இயற்கை விவசாயத்தின் மூலம் செயற்கை விவசாயத்தை முறியடிக்க வேண்டும் என்கிறார் தமிழ்நாட்டு விவசாய வல்லுநர்!

இயற்கை விவசாயத்தின் மூலம் செயற்கை விவசாயத்தை முறியடிக்க வேண்டும் என்கிறார் தமிழ்நாட்டு விவசாய வல்லுநர்!

கிளிநொச்சி, ஜன. 13

இயற்கை விவசாயத்தின் மூலம் செயற்கை  விவசாயத்தை முறியடிக்க வேண்டும் என தமிழ்நாட்டின் இயற்கை விவசாய வல்லுநர் எஸ். பாமயன் தெரிவித்தார்.Image result for இயற்கை விவசாயம்

நேற்றுமுன்தினம் கிளிநொச்சி அக்கராயன் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற இயற்கை விவசாயம் தொடர்பான பயிற்சிப் பட்டறையில் கலந்துகொண்டு உரையாற்
றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

இலங்கை நான் வந்தபோது இங்குள்ள நீர் வளத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டுப் போனேன். தமிழ்நாட்டிலே தூய்மையான நீருக்காக நாள்தோறும் நாம் போராடிக் கொண்டிருக்கின்றோம். இலங்கையிலே குறைந்தது நூறு அடியில் ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து நீரைப் பெற்றுக் கொள்ளலாம். தமிழ் நாட்டிலே பல கிராமங்களிலே ஆயிரம் அடிக்கு மேல் ஆழ்துளைக் கிணறு களை அமைத்துத்தான் நீரைப் பெற்றுக் கொள்ள வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது.Image result for இயற்கை விவசாயம்

குடிதண்ணீருக்காக மக்கள் நீண்ட தூரம் அலைந்து கொண்டிருக்கின்றனர். தொடக்க காலங்களில் தமிழ் நாட்டில் பல கிராமங்களில் நல்ல நீரைப் பெற்றுக் கொள்ளக் கூடிய நிலைமை இருந்தது. ஆனால், நீரைத் தேவையற்ற முறையில் பயன்படுத்தி பயிர்ச் செ#கைகளை மேற்கொண்டு பயிர்ச் செ#கை கூட சூழலுக்கு ஒவ்வாத வகையில்இரசாயனப் பாவனைகளால் மண்ணையும் நீரையும் தன்மைகளில் இருந்து மாறு படக்கூடிய நிலைமையை உருவாக்கி விட்டது. எப்போதும் விவசாயிகள் குளங்களில் இருந்து பயிர்ச் செ#கைக்கு நீரைத் தாருங்கள் என்றுதான் போராடுவார்கள். ஆனால், தமிழ் நாட்டின் பல கிராமங்களில் குளங்களில் இரசாயனம் கலந்து இருப்பதன் காரணமாகவே நீரைத் திறந்து விட வேண்டாம் என்றே விவசாயிகள் போராடு கின்றனர். அந்தளவிற்கு மண்ணும் நீரும் தமிழ் நாட்டில் தன்மைகள் மாறி விட்டன.Image result for இயற்கை விவசாயம்

எமது முன்னோர்களின் இயற்கை விவசாயத்தில் இருந்து நாம் எங்கேயோ சென்று இரசாயனம் கலந்த செயற்கை விவசாயத்தால் அழிவுகளுக்குள் சிக்குண்டுள்ளோம்.தற்போது எமக்குத் தேவைப்படுவது எல்லாம் இயற்கை விவசாயம்தான். எமது உணவுடன்  நீருடன்  இரசாயனம் கலப்பதன் காரணமாகவே தேவையற்ற நோ#கள் உருவாகின்றன. பிறக்கின்ற குழந்தைகள் கூட நோ#களுடனும் குறைபாடுகளுடன் பிறப்பதற்குக் காரணமே நாம் உண்ணும் உணவும் பருகும் நீருமே காரணமாக அமைகின்றன.Image result for இயற்கை விவசாயம்

எனவே, இயற்கை விவசாயத்தின் அறிவையும் அவசியத்தையும் எல்லோரும் விளங்கிக் கொண்டு செயற்பாட்டில் இறங்க வேண்டும். எமது முன்னோர்களின் விவசாய முறைகள் இயற்கை விவசாயம் சார்ந்தவையாகவே அமைந்திருப்பதன் காரணமாக அதன் அறிவுகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். செயற்கை விவசாயத்தில்
இருந்து விடுபடுவதன் மூலமே மண்ணையும் நீரையும் பாதுகாத்துக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார். (காலைக்கதிர்)Image result for இயற்கை விவசாயம்


Image result for இயற்கை விவசாயம்

About editor 3123 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

1 Comment

  1. ReMax Community Real Estate நிறுவனம் தனது ஆண்டு விருது விழாவில் 2018 சனவரியில்ந தாயகத்தில் நடக்கும் புதிய வெளிச்சம் இயற்கை விவசாய விழிப்புணர்வுக்கு ReMax Community நிறுவனம் வீடு விற்பனை முகவர் தீபன் இராஜ் உடன் இணைந்து $20,000 ஐ கொடுத்து உதவியுள்ளது. இதே நிறுவனம் Scarborough and Rouge Hospital Foundation $10,000 டொலர்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இந்தக் கொடைகள் மிகவும் பாராட்டத்தக்கது. தனக்கென மட்டும் வாழாது சமூக உணர்வோடு இயங்கும் ReMax Community Real Estate நிறுவனம், குறிப்பாக தீபன் இராஜ், பாராட்டத்தக்கவர்கள். அறிவுள்ளவன் செல்வம் ஊர்க்குப் பொதுவான குளத்தில் நீர் நிறைந்தது போலாகும்.

Leave a Reply