போர்க்குற்றச் சாட்டுக்களில் இருந்து தப்ப தேர்தல் மூலம் தமிழ்மக்கள் தன் பக்கம் எனக் காட்டத் துடிக்கும் மகிந்த இராசபக்சே!
நக்கீரன்
வட – கிழக்கில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்னும் 24 மணி நேரமே எஞ்சியுள்ளது.
வட – கிழக்கில் மொத்தம் 26 உள்ளாட்சி சபைகளுக்குத் தேர்தல் நடைபெறுகிறது.
கடந்த மார்ச்சு 17 இல் வட – கிழக்கில் உள்ளாட்சி சபைகளுக்கு நடந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்ட 12 சபைகளிலும் வெற்றிபெற்றது. உள்ளாட்சி சபைகளைக் கைப்பற்றுவதன் மூலம் தமிழ்மக்கள் அடித்தள ஆட்சி அதிகாரத்தைத் தங்கள் கையில் வைத்திருக்க முடியும்.
வட – கிழக்கில் நடந்து முடிந்த ஆட்சித்தலைவர் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றில் பலத்த தோல்வியைச் சந்தித்த ஆளும் அய்க்கிய சுதந்திர மக்கள் முன்னணி யூலை 23 இல் நடைபெற இருக்கும் தேர்தலில் தமிழ்க் கைக்கூலிகளின் ஆதரவோடு எப்படியும் வென்றுவிட வேண்டும் என சபதம் எடுத்துள்ளது.
ஆட்சித்தலைவர் மகிந்த இராசபக்சே அபிவிருத்தி என்ற போர்வையில் ஆளும்கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் தனது அமைச்சர் பட்டாளத்தோடு சூறாவளிப் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார்.
எமது மக்களின் வேட்டியையம் சேலையையும் உரிந்து அவர்களை அம்மணமாக்கியவர்கள் இப்போது இலவச வேட்டி, சேலை வழங்கி அவர்களது வாக்குகளுக்குக் குருதி தோய்ந்த கைகளுடன் விலை பேசுகிறார்கள்.
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் ஞாயிறு (யூலை 03) காலை உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுகின்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் பஸில் இராபச்சே “பன்னாட்டுச் சமூகத்துக்கு நாங்கள் ஒன்றைத் தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும். தமிழ் மக்கள் எமது அரசுடன் தான் இணைந்திருக்கின்றார்கள் என்பது தான் அது. இதற்காக நாம் உள்ளாட்சிச் சபைத் தேர்தலில் வெற்றி பெறக் கடுமையாக உழைக்க வேண்டும்” எனப் பேசியுள்ளார். எனவே வழக்கத்தைவிட இந்தத் தேர்தலில் ஆளும் கட்சி ஆட்பலம்,பணபலம், அதிகார பலம், இராணுவ பலம் ஆகியவற்றைத் தாராளமாகப் பயன்படுத்தியிருக்கிறது.
ஆளும் சிங்கள – பவுத்த பேரினவாதிகளுக்குத் ததேகூ பெரிய தலையிடியாக இருக்கிறது.
“அரசைக் குழப்பும் கட்சிகளாக தெற்கில் ஜேவிபியும் வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும்” இருக்கிறதாக அமைச்சர் பஸில் இராசபக்சே குற்றம்சாட்டியுள்ளார்.
வி.புலிகளுக்கு “இராணுவத்” தீர்வு தமிழ்மக்களுக்கு “அரசியல்” தீர்வு என்று போர்க்காலத்தில் கூறிய மகிந்த இராசபக்சே இப்போது 13 ஆவது சட்ட திருத்தம் வழங்கும் காணி மற்றும் காவல் அதிகாரம் தமிழர்களுக்கு வழங்கப்பட மாட்டாது என அறிவித்துள்ளார். அது மட்டுமல்ல 13 ஆவது சட்ட திருத்தத்தைக் கைவிட்டு நாடாளுமன்ற தெரிவுக் குழுவை அமைக்கப் போவதாக கூறியிருக்கிறார். இதன் மூலம் 13 + சட்ட திருத்தத்தை நடைமுறைப்படுத்தி இனச் சிக்கலைத் தீர்த்துவைக்குமாறு கடும் முயற்சி எடுத்து வந்த இந்தியாவின் முகத்தில் மகிந்த இராபக்சே கரி பூசியுள்ளார்!
“இந்த நாட்டை துண்டு துண்டாக்க விடமாட்டேன். இனச் சிக்கலுக்கு நானே தீர்வு காண்பேன். அது வடக்கு மற்றும் தெற்கில் உள்ள மக்களின் அடிமனதில் இருந்து தோன்ற வேண்டும். சிலர் பயங்கரவாதிகள் முன்வைத்த கோரிக்கைகளையே மறைமுகமாக வைக்கிறார்கள். அப்படியான கோரிக்கைகள் எந்த அடிப்படையிலும் கொடுக்கப்பட மாட்டாது. அதில் அயல்நாடுகள் தலையிடக் கூடாது” என மகிந்த இராசபக்சே தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் முழங்கினார்.
அப்பாவி மக்கள் பிழையானதும், தவறானதுமான வழியில் செல்லக் கூடாது என்பதுடன் வெளிநாடுகளில் எமது நாட்டைப் பற்றித் தவறான பரப்புரைகளில் சிலர் ஈடுபட்டும் வருகின்றனர். இந்நிலையில் இனம் மதம் மொழி பேதமின்றி எமது சிக்கல்களை நாமே பேசித் தீர்வுகண்டு சகல மக்களும் சம உரிமையுடன் வாழவேண்டும் என்பதே தமது விருப்பம் எனச் சுட்டிக்காட்டிய மகிந்த இராசபக்சே நாமே பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் அதன் மூலமே எமது நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் எனவும் தெரிவித்தார்.
இதே பல்லவியைத்தான் கடந்த 7 ஆண்டுகளாக நுனிநாக்கில் இனிப்பும் அடி நாக்கில் நஞ்சுமாக மகிந்த இராசபக்சே சொல்லி வருகிறார். அவர் உலக அபிப்பிராயம் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. அவரிடம் ஏதாவது தீர்வுத் திட்டம் இருப்பதாகவும் தெரியவில்லை. புலிகளோடு இனப்பிரச்சினைத் தீர்வுக்குச் சமாதி கட்டி விட்டதாகவே அவர் நினைக்கிறார்.
வி.புலிகளுக்கு “இராணுவத்” தீர்வு தமிழ்மக்களுக்கு “அரசியல்” தீர்வு என்று போர்க்காலத்தில் மார்தட்டிய மகிந்த இராசபக்சே அனைத்துக் கட்சிக் குழு 128 தடவை கூடிப் பேசித் தயாரித்த அறிக்கையை வெட்கமோ துக்கமோ இன்றிக் குப்பைக் கூடைக்குள் போட்டுவிட்டார். ததேகூ ஆன பேச்சுவார்த்தை என்பதும் வெறும் கண்துடைப்பே! பேச்சுவார்த்தையில் அரசு இதய சுத்தியோடு கலந்து கொள்ளவில்லை எனத் ததேகூ பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று பேசும் மகிந்த இராசபக்சே வடக்கில் என்ன செய்தார்? மாவீரர் துயிலும் இல்லங்களை உழுது இராணுவ தளங்களைக் கட்டியதும் இராணுவத்துக்குக் குடியிருப்புக்களைக் கட்டியதும் பவுத்த விகாரைகளைக் கட்டியதும் கண்ட இடங்களில் எல்லாம் புத்தரின் சிலைகளை நிறுவியதும் சிங்கள இராணுவத்துக்கு நினைவு தூபிகள் நிறுவியதும் தமிழ் ஊர்களுக்கும் தெருக்களுக்கும் சிங்களப் பெயர்கள் சூட்டப்படுவதும், சிங்களவர்களை அரச செலவில் குடியேற்றியதும் இடம் பெயர்ந்த தமிழ் மக்களை நடுத்தெருவில் விட்டதுமே மகிந்த இராசபக்சேயின் சிங்கள – பவுத்த பேரினவாத அரசு செய்த சாதனைகள் ஆகும்.
வடக்கின் வசந்தத்தின் கீழ் தமிழர்கள் மீள்குடியமர்த்தப்படுவதற்குப் பதில் தெற்கில் இருந்து சிங்களவர்கள் குடியேற்றப்படுகிறார்கள். கொக்கச்சான்குளம் என்ற தமிழ் ஊர் நெடுங்கேணி செயலர் பிரிவில் வவுனியா பிரதேச சபையின் கீழ் வருகிறது. போர்க்காலத்தில் தமிழர்களால் கைவிடப்பட்ட இந்த ஊரின் 300 ஏக்கர் காணியில் தமிழர்கள் கமம் செய்துவந்தார்கள். ஆனால் அதில் சிங்கள அரசு இப்போது 165 சிங்களக் குடும்பங்களை மகாவெலி அதிகாரச சபை இரகசியமாகக் குடியேற்றியுள்ளது. இராணுவம் கமச் செய்கைக்காக பழுதடைந்த குளத்தை ரூபா 4.5 மில்லியன் செலவில் திருத்தியுள்ளது. மேலும் ரூபா 20 மில்லியன் செலவில் 22 கிமீ தொலைவுள்ள 24 அடி அகலமுள்ள வீதி காடுகள் ஊடாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஊரின் பெயர் கலபோவசவ என சிங்களத்தில் மாற்றப்பட்டுள்ளது. வீதியின் பெயர் மகாகச்சன்கோடி – கலபோவசேவா என அழைக்கப்படுகிறது. இதுதான் மகிந்த இராசபக்சே குறிப்பிடும் அபிவிருத்தியாகும். வடக்கின் வசந்தம் யார் பக்கம் வீசுகிறது என்பது இப்போது தெரிகிறதா?
இதே போல் சென்ற ஆண்டுக் கடைசியில் 186 சிங்களக் குடும்பங்கள் தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்குச் சொந்தமான நாவற்குழி காணியில் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். ஆட்சித்தலைவர் மகிந்த இராசபக்சே, படைத்துறை அமைச்சின் செயலாளர் கோத்தபாய, இராசபக்சே, அமைச்சர் டக்லஸ் தேவானந்தா ஆகியோரை வாழ்த்தும் பதாதைகள் அங்கு தொங்கவிடப்பட்டுள்ளன.
இந்தச் சிங்களக் குடியேற்றங்களை நியாயப்படுத்த “இந்த நாடு எல்லோருக்கும் சொந்தம், நாங்கள் எல்லோரும் உடன்பிறப்புக்கள் “என ஆட்சித்தலைவர் மகிந்த இராசபக்சே பசப்பு வார்த்தைகளைச் சொல்கிறார்.
அய்யன்னா மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் விடுத்துள்ள அறிக்கையின் படி போர் முடிந்தபின்னர் இடம்பெயர்ந்த 110,652 குடும்பங்கள் (365,082 பேர்) வட மாகாணத்துக்குத் திரும்பியுள்ளன. இவற்றில் 7,644 (26,009 பேர்) இன்னமும் நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கின்றன. 189,221 பேர் உறவினர்களோடு தங்கியிருக்கின்றனர். (The Island – June 27, 2011)
போர்க்குற்றம், மானிடத்துக்கு எதிரான போர்க்குற்றம் ஆகியவற்றில் இருந்து தப்பவும் பன்னாட்டுச் சமூகத்தை ஏமாற்றவுமே மகிந்த இராசபக்சே இந்தப் பேச்சுவார்த்தையையும் உள்ளாட்சித் தேர்தலையும் கேடயமாகப் பிடிக்கப் பார்க்கிறார். இந்தத் தேர்தலில் தப்பித் தவறி ஆளும் கட்சியில் போட்டியிடும் எட்டப்பர்கள் வெற்றிபெற்றால் ததேகூ, நாகதஅ, உலகத் தமிழர் பேரவை, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், தமிழக அரசு, போன்றவற்றின் எந்தக் குரலும் உலகு அரங்கில் எடுபடாது போகும். தேர்தலில் ஆளும்கட்சி தனது அதிகார பலத்தை முறைகேடு செய்து வென்றதை பன்னாட்டு சமூகம் கண்கில் எடுக்காது! அவர்களுக்குத் தேர்தல் நடந்தால் போதும்.
யூலை 23 இல் நடைபெறும் தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெற மாட்டாதென்றே பலர் நினைக்கிறார்கள். அரச ஊழியர்கள் ஆளும் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று மிரட்டப்பட்டுள்ளார்கள். சிங்கள இராணவம் வீடுவீடாகச் சென்று ஆளும்கட்சிக்கு வாக்களிக்குமாறு மக்களைப் பயமுறுத்துகிறது. ததேகூ வேட்பாளர்களது வீடுகள் கல்லெறிக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன. ததேகூ வேட்பாளரின் நாயின் தலையை வெட்டி அதனைப் படலையில் நட்டு வைத்துள்ளார்கள். இன்னொரு வேட்பாளரின் வீட்டில் மலசலத்தை கொட்டியுள்ளார்கள்.
கடந்த யூன் மாதம் யாழ்ப்பாணம் அளவெட்டி சைவ மகாஜன சபை மண்டபத்தில் நடந்த ததேகூ வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் திடீரென அத்து மீறி நுழைந்த சீருடை அணிந்த சிங்கள இராணுவத்தினர் இரும்புக் கம்பிகள், மண் வெட்டிப் பிடிகளைப் போன்ற குண்டாந்தடிகளால் கூட்டத்துக்கு வந்திருந்தவர்களை எந்த முன்னறிவிப்பும் இன்றிக் கடுமையாகத் தாக்கியது.
மேடையில் கூட்டத்துக்கு தலைமை வகித்த தமிழரசுக்கட்சியின் காங்கேசன்துறைத் தொகுதிச் செயலாளர் சுகிர்தனின் உடலைப் படையினரின் கொட்டன்கள் பதம் பார்த்தன. மேடையில் மட்டுமல்லாது கீழே அமர்ந்திருந்தவர்கள் மீதும் கொட்டன்களும் இரும்புக்கம்பிகளும் தாறுமாறாக விளையாடின. எவருமே படையினருடன் நியாயம் கதைக்கவோ அல்லது அவர்களிடம் கருணை கிடைக்குமென்று எதிர்பார்க்கவோ முற்படவில்லை. அங்கு வருகை தந்திருந்த 5 ததேகூ நா.உறுப்பினர்கள் மயிரிழையில் உயிர் தப்பினார்கள். அவர்களது பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த மெய்காப்பாளர்களே அவர்கள் மீது விழ வேண்டிய அடியைத் தாங்கிக் கொண்டார்கள். இரு மெய்பாதுகாப்பாளர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்ட்டார்கள்.
இந்தத் தாக்குதல் பற்றி ததேகூ நா.உறுப்பினர்கள் தெல்லிப்பளைக் காவல்துறையில் முறையிட்டார்கள். தங்களால் தாக்குதலில் ஈடுபட்டவர்களை அடையாளம் காட்ட முடியும் எனத் தெரிவித்தார்கள். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வட பகுதி இராணுவ தளபதி ஹத்துருசிங்கி தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் சம்பந்தப்பட்டவர்கள் தயவு தாட்சண்ணமின்றித் தண்டிக்கப்படுவர் எனச் சொன்னார். ஆனால் இதுவரை ஒருநடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆட்சித்தலைவர் மகிந்த இராசபக்சே கூட்டத்தில் யார் மீதும் தாக்குதல் நடைபெறவில்லை இராணவத்தினரும் காவல் கடமையில் இருந்த காவல்துறையினருமே சண்டை பிடித்துக் கொண்டார்கள் என முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைத்து விட்டார்.
சாவகச்சேரி ததேகூ முதன்மை வேட்பாளர் அருந்தவபாலன் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டு கொழும்புக்குக் கொண்டுபோய் விசாரிக்கப்படுகிறார். அவரால் வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரத்தில் முள்ளிவாய்க்காலில் பல்லாயிரம் மக்கள் கொல்லப்பட்டார்கள் என எழுதப்பட்டதுதான் அவர் செய்த குற்றம்.
தீவுப்பகுதிக்கு ததேகூ நா.உறுப்பினர்கள் தேர்தல் பரப்புரைக்குப் போக முடியாத சூழ்நிலை நிலவுகிறது. அதே நேரம் தீவுப்பகுதி ததேகூ வேட்பாளர்கள் குடாநாட்டுக்கு வரமுடியாத சூழ்நிலை உள்ளது. தீவுப்பகுதி நீண்ட காலமாகவே டக்லஸ் தேவானந்தாவின் ஆயுதக் குழுக்களின் கட்டுப்பாட்டில் இருந்து வருவது தெரிந்ததே.
“யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களில் எதிரணியினரால் தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளை சுதந்திரமான முறையில் முன்னெடுக்கமுடியாதுள்ளது. அரசியல் கூட்டங்கள், ஊர்வலங்கள் மட்டுமின்றி உள்ளகக் கூட்டங்களைக் கூட நடத்தமுடியாத நிலைமையே இன்றிருக்கின்றது” என கபே (CaFFE) என்ற அமைப்புத் தெரிவித்துள்ளது.
இவை யாழ்ப்பாணக் குடாநாடு இனவாத வெறிபிடித்த இராணுவத்தின் இரும்புப் பிடியில் இருப்பதையே எடுத்துக்காட்டுகிறது. அங்கு நிரந்திரமாக நிறுத்தப்பட்டுள்ள 50,000 இராணுவத்தினரின் ஆட்சியே நடைபெறுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களை சாதாரண இராணுவ சிப்பாய்கள் தாக்குகிறார்கள். இராணுவத்தின் விருப்பு வெறுப்பின் படியே அங்கு யாரும் எதையும் செய்ய முடியும். அங்கு சனநாயகம், சுதந்திரம், இயல்பு வாழ்க்கை என்பதெல்லாம் மருந்துக்கும் கிடையாது.
முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் மட்டுமல்ல அதற்குப் பின்னரும் சரண் அடைந்த வி.புலித் தளபதிகளும் போராளிகளும் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.
இராணுவ புலனாய்வுப் பிரிவு மக்களது ஒவ்வொரு அசைவையும் வேவு பார்க்கிறது. இராணுவ விதானைமார் எல்லா ஊர்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். விளையாட்டு விழாவா? கோயில் திருவிழாவா? திருமண வீடா? எதுவானாலும் இராணுவத்திடம் முன் அனுமதி பெறவேண்டும். இராணுவ தளபதிகளுக்கு அழைப்பிதழ் அனுப்ப வேண்டும். வருகிற இராணுவ தளபதிகளுக்கு பூரண கும்ப மாலை மரியாதை செய்யப்பட வேண்டும்.
வட – கிழக்கில் மக்களுக்கு மறுவாழ்வு அளிக்க வல்ல அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு மகிந்த இராசபக்சே தடை போட்டுள்ளார். வடக்கிலும் கிழக்கிலும் இயங்கிய செஞ்சிலுவைச் சங்கக் கிளைகளும் ஏதிலிகளுக்கான அய்யன்னா முகவர் நிறுவனத்தின் (UN Refugee Agency – UNHCR) கிளைகளும் மூடப்பட்டுள்ளன. தானும் தின்னாது மாட்டையும் தின்னவிடாத வைக்கல் பட்டடை நாய்போல் மகிந்த இராசபக்சே நடந்து கொள்கிறார்.
வடக்கில் இடம்பெயர்ந்த மக்களின் மறுவாழ்வுக்கு நிதியில்லை எனக் கைவிரிக்கும் மகிந்த இராசபக்சே அரசு இராணுவ தலைமையகம் கட்ட ரூபா 20 பில்லியனை (ரூபா 2,000 கோடி) யை ஒதுக்கியுள்ளது.
வடக்கும் கிழக்கும் தமிழர்களின் பாரம்பரிய பூமி என்ற கோட்பாட்டை ஒழிக்க வேண்டும் என்பதற்காக உலகிலே மிக உயரமான 522 அடி புத்தர் சிலையை வவுனியாவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பங்கேற்ற சிறிலங்காப் படையினரைப் போற்றிக் கவுரவிக்கும் முகமாகவே இந்தப் புத்தர்சிலை அமைக்கப்படவுள்ளது. இந்தப் புத்தர் சிலை அமைக்கும் திட்டத்துக்கு 1000 மில்லியன் (ரூபா 10,000 கோடி) செலவிடப்படவுள்ளதாக தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் சேனாரத் திசநாயக்கா அறிவித்துள்ளார்.
இப்படியான பவுத்த மயப்படுத்தல் ஏற்கனவே இராணுவ – சிங்கள மயப்படுத்தப்படும் திட்டமிட்ட முயற்சியின் நீட்சியாகும்.
தேர்தல் பரப்புரைக்கு யாழ்ப்பாணம் சென்ற தலைமை அமைச்சர் டி.எம். ஜெயரத்தின “பவுத்த மதம் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகவும் இந்துமதம் 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகவும் இதை நீங்கள் ஏன் சிந்திக்கவில்லை” என யாழ்ப்பாண மக்களைப் பாதுத்துக் கேட்டுள்ளார். இது வரலாற்றைத் திரிக்கும் முயற்சியாகும்.
விஜயன் (கிமு 543 – 504) முதற்கொண்டு மூத்தசிவன் ( கிமு 367-307 ) வரை இலங்கையை ஆண்ட நாக இன மன்னர்கள் இந்துக்கள் என்பதே வரலாறாகும். தேவநம்பிய தீசன் (கிமு 307 -247) என்ற நாக மன்னனே இந்து மதத்தில் இருந்து புத்தமதத்துக்கு மாறியவனாவான். புத்தர் கூட இந்துமதத்தில் பிறந்தவரே!
இன்னும் சொல்லப் போனால் இலங்கையின் ஆதிகுடிகள் திராவிடர்களாகிய நாகர், இயக்கர், இராட்சதர், வேடர் ஆகியோரே. கவுதம புத்தர் மூன்று முறை இலங்கை வந்ததாக மகாவம்சம் கூறுகின்றது. முதன் முறை மஹியங்கன்னை என்னும் இடத்திற்கும் இரண்டாம் முறை நாக தீபத்திற்கும் மூன்றாம் முறை கல்யாணி (இன்றைய களனியா) என்னும் இடத்திற்கும் வந்தார் எனவும் நாகதீபத்திலும் கல்யாணியிலும் நாகர் வசித்தனர் எனவும் நாகதீபத்திலுள்ள அரச குடும்பத்தில் அரசுக் கட்டில் தொடர்பாக ஏற்பட்ட குழப்பத்தை தீர்ப்பதற்காக வந்தார் எனவும் அந்நூல் நவிலும். மேலும் நாக தீபத்திலுள்ள அரச குடும்பத்தின் உறவினர் கல்யாணியிலும் இருந்தனர் எனவும் மகாவம்சம் கூறுகிறது.
1956 இல் “விஜயனின் வருகை” என்ற தலைப்புடன் சிறப்பு அஞ்சல் தலை ஒன்றை இலங்கை அரசு வெளியிட்டது. குவேனி ஒரு மரத்தடியில் அமர்ந்திருப்பது போலவும் கப்பலில் வந்த விஜயன் அவளிடம் அடைக்கலம் கோருவது போலவும் இந்த அஞ்சல் தலை அமைந்திருந்தது.
அஞ்சல் தலையைப் பார்த்த சிங்கள – பவுத்த இனவாதிகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். “விஜயன் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்தவன் என்ற கருத்து ஏற்கத் தக்கது அல்ல. தவிரவும் விஜயன் வந்தபோதே இங்கு குவேனி என்ற தமிழ்ப்பெண் இருந்திருக்கிறாள் என்று கூறினால், இலங்கையின் பூர்வகுடிகள் தமிழர்கள் என்பதை நாமே ஒப்புக்கொண்டது போலாகிவிடும். எனவே, இந்தத் தபால் தலையை திரும்பப் பெறவேண்டும்” என்று கூறினார்கள். இதன் காரணமாக, இந்த அஞ்சல் தலையை இலங்கை அரசு திரும்பப் பெற்றுக்கொண்டது. ஆனால், அதற்குள் இந்த அஞ்சல் தலை உலகம் முழுவதும் பரவி விட்டது.
எனவே சிங்கள பேரினவாதம், பவுத்த மதவாதம் கக்கும் மகிந்த இராசபக்சே மற்றும் ஜெயரத்தின போன்றோரது வாயை அடைக்க வேண்டும் என்றால் தமிழ்மக்கள் தங்கள் கையில் இருக்கும் வாக்குப் பலத்தை அவர்களுக்கு எதிராகவும் ததேகூ க்கு ஆதரவாகவும் பயன்படுத்தல் வேண்டும்.
பேரினவாதிகளின் கட்சியான அய்க்கிய சுதந்திர மக்கள் முன்னணியின் வெற்றிலைச் சின்னத்துக்கு எதிராக போடும் ஒவ்வொரு வாக்கும் சிங்கள – பவுத்த பேரினவாதிகளது மண்டையில் போடும் சம்மட்டி அடியாக இருக்கும்.
விடுதலைப் புலிகளை அழித்துவிட்டோம் என்று துள்ளும் பேரினவாத அரசு தமிழ்மக்களது வாக்கைக் கண்டு அஞ்சுகிறது. தமிழ்மக்களது காப்பரணாக விளங்கும் ததேகூ கண்டு மகிந்த இராசபக்சே பயப்படுகிறார்.
எனவே எமது தாயக உறுவுகள் சிங்கள – பவுத்த – இராணுவ மேலாண்மையை ஒழிக்கத் தங்கள் வாக்குகளை ததேகூ பின் வேட்பாளர்களுக்கு போட்டு தமிழ்த் தேசியத்தின் இருப்பைப் பலப்படுத்து வேண்டும்.
வடக்கும் கிழக்கும் இராணுவ – சிங்கள – பவுத்த மயப்படுத்தல், பண்பாட்டுச் சீரழிவுகள், பொருளாதாரச் சிதைவுகள், அடக்குமுறை ஆகியவற்றுக்கு எதிராக இன்று நாடாளுமன்றத்தில் ததேகூ மட்டுமே குரல் எழுப்பி வருகிறது. அதனை முறியடிக்க சிங்கள அரசு கடுமையாகப் பாடுபடுகிறது. அதன் வெளிப்பாடாகவே எப்பாடு பட்டும் வடக்கில் ததேகூ தோற்கடித்து உள்ளாட்சி சபைகளை கைப்பற்றிவிட வேண்டும் என சிங்கள – பவுத்த இனவாத அரசு வெறித்தனத்தோடு செயற்படுகிறது.
முன்னைய காலத்தில் சிங்கள – பவுத்த – இராணுவ மயப்படுத்தல் ஆகியவற்றுக்கு எதிராக வி.புலிகள் காப்பரணாக விளங்கினார்கள். இன்று அந்தப் பொறுப்பு ததேகூ இன் தோள்களில் சுமத்தப்பட்டுள்ளது.
முன்னர் நடந்த தேர்தல்களில் ததேகூ இன் வெற்றிக்கு புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் குறிப்பாக கனடிய தமிழ்மக்கள் பாரிய பங்களிப்பைச் செய்துள்ளார்கள்.
கடந்த தேர்தல்களில் எமது மக்கள் எந்த இலவசங்களுக்கும் விலை போகாது, எந்தப் பயமுறுத்தல்களுக்கும் அடிபணியாது தங்கள் வாக்குகளைப் போட்டிருக்கிறார்கள். இந்தத் தேர்தலிலும் எமது மக்கள் சிங்கள – பவுத்த இனவாதத்தைக் கக்கும் அசுமமு க்கும் போர்க்குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்படும் அதன் தலைவர் மகிந்த இராசபக்சேக்கும் செமபாடம் புகட்டுவார்கள் என எதிர்பார்க்கலாம்.
தமிழ்த் தேசியத்தின் இருப்பைப் பலவீனப் படுத்தும் சிங்கள – பவுத்த இனவாத அரசின் முயற்சிகளை முறியடிக்கப் புலம்பெயர் தமிழர்கள் முன்வரவேண்டும். எஞ்சியிருக்கும் நேரத்தில் தாயகத்தில் இருக்கும் அவர்களது சொந்தங்களைத் தொலைபேசியில் அழைத்து ததேகூ வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்க வேண்டும். தாயகத்தில் தமிழ்த் தேசியத்தின் இருப்புக் கேள்விக் குறியானால் புலம்பெயர் தமிழர்களது போராட்டங்கள் பொருள் அற்றுப் போய்விடும் என்பது நினைவு கொள்ளத்துக்கது.
(July 22, 2011)
South Sudan walk to freedom
Veluppillai Thangavelu
South Sudan walk to freedom has ended. A New Nation will be born on July 09, 2011 midight. Republic of South Sundan is now poised to take its place in the United Nations Organization sooner than anyone thought a year ago. South Sudan will be the 193rd nation to be admitted to UN membership. When UNO was formed in 1945 following WW11 there were only 51 countries on its roll. Since then membership has increased by leaps and bounds especially after the break up of the Soviet Union and Yugoslavia in the early nineties. Between 1991 – 1994 membership rose from 166 to 184 an increase of 19 states. The youngest nation to join the UNO was Montenegro (192) which voted for independence from Serbia in a referendum on May 21, 2006. Before that East Timor formally joined the world body in 2002 after centuries of Portuguese rule and years of often brutal Indonesian occupation.
Sudan’s centuries of association with Egypt formally ended in 1956, when joint British-Egyptian rule over the country ended. Independence was rapidly overshadowed by unresolved constitutional tensions with the south, which flared up into full-scale civil war that the coup-prone central government was ill-equipped to suppress. The military-led government of President Jaafar Numeiri agreed to autonomy for the south in 1972, but fighting broke out again in 1983. After two years of bargaining, the rebels signed a comprehensive peace deal with the government to end the civil war in January 2005.
Decades of fighting have left Sudan’s infrastructure in tatters. With the return of millions of displaced southerners, there is a pressing need for reconstruction. The economic dividends of peace could be great. Sudan has large areas of cultivatable land, as well as gold and cotton. Its oil reserves are ripe for further exploitation. Arabic is the official language and Islam is the state religion, but the large non-Arab, non-Muslim minority has rejected attempts by the government in Khartoum to impose Islamic Sharia law on the country as a whole.
The referendum to split Sudan into a predominantly Muslim North and a predominantly Christian South, after years of fighting and repression, was concluded on January 15,2011. The popular mandate catapulted a collective dream towards the much awaited freedom, off the yoke of a presumptively terrorist state Sudan. The referendum came exactly five years after the Comprehensive Peace Agreement was accorded in 2005 between a cornered Government of Sudan and South Sudan’s People’s Liberation Movement. Eelam Thamils join the South Sudanese people in their moment of rejoice.
Sixty percent out of the 4.5 million registered voters casted their votes confirming the turnout passed the 60 percent mark needed to make the result binding. Almost 99 percent of south Sudanese who voted for independence in the referendum chose to split away from the north, the first official but incomplete figures published by the referendum commission. This is an indication of a landslide vote for southern independence promised in a 2005 peace deal that ended decades of north-south civil war. The final official figures are expected in February.
The website for the Southern Sudan Referendum Commission (southernsudan2011.com/) showed a 98.6 percent vote for secession, with more than 80 percent of the votes from the south counted, and 100 percent counted in other areas.
International observers gave south Sudan’s independence referendum their seal of approval on January 17, 2011 and said that a vote for secession was now “virtually certain” in their first official judgment on the poll. Early results from last week’s plebiscite suggest that people from Sudan’s oil-producing south voted overwhelmingly to split away from the north following decades of civil war. Observers from the Carter Center and the European Union both said that the vote had been credible — an endorsement that moved the region a step closer to independence.
The main political division of Africa was decided at the Berlin Conference in 1884/85. The participating European powers had little information about the people of inland Africa. They had explored the coastline, but their interest was access to the mineral wealth of the continent.
If one looks at the political boundaries of Africa it becomes clear that no regard was given to the cultural and ethnic diversity of its people. Local people who had little in common were lumped together, and people with a common culture and tradition were separated. The Zulus and the “boers” were the first to offer military resistance to the land- grabbing and mineral interests of colonial powers, but they succumbed to superior military power. Only Abyssinia and Liberia were not “colonised”. Bloody ethnic wars in Africa were the result of decisions taken at the 1884/5 conference.
South Sudan was already there during the European scramble for Africa in Berlin. South Sudan was also there during the British Colonialists “Closed District Ordinance.” South Sudan was there in the historical 1947 Juba Conference. South Sudan was there in the historical 1955 Torit mutiny and rebellion. South Sudan was there during 1965 Round-table Conference. South Sudan was there during the initial historical 1982-1983 rebellions.
South Sudan’s sovereignty is now mere a matter of time. People who fled to distant shores in search of peace are now ecstatic of a peaceful future in their homeland. More than 2000 families have started returning back to the swampy tracts of the White Nile. But the question pops up, can South Sudan ensure, rather sustain peace? Only time will tell. The new government at Juba has to ensure equal opportunity, democratic representation of all ethnic sects. South Sudan comprises of composite clusters of ethnicity, and hence their respective aspirations, beliefs, customs, languages and seeking in unity in diversity will be the greatest challenge the leaders of the new government will face. Southern Sudan shares its borders with Ethiopia, Kenya, Uganda and Congo. Each country poses a unique assortment of threats. Ethiopia’s political instability, insurgences and fast penetrating roots of Islamist terrorism are poised to be the greatest challenges to South Sudan, all the more as the latter is not an Islamic one. Tunisia is a recent example of how a country under the jackboot of a corrupt dictator backed by the army could collapse like nine-pins overnight for lack of democracy, transparency and rule of law.
It shall be H.E. Salva Kiir Mayardit to lower the Sudan flag and raise high the flag of the Republic of South Sudan on 9th July, 2011 at the Presidential Republican Palace in Juba. He is going to be the first President of the Republic of South Sudan as already agreed by the political parties of Southern Sudan. It shall be the very GoSS and SPLM/A Flag which is being used now. Dr. Mayardit shall lift up this flag with honour on that greatest First Independent Day of South Sudan.
South Sudan will have the ‘Buffalo’ as the “Coat of Arms (Emblem)” and with “Motto” under its design written: ‘Peace and Prosperity’. The current proposed “National Anthem” shall be amended to remove irrelevant attributes like the Land of Cush, Milk and Black Warriors. South Sudan will issue Ordinary “Black Passport” save for the diplomatic ones which should be red. Their “Nationality” shall be ‘South Sudanese’ and have ‘South Sudanese Pound’ as their “Currency”.
It is widely expected that recognition of the new government from other nations around the globe will be swift and decisive.
Russia has expressed a willingness to recognize an independent state in Southern Sudan if the results of January 15 referendum are accepted by the two governments north and south according to the special envoy of the President Dmitry Medvedev to Sudan. On Wednesday, the ruling National Congress Party (NCP) declared recognizing the results of the Southern Sudan referendum on independence.
“If a new independent state appears on Africa’s map as a result of the referendum and this is not accompanied with conflicts, this outcome can be described as a most favourable one,” said Mikhail Margelov special Russian envoy to Sudan. “We act as an honest partner: we have no burden of the colonial past either in Sudan or in neighbouring African countries, nor have we investments running into billions or the mentality of an international policeman. Russia in this case can only show its goodwill,” he stressed.
Margelov said the northern and southern Sudan governments expressed readiness to reach agreement on the pending issues to prevent another civil war. “The political forces of Sudan were able now to reach agreement: they have common interests, and, one would like to hope, not only economic.”
An Overview of undivided Sudan
- Full name: Republic of Sudan
- Population: 43.2 million (UN, 2010)
- Capital: Khartoum
- Area: 2.5 million sq km (966,757 sq miles)
- Major languages: Arabic, English (official), others
- Major religions: Islam, Christianity, Animism
- Life expectancy: 58 years (men), 61 years (women) (UN)
- Monetary unit: Sudanese pound
- Main exports: Oil, cotton, sesame, livestock and hides, gum Arabic
- GNI per capita: US $1,220 (World Bank, 2009)
Last December, during a visit to Khartoum, the Russian envoy met with the Sudanese First Vice President and head of southern Sudan government to discuss the future relations between Russia and South Sudan. “Russia is interested in its economic presence in Sudan, whether in a unified one or with the South separated from it,” he said. “From the business point of view, (Sudan) offers a multitude of perspective trends – oil, pipelines, energy, water resources and railway transport,” he stressed.
China is the biggest foreign stakeholder in the Sudanese oil industry, via China National Petroleum Company’s interests in various production and exploration blocks, and it receives approximately three-quarters of Sudan’s oil exports. The oil industry is acutely vulnerable to any conflict because about 75 % of Sudan’s proven reserves of 6.3bn barrels are in the south, but the pipeline that carries the oil to export terminals and refineries runs through the north. The south needs Khartoum’s co-operation to sell its oil; the north needs revenues from its neighbour’s resources and the two sides of the country have yet to agree how they will cooperate to keep the oil flowing after independence.
There is an adage that behind every man’s success there lies a woman. The same is true of nations which freed themselves from tyranny and slavery. East Timor independence was backed by Portugal its former colony. Kosovo shook off Serbia’s yoke with the help of European Union and the NATO forces. South Sudan had the backing of a majority of Christian organizations which wield considerable political clout in US politics.
Freedom don’t come easily. South Sudan paid a price. More than 2 million people died during the civil war which began in 1983. Sudan’s holocaust, includes village raids, massacres, refugees and slavery. Civil war in Darfur region is seen as “one of the worst nightmares in recent history”.
The birth of South Sudan after a painful and destructive civil war gives hope to other national minorities like the Palestinians, Chechens, Kashmiris, Kurds and Eelam Thamils fighting for their own freedom. The borders of countries are not cast in stone. Adding another ten members to the UN will not cause the sky to fall!
Sudan Peoples’ Liberation Movement (SPLM) has invited Transnational Government of Tamil Eelam (TGTE) to visit Southern Sudan in the immediate aftermath of the vote for an independent state. TGTE is sending a delegation to participate in the celebrations and to discuss possibilities of assisting Southern Sudan in their development efforts through Tamil Diaspora expertise in selected fields. TGTE delegation will be received by the SPLM officials and will stay as guests of SPLM. This is a giant step in our struggle for statehood. There are many similarities between the South Sudanese people liberation struggle and the Eelam Thamils. Both faced persecution and a genocidal war. Sudanese President Bashir has been indicted for genocide and the Sri Lankan President Rajapaksa is to be indicted for genocide at some point in time. World leaders must recognize the legitimate struggle of Eelam Thamils to restore and reconstitute the sovereign state of Thamil Eelam. An independent Thamil Eelam is good for Thamils, but better for the Sinhalese and the world at large!
இன்று தென் சூடான், நாளை தமிழீழ விடுதலையை எதிர்பார்க்கலாம்
அனலை நிதிஸ் ச. குமாரன்
இரத்தம் சிந்தாமல், துன்பங்களை சந்திக்காமல் கிடைப்பது அல்ல விடுதலை. இப்பாரிய போராட்டங்களின் பின்னர் கிடைப்பதுவே உண்மையான விடுதலை. இழப்புக்களை சந்திக்காமல், இழப்புக்களின் வலியை உணராமல் விடுதலை பெறும் மக்கள் எத்தனை காலமாகினாலும் வாழ்வில் எந்தவித மாற்றத்தையும் காண முடியாது.
இவர்கள் இருண்ட வாழ்க்கையையே நடாத்திக்கொண்டிருப்பார்கள். பல போராட்டங்கள் செய்து விடுதலை பெறும் மக்கள், தாம் பட்ட துன்பங்கள் தமது எதிர்கால சந்ததிக்கு வந்துவிடக் கூடாதென்கிற நோக்குடன் துணிச்சலுடன் செயலாற்றி தம்மையும், தமது தேசத்தையும் உயர்த்துவதற்காக கடினமாக உழைப்பார்கள்.
இப்புதிய ஆண்டில் ஆபிரிக்க கண்டத்தில் உருவாகப்போகும் தென் சூடான் என்கிற புதியநாடு, விடுதலை வேண்டி நிற்கும் தேசங்களுக்கெல்லாம் புதுத்தென்பைக் கொடுத்து வரலாற்றில் நிலைபெற்றிருக்கப் போகின்றது.
விடுதலைக்காக போராடிய தேசங்களின் வரிசையில் இன்று தென் சூடான் விடுதலை பெறுகிறது. நாளை விடுதலை பெறப்போகும் தேசங்களில் தமிழீழமே முன்னிடத்தில் உள்ளது.
பிரித்தானியர்களினதும் எகிப்தியர்களினதும் காலனித்துவ நாடாகவிருந்த சூடான், ஜனவரி 1, 1956-இல் விடுதலை பெற்றது. ஏறத்தாழ 43 மில்லியன் சனத்தொகையைக்கொண்ட நாடு. இதன் பரப்பளவு ஏறத்தாழ 2.5 மில்லியன் சதுர கிலோமீற்றர். தென் பகுதியில் கிறிஸ்தவர்களும், வட பகுதியில் முஸ்லிம்களும் வாழ்ந்துவருகின்றார்கள்.
இந்த இரண்டு தேசங்களும் இனரீதியாகவும், மதரீதியாகவும் தனித்துவமானவை. சூடானின் அடக்குமுறை அரசிற்கு எதிராக கிளர்ந்தெழுந்த தென் சூடானிய மக்கள், தமது தேசத்திற்கான விடுதலைக்காக சூடான் விடுதலைபெற்ற காலப்பகுதிகளிலிருந்தே ஆரம்பித்த போராட்டம் பல்வேறு கட்டங்களாக பயணித்து, பல்வேறு இராஜதந்திர நகர்வுகள் ஊடாக நகர்ந்து, பல்வேறு சதிவலைகளில் சிக்கியபோதும் எழுந்துநிமிர்ந்துநின்ற தென் சூடானிய தேசத்துமக்களின் விடுதலைக்கான போர், தற்போது அதன் உச்சத்தை தொட்டுள்ளது.
பதினேழு வருடங்கள் தொடர்ந்த முதலாம் கட்டப்போரும், அதனைத் தொடர்ந்த சமாதான உடன்படிக்கையும், அதன்பின்னர் 1983-இல் ஆரம்பித்த இறுதிப்போரும், அதன் தொடர்ச்சியாக வந்த ஒப்பந்தத்தின் பலனாக தற்போது சர்வசன வாக்கெடுப்பு ஒன்று நடத்துகின்ற நிலைக்கு இரண்டு தேசங்களும் இணங்கி அதிலும் வெற்றி கண்டார்கள். 1983-இல் ஆரம்பித்த உக்கிரமான போரில் குறைந்தது இரண்டு மில்லியன் மக்கள் கொல்லப்பட்டும் பல மில்லியன் கணக்கானோர் இடம்பெயர்ந்தும் உள்ளனர்.
பல ஆண்டுகால பகைமைக்கு பின்னர் வட சூடானை மையமாக கொண்ட மேலாதிக்கவாத அரசு தென் சூடானிய மக்களின் பிரிந்துசெல்வதற்கான உரிமையை ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மேற்குலக அரசுகளின் முயற்சியால் தற்போதைய சூடானிய அரச அதிபர் ஓமர் அல்பாசீர் போர்க்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு சர்வதேச நீதிமன்றத்தில் பிடியாணை வழங்கப்பட்டுள்ள நிலையிலுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஈழத்தமிழரின் போராட்டத்திற்கும், தென் சூடானிய போராட்டத்திற்கும் பல இணக்கப்பாடுகளை காண முடியும். சிறிலங்கா சுதந்திரம் அடைந்த நாள் முதல் 1983 வரை தமிழ் தலைமைகள் பல போராட்டங்களை செய்தது. பல்லாயிரம் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.
இவைகள் அனைத்தையும் எதிர்த்துப் போராடி, தமிழீழ சுதந்திர நாட்டை உருவாக்க பிறந்தது பல தமிழ்ப் போராளி அமைப்புக்கள். எப்படி தென் சூடானுக்கு அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆதரவாக இருந்ததோ, அதைப்போலவே தமிழீழ போராளிகளுக்கும் இந்தியா உதவிக்கரமாக இருந்தது.
எப்படி சூடான் மக்கள் விடுதலை இயக்கம் தென் சூடானின் விடுதலைக்காக 1983 ஆண்டில் ஆயுதப்போரை மேற்கொண்டதோ, அதைப்போலவேதான் விடுதலைப்புலிகள் அமைப்பும் அதே ஆண்டில் தமிழீழ விடுதலைக்காக போரை ஆரம்பித்தார்கள். தற்போதைய சூடானிய அரச அதிபர் ஓமர் அல்பாசீர் போர்க்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு சர்வதேச நீதிமன்றத்தில் பிடியாணை வழங்கப்பட்டுள்ள நிலையிலுள்ளாரோ, அதைப்போலவேதான் சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சாவும் போர்க்குற்றம் புரிந்தவராக உலக நாடுகளினால் வர்ணிக்கப்படுகிறார்.
ஏறத்தாழ எட்டு மில்லியன் மக்கள் தொகை கொண்ட தென் சூடான் தேசத்தில், 4.5 மில்லியன் மக்கள் வாக்களிப்பு தகைமையை கொண்டிருக்கின்றார்கள். ஏறத்தாழ 619,000 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டதுடன், உகண்டா, கென்யா, எதியோப்பியா மற்றும் கொங்கோ நாடுகளுடன் எல்லைகளைக் கொண்டதுதான் தென் சூடான்.
ஈழத்தமிழர்களின் போராட்ட வரலாற்றுக்கும், தென் சூடானிய போராட்ட வரலாற்றுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இரு போராட்டங்களும் 1983-ஆம் ஆண்டிலேதான் ஆயுதப் போரின்மூலமேதான் தமது விடுதலையை வென்றெடுக்கலாம் என்கிற சிந்தனையுடன் ஆயுதப் போரை மேற்கொண்டனர். தென் சூடான் மக்களின் தன்னாட்சி உரிமையை ஏற்றுக்கொள்வதாக 1989-ஆம் ஆண்டு அப்போதைய சூடான் அரச அதிபர் அறிவித்திருந்தார்.
ஆனால் அதே காலத்தில் ஏற்பட்ட இராணுவ சதிப்புரட்சியில் ஆட்சிப் பீடமேறிய இப்போதைய அரசு அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூறி தொடர்ந்தும் போரில் ஈடுபட்டது. தொடர்ந்த போரும் அழிவுகளும் 2005-ஆம் ஆண்டு அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட சமாதான உடன்படிக்கை மூலம் ஓரளவுக்கு முடிவுக்கு கொண்டுவரப்பட்டன.
ஈழ விடுதலைப் போராளிகளும், சூடான் மக்கள் விடுதலை இயக்கம் போன்றே பல பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்கள். இவைகள் அனைத்தையும், சிங்கள அரசு ஏற்கவில்லை. நோர்வே அனுசரணையுடன் சூடான் அரசுக்கும் தென் சூடான் அமைப்பிற்கும் இடையில் 2002-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒரு இடைக்கால ஒழுங்கு பற்றிய உடன்பாடு காணப்பட்டது.
இந்த உடன்பாட்டின்படி தென் சூடான் தனது போரினால் பாதிக்கப்பட்ட இடங்களை புனரமைப்பதுடன்இ முக்கிய கட்டமைப்புடன் தென் சூடான் மக்களின் சுய நிர்ணைய உரிமையும் அங்கீகரிக்கப்பட்டது. அதாவது வடக்கு சூடானும் தெற்கு சூடானும் சேர்ந்து வாழ்வதா பிரிந்து செல்வதா என்ற உரிமையினையும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதே நோர்வேதான் அதே 2002-ஆம் ஆண்டில் சிறிலங்கா அரசிற்கும், புலிகளுக்கும் இடையில் தனது நேரடி மத்தியஸ்தத்தின் கீழான சமாதான ஒப்பந்தத்தை செய்தது.
விடுதலைப்புலிகளால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அரச திட்டத்தினை சிறிலங்கா அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்கு சர்வதேச நாடுகளின் குறிப்பாக, இணைத்தலைமை நாடுகளின் அசமந்த போக்கும் ஓர் காரணமாக இருந்தது. அத்துடன் இந்தியாவின் தலையீடும் காரணம் என பரவலாக கருதப்பட்டது. ஆனால், சூடானுடைய இடைக்கால திட்டத்தினை சர்வதேசம் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டு அதனை நடைமுறைப்படுத்துவதில் அமெரிக்காவும் நோர்வேயும் ஒற்றைக்காலில் நின்றனர். இதனால் வடக்கு சூடான் ஆட்சியாளருக்கு இடைக்கால சபையினை நடைமுறைப்படுத்துவதினைத் தவிர வேறு வழி இருக்கவில்லை.
சர்வதேசத்தின் ஒருங்கிணைந்த அழுத்தம் காரணமாக இடைக்கால நிர்வாகம் நடைமுறைப்படுத்தப்பட்டது. உண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதனை விட நடைமுறையில் உள்ளதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றுதான் கூறவேண்டும். காரணம் வடக்கு சூடானிய ஆட்சியாளர்கள் தென் சூடானிற்கு ஒப்பந்தத்தில் கூறியது போல் எதுவும் செய்யவில்லை. புனர்வாழ்வும் செய்து கொடுக்கவில்லை, அபிவிருத்தியும் செய்யப்படவில்லை. மாறாகஇ தெற்கு சூடானியரின் எண்ணெயினை அகழ்ந்து சீனாவிற்கு கொடுத்தவண்ணம் இருந்தது.
எது என்னவாயினும், நோர்வே தலைமையில் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் பிரகாரம் மக்களிடம் வாக்கெடுப்பு நடாத்தி, வாக்களிக்க தகமையுடைய 4.5 மில்லியன் மக்களில் 60 விழுக்காட்டினர் தென் சூடான் பிரிந்து செல்வதை ஏற்று வாக்களித்தால்தான் விடுதலையை பெற முடியும் என்று ஒப்புக்கொண்டார்கள்.
அதன்படியே, ஜனவரி 9-ஆம் நாள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த வாக்கெடுப்பு, ஜனவரி 15-ஆம் திகதி ஏழு நாட்களுக்கு தொடர்ச்சியாக நடைபெற்று வெற்றிகரமாக நிறைவடைந்தது. புலம்பெயர்ந்து வாழும் தென் சூடான் மக்களும் இவ்வாக்களிப்பில் பங்கு கொண்டார்கள் குறிப்பாக அவுஸ்திரேலியா, கனடா, எகிப்து, எதியோப்பியா, கென்யா, உகண்டா, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா போன்ற எட்டு நாடுகளிலிருந்து இத்தேர்தலில் அம்மக்கள் வாக்களித்தார்கள்.
வட சூடானின் பல அழுத்தங்களுக்கு மத்தியிலும், தென் சூடான் பிரிந்து செல்லுவதற்கு ஆதரவாக ஏறத்தாள 99 விழுக்காடு மக்கள் வாக்களித்துள்ளார்கள் என கூறினாலும், பெப்ரவரி 14, 2011 அன்றே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும். நடைமுறையிலுள்ள ஒப்பந்தப்படி ஆறுமாதங்களுக்கு பின்னர் அதாவது ஜூலை 9-ஆம் திகதியே தென் சூடான் சுதந்திர நாடாக அறிவிக்கப்பட முடியும். ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புக் குழுவினரால் இந்த வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூலை 9, 2011 முதல் ஐநாவின் 193 ஆவது நாடாக தென் சூடானின் உலக அரங்கில் அதன் தேசியக்கொடி பறக்கவிடப்படும். இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையெனும் உலக அமைப்பில் 51 நாடுகளே உறுப்பு நாடுகளாக இணைக்கப்பட்டன. 1991-ஆம் ஆண்டிலிருந்து 1994-ஆம் ஆண்டுவரை 166 உறுப்பு நாடுகளை கொண்ட ஐநா, இக்காலப்பகுதியில் 184 நாடுகள் உறுப்பு நாடுகளாக இருந்தது குறிப்பாக 19 நாடுகள் குறித்த நான்கு வருடங்களுக்குள் இணைந்தன.
முன்னாள் சோவியத் ஒன்றியம் பிளவுபட்டு பல நாடுகள் உருவாகியதே, பல நாடுகள் உருவாகக் காரணமாக இருந்தது. மோண்ரிநீக்ரோ என்கிற நாடு 192 ஐநாவின் உறுப்பு நாடாக மே 21, 2006-இல் இணைக்கப்பட்டது. செர்பியாவிடம் இருந்து பிரிந்து தனிநாடாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்கிற போராட்டத்தின் விளைவே, மோண்ரிநீக்ரோ நாட்டு மக்களும் தேர்தல் மூலமாக தமது விருப்பை வெளிப்படுத்தி பிரிந்தார்கள். கிழக்கு தீமோரும் இந்தோனேசியாவின் அடக்கு முறைகளிலிருந்து விடுவிக்கப் போராடி, மே, 20, 2002 விடுதலை பெற்றது.
விடுதலைப்புலிகள் யாழ் குடாநாட்டை தமது கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருந்த வேளையில் பல கட்டுமானப் பணிகளை செய்திருந்தார்கள். எதிரியே மூக்கில் விரலைவைத்து ஏங்குமளவு பல கட்டுமானங்களை செய்திருந்தார்கள். இவைகள் அனைத்தையும் சிங்கள அடக்கு முறை அரச படையினர் அழித்தார்கள். தளம் மாறிச் சென்ற புலிப்படையினர், வன்னியை கைப்பற்றி தமது முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருந்த வேளையில் தனி அரசையே நடைமுறையில் வைத்திருந்தார்கள்.
நீதித்துறை முதல் பல அரச அமைப்புக்களை நிர்மாணித்து, அவற்றை வெற்றிகரமாக நடைமுறையில் வைத்திருந்தார்கள். எந்தக்குற்றமும் இல்லையென்று சொல்லுமளவு சட்டம் ஒழுங்கு காக்கப்பட்டது தமிழீழ காவல்த்துறையினரால். இப்படியாக இருந்த விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக முத்திரை குத்தப்பட்டு, ஏதோ பயங்கரவாதத்தை அடியோடு அழிப்பதாக கூறி படையெடுத்து பால்லாயிரம் பொதுமக்களைக் கொன்றும் பல்வேறு அட்டூழியங்களை செய்தது சிங்கள அரசு.
இறுதிப்புலி இருக்கும்வரை தமிழீழ லட்சியம் அழியாது என்று கூறினார் புலிகளின் தலைவர் பிரபாகரன். இன்னுமொரு படிமேல் சென்று சொல்வதேயானால், இறுதித்தமிழன் இருக்கும்வரை தமிழீழம் அடையாமல் இருக்கப் போவதில்லை. அன்று புலிகளின் கட்டுமானத்தை அழித்ததாக பறை சாற்றினார்கள். ஆனால், இன்று புதிதாக உருவாகப் போகும் தென் சூடான் நாட்டிற்கு நாடுகடந்த தமிழீழ அரச பிரதிநிதிகளுக்கு அழைப்பு சூடான் மக்கள் விடுதலை இயக்கத்திடம் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசு தெரிவித்துள்ளது.
தென் சூடானின் கட்டுமானப்பணிகளிலும் தமிழீழத்தை சேர்ந்த பொறியியலாளர்கள் ஈடுபடவுள்ளார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வழைப்பு தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “தனிநாட்டுக்கான வாக்கெடுப்பு முடிவடைந்தவுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை தென்சூடானுக்கு வருமாறு சூடான் மக்கள் விடுதலை இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.
கொண்டாட்டங்களில் பங்குகொள்ளவும் பொருத்தமான துறைகளில் தென்சூடானின் மேம்பாட்டுக்குத் தமிழர் தரப்பு வல்லுநர்களின் உதவி வழங்கல் பற்றி ஆராய்வதற்காகவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பிரதிநிதிகள் குழுவொன்றை அனுப்புகிறது. சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தின் விருந்தினர்களாக வருகைதரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் குழுவினை சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தின் உயரதிகாரிகள் வரவேற்பார்கள். நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் ஏனைய நாடுகளின் தலைவர்களையும் அங்கு சந்திக்கவுள்ளார்கள்.”
தமிழீழ வல்லுனர்களின் செயற்பாடு தென் சூடானில் இடம்பெற இருப்பதானது மிகவும் வரவேற்கத்தக்க நிகழ்வே. இப்படியான செயல்கள் மூலமாக நாளை மலர இருக்கும் தமிழீழ தேசத்தை கட்டியெழுப்ப இவ்வல்லுனர்களின் அனுபவமே போதும். அத்துடன், தென் சூடானும் தனது விசுவாசத்தை தமிழீழ தேசத்தின் மீதும் அதன் மக்கள் மீதும் காண்பித்து, ஒரு வருடம் அல்ல பல்லாயிரம் வருடங்களாக உறவுகளைப் பேணுவதற்கு உறுதுணையாக இருக்கும். ஈழத்தில் இன்று அகலக்கால் பதித்து நிற்கும் சிங்கள அரக்கர்கள் தமிழீழத்தை சிதைக்க எத்தனை நிகழ்வுகளைச் செய்தாலும், தமிழீழ வேங்கைகள் உலக அரங்கிலேயே அகலக் கால் பதித்து வேலைகளை செய்கிறார்கள்.
சூடான் நாட்டின் ஐந்தில் நான்கு பகுதி எண்ணெய் வளம் தென் சூடானிலேயே இருப்பதுடன், கடல் வளம் உள்ள நாடாகவே தென் சூடான் உள்ளது. செங்கடல், சுயெஸ் கால்வாய், இந்து மா கடல் என்பவற்றின் ஊடாக அமைந்துள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கடற்பாதைகளின் பாதுகாப்பிற்கும் அதை ஒட்டிய வேறு அலுவல்களுக்கும் சூடானின் புவியியல் அமைவிடம் இன்றியமையாதது.
இவைகளைக் குறிவைத்தே அமெரிக்கா மற்றும் அதன் தோழமை நாடுகள் தென் சூடானின் விடுதலைக்கு ஆதரவாக இணைந்தார்கள் போலும். எது என்னவாக இருந்தாலும், மேற்கத்தைய நாடுகளின் செயல்களினால் ஆத்திரமடைந்த சூடானிய இஸ்லாமிய அரசு (இப்போ வடக்கு சூடான்) தென் சூடானின் எண்ணெய் வளத்தை பயன்படுத்தி மேற்குலகத்திற்கு எதிராக சீனாவை பயன்படுத்த திட்டமிட்டு அதன்படி செய்தது.
உண்மையில் ராஜபக்சாவும் இதே பாணியினைத்தான் தனது ஆட்சியில் கையாண்டு வருகின்றார். ஆனால் ராஜபக்சா எண்ணெய்யினை காட்டி சீனாவை வைத்திருக்கவில்லை மாறாக கடற்பிராந்திய போக்குவரத்தினை வைத்தே தனது காய்களை நகர்த்துகின்றார்.
விடுதலைக்கான போராட்டங்களை செய்துவரும் ஈழ, செச்சினிய, பாலஸ்தினிய, குர்திஷ் மற்றும் காஷ்மீரிய தேசங்களும் வெகு சீக்கிரத்தில் விடுதலையை எப்படி தென் சூடான் இன்று பெற்றதோ அதைப்போலவே இத்தேசங்களும் வெற்றிகரமாக விடுதலையை வென்றெடுப்பார்கள்.
விடுதலைக்காக போராடி வரும் தேசங்களின் வரிசையில் அடுத்து தமிழீழத் தேசமே பிறப்பெடுக்கும். இதனை வென்றெடுக்க வேகமாக்க வேண்டிய பொறுப்பு ஈழத்தில் வதியும் மக்களிடம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் சிதறிக்கிடக்கும் அனைத்து தமிழர்களின் கைகளிலேயுமே தங்கியுள்ளது.
நடந்த சம்பவங்களை மனதில் நிறுத்தி, பட்ட துன்பங்களை படிக்கல்லாக மாற்றி தமிழீழத்தை கட்டியெழுப்பி, அதனை பிரசுரிப்பதுவே அனைத்து தமிழர்களின் தலையாய பணி.
ததேகூட்டமைப்பைப் தோற்கடித்துவிட்டால் தமிழ்மக்களை அடக்கி ஆளுவது எளிதாகிவிடும் என சிங்கள – பவுத்த இனவாத அரசு நினைக்கிறது!
நக்கீரன்
சிங்கள அரசினால் தள்ளிவைக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தல்கள் எதிர்வரும் யூலை 23 நடைபெற இருக்கிறது. தள்ளிவைக்கப்பட்ட மொத்த 67 உள்ளாட்சி சபைகளில் 64 உள்ளாட்சி சபைகளுக்கு தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில் 30 இலட்சம் வாக்காளர்கள் கலந்து கொள்ளத் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் 16 சபைகள், கிளிநொச்சி மாவட்டத்தில் 3 சபைககள், திருகோணமலை மாவட்டத்தில் 4 சபைகள், அம்பாரை மாவட்டத்தில் 2 சபைகள் ஆக மொத்தம் 26 உள்ளாட்சி சபைகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாண மாவட்த்தில் 3 நகரசபைகள் (வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, சாவகச்சேரி) 13 பிரதேச சபைகள் இருக்கின்றன.
கடந்த மார்ச்சு மாதம் 17 ஆம் நாள் 234 சபைகளுக்கு நடந்த தேர்தலில் ஆளும் கட்சி 205 சபைகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 12 சபைகளிலும் அய்க்கிய தேசியக் கட்சி 7 சபைகளிலும் வெற்றிபெற்றன.
வட – கிழக்கு மாவட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மொத்தம் 26 உள்ளாட்சி சபைக்கும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
ஆளும் கட்சி யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டி போடுகிறது. வட – கிழக்கில் நடந்து முடிந்த ஆட்சித்தலைவர் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றில் பலத்த அடிவாங்கிய ஆளும் கட்சி இந்தத் தேர்தலில் எப்படியும் வென்றுவிட வேண்டும் என சபதம் எடுத்துள்ளது. வடக்கில் தேர்தல் பரப்புரைக்குத் தேர்தல் தொகுதிகள் ஒவ்வொன்றிலும் சிங்கள அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரை அரசு களம் இறக்கியுள்ளது. பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் பஸில் இராசபக்சே, நாமல் இராசபக்சே, அமைச்சர்களான ஜி.எல்.பீரிஸ், சுசில்பிரேமஜெயந்த, மைத்திரபால சிறிசேன, டலஸ் அழகப்பெரும, திஸ்ஸ கரலியத்த, ஜகத் புஸ்பகுமார, மஹிந்தானந்த அளுத்கமகே, துணை அமைசர் ஹிஸ்புல்லா ஆகியோருடன் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் யாழ்ப்பாணத்தில் முகாம் இட்டுள்ளனர். உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக யாழ்பாணத் தேர்தல் மாவட்டம் ஆறு வலயங்களாகப் பிரிக்கப்பட்டு 19 சபைகளுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களும் துணை அமைச்சர்களும் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் ஞாயிறு (யூலை 03> 2011) காலை உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுகின்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும், ஆட்சித்தலைவர் மகிந்த இராசபக்சேயின் உடன்பிறப்புமான பஸில் இராபச்சே “பன்னாட்டுச் சமூகத்துக்கு நாங்கள் ஒன்றைத் தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும். தமிழ் மக்கள் எமது அரசுடன் தான் இணைந்திருக்கின்றார்கள் என்பது தான் அது. இதற்காக நாம் உள்ளாட்சிச் சபைத் தேர்தலில் வெற்றி பெறக் கடுமையாக உழைக்க வேண்டும்” எனப் பேசியுள்ளார்.
பஸில் இராசபக்சே தொடர்ந்து பேசுகையில் ” ஆட்சித்தலைவர் மகிந்தவின் வெற்றிக்காக வடமாகாண மக்கள் அதிகம் வேலை செய்யவில்லை. அதன் பின்னர் இடம் பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் எமது கட்சியால் யாழ்ப்பாண மாவட்டத்தை வெற்றி கொள்ள முடியாமல் போய்விட்டது. இருப்பினும் ஆட்சித்தலைவர் வட பகுதி மக்களுக்கு உதவிகளைச் செய்து வருகின்றார். பலாலி விமான நிலையம் பன்னாட்டு விமான நிலையமாக மாற்றப்பட இருக்கின்றது. அத்துடன் காங்கேசன்துறைத் துறைமுகம் பன்னாட்டுத் தரத்துக்கு உயர்த்தப்படவுள்ளது” என்றார். அத்தோடு நிறுத்தாமல் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பொறியியல் பீடம் நிறுவப்படும் யாழ்ப்பாண மருத்துவமனையின் தரம் உயர்த்தப்படும் என வாக்குறுதிகளை அள்ளி வீசியிருக்கிறார்.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று ஆளும் கட்சியைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டனர். வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, முன்னாள் துணைவேந்தர் பொ.பாலசுந்தரம்பிள்ளை ஆகியோரும் கலந்துகொண்டனர்.
ஆட்சித்தலைவர் மகிந்தா இராசபக்சே ஏதோ தன் வீட்டுப் பணத்தில் மேம்பாட்டு வேலைகளைச் செய்யப் போகிறார் என்ற மாயையை பஸில் இராசபக்சே விதைக்க முனைந்துள்ளார். பலாலி பன்னாட்டு விமான நிலையமாக மாற்றப்படும் காங்கேசன்துறைத் துறைமுகம் பன்னாட்டுத் தரத்துக்கு உயர்த்தப்படும் என சிங்கள அரசு பல ஆண்டுகளாகச் சொல்லிவருகிறது. ஆனால் அது நடந்தபாடாகக் காணோம்.
அமைச்சர் பஸில் இராசபக்சேயிடம் வடமாகாண நிருவாகம் கையளிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. அங்கு அவர் வைத்ததே சட்டம். அவர் நினைத்ததே நடக்கும். அரசின் எடுபிடி டக்லஸ் தேவானந்தாதான் யாழ்பாணத்தின் இளவரசர் என ஒருமுறை அவரைப் பாராட்டியுள்ளார். அரசுக்கு ஆசைப்பட்டு அண்ணன் இராவணனை இராமனுக்குக் காட்டிக்கொடுத்த விபீடணன் மாதிரி அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு இராசபக்சேக்கு தமிழினத்தைக் காட்டிக் கொடுத்து வருபவர் டக்லஸ் தேவானந்தா. மத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் இணைப்பாட்சி அன்றும் என்றும் பிரிக்க முடியாத ஒன்றிணைந்த வட – கிழக்கு என்று தொடை தட்டிய டக்லஸ் தேவனந்தா அவற்றை எல்லாம் கைவிட்டு இன்று தொடைநடுங்கிக் கொண்டு இருக்கிறார். தேர்தலில் தனது சொந்தக் கட்சியில் போட்டியிடக் கூடாது என்று சிங்கள எசமானர்கள் காலால் இட்ட தடை உத்தரவை தலையால் செய்து முடித்துக் கொண்டிருக்கிறார்.
எனவே வழக்கத்தைவிட இந்தத் தேர்தலில் ஆளும் கட்சி ஆட்பலம், பணபலம், அதிகார பலம், இராணுவ பலம் ஆகியவற்றைத் தாராளமாகப் பயன்படுத்தும் என நாம் எதிர்பார்க்கலாம்.
ஆளும் சிங்கள பேரினவாதிகளுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரிய அறைகூவலாக இருக்கிறது. அதனைப் பஸில் இராசபக்சே ஒளிவுமறைவின்றிச் சொல்லியிருக்கிறார். “அரசைக் குழப்பும் கட்சிகளாக தெற்கில் ஜேவிபியும் வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இருக்கிறதாகவும் அவை இரண்டும் அரசின் செயற்பாடுகளைக் குழப்பியடித்து வருகின்றன. இவர்கள் எம்மீது ஏதாவது குறைகளைக் கூறிக் கொண்டேயிருப்பார்கள். எதைச் செய்தாலும் செய்யாத ஒன்றை வைத்து சிக்கலை உண்டு பண்ணிக் கொண்டேயிருப்பார்கள். எதற்கெடுத்தாலும் ஆர்ப்பாட்டம் என்று தொடங்கிவிடுவார்கள். எனவே, இவர்களையெல்லாம் வீழ்த்தி நாம் இந்தத் தேர்தலில் கட்டாயம் வெற்றி பெற்றேயாக வேண்டும் பன்னாட்டு சமூகத்துக்கு வட பகுதித் தமிழ் மக்கள் எங்களுடன்தான் நிற்கின்றார்கள் என்பதை எடுத்துக் கூறவேண்டும்” என்ற ஆசையை பஸில் இராசபக்சே வெட்கத்தை விட்டுச் சொல்லியிருக்கிறார்.
யாழ்ப்பாணத்தின்அளவெட்டி சைவ மகாஜன சபை மண்டபத்தில் 16 ஆம் நாள் உள்ளாட்சித் தேர்தல் பற்றி யோசிக்க ததேகூ ஒரு கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தது. அதில் வரும் யூலை 23 இல் இடம்பெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட இருந்தார்கள். யாழ் மாவட்டத்தின் கூட்டமைப்பு நா.உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, சரவணபவன், சிறீதரன், சுமந்திரன் ஆகியோர் அதில் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் சரவணபவன் பேசிக்கொண்டு இருக்கும்போது சிங்கள இராணுவத்தினர் ஆயுதங்களோடு திடீரெனப் புகுந்தனர். இராணுவ உடை தரித்த அந்தக் கும்பல் இரும்புக் கம்பிகள், மண் வெட்டிப் பிடிகளைப் போன்ற குண்டாந்தடிகளால் கூட்டத்துக்கு வந்திருந்தவர்களை எந்த முன்னறிவிப்பும் இன்றிக் கடுமையாகத் தாக்கியது. நா.உறுப்பினர்களது பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் கடுமையாகத் தாக்கப்பட்டனர். செய்தியாளர்களைத் தாக்கி அவர்களின் அடையாள அட்டைகளைப் பறித்து, புகைப்படக் கருவிகளைப் பிடுங்கி அட்டகாசம் செய்தனர். இந்தத் தாக்குதல் தற்செயலாக நடந்தது அல்ல. முன்கூட்டியே நன்கு திட்டமிடப்பட்டுச் செய்யப்பட்டது ஆகும்.
யாழ் மாவட்டக் கட்டளைத் தளபதி ஹத்துருசிங்கா தாக்குதல் நடத்தியவர்கள் இராணுவத்தினரே அல்ல என்றார். அப்படியான நிகழ்வு எதுவும் நடைபெறவில்லை என்றார். ஆனால் முதலில் மறுத்த அரசு இப்போது இராணுவத்துக்கும் காவல்துறைக்கும் இடையில்தான் சிறு மோதல் நடந்தது வேறொன்றும் நடைபெறவில்லை என்று நாடாளும் தலைவர் மகிந்த இராசபக்சே கூறியுள்ளார். மக்களால் தெரிவு செய்யப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு இல்லை என்றால் தமிழ்ப் பொது மக்களைப்பற்றிச் சொல்லத் தேவையில்லை.
வடக்கில் மிதப்பில் இருக்கும் இராணுவத்தினரே சகலவற்றையும் தீர்மானிப்பவர்களாக உள்ளனர். மக்களது அசைவு ஒவ்வொன்றும் வேவு பார்க்கப்படுகிறது. விளையாட்டுப் போட்டியாக இருக்கட்டும், திருமணமாக இருக்கட்டும், கோயில் திருவிழாவாக இருக்கட்டும் அவற்றில் இராணுவம் தலையிடுகிறது. அரசு சார்ந்த நிகழ்ச்சிகளில் சிங்களத்தில் மட்டுமே தேசிய பாடல் பாடவேண்டும் என பாதுகாப்புச் செயலர் கோத்தபாய இராசபக்சே கட்டளை பிறப்பித்துள்ளார். இதற்குப் பயந்து நிகழ்ச்சி நடத்துபவர்கள் இராணுவத்துக்கு அழைப்பு விடுகிறார்கள்.
யாழ்ப்பாணத்தில் இராணுவ ஆட்சியே நடைபெறுகிறது. இராணுவத்தின் விருப்பு வெறுப்பின் படியே அங்கு யாரும் எதையும் செய்ய முடியும். சனநாயகம், சுதந்திரம், இயல்பு வாழ்வு என்பது கானல் நீராகவே காணப்படுகிறது.
வி.புலிகளுக்கு இராணுவத் தீர்வு தமிழ்மக்களுக்கு அரசியல் தீர்வு என்று போர்க்காலத்தில் கூறிய மகிந்த இராசபக்சே இப்போது 13 ஆவது சட்ட திருத்தம் வழங்கும் காணி மற்றும் காவல் அதிகாரம் தமிழர்களுக்கு வழங்கப்பட மாட்டாது என அறிவித்துள்ளார்.
ததேகூட்டமைப்போடு பேசிக்கொண்டே அரசியல் தீர்வு குறித்து ஆராய மகிந்த இராசபக்சே ஒரு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை நியமிக்க உள்ளார். இரண்டு ஆண்டு காலம் 128 முறை கூடி அனைத்துக் கட்சிக் குழு சமர்ப்பித்த அறிக்கையை அவர் குப்பைத் தொட்டியில் ஏற்கனவே வீசிவிட்டார்.
வடக்கில் வசந்தம் என்பது வெறும் கண்துடைப்பு. அங்கே அனல் காற்றுத்தான் வீசுகிறது. இந்த வடக்கில் வசந்தம் அமைப்பில் இருக்கும் 18 உறுப்பினர்களில் 17 பேர் சிங்களவர். எஞ்சிய ஒருவர் முஸ்லிம். இந்த அமைப்பில் வால்பிடி அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவுக்குக் கூட இடமில்லை என்பது பெரிய சோகம்!
இப்போது அய்யன்னா மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் விடுத்துள்ள அறிக்கையின் படி போர் முடிந்தபின்னர் இடம்பெயர்ந்த 110,652 குடும்பங்கள் (365,082 பேர்) வட மாகாணத்துக்குத் திரும்பியுள்ளன. இந்தக் குடும்பங்கள் ஏப்ரில் 2008 க்கு முன்னரும் பின்னரும் இடம்பெயர்ந்தவர்கள். ஏப்ரில் 2008 க்கு முன்னர் இடம்பெயர்ந்த குடும்பங்களின் எண்ணிக்கை 45,024 (157,269 பேர்) ஆகும். ஏப்ரில் மாதத்துக்குப் பின்னர் இடம்பெயர்ந்த குடும்பங்களில் 5,284 குடும்பங்கள் (17,488 பேர்) இன்னமும் நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கின்றன. அதே போல் ஏப்ரில் மாதத்துக்கு முன்னர் இடம் பெயர்ந்த 2,360 குடும்பங்கள் (8,521 பேர்) இன்னமும் நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கின்றன. இடம்பெயர்ந்த மொத்தம் 189,221 பேர் உறவினர்களோடு தங்கியிருக்கின்றனர். (The Island – June 27, 2011)
கிளிநொச்சி மாவட்டத்தில் நாளும் நான்கிற்கு மேற்பட்டோர் தற்கொலை செய்து கொள்வதாகவும் அவர்களில் அதிக அளவிலானோர் கைம்பெண்கள் மற்றும் கணவன்மார் காணமல் போய்த் தனிமையில் வாழும் பெண்களே என கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை உளநல மருத்துவர் மா.ஜெயராசா தெரிவித்துள்ளார். சமூகப் பாதுகாப்பின்மை, பொருளாதார நெருக்கடிகள் இதற்கான முக்கிய காரணிகளாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளை மனநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் கணிசமானளவு அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது 500 வரையான மனநோயளிகள் இருப்பதாகவும் அவர்களில் அதிகமானோர் பெண்கள், சிறார்கள் போன்றோரே. இவர்களில் பலர் யுத்தத்தில் தமக்கு நெருக்கமானவர்களை இழந்தவர்கள். வசதிகள் பற்றாக்குறையாக இருக்கின்ற போதும் இயலுமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிதுள்ள மருத்துவர் எல்லோரும் ஒன்றிணைந்து இவற்றிற்கெதிராகக் குரல் கொடுக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் பள்ளிக்கூடம் பாடசாலை செல்லாத சிறார்களும் அதிகளவில் காணப்படுகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சி மாவட்டத்தில் போருக்குப் பின்னர் சமூகவிரோத மற்றும் சட்டவிரோதமான செயற்பாடுகளும் அதிகரித்துக் காணப்படுவதாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட துணை காவற்றுறை மா அதிபர் நீல் தலுவத்த தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்த சமூகச் சிக்கல்கள் காணப்படுவதாகவும் சிறுவர் கெடுக்கப்படுவது, குடும்பச் சிக்கல்கள், காணித் தகராறுகள் எனப் பல சிக்கல்கள் காணப்படுவதுடன் நாளுக்குநாள் கிளிநொச்சி மாவட்டத்தில் காவல்துறை நிலையங்களில் பொதுமக்கள் அடிக்கடி சிக்கல்களுடன் வந்து செல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த யூன் மாதம் 26 ஆம் நாள் வலிகாமம் புத்தூர் பொதுமைதானத்தில் ஒரு இளைஞர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். அவர் ஒரு முன்னாள் போராளி எனத் தெரிவிக்கப்படுகிறது. பாலச்சந்திரன் சற்குருநாதன் (வயது – 30) என்பவரே ஞாயிற்றுக்கிழமை காலை மேற்படி சடலமாக மீட்கப்பட்டவர். மயிலிட்டியைச் சொந்த இடமாகக் கொண்ட இவர் அச்சுவேலி தோப்புப் பகுதியில் இடம்பெயர்ந்து வசித்து வந்ததார்.
இவர் கடத்திச் செல்லப்பட்டு பின்னர் படுகொலை செய்யப்பட்ட பின்னரே தூக்கிலிடப்பட்டிருக்கிறார். அவரது கைவிரல் நிகங்கள் புடுங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கடந்த 2 ஆண்களுக்கு முன்னர் இவர் இதே பகுதியில் வைத்துக் கடத்தப்பட்டிருந்தார். 2006 ஆம் ஆண்டு காலப்பகுதியில் குடாநாட்டில் இராணுவத்தினருக்கு எதிராக நடந்த தாக்குதல் சம்பவங்களில் இவர் தொடர்பு பட்டிருந்தார் எனவும் அப்போது இவர் இதே பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் கடத்திச் செல்லப்பட்ட பின்னர் இவர் தப்பிச்சென்று கொழும்பில் மறைந்திருந்தார் எனவும் கூறப்படுகிறது.
சடலத்தைப் பரிசோதனை செய்த சட்ட வைத்திய அதிகாரி சடலம் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலைசெய்யப்பட்ட பின்னரே தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளது எனத் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வாக்குமூலம் அளித்த இறந்தவரின் தந்தை தனது மகனுக்கு காவல் குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவரால் அச்சுறுத்தல் இருந்தது என்று கூறியுள்ளார்.
இது போலவே கடந்த மே 22 அன்று முன்னாள் பெண் போராளி ஒருவர் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். புன்னாலைக்கட்டுவான் ஈவினை கிழக்கைச் சேர்ந்த ரி. இலாவண்யா (21 வயது) என்ற பெண்பிள்ளையே சடலமாக மீட்கப்பட்டவர்.
அண்மைக் காலமாக யாழ். மாவட்டத்தில் தற்கொலைகளும் தற்கொலை போன்று மர்மமான முறையில் சடலங்களும் மீட்கப்படும் நிலைமை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதே சமயம் ததேகூட்டமைப்பை ஆட்சித்தலைவரோ அரசோ தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதியாக எவரையும் ஏற்றுக் கொள்ளவில்லை என அய்க்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் எதிர்க்கட்சிகள் அச்சம், பயமின்றி சுதந்திரமான முறையில் தேர்தல் பரப்புரைப் பணிகளை முன்னெடுக்க முடியாத நிலையில் இருக்கின்றனர் என்று கபே (Campaign for Free and Fair Elections (CaFFE) என்ற அமைப்புத் தெரிவித்துள்ளது. வடக்கில் முன்னெடுக்கப் படுகின்ற தேர்தல் பரப்புரைத் தொடர்பிலும் கபே அமைப்பின் கண்காணிப்பு செயற்பாடுகள் குறித்தும் கருத்துத் தெரிவிக்கையிலேயே கபே அமைப்பின் தேசிய இணைப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களில் எதிரணியினரால் தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளை சுதந்திரமான முறையில் முன்னெடுக்கமுடியாதுள்ளது. அரசியல் கூட்டங்கள், ஊர்வலங்கள் மட்டுமின்றி உள்ளகக் கூட்டங்களைக் கூட நடத்தமுடியாத நிலைமையே இன்றிருக்கின்றது.
வழக்கமாக இனவாதம் கக்கும் அஸ்கிரிய மல்வத்தை பீடாதிபதிகள் “வடக்கைப் பொறுத்தவரை அந்த மக்களின் சிக்கல்கள் இன்னமும் தீர்த்து வைக்கப்படவில்லை. எமக்கும் வட பகுதிக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. நான் அவர்களது குறைபாடுகளைப் பற்றி அறிந்துள்ளேன். அதுபற்றி நாம் தொடர்ச்சியாக அரசுக்கு அறிவுறுத்தி வருகிறோம். ஆனால் எமது கருத்துகள் எதையும் அரச தரப்பினர் கேட்பதாக இல்லை. வடக்கு மக்கள் மீது கூடிய அக்கறை செலுத்தி அந்த மக்களின் சிக்கல்களுக்குத் தீர்வுகளை வழங்குமாறு நாம் ஆட்சித்தலைவரிடம் வலியுறுத்தியுள்ளோம். அவ்வாறு செயற்படாமல் விட்டால் எதிர்காலத்தில் மேலும் சிக்கல்கள் உருவாக இடமுள்ளது. வடக்கில் முன்னைய சூழல் மீண்டும் உருவாகும்” எனக் கூறியுள்ளார்கள். ஆனால் அரசு செவி சாய்ப்பதாக இல்லை.
வடக்கும் கிழக்கும் இராணுமயப்படுத்தல், சிங்கள மயப்படுத்தல், பவுத்த மயப்படுத்தல், பண்பாட்டுச் சீரழிவுகள், பொருளாதாரச் சிதைவுகள், அடக்குமுறை ஆகியவற்றுக்கு எதிராக இன்று நாடாளுமன்றத்தில் ததேகூ மட்டுமே குரல் எழுப்பி வருகிறது. அதனை முறியடிக்க சிங்கள அரசு கடுமையாகப் பாடுபடுகிறது. அதன் வெளிப்பாடாகவே எப்பாடு பட்டும் வடக்கில் ததேகூட்டமைப்பை தோற்கடித்து உள்ளாட்சி சபைகளை கைப்பற்றிவிட வேண்டும் என சிங்கள – பவுத்த இனவாத அரசு தேர்தல் களத்தில் குதித்துள்ளது.
ததேகூட்டமைப்பைப் தோற்கடித்துவிட்டால் தமிழ்மக்களை அடக்கி ஆளுவது எளிதாகிவிடும் என சிங்கள – பவுத்த இனவாத அரசு நினைக்கிறது!
கடந்த தேர்தல்களில் எமது மக்கள் எதற்கும் விலை போக மாட்டார்கள், எந்தப் பயமுறுத்தலுக்கும் அடிபணிய மாட்டார்கள் என்பதைத் துலாம்பரமாகக் காட்டியுள்ளார்கள். இந்தத் தேர்தலிலும் எமது மக்கள் சிங்கள – பவத்த இனவாதத்தைக் கக்கும் மக்கள் சுதந்திரக் கட்சிக்கும் போர்க்குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்படும் அதன் தலைவர் மகிந்த இராசபக்சேக்கும் செமபாடம் புகட்டுவார்கள் என்பதில் அய்யமில்லை.
(June,2011)
June 06, 2011
Toronto
Hon. Rathika Sitsabeisan, MP
Scarborough Roughe –River riding,
Ottawa.
UN Experts Panel has concluded that credible allegations that Sri Lankan government committed serious international human rights and humanitarian law
Dear Hon. Rathika,
I am a member of your constituency living in 56, Littles Road, Scarborough, Ontario.
I am a Canadian citizen and a social and human rights activist in the Tamil community with close links to Sri Lanka. I have kith and kin there and I am deeply troubled by recent events in that country. In light of this, I wanted to raise with you the issue of the United Nations Panel of Experts report on Sri Lanka and to ask you to raise this subject in Parliament on my behalf.
Government forces declared victory over the rebel LTTE in May 2009 after a conflict that had raged on and off for nearly three decades and killed thousands of people. The conflict ended with about 320,000 Thamils living as internally displaced persons (IDPs), especially in Vanni north of the island country.
The panel found credible allegations that comprise five core categories of potential serious violations committed by the Government in the final stages of the conflict, including killing of civilians through widespread shelling and the denial of humanitarian assistance.
The panel’s first recommendation is that the Government of Sri Lanka should respond to the serious allegations by initiating an effective accountability process beginning with genuine investigations.
“The Secretary-General has consistently held the view that Sri Lanka should, first and foremost, assume responsibility for ensuring accountability for the alleged violations,” said the statement, adding that he encourages the Government to respond constructively to the recommendations made by the panel.
Significantly during the 17th Session of the Human Rights Council currently taking place in Geneva, extended footage of the execution video obtained by Channel 4 News UK has been analysed by the UN Special Rapporteur on extra-judicial killings, Christof Heyns, who has stated that this evidence amounts to “definitive war crimes”.
A Channel 4 news television documentary, Sri Lanka’s Killing Fields, will be broadcast on the 14th June at 11:05pm (BST) in the UK. The one-hour programme looks set to include footage not previously broadcast, as well as a shocking video of summary execution and rape-murder which Channel 4 News has already aired (the video was denounced by the Sri Lankan government as a fake, and later authenticated by UN experts). The film was screened in Geneva on the 3rd June at an event hosted by Amnesty International. The video further intensifies the need for truth and justice in Sri Lanka.
The UN Panel’s report published in April 2011 states that tens of thousands of innocent civilians lost their lives, during the final months of Sri Lanka’s civil war in 2009 (a link to the full report can be found here: http://www.un.org/News/dh/infocus/Sri_Lanka/POE_Report_Full.pdf). The Panel’s recommendation to the UN Secretary General, Ban Ki-moon, was to immediately proceed to establish an independent international accountability mechanism in Sri Lanka.
Accountability for crimes against humanity is a duty under international law. Given that the Sri Lankan Government is in a denial mode dismissing the UN report as “fundamentally flawed”, and Channel 4 News as “illegible” I do not believe that a proper process of accountability will be forthcoming from within Sri Lanka.
Therefore, I would be very grateful if you, as my Member of Parliament, will raise these issues with the Canadian government and the Prime Minister during question time. I believe Canadian parliamentarians and the Canadian Government can play a crucial role in ensuring truth, justice and, ultimately reconciliation in Sri Lanka. Thank you for your help on this matter and I look forward to hearing from you.
Yours sincerely,
Veluppillai Thangavelu
யானை இருந்தாலும் ஆயிரம் பொன் செத்தாலும் ஆயிரம் பொன்
கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்தப் பழமொழி பொருந்தும்.
நடந்து முடிந்த தேர்தலில் நூறுக்கும் அதிகமான உறுப்பினர்கள் தோற்றுப்போனார்கள். பாவம் அவர்கள் நடுத்தெருவில் நிற்கப் போகிறார்கள் என்று யாரும் நினைத்தால் அது தப்பு. இருக்கவே இருக்கிறது அவர்களுக்கே சொந்தமான ஓய்வு ஊதியம்.
புளக் கியூபெக்வா தலைவர் கில்ஸ் டுசெப்பே (63) தனது லோறியர் சென்ட் மேரி தொகுதியில் தோற்றுப் போனார். பருவாயில்லை அவருக்கு ஆண்டொன்றுக்கு 140,765 டொலர் ஓய்வூதியம் இருக்கவே இருக்கிறது. அதை வைத்துக் கொண்டு மாலோகமாக வாழலாம்.
எக்லின்டன் – லோறன்ஸ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோ வோல்ப்பே (63) யின் ஓய்வூதியம் 119,320 டொலர். வாழ்நாள் ஓய்வூதியம் 3.30 மில்லியன் டொலர்.
பீட்டர் மிலிக்கன் (64) ஆண்டு ஓய்வூதியம் 102,392 டொலர். வாழ்நாள் ஓய்வூதியம் 3.88 மில்லியன்.
கேயித் மாட்டின் (50) ஆண்டு ஓய்வூதியம் 120,392 டொலர். வாழ்நாள் ஓய்வூதியம் 2.49 மில்லியன்.
பீட்டர் மிலிக்கன் (64) அவைத்தலைவர் இவரது ஓய்வூதியம் 147,316 டொலர். வாழ்நாள் ஓய்வூதியம் 3 மில்லியன்.
லிபரல் கட்சித் தலைவர் மைக்கல் இக்நேட்டிவ்தான் பாவம். அவருக்கு ஓய்வூதியம் கிடைக்காது. காரணம் அவர் 6 ஆண்டுகளை நிறைவு செய்யவில்லை. அதனால் என்ன? வேலை நீக்கத்துக்கான 116,624 டொலர் வழங்கப்படும்.
தேர்தலில் தோற்றவர்கள் அல்லது தேர்தலில் போட்டியிடாது ஒதுங்கினவர்கள் ஆகியோருக்கு ஓய்பவூதியமாக 4.9 மில்லியன் டொலர் கொடுக்கப்படும்.
இந்தத் தேர்தலில் புளக் கியூபெக்குவா கட்சியைச் சேர்ந்த 43 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தோற்றுப் போனார்கள். அவர்களுக்கு வாழ்நாள் முழுதும் (சராசரி 80 அகவை) கொடுக்கப்படும் ஓய்வூதியம் 38 மில்லியன் டொலர்!
மத்திய அரசிலும் மாகாண அரசிலும் உறுப்பினராக இருந்த உஜல் டோசன் ஒட்டாவிடம் இருந்து ஓய்வூதியமாக 40,197 டொலர்களும் மாகாண அரசிடம் இருந்து 35,000 டொலர்களும் ஆண்டுதோறும் பெற்றுக்கொள்வார்.
கனடா ஓய்பவூதியத்துக்கு 30 விழுக்காடு கனடியர்களே தகுதி பெறுகிறார்கள். அவர்கள் பெறும் தொகை? ஆண்டொன்றுக்கு சராசரி 6,000 டொலர் மட்டுமே!
அடியேனுக்குக் கிடைக்கும் ஓய்வூதியம ஆண்டொன்றுக்கு 1,200 டொலர்!
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஓய்வூதியத்தை தாங்களே தீர்மானிக்கிறார்கள். சம்பளத்தையும் அவர்களே தீர்மானிக்கிறார்கள். இதில் கட்சி வேறுபாடு இல்லை. எனவே முதலில் தங்களைக் கவனித்துக் கொண்டுதான் மற்றவர்களைக் கவனிக்கிறார்கள்.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் ஆண்டு ஊதியம் 157,731 டொலர். ஆனால் தலைமை அமைச்சர், அமைச்சர், அவைத்தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், கட்சித்தலைவர்கள் போன்றோருக்கு மேலதிக ஊதியம் கொடுக்கப்படுகிறது.
பதவி | ஊதியம் | மேலதிக ஊதியம் | மொத்தம் |
நாடாளுமன்ற உறுப்பினர் | 157,731 | 157,731 | |
தலைமை அமைச்சர் | 157,731 | 157,731 | 315,462 |
அவைத்தலைவர் | 157,731 | 75,516 | 233,247 |
எதிர்க்கட்சித் தலைவர் | 157,731 | 75,516 | 233,247 |
அமைச்சர் | 157,731 | 75,516 | 233,247 |
துணை அமைச்சர் | 157,731 | 56,637 | 233,247 |
கட்சித் தலைவர்கள் | 157,731 | 53,694 | 211,425 |
அரச விப் | 157,731 | 28,420 | 186,151 |
எதிர்க்கட்சி விப் | 157,731 | 28,420 | 186,151 |
ஏனைய கட்சி விப்ஸ் | 157,731 | 11,165 | 186,151 |
நிலைக்குழுத் தலைவர் | 157,731 | 11,165 | 168,896 |
அரசகட்சிக் குழுத் தலைவர் | 157,731 | 11,165 | 168,896 |
எதிர்கட்சிக் குழுத் தலைவர் | 157,731 | 11,165 | 168,896 |
ஏனைய கட்சிக் குழுத் தலைவர்கள் | 157,731 | 5684 | 163,415 |
கருணாநிதி தேர்தலில் தன்மானத்தோடு மணிமுடியையும் இழந்து கோவணத்தோடு நிற்கிறார்!
நக்கீரன்
தமிழ்நாட்டில் எந்தவொரு கட்சியும் தனித்துப் போட்டியிட்டு வெல்ல முடியாது. 1967 தொடக்கம் முக்கிய கட்சிகளாக விளங்கும் அதிமுக மற்றும் திமுக கட்சிகள் கூட்டணி அமைத்தே போட்டியிட்டு வருகின்றன. எனவே தேர்தலின் முடிவை பெரும்பாலும் கூட்டணிப் பலமே தீர்மானிக்கிறது.
மேலும் தேர்தல் முடிவை ஒன்றோ இரண்டோ காரணிகள் தீர்மானிப்பதில்லை. மக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட காரணிகளின் அடிப்படையிலேயே வாக்களிக்கிறார்கள்.
இந்தத் தேர்தலில் பல காரணிகள் தேர்தல் முடிவைப் பாதிக்கலாம் என அடையாளம் காணப்பட்டன. திமுக – காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்தியதாகச் சொல்லப்படும் காரணிகள்!
* 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல். அது குறித்த மக்களின் விழிப்புணர்வு.
* படித்தவர்கள் மத்தியில் குடும்ப அரசியல் நடத்தும் கருணாநிதி மீதான வெறுப்பு.
* திரைப்படத்தில் கருணாநிதி குடும்பம் செலுத்தும் ஆதிக்கம்.
* ஈழச் சிக்கலில் கருணாநிதியின் ஏனோ தானோ என்ற செயல்பாடு.
* ஓயாத மின் வெட்டு.
* ஊழல். பணம் கொடுக்காமல் எதையும் பெறமுடியாது என்ற கையறு நிலை.
* கடுமையான விலைவாசி உயர்வு.
* சட்டம் ஒழுங்கு சீர்குலைவு. காடையர்களின் அட்டகாசம். ஒரு கொலைக்கு பத்தாயிரம் கொடுத்தாலே போதும்.
* தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி இதனால் திருமங்கல சூத்திரம் வேலை செய்யவில்லை.
* தமிழ்த் தேசியவாதிகள் காங்கிரசைக் கருவறுப்போம் என்ற முழக்கத்தோடு தேர்தல் களத்தில் தீவிரமாக இறங்கியது.
இப்போது இவை ஒவ்வொன்றையும் சுருக்கமாகப் பார்ப்போம்.
2ஜி ஸ்பெக்ரம்
2ஜி ஸ்பெக்ரம் ஊழல் பற்றிய தார்ப்பரியங்கள் மக்களுக்கு ஆழமாகத் தெரியாவிட்டாலும் கோடிக்கணக்கில் ஊழல் நடந்திருக்கிறது என்பதை நகர வாசிகள் மட்டுமல்ல ஊர்வாசிகளும் அறிந்தே வைத்திருக்கிறார்கள். முன்னர் போல் அல்லாது தொலைக்காட்சி இப்போது சிற்றூர், பேரூர் என்று எங்கும் பரவிவிட்டது. மேலும் படித்தவர்களது விழுக்காடு அதிகரித்து வருகிறது. இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த வாக்காளர்களைவிட இன்று வாக்காளர்கள் விபரம் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். ஆ.ராசாவின் ஊழல் நடவடிக்கைகளால் 50 ஆயிரம் கோடி நாட்டுக்கு நட்டம் என்று சிபிஅய் நாடாளுமன்றப் பொதுக் கணக்குக் குழுவிடம் வாக்குமூலம் வழங்கியது. மத்திய அமலாக்கப் பிரிவும் புலனாய்வுத் துறையும், ஆ.ராசா 3000 கோடி கையூட்டு பெற்றிருப்பதாகக் கண்டுபிடித்தன. முழுத்தேசமும் ஸ்பெக்ட்ரம் ஊழலின் ஆழம் கண்டு அதிர்ந்துபோனது.
எனவே கலைஞர் தொலைக்காட்சிக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டால் பயன்பெற்ற வடநாட்டு நிறுவனங்களிடம் இருந்து வந்த பணம் கையூட்டுப் பணம் என்றே மக்கள் நினைத்தார்கள். முன்னாள் அமைச்சர் ஆ. இராசா பிடிபட்ட போதுதான் அந்தப் பணம் கடனாகப் பெறப்பட்டது என்றும் வட்டி விழுக்காட்டில் முரண்பாடு எழுந்ததால் முதலை வட்டியோடு (31 கோடி) திருப்பிக் கொடுத்து விட்டதாகக் கருணாநிதியும் கனிமொழியும் சொன்ன கதையை மக்கள் நம்பவில்லை. எனவே ஊழலில் சிக்கிய கட்சிக்கு எதிராக மக்கள் வாக்களித்தார்கள்.
குடும்ப அரசியல்
திமுகவின் வீழ்ச்சிக்கு கருணாநிதி நடத்திய குடும்ப அரசியலும் தன் பங்களிப்பைச் செய்தது. கருணாநிதியின் குடும்பம் முழுவதும் தகுதி இல்லாமல் இரவோடு இரவாகப் பிரபலங்கள் ஆனார்கள். கட்சிக்கு ஆண்டுக் கணக்காக உழைத்த பல மூத்த அரசியல்வாதிகள் இருந்தும் திமுக வின் அடிப்படை உறுப்புரிமை வைத்திராத கனிமொழி மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். தமிழர்கள் உணர்ச்சி வசப்பட்டு முடிவு எடுப்பவர்கள். ஒரு மகனோ அல்லது ஒரு மகளோ வாரிசு அரசியலில் ஈடுபட்டிருந்தால் அதை மக்கள் பெரிதாக எடுத்திருக்க மாட்டார்கள். ஆனால் மகன்கள், மகள், பேரன்கள், பேத்திகள், மருமகன்கள் என்று எல்லோரும் ஊடக வெளிச்சத்தில் தெரிந்தபோது கருணாநிதி குடும்பத்துக்குப் பெருமையாக இருந்தது. ஆனால் மு. க. அழகிரி ஒருபுறம், முதல்வர் கருணாநிதியின் துணைவியார் இராஜாத்தியம்மாள் ஒருபுறம், கனிமொழி இன்னொருபுறம் என்று குடும்ப ஆட்சி கொடிகட்டிப் பறந்ததைப் பார்த்த மக்கள் முகம் சுளித்துக்கொண்டார்கள். கட்சிக்குள் ஸ்டாலின் ஆதரவாளர்கள் அழகிரி ஆதரவாளர்கள் என இரு கன்னைகளாகப் பிளவு பட்டிருந்தது கட்சியைப் பலவீனப்படுத்தியது.
மொத்தம் 301 கோடியே 76 இலட்சம் செலவழித்து நடத்தப்பட்ட செம்மொழி மாநாட்டிலும் கருணாநிதி குடும்பமே மையப்படுத்தப்பட்டது. அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த மொத்தம் 84 பேர்களுக்கு முன்வரிசை இருக்கைகள் ஒதுக்கப்பட்டன. அதில் கலந்து கொண்டவர்கள் கருணாநிதியையும் அவரது குடும்பத்தினரையும் வானளாவப் புகழ்ந்து தள்ளினார்கள். கனிமொழி எழுதி வெளியிட்ட கவிதை நூல் பற்றி இரண்டு ஆய்வுக் கட்டுரைகள் படிக்கப்பட்டது.
கட்டுரை படித்தவர்கள் சரி, கவிதை படித்தவர்கள் சரி எல்லோருமே தமிழைப் பாடாமல் கருணாநிதி புகழ் பாடினார்கள்!
செவியிரண்டும் கிழிந்து போகும் அளவுக்கு பலரும் கருணாநிதி போற்றி பாடினார்கள். வைரமுத்து, வாலி, விஜய், தமிழன்பன், தமிழச்சி தங்கபாண்டியன், நா.முத்துக்குமார், மு.மேத்தா, பழனிபாரதி, தணிகைச் செல்வன், கயல்விழி, உமா மகேஸ்வரி, தமிழ்தாசன், அப்துல் ரகுமான், வா.மு.சேதுராமன் எனக் கூழுக்குப் பாடும் ஒரு கவிஞர் பட்டாளம் கருணாநிதிக்குப் பாமாலை பாடிப் புகழ்மாலை சாத்தியது. குறிப்பாக கவிஞர் வைரமுத்து, வாலி, மேத்தா, விஜய் போன்றோர் கருணாநிதியைப் பாராட்டு மழையில் தோய்த்து எடுத்தார்கள்! கலைஞருக்கு தமிழ் உலகம் நன்றி சொல்ல வேண்டும் கலைஞர்தான் மறுபடியும் முதல்வராக வேண்டும் என்றார் வைரமுத்து
திரைப்படத்துறையில் குடும்ப ஆதிக்கம்
கலாநிதி மாறன், தயாநிதி மாறன் ஆகியோரின் சன் படத்தயாரிப்பு நிறுவனம் ஒரு பக்கம், அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி, ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் என்று திரைப்படத் தயாரிப்புத் துறையில் எங்கு பார்த்தாலும், முதல்வர் கருணாநிதி குடும்பத்தினரின் ஆட்சி தான். இவர்களைத் தாண்டி யாரும் நடிக்க முடியாது, படம் எடுக்க முடியாது போன்ற நிலைமை தமிழகத்தில் நிலவியது எனலாம். ஆனால் கருணாநிதியோ “என் குடும்பத்திலே என்னுடைய பிள்ளைகளோ, பெண்களோ, பேரர்களோ அரசியலிலே ஈடுபட்டால் வாரிசு அரசியல் என்பதற்கும் திரைப்படத் துறையிலே ஈடுபட்டால் அதற்கு அர்த்தம் கற்பிப்பதற்கும் என்னதான் காரணமோ? ஏன்தான் இந்த நெஞ்செரிச்சலோ?” என நொந்து கொண்டதோடு அதனை நியாயப்படுத்தினார்.
ஏ.வி.மெய்யப்ப செட்டியார் திரைப்படம் எடுத்து பின்னர் அவருடைய மகன்கள் ஏ.வி.எம்.முருகன், ஏ.வி.எம். குமரன், ஏ.வி.எம்.பாலசுப்ரமணியம், ஏ.வி.எம். சரவணன், அவருடைய மகன் குகன், மருமகள் நித்யா போன்றவர்கள் எல்லாம் திரைப்படத் துறையிலே இருப்பதும், சிவாஜிக்குப் பிறகு அவருடைய மகன்கள் ராம்குமார், பிரபு, அவருடைய மகன் துஷ்யந்த் போன்றவர்கள் திரைப்படத் துறையில் ஈடுபட்டதும், ரஜினி, அவரது மகள் அய்ஸ்வர்யா, மருமகன் தனுஷ் ஆகியோர் திரைப்படத் துறையில் இருப்பதும் கமல், அவரது சகோதரர் சாருஹாசன், மகள் ஸ்ருதி, மற்றும் சுகாசினி, மணிரத்னம், அனுஹாசன் போன்றவர்கள் எல்லாம் இந்தத் துறையிலே ஈடுபட்டிருப்பதும் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மற்றும் அவரது பிள்ளைகள் ஜீவா, ஜித்தன் ரமேஷ் போன்றவர்கள் இருப்பதும், நடிகர் சிவகுமார், அவரது பிள்ளைகள் சூர்யா, கார்த்தி போன்றவர்கள் திரைப்படத் துறையில் ஈடுபட்டிருப்பதும் அந்த நெஞ்செரிச்சில்காரர்களுக்குத் தெரியாமல் போனது வேடிக்கை என்றார்.
ஈழச் சிக்கலில் கருணாநிதி
கருணாநிதி எதைச் செய்தாலும் தனக்கோ தனது கட்சிக்கோ அதனால் என்ன இலாபம்? என்ன இழப்பு? என்பதைக் கணக்குப் பார்த்துத்தான் செய்வார். ஈழச் சிக்கலிலும் இதுதான் நடந்தது. எண்பதுகளில் தமிழீழ ஆதரவு அமைப்பை உருவாக்கி பெரியளவில் மாநாடொன்றை மதுரையில் நடத்திக் காட்டினார். அதில் வாஜ்பாய் உட்பட பல வடநாட்டுத் தலைவர்கள் கலந்து கொண்டார்கள். எதிர்க்கட்சியில் இருக்கும் போது ஈழச் சிக்கலைக் கையில் தூக்குவதும் ஆளும் கட்சியாக மாறியவுடன் அதனை அமுக்கி விடுவதும் அவரது உத்தியாக இருந்து வந்தது. ஈழம்பற்றி நேரத்துக்கொரு கதை கருணாநிதி சொல்வார். ஒரு நாளைக்கு ஸ்லோவக்கியா – செக் நாடுகள் போல் பிரிவதுதான் ஈழச் சிக்கலுக்குச் சரியான தீர்வு என்பார். அடுத்த நாள் ஈழப் போராட்டம் தோல்வி அடைந்ததற்குச் சகோதர யுத்தம்தான் காரணம் என்பார்.
“நான் ஈழத்தமிழர்களுக்காக இரண்டுமுறை ஆட்சியை இழந்திருக்கிறேன்” என்பார். 2008 ஆம் ஆண்டு நொவெம்பர் மாதம் அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு, அமெரிக்க துணைத் தூதர் ஆண்ட்ரூ சிம்கின் பெயரில் ஒரு கடிதம் போனது. அதில் தயாநிதி மற்றும் காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோருடன் பேசியதைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைத் தமிழர் சிக்கல் தொடர்பாகத் தனது கட்சி மத்திய அமைச்சர்கள் விலகுவர்கள் என கருணாநிதி அறிவித்திருப்பது ஒரு நாடகம் என்று தயாநிதி மாறன் அப்போது தெரிவித்தார். மின் வெட்டுச் சிக்கல் அதனால் ஏற்பட்டுள்ள மக்களின் கடும் கோபம் ஆகியவற்றிலிருந்து மக்களை திசை திருப்புவதற்காகவே கருணாநிதி இவ்வாறு அறிவித்தார் என தயாநிதிமாறன் துணைத் தூதரிடம் போட்டுக் கொடுத்துள்ளார்.
ஓயாத மின் வெட்டு
ஓயாத மின்வெட்டினால் தொழில் நிறுவனங்கள், விவசாயிகள், பொதுமக்கள் அவதிப்பட்ட போது திமுக அரசு அவற்றுக்கு உரிய தீர்வு காண எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. மின்சக்தி அமைச்சர் ஆர்க்காடு வீராசாமியை மாற்றி இன்னொருவருக்கு அந்தப் பொறுப்பைக் கொடுத்திருக்கலாம். அண்டை மாநிலங்களில் இருந்து மின்சாரம் பெற முயற்சி செய்திருக்கலாம். இதில் எதையும் கருணாநிதி அரசு செய்யவில்லை. மாறாக மின் தட்டுப்பாட்டுக்கு முன்னைய அதிமுக தான் காரணம் என்று சொன்னார். இதனை மக்கள் ஒப்பவில்லை.
கையூட்டுக் கொடுக்காமல் எதையும் பெறமுடியாது என்ற கையறு நிலை
இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் கையூட்டுக் கொடுக்காமல் எதையும் செய்ய முடியாது என்ற கையறு நிலை உள்ளது. அரச அலுவலங்களில் சிறிய அலுவலை முடிக்க வேண்டும் என்றாலும் அரச ஊழியர்கள் பகிரங்கமாகக் கையூட்டுக் கேட்பது எழுதாத விதியாக இருந்தது. காவல்துறையைக் கேட்கவே வேண்டாம். சட்டத்தை மீறி நடப்பவர்களிடம் இருந்து மாதாந்தம் மாமூல் வாங்கும் காவல்துறையினர் அதனை உயர் அதிகாரிகளோடு பங்கு போட்டுக் கொள்கிறார்கள். எந்த மாவட்டத்தில் எந்த ஊரில் பணிசெய்தால் அதிகளவு பணத்தைத் தேடலாம் என்று கணக்குப் பண்ணி அந்த மாவட்டம் அந்த ஊருக்கு பணிமாற்றம் எடுத்துக் கொள்வதை எல்லா மட்டத்திலும் உள்ள அரச ஊழியர்கள் வழக்கப்படி வைத்திருக்கிறார்கள். “இலஞ்சம் ஊழலுக்கு நான் நெருப்பு. இது என்னோடு பணிபுரிவர்களுக்குப் புரியும்” என்று வாயளவில் கருணாநிதி வீரம் பேசினாலும் நடைமுறையில் அவர் கையூட்டு, ஊழல்களை ஒழிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான் உண்மை.
கடுமையான விலைவாசி உயர்வு
விலைவாசி உயர்வு என்பது அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்பது ஓரளவு உண்மைதான். கச்சா எண்ணெய் உலகச் சந்தையில் உயரும் போது உள்ளுரிலும் அதன் விலை உயரும் என்பது விதி. ஆனால் அதுபற்றிக் கருணாநிதி கொடுத்த விளக்கம் மக்களுக்கு எரிச்சலைக் கொடுத்தது. “ஏனைய மாவட்டங்களோடு ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வு குறைவு” என்ற விளக்கம் மக்களிடம் எடுபடவில்லை. “வாங்கும் சக்தி உயர்ந்திருக்கிறது. அதனால் பொருட்களின் விலை அதகரித்துள்ளது” என அமைச்சர் ப.சிதம்பரம் கொடுத்த விளக்கம் மக்களது கோபத்தைக் கிளறியது.
சட்டம் ஒழுங்கு சீர்குலைவு
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து காணப்பட்டது. கொலை, கொள்ளை சாதாரணமாக நடைபெற்றது. சீமான், தா. பாண்டியன் இருவரது மகிழுந்துகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. அதிமுக இலக்கிய அணித் தலைவர் பழ.கருப்பையாவின் வீட்டில் புகுந்த காடையர்கள் அவரை சரமாரியாக அடித்தார்கள். வீட்டில் காணப்பட்ட பொருட்கள் அடித்து நொருக்கப்பட்டன. இதனை ஆளும் கட்சிக் குண்டர்கள்தான் செய்திருக்க வேண்டும். ஆனால் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. காவல்துறை விசாரணை நடத்தியதாகவும் தெரியவில்லை. காவல்துறை கருணாநிதியின் கையில் இருந்தும் அவர் பேசாமடந்தையாகவே இருந்தார். சென்னை நீதிமன்ற வளாகத்தில் காவல்துறையும் வழக்கறிஞர்களும் பயங்கரமாக மோதிக் கொண்டார்கள். வண்டிகள் தீக்கிரையாக்கப்பட்டன. கருணாநிதி என்ன சொன்னார்? “காவல்துறையும் வழக்கறிஞர்களும் திமுக ஆட்சியைப் பொறுத்தளவில் இரு கண்கள் ” என்று திரைப்பட வசனம் பேசினார். கருணாநிதியை சாணக்கியன் அப்படி இப்படி என்று புகழ்பாடுகிறார்கள். ஆனால் அவரது நிருவாகம் உப்புச் சப்பின்றி இருந்ததாகவே நடுநிலையாளர்கள் கருதுகிறார்கள்.
தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி இதனால் திருமங்கல சூத்திரம் வேலை செய்யவில்லை
தேர்தல் ஆணையம் இந்தத் தேர்தலில் சிறப்பாகச் செயற்பட்டு எல்லோரது பாராட்டுதல்களையும் பெற்றுக் கொண்டது. விதி விலக்கு கருணாநிதி. “தேர்தல் ஆணையம் அவசர காலம் போல் நடந்து கொள்கிறது. தமிழ்நாட்டின் முதலமைச்சர் நானா அல்லது தேர்தல் ஆணையரா என்ற அய்யம் எழுந்துள்ளது” இவ்வாறு கருணாநிதி செய்தியாளர்களுக்குச் சொன்னார். வாக்காளர்களுக்குக் கொடுக்கக் கொண்டு போன 48 கோடி பணத்தைத் தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் பணத்துக்கு யாரும் உரிமை கோரவில்லை. தேர்தல் விதிகளை மீறியதாக 55 ஆயிரம் வழக்குகளுமே இதற்குச் சான்று.
தமிழ்த் தேசியவாதிகள் காங்கிரசைக் கருவறுப்போம் என்ற முழக்கத்தோடு தேர்தல் களத்தில் தீவிரமாக இறங்கினார்கள்
இந்தத் தேர்தலில் திமுகவை விட காங்கிரஸ்தான் பலத்த அடி வாங்கியுள்ளது. காங்கிரஸ் சார்பில் 63 நாயன்மார்கள் போட்டியிட்டார்கள். அதில் 5 பேர்தான் கரை சேர்ந்தார்கள். காங்கிரஸ் கட்சியின் வரலாற்றில் ஒற்றை இலக்கத்தைத் தாண்டாத ஒரே தேர்தல் இதுதான். இந்த அய்ந்து தொகுதிகளிலும் இரண்டாவதாக வந்த பாராதிய ஜனதாக கட்சி வாக்குகளைப் பிரித்த காரணத்தாலேயே காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியவாதிகள் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களைக் குறிவைத்துப் பரப்புரை செய்தது. அதன் காரணமாக கே.வி.தங்கபாலு, இ.வி.கே.எஸ். இளங்கோவன், மணிசங்க அய்யர் தோற்கடிக்கப்பட்டார்கள். அமைச்சர் ப. சிதம்பரம் தோற்றுவிட்டார் என மதியம் அறிவித்துவிட்டு மாலை அவர் 3,000 + வாக்குகளால் வெற்றிபெற்றார் என அறிவிக்கப்பட்டது. இம் முறை காங்கிரசை எதிர்த்து நாம் தமிழர் கட்சியும் களம் இறங்கியது. செந்தமிழன் சீமான் பேசிய கூட்டங்களுக்கு மக்கள் பெருமளவில் திரண்டார்கள்.
திமுக இந்தத் தேர்தலில் தோற்கும் என்று கனவிலும் நினைக்கவில்லை. இலவசங்களும், பண பலமும் கட்சியைக் கரைசேர்க்கும் என்றுதான் கட்சித் தலைவர்கள் நினைத்தார்கள்.
கருணாநிதி புகழை விரும்பினார். பாராட்டை விரும்பினார். அதனை அவருக்குக் கூழைக் கும்பிடு போடும் கூட்டம் வஞ்சகம் இல்லாமல் வாரி வழங்கியது.
மகன் அழகிரி 58 தென்மாநில தேர்தல் தொகுதிகளில் ஒன்றுவிடாது வென்று காட்டுவதாக அப்பாவிடம் அடித்துச் சொன்னார். சொன்னது நடக்கவில்லை. 12 தொகுதிகளை மட்டும் பலத்த போராட்டத்தின் பின்னர் பிடிக்க முடிந்தது. தேர்தலில் கருணாநிதி அடைந்த படுதோல்விக்கு இது ஒரு காரணம். இடித்துச் சொல்ல வேண்டிய தொல். திருமாவளவன், சுப.வீரபாண்டியன், கி.வீரமணி, கவிஞர் வைரமுத்து போன்றவர்கள் சும்மா இருப்பதே சுகம் என்று இருந்து விட்டார்கள்.
“கருணாநிதி ஒரு சாதனையாளர் ஜெயலலிதா வேதனைகளைச் செய்தவர்’ என உள்துறை அமைச்சர் சிதம்பரம் பரப்புரை மேடைகளில் பேசினார். கருணாநிதி செய்த சாதனைகள் என்று அவர் எதை சொல்கிறார்? 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், மின் தட்டுப்பாடு, ஈழத்தமிழர் சிக்கல், காவிரி குடிநீர், முல்லைப் பெரியாறு அணை, சிவகாசி சாயப்பட்டறை கழிவுநீர் சிக்கல், ஆசிரியர்கள் பணி நியமனம், வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு என அனைத்திற்கும் தீர்வு கண்டிருந்தால் அதைச் சாதனையாகக் கூறலாம். அதைவிடுத்து இலவசங்களையும் பணத்தையும் கொடுத்து மீண்டும் ஆட்சியைப் பிடித்தே தீர வேண்டும் என்பது சாதனை அல்ல.
தமிழகத்தில் அய்ந்துமுறை முதல்வராக இருந்த கருணாநிதி ஆட்சியில்
தமிழக அரசு அலுவலகங்களில் தமிழில் ஆட்சி இல்லை. பள்ளிகளில், கல்லூரிகளில் கற்கை மொழி தமிழாக இல்லை. தமிழகத்தில் இறை வழிபாடு தமிழில் இல்லை. நீதி மன்றங்களில் வழக்காடு மொழியாகத் தமிழ் இல்லை. அங்காடிகளின் பெயர்கள் தமிழில் இல்லை. ஏன் கருணாநிதியின் பேரன், பேத்தி ஒருவருக்கேனும் தமிழில் பெயர் இல்லை!
காங்கிரஸை விட மோசமான தோல்வியைச் சந்தித்துள்ள பாமக கட்சி தங்களது எதிர்காலம் என்னவென்றே தெரியாத நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டிருக்கிறது. போட்டியிட்ட இடங்களில் எல்லாம் அது பெரும் அடியை வாங்கியுள்ளது. குறிப்பாக வட மாவட்டங்களில் அதாவது வன்னியர் கோட்டை எனப்படும் தொகுதிகளில் எல்லாம் படு மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது. வேளச்சேரித் தொகுதியை கடுமையாகப் போராடி வாங்கிய பாமக அங்கு தோல்வியைச் சந்தித்தது. அந்தக் கட்சியின் தலைவர் ஜி.கே.மணியே தோற்று விட்டார்.
திமுக கூட்டணியிலிருந்து வெளியேற்றப்பட்டு பின்னர் சேர்க்கப்பட்ட கட்சி பாமக வுக்கு கருணாநிதி 30 இடங்களை ஒதுக்கினார். ஆனால் பாமக வெறும் 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. திமுக வைப் போலவே பாமகவும் இராமதாசின் குடும்பக் கட்சி என்று பெயர் எடுத்திருந்தது. தனது மகன் மருத்துவர் அன்புமணிக்கு மேலவை நியமனம் கேட்டு இராமதாஸ் திமுகவிடம் தூதுக்கு மேல் தூதுவிட்டது அவருக்குக் கெட்ட பெயரை வாங்கிக் கொடுக்கவே உதவியது.
வன்னியர்களின் பாமக தலித்துக்களின் விடுதலைச் சிறுத்தைகள், கவுண்டர்களின் கொங்கு நாட்டு முன்னேற்றக் கழகம், தேவர்களின் மூவேந்தர் முன்னேற்றக் கழகம், நாடார்களின் பெருந்தலைவர் மக்கள் கட்சி, மூவேந்தர் முன்னணிக் கழகம் போன்றவை படுதோல்வி அடைந்துள்ளன. பொதுவாக சாதிக் கட்சிகள் இந்தத் தேர்தலில் பலத்த அடி வாங்கியுள்ளது நல்ல அறிகுறியாகும்.
இன்று கருணாநிதி தேர்தலில் தன்மானத்தோடு மணிமுடியையும் இழந்து கோவணத்தோடு நிற்கிறார். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு மூடி மறைத்த, மறுத்த மகள் கனிமொழியைக் காப்பாற்ற திமுக உயர் நிலைக் குழுவைக் கூட்டுகிறார். அமைசர் இராசா கைது செய்யப்பட்ட போது கூடாத, கூட்டாத, கூட்ட முடியாத உயர் நிலைக் குழு குற்றப் பத்திரிகையில் கனிமொழி பெயர் இடம்பெற்று விட்ட ஒரே காரணத்துக்காக கூட்டப்படுகிறது என்றால் “கழகம் ஒரு குடும்பம்” என்பது நாடறிய மீண்டும் ஒருமுறை எண்பிக்கப்பட்டுள்ளது.
“புருஷோத்தமர் போரில் புலி வாளெடுத்தால் வையகமே நடுங்கும். அவரா இப்படி நடுங்குகிறார். ம்… போர்க்களத்தில், எதிரியின் வாட்களோடு விளையாடிய கைகள் இன்று இந்த வஞ்சகியின் விரல்களை அல்லவா வருடிக் கொண்டிருக்கின்றன….’ இது மனோகரா திரைப்படத்திற்காக கருணாநிதி எழுதிய வசனம். அரை நூற்றாண்டுக்கு முன்னால் கருணாநிதி எழுதிய வசனம் இன்று அவருக்கே பொருந்தி வருகிறது. கருணாநிதி நாட்டில் விலைவாசி உயர்ந்தபோதும் மின்வெட்டால் தமிழகமே இருண்டபோதும் நீரின்றிப் பயிர்கள் வாடியபோதும் நாட்டில் வேலை வாய்ப்பு அருகிய போதும்
ரோம் பற்றி எரிந்து கொண்டிருந்தபோதும் பிடில் வாசித்துக் கொண்டிருந்த நீரோ மன்னன் போல பெண் சிங்கம், உளியின் ஓசை, பொன்னர் சங்கர் என்று திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதிக் கொண்டிருந்தார். “மானாட மயிலாட” என நாட்டிய மணிகளின் நடனங்களை இரசித்துக் கொண்டிருந்தார். அதனால் தான், மக்கள் கதை, வசனம் எழுதவும் நாட்டியத்தை இரசிக்கவும் முதல்வர் பதவி ஒரு தடையாக இருக்கக் கூடாது என நினைத்து அவருக்கு நிரந்தர ஓய்வு கொடுத்துவிட்டார்கள்! (May 24, 2011)
Leave a Reply
You must be logged in to post a comment.