அமைப்பின் மீது புலிகள் மேற்கொண்ட தாக்குதல்களின் போதும், பெருமளவு ஆயுதங்களை புலிகள் கைப்பற்றி இருந்தார்கள். இவ்வாறு “டெலோ” அமைப்பிடம் இருந்து புலிகள் கைப்பற்றிய ஆயுதங்களின் தொகையையும் ”றோ” அதிகாரிகளினால் சரியாக கணக்கிட முடியவில்லை.

இதனால்தான் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை தொடர்ந்து புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்த போதிலும், புலிகளிடம் எஞ்சியுள்ள ஆயுதங்களின் விபரத்தை இந்தியப்படை அதிகாரிகளால் சரியாகக் கணிப்பிட முடியாமல் போயிருந்தது.றோ அதிகாரிகள் புலிகளிடம் இருப்பதாக வெளியிட்ட ஆயுதங்களின் தொகையுடன் ஒப்பிடும்போது, புலிகள் ஒப்படைத்த ஆயுதங்களின் தொகை ஓரளவிற்கு பொருந்தவே செய்தன.

புலிகள் கட்டம்கட்டமாக மேற்கொண்ட ஆயுத ஒப்படைப்புக்களின் பின்னர், புலிகளிடம் ஒரு சிறிய தொகை ஆயுதங்கள் மட்டுமே எஞ்சியிருப்பதாக இந்தியப்படை அதிகாரிகள் கணித்திருந்தார்கள்.

பதுக்கப்பட்ட ஆயுதங்கள்?

1987ம் ஆண்டு செப்டெம்பர் மாத ஆரம்பத்தில் இந்தியப்படைகளின் தென் பிராந்தியத் தளபதி லெப்டினட் ஜெணரல் திபீந்தர் சிங்கிற்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் இரகசிய அறிக்கை ஒன்று கிடைத்தது. அந்த அறிக்கையில், யாழ் குடாவில் திடீரென்று பெரும் எண்ணிக்கையிலான “பொலித்தீன்” பைகளும், பெருமளவிலான “கிறீஸ்” உம் விற்பனையாகி வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

விடுதலைப் புலிகள் தங்களிடம் உள்ள பெருமளவிலான ஆயுதங்களை நிலத்தின் அடியில் புதைத்து வைப்பதற்காகவே, “கிறீஸ்” மற்றும் பொலித்தீன்களை பெருமளவு கொள்வனவு செய்து வருவதாக புலனாய்வுப் பிரிவினர் வெளியிட்ட அந்த அறிக்கையில் சந்தேகம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விடயம் பற்றி, புலிகளின் தலைவர் பிரபாகரனுடனான அடுத்த சந்திப்பின்போது திபீந்தர் சிங் தமது சந்தேகத்தை தெரிவித்திருந்தார்.

அதற்குப் பதிலளித்த பிரபாகரன், “புலிகளுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கத்தில் தமிழ் ஈழத்தில் இயங்கிவரும் மாற்றுக் குழுக்களின் கைங்காரியம்” என்று அதனைக் குறிப்பிட்டார்.

ஆயுத இறக்குமதி:

அடுத்த வாரமும் அந்த இந்தியப்படை உயரதிகாரிக்கு மற்றொரு புலனாய்வு அறிக்கை கிடைக்கப்பெற்றது. புலிகள் சிங்கப்பூரில் இருந்து பெருமளவு ஆயுதங்களை கொள்வனவு செய்திருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

700 துப்பாக்கிகளும், பெருமளவு வெடி பொருட்களும் புலிகளால் கொள்வனவு செய்யப்பட்டு, “இல்லனா” என்ற கப்பல் மூலம் இந்து சமுத்திரத்திற்கு கொண்டுவரப்பட்டு, சிறிய சிறிய படகுகள் மூலம் தரையிறக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்திய கடற்படை அந்த கப்பலை கண்டதாகவும், சர்வதேச கடற்பரப்பில் தரித்து நின்ற அந்தக் கப்பலை எதுவும் செய்யமுடியாது போய்விட்டதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விடயம் பற்றி புலிகள் தரப்பினரிடம் இந்தியப்படை அதிகாரிகள் விசாரித்த போதும், அந்தக் குற்றச்சாட்டை புலிகள் மறுத்துவிட்டார்கள்.

ஆயினும், புலிகளின் ஆயுதக் கொள்வனவு பற்றிய தகவல்களுடன், “பொலித்தின்” மற்றும் “கிறீஸ்” விற்பனை பற்றிக் கசிந்திருந்த தகவல்களையும் முடிச்சுப்போட்ட இந்தியப்படை அதிகாரிகள் ஒரு முடிவிற்கு வந்திருந்தார்கள்.

அத்தோடு இந்தியப்படை அதிகாரிகளுக்கு ஒரு விடயம் நன்றாகவே புரிந்தது. புலிகளிடம் இருந்து ஆயுதங்களைக் களைவதென்பது தாம் நினைத்தது போன்று அவ்வளவு இலேசான காரியமாக இருக்காது என்பதை இந்தியப்படை உயரதிகாரிகள் முதன்முதலாக உணர ஆரம்பித்தார்கள்.

அடுத்த சில நாட்களில் யாழ்குடாவில் பல காட்சி மாற்றங்கள் அடுத்து அடுத்து இடம்பெற ஆரம்பித்திருந்தன. விடுதலைப் புலிகள் அரசியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் சில நகர்வுகளை மேற்கொள்ள ஆரம்பித்திருந்தார்கள்.

அந்த நகர்வுகளில் சில பகிரங்கமாகவும், பல இரகசியமாகவும் இடம்பெற ஆரம்பித்திருந்தன.

புலிகள் மேற்கொண்ட அந்த நகர்வுகள் பற்றி தொடர்ந்துவரும் அத்தியாயங்களில் விரிவாகப் பார்ப்போம்.

தொடரும்..


 

’அரசியல் இலக்கை அடையத் துணைசெய்கின்ற கருவிகளே ஆயுதங்கள்’’ – வே.பாலக்குமார்! (அவலங்களின் அத்தியாயங்கள்- 59) – நிராஜ் டேவிட்

  • April 20, 2013

 
 இந்திய அமைதிகாக்கும் படைகள் தமிழீழத்தில் நிலைகொண்டிருந்த போது, ஈழத்தில் தமிழர்களின் விடுதலைக்காகப் போராடிக்கொண்டிருந்த ஒவ்வொரு தமிழ் அமைப்புக்களும் எப்படியான நிலைப்பாடுகளை எடுத்திருந்தன என்பது பற்றி இத் தொடரில் முன்னர் பார்த்த்திருந்தோம்.

விடுதலைப் புலிகள் இலங்கை-இந்திய ஒப்பந்தத்திற்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுத்திருந்தார்கள். ஈ.பி.ஆர்.எல்.எப்., டெலோ, ஈ.என்.டீ.எல்.எப். போன்ற அமைப்புக்கள் முற்றுமுழுதாகவே இந்தியப்படைகளுக்கு ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டை எடுத்திருந்தார்கள்.

’’புளொட்|’’அமைப்பினரோ ஸ்ரீலங்கா அரசுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு, ஸ்ரீலங்காப் படைகளுடன் இணைந்து செயற்பட ஆரம்பித்திருந்தார்கள்.

இந்தக் காலகட்டத்தில், ஈழ மாணவர் புரட்சிகர அமைப்பான ’’ஈரோஸ்’’ அமைப்பு எப்படியான நிலைப்பாட்டை எடுத்திருந்தது என்பது பற்றியும் ஆராய்வது இச்சந்தர்ப்பத்தில் அவசியமாகின்றது.

இந்து நாளிதழுக்கு பாலக்குமார் வழங்கிய செவ்வி:

இந்திய அமைதிகாக்கும் படை தொடர்பாகவும், இந்திய-இலங்கை ஒப்பந்தம் தொடர்பாகவும், ஈரோஸ் அமைப்பு கொண்டிருந்த நிலைப்பாட்டை, அந்த அமைப்பின் புரட்சிகர நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வி.பாலகுமார் அவர்கள், இந்தியாவின் பிரபல இந்து ஆங்கில நாளிதழுக்கு வழங்கியிருந்த செவ்வி ஒன்றில், தெளிவுபடுத்தியிருந்தார். 1987ம் ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியான அந்தப் பத்திரிகைப் பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கான பாலக்குமாரின் பதில்களும்:

கேள்வி: ஆயுத ஒப்படைப்பு பற்றி…

பதில்: முதலில் நான் இந்திய அமைதிகாக்கும் படை இலங்கைக்குச் சென்றதை பாராட்டியாகவேண்டும். எங்கள் பகுதிகளில் அமைதியை நிலைநிறுத்த இந்தியப்படைக்கு உதவி புரியுமாறு எங்கள் தோழர்களுக்கு நாங்கள் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளோம். அமைதியை நோக்கிய இந்தியப்படையின் முயற்சிகளுக்கு எங்கள் தோழர்கள் ஒருபோதும் தடங்கலாக இருக்கமாட்டார்கள் என்பதற்கு

எங்களால் உத்தரவாதம் அளிக்க முடியும். இந்திய அமைதிகாக்கும் படையினரிடம் எங்கள் ஆயுதங்களை ஒப்படைப்பதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் இந்திய அரசு எமது கஷ்ட நஷ்டங்களைப் புரிந்துகொள்ளவேண்டும்.

கேள்வி: என்ன கஷ்டங்கள்?

பதில்: கடந்த பத்து வருடங்களாகப் போராடிவரும் எமது தோழர்களை திடீரென்று ஆயுதங்களைக் கீழே போடுவதற்கு ஒப்புக்கொள்ளச் செய்வது அவ்வளவு சுலபமான வேலையல்ல. எங்கள் தோழர்கள் தங்கள் மனங்களிலும் ஆயுதங்களைத் தரித்திருக்கின்றார்கள். இந்தப் போராட்ட உணர்வே எங்கள் தோழர்களுக்கும், மக்களுக்கும் ஒரு பாதுகாப்பு கேடயமாக விளங்குகின்றது.

அதனால்தான் சாதகமான ஒரு சூழல் உருவாகாத இந்த நேரத்தில் ஆயுதங்களை ஒப்படைப்பதற்கு எமது தோழர்களின் இசைவைப் பெறுவது எளிதான, சுலபமான வேலையல்ல என்று கூறினேன்.

எதுவாயினும் சரி, நான் இங்கு ஒரு விடயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகின்றேன். நாம் ஆயுதங்களின் பின்னால் பித்துப்பிடித்துத் திரியவில்லை.

ஆயுதங்கள் என்பதற்காகவே அவற்றை நாம் ஏந்தியிருக்கவும் இல்லை. எங்களின் சக்தி ஆயுதங்களுக்குள் மாத்திரமே அடங்கியிருக்கவில்லை. அதாவது எங்களுக்கு ஆயுதங்கள் வெறும் அதிகாரச் சின்னமல்ல.

உண்மையைச் சொல்வதானால், எங்களின் மகத்தான அரசியல் இலக்கை அடையத் துணைசெய்கின்ற கருவிகளே ஆயுதங்கள்.

கேள்வி: இந்திய-இலங்கை ஒப்பந்தம் பற்றிய உங்கள் நிலைப்பாடு என்ன?

பதில்: ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை ஸ்ரீலங்காப் பாராளுமன்றம் அங்கீகரிக்கவேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. அதனால் ஆயுதங்களை ஒப்படைப்பதற்கு உரிய கால அவகாசம் தேவை. ஒப்பந்தத்தை ஸ்ரீலங்காப் பாராளுமன்றம் ஏற்றுக்கொண்டதற்கான நம்பிக்கையை எங்கள் தோழர்களிடம் ஏற்படுத்திய பின்னரே, ஆயுதங்களைக் கைவிட இயலும். ஆனால், எது எப்படியாயினும், இந்திய அமைதிகாக்கும் படை சென்றிருக்கும் இச்சூழ்நிலை பற்றி எங்கள் தோழர்களோடு விவாதித்து வருகின்றோம். விரைவில் ஒரு முடிவைக் காண்போம் என்று நம்புகின்றோம்.

கேள்வி: இந்த ஒப்பந்தம் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகின்றதா? அல்லது வேதனையைத் தருகின்றதா?

பதில்: நாங்கள் இந்த ஒப்பந்தத்தை வரவேற்கவில்லை. அதாவது இந்த ஒப்பந்தம் எங்களுக்கு மனநிறைவைத் தருவதாக இல்லை. ஆனால் நாங்கள் இந்த ஒப்பந்தத்தை முழுமூச்சாக எதிர்க்கவும் இல்லை.

எனினும் இந்த ஒப்பந்தம் வெளிநாட்டுச் சக்திகளுக்கு, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இழிந்த கைக்கூலிகளுக்கு, குறிப்பாக மனிதாபிமானத்தின் முதல் எதிரியும், எண்ணற்ற பலஸ்தீனப் போராளிகளைப் படுகொலை செய்ததுமான  இஸ்ரேல் மொசாட் இற்கு, இலங்கையை விட்டு வெளியேற வழி வகுத்திருக்கின்றது. மேலும் இந்த ஒப்பந்தம், இந்துமகா சமுத்திரத்தின் மீதான அமெரிக்காவின் நாசகாரச் செயல்முறைகளை தடுத்துள்ளது. இத்திட்டங்களை நிறைவேற்றுவதால் ஒப்பந்தத்தை இந்த நோக்கில் நாங்கள் வரவேற்கவே செய்கின்றோம்.

அதேவேளை, நாங்கள்  இந்த ஒப்பந்தத்தை ஏன் முழுமனதுடன் வரவேற்கவில்லை என்பதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. 1975 இல் நிறுவப்பட்ட ஈழப் புரட்சிகர அமைப்பு (ஈரோஸ்) மலையகத் தமிழர்களின் நலன்களைப் பாதுகாப்பதையும் தனது அடிப்படைக் கொள்கைத் திட்டமாகக் கொண்டிருக்கின்றது. தமிழ் தேசிய இனத்தில் மலையக மக்களே ஜீவனான, இன்றியமையாத அங்கமாக விளங்குகின்றார்கள்.

தமிழ் தேசிய இனப்பிரச்சனைக்கான எந்தவொரு தீர்வும், அல்லது எந்தவொரு ஒப்பந்தமும் மலையகத் தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சனைக்கான தீர்வையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்றே நாங்கள் கருதுகின்றோம்.

ஆனால் துரதிஷ்டவசமாக இந்த ஒப்பந்தம் அவ்வாறு இல்லை. ஆதலால் அரசியல் ரீதியிலான பலவகைப் போராட்டங்களில் தொடர்ந்து நாம் ஈடுபடுவதாக கூறியிருக்கின்றோம். ஸ்ரீலங்கா அரசு எங்களைப் போராடவிடாமல் தடுத்தால் நிச்சயம் நாங்கள் வேறு பல போராட்ட வடிவங்களை கைக்கொள்ளுவோம்.

மேலும் கிழக்கு மாகாணத்தில் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடாத்தப்போவதாய்க் கூறியிருப்பதை நாங்கள் எதிர்க்கவே வேண்டியிருக்கின்றது. இந்தக் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு முறையை எண்ணி நாங்கள் வருந்தவில்லை. மாறாக கடந்த 40 வருடங்களாக கிழக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றங்கள் நிகழ்ந்து வந்துள்ளதை எண்ணியே பெரிதும் வருந்துகின்றோம். 1986 டிசம்பர் 19இல் அறிவிக்கப்பட்ட புதுத் தீர்மானங்கள் விவாதத்திற்குரிய பல கேள்விகளை எழுப்பின.

அந்தத் தீர்மானத்தின் ஒரு கூறு, கிழக்கு மாகாணத்தில் இருந்து அம்பாறை தேர்தல் தொகுதியை விலக்கி வைத்ததாய் அறிவித்தது. ஆனால் இன்றோ அவர்கள் அம்பாறையை கிழக்கு மாகாணத்துடன் இணைக்கப் போகின்றார்களாம். இந்த நேரத்தில் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு முறை குறித்து எங்களது கவலை, அவர்கள் சிங்களப் பெரும்பாண்மையினரைக் கொண்டு இந்த மாகாணங்களின் கூட்டிணைவிற்கு எதிராக வாக்களிக்கச் செய்துவிடுவார்கள் என்பதே. கிழக்கு மாகாணத்தில் இனவாத ஸ்ரீலங்கா அரசின் உதவியோடு, நிகழ்ந்த சிங்களக் குடியேற்றத்தை இந்தக் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு முறை, சட்டப் பொருத்தமுடைய செய்கையாக மாற்றிவிடுமோ என்று அஞ்சுகின்றோம். ஆகவே இந்த விடயத்தில் அதிக கவனம் செலுத்துமாறு இந்திய அரசைக் கேட்டுக்கொண்டிருக்கின்றோம்.

இந்தியாவிற்கு முடிந்த அளவு நாங்கள் துணை புரிய முயற்சிப்போம்.

இவ்வாறு, ஈரோஸ் அமைப்பின் தலைவர் பாலக்குமார், இந்து ஆங்கில நாளிதழுக்கு அளித்த செவ்வியில் தெரிவித்திருந்தார்.

ஈரோஸ் நடாத்திய ஹர்த்தால்:

இலங்கை இந்திய ஒப்பந்த விடயத்தில் ஈரோஸ் எடுத்திருந்த நிலைப்பாடானது, புலிகளுக்கு சார்பான ஒரு நிலைப்பாடாகவே ஸ்ரீலங்கா அரசிற்கு தோன்றியது. அத்தோடு, மலையகத் தமிழர்கள் தொடர்பாக ஈரோஸ் கொண்டிருந்த நிலைப்பாடும், ஸ்ரீலங்காவில் மத்திய மாகாணத்தில் மற்றொரு பிரச்சனையை உருவாக்கிவிடுமோ என்ற அச்சத்தையும் சிங்கள அரசுக்கு ஏற்படுத்தியிருந்தது. இதனால் ஈரோஸ் அமைப்பின் உறுப்பினர்களுக்கு எதிராக ஸ்ரீலங்கா அரசு தனது படையினரை ஏவிவிட்டது.

ஒரு நாள் திடீரென்று சில ஈரோஸ் உறுப்பினர்கள் காணாமல் போயிருந்தார்கள். ஸ்ரீலங்காப் படைகளே தமது அமைப்பின் உறுப்பினரைக் கடத்திக் கொலை செய்துவிட்டதாக ஈரோஸ் குற்றம் சுமத்தியது.

இந்தச் சம்பவத்தை கண்டித்து 1987ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ம் திகதி, பூரண ஹர்த்தால் ஒன்றிற்கான அழைப்பையும் அந்த அமைப்பு விடுத்திருந்தது.

இந்தச் சம்பவம் பற்றி, ஈரோஸ் அமைப்பின் தலைவர் பாலகுமார் அவர்கள், சென்னையில் இருந்து ஈழ நண்பர் கழகத்தினால்| வெளியிடப்பட்ட நட்புறவுப் பாலம் சஞ்சிகைக்கு வழங்கியிருந்த செவ்வியில், போர் நிறுத்தம் அமுலில் இருந்துவரும் வேளையிலும் ஸ்ரீலங்காப் படைகள் எமது தோழர்கள் மீது தாக்குதல் நடாத்திவருவது தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

இதுபோன்ற செய்கைகளின் மூலம், இன்னமும் ஆயுதம் தாங்கிக்கொண்டு முகாமிற்கு வெளியே திரிந்து, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தாமல் திட்டமிட்டு சீர்குலைக்க ஸ்ரீலங்கா இராணுவத்தின் தீய சக்திகள் முயற்சி செய்கின்றன.

ஸ்ரீலங்கா இராணுவத்தின் கொடூரத் தன்மை மாறாதிருப்பதும் இச்சம்பவத்தின் மூலம் வெளிப்பட்டுள்ளது.

கொடூரமாகக் கொல்லப்பட்ட எமது போராளிகளின் உடல்களை அழித்துவிட்டு அல்லது மறைத்துவிட்டு ஒன்றுமே நடக்கவில்லை என்று கூறும் ஸ்ரீலங்கா அரசின் நாடகம், அதன் சுயரூபத்தை அம்பலப்படுத்துவதாகவே உள்ளது.

ஸ்ரீலங்கா இராணுவம் முற்றாக எமது பகுதிகளில் இருந்து வெளியேறாதவரை எமக்குப் பூரண அமைதி கிட்டாது என்பதை இச்சம்பவம் துலாம்பரமாக வெளிப்படுத்துகின்றது.’’ என்று பாலக்குமார் தெரிவித்திருந்தார்.

(தொடரும்…)


இந்தியா தொடர்பாக புலிகளின் தலைவர் பிரபாகரன் வெளிப்படுத்திய நிலைப்பாடு! (அவலங்களின் அத்தியாயங்கள்- 60)

நிராஜ் டேவிட்

இந்திய-இலங்கை ஒப்பந்தம் தொடர்பான தமிழ் அமைப்புக்களின் உணர்வலைகள் பற்றியும், இந்த ஒப்பந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஒவ்வொரு தமிழ் அமைப்புக்களும் எடுத்திருந்த நிலைப்பாடுகள் பற்றியும், கடந்த சில வாரங்களாகப் பார்த்து வருகின்றோம்.

ஈழத் தமிழர்கள் மீது திணிக்கப்பட்டிருந்த இந்த ஒப்பந்தத்திற்கு முற்றிலுமாக தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்த விடுதலைப் புலிகள், இந்த ஒப்பந்தத்தினால் ஈழத் தமிழர்களின் எதிர்கால இருப்புக்கு ஏற்பட இருந்த அபாயத்தையும் நன்கு உணர்ந்தே இருந்தார்கள். அதனால் இந்திய அரசின் செயல்களை எதிர்க்கும் முடிவுக்கும் வந்திருந்தார்கள்.திலீபனின் உண்ணாவிரதத்தின் மூலம், அகிம்சை வழியில் தமது எதிர்ப்புக்களை இந்தியாவிற்கு வெளிப்படுத்த ஆரம்பித்தார்கள்.

ஆனால், இந்த உண்ணாவிரதத்தின் போதும், அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து இடம்பெற்ற சில அசம்பாவிதங்களின் போதும் இந்தியா நடந்துகொண்ட விதம், வேறு வழி இல்லாமல் புலிகளை மீண்டும் ஆயுதங்களை நோக்கியே நகரவைத்தன.

இந்தச் சம்பவங்களின் தொடர்ச்சியை மிக விரிவாக ஆராயும் முன்பதாக, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள், இந்திய-இலங்கை ஒப்பந்தம் தொடர்பாக தமது நிலைப்பாட்டை உலகிற்கும், குறிப்பாக இந்தியாவிற்கும் வெளிப்படுத்தியிருந்த மற்றொரு சம்பவத்தையும் பார்த்துவிடுவது அவசியம்.

பிரபாகரனின் புரொன்ட்லைன் சஞ்சிகைப் பேட்டி:

இந்தியாவில் இருந்து வெளியாகும் புரொன்ட்லைன் சஞ்சிகைக்கு பிரபாகரன் அவர்கள் செவ்வி ஒன்றை வழங்கியிருந்தார்.

இந்திய-இலங்கை ஒப்பந்த காலத்தில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட இந்தச் செவ்வியின் போது, ஒப்பந்தம் பற்றிய புலிகளின் நிலைப்பாட்டையும், ஒப்பந்தம் தொடர்பான புலிகள் மேற்கொள்ள இருந்த அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றியும், பிரபாகரன் அவர்கள் மிகவும் சூட்சுமமாக தெளிவுபடுத்தியிருந்தார்.

ஒப்பந்தம் தொடர்பாக எதிர்காலத்தில் புலிகள் மேற்கொள்ள இருந்த நடவடிக்கைகளின் எதிர்வுகூறலாகவும் இந்தச் செவ்வி அமைந்திருந்தது.

அந்தப் பேட்டியின் சாராம்சம் இதுதான்:

கேள்வி: இந்திய-இலங்கை ஒப்பந்தம் பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன?

பதில்: இந்த ஒப்பந்தம் இந்திய அரசாங்கத்திற்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒரு உடன்பாடு. இது பற்றி எமது மக்களுடன் கலந்தாலோசிக்கப்படவில்லை. இந்த ஒப்பந்தத்தில் சர்வஜன வாக்கெடுப்பு பற்றி குறிப்பிடப்பட்டிருக்கின்றது. வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டுமானால், கிழக்கு மாகான மக்கள் மத்தியில் ஒரு சர்வஜன வாக்கெடுப்பை நடாத்தவேண்டும் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சாதாரண பெரும்பாண்மையினால் இந்த இணைப்பு தீர்மானிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வடக்குகிழக்கு மாகாணங்கள் அடங்கிய நிலப்பரப்பானது எமது தாயகப் பூமி. இதில் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.்

1983 இல் வடக்குகிழக்கில் ஒரு சில இராணுவ முகாம்களே இருந்தன. ஆனால் தற்பொழுது 200 இற்கும் அதிகமான இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்ப் பகுதிகளில் உள்ள சிங்களக் குடியேற்றங்களைப் பாதுகாக்கும் நோக்குடன்தான் இந்த முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த இராணுவ முகாம்களை அகற்றாமல் சிங்களக் குடியேற்றங்களை அகற்றமுடியாது என்பதுடன், இந்த இராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பாகவோ அல்லது இந்தச் சிங்களக் குடியேற்றங்களை அகற்றுவது தொடர்பாகவோ, இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் எதுவுமே குறிப்பிடப்படவில்லை. இது, இந்த ஒப்பந்தத்தில் காணப்படுகின்ற மிகப்பெரிய குறைபாடு.

தமிழ்ப் பகுதிகளை ஊடுருவி உள்ள ஸ்ரீலங்காவின் ஆயுதப் படைகள் தமிழ் மக்கள் மீது புரிந்து வரும் அட்டூழியங்களைத் தடுத்து நிறுத்தவே இந்தியப் படைகள் இலங்கைக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால், தமிழ் பிரதேசங்களில் சிங்களப் படைகள் நிலைகொண்டுள்ள இடங்களுக்கு இந்தியப்படைகள் செல்லவில்லை. இந்தியப்படையணிகள் பெரும்பாலும் யாழ்பாணக் குடாநாட்டுக்குள்ளேயே முகாமிட்டு நிலைகொண்டுள்ளன. இயக்கச்சி, பளை, கொடிகாமம், தாளையடி, பண்டத்தரிப்பு, காங்கேசன்துறை என்று இந்திய இராணுவத்தினர் யாழ்ப்பாணக் குடாநாட்டினுள்ளேயே முடங்கிக் கிடக்கின்றார்கள்.

தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து நிற்கும் 200 இற்கும் அதிகமான சிங்கள இராணுவ முகாம்கள் அகற்றப்படவேண்டும் என்ற எமது கோரிக்கைகளுக்கு இந்திய அரசு செவிசாய்ப்பதாகத் தெரியவில்லை. மாறாக, தமிழ் மக்கள் பாதுகாப்பாக வாழ்ந்துவரும் யாழ்ப்பாணப் பிரதேசத்திலேயே இந்திய இராணுவம் குவிக்கப்பட்டு வருகின்றது. இதனால் எமது மக்கள் மத்தியில் அச்சமும், சந்தேகமும் தோன்றியுள்ளது.

தமிழர் தேசியப் பிரச்சனையில் இரண்டு அடிப்படையான அம்சங்கள் உள்ளன. ஒன்று தமிழர் தாயகம். அதாவது வடக்கு கிழக்கு இணைந்ததும், பூகோள ரீதியாக முழுமையுடையதும், பிரிக்கமுடியாததுமான தமிழரின் தாயகப் பூமி. இரண்டாவது, தமிழரின் நில உரிமைப்பாடு. இந்த இரண்டு அடிப்படையான பிரச்சனைகளையும் இந்திய-இலங்கை உடன்படிக்கை தீர்த்துவைக்கத் தவறிவிட்டது என்றே கூறவேண்டும்.

ஸ்ரீலங்கா இராணுவம் வெளியேறவேண்டும்:

கேள்வி: இந்தியா பற்றியும், இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி பற்றியும் உங்களது அபிப்பிராயம் என்ன?

பதில்: இந்திய அரசு தனது சொந்த தேசிய நலனை மட்டுமே கருத்திற் கொண்டு அவசரஅவசரமாக இந்த ஒப்பந்தத்தை செய்திருக்கின்றது. நீண்ட காலமாக ஒடுக்கப்பட்டுவரும் ஈழத்தமிழ் மக்களின் அபிலாஷைகளையும், பிரச்சனைகளையும் இந்தியா கருத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.

கேள்வி: இது பற்றி மேலும் விளக்க முடியுமா?

பதில்: இன்று முல்லைத்தீவில் தமிழ் மக்கள் அகதிகளாக வந்து குவிந்தவண்ணம் இருக்கின்றார்கள். தமிழ்ப் பகுதிகளில் மக்கள் ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை நடாத்தி வருகின்றார்கள். எமது மக்களின் பிரச்சனைகள் எதுவும் இதுவரை தீர்க்கப்பட்டதாக இல்லை. இதற்கிடையில் நாங்கள் எமது ஆயுதங்களைக் கையளிக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றோம். மக்களின் பிரச்சனைகள் முதலில் தீர்க்கப்படவேண்டும்.

அகதிகளாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் தமது சொந்த இடங்களுக்கு மீளச் சென்று குடியமர வேண்டுமானால், அப்பகுதிகளை ஆக்கிரமித்துள்ள ஸ்ரீலங்கா படைகளின் இராணுவ முகாம்கள் அகற்றப்படவேண்டும். ஆனால், சிங்கள இராணுவ முகாம்களை அகற்றுவதற்கு இந்திய இராணுவம் தயாரில்லை போன்றே தெரிகின்றது. ஆகவே இந்தப் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படப்போவதில்லை. ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முன்னதாக இந்தியா எம்முடன் பேச்சுக்களை நடாத்தியிருந்தால் சிங்கள இராணுவம் தமிழ்ப் பகுதிகளில் இருந்து அகற்றப்படவேண்டும் என்ற நிபந்தனையை விதித்திருப்போம். ஆனால் அப்படியான பேச்சுக்கள் எதையும் இந்தியா எம்முடன் மேற்கொள்ளவில்லை.

கேள்வி: ஆகஸ்ட் மாதம் 4ம் திகதி, சுதுமலையில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் நீங்கள் உரை நிகழ்த்தும்போது, ராஜீவ் காந்தியுடன் மனம் விட்டு பேசியதாக தெரிவித்ததுடன், அப்போது அவர் உங்களிடம் சில வாக்குறுதிகளை தந்திருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தீர்கள். எப்படியான வாக்குறுதிகளை ராஜீவ் காந்தி உங்களிடம் தந்திருந்தார்?

பதில்: வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்ளுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படும் என்று ராஜீவ் காந்தி எனக்கு வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் இன்னமும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்லமுடியாத நிலைதான் காணப்படுகின்றது. கிழக்கு மாகாணத்திற்கு இந்திய இராணுவம் அனுப்பப்பட்டிருக்கின்ற போதிலும், தமிழ் மக்கள்  அங்குள்ள பல பிரதேசங்களுக்கு செல்லமுடியாத நிலைதான் உள்ளது. சிங்கள இராணுவத்தினர், சிங்கள ஊர்காவல் படையினர், சிங்களக் குடியேற்றவாசிகள் ஆகியோரின் கடும் எதிர்ப்புக்கள் காரணமாக தமிழ் மக்கள் தமது சொந்தக் கிராமங்களுக்கு திரும்ப முடியாதிருக்கின்றது. தனியார் வீடுகள், பாடசாலைகள், பொதுக்; கட்டிடங்கள், போன்ற இடங்களில் எல்லாம் சிங்கள இராணுவம் நிலைகொண்டுள்ள நிலையில், மக்கள் எவ்வாறு அங்கு மீளக் குடியேறுவது?

கேள்வி: கிழக்கில் விடுதலைப் புலிகள் பலம் வாய்ந்த அமைப்பாகச் செயற்பட முடிகின்றதா?

பதில்: கிழக்கில் எமது அமைப்பு பலம்வாய்ந்த ஒரு அமைப்பாகச் செயற்பட முடிகின்றது. திருகோணமலை மட்டக்களப்பு மாவட்டங்களில் நாம் இணக்கவேலைகளை விரிவாக்கி வருகின்றோம். இப்பகுதிகளில் சிங்கள மக்கள் குடியேறியுள்ள இடங்களில்கூட எமது உறுப்பினர்கள் இயக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். மூதூரில் விடுதலைப் புலிகளின் கொடியை ஏற்றிவைத்த பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தை அடுத்து அப்பகுதிக்கு விரைந்த இந்திய இராணுவத்தினரும், அரசாங்க அதிபரும் புலிக்கொடியை இறக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்கள். இருந்த போதிலும் அதற்கு கட்டுப்பட பொதுமக்கள் மறுப்புத் தெரிவித்ததுடன், தமது நடவடிக்கைகளில் உறுதியாக இருந்திருக்கின்றார்கள். கிழக்கிலங்கை மக்கள் அரசியல் விழிப்புணர்வு மிக்கவர்களாக, எமது அமைப்பிற்கு அனைத்து ஆதரவினையும் வழங்கி வருகின்றார்கள்.

இவ்வாறு, பிரபாகரன் அவர்கள் தனது பேட்டியில் தெரிவித்திருந்தார்.

15.09.1987 அன்று இந்திய அரசிற்கும், இந்தியப் படைகளுக்கும் எதிராக விடுதலைப் புலிகள் தமது முதலாவது யுத்தத்தை ஆரம்பித்தார்கள். அகிம்சை என்னும் ஆயுதத்தைக் கொண்டு புலிகள் மேற்கொண்ட அந்த யுத்தம் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.


 இந்தியா மீது புலிகள் தொடுத்த முதலாவது யுத்தம் (அவலங்களின் அத்தியாயங்கள்- 61) – நிராஜ் டேவிட்

இந்திய அரசிற்கும், இந்தியப் படைகளுக்கும் எதிராக விடுதலைப் புலிகள் தமது முதலாவது யுத்தத்தை ஆரம்பித்தார்கள். ஆனால் அந்த யுத்தம் போராயுதங்களைக் கொண்டு நடாத்தப்பட்ட ஒரு யுத்தமல்ல.

முழுக்க முழுக்க அகிம்சை என்னும் ஆயுதத்தைக் கொண்டே புலிகள் இந்தியாவிற்கு எதிரான தமது யுத்தத்தை ஆரம்பித்திருந்தார்கள்.எந்த அகிம்சை ஆயுதத்தை தமது கைகளில் எடுத்து மகாத்மா காந்தியும், காங்கிரஸ{ம் வெள்ளையர்களுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றி கண்டிருந்தார்களோ, எந்த சாத்வீகப் போராட்டம் என்கின்ற தமது ஆயுதம் பற்றி இந்தியர்கள் உலக மட்டத்தில் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தார்களோ, அதே அகிம்சை ஆயுதத்தின் மூலமே இந்தியாவின் ஆக்கிரமிப்பிற்கு பதிலடி கொடுக்கவேண்டும் என்று விடுதலைப் புலிகள் தீர்மானித்தார்கள்.

இந்தியப்படை வெயியேறவேண்டும்

இந்தியப் படைகள் ஸ்ரீலங்காப் படைகளுக்கு சார்பாக நடந்துகொள்வதாக பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த சந்தேகங்களின் வெளிப்பாடு, பலவிதமான போராட்டங்கள் வாயிலாக வெளிக்காண்பிக்கப்பட்டன.

யாழ்ப்பாணத்தில், இந்தியப் படை முகாம்களுக்கு முன்பாக பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களையும், அமைதிப் பேரணிகளையும் மேற்கொண்டு, இந்தியப்படையினரின் நடவடிக்கைகள் தொடர்பான தமது அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள்.

யாழ்ப்பாண கோட்டையினுள் உள்ள இந்தியப்படை முகாமுக்கு முன்பாக, இந்தியப் படையினருக்கு எதிரான ஒரு மறியல் போராட்டம் நடைபெற்றது. யாழ் பொது அமைப்புக்களும், விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவினரும் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தார்கள். இந்த மறியல் போராட்டத்தின் இறுதியில், விடுதலைப் புலிகளின் யாழ் அரசியல் பொறுப்பாளர் திலீபன் உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், இந்தியாவிற்கு எதிரான புலிகளின் குற்றச்சாட்டை பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.

அவர் தனது உரையில்,

இந்த யாழ் கோட்டையிலே சில காலங்களின் முன்பதாக தமிழனின் கொடி பறந்தது. அந்தக் கொடியை போர்த்துக்கேயர் பறித்தெடுத்தனர். போர்த்துக்கேயரிடம் இருந்து ஒல்லாந்தரும், ஒல்லாந்தரிடம் இருந்து ஆங்கிலேயரும் பறித்தெடுத்தனர். ஆங்கிலேயரிடம் இருந்து சிங்களவர் கைப்பற்றிய இந்த கொடியை, இன்று இந்தியர்கள் கைப்பற்றியுள்ளார்கள். இந்தக் கோட்டையில் தமிழ்க் கொடி, புலிக்கொடி பறக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

எங்கள் விடுதலைப் போராட்டத்தை மழுங்கடிக்கவே இலங்கை-இந்திய ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டது. இந்தியப்படையும் வந்து சேர்ந்தது.

எமது தமிழ் மக்களுக்கு விடுதலை கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம். இந்தக் கோட்டையிலே தமிழர்களின் சுதந்திரக் கொடி, புலிக்கொடி பறக்கவேண்டும் என்று திலீபன் உணர்ச்சிகரமாக தெரிவித்தார்.

இந்தியப்படை தமிழ் மண்ணை விட்டு வெளியேறவேண்டும் என்ற புலிகளின் நிலைப்பாட்டை, புலிகள் பகிரங்கமாக அறிவித்த முதலாவது சந்தர்ப்பம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

புலிகள் இந்தியத் தூதரிடம் விடுத்த கோரிக்கைகள்:

13.09.1987 ம் திகதி, விடுதலைப் புலிகள் முக்கியமான ஐந்து கோரிக்கைகளை, இந்தியத் தூதருக்கு அனுப்பி வைத்தார்கள்.

(அ) தமிழ் மண்ணில் இருந்து சிங்கள இராணுவம் விலக்கிக் கொள்ள வேண்டும்.

(ஆ) மணலாற்றில் முடுக்கி விடப்பட்டுள்ள சிங்களக் குடியேற்றம் தடுத்து  நிறுத்தப்பட வேண்டும்.

(இ) வடகிழக்கில் இடைக்கால ஆட்சி அமையுமட்டும் சகல மீளமைப்பு வேலைகள் நிறுத்தப் படவேண்டும்.

(ஈ) தமிழ்ப் பிரதேசத்தில் சிங்களவர்களைக் கொண்ட காவல்துறை திறக்கப்படுவது நிறுத்தப் படவேண்டும்.

(உ)அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

இந்தியத் தூதுவருக்கு மேற்படி கோரிக்கைகளை முன்வைத்த விடுதலைப் புலிகள், 24 மணி நேரத்திற்குள் இந்தியா தனது பதிலை வழங்கவேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்கள். இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற இந்தியா தயங்கினால், சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை தாம் மேற்கொள்ளப்போவதாகவும் புலிகள் அறிவித்திருந்தார்கள்.

புலிகள் விடயத்தில் எப்பொழுதுமே ஒருவித மேலாதிக்க மனப்பான்மையுடன் நடந்துகொண்டுவந்த இந்தியத் தூதுவர் தீக்ஷித், புலிகள் தன்னை மிரட்ட எத்தனிப்பதாக நினைத்தார். ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இந்தியத் துருப்புகள் யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்த நிலையில் புலிகள் வீணான மிரட்டல்களை விடுத்து வருவதாகவே அவர் நினைத்தார். புலிகளால் பெரிதாக எதுவும் செய்துவிடமுடியாது என்பதில் அவர் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். அதனால், புலிகள் விடுத்திருந்த கோரிக்கைகள் பற்றி அவர் அலட்டிக்கொள்ளவில்லை.

ஆனால் புலிகள் தாம் அறிவித்தபடி உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்கள்.

விடுதலைப் புலிகளின் யாழ்பாண அரசியல் பொறுப்பாளர் திலீபன், சாகும் வரையிலான தனது உண்ணாவிரதத்தை 15.07.1987ம் திகதி காலை 9.45 இற்கு ஆரம்பித்தார்.

யாழ் தமிழர்களின் கலாச்சாரப் பண்பாட்டு மையம் என்று கருதப்படுகின்ற நல்லூர் கந்தசுவாமி கோவிலின் முன்பு, திலீபனின் வரலாற்றுப் புகழ்மிக்க அந்த உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்றது.

திலீபனின் ஒப்பற்ற தியாகம்:

இலங்கை-இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முன்னதாக விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் இந்தியாவின் விருந்தாளியாக புதுடில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதும், அங்கு புதுடில்லியில் அவர் சிறை வைக்கப்பட்ட போதும், திலீபனும் உடனிருந்தார். புதுடில்லியில் புலிகளின் தலைவர்களுக்கு இழைக்கப்பட்ட அவமானகரமான சம்பங்கள் பற்றிய அனுபவத்தை திலீபனும் பெற்றிருந்தார்.

அங்கு இந்தியத் தலைவர் ராஜீவ் காந்திக்கும், புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள், இருவருக்கும் இடையில் ஏற்பட்டிருந்த எழுதப்படாத ஒப்பந்தங்கள் போன்றனவற்றின் விபரங்கள் அனைத்துமே திலீபனுக்கு தெரிந்திருந்தது.

அதனால் நடைமுறையில் புலிகளை ஏமாற்றும் விதமாக இந்தியா நடக்க ஆரம்பித்தபோது, திலீபன் மிகவும் கோபம் அடைந்தார்.

இந்தியாவின் உண்மையான முகத்தை தமிழ் மக்களுக்கும், உலகிற்கும் தோலுரித்துக் காட்டவேண்டும் என்று அவர் நினைத்தார். அந்த நோக்கத்திற்காக தன்னை மாய்த்துக்கொள்ளவும் அவர் துணிந்தார்.

உலகின் மிகப் பெரும் மக்களாட்சி நடைபெறும் நாடு என்று மார்தட்டிக்கொண்டிருக்கும் இந்தியாவிடம் நீதிகேட்டு போராட தனி மனிதனாக புறப்பட்ட திலீபன், அகிம்சையையே தனது ஆயுதமாகத் தரித்துக்கொண்டதானது, இந்தியாவிற்கு, சர்வதேச அரங்கில் மிகப் பெரிய தலைகுணிவை ஏற்படுத்தியதாக அமைந்தது. அகிம்சை வழியில் சுதந்திரம் பெற்றதாக பெருமைப்பட்டுக் கொள்ளும் இந்தியா, திலீபன் என்ற தமிழ் இளைஞனின் அகிம்சைப் போராட்டத்தை தனது ஆணவத்தால் சிதைத்துவிட்டதை தனது சரித்திரத்தில் வெட்கத்துடன் பதித்துக்கொண்டது.

இந்தியா என்ற மாயையில் அதுவரை சிக்கிக்கிடந்த பல ஈழத் தமிழர்களுக்கு, இந்தியாவின் உண்மையான நோக்கத்தையும், நிலைப்பாட்டையும் வெளிப்படுத்திய ஒரு சந்தர்ப்பமாக திலீபனின் இந்த உண்ணாவிரதப் போராட்டமும். அவரது ~தற்கொடையும்| அமைந்திருந்தது.

தமிழ் இனத்தின் ஆண்மாவை, திலீபனின் உண்ணாவிரதப் போராட்டம் தொட்டிருந்தது. அந்த இளைஞனின் ஒப்பற்ற தியாகம், தமிழ் மக்கள் மத்தியில் ஒரு தெளிவையும், உணர்வையும் ஏற்படுத்தியிருந்தது.

திலீபனின் உண்ணாவிரதப் போராட்டமானது, ஒரு பொது நலனுக்காக தனியொருவன் தன்னை உதிர்த்த ஒப்பற்ற தியாகம். தனது இனம் சுதந்திரமாகவும், கண்ணியமாகவும் வாழவேண்டும் என்பதற்காக, வீரம் மிக்க ஒரு இளைஞன் தனக்குத் தானே மரணதண்டனை வழங்கும் ஒரு உயர் கொடை@ தன்னைத்தானே சிலுவையில் அறைந்த ஒப்பற்ற அர்ப்பணிப்பு.

திலீபனின் உண்ணாவிரத போராட்டத்தில் இடம்பெற்ற முக்கியமான சில விடங்களை அடுத்தவாரம் முதல் சற்று விரிவாகப் பார்ப்போம்.

http://www.youtube.com/watch?v=H1xS9SQFnUI

 


ஒரு போராளி மேற்கொண்ட வரலாற்றுப் பயணம் (அவலங்களின் அத்தியாயங்கள்- 62

நிராஜ் டேவிட்

  • April 24, 2013

033.jpgபுலிகளின் வரலாற்றில் இது இரண்டாவது சாகும் வரையிலான உண்ணா விரதப் போராட்டம் என்று கூறலாம்.

முதலாவது உண்ணாவிரதப் போராட்டம் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களால், 1986 நவம்பர் நடுப்பகுதியில் சென்னையில் மேற்கொள்ளப்பட்டது.

1986ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் திகதி, புலிகளிடம் இருந்து ஆயுதங்கள், தொலைத்தொடர்பு கருவிகளை இந்திய அரசு கைப்பற்றியிருந்ததைத் தொடர்ந்து, அவற்றை மீள ஒப்படைக்கவேண்டும் என்று கோரி, புலிகளின் தலைவர் வே.பிரபாகரன், நீர் கூட அருந்தாமல் சாகும் வரையிலான உண்ணாவிரத்தை மேற்கொண்டார். புலிகளின், குறிப்பாக பிரபாகரன் அவர்களின் தீவிர அனுதாபியாக இருந்த தமிழக முதலமைச்சர் ஏம்.ஜீ.ஆர். அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கையால், இந்திய அரசு புலிகளிடம் இருந்து கைப்பற்றிய பொருட்களை மீள ஒப்படைக்க முன்வந்தது. அதனைத் தொடர்ந்து பிரபாகரன் அவர்களின் உண்ணாவிரதம் முடிவிற்கு வந்திருந்தது.

யாழ்ப்பாணத்தில் திலீபன் மேற்கொண்ட உண்ணாவிரதம், விடுதலைப் புலிகளின் வரலாற்றில் இரண்டாவது உண்ணாவிரதம். திலீபனும் தனது தலைவன் வழியில், நீர் கூட அருந்தாமலேயே உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தார்.

புலிகளின் வரலாற்றில் இடம்பெற்ற இரண்டு உண்ணா விரதங்களுமே, இந்தியாவிற்கு எதிராக, இந்தியாவின் செயலைக் கண்டித்தே நடைபெற்றிருந்தன. இந்தியாவைப் பொறுத்தவரையில், உண்ணாவிரதம் என்ற அகிம்சை வழிப் போராட்டம் ஒரு பாரிய உணர்வினை வெளிக்காண்பிக்கும் ஒரு விடயமாகவே இருந்து வந்தது. இந்தியாவின் தேசபிதா மகாத்மா காந்தி முதல், இந்தியாவின் அரசியல் தலைவர்கள் அனைவருமே உண்ணாவிரப் போராட்டங்கள் மூலமே பல விடயங்களைச் சாதித்திருந்த வரலாறு இந்தியாவின் சரித்திரத்தில் நிறைவே காணப்படுகின்றன. சாதாரணமாகவே இது போன்ற உண்ணாவிரதப் போராட்டங்களுக்கு, அது நியாயமாக இருக்கும் பட்சத்தில், செவிசாய்க்கும் வழக்கம் எந்தவொரு இந்திய அரசாங்கத்திற்கும் இருந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது. தனது தமிழ் இனத்தின் நியாயமான கோரிக்கைக்கு இந்தியா நிச்சயம் செவிசாய்த்துவிடும் என்ற நம்பிக்கையில்தான் திலீபனும் இந்தியாவின் போக்கிற்கு எதிரான தனது போராட்டத்திற்கு ஆயுதமாக உண்ணா விரதத்தை தேர்ந்தெடுத்திருந்தான்.

திலீபனின் தியாகப் பயணம்:

15.09.1987 காலை 9.45 மணியளவில் யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள ஷகந்தன் கருணை| என்னும் இல்லத்தில் இருந்து வோக்கி டோக்கி சகிதமாக திலீபன் புறப்பட்டார். வேனில் ஏறுவதற்கு முன்னதாக, வோக்கி மூலம் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் சிறிது நேரம் பேசி விட்டே, தனது வரலாற்றுப் பயணத்தை ஆரம்பித்தார். அது வரலாற்றில் என்றுமே மறைந்துவிடாத ஒரு பயணமாக அமையப்போகின்றது என்பதை திலீபன் அப்பொழுது அறிந்திருந்தாரோ தெரியவில்லை. பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் பெருமளவில் கூடி நின்று திலீபனை வழியனுப்பி வைத்தார்கள். நல்லூர் கந்தசுவாமி கோயிலின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த உண்ணா விரத மேடையில், ஏற்கனவே சோகம் குடிகொண்டிருந்தது. தமிழ் மக்களால் அதிகம் நேசிக்கப்பட்ட ஒரு இளைஞன், இந்த மேடையில் தன்னை மாய்த்துக்கொள்ள முன்வரும் செய்தி ஏற்கனவே அங்கு திரண்டிருந்த மக்களின் நெஞ்சங்களை கனக்க வைத்திருந்தது. ஷவானில|; வந்திறங்கிய திலீபனை, புலிகளின் பிரதித்தலைவர் மாத்தையா கட்டியணைத்து வரவேற்றார்.

கண்ணீருடன் ஒரு தாய் திலீபனின் நெற்றியில் வீரத் திலகமிட்டார்.

காலை 9.55 இற்கு உண்ணா விரத மேடையில் வந்தமர்ந்த திலீபன், விடுதலைப் புலிகளின் சரித்திரத்தில் என்றுமே மறையாத ஒரு உன்னத பயணத்தை ஆரம்பித்தான்.

திலீபனின் உண்ணாவிரத மேடைக்கு அருகில் மற்றொரு மேடையும் அமைக்கப்பட்டிருந்தது. திலீபனின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக, இரண்டாவது மேடையில் உரைகள் நிகழ்த்தப்பட்டன.

கவிஞர் காசி ஆனந்தன், நடேசன் போன்ற முக்கியஸ்தர்கள், எதற்காக திலீபன் உண்ணா விரதம் இருக்கின்றார் என்றும், புலிகளின் நிலைப்பாடு பற்றியும் விளக்கமளித்தார்கள். திலீபனின் உண்ணா விரதத்திற்கு துணையாக பலர் அடையாள உண்ணா விரதம் மேற்கொள்ள முன்வத்தார்கள். மாணவர்கள், ஆசிரியர்கள், தாய்மார்கள், பொதுமக்கள் என்று பலர், சுழற்சி முறையில் உண்ணா விரதத்தை மேற்கொண்டார்கள்.

திலீபனின் உண்ணாவிரத மேடையைச் சூழ பெரும் திரளான ஜனக்கூட்டம் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு திரண்டிருந்தார்கள். யாழ்பாணத்தின் குக்கிராமங்கள், மூலை முடுக்குக்களில் இருந்தெல்லாம், இந்த வீர இளைஞனின் தியாகத்தை தரிசிக்க மக்கள் வெள்ளமெனத் திரண்டு வந்தபடி இருந்தார்கள். பாடைசாலை மாணவர்கள் அணிஅணியாக அங்கு திரண்டு வந்தார்கள். உணர்ச்சிகரமான ஒரு சூழ்நிலை அங்கு உருவாக ஆரம்பித்திருந்தது.

இந்த இளைஞனின் முடிவிற்கு இந்தியாதான் காரணம் என்ற உண்மை அங்கு திரண்டிருந்த மக்களின் மனங்களில் படிப்படியாக உதிக்க ஆரம்பித்திருந்தது. இந்தியாவிற்கு எதிரான உணர்வலை, அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் உள்ளங்களில் ஏற்பட ஆரம்பித்தது.

அங்கு திரண்டிருந்த தமிழ் மக்களது உணர்வுகளின் வெளிப்பாடுகள்,

இந்தியாவிற்கு எதிரான முணுமுணுப்புக்களாகவும், பின்னர் இந்தியப்படைகளுக்கு எதிரான கோஷங்களாகவும், மாற்றமடைய ஆரம்பித்தன. இந்தியப் படைகளுக்கு எதிரானதும், இந்தியாவின் போக்கிற்கு எதிரானதுமான ஒரு இறுக்கமான நிலை படிப்படியாக யாழ் மக்களின் மனங்களில் உருவெடுக்க ஆரம்பித்தன.

உண்ணாவிரதம் ஆரம்பமான தினம் இரவு 11 மணியளவில் பிரபாகரன் அவர்கள் திலீபனை பார்வையிட வந்திருந்தார். திலீபனுடன் பல விடயங்கள் பற்றி உரையாடிய பிரபாகரன், திலீபனின் தலையை வருடிவிட்டுச் சென்றார்.

திலீபனின் உரை:

உண்ணாவிரதம் ஆரம்பமாகி இரண்டாவது நாள், திலீபன் உரை நிகழ்த்தினார்.

ஒரு துளி நீர் கூட அருந்தாமல் அவர் உண்ணாவிரதம் இருந்தால், சிறுநீர் கழிக்க முடியாமல் அவர் பெரும் சிரமப்பட்டார். அதிக உடல் உபாதை காரணமாக மிகவும் கஷ்டங்களை அனுபவித்த அவரால் நின்று கொண்டு உரை நிகழ்த்த முடியவில்லை. அதனால் இருந்த நிலையிலேயே அவர் உரையாற்றினார்.

ஷஷஎனது அன்பிற்கும், மதிப்பிற்கும் உரிய மக்கள் அனைவருக்கும் எனது வணக்கம். நின்றுகொண்டு பேச முடியாத நிலையில் நான் இருப்பதால், இருந்துகொண்டே பேசுகின்றேன்.

நாளை நான் சுய நினைவுடன் இருப்பேனா என்று எனக்குத் தெரியாது. அதனால் இன்று உங்களுடன் பேசவேண்டும் என்று விரும்புகின்றேன்.

நாம் எமது இலட்சியத்தில் உறுதியாக இருக்கின்றோம். எமது இலட்சியப் போராட்டத்தில் இன்று வரையில் 650 போராளிகளை நாங்கள் இழந்துள்ளோம்.

மில்லர் இறுதியாகப் போகும் போது அவருடன் நான் கூட இருந்தேன். அவர் என்னிடம் ஒரு வரி கூறினார்: ஷநான் எனது தாய் நாட்டிற்காக உயிர் துறப்பதை எண்ணும்போது, மகிழ்ச்சியும், பெருமையும் அடைகின்றேன். எமது மக்கள் விடுதலை அடைவதை எனது கண்களால் காணமுடியாது என்பதே எனது ஒரே ஏக்கம்| என்று கூறிவிட்டு, மில்லர் வெடிமருந்து நிறப்பிய லொறியை எடுத்துச் சென்றிருந்தார்.

எமது விடுதலைப் போரில் மரணித்த 650 போராளிகளும், அனேகமாக எனக்குத் தெரிந்துதான் மரணித்தார்கள். அவர்களை நான் மறக்கமாட்டேன்.

உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்க தலைவரின் அனுமதியைக் கேட்டேன். அப்பொழுது தலைவர் கூறிய வார்த்தைகள் எனது நினைவில் உள்ளன. ஷஷதிலீபா, நீ முன்னால் போ. நான் பின்னால் வருகின்றேன்|| என்று அவர் கூறினார்.

இத்தகைய ஒரு தெளிவான தலைவனை, தனது உயிரை சிறிது கூட மதிக்காத ஒரு தலைவனை நீங்கள் பெற்றிருக்கின்றீhகள்.

அந்த மாபெரும் வீரனின் தiலைமையில் ஒரு மக்கள் புரட்சி இங்கு வெடிக்கட்டும். அது நிச்சயமாக தமிழர்களின் அடிப்படை உரிமைகளை, தமிழீழத்தைப் பெற்றுத் தரும். அந்த அற்புதக் காட்சியை வானத்தில் இருந்து, அந்த 650 போராளிகளுடன் நானும் பார்த்து மகிழ்வேன்.||

என்று திலீபன் உரையாற்றினார்.

திலீபனின் உரை முடிவடைந்ததும், அங்கு திரண்டிருந்த மக்கள் கண்ணீர் விட்டார்கள். ஓவெனக் கதறி அழுதார்கள்.

தொடர்புபட்ட காணொளி:

 

இந்தியப் படைகளுக்கு எதிராக திரண்டெழுந்த தமிழ் மக்கள் (அவலங்களின் அத்தியாயங்கள்- 63) – நிராஜ் டேவிட்

  • May 1, 2013

Frame-0014.jpgமூன்றாவது உண்ணாவிரதப் போராட்டம்:

விடுதலைப் புலிகளின் வரலாற்றில் இந்தியாவிற்கு எதிராக, இரண்டு சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டங்கள் இடம்பெற்றதாக நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன்.

முதலாவது – புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் சென்னையில் வைத்து மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம்.

இரண்டாவது – திலீபன் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம்.

புலிகளின் வரலாற்றில் மூன்றாவதாகவும் ஒரு சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றிருந்தது.

விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவராக இருந்த மகேந்திரராஜா மாத்தையா அவர்களே இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தார்.

1993ம் ஆண்டு மார்ச் மாதத்தில், யாழ்ப்பாணம் கொக்குவில் பிரதேசத்தில், விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் கலாநிதி அன்டன் பாலசிங்கம் அவர்களின் இல்லத்தில் மாத்தையாவின் உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்றிருந்தது.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்திலும் இந்தியா ஒரு வகையில் சம்பந்தப்பட்டிருந்தது.

ஆனால் மாத்தையா மேற்கொண்ட அந்த உண்ணாவிரதத்தில் இந்தியாவின் பங்கு வேறுவிதமாகவே இருந்தது.

மிகவும் சுவாரசியமானதும், பரபரப்பானதுமான இந்தச் சம்பவம் பற்றி மற்றொரு சந்தர்ப்பத்தில் விரிவாகப் பார்க்கலாம்.

இப்பொழுது திலீபனின் உண்ணாவிரத மேடைக்குச் செல்லுவோம்.

ஷஷஎன்னை அவமானப் படுத்தவேண்டாம்|| -திலீபன்

திலீபன் உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்து மூன்றாவது நாள், அவரின் உடல் நிலை மோசமடைய ஆரம்பித்தது. நீர் கூட அருந்தாமல் அவர் உண்ணாவிரதம் இருந்துவந்ததால், அவரது நாக்கு வரண்டு போயிருந்ததுடன், மாறாட்டமும் மயக்க நிலை கூட அவருக்கு ஏற்பட ஆரம்பித்தது. அவரால் எழுந்து நிற்கமுடியவில்லை. வயிற்றினுள் பலவித உபாதைகள் ஏற்பட ஆரம்பித்தன. உடற் சூடு அதிகரிக்க ஆரம்பித்ததுடன், இரத்த அழுத்தம் குறையவும் ஆரம்பித்தது.

சிறிது நீர் அருந்தினால், அவரது உடல்நிலை ஓரளவு தேறிவிடும்; என்று அங்கிருந்தவர்கள் கருதினார்கள்.

இந்தியா எப்படியாவது மனமிரங்கிவிடும், திலீபன் தனது போராட்டத்தை முடித்துக்கொண்டுவிடலாம் என்றே அங்கிருந்தவர்கள் கருதினார்கள்.

இந்தியா இன்னும் ஓரிரு தினங்களுக்குள் புலிகளுக்கு சாதகமான தனது முடிவை அறிவித்துவிடும், எனவே அதற்குள் திலீபனின் உடல் நிலை மோசமாக அனுமதிக்கக்கூடாது என்றுதான் அங்கிருந்தவர்கள் நினைத்தார்கள்.

இந்தியா, சத்தியத்தின் மீதும், சாத்வீகத்தின் மீதும் மதிப்பு வைத்திருப்பதாக அங்கிருந்த சிலர் அப்பொழுதும் நம்பியதுதான் வேடிக்கை.

திலீபனின் உண்ணாவிரத மேடைக்கு அருகில் உள்ள மேடையில், திலீபனின் உண்ணாவிரதத்திற்கு வலுச்சேர்க்கும்படியாக சுழற்சி முறையிலான உண்ணாவிரதங்கள் பலரால் மேற்கொள்ளப்பட்டன. அந்த மேடையில் பல பிரமுகர்கள், உண்ணாவிரதத்திற்கு சார்பாக உரையாற்றியபடி இருந்தார்கள்.

கருணானந்த சிவம் என்ற ஆசிரியர், திலீபனை மிகவும் நேசித்த ஒருவர். திலீபனின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக மேடையில் அவர் உரை நிகழ்த்தும் போது, திலீபனின் உடல்நிலை மோசமடைந்து செல்வது பற்றி மிகவும் உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார். அவர் தனது பேச்சின் போது, திலீபனிடம் ஒரு வேண்டுகோளையும் முன்வைத்தார்.

ஷஷதிலீபன் புலிகளுக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல. அவர் முழுத் தமிழினத்திற்கும் சொந்தமானவர். அப்படிப்பட்ட திலீபன் ஒரு சொட்டு நீராவது அருந்தி தனது உடலைக் காப்பாற்றிக்கொள்ள முன்வரவேண்டும். இது எனது தனிப்பட்ட வேண்டுகோள் மட்டுமல்ல, இங்கு திரண்டு வந்துள்ள இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் வேண்டுகோளும் இதுதான்|| என்று பேசினார்.

அதைக் கேட்ட திலீபனின் முகம் வாடிவிட்டது. ஒலிவாங்கியை தன்னிடம் தருமாறு கேட்ட திலீபன் ஆசிரியர் கருணானந்தம் அவர்களின் வேண்டுகோளுக்கு பதில் வழங்கிப் பேசினார்:

ஷஷஇந்த மேடையில் பேசிய அன்பர் என்னிடம் நீராகாரம் அருந்தும்படி கேட்டுக்கொண்டது, என்னை அவமானப்படுத்துவது போன்று இருக்கின்றது. நான் இந்த மேடையில் நீராகாரம் அருந்தாமல்தான் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தேன். இறுதிவரை இந்த முடிவில் இருந்து மாறமாட்டேன். நீங்கள் இந்தத் திலீபனை நேசிப்பது உண்மையானால், எவரும் என்னை நீராகாரம் அருந்தும்படி வற்புறுத்தவேண்டாம். என் கோரிக்கைகளை இந்திய அரசு நிறைவேற்றாவிட்டால், இறப்பேனே தவிர இந்த அற்ப உயிரைக் காப்பாற்றுவதற்காக எனது இலட்சியத்தில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டேன்|| என்று தெரிவித்தார்.

திலீபன் மீது கொண்டிருந்த அளவுக்கதிகமான பாசம் தமது கண்களை மறைத்துவிட்டிருந்ததை, திலீபனை நீர் அருந்தும்படி கோரியவர்கள் உணர்ந்துகொண்டார்கள். அதன் பின்னர் எவருமே திலீபனை நீர் அருந்தும்படி வற்புறுத்த முன்வரவில்லை.

கலவரங்களாக வெளிப்பட்ட மக்களின் எழுச்சி|:

திலீபன் என்ற 23 வயது இளைஞனின் இந்த வித்தியாசமான உண்ணாவிரதம் யாழ்ப்பான தமிழ் மக்களிடையே ஏற்படுத்திய உணர்வலைகள் ஒரு பாரிய எழுச்சியாகவே மாற ஆரம்பித்திருந்தது. திலீபனின் கோரிக்கைகளுக்கு இந்தியா செவிசாய்க்க தயாரில்லை என்பதான செய்திகள் யாழ் மக்களிடம் பரவ ஆரம்பித்ததைத் தொடர்ந்து, இந்தியாவிற்கும், அதன் அமைதிப்படையினருக்கும் எதிராக மக்கள் பாரிய உணர்வலைகளை வெளிப்படுத்த ஆரம்பித்தார்கள். ஷபுலிகள் எதனைக் கேட்டுவிட்டார்கள்? பெரிதாக ஒன்றும் அவர்கள் கேட்டுவிடவில்லையே. தமிழ்மக்களின் நலன் சார்ந்த விடயங்களைத்தானே அவர்கள் கேட்டுள்ளார்கள். இதற்காக ஒரு இளைஞனை பலிகொடுக்கும் அளவிற்கு இந்தியாவிற்கு இப்படி ஒரு கல்நெஞ்சு இருப்பது அவசியம்தானா? இந்த சிறு விடயத்தைக் கூட நிறைவேற்ற முடியாத, நிறைவேற்ற விரும்பாத இந்தியாவினால், எதிர்காலத்தில் தமிழ் மக்கள் தொடர்பான முக்கிய விடயங்களை எவ்வாறு நிறைவேற்ற முடியும்| என்று மக்கள் பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள்.

விளைவு:

இந்தியப் படையினருக்கு எதிராக மக்கள் தமது உணர்வுகளை பகிரங்கமாகவே வெளிப்படுத்த ஆரம்பித்தார்கள். இந்தியப் படையினருக்கு எதிராக மக்கள் கோஷமெழுப்பினார்கள். ஊர்வலங்களை நடாத்தினார்கள். ஒரு சில சந்தர்ப்பங்களில் இந்தியப்படையினரை நோக்கி கற்களை வீசவும் செய்தார்கள்.

மன்னார், தலைமன்னார் வீதியில் இருந்த இந்தியப்படை முகாமை நோக்கி ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்று நடாத்தப்பட்டது. மக்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இந்தியாவிற்கும், இந்தியப்படைகளுக்கும் எதிரான கோஷங்களை எழுப்பியபடி அந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டார்கள். இந்தியப்படையின் முகாமை அடைந்த ஊர்வலத்தின் மக்கள் கூட்டம் முகாமின் வாயிலை அடைத்தபடி நின்று, கோஷம் எழுப்பியது. திலீபனின் உண்ணாவிரதத்தில் இந்தியா காண்பிக்கும் மௌனத்திற்கு எதிராக தமது கண்டணங்களை வெளிப்படுத்திய பொது மக்கள், இந்தியா தமிழர் பிரதேசங்களை விட்டு வெளியேறவேண்டும் என்று கோஷம் எழுப்பினார்கள்.

முகாமின் வாயிலில் காவல் கடமையில் இருந்த இந்தியப்படை வீரர் ஒருவர் மிகவும் கோபம் அடைந்தவராக தனது துப்பாக்கியை எடுத்து, ஊர்வலத்தை நோக்கி ஒரு சில துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்தார். ஊர்வலத்தின் முன்வரிசையில் நின்ற ஒருவர் சுடப்பட்டுவிழ, ஏனையவர்கள் கலைந்து ஓடினார்கள்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் முகாமுக்குள் நுழைய முற்பட்ட வேளையிலேயே தாம் வேறு வழி இல்லாமல் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக இந்தியத் தரப்பால் அந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு நியாயம் கற்பிக்கப்பட்டது.

முகாமுக்குள் பொதுமக்கள் நுழைய முற்பட்டது ஒருவேளை உண்மையாக இருந்தால் கூட, அவர்களைத் தடுத்து நிறுத்தும் வழிமுறை எதனையும் மேற்கொள்ளாது, எச்சரிக்கை வேட்டுக்கள் கூட தீர்க்காது, நேரடியாகவே பொதுமக்களை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட இந்தியப் படைகளின் செயல், பலத்த கண்டனங்களுக்கு உள்ளானது.

இதுபோன்ற இந்தியப்படைகளுக்கு எதிரான பொதுமக்களின் கோபம் பல வழிகளிலும் வெளிப்படுத்தப்பட்டன. இந்தியப் படைகளின் வாகனங்கள் வீதிகளில் செல்லமுடியாத அளவிற்கு நிலமை மோசமாக ஆரம்பித்தது. இந்தியப்படைகளுடன் பேசுவதற்கும் பொதுமக்கள் விரும்பவில்லை. இந்தியப் படை அதிகாரிகளுடன் சினேகபூவமான தொடர்புகளை வைத்திருந்த யாழ்வாசிகள் தமது உறவுகளை நிறுத்திக்கொள்ள ஆரம்பித்திருந்தார்கள். இந்தியப் படைவீரர்களுக்கு தண்ணீர் வழங்கக் கூட தயக்கம் காண்பித்தார்கள்.

திலீபனின் உண்ணா விரதம் பற்றி ஆரம்பத்தில் அலட்சியமாக இருந்த இந்தியப்படை அதிகாரிகள், நிலமையின் விபரீதத்தை படிப்படியாக உணர ஆரம்பித்தார்கள்.

தமிழ் மக்களின் உணர்வுகளை விடுதலைப் புலிகள் இந்தியப்படைகளுக்கு எதிராக மிகவும் புத்திசாலித்தனமாக திருப்பிவிட்டுள்ளதை அவர்கள் உணர ஆரம்பித்தார்கள். நிலமை இந்த அளவிற்கு மோசமாகும் என்பதை அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. ஒருவேளை திலீபன் இறந்துவிட்டால் நிலமை இதைவிட மோசமடையலாம் என்றும் அவர்கள் எதிர்பார்த்தார்கள்.

திலீபனின் உண்ணாவிரதத்திற்கு மாற்றீடாக இந்தியா உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இந்தியப்படை உயரதிகாரிகள் தமது மேலிடத்திடம் கேட்டிருந்தார்கள். ஆனால், இந்திய அரசின் தலைமையோ, புலிகள் ஷபூச்சாண்டி காண்பிக்கின்றார்கள்| என்றே நினைத்தது.

புலிகளை எப்படியும் சமாளித்துவிட முடியும், இதற்கெல்லாம் பயப்பட்டால் தொடர்ந்தும் புலிகள் இதுபோன்ற மிரட்டல்களை விடுத்துக்கொண்டே இருப்பார்கள் என்று தெரிவித்து வாழாவிருந்துவிட்டார்கள்.

இந்தியாவின் எதிர்காலம் தொடர்பான விடயத்தில், திலீபனின் இந்த உண்ணாவிரதப் போராட்டம் எப்படியான ஒரு பாதிப்பை ஏற்படுத்தப் போகின்றது என்பதை இந்தியாவின் அரசியல் தலைமை அப்பொழுது உணர்ந்திருக்கவில்லை.

தொடரும்…

தொடர்புபட்ட காணொளி:


 

 


 

தீட்சித்தின் ஆணவமும், பிரபாகரனின் ஆத்திரமும் (அவலங்களின் அத்தியாயங்கள்- 64) – நிராஜ் டேவிட்

  • May 8, 2013
 
திலீபன் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து நான்கு நாட்கள் கடந்தவிட்டுள்ள நிலையில், நிலமை தமது கைகளைவிட்டு வெகு தூரம் சென்றுகொண்டிருப்பதை இந்தியப்படை அதிகாரிகள் உணர ஆரம்பித்தார்கள்.

டில்லியிலும், கொழும்பிலும் இருந்தபடி அரசியல் ரீதியாகக் காய்களை நகர்த்திக்கொண்டிருந்த இந்திய இராஜதந்திரிகளுக்கு புரியாத பல விடயங்கள், யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்த இந்தியப்படை அதிகாரிகளுக்கு புரிய ஆரம்பித்தன.‘’யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் மக்கள் இந்தியப்படைகளை மிகவும் வெறுக்க ஆரம்பித்துள்ளார்கள்@ எந்த நிமிடத்திலும் இந்தியப் படைகளுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து வரக்கூடிய மனநிலை மக்கள் மத்தியில் உருவாகி வருகின்றது: திலீபனின் உண்ணாவிரதம் மேலும் தொடர்ந்து, இந்திய அரசும் தொடர்ந்தும் பாராமுகமாவே இருந்தால், நிலமையை இந்தியப் படைகளால் கட்டுப்படுத்த முடியாது போய்விடும்” என்று அந்த அதிகாரிகளுக்கு நன்றாகவே புரிந்தது.

தமிழர் பிரச்சனையும், புலிகள் மீதான தமது கட்டுப்பாடுகளும், தமது கைகளை விட்டு முற்றாகவே சென்றுகொண்டிருக்கின்றது என்று இந்தியப்படை உயரதிகாரிகள் அச்சம் கொள்ளத் தலைப்பட்டார்கள்.

இவர்களது அச்சத்திற்கு மேலும் வலுச்சேர்ப்பது போன்று, வேறு சில சம்பவங்களும் யாழ்ப்பாணத்தில் இடம்பெற ஆரம்பித்தன.

பொலிஸ் நிலையத் தாக்குதல்:

18.09.1987 அன்று பெரும்திரளான மக்கள் கலந்துகொண்ட ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று வடமாராட்சியில் நடைபெற்றது.

திலீபனின் உண்ணாவிரதப் போராட்டத்தால் மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டு கோஷம் எழுப்பியபடி சென்றுகொண்டிருந்தார்கள்.

இந்த ஊர்வலம் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தை நெருங்கியதும், ஊர்வலத்தில் வந்த பொதுமக்கள் திடீரென்று பொலிஸ் நிலையத்தினுள் நுழைந்தார்கள். அங்கிருந்த தளபாடங்களையும், பொலிஸ் நிலைய கட்டிடங்களையும் தாக்கி உடைக்க ஆரம்பித்தார்கள். எதிர்த்த பொலிஸாரும் தாக்குதலுக்கு உள்ளானார்கள்.

பொலிஸ் வீரர்களுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. ஏனெனில் அவர்கள் இதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை. இத்தனை காலமாக தங்களது நிழலைக் கண்டால் கூட பயந்து அடங்கி ஒதுங்கும் இந்த அப்பாவி மக்களுக்கு, அப்படி ஒரு ஆவேசம் வரும் என்று அவர்கள் கனவிலும் நினைக்கவில்லை.

ஸ்ரீலங்கா பொலிஸாரை உடனடியாகவே பொலிஸ் நிலயத்தை விட்டு வெளியேறுமாறு பொதுமக்கள் உத்தரவிட்டார்கள். அந்த உத்தரவிற்கு பணிவதைத் தவிர பொலிஸாருக்கு வேறு வழி எதுவும் இருக்கவில்லை. தமது உடமைகளை தலையில் சுமந்தபடி பொலிஸ் நிலையத்தை விட்டு வெளியேறினார்கள். அவர்கள் வெளியேறிக்கொண்டிருக்கும் போதே, பொலிஸ் நிலையம் தீவைக்கப்பட்டது. தமது உடமைகளை தலைகளில் சுமந்தவண்ணம் பொலிஸ் வீரர்கள் பருத்தித்துறை ஸ்ரீலங்கா இராணுவ முகாமை நோக்கி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

இந்தச் சம்பவம் நிலமையின் தீவிரத்தை இந்தியப் படைகளுக்கு உணர்த்துவதாக இருந்தது. இந்தியப் படை முகாம்களுக்கும் இப்படி ஒரு நிலமை ஏற்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை, பருத்தித்துறை பொலிஸ் நிலையச் சம்பவம் எடுத்தியம்பியது.

இந்தியாவின் அணுகுமுறை:

அதுவரை திலீபனின் உண்ணாவிரதம் பற்றி ஒருவித பாராமுகப் போக்கைக் கடைப்பிடித்துவந்த இந்தியப்படை அதிகாரிகள், திலீபனின் உண்ணாவிரதம் பற்றி முதன் முறையாக அக்கறைப்பட ஆரம்பித்தார்கள். யாழ் கோட்டை இந்தியப்படை முகாமின் பொறுப்பாளராக இருந்த, இந்தியப்படை உயரதிகாரி ~பரார்| என்பவர், 20ம் திகதி, திலீபன் உண்ணாவிரதம் இருந்த இடத்திற்கு வந்து நிலமையை அவதானித்துச் சென்றார். திலீபனின் கோரிக்கைகள் பற்றியும், நிலமையின் தீவிரம் பற்றியும் தாம் தமது மேலதிகாரிகளுக்கு அறிவித்திருப்பதாகவும், யோகியிடம் தெரிவித்துவிட்டு சென்றார்.

21.09.1987 அன்று, இந்தியப் படை உயரதிகாரிகள் சிலருக்கும், புலிகளின் தலைவர்களுக்கும் இடையில் ஒரு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தியப்படை சார்பில் மேஜர் ஜெனரல் ஹரிகிரத் சிங், பிரிகேடியர் ராகவன், எயார் கொமாண்டர் ஜெயக்குமார், உட்பட வேறு சில அதிகாரிகள் கலந்துகொண்டார்கள்.

விடுதலைப் புலிகள் தரப்பில் அன்டன் பாலசிங்கம், மாத்தையா, யோகி போன்றோர் கலந்துகொண்டார்கள்.

தமது ஐந்து அம்சக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவேண்டும் என்பதில் திலீபன் மிகவும் உறுதியாக இருப்பதாக புலிகளின் பிரதிநிதிகள் இந்தியப்படை அதிகாரிகளிடம் தெரிவித்தார்கள். திலீபனின் உண்ணாவிரதத்தை கைவிடும்படி கூறும்படியும், கோரிக்கைகள் பற்றிய சாதகமான பதிலை இந்திய அரசுடன் கலந்தாலோசித்து தாம் நிறைவேற்றிவைப்பதாகவும், இந்தியப்படை உயரதிகாரிகள் கேட்டுக்கொண்டார்கள்.

முடிவு எதனையும் காணாது அந்தப் பேச்சுவார்த்தைகள் நிறைவு பெற்றது. முடிவுகள் எதனையும் எடுக்கக்ககூடிய அதிகாரம் உடைய எவரும் அந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

புலிகளின் கோரிக்கைகளுக்கு இந்தியா பணிந்து போகக் கூடாது என்ற இந்தியத் தூதுவர் தீட்ஷித்தின் பிடிவாதமே, இந்தப் பிரச்சனையில் சுமுகமான முடிவு எதுவும் ஏற்பட்டுவிடாததற்கு பிரதான காரணம்.

மரணத்தை நோக்கி திலீபன்

இதற்கிடையில் திலீபனின் உடல் நிலை மேலும் மோசமடைந்து கொண்டேசென்றது. உண்ணாவிரத மேடையில் போடப்பட்டிருந்த கட்டிலில் படுத்திருந்தபடி திலீபனின் உண்ணாவிரதம் தொடர்ந்தது.

பேசமுடியாமல் கஷ்டப்பட்ட நிலையில், திலீபன் உரை நிகழ்த்தினார்:

‘’அன்பார்ந்த தமிழீழ மக்களே!

விளக்கு அணையும் முன்பாக பிரகாசமாக எரியுமாம். அதுபோன்று நானும் இன்று உற்சாகமாக இருக்கின்றேன். இன்று என்னால் நன்றாகப் பேசமுடிகின்றது. போராடத் தயாராகுங்கள். எனக்கு விடை தாருங்கள்.

என்னை இந்தப் போராட்டத்தை கைவிடுமாறு எவருமே கேட்கவேண்டாம். நானும், தலைவரும் சேர்ந்து எடுத்த முடிவுதான் இது.

மறைந்த போராளிகள் 650 பேருடன் சேர்ந்து 651வது ஆளாக மேலிருந்து பார்ப்பேன். எங்கள் உயிர் உங்களுடன் ஒட்டிவிடும். என்னைப்பற்றிக் கவலைப்படாதீர்கள்.

எமது வீரர்கள் கொள்கைக்காக உயிரைக் கொடுப்பவர்கள். கொள்கைக்காக என்னைத் தொடர்ந்து வருவார்கள். அவர்களையும் யாரும் தடுக்கமுயலவேண்டாம். அவர்கள் ஐந்து ஆறுபேர் சாவதால் எவ்வித தீங்கும் வந்துவிடாது. மக்கள் புரட்சி வெடிக்கட்டும்.

நான் மூன்று தடவை பேசியுள்ளேன். மூன்று தடவையும் ஒரே கருத்தைத்தான் பேசியுள்ளேன்.

இவ்வாறு திலீபனின் உரை அமைந்திருந்தது.

திலீபனின் உண்ணா விரதப் போராட்டம், யாழ்ப்பாணத்தில் மட்டுமல்லாது வடக்கு கிழக்கு முழுவதிலுமே பாரிய உணர்வலைகளை தோற்றுவித்திருந்தது. திலீபனின் போராட்டத்திற்கு வலுச்சோக்கும் வகையில் வடக்கு கிழக்கு முழுவதிலும், உண்ணாவிரதப் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

யாழ்ப்பாணத்தில் திருமதி நல்லையா, செல்வி குகசாந்தினி போன்ற பெண்கள் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டங்களை ஆரம்பித்தார்கள். மட்டக்களப்பில் மதன் என்ற இளைஞன் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை, மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் ஆரம்பித்தான்.

இதேபோன்று முல்லைத்தீவிலும், வவுனியாவிலும், மன்னாரிலும், திருகோணமலையிலும் பல்வேறு உண்ணாவிரதங்கள் ஆரம்பமாகி இருந்தன. முல்லைத்தீவில் திருச்செல்வம் என்ற போராளி சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்.

திருகோணமலையிலும் கிருபா என்ற விடுதலைப் புலி உறுப்பினர் சாகும்வரையிலான உண்ணாநோன்பை ஆரம்பித்திருந்தார்.

தமிழ் பிரதேசம் எங்கும் மிகுந்த பரபரப்பு காணப்பட்டது. மக்கள் மிகுந்த உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டார்கள். இந்தியா மன்னிக்கமுடியாத தவறை செய்துவிட்டது போன்ற உணர்வு ஈழத்தமிழ் மக்களின் மனங்களில் ஏற்பட்டிருந்தது.

யாழ்பாணம் வந்த ’தீட்ஷித்:

திலீபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்து 8 வது நாள், இலங்கைக்கான இந்திய தூதுவர் ஜே.என்.தீட்ஷித் யாழ்ப்பாணம் வருகை தந்திருந்தார்.

திலீபனின் கோரிக்கைகள் பற்றிய தமது இறுதி முடிவை அறிவிப்பதற்காக அவர் யாழ்ப்பாணம் வருவதாகவும், திலீபனுக்கு சாதகமான முடிவையே அவர் வெளியிடுவார் என்றும் உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. திலீபனின் உண்ணா விரதத்தை முடித்துவைக்கும் நல்ல செய்தியையே இந்தியத் தூதுவர் அன்றைய தினம் கொண்டு வருவதாக தமிழ் மக்கள் பேசிக்கொண்டார்கள்.

22.09.1987 அன்று பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கிய தீட்ஷித்தை புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களும், அன்டன் பாலசிங்கமும் சென்று சந்தித்தார்கள்.

யாழ்ப்பாண மக்கள் நினைத்தது போன்று இந்தியத் தூதுவருடனான புலிகளின் சந்திப்பு ஒன்றும் சுமுகமான ஒன்றாக அமைந்திருக்கவில்லை.

தன்னைச் சந்திக்க வந்த புலிகளின் தலைவர்களுடன், இந்தியத் தூதுவர் மிகவும் ஆணவத்துடன் நடந்துகொண்டார். புலிகளை மிகவும் கடுமையாக விமர்சிக்கவும் தலைப்பட்டார்.

அன்றைய சந்திப்பின் போது, இந்தியத் தூதுவர் தீட்ஷித் மட்டும் திலீபன் மீது ஓரளவு அனுதாபம் கொண்டு செயற்பட்டிருந்தால், ஈழத்தமிழர் பிரச்சனையில் இந்தியாவின் பங்கு நிச்சயம் வேறொரு வடிவம் பெற்றிருக்கும்.

இந்தியாவிற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தீராத பகைக்கு வித்திட்டவர் என்று பின்னாட்களில் இந்தியப்படை அதிகாரிகளாலேயே விமர்சிக்கப்பட்ட தீட்ஷித், அன்று நடந்துகொண்ட விதம் புலிகளின் தலைவர் பிரபாகரனை மிகவும் ஆத்திரப்பட வைத்தது.

தொடர்புபட காணொளி

 

 

புலிகள்-இந்திய மோதல்களின் உண்மையான காரணகர்த்தா.. (அவலங்களின் அத்தியாயங்கள்- 65) – நிராஜ் டேவிட்

  • May 16, 2013

Frame-042.jpgஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய அரசாங்கம் மிக மோசமாக நடந்துகொண்டதற்கும், அதனைத் தொடர்ந்து இந்தியா மூக்குடைபட்டுக் கொண்டதற்கும், இலங்கைக்கான இந்தியத் தூதுவராக அக்காலத்தில் கடமையாற்றிய ஜே.என் தீக்ஷித் அவர்களே பிரதான காரணம் என்று பின்நாட்களில் இலங்கை-இந்திய ஒப்பந்தம் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்ட பல அறிஞர்கள் தெரிவிக்கின்றார்கள்.

இலங்கைப் பிரச்சினையில் இந்தியாவின் அணுகுமுறை பற்றிய கொள்கை வகுப்பாளராக இருந்த ஒரு முக்கிய இராஜ தந்திரியான ஜே.என் தீக்ஷித் அவர்கள், புலிகள் விடயத்தில் கடைப்பிடித்திருந்த பிழையான அணுகுமுறைகளே, இலங்கையில் இந்தியா மிகப் பெரியதும், அவமானகரமானதுமான தோல்வியை அடைந்து திரும்ப காரணம் என்று பல இந்திய அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்திருந்தார்கள்.

இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி அரசியல் விடயங்களில் போதிய அனுபவமற்ற ஒருவராகவே இருந்தார். வெளிநாடுகள் தொடர்பான விடயங்கள் அனைத்திற்கும் அவர் பெரும்பாலும் இராஜதந்திரிகளையும், ஆலோசகர்களையுமே நம்பியிருந்தார். அந்தவகையில் இலங்கை பிரச்சனையில் ஜே.என்.தீக்ஷித் அவர்களை பெரிதும் நம்பிச் செயற்பட்ட ராஜீவ் காந்தியை, புலிகள் விடயத்தில் தீக்ஷித் பிழையாக வழிநடத்திவிட்டதாகவே இந்தியப் படைகளின் தளபதிகள் பலர் குற்றம் சுமத்துகின்றார்கள்.

திலீபனை சந்திக்கத் தயங்கிய தீட்ஷித்:

திலீபனின் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்ற காலப்பகுதியில், யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்த இந்தியப் படைகளுக்கு பொறுப்பாக இருந்தவர் மேஜர் ஜெனரல் ஹரிகிரத் சிங் என்ற உயரதிகாரி.

திலீபனின் உண்ணாவிரதத்தை இந்தியா அணுகியது தொடர்பாக இணையத் தளம் ஒன்றிற்கு அவர் வழங்கியிருந்த செவ்வியில், “ஈழத் தமிழர் பிரச்சினை இத்தனை மோசமாகுவதற்கு இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தீக்ஷித்தே காரணம்” என்று குற்றம் சுமத்தியிருந்தார்.

ஹரிகிரத் சிங் தனது செவ்வியில், மேலும் இவ்வாறு தெரிவித்திருந்தார்:

“திலீபனின் உண்ணாவிரத போராட்டத்தை சுமுகமாகத் தீர்த்துவைப்பதற்கு எங்களாலான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் மேற்கொண்டிருந்தோம். திலீபனைச் சந்திப்பதற்கு நான் விரும்பினேன். அதற்கான முயற்சியையும் எடுத்திருந்தேன். ஆனால் சில புலிப் போராளிகள் என்னிடம் கூறினார்கள், “ஜெனரல், மக்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருக்கின்றார்கள். இந்த நிலையில் நீங்கள் மக்களின் முன்னால் செல்வது உங்களுக்கு சில அசௌகரியங்களை ஏற்படுத்திவிடும்” என்று என்னிடம் கூறி, உண்ணாவிரத மேடைக்கு செல்ல என்னை அனுமதிக்கவில்லை. நான் திலீபனிடம் சென்று, உண்ணாவிரதத்தை கைவிடும்படி அவரிடம் கோர இருந்தேன்.

ஆனால் திலீபனால் எப்படி உண்ணாவிரதத்தை கைவிட முடியும்? இந்தியப் பிரதமரால் புலிகளுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் வரையில் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட முடியாது என்று திலீபன் ஏற்கனவே உறுதியாகத் தெரிவித்திருந்தார். இந்தியப் பிரதமர் தரப்பில் இருந்து புலிகளுக்கு வழங்கப்பட்டிருந்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்பது எனக்கு நன்றாகவே விளங்கியிருந்தது.

திலீபனை வந்து சந்திக்கும்படி நான் இந்திய தூதுவரை பல தடவைகள் கேட்டிருந்தேன். “வந்து சந்தியுங்கள்..”, “வந்து சந்தியுங்கள்…”, “வந்து சந்தியுங்கள்…” என்று தொடர்ந்து அவரிடம் கோரியபடியே இருந்தேன். ஆனால், அவர் அங்கு வர மிகுந்த தயக்கம் காண்பித்தார். அங்கு வருவதற்கு அவர் விரும்பவும் இல்லை. கடைசியாக இந்தியத் தூதுவர் அங்கு வந்தபோது, எல்லாமே முடிந்துபோயிருந்தது. அந்த இளைஞன் அநியாயமாக இறந்துவிட்டிருந்தான். இந்தியத் தூதுவர் திலீபனின் உயிரை நிச்சயம் காப்பாற்றி இருக்க வேண்டும். இலங்கையில் பின்நாட்களில் இந்தியாவிற்கு பல சங்கடங்கள் நிகழ்வதற்கு இந்தச் சம்பவமே முதற் காரணமாக அமைந்திருந்தது.

தீக்ஷித்தின் ஆணவத்திற்கு “வைகோ” கொடுத்த அடி:

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் ஸ்தாபகரான திரு.வை.கோபால்சாமி (வைகோ) அவர்கள், தி.மு.கா.வின் ஒரு “போர் வாளாக” இருந்த காலத்தில், மகாத்மா காந்தியை திலீபனுடன் ஒப்பிட்டு, தெரிவித்திருந்த கருத்தை, இந்த இடத்தில் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

திலீபன் பற்றி தீக்ஷித் வெளியிட்டிருந்த ஒரு கருத்திற்கு பதிலாகவே, திரு.வைகோ இதனைத் தெரிவித்திருந்தார்.

திலீபன் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு இருந்த போது, இந்தியத் தூதுவர் தீக்ஷித் இடம் திலிபனின் உண்ணாவிரதம் பற்றி பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தார்கள். அதற்குப் பதிலளித்த தீக்சித், “திலீபன் என்ன மகாத்மா காந்தியா?” என்று இறுமாப்புடன் தெரிவித்திருந்தார்.

தீட்சித்தின் இந்தக் கூற்று பற்றி பின்னர் கருத்துத் தெரிவித்திருந்த திரு.வை.கோபால்சாமி அவர்கள், “திலீபன் மகாத்மா காந்தியைவிட சிறந்தவன்” என்று அடித்துக் கூறியிருந்தார். திரு வைகோ, தனது இந்த வாதத்திற்காக மகாத்மா காந்தியின் சுயசரிதையான “சத்தியசோதனையில் இருந்து ஒரு சம்பவத்தையும் எடுத்துக் காண்பித்திருந்தார்.

மகாத்மா காந்தியின் இளமைப்பருவத்தின்போது அவரது தந்தை காலமாகிவிட்டார். தந்தையின் பூதவுடல் அஞ்சலிக்காக வீட்டின் கூடத்தில் கிடத்தி இருக்கையில், தனது இளமையின் பாலியல் உணர்ச்சிகளை காந்தியால் கட்டுப்படுத்தமுடியாமல் மறைவில் சென்று அதனை தீர்த்துக்கொண்டதாக “சத்தியசோதனையில் காந்தி தெரிவித்திருந்தார்.

இளவயதின் உணர்ச்சிகளை மகாத்மாவினாலேயே அடக்கமுடியாது இருந்துள்ளது. ஒரு சோகமான நேரத்தில்கூட மகாத்மாவினால் தனது பாலியல் உணர்வுகளை கட்டுப்படுத்தமுடியாமல் அதற்கு வடிகால் தேடிச் சென்றுள்ளார்.

ஆனால் திலீபனோ தனது இள வயதில், அந்த வயதிற்கான அனைத்து உணர்ச்சிகளையும் உதறித்தள்ளிவிட்டு, தனது கொள்கைக்காக தன்னுயிரை தியாகம் செய்ய முன்வந்திருந்தான். அந்த வகையில் “திலீபன் மகாத்மா காந்தியை விட சிறந்தவன்” என்று திரு.வை.கோபால்சாமி, தீக்ஷித்தின் கருத்துக்கு பதில் அளித்திருந்தார்.

பிரபா-தீட்ஷித் சந்திப்பு:

1987ம் ஆண்டு, செப்டெம்பர் 22ம் திகதி இந்தியத் தூதுவர் ஜே.என்.தீட்ஷித் பலாலி விமானத் தளத்தை வந்தடைந்தார். தீட்ஷித்தை சந்திப்பதற்காக, புலிகளின் தலைவர் பிரபாரகரன் அவர்களும் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் அவர்களும் அங்கு சென்றிருந்தார்கள்.

(இந்தியாவில் தங்கியிருந்து அரசியல் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்த திரு.அன்டன் பாலசிங்கம் அவர்கள், திலீபனின் உண்ணாவிரதத்தைத் தொர்ந்து ஈழத்தில் ஏற்பட ஆரம்பித்திருந்த அரசியல் குழப்பங்களின் நிமிர்த்தமே புலிகளின் தலைவரால் யாழ்ப்பாணத்திற்கு அவசரஅவசரமாக அழைக்கப்பட்டிருந்தார்.)

புலிகளின் தலைவர்களைச் சந்தித்த தீக்ஷித் பெருஞ் செருக்கோடும், கடும் சினத்தோடும் காணப்பட்டதாக, புலிகளின் அரசியல் ஆலோசகர் பின்னாளில் நினைவு கூர்ந்திருந்தார்.

“திலீபனின் உண்ணாவிரதப் போராட்டம் இந்திய அரசுக்கு எதிராக தமிழ் மக்களைத் தூண்டிவிடும் செயல்” என்றும் தன்னைப் பொறுத்தவரையில் “இது ஆத்திரமூட்டும் ஒரு செயல்” என்றும் தீக்ஷித் கண்டனம் தெரிவித்தார். புலிகளை மிகவும் மோசமாக விமர்சித்த தீக்ஷித், புலிகள் அமைப்புக்கு எதிராக பலவித மிரட்டல்களையும் விடுத்தார்.

பிரபாகரன் அவர்கள் அங்கே நிறையப் பொறுமையைக் கடைப்பிடித்திருக்கின்றார். தீக்ஷித்தின் ஆத்திரமூட்டும் வார்த்தைகளை பொறுமையாக செவிமடுத்த திரு. பிரபாகரன், தீக்ஷித்திடம் ஒரு வேண்டுகோளை வினயமாக விடுத்தார்.

“தீக்ஷித் நல்லூர் சென்று, மரணப் படுக்கையில் இருக்கும் திலீபனுடன் பேசி, இந்தியா ஏற்கனவே வழங்கியிருந்த வாக்குறுதிகளை உறுதிப்படுத்தி, உண்ணாவிரதத்தை கைவிடுமாறு திலீபனிடம் கோரிக்கைவிடவேண்டும்” என்று திரு.பிரபாகரன் தீக்ஷித்திடம் பரிந்து கேட்டுக்கொண்டார்.

ஆனால், தீக்ஷித் தனக்கே உரித்தான செருக்குடனும், மமதையுடனும், புலிகளின் தலைவர் விடுத்த வேண்டுகோளை நிராகரித்தார்.

தனது பயணத்திட்டத்தில் திலீபனைச் சந்திக்கும் விடயம் உள்ளடக்கப்படவில்லை என்று கூறி, புலிகளின் தலைவரின் வேண்டுகோளை உதறித்தள்ளினார். அன்றைய தினம், தீக்ஷித் மட்டும் சிறிது கருணை காண்பித்திருந்தால், தமிழ் மக்கள் மிகவும் நேசித்த ஒரு இளைஞனின் உயிரைக் காப்பாற்றி இருக்கமுடியும்.

தமிழை நேசித்த பல உயிர்களை காப்பாற்றி இருக்க முடியும். தமிழர் தாயகத்திற்கு அழையா விருந்தாளிகளாக வந்திருந்த பல இந்தியப் படை வீரர்களின் உயிர்களையும் காப்பாற்றி இருக்க முடியும். ஆனால் தீக்ஷித்தின் ஆணவம், ஈழ மண்ணில் ஒரு மிகப் பெரிய அலவத்தை நிகழ்த்தும் ஒரு முடிவை நோக்கி அனைத்தையும் இட்டுச் சென்றது.

ஈழ தேசம் முழுவதும் பரவ ஆரம்பித்த உண்ணா விரதங்கள்:

இதற்கிடையில், திலீபனுக்கு ஆதரவாகவும் அவர் முன்வைத்த கோரிக்கைகளை முன்வைத்தும், ஈழ தேசம் முழுவதும் பல இளைஞர்கள் உண்ணாவிரதத்தில் குதித்திருந்தார்கள். மட்டக்களப்பில் மதன் என்ற போராளி சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்.

அதேபோன்று முல்லைத்தீவில் திருச்செல்வம் என்ற போராளி சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார். திருகோணமலையிலும் கிருபா என்ற விடுதலைப் புலி உறுப்பினர் சாகும்வரையிலான உண்ணாநோன்பை ஆரம்பித்திருந்தார். தமிழ் தேசம் முழுவதுமே உணர்ச்சியின் உச்சத்திற்கு சென்றிருந்தது.

மறுநாள், அதாவது 26ம் திகதி முதல் யாழ்குடா முழுவதிலுமுள்ள ஆரச மற்றும் தனியார் நிறுவனங்களும், போக்குவரத்துச் சேவைகளும் திலீபனுக்கு ஆதரவாக உண்ணாவிரதமும், மறியலும் செய்து வேலைப் பகிஷ்கரிப்பை மேற்கொள்ளப்போவதாக அறிவித்திருந்தார்கள்.

திலீபன் மரணம்:

26.09.1987 காலை 10.48 மணிக்கு, திலீபன் என்ற மாவீரன் தனது உயிரை தமிழுக்காக, தான் நேசித்த தமிழ் மக்களுக்காக தியாகம் செய்திருந்தான்.

இந்தியாவின் வரலாற்றில் இரத்தத்தால் பொறிக்கப்பட்ட ஒரு “ஆச்சரியக் குறியாக” – திலீபனின் உண்ணாவிரதப் போராட்டமும், அவனது மரணமும் அமைந்திருந்தது.

 


 

பாரதத்துடன் தர்மயுத்தம்: (அவலங்களின் அத்தியாயங்கள்- 66) – நிராஜ் டேவிட்

  • May 23, 2013

திலீபனின் சொந்தப் பெயர் இ.பார்த்தீபன். யாழ்ப்பாணம் ஊரெழுவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திலீபன் பிறந்து ஒரு சில மாதங்களிலேயே தாயைப் பறிகொடுத்திருந்தார். தந்தை ஓர் ஆசிரியர். பெயர் இராசையா.

உரும்பிராய் சைவ தமிழ் வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியையும், யாழ் இந்துக் கல்லூரியில் உயர்தரக் கல்வியையும் முடித்துக்கொண்ட திலீபன், யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட மாணவனாக இருந்தபோதுதான், தமது இனத்தின் விடுதலைப் போராட்டத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்திருந்தார்.

யாழ்ப்பாணம் விடுதலைப் புலிகளின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் இருந்த காலத்தில், விடுதலைப் புலிகளின் யாழ்.குடா பொறுப்பாளராக இருந்த கிட்டுவுடன் இணைந்து, ஸ்ரீலங்கா இராணுவத்திற்கு எதிராக பல தாக்குதல்களில் திலீபன் பங்குபற்றியிருந்தார்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் வட்டுக்கோட்டைப் பகுதி பிரச்சாரப் பொறுப்பாளர், நவாலி பிரதேசப் பொறுப்பாளர், யாழ் அரசியல் பொறுப்பாளர் என்று திலீபன் கடமையாற்றியதால், மக்களுடன் நெருங்கிப் பழகி, யாழ் மக்களின் ஒட்டுமொத்த அன்பையும், நட்பையும் திலீபன் பெற்றிருந்தார்.

இதனால், திலீபன் இறந்துவிட்டான் என்ற செய்தி மக்கள் மத்தியில் பரவியபோது, மக்களால் தமது சோகத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை. யாழ். குடாவே சோகத்தில் மூழ்கியது. ஒவ்வொரு வீட்டின் முன்பும் திலீபனின் உருவப் படம் தாங்கிய சிறிய கூடுகள் ஓலையாலும், சீலையாலும் அமைக்கப்பட்டு, அவற்றினுள் தீபம் ஏற்றப்பட்டிருந்தன.

வீதியெங்கும் வாழை மரங்களாலும், தென்னங் குருத்துக்களாலும் அலங்கரிக்கப்பட்டு, அந்த தியாக இளைஞனின் இறுதி ஊர்வலத்திற்கு தமது மரியாதையையும் வணக்கத்தையும் செலுத்த தயாராக இருந்தன.

யாழ். குடாவில் அழாத மக்களே இல்லை என்று கூறும் அளவிற்கு ஒப்பாரிகள் முகாரிகளாக ஒலித்தபடி இருந்தன. போதாததற்கு ஒவ்வொரு வீதிகளிலும், கோவில்களிலும், பாடசாலைகளிலும் பொருத்தப்பட்ட ஒலிபெருக்கிகளில் சோக கீதங்களும், சோக நாதங்களும் ஒலித்தபடி இருந்தன.

இதே நிலைமை வடக்கு கிழக்கு முழுவதிலும் காணப்பட்டது. ஒவ்வொரு தமிழன் மனதிலும் தாங்கமுடியாத வேதனை. இந்திய அரசு மீது வெறுப்பும், கோபமும், அதனைத் தீர்த்துக்கொள்ள முடியாத தமது இயலாமையை நினைத்து அவமானமும் குடிகொண்டிருந்தன.

சிலருக்கு புலிகளின் பதிலடி எப்படி இருக்கும் என்ற பயமும் ஏற்பட்டிருந்தது. மொத்தத்தில் தமிழ் இனமே பலதரப்பட்ட உணர்ச்சி வெள்ளத்தில் காணப்பட்டது.

இராணுவச் சீருடை தரித்து, புலிக்கொடியால் போர்த்தப்பட்டு, மலர்ப்போர்வையால் மூடப்பட்ட அமரர் ஊர்தியில், கரும்புலிகளின் அணிவகுப்புடன் திலீபனின் இறுதி ஊர்வலம் புறப்பட்டது. யாழ் குடாவில் கிராமம் கிராமமாக இறுதிப் பயணம் மேற்கொண்ட தங்களது வரலாற்றுத் தியாகிக்கு, இதய அஞ்சலி செலுத்த தமிழ் மக்கள் வெள்ளமெனத் திரண்டு வந்தார்கள்.

சத்தியாக்கிரகத்தின் பிதாமகர் என்று கூறப்படுகின்ற மகாத்மா காந்தியையே, நீராகாரம்கூட அருந்தாத தனது உண்ணாவிரதத்தினாலும், தற்கொடைத் தியாகத்தினாலும் விஞ்சியிருந்த அந்த வீர இளைஞனுக்கு இறுதி அஞ்சலியைச் செலுத்த, ஒவ்வொரு தமிழ் மகனும் முண்டியடித்துக் கொண்டிருந்தார்கள்.

தலைவரின் செய்தி:

ew025.jpg

திலீபனின் மரணத்தைத் தொடர்ந்து புலிகளின் தலைவர் வே.பிரபாகரன், ஒரு இரங்கல் செய்தியை வெளியிட்டார்.

எமது விடுதலை இயக்கம் எத்தனையோ அற்புதமான தியாகங்களைச் செய்திருக்கின்றது. வீர காவியங்களைப் படைத்திருக்கின்றது. இவை எல்லாமே எமது ஆயுதப் போராட்ட வரலாற்றில் நாம் ஈட்டிய வீர சாதனைகள்.

ஆனால் எமது அன்பான தோழன் திலீபனின் தியாகமோ வித்தியாசமானது. வியக்கத்தக்கது. எமது போராட்ட வரலாற்றில் புதுமையானது.

சாத்வீகப் போராட்டக் களத்தில் தன்னைப் பலிகொடுத்து திலீபன் ஈடிணையற்ற தியாகத்தைப் புரிந்துள்ளான்.

அவனது மரணம் ஒரு வரலாற்று நிகழ்ச்சி.

தமிழீழ தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிய நிகழ்ச்சி.

பாரத தேசத்தை தலைகுனிய வைத்த நிகழ்ச்சி.

உலகத்தின் மனச்சாட்சியைத் தீண்டிவிட்ட நிகழ்ச்சி.

திலீபன் தமிழ் மக்களுக்காகவே இறந்தான். தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவே இறந்தான். தமிழ் மக்களின் மண்ணுக்காக இறந்தான். தமிழ் மக்களின் பாதுகாப்புக்காக இறந்தான். தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காக, கௌரவத்திற்காக திலீபன் தன்னை மாய்த்துக்கொண்டான்.

ஒரு உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன். ஆனால், உயிரிலும் உன்னதமானது எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கௌரவம்.

நான் திலீபனை ஆழமாக நேசித்தேன். உறுதிவாய்ந்த இலட்சியப் போராளி என்ற ரீதியில் அவன் மீது அளவு கடந்த பாசம் எனக்குண்டு..என்று தெடர்ந்த தலைவரின் இரங்கல் செய்தியில், இந்தியாவின் பாராமுகத்தையும் அவர் பகிரங்கமாக கண்டித்திருந்தார்.

பாரதத்துடன் தர்மயுத்தம்:

திலீபனின் மரணம் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை தெரிவித்திருக்கின்றது. இது அர்த்தமற்ற சாவு என்று இந்தியத் தூதுவர் கூறியிருக்கின்றார். தமது உறுதிமொழிகளை நம்பியிருந்தால் திலீபன் உயிர் தப்பியிருப்பான் என்றும் அவர் சொல்லியிருக்கின்றார். ஆனால், உண்மையில் நடந்தது என்ன, நடந்து கொண்டிருப்பது என்ன என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

எமது உரிமைகள் வழங்கப்படும். எமது மக்களுக்கும், எமது மண்ணுக்கும் பாதுகாப்பு வழங்கப்படும். தமிழ் மக்கள் தமது பாரம்பரிய பூமியில் தம்மைத்தாமே ஆழும் வாய்ப்பு அளிக்கப்படும் – இப்படியெல்லாம் பாரத அரசு எமக்கு அளித்த வாக்குறுதிகளை நம்பி, நாம் எமது ஆயுதங்களைக் கையளித்தோம். எமது மக்களதும், மண்ணினதும் பாதுகாப்பை இந்தியாவுக்குப் பொறுப்பளித்தோம்.

இதனையடுத்து என்ன நடைபெற்றது என்பதெல்லாம் எமது மக்களாகிய உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

தமிழ் அகதிகள் தமது சொந்தக் கிரமங்களுக்குச் செல்ல முடியாமல் அகதி முகாம்களுக்குள்ளேயே முடங்கிக் கிடக்க, சிங்களக் குடியேற்றம் துரித கதியில் தமிழ் மண்ணை விழுங்க ஆரம்பித்தது. சிங்கள அரசின் பொலிஸ் நிர்வாகம் தமிழ் பகுதிகளில் விஸ்தரிக்கப்பட்டது.

சிங்கள இனவாத அரச இயந்திரம் அவசர அவசரமாக தமிழ் பகுதிகளில் ஊடுருவியது. சமாதான ஒப்பந்தம் என்ற போர்வையில், சமாதானப் படைகளின் அனுசரனையுடன் சிங்கள அரச ஆதிக்கம் தமிழீழத்தில் நிலைகொள்ள முயன்றது.

இந்தப் பேரபாயத்தை உணர்ந்துகொண்ட திலீபன், இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க திடசங்கற்பம் கொண்டான்.

இந்தச் சந்தர்ப்பத்தில் சிங்கள அரசுடன் உரிமை கோரிப் போராடுவதில் எந்தவித அர்த்தமும் இல்லை. பாரதம்தான் எமது இனப் பிரச்சினையில் தலையிட்டு, எம்மிடம் இருந்த ஆயுதங்களை வாங்கியது. பாரதம்தான் எமது போராட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது. ஆகவே பாரத அரசிடம்தான் நாம் உரிமை கோரிப் போராட வேண்டியிருந்தது.

எனவேதான் திலீபன் பாரதத்துடன் தர்மயுத்தம் ஒன்றை ஆரம்பித்தான். பாரதத்தின் ஆன்மீக மரபில் பெறப்பட்ட அகிம்சை வடிவத்தை ஆயுதமாகவும் அவன் எடுத்திருந்தான்.

நீராகாரம் கூட அருந்தாது மரண நோன்பைத் திலீபன் தழுவிக் கொள்வதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னரே இந்தியத் தூதுவர் டிக்சித்துக்கு நாம் முன்னறிவித்தல் கொடுத்திருந்தோம். உண்ணாவிரதம் ஆரம்பமாகி எட்டு நாட்கள் வரை எதுவுமே நடைபெறவில்லை.

பதிலுக்கு இந்திய அரசின் கீழுள்ள தொடர்பு சாதனங்கள் எம்மீது விஷமத்தனமான பொய்ப் பிரசாரங்களை கட்டவிழ்த்துவிட்டன. திலீபனின் உண்ணாவிரதத்தை கொச்சைப்படுத்தின.

உண்ணாவிரதம் ஆரம்பமாகி ஒன்பதாவது நாளே இந்தியத் தூதர் வந்தார். உருப்படியில்லாத உறுதி மொழிகளைத் தந்தார். வெறும் உறுதிமொழிகளை நம்பி காலாகாலமாக எமது இனம் ஏமாற்றப்பட்டு வருகின்றது.

உருப்படியான திட்டங்களை முன்வையுங்கள்! எமது கோரிக்கைகளை நிறைவேற்றி வையுங்கள்: அதுவரை உண்ணாவிரதத்தை கைவிட திலீபன் சம்மதிக்கமாட்டான் என்பதை அவருக்கு தெரியப்படுத்தினோம்.

உங்களுக்கு திலீபனின் உயிர் மீது உண்மையிலேயே அக்கறை இருந்தால், நீங்கள் அவனை வந்து பாருங்கள். எமது மக்கள் முன்னிலையில் அவனிடம் உறுதிமொழியினைக் கூறுங்கள். அப்பொழுதுதான் திலீபன் உண்ணா விரதத்தை கைவிடுவான் என்று அவரிடம் கூறினேன். அதற்கு இந்தியத் தூதுவர் மறுத்துவிட்டார். இவ்வாறு பிரபாகரன் அவர்களின் செய்தி தொடர்ந்தது.

திலீபனின் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, இந்தியா மிகவும் கேவலமான, பிற்போக்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது. திலீபனின் போராட்டத்தையும், அவனது தியாகத்தையும் கொச்சைப்படுத்தும்படியான பலவித நடவடிக்கைகளில் இந்தியா இறங்கியிருந்தது.

இந்திய அரசின் உத்தியோகபூர்வ வானொலி சேவையான ~அகில இந்திய வானொலி (ALL INDIA RADIO) திலீபனின் உண்ணாவிரதத்தை கொச்சைப்படுத்தும்படியான செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வந்தது. திலீபனைப் பற்றியும், புலிகளின் தலைவரைப் பற்றியும் தவறான கருத்துக்களை தமிழ் நாட்டு மக்கள் மத்தியில் பரப்பும் முயற்சியில், அது முழுமூச்சுடன் இறங்கியிருந்தது.

மகாத்மா காந்தியும் உண்ணாவிரதம் இருந்தவர்தான். ஆனால் அவர் தனது சகாக்களை உண்ணாவிரதம் இருக்கும்படி கூறவில்லை. மகாத்மாவே நேரடியாக உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்திருந்தார். ஆனால் புலிகளின் தலைவர் பிரபாகரனோ, தனது சகாக்களை உண்ணாவிரதம் இருக்கும்படி ஆணையிட்டுள்ளார் என்று அகில இந்திய வானொலி பிரச்சாரம் செய்தது.

அதேபோன்று, திலீபன் தொடர்பாக, மற்றொரு வதந்தியும் தமிழ் மக்கள் மத்தியில் திட்டமிட்டு பரப்பப்பட்டது. திலீபன் ஏற்கனவே நடைபெற்றிருந்த சண்டை ஒன்றில் காயம் அடைந்திருந்ததால், அவனது ஈரலில் ஒரு பகுதியும், மற்றைய சில உள்ளுறுப்புக்களும் ஏற்கனவே வைத்திய சிகிச்சையின் போது அகற்றியெடுக்கப்பட்டுவிட்டன.

திலீபன் இன்னும் சில நாட்கள் மட்டுமே உயிர் வாழ முடியும். அதனால்தான் திலீபன் சாகும்வரையிலான உண்ணாவிரதத்தை துணிந்து மேற்கொண்டு வருவதாக வதந்திகள் பரப்பப்பட்டன.

(இந்தியப்படையுடன் ஈழத்திற்கு வந்திருந்த தமிழ் அமைப்புக்களின் உறுப்பினர்கள் இப்படியான வதந்திகளை மக்கள் மத்தியில் பரப்புவதில் அரும்பணியாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.)

அதேபோன்று, திலிபன் மரணம் அடைந்த பின்பும், இந்தியாவின் சகபாடிகளால் மேலும் பல வதந்திகள் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டன. இறுதி நேரத்தில் திலீபன் தன்னைக் காப்பாற்றும்படி சக போராளிகளிடம் கெஞ்சியதாகவும், ஆனால், புலிகள் திலீபனை வலுக்கட்டாயமாக உண்ணாவிரதம் இருந்து சாகடித்ததாகவும் வதந்திகள் பரப்பப்பட்டன.

திலீபன் புலிகளால் விஷ ஊசி ஏற்றிக் கொல்லப்பட்டதாகவும் தமிழ் மக்கள் மத்தியில் இந்தியாவின் அடிவருடிகளால் வதந்திகள் பரப்பப்பட்டன.

திலீபனின் போராட்டமானது, இந்தியா பற்றி தமிழ் மக்கள் மத்தியில் இருந்த மாயையை உடைந்திருந்தது. இதனைப் பொறுக்க முடியாத இந்தியாவின் உளவுப் பிரிவினரே, இதுபோன்ற வதந்திகளைப் பரப்புவதில் பிரதான பங்கு வகித்திருந்தார்கள்.

அவர்கள் தமது திட்டத்திற்கு இந்தியப் படைகளின் தயவில் தங்கியிருந்த தமிழ் அமைப்பின் உறுப்பினர்களையும், அவர்களின் குடும்பத்தினர்களையும் பயன்படுத்தினார்கள்.

ஆனால், இதுபோன்ற வதந்திகள் தமிழ் மக்கள் மத்தியில் எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதுபோன்ற வதந்திகள் தமிழ் மக்களை இந்தியாவிற்கு எதிராக மேலும் கோபம் கொள்ள வைத்ததுடன், திலீபன் மீது தாம் கொண்டிருந்த அன்பை மென்மேலும் அதிகரிக்கவும் செய்தது.

சண்டைகளின் போது விழுப்புண் அடைவது புலிகளுக்கு புதிதல்ல. இதை புலிகளுடன் தோளோடு தோள் நின்ற தமிழ் மக்கள் நன்கறிவார்கள். சுமார் ஆறு மாத காலத்திற்கு முன்னர் இடம்பெற்ற ஒரு சண்டையின் போது திலீபன் வயிற்றில் காயமடைந்திருந்தது உண்மைதான்.

ஆனால் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் அளவிற்கு திலீபனுக்கு உடல்நிலை ஒன்றும் மோசமாக இருக்கவில்லை என்பதை, திலீபனின் வாழ்க்கையில் பிண்ணிப் பிணைந்திருந்த யாழ்ப்பாணத் தமிழ் மக்கள் நன்கறிவார்கள்.

அத்தோடு, மரணத்திற்கு முன்பதாக திலீபன் ஆற்றியிருந்த உரை, தனது குறிக்கோளில் திலீபன் கொண்டிருந்த உறுதியை வெளிப்படுத்துவதாக இருந்தது.

நான் என் உயிரினும் மேலாக நேசிக்கும் மக்களே! உங்களிடம் ஒரு பெரும் பொறுப்பை விட்டுச் செல்கிறேன். நீங்கள் அனைவரும் பரிபூரணமாகக் கிளர்ந்தெழ வேண்டும். இங்கு ஒரு மாபெரும் புரட்சி வெடிக்கட்டும்.

மக்கள் அனைவரும் எழுச்சியடைவார்களாயின் தமிழீழம் உருவாவதை யாராலும் தடுக்க முடியாது. எமது உரிமைகளை நாமே வென்றெடுக்க வேண்டும். இதற்கு வேறு யாருடைய தயவையும் எதிர்பார்க்கக் கூடாது.

ஈழப் பிரச்சனையின் அடுத்த கட்டத்தை நோக்கி இந்தியா:

திலீபனின் மரணமும், அது தொடர்பான உணர்வலைகளும் தமிழ் மக்களை ஆட்கொண்டிருந்த அதேவேளை, இந்திய இராணுவம் தனது 36வது காலாட் படைப்பிரிவை மிகவும் இரகசியமாக யாழ். குடாவிற்கு நகர்த்த ஆரம்பித்தது.

சென்னை, பறங்கிமலைப் பகுதியில் உள்ள Defence Colony இல் ஏற்கனவே முகாம் அமைத்து நிலைகொண்டிருந்த இந்திய இராணுவத்தின் இந்தப் படைப்பிரிவு, சிறிது சிறிதாக யாழ். குடாவை நோக்கி நகர்த்தப்பட்டது.

இந்தியா, ஈழப் பிரச்சனையின் அடுத்த கட்டத்திற்குள் தன்னை நுழைத்துக் கொள்வதற்கு தயாரானது.

தொடர்புபட்ட காணொளி:

 

புலிகளுடனான சண்டைகளில் எதற்காக சீக்கியர்கள் ஈடுபடுத்தப்பட்டார்கள்?  அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-67) – நிராஜ் டேவிட்

இந்திய இராணுவத்தின் உயரதிகாரி லெப். கேணல் திபீந்தர் சிங்கை பீ.பீ.சி. யின் பிரபல ஊடகவியலாளரான மார்க் ரூலி செவ்வி கண்டுகொண்டிருந்தார்.
அந்தச் செவ்வியின் இடைநடுவே பீ.பீ.சி. ஊடகவியலாளர் மார்க் ரூலி அந்தச் செவ்வியை ஒலிப்பதிவு செய்துகொண்டிருந்த உபகரணத்தின் ஒலிவாங்கியை துண்டித்துவிட்டு, ஒரு கேள்வியை திபீந்தர் சிங்கிடம் தனிப்பட்ட ரீதியில் வினவினார்.
“இலங்கையில் இந்தியா மேற்கொண்டுவரும் சண்டைகளில் சீக்கியர்கள் அதிக அளவில்; ஈடுபடுத்தப்படுவது ஏன்?|| என்று அந்த பீ.பீ.சி. ஊடகவியலாளர் கேள்வி எழுப்பியிருந்தார்.
திபீந்தர் சிங்கிற்கு என்ன பதில் கூறுவது என்று புரியவில்லை. திகைத்து விட்டார். தடுமாறியபடி ஒருபதிலைக் கூறிச் சமாளிக்க முயன்றார்.
“உண்மையிலேயே நீங்கள் இந்தக் கேள்வியை என்னிடம் கேட்கும் வரைக்கும் இதுபற்றி நாங்கள் யோசிக்கவேயில்லை. இது திட்டமிட்டு நடைபெற்ற ஒன்றல்ல. இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்தியப் படை அணிகளில் சீக்கியர்கள் அதிகமாக இருப்பது உண்மைதான். ஆனால் இது தற்செயலான ஒன்று…|| என்று கூறி அவர் மழுப்பிவிட்டார்.
அவரது பதிலை அந்த ஊடகவியலாளர் நம்பினாரோ தெரியவில்லை, வேறு கேள்வி எதுவும் கேட்கவில்லை. செவ்வியை முடித்துக்கொண்டு புறப்பட்டார்.

காரணம் என்ன?
உண்மையிலேயே இலங்கையில் இந்தியப் படையினர் மேற்கொண்ட யுத்த நடவடிக்கைகளில் சீக்கியர்கள் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டதற்கு ஏதாவது உள்நோக்கம் இருக்கின்றதா?
“அப்படி எதுவுமே கிடையாது|| – என்று இந்திய அதிகாரிகள் என்னதான் சப்பைக்கட்டு கட்டினாலும், காரணத்துடன்தான் சீக்கியர்கள் ஈழ யுத்தத்தில் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டார்கள் என்பதை உறுதியாகவே நம்பலாம்.
ஈழத்தில் அதிக அளவிலான படுகொலைகளையும், கொள்ளைகளையும், பாலியல் வல்லுறவுகளையும் மேற்கொண்டவர்கள் சீக்கியர்களே என்ற அடிப்படையில், இந்தியப் படை காலத்தில் ஈழ மண்ணில் அதிக அளவிலான சீக்கியர்களின் பிரசன்னம் பற்றி ஆராய்வது அவசியமாகின்றது.
இந்தியாவில் வீர தீர சாகாசங்களில் சீக்கியர்கள் கைதேர்ந்தவர்கள் என்பது பொதுவானதொரு அபிப்பிராயம். சீக்கியர்கள் பௌதீக ரீதியாக மிகுந்த உடல் பலத்தைக் கொண்டவர்கள் என்பது ஓரளவு உண்மையும் கூட.

இந்தியாவில் பிரித்தானியர்களுக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தில் அதிக பங்களிப்பைச் செய்து, பலத்த இழப்புக்களைச் சந்தித்த சமூகம் என்ற வகையில் சீக்கியச் சமுகம் இந்தியாவில் மதிக்கப்படுகின்ற ஒரு சமூகம். இந்திய இராணுவத்திலும், விளையாட்டுக்கள் மற்றும் உடற் பலம் சார்ந்த விடயங்களிலும் சீக்கியர்கள் அதிகம் அங்கம் வகிப்பது வழக்கம்.
அதேவேளை, இந்தியாவில் உள்ள மற்றய இனங்களுடன் ஒப்பிடும் பொழுது, சீக்கியர்கள் அவ்வளவு புத்திசாலிகள் இல்லை என்பது இந்தியாவில் பரவலாக பேசப்படுகின்ற ஒரு விடயம். சீக்கியர்கள் முட்டாள்கள், மிகுந்த முட்டாள் தனமான காரியங்களையே செய்பவர்கள் என்பது இந்தியாவில் உள்ள மற்ற இனங்களின் மத்தியில் காணப்படுகின்ற பரவலான நம்பிக்கை. சீக்கியர்களின் முட்டாள்தனமான காரியங்களை அடிப்படையாக வைத்து, ‘சர்தாஜி ஜோக்ஸ்| என்று ஏராளமான நகைச்சுவைத் துணுக்குகள் வெளிவந்து, உலகம் முழுவதும் பிரபல்யமாகி உள்ளன. (சீக்கியர்களை இந்தியில் ‘சர்தாஜிக்கள் என்றும் அழைப்பார்கள்).
வீரம் மிக்க முட்டாள்களான சீக்கியர்கள் இந்தியப் படையில் அதிகம் இடம்பெற்றிருந்ததுடன், ஈழ மண்ணில் இந்தியப் படையினர் மேற்கொண்ட முட்டாள்தனமான நடவடிக்கைகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது ஒன்றும் வியப்பான ஒரு விடயம் அல்ல.


‘இலங்கையில் இந்தியப் படையினர் எந்தவித அரசியல் நோக்கமும் இல்லாமல் சண்டையிட்டார்கள்| என்பதே,- ஈழத்தில் இந்தியாவிற்கு ஏற்பட்ட தோல்விக்கு அடிப்படையான காரணமாக இன்றுவரை அனைவரும் குற்றம் சாட்டி வருகின்றர்கள்.
அப்படி எந்தவித அடிப்படை அரசியல் நோக்கமும் இல்லாது, அல்லது தமக்கிருந்த உண்மையான அரசியல் நோக்கத்தை வெளியிடாமல் யுத்தம் ஒன்றைப் புரிவதற்கு, அதுவும் அந்த யுத்தத்தை மிகவும் மூர்க்கமாகப் புரிவதற்கு சீக்கியர்களைப் போன்ற வீரம் நிறைந்த முட்டாள்கள் இந்தியத் தலைமைக்கு பொருத்தமாகப் பட்டார்கள். ஈழ யுத்தத்தில் சீக்கியர்களை அதிக அளவில் இந்தியத் தலைமை ஈடுபடுத்தியதற்கு இதுவும் ஒரு காரணம்.
அக்காலத்தில் இந்தியாவைப் பொறுத்தவரையில் எந்தவிதமான யுத்த அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளவில்லை. எல்லைப்புறச் சண்டைகளிலும் இந்தியா ஈடுபட்டிருக்கவில்லை. அதனால் மெட்ராஸ் ரெஜிமெட் உட்பட தென் இந்தியப் படையணிகள் பெருமளவில் எந்தவித பணியும் இல்லாது சும்மாவே அப்பொழுது காலம் கடத்தி வந்தன. இந்தியத் தலைமை நினைத்திருந்தால் தமிழ் பேசும் மெட்ராஸ் ரெஜிமெட் வீரர்களையே முற்று முழுதாக இலங்கை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியிருக்க முடியும். தாம் செய்யும் பிழையான காரியங்களை தமிழ் பேசும் இந்தியப் படையினரால் இலகுவாக விளங்கிக்கொண்டுவிட முடியும் என்ற காரணத்தினால், திட்டமிட்டே தமிழ் படையினர் நடவடிக்கைகளில் இருந்து தவிர்க்கப்பட்டு, பாஷை புரியாத, உணர்ச்சிகள் புரியாத வெறும் வீரத்தை மட்டுமே வெளிக்காட்டக்கூடிய சீக்கிய முட்டாள்களை இந்தியப் படை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியது இதனால்தான்.
சீக்கியர்களுக்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பங்கள்:
அதைவிட, தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தில் சீக்கியர்களை நேரடியாக ஈடுபடுத்தியதற்கு முக்கியமான இரண்டு காரணங்கள் உள்ளன.
ஈழத்தில் இந்தியப்படைகள் பிரசன்னமாவதற்கு சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னதாக, இந்தியாவில் சீக்கிய சமூகத்திற்கு எதிராக பாரிய அடக்குமுறை ஒன்று கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்தது. சீக்கியர்கள் காலிஸ்தான் என்ற தனி நாட்டுக் கோரிக்கையை முன்வைத்து அப்பொழுது ஆயுதப் போராட்டத்தில் குதித்திருந்தார்கள். இந்திரா காந்தி தலைமையிலான இந்திய நடுவன் அரசு, இரும்புக்கரம் கொண்டு அதனை அடக்கியிருந்தது. சீக்கியர்களின் அதிஉன்னத மதஸ்தலமான பொற்கோவிலினுள் இந்தியப் படை நுழைந்து பாரிய அனர்த்தங்களைப் புரிந்திருந்தது. ஷபுளுஸ்டார் இராணுவ நடவடிக்கை| என்ற பெயரில் இந்தியப் படையினர் மேற்கொண்ட மிகப் பிரமாண்டமான இராணுவ நடவடிக்கையின்போது, சீக்கியர்கள் பலர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். சீக்கிய விடுதலைப் போராட்டத்தை முன்நின்று நடாத்திய பிரிந்தவால் என்ற தீவிரவாதத் தலைவரை, சீக்கிய பொற்கோயிலில் வைத்தே இந்திய இராணுவம் சுட்டுக் கொன்றது. இது சீக்கியர்கள் மத்தியில் மாறாத வடுவை ஏற்படுத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து இந்தியாவின் பிரதம மந்திரி இந்திரா காந்தி அவரது பிரத்தியோக மெய்ப்பாதுகாவலர்களான இரண்டு சீக்கியர்களினாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.


இந்திரா காந்தியின் கொலையைத் தொடர்ந்தும் சீக்கிய சமூகம் இந்தியாவில் பாரிய அழிவுகளை எதிர்கொண்டது. இந்திரா காந்தியின் கொலையால் கோபம் கொண்ட இந்தியர்கள், ஆயிரக்கணக்கில் சீக்கிய மக்களை நாடு முழுவதிலும் கொலை செய்தார்கள். அவர்களது உடமைகளை சூறையாடினாhகள். சீக்கியர்களுக்குச் சொந்தமான வியாபார ஸ்தலங்களை அழித்தார்கள்.
இது போன்று இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வந்த சீக்கியர்களுக்கு எதிரான தொடர் அசம்பாவிதங்கள், இந்திய இராணுவத்தில் இருந்த சீக்கிய ஜவான்களின் மனங்களிலும் பாரிய அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இந்திரா காந்தி இந்திய இராணுவத்திலிருந்த சீக்கியர்களினாலேயே கொலை செய்யப்பட்டதானது, இந்திய இராணுவத்தினுள் சீக்கியர்கள் தொடர்பாக அதுவரை இருந்து வந்த நம்பிக்கையை சிதறடித்திருந்தது. இராணுவத்தினுள் நம்பிக்கையான பொறுப்புக்கள் சீக்கியர்களுக்கு வழங்கப்படுவது தவிர்க்கப்பட்டு வந்தது. இதுவும் சீக்கிய இனத்தவரை இந்தியா என்ற உணர்வில் இருந்து அன்னியப்பட வைப்பதாகவே அமைந்திருந்தது.
இப்படியான நிலையில், இலங்கையில் இராணுவ நடவடிக்கை என்று வந்ததும் இந்தியத் தலைமை அவசர அவசரமாக சீக்கியர்களை அதில் முழுமையாக ஈடுபடுத்தி, சீக்கியப் படைவீரர்களிடையே வேறு சித்தனைச் சிதரல்கள் ஏற்பட்டுவிடுவதை தவிர்ப்பதற்கு யோசித்தார்கள். அவர்களுக்கு தமது நாட்டுப் பற்றை மற்றுமொருமுறை நிரூபிப்பதற்குச் சந்தர்ப்பம் வழங்குவது போன்ற ஒருநிலைமையைத் தோற்றுவித்துவிட்டு, இந்தியப் படையினரை ஏதோ ஒரு காரியத்தில் ஈடுபட வைக்கும் மனோவியல் நடவடிக்கையை இந்தியப் படைத்துறைத் தலைமை மேற்கொண்டிருந்தது. ஈழ யுத்தத்தில் சீக்கியப் படைஅணிகள் அதிக அளவில் ஈடுபட்டதற்கு இதுவும் ஒரு காரணம்.
மறைக்கப்பட்ட உண்மை:

அதேவேளை, இந்தியா-சீக்கியாகள்-தமிழர்கள் என்ற விடயங்களில் மறைக்கப்பட்ட உண்மை ஒன்றும் உள்ளது.
ஈழயுத்தத்தில் முன்நிலைப்படுத்துப்பட்டு களமிறக்கப்பட்ட சீக்கியப் படையினர் மக்கள் மீது, அதுவும் குறிப்பாக தமிழ் மக்கள் மீது அளவுக்கதிகமாக காழ்ப்புணர்வு கொண்டு செயற்பட்டதற்கு மற்றொரு காரணம் உண்டு.
சரித்திர ஆராய்சியாளர்களால் கணக்கில் எடுக்கப்படாததும், அதேவேளை மிகவும் முக்கியத்தவம் பெற்றதுமான இந்தக் காரணம் பற்றி அடுத்த வாரம் சற்று விரிவாகப் பார்ப்போம்.
தொடரும்…


About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply