தோற்ற சபைகளிலும் காங்கிரஸ் போட்டி  போடுமாம்! வாக்கெடுப்பும் இரகசியமாக இருக்க வேண்டுமாம்!

தோற்ற சபைகளிலும் காங்கிரஸ் போட்டி  போடுமாம்! வாக்கெடுப்பும் இரகசியமாக இருக்க வேண்டுமாம்!

நக்கீரன்

வட மாகாண உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் வந்த கையோடு ததேகூ இன் பேச்சாளர் சுமந்திரன் யாழ்ப்பாண மாநகர சபையின் மேயராக  ஆர்னோல்ட் தெரிவுசெய்யப்பட்டார் எனவும்  துணை மேயராக ஈசன் தெரிவானார் எனவும் தெரிவித்தார்.

“உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பின்னர் ஏற்பட்டுள்ள தொங்குநிலையை சீர்செய்ய யாழ்ப்பாணத்திலுள்ள இரண்டு தமிழ்க் கட்சிகளும் (அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், ஈ.பி.டி.பி.) ஒத்துழைப்புகளை வழங்குவதாகக் கூறியுள்ளன. அந்தக் கட்சிகள் எடுத்துள்ள இந்த முடிவு வரவேற்கத்தக்கது. அதன்படி நாமும் அதிகூடிய ஆசனங்களைப் பெற்ற கட்சிகள் ஆட்சியமைக்க ஆதரவை வழங்குவோம்.

யாழ்ப்பாண மாநகர சபையில் அதிக ஆசனங்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே பெற்றுள்ளனர். அதன்படி நாம் யாழ்ப்பாண மாநகர சபையின் மேயராக இம்மானுவேல் ஆர்னோல்ட்டை தெரிவுசெய்துள்ளோம். இந்த முடிவை நாம் தனித்து எடுக்கவில்லை.

யாழ்ப்பாண மாநகர சபைக்காகப் போட்டியிட்டு வெற்றியடைந்துள்ள எமது வேட்பாளர்களை அழைத்து அவர்களின் கருத்துக்களையும் கேட்ட பின்னரே இந்த முடிவு ஏகமனதாக எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாநகர சபையின் பிரதி மேயராக ஈசன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். வடக்கில் உள்ளூராட்சி சபைகளில் ஏற்பட்டுள்ள தொங்கு நிலையை போக்கி மக்களுக்காக சேவையாற்ற ஏனைய கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளமையால் சிக்கல் நிலைகள் ஏற்படாதென எதிர்பார்க்கின்றோம்”  என்றார்.

இதே கருத்தை ரெலோ அமைப்பின்  பொதுச் செயலாளர்  ஸ்ரீகாந்தா அவர்களும் வெளியிட்டிருந்தார். இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் அதிக இடங்களைப் பிடித்துள்ள சாவகச்சேரி நகர சபை மற்றும் பருத்தித்துறை நகரசபை  இரண்டிலும் அந்தக் கட்சி ஆட்சி அமைக்க ததேகூ ஒத்துழைப்பு வழங்கும் எனத் தெரிவித்திருந்தார்.

நிலைமை இவ்வாறிருக்க செய்தியாளர் கூட்டத்தில் பேசிய கஜேந்திரகுமார்   தனது கட்சி “யாழ்ப்பாண  மாநகர சபை, நல்லூர் பிரதேச சபை, கரவெட்டி பிரதேச சபை ஆகியவற்றுக்கு தெரிவாகியுள்ள வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பலர் எம்முடன் இணைந்து செயற்பட விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்கள் அவ்வாறு முன்வந்தால் அந்தச் சபைகளில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னனி (அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்) பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் சந்தர்ப்பம் உள்ளது. அந்த சந்தர்ப்பத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியினராகிய நாங்கள் சரியாக பயன்படுத்துவோம்” என அதிரடியாகத் தெரிவித்தார்.

கஜேந்திரகுமாரின் பேச்சு தமிழ்க் காங்கிரஸ் தனித்துப்  பெரும்பான்மை இடங்களைப் பிடிக்காத உள்ளூராட்சி சபைகளிலும் போட்டி போடப் போகிறது என்பதைக் காட்டுகிறது. அதுதான் அவரது நிலைப்பாடு என்றால் சாவகச்சேரி நகர சபை, பருத்தித்துறை நகர சபை இரண்டிலும்  ததேகூ தனது வேட்பாளர்களை நிறுத்தத் தள்ளப்படலாம்.  விட்டுக் கொடுப்பு என்பது ஒரு வழிப்பாதை இல்லை. அது இருவழிப் பாதை என்பதை கஜேந்திரகுமாருக்கு படிப்பித்துக் காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் ததேகூ உள்ளது.  கஜேந்திரகுமார் போட்டியிடத் தீர்மானித்துள்ள சபைகளின் தேர்தல் முடிவுகள்  பின்வருமாறு அமைந்துள்ளன,

                              யாழ்ப்பாண மாநகர சபை தேர்தல் முடிவுகள் – 2018

கட்சி

வாக்குகள்

%

வட்டாரம் விகிதாசாரம் மொத்தம்l
யாழ்ப்பாண மாநகர சபை
ITAK

14,424

35.76 14 2

16

ACTC

12,020

29.8 9 4 13
EPDP

8.671

21.5 2 8 10
UNP

2,423

6.01 1 2

3

SLFP

1,029

11.62 0 2

2

TULF 261 2.66 1 0

1

JVP

242

0.60 0 0

0

Total

40,330

27 18

45

சாவகச்சேரி நகர சபை
ITAK

2,481

28.02 3 2

5

ACTC

2,779

35.76 6 0

6

EPDP

1.372

15.50 1 2

3

UNP

344

3.89 0 1

1

SLFP

1,029

11.62 1 1

2

SDPT

518

5.85 0 1

1

TULF

0

0 0 0

0

Total

8,884

11 7

18

பருத்தித்துறை நகர சபை
ITAK 1,880 31.80 3 2 5

ACTC

2,199 37.20 5 1 6
EPDP 777 13.14 1 1 2
UNP 83 1.4 0 0 0
SLFP 100 1.69 0 0 0
SLPP 66 1.12 0 0 0
TULF 403 6.83 0 1 1
Indepemdent 404 6.83 0 1 1
Total 5,912 9 6 15
நல்லூர் பிரதேச சபை

கட்சி

வாக்கு % வட்டாரம் விகிதாசாரம்

மொத்தம்

ITAK 5,953 31.87 6 0 6
ACTC 4,339 23.23 2 3 5
EPDP 3,562 19.07 3 1 4
UNP 884 4.73 0 1 1
SLFP 903 4.83 0 1 1
SLPP 274 1.47 0 0 0
TULF 716 3.83 0 1 1
JVP 63 0.34 0 0 0
Independent 1983 10.62 0 2 2

Total

11 8 19

வடமராச்சி தென் மேற்கு பிரதேச சபை (கரவெட்டி)

கட்சி வாக்கு

%

வட்டாரம் விகிதாசாரம் மொத்தம்
ITAK 6,206 26.16 9 0 9
ACTC 5,232 23.74 7 0 7
EPDP 1,975 8.96 0 3 3

UNP

1,109 5.03 0 2 2
SLFP 5,129 23.27 3 4 7
SLPP 125 0.57 0 0 0
TULF 2,264 10.27 0 3 3
Total 22,040 19 12 31

இந்தப்  புள்ளி விபரத்தின் அடிப்படையில் தமிழ்க் காங்கிரஸ் கட்சி யாழ்ப்பாண மாநகர சபையில் 10/45, சாவகச்சேரி நகரசபையில் 6/18, பருத்தித்துறை நகரசபையில் 6/15,நல்லூர் பிரதேச சபையில் 5/19, வடமராச்சி தென் மேற்கு (கரவெட்டி) பிரதேச சபையில் 7/31 இருக்கைகளைப்  பெற்றுள்ளது. வேறு விதமாகச் சொன்னால் சாவகச்சேரி நகரசபை மற்றும் பருத்தித்துறை நகரசபை  நீங்கலாக எஞ்சிய  யாழ்ப்பாண மாநகர சபை, நல்லூர் பிரதேச சபை, வடமராச்சி தென் மேற்கு பிரதேச  சபை (கரவெட்டி) மூன்றிலும் காங்கிரஸ் கட்சி இரண்டாவது இடத்தில் வந்துள்ளது. இருந்தும் அந்த சபைகளில் மேயர், தலைவர் பதவிகளுக்கு போட்டியிடப் போவதாக கஜேந்திரகுமார் அறிவித்துள்ளார்.  காங்கிரஸ் கட்சிக்கு  சில கட்சிகள் ஆதரவு தர முன்வந்துள்ளதாகக் கஜேந்திரகுமார் சொல்கிறார். மேலும் இந்தச் சபைகளுக்கு  இரகசிய வாக்கெடுப்பு மூலம் மேயர், தலைவர் போன்றோர் தெரிவு செய்யப்பட வேண்டும் என்கிறார்.

எதிலும் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் என்று வாய்ப்பறை கொட்டும் கஜேந்திரகுமார் ஏன் இரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்கிறார்?  பணம் கொடுத்து சில உறுப்பினர்களை தமிழ்க் காங்கிரஸ் விலைக்கு வாங்கி விட்டதா? எடுத்துக் காட்டாக யாழ்ப்பாண மாநகர சபை மேயர் தேர்தலில் அந்தக் கட்சியின் வேட்பாளர் வெல்ல வேண்டும் என்றால் இபிடிபி கட்சியின் 10 உறுப்பினர்களது ஆதரவு தேவை. அது கிடைத்துவிட்டதா?

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா ” உள்ளுராட்சி சபைகளில் அதிகபடியான ஆசனங்களை பெற்றிருக்கும் கட்சிகள் ஆட்சியமைப்பதற்கு சகல கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். அரசியல் சுயலாபங்களுக்காக ஒரு கட்சி ஆட்சி அமைப்பதைத் தடுக்கும் வகையில் மற்றவர்கள் செயற்படக்  கூடாது” எனக் கூறியுள்ளார்.

மார்ட்டின் வீதியில் உள்ள தமிழரசு கட்சியின் தலமை அவலுவலகத்தில் பெப்ரவரி 19 இல் நடந்த ஊடகவியலாளர்களை சந்தித்துக் கருத்துத் தெரிவிக்கும்போதே மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் “நாங்கள் எமது கட்சி சார்ந்த உறுப்பினர்களை அமைதி காக்குமாறு கேட்டிருக்கிறோம். ஒற்றுமையாக செயற்படுமாறு கேட்டிருக்கிறோம். அதனைக் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மிரட்டல் எனக்  கூறுவது அவரின் சதிதிட்டங்களுக்கு தடையாக அமையும் என்பதாலேயாகும். மேலும் இரகசிய வாக்கெடுப்பை நாங்கள் நிராகரிக்கிறோம். காரணம் அது ஒரு அர்த்தமற்ற செயற்பாடாகும்.

“தமிழ்தேசிய கூட்டமைப்பு 56 சபைகளில் 40 சபைகளை கைப்பற்றியுள்ளது. வடகிழக்கில் நாங்கள் பெரும்பான்மை இடங்களைப்  பெற்றிருக்கிறோம். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலமையிலான கட்சி 2 சபைகளை மட்டுமே கைப்பற்றியிருக்கின்றது. ஆகவே நாங்கள் பெரும்பான்மை பெற்ற இடங்களில் ஆட் சி அமைக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.  ஆட்சி அமைக்கும் கட்சிகள் மற்றைய கட்சிகளுக்குத் தடையாக இருக்கக் கூடாது. அவ்வாறு குழப்பினால் நாங்களும் குழப்பலாம், ஆனால் நாங்கள் அவ்வாறு சொல்லவுமில்லை. செய்யவும் மாட்டோம். தமிழ்தேசிய மக்கள் முன்னணி இந்தத் தடவை மட்டுமல்ல. ஒவ்வொரு தேர்தலிலும் எங்களை தோற்கடிப்பதாகக்  கூறுகிறது. இப்போதும் எங்களைத் தோற்கடிப்பதாகக் கூறுகிறார்கள். நாங்கள் வெற்றியடைந்தது  போல் வேறு கட்சிகள் வெற்றி பெறவில்லை. எனவே எம்மை குழப்புவது அல்லது தோற்கடிக்க நினைப்பது தமிழ்த் தேசத்தின் எதிர்காத்தை சிதைப்பதாக அமையும். மேலும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உண்மைக்குப் புறம்பான செய்திகள் வெளியிடுவதை நிறுத்தவேண்டும். இதனை நாங்கள் ஒரு கோரிக்கையாக முன்வைக்க விரும்புகிறோம்.”

மொட்டைத் தலைச்சி தலைமயிரைச் சிலுப்பிக் காட்டியது போல கஜேந்திரகுமாரின் கட்சி  இரண்டே இரண்டு சபைகளில்  மட்டும் பெரும்பான்மையோடு இருக்கிறது.  அதுவும் அறுதிப் பெரும்பான்மையோடு அல்ல. தமிழ்க் காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட சகல மாவட்டங்களிலும் தோல்வி அடைந்துள்ளது!

யாழ்ப்பாண மாவட்டம் தோல்வி
வவுனியா  மாவட்டம் தோல்வி
மன்னார் மாவட்டம் தோல்வி
கிளிநொச்சி மாவட்டம் தோல்வி
முல்லைத்தீவு மாவட்டம் தோல்வி

மட்டக்களப்பு மாவட்டம் தோல்வி
திருகோணமலை மாவட்டம் தோல்வி
அம்பாறை மாவட்டம் தோல்வி

யாழ்ப்பாணம்  மாநகரசபை தோல்வி
வல்வெட்டித்துறை நகர சபை தோல்வி
பருத்தித்துறை பிரதேச சபை தோல்வி
சாவகச்சேரி பிரதேச சபை தோல்வி

காங்கிரஸ் கட்சித்  துணைத் தலைவர் க.குமாரகுரு  கரவெட்டி பிரதேச சபையில் தோல்வி! காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் சுகாசின்  வட்டுக்கோட்டையில்  தோல்வி!

இரண்டு நகர சபைகளை மட்டும் கைப்பற்றிவிட்டு ஏதோ எல்லாவற்றிலும்  வெற்றி  பெற்று விட்டோம் என்கிற மாதிரி கஜேந்திரகுமார் பேசுகிறார்.  வானத்துக்கும் பூமிக்கும் துள்ளிக் குதிக்கிறார்.  எது போல என்றால் கோழி ஒரு முட்டையை இட்டுவிட்டு ஊரெல்லாம் கேட்கும் படி கொக்கரிக்குமாம்! அதுபோல!


 

About editor 3116 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply