துணிவுடன் செயற்பட வேண்டிய கட்டாயத்தில் கூட்டமைப்பு
Tue, 02/01/2018
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மிகுந்த விழிப்புடன் செயலாற்ற வேண்டியதொரு காலகட்டம் தற்போது உருவாகியுள்ளது. கூட்டமைப்பை அடியோடு வேரறுத்து விடுகின்ற செயற்பாடுகள் தீவிரமாக இடம்பெற்்று வருகின்ற இந்த வேளையில் கூட்டமைப்பினா் விழிப் புடன் செயலாற்றுவது ஆவசியமாகி விட்டது.
தனக்கு எதிரான சக்திகளை இனம் காணத்தவறிய கூட்டமைப்பு
வடக்கு மாகாண சபையில் முதலமைச்சருக்கு எதிராகத் தமிழரசுக்கட்சி தீர்மானமொன்றைக் கொண்டு வந்தபோதே தனக்கு எதிரான சக்திகளைக் கூட்டமைப்பு இனம் கண்டிருக்க வேண்டும். ஆனால் அதில் தவறிழைத்து விட்டது. தற்போது உள்ளூராட்சித்தேர்தல் இடம்பெறப்போகும் நிலையில் எதிரணியினர் பகிரங்கமாகச் சவால் விடுத்து நிற்கின்றனர்.
முதலமைச்சர் விக்னேஸ்வரன் அடுத்து இடம் பெறப்போகும் மாகாணசபைத்தேர்தலில் உத ய சூரியன் சின்னத்தில் போட்டியிடப்போவதாக நாடாளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தன் கூறியதாக ஊடகங்களில் செய்தி வௌியாகியுள்ளது.
விக்னேஸ்வரன் இதை மறுத்தாலும், இந்தச் செய்தி வௌியானதற்கு ஒரிரண்டு தினங்க ளுக்கு முன்னா்தான் தமிழரசுக்கட்சியின் தலைமைக்கு எதிராக அவர் கருத்துக் கூறியிருந்தார். தாம் எந்தக் கட்சியையும் சார்ந்தவா் அல்லவெனவும், தமது கருத்துடன் ஒத்துப்போகக் கூடியவர்கள் பேரவையில் உள்ளதாகவும் அவர் தொிவித்திருந்தார்.
விக்னேஸ்வரனின் மனநிலை அப்போதே தௌிவாகத் தெரிந்து விட்டது. அவர் என்ன செய்யப் போகின்றார் என்பதும் புரிந்துவிட்டது.
கட்சித்தொண்டா்களது உணா்வுகளுக்கு தமிழரசுக்கட்சி மதிப்பளிக்க வேண்டும்
கூட்டமைப்பில் பிரதான இடத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சி வசிக்கின்றது. அந்தக் கட்சிக்கு ஏராளமான தொண்டர்களும் உள்ளனர். கடந்த மாகாணசபை மற்றும் நாடாளுமன்றத்தேர்தல்களில் கூட்டமைப்பு பெற்ற மகத்தான வெற்றிக்கு இவர்களது செயற்பாடுகளே பிரதான காரணமெனக் கூற முடியும். ஆகவே இந்தத் தொண்டர்களின் உணர்வுகளைத் தமிழரசுக்கட்சியின் தலைமை மதித்து நடந்துகொள்ள வேண்டும். கடந்த மாகாணசபைத் தேர்தலின்போது வேட்பாளர்கள் தெரிவில் தமிழரசுக்கட்சி தவறிழைத்து விட்டதாகப் பரவலான குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
சமுதாயத்தில் மதிக்கப்படாதவர்களும், ஒழுக்க விழுமியங்க ளைக் கடைப்பிடிக்காதவர்களும், வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன . கட்சித் தலைமையுடன் நெருக்கமாக உள்ளவர்களுக்கு மடடுமே வேட்பாளர் தெரிவில் முக்கியத்துவம் வழங்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நேர்மையும், தகுதியும் உள்ளவர்களுக்கு மட்டுமே இடம் வழங்கப்படுதல் வேண்டு்ம். இனிவரும் காலகட்டம் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் கடினமானதாகவே அமையப் போகின்றது .முன்னர் போன்று எதிர்ப்பில்லாத வெற்றிகளை அதனால் ஈட்டிக்கொள்ள முடியாது.
அந்த அளவுக்கு கூட்டமைப்புக்கு எதிரானவர்கள் வியூகம் வகுத்துக்கொண்டு களத்தில் குதித்துள்ள னர். இதை முறியடிப்பதற்குரிய இராஜதந்திரத்தை கூட்டமைப்பு வகுத்துச் செயற்பட வேண்டும்.கூட்டமைப்புடன் ஒட்டிக்கொண்டிருக்கின்ற பச்சோந்திகளையும், புல்லுருவிகளயும் களையெடுத்தவிட வேண்டும்.அவ்விதம் செய்யாது விட்டால் கூடவேயிருந்து குழிதோண்டி விடுகின்ற செயற்பாடுகள் கச்சிதமாக நி।றைவேற்றப்பட்டு விடும்.
மாகாணசபைத் தோ்தலுக்கான முன்னாயத்தங்கள் கூட்டமைப்புக்கு அவசியம்
மேலும் உள்ளூராட்சித்தேர்தலுடன் ஓய்ந்துவிடாது, மாகாணசபைத்தேர்தலுக்கான ஆயத்தங்களிலும் கூட்டமைப்பின் தலைமை உடனடிக் கவனம் செலுத்துதல் வேண்டும். விக்னேஸ்வரன் எதிரணியின் சார்பில் போட்டியிடுவது அநேகமாக உறுதியாகி விட்டது.
இந்த நிலையில் அவரைத் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி மாகாணசபையின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்குக் காத்திருப்பவர்களுக்கு ஒரு பலத்த அடியைக் கொடுக்க வேண்டியது கூட்டமைப்பின் பிரதான கடமையாகும். எதிரணியினர் மீண்டும் தலை தூக்காதவாறு இந்த அடி அமைந்திருத்தல் வேண்டும்.
சில ஊடகங்கள் கூட்டமைப்பை யும், தமிழரசுக்கட்சியையும் தவறாகச் சித்தரித்துச் செய்தி வௌியிடுவதைத் தமது பிரதான தொழிலாகத் கொண்டுள்ளன. செய்திகளைச் சுதந்தி ரமாக வௌியிடுகின்ற பூரண உரிமை ஊடகங்களுக்கு உண்டு. ஆனால் உண்மைகளைத் திரித்தும், தவறாகவும் வௌியிடுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது .பத்திரிகா தர்மத்தை மீறுபவர்க ளையும் குற்றவாளிகளின் பட்டியலில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இதேவேளை கூட்டமைப்பின் தலைமை துணிவுடன் உறுதியான முடிவுகளை எடுப்பதில் தவறி விடுவதாகப் பரவலாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. எந்த விடயமாக இருந்தாலும் துணிவுடன் உறுதியான முடிவுகளை மேற்கொள்வது தலைமையொன்றின் முக்கிய பணியாகும். புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் இது நிறையவே காணப்பட்டது. இதனால் பல வெற்றிகளையும் அவர் ஈட்டிக்கொண்டார்.
இந்தியா மற்றும் வேறு பல நாடுகளின் சதிகாரணமாகப் புலிகள் இறுதிப்போரில் தோல்வியைத் தழுவிக்கொண்டமை தெரிந்த தொன்றே. ஆகவே கால நிலையைப் புரிந்து கொண்டு கூட்ட மைப்பின் தலைமை விழிப்பு டனும், துணிவுடனும், உறுதியாகவும் செயற்படவேண்டியது அவசியம். அதுதான் எதிர்ப்புக்களைக் கடந்து கூட்டமைப்பு கரை சேர உதவும். காலத்தின் கட்டாயமும் இதுவே.
Leave a Reply
You must be logged in to post a comment.