இடைக்கால நிர்வாகசபையும், அதன் பின்னணியில் வகுக்கப்பட்ட சதிகளும் (அவலங்களின் அத்தியாயங்கள்- 68 – 76

இடைக்கால நிர்வாகசபையும், அதன் பின்னணியில் வகுக்கப்பட்ட சதிகளும் (அவலங்களின் அத்தியாயங்கள்- 68) – நிராஜ் டேவிட

  • June 21, 2013
திலீபனின் மரணத்தைத் தொடர்ந்து தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்ட கொந்தளிப்பையும், சர்வதேச மட்டத்திலும் ஏற்பட்ட சங்கடங்களையும்; தனிக்கவேண்டிய தேவை இந்திய அரசிற்கு ஏற்பட்டது.

இந்தியா புலிகளுக்கும், தமிழ் மக்களுக்கும் பாதகமான ஏதோ ஒன்றைச் செய்து வருகின்றது என்பது போன்ற ஒரு பேச்சு தமிழ் மக்கள் மனங்களிலும், சர்வதேச நாடுகள் மத்தியிலும் ஏற்பட ஆரம்பித்தன. திலீபனின் மரணம் இப்படியான ஒரு எண்ணத்தையும், சந்தேகத்தையும் அனைத்து மட்டங்களிலும் பரப்பியிருந்தது.தொடர் உண்ணாவிரதப் போராட்டங்கள்:

இதற்கு மேலாக, தமது 5 அம்சக் கோரிக்கைகளை முன்நிறுத்தி, விடுதலைப் புலிகள் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை, தமிழீழத்தின் அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து வந்தார்கள்.

திலீபன் முன்வைத்த 5 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, மட்டக்களப்பில் மதன் என்ற இளைஞன் சாகும் வரையிலான தனது உண்ணா விரதத்தை, மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் ஆரம்பித்திருந்தான். இதேபோன்று தமிழ் பிரதேசங்கள் அனைத்திலும், உண்ணாவிரதப் போராட்டங்கள் மிகுந்த உணர்ச்சியுடன் மேற்கொள்ளப்பட்டன.

இது போன்ற உண்ணாவிரதப் போராட்டங்கள் தமிழ் மக்களை மிகவும் உணர்ச்சிவசப்பட வைத்தன. இந்தியாவின் மீது தமிழ் மக்களை காழ்ப்புணர்வு கொள்ள வைத்தன. ஏற்கனவே திலீபனின் மரணம் இந்தியாவின் அமைதிகாக்கும் பணிக்கு  தமிழ் மக்கள் மத்தியிலும், சர்வதேச மட்டத்திலும் ஏற்படுத்தியிருந்த சேதத்தை நிவர்த்தி செய்வதற்கு அவகாசம் வழங்காமல், தொடர்ந்து பல உண்ணாவிரதப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்ததானது, இந்திய அதிகாரிகளை ஆட்டம் காண வைத்தன. இந்தியப் படை அதிகாரிகளைப் பொறுத்தவரையில், இந்த உண்ணாவிரதப் போராட்டங்கள் அவர்களுக்கு பெரிய தலையிடியாகவே அமைந்திருந்தன.

இந்தியப் படை தமிழ் மண்ணை ஆக்கிரமிக்கச் சென்ற ஒரு படை என்பது போன்ற எண்ணம் சர்வதேச மட்டத்தில் ஏற்பட்டுவிடக் கூடிய அபாயத்தை, இந்தியா எதிர்கொள்ள ஆரம்பித்தது.

இப்படியான ஒரு எண்ணப்பாடு வேகமாகப் பரவுவதைத் தடுக்க இந்தியா அவசர அவசரமாக ஒரு திட்டத்தை தீட்டியது. புலிகளுக்கு ஏதாவது ஒன்றை வழங்கிவிட்டு, அதன் பின்னரே புலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இந்தியா திட்டம் தீட்டியது.

திலீபனின் மரணத்தை தொடர்ந்து உலகத்தின் பார்வையில் புலிகள் மீது ஏற்பட ஆரம்பித்திருந்த அனுதாபத்தை புலிகளைக் கொண்டே உடைத்து விட்டு, அதன் பின்னரே புலிகள் மீது நடவடிக்கை மேற்கொள்வது நல்லது என்று இந்திய அதிகாரிகள் ஆலோசனை வழங்கினார்கள்.

வடக்கு கிழக்கில் இடைக்கால நிர்வாக சபை ஒன்றை உடனடியாக அமைத்து, உலகத்தின் சந்தேகத்தைப் போக்கிவைப்பதற்கு இந்தியா தீர்மாணித்தது. ஜே.ஆருடன் கலந்தாலோசித்த இந்தியத் தூதுவர் ஜே.என். தீட்சித் இதற்கான திட்டத்தை வரைந்தார்.

வடக்கு கிழக்கை நிர்வகிப்பதற்கென்று 11 பேர் கொண்ட இடைக்கால நிர்வாக சபையை அமைப்பது என்றும், அதில் விடுதலைப் புலிகள் 5 உறுப்பினர்களை நியமிக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இரகசிய ஒப்பந்தம்:

இதற்கான கலந்துரையாடலை மேற்கொள்வதற்காக செப்டெம்பர் 28ம் திகதி இந்தியத் தூதுவர் ஜே.என்.தீட்ஷித் யாழ்குடாவிற்கு விரைந்தார். பலாலி விமானப்படைத் தளத்தில் அவர் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனைச் சந்தித்து உரையாடினார். புலிகள் தரப்பில் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் மற்றும் பிரதித் தலைவர் மகேந்திரராஜா மாத்தையா போன்றோரும் சென்றிருந்தார்கள். மிகவும் காரசாரசாக நடைபெற்ற அந்தச் சந்திப்பில், இடைக்கால நிர்வாகசபை அமைப்பது தொடர்பான ஒரு முடிவு எடுக்கப்பட்டது.

அதே தினத்தில் விடுதலைப் புலிகளுக்கும், இந்தியாவிற்கும் இடையில் ஒரு இரகசிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன. ‘‘India’s Intervention in Sri-Lanka’ என்ற ஆய்வு நூலில், இந்த இரகசிய ஒப்பந்தம் பற்றிய விபரம் வெளியிடப்பட்டிருந்தது.

விடுதலைப் புலிகள் சார்பில் பிரதித் தலைவர் மகேந்திரராஜா மாத்தையாவும், இந்திய அரசு சார்பில் இலங்கைக்கான இந்தியத் தூதரகத்தின் முதல் நிலை அதிகாரி ஹர்தீப் பூரி|யும், அந்த இரகசிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்தார்கள்.

அந்த ஒப்பந்தத்தில் காணப்படுகின்ற விபரங்கள் இவைதான்:

பின்வரும் அடிப்படையில் வடக்கு கிழக்கிற்கான ஒரு இடைக்கால நிர்வாக சபையை அமைப்பதற்கு, ஸ்ரீலங்காவின் பிரதமர் இந்திய தூதுவரிடம் தனது சம்மதத்தை தெரிவித்துள்ளார்.

த.வி.புலிகள் – 5

த.வி.கூ. – 2

முஸ்லிம்கள் – 2( இருவரில் ஒருவர் புலிகளாலேயே நியமிக்கப்படுவார்)

சிங்களவர்கள்- 2

மொத்தம் 12 பிரதிநிதிகள். இந்த இடைக்கால நிர்வாக சபையின் தலைவரை புலிகள் ஆலோசனையுடன் ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி நியமிப்பார்.

-பெங்களூர் முன்மொழிவுகளின் 10.1, 10.2 பிரிவுகளின்படி, ஜே.ஆர். தனது நிறைவேற்று அதிகாரங்களில் சிலவற்றை, இடைக்கால நிர்வாக சபையின் தலைவருக்கு வழங்குவார்.

-வடக்கு கிழக்கில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் அதிகாரம் இந்த இடைக்கால நிர்வாக சபைக்கு இருக்கும்.

-இந்தியத் தூதுவரிடம் 13.10.1987ம் திகதி புலிகள் முன்வைத்த ஐந்து அம்சக் கோரிக்கைககள், இந்த இடைக்கால நிர்வாக சபை மூலம் நிறைவேற்றப்படும்.

-1987ம் ஆண்டு ஜுலை மாதம் இந்தியப் பிரதமரால் புலிகளின் தலைவருக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படும் பட்சத்தில், இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அழுல்படுத்துவதற்கான அனைத்து ஒத்துழைப்புக்களையும் விடுதலைப் புலிகள் வழங்குவார்கள்.

-புலிகள் அமைப்பின் உறுப்பினர்களதும், தலைவர்களினதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் புலிகள் தங்களிடம் மிகுதியாக உள்ள ஆயுதங்களை கையளிப்பார்கள்.

-மாகாணசபைத் தேர்தலை நடாத்துவதற்கு புலிகள் பூரண ஒத்துழைப்பு வழங்குவார்கள்.

-இந்தியாவும் விடுதலைப் புலிகளும் ஒருவருக்கு எதிராக மற்றவர் மேற்கொண்டுவரும் பிரச்சார நடவடிக்கைளை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

-30ம் திகதிக்கு முன்னர் ஸ்ரீலங்கா அரசாங்கம் இடைக்கால நிர்வாகசபை பற்றிய அறிவிப்பை வெளியிட வேண்டும்.

-இந்திய அரசும், இலங்கை அரசும், இந்த இரகசிய ஒப்பந்தத்தின் வெளிப்படையான அம்சங்கள் சிலவற்றை மட்டுமே வெளியிட வேண்டும்.

-இவற்றிற்கு பதிலாக விடுதலைப் புலிகள் தமது உண்ணாவிரதப் போராட்டங்களை முடிவிற்கு கொண்டுவரவேண்டும்.

இவ்வாறு அந்த இரகசிய ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஜே.ஆர்.மேற்கொண்ட தந்திரம்:

இலங்கை-இந்திய ஒப்பந்திற்கு எதிராக தென் இலங்கையில் ஏற்பட்டிருந்த கொந்தளிப்பு, சில சந்தர்ப்பங்களில் ஜே.ஆர்.இனது காய்நகர்த்தல்களுக்கு தொல்லையாக இருந்தாலும், பல சந்தர்ப்பங்களில் அதுபோன்ற எதிர் அலைகள் ஜே.ஆருக்கு உதவவே செய்தன.

தென்பகுதி பேரினவாதிகளைத் திருப்திப்படுத்துவதற்கு என்று கூறி, ஒப்பந்தத்தின் சரத்துக்களில் ஸ்ரீலங்கா அரசிற்கு சாதகமான அம்சங்களை இணைத்துக் கொள்ளுவதற்கு ஜே.ஆரால் முடிந்திருந்தது.

தென்னிலங்கையில் ஏற்படுகின்ற நெருக்குதல்களை சமாளிப்பதற்காகவே இடைக்கிடையே சில கடுமையான முடிவுகளை தான் எடுக்கவேண்டி இருப்பதாக, இந்தியத் தரப்பை நம்பவைப்பதற்கும் ஜே.ஆரால் முடிந்திருந்தது.

இடைக்கால நிர்வாக சபை ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஜே.ஆர். மிகவும் அழகாக காய்களை நகர்த்த ஆரம்பித்தார்.

இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியினாலோ, இந்தியத் தூதுவர் தீட்ஷித்தினாலோ, ஜே.ஆரின் காய் நகர்த்தல்களைப் புரிந்து கொள்ளவும் முடியவில்லை@ அவரது தந்திரங்களுக்கு ஈடுகொடுக்கவும் முடியவில்லை.

ஜே.ஆரின் தந்திரோபாய நடவடிக்கைளைப் பரிந்துகொள்ளும் அனுபவமும் அவர்களுக்கு இருக்கவில்லை. மிகவும் இலகுவாகவே அவர்கள் ஜே.ஆரின் வலையில் வீழ்ந்துவிட ஆரம்பித்தார்கள்.

இரகசிய விவாதம்:

இது இவ்வாறு இருக்க, ஜே.ஆரின் காய் நகர்த்தல்கள் பற்றிய ஒரு விவாதம் யாழ்ப்பாணத்தின் ஒரு மூலையில் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள், ஜே.ஆர். மேற்கொள்ள ஆரம்பித்திருந்த சதியை வெற்றிகொள்வது எப்படி என்று ஆராய்ந்துகொண்டிருந்தார்கள்.

ஜே.ஆரின் தந்திர வலைக்குள் புலிகள் சிக்காமல் தப்பி விடுவதுடன், அவரது வலையை எப்படி தமது அடுத்த நகர்வுகளுக்கு சாதகமாக்கிக்கொள்வது என்றும் அவர்கள் திட்டம் தீட்டிக்கொண்டிருந்தார்கள்.

தொடரும்…


 கைதுசெய்யப்பட்ட முக்கிய தளபதிகள் (அவலங்களின் அத்தியாயங்கள்- 70) – நிராஜ் டேவிட்

  • June 21, 2013
வடக்குகிழக்கு மாகாண இடைக்கால நிர்வாகசபை தொடர்பான இடம்பெற்றுவந்த சர்ச்சைகளுக்கு புலிகள் ஒரு முற்றுப் புள்ளியை வைத்ததைத் தொடர்ந்து, இந்தியப் படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் காணப்பட்டு வந்த விரிசல்கள் அதிகரிக்க ஆரம்பித்தன.

இந்த விரிசல்களை மேலும் அதிகரிப்பதுபோன்ற மற்றொரு சம்பவம், 03.10.1087 அன்று பாக்குநீரினை கடற்பரப்பில் இடம்பெற்றது.இந்தியா மீது முற்றாகவே நம்பிக்கையை இழந்திருந்த விடுதலைப் புலிகள்@ புலிகளை அடிமைப்படுத்த அல்லது அழித்துவிடத் தருனம் பார்த்துக்கொண்டிருந்த இந்தியா இந்தியாவையும் விடுதலைப் புலிகளையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்க நினைத்த ஸ்ரீலங்கா. இந்த மூன்று தரப்பினருமே எதிர்பார்த்திராத நிகழ்வொன்று அக்டோபர் மாதத்தின் ஆரம்பத்தில் பருத்தித்துறைக் கடற்பரப்பில் இடம்பெற்றது.

ஒரு மோசமான இன அழிப்பை மேற்கொண்ட படையினர் என்று இந்தியாவை சர்வதேசத்தின் முன்னர் தலைகுனிய வைக்கும்படியாக அமைந்திருந்த புலிகள்-இந்திய யுத்தத்திற்கு அத்திவாரம் போட்டதாக ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுகின்ற அந்த நிகழ்வு, ஜே.ஆருக்கு மட்டுமே நன்மை பயக்கும்படியாக அமைந்திருந்தது.

படகில் வந்த புலிகள்:

3.10.1987 அன்று அதிகாலை 2 மணியளவில், பருத்தித்துறைக் கடற்பரப்பில் சில விடுதலைப் புலிகள் ஆயுதங்களுடன் படகொன்றில் வந்துகொண்டிருப்பதாக இந்திய அமைதிப்படைக்கு, இந்தியக் கடற்படையினரிடம் இருந்து தகவல் வந்து சேர்ந்தது.

புலிகள் தொடர்பாக அதிருப்தி கொண்டிருந்ததுடன், புலிகளின் ஆயுதங்களைக் களையும் நோக்கத்திலும் இருந்த இந்திய அமைதி காக்கும் படையினர், இந்தத் தகவலை ஸ்ரீலங்கா கடற்படையினரின் காதுகளில் போட்டு வைத்தார்கள். உடனடியாகவே ஸ்ரீலங்கா கடற்படையின் ரோந்துக் கப்பல் ஒன்று புலிகளின் படகை வழிமறிக்கப் புறப்பட்டது.

அக்காலத்தில் புலிகள் கடல் புலிகள்| என்ற பிரமாண்டமான கடற்படைக் கட்டமைப்பைக் கொண்டிருக்கவில்லை. ஈழத்திற்கும், இந்தியாவிற்கும் இடையிலான போக்குவரத்திற்கும், ஆயுத மற்றும் உணவு வினியோகத்திற்கும் என்று சிறிய அளவிலான கடற் பிரிவொன்றையே கட்டமைத்திருந்தார்கள். ~கடல் புறா| என்ற பெயரில் சில வள்ளங்களில், உயர்வலு இயந்திரங்களையும், எல்.எம்.ஜி. இயந்திரத் துப்பாக்கிகளையும் பொருத்தி, சிறிய படைப்பிரிவொன்றையே புலிகள் தமதாகக் கொண்டிருந்தார்கள். (பிரபல சரித்திர எழுத்தாளர் சாண்டில்யன் எழுதியிருந்த ~கடல் புறா| என்ற சரித்திர நாவலில், தமிழருக்குச் சொந்தமான பாரிய கடற்படையின், பிரதான கப்பலுக்கே ~கடல் புறா| என்று பெயரிடப்பட்டிருந்தது. சாண்டில்யனின் அந்த நாவலை மிகவும் விரும்பிப் படித்த புலிகளின் தலைவர் வே.பிரபாகரன், புலிகளின் கடற் பிரிவுக்கு, கடல் புறா என்ற பெயரைச் சூட்டியிருந்தார்)

கடல் புறா என்று பெயர் பொறிக்கப்பட்ட புலிகளின் அந்தப் படகை ஸ்ரீலங்கா கடற்படையினர் வழிமறித்தார்கள். புலிகளின் படகில், மட்டக்களப்பு மாவட்ட தளபதி குமரப்பா மற்றும் திருகோணமலை மாவட்டத் தளபதி புலேந்திரன் உட்பட 17 போராளிகள் பயணம் செய்துகொண்டிருந்தார்கள்.

ஆரியதாச என்ற அதிகாரியின் தலைமையில் சென்ற ஸ்ரீலங்கா கடற்படைப் படகு, புலிகளின் படகை வழிமறித்தது. புலிகளின் படகை கரையை நோக்கித் திருப்பும்படி கட்டளையிட்டது. புலிகள் தம்மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்றே கடற்படையினர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் புலிகள் அவ்வாறு நடந்துகொள்ளவில்லை. யுத்தநிறுத்தம் அமுலில் இருந்த காரணத்தினாலும், இலங்கை இந்திய ஒப்பந்தம் நடைமுறையில் இருந்ததன் காரணமாகவும், புலிகள் தாக்குதல் முயற்சிகள் எதிலும் ஈடுபடவில்லை. ஸ்ரீலங்காப் படையினரின் கட்டளைக்குப் பணிந்து நடந்துகொண்டார்கள்.

படகில் இருந்து 17 புலி உறுப்பினர்களும், காங்கேசன்துறை கடற்படைத் தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். புலிகள் தமது பாதுகாப்பிற்கென்று கொண்டு சென்ற சில துப்பாக்கிகளையும், படகில் பொருத்தப்பட்டிருந்த இரண்டு இலகு இயந்திரத் துப்பாக்கிகளையும் தவிர, படகில் வேறு ஆயுதங்கள் எதுவும் கடத்திச் செல்லப்படவில்லை. எனவே பாரதூரமாக எதுவும் நடைபெறமாட்டாது என்ற நம்பிக்கையில்தான் புலிகள் ஸ்ரீலங்காப் படையினருடன் புறப்பட முடிவுசெய்தார்கள். அத்தோடு, காங்கேசன்துறை தளத்தில் இந்தியப்படையினரும் நிலைகொண்டிருந்ததால், தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான எதுவும் நடைபெறச் சந்தர்ப்பம் இல்லை என்றும் அவர்கள் எண்ணியிருந்தார்கள். புலிகளை அழைத்துச் சென்ற ஸ்ரீலங்கா கடற்படை அதிகாரியான ஆரியதாசவும், புலிகளுடன் மிகவும் நட்புடன்தான் நடந்துகொண்டார்.

காங்கேசன்துறை தளத்தில் புலிகள் தரையிறங்கியபோது, அங்கிருந்த ஒரு இராணுவவீரன் புலேந்திரனை அடையாளம் காணும்வரை நிலமை சுமுகமாகவே இருந்தது.

புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட தளபதி புலேந்திரன், சிங்கள மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமானவர்.

சிறிது காலத்தின் முன்னர் ஹபரனை பிரதேசத்தில் உள்ள கித்துலொட்டுவ என்ற இடத்தில், இரண்டு பஸ்களில் பயணம் செய்துகொண்டிருந்த 126 சிங்கள மக்கள் ஆயுததாரிகளினால் கொலை செய்யப்பட்டிருந்தார்கள். அந்தச் சம்பவத்திற்கு புலிகளே காரணம் என்று ஸ்ரீலங்கா அரசு கூறியிருந்ததுடன், திருகோணமலைப் பிரதேசப் பொறுப்பாளர் புலேந்திரன் தலைமையிலேயே இந்தத் தாக்குதல் நடைபெற்றதாகவும் செய்தி வெளியாகி இருந்தது. அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து புலேந்திரன் சிங்கள மக்கள் மத்தியில் மிகவும் பயத்துடனேயே நோக்கப்பட்டுவந்தார்.

காங்கேசந்துறை துறைமுகத்தில் ஸ்ரீலங்காப் படையினரால் அழைத்துவரப்பட்ட 17 விடுதலைப் புலிகள் மத்தியில் புலேந்திரனும் இருந்ததை, ஒரு சிங்களச் சிப்பாய் அடையாளம் கண்டுவிட்டார். அதன் பின்னரே, தாங்கள் கரைக்கு அழைத்துவந்த நபர்களின் பெறுமதியை ஸ்ரீலங்கா கடற்படையினர் உணர்ந்து கொண்டார்கள்.

avalam_03.jpg

கைது உத்தரவு:

செய்தி கொழும்புக்குப் பறந்தது. கொழும்பில் இருந்து கடற்படையினருக்கு ஒரு உத்தரவு வந்தது. ~உடனடியாக படகில் வந்த 17 பேரையும் கைது செய்து, ஸ்ரீலங்கா இராணுவத்தினரிடம் ஒப்படைக்கும்படி உத்தரவு வந்தது. படகில் வந்த புலி உறுப்பினர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டார்கள். ஸ்ரீலங்கா இராணுவத்தின் வடபிராந்திய துணைக் கமாண்டர் பிரிகேடியர் ஜயரட்னா (பின்னாளில் இவர் மேஜர் ஜெனரலாகப் பதவி உயர்த்தப்பட்டு, 1988 அக்டோபரில் மரணம் அடைந்தார்) புலி உறுப்பினர்கள் 17 பேரையும் தனது பொறுப்பில் கொண்டு வந்தார்.

புலிகள் உட்பட ஈழப் போராளிகள் அனைவருக்கும் ஸ்ரீலங்கா அரசினால் ஏற்கனவே பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருந்ததால், தாம் கைது செய்யப்பட்டதையோ, அல்லது தம்வசமிருந்த ஆயுதங்கள், சயனைட் குப்பிகள் என்பவை பறிமுதல் செய்யப்பட்தையோ புலிகள் ஆட்சேபிக்கவில்லை. தாங்கள் விரைவிலேயே விடுதலை செய்யப்பட்டுவிடுவோம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில், புலிகள் முரண்டுபிடிக்கவில்லை.

அதனைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா அரசிடம் இருந்து ஒரு அதிர்ச்சிகரமான உத்தரவு, பிரிகேடியர் ஜயரெட்னாவிற்கு வந்தது. ~கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளை உடனடியாகவே கொழும்புக்கு அனுப்பி வைக்கும்படியும், அவர்களைக் கொழும்புக்கு கொண்டு வருவதற்கு ஒரு விஷேட விமானம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும்| அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தியாவின் வரலாற்றிலும், ஈழத்தமிழர் வரலாற்றிலும் ஒரு பாரிய அனர்த்தம் இடம்பெற இருப்பதைக் கட்டியம் கூறுவது போன்று அந்த செய்தி அமைந்திருந்தது.

இந்தியாவின் வியட்னாம் என்று சரித்திரத்தில் குருதியினால் பொறிக்கப்பட்டுள்ள, புலிகளுடனான இந்தியாவின் யுத்தத்திற்கு வித்திட்ட அந்தச் சம்பவம், ஜே.ஆரின் விருப்பப்படியே நடைபெற்றது.

இந்த சம்பவம் பற்றி பின்நாட்களில் ஜே.ஆர். ஒரு பேட்டியில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்: நான் போடவேண்டிய குஸ்தி சண்டையை தான் போடுவதற்காக மத்தியஸ்தரான ராஜீவ் காந்தி கோதாவில் குதித்திருந்தார் என்று கிண்டலுடன் குறிப்பிட்டிருந்தார்.

புலிகளுக்கும், இந்தியாவிற்கும் இடையில் நீண்டகால விரோதத்திற்கு வித்திட்ட அந்தச் சம்பவத்தின் சுவையான, பரபரப்பான அதேவேளை மிகவும் வருந்தத்தக்க விடயங்களை அடுத்தவாரம் முதல் விரிவாகப் பார்ப்போம்.


 

இரத்த ஆறு ஓடுவதற்கு காரணமான உத்தரவு (அவலங்களின் அத்தியாயங்கள்- 71)  நிராஜ் டேவிட்

  • June 28, 2013
 ஸ்ரீலங்காக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, காங்கேசன்துறை இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 17 விடுதலைப் புலிப் போராளிகளையும், உடனடியாகவே பிரத்தியேக விமானத்தின் மூலம் கொழும்பிற்கு அனுப்பி வைக்கும்படி, பிரிகேடியர் ஜயந்த ஜெயரட்னவிற்கு கொழும்பில் இருந்து உத்தரவிடப்பட்டது.

அப்பொழுது ஸ்ரீலங்காவின் தேசிய பாதுகாப்பு அமைச்சராக இருந்த லலித் அத்துலத் முதலியே இந்த உத்தரவை பிறப்பித்திருந்தார்.அப்பொழுது இந்திய- இலங்கை ஒப்பந்த்திற்கு எதிராக தென் பகுதியில் ஜே.வி.பி.யினரால் மேற்கொள்ளப்பட்டு வந்த பாரிய பிரச்சாரத்தை முறியடிப்பதற்கு ஏதுவாக, இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள அத்துலத் முதலி எண்ணியிருந்தார்.

கைது செய்யப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களை கொழும்புக்கு கொண்டு வந்து, தொலைக்காட்சி முன்பு அவர்களை தோன்ற வைத்து மலிவான ஒரு பிரச்சாரத்தை தேடிக்கொள்ளும் திட்டத்திலேயே லலித் அத்துலத் முதலி இவ்வாறான ஒரு உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.

அக்காலத்தில் லலித் அத்துலத் முதலிக்கு சிங்கள மக்கள் மத்தியில் நல்ல மதிப்பு இருந்தது. அதுவும் ஸ்ரீலங்கா இராணுவத்தினர் வடமாராட்சியில் மேற்கொண்ட வெற்றிகரமான இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து, லலித் அத்துலத்முதலி சிங்கள மக்களின் ஒரு கதாநாயகனாகவே வலம்வந்தார்.

இந்தியப்படைகளின் வருகையைத் தொடர்ந்தே, லலித் அத்துலத் முதலியின் மவுசு கொஞ்சம் குறைய ஆரம்பித்திருந்தது.

ஜே.வி.பியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், லலித், ஜே.ஆர். போன்றவர்களை கையாலாகாதவர்கள் என்று விமர்சித்து பிரச்சாரம் செய்தும் வந்ததால், விடுதலைப் புலி முக்கியஸ்தர்கள் ஸ்ரீலங்காப் படையினரால் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமது அந்தஸ்தை சிங்கள மக்கள் முன்பு உயர்த்திக்கொள்ள அவர் தீர்மானித்திருந்தார்.

அது ஒருபுறம் இருக்க, இந்தியாவையும், புலிகளையும் மோதவிட்டு வேடிக்கை பார்ப்பதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பமாகப் புலிகள் கைது சம்பவத்தைப் பயன்படுத்திக் கொள்வது ஜே.ஆர். இன் திட்டமாக இருந்தது. அதனால் இந்தப் பிரச்சனையை லலித் அத்துலத் முதலியின் போக்கிலேயே விட்டுவிடும் முடிவுக்கு ஜே.ஆர். வந்திருந்தார்.

கைது செய்யப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களை உடனடியாக கொழும்புக்கு அனுப்பி வைக்கும்படி கடுமையான உத்தரவொன்றை லலித் அத்துலத் முதலி, பிரிகேடியர் ஜயந்த ஜெயரட்னவிற்கு அனுப்பிவைத்திருந்தார்.

புலிகள் அதிர்ச்சி:

கைது செய்யப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களை கொழும்புக்கு கொண்டு செல்லும் ஸ்ரீலங்கா இராணுவத்தினரது திட்டம் வெளியானதைத் தொடர்ந்து, விடுதலைப் புலிகளின் தலைமை அதிர்ச்சி அடைந்தது. மிகுந்த கோபமும் அடைந்தது.

காங்கேசன்துறை மற்றும் பலாலியில் நிலைகொண்டிருந்த இந்தியப் படையினருக்கு பொறுப்பாக இருந்த இந்தியப் படை உயர் அதிகாரியான ஜெனரல் ரொட்ரிகஸ் அவர்களைச் சந்தித்த விடுதலைப் புலித் தலைவர்கள், ஸ்ரீலங்கா படையினால் கைது செய்யப்பட்டுள்ள தமது உறுப்பினர்களின் பாதுகாப்பிற்கு இந்தியப் படைகளே பொறுப்பு என்று தெரிவித்தார்கள்.

ஸ்ரீலங்கா இராணுவத்தினரின் இந்த அடாவடித்தனத்திற்கு எதிராக தமது கடுமையான கண்டனத்தையும் தெரிவித்தார்கள்.

அப்பொழுது இந்தியாவின் இராஜதந்திரிகள் புலிகளுக்கு எதிராக சதி வேலைகளில் ஈடுபட்டிருந்தாலும், இந்தியப் படையின் சில அதிகாரிகள் புலிகள் மீது ஓரளவு அனுதாபம் கொண்டவர்களாகவே காணப்பட்டார்கள். பல அதிகாரிகள் புலி உறுப்பினர்களுடன் மிகவும் நெருக்கமான நட்பைக் கொண்டிருந்தார்கள்.

சில அதிகாரிகள் விடுதலைப்புலி தலைவர்களினது திருமணங்களில் கலந்து கொள்ளும் அளவிற்கு புலிகளுடன் நட்புப் பாராட்டி வந்தார்கள். ஜெனரல் ரொட்ரிகசும், அப்படியான அதிகாரிகளில் ஒருவர். புலிகள் மீது ஓரளவு அன்பும், அனுதாபமும் கொண்டவர்.

கைது செய்யப்பட்டு, ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் தடுத்துவைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலி முக்கியஸ்தர்களை மீட்டுவருவேன் என்று கூறி புறப்பட்டார் ஜெனரல் ரொட்ரிகஸ்.

ஸ்ரீலங்கா இராணுவ முகாமிற்குப் பொறுப்பாக இருந்த பிரிகேடியர் ஜயந்த ஜெயரட்னவைச் சந்தித்த இந்தியப் படை அதிகாரி, கைது செய்யப்பட்ட புலிகளை இந்தியப் படையிடம் கையளிக்கும்படி கேட்டுக்கொண்டார். ஏற்கனவே அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டினார்.

அதற்குப் பதிலளித்த பிரிகேடியர் ஜயந்த ஜெயரட்ன, ~ஏற்கனவே புரிந்திருந்த குற்றச் செயல்களுக்கே பொது மன்னிப்பு வழங்கப்பட்டது என்றும், புதிதாக இவர்கள் புரிந்துள்ள ஆயுதக் கடத்தல் குற்றத்திற்கு அந்தப் பொது மன்னிப்பு செல்லுபடியாகாது என்றும் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலி முக்கியஸ்தர்களை கொழும்புக்கு கொண்டு செல்வதால் ஏற்படப் போகும் விளைவுகள் பற்றி எடுத்துரைத்த ரொட்ரிகஸ், இதனை எப்படியாவது தடுத்து நிறுத்துமாறு ஸ்ரீலங்கா படை அதிகாரியை கேட்டுக்கொண்டார்.

அதற்கு பிரிகேடியர் ஜயந்த ஜெயரட்ன, ~தான் ஒரு இராணுவ அதிகாரி என்றும் தனக்கு இடப்படும் கட்டளைகளுக்கு கீழ்ப்படிவதே தனது கடமை என்றும் தெரிவித்து, அவருக்கு கொழும்பில் இருந்து கிடைக்கப்பட்டிருந்த கடுமையான உத்தரவு பற்றியும் தெரிவித்தார்.

இறுதி உத்தரவு:

இந்த இரண்டு அதிகாரிகளிடையேயும் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றதாக, புலிகள்-இந்திய யுத்தம் பற்றி பின்நாட்களில் ஆய்வுகள் மேற்கொண்ட சுஜீஸ்வர சேனாதீர என்ற சிங்கள எழுத்தாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியப் படை அதிகாரி ரொட்ரிகஸ் இற்கும் ஸ்ரீலங்காப் படை அதிகாரி பிரிகேடியர் ஜயந்த ஜெயரட்னவிற்கும் இடையில் மிகவும் கடுமையான வார்த்தைப் பிரயோகங்கள் பரிமாறப்பட்டன.

ஒரு சந்தர்ப்பத்தில் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இந்தியப் படை அதிகாரி இவ்வாறு தெரிவித்திருந்தார்:

நான் விடுதலைப் புலி உறுப்பினர்களுடன் உங்களது விமானம் செல்வதற்கு அனுமதிக்கமாட்டேன். இந்தியப்படையின் கவச வாகனங்களை விமான ஓடு தளத்தில் நிறுத்திவைப்பேன் என்று எச்சரித்தார்.

அதற்கு பதிலளித்த பிரிகேடியர் ஜயந்த ஜெயரட்ன, ~அப்படி நீங்கள் நடந்து கொண்டால், அந்த கவச வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தும்படி நான் எனது படைவீரர்களுக்கு உத்தரவிட வேண்டி இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.

இறுதியில், தனது குரலை தாழ்த்திய இந்திய அதிகாரி ரொட்ரிகஸ், ஒரு வேண்டுகோளை வினயமாக விடுத்தார்.

புலி உறுப்பினர்களை விமானத்தில் ஏற்றி அனுப்புவதை 12 மணி நேரம் தாமதிக்கும்படியும், புதுடில்லியில் இருக்கும் இந்தியத் தூதர் தீட்ஷித் மறுநாள் கொழும்பு வந்ததும், இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு கண்டுவிடலாம் என்றும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, பிரிகேடியர் ஜயந்த ஜெயரட்ன கொழும்பை மீண்டும் தொடர்பு கொண்டு, நிலைமையை விளக்கினார்.

கொழும்பில் இருந்து உறுதியான ஒரு பதில் வந்தது.

இன்னும் இரண்டு மணி நேரத்திற்குள் கைதிகளை விமானத்தில் ஏற்றி அனுப்புவதற்கு உங்களால் முடியாவிட்டால், உங்களது பொறுப்புக்களை உங்களுக்கு அடுத்ததாக உள்ள அதிகாரியிடம் ஒப்படைத்து விட்டு, கைது செய்யப்பட்ட நிலையில் கொழும்புக்கு வந்து சேருங்கள் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இலங்கையில் ஒரு இரத்த ஆறு ஓடுவதற்கு அந்த உத்தரவு காரணமாக இருந்தது.

தொடரும்…


 

சயனைட் குப்பிகளை அனுப்பி வைக்கும்படி பிரபாகரனிடம் கோரிய தளபதிகள் (அவலங்களின் அத்தியாயங்கள்- 72) – நிராஜ் டேவிட்

  • July 6, 2013
 
14569_520883221262905_1272812803_n-150x1குமரப்பா வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர். விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர். எண்பதுகளின் ஆரம்பத்தில் அயர்லாந்து நாட்டில் கடற்-பொறியியல் கற்கைகளை மேற்கொண்டவர். ஐரோப்பா முழுவதும் வலம் வந்தவர். மேற்குலக நாடொன்றிலேயே நிரந்தர வதிவிட வசதி பெற்று தனது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் பலவற்றை பெற்றிருந்தவர்.

70களில் ஈழ விடுதலை தொடர்பான சிந்தனைகளை தனதாகக் கொண்டு செயற்பட ஆரம்பித்திருந்த குமரப்பா, 1983ம் ஆண்டு இலங்கையில் இடம் பெற்ற இனப்படுகொலைகளைத் தொடர்ந்து, ஈழ விடுதலைப் போராட்டத்தில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக்கொண்டிருந்தார்.இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகளை எடுத்துக்கொண்டு யாழ்ப்பாணம் வந்தடைந்த குமரப்பா, மட்டக்களப்பு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

மட்டக்களப்பு அம்பிளாந்துறை மற்றும் படுவான்கரை பிரதேசத்தில்; தங்கியிருந்து, மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் இயக்க நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்திருந்தார்.

மட்டக்களப்பைச் சேர்ந்த ரஜனி என்பவரை காதலித்து மணம் முடித்தார். இலங்கை-இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதைத் தொர்ந்து யாழ்ப்பாணத்தில் இவரது திருமணம் நடைபெற்றது.

இவரது திருமணத்திற்கு முதற் சாட்சியாக அன்டன் பாலசிங்கம் கையொப்பமிட்டிருந்திருந்தார். இவரது திருமணச் சடங்கில் பல இந்தியப் படை உயரதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

குமரப்பாவின் திருமணம் நடைபெறுவதற்கு சில வாரங்களுக்கு முன்னர்தான் புலேந்திரனின் திருமணம் நடைபெற்றிருந்தது.

தமிழ் நாடு திருப்போரூர் முருகன் கோவிலில் சுபா என்ற பெண்ணை அவர் மணம் முடித்திருந்தார். (இந்த தமிழ்நாடு திருப்போரூர் முருகன் கோவிலில்தான் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுக்கும், மதிவதனி அவர்களுக்கும் 01.10.1984 அன்று திருமணம் நடைபெற்றது.)

இந்த இரண்டு தளபதிகளுமே திருமணம் முடித்து இரண்டு மாதங்களைக்கூட கடந்துவிடாத நிலையில், இப்படியான ஒரு சோதனையைச் சந்தித்திருந்தார்கள்.

குமரப்பா புலேந்திரன் உட்பட கைது செய்யப்பட்ட 17 விடுதலைப் புலி உறுப்பினர்களையும் சந்திக்க, புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் புறப்பட்டார்.

கைதுசெய்யப்பட்டிருந்த புலிகள் அமைப்பின் இரண்டு தளபதிகளும் இந்தியப் படை அதிகாரிகளுக்கு நன்கு பரிட்சயமானவர்கள் என்பதால், உடனடியாக அவர்களுக்கு ஏதாவது ஆபத்துக்கள் இடம்பெற்றுவிடச் சந்தர்ப்பம் எதுவும் இல்லை என்ற எண்ணத்துடன், ஓரளவு ஆசுவாசப்பட்ட மனதுடன்தான் அவர்களைப் பார்க்க திரு அன்டன் பாலசிங்கம் புறப்பட்டார்.

ஆனால் நிலமை நினைத்த அளவிற்கு சுமுகமாக இல்லை என்பதை அங்கு அவர் சென்றதும் உணர்ந்துகொண்டார்.

துப்பாக்கிகளை நீட்டியபடி சிங்கள இராணுவம் மூர்க்கமாகச் சூழ்ந்து நிற்க, விடுதலைப் புலிகள் அமைப்பின் மறவர்கள் குற்றவாளிகள் போன்று வைக்கப்பட்டிருந்தது, திரு அன்டன் பாலசிங்கத்தை மிகவும் கலவரப்படுத்தியிருந்தது.

விடுதலைப் புலிப் போராளிகளை விசாரணைக்காக உடனடியாக கொழும்புக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்ற ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சரின் உத்தரவு பற்றி, பாலசிங்கத்திற்கு எடுத்துக் கூறப்பட்டது.

மிகவும் சினமடைந்த பாலசிங்கம், இது பற்றி புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு அறிவித்தார்.

புலிகளின் தலைவரது ஆலோசனையின் பெயரில் அவர் இந்தியத் தூதுவர் ஜே.என்.தீட்ஷித்தைத் தொடர்பு கொண்டு, தீட்ஷித் தனது இராஜதந்திர வல்லாண்மையைப் பயன்படுத்தி, கைதுசெய்யப்பட்டிருக்கும் 17 போராளிகளையும் விடுதலை செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

எமது போராளிகளில் சிலர் மூத்த தளபதிகளாகவும், போர்க்கள நாயகர்களாகவும் இருப்பதால், அவர்களுக்கு ஏதாவது தீங்கு நேரும் பட்சத்தில், விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்றும் தீட்ஷித்திற்கு எச்சரிக்கை விடுத்தார்.

போராளிகளை விடுவிக்க தம்மாலான அனைத்து முயற்சிகளையும் செய்வதாக, தீட்ஷித் பாலசிங்கம் அவர்களுக்கு உறுதிமொழி அளித்தார்.

ஸ்ரீலங்கா இராணுவத்தின் விசாரணைகள்:

விசாரணை செய்வதற்காகவே விடுதலைப் புலி உறுப்பினர்களை தாம் கொழும்புக்குக் கொண்டு செல்லப்போவதாக ஸ்ரீலங்கா அரசு அறிவித்திருந்தது.

ஸ்ரீலங்கா அரசின் பாஷையில் விசாரணை  என்ற வார்த்தைக்கு, சித்திரவதை என்றுதான் அர்த்தம்.

ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலியின் நேரடி கண்காணிப்பில் செயற்பட்டு வந்த ஸ்ரீலங்காவின் புலனாய்வுப் பிரிவினரின் சித்திரவதைகள் அக்காலத்தில் தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரசித்தம்.

வகைவகையான சித்திரவதை முறைகளை, நுணுக்கமாக மேற்கொள்ளுவதில் ஸ்ரீலங்காப் புலனாய்வுப் பிரிவினர் மிகவும் கைதேர்ந்தவர்கள்.

ஸ்ரீலங்காப் புலனாய்வு பிரிவினர் அக்காலங்களில் தமிழ் இளைஞர்கள் மீது மேற்கொண்டிருந்த சித்திரவதை விசாரணை முறைகள் பற்றி எழுதுவதானால், இன்றும் ஐந்து அத்தியாயங்கள் அதற்கென தனியாக ஒதுக்கவேண்டும்.

கைது செய்யப்படும் தமிழ் இளைஞர்களை சித்திரவதை செய்து, விசாரித்து, அவர்களை தொலைக் காட்சியின் முன்பு தோன்றச் செய்து, தமிழ் இயக்கங்கள் பற்றிய மாற்றுக் கருத்துக்களை அவர்கள் வாயாலேயே கூறவைக்கும் நடைமுறையை அக்காலத்தில் ஸ்ரீலங்காப் படையினர் கடைப்பிடித்து வந்தார்கள்.

மிகவும் மோசமான சித்திரவதையை அனுபவித்த தமிழ் இளைஞர்கள், வலி தாங்க முடியாமல், ஸ்ரீலங்கா புலனாய்வுப் பிரிவனர் கூறுவதையெல்லாம் தொலைக்காட்சி முன்பு ஒப்புவிப்பார்கள். இந்த தொலைக் காட்சி ஒலிப்பதிவு பின்னர் ரூபவாகினி ஊடாக காண்பிக்கப்படும்.

தமிழ் இயக்கங்களுக்கு எதிரான பிரச்சாரமாகவும், சிங்கள மக்களைத் திருப்திப்படுத்தும் நோக்கத்துடனும், இதுபோன்ற தொலைக்காட்சி ஒளிபரப்புக்களை ஸ்ரீலங்கா அரசு பயன்படுத்தி வந்தது.

கைதுசெய்யப்பட்ட 17 விடுதலைப் புலி உறுப்பினர்களையும் கொழும்புக்கு அழைத்துச் செல்ல லலித் அத்துலத்முதலி விரும்பியதற்கு இதுவே பிரதான காரணம். விசாரணை என்ற பெயரில் இந்தப் போராளிகளைச் சித்தரவதை செய்து, தொலைக்காட்சி முன்பு அவர்களை நிறுத்தி, புலிகளுக்கு அவமானத்தை ஏற்படுத்தக்கூடிய எதையாவது அவர்கள் வாயால் கூறவைப்பதே, அத்துலத் முதலியின் நோக்கமாக இருந்தது.

கைதுசெய்யப்பட்ட நிலையில் இருந்த விடுதலைப் புலி உறுப்பினர்களும் இதனை நன்கு உணர்ந்திருந்தார்கள்.

தம்மைச் சந்திக்க வந்த அன்டன் பாலசிங்கம் அவர்களிடம் தமது தீர்மானத்தைத் தெரிவித்தார்கள். பலவிதமான விவாதங்களின் பின்னர், தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு அன்டன் பாலசிங்கம் ஊடாக அவர்கள் சில கடிதங்களை அனுப்பிவைத்தார்கள்.

போராளிகள் அனுப்பிவைத்த கடிதங்கள்:

அவர்களது கடிதங்களைப் படித்த தலைவர் வே.பிரபாகரன் மிகுந்த அதிர்ச்சி அடைந்தார். கடுஞ்சீற்றமும் கொண்டார்.

ஏகமனதாகவும், இரகசியமாகவும் அந்தப் போராளிகள் எடுத்துக் கொண்டிருந்த முடிவை, அவர்களது கடிதங்கள் புலிகளின் தலைவருக்கு எடுத்துக் கூறியிருந்தன.

விசாரணை என்ற போர்வையில் காட்டுமிராண்டித்தனமான சித்திரவதைக்கும், அனேகமாக மரணத்திற்கும், சிங்கள அரசால் தாம் உள்ளாக்கப்படுவதைக் காட்டிலும், விடுதலைப் புலிகளின் மரபுப்படி தமது உயிரை தாமே மாய்த்துக்கொள்ள தாம் விரும்புவதாக புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு அந்தக் கடிதங்களின் மூலம் அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.

சிங்கள இனவாத அரசின் நிர்ப்பந்தங்களுக்கு பணிந்து கொடுத்தால், அது தங்கள் எதிரிக்கு எதிராக நடாத்தும் தற்காப்புப் போரின் நீண்ட, உறுதியான வரலாற்றைக் கறைபடுத்திவிடும் என்றும், அதற்கு நேரெதிராக, கௌரவமான மரணத்தைத் தழுவத் தாம் விரும்புவதாகவும், அக்கடிதத்தில் அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.

சயனைட் குப்பிகளை அனுப்பி வைக்கும்படியும், அக்கடிதத்தில் அவர்கள் தலைவர் பிரபாகரன் அவர்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்கள்.

தொடரும்..


 

விடுதலைப் புலிகளுக்கு இந்தியா செய்த மிகப் பெரிய துரோகம் (அவலங்களின் அத்தியாயங்கள்- 73) – நிராஜ் டேவிட்

  • July 10, 2013

 விடுதலைப் புலிகளுக்கும் இந்தியாவிற்கும் இடையில் இருந்து வந்த பூசல்கள் வெளிப்படையாக வெடிப்பதற்கும், இந்தியா தனது சரித்திரத்தில் என்றுமே மறக்கமுடியாத ஒரு அனுபவத்தைப் பெற்றுக்கொள்வதற்கும் காரணமாக இருந்த சம்பவம் என்று சரித்திரவியலாளர்களால் குறிப்பிடப்படுகின்ற அந்தப் ஷபடகுச் சம்பவம்|, உண்மையிலேயே இந்தியாவின் ஆசீர்வாதத்துடன்தான் நடைபெற்றிருந்தது.

குமரப்பா, புலேந்திரன் உட்பட 17 விடுதலைப் புலிகள் ஸ்ரீலங்காவின் கடற்படையால் கைதுசெய்யப்படுவதற்கும், இறுதியில் அவர்கள் மரணத்தைத் தழுவிக் கொள்வதற்கும், ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி, ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன போன்றவர்களே காரணமென்று என்னதான் குற்றம் சுமத்தினாலும், அடிப்படையில் இந்தச் சம்பவம் தொடர்பான அத்தனை அசம்பாவிதங்களுக்கும் இந்தியத் தரப்பினரே பிரதான காரணமாக இருந்துள்ளார்கள் என்பதுதான் உண்மை.

முதலாவதாக 3.10.1987ம் திகதி அன்று பருத்தித்துறைக் கடலில் புலிகளின் படகொன்று ஆயுதங்களைக் கடத்துவதாக ஸ்ரீலங்காவின் கடற்படையினருக்கு இந்தியாவே தகவலை வழங்கியிருந்தது.

ஸ்ரீலங்கா கடற்படை கைப்பற்றிய படகில் இருந்த விடுதலைப் புலி தளபதிகள் தமது சொந்தப் பாதுகாப்புக்குத் தேவையான சிறிய ஆயுதங்களைத் தவிர, வேறு ஆயுதங்கள் எதுவும் அந்தப் படகில் கடத்தப்படவில்லை என்பதை இந்தியா வெளியிடவும் இல்லை, அதைக் காரணம் காண்பித்து கைதான புலிகளை விடுவிக்க முயற்சிக்கவும் இல்லை.

கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளை கொழும்புக்கு கொண்டு செல்லும் ஸ்ரீலங்காப் படைகளின் முயற்சிகளை இந்தியா தனது இராஜதந்திர அழுத்தங்களை பிரயோகித்தோ அல்லது தனது படைபலத்தைப் பயன்படுத்தியோ இலகுவாகத் தடுத்திருக்கமுடியும். ஆனால் இந்தியா அதனைத் செய்வதில் அக்கறை காண்பிக்கவில்லை.

இந்தியாவின் இந்தச் செய்கையானது, இந்தியாவை நம்பி தமது அயுதங்களை ஒப்படைத்திருந்த விடுதலைப் புலிகளுக்கு இந்தியா இழைத்த மிகப் பெரிய துரோகம் என்றே கூறவேண்டும்.

இந்தியப்படை அதிகாரியின் ஆதங்கம்:

ஸ்ரீலங்காப் படைகளின் காவலில் வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளை விடுவிப்பதில், இந்தியப் படையினருக்கு இடையேயும், இந்திய அதிகாரிகளுக்கு இடையேயும் பாரிய குழருபடிகள் காணப்பட்ட விடயம் பின்நாட்களிலேயே வெளிவந்தன. விடுதலைப் புலிகளுக்கு ஒரு பாடம் படிப்பிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் செயற்பட்ட சில இந்திய அதிகாரிகளும், இத்தியாவின் அரசியல் உயர்மட்டமும், புலிகள் கைதுசெய்யப்பட்டு கொழும்புக்குக் கொண்டுசெல்லப்பட இருந்த அந்தச் சந்தர்ப்பத்தை ஒருவகையில் தமது எண்ணங்களுக்குச்; சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளத் தலைப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

இலங்கைக்கு வந்த இந்திய அமைதிகாக்கும் படைக்கு முதன்முதலாக தலமை தாங்கிவந்தவர், இந்தியப்படை உயரதிகாரி மேஜர் ஜெனரல் ஹரிகிரத் சிங் அவர்கள்.

இந்தப் ஷபடகுச் சம்பவத்தில்| நேரடியாக பங்குபற்றியவரும் அவரே. இராணுவ சேவையில் இருந்து அவர் இளைப்பாறிய பின்னர், ஜோசி ஜோசப் என்ற பிரபல இந்திய ஊடகவியலாளருக்கு அவர் ஒரு செவ்வியை வழங்கியிருந்தார். அந்தச் செவ்வியில், புலேந்திரன், குமரப்பா போன்றவர்களின் மரணம் தொடர்பாக, இந்தியா கடைப்பிடித்திருந்த அனுகுமுறைகள் பற்றி வெளிப்படுத்தியிருந்தார்.

இணையத் தளம் ஒன்றில் வெளியான அவரது செவ்வி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பிட்ட அந்தப் படகுச் சம்பவத்தில் இந்தியா விட்ட தவறுகள் பல அவரது செவ்வியில் வெளிவந்தன. இந்தியாவின் உண்மையான முகத்தையும், ஈழத்தமிழருக்கு எதிராக இந்தியா செய்த துரோகங்களையும் வெளிப்படுத்துவதாக அந்தச் செவ்வி அமைந்திருந்தது.

அவர் தனது செவ்வியில் இவ்வாறு தெரிவித்திருந்தார்:

ஷஷஎன்னைச் சந்தித்த மாத்தையா ஒரு விடயத்தை உறுதியாகத் தெரிவித்தார். ஷஷஜெனரல், எப்படியென்றாலும் ஸ்ரீலங்காப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ள எமது உறுப்பினர்கள் விடுதலை செய்யப்படவேண்டும். என்ன விலை கொடுத்தாவது அவர்கள் விடுதலை செய்யப்படவேண்டும். இந்திய அமைதிகாக்கும் படை எங்களை காப்பாற்றுவதற்காகவே இங்கு வந்துள்ளது. எனவே எமது உறுப்பினர் கொழும்பு கொண்டு செல்லப்படுவதைத் தடுத்து நிறுத்தும் தார்மீகக் கடமை இந்தியப்படைகளுக்கே உள்ளது. கொழும்புக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டால் அவர்கள் சித்திரவதை செய்யப்படுவார்கள்|| என்று மாத்தையா என்னிடம் தெரிவித்தார்.

அந்த நேரத்தில் அந்த இடத்தில் நல்லதொரு ஷதமாஷ்| நிலமை காணப்பட்டது. கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள்- அவர்களைச் சூழ இந்தியப்படைகள்ளூ அவர்களைச் சூழ்ந்து ஸ்ரீலங்காப் படைகள்ளூ மீண்டும் ஸ்ரீலங்காப் படைகளைச் சூழ இந்தியப்படைகள்ளூ இவை அனைவரையும் சூழ ஸ்ரீலங்கா இராணுவத்தின் கவச வாகனங்கள்.

இந்த இடத்தில் ஸ்ரீலங்காப் படைகளுக்கும், இந்தியப் படைகளுக்கும் இடையில் ஒரு சண்டை மூழுவதற்கான ஏதுநிலையும் உருவாகி இருந்தது.

ஸ்ரீலங்கா படைகளுக்கு பொறுப்பாக இருந்த பிரிகேட் கொமாண்டருக்கு கடுமையான உத்தரவு அவரது மேலிடத்தினால் வழங்கப்பட்டிருந்தது. கைதிகளை கொழும்புக்கு அழைத்துவர முடியாவிட்டால் அந்த அதிகாரியை வேலையை ராஜினாமாச் செய்துவிட்டு கொழும்புக்கு திரும்பும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அதேவேளை எனக்கும் எனது மேலிடத்தினால் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. திருகோணமலைக்குச் சென்று மேலதிகமான ஸ்ரீலங்காவின் துருப்புக்கள் யாழ்பாணத்திற்கு அனுப்பப்படுவதைத் தடுக்கும்படி எனக்கு பணிப்புரை கிடைத்திருந்தது.

அதன்படி நான் திருகோணமலையை அடைந்து திருகோணமலை விமான நிலயத்தையும், கட்டுப்பாட்டுக் கோபுரத்தையும் எமது கொமாண்டோக்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தோம். இது ஸ்ரீலங்கா படையினருக்கும் எங்களுக்கும் இடையிலான வேற்றுமை உணர்வை மேலும் அதிகரிக்கும்படியாக இருந்தது.

இந்த நேரத்தில்; விடுமுறையில் புதுடில்லி சென்றிருந்த இந்தியத் தூதுவர் தீட்சித் அவர்களை, உடனடியாக கொழும்பு திரும்பி, கைதுசெய்யப்பட்டிருந்த விடுதலைப் புலி உறுப்பினர்களது விடுதலை விடயத்தில் நடவடிக்கை எடுக்கும்படி கோரி இருந்தேன்.

திபீந்தர் சிங் அவர்களும் கொழும்புக்குச் சென்று அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார். ஆனாலும் இதுபோன்றதொரு விடயத்தைக் கையாளும் அளவிற்கு அவர் ஒரு உறுதியான மனிதர் கிடையாது என்பது எனக்குத் தெரியும்.

நான் திருகோணமலை விமானத் தளத்தை பாதுகாக்கும் கடமைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தேன். கைதுசெய்யப்பட்ட புலி உறுப்பினர்களை விமானத்தின் மூலம் கொழும்புக்குக் கொண்டு செல்ல இருப்பதைத் தடுத்து நிறுத்துவதற்காக எமது படைகள் யாழ் விமானப் பாதையிலும் நிலைகொண்டிருந்தார்கள்.

திபீந்தர் சிங், தீட்சித் உடன் வேறு சில உயரதிகாரிகளும் திருகோணமலை விமானத்தளத்தில் வந்திறங்கினார்கள். அவர்களால் ஜே.ஆர். ஜெயவர்த்தனாவை சமாளிக்கமுடியவில்லை என்ற விடயத்தை என்னிடம் தெரிவித்தார்கள். அவர்களுடன் ஒப்பிடும் போது ஜெயவர்த்தனா மிகவும் கெட்டிக்காரராகவே இருந்தார்.

புலிகளை ஒப்படைத்துவிடுங்கள்

மறுநாள் அங்கு வந்த திபீந்தர் சிங் எனக்கு ஒரு உத்தரவை பிறப்பித்தார். ஷஷபுலிகளை இலங்கைப் படையினரிடம் ஒப்படைத்துவிடுங்கள். அவர்கள் விரும்பிய எதனையாவது செய்து கொள்ளட்டும். தற்பொழுது நாங்கள் ஸ்ரீலங்கா அதிகாரிகள் சிலருடன் சென்று தேனீர் அருந்தலாம்|| என்று என்னை அழைத்தார்.

அவ்வாறே அந்த ஸ்ரீலங்காவின் படைத்தளபதிகளுடன் சென்று நாங்கள் தேனீர் அருந்தினோம்.

2 மணியளவில் புது டில்லியில் இருந்து எனக்கு ஒரு செய்தி கிடைத்தது. ஷஷஅமைதிகாக்கும் படை அதிகாரி எதற்காக ஸ்ரீலங்காவின் அரசியல் யாப்பு தொடர்பான விடயங்களில் தலையிட்டுக்கொண்டிருக்கின்றார்? என்று அந்தச் செய்தியில் கேட்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து மெட்ராஸில் உள்ள எமது தலைமைக் காரியாலயத்தில் இருந்து எனக்கு மற்றொரு உத்தரவு வந்தது. ஷஷயாழ்ப்பானத்தில் கைதிகள் விடயத்தில் நீங்கள் மேற்கொண்டுள்ள முற்றுகையை விலக்கிக் கொள்ளுங்கள். ஸ்ரீலங்காப் படைகள் அவர்கள் இஷ்டப்படி எதைவேண்டுமானாலும் செய்துகொள்ளட்டும். என்பதே அந்த உத்தரவு.

எனக்கு மிகவும் குழப்பமாக இருந்தது. நான் திருகோண மலையில் இருந்தேன். எனது சக அதிகாரிகள் அனைவரும் யாழ்ப்பாணத்தில் இருந்தார்கள். அங்கு கைதுசெய்யப்பட்ட நிலையில் இருந்த புலி உறுப்பினர்களைக் காப்பாற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நாம் ஏற்கனவே செய்திருந்தோம்.

குமரப்பா, புலேந்திரன் இருவருமே எனக்கு நன்கு பரிட்சயமானவர்கள். புலேந்திரன் பலதடவைகள் என்னை தனது வாகனத்தில் அழைத்துச்சென்று யாழ்பாணத்தை சுற்றிக்காண்பித்திருந்தார். மிகவும் அன்புடன் பழகக்கூடியவர். இவர்கள் கைதுசெய்யப்பட்டு இந்தியப்படையினரின் பாதுகாப்புடன் இருக்கும் போது என்னைச் சந்தித்த பிரிகேடியர் செனிவரட்ன, புலேந்திரனை மட்டுமாவது தன்னிடம் ஒப்படைக்கும்படி கேட்டிருந்தார். கொலைக் குற்றச்சாட்டுகளுக்காக புலேந்திரன் ஸ்ரீலங்காப் படையினரால் மிகவும் வேண்டப்பட்ட நபர். அதற்கு நான் செனிவரெட்னவிடம், புலேந்திரனை உங்களிடம் ஒப்படைக்க முடியாது. புலேந்திரனை நான் விரைவில் எனது ஜீப்பில் எனது அருகில் அமர்த்தி அழைத்துச் செல்வதை நீங்கள் பார்ப்பீர்கள் என்று தெரிவித்திருந்தேன்.

ஆனால் எனது தலைமைக் கரியாலயத்தில் இருந்து எனக்குக் கிடைக்கப்பெற்ற உத்தரவு என்னை மிகவும் அதிர்ச்சியடைய வைத்தது.

இறுதியில் எனக்கு மேலிடத்தில் இருந்து கிடைத்த உத்தரவுப்படி நாங்கள் எங்கள் படைகள் அனைத்தையும் விலக்கினோம். தமது கடமைகளை ஸ்ரீலங்கா படையினர் பொறுப்பேற்றுக்கொண்டார்கள். அதனைத் தொடர்ந்தே புலிகள் சயனைட்டை உட்கொண்டார்கள். இந்தியாவிற்கும் புலிகளுக்கும் இடையேயான புரிந்துணர்வில் மிகவும் பிளவை ஏற்படுத்திய சம்பவமாக இது மாறி இருந்தது. அமைதிகாக்கவெனச் சென்ற எம்மால் அனியாயமாகப் பறிக்கப்பட்ட அந்த இளம் உயிர்களைக் காப்பாற்றமுடியாமல் போயிருந்தது. அதற்கு தீட்சித் அவர்களே முழுப் பொறுப்பையும் ஏற்கவேண்டும். என்னைப் பொறுத்தவரையில் அந்த புலி உறுப்பினர்களைக் காப்பாற்றுவது ஒரு பெரிய விடயமாக இருக்கவில்லை. சில கவச வாகனங்களை வைத்தே அந்தப் போராளிகளை என்னால் மீட்டிருக்க முடியும். ஸ்ரீலங்காப் படைகளால் அதனைப் பார்த்துக்கொண்டிருப்பதைத் தவிர வேறு எதுவும் செய்திருக்க முடியாது. இத்தனை பிரச்சினைகள் ஏற்படாமல் அந்த நிலமையை சுமுகமாக்கி இருக்கமுடியும். ஆனால் அதனைச் செய்வதற்கு எனக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதற்கான முழுப் பொறுப்பையும், இந்திய இராஜதந்திரிகளும், இந்திய இராணுவத் தலைமையகமுமே ஏற்கவேண்டும்.

குறிப்பாக இந்தியத் தூதுவர் தீட்சித்தே இந்த அனர்த்தத்திற்குப் பிரதான காரணம் என்று நான் கூறுவேன். இலங்கைப் பிரச்சினையில் ராஜீவ் காந்தியை வழி நடத்தியவர் தீட்சித்தான். அவர் நினைத்திருந்தால் நிச்சயம் இந்தப் போராளிகளைக் காப்பாற்றி அனர்த்தங்களைத் தடுத்திருக்கமுடியும். அவரது ஆனவமே அனைத்தும் அனர்த்தமாக மாறக் காரணமாக அமைந்திருந்தது.||

இவ்வாறு இந்தியப்படை உயரதிகாரி மேஜர் ஜெனரல் ஹரிகிரத் சிங் தனது செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.

தொடரும்…


 தலைவர் பிரபாகரன் கொடுத்த சயனைட் (அவலங்களின் அத்தியாயங்கள்- 74) – நிராஜ் டேவிட்

  • July 17, 2013

கைது செய்யப்பட்டிருந்த 17 விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கும் இந்தியப்படையினர் அதுவரை வழங்கிவந்த பாதுகாப்பை உடனடியாக விலக்கி;கொள்ளுமாறு புது டில்லி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, இந்தியப் படை ஜவான்கள் அவ்விடத்தை விட்டு அகன்றிருந்தார்கள்.

புலி உறுப்பினர்களின் பாதுகாப்பைப் பொறுப்பேற்ற ஸ்ரீலங்காப் படையினர், அவர்களை உடனடியாகக் கொழும்புக்கு கொண்டு செல்லும் முயற்சிகளில் ஈடுபட ஆரம்பித்தார்கள்.

விமானத்தை தயார் நிலையில் வைத்துவிட்டு, புலி உறுப்பினர்களை அழைத்துச் செல்ல விரைந்த ஸ்ரீலங்காப் படை உயரதிகாரி பிரிகேடியர் ஜயரெட்னவிற்கு அங்கு அதிர்ச்சி காத்திருந்தது. கைதுசெய்யப்பட்டிருந்த 17 புலி உறுப்பினர்களும் தமது கைகளில் ஷசயனைட்| குப்பிகளை வைத்திருந்தார்கள். தாம் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டால், தாம் ஷசயனைட்டை| உட்கொள்ளப்போவதாக அவர்கள் தெரிவித்தார்கள்.

பிரிகேடியருக்கு இது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

ஷபுலிகளின் கைகளில் திடீரென்று எங்கிருந்து ஷசயனைட்| குப்பிகள் முளைத்தன என்பது பிரிகேடியருக்கு புரியாமல் இருந்தது.

புலி உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்ட போது அவர்களிடம் இருந்த ஆயுதங்கள், ஷசயனைட்டுக்கள்| என்பன படையினரால் அகற்றப்பட்டிருந்தன. அப்படி இருக்க தற்பொழுது புலிகள் எங்கிருந்த இந்த சயனைட்டுக்களைப் பெற்றிருந்தார்கள் என்பது, இலங்கைப் படை அதிகாரிக்கு விடை காண முடியாத கேள்வியாகவே இருந்தது.

பிரபாகரன் கொடுத்த சயனைட்

இந்தப் போரளிகளுக்கான ஷசயனைட்| குப்பிகளை விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களே அனுப்பிவைத்திருந்தார்.

தாம் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டு, எதிரியினால் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்படுவதை விட, புலிகளின் மரபுப்படி தமது உயிரை தாமே மாய்த்துக் கொள்ள அனுமதிக்குமாறு, கைதுசெய்யப்பட்ட நிலையில் இருந்த 17 விடுதலைப் புலி உறுப்பிர்களும்; புலிகளின் தலைவரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்கள். தமது விருப்பத்தை கடிதங்கள் மூலம் பிரபாகரன் அவர்களிடம் அனுப்பிவைத்திருந்தார்கள். அன்டன் பாலசிங்கம் கொண்டுவந்திருந்த அவர்களது கடிதங்களைப் படித்த புலிகளின் தலைவர் பெரும் சினம் கொண்டார்.

தடுப்புக் காவலில் உள்ள தமது போராளிகளின் இறுதி விருப்பத்தை நிறைவேற்றுவது தனது கடமை என்று அவர் உணர்ந்தார்.

முக்கிய தளபதிகளுடன் கலந்தாலேசித்துவிட்டு ஒரு முடிவிற்கு வந்தார்.

தனது கழுத்தில் இருந்த ஷசயனைட்| குப்பியைக் களட்டி மாத்தையாவிடம் கொடுத்தார். அவரைத் தொடர்ந்து அங்கு இருந்த மற்றய தளபதிகளும் தங்கள் கழுத்தில் இருந்த சயனைட் குப்பிகளை களட்டிக் கொடுத்தார்கள். கனத்த மனங்களுடனேயே அவர்கள் இதனைச் செய்தார்கள்.

அந்த ஷசயனைட்| குப்பிகளை, மாத்தையாவும், அன்டன் பாலசிங்கமும் தமது கழுத்துக்களில் மாட்டிக்கொண்டு, கைதுசெய்யப்பட்டிருந்த 17 விடுதலைப் புலி உறுப்பினர்களையும் சந்திக்கப் புறப்பட்டார்கள். தயக்கத்தோடும், மனமின்றியும் அவர்கள் புறப்பட்டுச் சென்றார்கள்.

கைது செய்யப்பட்ட நிலையில் இருந்த புலி உறுப்பினர்களைச் சந்தித்த அவர்கள் ஷசயனைட்டுக்களை| இரகசியமாக ஒப்படைத்தார்கள்.

குமரப்பா தனது மனைவிக்கு கூறும்படி சில செய்திகளை தெரிவித்தார்.

குமரப்பா திருமணம் முடித்த ஒரு மாதமே ஆகியிருந்தது.

புலேந்திரனும் தனது மனைவிக்கு சில செய்திகளை தெரிவிக்கும்படி கூறியிருந்தார்.

திருமணமாகி இரண்டு சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு தந்தையாகி இருந்த கரன், தனது பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய ஆவலை வெளியிட்டார்.

அன்டன் பாலசிங்கமும், மாத்தையாவும் அந்த 17 போராளிகளையும் விட்டுப் பிரிய மனமில்லாது, அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்கள்.

பாயத் தயாரான பிரிகேடியர்:

1987ம் ஆண்டு அக்டோபர் 5ம் திகதி, ஸ்ரீலங்காப் படை அதிகாரி பிரிகேடியர் ஜெயரெட்ன, பலாலி தளத்தில் இருந்த தனது படைவீரர்களை திரட்டினார். அவர்களுள் நல்ல திடகாத்திரமாக இருந்த 34 படைவீரர்களை அவர் தேர்ந்தெடுத்தார்.

புலிகள் ஷசயனைட்| உட்கொள்வதைத் தடுப்பதே அவரது நோக்கமாக இருந்தது. தேர்ந்தெடுத்த 34 படைவீரர்களுக்கும் கடுமையான உத்தரவுகளை வழங்கினார்.

இரண்டு இராணுவ வீரர்கள் – ஒரு புலிப் போராளியை சமாளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் திட்டங்களை வகுத்தார்.

ஷசயனைட்| பற்றியும், அதனை எவ்வாறு புலிகள் உட்கொள்வார்கள் என்றும், அதனை எப்படித் தடுப்பது என்பது பற்றியும் விளக்கம் அளித்தார்.

புலிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த அறையினுள், எந்த வாசல் வழியாக உள்நுழைவது, யார்யார் எவ்வாறு நடந்துகொள்வது, ஒவ்வவொரு படைவீரரும் எந்தெந்த புலி உறுப்பினரை கைப்பற்றுவது என்றெல்லாம் திட்டம் தீட்டப்பட்டது. ஓரிரு முறை ஒத்திகையும் பார்க்கப்பட்டது.

புலிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த அறைக்கு அருகே சகல வசதிகளுடனும் கூடிய மூன்று முதலுதவிக் கூடங்கள் அவசரஅவசரமாக அமைக்கப்பட்டன. திறமையான வைத்திய நிபுணர்கள் அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டார்கள். அம்புலன்ஸ் வண்டிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. உட்கொண்ட நஞ்சை வயிற்றில் இருந்து வெளியேற்றத் தேவையான பம்புக்கள், உபகரனங்கள், மருந்துகள் சகலமும் தயார் நிலையில் வைக்கப்பட்டன.

கடைசியில் படையினர் நடவடிக்கையில் இறங்கினார்கள்.

திடீரென்று புலிகள் அடைத்துவைக்கப்பட்டிருந்த அறையினுள் பல முனைகளில் இருந்தும் பாய்ச்சல் நடத்தினார்கள்.

ஆனால் அதேவேளை புலி உறுப்பினர்கள் 17 பேரும் சயனைட்டை உட்கொண்டு விட்டிருந்தார்கள்.

புலேந்திரன், குமரப்பா உட்பட ஒன்பது போரளிகள் அந்த இடத்திலேயே மரணம் அடைந்திருந்தார்கள். நான்கு போராளிகள் வைத்திய முகாமில் மரணம் அடைந்தார்கள். மிகுந்த போராட்டத்தின் பின்னர் நால்வரை மட்டுமே அவர்களால் காப்பாற்ற முடிந்தது.

விடுதலைப் புலிகளின் சரித்திரத்தில் மட்டுமல்ல, ஸ்ரீலங்காவின் சரித்திரத்திலும், ஏன் இந்தியாவின் சரித்திரத்திலும் கூட மிகவும் மோசமான விழைவுகளை ஏற்படுத்திய ஒரு சம்பவமாக இந்தச் சம்பவம் அமைந்திருந்தது.

இந்தியா ஈழத்தமிழர்களைக் காப்பாற்றும் என்பதில் தமிழ் மக்களுக்கு எஞ்சியிருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையையும் இந்தச் சம்பவம் சிதறடித்தது.

எந்த ஒரு நிர்ப்பந்தங்களுக்கும் இனிப் பணிந்து பயனில்லை என்று, இந்தச் சம்பவம் விடுதலைப் புலிகளை எண்ணவைத்தது.

தமிழ் மக்களுக்கு இப்படி ஒரு சோகத்தைத் தந்த ஸ்ரீலங்காவிற்கும், அதற்கு ஆசீர்வாதம் வழங்கியிருந்த இந்தியாவிற்கும் ஒரு பாடத்தைப் படிப்பிக்கவேண்டும் என்று புலிகளை நினைக்கவைத்தது.

ஸ்ரீலங்கையின் வரலாற்றிலும், இந்தியாவின் வரலாற்றிலும், தமிழ் மக்களின் வரலாற்றிலும் என்றுமே மறக்கமுடியாத நிகழ்வுகள் அடுத்த சில நாட்களில் இடம்பெற ஆரம்பித்தன.

தொடரும்..


 

புலிப் போராளிகளின் கூட்டுத் தற்கொலை (அவலங்களின் அத்தியாயங்கள்- 75) – நிராஜ் டேவிட்

  • August 8, 2013

தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளான குமரப்பா, புலேந்திரன் உட்பட 12 போராளிகள் சயனைட் அருந்தித் தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து, தமிழீழம் முழுவதும் மிக இறுக்கமான ஒரு சூழ்நிலை உருவானது.

துக்கம், கோபம், ஆவேசம், பயம் என்று பலவித உணர்வுகள் கலந்த நிலையில் தமிழ் மக்கள் காணப்பட்டார்கள்.

சுதந்திர வேட்கை

இந்த 12 போராளிகளின் மரணம் பற்றியும், அது தொடர்பான மற்றய நிகழ்வுகள் பற்றியும் விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகர் திரு.அன்டன் பாலசிங்கம் அவர்களின் மனைவி திருமதி அடேல் பாலசிங்கம் அவர்கள், ‘சுதந்திர வேட்கை’ என்ற அவரது சுயசரிதையில் மிகவும் உணர்வு பூர்வமாக, அழகாக விபரித்திருந்தார்.

இந்தச் சம்பவம் நடைபெற்ற காலத்தில் அவர் யாழ்பாணம் வல்வெட்டித் துறையில் தங்கியிருந்தார். மரணமடைந்த குமரப்பா, புலேந்திரன் போன்றவர்களின் குடும்பங்களுடன் அன்னியோன்யமான நெருக்கத்தைக் கொண்டிருந்தார். இந்தச் சம்பவம் பற்றி அவர் தனது நூலில் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

ஷஷவிடுதலைப் புலிப் போராளிகளின் கூட்டுத் தற்கொலைச் செய்தி பொதுமக்களுக்கும், எனக்கும் அறிவிக்கப்பட்டது. ஒக்டோபர் 5ம் திகதி மாலையிலேயே வல்வெட்டித்துறையில் உள்ள விடுதலைப் புலித் தளத்தில் இருந்து ‘வாக்கி ரோக்கி’ மூலம் செய்தி அறிவிக்கப்பட்டது. அழுத்தம் திருத்தமாக, ஆறுதலாக பெயர்கள் படிக்கப்பட்டன: ‘குமரப்பா போய்விட்டார்;…, புலேந்தி அம்மான் போய்விட்டார்…’ அதன் பின்னர் ஒவ்வொரு பெயராக, இந்த அவலத்தின் பெயர்ப்பட்டியல் முழுமையாகப் படிக்கப்பட்டது. எனது செவிகளையே நம்பமுடியாதவளாக விக்கித்துப் போய் உட்கார்ந்தேன். இது எப்படி நடந்திருக்கலாம்? இது உண்மையாக இருக்கமுடியாது. என்ன நடந்தது?

அதன் பின்னர் தூரத்தில் இருந்து ஓலம் ஒன்று சன்னமாகக் கேட்டது. எமது வீட்டில் இருந்து ஒரு கால் மைல் தூரத்தில் குமரப்பாவின் மனைவிக்குத் தகவல் தரப்பட்டிருக்கிறது.

இன்னொரு பக்கத்தில் இருந்து வருத்தமும், துயரமும் கலந்த உணர்ச்சி ஒப்பாரி ஓவென்று கேட்டது. இது இன்னொரு குடும்பத்திற்குத் தகவல்.

அதன் பின்னர் இன்னொன்றுளூ இன்னொன்றுளூ இப்படியே கிராமம் முழுவது ஒரே செத்த வீடாக ஒப்பாரி ஓலம் ஓங்கியது.

மறக்கமுடியாத மரணச் சடங்கு:

தமிழ்ச் சமுதாய மரபுப்படி, மக்கள் செத்த வீட்டுக்குப் போய் இறந்தவருக்கு அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறுவது மரபு. ஒருவரை ஒருவர் நன்கு அறிந்த வல்வெட்டித்துறை போன்ற சிறிய கிராமத்தில் அது பொதுவான ஒன்று. மாவீரராகப் பலர் உயிர் நீத்து தேசிய வீரர்களாகிவிட்ட இந்தச் சந்தர்ப்பத்தில், அந்த மாவீரர்களின் தீரத்திற்கு வணக்கம் செலுத்தவும், அவர்களது குடும்பத்தினரோடு துயர் பகிரவும், எல்லோரும் விரும்பினார்கள். மறுநாள் காலை, வல்வெட்டித்துறையில் வாழ்ந்துகொண்டிருந்த மூத்த விடுதலைப் புலி போராளியான நடேசன் அவர்களுடைய மனைவி வனித்தாவுடன் மாவீரர்களாகிவிட்ட அனைவரது வீடுகளுக்கும் சென்றோம். வனிதா ஒரு சிங்களப் பெண்மணி. கிராம மக்களும் மாறிமாறி ஒவ்வொரு வீட்டுக்குப் போவதும், இந்தச் துயரமான சம்பவம் பற்றிக் கூடிப் பேசுவதுமாக இருந்தார்கள். ஆற்றாமை, துயரம் ஆகிய இரண்டு உணர்வுகளும் எங்கும் வியாபித்திருந்தன. ஆண்கள் கூடிக் கூடி கீழ் குரலில் உரையாடினார்கள். பெண்கள்- உறவினர்களும் சரி, சினேகிதர்களும் சரி, தரையில் இருந்து மார்பில் அடித்து ஒப்பாரி வைத்தார்கள். தங்கள் கூட்டுத் துயரை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

பாலா வீடு திரும்பும்வரை காத்திருந்து குமரப்பாவின் இளம் மனைவி ரஜனியைப் பார்க்க மறுநாட் காலையிலேயே போனேன். ரஜனியைச் சந்திப்பதை நினைக்க எனக்கு உள்ளூர நடுக்கம். இந்த இளம் பெண்ணின் முகத்தை நான் எப்படித்தான் பார்க்கப்போகிறேனோ? என்ன கூறப் போகிறோம்? அவர் வீட்டுக்குப் போவதற்காக ஆடை மாற்றும் போது எனது வயிறு பிசைந்தது.

துயர் தோய்ந்து ஆடிப்போயிருந்த கிராமத்தின் ஊடாக, குமரப்பாவின் வீட்டிற்கு நடந்து சென்றோம். அங்கேதான் ரஜனி இருந்தார். வீட்டுக்கு அருகே வரும்போது, அதே பக்கமாக ஊர்ந்துகொண்டிருக்கும் சனத்திரளில் நாமும் அங்கமானோம். வீட்டுக்கு அருகே செல்லச்செல்ல ஒப்பாரியும் பலத்து ஒலித்தது. குமரப்பாவின் வீட்டுக்குள் செல்லும் வாயிலில் மக்கள் நெருக்கியடித்துக்கொண்டு நின்றார்கள். ஆனாலும் நாம் உள்ளே செல்வதற்காக பிரிந்து வழிவிட்டார்கள்.

ரஜனி நாராய் கிழிந்து கிடந்தார். துயரத்தால் உருக்குலைந்திருந்தார். பிதற்றிக்கொண்டிருந்தார். தமது துயரத்தை எங்கே எவ்வாறு போக்குவது என்று வகையறியாது தவித்துக்கொண்டிருந்தார். முன் வாயிலுக்கு சில யார் தூரத்தில் எம்மைக் கண்டதும் பிய்த்தெறிந்து என்னிடம் பாய்ந்து வந்தார். என்னைக் கட்டி அணைத்து வேலியோடு சாய்ந்து, நெஞ்ச அவலத்தோடு ஓலமிட்டார். ‘அன்ரி, அன்ரி என்ரை அவர்.. என்ரை அவர்..’ என்று கதறினார். எனது தோழில் சாய்ந்தவராக ஆற்றமுடியாதவராக விம்மினார். அவரை மெதுவாக அழைத்துக்கொண்டு வீட்டுக்குள் சென்றேன். எண்ணுக்கணக்கற்ற சொந்தக்காரப் பெண்கள் தரையில் அமர்ந்திருந்தார்கள். ரஜனியோடும், குமரப்பா குடும்பத்தோடும் துயர் பகிர்ந்து, ஆறுதல் கூற அங்கே எல்லோரும் கூடியிருந்தார்கள்.

ரஜனியின் வீட்டில் துயர் பகிர்வதோடு செத்தவீட்டுச் சடங்கு முடியவில்லை. பிரதான ஈமச் சடங்குகள் மறுநாள் மாலை நடைபெற இருந்தன.

கிராமத்தின் விளையாட்டு மைதானத்தில், ஒரு பெரிய பொதுவான இறுதிச் சடங்காக நடத்த ஏற்பாடாகி இருந்தது.

பலியாகிவிட்ட விடுதலைப் புலி மாவீரர்களுக்கு ஒரு தேசிய பிரியாவிடை வீர வணக்கம் செலுத்த ஏற்பாடாகிக் கொண்டிருந்த அதேசமயம், மீட்கப்பட்ட மாவீரரின் உடலங்கள் இறுதி இராக் காவலுக்காக அவர்களுடைய வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

வல்வெட்டித்துறை மைதானம் சனத்திரளால் நிரம்பி வழிந்தது. வீழ்ந்து பட்ட பன்னிரெண்டு மாவீரர்களுக்கும் இறுதி அஞ்சலி செலுத்த மக்கள் திரண்டிருந்தார்கள். துயரக் கனதி எங்கும் வியாபித்திருந்தது. திறந்திருந்த உடலப் பேளைகளைக் கடந்து மக்கள் மரியாதையுடன் வரிசையாக நடந்தார்கள். தமக்குத் தெரிந்த வீரரின் காலடியில் நின்று சிலர் விம்மினார்கள். ரஜனியும், புலேந்திரனின் மனைவி சுபாவும் அலறியடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய உறவினர்கள் அவர்களைக் கட்டுப்படுத்தியபடி நின்றார்கள். கரனின் மனைவி குகாவும், அவருடைய இரண்டு பிள்ளைகளும் அந்தக் கூட்டத்தில் இருந்தார்கள். விம்மலும் ஓலமும், ஒப்பாரியும், ஒவ்வொரு திக்கிலும் கேட்டன. கவிதை, பாடல் இரங்கல் உரை என்று புகழாரம் ஒன்றன் பின் ஒன்றாக ஒலிபரப்பிகளை நிறைத்தன. இன்னும் சில நாட்களில் இந்தியப்படையுடன் நடைபெற இருந்த சமரில் உயிர்துறக்க இருந்த சந்தோசமும் புலிகள் சார்பில் அன்று உரை நிகழ்த்தியவர்களில் முக்கியமான ஒருவர்.

விசுவாசிகளுக்கு வீரவணக்கம்:

கனத்த இதயங்களோடும், சுரத்தே இல்லாதவர்களுமாக பிரபாகரன் அவர்களும், ஏனைய விடுதலைப் புலித் தலைமை உறுப்பினர்களும் உடல் பேழைகளை மெதுவாகக் கடந்து சென்றார்கள். கடந்துபோன ஆண்டுகளில் பிரபாகரன் அவர்களைப் பின்பற்றிய மிகுந்த விசுவாசமும், நம்பிக்கையும் உடைய சில மூத்த விடுதலைப் புலிப் போராளிகளினுடைய உடல் பேழைகளைக் கடக்கும் போது கால்கள் தயங்கின, பழைய நினைவுகள் சுரந்து வந்தன.

பிரபாகரன் அவர்கள் அங்கிருந்து அகன்றதும், தீ மூட்டுவதற்கு முன்னதாக, தமிழ் மரபுப்படி, அந்தக் களத்தில் இருந்த ரஜனியும், சுபாவும், குகாவும் அகற்றப்பட்டார்கள். ஒவ்வொன்றாக, மிகக் கண்ணியமாக ஒரு வரிசையில் சுமந்து செல்லப்பட்ட உடல் பேழைகள் அடுக்கப்பட்ட சிதைகளில் வைக்கப்பட்டன. இராணுவ மரியாதை வேட்டுக்கள் காற்றில் கலந்த பின்னர் சிதைகளுக்கு தீ மூட்டப்பட்டது.

உப்பிய கரும் புகைத் திரள் வானை ஊடறுத்ததுளூ மக்கள் விறைத்து நின்றார்கள்ளூ பொருமல் ஒலி அந்தப் பெருங்கூட்டத்தில் இருந்து விம்மலாக எகிறியது. எல்லாமே ஒரு கோரக் கனவாகத் தோன்றியது.

ஏன் இது நேர்ந்தது? இத்தனை தொகை மக்களின் இதயங்கள் ஏன் சீலம் சீலமாகக் கிழிந்தன? இத்தனை பேரிழப்பையும், துயரத்தையும் அடைய மக்கள் அப்படி என்ன கொடுமை புரிந்தார்கள்? போரோய்வு ஒன்று நடைமுறையில் இருப்பதாகக் கூறப்படும் போது மக்கள் இத்தனை துயரத்திற்கு உள்ளாக்கப்பட்டமையும், போராட்டம் இத்தகைய சோதனைக்கு உட்பட்டமையும் இயல்புக்கு மாறான புதிரல்லவா?

திலீபன் பலியானதை உடனடுத்து இப்படி ஒரு பேரிடர் நேர்ந்தமை, மக்களை வகையறாத் திகைப்புக்கு உள்ளாக்கியது. பொதுமக்கள் பார்வையில் இந்திய அமைதிப்படையும்,, புதுடில்லி நிர்வாகிகளும் சாயம் வெழுத்து நின்றார்கள். கொழும்பு மீதிருந்த அவநம்பிக்கையும் அதிகரித்தது. காயங்கள் ஏற்படுத்தப்பட்டன. இவை என்றுமே பூரண குணம் காணும் என்று எனக்குப் படவில்லை||.

இவ்வாறு திருமதி அடல் பாலசிங்கம் தனது புத்தகத்தில் தனது அனுபவங்களை உணர்ச்சிகளாகக் கொட்டியிருந்தார்.

துரதிஷ்டவசமான வெளிப்பாடு

ஈழ மக்கள் எதிர்கொண்ட பல துயரச் சம்பவங்களுள் இந்தச் சம்பவமும் ஒன்று என்பது உண்மையானாலும், ஈழத்தில் பாரிய மாற்றங்கள் ஏற்படக் காரணமாக அமைந்த சம்பவம் இது என்பதால், இந்தச் சம்பவத்தின் பரிமானத்தை வாசகர்களுக்கு சற்று அழுத்தமாக ஞாபகப்படுத்தவே இங்கு இந்தச் சம்பவத்திற்கு இத்தனை முக்கியத்துவம் கொடுத்திருந்;தேன்.

இந்தச் சம்பவம் பற்றிய உண்மையான உணர்வினை வெளிப்படுத்த, திருமதி அடேல் பாலசிங்கம் அவர்களுடைய வரிகளை விட சிறந்த எழுத்துக்கள் வேறு எதுவுமே இல்லை என்பதனால்தான், அவரது அனுபவ வரிகளை அப்படியே இங்கு தந்திருந்தேன்.

இந்த தேசிய துயரச் சம்பவத்தின் துரதிஷ்டவசமான வெளிப்பாடக இடம்பெற்ற நிகழ்வுகள் பற்றி அடுத்தவாரம் பார்ப்போம்.

தொடரும்…


 மத்தியஸ்தம் வகிக்க வந்த ராஜீவை சண்டையில் குதிக்க வைத்த ஜே.ஆர். (அவலங்களின் அத்தியாயங்கள்- 76) – நிராஜ் டேவிட

  • August 8, 2013

இந்தியாவிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் அக் காலகட்டத்தில் இடம்பெற்றுவந்த தேன்நிலவிற்கு முற்றுப்புள்ளி வைத்த ஒரு நிகழ்வாகவே, புலேந்திரன் குமரப்பா உட்பட 12 போராளிகள் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அமைந்திருந்தது.

இந்த விடயத்தில் இந்தியா பொறுப்புடனும், நிதானத்துடனும் நடந்துகொள்ளத் தவறியதே, பிற்காலத்தில் இந்தியப்படைகள் ஈழத்தில் ஒரு மாபெரும் அவலத்தைச் சந்திக்க பிரதான காரணமாக அமைந்திருந்தது என்று அறிஞர்கள் கூறிப்பிடுகின்றார்கள். இது இந்தியா விட்ட மாபெரும் வரலாற்றுத் தவறு என்று, இந்தியாவின் சரித்திரத்தை வரைந்த பல ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

ஜே.ஆரினதும், அத்துலத் முதலியினதும் சூழ்ச்;சி வலையில் இந்தியா தெரிந்துகொண்டே விழுந்திருந்த சந்தர்ப்பம் என்றும் இந்தச் சம்பவம் பற்றி பலர் கண்டணம் வெளியிட்டிருந்தார்கள்.

‘An Independent view from London’ என்ற புத்தகத்தில் ஷபுறுர்ஸ் போலிங்| என்ற ஆய்வாளர் இந்தச் சம்பவம் பற்றி இவ்வாறு எழுதியிருந்தார்:

ஷஷஅத்துலத் முதலி, ஸ்ரீலங்காவின் தேசிய பாதுகாப்பு அமைச்சராக இருந்த 1984 முதல் 1989ம் ஆண்டு காலம் வரை, அவர் ஸ்ரீலங்காவின் அரசியலில் முக்கிய பாத்திரத்தை வகித்து வந்தார். ஊடகத்துறையுடன் நேரடியான தொடர்புகளை வைத்திருந்த ஒரே அமைச்சரும் அத்துலத் முதலியாகவே இருந்தார். மிகவும் புத்திசாலியான இவர் பல சந்தர்பங்களில் இரக்கமற்ற ஒரு மனிதராகவும் நடந்துகொண்டிருந்தார். 1987ம் ஆண்டு சமாதான ஒப்பந்தத்தின் போது, பாக்கு நீரினையில் கைதுசெய்யப்பட்ட சில விடுதலைப் புலிகளை இந்தியப்படைகள் ஸ்ரீலங்காப் படைகளிடம் கையளிக்கவேண்டும் என்பதில் அத்துலத் முதலி மிகவும் பிடிவாதமாக இருந்தார். இந்தச் சம்பவத்தில் பல விடுதலைப் புலிப் போராளிகள் தற்கொலை செய்துகொள்ள, இந்தியப் படைகளுக்கு எதிராக புலிகள் நேரடி யுத்தத்தில் இறங்கும் சூழ்நிலை அங்கு உருவானது. இந்த விடயம் பற்றி நான் அத்துலத் முதலியிடம் பேசும் பொழுது, ஷநிலமை இப்படி மோசமாக மாறிவிடும் என்பதை நீங்கள் முன்னரே உணர்ந்து, இதனைத் தவிர்த்திருக்கவேண்டும்| என்று தெரிவித்தேன், அதற்கு அத்துலத் முதலி, “உண்மையிலேயே என்ன நடக்கவேண்டும் என்று நாங்கள் ஏற்கனவே எதிர்பார்த்திருந்தோமோ, அதுதான் நடைபெற்றது. இந்தியாவை எங்கள் பக்கம் திருப்புவதற்கு ஒரு சரியான சந்தர்ப்பத்தை நாங்கள் பலகாலமாகவே எதிர்பார்த்த்துக் காத்துக்கொண்டிருந்தோம் என்பதே உண்மை|| என்று பதிலளித்திருந்தார்.||

இவ்வாறு ஷபுறுஸ் பேலிங்| தனது அந்தப் பத்தியில் தெரிவித்திருந்தார். இந்தப் பத்தியை, THE SUNDAY TIMES ஆங்கிலப் பத்திரிகை 02.05.93 இல் மறுபிரசுரம் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஜே.ஆரும், அத்துலத் முதலியும் எவ்வளவு கெட்டித்தனமாக இந்தியாவை தமது வலையில் விழச் செய்திருந்தார்கள் என்பது இதில் இருந்து புரிகின்றது.

சிங்களத் தரப்பே காரணம்:

இந்திய இலங்கை ஒப்பந்தத்திலும் சரி, அதன் பின்னர் விடுதலைப் புலிகளுக்கும், இந்தியாவிற்கு இடையில் முறுகல் நிலை உருவானதிலும் சரி, முக்கிய பங்கு வகித்த நபர் என்று பல தரப்பினராலும் விமர்சிக்கப்படும் ஒரு நபர் இலங்கைக்கான இந்தியத் தூதுவராக அக்காலகட்டத்தில் பணியாற்றிய ஜோதின்ரா நாத் தீட்ஷித் (ஜே.என்.தீட்ஷித்). இவர், பின்னர் தனது பதவியில் இருந்து ஓய்வு பெற்றபின், தனது பதவிக் காலத்தில் இடம்பெற்ற பல அரசியல் தவறுகள் பற்றி மனம் திறந்து வெளிப்படுத்தியிருந்தார். இந்தியாவிற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பகை மூண்டது பற்றி, தீட்ஷித் வழங்கியிருந்த செவ்வி ஒன்றில், இந்தியப்படையின் காலத்தில் சாமாதானம் குழம்பியதற்கு சிங்களத் தரப்பே காரணம் என்று தெரிவித்திருந்தார். 1994ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 14ம் திகதி வெளிவந்த THE SUNDAY LEADER ஆங்கிலப் பத்திரிகையில் தீட்ஷித்தின் செவ்வி பிரசுரமாகி இருந்தது. அவர் அந்தச் செவ்வியில் இவ்வாறு தெரிவித்திருந்தார்:

ஷஷ1987ம் ஆண்டு செப்டெம்பர் மாதக் கடைசியில் இருந்து அக்டோபர் மாத நடுப்பகுதி வரை, சமாதான முயற்சிகளில் பாரிய ஒரு தேக்கநிலை காணப்பட்டது. சமாதான முயற்சிகளுக்கு எதிராக சிங்களத் தரப்பினால் ஏற்படுத்தப்பட்ட தடங்கல்களே அதிகமானதாக இருந்தது. தமிழ் மொழிக்கு உரிய அந்தஸ்து வழங்குவதற்கு இழுத்தடிப்புகள் மேற்கொள்ளப்பட்டன. அதிகாரப் பரவலாக்கத்தையும், நிதி கையாள்கை சம்பந்தமான தீர்வுகளையும் திட்டமிட்டு ஸ்ரீலங்கா அரசாங்கம் இழுத்தடித்து வந்தது. ஆகவே, 1983 காலப்பகுதியில் இருந்த நிலமையை நோக்கியே சமாதான முயற்சிகள் சென்றுகொண்டிருப்பதாக தமிழ் மக்கள் சந்தேகப்பட ஆரம்பித்திருந்தார்கள். இது அப்பொழுது இடம்பெற்றுகொண்டிருந்த ஒரு முக்கியமான பிரச்சினை.

ஆனால் இந்தியாவை புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நோக்கித் திருப்புவதற்கு பிரதானமாக ஒரு சம்பவம் நடைபெற்றிருந்தது. 17 இளைஞர்களை கொழும்புக்கு கொண்டு வரவேண்டும் என்ற விடயத்தில் அத்துலத் முதலி மேற்கொண்டிருந்த பிடிவாதமே இந்தப் பிரசினை ஆரம்பமாவதற்கு மிகவும் பிரதான காரணம் என்று கூறவேண்டும். அவர்கள் இந்தியப் படைகளினது பாதுகாப்பிலேயே தொடர்ந்தும் வைக்கப்பட்டிருக்கவேண்டும். சில விடயங்களில் எம்மால் இணக்கம் காண முடிந்திருந்தது. ஆமாம், ஜே.ஆர். சில அரசியல் நகர்வுகளுக்கு சம்மதித்திருந்தார். ஆனால், அத்துலத் முதலி சில சதித்திட்டங்களை தன்னகத்தே கொண்டு செயற்பட முனைந்ததால்தான், இந்தியாவிற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பிரச்சினைகள் உருவானது. ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் விருப்பத்திற்கு மாறாக அத்துலத்முதலி நடந்துகொள்ள முயன்றதால்தான், அந்த இளைஞர்கள் அநியாயமாக நஞ்சருந்தி தற்கொலை செய்துகொள்ள நேரிட்டது. இந்தச் சம்பவம் மிகவும் துக்ககரமான ஒரு சம்பவம் என்பதுடன், புலிகளின் தலைமைத்துவத்தை மிகவும் கோபமடையவும் வைத்த ஒரு சம்பவம் என்றே கூறவேண்டும். அவர்களைப் பொறுத்தவரை இது ஒரு நம்பிக்கைத் துரோகமான ஒரு செயலாகவே பார்க்கப்பட்டது. ஒரு வகையில் இது உண்மையும் கூட.||

இவ்வாறு தீட்ஷித் தனது செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.

இதில் இருந்து, ஸ்ரீலங்கா அரசாங்கம் இந்தியவை எப்படி திட்டமிட்டு தனது வலையில் விழ வைத்திருக்கின்றது என்பதை உணரக் கூடியதாக இருக்கின்றது.

இதேபோன்று, 13.11.1994 அன்று வெளியான THE ISLAND பத்திரிகையில், `தேசிய சமாதானப் பேரவையில் தலைவரும், பிரபல சிங்கள ஊடகவியலாளருமான ஜெகான் பெரேரா இவ்வாறு தெரிவித்திருந்தார்: ஷஷஆரம்பம் முதலே ஜெயவர்த்தனாவும், அவரது லெப்டினட்களும் இந்த ஒப்பந்தத்தை எப்படி முறியடிப்பது, இந்தியாவை எப்படி ஏமாற்றுவது என்று திட்டமிட்டபடியே இருந்தார்கள். இதற்கான முயற்சிகளை அவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் மேற்கொண்டபடியே இருந்தார்கள். படிப்படியாக அவர்கள் மேற்கொண்டு வந்த முயற்சிகள் இறுதியில் அவர்களுக்கு வெற்றியைப் பெற்றுத்தந்தது. ஈழப் போராளிகளைச் சமாளிப்பதற்கும், சிதைப்பதற்கும் இந்தியாவின் உதவியைப் பெற்றுக்கொள்ளும் விடயத்தில் ஜேஆரும், லலித்தும் ஆரம்பம் முதலே திட்டமிட்டு செயலாற்றி வந்திருந்தார்கள். ராஜீவை அவர்கள் மிகவும் தந்திரமாக தமது பொறியில் விழ வைத்திருந்தார்கள்.|| இவ்வாறு ஜெகான் பெரேரா தனது பத்தியில் எழுதியிருந்தார்.

இந்தியாவை புலிகளுக்கு எதிராக திருப்பிவிட்ட தனது தந்திரம் பற்றி ஜே.ஆர் பல சந்தர்ப்பங்களில் பெருமிதம் வெளிப்படுத்தியிருந்ததும் நோக்கத்தக்கது. அவர் ஒரு தடவை பாராளுமன்றத்தில் இதனை புன்முறவலுடன் தெரிவித்திருந்தார்: “குஸ்திக்கு மத்தியஸ்தம் வகிக்கவென்று வந்த ராஜீவே கடைசியில் கோதாவில் குதிக்கும்படியாக ஆகிவிட்டது” என்று நகைச்சுவையாக தெரிவித்திருந்தார்.

தலைவர் பிரபாகரனின் செவ்வி:

இந்தியப் படைகள் புலிகளால் தோற்கடிக்கப்பட்டு இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்ட பின்னர், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் டைம்ஸ்| சஞ்சிகைக்கு வழங்கிய ஒரு செவ்வியில், இந்தியாவுடன் யுத்தம் மூண்டதற்கான காரணத்தை குறிப்பிட்டிருந்தார். பிரபல இந்திய பத்திரிகையாளர் அனிதா பிரதாபிற்கு அவர் வழங்கியிருந்த செவ்வி 08.04.1990 இல் வெளிவந்த TIMES சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டிருந்தது.

அந்தச் செவ்வியில் அவர் ஒரு கேள்விக்குப் பதில் அளிக்கையில், ஷஒப்பந்த காலத்தில் ஸ்ரீலங்காப் படையினரால் கைதுசெய்யப்பட்டிருந்த எமது போராளிகள் பன்னிருவரை விடுவிக்க இந்தியா தவறியிருந்தது. அவர்களுடைய பரிதபகரமான மரணம் இந்தியாவுடன் மோதவேண்டும் என்ற முடிவுக்கு எம்மைக் கொண்டு சென்றிருந்தது.

இவ்வாறு தலைவர் பிரபாகரன் தனது செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.

இந்தியா விட்ட தவறால், விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர்கள் 12 பேர் அநியாயமாக பலியானதுதான், புலிகள் இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பதற்கு காரணமாக இருந்தது. இந்தியாவை நம்பி ஆயுதங்களை ஒப்படைத்திருந்த விடுதலைப் புலிகளைக் காப்பாற்றும் பொறுப்பில் இருந்து இந்தியா தவறி இருந்தது. ஸ்ரீலங்கா அரசு விரித்திருந்த வலையில் இந்தியா தெரிந்துகொண்டே விழுந்தது.

இது இந்தியாவை நம்பியிருந்த ஈழத்தமிழர்களுக்கு இந்தியா செய்திருந்த மிகப்பெரிய துரோகம் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை.

தொடரும்…


 

About editor 3000 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply