உள்ளூர் அதிகாரசபைத் தேர்தல்  2018-02-10 தேர்தல் அறிக்கை (Manifesto) 

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி
(தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு)
உள்@ர் அதிகாரசபைத் தேர்தல்
2018 – 02 – 10
தேர்தல் அறிக்கை
(Manifesto)

அன்பான வாக்காளப் பெருமக்களே!

2018 “பெப்ரவரி” 10 ஆம் நாள் இலங்கை நாடு முழுவதும் உள்@ர் அதிகார சபைத் தேர்தல்களுக்கான வாக்களிப்பு நடைபெறவுள்ளது.

இந்தத் தேர்தலானது ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றத்திலும் அந்தந்த ஊர் மக்கள் பிரதிநிதிகள், தலைமை தாங்கும், தலைமைத்துவத்தைக் கட்டியெழுப்பும் ஜனநாயக சந்தர்ப்பமாகும்.

இம்முறை பெண்களும் இளைஞர்களும் குறிப்பாக இன விடுதலைக்கு தம்மை அர்ப்பணித்த போராளிகளும்; இத் தலைமைத்துவத்தை பெறும் வாய்ப்புக்கள் கொண்டுள்ளனர்;.

பாராளுமன்றத்தினால் உருவாக்கப்படவுள்ள புதிய அரசமைப்பில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கும் பொழுது மத்திய அரசு, மாகாண அரசு என்பவைகளுடன் உள்@ர் ஆட்சி மன்றங்களுக்கும் அதிகாரங்கள் உருத்துக் கொண்டனவாக இருக்கும்.

இவற்றை நிறைவேற்றுவதில் தலைமைத்துவம் வழங்குபவராகவும், ஆளுமை மிக்கவராகவும், வினைத்திறன், அர்ப்பணிப்பு, நேர்மை உடையவராகவும், ஊழல் அற்ற, ஊதாரித்தனமற்ற உறுப்பினர்களாகவும், மக்களிடம் நன்மதிப்பைப் பெறும் செயல்வீரராக விளங்குவர்.

அத்தோடு தாம் சார்ந்த அரசியல் கட்சியின் தீர்மானங்களுக்கமைவாகவும், மக்கள் வழங்கிய ஆணையை ஏற்றும் அரசியல் தீர்வுகளை வெற்றி பெறச் செய்யவும், அவற்றை நிறைவு செய்யவும் கடமைப்பட்டவராவர்.

போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களையும் மக்களையும் மீளக் கட்டியெழுப்பும் நிகழ்ச்சித்திட்டங்களையும் நடைமுறைப்படுத்தவும் நிறைவேற்றவும், பொறுப்புக் கூறக் கூடிய வேட்பாளராய்,உறுப்பினராய் இருப்பார்; என தம்மை நிரூபிக்க வேண்டியவராயிருப்பர்.

இவ்வுள்@ர் அதிகாரசபைத் தேர்தலின் இன்னொரு முக்கியத்துவம்

1.குறிப்பாக தெற்கிலும், வடக்கிலும் மக்களின் ஆதரவும் தலைமைத்துவமும்,செல்வாக்கும் யாரிடம் இருக்கிறது என்பதை நாட்டு மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் எடுத்துக் காட்டுவதாகும்.

2.குறிப்பாக 2015 ஆட்சி மாற்றத்தின் பின் இனப்பிரச்சனைத் தீர்வு அதற்கான அரசியல் அமைப்பு உருவாக்கம், நிலம், மீள்குடியேற்றம் உட்பட்ட பிரச்சனைகள் அதற்கான தீர்வுகள் தொடர்பில் அரசுடன் இணைந்து நிற்கும் கட்சிகளும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பொருந்தியுள்ள உடன்பாடுகள் அதற்கு வலுவூட்டும் ஐ.நா.மனித உரிமைப் பேரவைத் தீர்மானங்களும், சர்வதேச ஈடுபாடுகளும் தொடர்வதை உறுதிப்படுத்துவதை மக்கள் ஏற்கிறார்கள் என்பதற்கான அங்கீகாரம் பெறவைப்;பதுமாகும்.

எவ்வாறெனினும் உள்@ர் அதிகாரசபைத் தேர்தலாக இருப்பினும் அரசியல் முக்கியத்துவமுள்ள தேர்தலாக உருவெடுத்;துள்ளது இத் தேர்தல்.

த.தே.கூட்டமைப்பினால் முன்னுள்ள பொறுப்பு

2012 – 2015 ஐ.நா மனித உரிமைப் பேரவைத் தீர்மானங்களும், சர்வதேச இராஜதந்திரத் தலையீடுகளிலிருந்தும்;
போர் முடிந்து 2011லிருந்து அமெரிக்க அரசு மற்றும் நாடுகளின் இராஜதந்திர தொடர்புகளும் ஐ.நா மனித உரிமைப் பேரவைத் தீர்மானங்கள் 2015 வரையிலும் த.தே.கூட்டமைப்பு முக்கிய வகிபாகத்தை செலுத்தி வந்திருக்கிறது. அவ்வகிபாகம் தொடர்ந்து வருகிறது. இந்த சர்வதேச சந்தர்ப்பத்தை நாம் பற்றி நிற்க வேண்;டும்.

“அரசியல் தீர்வு தொடர்பில் நிலைப்பாடு”

2015 தேர்தல் அறிக்கைளிலிருந்து

(அ) தமிழ் மக்கள் தனித்துவமிக்க தேசிய இனமாவர்;

(ஆ) வடக்குக் கிழக்கு மாகாணங்கள் தமிழ் மக்களதும் தமிழ் பேசும் முஸ்லீம் மக்களதும் பூர்வீக வாழ் விடங்கள்;

(இ)தமிழ் மக்கள் ஒரு தனித்துவமான மக்கள் என்ற அடிப்படையில் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள்;

(ஈ) சமஷ்டிக் கட்டமைப்புக்குள்ளே ஒன்றுபட்ட வடக்குக் கிழக்கு அலகைக் கொண்ட அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகள் தொடர்ந்து அமுல்படுத்தப்பட வேண்டும்;
வரலாற்றுக் குடிகளான தமிழ் பேசும் முஸ்லீம் மக்களும் பகிரப்படும் அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகளிலும் நன்மைகளைப் பெற உரித்துடையவர்கள்;

(உ) பகிரப்பட்ட இறையாண்மையின் அடிப்படையில் உருவாக்கப்படும் அதிகாரப் பகிர்வானது நிலத்தின் மீதும், தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், சட்டம் ஒழுங்கு, சட்ட அமுலாக்கம் மீதும், சமூக, பொருளாதார அபிவிருத்தியின் மீதும், வேலைவாய்ப்பு, சுகாதாரம், கல்வி, உயர்கல்வி, தொழில் பயிற்சி, விவசாயம், மீன்பிடி, கைத்தொழில், கால்நடை அபிவிருத்தி, பண்பாடு, உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் திரட்டிக் கொள்ளும் வளங்கள் மற்றும் நிதி அதிகாரம் மீதானதாகவும் இருத்தல் வேண்டும்.

2013 மாகாணசபைத் தேர்தல் அறிக்கையிலும், 2015 பொதுத் தேர்தல் அறிக்கையிலும் பொறிக்கப்பட்ட அக் கொள்கைத் திட்டமானது; 2002 நோர்வே ஒஸ்லோ கொள்கைப் பிரகடனமானது.

“ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ்ப் பேசும் மக்களின் வரலாற்று ரீதியிலான வாழ்விடப்பகுதிகளில் உள்ளக சுயநிர்ணய உரிமைக் கொள்கைப் பிரகாரம் சம~;டிக் கட்டமைப்பின் அடிப்படையிலமைந்த தீர்வொன்றை ஆராய்தல்” என்பதாகும்.

இடைக்கால அறிக்கையின் உள்ளடக்கமும் விமர்சனங்களும்,

இப் பின்னணிகளிலிருந்து உருவாக்கப்பட்டு வரும் புதிய அரசியலமைப்புக்கு காணப்பட்ட இணக்கங்கள், இணக்கங்காணப்படாதவைகள் மற்றும் இணக்கத்திற்காகப் பேச வேண்டிய விடயங்களும் கொண்டதுதான் இடைக்கால அறிக்கை. இந்த அறிக்கையானது தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட இறுதித் தீர்வுத்திட்டமல்ல என்பதைத் திட்டவட்டமாக கூறுகின்றோம்.

இப்பொழுது இடைக்கால அறிக்கை தொடர்பில் எழுப்பப்படும் கேள்விகள், உண்மைக்கு மாறாகப் புனையப்பட்ட விமர்சனங்கள் இவ்வறிக்கையைப் பார்த்து, தென்னிலங்கையில், “நாட்;டைப் பிளவுபடுத்தப் போகின்றது இடைக்கால அறிக்கை என்று உள்ளூர் ஆட்சித் தேர்தல்காலப் பிரசாரங்களும், இனவாதக் கூச்சல்களும் இடம்பெறுகின்றன.

ஆனால் த.தே.கூட்டமைப்பு, தமிழரசுக் கட்சி 2015 பொதுத் தேர்தல் மற்றும் கொள்கைப் பிரகடனங்களிலிருந்து ஒரு போதும் விலகியோ, விட்டுக் கொடுத்தோ செயல்படாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கின்றது. புதிலாக இக் கொள்கைத் திட்டங்களை,கொண்ட இலக்கை அடைவதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டிய பொறுப்பு உண்டு என்பதையும் தெரிவிக்கின்றோம்.

புதிய அரசியல் அமைப்பும் இடைக்கால அறிக்கையும்,

2011, 2013, 2015 தேர்தல் காலங்களில் வெளியிட்ட தேர்தல் அறிக்கைகளுக்கு மக்கள் ஆணை தரப்பட்டிருக்கிறது. புதிய அரசிலமைப்பு உருவாக்க வேண்டும். “இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணவேண்டும்” என்று மக்கள் ஆணை தந்திருக்கிறார்கள். நாம் எழுந்தமானமாக இந்த ஆணையைத் தூக்கி வீசிவிடமுடியாது.

அதே நேரத்தில் இலங்கையில் இருந்து வரும் இனப் பிரச்சனைக்கோ, ஏனைய பிரச்சனைகளுக்கோ திகதி குறிப்பிட்டுத் தீர்க்கக் கூடிய திட்டம் எதுவும் இல்லாதவர்கள்.

“தலைமையை மாற்றவேண்டும்” என்று மட்டுமான இலக்கில் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். தமிழர் விடுதலைக்காக அர்த்தமுள்ள செயல்பாடுகள் ஏதும் இல்லாமல் விமர்சிக்கின்றார்கள்.

த.தே.கூட்டமைப்பின் பொறுப்பும், கடமையும்

ஒரு நாட்டில்; ஃ ஒருமித்த நாட்டில் சமஷ்டிக் கட்டமைப்பில் (Federal structure)   தன்னாட்சி அலகுகள் உருவாக்கப்பட்டு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு அவை மீளப் பெறமுடியாத பாதுகாப்புடன் அரசியலமைப்பில் இடம்பெறவைப்;பது ஆரம்பக் கடமையாகவிருக்கிறது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாப்பில் தமிழ் மக்களுக்கு உரித்தான இறைமை, சுயநிர்ணய உரிமை, சமஷ்டிக் கட்டமைப்பில் மத்திக்கு திரும்பப் பெறமுடியாத பாதுகாப்பான அடிப்படையில் பகிரப்பட்ட அல்லது மாகாணங்களுக்கு கையளிக்கப்பட்ட பூரண அதிகாரங்கள் (அ) காணி, (ஆ) சட்டம் ஒழுங்கு (இ) நிதி சம்பந்தமான அதிகாரங்கள்; வடக்குக் கிழக்கு தமிழ்பேசும் மக்களின் பிரதேசங்கள் இணைக்கப்படுதல் (ஈ) சமஷ்டி கட்டமைப்பில் வடக்கு கிழக்கு மாகாணம் அல்லது மாநிலங்களுக்கு முழுமையான பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்கள் கொண்ட தன்னாட்சி (Self-rule) என்பன முக்;கியமானவைகளாகும்.

இத் தேர்தலின் முக்கியத்துவம் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் யுத்தம் முடிவடைந்த பின்னர் 2010 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தங்களது ஆணையை வழங்கி வந்துள்ளார்கள். இலங்கைத் தீவில் ஒருமித்த நாட்டுக்குள் தங்களது இறையாண்மையின் வெளிப்பாடாகவும் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும் சமஷ்டிக் கட்டமைப்பிலான அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதே அந்த ஆணையாகும். இவ்வாணையை நிறைவேற்றும் பணியில் நாம் நீண்ட தூரம் கடந்து வந்திருக்கிறோம். முதலில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்தி அதன் பின் உருவாக்கப்பட்ட தேசிய அரசாங்கம் புதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணிகளை ஆரம்பிப்தற்கான அனைத்து அழுத்தங்களையும் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் ஏற்படுத்தினோம். இப்பொழுது வெளியாகியிருக்கும் ஆறு உபகுழுக்களின் அறிக்கைகளும், (Steering committee) வழிகாட்டுக் குழுவின் இடைக்கால அறிக்கையும் ஆட்சி முறையில் ஏற்படுத்தப்பட இருக்கும் அடிப்படையான மாற்றங்களை எடுத்தியம்புகின்றன. இவை அனைத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தனிப்பட்ட முயற்சிகளினால் அடையப்பட்டவை என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. இம் முயற்சிகள் தொடரப்பட வேண்டுமானால் தொடர்ந்தும் மக்களது ஆணையும் ஆதரவும் எமக்கே இருக்கின்றன என்பது இத்தேர்தலிலும் உறுதி செய்யப்பட வேண்டும்.

இலங்கையில் இனப்பிரச்சனை தீர்க்கப்படாததால் ஜனநாயக போராட்டங்கள்,ஆயுதப் போராட்டங்கள் மற்றும் ஜனநாயக சந்தர்ப்பங்களில் தமிழ் மக்களின் திடசங்கற்பம் வாக்குரிமையினால் நிரூபிக்கப்பட்டு வந்துள்ளது. இச் செய்தியைச் சர்வதேசம் வியந்து பாராட்டுகிறது.

த.தே.கூட்டமைப்பும் மக்களின் அடிப்படைத் தேவைகளும்.

2009ல் ஆயுதப் போர் முடிவுக்கு வந்த பின் 2011,2013,2015 உள்@ர் ஆட்சித் தேர்தல்கள், மாகாணசபை மற்றும் பாராளுமன்றத் தேர்தல்;கள்; காலத்தில் போரினால் அழிக்கப்பட்ட வடக்குக் கிழக்கு பிரதேசங்கள், சீரழிக்கப்பட்ட தமிழ் பேசும் சமூகங்கள் மீளக் கட்டியெழுப்பப் பெற வேண்டியதன் அவசியத்தை தெளிவாகவே உணர்ந்தோம். அதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் அறிக்கைகளில் மூன்று விடயங்களை அரசுகளின் முன்னும், சர்வதேச சமூகத்தின் முன்னும் மக்கள் தேவைகளையும் திட்டங்களையும் அடையாளப்படுத்தினோம்.

1.இலங்கையில் தீர்வு காணப்படாத தமிழினப் பிரச்சனைக்குத் தீர்வு காணுதல்;

2.போரினால் சீரழிந்ததும் அதனால் ஏற்பட்ட விளைவுகளால் பாதிப்புக்களும்; தீர்க்கப்படவேண்டிய அன்றாடப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணுதல்;

3. போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களையும், சிதைந்து போன மக்களையும் மீளக்கட்டியெழுப்புதல். பிரதேசங்கள் அபிவிருத்தி செய்தல் முதலானவை

அதற்கான

1. வீட்டுத்திட்டங்;கள்
2. போரிலிருந்து விடுபட்டுப் புனர்வாழ்வு பெற்ற போராளிகள்; மறுவாழ்வும், ஜனநாயக நீரோட்டத்தில் இணைத்தலும்;
3. போரினால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்க்கை வாழ்வாதாரம் மேம்படுத்தலும்;
அதற்கான வேலைவாய்ப்பு வாழ்வாதார வலுவூட்டல்;, கல்வி வழங்கல், பயிற்ச்சி அளித்தல் அதற்கான தொழில் துறைகளையும் வேலைத்திட்டங்களையும் உருவாக்குதல் என்பனவாகும்.

பலாலி சர்வதேச விமான நிலையம் பலாலிக்கு வடக்கே கடற்கரையோரத்துடன்; கடலில் கட்டுவதற்கு பேசப்பட்டு உருவாக்கப்பட்ட திட்டம் எம்மிடம் தரப்பட்டது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவுடன் இத்திட்டம் பற்;றி நாம் பேசியதன் தொடர்பில் இத்திட்டம் பரிசீலனையிலுள்ளது.

2016 ஜனவரியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பலாலிக்கு வந்த பொழுது அடுத்தகட்டப் பேச்சுவார்த்தையின் போது மக்களின் நிலங்கள் பாதிக்கப்படாது தற்போதைக்கு “பலாலி விமான நிலையம் தரம் உயர்த்தப்பட்டு பிராந்திய விமான நிலையமாக்குவது” என இந்திய அரசுக்குச் சிபார்சு செய்யப்பட்டிருப்பதாக அறிய முடிந்தது. அதனடிப்படையில் இந்திய தொழில்நுட்பக் குழு இலங்கை பலாலிக்கு வந்து திட்டத்தை ஆராய்ந்தது. “தற்போதுள்ள விமான நிலைய நிலப்பரப்பிலே அவ்வாறு பிராந்திய விமான நிலையம் நிறுவப் போதுமானது” “மேலதிக நிலங்கள் தேவையில்லை” என்று அறிவித்தது.

2009 காலத்தில் இந்திய பிரதமராக இருந்த திரு.மன்மோகன்சிங் அவர்களுடன் டெல்லி பேச்சுவார்த்தையின் போது; போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுத்திட்டம் பேசப்பட்டது. அத்திட்டம் நடைமுறைக்கும் வந்தது;

1. அத்திட்டத்தின் படி 5 இலட்சம் பெறுமதியான 50000 வீடுகள் விசேடமாக வடக்கு கிழக்கில் ஆரம்பிக்கப்பட்டது.

2. 2018ல் வரவு செலவுத்திட்டத்தில் வடக்கு கிழக்கில் 50000வீடுகள் செங்கல் சீமந்து வீடுகளாக ஜனாதிபதியின் திட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இத் திட்டம் பதின்மூன்று இலட்சம் (1.3 மில்லியன்) பெறுமதியானவையாகும்.

3. இதே போன்று வீட்டுத்திட்டங்கள் த.தே.கூட்டமைப்பின் பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான வீடுகள் கட்டுவதற்கு வீடமைப்பு அமைச்சும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

1.யாழ்ப்பாணம் வருகை தந்த பொழுது மாவட்டச் செயலக சந்திப்பின் போது போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் மீளக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்களை ஒருங்கினைந்த திட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற பொழுது அவ்வாறே வடக்குக்கு ஒருங்கிணைந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

2. 2017ம் ஆண்டு இறுதியில் பாராமன்ற உறுப்பினர்களின்; சந்திப்பில் கிழக்கை மீளக் கட்டியெழுப்பும் திட்டத்திலும் ஒருங்கிணைந்த திட்டக் குழு அமைக்கவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்திருக்கிறார்.

இதன் பின்னணியில் த.தே.கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை, பிரதமரை நிதியமைச்சரைச் சந்தித்துப் பேசியதன் விளைவாக 2018 வரவு செலவுத்திட்டத்தில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

1. பெண் மாற்றுத் திறனாளிகளின் மேம்பாட்டுக்;கான திட்டம் அதற்கான நிதி ஒதுக்கீடு.

2. போரினால் பாதி;க்கப்பட்ட 90,000தை அண்மித்த பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான மேம்பாட்டுத் திட்டங்கள் வேலைவாய்பப்பு, வாழ்வாதாரம், புது வாழ்வுக்கான நிதி ஒதுக்கீடு.

3.இன விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 12600 முன்னாள் போராளிகளுக்கான வாழ்வாதாரம் உள்ளிட்ட மேம்பாட்டுத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடுகள் உள்ளிட்ட 16 நேரடித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டங்;கள் வடக்குக் கிழக்குப் பிரதேசங்களுக்கு சிறப்பான திட்டங்களாகும்.

இவை அரசுடன் த.தே.கூட்டமைப்பு நடாத்திய பேச்சுக்களின் விளைவுகளேயாகும்.

2018 வரவு செலவுத்திட்டத்தில் மேற்குறித்த போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசம், குடும்பங்களுக்கான மேம்பாட்டுத்;திட்டங்கள் இணைக்கப்படுகின்றது.

2018 வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீடு

த. தே.கூட்டமைப்பு அரசுடன் நடாத்திய பேச்சுக்களின் அடிப்படையில் 2018 வரவு செலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடுகள்.
1.2015 க்குப்பின் 2018 வரவு செலவுத்திட்டத்தில் 13 இலட்சம் திட்டத்தில் வாழ்வாதாரம் உட்பட 50,000 வீடுகள். ஆரம்பத்தில் நிதி ஒதுக்கீடு ரூ750 மில்லியன்.

2.ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தித் திட்ட நடவடிக்கைகள் ரூ2000 மில்லியன்.

3.வடக்கிலுள்ள மாற்றுத்திறனாளிப் பெண்களுட்பட பாதிக்கப்பட்ட பெண் குடும்பங்களுக்கு வாழ்வாதார அபிவிருத்தி, பெண்களுக்கான விசேட நிலையங்களுக்கும் சமூக உட்கட்டமைப்புக்களுக்கும் ரூ2750 மில்லியன்.

4.வடமாகாணம் முழுவதும் கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக சிறிய கைத்தொழில்களை வலுவூட்டுவதற்கு ரூ 1000 மில்லியன்.

5.மயிலிட்டி மீன்பிடித்துறைமுகம் ரூ 150 மில்லியன் (தற்போது நோர்வே அரசு மீள்குடியேற்றத்திற்கு 10500 மில்லியன் டொலர்கள் அறிவிப்பு),

6.யுத்தத்தால் பாதி;க்கப்பட்ட பெண்கள் முன்னாள் போராளிகள் வாழ்வாதாரத்திற்கான சிறுவியாபாரத்திற்கு ரூ 25 மில்லியன்.

7. புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 12600 பேருக்கு நிரந்தர வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு மொத்தமாக ரூ525 மில்லியன்.

8. காணாமல் ஆக்கப்பட்டவாகளுக்கான அலுவலகம், நடவடிக்கைகளுக்காக ரூ.1400 மில்லியன் உட்பட்ட 16 திட்டங்கள்.

நேரடியாக பயனுறுதல் திட்டங்கள் அத்துடன் பயனுறுத்த முடிந்தபல பொதுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சீமந்து உற்பத்திக்கும் வேலைவாய்ப்புக்குமாக சுண்ணக்கல் (Lime stone) பூநகரியிலிருந்து பொன்னவெளி கிராஞ்சிப்பகுதி ஆராயப்பட்டது. தற்போது மன்னார் வட எல்லையில் வரும் பரப்புக்கடந்தான் பிரதேசம் ஆய்வு செய்யப்படுகிறது.

ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் விடுவிப்பு

1989 வரையில் உயர் பாதுகாப்பு வலயமாக அரசினால் பிரகடனப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிப்பதற்கு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இப்பொழுதும் நடைபெறுகின்றது.

காணிகள் விடுப்பது தொடர்பில் மேலும் வலிவடக்கைச் சேர்ந்தவர்களினால் தாக்கல் செய்யப்பட்ட 2116 வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் ஆராயப்படுகின்றது. இவ்வாறு வடக்கு கிழக்கு பிரதேசங்களில் பல ஆக்கிமிக்கப்பட்ட காணிகள் தொடர்பில் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

குறிப்பாக 2003 ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் 2007 ம் ஆண்டு காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று எமக்கு சாதகமாக உச்சநீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன் பின்னர் வலிவடக்கில் பெரும்பகுதி நிலங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.

வலிவடக்கு பிரதேசத்தில் பலாலி விமான நிலையம் காங்கேசன்துறை துறைமுகம் உட்பட இன்னும் 3000 ஏக்கர் நிலம் வரையில் விடுவிக்கப்பட வேண்டியுள்ளது.

மொத்தமாக வடக்கு கிழக்கில் விடுவிக்கப்பட்ட நிலங்களும் விடுவிக்கப்படாத நிலங்களும் குறிப்பிட வேண்டும்.

இந்த வழக்குகள் யாவையும் த.தே.கூட்டமைப்பின் வழக்கறிஞர்களாலேயே நடாத்தப்பட்டு வருகின்றன. இதில் பல காணி விடயங்களில் வெற்றிகள் காணப்பட்டுள்ளன. இருப்பினும் இன்னும் தமிழ்ப் பிரதேசங்களில் பெருமளவான காணிகள் விடுவிக்கப்படவில்லை என்பது கவலையளிக்கின்றது. இது தொடர்பில் அரசுடன் பேசுவது மட்டுமல்லாமல் சர்வதேச சமூகத்தினால் அரசுக்கு அழுத்தங்களை பிரயோகிப்பதற்கும் நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். அரசின் மந்தகதியான போக்குகள் கண்டிக்கப்பட வேண்டியனவே. அடுத்து ஆட்சி மாற்றம் 2015ன் பின் திருகோணமலையில் சம்பூர் பிரதேசம் முழுமையாக விடுவிக்கப்பட்டு மக்கள் குடியேறியுள்ளனர்.
முக்கியமாக சம்பூரில் சோலார் (Solar Power) மின்திட்டம் முதல் பல அபிவிருத்தித்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

முல்லைத்தீவில் கேப்பாப்புலவு மக்கள் காணிகள் விடப்பட்டிருப்பது ஆறுதலாயினும், இன்னும் நிலங்கள் விடுவிக்கப்பட வேண்;டியதும் அவசியமாகும்.

1. இன்னும் மீள்குடியேற்றம் சம்பந்தமாகவும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சம்பந்தமாகவும் பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ், பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதிகளாக இருப்பவர்கள் சம்பந்தமாகவும் உள்ள பிரச்சனைகளில் நாம் சர்வதேசத்துடன் இணைந்து அரசின் மீது தொடர்ச்சியான அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றோம்.

2. மேலும் தமிழ்ப் பிரதேசங்களில் இன்னும் பெருமளவில் நிலங்கள், பிரதேசங்கள் விடுவிக்கப்பட வேண்டும். மிகுதி நிலங்களை விடுவிப்பதற்கு அரசுடன், இராணுவத்துடன், சர்வதேசத்துடன் பேச்சு நடாத்தி வருகின்றோம். இருப்பினும் அரசின் மெத்தனமான போக்கும் நடவடிக்கைகளும் கண்டிக்கப்பட வேண்டியனவே.

புலம்பெயர்ந்த தமிழர்கள் மீள்குடியேற்றத்திற்கு வீடுகள் கட்டிக் கொடுப்பதற்கும், வாழ்வாதாரத்திற்கு திட்டங்களை நிறைவேற்றுகின்றனர். அவர்களின் அக்கறை, அர்த்தமுள்ள அர்ப்பணிப்புக்களுக்குப் பாராட்டுக்களைத் தெரிவிக்க வேண்டும்.

காங்.சீமந்துத் தொழிற்சாலைப் பிரதேசத்தில் சிறு கைத்தொழில்கள், தொழில்நுட்ப வலயங்கள் ஆரம்பிப்பது பற்றி பிரதமர் வாக்குறுதி அளித்ததன் படி 2018 வரவு செலவுத்திட்டத்திலும் இவை தொடர்பான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு வாழைச்சேனைப் பிரதேசத்தில தொழில்சார் வலயங்கள் வேலைவாய்ப்புக்காக ஏற்படுத்தப்படவுள்ளதாக பிரதமர் அறிவித்துள்ளார்.

அத்தோடு அம்பாறை, கல்முனைத் தமிழ் மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான கல்முனைத் தமிழர் பிரதேசத்திற்கான தனியான நிர்வாகக் கட்டமைப்பு உள்ளூர் ஆட்சி அமைச்சினால் ஏற்றுக் கொள்ளப்பட்டமையையும் குறிப்பிட வேண்டியுள்ளோம்.

மீள் கட்டுமானத்திற்கான நிதி ஒதுக்கீடுகள்

2018 வரவு செலவுத் திட்டத்தில் த.தே.கூட்டமைப்பின் ஜனாதிபதி, நிதி அமைச்சர் வேண்டுகோள் மற்றும் அரசின் திட்டங்கள் மீன்பிடித் துறைமுகங்கள், மீன்பிடி வள்ளங்கள் காப்பிடும் துறைகள், சுற்றுலாத் துறைகள், சீமந்துத் தொழிற்சாலை, இரசாயன தொழில், சிறிய, நடுத்தர மற்றும் தொழில்நுட்பப் பயிற்சி, வழுக்கையாறு பெருந்தெருக் கட்டுமானங்கள் குறிப்பிடலாம்.

த.தே.கூட்டமைப்பு அரசுடன் நடாத்திய பேச்சுக்களில் அறிவிக்கப்பட்ட சில திட்டங்களை நிதிஒதுக்கீடுகளை தங்கள் கவனத்திற்குத் தருகிறோம்.
ஓவ்வொரு மாவட்டத்திலும், பிரதேசத்திலும் ஒதுக்கப்பட்ட நிதி, செய்யப்பட்ட வேலைத்திட்டங்கள், தேர்தலின் பின் அடையாளங் காணப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள்; வேட்பாளர்களினால் அவ்வப் பிரதேசங்களில் முன்வைக்கப்படவுள்ளன.

ஊராட்சித் தேர்தல்

சென்ற உள்ளூர் அதிகாரசபைத் தேர்தலில் வேட்பாளர்களைத் தேடினோம். இன்று த.தே.கூடடமைப்பில் போட்டியிட வேட்பாளர்களாக வருவதற்குப் பெருமளவில் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் முன்வந்திருப்பது எதிர்கால ஜனநாயக நடைமுறைகளுக்குக் கிடைத்த வெற்றியாகும்.

உள்ளூராட்சி மன்றங்கள் செயலாற்றுவதற்கும் பொருத்தமான அபிவிருத்தித் திட்டங்கள் அதற்கான வேலைத்திட்டங்களை அடையாளப்படுத்தி வினைத்திறனுடன் வெற்றிகரமாக செயலாற்றும்; பொருட்டு நிபுணத்துவம், ஆற்றல் அனுபவம் மிக்க ஆலோசனைக்குழுக்களை உள்ளூர்ஆட்சிப் பிரதேசங்களில் நியமிக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

அதே நேரத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களினதும், பிரதேசத்தினதும் மீளக் கட்டியெழுப்பும் திட்டங்களை நிறைவேற்றுவது மட்டுமல்ல இலட்சக்கணக்கான உயிர்களைப் பலிகொடுத்தும் அங்கங்களையிழந்தும் வாழ்வாதாரமன்றியும் அல்லல் அவலத்தில் வீழ்ந்து கிடக்கும் மக்களின் இதய தாகம் இலட்சியத்தை நிறைவு செய்யவும் நாம் செயல்பட கிடைத்துள்ள ஜனநாயக சந்தர்பங்களை தொடர்ந்தும் திடசங்கற்பத்துடன் எதிர்கொண்டு வெற்றி பெறுமாறும் அன்போடு, அர்ப்பணிப்போடு ஆத்ம பலத்தோடு வேண்டுகின்றோம். இனத்தைக் கூறுபோடாமல், பிளவுபடுத்தாமல் அனைவரும் ஒன்றுபட்டு தமிழர் ஒற்றுமையை பலத்தை நிரூபிக்கும் வகையில் உங்கள் வீட்டிற்கு வாக்களித்து வெற்றி பெறுமாறு அழைக்கின்றோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இவ்வுள்ளூராட்சித் தேர்தலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் எல்லோரும் ஒன்றிணைந்து 10.02.2018 அன்று வாக்களித்து வெற்றி பெறுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

மாவை.சோ.சேனாதிராசா
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (ITAK)

தமிழீழ விடுதலை இயக்கம்
(TELO)

த. சித்தார்த்தன்
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி
(PLOTE)

 

About editor 3099 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply