சமுதாய இழிவுக்கு சாமரம் வீசும் வடக்கு முதலமைச்சரின் ஆன்மீக வேடம்

சமுதாய இழிவுக்கு சாமரம் வீசும் வடக்கு முதலமைச்சரின் ஆன்மீக வேடம்

கிரிமினல் சுவாமி பிரேமானந்தாவின் சீடர்களுக்கு வக்காளத்து வாங்கி முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதன் நோக்கம் என்ன??
திருச்சி பாத்திமா நகரில் பிரேமானந்தா ஆஸ்ரமத்தில் இடம்பெற்ற பாலியல்  வன்புணர்வு   மற்றும் கொலைக் குற்ற வழக்கில் பிரேமானந்தாவுடன் தண்டனை விதிக்கப்பட்டுள்ள  நான்கு குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு வட மாகாண முதலமைச்சர்  விக்கினேஸ்வரன் கடிதமொன்றை (15.03.2014)அண்மையில் அனுப்பி வைத்திருக்கின்றார்.

அவரது அரசியல் வருகையின் போது அவர் மெத்தப்படித்த நீதிமான் என்று எல்லோரும் நம்பினர். பாழ்பட்டுகிடக்கும் சாமானிய மக்களின் வாழ்வில் பால் வார்ப்பார் என்று 132255 மக்கள் அவருக்கு வாக்களித்தனர்.

அவரோ முப்பது வருட யுத்தத்துக்கு பின்னர் உருவான ஒரேயொரு தீர்வான மாகாணசபையினை சேடமிளுக்கும் நிலைக்கு தள்ளிவிட்டு தன் ஆன்மீக குருவான பிரேமானந்தா என்னும் பாலியல் வன்புணர்வு படுகொலை குற்றவாளிகளுக்கு பஜனை செய்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கின்றார்.

Premanantha-birthday60004 கிரிமினல் சுவாமி பிரேமானந்தாவின் சீடர்களுக்கு வக்காளத்து வாங்கி முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதன் நோக்கம் என்ன?? Premanantha birthday60004

இதன்காரணமாகவே “பிரேமானந்த ஆச்சிரமத்தில் இடம்பெற்ற பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஆசாமிகளை விடுதலை செய்யுமாறு முதலமைச்சர் இந்திய பிரதமருக்கு கடித்தத்தினை எழுதியுள்ளார்.

பிரேமானந்தாவுடன் தண்டனை விதிக்கப்பட்ட கமலானந்த பாலேந்திரன சதீஸ்குமார் ஆகிய மூவரையுமே விடுதலை செய்யுமாறு அவர் பிரதமரை கேட்டுள்ளார்.

பிரேமானந்தா ஆசிரமத்தையும் அதன் சொத்துக்களையும் பராமரிக்க வேண்டியுள்ளதால் அதனைப் பொறுப்பெடுக்க வேறு யாரும் இல்லாத நிலையில் அப்பாவிகளான இவர்களை விடுதலை செய்யுமாறு இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Premanantha-birthday60001 கிரிமினல் சுவாமி பிரேமானந்தாவின் சீடர்களுக்கு வக்காளத்து வாங்கி முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதன் நோக்கம் என்ன?? Premanantha birthday60001முதலமைச்சர் விக்கினேஸ்வரன் பிரேமானந்தாவின் நீண்டகால சீடராவார். அவர் தனது ஆன்மீக குருவாக இன்றுவரை பூஜை செய்யும் பிரேமானந்தா ஒரு பாலியல்வன்புணர்வு, படுகொலை குற்றவாளி என்பதுபற்றி  அவர் ஒருபோது வெட்கப்பட்டது கிடையாது. மாறாக அதையிட்டு முதலமைச்சர் பெருமைகொண்டே வந்திருக்கின்றார்.

ஆன்மீக தேடல் என்பது அவரவர் உரிமையே என்றாலும் கடவுளின் பெயராலும் பக்தியின் பெயராலும் வன்புணர்வுகளிலும்  படுகொலைகளிலும் ஈடுபடும் இதுபோன்ற சமூக விரோத பாதாள கும்பல்களுடன் தொடர்பு வைத்திருப்பதையிட்டு அவர்  ஒருபோதும் மனம் வருந்தியது கிடையாது. இது பற்றி அவருக்கு வாக்களித்த ஒவ்வொருதமிழனும் தமிழச்சியுமே நாணி தலை கவிழ வேண்டும்.

பற்றற்றவனே துறவியாவான் என்பர் முன்னோர்.  ஆனால் வெளிநாடுகளில் பலகோடி கறுப்பு பணங்களை முதலிட்ட சர்வதேச மாபியா பிரேமானந்தாவை நமது முதலமைச்சர் துறவி என்று கொண்டாடுகின்றார்.

1997ல் பிரேமானந்தாவுக்கு தீர்ப்பு வழங்கிய புதுக்கோட்டை நீதிமன்றம் அவன் மீதான குற்றப்பட்டியலில் இந்த பண மோசடிகள் பற்றியும் விலாவாரியாக குறிப்பிட்டுள்ளமை முக்கியமானதொன்றாகும்.

ஒரு சந்நியாசிக்கு ஜெயலலிதா ஊழல் புகழ் ராம் ஜெத்மலானி போன்ற கோடிக்கணக்கில் பணம் வாங்கும் வழக்கறிஞர்கள் இலவசமாகவா வாதாட முன்வருவர்? இதற்கெல்லாம் பணம் எங்கிருந்து வந்தது? இவர்களுக்கும் ஆன்மீகத்துக்கும் என்ன சம்பந்தம்?

தற்போது சிறையில் வாடும் பிரேமானந்தாவின் சகபாடிகள் மீண்டும் வெளியே வரவேண்டுமாம் ஆச்சிரமத்தின் சொத்துக்களை பராமரிக்க ஆள்தேவையாம் என்பதே முதலமைச்சரின் வேண்டுகோளுக்கான கவலையாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

viki-premananda கிரிமினல் சுவாமி பிரேமானந்தாவின் சீடர்களுக்கு வக்காளத்து வாங்கி முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதன் நோக்கம் என்ன?? viki premananda(பிரேமானந்தாவுக்கும்,  விக்கினேஸ்வரானந்தாவுக்கும் நிறைய ஒற்றுமைகள் காணப்படுகிறது பாருங்கள். ( குங்கும பொட்டு, திருநீற்று பட்டை, தாடி, கள்ள சிரிப்பு)

ஆனால் வடமாகாணத்துக்கு அரசாங்கம் ஒதுக்கிய 1500 கோடி ரூபாயில் பாதிக்கு மேல் மாகாண சபையின் செயலூக்கமற்ற தன்மையினால் திரும்பி செல்வது பற்றி முதல்வருக்கு ஒருபோதும் கவலையில்லை.

இலங்கையில் உரிய விசாரணைகளோ, தீர்ப்புகளோ இன்றி சிறையில் வாடும் அரசியல் கைதிகளைவிடுவிப்பதில் இந்த ஏன் முதல்வர் அக்கறை செலுத்துவதில்லை? இவர்களின் உறவினர்கள் எத்தனையோ பேர் தினம் தினம் உங்களை வந்து சந்தித்து கொண்டுதானே இருக்கின்றனர்?

காணாமல் போனோருக்காகவும் சிறையில் வாடுவோருக்காகவும் நாளும் பொழுதும் நடைபெறும் உண்ணாவிரதங்களும் ஆர்ப்பாட்டங்களும் உங்கள் ஆன்மீக நிஷ்டையை ஒருபோதும் குலைப்பதில்லையா?

அவர்களுக்காக நீங்களும் உங்கள் தமிழ் தேசிய கூ ட்டமைப்பும் நல்லாட்சிவேண்டி தேர்ந்தெடுத்த ஜனாதிபதியிடம் ஒரு தீர்க்கமான வேண்டுகோளை இதுவரை விடுத்தீர்களா?

ஏன் இந்தியாவில கூட எத்தனையோ எத்தனையோ ஈழத்தமிழர்கள் புலிகள் என்னும் சந்தேகத்தில் சிறையில் வாடுகின்றார்களே?அதைப்பற்றி அவர்களின் விடுதலை பற்றி மோடிக்கு ஏன் ஒரு வேண்டுகோளை விடுக்கவில்லை? இவர்களெல்லாம் தமிழர்கள் இல்லையா?

மோடிக்கு அனுப்பிய கடிதம் பற்றி பிபிசிக்கு அவர் அளித்த விளக்கத்தில் சிறையிலிருப்பவர்கள் மூவரும் வடமாகாண பிரசைகளாம் என்று அக்கறைப்பட்டார்.

ஆனால் இந்த பிரேமானந்தா ஆச்சிரமத்தில் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்ட பதின் மூன்று அபலை பெண்களும் கூட அதே வடமாகாணத்தை சேர்ந்தவர்கள்தானே?

பெண்கள் என்றால் அப்படித்தான் அவர்கள்  எங்களது பாலியல் சொத்துக்கள் என்கின்ற மன உணர்வுக்கு நெருக்கமானவர்தான் நமது முதலமைச்சர் என்பதை இவ்விடத்தில் சுட்டிக்காட்டல் தகும் என எண்ணுகின்றேன்.அவரது உரைகளும் பேச்சுகளும் எப்போதும் பெண்களை கொச்சைப்படுத்துவதை வழக்கமாக கொண்டிருக்கும்.

» நீதியரசர் விக்கினேஸ்வரன்   முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்கப்பட்ட போது அவர் சொல்ல வார்த்தைகள் இப்படியிருந்தன.

“இது நிர்ப்பந்த திருமணம் ஆனாலும் விரும்ப பெண்டாட்டியுடன் குடும்பம் நடத்தத்தானே வேண்டும்” இப்படி பெண்களை பாலியல் பண்டங்களாக அவர் கிளுகிளுப்பாகவே வர்ணிப்பதை அவரது பேச்சுகளில் தாராளமாக காணலாம்.  முதல்வரின் பேச்சினை அடிக்கடி அவதானித்தால் நான் சொல்லவருவது மிகைப்படுத்தல் அல்ல என்பதை உணரலாம்.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதலமைச்சர் நடத்திய நடமாடும் சேவையை புறக்கணித்த அவரது அதிகாரிகளையிட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய உரையை பாருங்கள்

“இவர்களின் செயற்பாடு எப்படி இருக்கின்றது என்றால் கணவனைப் புறக்கணித்து அடுத்த வீட்டுக்காரனின் அரவணைப்பினுள் செயற்படும் மனைவி போல் இருக்கின்றது.

அடுத்த வீட்டுக்காரன் அதிக அதிகாரங் கொண்ட அலுவலன் என்பதால் அவனை அண்டி வாழவும் கணவனைப் புறக்கணிக்கவும் எத்தனிக்கும் மனைவிமார் காலக்கிரமத்தில் தமது கடமையையும் கடப்பாட்டினையும் புரிந்து குடும்ப நன்மையை முன்வைத்து வாழ வேண்டி முற்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எமக்குண்டு.

அடுத்த வீட்டுக்காரன் சலுகைகள் தருவது தன் நன்மைக்கே என்பது மனைவிக்கு காலஞ்செல்லச் செல்லப் புலனாகும். அவன் தன் காரியம் முடிந்ததும் இவளை நட்றாற்றில் விட்டு விட்டுப் போய்விடுவான் என்பதும் புரியவரும்.

> கணவனாகிய நாங்கள் இப்பேர்ப்பட்ட மனைவிமார்களின் தப்பான தரங்கெட்ட நடத்தையைப் பொறுமையுடன் கவனித்து வருவோம்.

மனைவிமார் எம்மிடம் வந்து மன்னிப்புக் கேட்டு ஒழுங்காகக் குடும்பம் நடத்துங் காலம் வெகுதூரத்தில் இல்லை என்று கூறி இன்றைய இந்த நடமாடுஞ் சேவையைச் செவ்வையாக நடாத்த எல்லோர் ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கின்றேன்”.

> இந்த உரை முதலில் பெண்களை இழிவுபடுத்தும் கயமைத்தனமான உரையாகும் அரசியல் தலைவர்களே இப்படி எடுத்ததற்கெல்லாம் பெண்களை கேவலப்படுத்தும் வகையில் உதாரணங்களையும் ஒப்பீடுகளையும் வைத்து உரையாற்றினால் பெண்கள் எப்படி சமுகத்தில் மதிக்கப்படுவர்? பெண்கள் வாழ்வு எப்படி மேம்படும்?

> கடந்த வருடம் கூட முதலமைச்சர் இந்தியா சென்றபோது இந்த பிரேமானந்தாவின் ஆச்சிரமத்துக்கு சென்று அக்குள்ள பிரேமானந்தாவின் சமாதியை வணங்க தவறவில்லை .

கடவுளை வணங்குவதே ஒரு முட்டாள்தனம் என்பார் ஈ.வே.ரா.பெரியார். ஆனால் நாமோ,  நமது சமூகத்தை இழிவுபடுத்தி பெண்களை மானபங்கப்படுத்தி,  கொலைகளை செய்து ஆச்சிரமத்துக்குள்ளே புதைக்கும் கயவர்களை வணங்கும் மனிதர்களை புத்திசாலிகள் என்று கொண்டாடுகின்றோம்.

இந்தியாவில் இந்த பஞ்சமா பாதகங்களை எல்லாம் செய்துவரும் பிரேமானந்தா ஆச்சிரமத்தினர் இலங்கையிலும் தமது கிளை ஆச்சிரமங்களை திறக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

முறிகண்டிபகுதியில் அதற்கான இடமொன்றை முதலமைச்சர் ஒதுக்கியிருப்பதாகவும் ஒரு தகவல் உண்டு. துப்பாக்கிகளுக்கும் வெடிகுண்டுகளுக்கும் தப்பி உயிரைமட்டும் கையில் பிடித்துக்கொண்டு வாழ்விழந்து நாதியற்று நிற்கும் எமதுமக்களே இந்த ஆசாமிகளின் இலக்கு ஆகும்.

பெற்றோரை இழந்த பெண்குழந்தைகளையும் இளம்விதவைகளையும் நோக்கி ஆச்சிரமங்கள் வாழ்வாதார உதவித்திட்டங்கள் என்னும் பெயர்களில் இந்த ஆன்மீக வேடதாரிகள் வலைவிரிப்பதை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது, கூடாது.

– மட்டுநகரிலிருந்து எழுகதிரோன்-

பச்சை கிரிமினல்  பிரேமானந்தா  சுவாமிக்கு வடக்கில் ஆச்சிரமம் தேவையா??

krishna-statue-premannda-swamy-ashram-04 கிரிமினல் சுவாமி பிரேமானந்தாவின் சீடர்களுக்கு வக்காளத்து வாங்கி முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதன் நோக்கம் என்ன?? krishna statue premannda swamy ashram 04வவுனியாவில் புளியங்குளத்தில் ஏ9 வீதியில் அமைக்கப்பட்டு உள்ள பிரேமானந்தா ஆச்சிரத்தை வளப்படுத்துகின்றமையில் வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார்.

அத்துடன் இம்மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் இவரின் முதலமைச்சர் பதவிக் காலத்தில் பிரேமானந்தா சுவாமிக்கு ஆச்சிரமங்கள் அமைக்கின்ற செயற்பாட்டை முன்னெடுப்பார் என்றும் மிக நெருக்கமானவர்களுக்கு வெளிப்படையாக தெரிவித்து உள்ளார்.

மேற்சொன்ன பிரேமானந்தா ஆச்சிரமத்தில் கிருஷ்ணர் சிலை ஒன்றை நிறுவிக் கொடுக்கின்றமையில் இவர் முன்னிலை வகித்து செயற்பட்டார்.

இச்சிலையின் பிரதிஷ்டை அண்மையில் இடம்பெற்றது. மிகுந்த கடமைப் பளுக்களுக்கு மத்தியிலும் இதில் முதலமைச்சர் தவறாது கலந்து கொண்டு வழிபாடுகள், பிரசங்கம் மேற்கொண்டார்.

ஆனால் நீதி துறையால் படுகொலை, பாலியல் வல்லுறவு ஆகிய கொடூரக் குற்றங்களைப் புரிந்தவர் என ஒன்றுக்கு இரண்டு தடவைகள் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட  ஒரு காமுகன்தான் பிரேமானந்தா.

இந்நிலையில் முன்னாள் நீதியரசரான விக்னேஸ்வரன் கடவுளாகவும், குருவாகவும் பிரேமானந்தாவை வழிபடுகின்றமையோடு மட்டுமல்லாமல் பிரேமானந்த வழிபாட்டை கொழும்பு, வட மாகாணம் அடங்கலாக நாட்டின் பல இடங்களிலும் பரப்பி வருகின்றமை சர்ச்சைக்கு உரிய விடயமாக பூதாகரம் ஆகி உள்ளது.

  • krishna-statue-premannda-swamy-ashram-01 கிரிமினல் சுவாமி பிரேமானந்தாவின் சீடர்களுக்கு வக்காளத்து வாங்கி முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதன் நோக்கம் என்ன?? krishna statue premannda swamy ashram 01krishna-statue-premannda-swamy-ashram-05 கிரிமினல் சுவாமி பிரேமானந்தாவின் சீடர்களுக்கு வக்காளத்து வாங்கி முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதன் நோக்கம் என்ன?? krishna statue premannda swamy ashram 05krishna-s-pa-01 கிரிமினல் சுவாமி பிரேமானந்தாவின் சீடர்களுக்கு வக்காளத்து வாங்கி முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதன் நோக்கம் என்ன?? krishna s pa 01
    வெள்ளைக்காரர்கள் போலி சாமியார்கள் நடத்தும் ஆச்சிரமங்களுக்கு ஏன் வருகிறார்கள் தெரியுமா?

1.தங்குமிடம் இலவசம் (இயற்கையான, எழில் நிறைந்த இடங்கள்)

2. இலவச உணவு

3. ஊர் சுற்றிப் பார்பதற்கான ஒழுங்குகள் இலவசம்

4. வெள்ளைக்காரர்களை  கவனிப்பதற்கு  (சேவை)    பணியாட்களும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். (உடம்பு தேய்த்து விடுவதற்கான ஆட்களும் கிடைப்பார்கள்)

(இந்தியர்கள், இலங்கையர்களை (தமிழர்கள்,சிங்களவர்கள்) பொறுத்தவரை வெள்ளைக்காரர்களும்  கடவுள்கள் தானே)

5. இதைவிட, அவர்கள்  என்ன விரும்புகிறார்களோ, அவற்றையும்  பெற்றுக்கொள்ளலாம். ஜாலியான வாழ்க்கை தானே!

வெள்ளைகாரர்களை  போலி சாமியார்கள் நடத்தும்  தங்கள்  ஆச்சிரமங்களில்  தங்க வைப்பதன் மூலம்  அவர்களுக்கு என்ன நன்மை கிடைக்கும்?

கொஞ்ச டொலர் கிடைக்கும்.

அதைவிட,  வெள்ளைக்காரனே எங்கட  ஆச்சிரமத்துக்கு வந்து,  எங்கட  பிரேமானந்தா  சாமியை உண்மையான சாமி என எண்ணி  வணங்குகின்றான் என்றால்  எவ்வளவு பெருமை!

இதுபோன்ற நடவடிக்கை மூலம்,    தமிழர்களை  இலகுவாக கவர்ந்து  ஆச்சிரமத்துக்கு  ஆள்  பிடிக்கலாம்  என்பதுதான்  சூட்சமம்.
krishna-s-pa-02 கிரிமினல் சுவாமி பிரேமானந்தாவின் சீடர்களுக்கு வக்காளத்து வாங்கி முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதன் நோக்கம் என்ன?? krishna s pa 02krishna-statue-premannda-swamy-ashram-02 கிரிமினல் சுவாமி பிரேமானந்தாவின் சீடர்களுக்கு வக்காளத்து வாங்கி முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதன் நோக்கம் என்ன?? krishna statue premannda swamy ashram 02சுவாமி பிரேமானந்தா குறித்த குறிப்புகள் வருமாறு:-

“ சுவாமி பிரேமானந்தா இலங்கை மாத்தளையைச் சேர்ந்தவர். 1951 ஆம் ஆண்டு நவம்பரில் பிறந்த அவரின் பெயர் பிறேம்குமார். சித்து வேலைகள் கை வரப் பெற்றவர். அதனைப் பயன்படுத்தி 1972 இல் மாத்தளையில் ஓர் ஆச்சிரமத்தை ஆரம்பித்தார்.

1983 இனக் கலவரத்தை அடுத்து, ஆசிரமத்தில் இருந்த ஒரு டசின் அநாதைக் குழந்தைகளையும், சில விசுவாசிகளையும் அழைத்துக் கொண்டு அகதிப் படகில் தமிழகம் சென்ற பிரேமானந்தா 1989 இல் திருச்சியில் பூபாலகிருஷ்ண ஆச்சிரமம் என்ற பெயரில் புதிய ஆச்சிரமத்தைத் தொடங்கினார்.

வாயில் இருந்து திருநீறு கொட்டுவது, சிவலிங்கம் வரவழைப்பது, அந்தரத்தில் கையை அசைத்து திருநீறு, குங்குமம், சந்தனத் தூள், உருத்திராட்சக் கொட்டை போன்றவற்றை வரவழைப்பது போன்ற சித்து வேலைகளை அதிசயமாகச் செய்து காட்டுவதால் பிரேமானந்தாவுக்கு அதிக மவுசு ஏற்பட்டது.

அதனால் ஆசிரமத்துக்கும் பிரபல்யம் உண்டாயிற்று. சொத்துகள் சேர ஆரம்பித்தன. திருச்சி பாத்திமா நகரில் 150 ஏக்கர் விஸ்தீரணத்தில் ஆசிரமம் விசாலமாயிற்று. சுமார் நூறு சிறுவர்கள், நூறு சிறுமியர் என அநாதைக் குழந்தைகள் ஆச்சிரமத்தில் சேர்க்கப்பட்டு வளர்க்கப்பட்டனர்.

1993 இறுதி வரை எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால் ஆச்சிரமத்துக்குள், சுவாமியின் குடிலுக்குள் இடம்பெறும் பயங்கரங்கள் பற்றி செய்தி கசியத் தொடங்கியபோதுதான் நிலைமை விபரீதமாயிற்று.

சில சிறுமிகள் ஆச்சிரமத்தை விட்டுத் தப்பி வந்து பொலிஸில் கொடுத்த புகார்களை அடுத்து பொலிஸ் விசாரணை ஆரம்பமாயிற்று.

அப்போதுதான் தோண்டத் தோண்டப் பூதம் கிளம்பிய கதையாக பல மர்மங்கள் வெளிப்படத் தொடங்கின. அநாதைச் சிறுமியரை வைத்துத் அவரது உடல் பசியைத் தீர்த்த சுவாமியின் அடாவடித்தனங்கள், பித்தலாட்டங்கள் அம்பலமாயின.

அந்த கால கட்டத்தில் சுவாமி பிரேமானந்தாவின் லீலைகளை விவரிக்காத நாளே தமிழகப் பத்திரிகைகள், சஞ்சிகைகளுக்குக் கிடையாது என்ற நிலைமை. சுவாமி பிரேமானந்தாவைப் போன்று வேடமிட்டு நகைச்சுவை நடிகர் செந்தில் பண்ணிய திரைப்படக் கலாட்டாவுக்குப் பெரு வரவேற்பு.

நீதிமன்ற விசாரணைகளின் படி ஆகக் குறைந்தது பதின்மூன்று சிறுமிகளை பிரேமானந்தா பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியமை நிரூபணமாயிற்று.

இதில் பல சிறுமிகள் பருவமடைய முன்னரும், பருவமடைந்து ஒரு மாதத்துக்குள்ளும் கூட சுவாமியால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டனர் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாயிற்று.

பிரேமானந்தாவினால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பமடைந்த சிறுமி ஒருவரின் கர்ப்பத்தைக் கலைக்கவும் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

அந்தக் கருவை மருத்துவ சோதனைக்கு உட்படுத்திய நிபுணர்கள் அதற்குக் காரணம் சுவாமி பிரேமானந்தாவே என்பதையும் நீதிமன்றத்தில் விஞ்ஞான ஆதரங்களோடு சமர்ப்பித்தனர்.

சிறுமிகளுக்கு எதிரான இத்தகைய பாலியல் கொடூரங்களை அறிந்து அதற்கு எதிராகக் கொதித்தெழுந்த ரவி என்ற ஆச்சிரம உதவியாளர் பிரேமானந்தாவினால் அடித்துக் கொலை செய்யப்பட்டு ஆச்சிரம சுற்றாடலிலேயே புதைக்கப்பட்டார். விசாரணைகளின்போது அவரது சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.

பாலியல் வன்புணர்வைத் தாங்க முடியாமல் ஆச்சிரமத்தை விட்டு ஓட முயன்ற சிறுமிகள் வளைத்துப் பிடிக்கப்பட்டு சுவாமியினாலேயே தாக்கப்பட்டு தண்டிக்கப்பட்டனர்.

பொலிஸ், நீதிமன்ற விசாரணைகளின் போது ஆச்சிரமத்தில் பிரேமானந்தா சுவாமிக்கு அடுத்த நிலையில் பொறுப்பில் இருந்த மாதாஜி திவ்வியதேவி ராணி என்ற பெண்மணி தலைமறைவானார்.

சுவாமியின் பாலியல் கொடூரங்களுக்குத் துணை நின்றவர் எனக் கருதப்படும் இந்த அம்மணி இன்னும் இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாகவே இருக்கின்றார். அவர் கைது செய்யப்படவில்லை.

நீதிமன்ற விசாரணையை அடுத்து 1997 ஓகஸ்டில் சுவாமி பிரேமானந்தாவுக்கும் அவரது உதவியாளர்கள் ஐவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

மற்றொரு எதிரிக்கு இரண்டு வருடச் சிறை கிடைத்தது. சுவாமி உட்பட ஏழு எதிரிகளும் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு இந்தியப் பணத்தில் 62 இலட்சம் ரூபா நஷ்டஈடு செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து பிரேமானந்தா செய்த மேன்முறையீடு 2002 டிசெம்பரில் உயர்நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டு அவருக்கான தண்டனை உறுதி செய்யப்பட்டது. 2011 பெப்ரவரி 21 இல் 59 ஆவது வயதில் சிறையில் பிரேமானந்தா காலமானார்.

சமுதாய இழிவுக்கு சாமரம் வீசும் வடக்கு முதலமைச்சரின் ஆன்மீக வேடம்.

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply