கோத்தபாயவிடம் ஓடிய கஜேந்திரன்!! வெளிவரும் பல உண்மைகள்…
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
வடமராட்சியில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவித்தாவது,
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலர் செல்வராஜா கஜேந்திரனின் தம்பி கடத்தப்பட்ட போது கோத்தபாய ராஜபக்சவிடம் ஓடிபோய் கடத்தப்பட்ட சகோதரனை கஜேந்திரன் மீட்டு வந்தார்.
ஆனால் ஊரான் வீட்டுப் பிள்ளைகள் வெள்ளை வானில் கடத்தப்பட்டார்கள். அப்போது கடத்தப்பட்டவர்களை காப்பற்ற என்ன செய்தார்கள்.
வடக்கு மாகாண சபைத் தேர்தல் இடம்பெற்றிருந்த வேளை அதனைப் புறக்கணித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இப்போது வடக்கு மாகாண முதலமைச்சரின் ஆதரவை எதிர்பார்த்திருப்பது வேடிக்கையாக இருக்கின்றது.
அவர்கள் கூறியிருந்தது போல நாங்களும் மாகாண சபை தேர்தலை நிராகரித்து இருந்தால் எமக்கான முதல்வர் கிடைத்திருக்க மாட்டார். நாம் மாகாண சபைத் தேர்தலை நிராகரித்து இருந்தால் தென்னிலங்கையைச் சேர்ந்த வெற்றிலைக்காரர்கள், யானைக்காரர்கள் இங்கு முதல்வராக வந்திருப்பார்கள்.
நாம் மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றியடைந்தமையால் மாகாண சபையில் இனப்படுகொலை தீர்மானத்தை நிறைவேற்றி இருந்தோம்.
2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் போர் உச்சக்கட்ட நிலையில் இருந்தபோது மகிந்த ராஜபக்சவின் சகோதரனுடன் கஜேந்திரகுமார் பேசி இடைத்தரகர் வேலை பார்த்து பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் புலித்தேவன், நடேசன் போன்றவர்கள் வெள்ளைக் கொடிகளுடன் சரணடைய சொன்னீர்கள். அவர்களும் வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்திருந்தார்கள்.
அவ்வாறு சரணடைய வந்தவர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்கள்.அப்போது நீங்கள் என்ன செய்தீர்கள்?. இந்த கொடூரமான விடயத்தை பன்னாட்டுச் சமூகத்துக்கு உடனடியாக தெரிவித்திருக்க வேண்டும். எப்போதாவது பன்னாட்டுச் சமூகத்துக்கு இதைப் பற்றிக் கூறியிருக்கின்றீர்களா?.
கஜேந்திரகுமார் அதைச் ஒரு சில நாடுகளுக்கு கூறியனார் என்று சொல்லிவருகின்றார். அதுவும் உண்மையா? இல்லையா? என்று கடவுளுக்குத்தான் தெரியும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் தமிழ், சிங்கள, ஆங்கில மொழி ஊடாக இங்கு நடந்த இனப் படுகொலை தொடர்பாக ஏதாவது சாட்சியங்கள் இருந்தால் தாருங்கள் என்று கோரியிருந்தார்கள். அப்போது நீங்கள் எத்தனை சாட்சியங்களை வழங்கினீர்கள்?.
நீங்கள் எதுவும் கொடுக்காது சும்மா இருந்தீர்கள். ஆனால் நானும் சில மாகாண சபை உறுப்பினர்களும் இணைந்து பல சாட்சியங்களை வழங்கியிருந்தோம்.
ஒரு பக்கக் கடதாசியிலாவது இங்கு இனப்படுகொலை நடந்தது என்றுசாட்சியம் வழங்கியிருக்கின்றீர்களா?.
உங்களுக்கு மனதில் “தில்” இருந்தால் அதனைக் காட்டுங்கள். இதுவரை காலத்தில் மகிந்த பதவியில் இருந்த போது இங்கு இனப்படுகொலை இடம்பெற்றது என்று தைரியமாக எப்போதாவது கூறியிருக்கின்றீர்களா?. எனக்கும் மக்களுக்கும் தெரியும். நீங்கள் ஒழித்து விளையாடி வருகின்றீர்கள்.
இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக பன்னாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய உள்நாட்டு விசாரணை என்று மாற்றம் செய்து தீர்மானம் வந்தபோது நாம் அதனை ஆதரித்தோம். அப்போது எம்மை துரோகிகள் என்றவர்கள் நீங்கள் என்ன செய்தீர்கள்?.
பேராசிரியர் சொர்ணராஜாவை நாம் சந்தித்த போது, அவர் எங்களிடம் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட 30ஃ1 தீர்மானத்தின் ஊடாகவே நாம் பன்னாட்டு விசாரணையை செய்ய முடியும் என்று கூறினார்.
அப்போது சந்திப்பில் இடதுபக்கம் என்னுடன் இருந்த சுரேஷ் பிரேமச்சந்திரனை நான் பார்த்த போது அவர் மறு பக்கம் திரும்பினார். மற்றப் பக்கம் இருந்த கஜேந்திரகுமாரை நான் திரும்பி பார்த்த போது அவர் அடுத்த பக்கம் பார்த்தார்.
நான் வெளிப்படையாகக் கேட்கின்றேன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தலைவர் சம்பந்தனும் ஐ.நாவின் 30ஃ1 தீர்மானத்திணை ஏற்றுக் கொண்டமை துரோகத்தனமா அல்லது நீங்கள் செய்தது துரோகத்தனமா? என்று கூறுங்கள் என்றார்.
http://sltnews.com/archives/9848
Leave a Reply
You must be logged in to post a comment.