Political Column 2011 (1)

முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் மகிந்த இராசபக்சே!

நக்கீரன்

சிறிலங்கா அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தை மாதம் காதவழி போகும் தெனாலி இராமன் குதிரை வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது.

மாகாண சபைக்குக் காணி, காவல்துறை அதிகாரம் கொடுக்க முடியாது என சிங்கள அரசு பிடிவாதம் பிடிக்கிறது. வட – கிழக்கு இணைப்பும் நடக்காது என அரசு தரப்பில் சொல்லப்படுகிறது.

மாகாண சபை என்னதான் நோஞ்சலாக இருந்தாலும் அதற்குச் சட்டப்படி சில அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. காணி, காவல்துறை  அதிகாரம் 13 ஆவது சட்ட திருத்தத்தில் மாகாண சபைக்குரிய அதிகாரங்களாகும்.  அது அண்மையில் உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது.  சிங்கள அரசு பட்டின, நாடு திட்டமிடல் சட்டத்தில்  திருத்தம் கொண்டுவந்த போது உச்ச நீதிமன்றம் காணி அதிகாரம் மாகாணசபைக்கு இருப்பதால் எல்லா  மாகாண சபைகளின் ஒப்புதல் வேண்டும் என்று தீர்ப்பு அளித்திருக்கிறது.  இந்தச் சட்டத் திருத்தம்  சூழல் பாதுகாப்பு, பாதுகாப்பு, கட்டிடக்கலை மற்றும் வரலாறு மற்றும் தெய்வீகம் தொடர்பான எந்த நிலப்பரப்பையும் பட்டின, நாடு திட்டமிடல் அதிகார சபை விரும்பினால் பிரகடனத்தின் மூலம் கையகப்படுத்த வழிவகுத்தது.

Only last week the Supreme Court held that the Bill introduced by the Government to amend the Urban Country Planning Ordinance to enable authorities concerned to declare land areas as conservation areas, protected areas, architectural and historical areas and sacred areas is invalid as the bill was about a matter (land) set out in the Provincial Council list and shall not become law unless it had been referred by the President to EVERY PC. (http://www.lakbimanews.lk/index.php?)
சிங்கள அரசு மகிந்த சிந்தனையில் அடிப்படையில்தான் இயங்குகிறது.  அந்தச் சிந்தனையை நாம் புறம் தள்ளிவிட முடியாது.  காணி, காவல்துறை அதிகாரம் மாகாண சபைக்குப் பாரப்படுத்த முடியாது, வட – கிழக்கு இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற சிங்கள அரசின் நிலைப்பாடு  மகிந்த சிந்தனையின் எதிர்விளைவு  என்பதைத் தமிழர் தரப்பு உணரவேண்டும்.  பேச்சு வார்த்தை இழுபறியில் இருப்பதற்கு இந்த மகிந்த சிந்தனைதான் காரணம்.

மகிந்த சிந்தனை முதன் முதலில் 2005 ஆம் ஆண்டு நடந்த ஆட்சித்தலைவர் தேர்தலில் தான் அறிமுகமானது. அதில் தமிழர்களது அடிப்படைக் கோரிக்கையான தாயகம், தேசியம் மற்றும் தன்னாட்சி உரிமை வழங்கப்பட மாட்டாது என வெளிப்படையாகச் சொல்லப்பட்டுள்ளது. வட – கிழக்கு இணைப்புக்கும் சம்மதிக்க முடியாது என மகிந்த சிந்தனையில் சொல்லப்பட்டது. இந்த மகிந்த சிந்தனையைத் தமிழர் தரப்பு அன்று கவனத்தில் எடுக்கத்தவறி விட்டது. இன்றைய எமது இக்கட்டான நிலைமைக்கு இந்தத் தவறு ஒரு முக்கிய காரணியாகும்.

அண்மையில் Deccan Chronicle  என்ற ஏட்டின் நிருபர் ஆர்.பக்வன் சிங் (R. Bhagwan Singh) அலரிமாளிகையில் வைத்து ஆட்சித்தலைவர் மகிந்த இராசபக்சே அவர்களை செவ்வி கண்டார். போர்க்குற்றம் பற்றி பன்னாட்டு விசாரணை, இனச் சிக்கலுக்குத் தீர்வு,  இந்திய – சிறிலங்கா பற்றிய உறவு தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கான பதில்கள் மகிந்த சிந்தனையை எதிரொளிப்பதாக இருந்தன.   இனச் சிக்கல் தொடர்பான முக்கிய கேள்விகளுக்கான பதில்களைப் பார்ப்போம்.
பக்வன் சிங் – மேற்குலக நாடுகள் சிறிலங்காவில் நடந்தேறிய “போர்க் குற்றம்” பற்றி விசாரணை வேண்டும் என வற்புறுத்துகின்றன. இது பற்றி என்ன செய்யப் போகிறீர்கள்?

இராசபக்சே –  மேற்குலக நாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் மிச்சசொச்சங்கள்தான் சிறிலங்காவுக்கு எதிராக எந்த அடிப்படையும் இல்லாத  குற்றச்சாட்டுகளை முன்வைத்து அரசியல் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள். மேற்குலக நாடுகள் கஷ்மீர் மற்றும் சிறிலங்கா பற்றி தமது நாடாளுமன்றங்களில் பேசுகின்றன. ஆனால் அந்த நாடுகள் ஆப்கனிஸ்தான், பாகிஸ்தான். இராக் நாடுகளில் எதைச் செய்தார்கள் என்பது பற்றி வாய் திறப்பதில்லை. மேற்குலக நாடுகள்  தங்களது எடுபிடியாக நான் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றன. நான் அப்படி இருக்க மறுக்கிறேன்.

பக்வன் சிங் – போர் முடிந்து இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டன. வி.புலிகள் அழிக்கப்பட்டு விட்டார்கள். ஆனால் தமிழர்களின் தன்னாட்சிக் கோரிக்கை பலமாக இருப்பதை நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைத்த வெற்றி காட்டுகிறது. அப்படியென்றால் தமிழர் கரிசனைகளைத் தீர்க்க நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? யாழ்ப்பாண வணிகர் சங்கம்  ஒரு அரசியல் தீர்வு கிடைத்தால் ஒழிய புலம்பெயர் தமிழர்கள் இங்கு முதலீடு செய்யமாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளது.

இராசபக்சே – இந்தத் தேர்தல்கள் ஒப்பீட்டு அடிப்படையில் இடம்பெற்றன. ததேகூ க்கு எதிராக கணிசமான வாக்காளர்கள் வாக்களித்துள்ளார்கள்.  தமிழர்களில் 54 விழுக்காட்டினர்  வட கிழக்குக்கு வெளியில் வாழ்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது. யாழ்ப்பாண வணிகர் சங்கம்  எதை வேண்டும் என்றாலும் சொல்லலாம். ஆனால் வெளிநாடுகளில் வாழும் சிறிலங்கா தமிழர்கள் வடக்கில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள். நாங்கள் ஒரு நிலையான அரசியல் தீர்வு குறித்து ஆர்வமாக இருக்கிறோம். ஆனால் அதற்குப் பரந்துபட்ட (மக்கள்)  ஆதரவு தேவை. குறிப்பாகப் போர் முடிந்த சூழ்நிலையில்.

பிரதேச தன்னாட்சி என்ற முழக்கத்தை பயங்கரவாதிகளும் அவர்களது அடிவருடிகளுமே பயன்படுத்தினார்கள்.  வேற்றுமையில் பலமான ஒற்றுமை காண்பதே இன்றைய தேவை.  பிரதேச தன்னாட்சி அதற்கான ஒரே வழி அல்ல.  சம வாய்ப்பு நல்ல அணுகுமுறை. சனநாயக சுதந்திரங்கள் மற்றும் உரிமைகள் பரவலாக்கப்பட்டு வடக்கில் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு இணங்க  துரித பொருளாதார மேம்பாட்டை மேற்கொள்ள வேண்டும்.

பக்வன் சிங் – அதிகாரப்  பகிர்வை எப்படிக் கையாளப் போகிறீர்கள்?

இராசபக்சே – அதிகாரப் பகிர்வைப் பொறுத்தளவில் வடக்கைத் தவிர நாங்கள் ஏனைய மாகாண சபைக்கான தேர்தலை நடத்தி முடித்துவிட்டோம். அங்கும் விரைவில் மாகாண சபை தேர்தல் நடைபெறும்.  எப்படி மாகாண நிருவாகங்களைப் பலப்படுத்தலாம், செம்மைப்படுத்தலாம் அவற்றின் பொருளாதாரம் மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளைப் பரவலாக்கலாம் என்பது பற்றி நாம் பேச வேண்டும். இது ஒரு சனநாயக விரிவாக்கத்தின் படிமுறை. இதில் எல்லா சமூகங்களும் அரசியல் பிரிவுகளும் மற்றும் முக்கிய பொருளாதார வல்லுனர்களும் ஈடுபட வேண்டும்.

பக்வன் சிங் –   நீங்கள் முன்மொழிந்துள்ள நாடாளுமன்றத்  தெரிவுக் குழுவினால் பயன் இல்லை என்று பலர் சொல்கிறார்கள். காரணம் இதற்கு முன்னரும் பல குழுக்கள் உருவாக்கப்பட்டன.  ஆனால் அரசியல் சிக்கல் இருந்த மாதிரியே இருக்கிறது.
இராசபக்சே –  இந்தச் சிக்கலுக்கு நா.தெ. குழு நல்ல அணுகுமுறையாகும். காரணம் ஒரு மக்களாட்சியில் நாடாளுமன்றம்தான் எந்தவொரு அரசியல் தீர்வுக்கும் ஒப்புதல் அளிக்க வேண்டும்.  கெட்டகாலமாக ததேகூ இதற்குத் தனது பிரதிநிதிகளை நியமிக்க மறுத்துவிட்டது.  ததேகூ இன் மனப்போக்கு  வி.புலிகளது மனப்போக்கை ஒத்து இருக்கிறது.

இவர்கள் கொடுக்கமுடியாதவற்றைக் கேட்கிறார்கள் – வட கிழக்கு இணைப்பு, காணி மற்றும் காவல்துறை அதிகாரம். உங்கள் நாட்டில் என்ன நடந்தது என்று பாருங்கள்?  இராகுல் காந்தி உத்திரபிரதேசத்தில் பயணம் செய்யும் போது அவரைக் கைது செய்ய முதல்வர் மாயாவதி முயற்சித்தார்.  நீர் நினைக்கிறீரா நான் கைது செய்யப்படுவதை (தமிழர்களுக்கு காவல்துறை அதிகாரம் கொடுத்தால்) விரும்புகிறேன் என்று?

ததேகூ புலம்பெயர் தமிழர்களால் வழிநடத்தப்படுகிறது என நினைக்கிறேன். புலம்பெயர் தமிழர் சமாதானத்தையோ அரசியல் தீர்வையோ  விரும்பவில்லை.  காரணம் அப்படிச் செய்தால் அவர்கள் வாழும் நாடுகள் அவர்களைத் திருப்பி அனுப்பிவிடும்.  ததேகூ விடுதலைப் புலிகளது பிரிவினை நிகழ்ச்சித் திட்டத்தை வைத்திருக்கிறது.  அதனைப் பெரும்பான்மை (சிங்கள)  மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.  நான் ஒரு தீர்வு நோக்கிச் செயல்பட விரும்புகிறேன். ஆனால் ததேகூ ஒத்துழைக்க மறுக்கிறது.
பக்வன் சிங் – உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்றத்துக்கான தேர்தல் போர்க்காலத்திலும் வடக்கில் நடைபெற்றது. அப்படி இருக்கும்போது மாகாணசபைத் தேர்தலை மட்டும் அங்கு ஏன் இப்போது நடத்த முடியாது?

இராசபக்சே – தேர்தல் மிக விரைவில் அங்கு நடத்தப்படும்.  ஆனால் மாகாண சபைக்கான தேர்தலின் முக்கியத்துவத்தை உணர வேண்டும். தேர்தல் மக்கள்  பங்குகொள்வதற்கு உண்மையான வாய்ப்பைக் கொடுக்கிறது. போர்க் காலத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களின் போது வடக்கில் உள்ள மக்கள் தங்களது வாக்குரிமையை பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை.  வி.புலிகள் மக்களாட்சி முறைமைக்கு எதிராகச் செயல்பட்டார்கள். இன்னொரு காரணம் வாக்களிப்பு ஒரு பழைய வாக்காளர் இடாப்பை வைத்து நடத்தப்பட்டது. அதனால் ததேகூ  ஈட்டிய வெற்றியை  பெரிதாக எண்ணவேண்டியதில்லை.  வி.புலிகள் வடக்கில் மக்கள்தொகை கணக்கு எடுப்பதைத் தடுத்துவிட்டார்கள்.  சரியான தேர்தல் இடாப்புக்கள் தயாரிக்கப்பட்டதும் வடமாகாண சபைக்கான தேர்தலை நடத்தலாம்.

பக்வன் சிங் – தமிழர்கள் வடக்கு இப்போதும் பலமாக இராணுவமயப்படுத்தப்பட்டிருப்பதாக முறையிடுகிறார்கள். மூன்று இலட்சம் மக்களை ஒரு இலட்சம் இராணுவத்தினர் கண்காணிக்கின்றனர்.  ஒரு நூல்நிலைய கூட்டம் என்றாலும் பள்ளிக்கூட நிகழ்ச்சி என்றாலும் இராணுவத்தின் அனுமதி தேவையாக இருக்கிறது. சிவில் நிருவாகத்தில் இராணுவ தலையீட்டை எப்போது நீக்கப் போகிறீர்கள்?

இராசபக்சே – வடக்கில் மூன்று இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் வாழ்கிறார்கள்.  இராணுவத்தினரின் தொகை மக்கள் தொகைக்கு ஒப்பளவாக வைக்கப்படவில்லை. அங்குள்ள பாதுகாப்புத் தேவைக்கு ஏற்பவே இராணுவத்தினரின் எண்ணிக்கை தீர்மானிக்கப்பட்டுள்ளது.  மூன்று தசாப்தங்களாகப் போர் நடந்த பிரதேசத்தில்  இராணுவம் தோற்றம் பெற்றிருப்பதை  இராணுவமயப்படுத்தல் என்று சொல்ல முடியாது. இராணுவம் உள்ளுரில் கட்டுமானப் பணிக்குத் தேவையான கைத்திறன் பற்றாக்குறையை ஈடுசெய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.  பாதுகாப்புத் தேவையைப் பொறுத்து இராணுவம் படிப்படியாக விலக்கப்படும்.

பக்வன் சிங் – தமிழர்கள் தங்களது காணிகளை இராணுவ தளங்கள் அமைக்கவும் அல்லது சிங்கள வணிகர்களுக்குக் கொடுக்கவும் அபகரிகப்படுவதாக அய்யப்படுகிறார்கள்.

இராசபக்சே – வி.புலிகள்தான் இப்படியான கட்டுக்கதைகளைப் பரப்புகிறார்கள். இராணுவத்தினரின் முகாம்கள் நாடு முழுதும் இருக்கின்றன. சிறிலங்காவின் ஆட்புல ஒருமைப்பாட்டையும் அதன் இறைமையையும் பாதுகாப்பது அவசியமாகும்.
யாழ்ப்பாணத்தில் வி.புலிகள் முஸ்லிம்களையும் சிங்களவர்களையும் விரட்டிவிட்டார்கள். இதுதான் முதன்முறை நடந்த இனச் சுத்திகரிப்பு ஆகும். விரட்டப்பட்ட சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் யாராக இருந்தாலும்  அவர்கள் மீளவும் அவர்களது சொந்தக் காணிகளில் குடியமர்த்தப்பட வேண்டும். வடமாகாணத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக இருக்கும் தகைமை அரசின் நடவடிக்கைகளால் மாற்றப்பட மாட்டாது.

பக்வன் சிங் அவர்களுடைய கேள்விகளுக்கு ஆட்சித்தலைவர் மகிந்த இராபக்சே அளித்த பதில்கள் முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைத்தவன் கதையாக இருக்கிறது. பேச்சுவார்த்தை இழுத்தடிக்கப்படுவதற்கான பழியை ததேகூ மீதே சுமத்துகிறார். காணி, காவல்துறை அதிகாரம் கேட்பது வி.புலிகள் கேட்ட தன்னாட்சிக்கு ஒப்பிடுகிறார். சிறிலங்காவில் முதலீடு செய்யப் புலம்பெயர் தமிழர்கள் ஆர்வம் காட்டுவதாகவும் சொல்கிறார்.  தன்னாட்சி தேவையில்லை. அதனை சிங்கள மக்கள் விரும்பவில்லை. வடக்கின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதுதான் முக்கியம். சம வாய்ப்பு, சனநாயக சுதந்திரங்கள் மற்றும் உரிமைகள் பரவலாக்கப்பட்டு வடக்கில் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு இணங்க  துரித பொருளாதார மேம்பாட்டை மேற்கொண்டால் எல்லாம் சரியாகிவிடும்.
தன்னாட்சிக் கோரிக்கை வி.புலிகள் காலத்துக்கு முந்தியது. 1976 இல்  வட்டுக்கோட்டை மாநாட்டில் வட கிழக்கு தமிழர் தாயகம், தேசியம்,  தன்னாட்சி உரிமை என்பவற்றை அடிநாதமாகக் கொண்ட பூரண சுதந்திரமும் தன்னாட்சியும் கொண்ட சோசலிச தமிழீழத்தை அமைப்போம்  என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில் 1977 இல் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்பட்டு மக்களிடம் ஆணை பெறப்பட்டது. எனவே இந்தத் தன்னாட்சி கோரிக்கை வி.புலிகளால் தோற்றுவிக்கப்பட்டதல்ல. இதனை வி.புலிகளே பலமுறை எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.
இராசபக்சே வி.புலிகள்தான் இனச் சுத்திகரிப்பை முதன்முறையாக தொடக்கி வைத்தார்கள் என்கிறார். விரட்டப்பட்ட முஸ்லிம்கள், சிங்களவர்கள் அவர்களது சொந்தக் காணியில் குடியமர்த்தப்பட வேண்டும் என்கிறார். முஸ்லிம்கள் தங்கள் சொந்தக் காணிகளில் மீள் குடியமர்த்தப்பட வேண்டும் என்று வி.புலிகளே சொன்னார்கள்.  சிங்களவர்களுக்கு சொந்தமாக காணி இருந்தால் அதில் குடியமரலாம். வடக்கிலும் கிழக்கிலும் சிங்களவர்களை அரசு திட்டமிட்டுக்  குடியேற்றுவதைத்தான் தமிழர்கள் எதிர்க்கிறார்கள். நாவற்குழி திட்டமிட்ட அரச ஆதரவோடான சிங்களக் குடியேற்றமாகும்.

மகிந்த இராசபக்கே இனச் சுத்திகரிப்புப் பற்றிப் பேசுகிறார். இப்படிப் பேச அவருக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்பது தெரியவில்லை. தமிழர்களே திட்டமிட்ட இனச் சுத்திகரிப்புக்கு கடந்த 60 ஆண்டுகளாக உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள். அதனை கிழக்கு மகாண மக்கள்தொகை புள்ளிவிபரம் மெய்ப்பிக்கும்.

1827ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் சிங்கள மக்கள் அரைவிழுக்காடு வாழ்ந்தனர். 1881ஆம் ஆண்டு இந்த விழுக்காடு  நான்கு. 1921 ஆம் ஆண்டு விழுக்காடும்  நான்கு. நாடு சுதந்திரமடைந்த 1948ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்த சிங்கள மக்களின் விழுக்காடு ஒன்பது.

1957ஆம் ஆண்டு பண்டாரநாயக்கா செல்வநாயகம் ஒப்பந்தம் உருவாக்கப்பட்ட போது கிழக்கு மாகாணத்தில் சிங்கள மக்கள் வாழ்ந்த விழுக்காடு பதின்மூன்று.  1965 ஆம் ஆண்டு டட்லி  செல்வநாயகம் ஒப்பந்தம் ஏற்பட்டபோது கிழக்கு மாகாணத்தில் சிங்கள மக்களின் விழுக்காடு பத்தொன்பது.  இறுதியாக 1981 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் எடுக்கப்பட்ட மக்கள்தொகை புள்ளிவிபரங்களின்படி கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்த சிங்கள மக்களின் விழுக்காடு இருபத்தைந்து. இப்போது சிங்களவரின் விழுக்காடு 30  யை எட்டியிருக்கும் என நம்பலாம்.

இதே போல் மணல் ஆற்றிலும் இனச் சுத்திகரிப்பு நடந்தது. 1984 இல் மணல் ஆறு பிரதேசத்தில் வாழையடி வாழையாக வாழ்ந்து வந்த 42 சிற்றூர்களைச் (கொக்குத்தொடுவாய், வவுனியா வடக்கு கிராம சேவகர் பிரிவு, நாயாறு, குமுழமுனை)  சேர்ந்த 13,288 தமிழ்க் குடும்பங்கள் 48 மணித்தியாலங்களில் சிங்கள இராணுவம் வெளியேற்றியது. தலைக்கு 99 ஆண்டு குத்தகையில் 14 தமிழ் தொழிலதிபர்களுக்குக் கொடுத்த 1,400 ஏக்கர் நிலத்தின் உரிமம் இரத்து செய்யப்பட்டது.

மகிந்த இராசபக்சே சிங்கள அரசுகள் மேற்கொண்ட இந்த தமிழினச் சுத்திகரிப்பை வசதியாக மறந்து விட்டார்.
தமிழர் தரப்பு வரலாற்றில் இல்லாத ஒரு கொடிய ஆட்சிக்கு  முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறது.  போர் வெற்றியில் மூழ்கிப் போயிருக்கும்  அரசின் சிங்கள – பவுத்த மேலாதிக்க சிந்தனையை புலம்பெயர் தமிழர்கள்தான் பன்னாட்டு சமூகத்துக்கு அம்பலப்படுத்த வேண்டும்.  தமிழர்களது தன்னாட்சிக் கோரிக்கை வரலாற்றின் அடிப்படையில் நியாயமானது,  நீதியானது என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும்.


தமிழ் சிவில் சமூகத்தின் விண்ணப்பத்திற்கு கூட்டமைப்பின் பதில் என்ன?
கூட்டமைப்பின் கனடிய செயற்பாட்டாளர் நக்கீரன் பதில்!

[Wednesday, 2011-12-21 ]

தமிழர்கள் வாய்மூடி மௌனிகளாக தொடர்ந்தும் இருப்பதற்கு தயாராக இல்லை என்பதை தமிழ் சிவில் சமூகம் பகிரங்கப்படுத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழ் சிவில் சமூகத்தின் பகிரங்க விண்ணப்பம் இதனை உணர்த்தியிருக்கின்றது.

வாக்களித்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பிய மக்களின் சார்பில் தமிழ் சிவில் சமூகம் இந்த பகிரங்க விண்ணப்பத்தை விடுத்துள்ளதாகவே கொள்ள வேண்டும். கூட்டமைப்பினரை நோக்கி விளக்கம் கோரி பல விடயங்களை தமிழ் சிவில் சமூகம் முன்வைத்துள்ளது.

1. ஐ.நா. மனிதவுரிமை பேரவையின் கூட்டத் தொடர் நடந்து கொண்டிருந்த வேளை அரசாங்கத்திற்கெதிரான சர்வதேச அழுத்தம் அதிகரித்துக் கொண்டிருந்த காலப்பகுதியில் பேச்சுவார்த்தையில் மீளக் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்த தங்களது முடிவானது அரசாங்கத்தைக் காப்பாற்றும் விதத்தில் அமைந்து விட்டதாக நியாயமான விமர்சனம் முன்வைக்கப்படுகின்றது. இதற்கான விளக்கத்தை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டியது கூட்டமைப்பின் தார்மீகக் கடமையாகும்.

பதில் – ஒரு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போது அய்யன்னா மனிதவுரிமை சபையில் என்ன நடக்கிறது என்பதை பார்த்துக்கொண்டு பேச்சுவார்த்தைக்குப் போவதா? விடுவதா? என்பதை தீர்மானிக்க முடியாது. அப்படியிருந்தும் அய்யன்னா மனிதவுரிமை சபையில் செப்தெம்பர் 12 ஆம் நாள் சிறிலங்காவின் தூதுக்குழுவின் தலைவர் அமைச்சர் மகிந்த சமரசிங்கி நாட்டில் மும்மாரி பொழிகறிது என்று பேசியதை மறுத்து ததேகூ தலைவர் இரா. சம்பந்தன் அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து அல்லது மறுத்து ஒரு அறிக்கையை செப்தெம்பர் 14 ஆம் வெளியிட்டார். (http://www.humanrights.asia/news/forwarded-news/AHRC-FST-046-2011). இந்த அறிக்கையைப் பிடிக்காத அமைச்சர் ஜி.எல். பீரிஸ் ததேகூ பேச்சுவார்த்தைக் குழுவுக்கு தனது அதிருப்தியை அதாவது அரசின் நிலைப்பாட்டை ததேகூ எதிர்ப்பதாக ததேகூ குழுத் தலைவர் இரா. சம்பந்தரிடம் தெரிவித்தார். அப்படிப் பார்த்தால் நாள், நட்சத்திரம், இராகுகாலம், யமகண்டம் பார்த்துத்தான் ததேகூ பேச்சுவார்த்தைக்குப் போகவேண்டும் என்று தேவாராஜ் மற்றும் விண்ணபதாரர்கள் சொல்வார்கள் போல் தெரிகிறது! இது குழந்தைத்தனமான குற்றச்சாட்டு. தமிழ்க் காங்கிரசின் முகமூடியான தமதேமு முன்வைத்த குற்றச்சாட்டு. அதைத்தான் இப்போது இந்த தமிழ் சிவில் சமூகம் கிளிப்பிள்ளை போல் முன்வைத்திருக்கிறது.

2. வடக்கு கிழக்கு இணைப்பு, பொலிஸ், மற்றும் காணி அதிகாரங்கள் தொடர்பில் அரசாங்கம் விட்டுக் கொடுக்க மறுக்கின்றது. இவை மூன்றும் மறுக்கப்படின் தொடர்ந்தும் பேசுவதில் அர்த்தமில்லை. பேச்சுகளில் உண்மையில் என்ன நடக்கின்றது என்பது தொடர்பிலான விளக்கத்தை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டியது கூட்டமைப்பின் கடமை.

பதில் – தேவராஜ் ஞாயிறு வீரகேசரி பதிப்பின் ஆசிரியர் என நினைக்கிறேன். அவருக்குமா இதற்கான விடை தெரியாது? அல்லது தெரியாதென்று நடிக்கிறாரா? தொடர்ந்து பேசுவதில் அர்த்தமில்லை என்றால் தமிழர் தரப்பு பேச்சு வார்த்தையை முறித்துக் கொண்டு வெளியேற வேண்டுமா? அப்படி வி.புலிகள் பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டு (2006) வெளியேறியதை பன்னாட்டு சமூகம் எப்படிப் பார்த்தது என்பது ஆயர் இராயப்பு யோசேப்புக்குத் தெரியாமல் இருக்கலாம்,  ஒரு பிரபல செய்தித்தாளின் ஆசிரியருக்குமா தெரியாது? அல்லது நினைவுப் பஞ்சமா?

3.தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையிலான ஒற்றுமை என்பது தமிழ்த் தேசிய அரசியலுக்குத் துணை செய்வதாக வலிமை சேர்ப்பதாக இருக்க வேண்டும். அதனை அழிப்பதற்கான ஒற்றுமையில் பயன் ஏதும் இல்லை.

பதில் – யார் இல்லை என்றது? தமதேமு என்ற காளான் கட்சியை கஜேந்திரகுமார் தேர்தலுக்கு ஒரு மாதம் இருக்க உருவாக்கி தேர்தலில் போட்டியிட்டு தேசியம் சார்பான வாக்குகளைப் பிரித்தது தமிழ்த் தேசிய அரசியலுக்குத் துணை செய்வதாக வலிமை சேர்த்ததாகச் சொல்ல முடியுமா?

4. தேசியம், சுயநிர்ணயம் என்று கூறுவதன் மூலம் தனிநாட்டை கோருவதாக பொருள் கொள்ள வேண்டிய அவசியமில்லை. இதன் அடிப்படையிலான தீர்வுக்கு நாம் செல்லத் தவறுவோமேயாயின் நாம் உண்மையான சுயாட்சியை பெற்றுக் கொள்ள முடியாததாகிவிடும். இந்த அடிப்படைகளை ஏற்றுக் கொள்கின்ற தீர்வு மட்டுமே நீடித்து நிலைக்கக் கூடிய ஒரு அரசியல் தீர்வைத் தருவதோடு, இலங்கையில் இனங்களுக்கிடையில் நீடித்து நிலைக்கக் கூடிய நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும், இவை பேரம் பேசும் பொருட்களும் அல்ல.

பதில் – தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற கோட்பாட்டை விட்டுக் கொடுக்காமல்தான் ததேகூ அரசோடு பேசுகிறது. ஆனபடியால்தான் வட கிழக்கு இணைப்பை ஒரு முக்கிய பேசு பொருளாக பேச்சுவார்த்தை மேசையில் ததேகூ வைத்துள்ளது. வி.புலிகள் கூட தமிழீழத்தை விட்டுக் கொடுக்காமல் உள்ளக தன்னாட்சியை பேச்சு வார்த்தை மேசையில் வைத்ததை தேவராஜ் இவ்வளவு கெதியில் மறந்து விட்டாரா? இப்படி எடுத்ததுக்கு எல்லாம் மொ(மு)ட்டையில் மயிர் புடுங்கினால் எப்படி?

5.வடக்கு கிழக்கு இணைப்பு என்பது ஒரு போதும் விட்டுக் கொடுக்க முடியாதது. பேச்சுவார்த்தைக்கு உட்படுத்த முடியாதது. அழுத்தங்களுக்குப் பயந்து தமிழ்த் தேசியத்தின் ஒட்டுமொத்த அரசியல் எதிர்காலத்தை மீள முடியாத பாழுக்குள் தள்ளக் கூடாது.
பதில் – யார் விட்டுக் கொடுத்தார்கள்? சாம்பிராணி காட்டமுன் சன்னதம் கொண்டு ஆடுவதன் நோக்கம் என்ன?

6. மாகாண சபைத் தேர்தல்கள் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பிலே நாம் முன்னோக்கி நகர்வதற்கு பெரும் தடைக்கல்லாக அமையும்.

பதில் – இது கொலம்பஸ் கண்டுபிடிப்பு. சரி ஒரு வாதத்துக்கு அதை சரியென்று வைத்துக்கொண்டாலும் அது எப்படித் தடைக்கல்லாக முடியும்? ததேகூ போட்டியிடக் கூடாது ஆனால் சுயேட்சைகள் (?) போட்டி போடலாம்! அப்படியென்றால் ஆட்டோடு போபம் குட்டியோடு நட்பா? மாகாண சபை என்னதான் நோஞ்சலாக இருந்தாலும் அதற்கு சட்டப்படி சில அதிகாரங்கள் இருக்கிறது. ஆனபடியால்தான் அண்மையில் பட்டின, நாடு திட்டமிடல் சட்டத்தில் அரசு திருத்தம் கொண்டுவந்த போது உச்ச நீதிமன்றம் காணி அதிகாரம் மாகாணசபைக்கு இருப்பதால் மாகாண சபைகளின் ஒப்புதல் வேண்டும் என்று தீர்ப்பு அளித்திருக்கிறது. Only last week the Supreme Court held that the Bill introduced by the Government to amend the Urban Country Planning Ordinance to enable authorities concerned to declare land areas as conservation areas, protected areas, architectural and historical areas and sacred areas is invalid as the bill was about a matter (land) set out in the Provincial Council list and shall not become law unless it had been referred by the President to EVERY PC. (http://www.lakbimanews.lk/index.php?)

7.மாகாண சபைத் தேர்தலுக்கான அறிவிப்பு பொருத்தமற்றதென கூட்டமைப்பு நிலைப்பாடாக பேச்சுவார்த்தை மேசையில் சர்வதேசத்திடம் வலியுறுத்தும் தார்மீகக் கடப்பாடு கூட்டமைப்புக்கு உள்ளது.

பதில் – ஓகோ! இதற்கு மட்டும் பன்னாட்டு உதவி வேண்டும்? அரசோடு பேசுங்கள் என்று ததேகூ பன்னாட்டு சமூகம் சொன்னால் ததேகூ அதனைத் தள்ளிவிட வேண்டும்? தலை விழுந்தால் எனக்கு வெற்றி பூவிழுந்தால் உனக்குத் தோல்வி!

8. கூட்டமைப்பு இன்னுமொரு தேர்தலில் தமிழ்மக்களின் ஆணையைப் பெற்றுத் தான் தமிழ் மக்களின் அபிலாஷைகளை அரசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும் அறிவிக்க வேண்டுமென்பதில்லை. இதனை மீறி தேர்தலை அரசாங்கம் நடத்துமாயின் கூட்டமைப்பு பங்கெடுக்கக் கூடாது. மாற்று உபாயங்கள் குறித்து மக்களோடு கலந்தாலோசிக்க வேண்டும்.

பதில் – அப்படியென்றால் 1977 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தவிகூ கிடைத்த ஆணை போதுமே? பின் எதற்காக அடுத்து வந்த தேர்தலில் தமிழ்க் காங்கிரஸ் உட்பட பல கட்சிகள் போட்டியிட்டன? அதெல்லாம் பிழை என்று தமிழ் சிவில் சமூகம் சொல்கிறதா? அதற்கு தேவராஜ் தலையாட்டுகிறாரா?

9. தேர்தல் அரசியலுக்கப்பால் ஓர் தேசிய அரசியல் விடுதலை இயக்கமாக செயற்பட வேண்டுமென்ற நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட ஓர் இயக்கமாகவே தமிழ் மக்கள் கூட்டமைப்பைக் கருதுகின்றனர். இதன் அடிப்படையிலேயே சகல தேர்தல்களிலும் மக்கள் கூட்டமைப்புக்கு ஆணையை வழங்கி வருகிறார்கள்.

பதில் – யார் இல்லை என்கிறார்கள்? ஆனால் ததேகூ வாக்களித்த தமிழ்மக்கள் சார்பாக பேச நீங்கள் யார் என்று சொல்லமுடியுமா?
10. 75 பேர் கையெழுத்திட்டு கூட்டமைப்புக்கு அனுப்பி வைத்துள்ள மேற்படி விண்ணப்பம் கூட்டமைப்பின் கண்களைத் திறந்தாக வேண்டும்.

பதில் – அப்படி வாரும் பிள்ளாய்! இந்த விண்ணப்பத்தில் யாரும் கெயெழுத்து இடவில்லை. வெளிமாவட்டங்களை விட்டாலும் யாழ்ப்பாண மாவட்ட விண்ணப்பதாரார்கள் கூட ஏன்  கையெழுத்துப் போடவில்லை? முல்லைத்தீவு மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம் தமிழர் தாயகத்துக்குள் வரவில்லையா? சரி போகட்டும் அவற்றை விட்டு விடுவோம். இப்படிச் சொன்னால் நக்கீரன் உள்ளடகத்தைப் பாராமல் உருவத்தைப் பார்க்கிறார் என்று குற்றம் சாட்ட ஆட்கள் இருக்கிறார்கள். இருந்தும் அந்த கையொப்பகாரர்களில் பலர் வண பிதாக்கள். பலர் வைத்திய கலாநிதிகள். சிலர் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள். இவர்கள் எல்லோரும் தாமுண்டு தமது தொழில் உண்டு என்று இருப்பவர்கள். அது சரி. ததேகூ கண்ணை மூடிக்கொண்டு இருப்பதாக தேவராஜ்க்கு யார் சொன்னது? சம்பந்தன் என்ன காலுக்கு மேல் காலைப் போட்டுக் கொண்டு சாய்மனைக் கதிரையில் ஓய்வாகப் படுத்து இருக்கிறாரா?

11. ஒரு பாரிய வரலாற்றுக் கடமையை தமிழ் மக்களின் சார்பில் சுமந்துள்ள கூட்டமைப்புக்கு தமிழ் சிவில் சமூகத்தின் இந்த விண்ணப்பம் ஒரு “”துடுப்பாக” அமையும் என்பதில் ஐயமில்லை. இதுவரை தனித்து நின்ற கூட்டமைப்பு இது போன்ற பல்வேறு தமிழ் சிவில் சமூகத்துடன் கைகோர்த்துப் பயணிக்க முன்வர வேண்டும்.

பதில் – ஆகா அருமையான யோசனை. கடந்த தேர்தலில் ததேகூ வாக்களித்த பொதுமக்கள், ஏழை பாளைகள், தொழிலாளர்கள், கமக்காரர்கள் உங்களுடைய கணிப்பில் ஒரு பொருட்டே இல்லை!

11. அரசாங்கத் தரப்பு கூட்டமைப்புக்கு நெருக்கடிகளை கொடுத்துக் கொண்டிருக்கின்ற காலம் இது. வெற்றியின் மமதையிலான வார்த்தைகள் இன்னும் அரசாங்கத் தரப்பில் முடங்கிப் போகவும் இல்லை. முற்றுப் பெறவும் இல்லை. அரசாங்கத் தரப்பினரின் நாடாளுமன்ற உரைகள் இதனையே சுட்டிக்காட்டுகின்றன. உண்மையில் கூட்டமைப்புதான் அரசாங்கத்திற்கு நெருக்கடியைக் கொடுக்கும் சக்தி படைத்ததாக உள்ளது. ஏனெனில் அரசாங்கத்தின் பேச்சுத் துணைக்கு” கூட்டமைப்பு தான் தேவைப்படுகின்றது. சர்வதேச நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு அரசாங்கம் கூட்டமைப்புடன் பேசியாக வேண்டும். அது மாத்திரமல்ல கடந்த ஒருவருட காலமாக கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தும் அரசாங்கம் 17 சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்கு மேல் பேசியும் தீர்வு நோக்கி ஒரு அங்குலம் கூட நகர முடியாத நிலையே காணப்படுகின்றது.

ஆனால், கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் “சாட்சியங்கள் இல்லாத யுத்தமொன்று நடைபெற்றுள்ள நிலையில் உண்மைகள் கண்டறியப்பட்டால் மட்டுமே சரியான பாடங்களை கற்றுக் கொள்ள முடிவதுடன் நேர்மையான நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த முடியும்” என்ற உரையையடுத்து அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் கடும் தொனியில் உரையாற்றியுள்ளார். “உள்நாட்டு விவகாரங்களில் சர்வதேச விசாரணை மற்றும் ஐ.நா. பிரசன்னம் போன்ற விடயங்களை வரவேற்பதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுகளை பயன்பாடுடையதாக முன்னெடுக்க விரும்புகின்றதா அல்லது அதுவாக முறித்துக் கொள்ள முயற்சிக்கின்றதா? எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

“விசாரணைகளில் நம்பிக்கையில்லையென்றும் சர்வதேச விசாரணை தேவையென்றும்” சம்பந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
“அதை ஏற்க முடியாது. சர்வதேச விசாரணைகள் எமக்கு அவசியமில்லை. பிற நாடுகளை உள்நாட்டு விவகாரங்களில் தலையிட அனுமதிக்கமாட்டோம். இந்த நாட்டுப் பிரச்சினையை சர்வதேச பொலிஸாருக்கு கையளிக்க நாம் தயாரில்லை. சர்வதேச பொலிஸ் எமக்கு அவசியமில்லை” என்றும் தெரிவித்துள்ளார் அமைச்சர் பீரிஸ்.

ஒரு வருட பேச்சுவார்த்தையில் ஒன்றுமில்லை என்று சம்பந்தன் அவர்கள் நாடாளுமன்றத்தில் பகிரங்கமாகப் போட்டுடைத்தது அரசாங்கத் தரப்புக்கு ஆத்திரத்தையும் எரிச்சலையும் ஊட்டியிருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை.
பதில் – மிக மிக அருமை!

12. இன விவகாரத் தீர்வுக்கு 13 ஐத் தருவோம். இதற்குமப்பால் 13 பிளஸ் தருவோம் என்று கூறிய அரசாங்கம் தான் இன்று 13 க்கே தயாராக இல்லையென்பதை ஒரு வருடமாக உணர்த்தி வருகின்றது. இதற்குப் பிறகும் பேச்சுவார்த்தை தேவையா? என்று சிவில் சமூகம் கேள்வி எழுப்புவதில் நியாயம் இல்லாமல் இல்லை.

பதில் – மெத்தச் சரி. ததேகூ பேச்சுவார்த்தையை முடி(றி)த்துக் கொண்டு மக்களை ஒன்று திரட்டி ஒரு சாத்வீக போராட்டத்தில் களம் இறங்கினால் இந்த விண்ணப்பத்தில் கையெழுத்து இட்டவர்கள் எத்தனை பேர் அதில் சேர்ந்து கொள்வார்கள்? வைத்திய கலாநிதிகள்? ஆயர் இராயப்பு யோசேப் அடிகளார்?

13. இந்த ஒரு நிலை உருவாகும் என்பதை எதிர்பார்த்தே இப்பத்தியில் தொடர்ச்சியாக கூட்டமைப்பு அரசியல் தீர்வை முன்வைத்து பேச்சுவார்த்தை மேசைக்கு செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தோம். தற்பொழுது ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தெரிவுக் குழுவில் பங்குபற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். கூட்டமைப்புடன் அரசாங்கம் ஒருவருடமாக பேசியும் ஒன்றும் வெளிவரவில்லை.

பதில் – காணி அதிகாரம் தேவையில்லை, காவல்துறை அதிகாரம் தேவையில்லை என்று சொல்லும் இபிடிபி கட்சியோடு பின் எதைப்பற்றிப் பேசுவது?

13.இந்நிலையில் நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் ஏதும் கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஊட்டுமளவிற்கு அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமையவில்லை. அமைச்சரைப் பொறுத்து அரசாங்கத்தில் ஓர் அங்கமாக இருப்பவர். தீர்வு தொடர்பாக அரசாங்கத்துடன் பேசி வருவதாகவும் செய்திகள் வெளியாகின. அந்த பெறுபேறுகள் குறித்தும் பேச்சுவார்த்தைகள் எந்த மட்டத்தில் உள்ளன என்பது குறித்தும் அவர் பகிரங்கப்படுத்த வேண்டும். இது தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதாக அமையும். அமைச்சர் அவர்கள் கூறுவது போல் தமிழ்த் தலைமைகள் பல சந்தர்ப்பங்களைத் தவறவிட்டன என்பது உண்மையே. அரசுடன் இணைந்திருக்கும் அவருக்கு தீர்வு நோக்கிய காய்களை நகர்த்துவதற்கும் அதிக சந்தர்ப்பங்கள் உள்ளன. இந்த செல்வாக்கை பயன்படுத்தி தீர்வு நோக்கி பயணத்தை அவர் வெற்றிகரமாக முன்னெடுக்க வேண்டும். அந்த வெற்றியே ஏனைய தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைவதிலும் தங்கியுள்ளது.
வி.தேவராஜ்

பதில் – டக்லஸ் தேவானந்தா ஒரு அடிமை. 1994 தொடக்கம் ஆள்வோரது காலணியை மாறி மாறி நக்கித் துடைத்துத் துப்பரவாக்கி வருபவர். அவரிடம் போய் “அமைச்சர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி தீர்வு நோக்கிய பயணத்தை அவர் வெற்றிகரமாக முன்னெடுக்க வேண்டும்”என்று சொல்கிறீர்களே? இது உங்களுக்கே நியாயமாகப் படுகிறதா? இது நல்ல நகைச்சுவையாக உங்களுக்குத் தெரியவில்லை? இந்த ஆண்டின் நகைச்சுவை மனனன் விருதை உங்களுக்குத்தான் கொடுக்க வேண்டும். ஏனென்றால் கேழ்வரகில் நெய் வடிகிறதென்றால் கேட்பவனுக்கு மதியெங்கே?

முடிவாக ததேகூ நன்றாக விமர்சியுங்கள். வேண்டுமட்டும் இடித்துரையுங்கள். இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இல்லாமலும் கெட்டுப் போவான் என்று வள்ளுவர் இடித்துரைக்கிறார். அதாவது கடிந்து அறிவுரை கூறும் பெரியாரின் துணை இல்லாத அரசன் தன்னைக் கெடுக்கும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவானாம்.

எனவே ததேகூ இடித்துச் சொல்லுங்கள். ஆனால் அரசியல் உள்நோக்கத்தோடு அதன் மீது விமரிசனம் என்ற போர்வையில் சேறு பூசவேண்டாம். கால்தடம் போட வேண்டாம். குறுக்குச் சால் ஓட்ட வேண்டாம்.

இந்த விண்ணப்பத்துக்குப் பின்னால் நிற்பவர்கள் மாமரத்துக்குப் பின்னால் ஒளிந்திருந்து அம்புவிட்டு வாலியைக் கொன்ற கோழை இராமனைப் போன்றவர்கள்.

ஒரு நல்ல செய்தி. ததேகூ விளக்கம் விரைவில் வரும். அதுவரை பொறுமை காக்க. காக்கக் காக்க கனகவேல் காக்க!

நக்கீரன்
http://www.seithy.com./breifArticle.php?newsID=53419&category=Article&language=tamil


Sri Lanka is a “democracy” in name only

V.Thangavelu

Anyone who surveys the politico-economic scenario of Sri Lanka will be alarmed at President Rajapakse and his siblings iron grip on power. Rajapakse brothers exercise control over every aspect of peoples life today.

Despite the end of the country’s ethnic conflict in 2009, defence spending hit LKR 230 billion (US$ 2.1 billion) for 2012, up from 215 billion this year. Sri Lanka’s 2012 budget reveals further expansion of the security forces and their families. Measures aimed at the military included a one-off cash grant of 100,000 rupees, to any military or police officer who parented a third child. This payment is clearly intended to boost the Sinhala population.

Out of  the 230 billion rupees allocated to defence, 203 billion or 88 percent will be spent on salaries, food and uniforms.
The Rajapakse siblings including the President control the Ministry of Finance and Planning, Ports and Highways, Civil Aviation, Economic Development, and Defence and Urban Development. The total allocation for these ministries is over a third of the Budget (39%). Furthermore, given the considerable centralization of powers the Rajapakse brothers will exercise control over most other ministries as well in addition to the lion’s share of the Budget.

A critical reading of the budget reveals the mounting powers of Gotabhaya Rajapakse who is virtually the Minister for Defence. He is the real power behind the throne although holding supposedly an innocuous civilian post. Politics is taboo to civil servants but Gotabhaya is a notable exception. He acts like a super politician.

It is, therefore, little wonder he was invited to deliver the key note speech at the Inaugural National Conference on Reconciliation: “The Way Forward for Post Conflict Sri Lanka” by G.L. Peiris, Minister of Foreign Affairs and an ace acrobatic in politics.

Gotabhaya Rajapakse among other things claimed “Sri Lanka today is not only one of the most secure and stable countries in Asia but in the entire world.” To drive his point he cited the Humanitarian Operation concluded in May, 2009. “The return of peace, the restoration of freedom and democracy, and the prospect of a resurgent economy have all been made possible by the success of the Humanitarian Operation that put an end to the terrorist activities of the LTTE” he bragged.

One may rightly disagree with him, but you have to marvel at the audacity with which he makes such bombastic claims. The UN experts panel appointed by the Secretary-General Ban Ki-moon to advise him on “issues of accountability” from the end of Sri Lanka’s three decades old war.

The U.N.-appointed panel has found “credible allegations” that tens of thousands of civilians were killed and war crimes were committed in the final months of Sri Lanka’s war with the Liberation Tigers of Tamil Eelam, and urged the investigation and prosecution of those responsible. “The panel found credible allegations, which if proven, indicate that a wide range of serious violations of international humanitarian law and international human rights law were committed both by the Government of Sri Lanka and the LTTE, some of which would amount to war crimes.”

Beside the Panel Sri Lankan government faces multiple allegations, primarily from international rights groups and Tamil Diaspora, that its troops committed war crimes and were responsible for tens of thousands of civilian deaths.
Ch.4 produced damning video evidence that surrendered or captured LTTE cadres were stripped naked, blindfolded and shot from behind at point blank range by Sinhalese soldiers. UN experts confirmed that the video was authentic, but the Sri Lankan government, notably Gotabhaya Rajapakse dismissed Ch.4 video as “total fabrication.” The latest to join the chorus is the LLRC which also says the video is a “total fabrication”. On what grounds only god knows.

There are irrefutable video, photographic, satellite images, oral evidence to indict President Rajapakse and his commanders of war crimes, though the Sri Lankan government is in a state of total denial. After May, 2009 Sri Lanka faced multiple allegations, primarily from rights groups like AI, HRW, ICG and other organisations, that its troops committed war crimes and were responsible for tens of thousands of civilian deaths. But, by deftly playing Western critics off China and India, and the Asian giants against each other, it forestalled any action and engineered a post-war resolution from the U.N. Human Rights Council praising its victory over “terrorism.” The government then and now rejected the charges as baseless, and argues it had every right to fight a ruthless terrorist group the United Nations, United States, and 30 other countries had put on their terrorism lists.

Now let us take a closer look at the tall claims by Gotabhaya Rajapakse that ” the countrymen irrespective of ethnicity, religion or political affiliation, are reaping the rewards of peace, and that freedom of movement, restoration of democracy and improvement of the country’s economy are significant achievements with the return of peace. Perhaps the most heartening outcome of the dawn of peace has been the freedom of movement that all Sri Lankans finally enjoy.”

Richard Armitege is a former US Deputy Secretary of State. He is no friend of the LTTE or the Tamil people. At the conference held in Tokyo in April 2003 but boycotted by the LTTE Armistice demanded that LTTE renounce violence – an undemocratic and unrealistic suggestion. He also pledged US military support to the Sri Lankan government in its fight against the LTTE.
Recently, Richard Armitege participated in a panel meeting conducted at the release of the report held in an undisclosed location that discussed the peace process and the evaluation report. Apart from Messrs Armitage, Solheim and Narayan Swamy, the other speakers were former Minister and government peace negotiator Milinda Moragoda, Prof. Gunnar M. Sørbø, (team leader for the evaluation), Dr Jonathan Goodhand (Reader in Conflict and Development Studies, SOAS and deputy team leader for the evaluation) and Dr Suthaharan Nadarajah (lecturer with Centre for International Studies and Diplomacy, SOAS – who was not involved in the evaluation). The panel was chaired by Ms. Frances Harrison, Head of News at Amnesty International and former senior BBC correspondent.

Mr. Armitege told the meeting “Much to my dismay the government of Sri Lanka is still caught up in a CHAUVANISTIC attitude” a charge the Tamils have continuously levelled against all past Sinhala governments. Continuing Mr. Armitege said “I don’t think they have been far sighted enough in their approach to the North and East. There has been a somewhat lessening of violence there, somewhat lessening of the abductions and things of this nature, but not sufficient. From the US point of view we are quite dismayed at the lack of progress in HUMAN FREEDOMS, HUMAN RIGHTS etc, and I made that view known [to SL President Rajapakse].

“But what to do about it is the question. [Firstly] the international community is generally coalesced around the fact that the north and the east particularly NEED PROTECTION, and the government of Sri Lanka has to move in that direction. … That is the united message the international community gives.

“Second, I don’t think President Rajapakse is going to be widely welcomed internationally – across the board – until there is some movement. Maybe that’s the wrong strategy, but that’s the way things are going.”

As a former diplomat Mr.Armitege can say only this much in public. Nonetheless, it is a damning indictment against the Sri Lankan government whatever Gotabhaya Rajapakse’s claims to the restoration of peace, freedom and democracy.
Mr. Gibson Bateman, an international consultant based in New York City, writing under the caption “Fear and Loathing in Post-War Sri Lanka” (The Mantle – November 11, 2011) has criticised the Sri Lankan government record on human rights and accuses the regime of seeing everything through the prism of “national security.” Here are extracts from his article.
“Today, the Sri Lankan government refuses to mention human rights. As such, the regime sees everything through the prism of “national security.” Talking about minority rights, human rights, documenting human rights violations (both past and present), and educating Sri Lankans about the basic principles of human rights are not priorities for President Rajapakse and the United People’s Freedom Alliance.

“Even though the war ended, the country’s North and East remain HEAVILY MILITARIZED. Because of the war, many families in the North are now female-headed households, making some families especially vulnerable; many women now have to worry about their more traditional domestic duties while also figuring out how to earn enough money to provide for their families. Furthermore, with development projects in the North currently focused on infrastructure (like road-building), few jobs are even suitable for women. Reports of violence against women, sexual harassment, and rape are not uncommon. In many cases, Sri Lankan soldiers are the alleged perpetrators.

“Aside from all of this, the government is building a number of war memorials along the A-9 road, which runs from Vavuniya to Jaffna in Northern Sri Lanka. This is in addition to the large number of Buddhist temples, which are also being built in the North. It is unclear why Northern Sri Lanka (where the vast majority of people are Tamil and the predominant religion is Hindu), would need a large number of Buddhist temples.

“Few countries have more history with emergency laws than Sri Lanka. The country’s experience with such decrees goes back to 1947 when, during the final days of British rule, the fading colonial power passed the Pubic Security Ordinance (P.S.O.) in an attempt to suppress political dissent on the island. Since that time, the P.S.O. has given the president the authority to announce state of emergency whenever he sees fit. Over the years, some presidents have added to the original laws, widening the scope of executive power. In the event of a conflict, Emergency Regulations, which are passed by the president without need of parliamentary approval, supersede other existing laws.

“Sri Lanka has been governed under Emergency Regulations for most of the past thirty years. The emergency laws facilitated the establishment of military checkpoints throughout the country, where governmental authorities were given sweeping powers to search and detain LTTE suspects. A suspect could remain in a detention center for up to 21 months without appearing in a court of law. The laws even allowed for people to be displaced from their land.”
According to Human Rights Watch “Sri Lanka’s Emergency Regulations granted the authorities sweeping powers of search, arrest, and detention, which have led to serious human rights violations, including arbitrary detentions, torture, and enforced disappearances. Thousands of people have been detained over the years in official and unofficial detention centers under emergency regulations, many without charge for years, in violation of international law.”

Recently, these regulations were lifted, but they were simultaneously replaced with regulations under the equally draconian piece of legislation styled ” Prevention of Anti Terrorism Act (P.T.A).” It was a cosmetic change to hoodwink the international community.

Basically, the P.T.A. enacted in 1979 and made permanent in 1982 shackles citizens’ civil and political freedoms under the charade of fighting terrorism and combating political violence. The important thing to remember is that the Emergency Regulations and the Prevention of Terrorism Act have given the government two separate (although similar) legal frameworks to justify systematic human rights violations perpetrated against Tamils (and sometimes Sinhalese) for decades.
In Mullaitheevu and many other places in the North, Tamils are not allowed to enter the sea, while their Sinhala counterparts from the south are allowed to fish in their areas without any restrictions. Tamil people say that all petitions to government services and establishments have to be given in Sinhala only since 2009. In the heart of Kilinochchi town, the erstwhile administrative capital of Tamil rebels, streets sport Sinhalese names such as Mahinda Rajapakse Mawatha, and Aluth mawatte (The new road).

Three roads close to the A9 highway in Kanakarayankulam have been given Sinhala names – Kosala Perera road, Anura Perera road, and Rev.Yatiravana Vimala Thero Street. The first two names are those of Sinhalese soldiers and the last one is the name of a Buddhist monk.

Brad Adams of Human Rights watch has noted that the end of the state of emergency is insignificant if the government enjoys the same powers it had during the conflict. Adams further asserts that, “The government should repeal all its abusive detention laws and make all laws and regulations related to detention public, instead of engaging in token measures for PR purposes.”
One of the pillars of democracy is media freedom. But Rajapakse siblings have succeeded in muzzling the media to the extent about 34 journalists (31 Tamils) have been killed since 1995. An equal number has bolted Gotabhaya Rajapakse’s democratic and peaceful paradise and sought asylum in the Western countries. The dastardly killing of Lasantha Wickrematunge, editor Sunday Leader, in broad day light and in the centre of Colombo remain unsolved. The attack on Deputy Editor of The Nation newspaper Keith Noyahr, the assault on journalist Namal Perera together with his friend Mahendra Ratnaweera on a busy highway on June 30, 2008, knifing of former Rivira Editor Upali Tennakoon remain unsolved. In August 2009, eight months after Wickrematunge’s murder, Tamil journalist Jayaprakash Tissainayagam was sentenced to 20 years in prison found guilty of aiding terrorism in two of his articles he wrote during the time of CFA.

The wife of Navy Ruwan a gang leader abducted recently claims she overhead one of the abductors in the vehicle saying that he needs to take a call to “Gotabhaya Sir,” in an apparent reference to Defence Secretary Gotabhaya Rajapakse. Navy Ruwan was named by media reports as a close associate of Defence Ministry Advisor Duminda Silva MP who shot and killed Bharatha Lakshman Premachndra on 08, October 2011.

Journalist and cartoonist Prageeth Eknaligoda  who was critical of the government disappeared on 24th January 2010 is an example where the right to life has become a huge joke in Sri Lanka.

Under-world leader Dematagoda Chaminda has told the CID recently that a group of persons led by him had dumped the body of journalist Prageeth Eknaligoda in the sea off the Negombo lagoon. Chaminda had said that he was not aware of whose body he had dumped in the sea until that evening when the boss (Duminda Silva) had said it was a web journalist during a party at Jaic Hilton and that he had later found out that the dead person was Prageeth Eknaligoda.

Dematagoda Chaminda had observed that several bodies had been dumped in the sea on the boss’ orders. The bodies had been wrapped in gunny bags and tied to heavy granite stones. He had added that on every occasion when the bodies were dumped, the boss had told him that they were orders by the big boss (Defence Secretary).

The former Attorney General Mohanm Peiris, however, speaking during the Convention Against Torture in Geneva said that information has been received that Prageeth Eknaligoda was living in a foreign country after receiving political asylum. Only Gotabhaya Rajapakse under whom the army and police intelligence agencies operate knows the truth of all disappearances and killings!

President Rajapakse and his brothers are fooling no one. Sri Lanka is not China and if the government continues to ignore human rights and to repress both Tamils and Sinhalese, it is unlikely as pointed out by Mr.Armitege that the international community will look the other way. Sri Lanka will not placate the West with facile sleight of hand and it is naïve for Gotabhaya Rajapakse to think otherwise.

In short, genuine peace, democracy and freedom for Tamil people in Sri Lanka remains illusory. Sri Lanka is a “democracy” in name only. In practice, it has been a majoritarian Sinhala hegemonic state based on language, race and religion after 1956 to date. Mahinda Rajapakse openly declared that his government elected by the majority Sinhala – Buddhist voters will govern according to their wishes only.


வட மாகாண சபைத் தேர்தலை புறக்கணிப்பது  அரசியல் தற்கொலைக்குச்  சமமானது!

நக்கீரன்

தமிழ்த் தேசியத்தினது வாழ்விலும் எதிர்காலத்திலும் அக்கறையுள்ள தமிழ் சிவில் சமூகம் என்ற அலங்காரப் பெயரில் ஒரு  விண்ணப்பம் வெளிவந்துள்ளது. அதில் பல பெயர்கள் காணப்படுகின்றன.  பெரும்பான்மையினர்  வண. பிதாக்கள் மற்றும் வைத்திய கலாநிதிகளது பெயர்களாகும்.  எது எப்படியோ தமிழ் மக்களது அரசியல் தீர்வு பற்றி இந்த தமிழ் சிவில் சமூகம் காட்டும் கரிசனை வரவேற்கத்தக்கது.

ஆனால் நாம்  அறிந்தவரையில் இந்த விண்ணப்பத்தில் உள்ள பெயர்கள் தட்டச்சுச் செய்யப்பட்டுள்ளன.  அதில் யாரும் கையெழுத்து இடவில்லை. தொழிற்சங்கம் சார்பான கையொப்பகாரர்கள் இபிடிபி கட்சியின் ஆதரவு தொழிற்சங்கங்களைச் சார்ந்தவர்கள். இன்னும் ஒரு தொகுதி கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு வேண்டியவர்கள்.

குறிப்பாக முதல்  பெயர்   மன்னார் மறைவட்ட பேராயர் இராயப்பு யோசேப்  ஒப்பீட்டளவில் ஏனைய கத்தோலிக்க பேராயர்களைவிட தமிழ்மக்களது உரிமைகளுக்கு அவ்வப்போது குரல் கொடுத்து வந்தவர்.  அதே சமயம் போர் முடிந்த பின்னர் ஆட்சித்தலைவர் மகிந்த இராசபக்சே அவர்களை பல தடவை அலரிமாளிகையில் சந்தித்து தேநீர் அருந்தி அளவளாவி வருபவர்.
ஆகவே இந்த விண்ணப்பத்தை படிப்பவர்களுக்கு அதன் பின்னால்  வேறு வேறு கைகள்  இருப்பது தெள்ளெனப் புலனாகும். ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. “The voice is Jacob’s voice, but the hands are the hands of Esau” (Genesis 27:22). அதாவது “குரல் யாக்கோப்பினுடையது ஆனால் கைகள் ஏசுவினது.” இந்தப் பழமொழி இந்த விண்ணப்பத்துக்கு முற்றிலும் பொருத்தமாக உள்ளது.

இது கஜேந்திரகுமாரின் மறுவாசிப்பு

(1) “புதுடில்லியில் கடந்த ஓகஸ்ட் 23 மற்றும் 24  திகதிகளில் இந்திய காங்கிரஸ் உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் அவர்களால் கூட்டப்பட்ட பல்-தமிழ் கட்சி மகாநாட்டில் ‘தேசியம்’ ‘சுயநிர்ணயம்’ என்ற வார்த்தைப் பிரயோகங்கள் உள்ளடங்கிய தீர்மானமொன்றில் ததேகூ சார்பில் பங்குபற்றிய அதன் தொடக்க கால கட்சிகளின் உறுப்பினர்கள் கையெழுத்திட மறுத்தமை எமக்குப் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. கருத்தொருமிப்பு ஏற்படாததால் கையெழுத்திடவில்லை என்ற விளக்கம் எந்த வகையிலும் ஏற்புடைத்தன்று”  என்பது சாட்சாத் திருவாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுடைய  குரல்.  அவரது மறுவாசிப்பு.

கடந்த  தேர்தலில்  தமிழ்க் காங்கிரசை மக்களிடம் விலைப்படுத்த முடியாது என்று தெரிந்து கொண்ட கஜேந்திரகுமார் தமிழ் மக்கள் தேசிய முன்னணி என்றவொரு  காளான் கட்சியை அவசர அவசரமாக உருவாக்கினார். அந்தக் கட்சி  சார்பில் தேர்தலில் குதித்த அவரும் அவரது கட்சி வேட்பாளர்களும் கட்டுக்காசை இழந்தார்கள்.

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி 6,363 வாக்குகளை மட்டும்  (6.28 விழுக்காடு) பெற்று 4 ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. திருகோணமலையில் அந்தக் கட்சிக்குக் கிடைத்த வாக்குகள் 1,181 மட்டுமே.  வேட்பாளர்கள் கிடைக்காததால் மட்டக்களப்பு, வன்னி, முல்லைத்தீவு, அம்பாரை தேர்தல் மாவட்டங்களில் அந்தக் கட்சி போட்டியிடாமல் வெற்றிகரமாகப் பின்வாங்கி விட்டது.

இப்போது தமிழ்மக்கள் முன்னணியும்  செல்லாக்காசாகப் போய்விட்டதால் தமிழ் சிவில் சமூகம் என்ற முகமூடியை அணிந்து கொண்டு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளிக்கிட்டுள்ளார்.

கொக்கு தலையில் வெண்ணெய் வைத்த கதை

2. பேராயர் இராயப்பு யோசேப் தலைமையிலான இந்த சிவில் சமூகம் ஒரு விசித்திரமான, வேடிக்கையான, நகைப்புக்கிடமான வாதம் ஒன்றை முன்வைத்துள்ளது.  மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக எதிர்வரும் 2012 இல் வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெறவிருப்பதாகவும் அதனை  ததேகூ  சந்திக்குமானால் அதில் அமோக வெற்றி பெறும் என்பதில் தமக்கு அய்யமில்லை என்றும்  ஆனால் அதனையே அரசும்  விரும்புகின்றது என்பதில் உள்ள சூட்சுமத்தை விளங்கிக் கொள்ளவேண்டும் என்றும் ததேகூ யை  மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவைத்து அத்தேர்தலில அது வெற்றி பெறுவதையும் விரும்புகின்றதென்றால் அதற்கான உள்நோக்கம் பூடகமானதல்ல என்றும் மாகாண சபை முறைமையினை தழிழர்கள் ஒரு தீர்வாக ஏற்றுக் கொண்டுவிட்டதாகப்பிரச்சாரம் செய்வதற்காகவே அரசு இதனை முயற்சிக்கின்றது என்ற பெரிய அரசியல் கண்டுபிடிப்பை இந்த சிவில் சமூகம் கண்டுபிடித்துள்ளது.  கொக்கைப் பிடிக்க அதன்  தலையில் வெண்ணெய் வைத்து அது வெய்யிலுக்கு உருகி கண்ணை மறைக்கும் போது அபக்கென்று பிடிக்கலாம் என்று சொன்ன புத்திசாலியின் யோசனைக்கும் இந்த சிவில் சமூகத்தின் யோசனைக்கும் வேற்றுமையே கிடையாது! அப்படிப் பார்க்கப் போனால் 1983 இயற்றப்பட்ட 6 ஆவது சட்ட திருத்தத்திற்கும் 1987 இல் இயற்றப்பட்ட 13 ஆவது சட்ட திருத்தத்திற்கும் பின்னரும் நாடாளுமன்ற தேர்தலில் ததேகூ பங்குபற்றியது  சிறீலங்காவின் ஒற்றையாட்சி யாப்பை ஒப்புக்கொண்டதற்குச் சமமாகும்!  உண்மையில் சிங்கள அரசுக்கு  வட மாகாண சபைத் தேர்தலில் ததேகூ யை வெற்றிபெற வைப்பதுதான்  விருப்பம் என்றால் எதற்காக அந்த சபைக்கான தேர்தலை தள்ளி வைத்துக் கொண்டுபோகிறது?  தேர்தலை உடனடியாக வைத்து தமிழர்கள் 13 ஆவது சட்ட திருத்தத்தை தமேகூ ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் என்று பரப்புரை செய்யலாமே?

உண்மை என்னவென்றால் சிங்கள அரசுக்கு அப்படியான எண்ணம் இல்லை. அப்படி நினைப்பது குழந்தைப்பிள்ளைத் தனமானது.  மகிந்த இராசபக்சே தேர்தலை தள்ளிப் போடுவதற்குக் காரணம் இன்னும் சில “அபிவிருத்தித் திட்டங்களை”  செய்து முடித்துவிட்டு அதன் அடிப்படையில் தேர்தல் பரப்புரை செய்து வட மாகாண சபையைக்  கைப்பற்றலாம் என  மகிந்த இராசபக்சே  கணக்குப் போடுகிறார்.   அதுதான் உண்மை. 2012 இல் தேர்தல் இல்லை என்று மகிந்த இராசபக்சே நாடாளுமன்றத்தில் கூறியிருப்பது அதனை உறுதி செய்கிறது.

வெளியார் தலையீடு  இல்லாமல் இனச் சிக்கலுக்கு தீர்வு காணலாம் என்பது பகற்கனவு

3. இந்த தமிழ் சிவிலியன் சமூகம் தேசியம்,  சுயநிர்ணயம் என்ற அடிப்படைகளை ஏற்றுக்கொள்ளாத உள்ளடக்காத எந்த ஒரு அரசியல் தீர்விலும் பலன் இல்லை என்றும் மாறாக இந்த அடிப்படைகளை ஏற்றுக் கொள்கின்ற தீர்வுமட்டுமே நீடித்து நிலைக்கக் கூடிய ஓர் அரசியல் தீர்வைத் தருவதோடு இத்தீவின் இனங்களுக்கிடையில் நீடித்து நிலைக்கக்கூடிய நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் என்றும் வெளியார் தலையீட்டுக்கான தேவையையும் இல்லாமல் செய்யும் என்றும் சொல்கிறது. விடிய விடிய இராமர் கதை விடிந்த பின் இராமருக்கு சீதை என்ன முறை என்று ஒருவன் கேட்டானாம். 13 ஆவது சட்ட திருத்தத்தில் சொல்லப்பட்ட காணி,  காவல்துறை அதிகாரங்களையோ,  வட – கிழக்கு இணைப்பையோ தர மறுக்கும் அரசு எப்படி “இத்தீவின் இனங்களுக்கிடையில் நீடித்து நிலைக்கக்கூடிய நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும்?” ஒரு அரசியல் தீர்வுக்குச் சம்மதிக்கும்?  அதுவும் “வெளியார் தலையீட்டுக்கான தேவையையும் இல்லாமல்?”

இன்று எமக்குள்ள பலங்களில் பன்னாட்டு சமூகத்தின் ஆதரவுதான் முக்கியமானது. பன்னாட்டு சமூகத்தின் அழுத்தம் காரணமாகவே மகிந்த இராபக்சேயின் அரசு பேச்சு வார்த்தையில் வேண்டா வெறுப்போடு கலந்து கொள்கிறது.  நாடாளுமன்ற தெரிவுக் குழுவுக்கு வாருங்கள் இல்லையென்றால் பேச்சுவார்த்தை இல்லை எனத் திமிரோடு வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பீரிஸ் மிரட்டியது நினைவிருக்கலாம்.  ஆனால் அதன்பின்னரும் பேச்சுவார்த்தை தொடருகிறது என்றால் அதற்கு “வெளியார் தலையீடு” தான் காரணம். வெளியார் தலையீடு  இல்லாமல் இனச் சிக்கலுக்கு தீர்வு காணலாம் என்பது பகற்கனவு.  சிங்கள அரசைப் பொறுத்தளவில் போரில் வெற்றி பெற்று விட்டதால் இனச் சிக்கல் இன்று இல்லை,  எல்லோரும் “லங்கா மாதாவின் புத்திரர்கள்”  “அதிகாரப் பரவலாக்கலும் தேவையில்லை” என்பதுதான் அதன் நிலைப்பாடு.

தீர்மானங்கள்,  ஆணை என்பது வேறு  நடைமுறை அரசியல் என்பது வேறு

4. தமிழ் சிவில் சமூகம் எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல்கள் எமது அரசியல் தீர்வுதொடர்பில் நாம் முன்நோக்கி நகர்வதற்கு ஒரு பெரும் தடைக்கல்லாக அமையும் என்றும்  மேலும் குறிப்பாகச் சொல்லுவதாயின் மாகாண சபையை ததேகூ கைப்பற்றும் தருவாய் என்பது எமது நீண்ட அரசியல் பயணத்தின் அவல முடிவாக அமைந்து விடும் என்றும் ………அதேபோல் இன்னுமொரு தேர்தலில் தமிழ் மக்களின் ஆணையைப் பெற்றுத்தான் ததேகூ  தமிழ் மக்களின் வேட்கைகளை அரசுக்கும் உலகுக்கும் அறிவிக்க வேண்டுமென்றுமில்லை என்ற கண்டுபிடிப்புக்களை தனது விண்ணப்பத்தில் அடுக்குகிறது.  அப்படிப் பார்த்தால் வட்டுக்கோட்டை மாநாட்டில் வடக்கு கிழக்கு தமிழர் தாயகம், தேசியம், சுய நிர்ணய உரிமை என்பவற்றை அடிநாதமாகக் கொண்ட பூரண சுதந்திரமும் தன்னாட்சியும் கொண்ட சோசலிச தமிழீழத்தை அமைப்போம் என்ற தீர்மானத்தின் அடிப்படையில் 1977 இல் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் முன்வைக்கப்பட்டு மக்களிடம் ஆணை பெறப்பட்ட பின்னர் ஏன் தவிகூ, ததேகூ தொடர்ந்து தேர்தலில் பங்குபற்றியது? “தமிழ் மக்களின் ஆணையைப் பெற இன்னுமொரு தேர்தல் அவசியமில்லை”  என்று ஏன் சொல்லவில்லை?  காரணம் தீர்மானங்கள், ஆணை என்பது வேறு. நடைமுறை அரசியல் என்பது வேறு.

தேர்தலைப் புறக்கணிப்பது அரசியல் தற்கொலைக்கு சமமானது

5.  “அரசு இதனை மீறி தேர்தல்களை நடாத்துமாயின் தேர்தலில் ததேகூ நேரடியாகப் பங்கெடுக்கக் கூடாது. மாறாக தமிழ்த் தேசிய விரோத சக்திகள் அல்லது அரச சார்பு சக்திகள் மாகாண சபையைக் கைப்பற்றுவதைத் தடுக்க நாம் வேறுமாற்று உபாயங்கள் தொடர்பில் சிந்திக்கலாம். இவை தொடர்பில் ததேகூ. மக்களோடு கலந்தாலோசிக்க வேண்டும்” என்று தமிழ் சிவில் சமூகம் சொல்கிறது. இந்த யோசனையை இதற்கு முன் எங்கேயோ கேட்ட மாதிரி – அதாவது யாக்கோப்பின் குரல் – படுகிறதே? ஆமாம் உள்ளாட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட வக்கற்ற தமிழ்க் காங்கிரஸ் அல்லது அதன் முகமூடி தமதேமு இப்படித்தான் “சீ சீ அந்தப் பழம் புளிக்கும்” என்று தேர்தல் காலத்தில் தேர்தலைப் புறக்கணிக்குமாறு  அறிக்கை விட்டது.  ஒரு மக்களாட்சி முறைமை உள்ள நாட்டில் தேர்தலைப் புறக்கணிப்பது என்பது அரசியல் தற்கொலைக்குச் சமமானது. வண பிதாக்களுக்கும் வைத்திய கலாநிதிகளுக்கும் அரசியல் வரலாறு தெரியாதிருந்திருக்கலாம். இதை எழுதிய அரசியல்வாதி கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்குமா  அரசியல் வரலாறு தெரியாது?

1931 இல் நடந்த சட்டசபைத் தேர்தலை அன்றைய யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் புறக்கணித்ததால் 50 உறுப்பினர்களைக் கொண்ட சட்ட சபையில் சிங்களவர்களது வாக்குப் பலம் அதிகரித்தது. அதன் காரணமாக  முழுவதும் சிங்களவர்களைக் கொண்ட அமைச்சர் அவை  (Pan Sinhala Board  of Ministers) உருவாகியது.  புறக்கணிப்புக்குச் சொல்லப்பட்ட காரணம் டொமினியன் தகைமை வேண்டாம் இலங்கைக்கு – இந்தியாவில் இந்திய காங்கிரஸ் கேட்டது போல –  பூரண சுதந்திரம் வேண்டும் என்ற கோரிக்கைதான். இந்தக் கோரிக்கையை எள்ளி நகையாடிய எஸ்.டபுள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா கான மயில் ஆடக் கண்டிருந்த வான்கோழி தானும் தனது பொல்லாச் சிறகை விரித்தாடிய கதைக்கு ஒப்பிட்டார்.

1994 இல் வரலாறு மீண்டும் திரும்பியது.  வி.புலிகள் தேர்தலைப் புறக்கணித்ததால் டக்லஸ் தேவானந்தாவின் இபிடிபி  10,744  (0.14)  வாக்குளைப் பெற்று 9 இடங்களில் “வெற்றி” பெற்றது!  இந்த 10,744 வாக்குகளில் இபிடிபி யின் கட்டுப்பாட்டில் இருந்த தீவுப்பகுதியில் 9,944 வாக்குகள் கிடைத்தன.  இந்தத் தேர்தல் புறக்கணிப்பே  இபிடிபி யின் அரசியல் வருகைக்கு கால்கோள் இட்டதோடு மட்டுமின்றி இன்றைய துரோக அரசியலுக்கும் வழிவகுத்தது. இதனை வரலாறு தெரிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள்.

தேர்தல் புறக்கணிப்பு தேவானந்தாவுக்கு மகிடம் சூட்டவோ?

6. போகிற போக்கைப் பார்த்தால் தமிழ் சிவில் சமூகம் வடமாகாண சபைத் தேர்தலை புறக்கணிக்க  ஆலோசனை சொல்வது டக்லஸ் தேவானந்தாவுக்கு மகிடம் சூட்டத்தான்  என்ற அய்யம் எழுகிறது.  சென்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் (2010)  தமிழ்க் காங்கிரஸ் கட்சி தேசியத்துக்கு ஆதரவான வாக்குகளைப் பிரித்ததால் இபிடிபி கட்சிக்கு ஒரு இருக்கையை தங்கத் தாம்பாளத்தில் வைத்துக்  கொடுத்தது.  ததேகூ கேட்காவிட்டால் மாகாண சபையைக் கைப்பற்றுவதற்கு வேறு மாற்று உபாயங்களைப் பற்றித் தமிழ் சிவில் சமூகம் சிந்திக்கப் போகிறதாம்.  என்ன அந்த உபாயம் – சாணக்கியம் – என்பதைச் சொல்ல வேண்டியதுதானே?   அந்த உபாயம்  வணபிதாக்களையும் வைத்திய கலாநிதிகளையும் சுயேட்சைகளாகத் தேர்தலில் நிறுத்துவதா?   அப்படியென்றால் தமிழ் சிவில் சமூகத்துக்கு ஆட்டோடுதான் கோபம் குட்டிகளோடு இல்லை என்றாகிறது?  அதாவது ததேகூ ஓடு மட்டும் கோபம் மற்றவர்களோடு இல்லை!

ததேகூ யை மக்கள் தேர்தலில் வாக்களித்து நாடாளுமன்றம் அனுப்பி இருக்கிறார்கள்.  அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஆணையை ததேகூ மனம், மொழி, வாக்கு ஆகிய மூன்றோடும் நிறைவேற்ற வேண்டும்.  அதில் அவர்கள் தவறு இழைத்தால் மக்கள் அடுத்த தேர்தலில் ததேகூ யை நிச்சயம் தண்டிப்பார்கள்.

தமிழ் சிவில் சமூகம் என்ற போர்வையில் ததேகூ க்கு எதிராகக் குறுக்குச் சால் ஓட்டுவது அல்லது கால்தடம் போட்டு விழுத்த எத்தனிப்பது அறம் அல்ல.   தமிழ் சிவில் சமூகம் யார் எதிரி யார் நண்பன் என்பதைத்  தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
வரலாற்றில் முன் எப்பொழுதம் இல்லாத ஒரு சிங்கள – பவுத்த வெறிபிடித்த – போர் வெற்றியில் மிதப்பாக இருக்கும் – ஓர்  அரசின் அரசியல், இராணுவ,  இராசதந்திரம் ஆகியவற்றுக்கு முகம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் ததேகூ இருக்கிறது.
திரு இரா சம்பந்தர்  கிழக்கை சிங்கள மயப்படுத்த 60 ஆண்டுகள் எடுத்தது ஆனால் வடக்கை சிங்கள மயப்படுத்த 10- 20 ஆண்டுகள் போதும்  என்று கனடாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும் போது குறிப்பிட்டிருந்தார்.
வட – கிழக்கு வரலாற்றில் இல்லாதவாறு இராணுவ மயப்படுத்தப் பட்டுள்ளது. முழத்துக்கு ஒரு இராணுவம் மட்டுமல்ல ஊருக்கு ஒரு இராணுவ தளமும் நிறுவப்படுகிறது.

திட்ட மிட்ட சிங்களக் குடியேற்றங்கள் வடக்கில் அசுர வேகத்தில் நடைபெறுகிறது.  இதன் மூலம் தமிழர்களது தாயகக் கோட்பாட்டை உடைத்து எறிவதே சிங்கள அரசின் இலக்காகும்.  நிலம் பறிபோனால் சுயநிர்ணயம் என்ற பேச்சுக்கே இடமில்லாது போய்விடும்.

எனவே  இன்றைய உலக ஒழுங்கு,  புவிசார் அரசியல்,  பொருளாதார நலங்கள் போன்றவற்றின் யதார்த்தங்களைப் புரிந்து கொண்டு ததேகூ கைகளைப் பலப்படுத்த எல்லோரும் முன்வர வேண்டும்.  ததேகூ ஆலோசனை சொல்வதென்றால் அது ஆக்க பூர்வமான உருப்படியான ஆலோசனை ஆக இருக்க வேண்டும்.

ததேகூ யைப் பொறுத்தளவில் தேர்தல் அறிக்கையில் சொல்லியவாறு தமிழினத்தின் அடிப்படைக் கோரிக்கைகளான தமிழ்த் தேசியம், தாயகம், தன்னாட்சியுரிமை எவற்றையும் விட்டுக் கொடுக்காமல்தான் பேச்சுவார்த்தை இடம்பெறுகிறது.  எமக்குப் பணியாரம்தான் தேவையே ஒழிய சிலு சிலுப்பு அல்ல என்பதை நினைவில் கொள்வது நல்லது.

திருவள்ளுவர் வாக்குக்கு இணங்க வினை வலி, தன் வலி, துணை வலி, மாற்றான் வலி என்பனவற்றைத் தூக்கிச் செயல் செய்ய வேண்டும்.  பின்னாளில் மாவோ “நண்பன் யார்? எதிரி யார்?” என்று வகுத்துக் கொண்ட பின் “களமிறங்கு” என்று சொன்னதை மனதில்  இருத்திக் கவனமாகவும் நிதானமாகவும் பயணிப்போம்.


பகுத்தறிவு பற்றிய விளக்கம்

நக்கீரன்

பகுத்தறிவு என்ற சொல்லுக்கு பகுத்தறிதல் பகுத்துணர்தல் (To distinguish, discriminate)  என தமிழ் அகரமுதலிகள் பொருள் சொல்கின்றன. பகுத்தறிவுள்ளவன் என்பதற்குப் பகுத்துப் பார்ப்பவன் (A judicious person) என்ற விளக்கம் கொடுக்கப்படுகிறது. பகுத்துப் பார்க்க (To survey every part) என்றும் பகுப்பு (division, classification) எனப் பொருள் விளக்கம் கொடுக்கப்படுகிறது.

பகுத்தறிவு என்றால் விவேகம் (Cleverness, ingenuity, discrimination, penetration, judgment) வியாசம் எனவும் பொருள் கூறப்படுகிறது. இந்த இரண்டும் வட சொற்களாகும்.

எனவே பகுத்தறிவு என்றால் ஒரு பொருளைப் பகுத்து வகைப்படுத்தி (To distinguish, discriminate, reason analytically) அறிதல் என்பது பொருள் ஆகும்.

ஆங்கிலத்தில் பகுத்தறிவு  rationality என்று அழைக்கப்படுகிறது. அதன் வரைவிலக்கணம் ” Rationality is the exercise of reason. It is the manner in which people derive conclusions when considering things deliberately. It also refers to the conformity of one’s beliefs with one’s reasons for belief, or with one’s actions with one’s reasons for action. A rational decision is one that is not just reasoned, but is also optimal for achieving a goal or solving a problem.”

பகுத்தறிவு எனப்படுவது பொருட்களின் நிகழ்வுகளின் கருத்துக்களின் கூறுகளை அவதானித்து, ஆய்ந்து அவற்றின் இயல்புகளில் இருந்து சான்றுகளோடு புறவய நோக்கில் எண்பிக்கப் படக்கூடிய முடிவுகளை முன்வைக்கும் வழிமுறையையும் அதை ஏதுவாக்கும் மனித அறிவு ஆற்றலையும் குறிக்கின்றது. பகுத்தறிவின் நோக்கம் மெய்ப்பொருளை அல்லது உண்மையைக் கண்டறிவதே.

· கூறு                        – தன்மை, properties, nature
· அவதானித்து       – observe, புலன்களின் தன்மையைப் புரிந்து புலன்கள் ஊடாக அவதானித்தல்
· சான்றுகளோடு   – evidence, repeatable, testable, empirical or experience
· புறவய நோக்கில்  – objective
· முடிவுகள்                 – explanation, facts
· வழிமுறை                – method
· ஆற்றல்                     – capacity

பகுத்தறிவு பற்றிய இந்த விளக்கம் போதும் என நினைக்கிறேன்.

தொல்காப்பியர் புல் பூண்டு முதல் மனிதன் ஈறாக உயிர் இருப்பதாகச் சொல்கிறார். இந்தக் கோட்பாடு சமணர்களுக்கு உரியது. தொல்காப்பியர் சமணர்.

புல், பூண்டு                    –       ஓரறிவு (தொடு உணர்ச்சி)
நத்தை, சங்கு                –       ஈரறிவு (தொடு உணர்ச்சி, சுவை உணர்ச்சி)
எறும்பு, கறையான்    –      மூவறிவு (தொடு உணர்ச்சி, சுவை உணர்ச்சி, நுகர்தல்)
ஈ, வண்டு                      –       நான்கறிவு (தொடு உணர்ச்சி, சுவை உணர்ச்சி, நுகர்தல், பார்வை)
விலங்குகள், பறவைகள் –    அய்ந்தறிவு (தொடு உணர்ச்சி, சுவை உணர்ச்சி, நுகர்தல், பார்வை, கேட்டல்)
மனிதன் மட்டுமே              – ஆறறிவு (தொடு உணர்ச்சி, சுவை உணர்ச்சி, நுகர்தல், பார்வை, கேட்டல், பகுத்தறிவு)

“மாவும் மாக்களும் அய்யறிவினவே
மக்கள் தாமே ஆறறிவுயிரே” (தொல்காப்பியம்)

சிந்தித்துச் செயல்படுவது என்பது ஆறாவது அறிவு. அது மனிதனுக்குத்தான் உண்டு. அதிசயமான காரியங்கள் செய்யக்கூடிய உயிர்கள் உண்டு. மனிதன் செய்ய முடியாத செயல்களை ஓர் உயிர் முதல் அய்யறிவு உள்ள உயிர்கள் செய்யும். ஒரு எறும்பை எடுத்துக் கொண்டால் நமக்குத் தெரியாத வாசனை அதற்குத் தெரியும். ஒரு குருவியை எடுத்துக் கொண்டால் மனிதனால் பறக்க முடியாமல் இருக்கும்போது அது பறக்கும். ஒரு குரங்கை எடுத்துக்கொண்டால் மனிதன் தாவமுடியாத அளவுக்குத் தாவும். நாய்க்கு மோப்ப ஆற்றல் மனிதனை விட அதிகம். மனிதனுக்கு மேற்பட்ட, மனிதனால் முடியாத சில செயல்கள் மற்ற அறிவுள்ள உயிர்களுக்கு உண்டு. சிந்தித்து, வளர்ச்சிக்கேற்ற வண்ணம் தன்னுடைய வாழ்வு நிறைவு பெறும் வண்ணம் பயன்படுத்துகிற அளவு மனிதனுக்குத்தான் உண்டு. வேறு உயிர்களுக்கு இல்லை. பசி, பருவம், முதுமை, மரணம் என்ற நான்கும் மனித இனத்துக்குப் பொதுவானவை.

மனிதர்கள் சிந்திக்கிறார்கள்! மற்ற உயிரினங்கள் சிந்திப்பதில்லை! மனிதர்களுக்கு மட்டுமே பகுத்தறிவு உண்டு! மற்ற உயிரினங்களுக்குப் பகுத்தறிவு உணர்ச்சி கிடையாது! பகுத்தறிவைப் யாரும் போதிப்பதில்லை. காரணம் அது மதம் அல்ல. பகுத்தறிவைப் பற்றிப் பேசுகிறோம், எழுதுகிறோம். அதில் உண்மை இருந்தால் மட்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் தள்ளிவிட வேண்டும். மதவாதிகள் போல ஏற்றுக்கொண்டால் சுவர்க்கம் தள்ளிவிட்டால் நரகம் என்று பகுத்தறிவுவாதிகள் யாரையும் பயமுறுத்துவதில்லை.

மனிதன் பகுத்தறிவுள்ள பிராணி. மனிதன் எதையும் தீர ஆராயும் இயல்பினால் மற்ற விலங்குகளிருந்து வேறுபடுகின்றான். சிந்தனையாற்றலின் பயனாக அவன் மற்றெல்லா உயிரினங்களுக்கும் தலைவனாக விளங்குகிறான். சிந்தனை ஒன்றைத் தவிர வேறு வகைகளில் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் வேறுபாடில்லை. அவற்றைப் போலவே அவனும் உண்பதுவும் உறங்குவதும் சூழல் நிலைகளால் பாதிக்கப்படுவதுமாக இருக்கின்றான். விலங்குகள் வெறும் இச்சையினால் மட்டும் உந்தப்பட்டுச் செயல் படுகின்றன. ஆனால் மனிதன் எண்ணித் துணிந்து செயல்படுகின்றான். தன் நடைத்தையின் விளைவுகளைச் சீர்தூக்கிப் பார்க்கின்றான். அவனுடைய ஆற்றலெல்லாம் இந்தச் சிந்தனையில் தான் அடங்கியுள்ளது. அதன் மூலமாகத் தான் அவன் தன்னைக்காட்டிலும் உடல் வலுவுடையப் பிராணிகளையும் இயற்கையையும் வெற்றி கொள்ள முடிந்தது. சிந்தனைதான் பல கலைகளாகவும் அறிவியலாகவும் தத்துவமாகவும் பரிணமித்துள்ளது. (குடியரசு – மனிதனும் மிருகமும்)

உலக வரலாற்றில் முதல்முறையாக – 2550 ஆண்டுகளுக்கு முன்னர் – மக்களைப் பார்த்துச் சிந்திக்கச் சொன்ன பகுத்தறிவுவாதி புத்தர் ஆவார். பிற்காலத்தில் அவரைப்பற்றிப் புனைகதைகள், இதிகாசங்கள் இயற்றி அவைரைக் கடவுளாக்கி விட்டார்கள் என்பது வேறு கதை.

“மகானால் உபதேசிக்கப்பட்டது என்பதற்காகவோ, பழைய சாத்திரங்களில் எழுதப்பட்டது என்பதற்காகவோ, பழங்காலம் முதல் பலராலும் அனுட்டிக்கப்பட்டு வருகிறது என்பதற்காகவோ எதையும் நம்ப வேண்டியதில்லை. நாமே நேரில் பலவிதமாய்ச் சோதனை செய்து அய்யங்கள் தீர்ந்த பிறகே எந்த தர்ம மார்க்கத்தையும் நம்பிப் பின்பற்ற வேண்டும்” என்று சொன்னவர் புத்தர்.

புத்தர் என்றுமே தன்னை ஒரு தேவன் என்றோ, கடவுளின் அவதாரம் என்றோ கூறிக்கொண்டதில்லை. தான் புத்த நிலையை அடைந்த ஒரு மனிதன் என்பதையும் புவியில் பிறந்த மானிடர் அனைவருமே இந்த புத்த நிலையை அடைய முடியும் என்பதையும் தெளிவாக வலியுறுத்தினார். ஆசையே துன்பத்தின்ற்குக் காரணம் எனக் கூறினார்.

”மனிதனுக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒரு சக்தி இருப்பதாகவும் அதைப் போற்றி வணங்க வேண்டுமென்றும் பிராமணர்கள் சொல்லித் திரிகிறார்களே’’ என்று சிலர் கேட்டபோது புத்தர் சொன்னது,

‘வாதத்திற்காக அதை ஏற்றுக் கொள்ளுவோம். பிக்குவே, நீ ஓர் ஆற்றைக் கடக்கவேண்டியுள்ளது. அதைக் கடப்பதற்கு அருகிலுள்ள வேலுவனத்தில் வேல்களை (மூங்கில் காட்டில் மூங்கில்களை) வெட்டித் துண்டுகள் செய்து, அவைகளை இணைத்துப் பாசத்தால் (கயிற்றால்) கட்டித் தெப்பம் செய்து, அதனைக் கொண்டு ஆற்றைக் கடக்கின்றாய். ஆற்றைக் கடக்கத் துணையாக இருந்த அத்தெப்பத்தை எடுத்துக் கரையில் வைத்து விட்டு ‘என்னை ஆற்றின் அக்கரையிலிருந்து இக்கரை சேர்த்த வேலனே (மூங்கிலே)’’ என்று போற்றுவாயா? வேண்டுமானால் வேறு எவருக்காவது அது பயன்படட்டும் என்று நினைத்துக் கரையிலுள்ள ஒரு மரத்தில் அக்கட்டு மரத்தைக் கட்டி வைத்து விட்டுச் செல்லலாம். அதுவே அறிவுடைமை;. பிறர் நலம் பேணுவதாகும்.’’

புத்தருக்குப் பின்னர் தமிழ்நாடு கண்ட ஒரு பகுத்தறிவுவாதி திருவள்ளுவர்.

எப் பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்
அப் பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு. (அதிகாரம் 43- அறிவுடமை, குறள் 428)
எப் பொருள் எத்தன்மைத்தாயினும்
அப் பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு.  (அதிகாரம் 36 மெய் உணர்தல், குறள் 355)

என்று மெய்யறிவுக்கு இலக்கணம் சொன்னார். அறிவுடையார் எல்லாம் உடையார் என்றார். அவரே,

இரந்தும் உயிர் வாழவேண்டின்
பரந்து கெடுக இவ்வுலகியற்றியான். (அதிகாரம் 107 இரவு அச்சம் குறள் 1062)

“இந்த உலகத்தைப் படைத்தவன் உலக மக்கள் இரந்து உயிர் வாழ வேண்டும் என்று விதித்திருந்தால் அந்தக் கொடியவன் இரப்பவரைப் போலவே எங்கும் அலைந்து கெட வேண்டும்” எனத் திட்டியவர் வள்ளுவர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அவருக்கு இருந்த துணிவு இன்று இல்லை.

நட்ட கல்லைத் தெய்வமென்று
நாலு புட்பம் சாற்றியே
சுற்றிவந்து மொணமொணென்று
சொல்லும் மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ?

என்று காட்டமாகக் கேட்ட சிவவாக்கியர் ஒரு தலைசிறந்த சித்தர் மட்டுமல்ல பகுத்தறிவுவாதியும் ஆவார்.

பகுத்தறிவு பற்றிப் பெரியாரே தெளிவு படுத்தியுள்ளார். “இராமசாமி சொல்கிறானென்று எதையும் நம்பாதே” என்று மட்டுமல்ல, தன்னைப் புரிந்துகொண்டவர்கள் தனது கருத்துக்கள் தேவையில்லை என்று நினைக்கும்போது தன்னைத் தனது சிந்தனைகளை நிராகரித்துச் செல்லலாம் என்ற மாபெரும் கருத்துச் சுதந்திரத்தை வெளிப்படையாகச் சொன்னவர் பெரியார் ஒருவரே!
பகுத்தறிவுவாதிகள் காது குத்தல், மொட்டையடித்தல், பச்சை குத்துதல், சுன்னத் செய்தல், அரைஞான் கயிறு கட்டுதல், தாலி, மெட்டி, மோதிரம், தலைக்கட்டு, நாமம், விபூதிப்பட்டை, உருத்திராட்சக் கொட்டை போன்ற எல்லா குறிகளும் மனிதனாக ஏற்படுத்திக் கொண்ட குழுக்குறிகள். சில சிறுபான்மையினரிடமும் சில பொதுவாக பெரும்பான்மையினரிடமும் காணப்படலாம். இவற்றை செய்யாமல் விட்டுவிடுவதால் மருத்துவ அடிப்படையில் எந்தக் குறையும் இல்லை. செய்து கொள்வதால் எந்தப் பலனும் இல்லை. இதே போல் அருச்சனை, அபிசேகம், தேர், தீா்த்தம், திருவிழா, கிரக பரிகாரம், சாந்தி, விளக்குப் பூசை, படையல் போன்றவற்றாலும் எள்முனைப் பலனும் இல்லை.

”கலையுரைத்த கற்பனையை  நிலையெனக் கொண்டாடும் கண்மூடிப் பழக்கமெலாம் மண்மூடிப் போக” என்றெல்லாம் இராமலிங்க அடிகளார் முழங்கினார்.

“புராண இதிகாசங்களின் மூலம் தரப்படும் கருத்துக்களும் சமூகத்தின் பொதுத் தரத்தை உயர்த்த வில்லை என்பதாற்றான் நாம் அவைகளைக் குறை கூறுகிறோம்” என்றார் அறிஞர் அண்ணா.

எனவே மூடநம்பிக்கைகளைக் களைந்து பகுத்தறிவோடு சிந்தித்து தன்னம்பிக்கையோடு இந்த உலகிலேயே வாழ்வாங்கு வாழப் பழகுவோம்.


ஜெயலலிதாவின் துக்ளக் ஆட்சியில் தமிழர்களின் அறிவுப் பசியின் மீது தாக்குதல்

நக்கீரன்

சங்க காலத்தில் கல்வி பரவலாக இல்லை. ஆனால் அதன் முக்கியத்துவம் உணரப்பட்டது. ஆண்களைப் போலவே பெண்களும் கல்வி கற்றார்கள். கடைச் சங்க காலத்தில் ஆண் புலவர்களுக்கு இணையாக பெண் புலவர்கள் பாடல்கள் இயற்றியிருக்கிறார்கள்.
நல்லிசைப் புலமை மெல்லியார், வெள்ளி வீதியார், ஒக்கூர் மாச்சாத்தியார், அவ்வையார், காவற்பெண்டு, காக்கைபாடினியார், காமக்கணிப் பசலையார் என 50 க்கும் மேற்பட்ட பெண்புலவர்கள் பாடல் பாடியுள்ளார்கள்.

கல்வி கற்றவன் மதிக்கப்பெற்ற செய்தியைப் பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் படிய பாடல் செப்புகிறது.

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே
பிறப்போ ரன்ன உடன்வயிற் றுள்ளும்
சிறப்பின் பாலால் தாயும் மனம்திரியும்
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடை யோன்ஆறு அரசும் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே!    (புறம் 183)

சங்கம் மருவிய காலத்தில் கல்விக்கு மிகவும் சிறப்புத் தரப்படுகின்றது. நீதி இலக்கியங்களில் கல்வி வலியுறுத்தப்படுகின்றது. கற்றார், கல்லாதார் என்ற பாகுபாடு சொல்லப்படுகின்றது. திருவள்ளுவர் தாம் எழுதிய திருக்குறளில் கல்வியின் சிறப்பை கல்வி, கல்லாமை, கேள்வி, அறிவுடமை என நான்கு அதிகாரங்களில் எடுத்துரைக்கிறார்.

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.           (திருக்குறள்  392)

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.    (திருக்குறள்  393)

கல்வியின் சிறப்பினையும் பெருமையினையும் இன்றியமையாமையையும் கூறும் திருவள்ளுவர், கருத்து முதல் வாதத்தின் அடிப்படையிலும் பொருள் முதல் வாதத்தின் அடிப்படையிலும் பேசுகின்றார்.  கருத்து முதல் வாதத்தினை அடிப்படையாக வைத்து,

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.      (திருக்குறள்  398)

என்கிறார். அடுத்துப் பொருள் முதல் வாதத்தினை அடிப்படையாக வைத்து,

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை.   (திருக்குறள், 400)

என்கிறார். மேலும் கல்லாதவரை விலங்கு எனத் திட்டுகிறார்.

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்.      (திருக்குறள், 410)

சங்கம் மருவிய காலத்தில் பெண் கல்வி குறைந்தது. அதற்குச் சமண மதம் தழைத் தோங்கியது காரணமாக இருக்கலாம். வேத சமயம் போலவே சமணம் பெண்களுக்கு ஒத்துரிமை கொடுக்கவில்லை.

தொல்காப்பியர் சமணர்,  நாலடியார் பாடல்களைப் பாடியவர்கள் சமண முனிவர்கள். இப்படிச் சமண மதத்தைச் சார்ந்தவர்கள் பலர் இருந்தார்கள்.  அதனால் பெண்களுக்குப் பல சமூகக் கட்டுப்பாடுகள் இருந்தன.

பல்லவர் காலத்தில் நால் வருணப் பாகுபாடு மிகுதியானது. அந்தக் காலத்தில் கல்வி கற்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிட்டவில்லை. அடிமட்ட உழைக்கும் மக்களிடத்தில் கல்வி எந்த அளவுக்கு இருந்தது என்பது பற்றிச் சரியாகத் தெரியவில்லை. பக்தி  இலக்கியங்களில் பொது மக்களைப் பற்றிய கருத்துக்கள் மிகக் குறைவு.

சங்க இலக்கியத்திலும் காப்பியங்களிலும் பொருள் முதல் வாதமே மிகுதியாகப் பேசப்படுகின்றது. பக்தி இலக்கியத்தில் கருத்து முதல் வாதமே பேசப்படுகின்றது. சங்கம் மருவிய இலக்கிய மாகிய பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் விழுமிய வாழ்க்கைக்கான கருத்து முதல் வாதமும் பொருள் முதல் வாதமும் பேசப்படுகின்றன.

எண் எழுத்து இகழேல்       (ஒளவையார், ஆத்திசூடி 7)
இளமையில் கல்                 (ஒளவையார், ஆத்திசூடி, 29)
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்    (கொன்றை வேந்தன்  7)

என்றெல்லாம் இடைக்கால இலக்கியங்கள் கல்வியின் அவசியம், பெருமை இவற்றைக் கூறினாலும் பெண் கல்வி பற்றிப் பேசவில்லை. மாறாக, தையல்சொல் கேளேல்  (ஒளவையார், ஆத்திசூடி  63)   என்றெல்லாம் கூறப்படுகிறது.

இடைக்கால சோழர் ஆட்சியில் பள்ளிகூடங்கள் இருந்தன. ஆனால் அவை வேதப் பள்ளிகள். அங்கு பிராமணர்கள் வேதம் கற்றார்கள். ஏனைய மக்களுக்கு பள்ளிக்கூடங்கள் அமைக்கப்பட்ட செய்தி எதுவும் இல்லை.

ஆங்கிலேயர் தமிழ்நாட்டுக்கு வருகை தந்த போது தமிழ்நாட்டில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களது விழுக்காடு ஆண்களுக்கு 2 ஆகவும் பெண்களுக்கு அதைவிடக் குறைவாகவும் காணப்பட்டது.

யாழ்ப்பாண இராச்சியத்தில் அரசகுமாரிகளும் கோயிலில் நடனமாடும் நடனப் பெண்களுமே எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாக இருந்தார்கள்!

ஆங்கிலேயர் ஆட்சியில்தான் முதன் முதலாகக் கல்விக் கூடங்கள் அரசு சார்பில் நிறுவப்பட்டன. மேல்தட்டு மக்களுக்கும் தனி மனிதர்களுக்கும் சொந்தமாக இருந்த கல்வியை ஆங்கிலேயர்கள் அனைவருக்கும் பொதுவுடைமையாக ஆக்கினார்கள்.  அது காலவரை கல்வி மறுக்கப்பட்ட மக்களுக்கு நவீன அறிவியல், மருத்துவம், கணிதம், வரலாறு, புவியியல் போன்ற பாடங்கள் கல்லுாரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் படிப்பிக்கப்பட்டன. அவ்வாறு பொது நிறுவனங்களாக கல்விக்  கூடங்கள் இருந்த  போதும்  சமுதாயத்தில் நிலவிய நால் வருணப் பாகுபாடு எல்லோரும் கல்வி கற்கத் தடையாக இருந்தது.

ஆங்கிலேயர் வராதுவிட்டிருந்தால் திண்ணைப் பள்ளிகள் தொடர்ந்திருக்கும். பாரதம், இராமாயணம், நிகண்டு, கூட்டல் கழித்தல் பாடங்கள் படிப்பதோடு கல்வி முடிந்திருக்கும்.

இந்தப் பின்னணியிலேயே உலகத் தரம் வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தை குழந்தைகள் மருத்துவ மனையாக மாற்றுவதென்று தமிழக முதல்வர் செயலலிதா எடுத்த முடிவை அவர் மீளாய்வு செய்ய வேண்டும்.

கெடுகுடி சொற்கேளாது என்பார்கள். அண்ணா நுாலகத்தை குழந்தைகள் சிறப்பு மருத்துவமனையாக முதல்வர் ஜெயலலிதா எடுத்த முடிவு தவறானது. தமிழ் உணர்வாளர்களை அவமதிக்கும் செயல். நூலகத்திற்காக அமைக்கப்பட்ட உள்கட்டமைப்பை எவ்வாறு மருத்துவமனையாக பயன்படுத்த முடியும் என்பது தெரியவில்லை.

கடந்த மே மாதம் தேர்தலி்ல் வென்று பதவிக்கு வந்ததும் வராததுமாக சமசீர் கல்வியை தடை செய்தார். அந்தத் தடைக்கு கட்சி அரசியலுக்கு (அதிமுக நீங்கலாக) அப்பால் எதிர்ப்பு எழுந்த போதும் ஜெயலலிதா மசியவில்லை. உச்ச நீதிமன்றம் அவரது தலையில் குட்டிய பிறகே வேறு வழியின்றி வேண்டா வெறுப்பாக சமச்சீர்க் கல்வியைச்  செயல்படுத்தினார்.  அதிலிருந்து பாடம் படிக்காத ஜெயலலிதா இப்போது அண்ணா நுாலகத்தை மூடுவதில் தனது கைவரிசையைக்  காட்டியுள்ளார்.

அண்ணாவின் பெயரைக் கட்சியிலும் அண்ணாவின் படத்தை கொடியிலும் வைத்திருக்கும் ஜெயலலிதா அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தைக் குழந்தைகள் மருத்துவமனை ஆக்க தீர்மானிப்பது அண்ணாவுக்குச் செய்யும் பச்சை இரண்டகமாகும்.  இது அதிமுக இல் உட்கட்சி சனநாயகம் என்பது மருந்துக்கும் இல்லை என்பதற்கு நல்ல எடுத்துக் காட்டு.

எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற பாணியில் ஜெயலலிதா செயல்படுவது ஒன்றும் புதிதல்ல.  காரணம் ஜெயலலிதாவே பொதுக்குழு, செயல்குழு, கட்சி எல்லாம். அவருக்கு ஆலோசனை சொல்ல வேண்டிய அமைச்சர்கள் கை கட்டி, வாய்பொத்தி நிற்கிறார்கள்.  வாய் திறந்தால் பதவி போய்விடும்.  முதல்வர்  ஜெயலலிதா துக்ளக் சோ வைத் தவிர வேறு எவரது ஆலோசனைகளையும் செவியில் போட்டுக் கொள்வதில்லை!

அண்ணா நுாலகத்தைக்  குழந்தைகள் சிறப்பு மருத்துவமனையாக மாற்ற முதல்வர் ஜெயலலிதா எடுத்த முடிவு முன்னாள் முதல்வர் கருணாநிதியை  அரசியல் காழ்ப்புணர்ச்சி  காரணமாகப் பழிவாங்கும் அரசியல் என்று யாரும் நினைத்துவிடக் கூடாது. அப்படி ஒரு குறுக்கிய கண்ணோட்டத்தில்  பார்த்துவிடக் கூடாது.  ஒட்டுமொத்த தமிழினத்தின் அறிவு வளர்ச்சிக்கும் கல்வி வளர்ச்சிக்கும் எதிரான போர் அறிவித்தல் என்றே கருதப்பட வேண்டும்.

தமிழர்களது மொழி, அறிவு வளர்ச்சி, கல்வி ஆகியவற்றின் மீது அவருக்குள்ள அக்கறையின்மை, அலட்சியம்,  எதிர்நிலை மனப்போக்கு ஆகியவற்றின் காரணமாகவே முதல்வர் ஜெயலலிதா இந்த முடிவை எடுத்துள்ளார்.

இந்திய மைய அரசின் கீழ் செயல்படும் செம்மொழி மையம் தமிழக அரசுக்குச் சொந்தமான பாலாறு இல்லத்தில் செயல்பட்டு வந்தது.  முதல்வர் ஜெயலலிதா அதில் பொதுப்பணித்துறை அமைச்சரை குடியேற்றி செம்மொழி மையத்தை ஒரு சிறு பகுதியில் செயல்படும் நிலைக்கு முடக்கிவிட்டார். செம்மொழி மையத்தை சிறுமைப்படுத்தி விட்டார்.

தஞ்சைத்  தமிழ்ப் பல்கலைக் கழகத்தையும் ஜெயலலிதா விட்டு வைக்கவில்லை. அந்தப்  பல்கலைக் கழகத்தை எம்ஜிஆர் உருவாக்கியபோது அதன் விரிவாக்கத்திற்கு என ஆயிரம் ஏக்கர் நிலத்தை  ஒதுக்கினார். ஏற்கனவே அவ்வளாகத்தில் வீடுகள் கட்டப்பட்டு தனியாருக்கு விற்று விட்டார்கள். இப்பொழுது தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தமிழ்ப் பல்கலைக் கழக வளாகத்திற்குள் கட்ட அதிமுக  அரசு ஏற்பாடுகள் செய்து வருகிறது.

இவற்றைக் கூட்டிக் கழித்துப் பார்த்தால் தமிழர்களின் அறிவு வளரக் கூடாது என்பதில் முதல்வர் ஜெயலலி்தா குறியாக இருக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. மக்கள் அறிவு வளர்ச்சி பெற்றால் அவரது வாக்கு வங்கி அரசியலுக்கும் துக்ளக் ஆட்சிப் போக்கிற்கும் இடையூறாக இருந்து விடும் என அவர் அச்சப்படுகிறார்.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம்மாற்றம் செய்யும் தமிழக அரசின் முடிவை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது. அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்றுவது அண்ணாவுக்குச் செய்யும் அவமதிப்பாகும் எனத் தமிழறிஞர்கள் அவ்வை நடராசன், சிலம்பொலி சு. செல்லப்பன், க.ப. அறவாணன், பொன். கோதண்டராமன், மு.பி. பாலசுப்பிரமணியன், இரா. குமாரவேலன், மு. தங்கராசு, தி. இராசகோபாலன், பா. வளன் அரசு, இராம. குருநாதன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

திமுக, பொவுடமைக் கட்சிகள், பாமக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் ஜெயலலிதாவின் தான்தோன்றித்தனமான முடிவைக் கண்டித்துள்ளன. நாம் தமிழர் இயக்கம் மட்டும் மவுனம் சாதிப்பது வியப்பை அளிக்கிறது.

அண்ணா நுாற்றாண்டு நுாலகம் கடந்த திமுக ஆட்சியில் 8 ஏக்கர் நிலப்பரப்பில் 180 கோடி ரூபா  செலவில் 9 மாடிகளைக் கொண்ட நூலகத்துக்கு என்றே வடிவமைத்துக் கட்டப்பட்டுள்ளது. கட்டிடத்தின் பரப்பளவு 333,140 ச.அடி ஆகும். பன்னிரண்டு இலட்சம் புத்தகங்களை வைக்கத்தக்க கொள்ளவு கொண்டது. தற்சமயம் 550,000 நுால்கள் வைக்கப்பட்டுள்ளன. இது ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நுாலகம். ஆகும்.

நுழைவாசலில் அறிஞர் அண்ணாவின் 5 அடி உயர செப்பாலான சிலை நிறுவப்பட்டுள்ளது.

இந்த நுாலகம் மிகச்சிறந்த அரங்குகள், உணவகம் ஆகியவைகளை உள்ளடக்கியது.  பழைய ஓலைச்சுவடிகளை கூட ஆய்வுக்காக சிறப்பாகப் பாதுகாத்துப் பயன்படுத்தும் வசதிகளை உள்ளடக்கியது.  ஒரே நேரத்தில் 1250  பேர் அமர்ந்து படிக்கக் கூடிய வசதிகள் உண்டு. 50,000 ச.அடி கொண்ட உள் அரங்கு, சுமார் 800 பேர் அமரக்கூடிய வெளி அரங்கு,  30  பேர் அமரக்கூடிய சிறு சிறு அரங்குகளும் உள்ளன. நவீன கணினி தொழில் நுட்பங்களைக் கையாண்டும் மாற்றுத் திறனாளிகள் கூட வசதியாக அமர்ந்து படிக்கும் வண்ணமும் குழந்தைகள் உட்படத் தனித்தனிப் பகுதிகளைக் கொண்ட நவீன நூலகம் என்ற தனிச் சிறப்புடையது. ஒரு நாளில் 2,700  பேர் இந்த நுாலகத்தைப் பயன்படுத்துகிறார்கள். இருநுாறு ஊழியர்கள் பணியில் இருக்கிறார்கள்.

இந்த நூலகத்தில் பொதுமக்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், குழந்தைகள் என பல தரப்பினருக்கும் பயன்படக்கூடிய நவீன கட்டமைப்புகள் உள்ளன. தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழி நூல்களும் வைக்கப்பட்டுள்ளன. ஒலி, ஒளி தொகுப்புகள் போன்றவையும் இடம்பெற்றுள்ளன.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பார்வையிட்டு அங்கே உரையாற்றிய போது ஆசியா கண்டத்திலேயே மிகச் சிறந்த நூலகமாக இது அமைந்திருக்கிறது எனப் பாராட்டினார்.
சுருங்கச் சொன்னால் இரு ஒரு அறிவாலயம்.  கல்வியாளர்களின் கனவுக் கட்டிடம். தமிழினத்துக்கு பெருமை தேடித்தரும் அழகுப் பெட்டகம்.
முந்தைய திமுக அரசின் அனைத்து திட்டங்களையும் எதிர்க்க வேண்டும் என்ற நோக்கில் ஜெயலலி்தா நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது.  இரண்டு இனங்களுக்கு இடையிலான வரலாற்றுப் போர் தொடர்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலே கூறியது போல குழந்தைகள் சிறப்பு மருத்துவமனை தேவையென்றால் அதற்கென வடிவு அமைக்கப்பட்டுக் கட்டப்பட வேண்டும்.  அதனை யாரும் எதிர்க்க மாட்டார்கள்.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தை குழந்தைகள் சிறப்பு மருத்துவ மனையாக  மாற்ற நினைப்பது துக்ளக் ஆட்சி நடத்தும் ஜெயலலி்தா தமிழர்களின் அறிவுத் தாகத்துக்கு எதிராகத் தொடுக்கும் தாக்குதல் என்றே எண்ணப்படும். வரலாற்றில் இருந்து பாடம் படிக்க மறுத்தால் முதல்வர் ஜெயலலிதா அதற்கான விலையை அடுத்த தேர்தலில் கொடுக்க வேண்டி வரும். (முழக்கம்  – November 27, 2011)


வடக்கில் ஆக்கிரமிப்பு இராணுவம் இருக்கு மட்டும் தமிழ்மக்களுக்குப் பாதுகாப்பில்லை நிம்மதி இல்லை சுதந்திரம் இல்லை

நக்கீரன்

நேற்று திங்கட்கிழமை (15 நொவெம்பர், 2011) பரந்தன் பகுதியில் தென்னிலங்கை சுற்றுலா பயணிகளின் பேருந்தும் முல்லைத்தீவு தனியார் பேருந்தும் சிறிய விபத்தில் சிக்கியிருந்தது. இது தொடர்பில் இரண்டு பேருந்துகளினதும் சாரதிகள் தமக்குள் இணக்கம் கண்டு சமாளித்துச் செல்ல முற்பட்டபோது, அங்கு வந்த படையினர் தனியார் பேருந்து நடத்துனர், ஓட்டினர், உரிமையாளர் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தென்னிலங்கையில் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிவந்த பேருந்தை சிங்கள இராணுவம் அங்கிருந்து கொண்டு சென்றுவிட்டது. ஆனால் தனியார் பேருந்து சாரதி, நடத்துனர், மற்றும் உரிமையாளர் ஆகியோர் கடுமையாகத் தாக்கப்பட்டு காயங்களுடன் காவல்துறையினர் விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

சிங்கள இராணுவத்தினர் தமிழ்மக்கள் மீது தாக்குதல் நடத்துவது இதுதான் முதல் தடவை என்று கூறமுடியாது. கடந்த யூன் மாதம் யாழ்ப்பாணம் அளவெட்டி சைவ மகாஜன சபை மண்டபத்தில் நடந்த ததேகூ வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் திடீரென அத்து மீறி நுழைந்த சீருடை அணிந்த சிங்கள இராணுவத்தினர் இரும்புக் கம்பிகள், மண் வெட்டிப் பிடிகளைப் போன்ற குண்டாந்தடிகளால் கூட்டத்துக்கு வந்திருந்தவர்களை எந்த முன்னறிவிப்பும் இன்றிக் கடுமையாகத் தாக்கினார்கள்.

மேடையில் கூட்டத்துக்கு தலைமை வகித்த தமிழரசுக்கட்சியின் காங்கேசன்துறைத் தொகுதிச் செயலாளர் சுகிர்தனின் உடலைப் படையினரின் கொட்டன்கள் பதம் பார்த்தன. மேடையில் மட்டுமல்லாது கீழே அமர்ந்திருந்தவர்கள் மீதும் கொட்டன்களும் இரும்புக்கம்பிகளும் தாறுமாறாக விளையாடின. எவருமே படையினருடன் நியாயம் கதைக்கவோ அல்லது அவர்களிடம் கருணை கிடைக்குமென்று எதிர்பார்க்கவோ முற்படவில்லை. அங்கு வருகை தந்திருந்த 5 ததேகூ நா.உறுப்பினர்கள் மயிரிழையில் உயிர் தப்பினார்கள். அவர்களது பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த மெய்காப்பாளர்களே அவர்கள் மீது விழ வேண்டிய அடிகளைத் தாங்கிக் கொண்டார்கள். இரு மெய்பாதுகாப்பாளர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்ட்டார்கள்.

கடந்த ஓகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி இரவு நாவாந்துறையில் நடமாடிய கிறிஸ் மனிதனை மக்கள் மடக்கிப்பிடிக்க முயன்ற போது அவன் நாவந்துறையிலுள்ள இராணுவ காவலரணுக்குள் ஓடி ஒளிந்ததாக மக்கள் குற்றஞ்சாட்டினர். அதனைத் தொடர்ந்து மக்களுக்கும் படையினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. காவல்துறையினரது வண்டிகளைப் பொதுமக்கள் அடித்து  நொருக்கியதாகக் கூறி அங்கு உறங்கிக் கொண்டிருந்த மக்களை கேட்டுக் கேள்வியின்றி, வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து – பூட்டியிருந்த வீடுகளை உடைத்து வீட்டில் இருந்த அனைவரையும் தற தறவென்று இழுத்துச் சென்று மிகக் கடுமையாகத் தாக்கினர். இந்தக் கண்மூடித்தனமான தாக்குதல்களுக்குப் பெண்கள், சிறுவர்கள், நோயாளர்கள் என எவரும் தப்பவில்லை. நித்திரையிலிருந்த பொது மக்களை மதுவெறியும் இனவெறியும் தலைக்கேறிய காவல்துறையிரும் இராணுவமும் பொல்லுகளால்  அடித்தும் காலணிகளால் உதைத்தும் ஊழித்தாண்டவம் ஆடினர்.

தமது பிள்ளைகளை – கணவனை கண்முன்னே அடித்து உதைத்து இழுத்துச் செல்வதைத் தடுக்க முயன்ற பெண்களும் ஈவு இரக்கமின்றி தாக்கப்பட்டனர். யார் எவரென்றில்லாமல் வயது வேறுபாடின்றி மக்களைத் தாக்கிக் காயப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் தாக்கப்பட்டவர்களை கிட்டத்தட்ட 8 மணித்தியாலயங்களுக்கு மேல் தண்ணீர் கூடக் கொடுக்காமல் மருத்துவ ஏற்பாடுகள் எதுவுமில்லாமல் சிங்களப் படையினர் தடுத்து வைத்திருந்தனர்.

சுமார் 150 க்கும் மேற்பட்ட ஆண்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். அவர்களில் 30 பேருக்கு மேற்பட்டவர்கள் பொது இடத்தில் வைத்து கை கால்கள் முறிக்கப்பட்டனர். ஏனைய இடங்களில் மர்ம மனிதர்களைப் பிடித்தவர்கள் அல்லது எதிர்த்தவர்களே படையினரின் தாக்குதல்களுக்கு இலக்கானார்கள். ஆனால் இங்கே ஒட்டு மொத்த கிராமமே பாதிப்புக்குள்ளானது.

கைது செய்யப்பட்டு காவல்துறைக்கு இழுத்துச் செல்லப்பட்ட மக்கள் தம்மிடம் சிங்கள மொழியில் எழுதப்பட்ட வாக்குமூலங்களில் கையொப்பத்தை பெற்றுக்கொண்டதாக குற்றம்சாட்டுகின்றனர்.

மரத்தாலே விழுந்தவனை மாடேறி மிதித்தமாதிரி இராணுவம் மற்றும் காவல்துறை கை, கால் மற்றும் உடல் முழுவதும் தாக்கப்பட்ட நாவாந்துறை மக்கள் இராணுவ முகாமைத் தாக்கினார்கள் என்று குற்றஞ்சுமத்தி 100 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மறுபுறம் சிறீலங்கா இராணுவத்தினரும் காவல்துறையும் பொதுமக்கள் மீது மேற்கொண்ட தாக்குதல் மற்றும் பழிவாங்கல் நடவடிக்கைகள் தொடர்பாக 61 அடிப்படை மனித உரிமை மீறல் வழக்குகள் கொழும்பு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான வழக்கு விசாரணையை உயர் நீதிமன்றம் டிசம்பர் 13 ஆம் நாளுக்குத் தள்ளிப் போட்டுள்ளது.

சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டதால் தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் இதனால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்காக ஒவ்வொரு வழக்கு முறைப்பாட்டாளரும் தலைக்கு ரூபா 10 இலட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் முறைப்பாட்டில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வாதிகளாகப் பாதுகாப்புச் செயலர் கோத்தபா இராசபக்சே, இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசுரிய, பாதுகாப்புப் படைகளின் யாழ்ப்பாணக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத் துருசிங்க, காவல்துறை மா அதிபர் என். இலங்கக்கோன், இராணுவத்தின் 51 ஆவது படையணித் தளபதி வெல்கம, 512 ஆவது பயைணியின் தளபதி அஜித் பள்ளவெல, துணை காவல்துறை அதிபர் நீல் தலுவத்த, மூத்த காவல்துறை அத்தியட்சகர், நெவில் பத்மதேவா, உதவிப் காவல் அத்தியட்சகர் ஏ.எம்.சி.ஏ. பண்டார, யாழ்ப்பாண காவல்துறை தலைமையகப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா, பெண் காவலர் நதீகா மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரைக் குறிப்பிட்டுள்ளனர்.

வழக்கம் போல் தாக்குதலில் ஈடுபட்ட இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக நாவாந்துறையில் வெடித்த குழப்ப நிலையை உடனடியாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார் என்பதற்காக யாழ்ப்பாண காவல்நிலையத் தலைமைக் காவல் அதிகாரி சமன் சிகேரா காவல்துறை அதிபர் காமினி சில்வா அவர்களால் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

நாவாந்துறையில் சிங்கள இராணுவம் மேற்கொண்ட தாக்குல்களை நாட்டிலுள்ள தமிழர்கள் அனைவருக்கும் பாடமொன்றைப் புகட்டுவதற்கு சிங்களப் படைகள் மேற்கொண்ட நர வேட்டை எனக் கொள்ளலாம்.

இந்த மிலேச்சத்தனமான தாக்குதல்கள் மூலம் சிங்கள அடக்குமுறை இராணுவம் நாவாந்துறையில் நடந்தது, இனி எங்கும் நடக்கலாம் எங்கென்றாலும் தமிழர்கள் அடங்கித் தான் ஆகவேண்டும். மாறாக ஆடினீர்கள் என்றால் இது தான் நடக்கும் என்ற செய்தி சொல்லப்பட்டுள்ளது.

அளவெட்டி, நாவாந்துறை, பரந்தன் என இராணுவ பயங்கரவாதம் தொடரும் போது இராசபக்சே அரசு அவற்றைக் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

சிங்கள இராணுவமும் சிங்கள காவல்படையும் ஏன் இப்படிக் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்கிறது?

1) நாங்கள் ஆளும் இனம் நீங்கள் ஆளப்படும் இனம் எனவே நீங்கள் வாய்பொத்தி கை கட்டி வாழப் பழக வேண்டும்.
2) நாங்கள் எசமானர்கள் நீங்கள் கொத்தடிமைகள். எனவே நாங்கள் வைத்ததுதான் சட்டம்.
3) நாங்கள் தமிழர்களுக்கு எதிரான போரில் வென்று விட்டோம். எனவே நாங்கள்தான் வரலாற்றை எழுதுவோம். எழுதுகிறோம்.
4) நாங்கள் முதல்தர குடிமக்கள் நீங்கள் மூன்றாந்தரக் குடிமக்கள் என்பதை கனவிலும் மறந்துவிடக் கூடாது.
5) நாங்கள் பயங்கரவாதத்தை ஒழித்தவர்கள் நீங்கள் யாராக இருந்தாலும் உங்களைப் பயங்கரவாதிகளாகவே பார்ப்போம்.
6) நாங்கள் எது செய்தாலும் யாரும் தட்டிக் கேட்க முடியாது. நாங்கள் சட்ட திட்டத்திற்கு அப்பால் பட்டவர்கள் என்பது நினைவிருக்கட்டும்.
7) மனிதவுரிமை ஆணையத்திடம் முறைப்பாடு செய்கிறீர்களா? அங்கேயும் நம்மாள்தான் இருக்கிறார்கள்.
8) உயர் அல்லது உச்ச நீதி மன்றத்துக்கு நீதி கேட்டுப் போகிறீர்களா? அங்கேயும் நம்மாள்தான் இருக்கிறார்கள். உங்களுக்கு நீதி கிடையாது.

தொடர்ந்து வடக்கில் மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர். சிங்கள இராணுவமும் காவல்துறையும் அவர்களை தங்கள் எதிரிகளாகவே பார்க்கின்றன.

ஆனால் சிறீலங்காவில் எதுவுமே நடக்கவில்லை. சிங்களவர்களும் தமிழர்களும் ஒற்றுமையாகவே வாழ்கின்றனர், தமிழர்களுக்கு எதுவிதமான சிக்கல்களே இல்லை. சிங்கள அரசு தமிழ் மக்களுடன் நல்லுறவை – இணக்கத்தைப் பேணி வருகிறது. வடக்கில் வசந்தம் வீசுகிறது கிழக்கில் உதயம் உதித்துள்ளது என்ற தொனியில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க அண்மையில் நடந்த ஜெனிவா மாநாட்டில் பேசியிருந்தது நினைவிருக்காலம்.

மடியில் பூனையை வைத்துக் கொண்டு சகுனம் பார்த்தால் எப்படி? வடக்கை ஆக்கிரமித்துள்ள சிங்கள இராணுவத்தை (Sinhala occuption army) அகற்ற வேண்டும்.

இல்லையென்றால் ஆக்கிரமிப்பு இராணுவம் வடக்கில் குடிகொண்டிருக்கு மட்டும் தமிழ்மக்களுக்குப் பாதுகாப்பில்லை. நிம்மதி இல்லை. சுதந்திரம் இல்லை என்ற நிலைப்பாடே தொடரும்.  (November 15, 2011)


தமிழக உறவுகளே

சுண்டைக்காய் நாட்டு ஆட்சித் தலைவரான மகிந்த இராசபக்சே பாரத நாட்டுப் பிரதமரை தனது மாளிகையின் கூர்க்கா போல் நடத்துகிறார். தமிழக மீனவர்கள் தாக்கப்படமாட்டார்கள் என்று இராசபக்சே உறுதியளிப்பது இது நுாறாவது தடவை. இதுவரை காலமும் நிறுத்தப்படாத தாக்குதல்கள் இனிமேல் மட்டும் தாக்குதல் நிறுத்தப்படும் என எப்படி எதிர்பார்க்கலாம்?

சிங்கள அரசியல்வாதிகள் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளைப் பார்த்து கோமாளிகள் எனச் சொல்கிறார்கள்.  முகாம்களில் இன்னமும் ஏழாயிரம் பேர் மட்டுமே உள்ளதாகவும் அவர்களும் வரும் டிசெம்பர் மாதத்திற்குள் குடியமர்த்தப்பட்டு விடுவார்கள் என்றும் இராசபக்சே கூறுவது  சுத்தப் பொய். அண்ணளவாக மூன்று இலட்சம் மக்கள் தங்கள் சொந்த இடங்களில் மீள் குடியமர்த்தப்படவில்லை. அவர்கள் இடைத்தங்கு முகாம்களிலும் நண்பர்கள் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களது சொந்தக் காணிகளில் மீள்குடியமர்த்த இராசபக்சே மறுக்கிறார். காரணம் அவர்களது காணிகளை படையினருக்கு தளங்கள், குடியிருப்புக்கள் கட்ட இராசபக்சே கையகப்படுத்திவிட்டார்.

இன்று தமிழர்களது தாயகத்தில் இராணுவ ஆட்சியே நடைபெறுகிறது. வட – கிழக்கு மாகாண ஆளுநர் பதவியில் ஓய்வு பெற்ற இராணுவ தளபதிகள் அமர்த்தப்பட்டுள்ளார்கள். மாகாண இராணுவ தளபதிகளும் சிங்களவர்களே. இந்த இராணுவ தளபதிகளே தங்கள் விருப்பப்படி நிருவாகம் செய்கிறார்கள். சிவில் ஊழியர்கள் அவர்களிடம்  இருந்து பெறும் கட்டளைகளை நிறைவேற்ற கட்டாயப்படுத்தப் படுகிறார்கள். மறுத்தால் வேலை போய்விடும்.  அண்மையில் முற்றிலும் தமிழர்கள் வாழும் முல்லைத்தீவு மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கு அதிபர்களாக இருந்த தமிழர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு அவர்களது இடத்தில் சிங்களவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்!

சுருங்கச் சொன்னால் வடக்கிலும் கிழக்கிலும் சிங்கள இராணுவ ஆட்சியே நடைபெறுகிறது. தமிழர்கள் மூச்சுவிடவே திணறுகிறார்கள். இராசபக்சே கூலிக்கு மாரடிக்கும் சுதர்சனா நாச்சியப்பன் போன்ற போலித்  தமிழர்களை வரவழைத்து எல்லாமே நன்றாக இருக்கிறது என்று சான்றிதழ் வாங்கி அதனை உலக நாடுகளிடம் காட்டுகிறார்.

நக்கீரன்


எமது மக்களது விடிவுக்கான வழிகள்

நக்கீரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களது அமெரிக்க வருகை தமிழீழ அரசியலில் ஒரு திருப்புமுனையாக அமைந்திருக்கிறது. ஒரு புதிய தெம்பையும் நம்பிக்கையையும் தந்திருக்கிறது. அமெரிக்க இராசாங்க திணைக்களம் முதல் முறையாக அமெரிக்க ததேகூ க்கு அரசமுறையில் அழைப்பிதழ் அனுப்பி பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழர் தரப்பு அழைக்கப்பட்டிருப்பது இதுவே முதல் தடவை. இந்த அழைப்பை விட்ட தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான துணை இராசாங்க செயலாளர் றொபேட் பிளேக் (United States Assistant Secretary of State for South and Central Asia, Robert Blake)  அவர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

கடந்த ஒக்தோபர் 26 தொடக்கம் 28 வரை இருதரப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தை தொடர்ச்சியாக நடந்து முடிந்தது. ஒவ்வொரு நாளும் காலை தொடங்கி மாலைவரை பேசினார்கள். முதல் நாள் இராசாங்க கீழ்நிலை அதிகாரிகளோடு பேசிய ததேகூ நா. உறுப்பினர்கள் மறுநாள் றொபேட் பிளேக் அவர்களோடும் பேசினார்கள். இராசாங்க திணைக்கள அதிகாரிகளோடு மட்டும் அல்லாமல் அமெரிக்க மக்களவை (காங்கிரஸ்) உறுப்பினர்கள், மேலவை உறுப்பினர்கள் (செனட்) ஆகியோருடனும் பேசினார்கள். அந்தச் சந்திப்புக்களை அமெரிக்க இராசாங்க திணைக்களமே ஒழுங்கு செய்தது.

இந்த மூன்று நாள் சந்திப்பில் என்ன பேசினார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் தமிழர் தரப்பு தமிழ்மக்கள் எதிர்நோக்கும் அல்லது முகம் கொடுக்கும் சிக்கல்கள் பற்றிப் பேசியிருப்பார்கள்.

போர் முடிந்த பின்னர் உள்நாட்டில் இடம்பெயர்ந்த 280,000 ஆயிரம் மக்களது மீள்குடியேற்றம், மறு வாழ்வு, அரசியல் கைதிகளின் விடுதலை, அரசின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம், உயர் பாதுகாப்பு வலையங்களை அகற்றல், வட – கிழக்கில் இராணுவ பிரசன்னம், பவுத்தமதப் பண்பாட்டுப் படையெடுப்பு போன்ற விடயங்கள் பேசப்பட்டிருக்கும் என நம்பலாம்.

பலர் எதிர்பார்த்தற்கு மாறாக அமெரிக்க இராசாங்க செயலாளர் கிலாறி கிளின்டன் அவர்களோடான சந்திப்பு இடம்பெறவில்லை. கிலாறி கிளின்டன் சிறீலங்காவின் ஆட்சித்தலைவர் மகிந்த இராசபக்சேயை இதுவரை அமெரிக்காவில் வைத்துச் சந்தித்ததில்லை. மேலும் நாடுகள் தமக்கிடையே கடைப்பிடிக்கும் அரசதந்திர வரைமுறை (protocol) அதற்கு இடம்கொடுத்திருக்காது என நினைக்க வேண்டியுள்ளது.

அமெரிக்க இராசாங்க திணைக்கள அதிகாரிகளோடு என்ன பேசினீர்கள் என்ற கேள்விக்கு ”நாங்கள் எதிர்பார்த்ததை விட பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்தது” என்று மட்டும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் சொன்னார்.

கடந்த நொவெம்பர் 01 ஆம் நாள் அய்யன்னா அவையில் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்களை ததேகூ சந்திப்பதாக இருந்தது. அய்யன்னா அலுவலகமே ததேகூ இன் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களோடு தொடர்பு கொண்டு பான் கி மூன் அவரைச் சந்திக்க விரும்புகிறார் என்று நாளும் நேரமும் குறிக்கப்பட்டது. அதன் காரணமாகவே கனடாவுக்கு 29 ஒக்தோபர் இரவு வருகை தந்த திரு. சம்பந்தனும் திரு. எம்.ஏ. சுமந்திரனும் மீண்டும் நொவெம்பர் முதல் நாள் காலை அமெரிக்கா செல்ல ஏற்பாடாகி இருந்தது. இருந்தும் திரு. சம்பந்தனும் திரு.சுமந்திரனும் அய்யன்னா அவையின் Under-Secretary-General for Political Affairs B. Lynn Pascoe  அவர்களைச் சந்தித்துப் பேசினர். லின் பஸ்கோவை இந்தப் பதவிக்கு பான் கி மூன் அவர்களே மார்ச்சு 2007 இல் நியமனம் செய்திருந்தார். இவர் இந்தோனிசிய நாட்டுக்கு அமெரிக்கத் துாதுவராக (2004 – 2007) கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பான் கி மூனை திரு. சம்பந்தன் சந்திக்கத் தவறியதற்கு முக்கிய காரணம் இந்தச் சந்திப்புப் பற்றிய செய்தி ஊடகங்களில் முந்திக் கொண்டு வந்ததே. அந்தச் செய்தியை ஆர்வக் கோளாறு காரணமாகவோ என்னவோ ஊடகங்களுக்கு ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர்களே சொன்னார்கள்.

இந்தச் சந்திப்புப் பற்றிய முதல் செய்தி ஒக்தோபர் 18 ஆம் நாள் செய்தித்தாள்களில் வெளிவந்தது. மீண்டும் ஒக்தோபர் 22 ஆம் நாள் செய்தித்தாள்களில் வெளிவந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு. சம்பந்தன் அய்யன்னா பொதுச்செயலர் பான் கி மூனைச் சந்திப்பதை அறிந்து கொண்ட சிறீலங்கா அரசு அதனைத் தடுக்க பகீரத முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. இந்தச் சந்திப்பைப் பற்றி சிறீலங்காவின் மனிதவுரிமை அமைச்சர் மகிந்த சமரசிங்கா ”அய்யன்னா அதிகாரிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்திப்பார்கள் என்றால் ஏனைய தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளையும் சந்திக்க வேண்டி வரும்” எனக் கூறினார். மேலும் ததேகூ னர் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் இல்லை என்பதையும் எடுத்துக் கூறினார். இது தொடர்பாக கீழ்க்கண்ட செய்தியை கொழும்பில் இருந்து வெளியாகும் தினக்குரல் நாளேடு வெளியிட்டிருந்தது.

”நியுயோர்க்கிலுள்ள எமது நிரந்தரப் பிரதிநிதி கலாநிதி பாலித கோஹணவிடமிருந்து கிடைத்திருக்கும் தகவல்களின் பிரகாரம் அய்யன்னா செயலாளர் நாயகம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்திக்கவில்லை என்றே தெரிகிறது” என்று கூறினார். இது பற்றி அவர் மேலும் விளக்கமளிக்கையில்-

”நான் அண்மையில் அய்யன்னா அதிகாரிகளைச் சந்தித்த போது இவ்விடயம் பற்றிப் பேசினேன். அய்யன்னா செயலாளர் நாயகத்துடனான சந்திப்பின் போது இது பற்றிக் கதைக்கவில்லை. எனினும் அவருக்கு அடுத்தடுத்த நிலை அதிகாரிகளான அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான அய்யன்னா உதவி செயலாளர் நாயகம் லீன் பெஸ்கோ மற்றும் அய்யன்னா செயலாளர் நாயகத்தின் அலுவலக தலைமை அதிகாரி விஜே நம்பியார் உள்ளிட்டோரைச் சந்தித்த போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விவகாரம் பற்றிப் பேசினேன்.

அய்யன்னா அதிகாரிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்தித்து பேசுவதென்றால் அவர்கள் ஏனைய தமிழ், முஸ்லிம் கட்சிகளையும் சந்தித்துப் பேசத் தயாராக இருக்க வேண்டுமென்று சுட்டிக் காட்டினேன். அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் இல்லை என்பதையும் வடக்கு, கிழக்கிலிருந்து தெரிவான ஏனைய கட்சிகளும் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பதையும் எடுத்துக் கூறினேன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் இல்லை என்பதை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். அத்துடன் ஏனைய கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து மாறுபட்ட கொள்கைகளை கொண்டவை என்பதையும் அய்யன்னா அதிகாரிகளிடம் எடுத்துரைத்தேன்.

அய்யன்னா அதிகாரிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்திப்பார்கள் என்றால் ஏனைய தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளையும் சந்திக்க வேண்டி வரும். முரளிதரன் போன்றோரும் இருக்கின்றனர். அதுமட்டுமல்ல ஜாதிக ஹெல உறுமயவும் சில நேரங்களில் தங்களது கருத்துகளை முன்வைக்கச் சந்திப்புக் கோருவர்” என்று கூறினார். (தினக்குரல் – நொவெம்பர் 02, 2011)

கடந்த ஞாயிற்றுக் கிழமை (ஒக்தோபர் 30, 2011) மாலை அய்யப்பன் கோயில் மண்டபத்தில் நடந்த பொதுக் கூட்டத்திலும் அதனை அடுத்து அதே நாள் இரவு நடந்த விருந்தோம்பலிலும் பேசிய ததேகூ தலைவர் திரு.சம்பந்தன், பொதுச்செயலாளர் மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் சமகால அரசியல் பற்றியும் நாட்டிலே மக்கள் எதிர்நோக்கும் சமூக, பொருளாதார நெருக்கடி பற்றியும் அனைத்துலக சமூகத்தின் நிலைப்பாடு பற்றியும் அரசோடான பேச்சுவார்த்தை பற்றியும் விரிவாகப் பேசினார்கள். மக்கள் மனதிலே இருந்த பல கேள்விகளுக்கு அவர்களது பேச்சு விடையாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா இரவு விருந்தில் பேசிய பேச்சு சுருக்கமாகவும் கருத்தாளம் மிக்கதாகவும் இருந்தது. அதன் முக்கிய பகுதிகள் கீழே தரப்படுகின்றன.

(1) இன்று இலங்கை மண்ணில் சொந்தக்காரர்களாக இருக்கின்ற தமிழர்கள், தமிழர்கள் என்ற அடையாளத்தை இழந்துவிடக் கூடிய நிலை இருக்கிறது. அதனைத் தனது நிகழச்சி நிரலாக ஆக்கிக் கொண்டு – இராணுவத்தினுடைய கட்டளையின் அடிப்படையில் – அரசாங்கம்  செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழர்களுடைய அடையாளம் அழிக்கப்படுகின்றது. தமிழர்களுடைய நிலத்தினுடைய அடையாளம் அழிக்கப்படுகிறது.

(2) கனடா நாடு பல இனங்களைக் கொண்ட ஒரு நாடு. மிகச் சிறந்த ஒரு இணைப்பாட்சி அரசியல் அமைப்பை கொண்டவர்களாக கனடியர்கள் இருக்கிறார்கள். ஒரு காலத்திலே அழிக்கப்படுகிற இனமாக இருந்த யூதர்களுடைய தலைவராக இருந்த பென் குரியன் ஒரு அழைப்பு விடுத்தார். எங்கெங்கு யூதர்கள் வாழ்கிறார்களோ அவர்கள் எல்லாம் தங்களுடையது உழைப்பையும் தங்களது உப்பையும் ஒன்றுதிரட்டி ஒரு நாட்டை ஆள்பவர்களாக இருப்பதற்குப் போராட வேண்டும் என்று சொன்னது போல இன்றைக்கு எமது மக்கள் நாட்டிலே நடக்கின்ற விடுதலைப் போராட்டத்தோடு ஒன்றுபட்டு நிற்கிறார்கள். விடுதலையோடு,  சுதந்திரத்தோடு தங்களைத் தாங்களே ஆளுகின்ற ஒரு நாள் நிச்சயம் மலரும் எனகிற நம்பிக்கையோடு எமது மக்கள் இருக்கிறார்கள்.

(3) எமது மக்களுக்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். அவர்களுக்கு நீங்கள் பரிபூரணமாக ஒத்தழைப்பை வழங்க வேண்டும். ஆதரவற்று அநாதரவாக இருக்கின்ற பெண்கள் குழந்தைகளுக்கு இஸ்ரேலிய நாட்டின் தந்தை என்று அழைக்கப்பட்ட பென்குரியன் அவர்கள் பொருளாதார நிதியங்களை திரட்டி தங்களுடைய தேசத்துக்குச் செல்பர்களுக்கு வாழ்விடத்தை அமைப்பதற்கும் அவர்களுடைய அரசியல் அதிகாரத்தை உருவாக்குவதற்கும் அந்தந்த நாடுகளில் எப்படி உழைத்தார்களோ அது போல (புலம்பெயர்)  தமிழர்களும் உழைப்பாற்றல் கொண்டவர்கள். அறிவு  படைத்தவர்கள். எதிர்காலத்தில் தங்களது ஆற்றைலையும் அறிவையும் இலங்கையில் வாழுகின்ற தமிழர்களுக்கும் தமிழர் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கும் பயன் படுவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. அதனை அவர்கள் நிச்சயமாக நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.
(4) இன்றைக்கு இலங்கையில் தமிழர்களுடைய நிலத்திலே தமிழர்கள் வாழமுடியாமல் அகதிகளாக்கப்பட்டுள்ளார்கள். பல இலட்சக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளுக்குத் திரும்ப முடியாமல் இருக்கிறார்கள். இலட்சக்கணக்கான மக்கள் கூடாரங்களுக்குள்ளும் கொட்டகைக்குள்ளும் நண்பர்களது வீடுகளுக்குள்ளும் வாழ்கிறார்கள். அவர்களை அவர்களது மண்ணில் மீளக் குடியேற அனுமதிக்காமல் தென்னிலங்கையில் இருந்து சிங்களைவர்களை அழைத்து வந்து மீன்பிடிப்பதற்கும் வளங்களைப் பயன்படுத்துவதற்கும் அதே நேரத்தில் விவசாய நிலங்களில் விவசாயத்தைச் செய்வதற்கும் இலங்கை அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைள் மிகவும் கொடூரமான செயலாக அங்கே நிலைநாட்டப்பட்டு வருகின்றது.

(5) எங்கள் இனப் பரிமாணத்தை இனச் செறிவை – தமிழர்கள் எங்கெங்கு பலமாக இருக்கிறமோ அந்தச் செறிவைக் குலைத்து தமிழர்களுடைய பலத்தைக் குறைத்து நாடு முழுதும் சிங்கள பவுத்த அரசாக – நாடாக மாற்றுவதைத்தான் அவர்கள் தங்களது நிகழ்ச்சி நிரலாகக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே எங்களுடைய மக்கள் தங்களது நில உரிமையை எங்கள் மண்ணில் நிலைநாட்ட வேண்டியர்வகளாக அங்கே இருக்கிறார்கள். அரசாங்கம் இப்பொழுது தமிழ்மக்கள் தங்கள் நிலங்களைப் பதிய வேண்டும் என்று புதிய சட்டத்தை கொண்டுவந்துள்ளார்கள். அப்படி நீங்கள் பதியாது விட்டால் அவர்களுடைய நிகழ்ச்சி நிரலின் படி அந்த நிலங்களை எடுத்து விடுவார்கள்.

(6) அதே நேரத்தில் இராணுவம் என்ன செய்து கொண்டிருக்கிறதென்றால் அவர்கள் விரும்பிய நிலத்தை அவர்கள் அரசாங்க அதிகாரிகளுக்குக் கட்டளையிட்டு எந்தச் சட்டதிட்டங்களையுயும் பின்பற்றாமல் அவர்கள் அந்த நிலங்களை எடுத்து அந்த நிலங்களிலே இராணுவ முகாம்களை மட்டுமல்ல சீன அரசின் உதவியுடன் குடியிருப்புக்களை கட்டிக் கொண்டு தென் இலங்கையில் இருந்து சிங்களவர்களைக் கொண்டு வந்து குடியேற்றுகிறது. இது மிகவும் ஒரு அபாயகரமான ஒரு சூழ்நிலை.

(7) எங்களது நிலத்தை நாம் ஆளுவதற்கும் வாழ்வதற்கும் எமக்கு  சுயநிர்ணய உரிமை இருக்கிறது. அந்த உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்றால் எமக்குத் தொடர்ச்சியான நிலப்பரப்பு இருக்க வேண்டும். இது நமது தந்தை செல்வநாயகம் சொல்லித்தந்த தத்துவம். தொடர்ச்சியான நிலப்பரப்பு இருக்க வேண்டும் என்ற அந்த சுயநிர்ணய கோட்பாட்டுக்குரிய தத்துவம் – எங்களுக்கு பாரம்பரியமான மொழி, வரலாறு, கலை, கலாசாரம் இருக்கிறது என்ற அந்தத் தத்துவம் எல்லாம் – இன்றைக்கு நாசமாக்கப்பட்டு அடியோடு அகற்றப்பட்டு வருகிறது. இன்று தமிழ்மக்கள் நிலத் தொடர்ச்சி அற்றவர்களாக மாற்றப்பட்டு எல்லாம் அழிக்கப்பட்டு எங்களது பாரம்பரிய நிலத்தை இல்லாமல் செய்து – நிலம் இருந்தது என்பதை அடியோடு அழித்துவிட்டு – இன அடையாளத்தை அழித்து விட்டால் அந்த சுயநிர்ணய தத்துவமே எங்களுக்கு இல்லை என்ற நிலைமை உருவாக்குவதற்கு இன்று அரசாங்கம் திட்மிட்டுச் செயல்பட்டு வருகின்றது.

(8) நாங்கள் வெறுமையாக சில சொல்லாட்சிகளைப் பயன்படுத்திக் கொண்டு எங்களுக்குள்ளே பிளவுகளை ஏற்படுத்திக் கொண்டிருப்பதனால் எந்த விதமான பயனும் ஏற்படப் போவலில்லை. எந்தத் தத்துவத்தினால் எந்த சுயநிர்ணயக் கோட்பாட்டினால் எங்களுடைய நிலத்தில் நாம் ஆளுகின்ற உரிமை இருக்கிறது என்று நாம் வந்தோமோ அந்த அடிப்படையையே அத்திவாரங்களையே அகற்றி விடுவதற்கு இன்றைக்கு இருக்கிற அரசாங்கம் தொடர்ச்சியான வேலைகளைச் செய்து கொண்டு வருவதை நாம் ஒரு பொழுதும் அனுமதிக்க முடியாது.  நீங்கள் எல்லோரும் ஒன்றுபட்டுச் செயல்படுவதுதான் அதை மாற்றி அமைப்பதற்கு எமக்கு இருக்கிற ஒரேயொரு வழியாக அமையும் என நான் நம்புகிறேன்.

(9) நாங்கள் எங்களுடைய தேசத்தினுடைய விடிவிற்காக எங்கெங்கு எங்களுடைய புலம்பெயர்ந்த மக்கள் வாழ்கிறார்களோ எங்கெங்கு அமைப்புக்களாகக் கொண்டிருக்கிறார்களோ அவர்களோடு எல்லாம் நாம் பேசுகிறோம் பேச விரும்புகிறோம்.

(10) கனடாவிலும் ஏனைய நாடுகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் எமது மக்களின் எண்ணிக்கை எங்களுடைய எதிர்கால விடுதலைக்கு ஒரு பலம் வாய்ந்த சக்தியாக எமது மக்களுக்கு இருப்பதை நாங்கள் அடையாளம் கண்டிருக்கிறோம்.

(11) நாங்கள் இந்த அரசாங்கத்துடன் நம்பிக்கை வைத்துக் கொண்டு பேசவில்லை. ஆனால் சர்வதேசத்தினுடைய பலத்தை ஆதரவை எங்கள் பக்கம் வைத்திருக்க வேண்டிய சூழ்நிலையில் நாங்கள் இருக்கின்றோம். அந்த ஆதரவு எங்களுக்குத் தேவையாக இருக்கிறது. கனிந்து வருகின்ற அந்த இராசதந்திர போரில் எங்கள் மக்கள் மீது இருக்கின்ற அனுதாபத்தைப் பயன்படுத்தி அவர்களுடைய ஆலோசனையின் அடிப்படையிலும் கூட நாங்கள் இந்த அரசாங்கத்துடன் பேச வேண்டிய சூழ்நிலைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றோம். அப்படி அவர்களுடைய கருத்தின் அடிப்படையில் மட்டுமல்ல எங்களது கொள்கை கோட்பாட்டின் அடிப்படையிலும் நாங்கள் பேச்சுவார்த்தையின் மூலம் ஒரு அரசியல் தீர்வை எட்டுவதற்கு நாங்கள் திடசங்கற்பம் பூண்டவர்களாக எமது மக்கள் தந்த ஆணைக்கு இணங்க அரசுடன் பேசி வருகிறோம்.

(12) தமிழ்மக்கள் கொடுத்துள்ள அந்த ஆணைக்குத் தூய்மையாக நேர்மையாக வேலை செய்வதற்கு நாங்கள் முடிவு செய்திருக்கிறோம். அதைத் தமிழ்மக்கள் அளித்துள்ள அந்தத் தீர்ப்பை தமிழ் மக்கள் எங்களுக்குக் கொடுத்துள்ள அந்த ஆணையை சனநாயத்தின் பேரால் ஆட்சி செய்கின்றவர்கள் – நாங்கள் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் – சனநாயகத்தின் பேரால் ஆட்சி செய்கின்ற அரசு தமிழ்மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கொடுத்த அந்த ஆணையை ஏற்று நடைமுறையில் இருக்கிற இந்த அரசு ஒரு அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும்.

(13) முன் வைக்கத் தவறுமேயானால் நாங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போலவும் எங்களுடைய கட்சி எண்ணம் கொண்டிருப்பது போலவும் எங்களுக்கு வேறு வழியில்லாமல் போனால் நாங்கள் ஒரு அறவழியில் அகிம்சை வழியில் சனநாயக வழியில் தெளிவாக எங்கள் மக்களை அணிதிரட்டி நாங்கள் அங்கே ஒரு இயக்கத்தைத் தொடங்கும் போது வெளிநாடுகளில் இருக்கின்ற எமது இலட்சக்கணக்கான மக்களும் அந்தந்த நாடுகளின் அரசுகள் எங்களுக்கு ஆதரவு வழங்கக் கூடியதாக தங்கள் இயக்கத்தை நடத்த வேண்டும். அதை செய்வீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. நீங்கள் உங்களது உறவுகளை கைவிட மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. ஆகவே இதுதான் எங்களுடைய இலக்கு என்பதையும் அந்த இலக்கை அடைய நாமெல்லாம் ஒன்று பட்டு உழைப்போம் எனச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

பன்னிரண்டு தடவை பேசியாகி விட்டது பலன் ஒன்றும் இல்லை, அரசு காலம் கடத்துகிறது, ஒரு புறம் பேச்சுவார்த்தை என்று மாய்மாலம் செய்து கொண்டு மறுபுறம் எங்களது மண்ணை கொள்ளை அடிக்கிறது ஏன் என்ற கேள்விகளுக்கு பதில் அனைத்துலக சமூகம் ததேகூ பை சிறீலங்கா அரசோடு பேசச் சொல்கிறது. எனவே ததேகூ அரசோடு பேசித்தான் ஆக வேண்டும்.
எமக்கு இன்று இருக்கும் பலம் நான்கு தளங்களில் உள்ளன. ஒன்று தாய்நிலத்தில் உள்ள எமது மக்கள். இரண்டு புலத்தில் உள்ள எமது மக்கள். மூன்று தமிழ்நாட்டில் உள்ள எமது ஏழு கோடி உறவுகள். நான்கு மேற்குலக நாடுகளின் ஆதரவு. இவையே எமது மக்களது விடிவுக்கான வழி! (உலகத்தமிழர் – நொவெம்பர் 04,2011)


அதிமுக பக்கம் வீசிய தேர்தல் அலை ஓயவில்லை

நக்கீரன்

தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 10 மாநகராட்சிகளையும் அ.தி.மு.க. கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. மேலும் 89 நகராட்சிகள், 287 பேரூராட்சிகளும் அக்கட்சியின் வசமாயின.
23 நகராட்சிகள், 121 பேரூராட்சிகளில் திமுக வெற்றி பெற்றது. மற்ற கட்சிகளுக்கு மிகக்குறைந்த இடங்களே கிடைத்தன.
தமிழக சட்டசபைக்கு நடந்த தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிடவில்லை. விஜயகாந்தின் தேமுதிக, இரண்டு பொதுவுடமைக் கட்சிகள், மக்கள் மனிதநேயக் கட்சி, புதிய தமிழகம் போன்ற கட்சிகளோடு கூட்டணி வைத்துத்தான் அதிமுக போட்டியிட்டது. தேர்தல் முடிவுகள் வெளிவந்த போது அதிமுக தனிப் பெரும்பான்மையோடு வெற்றிபெற்றது. அதிமுக 160 தொகுதிகளில் போட்டியிட்டு 147 தொகுதிகளில் வென்றது. திமுக 119 தொகுதிகளில் போட்டியிட்டு 23 தொகுதிகளில் மட்டும் வெற்றிபெற்றது. முதல்முறையாக சட்டசபையில் எதிர்க்கட்சி என்ற தகைமையையும் இழந்தது.

சட்டசபைத் தேர்தல் முடிவுகள் 2011 – 2006

2011

2006

கட்சி தொகுதிகள் வெற்றி வாக்குகள் விழுக்காடு தொகுதிகள் வெற்றி வாக்குகள் விழுக்காடு
அதிமுக

160

147 1,43,81,820 39.08 135 68 1,07,68,559

32.64

திமுக

119

23    82,34,300 22.38 131 96 87,28,716

26.46

காங்கிரஸ்

63

5 34,26,247 9.30 48 35 27,65,768

8.38

தேமுதிக

41

27 29,02,813 7.88 232 1 27,64,233

8.38

பாமக

30

3 19,27,260 5.23 31 18 18,63,749

5.65

மார்க்சிஸ்டு

12

10 8,88,364 2.41 13 9 8,72,674

2.65

பா.ஜனதா

212

0 8,23,489 2.24 0 6,66,823

2.20

இ.கம்யூனிஸ்ட்

10

9 7,27,394 1.97 10 6 5,31,740

1.61

ஏனையவை அதிமுக

10

7 18

9

ஏனையவை திமுக

22

0 14

1

அதிமுக கூட்டணி

234

203 234

70

திமுக கூட்டணி

234

31 234

163

ஜெயலலிதா தனித்துப் போட்டியிடுவது என்று முடிவு செய்து உள்ளாட்சி சபைகளுக்கான அதிமுக வேட்பாளர்களை அறிவித்தபோது பலரது புருவங்களும் உயர்ந்தன. தனித்து அதிமுக தேர்தல் ஆற்றை நீந்திக் கரைசேருமா? என்ற கேள்விக்குச் சேருவது வில்லங்கம் என்றே பலரும் நம்பினர். தேர்தல் முடிவுகள் அந்த நம்பிக்கையைப் பொய்யாக்கிவிட்டது.

உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக தான் தனது கூட்டணிக் கட்சிகளை கரை சேர்த்தது என்ற உண்மை  தெளிவாகியுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் இரண்டு கட்டங்களையும் சேர்த்து பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 78.5  விழுக்காடாகும்.  முதல் கட்டத் தேர்தலில் நாமக்கல் மாவட்டத்தில் அதிகபட்சமாக 85 விழுக்காடும் வாக்குகள் பதிவாகின. மாநகராட்சிகளைப் பொறுத்தவரை சென்னை குறைவான அளவாக 51.63 விழுக்காடு வாக்குகள் மட்டுமே பதிவாயின. வேலூர் மாநகராட்சியில் தான் அதிகபட்சமாக 71  விழுக்காடு வாக்குகள் பதிவாயின.

பொதுவாக சென்னையைத் தவிர மற்ற எல்லா மாவட்டங்களிலும் 70-80 விழுக்காடு வரையான மக்கள் ஓட்டளித்துள்ளனர். உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் நலப்பணிகள் நடக்க வேண்டும், குடிநீர், நல்வாழ்வு சுகாதாரம் போன்ற அடிப்படை சிக்கல்கள்  தீர்க்கப்பட வேண்டும் என்ற ஆசையின் காரணமாகத்தான் அதிகளவு வாக்கு  பதிவாகியுள்ளது. கடந்த ஆட்சியின் போது உள்ளாட்சி அமைப்புகளில் ஊழல், கையூட்டு,  கட்டைப் பஞ்சாயத்து போன்றவை தலைவிரித்தாடின.

 

 தமிழ்நாடு  உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் – 2011

கட்சி மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி மாவட்ட ஊராட்சி வட்டார உறுப்பினர் கிராம ஊராட்சிகள் உறுப்பினர் மொத்தம் வாக்கு விழுக்காடு
மேயர் உறுப்பினர் தலைவர் உறுப்பினர் தலைவர் வட்டார உறுப்பினர்
அதிமுக 10 584 89 1681 285 2852 602 3864 9967 39.03
திமுக 0 130
23
964 121 1820 30 1008 4096 26.10
சுயேட்சை 0 55 5 552 64 1995 0 670 3339 9.46
தேமுதிக 0 8 2 120 3 392 5 338 868 10.10
காங்கிரஸ் 0 17 0 166 24 381 5 156 749 5.71
பாமக 0 2 0 60 2 108 3 227 402 3.55
பாஜக 0 4 2 37 13 181 2 30 269 1.35
மதிமுக 0 11 1 49 7 82 2 45 197 1.70
சிபிஅய்(மா)) 0 3 2 20 5 101 2 26 159 1.02
சிபிஅய் 0 4 0 10 2 33 4 46 99 0.71
ஏனையோர் 0 0 0 14 0 29 0 3 45
வி.சிறுத்தைகள் 0 1 0 13 0 12 0 10 36 0.51
புதிய தமிழகம் 0 0 0 0 0 7 0 9 16
ஏனைய கட்சிகள் 0 0 0 3 0 15 0 6 27
Total 10 819 124 3689 526 8008 655 6438 20269

             Source – Tamil Nadu State Election Commission (Updated as 22.38 pm on October 25, 2011)

சென்னை உட்பட தனித்துப் போட்டியிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் திமுக தோல்வி அடைந்துள்ளது. திமுக 23 நகராட்சிகளிலும் 121 பேரூராட்சிகளிலும் மட்டுமே வென்றிருக்கிறது.

சென்னையில் கடந்த 5 ஆண்டு காலம் மேயராக இருந்தவர்  திமுகவைச் சேர்ந்த மா. சுப்பிரமணியன் 5,19,747 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் சைதை துரைசாமியிடம் தோல்வியைத்  தழுவியுள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு 39.02 விழுக்காடு வாக்குகளும் திமுகவுக்கு 26.09 விழுக்காடு வாக்குகளும் கிடைத்துள்ளன.

சென்னை மாநகராட்சி மேயர் மற்றும் 200 வட்டாரங்களுக்காக நடந்த தேர்தலில், அதிமுக, சென்னை மாநகராட்சி மேயர் மற்றும் 168 வார்டுகளை கைப்பற்றியது. திமுக,  மதிமுக, தேமுதிக,  மற்றும் சுயேச்சைகள் சேர்ந்து சென்னை மாநகராட்சியின் 32  வட்டாரங்களில் வெற்றி பெற்றன.

சட்டசபைத் தேர்தலில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்ட திமுக இம்முறை இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. இருந்தும் திமுக தலைமை தோல்விக்கான காரண காரியங்களை அலசிப் பார்க்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
நடிகர் விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் பெரும் அதிர்ச்சித் தோல்வி அடைந்துள்ளது. பல்லடம் மற்றும் கூடலூர் நகராட்சிகளை அது கைப்பற்றியிருந்தாலும் மற்ற உள்ளாட்சிகளில் மிகக்குறைவான இடங்களிலேயே அது வெற்றி பெற்றுள்ளது. தேமுதிகவின் வாக்கு வங்கி ஏறக்குறைய அப்படியே உள்ளது. அக்கட்சிக்கு இந்தத் தேர்தலில் 10.11 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. அதிமுக வை விமர்ச்சிக்க விஜயகாந்த் ஆறு மாதம் அவகாசம் கேட்டதை மக்கள் இரசிக்கவில்லை. சட்டசபைக்கு அவர் ஒழுங்காகப் போவதில்லை என்ற குற்றச்சாட்டும் அவர் மீது உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் நிலை உலக்கை தேய்ந்து உளிப்பிடியான கதையாகிவிட்டது. அக்கட்சிக்கு 5.71 விழுக்காடு வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. பேரூராட்சித் தலைவர் பதவியை 24 இடங்களில் மட்டும் காங்கிரஸ் வென்றிருக்கிறது. தமிழ்நாட்டில் காமராசர் ஆட்சியைக் கொண்டுவரப் போவதாக பறைசாற்றறிய காங்கிரஸ் கனவு கலைந்துள்ளது. சட்டமன்றத் தேர்தல்களில் திமுகவுடன் கூட்டணி அமைத்துப்போட்டியிட்டு 5 இடங்களில் வென்ற காங்கிரஸ், தனித்துப் போட்டியிட்டு ஒரு நகராட்சியைக் கூட வெல்லமுடியவில்லை. இதனால் இதுவரை வாக்குப் பலத்தில் மூன்றாவது இடத்தில் இருப்பதாக நினைக்கப்பட்ட காங்கிரஸ் இப்போது அய்ந்தாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. இன்னும் இரண்டரை ஆண்டுகளில் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் நிலையில் இந்த முடிவுகள் அதற்கு அபாயச் சங்கு ஊதியதுபோல் காணப்படுகிறது.

திமுக ஆட்சிக் காலத்தில் திமுக அமைச்சர்கள் நிலப்பறிப்புப் போன்ற ஊழல்கள் செய்தார்கள் என்பதை வாக்காளர்கள் நம்பிவிட்டதாகத் தெரிகிறது. இரண்டாவதாக திமுக கருணாநிதி குடும்பத்தின் சொத்தாக மாறிவிட்டது என்ற குற்றச்சாட்டையும் மக்கள் நம்புகிறார்கள். இந்தக் குற்றச்சாட்டில் உண்மையில்லாமல் இல்லை. அப்பா தலைவர், மகன் பொருளாளர். மகள் மாநிலங்கள் அவை உறுப்பினர். இன்னொரு மகன் அழகிரி மத்திய அமைச்சர். அவரே தென்மண்டலத்தின் குறுநில மன்னராகவும் திகழ்கிறார். அதனால் திமுக இரண்டாம் நிலைத் தலைவர்கள் ஸ்டாலின் – அழகிரி அணிகளாகப் பிரிந்து செயல்படுகிறார்கள். திமுக வின் தோல்விக்கு இந்த அண்ணன் தம்பி சண்டையும் ஒரு காரணமாகும்.

2006 முதல், 2011 மே மாதம் வரை ஏறும் மேடைகளில் எல்லாம், “அதிமுக அடுத்த தேர்தலோடு காணமல் போய்விடும்” என முழங்கி வந்த அழகிரியின் தலையையே வெளியே காணோம்.  அழகிரியின் தளமான மதுரையிலும் மற்ற தென் மாவட்டங்களிலுள்ள மாநகராட்சிகள், பேரூராட்சிகள் அனைத்திலும் அதிமுக பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. இதற்குத்தான் சொல்கிறது அரசியலில் துணிவு மட்டுமல்ல பணிவும் வேண்டும் என்று.

திமுகவின் இளைஞர் அணிக்கு தாத்தாகப் போய்விட்ட ஸ்டாலினை தலைவராக நியமித்துள்ளதை யாராலும் நியாயப்படுத்த முடியாது. 62 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட திமுக வில் இந்தப் பதவிக்கு வேறு தகுதியான ஒருவர் இல்லையா?
2009 ஆண்டு இறுதிப் போரில் திமுக அரசு ஈழத்தமிழர் கதறி அழுத போது அவர்கள் கொல்லப்பட்ட போது கருணாநிதி மனிதசங்கிலிப் போராட்டம், விலகல் கடிதங்கள், நான்கு மணி உண்ணா நோன்பு என்று நாடகமாடினார். அதன் பலனை இப்போது அறுவடை செய்கிறார்.

ஈழத் தமிழர்களுக்காக இரண்டுமுறை ஆட்சியை இழந்துள்ளேன் என்று சொல்லி ஆட்சியைத் துறக்க மறுத்த கலைஞர் கருணாநிதி ஓர் ஆண்டு கழித்து ஆட்சியை இழந்தார். ஈழத்தமிழர்களுக்காக இரண்டுமுறை தான் ஆட்சியை இழக்க முடியும் என்று ஏதாவது விதி இருக்கிறதா? அன்று ஆட்சியை ஈழத்தழர்களுக்காக இழந்திருந்தால் அவர் மீண்டும் முதல்வராக வந்திருக்கலாம். மருத்துவர் இராமதாஸ், வைகோ, செந்தமிழன் சீமான் போன்றவர்கள் அவருக்கு ஆதரவாகப் பரப்புரை செய்திருப்பார்கள்.
பாரதீய ஜனதா மேட்டுப்பாளையம், மற்றும் நாகர்கோவில் நகராட்சித் தலைவர் பதவிகளை வென்றிருக்கிறது, பேரூராட்சிகள் 13 லும் அந்தக் கட்சி வென்றிருக்கிறது.

பாட்டாளி மக்கள் கட்சி தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணி விட்டு கூட்டணி தாவி வந்த இந்தக் கட்சியை இந்த முறை திமுகவும் அதிமுகவும் கழற்றிவிட்டு தனியே நிற்க வைத்தன. இதையடுத்து இரு திராவிடக் கட்சிகளையும் ஒழிப்பேன் என்று புதிய முழக்கத்தோடு தேர்தல் களத்தில் குதித்தார். பாமக வன்னியர் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் கூட  தோல்வியை சந்தித்திருக்கிறது.  இருந்தும்  60 நகராட்சி மன்ற உறுப்பினர்கள், 2 பேரூராட்சி தலைவர்கள், 108 பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் என உதாசீனப்படுத்த முடியாத அளவுக்கு இடங்களைப் பிடித்துள்ளது.  பாமக இன் தோல்விக்கு மருத்துவர் இராமதாஸ் அடிக்கடி அணி மாறுவது, தனது மகனுக்கு மாநிலங்கள் அவை நா.உறுப்பினர் பதவி கேட்டு திமுக விடம் ஒருமுறைக்கு மூன்றுமுறை தூது போனது போன்றவற்றை வாக்காளர்கள் இரசிக்கவில்லை.

இந்த தேர்தலில் பெரிய கட்சிகளாக கூறிக் கொண்ட தேமுதிக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் போன்றவை படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில், மதிமுக  தனித்துக் களம் இறங்கி 868 உள்ளாட்சி பதவிகளை கைப்பற்றியிருப்பது  மதிமுக வுக்கு அடிமட்டத்தில் இன்னும் செல்வாக்கு உள்ளதை வெளிப்படுத்தியுள்ளது. அக்கட்சியினருக்கு ஒளிமயமான எதிர்காலத்தை காட்டாவிட்டாலும் சற்றே  நம்பிக்கை அளிப்பதாயிருக்கிறது. கடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிய மதிமுக  இந்த உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களைப் பிடிக்கத் தவறின் அக்கட்சியின் எதிர்காலமே கேள்விக்குறியாக மாறியிருக்கும்.

தமிழ்த் தேசியத்தை தீவிரமாக ஆதரிக்கும் தேமுதிக, மதிமுக, பாமக, சிறுத்தைகள், புதிய தமிழகம், இரண்டு பொதுவுடமைக் கட்சிகள் ஆகியன ஒரு குறைந்து பட்ட நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஒன்றுபட்டு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க வேண்டும். காரணம் இந்தக் கட்சிகளுக்கு 18.56 விழுக்காடு வாக்குகள் இந்தத் தேர்தலில் கிடைத்துள்ளன. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.


களங்களும் பாதைகளும் வெவ்வேறாக இருந்தாலும் இலக்கு ஒன்றாக இருக்கட்டும்!

நக்கீரன்

சிறீலங்கா அரசுக்கு எதிரான அழுத்தங்கள் அனைத்துலக மட்டத்தில் அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்காவின் அழைப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமெரிக்க பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகவே எல்லோராலும் கருதப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்க அரசின் அழைப்பில் வருகை தந்திருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழர் தரப்பு அரசமுறையில் அமெரிக்க இராசாங்க திணைக்களத்துடன் பேசுவது இதுவே முதல் தடவையாகும்.
கடந்த செப்தெம்பர் 12 ஆம் நாள் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான துணை இராசாங்க செயலாளர் றொபேட் பிளேக் (United States Assistant Secretary of State for South and Central Asia, Robert Blake) சிறிலங்கா சென்றிருந்தார். அப்போது கொழும்பில் அவர் சந்தித்த முதல் அரசியல்வாதி ததேகூ இன் தலைவர் இரா. சம்பந்தன் ஆவார். ஒரு மணித்தியாலம் நீடித்த இந்தச் சந்திப்புக்குப் பின்னர் றொபேட் பிளேக் இரா. சம்பந்தனை அமெரிக்கா வருமாறு அழைப்பு விடுத்தார்.

இந்த அழைப்பை ஏற்றே ததேகூ தலைவர் இரா.சம்பந்தன், நா.உ.  பொதுச்செயலாளர் மாவை சேனாதிராசா, நா.உ.  எம்.ஏ. சுமந்திரன், நா.உ. திரு. சுரேஷ் பிரேமச்சந்திரன் அமெரிக்காவுக்கு வருகை தந்துள்ளார்கள்.

செவ்வாய் நள்ளிரவு அமெரிக்காவை வந்தடைந்த ததேகூ தலைவர்கள் முதல் கட்டமாக அமெரிக்க இராசாங்க அதிகாரிகளுடன் நேற்று (புதன்கிழமை) காலை முதல் முழு நாளும் பேசினார்கள். இன்றைய சந்திப்பில் துணை இராசாங்க செயலாளர் றொபேட் பிளேக் உம் கலந்து கொண்டார். இந்தப் பேச்சுவார்த்தை நாளையும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ததேகூ நா. உறுப்பினர்கள் நியூ யோர்க்கில் உள்ள  தமிழ் அமைப்புக்களின் ஆண்டு விழாக்களிலும் பங்கு பற்ற இருக்கிறார்கள். இதனை முடித்துக் கொண்டு வானூர்தி மூலம்  திரு. சுரேஷ் பிரேமச்சந்திரன் நீங்கலாக  ஏனையவர்கள் கனடாவுக்கு ஒக்தோபர் 29  நள்ளிரவு வருகிறார்கள்.

அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை காலை ததேகூ நா. உறுப்பினர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (கனடா) உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் சந்திக்கிறார்கள். அன்று மாலை 2.30 மணிக்கு அய்யப்பன் கோயிலில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்கள். அதனைத் தொடர்ந்து  ததேகூ தலைவர்களை தமிழினத்துக்கே உரித்தான விருந்தோம்பல் அளித்து சிறப்பான முறையில் வரவேற்பதற்கு ததேகூ (கனடா) ஒழுங்கு செய்துள்ளது. மாலை 6.30 மணிக்கு நடைபெறும் இரவு விருந்தில் பெருமளவு மக்கள் கலந்து கொண்டு  சிறப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்தநாள் (திங்கட்கிழமை)  காலை ஒட்டாவாவில் கனடிய வெளியுறவு திணைக்கள அதிகாரிகளையும் மாலை கனடிய நா.உறுப்பினர்களையும் சந்திக்கக் கனடிய வெளியுறவு அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.

நொவெம்பர் 01 ஆம் நாள் திரு. இரா சம்பந்தனும் திரு. எம்.ஏ. சுமந்திரனும் அய்யன்னா பொதுச் செயலாளரைச் சந்திக்க மீண்டும் அமெரிக்கா செல்கிறார்கள்.  திரு. மாவை சேனாதிராசா மட்டும் நொவெம்பர் 03 ஆம் நாள் வரை கனடாவில் தங்கி இருப்பார்.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர், குறிப்பாக 2010 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர்,  தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனடா வருவது இதுவே முதல் தடவை.  இந்த வரவுக்கு கனடிய அரசு இசைவளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க இராசாங்க திணைக்கள அதிகாரிகளோடான சந்திப்பில் தமிழ்மக்கள் எதிர்நோக்கும் குறுகிய கால சிக்கல்கள் பற்றியும் நீண்ட கால அரசியல் தீர்வு பற்றியும் ததேகூ தலைவர்கள் விபரமாக எடுத்துரைப்பார்கள்.

இலங்கையில் போர் முடிந்து 2 ஆண்டுகள் கழித்து ததேகூ உடன் சிறீலங்கா அரசு பேச்சுவார்த்தை தொடங்கியது. இந்த ஆண்டு சனவரி மாதம் தொடக்கம் பத்து சுற்றுப் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இந்தப் பேச்சுவார்த்தைகளில் உள்நாட்டில் இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் மறுவாழ்வு, உயர்பாதுகாப்பு வலையங்கள் அகற்றப்படுதல், வடகிழக்கில் செயல்படும் ஆயுதக் குழுக்களிடமிருந்து ஆயுதங்களைக் களைதல், அரசியல் கைதிகளின் விடுதலை ஆகியவை குறித்து பேசப்பட்டது. ஆனால் பத்துச் சுற்றுப் பேச்சுக்களுக்கு பிறகும் பேசப்பட்ட விடயங்களில் எந்தவிதமான பெரிய முன்னேற்றமும் காணப்படவில்லை. அரசியல் தீர்வைப் பொறுத்தவரை, கூட்டமைப்பு அரசாங்கத்திடம் கொடுத்த ஆலோசனைகள் எதற்கும் அரசிடமிருந்து எந்தவிதமான பதிலும் வரவில்லை. எனவே அரசியல் தீர்வுச் சிக்கல் பற்றி எந்தவிதமான விவாதமும் நடத்த முடியவில்லை.

இதனால் இருசாராருக்கும் இடையே நடந்து வந்த பேச்சுவார்த்தைகள் ஓகஸ்ட் 8 ஆம் நாளோடு ஒரு முட்டுக்கட்டை நிலையை எட்டியது.   இதனை அடுத்து ஓகஸ்ட் முதல் நாள் பின்வரும் மூன்று விடயங்களையிட்டு 2 வாரங்களில் அரசு தெளிவான பதில் அளிக்க வேண்டும் என ததேகூ கேட்டுக் கொண்டது. பதில் கிடைத்த பின்னரே தொடர்ந்து ததேகூ பேச்சு வார்த்தை மேசைக்கு வரும் எனவும் சொல்லப்பட்டது.

1 ஆட்சிமுறை பற்றிய கட்டுமானம்
1. The structure of governance

2. மத்திய அரசுக்கும் மாகாண அரசுக்கும் இடையிலான விடயங்களையும் பணிகளையும் எப்படிப் பிரித்துக்கொள்வது.
2. The division of subjects and functions between the centre and the devolved units.

3.  வரி மற்றும் நிதி பற்றிய அதிகாரங்கள்
3. Fiscal and financial powers, within a period of two weeks, to carry forward any future dialogue.)

ஓகஸ்ட் 4 அன்று (வியாழன்)  இரவு ததேகூ வெளியிட்ட அறிக்கை ஒன்றில் சிறீலங்கா அரசு பேச்சுவார்த்தைகளை வெளியுலகுக்கு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு முயற்சியாக காட்ட முனையும் அதே வேளையில், உண்மையில் இவை, ஒரு வெளித்தோற்றத்தை உருவாக்கும் முயற்சியாகவே இதைத் தாம்  பார்ப்பதாக கூட்டமைப்பு கூறியது.

இந்தப் பின்னணியிலேயே றொபேட் பிளேக்கின் தலையீடு காரணமாக சிறீலங்கா அரசும் ததேகூ உம் மீண்டும் பேசத் தொடங்கின. பேச்சுவார்த்தை தொடங்கும் என்ற செய்தியை றொபேட் பிளேக்கே கொழும்பில் வைத்து அறிவித்தார்.
செப்டம்பர் 10 ஆம் நாள் 11 ஆவது சுற்று பேச்சுவார்த்தையில் இனச்சிக்கலில் 13 ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று தீர்வு காண்பதற்கு இணக்கம் காணப்பட்டிருந்தது. இந்நிலையில் 12 ஆவது கட்ட பேச்சுவார்த்தை ஒக்தோபர் 03 இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

பின்னர் அரசு தரப்பு ஒக்தோபர் 8 ஆம் நாள் நடைபெற இருந்த உள்ளாட்சித் தேர்தலைக் காரணம் காட்டி ஒக்தோபர் 3 ஆம் நாளுக்கு பேச்சுவார்த்தையை தள்ளிப் போட்டது. மீண்டும் வேதாளம் முருங்க மரத்தில் ஏறியதால் ததேகூ பேச்சுவார்த்தையை தொடர்வதற்கு மூன்று முக்கிய கோரிக்கைகளை முன் வைத்துள்ளது.

1) வெலி ஓயா முல்லைத்தீவு மாவட்டத்தோடு இணைக்கப் படக்கூடாது.

2) மன்னார் தமிழ் அரச அதிபரை மாற்றிவிட்டு அவருக்குப் பதில் ஒரு சிங்கள அரச அதிபர் நியமிக்கப்படுவதை நிறுத்த வேண்டும்.

3) வடக்கில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் காணிப் பதிவு நிறுத்தப்பட வேண்டும்.

முன்னைய பட்டறிவின் அடிப்படையில் இம்முறையும் சிறீலங்கா அரசு இவற்றையிட்டு சாதகமான பதிலை இறுக்கப் போவதில்லை.

அமெரிக்க இராசாங்க திணைக்களத்தோடான பேச்சுவார்த்தையின் போது இடம்பெயர்ந்த 280,000 ஆயிரம் மக்களது மீள்குடியேற்றம், மறு வாழ்வு, அரசியல் கைதிகளின் விடுதலை, அரசின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம், உயர் பாதுகாப்பு வலையங்களை அகற்றல், வட – கிழக்கில் இராணுவ பிரசன்னம், பவுத்தமதப் பண்பாட்டுப் படையெடுப்பு போன்ற விடயங்கள் பேசப்படுகிறது.  இராசாங்க செயலாளர் கிலாரி கிளின்டன் அவர்களோடான சந்திப்பு இடம்பெறுமா என்பது தெரியவில்லை. ஆனால் நொவெம்பர் 01 ஆம் நாள் அய்யன்னா அவையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் அவர்களோடான சந்திப்பு இடம்பெறும்.

வட – கிழக்கில் நிதி, காணி, காவல்துறை போன்ற  குறைந்தபட்ச அதிகாரங்களைக் கொண்ட  கட்டமைப்பு  உருவாக்கப்பட வேண்டும். அல்லா  விட்டால் எமது இனம்  தனது அடையாளங்களையும் தனித்தன்மையையும்  இழக்கும் அபாயம் அதிகரிக்கும். சுதந்திரத்துக்கு முன்னரும் பின்னருமான திட்டமிட்ட சிங்களக்  குடியேற்றம் காரணமாக கிழக்கு மாகாணம் பறிபோய்விட்டது. அங்கு 40 ஆண்டுகளில் தமிழர்கள் சிறுபான்மை ஆகிவிட்டார்கள். இப்போது அரசின் பார்வை வடக்கில் படிந்துள்ளது.  வடக்கில் தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் சிங்களக் குடியேற்றம்,  பண்பாட்டுச் சிதைவுகள்,  இராணுவ மயப்பட்ட ஆக்கிரமிப்புக்கள் மொத்தமாகவே தமிழ் மக்களின் அடையாளங்களை வாழ்வியலை பாரதூரமாக சிதைத்துவிடலாம். எனவே ததேகூ க்கு நிலம், நிதி, காவல்துறை நீதித்துறை அதிகாரங்களைப் போராடிப் பெற வேண்டிய பொறுப்பு இருக்கிறது.

போர் நடந்த காலத்தில் அரசியல் தீர்வொன்றை முன்வைக்கப் போவதாகக் கூறி வந்த மகிந்த இராசபக்சே போர் முடிந்த பின்னர் இலங்கையில் இனச் சிக்கல் இல்லை, பெரும்பான்மை சிறுபான்மை என்ற வேறுபாடு இல்லை, எல்லோரும் இந்த நாட்டின் பிள்ளைகள் என்கிறார். கோத்தபாய போரில் சிங்களவர் வென்றுவிட்டதால் இனி அதிகாரப் பரவலாக்கல் தேவையில்லை என்கிறார். அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள். போரில் வென்றவர்கள்தான் வரலாற்றை எழுதுகிறார்கள்.

அரசியல் என்பது அதிகாரப் போட்டிதான். அது ஒரு முடிவற்ற போட்டி.  நாம் செய்யக் கூடியதெல்லாம் எமது நலன்களும் மேற்குலக நாடுகளது நலன்களும் ஒரு முனையில் இணைய வைக்க வேண்டும். இந்த பன்னாட்டு அரசியலை விளங்கிக் கொள்ளும் கெட்டித்தனம் எமக்குத் தேவை.

புலம்பெயர் தமிழர்கள் ஒரு கற்பனை உலகில் இருந்து கொண்டு எதையும் பேசலாம். பேசுவதில் தவறில்லை. ஆனால் தாயக அரசியல் பற்றிப் பேசும் போது அரசுகளின் பூகோள அரசியல் நலங்கள், வணிக நலன்கள் போன்றவற்றைக் கவனத்தில் கொண்டு பேச வேண்டும்.

எமது விடுதலைக்கு நாம் கொடுத்த கூடுதலான விலை, ததேகூ க்குப் பின்னால் இருக்கும் எமது தாயக மக்கள் பலம் இந்த இரண்டுமே பன்னாட்டு சமூகத்தை எம்மோடு பேச வைத்துள்ளது. சிறீலங்காவையும் எம்மோடு பேச வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளியுள்ளது.

சுயநிர்ணய உரிமையை ததேகூ கைவிடக் கூடாது, போர்க்குற்ற விசாரணைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என புலம்பெயர் தமிழர்களில் ஒரு சாரார் வற்புறுத்துகிறார்கள். சுயநிர்ணய உரிமையை யாரும் கைவிட வில்லை. ஆனால் அதற்கான கள நிலையை நாம் உருவாக்க வேண்டும். இது தொடர்பாக சுயநிர்ணயம் பற்றிப்  பேராசிரியர் நீல்சன்  ஜெனிவாவில் நடந்த பொங்கு தமிழ் நிகழ்வில் கூறியதை நாம் எழுத்துக் கூட்டிப் படித்து விளங்கிக் கொள்ள வேண்டும்.

“நானும் உங்களுடைய தனித்தமிழீழத்திற்கான முறையான கோரிக்கையை இங்கே பதிவு செய்கிறேன். மேலும் தமிழ்மக்களால் நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானத்தை ஆதரிக்கிறேன். ஆனால், தற்சமயம் இலங்கையில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதையும் நாம் பார்க்க வேண்டும். தற்சமயம் இருக்கக்கூடிய பெரிய ஆபத்து, தமிழர்களின் நிலப்பரப்பு குறைக்கப்பட்டு சிறுபான்மையாக மாற்றப்படுவது தான்.

பன்னாட்டுச்  சட்டத்தில், சிறுபான்மையினருக்குத் தனிப்பட்ட உரிமைகள் உள்ளன. ஆனால் ஒன்றுபட்ட உரிமைகள் கிடையாது.
உங்கள் சொந்த நாட்டின் நிலப்பகுதியில் நீங்கள் மக்களாக இருக்கும் வரையில் உங்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு.  இணைந்து வாழ்வதா அல்லது பிரிந்து செல்வதா என்பதை நீங்கள் தீர்மானிக்கலாம்.

சொந்த நாட்டில் போர்க்காலங்களில் இடம்பெயர்ந்தவர்கள் மீண்டும் தங்களுடைய சொந்த வாழ்விடங்களுக்கு திரும்புவதை தடுப்பதையும் அப்பகுதிகளில் சிங்கள விவசாயிகளை மக்களை கொண்டு காலனியாதிக்கத்தையும்  இராணுவத்தின் உயர்பாதுகாப்பு மண்டலங்களை ஏற்படுத்தியும் நாட்டின் முன்னேற்றம் வளர்ச்சி என்ற பெயரில் தமிழர்களின் நிலங்களை சுற்றுலாவிற்காக எடுத்துக்கொள்வதையும் சிங்கள அரசு 2009 லிருந்து ஒரு கொள்கையாகவே கொண்டுள்ளது.
மக்கள் தொகையிலும் அரசியலிலும் நீங்கள் சிறுபான்மையினராக மாற்றப்பட்டு வருகிறீர்கள் என்பதைதான் இந்த நடவடிக்கைகள் காட்டுகின்றன. மேலும் மோசமாக, அனைத்து மக்களும் வாழ்கின்ற தொடர்ச்சியான ஒரு பிரதேசமாக காட்டுவதற்காக முயற்சிக்கிறது. இந்த தொடர்சியான நிலப்பரப்பாக மாற்றும் நடவடிக்கையை நீங்கள் தடுக்கவில்லை, முறியடிக்கவில்லை எனில் யூதர்களுக்கு ஏற்பட்டதைப் போன்றே உங்களுக்கும் எல்லாம் கிடைப்பது போன்று இருக்கும் ஆனால் உங்களுக்கான சுயநிர்ணய உரிமை இருக்காது. தமிழினம் எதிர்நோக்கியுள்ள மிகப்பெரிய ஆபத்து இது என்பதை நீங்கள் உணர வேண்டும்.

தற்சமயம் தனிநாட்டிற்கான சுய நிர்ணய உரிமை என்பதை முன்னிறுத்த முடியாத சூழலில் நாம் இருக்கிறோம். இது நமது நீண்ட கால  இலக்கு. புலம்பெயர் தமிழர்களை விட, இலங்கைத் தீவில் வாழும் தமிழ்மக்கள், தங்களுடைய அரசியல்வாதிகள் செய்யக்கூடிய பிழைகளைத் தடுக்க வேண்டிய சரியான தருணம் இது.

நீங்கள் மேற்குல நாடுகளைப் பற்றிச் சிந்திப்பதைக் குறைத்துக்கொண்டு, இந்தியாவைப் பற்றியும் சற்று சிந்தியுங்கள். ஏனெனில் அவர்கள்தான் இன்றளவும் இலங்கையில் நடப்பதைத் தீர்மானிக்கும் ஆற்றலாக இருக்கிறார்கள்.” சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம், நிலம் இருந்தால்தான் சுயநிர்ணயம் பற்றிப் பேசலாம். இவைதான் பேராசிரியர் பேராசிரியர் நீலசன்  எமக்குப் படிப்பித்துக் கூறும் அரசியல் பாலபாடமாகும்.

அய்யன்னா வல்லுநர் குழுவின் போர்க்குற்ற அறிக்கை அய்யன்னா மனித உரிமை அவைக்கு பொதுச் செயலாளர் பான் கி மூன் அனுப்பி வைத்திருப்பதை ததேகூ வரவேற்றிருக்கிறது. அது பற்றி நாடாளுமன்றத்தில் பேசிய ததேகூ தலைவர் இரா. சம்பந்தன் தாங்கள் நாடாளுமன்றத்தில் அவ்வப்போது பேசி வந்ததையே அய்யன்னா வல்லுநர் அறிக்கை சொல்கிறது எனக் கூறியுள்ளார். போர்க்குற்ற விசாரணை வேண்டும் என்று ததேகூ நாடாளுமன்றத்தில் தொடர்ந்து பேசலாம். ஆனால் நாடாளுமன்றத்துக்கு வெளியே பேசக் கூடடிய அரசியல் வெளி இப்போது அங்கில்லை. இலங்கையில் கொடுங்கோல் ஆட்சி நடக்கிறது. ஆட்சியில் இருப்பவர்கள் கொடுங்கோலர்கள். போர்க் கதாநாயகன், அய்ந்து நட்சத்திர இராணுவ தளபதி, 42 இலட்சம் வாக்குகளைப் பெற்ற ஆட்சித் தலைவர் வேட்பாளர் சரத் பொன்சேகா இப்போது வெலிக்கடைச் சிறையில் பாயில் படுத்துறங்குகிறார். சாப்பாடும் அலுமினியத் தட்டில்தான். பன்னாட்டுப் போர்க்குற்ற விசாரணை வேண்டும் என்று நாடாளுமன்றத்துக்கு வெளியே கேட்டால் ததேகூ நா. உறுப்பியனர்களுக்கும் இந்த மரியாதைதான் கிடைக்கும்.

போர்க்குற்ற விசாரணை என்பது ஒரு தூர இலக்கு. அதனைப் புலம்பெயர் தமிழர்கள்தான் முன்னெடுக்க வேண்டும். மகிந்த இராசபக்சேயை சிறைக்கு அனுப்பினால் நல்லதுதான். அதனால் எமது மக்களுக்கு அரசியல் தீர்வு வரப்போவதில்லை. மேலும் மகிந்தா போனால் மானல், கோத்தபாய, பசில் என்று நிறையப் பேர் அவரது இடத்தைப் பிடிக்க வரிசையாக நிற்கிறார்கள்.
வட சுடான் ஆட்சித்தலைவர் மீது பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணை ஒன்று இருக்கிறது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரைப் பிடிக்க முடியவில்லை. அவர் சுதந்திரமாக உலா வருகிறார்.

எனவே நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும். அஞ்ச வேண்டிய இடத்தில் அஞ்சத்தான் வேண்டும்.  அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும், அஞ்சத் தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும்.

களங்கள் வெவ்வேறாக இருந்தாலும் பாதைகள் வெவ்வேறாக இருந்தாலும் இலக்கு ஒன்றாக இருக்கட்டும்! (Ulagathamilar – 29/10/2011)

September 13, 2011
Dr.E.M. Sudersana Natchiappan, MP
601, Brahamaputra, Dr. B.D. Marg, New Delhi – 10001
Telephone : 23766540, Mobile: 9868181909

Email id emsn@sansad.nic.in

Dear Dr. Natchiappan,
Vanakkam. I thank you for taking the initiative to hold a conference  under the auspices of the Parliamentary Forum for Human Rights for Global Development (PFHRGD) of all Thamil parties from 22&23 August, 2011. Sadly,  except for the TNA (TULF, EPLRF, TELO and Federal Party (AITK) the others are just  outfits on paper not representing the Thamil people even at the village level. At least one party the ENDPLF is widely believed to be led by Indian intelligence outfit the RAW.
I also watched the long interview you gave to Kumudam TV. In that interview you sought to emphasize the need for unity among Thamil parties/people.

The unity is already there as evidenced by the results of the elections held for the local bodies as well as for the parliament in the North and East. Thamils overwhelmingly voted for the TNA. This is particularly true in regard to elections for local bodies. The ruling party was defeated despite the use or misuse of state resources coupled with thuggery and dole outs by the UPFA.
I have no reservations with the aims and objectives of the conference. They are laudable and timely. It was  to provide  an opportunity for the Sri Lankan Tamil leaders to present their consensual views to the Indian Parliamentarians in helping them set out a framework of action required to be taken by the Indian government in its continued endeavour to find a lasting resolution to the Sri Lankan Tamil problem.

But if one is to judge the conference by what transpired,  it is an unmitigated failure. It was no surprise  the splinter parties couldn’t arrive at a consensus in almost all matters.

More than two years since the end of the war, Sri Lanka is further from reconciliation than ever.  A feeling of triumphalism prevails after its successful “war on terror” and the government of President Mahinda Rajapakse has refused to acknowledge, let alone address, the Thamil minority’s legitimate grievances against the state. Photographic and video evidence have surfaced  that the Sri Lankan Army widely  and  routinely followed a policy of executing surrendering LTTE  leaders and cadres  after blindfolding and stripping them naked. Channel 4 video says it all.

Since the war ended  Sri Lankan government  has increasingly cut minorities and opponents out of decisions on their economic and political futures rather than work towards reconciliation. As power and wealth is concentrated in the Rajapakse family, the risks of renewed conflict are growing again.  There is  increasing authoritarianism, militarism, intolerance,  lack of  transparency and failure to restore  civilian administration in the  North and East. Reconciliation will slip further out of reach if the government  continues  its  genocidal policies.

Currently the North and Eastern provinces are under military rule by Sinhalese army generals  despite the fact the majority of the people are Thamil speaking. The militarization of Northeast is evidenced by the appointment of high ranking  retd. and serving army generals to key posts. Both the Governors of North (Major G.A.Chandrasri) and East (Admiral Mohan Wijewickrama) provinces   are Retd. Sinhala Army General/Naval Admiral respectively.  The GA Trincomalee is  Retired Major General Ranjith Silva again a Sinhalese. Major General Mahinda Hathrusighe is the Army Commander in charge of Jaffna peninsula.  Thamil civilian officials have been  directed  to take orders from military officers.

If the press reports are accurate, you seem to have  put pressure on  the participants to look for a solution within the parameters of the 13th Amendment. I wish you read that piece of legislation. If you do, then you will find out that it is an empty shell. J.R.Jayawardena, the then President took the then Prime Minister Rajiv Gandhi down the garden path  metaphorically and literally. The Provincial Councils created  under the 13th Amendment are glorified municipalities. It is precisely for this reason TULF leaders like A.Amirthalingam and M.Sivasithamparam of the TULF rejected the 13th Amendment. The 13th Amendment confers all executive powers in the Governor appointed by the President and not the Council of Ministers. Hence the lament by the eastern province puppet Chief Minister Pillayan that he has no powers to even appoint a peon for his office. And the low point is Mahinda Rajapakse has said no to vesting Provincial Council with land and police powers.

Regrettably, the Congress government is dragging its feet endlessly. It has been repeating ad nauseam for the necessity to find a political solution acceptable to all the communities before, during and after the war with only deafening silence from the Sri Lankan government. Gotabhaya Rajapakse, the virtual Defense Minister and sibling of president Mahinda Rajapakse  has said that since the war is over there is no necessity for devolution of power! He means what he says and Mahinda Rajapakse has not contradicted him.

The truth of the matter is India’s foreign policy formulators in South block filled with Malayalees and Brahmins  are all  anti- Thamil. The Wiki leaks revelations about M.K. Narayanan says it all.  India played a key role in warding off international pressure on Sri Lanka to halt military operations and hold talks with the LTTE.
The US embassy noted in a cable in 2005 that ‘along with principal secretary (in PMO) T K A Nair, Narayanan constitutes what is now a Keralite mafia active in Prime Minister Manmohan Singh’s Office.’ Narayanan was not interested in a political solution for the Thamils,  instead he  was more interested in undermining the Thamil people’s armed struggle for autonomy. Internationally, he played the treacherous and criminal role  in the genocide of 60,000 Tamils  during the final phases of the war that  ended on 19 May 2009.

You as a Congress Party MP may not agree, but the Congress Party winning the general election in 2005 was the turning point in our history.  Since then the events that occurred in Mullaivaikkal was an Indian engineered genocide. The BJP government, which was in power up to 2005, though observing a ‘hands off policy’ in Sri Lanka, did its best to solve the intractable ethnic problem in Sri Lanka. It did nothing detrimental to the Thamil Tigers or the Thamils. It did not supply arms and ammunition unlike the Congress government which provided the Sinhalese army training, arms, radars, warships, intelligence, satellite pictures, finance etc.

The Forum for Human Rights for Global Development (PFHRGD) may be acting in good faith. But good faith alone is not enough to address the festering problems plaguing the Thamil people.

The Conference has been named ‘Agony & Solace’, agony yes but solace no.

Yours sincerely

 

Veluppillai Thangavelu

முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையைக் கூட்டித் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கவேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்!

இருபது ஆண்டு காலத்திற்கு மேலாக ஏறத்தாழ ஆயுள் தண்டனை கைதிகளைப் போல சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும்  சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரது தூக்குத்தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் 8 வாரங்களுக்குத் தள்ளிப்போட்டு கடந்த ஓகஸ்ட் 30 ஆம் நாள் இடைக்காலத் தீர்ப்பளித்தது. அந்த 8 வாரங்களில் 2 வாரங்கள் கழிந்துவிட்டன. இன்னும் 6 வாரங்களே எஞ்சியிருக்கின்றன.

முதல் நாள் சட்டசபைக் கூட்டத்தில் தூக்குத் தண்டனையை நீக்கும் அதிகாரம் தனக்கு இல்லை எனக் கூறியவர் பின்னர் தமிழகத்தில் ஏற்பட்ட கொந்தளிப்புக் காரணமாக முதல்வர்  ஓகஸ்ட் 30 இல் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவருக்கும் விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கவேண்டும் என்ற தீர்மானம்  கொண்டுவந்தார். அந்தத் தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது. தூக்குத் தண்டனை என்பது தமிழக மக்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது என்றும் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இத்தீர்மானத்தை கொண்டு வந்ததாகவும் அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்பின் கோரிக்கைகளை ஏற்று இத்தீர்மானத்தைக் கொண்டு வந்ததாகவும் முதலமைச்சர் ஜெயலலிதா  சட்டசபையில் கூறினார்.  பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கவும் முடிவு செய்யப்பட்டது. தீர்மானத்தைக் குடியரசுத் தலைவர் ஏற்றால் மூவருக்கும் விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை இல்லாமல் செய்ய  வாய்ப்புள்ளது.

இராசீவ் கொலை வழக்கில் சாந்தன், பேரறிவாளன், முருகன் 1991 இல் கைது செய்யப்பட்டார்கள். கடந்த 20 ஆண்டுக்கும் மேலாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். 1998 சனவரியில் தடா சிறப்பு நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட 26 பேருக்கு மரண தண்டனை விதித்தது. உச்ச நீதிமன்றம் 1999 மாதம் 19 பேரது மரண தண்டனையை இல்லாமல் செய்து எஞ்சிய 6 பேரில் 4 பேரது தூக்குத் தண்டனையை உறுதி செய்தும் 2 பேரது தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகவும் குறைத்தும் தீர்ப்பளித்தது.
தீர்ப்பின் போது இராசீவ் கொலை பயங்கரவாதச் செயல் அல்ல அது பழிவாங்கும் செயல் என உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.
தூக்குத்  தண்டனைக்கு ஆளான நான்குபேரில் ஒருவரான நளினியின் பெண் குழந்தை அனாதை ஆகிவிடும் என்ற கருத்தினை ஏற்று அவரது மரண தண்டனை  ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

ஆனால் பேரறிவாளன், சாந்தன், முருகன் தமிழக ஆளுநருக்கு இருமுறை சமர்ப்பித்த கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. “நாங்கள் ஏற்கெனவே 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளோம். இது ஆயுள் தண்டனை காலத்தைவிட அதிகமாகும். மேலும், இந்த தண்டனைக் காலத்தில் பாதிக்கும் மேற்பட்ட ஆண்டுகள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு வாடி வருகிறோம்” எனத் தங்கள் கருணை மனுவில் குறிப்பிட்டிருந்தார்கள்.

இதன் பின்னர் ஏப்ரில் 26, 2000 இல் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினார்கள். அந்த மனு மீது எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில் உடனடியாக முடிவெடுக்கும்படி நினைவுபடுத்தி அடுத்தடுத்துக் கடிதம் எழுதினார்கள். எனினும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இவர்கள் ஏற்கெனவே 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இது ஆயுள் தண்டனை காலத்தைவிட அதிகமாகும். மேலும் இந்த தண்டனைக் காலத்தில் பாதிக்கும் மேற்பட்ட ஆண்டுகள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்கள்.

இப்போது 11 ஆண்டுகளுக்குப் பின் சென்ற மாதம் 12 ஆம் நாள் அவர்களது கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு மரண தண்டனையை உறுதிசெய்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், செப்டம்பர் 9 ஆம் நாள் அவர்களைத் தூக்கிலிட வேண்டும் என்று நாள் குறிக்கப்பட்டது.

இருபது ஆண்டுகள் சிறையில் வாடியவர்களுக்குத் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது என்பது ஒரு குற்றத்துக்கு 2 தண்டனை அளிப்பதாகும். இவ்வாறு தண்டனை அளிப்பது சட்ட விரோதமானதாகும். மேலும், அவர்களது வாழ்வதற்குரிய சட்ட அடிப்படையான அடிப்படை உரிமையைப் பறிப்பதாகும்.

தூக்குத் தண்டனையை 137 நாடுகள் ஒழித்துவிட்டன. அமெரிக்காவில் 13 மாநில அரசுகள் தூக்குத் தண்டனையை ஒழித்துவிட்டன. இந்தியாவில் கூட கடந்த 7 ஆண்டுகளாக யாரும் தூக்கிலிடப்படவில்லை.

மத்திய அரசு இவ்வளவு காலமும் நித்திரை கொண்டுவிட்டு இப்போது எப்போதும் இல்லாத அவசரமாகத் திடீரென கருணைமனுக்களை நிராகரித்து தூக்குத் தண்டனையை நிறைவேற்றத் துடிப்பது தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக்கு கரும்புள்ளி வைத்து தமிழின ஆதரவாளர்களை அவருக்கு எதிராகத் திருப்புவதற்கான முயற்சியா என்ற அய்யம் இயல்பாக எழுகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக் குழுவின் தலைவரான தங்கபாலு இந்த இராசீவ் கொலையாளிகள் மூன்று பேருக்கும் வழங்கப்பட்ட தூக்குத் தண்டனை நியாயமானது அவர்களைத் தூக்கில் போட வேண்டும் என ஒற்றைக் காலில் நிற்பது அதனை உறுதிப்படுத்துகிறது.  தங்கபாலு மட்டுமல்ல இளங்கோவன் போன்ற காங்கிரஸ்காரனும் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரையும் தூக்கலிட வேண்டும் இல்லையேல் தமிழகத்தில் தீவிரவாதம் தலையெடுக்கும் என அலறுகிறார்கள்.
இந்த நிலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி  இன்றைய தமிழக அரசும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதோடு கடமை முடிந்து விட்டதாகக் கருதாமல் – மனித நேயத்தோடு பிரச்சினையை உண்மையிலேயே அணுக வேண்டுமானால் – அதற்குரிய விதிமுறைப்படி ஏற்கனவே திமுக அரசில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைப்படி – உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி அதிலே இந்த மூவரின் தூக்குத் தண்டனையை விலக்கு  செய்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி – அந்தத் தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்து அவர்களை விடுவிக்க ஆவன செய்ய வேண்டும் என அறிக்கை விட்டுள்ளார். அதற்கு தோழர் தியாகு மற்றும் கலியபெருமாள் இருவருக்கும் மன்னிப்பு அளித்து மரணதண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டதை மேற்கோள் காட்டியுள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் இருக்கும் போது ஒருவிதமாகவும் ஆட்சிக் கட்டிலில் இருந்து இறக்கப்பட்டால் வேறுவிதமாகவும் நடந்து கொள்ளும் ஒருவர் என்பது நாடறிந்த உண்மை.  ஆட்சிக் கட்டிலில் இருக்கும் போது இல்லாத தமிழ் உணர்வு ஆட்சிக் கட்டிலை விட்டு இறக்கப்பட்டதும் அது பொங்கி வழியும். கண்ணுக்குக் கண் என்பது போல கொலைக்கு மற்றொரு கொலை ஈடாகாது என்ற தத்துவம் வேறு.

இருபது ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் நளினி, தன்னை முன் விடுதலை செய்யுங்கள் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கை 2 ஆண்டுகளுக்கு முன்னர் தொடர்ந்தார். தமிழக அரசு மிகுந்த தாமதத்துக்குப் பிறகு சிறை விதிகளின் படி ஒரு ஆலோசனைக் குழுமத்தை அமைத்தது. அந்த ஆலோசனைக் குழுமத்தில் அனைவரும் கருணாநிதியின் அடிவருடிகளாக இருந்தாலும் மனச்சாட்சி உள்ள சில அதிகாரிகள் நியாயமான அறிக்கையைத் தரவே செய்தார்கள்.

ஆலோசனைக் குழுமத்தின் ஒரு உறுப்பினர் விடுதலை ஆன பின் நளினி தனது தாயார், தம்பி, மற்றும் தம்பி மனைவி ஆகியோரோடு தங்குவார், அவர் அவ்வாறு தங்குவதால் எவ்வித சிக்கலும் ஏற்படாது என்று யூலை 2009 இல் கொடுத்த தன் அறிக்கையில் குறிப்பிட்டார்.

இந்த அறிக்யைப் பெற்ற பின்னர் கருணாநிதி நளினியை விடுதலை செய்தால் தியாகத்தின் திருவிளக்கு, சொக்கத்தங்கம் சோனியாவின் மனம் கோணும் என்ற அச்சத்தில் இராயப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளரிடமிருந்து ஒரு அறிக்கையைப் பெறுகிறார்.

அந்த அறிக்கையில் நளினி விடுதலை பெற்ற பின் இராயப்பேட்டையில் உள்ள தனது தாயார் வீட்டில் தங்குவார். அந்தப் பகுதி, அமெரிக்க தூதரகம் மற்றும் மிக மிக முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் பகுதி ஆதலால் நளினி அங்கு தங்கினால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்று தெரிவித்திருக்கிறார்.

அப்பகுதியில் வசிக்கும் மிக மிக முக்கியப் பிரமுகர் வேறு யாருமல்ல கருணாநிதியேதான். நளினையை விடுதலை செய்யக் கூடாது என்று கருணாநிதி சமர்ப்பித்த அரசாணையில் நளினி புரிந்த குற்றம் மிகப் பயங்கரமானது, இராசீவ் கொலையில் முக்கிய குற்றவாளிகளோடு பழகியது மட்டுமல்லாமல் அக்குற்றவாளிகளுக்கு அடைக்கலம் தந்த குற்றத்தை நளினி செய்திருக்கிறார். இராசீவ் படுகொலைப் பற்றி நளினிக்கு முன்பே தெரியும். நளினியில் கணவர் இக்கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்றிருக்கிறார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி.தொமஸ் தனது தீர்ப்பில் கொலைத் திட்டம் நளினிக்கு மே 21 அன்று ஸ்ரீ பெரும்புதூருக்கு கிளம்பும் போதுதான் தெரியும். முருகன் மீது ஏற்பட்ட காதலால் நளினி இக்குற்றத்தில் தன்னையறியாமல் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார், அவர் வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு இக்குற்றத்தில் பங்கெடுத்தார் என்று சொல்ல இயலாது என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டுருக்கிறார். ஆனால் இதையெல்லாம் கருணாநிதி கவனத்தில் எடுக்கவே இல்லை!

அடுத்த காரணம் நளினி சிறையில் கல்வித் தகுதியை மேம்படுத்திக் கொண்டார் என்பதால் அவர் தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டார் என்று பொருளல்ல. இப்போது கூட அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டு வருத்தம் தெரிவிக்கவில்லை என்கிறது அரச ஆணை. இன்னொரு காரணம் நளினி விடுதலைக்குப் பின், அவரைத் தங்கவைத்து பாதுகாக்க அவரின் தாயார் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். நளினியில் தாயாரும் தம்பியும் இவ்வழக்கில் கைது செய்யப் பட்டு பின்பு விடுதலை செய்யப் பட்டவர்கள். அதனால், நளினியை விடுதலை செய்ய இயலாது. சிறையில் 7, 8 ஆண்டுகள்  சிறையில் கழித்தவர்களை விடுதலை செய்த கருணாநிதி 17 ஆண்டுகள் சிறையில் வாடும் நளினியை விடுதலை செய்ய நெஞ்சில் ஈரம் இருக்கவில்லை.
இதே இராசீவ் கொலை வழக்கில் 26 பேருக்கும் பொடா நீதிமன்ற நீதிபதி ஒட்டுமொத்த மரண தண்டனை விதித்தார். அதனை நீதிபதி கிருஷ்ணன் அய்யர் “இது ஒட்டுமொத்த மரண தண்டனை” (Wholesale Death sentence) என வருணித்தார். மேலும் நீதிபதியின் தீர்ப்பு நீதித்துறையின் பயங்கரவாதம் (Judicial Terrorism) என்றார்! அந்த 26 பேரில் 19 பேர் விடுதலையாகிப் போனார்கள். அவர்கள் விடுதலை செய்யப்பட்டதால் தமிழகத்தில் பிரளயம் ஏற்படவில்லை!

விடுதலையை மறுப்பதற்கு கருணாநிதி அரசு அடுக்கிய காரணங்கள் எவற்றையுமே நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் அடிப்படையில் கருணாநிதி அரசு நளினியை விடுதலை செய்திருக்கலாம் ஆனால் செய்யவில்லை. அவருக்கு இருந்த தமிழின உணர்வு அவ்வளவுதான்.

ஒரு ஆயுள் கைதி 14 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தால் போதும். அவரை விடுதலை செய்யலாம். அப்படித்தான் காந்தியைக் கொலை செய்த கோட்சேயை 14 ஆண்டுகள் கழித்து முடித்த பிறகு மகாராஷ்டிர காங்கிரசு அரசு அவனை விடுதலை செய்தது.

‘அஞ்சா நெஞ்சன் அண்ணன் அழகிரி’ கூடத்தான் தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். அதனால், கருணாநிதி அவர் வீட்டுக்குப் போவதை நிறுத்தி விட்டாரா? மதுரைப் பக்கம் போகவில்லையா?
தமிழினத்தலைவர், மூத்த அரசியல்வாதி, அரசியல் சாணக்கியர், முத்தமிழ் வித்தகர் என்றெல்லாம் வருணிக்கப்படும் கருணாநிதி போன ஆட்சியில் ஈழத்தமிழினம் எக்கேடு கெட்டாலும் பருவாயில்லை தனது பதவி பறிபோய்விடக் கூடாது என்பதற்காக நாற்காலியை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்த துரோகத்தோடு ஒப்பிடும்போது இன்றைய முதல்வர் ஜெயலலிதா நூறு மடங்கு மேல் என்றுதான் கூறவேண்டும்.

முதல்வர் ஜெயலலிதா பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவருக்கும் விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கவேண்டும் என்று சட்டசபையில்  தீர்மானம்  கொண்டுவந்ததை பாராட்டும் அதே வேளை அமைச்சரவையைக் கூட்டி தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கவேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றித் தமிழக ஆளுநருக்கு அனுப்ப வேண்டும். இந்த யோசனையை கருணாநிதி சொன்னார் என்பதற்காக புறம்தள்ளிவிடக் கூடாது. முன்னர் அரசியல் கட்சிகளதும் மக்களதும் வேண்டுகோளுக்கு மதிப்பளித்தது போல இப்போதும் மதிப்பளித்து அமைச்சர் அவையில் தீர்மானம் நிறைவேற்றி அதனை ஆளுநருக்கு அனுப்ப வேண்டும். இதனைத்தான் ஒட்டுமொத்த தமிழினம் எதிர்பார்க்கிறது.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு இது ஓர் அக்கினித் தேர்வு. அதில் அவர் தேறவேண்டும் என்பதே எமது அவா. எனவே அவரது அடுத்த கட்ட நடவடிக்கையை உலகத் தமிழினம் உன்னிப்பாகக் கவனிக்கிறது. (September 13, 2011)
யாருக்காக ராஜீவ் கொலை செய்யப்பட்டார்? விடை தெரியாத திடுக்கிடும் கேள்விகள்….

Published By பெரியார்தளம் On Thursday, September 8th 2011. Under பெரியார் முழக்கம், முதன்மைச்செய்திகள்

யாருக்காக ராஜீவ் கொலை செய்யப்பட்டார்? விடை தெரியாத திடுக்கிடும் கேள்விகள்…. என்று சுதாங்கன் எழுப்பிய கேள்விகளுக்கு2009 வரை விடை கிடைக்கவில்லை.நாடு முழுவதும் இன்று ஜெயின் கமிஷன் மீதே கவனம் செலுத்துகிறது. அதே சமயம் பூந்தமல்லியில் ராஜீவ் கொலை வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைகள் முடிந்து விட்டன. இந்த நீதிமன்றத்தின் நீதிபதி, ‘வழக்கின் தீர்ப்பு 1998 ம் ஆண்டு ஜனவரி 28 அன்று வழங்கப்படும்’ என்று அறிவித்திருக்கிறார். ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 26 பேரும், தேசத்தின் குடிமக்களும் இந்தத் தீர்ப்பை எதிர்நோக்கி ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த வழக்கில் குற்றவாளிகளின் சார்பில் எதிர்தரப்பு வாதம், 50 நாட்கள் நடைபெற்றது. இரகசியமாக நடந்த இந்த வாதங்களின் பல முக்கியப் பகுதிகள் தமிழன் எக்ஸ்பிரஸுக்குக் கிடைத்தன. சொல்லப்படாத பல பின்னணிக் கதைகளை வாசகர்கள் முன் கொண்டு வருகிறோம். குற்றம் சுமத்தப்பட்டவர்கள், ராஜீவ் கொலையை விசாரித்த விசேஷ புலனாய்வுத் துறை அதிகாரிகள், அரசு வழக்கறிஞர்கள் ஆகியோர் முன்னிலையில் தமிழக போலீஸின் பாதுகாப்புடன் எதிர்தரப்பு வாதம் நடந்தது. 1993 ம் ஆண்டு தொடங்கிய இந்த வழக்கு, 50 மாதங்கள் நடந்தது. 288 சாட்சியங்கள், 3000 அரசுத்தரப்பு ஆவணங்கள், 1000 எதிர்தரப்பு ஆதாரங்கள் ஆகிய அனைத்தும் நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டன. எதிர்தரப்பு வாதத்தில் எழுந்த பல கேள்விகளுக்கு விடையில்லை. சிறப்பு புலனாய்வுத் துறையின் இந்த விசாரணைகள், அதிகாரத்திலுள்ளவர்களின் அன்பைப் பெறும் வகையில் தான் நடந்தது என்று சந்தேகப்பட வைக்கிறது.

ராஜீவ் கொலை ஒரு வி.ஐ.பி.யின் மரணம் மட்டும் அல்ல; தேசத்தை சிதறச் செய்யும் மிகப் பெரிய சதி. பல அந்நிய சக்திகள் இந்தப் பரந்த தேசத்தைக் கட்டியாள நினைக்கும் தந்திரம். அதனாலேயே இந்த வழக்கிலுள்ள பல திடுக்கிடும் சம்பவங்கள், விசாரணையின் ஓட்டைகள் ஆகியன நமக்குத் தெரிய வேண்டியது மிக முக்கியம். இந்த விசாரணையில் எதிர்தரப்பு வாதங்களைத் தொடக்கி வைத்தவர் மூத்த வழக்கறிஞரான துரைசாமி. ஆழ்ந்து கவனித்துக் கொண்டிருந்த அந்த நீதிமன்ற அறையில் விசேஷ புலனாய்வுத் துறையின் ‘முன் ஜோடிப்பு கதைகளை’ போட்டு உடைத்தாராம் துரைசாமி. அதேபோல் எதிர்தரப்பு வழக்கறிஞர் ராமதாஸும் தன் 11 நாட்கள் வாதத்தில் குற்றப் பத்திரிகையில் புனையப்பட்டுள்ள பல கற்பனைக் கதைகளை சாட்சியங்களோடு வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார். இந்த எதிர்தரப்பு வாதங்களின் க்ளைமாக்ஸாக அமைந்தது வழக்கறிஞர் சந்திரசேகரின் கடும்வாதம். ஆதார பூர்வமாகவும், உணர்ச்சிகரமாகவும் பேசிய சந்திரசேகர், விசேஷ புலனாய்வுத்துறை ஏற்கனவே முடிவு செய்து தங்கள் முடிவுகளுக்கு ஏற்ப வழக்கை ஜோடித்ததாக கடுமையாகக் குற்றம் சாட்டினார். ‘நான் கேட்கிற சாட்சியங்களை புலனாய்வுத்துறை காட்டிவிட்டால் என் கட்சிக்காரர்கள் தாங்கள் குற்றம் செய்ததாக தாங்களே முன்வந்து ஒப்புக் கொள்வார்கள்’ என்று கூட சவால் விட்டார். இப்படி ஐம்பது நாட்கள் நடந்த எதிர்தரப்பு வாதங்கள் பல கேள்விகளை எழுப்பியிருக்கின்றன. இதோ அந்த விடை கிடைக்காத கேள்விகள்:

1. 1991 ம் வருடம் மே மாதம் 21 ம் தேதி டெல்லியிலிருந்து தேர்தல் பிரச்சாரத்திற்குக் கிளம்பினார் ராஜீவ் காந்தி. அவர் ஒரிசா, ஆந்திரா வழியாக சென்னை வந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிகழ்ச்சி நிரலில் இல்லாத ஸ்ரீபெரும்புதூரில் நள்ளிரவுக் கூட்டத்தில் கலந்துகொள்ள அவர் எப்படி ஒப்புக் கொண்டார்?

2. ஸ்ரீபெரும்புதூருக்கு ராஜீவை எப்படியாவது வரவழைத்துவிட வேண்டும் என்று எங்காவது திட்டம் தீட்டப்பட்டதா?

3. புவனேஷ்வர், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் ராஜீவ் பிரச்சாரத்திற்கு சென்றபோது அவருடன் இருந்தவர் பாதுகாப்பு அதிகாரி ஓ.பி. சாகர். ஆனால் அவர் சென்னைக்கு ராஜீவுடன் வரவில்லை ஏன்?

4. பல்கேரிய நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சிப் பத்திரிகையாளர்கள் ராஜீவ்காந்தியின் சுற்றுப் பயணத்தில் உடன் வந்தார்கள். அவர்களுடைய வேலை,ராஜீவ் பிரச்சாரத்தை வீடியோவில் பதிவு செய்வது. ஒரிஸாவிலும், ஆந்திராவிலும் ராஜீவ் செய்த முதல்கட்ட சுற்றுப் பயணத்தில் கலந்துகொண்ட அவர்கள், ராஜீவ் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டங்களுக்கு செல்லவில்லை. அவர்கள் பயணம் செய்த விசேஷ விமானத்தின் பைலட்டுடன் விசாகப்பட்டினத்தில் ஒரு ஆடம்பர ஹோட்டலில் தங்கியிருந்தார்கள். அப்படியானால் அவர்கள் உடன் வந்த காரணம் என்ன?

5. ராஜீவ் கிளம்புகிற விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. உடனே விமான நிலையத்திலிருந்து சர்க்யூட் ஹவுஸுக்குத் திரும்பினார் ராஜீவ். கோளாறு சரிசெய்யப்பட்டுவிட்டது என்கிற தகவல் அப்போதைய ஆந்திர முதல்வர் விஜயபாஸ்கர ரெட்டி மூலமாக கிடைத்தவுடன் விமான நிலையம் திரும்பினார் ராஜீவ். இந்தக் குழப்பத்தில் இந்த இரண்டு பல்கேரிய நாட்டு பத்திரிகையாளர்கள், பாதுகாப்பு அதிகாரி சாகரை தங்கள் காரில் ஏற்றிக் கொண்டு தாமதமாக விமான நிலையத்துக்கு வந்தார்கள். இதனால் ராஜீவுடன் விமானத்தில் பயணம் செய்ய சாகரால் முடியவில்லை. அனுபவம் மிக்க அந்தப் பாதுகாப்பு அதிகாரியை ராஜீவுடன் போகவிடாமல் செய்தது ஏன்?

6. சென்னையில் ராஜீவின் பாதுகாப்பு அதிகாரியாக செல்லவேண்டிய பி.சி.குப்தா, சென்னை விமான நிலையத்தில் ராஜீவுக்காக காத்திருந்தார். அதே விமானத்தில் வந்திருக்க வேண்டிய சாகரிடமிருந்து கைத்துப்பாக்கியை அவர் பெற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் சாகர் வராததால் கைத்துப்பாக்கி இல்லாமலேயே குப்தா, ராஜீவுடன் செல்ல நேர்ந்தது. இதற்கு ஏதாவது உள்நோக்கம் உண்டா?

7. ராஜீவ் மீனம்பாக்கத்திலிருந்து கிளம்பியவுடன் ராமாவரம் தோட்டம் அருகே பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் இரண்டு பெண்கள் அவர் காரில் ஏறினார்கள். அவர்களுடைய அடையாளங்கள் சோதனைக்குள்ளானதா? இன்றுவரை அவர்களை ஏன் விசேஷப் புலனாய்வுத்துறை விசாரிக்கவில்லை?

8. யார் அந்த பல்கேரியர்கள்? அவர்கள் எங்கு சென்றார்கள்?

9. யார் அந்த இரண்டு அயல்நாட்டு பெண் பத்திரிகையாளர்கள்? அவர்கள் எங்கு சென்றார்கள்?

10. அந்த இரண்டு பத்திரிகையாளர்களும் ராஜீவை பேட்டி கண்டார்கள். ஆனால் தா. பாண்டியனும், மரகதம் சந்திரசேகரும் அவர்கள் என்ன பேசினார்கள் என்பது தெரியாது என்றார்கள். இவர்கள் எதை மறைக்க முயலுகிறார்கள்? ஏன்?

11. தான் கொலை செய்யப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, பாகிஸ்தான் ஜனாதிபதி ஜியா-உல்-ஹக்கை கொன்றது சி.ஐ.ஏ.தான் என்றார் ராஜீவ். அவர் ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்? அவரை சொல்லத் தூண்டிய காரணம் என்ன? தனக்கெதிராகவும் இப்படி ஒரு திட்டம் இருக்கலாம் என்பது அவருக்கு முன்கூட்டியே தெரியுமா?

12. 1991 ஜுலை மாதம் அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் எஸ்.பி. சவான், எல்.டி.டி.ஈ.யைத் தவிர வேறு சில சர்வதேச நிறுவனங்களும், பலம் வாய்ந்த வெளிநாட்டு சக்திகளும் ராஜீவ் கொலையின் பின்னணியில் இருக்கிறார்கள் என்றார்.

13. உள்துறை அமைச்சர் அப்படி சொல்லக்காரணம் என்ன என்பதை விசேஷ புலனாய்வுத்துறை ஏன் விசாரிக்கவில்லை?

14. வளைகுடா போரின்போது அமெரிக்க விமானங்களுக்கு இந்தியா எரிபொருள் கொடுத்து உதவியது. இந்த உதவியைச் செய்த சந்திரசேகர் அரசைக் கடுமையாகக் கண்டித்தார் ராஜீவ் காந்தி. அமெரிக்காவிற்கு இதனால் ராஜீவ் மீது ஏற்பட்ட கோபத்தையும், இந்தக் கொலையின் பின்னணியில் சி.ஐ.ஏ.வுக்கு பங்கு உண்டா என்பதையும் ஏன் புலனாய்வுத்துறை விசாரிக்கவில்லை?

15. பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் அராபத், ‘ராஜீவ் உயிருக்கு ஆபத்து இருக்கிறது’ என்று அன்றைய பிரதமர் சந்திரசேகரிடம் தெரிவித்தார்.’அவருக்கு இந்தத் தகவல் எங்கிருந்து கிடைத்தது? யார் மூலமாக ராஜீவுக்கு மிரட்டல்?’ என்பதை ஏன் புலனாய்வுத் துறை விசாரிக்கவில்லை?

16. மேற்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளில் கொலைக்கான திட்டம் தீட்டப்பட்டிருந்தால் மட்டுமே அரபாத்திற்கு இந்தப் பின்னணி தெரிய வாய்ப்புண்டு.

17. மரகதம் சந்திரசேகர் ராஜீவ் காந்தியுடன் கூட்டம் நடந்த இடத்திற்கு வந்தார். அவருடைய மகள் லதா பிரியகுமார் தன் கணவருடனும் வழக்கறிஞர் மகேந்திரனுடனும் அரக்கோணத்திலிருந்து வந்தார். அவரது மகன் லலித் சந்திரசேகர் மனைவி வினோதினியுடன் எங்கிருந்து வந்தார் என்பதை விளக்கவேயில்லை. வினோதினி இலங்கையைச் சேர்ந்த ஜூனியஸ் ஜெயவர்த்தனாவின் மகள் என்பது தெரிந்தும் அவரை ஏன் விசாரிக்கவில்லை?சம்பவ இடத்தில் அந்தக் குடும்பத்தினர் இருந்தும் அவர்களை ஏன் விசாரிக்கவில்லை?

18. சிவராசனின் தாயாரும், வினோதினியின் தந்தையும் சிங்களவர்கள் தான். சம்பவ இடத்தில் அவர்கள் இருந்தார்கள். அவர்கள் இலங்கை ஜனாதிபதி பிரேமதாஸாவின் தூதுவர்களாக இருக்க வாய்ப்புண்டு. இந்திய அமைதிப்படை விவகாரத்தில் பிரேமதாஸாவுக்கு ராஜீவ் மீது கோபம் உண்டு. அந்தக் கோணத்தில் ஏன் விசாரணை செய்யப்படவில்லை?

19. விடுதலைப் புலிகள், இலங்கை அரசு இரண்டுக்கும் ஒரு விஷயத்தில் ஒற்றுமை உண்டு. இந்திய அமைதிப் படை இலங்கையில் நுழையக் காரணமாக இருந்த ராஜீவ் மீது இரு தரப்பினருக்கும் கோபமுண்டு. இந்த விஷயத்தில் எதிர்தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகர் விசேஷப் புலனாய்வுத் துறைக்கு ஒரு சவால் விட்டார். ‘வினோதினியின் பூர்வீகம் என்ன? அவரும், அவர் குடும்பத்தினரும் அப்பாவிகள் என்பதை நிரூபித்தால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவருமே தானாகவே தங்கள் குற்றத்தை ஒப்புக் கொள்வார்கள் என்றார். இறுதிவரை அவர் சவால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் விசாரிக்கப்படவும் இல்லை.

20. காமினி திசநாயகா, அத்துலத்முதலி, விக்கிரமசிங்கே இவர்கள் எல்லாம் இலங்கையின் முக்கிய அரசியல்வாதிகள். இவர்கள் கொலை செய்யப்பட்ட போது அந்தப் பழி இலங்கை அதிபர் பிரேமதாஸாவின் மீது சுமத்தப்பட்டது. ராஜீவ் விஷயத்தில் ஏன் அந்தக் கோணத்தில் விசாரணை இல்லை?

21. சிவராசன், தணு, சுபா ஆகியோர் ஒரு அந்நிய சக்தியின் தூண்டுதலால் ஏன் இந்தக் கொலையை செய்திருக்கக் கூடாது? அந்த மூவரும் யாழ்ப்பாணத் தமிழர்கள் என்பதால் மட்டுமே அவர்களைப் புலிகளுடன் தொடர்புபடுத்தி விசாரணையை முடித்துவிட்டார்களா?

22. புலிகளையும், அதன் தலைவர் பிரபாகரனையும் சம்பந்தப்படுத்த என்ன பலத்த ஆதாரம் புலனாய்வுத் துறையிடம் உள்ளது?

23. பிரபாகனும், சிவராசனும் ரேடியோ மூலம் பேசியதை விசேஷப் புலனாய்வுத் துறை கேட்டதாகச் சொல்லப்படுவது ஏன் ஒரு கற்பனையான ஆதாரமாக இருக்கக்கூடாது?

24. ‘விசேஷ’ இலட்சியமுள்ள அரசியல்வாதிகள், ஏன் அவரது காங்கிரஸ் தோழர்களே கூட தங்கள் வளர்ச்சிக்கு ராஜீவ் தடையாக இருக்கிறார் என்பதால் கூலிப்படையினரை ஏவிவிட்டு ஏன் இந்தக் காரியத்தை செய்திருக்கக்கூடாது?

25. பல்வேறு நாட்டு ஆயுத வியாபாரிகள், பிரதமர் என்கிற முறையில் ராஜீவுடன் தொடர்பு வைத்திருந்தார்கள். கூலிப்படைகள் மூலமாக அவர்கள் ஏன் இந்தக் காரியத்தை செய்திருக்கக்கூடாது?

26. மறுபடியும் அமைதிப்படை தங்கள் நாட்டில் நுழையலாம் என்கிற எண்ணத்தில் இந்தியாவுக்கு வலுவான தலைவர் இருக்கக்கூடாது என்று இலங்கை அரசு ஏன் நினைத்திருக்கக்கூடாது?

27. மூன்றாவது உலக நாடுகளின் தலைவர்களை அப்புறப்படுத்துவதில் சி.ஐ.ஏ. வுக்கு அதிக அக்கறை உண்டு. அந்த எண்ணம் ராஜீவ் விஷயத்தில் இருந்ததா?

28. புலிகளின் ‘இந்துத்துவா’ அபிமானம், இலங்கைத் தமிழர்களுக்கு உண்டான இந்து வெறி இரண்டையும் பயன்படுத்தி ஆர். எஸ்.எஸ். பிஜேபி இலங்கைத் தமிழர்கள் மூலமாக ஏன் இந்தக் காரியத்தை செய்திருக்கக்கூடாது? அவர்கள் ஆட்சியைப் பிடிக்க தடையாக இருக்கும் ஒரே தலைவர் ராஜீவ் தான். மகாத்மாவைக் கொன்றவர்கள் ஏன் ராஜீவைக் கொன்றிருக்கக்கூடாது?

29. வாழப்பாடி ஏற்றுக் கொள்ளவில்லை. மூப்பனார் அக்கறை காட்டவில்லை. ஆனால் மரகதம் சந்திரசேகர் மட்டும் டெல்லி சென்று ஏன் ஸ்ரீபெரும்புதூருக்கு வரவேண்டும் என்று ராஜீவை வற்புறுத்தினார்? தன்னை அறியாமல் சிக்கி ராஜீவ் மரணப்படுக்கையில் விழக் காரணமாகி விட்டாரா?

30. யார் இந்த பொட்டு அம்மான்? இப்படி ஒரு நபர் இருக்கிறாரா? அம்மான் ஒரு மூத்த தலைவர். ஒரு போரில் இறந்துவிட்டார். பொட்டு மட்டுமே உள்ளார் என்கிறது எல்.டி.டி.ஈ. வட்டாரம். உயிருடன் இல்லாத ஒரு நபரை எப்படி இரண்டாவது குற்றவாளியாக புலனாய்வுத்துறை முத்திரை குத்தியது?

31. பத்மநாபா கொலை வழக்கையும், இந்த வழக்கையும் ஒப்பிட்டால் பல உண்மைகள் வெளிவருகின்றன. தமிழ்நாடு காவல்துறையின் ‘க்யூ’ பிராஞ்ச்,பத்மநாபா வழக்கை விசாரித்தது. விசேஷப் புலனாய்வுத்துறை, ராஜீவ் கொலை வழக்கை விசாரணை செய்தது. இரண்டு விசாரணை அமைப்புகளும் சதி நடந்த இடம் யாழ்ப்பாணம் என்கின்றன. பத்மநாபா வழக்கில் குற்றவாளிகளில் சிவராசன். ராஜீவ் வழக்கில் அவர் முக்கிய குற்றவாளி. அப்படியானால் ராஜீவ் கொலையில் குற்றவாளியாகக் கருதப்பட்ட பிரபாகரன் பத்மநாபா வழக்கில் ஏன் குற்றவாளியாக சேர்க்கப்படவில்லை? ஆகவே பிரபாகரன் பெயரை நுழைப்பது அரசியல் முடிவே தவிர விசாரணையினால் கிடைத்த தெளிவே அல்ல. கடும் உள்நோக்கத்துடன் வழக்கிற்கு உயிர்கொடுக்க புலனாய்வுத்துறை செய்த முயற்சி இது.

32. விமான நிலையத்தில் ராஜீவை சந்தித்தார் கவிஞர் காசி. ஆனந்தன். அவர் பிரபாகரனிடமிருந்து ராஜீவுக்கு கொண்டு வந்த தகவல் என்ன? ‘ஈழ விடுதலைக்கு ராஜீவின் உதவி தேவை’ என்று பிரபாகரன் காசி ஆனந்தன் மூலமாக வேண்டுகோள் விடுத்திருந்தால் ஏன் அவரை பிரபாகரன் கொலை செய்ய வேண்டும்?

33. இந்தியா மற்றும் தமிழகத்தில் தான் தனக்கு அனுதாபமும், ஆதரவும் கிடைக்கும் என்பது பிரபாகரனுக்கு தெரியும். அப்படியிருக்கும்போது இந்த மக்களின் வெறுப்பை சம்பாதிக்கிற தவறைச் செய்து, நாட்டைவிட்டே துரத்தப்பட்டு தடை செய்யப்படுகிற அளவுக்கான முட்டாள் தனத்தையா பிரபாகரன் செய்தார்?

34. லதா கண்ணன், ராஜீவ் காந்தியை நிறுத்தி கவிதை படித்தார். அதுவே பக்கத்திலிருந்த தனு என்கிற மனிதகுண்டு வெடிக்கக் காரணமாக இருந்தது. ஏன் அவர் பெயர் குற்றவாளிப் பட்டியலில் இல்லை? லதா கண்ணனை பயன்படுத்தித்தான் தனு உள்ளே வந்தார். இறந்து போன ஹரிபாபு குற்றவாளி என்றால் லதா கண்ணனை ஏன் சேர்க்கவில்லை? காங்கிரஸ் மற்றும் அதன் தொண்டர்களின் மீது புலனாய்வுத் துறைக்கு ஏன் இத்தனை பரிவு?

35. ஸ்ரீபெம்புதூருக்கு செல்லும் முன் இரண்டு தெருமுனைக் கூட்டங்களில் பேசினார் ராஜீவ். அந்தக் கூட்டங்களில் மேடை வரை உடன் வந்தார் வாழப்பாடி ராமமூர்த்தி. ஸ்ரீபெரும்புதூரில் மட்டும் ஏன் தொலை தூரம் தள்ளிப்போனார்?

36. அப்பாவிப் பொதுமக்கள், பாதுகாப்பு அதிகாரிகள் பலர் ராஜீவுடன் உயிரிழந்தார்கள். ஆனால் காங்கிரஸ் தொண்டர் ஒருவருக்கும் இலேசான காயம் கூட இல்லையே. அது ஏன்?

37. தணு, சுபா, சிவராசன் மூவரையும் ஸ்ரீபெரும்புதூருக்கு அழைத்து வந்தவர் லதா பிரியகுமார் என்று கருதப்படுகிறது. குறிப்பாக பெண்கள் பகுதிக்கு அழைத்து வந்து லதா கண்ணனிடம் அவர்களுக்கு உதவும்படி சொன்னார். அவர் மீது ஏன் குற்றம் சுமத்தப்பட வில்லை?

38. பிரபாகரன், சிவராசன் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட பழைய படத்தை வைத்துக் கொண்டு பிரபாகரனுக்கு இதில் தொடர்பு உண்டு என்று எப்படிச் சொல்லலாம்?

39. தணு, சுபா, சிவராசன் மூவரும் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, மேற்கத்திய, ஐரோப்பா, இந்தியா கூலிப்படையின் கையாட்களாக ஏன் ஆகியிருக்கக்கூடாது?

40. மார்கரெட் ஆல்வாவின் வேண்டுகோளுக்கிணங்கத்தான் சிவராசனுக்கு பெங்களூரில் வீட்டை வாடகைக்குக் கொடுத்ததாக ரெங்கநாதன் வாக்குமூலம் அளித்தார். இதில் உண்மை உண்டா என்பதை விசாரித்தார்களா?

41. சந்திரா சுவாமி, சுப்பிரமணிய சுவாமி, சந்திரசேகர், ஆயுத விற்பனையாளர் கசோகி மூவருக்கும் இந்த வழக்கில் ஏதாவது தொடர்பு உண்டா என்கிற கோணத்தில் விசாரணை நடந்ததா?

42. புலிகள் இந்தக் கொலையை செய்ததின் மூலம் அவர்களுக்குக் கிடைத்த ஆதாயம் என்ன? அமெரிக்கா போன்ற மிகப் பெரிய வல்லரசுகள், சி.ஐ.ஏ. மூலமாக, ஏராளமான ஆயுத உதவிகளும் செய்து இந்தக் காரியத்தை செய்ய வைத்தார்களா?

43. யாரோ சிலரைப் பிடித்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ.யும், விசேஷ புலனாய்வுத் துறையும் எதற்கு? தீர்ப்பு விரைவில் வெளிவரப் போகிறது. குறிப்பாக ஜெயின் கமிஷனின் இடைக்கால அறிக்கையைத் தொடர்ந்து சட்ட வல்லுநர்கள் இந்தத் தீர்ப்பை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இப்படி பல கேள்விகள் சிறப்பு புலனாய்வுத் துறையின் விசாரணையைப் பற்றி எழுந்திருக்கிறது. கேள்விகள் எல்லாம் உண்மைகள் ஆகிவிடாது. ஆனால் பல சந்தேகங்கள் களையப்படாவிட்டால் உண்மைக் குற்றவாளிகள் பலம் வாய்ந்த சக்திகளுக்குப் பின்னால் ஒழிந்து கொண்டு விடுவார்கள். மறைந்து நிற்கும் அவர்களால் பலம் வாய்ந்த இந்திய தலைவக்களுக்குத் தான் ஆபத்து. விசேஷப் புலனாய்வுத் துறை விசாரித்ததா, அல்லது வெறும் விசாரணை அறிக்கை தயார் செய்ததா?’ என்கிற பில்லியன் டாலர் கேள்விக்கான விடை நிச்சயம் ஒவ்வொரு இந்தியனுக்கும் தெரியவேண்டும்

நவம்பர் 19, 1997 இல் தமிழன் எக்ஸ்பிரசில் சுதாங்கன் எழுப்பிய கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை. அந்த கட்டுரை மீண்டும் உங்கள் பார்வைக்கு.


 

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply