ஸ்கொட்லாந்தில் சுதந்திரம் என்பதே பேச்சாக இருக்கிறது!

ஸ்கொட்லாந்தில் சுதந்திரம் என்பதே பேச்சாக இருக்கிறது!
நக்கீரன்

அய்க்கிய இராச்சியம் (United Kingdom) என அழைக்கப்படும் நாடு பிரித்தானியா ( இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்கொட்லாந்து) மற்றும் வட அயர்லாந்து இரண்டையும் உள்ளடக்கிய நாடாகும்.

ஒற்றை ஆட்சியின் கீழ் வெற்றிகரமாக அதிகாரப் பரவலாக்கலை நடைமுறைப் படுத்திய நாடுகள் சிலவற்றில் அய்க்கிய இராச்சியம் ஒன்று என அரசியல் விற்பன்னர்கள் சொல்கிறார்கள்.

இங்கிலாந்து 10 ஆம் நூற்றாண்டு தொடங்கி ஒரே நாடாக இருந்து வருகிறது. இங்கிலாந்துக்கும் வேல்ஸ் நாட்டுக்கும் இடையிலான இணைப்பு கிபி 1284 தொடங்கியது. ஆனால் அதற்கான சட்ட வடிவம் (Act of Union) கிபி 1536 இல் கொடுக்கப்பட்டது. 1707 இல் இன்னொரு சட்டத்தின் வாயிலாக ஸ்கொட்லாந்து நிரந்தரமாக பிரித்தானியாவோடு சேர்ந்து கொண்டது. அயர்லாந்து 1801 இல் சேர்ந்து கொண்டது. இதன் பின்னர் பிரித்தானியாவின் அய்க்கிய இராச்சியம் மற்றும் அயர்லாந்து (United Kingdom of Great Britain and Ireland) எனப் பெயர் சூட்டப்பட்;டது.

1921 ஆம் ஆண்டு அங்கிலோ – அயிரிஷ் உடன்பாட்டின் கீழ் அயர்லாந்து இரண்டாகக் கூறுபோடப்பட்ட போது அயர்லாந்தில் உள்ள 6 மாவட்டங்கள் (counties) வட அயர்லாந்து என அழைக்கப்பட்டது. எஞ்சிய பகுதி அயர்லாந்து குடியரசு எனப் பிரகடனம் செய்து கொண்டது.Image result for Scotland

இதன் பின்னர் மீண்டும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதுதான் இன்றுள்ள பிரித்தானியாவின் அய்க்கிய இராச்சியம் மற்றும் வட அயர்லாந்து  (United Kingdom of Great Britain and Northern Ireland) என்ற பெயராகும்.

இப்போது, சரியாக 301 ஆண்டுகளுக்கு முன் பிரித்தானியாவில் சேர்ந்து கொண்ட ஸ்கொட்லாந்து நாட்டில் சுதந்திரத்துக்கான பிரிவினை முழக்கம் கேட்கத் தொடங்கியுள்ளது.

வென்டி அலெக்சாந்தர் என்பவர் ஸ்கொட்லாந்து நாட்டு தொழில் கட்சியின் தலைவராக இருக்கிறார். கடந்த மே மாதம் அவர் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். அது பிரதமர் கோர்டன் பிறவுண் (Gordon Brown) உட்பட பல அரசியல்வாதிகளை வியப்பில் ஆழ்த்தியது. அவர் போட்ட குண்டு இதுதான் – ஸ்கொட்லாந்து சுதந்திரம்பற்றி ஒரு நேரடி வாக்கு எடுங்கள மக்களின் தீர்ப்பைப்பற்றி நான் அஞ்சவில்லை.”

இந்த அதிரடி அறிவிப்பு தொழில் கட்சியின் வழக்கமான கொள்கைக்கு – அய்க்கிய இராச்சியத்தின் ஒற்றுமையைக் பாதுகாப்பது – மாறானது. ஒரு இக்கட்டான சிக்கலில் மாட்டிக் கொண்ட பிரதமர் கோர்டன் பிறவுண் வென்டி அலெக்சாந்தர் சொன்னதைக் காதில் போட்டுக் கொண்டதாகக் காட்டிக் கொள்ளவில்லை.

வென்டி அலெக்சாந்தர் ஸ்கொட்லாந்து அய்க்கிய இராச்சியத்தில் இருந்து பிரிவதை விரும்பவில்லை. அதனால் இப்போது ஒரு நேரடி வாக்கெடுப்பை நடத்தினால் மக்கள் சுதந்திரத்தை எதிர்த்து வாக்களிக்கக் கூடும் என நினைக்கிறார்.

ஸ்கொட்லாந்தின் ஆட்சி அதிகாரம் தற்போது ஸ்கொட்லாந்து தேசியக் கட்சி (ளுஉழவவiளா யேவழையெடளைவ Pயசவல) யின் கையில்தான் இருக்கிறது. கடந்த 2007 மே மாதத்தில் நடந்த பொதுத் தேர்தலில் ஸ்கொட்லாந்து தேசியக் கட்சி 50 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக ஆட்சிக் கட்டிலில் இருந்த பிரித்தானிய தொழிற் கட்சியைத் தோற்கடித்தது.

அந்தக் கட்சியும் நேரடி வாக்கொடுப்பை விரும்புகிறது. ஆனால் இப்போது அல்ல. 2010 இல் நேரடி வாக்கெடுப்பு நடத்தலாம் என்கிறது.

ஸ்கொட்டிஷ் தேசியக் கட்சி நேரடி வாக்கெடுப்பில் வெற்றி பெற்றால் இலண்டனோடு பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறது. அதற்கு இசைவாக சுதந்திரம் பெற்ற ஸ்கொட்லாந்து மக்களின் உரிமைகளை உறுதி செய்யும் சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றும். அப்படியான சட்டம் அய்ரோப்பிய சட்டத்தைப் போன்று இருக்கும். பேச்சு வார்த்தைகள் இழுத்தடிக்கப்படலாம். சிக்கலாகவும் இருக்கலாம். அமைதியான முறையில் ஒரு நாடு இரண்டாகப் பிரிந்ததுக்கு வரலாற்றில் முன் எடுத்துக்காட்டுக்கள் இல்லை. வேண்டும் என்றால் அண்மையில் இரண்டு நாடுகளாகத் துண்டாடப்பட்ட செக்கோஸ்லோவியாவை எடுத்துக்காட்டாகக் காட்டலாம்.

பிரித்தானிய குடிமக்கள் எந்த நாட்டின் குடியுரிமையை விரும்புகிறார்கள் என்பதைத் தீர்மானிக்க கால அவகாசம் கொடுக்கப்படலாம். இங்கிலாந்தில் ஸ்கொட்லாந்தோடு தொடர்புகளை வைத்துக் கொண்டு அதே நேரம் வேலை செய்து கொண்டு வாழும் ஸ்கொட்டிஷ் மக்களுக்கு முடிவு எடுப்பது வில்லங்கமாக இருக்கலாம். இதில் பிரித்தானிய பி;ரதமர் கோர்டன் பிறவுண் அவர்களும் சேர்மதி. இங்கிலாந்து – ஸ்கொட்டிஷ் எல்லையைக் கடந்து செல்ல புதிய கடவுச் சீட்டுக்கூடத் தேவைப்படலாம்.

சுதந்திர ஸ்கொட்லாந்து அய்ரோப்பிய ஒன்றியத்தில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம். அது பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளப்படலாம். அப்போது ஸ்கொட்லாந்து ஸ்ரேலிங் நாணயத்தைக் கைவிட்டு யூரோவைக் கைக்கொள்ளலாம்.

பிரித்தானியாவின் அய்க்கிய இராச்சியம் மற்றும் வட அயர்லாந்து ஒரே பார்வையில்,

இறைமை (Sovereign)                    – எலிசெபெத் அரசியார் 11 (1952)
பிரதமர்                                                    – கோர்டன் பிறவுண் (2007)
பரப்பளவு                                                – 241,590 சதுர கிமீ (93,278 சதுர மைல்)
தலைநகர்                                                – இலண்டன் (7.6 மில்லியன – 2003 மதிப்பீடு)
மக்கள் தொகை                                      – 60.8 மில்லியன் (2007 மதிப்பீடு)
இனங்கள்                                                – ஆங்கிலேயர் (83.6 விழுக்காடு) ஸ்கொட்டிஷ் (8.6 விழுக்காடு) வெல்ஷ் (4.9 விழுக்காடு) வட அய்ரிஷ் மக்கள் (2.9 விழுக்காடு) கருப்பர்                                                    – (2.0 விழுக்காடு) 2001 ஆம் ஆண்டுக் கணிப்பு.
மொழிகள்                                               – ஆங்கிலம், வெல்ஷ், ஸ்கொட்டிஷ்
சமயம்                                                      – கிறித்தவர்கள் (71.6 விழுக்காடு) முஸ்லிம் (2.7 விழுக்காடு) இந்து (1.0 விழுக்காடு) எந்த மதமும் இல்லாதவர்கள் (23.1 விழுக்காடு)
அகவைப் பலம்                                       – 78.7 ஆண்டுகள்
மொத்த உள்ளுர் உற்பத்தி (GDP)       – 2.037 திரில்லியன் டொலர்கள்
தனி ஆள் வருமானம்                             – 35,100 டொலர்கள்
எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள்          – 99 விழுக்காடு
ஸ்கொட்லாந்து ஒரே பார்வையில்
பரப்பளவு                     – 78,772 சதுர கிமீ (30,414 சதுர மைல்”

மக்கள்தொகை           – 5,100,000 (1991 யூன் மதிப்பீடு)

எல்லைகள் – தெற்கே இங்கிலாந்துடன் 60 மைல் எல்லை. மேற்கும் வடக்கும் அடலாந்திப் பெருங்கடல். கிழக்கு வட கடல் (North Sea)

பெயர் வந்த காரணம் – அயர்லந்தில் இருந்து ஸ்கொட்லாந்துக்கு கிபி 5 ஆம் 6ஆம் நூற்றாண்டில் இடம்பெயர்ந்த செல்ரிக் (Celtic) இனத்தவர் வைத்த பெயர். இவர்கள் ஏனைய இனக் குழுக்களோடு கலந்து இன்றைய ஸ்கொட்லாந்து நாடு உருவானது.

தீவுகள் – 790 தீவுகள் இருக்கின்றன.
——————————————————————————
இங்கிலாந்து மக்களுக்கும் ஸ்கொட்டிஷ் மக்களுக்கும் நீண்ட கால வரலாற்றுத் தொடர்பு உண்டு. அது 1707 க்கும் முந்தியது. அந்த உணர்வு காரணமாக அவர்கள் எலிசெபெத் அரசியாரை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அவர் எலிசெபெத்II என்பதற்குப் பதில் வெறுமனே எலிசெபெத் அரசி என்றே அழைக்கப்படுவார். அவரது பேரன் முடிசூட்டிக் கொண்டால் அவர் வில்லியம் ஏ என்பதற்குப் பதில் வில்லியம் ஐஐ என்றே அழைக்கப்படுவார்.

1707 இல் இயற்றப்பட்ட சட்டம் (Act of Union)  இங்கிலாந்தில் ஸ்கொட்டிஷ் மக்களுக்கு எதிரான எதிர்ப்பலைகளை உருவாக்கியது. அது மீண்டும் தலைதூக்கலாம். குறிப்பாக ஸ்கொட்டிஷ் நாடாளுமன்றம் உருவாக்கப்பட்ட பின்னர் அதனை ஸ்கொட்டிஷ் தேசியக் கட்சி கைப்பற்றியிருப்பது ஆங்கிலேயர்களுக்கு கடுப்பை உண்டாக்கி இருக்கிறது. 2006 இல் ளுரனெயல வுநடநபசயிh நாளேடு நடத்திய ஒரு கருத்துக் கணிப்பில் 59 விழுக்காடு ஆங்கில வாக்காளர்கள் ஸ்கொட்டிஷ் பிரிந்து போவதை ஆதரித்துள்ளார்கள்!

என்ன காரணம்? ஆங்கிலேயரை விட ஸ்கொட்டிஷ் மக்கள் நன்றாக வாழ்கிறார்கள் என்ற எண்ணம் ஆகும். 2003 – 2004 ஆண்டில் இங்கிலாந்து தனி ஒரு குடிமகனுக்குச் செலவழித்த தொகை 5,940 ஸ்ரேலிங் பவுண் ஆகும். ஆனால் ஸ்கொட்டிஷ் குடிமகனுக்குச் செலவழித்த தொகை 7,346 ஸ்ரேலிங் பவுண் ஆகும்!
பழமைவாத (Conservatives) க் கட்சிக்காரர்களுக்கு மேலும் ஒரு காரணம் இருக்கிறது. இங்கிலாந்தில் மட்டும் தேர்தல் நடந்தால் அந்தக் கட்சிக்கு வெல்லும்; வாய்ப்பு அதிகரிக்கும்.

ஆங்கிலேயரை விட ஸ்கொட்டிஷ் மக்கள் நன்றாக வாழ்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு ஸ்கொட்டிஷ் தேசியக் கட்சியின் பதி;ல் என்ன? ஒரு சுதந்திர ஸ்கொட்லாந்து அய்ரோப்பிய ஒன்றியத்தின் உதவியோடு தனது பொருளாதாரத்தை நன்றாக சமாளித்துக் கொள்ள முடியும். அண்டை நாடுகளான நோர்வே, டென்மார்க் மற்றும் அய்ஸ்லாந்து போல பொருளாதார செழிப்போடு வாழ முடியும். மேலும் ஒரு பலமான காரணம் இருக்கிறது. அது வடகடல் (North Sea) எண்ணெய் வளமாகும்.

வடகடலில் ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் மதகு எண்ணெய் எடுக்கப்படுகிறது. கடந்த ஆண்டு (2007) எண்ணெய் விற்பனையால் கிடைத்த வருவாய் 8 பில்வியன் ஸ்ரேலிங் பவுணாகும். இந்த ஆண்டு இது 12.5 பில்லியன் ஸ்ரேலிங் பவுணாக உயரக் கூடும். ஆனால் இங்கிலாந்து வடகடல் எண்ணெய் வருவாயை ஸ்கொட்லாந்துக்கு விட்டுக் கொடுக்குமா என்பது கேள்விக் குறி ஆகும். இங்கிலாந்து வடகடல் எண்ணெய் வருவாயில் பங்கு கேட்கலாம்.

இன்றைய சூழ்நிலையில் ஸ்கொட்லாந்தின் சுதந்திரம் எப்போது சாத்தியம்? பெரும்பாலும் 2010 இல் அல்லது அடுத்த சில ஆண்டுகளில் சாத்தியமாகலாம். ஒரு நேரடி வாக்கெடுப்பில் பிரிவினைக்கு ஆதரவாகக் கணிசமான ஆதரவு கிடைக்குமானால் அதனை தார்மீக அடிப்படையில் ஏற்றுக்கொள்ள பிரித்தானியா கடமைப்பட்டுள்ளது. தற்போது 52 விழுக்காடு ஸ்கொட்டிஷ் மக்கள் சுதந்திரத்தை ஆதரிக்கிறார்கள்.

மனிதனுக்குப் பசி, தாகம், தூக்கம் எப்படி இயற்கையானதோ அப்படியே சுதந்திரமாக வாழவேண்டும் என்ற ஆசையும் இயற்கையானது.

ஒரு வேளை ஸ்கொட்டிஷ் மக்கள் தன் இச்சையாக சுதந்திரப் பிரகடனம் செய்தால் என்ன நடக்கும்? அதனை ஏற்றுக் கொள்ள அனைத்துலக நாடுகள் மறுக்கலாம். எது எப்படி இருப்பினும் இப்போது ஸ்கொட்லாந்தில் சுதந்திரம் என்பதே பேச்சாக இருக்கிறது!


Scotland  Plans To Stage  Referendum On Independence

V.Thangavelu

When  UN was founded in  June 26, 1945 after World War 11  to replace the League of Nations it had only 51 members.  This number has  increased to 192  when Montenegro   joined UN in 2006.  Montenegro has a population of about 680,000 and  13,812 sq.kms of territory.

Between 1991 – 2006  thirty three (33) countries joined the UN largely due to the collapse of  the Soviet Union in 1990 and Yugoslavia in  1991. All the 15 constituent republics of the Soviet Union and 6  federated states in Yugoslavia declared independence based  essentially on the  right to self-determination.  In  principle  the right self determination allows a people to choose its own political destiny and to determine its own form of economic, cultural and social development.

The  UN was  founded to  stop wars between countries and to provide a platform for dialogue and facilitate cooperation in international law, international security, economic development, social progress, human rights and achievement of world peace. There is no doubt that UN has succeeded in preventing World War 111, but not wars between  some member nations within and without.

Now South Sudan is poised to declare formal independence on July 09, 2011 after a referendum  held in January, 2011 supervised by the UN. The referendum was held following  the signing of the  Naivasha Agreement (2005)  between the Khartorum central government and the Sudan People’s Liberation Army/Movement (SPLA/M). On  February 07,  2011, the referendum commission announced that 98.83% voted in favour of independence. It is a matter of time before South Sudan takes its seat  in UN.

An unexpected candidate after South Sudan is Scotland where the Scottish Nationalist Party  (SNP)  has won elections on a plank for independence  for Scotland. On May 05,  2011  general election  to the Scottish parliament  to elect 129 members the SNP won a  historic 69 seats (45.39% of the popular vote) and its leader  Alex Salmond to remain First Minister of Scotland.

The SNP overall majority means that there is sufficient support in the Scottish Parliament to hold a referendum.  The SNP  promised in  its election manifesto to bring forward an independence referendum during the second half of Parliamentary session. The SNP failed to muster enough support for  independence in the last Parliament.

Leader Alex Salmond said that the SNP would “give Scots an opportunity to decide our nation’s future” adding that opposition parties would “have no choice” but to back a referendum. The Green Party  has endorsed a referendum on Scottish independence.

The election delivered the first majority government since the opening of Holyrood, a remarkable feat as the mixed member proportional representation system is used to elect members and was originally implemented to prevent single party governments as well as produce proportional results in Scotland. The SNP gained 32 constituencies, 22 from the Scottish Labour Party (SLP),  9  from the Scottish Liberal Democrats (SLD)  and one from the Scottish Conservatives(SC). The SLP lost seven seats and was their worst election defeat in Scotland since 1931  and will be the largest opposition party.  The SLD were soundly defeated this time, their popular vote share was cut in half and their seat total reduced from 17 to five.  For SC  the election proved disappointing as their popular vote dropped slightly and their number of seats fell by five.  Below is the detailed results of the election.

Scottish general election, 2011

Parties Additional member system Total seats  
Constituency Region  
Votes  % +/− Seats +/− Votes  % +/− Seats +/− Total +/−  %
  SNP 902,915 45.39 +12.46 53 +32 876,421 44.04 +13.03 16 −9 69 +23 53.49
  Labour 630,461 31.69 −0.45 15 −20 523,559 26.31 −2.85 22 +13 37 −7 28.68
  Conservative 276,652 13.91 −2.69 3 −3 245,967 12.36 −1.55 12 −2 15 −5 11.63
  Liberal Democrats 157,714 7.93 −8.25 2 −9 103,472 5.20 −6.10 3 −3 5 −12 3.88
  Scottish Green 87,060 4.38 +0.33 2 +1 2 +1 1.55
  Independent 12,357 0.62 -0.62 0 ±0 22,306 1.12 +0.08 1 ±0 1 ±0 0.78
  Others 9,123 0 0 0 0 131,081 7 1 0 0 0 0 0
  Total 1,989,222 100 73 ±0 1,991,051 100 0 56 0 129 0 100

During the campaign, the four main party leaders engaged in a series of televised debates, as they had in every previous general election. These key debates were held on  March 29 (STV)  May 01 (BBC) and May 03 (STV). The results of the election were broadcast live on BBC Scotland and STV on the night of the election.

It was the fourth general election  since the devolved parliament was established in 1999 and was held on the same day as elections to the National Assembly for Wales and Northern Ireland Assembly.Image result for Scotland

The recorded history  of Scotland begins with the expansion  of the Roman Empire  in Britain when the Romans occupied what is now broadly England, Wales and Scotland administering it as a Roman province called Britannia. Because of the geographical orientation of Scotland and its strong reliance on trade routes by sea, the kingdom held close links in the south and east with the Baltic countries and through Ireland with France and the continent of Europe.

The Kingdom of Scotland  was an independent state from its own unification  in 843 AD. Though it  was largely conquered in 1296 by Edward 1 of England  resistance continued until Scotland regained de facto independence after defeating English forces at the Battle of Banmockburn in 1314 AD.  England finally acknowledged Scottish independence with the signing of the Treaty of Edinburgh – Northampton in 1328.

The crowns of England and Scotland were united by the accession of James VI to the English throne in 1603. However, Scotland remained a sovereign and officially independent state until the Scottish parliament voted on 6 January 1707, by 110 to 69 to adopt the Treaty of Union. It was an  economic union  most of its 25 articles dealt with economic arrangements for the new state known as “Great Britain.” It added 45 Scots to the 513 members of the House of Commons and 16 Scots to the 190 members of the House of Lords.  The Acts of Union that put the Treaty into effect provided for the merging of the two nations by means of dissolution of the Parliament of Scotland and the Parliament of England and their replacement by a new Parliament of Great Britain located in Westminster, England. As a result of provisions in the Treaty, as well as much of Scotland’s relative isolation, many of Scotland’s institutions remained separate and the Scottish national identity has remained strong and distinct.

At the time of the union of the parliaments, the measure was deeply unpopular in both Scotland and England. The Scottish signatories to the treaty were forced to sign the documents in secrecy because of mass rioting and unrest in the Scottish capital, Edinburgh. Scottish nationalists  believe that the loss of independent Scottish representation internationally is detrimental to Scottish interests and that  the British government acts primarily in the interest of the entire United Kingdom and to the  deliberate detriment of specific Scottish interests. Those who oppose Scottish independence and endorse the continuation of a form of union make a distinction between nationalism and patriotism. They argue    that cultural, social, political, diplomatic and economic influence and benefits enjoyed by Scotland as part of a great power without compromising its distinctive national identity, outweighs the loss of fully independent Scottish sovereignty.Image result for Scotland

Following the Acts of Union which united Scotland with England into the Kingdom of Great Britain and following the industrial revolution Scotland became one of the commercial, intellectual and industrial powerhouses of Europe. Its industrial decline following  World War 11 was particularly marked,  but in recent decades the country has enjoyed something of a political, cultural and economic renaissance fuelled in part by  revenue from  North Sea Oil and gas. And lately by a devolved parliament.

Scotland has a total population of 5,222, 000 (2010 estimate) covering an area of 78,782 sq kms (30,418 sq mls).

Religion – Christianity (74.9%): primarily Church of Scotland (42.4%) and Roman Catholicism (15.9%), non-religious (27.5%), Islam (0.8%).

Languages: Scottish English, Scots (Doric, Central and Border) and Gaelic.

Ethnic Groups

White: 4,960,334 – 98.19%,  Scottish: 4,459,071 – 88.09%, Other White British: 373,685 – 7.38%, Any other White background: 87,650 – 1.73%, White Irish: 49,428 – 0.98%, Mixed: 12,764 – 0.25%, South Asian: 55,007 – 1.09%.

Through out history people have fought for independence shedding blood and tears. The catalyst was the American War of Independence which declared that three things are obviously true:

  • That all men are created equal
  • That all men have some rights given to them by God
  • That among these rights are life, liberty, and the pursuit of happiness.

So whenever any  state  is getting in the way of these rights, people have the right to change it or get rid of it, and to make a new state  in whatever way seems most likely, peacefully if possible and by violence, if necessary.

The SNP’s historic majority at Holyrood has cleared the way for the party to seek a public vote on whether Scotland should break the union with the UK. The real driving force for a Scottish independence  has been the rising national discontent in Scotland against centralised Westminster rule. However, current polls  have shown that there isn’t majority support for independence. Both Labour and the Conservatives have made it clear they will campaign hard to prevent the breakup of the UK, but Westminster wont stop the referendum from taking place.

In the meantime Queen Elizabeth has expressed her anxiety about the SNP’s plan for an independence referendum and its ramifications for their Union.  Palace officials have asked Downing Street to provide a constitutional expert to advise on how the referendum will be staged and the dismantling of the UK in the event of a ‘yes’ vote. She is said to be concerned at the prospect of 304 year-old Union between England and Scotland  being broken up during her reign. In a remark interpreted as criticism of Scotland’s quest for independence she told MPs “I cannot forget I was crowned Queen of the United Kingdom.”

Notwithstanding Queen’s concerns, if the Scottish people do vote for independence like South Sudan it will end in peaceful  and mutual divorce from Britain in 4 years.  Edinburgh Castle, overlooking the Scottish capital, has witnessed fierce battles between the armies of Scotland and England in the past. Today, the Union Jack flies over the Castle, but, if the SNP  has its way, that flag could be replaced by the blue and white Scottish saltire. There is no official national anthem of Scotland, however a number of songs are used as de facto Scottish anthems, most notably Flower of Scotland. (June 02, 2011)


 

 

About editor 3017 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply