Political Column 2011 (3)

கச்சதீவு

தடியைக் கொடுத்து சிறிலங்காவிடம் அடிவாங்கும் இந்தியா!

நக்கீரன்

இலங்கையில் ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்த சிங்கள அரசை அய்யன்னா சபை போர்க் குற்றவாளி என அறிவித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அதற்கு இந்திய அரசு அய்யன்னா சபையை வற்புறுத்த வேண்டும் என்றும் மேலும் தமிழர்களுக்கு சிங்கள அரசு துன்பம் விளைவிப்பதைத் தடுக்கவும் தமிழர்களுக்குப் பாதுகாப்பான நிலை ஏற்படுத்தவும் இலங்கை அரசு மீது பிற நாடுகளோடு சேர்ந்து இந்திய அரசும் அதன் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தும் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானத்தை தமிழக சட்ட மன்றத்தில் முன்மொழிந்து ஒருமனமாக நிறைவேறியிருந்த முதல்வர் ஜெயலலிதா அடுத்ததாக கச்சதீவை 1974 ஆம் ஆண்டு அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி அம்மையாரால் இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்ததது தொடர்பான வழக்கில் வருவாய்த்துறையை சேர்க்கச் சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்து சட்ட சபையில் நீண்ட உரை நிகழ்த்தினார். தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் வாழும் மீனவர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் கச்சத்தீவினை 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்ட இந்திய – இலங்கை உடன்படிக்கைகள்  மூலம் இலங்கைக்குத் தாரை வார்த்ததை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் என்ற முறையில் ஜெயலலிதாவினால் 2008 இல் தொடுக்கப்பட்ட வழக்கிற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் இந்தத் தீர்மானம் அமைந்திருந்தது.

இந்திய நாட்டுக்குச் சொந்தமான ஒரு பகுதியை அந்நிய நாட்டிற்குக் கொடுப்பது தொடர்பான உடன்பாட்டை நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலோடு இந்திய அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் மூலம் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும் என 1960 ஆம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு முற்றிலும் முரணாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் இல்லாமல் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட உடன்படிக்கைகள் வாயிலாக கச்சதீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டு இருக்கிறது. இந்த உடன்படிக்கைகள் சட்டப்படி செல்லத்தக்கவை அல்ல என 2008  ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா அவர்களால் இந்திய யாப்பின் 32 ஆவது விதியின் கீழ் பொதுநல வழக்குத் தொடுக்கப்பட்டது.

தமிழக இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்குச் சொந்தமான கச்சத்தீவை சிறிலங்காவின் அன்றைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவிற்கு சொந்த நட்புக் காரணமாக இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி நன்கொடை கொடுத்த காரணத்தாலேயே இன்று இந்திய மீனவர்கள் கச்சதீவையொட்டிய கடற்பரப்பில் மீன்பிடிக்க முடியாமல் இருக்கிறது. இலங்கைக்கும் இந்தியாவிற்கும் முன்னர் இருந்து கடல் எல்லை கச்சதீவு பறிபோனதன் காரணமாக சுருங்கி விட்டது.

சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது கிபி 1450 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பயங்கர கடல் கொந்தளிப்பால் தமிழகத்தின் தென்பகுதி கடலில் மூழ்கின. இப்படித் தமிழகத்தின் நிலப்பரப்பில் இருந்து துண்டிக்கப்பட்ட பிரதேசத்தில் கச்சதீவு உட்பட 11 தீவுகள் உருவாகின. இப்படித் தோன்றிய தீவுகள் எல்லாம் இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்குச் சொந்தமாக இருந்தன. 1947 இல் நிலக்கிழார் ஒழிப்புச் சட்டம் வரும் வரை இராமநாதபுரம் பகுதியை ஆண்ட சேதுபதி மன்னரின் ஆட்சியில் இருந்த கச்சதீவு முத்து குளிக்கும் இடமாகப் பயன்பட்டு வந்திருக்கிறது. இங்கே பரவலாகக் காணப்படும், “உமிரி’ மற்றும் “சாயா’ வேர்களை மருத்துவத் தேவைகளுக்காக இராமநாதபுரம் மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். இராமநாதபுரச் சேதுபதிகளின் ஆட்சியில் கச்சதீவு இருந்து வந்தது என்பதற்கு 1822 ஆம்  ஆண்டிலிருந்து வரையறையான சான்றுகள் உள்ளன. கிழக்கிந்தியக் கம்பெனி 1822 இல் “திமிரர்சனாத்’ என்ற ஒப்பந்தத்தால் இராமநாதபுர மன்னரிடமிருந்து கச்சதீவைப் பயன்படுத்திக் கொள்ளும் இசைவைப் பெற்றது. இங்கிலாந்து பேரரசி விக்டோரியாவின் காலத்தில் இலங்கையைப் பற்றி வெளியிடப்பட்ட பொது அறிவிப்பில் இலங்கையின் எல்லைகளைப் பற்றி குறிப்பிடுகையில் கச்சத்தீவைக் குறிக்காமலும் இராமநாதபுர அரசரைப் பற்றியவற்றில் கச்சதீவு அவருக்குரியதென்றும் குறிப்பிட்டிருக்கிறது. இதை, முன்னாள் இலங்கை அமைச்சரவைச் செயலர் பி.பி.பீரிஸ்  உறுதிப்படுத்தியுள்ளார். 1912 – 1923 வரை அதாவது 15 ஆண்டுகளுக்கு கச்சத்தீவை குத்தகையாக  இந்தியாவிற்கான அரசு செயலர் சேதுபதியிடமிருந்து இசைவு பெற்றதற்கான ஆவணங்கள் உள்ளன.

கச்சதீவு சிறிலங்காவிற்கு கையளிக்கப்பட்டதை அப்போது ஆட்சியில் இருந்த திமுக எதிர்த்தது. அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி அனைத்துக் கட்சியையும் கூட்டி தமிழகத்தின் எதிர்ப்பை மைய அரசுக்குத் தெரிவித்தார். ஆனால் ஒப்புக்குச் செய்த அந்த எதிர்ப்பை இந்திரா காந்தியோ அவரது காங்கிரஸ் அரசசோ சட்டை செய்யவே இல்லை.

1990 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த ஜெயலலிதாவின் அதிமுக அரசு “தமிழக மீனவர்களின் நலனைக் காக்க கச்சதீவை மீட்போம்” என்ற முழகத்தை முன்வைத்தது. 1991 ஆம் ஆண்டு ஆடி மாதம் 14ம் நாள் கோட்டையில் கொடியை ஏற்றிவைத்து விட்டுப் பேசிய முதல்வர் ஜெயலலிதா கச்சதீவை என்ன விலைகொடுத்தும் மீட்கப் போவதாகச் சபதம் செய்தார்.

1991 ஆம் ஆண்டு அய்ப்பசி 4 ஆம் நாள் தமிழக சட்டமன்றத்தில் கச்சதீவை சிறிலங்காவிடம் இருந்து மீட்கக் கோரும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆனால் நடைமுறையில் ஒன்றுமே உருப்படியாக நடைபெறவில்லை.

நெடுந்தீவுக்கு தெற்கே 9 மைல் தொலைவிலும் இராமேஸ்வரத்திற்கு வடகிழக்கே 12 மைல் தொலைவிலும் உள்ள பாக்கு நீரணை என்ற பகுதியில் கச்சதீவு அமைந்துள்ளது. கிழக்கு மேற்காக ஒரு மைல் தூரமும் வடக்குத் தெற்காக அரைமைல் தூரமும் கொண்டதாக இருந்தாலும் அதனை அண்டிய கடற்பகுதி நிறைய மீன்வளம் நிறைந்ததாக உள்ளது. ஓய்வெடுப்பதற்கும் வலைகளை உலர வைப்பதற்கும் பிடிபட்ட மீன்களை இன வாரியாக வகைப்படுத்துவதற்கும் மக்கள் வசிக்காத வறண்ட கச்சத்தீவைப் பரம்பரை பரம்பரையாக தமிழக மீனவர்கள் பயன்படுத்தி வந்தனர். மீனவர்களின் புண்ணிய புரவலராக கருதப்படும் புனித அந்தோணியாருக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட கத்தோலிக்க தேவாலயம் இந்தத் தீவில் தான் உள்ளது.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இராமேஸ்வரத்தை சேர்ந்த சீனிகுப்பன் படையாச்சி என்பவர் இந்த தேவாலயத்தை கட்டினார். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாத இறுதியில் வாரக் கணக்கில் நடக்கும் சமய விழாவில் கலந்து கொள்வதற்காக இந்தத் தீவிற்குத்  தமிழக மீனவர்கள் மற்றும்  தொழுகை நடத்துவதற்காக இராமேஸ்வரத்திற்கு அருகில் உள்ள தங்கச்சிமடத்தை சேர்ந்த கத்தோலிக்க மதகுரு கச்சத்தீவிற்கு செல்வது வழக்கம் என்று வரலாற்றுப்  பதிவேடுகள் தெரிவிக்கின்றன. வட இலங்கையில் இருந்தும்  – குறிப்பாக பாசையூர், குருநகர்  – கத்தோலிக்கத் தமிழர்கள் தோணிகள் மூலம் இந்த சமய விழாவுக்குச் சென்றார்கள்.

1972 இல் வெளியிடப்பட்ட இராமநாதபுரம் மாவட்ட விவரச் சுவடி அதற்கு முன் இராஜா இராமராவ் வெளியிட்ட இராமநாதபுர மாவட்ட மானுவல்  1915, 1929 மற்றும் 1933 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட இராமநாதபுர மாவட்டத்துப் புள்ளிவிவரங்கள் அடங்கிய பின்னிணைப்பு 1899 இல் ஏ.ஜெ. ஸ்டூவர்ட்டு எழுதிய சென்னை இராசதானியிலுள்ள திருநெல்வேலி மாவட்ட மானுவல் போன்ற பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு வெளியிடப்பட்டது.

அதில் இராமேசுவரத்திற்கு வட கிழக்கே 10 மைல் தொலைவில் கச்சதீவு இருக்கிறது என்றும் ஜமீன் ஒழிப்புக்கு முன்னர் இராமநாதபுரம் அரசர் இத்தீவை தனி நபர்களுக்குக் குத்தகைக்கு விட்டுக் கொண்டிருந்தார் என்றும் இந்தத் தீவின் நிலவளவு எண் 1250 பரப்பளவு 285.20 ஏக்கர் (3.75 சதுர மைல்) என்றும் இந்தத் தீவு இராமேஸ்வரம் கர்ணத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இராமநாதபுரம் வட்டத்தில் உள்ள தீவு என்று கச்சத்தீவை அது குறிக்கிறது.

இவையெல்லாம் கச்சதீவு மீது இந்தியாவிற்கு உள்ள பறிக்க முடியாத உரிமைகளுக்கு சான்றாக விளங்குகின்றன.

இந்த விவரச் சுவடி வெளியிடப்பட்ட போது கருணாநிதி முதல்வராக இருந்தார். அந்த விவரச் சுவடியில் கச்சதீவு பற்றி குறிப்பிடப்பட்டிருந்தாலும் அதில் இருந்த வரைபடத்தில் கச்சதீவு இந்தியாவின் பகுதி என காண்பிக்கப்படவில்லை. ஆனாலும் இந்த விவரச் சுவடிக்கு 14.6.1972 இல் முகவுரை எழுதிய அப்போதைய முதல்வர் கருணாநிதி அதைப் பற்றி விவரச் சுவடி தயாரித்த அதிகாரிகளிடம் எடுத்துக் கூறாமல் முகவுரை எழுதிக் கொடுத்து விட்டார். இது தான் கச்சத் தீவு மீது கருணாநிதிக்கு இருந்த பற்று.

இராமநாதபுரம் புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய கடலோர மாவட்டங்களில் வாழும் தமிழக மீனவர்கள் தொன்றுதொட்டு கச்சத்தீவின் அருகில் மீன்பிடித்து அன்றாட வாழ்க்கையை நடத்தி வந்தனர். 1974-ஆம் ஆண்டு முதல்வராக கருணாநிதி பதவி வகித்த போது அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே ஓர் உடன்படிக்கை ஏற்பட்டது. இந்த உடன்பாட்டின்படி இரு நாடுகளும் பரம்பரை பரம்பரையாக தங்கள் நாட்டிற்குச் சொந்தமான கடல் எல்லைகளில் எந்தெந்த உரிமைகளை அனுபவித்து வந்தனவோ அந்தந்த உரிமைகளை தொடர்ந்து அனுபவிக்கலாம் என்று பொதுவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

1976 ஆம் ஆண்டு எழுதப்பட்ட உடன்பாட்டின் படி கச்சதீவுப் பகுதிக்கு தமிழக மீனவர்கள் செல்லக்கூடாது, மீன்பிடிக்கவும் கூடாது, கச்சதீவு அந்தோனியார் திருவிழாவிற்கு யாத்திரியர்கள் போகக் கூடாது என இந்திய அரசு அறிவித்தது. அப்போது தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி நடந்து கொண்டிருந்தது.

1976 உடன்படிக்கையைத் தொடர்ந்து 1983 தமிழ்நாடு கடல்வள மீனவர் சட்டம் கொண்டுவரப்பட்டபோது கச்சத்தீவு எல்லை மாற்றி அமைக்ககப்பட்டது.  இப்போதைய சங்கடங்களுக்கு இந்தச் சட்டம் இன்னொரு காரணம் ஆகும்.

மாநிலத்தில் திமுக ஆட்சி மத்தியில் திமுக தயவில் காங்கிரஸ் ஆட்சி என்ற நிலை இருந்த போதும் கச்சதீவை மீட்பதற்கான நடவடிக்கையையோ அல்லது தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதலை தடுப்பதற்கான நடவடிக்கையையோ அப்போதைய திமுக அரசின் முதல்வர் கருணாநிதி எடுக்கவில்லை. கச்சதீவு இலங்கை அரசுக்கு தாரை வார்க்கப்பட்டதன் விளைவாக இலங்கைக் கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இதுவரை 500 மீனவர்கள் பலியாகி இருக்கிறார்கள்.

1960 ஆம் ஆண்டுக்கு முன்பு 1950 களில் மேற்கு வங்காளத்தில் உள்ள பெருபாரி என்ற பகுதியை அப்போதைய கிழக்கு பாகிஸ்தானுக்குக் கொடுக்க மத்திய அரசு முயன்ற போது அதை மேற்கு வங்க மாநில அரசு எதிர்த்ததோடு மட்டுமல்லாமல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அப்போதைய மேற்கு வங்க மாநில முதல்வர் பி.சி.ராய் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்திய நாட்டுக்குச் சொந்தமான ஒரு பகுதியை அந்நிய நாட்டிற்குக் கொடுப்பது தொடர்பான உடன்படிக்கையை நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலோடு இந்திய அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் மூலம் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும் என 1960 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.

மேற்கு வங்க அரசின் அன்றைய முதல்வர் பி.சி. ராய் அவர்களின் துணிச்சலான  நடவடிக்கை காரணமாக பெருபாரி பகுதி இன்றும் இந்திய நாட்டின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பினை மேற்கோள் காட்டி 1974 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் விண்ணப்பம்  செய்திருந்தால் கச்சதீவு இன்றும் கூட இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருக்கும்.

கச்சதீவை இலங்கையிடம் இந்தியா ஒப்படைக்கும் முன்பு மத்திய அரசு தமிழக அரசிடம் பல முறை விரிவாகப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது தெரிகிறது. உண்மையிலேயே கருணாநிதிக்கு தமிழக மீனவர்கள் மீது அக்கறை இருந்திருந்தால் இந்திய –- இலங்கை உடன்படிக்கைகை எழுத்துவதற்கு முன்பே சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி மிகப் பெரிய போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், அதைக் கருணாநிதி செய்யவில்லை. சட்டமன்ற தீர்மானத்தில் கூட மத்திய அரசு செய்துகொண்ட ஒப்பந்தம் “வருத்தம் அளிக்கிறது” என்று தான் கருணாநிதி குறிப்பிட்டிருக்கிறாரே தவிர “எதிர்க்கிறோம்” என்ற சொல் எங்கேயும் இடம் பெறவில்லை.

மேலே குறிப்பிட்டது போல கச்சதீவில் மீன் பிடிக்கும் உரிமை தமிழக மீனவர்களுக்குக் கிடைக்காத நிலையில் 2008 ஆம் ஆண்டு அஇஅதிமுக பொதுச் செயலாளர் என்ற முறையில் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்த 1974 மற்றும் 1976 ஆண்டைய உடன்படிக்கைகள் சட்டப்படி செல்லத் தக்கவை அல்ல என்று உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கை ஜெயலலிதா தொடுத்திருக்கிறார். இந்த வழக்கில் மத்திய அரசுடன் தமிழ்நாடு அரசும் ஒரு பிரதிவாதியாகச் சேர்க்கப்பட்டது.

இந்த வழக்கு 6.5.2009 அன்று உச்ச நீதிமன்றத்தின் முன்பு விசாரணைக்காக பட்டியல் இடப்பட்ட போது மீன்வளத் துறை ஆணையரால் தமிழக அரசுக்கு கொடுக்கப்பட்ட அறிக்கையில் பல கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. அதில் ஒரு கருத்தாக  “… uniform stand has to be taken both by the Central and State Governments”  அதாவது,  மத்திய அரசும் மாநில அரசும் ஒரே நிலையை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கிற்கு பத்திவாரி குறிப்புகள் வைத்து அதற்கு ஒப்புதல் கேட்டு 10.6.2009 அன்று அன்றைய முதல்வர் கருணாநிதிக்கு கோப்பு அனுப்பப்பட்டது. இந்தக் கோப்பினை சட்டத் துறை மூலமாக அனுப்பும்படி முதல்வரின் செயலாளர் 13.7.2009 அன்று திருப்பி விடுகிறார்.

சட்டத் துறை தனது குறிப்பில் தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் எந்தவித வேண்டுகோளும் வைக்கப்படவில்லை என்றும் தமிழக அரசை ஒரு proforma respondent என்ற அளவில் தான் சேர்க்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்து மத்திய அரசின் எதிர் உறுதி ஆவணம் தாக்கல் செய்யப்பட்ட பின் அதையே பின்பற்றலாமா? அல்லது நம்முடைய நிலைப்பாடு பற்றி உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கலாமா? என்பது குறித்து உரிய நேரத்தில் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது.

இந்தக் கருத்தை உள்ளடக்கி இந்த நிலைப்பாட்டை உச்சநீதிமன்றத்தில் உள்ள தமிழக அரசின் Advocate on Record -க்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுற்றோட்டக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்தக் குறிப்பிற்கு 14.8.2009 இல் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த வழக்கிற்கான பத்திவாரி அறிக்கையில் 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் விதி எண். 8 இன்படி நாடாளுமன்றத்தின் பின்னேற்பு ஆணை பெறப்படாதது சட்டத்திற்கு சட்டத் திருத்தம் செய்யப்படாதது குறித்து வாதி எழுப்பிய வினாக்களுக்கு மத்திய அரசு தான் தெளிவுரை வழங்கிட இயலும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, இந்த ஒப்பந்தம் செல்லத்தக்கது என்பதே முந்தைய திமுக அரசின் நிலைப்பாடாக இருந்தது.

கச்சதீவை மீட்க வேண்டும் தமிழக மீனவர்களின் நலன் காக்கப்பட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு உண்மையிலேயே அக்கறை இருந்திருக்குமானால் உச்சநீதிமன்றத்தில் உடனே எதிர் உறுதி ஆவணம் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு அவர் செய்யவில்லை. தமிழக மீனவர்களின் நலன் காக்க நடவடிக்கை எடுக்க மனம் இல்லாததால் தான் மத்திய அரசு எதிர் உறுதி ஆவணத்தை தாக்கல் செய்தபின் மாநில அரசு தாக்கல் செய்யலாம் என்று கருணாநிதி முடிவெடுத்தார் என்கிறார் ஜெயலலிதா.

1.4.2011 அன்று முன் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் எதிர் உறுதி ஆவணத்தை தாக்கல் செய்தது. அதில் 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் போடப்பட்ட ஒப்பந்தங்களுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட வேண்டியது இல்லை என்றும் ஜெயலலிதாவின் மனு தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

மத்திய அரசு கச்சதீவு தொடர்பான இரு ஒப்பந்தங்களுக்கும் நாடாளுமன்ற முன் அனுமதி தேவையில்லை என பதிலளித்திருக்கிறது. இருநாடுகளுக்கு இடையில் எழுதப்பட்ட உடன்படிக்கையை ஒருதலைப்பட்சமாக ஒரு நாடு முறிக்க முடியுமா? இல்லை என்கிறது இந்திய மைய அரசு.

இலங்கை – இந்தியா இரண்டுக்கும் இடையில் 1987 எழுதப்பட்ட உடன்படிக்கையில் இலங்கைத் தீவின் வட மாகாணமும் கிழக்கு மாகாணமும் தற்காலிகமாக இணைக்கப்பட்டது. ஆனால் அந்த இணைப்பு இலங்கை யாப்பில் நாடாளுமன்றம் வேண்டி திருத்தத்தைச் செய்யப்படவில்லை எனக் காரணம் காட்டி சிறிலங்கா உச்ச நீதிமன்றம் ஒக்தோபர் 2006 இல் தீர்ப்பளித்தது. எதிர்க்கட்சியான அய்க்கிய தேசியக் கட்சி வட – கிழக்கு இணைப்புக்கு யாப்புத் திருத்தத்துக்கு வேண்டிய மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவு தருவதாக அறிவித்திருந்த போதிலும் மகிந்த இராசபக்சே அதனை நிராகரித்து விட்டார். 1987 இல் எழுதப்பட்ட பன்னாட்டு உடன்படிக்கையை இலங்கை மீறியதை இந்தியா கண்டும் காணாமலும் இருந்துவிட்டது. ஒரு பன்னாட்டு உடன்படிக்கையை இலங்கை மீற முடியுமென்றால் இந்தியா ஏன் மீறக் கூடாது என்ற கேள்வி எழுகிறது.

முதல்வர் ஜெயலலிதா தொடுத்துள்ள வழக்கில் கச்சதீவை மீளப் பெறமுடியாவிட்டால் கச்சதீவுக் கடலில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கும் உரிமையை பெற்றுத்தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தைக் கேட்டிருக்கிறார். எனவே கச்சதீவை இந்தியா திரும்பிப் பெறும் வாய்ப்பு இல்லை என்றே சொல்ல வேண்டும்.

இரண்டு நாடுகளுக்கு இடையில் எழுதப்பட்ட உடன்படிக்கையை ஒருதலைப்பட்சமாக இந்தியா மீறமுடியாது என இந்தியா தொடர்ந்து கூறிவருகிறது. இந்திய உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க முடியும்.

ஒன்று மட்டும் நிச்சயம். இந்தியா தடியைக் கொடுத்து சிறிலங்காவிடம் அடிவாங்கிக் கொண்டிருக்கிறது. (யூன் 17,2011)


Scotland  Plans To Stage  Referendum On Independence

V.Thangavelu

When  UN was founded in  June 26, 1945 after World War 11  to replace the League of Nations it had only 51 members.  This number has  increased to 192  when Montenegro   joined UN in 2006.  Montenegro has a population of about 680,000 and  13,812 sq.kms of territory.

Between 1991 – 2006  thirty three (33) countries joined the UN largely due to the collapse of  the Soviet Union in 1990 and Yugoslavia in  1991. All the 15 constituent republics of the Soviet Union and 6  federated states in Yugoslavia declared independence based  essentially on the  right to self-determination.  In  principle  the right self determination allows a people to choose its own political destiny and to determine its own form of economic, cultural and social development.

The  UN was  founded to  stop wars between countries and to provide a platform for dialogue and facilitate cooperation in international law, international security, economic development, social progress, human rights and achievement of world peace. There is no doubt that UN has succeeded in preventing World War 111, but not wars between  some member nations within and without.

Now South Sudan is poised to declare formal independence on July 09, 2011 after a referendum  held in January, 2011 supervised by the UN. The referendum was held following  the signing of the  Naivasha Agreement (2005)  between the Khartorum central government and the Sudan People’s Liberation Army/Movement (SPLA/M). On  February 07,  2011, the referendum commission announced that 98.83% voted in favour of independence. It is a matter of time before South Sudan takes its seat  in UN.

An unexpected candidate after South Sudan is Scotland where the Scottish Nationalist Party  (SNP)  has won elections on a plank for independence  for Scotland. On May 05,  2011  general election  to the Scottish parliament  to elect 129 members the SNP won a  historic 69 seats (45.39% of the popular vote) and its leader  Alex Salmond to remain First Minister of Scotland.

Image result for Scotland

The SNP overall majority means that there is sufficient support in the Scottish Parliament to hold a referendum.  The SNP  promised in  its election manifesto to bring forward an independence referendum during the second half of Parliamentary session. The SNP failed to muster enough support for  independence in the last Parliament.

Leader Alex Salmond said that the SNP would “give Scots an opportunity to decide our nation’s future” adding that opposition parties would “have no choice” but to back a referendum. The Green Party  has endorsed a referendum on Scottish independence.

The election delivered the first majority government since the opening of Holyrood, a remarkable feat as the mixed member proportional representation system is used to elect members and was originally implemented to prevent single party governments as well as produce proportional results in Scotland. The SNP gained 32 constituencies, 22 from the Scottish Labour Party (SLP),  9  from the Scottish Liberal Democrats (SLD)  and one from the Scottish Conservatives(SC). The SLP lost seven seats and was their worst election defeat in Scotland since 1931  and will be the largest opposition party.  The SLD were soundly defeated this time, their popular vote share was cut in half and their seat total reduced from 17 to five.  For SC  the election proved disappointing as their popular vote dropped slightly and their number of seats fell by five.  Below is the detailed results of the election.

Scottish general election, 2011

 

Parties

Additional member system

Total seats

 

Constituency

Region

 
Votes  % +/− Seats +/− Votes  % +/− Seats +/− Total +/−  % 
 SNP902,91545.39+12.4653+32876,42144.04+13.0316−969+2353.49 
 Labour630,46131.69−0.4515−20523,55926.31−2.8522+1337−728.68 
 Conservative276,65213.91−2.693−3245,96712.36−1.5512−215−511.63 
 Liberal Democrats157,7147.93−8.252−9103,4725.20−6.103−35−123.88 
 Scottish Green87,0604.38+0.332+12+11.55 
 Independent12,3570.62-0.620±022,3061.12+0.081±01±00.78 
 Others9,1230000131,0817100000 
 Total1,989,22210073±01,991,05110005601290100 

During the campaign, the four main party leaders engaged in a series of televised debates, as they had in every previous general election. These key debates were held on  March 29 (STV)  May 01 (BBC) and May 03 (STV). The results of the election were broadcast live on BBC Scotland and STV on the night of the election.

It was the fourth general election  since the devolved parliament was established in 1999 and was held on the same day as elections to the National Assembly for Wales and Northern Ireland Assembly.

The recorded history  of Scotland begins with the expansion  of the Roman Empire  in Britain when the Romans occupied what is now broadly England, Wales and Scotland administering it as a Roman province called Britannia. Because of the geographical orientation of Scotland and its strong reliance on trade routes by sea, the kingdom held close links in the south and east with the Baltic countries and through Ireland with France and the continent of Europe.

The Kingdom of Scotland  was an independent state from its own unification  in 843 AD. Though it  was largely conquered in 1296 by Edward 1 of England  resistance continued until Scotland regained de facto independence after defeating English forces at the Battle of Banmockburn in 1314 AD.  England finally acknowledged Scottish independence with the signing of the Treaty of Edinburgh – Northampton in 1328.

The crowns of England and Scotland were united by the accession of James VI to the English throne in 1603. However, Scotland remained a sovereign and officially independent state until the Scottish parliament voted on 6 January 1707, by 110 to 69 to adopt the Treaty of Union. It was an  economic union  most of its 25 articles dealt with economic arrangements for the new state known as “Great Britain.” It added 45 Scots to the 513 members of the House of Commons and 16 Scots to the 190 members of the House of Lords.  The Acts of Union that put the Treaty into effect provided for the merging of the two nations by means of dissolution of the Parliament of Scotland and the Parliament of England and their replacement by a new Parliament of Great Britain located in Westminster, England. As a result of provisions in the Treaty, as well as much of Scotland’s relative isolation, many of Scotland’s institutions remained separate and the Scottish national identity has remained strong and distinct.

At the time of the union of the parliaments, the measure was deeply unpopular in both Scotland and England. The Scottish signatories to the treaty were forced to sign the documents in secrecy because of mass rioting and unrest in the Scottish capital, Edinburgh. Scottish nationalists  believe that the loss of independent Scottish representation internationally is detrimental to Scottish interests and that  the British government acts primarily in the interest of the entire United Kingdom and to the  deliberate detriment of specific Scottish interests. Those who oppose Scottish independence and endorse the continuation of a form of union make a distinction between nationalism and patriotism. They argue    that cultural, social, political, diplomatic and economic influence and benefits enjoyed by Scotland as part of a great power without compromising its distinctive national identity, outweighs the loss of fully independent Scottish sovereignty.

Following the Acts of Union which united Scotland with England into the Kingdom of Great Britain and following the industrial revolution Scotland became one of the commercial, intellectual and industrial powerhouses of Europe. Its industrial decline following  World War 11 was particularly marked,  but in recent decades the country has enjoyed something of a political, cultural and economic renaissance fuelled in part by  revenue from  North Sea Oil and gas. And lately by a devolved parliament.

Scotland has a total population of 5,222, 000 (2010 estimate) covering an area of 78,782 sq kms (30,418 sq mls).

Religion – Christianity (74.9%): primarily Church of Scotland (42.4%) and Roman Catholicism (15.9%), non-religious (27.5%), Islam (0.8%).

Languages: Scottish English, Scots (Doric, Central and Border) and Gaelic.

Ethnic Groups

White: 4,960,334 – 98.19%,

Scottish: 4,459,071 – 88.09%,

Other White British: 373,685 – 7.38%,

Any other White background: 87,650 – 1.73%,

White Irish: 49,428 – 0.98%,

Mixed: 12,764 – 0.25%,

South Asian: 55,007 – 1.09%.

Through out history people have fought for independence shedding blood and tears. The catalyst was the American War of Independence which declared that three things are obviously true:

  • That all men are created equal
  • That all men have some rights given to them by God
  • That among these rights are life, liberty, and the pursuit of happiness.
Image result for Scotland

So whenever any  state  is getting in the way of these rights, people have the right to change it or get rid of it, and to make a new state  in whatever way seems most likely, peacefully if possible and by violence, if necessary.

The SNP’s historic majority at Holyrood has cleared the way for the party to seek a public vote on whether Scotland should break the union with the UK. The real driving force for a Scottish independence  has been the rising national discontent in Scotland against centralised Westminster rule. However, current polls  have shown that there isn’t majority support for independence. Both Labour and the Conservatives have made it clear they will campaign hard to prevent the breakup of the UK, but Westminster wont stop the referendum from taking place.

In the meantime Queen Elizabeth has expressed her anxiety about the SNP’s plan for an independence referendum and its ramifications for their Union.  Palace officials have asked Downing Street to provide a constitutional expert to advise on how the referendum will be staged and the dismantling of the UK in the event of a ‘yes’ vote. She is said to be concerned at the prospect of 304 year-old Union between England and Scotland  being broken up during her reign. In a remark interpreted as criticism of Scotland’s quest for independence she told MPs “I cannot forget I was crowned Queen of the United Kingdom.”

Notwithstanding Queen’s concerns, if the Scottish people do vote for independence like South Sudan it will end in peaceful  and mutual divorce from Britain in 4 years.  Edinburgh Castle, overlooking the Scottish capital, has witnessed fierce battles between the armies of Scotland and England in the past. Today, the Union Jack flies over the Castle, but, if the SNP  has its way, that flag could be replaced by the blue and white Scottish saltire. There is no official national anthem of Scotland, however a number of songs are used as de facto Scottish anthems, most notably Flower of Scotland. (June 02,2011)


நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல் முடியும் என்ற நம்பிக்கையுடன் பயணிப்போம்

நக்கீரன்

“இன்றைய சிறிலங்காவில் தமிழ் மக்களின் எதிர்காலமும், அதற்கான தீர்வுகளும்” என்ற தலைப்பில் நடைபெறும் இந்தக் கருத்தாடல் களத்தில் பங்குபற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இப்படியான கருத்தாடல்கள் நாம்  எதிர்நோக்கும் சிக்கல்களையும் அதற்கான தீர்வுகளையும் குறைந்தது ஒரு அறிவுசெறிந்த (Academic) தளத்தில் இருந்து அலசிப் பார்ப்பது நல்லதென்றே நான் நம்புகிறேன்.

இந்தத் தலைப்பில் உள்ள சிறிலங்கா என்ற சொற்பதம் எனக்கு உடன்பாடில்லை. இலங்கைத் தீவு சிங்களத்தில் சிறிலங்கா என்று அழைக்கப்பட்டாலும் தமிழில் இலங்கை என்றே அழைக்கப்படுகிறது. அண்மைக் காலமாக சிறிலங்கா என்ற சொல் சிங்கள தேசத்தையும் தமிழீழம் என்ற சொல் தமிழர்களின் பாரம்பரிய தாயகமான வட- கிழக்கையும் இரண்டும் சேர்ந்தது இலங்கை  என்ற தீவையும் குறிக்கும் பொருளில் கையாளப்பட்டு வருகிறது. இதே போல் தமிழர்கள் சிறுபான்மை இனம் என்பதற்குப் பதிலாக தமிழர்கள் சிறுபான்மைத் தேசிய இனம் என்று அழைக்கப்படுகிறது.  வரலாற்றைச் சற்றுப் பின்னோக்கிப் பார்த்தால் பிரித்தானியாவின் ஆட்சியின் கீழ் சிங்களவர் – தமிழர் இலங்கைத் தீவின் தொல் இனங்கள்

(Founding  Nations)  என அழைக்கப்பட்டார்கள். பிரதேச வாரியான (territorial) பிரதிநித்துவம் ஒழிக்கப்பட்டு ஒருத்தருக்கு ஒரு வாக்கு என்ற அடிப்படையில் டொனமூர் யாப்பு நடைமுறைக்கு வந்த பின்னர்தான் தமிழர்கள் அரசியல் பலத்தை இழந்து சிறுபான்மையினர் என அழைக்கப்பட்டனர்.

இந்தக் கருத்தாடல் களத்தில் “இன்றைய சிறிலங்காவில் தமிழ் மக்களின் எதிர்காலமும், அதற்கான தீர்வுகளும்” என்ற பொருளில் நாம் பேசுவதே கடந்த 2009 மே மாதம் முள்ளிவாயக்காலில் எமது ஆயுதப் போராட்டம் சந்தித்த பேரழிவுதான் காரணமாகும். சிலர் எமது தோல்வியைப் பின்னடைவு என்று சொல்கிறார்கள். அது சரியாகாது. அது சாதாரண தோல்வி அல்ல பாரிய தோல்வி என்பதை நாம் ஒத்துக்கொண்டே ஆகவேண்டும்.

ஈழப்போர் 4 தமிழர்களது இராணுவ கட்டுமானங்களை மட்டுமல்ல அவர்களது அரசியல், சமூக, பண்பாட்டு கட்டுமானங்களையும் தகர்த்து விட்டது என்று கூடச் சொல்லலாம்.  தமிழ்த் தேசிய போராட்டத்தோடு இந்தக் கட்டுமானங்கள் ஒன்றுக்கு ஒன்று தொடர்பானவை. அவற்றை அழிப்பதில் சிங்கள அரசு முனைப்போடு இருந்தது. அது வெற்றியும் பெற்றது.

தமிழர் தரப்பு ஆயுத பலத்தை முற்றாகவும், அரசியல் பொருளாதார பலத்தை பேரளவும் இழந்து விட்டது. நான்கு  இலட்சத்துக்கும் மேலான தமிழ் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை முற்றாக இழந்து அதல பாதாளத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.  மரத்தாலே விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக போர் முடிந்து இரண்டு ஆண்டுகள் கழிந்த பின்னரும் இடப்பெயர்வுக்கு உள்ளான மககள் இன்னமும் தகரக் கொட்டைகைக்குள்ளும் பள்ளிக் கூடங்களிலும் வாழ நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளார்கள்.  மீள் குடியமர்த்தப் பட்டவர்களிலும் ஒரு தொகை மக்கள் தங்கள் சொந்தக் காணிகளில் மீள்குடியமர முடியவில்லை. சிங்கள அரசு தமிழ் மக்களுடைய காணிகளை படைத்தளங்கள் நிர்மாணிப்பதற்கும் இராணுவத்தினருக்கு குடிமனைகள் கட்டுவதற்கும் அபகரிக்கத்துள்ளது.

சுருக்கமாகச் சொன்னால் தமிழர் தரப்பு இப்போது மீண்டும் தொடங்கின இடத்திலேயே திரும்பவும் வந்து நிற்கிறது.  அறவழியில் அரசியல் போராட்டம், மறவழியில் ஆயுதப் போராட்டம் இன்று மீண்டும் அறவழியில் அரசியல் போராட்டம் என ஒரு சுற்றுச் சுற்றி வந்துவிட்டது.

எமது எதிர்காலத்தை கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் புவிசார் அரசியல் காய் நகர்வுகளையும் புதிய உலக ஒழுங்கையும் மனதில் இறுத்தி முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

எமது அரசியல், பொருளாதார, சமூகநலத்  திட்டங்கள் குறுகியகாலம்,  இடைக்காலம், எதிர்காலம் என மூன்று கால கட்டங்களையும் தாய்நிலம், புலம், தமிழ்நாடு என்ற மூன்று தளங்களையும் மையப்படுத்தி அமைய வேண்டும். அப்படிச் செய்தால் புவிசார் அரசியலில் நாம் செல்வாக்குச் செலுத்துவதற்கு இலகுவாக இருக்கும்.

குறுகிய காலத்தில் வாழ்வாதாரங்களை இழந்து போன எமது மக்களின் வாழ்க்கை மீள் கட்டியெழுப்பப் பட வேண்டும். இதனை சிங்கள அரசு செய்யும் என எதிர்பார்க்க முடியாது. கடந்த இரண்டு ஆண்டு கால அனுபவம் அதைத்தான் காட்டி நிற்கிறது.  இன்று தமிழ்மக்கள்,  குறிப்பாக வன்னி மற்றும் தென்தமிழீழ மக்கள் ஆகியோரது இருப்பிட வசதி,  கல்வி, நல்வாழ்வு தொழில்வாய்ப்பு, வேளாண்மை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது.

போர்க்காலத்தில் தமிழ்மக்களது பொருளாதார மேம்பாட்டுக்கு புலத்தில் இயங்கிய தமிழர் புனர்வாழ்வுக் கழகங்களே தோள் கொடுத்தன. சமாதான காலத்தில் தாய்நிலத்தில் இயங்கிய தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தில் 3,000 க்கும் அதிகமான முழுநேர ஊழியர்கள் பணியில் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கள அரசு த.பு. கழகத்தை தடை செய்த பின்னர் இது தாய்நிலத்தில் இயங்க முடியாத ஒரு சூழ்நிலை உருவாகியது. அது இன்றுவரை நீடிக்கிறது. இதனால் புலத்தில் இயங்கி த.பு. கழகங்களின் செயற்பாடுகளும் முடக்கப்பட்டுள்ளன.  எனவே த.பு. கழகத்தை ஒத்த ஒரு அமைப்பை மீள் உருவாக்கம் செய்ய இப்போது முயற்சி நடைபெறுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறுவாழ்வு என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை பதிவு செய்யவுள்ளது. த.தே.கூட்டமைப்பின் தலைமை பணிமனையின் மேல்மாடி மறுவாழ்வு அமைப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கனடாவிலும் அண்மையில் அதே பெயரில் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இடப்பெயர்வுக்கு ஆளான மக்களுக்கு உதவி செய்ய பல நாடுகளும், அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களும், அய்யன்னா அமைப்புக்களும் அணியமாக இருந்தாலும் சிங்கள அரசு அதற்கு முட்டுக்கட்டை போடுகிறது.  சிங்கள அரசு நடந்து கொள்கிற போக்கு வைக்கல்பட்டடை நாய் போன்றதாக இருக்கிறது. தானும் செய்யாது மற்றவர்களையும் செய்ய விடாது சிங்கள அரசு தடுக்கிறது. அல்லது முட்டுக்கட்டை போடுகிறது.

போரின்போது சிங்கள அரசு வி.புலிகளுக்கு எதிரான போரைப் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்றும் அது மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளை தமிழ்மக்களை வி.புலிகளின் பிடியில் இருந்து விடுவிக்க மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகள் என்றும் பரப்புரை செய்தது. ஆனால் போர் முடிந்த பின்னரும் தமிழ்மக்கள் எதிர்கொள்ளும்  பொருளாதார, சமூக, பண்பாட்டுச் சிக்கல்கள்  பற்றி சிங்கள அரசு காட்டும் கரிசனை அது மேற்கொண்ட பரப்புரை கலப்படமற்ற பொய் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

இன்னும் சொல்லப் போனால் போருக்குப் பின்னர் சிங்கள அரசு வட – கிழக்கை சிங்கள மயப்படுத்துவதிலும் இராணுவ மயப்படுத்துவதிலும் பவுத்தமயப்படுத்தலிலும் தமிழ்மக்களை அடக்கி ஆளுவதிலும் வீச்சாக இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இதனால்  சிங்களத்துக்கும் தமிழர்களும் இடையிலான முரண்பாடு மேலும் கூர்மை அடைந்து வருகிறது.

ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தாலும் அதற்கான  காரணிகள் அப்படியே தொடர்கின்றன. சிங்களவர் – தமிழர் உறவில் ஏற்கனவே ஏற்பட்ட விரிசலில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

மாறாக இரண்டு இனங்களுக்கு இடையிலான இடைவெளி குறைவதற்குப் பதில் நாளும் பொழுதும் கூடிக் கொண்டே போகிறது.

அதற்கான சான்றை அண்மைக்கால  நிகழ்வுகள்  படம்பிடித்துக் காட்டியுள்ளன.

சிறிலங்காவின் வெற்றியைக் கொண்டாடத் தெற்கில் சிங்களவா திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் சிறிலங்கா தோற்றபோது கொழும்பில் மயான அமைதி நிலவியது. அதே நேரம் யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் இந்தியாவின் வெற்றியை வெடி கொளுத்திக் கொண்டாடினார்கள். அப்படி இந்தியாவின்  வெற்றியைக் கொண்டாடியவர்கள் இராணுவத்தினராலும் காவல்துறையினராலும் தாக்கப்பட்டுள்ளார்கள். வல்வெட்டித்துறையில் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்திய அணியின் வெற்றியைத் தொடர்ந்து மலையக இந்திய வம்சாவளித் தமிழர்கள் வசிக்கும் குடியிருப்புக்களை சிங்களக் காடையர்கள் தாக்கினார்கள்.  இதனால் அட்டன், சமநலகம, கிஜ்ரா புர பகுதிகளில் பல வீடுகள் சேதமடைந்துள்ளன. தாக்குதலுக்குள்ளான இருபது  தமிழ் இளைஞர்கள் டிக்கோயா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள். தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்படி நடவடிக்கை எடுக்கத்தவறினால் கடை அடைப்புப் போராட்டத்தில் குதிக்கப்போவதாக அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அறிவித்துள்ளார்.

இலண்டனில் கூட குடிவெறியில் இருந்த சிங்களவர்கள் தமிழர்களைத் தாக்கியிருக்கிறார்கள். சிறிலங்கா அணி போட்டியில் வென்றிருந்தால் சிங்கள இனவெறியர்களைப் பிடித்திருக்க முடியாது.

சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர்களைத் தங்கள் பிறவி எதிரிகளாகவே பார்க்கிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சிறிலங்கா இராணுவம் வி.புலிகளின் பயங்கரவாதத்தைத் தோற்கடித்து வெற்றிவாகை சூடியது. அது போல உலகக் கிண்ணப் போட்டியிலும் சிறிலங்கா அணி இந்திய அணியைத் தோற்கடித்து வெற்றிவாகை சூடும். அந்த வெற்றி பிரபாகரனைத் தோற்கடித்தமைக்குச் சமமாகும் என முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா சிறையில் இருந்தவாறு கூறியிருக்கிறார்.

சரத் பொன்சேகாவை மிஞ்சும் வண்ணம் அய்யன்னாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா துடுப்பாட்டப் போட்டியில் இந்தியாவைத் தோற்கடித்து விட்டால் புலிகளுக்கு எதிரான போரில் உயிர் தியாகம் செய்த படையினருக்கு அவர்கள் செலுத்தும் காணிக்கை, அது பயங்காரவாதத்தை வெற்றி கொண்டதற்கு ஒப்பாகும், அந்த வெற்றியை இராணுவத்தினருக்கு கவுரவமளித்து சமர்ப்பணம் செய்வோம் எனப் போர் வெறியூட்டும் தோரணையில் கூறி உள்ளார். அப்படியானால், இந்தியா ஒரு பயங்கரவாத நாடா? அல்லது இந்திய துடுப்பாட்டு வீரர்கள் வி. புலிப் பயங்கரவாதிகளா? என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராசா கேள்வி எழுப்பியுள்ளார்.

நடந்து முடிந்த ஈழப் போர் 4 இல் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். சரண் அடைந்த தளபதிகள் போராளிகள் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள். போர் முடிந்த பின்னரும் தமிழ் மக்கள் அடக்கி ஆளப்பட்டு அழித்தொழிக்கப் படுகிறார்கள்.

யாழ்ப்பாணத்தில் மட்டும் கடந்த ஒரு மாத காலத்தில் 50 பேர் காணாமல் போயுள்ளார்கள்.  யாழ்ப்பாணக் குடாநாட்டில்

50,000 இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் நடைபெறுகிறது.

மறுவாழ்வு முகாம்களில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்படும் முன்னாள் வி.புலிப் போராளிகள் தொடர்ந்தும் இராணுவத்தால் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். அல்லது புலனாய்வுத் துறையில் சேருமாறு கட்டாயப்படுத்தப் படுகிறார்கள்.  இது தமிழ் இனத்துக்கும் சிங்கள இனத்துக்கும் இடையில் உள்ள அவநம்பிக்கையையே உறுதிப்படுத்துகிறது.

இலங்கையில் 17 பல்கலைக் கழகங்கள் இருக்கின்றன. இதில் 3 தவிர எஞ்சிய 14 பல்கலைக் கழகங்களும் தென்னிலங்கையில் இருக்கின்றன. சிங்கள அரசு தென்னிலங்கையில் உள்ள 14 பல்கலைக் கழகங்களில் 7 பல்கலைக்கழகங்களை பன்னாட்டுத் தரத்துக்கு மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் வட – கிழக்கில் உள்ள ஒரு பல்கலைக் கழகம் தன்னும் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை.

வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக் கழகத்தில் 29.03.2011 ஆம் திகதி அன்று இரவு அங்கு கல்வி பயிலும் சிங்கள மாணவர்களுக்கும் தமிழ் மாணவர்களும் சிக்கல் ஏற்பட்டது.  அந்தச் சிக்கல் ஓரளவு சுமுகமாக பல்கலைக் கழக நிருவாகத்தால் தீர்க்கப்பட்டது.  ஆனால் அதன்பின் நடு இரவு வேளை பல்கலைக் கழக வளாகத்தில் நிலை கொண்டிருந்த காவல்துறை அரணில் இருந்த சிங்கள காவல்துறையினர் தமிழ் மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டார்கள். இதனைத் தொடர்ந்து பல்கலைக் கழகத்தை நிருவாகம் மூடிவிட்டது.

கடந்த ஆண்டு சிறிலங்கா நிருவாக சேவைக்கு நடத்தப்பட்ட தேர்வில் 250 பேர் நேர்முகத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். இதில் ஒருவர் கூட தமிழர் இல்லை. இறுதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 135 பேர்களில் ஒரேயொரு முஸ்லிம் மட்டும் தெரிவானார்.

முரண்பாடுகளை மேலும் அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் இது போதும் என்று நினைக்கிறேன்.  நான் சொல்ல வருவது என்னவென்றால் இந்த முரண்பாடுகள் நீடிக்கும் வரை தீர்வுக்கு வாய்ப்பில்லை. இந்த அரசு இதுவரை ஆட்சிக்கு வந்த அரசுகளை விட மிகவும் தீவிர சிங்கள –  பவுத்த இனவெறி பிடித்த அரசாகும். இதற்கு மகிந்த இராபக்சே சான்றாக இருக்கிறார். யாழ்ப்பாணத்தில் அவர் பேசும் போது அவரது கொச்சைத் தமிழை மக்கள் இரசிக்கவில்லை. உடனே போபம் தலைக்கேறிய இராசபக்சே சொன்னார்  “ஆம் நான் சிங்களவன். இந்த நாடு சிங்கள நாடு. எனவே தெமிழர்கள் (தமிழர்கள்) ஆகிய நீங்கள் நான் சொல்வதைக் கேட்க வேண்டும்.”

(“Yes, we are Sinhala. The country is also Sinhala. So listen you Demala (Tamil)” President tells the Tamil people in Jaffna. (http://www.lankanewsweb.com/news/EN_2010_04_03_003.html)

சரி நோயை ஒருவாறு சொல்லியாகி விட்டது. எமது விடுதலைக்கான மருந்து என்ன?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசும் பேசிக் கொண்டிருக்கின்றன.

13 ஆவது சட்டம் அல்லது அதற்குச் சற்று கூடுதலான அதிகாரங்களைக் கொண்ட மாகாணசபையே தீர்வு என சிங்கள அரசு சொல்கிறது. மகிந்த இராசபக்ச மாகாண சபைகளுக்கு காவல் அதிகாரம் கொடுக்கப்பட மாட்டாது எனத் திட்ட வட்டமாகத் தொடர்ந்து சொல்லி வருகிறார்.  கடந்த ஏப்ரில் 09 இல் திருகோணமலை நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி சபை தலைவர்கள் துணைத் உபதலைவர்கள் ஆகியோரின் பதவி ஏற்பு விழாவிற்கு தலைமை தாங்கி உரையாற்றுகையில் த.தே.கூ இன் தலைவர் இரா.சம்பந்தன் வடகிழக்கில் தமிழ் மக்கள் அரசியல் சமூக கலாசார உரிமைகளை தாங்களே முடிவு செய்யக்கூடிய அதிகாரப்பரவலாக்கல் கொண்ட அரசியல் தீர்வையே நாம் சிறிலங்கா அரசிடம்  கேட்கிறோம் எனத் தெரிவித்தார். அவரது பேச்சின் முக்கியத்துவம் கருதி அதன் சுருக்கம் கீழே தரப்படுகிறது.

“நியாயமான நீதியான சம உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு ஒன்றையே தமிழ் மக்கள் கோரியிருக்கிறார்கள். 1956ஆம் ஆண்டு முதல் தமிழ் மக்கள் இதைத்தான் கோரிவந்திருக்கிறார்கள். தமிழ் மக்கள் வன்முறையை விரும்பவில்லை. வன்முறை அவர்கள் மீது திணிக்கப்பட்டது. சனநாயக அடிப்படையில்  தமது உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காகவே கடந்த பொதுத்தேர்தலிலும் உள்ளுராட்சிசபை தேர்தலிலும் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு மக்கள் ஆணை தந்திருக்கிறார்கள். இந்த ஆணையின் அடிப்படையிலேயே நாம் இன்று சிறிலங்கா அரசுடன் பேச்சுவார்த்தைகளை நடத்திக்கொண்டிருக்கிறோம்.

நாங்கள் இந்த பேச்சுவார்த்தைகளில் எந்தவித விட்டுக்கொடுப்புக்களும் இன்றி கவுரவமான முறையிலேயே அரசுடன் பேசிக்கொண்டிருக்கிறோம்.

தமிழ் மக்களுக்கு நியாயமான நீதியான அரசியல் சமூக பண்பாட்டு  வாழ்வியல் விடயங்களில் தாங்களே நிர்ணயம் செய்யக்கூடிய அதிகாரப்பரவலாக்கல் கொண்ட இணைப்பாட்சித்  தீர்வு ஒன்றையே நாங்கள் கோரியிருக்கிறோம். வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும், அவர்களின் வாழ்விடங்களை உறுதிப்படுத்திக் கொள்ளவதற்கான காணி அதிகாரங்களை கோரியிருக்கிறோம், கல்வியில் சமவாய்ப்பை கோரியிருக்கிறோம். நடைமுறைச்சாத்தியமான விடயங்களையே நாங்கள் கோரியிருக்கிறோம்.

பல்லின சமூகங்கள் வாழும் நாட்டில் எவ்வாறு சகல இனங்களும் சமஉரிமைகளுடனும் கவுரவத்துடனும் வாழக்கூடிய இணைப்பாட்சி   இருக்கிறதோ அதேபோன்றதொரு அதிகாரப்பரவலாக்கலையே நாங்கள் கோரியிருக்கிறோம்.

அதிகாரப்பகிர்வு என்பது தமிழ் மக்கள் இந்த நாட்டில் கவுரவமாக வாழ்வதற்கான ஒரு தீர்வு என்பதை அரசாங்கத்திற்கு எடுத்துக்கூறியிருக்கிறோம். தமிழ் மக்கள் வன்முறையை விரும்பவில்லை. நீதியான நியாயமான அரசியல் தீர்வு ஒன்று கிடைக்குமாக இருந்தால் வன்முறையை நாடவேண்டிய அவசியம் இருக்காது என்பதை இந்த பேச்சுவார்த்தைகளில் நாங்கள் கூறியிருக்கிறோம்.
எனவே தமிழ் தேசியக்கூட்டமைப்பு அரசுடன் நடத்தும் பேச்சுக்கள் வெளிப்படை தன்மை கொண்டது. நாம் அரசாங்கத்துடன் என்ன பேசுகிறோம், எதை கோருநிற்கிறோம் என்பதை நாங்கள் வெளிப்படையாக மக்களுக்கு சொல்லி வருகிறோம்.

அதிகாரப்பகிர்வு என்பது தமிழ் மக்கள் கௌரவமாக சுதந்திரமாக தங்கள் வாழ்வியலை தாங்களே நிர்ணயித்து கொள்வதற்காக தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளவதற்காகவே அன்றி தனிநாடாக பிரிந்து செல்வதற்காக அல்ல என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். இதை நாம் அரசுக்கு தெளிவு படுத்தியிருக்கிறோம். தமிழ் மக்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு வழங்கிய ஆணையிலிருந்து நாம் என்றும் விலகிச்செல்லமாட்டோம்.”

(http://m.eelamtimes.com/eelam.php?subaction=showfull&id=1302343061&archive=&start_from=&ucat=6&)

ஆக இணைப்பாட்சி,  சுதந்திரமும் இறைமையும் வாய்ந்த தமிழீழம் எனத் தொடங்கி இப்போது மீண்டும் தொடங்கிய இடத்திற்கு அதாவது இணைப்பாட்சிக்கு வந்திருக்கிறோம்.

முள்ளிவாய்க்காலோடு எமது விடுதலைப் பயணம் முடிந்து விடவில்லை. கடந்த இரண்டு ஆண்டு காலமாக மீண்டும் தாய்நிலத்திலும் புலத்திலும் எழுந்து நிற்க முனைந்துள்ளோம்.

தாய் நிலத்தில் தமிழ்மக்கள் ஆட்சித் தலைவர் தேர்தல்,  நாடாளுமன்றத் தேர்தல், உள்ளாட்சி தேர்தல் மூன்றிலும் பலத்த இராணுவ நெருக்குவாரம், அச்சுறுத்தல்,  ஆசை வார்த்தைகள் மத்தியிலும் துணிச்சலாக த.தே.கூ யை ஆதரித்ததன் மூலம் தமிழ் மக்கள்  தமிழ்த் தேசியத்தின் பால் கொண்டுள்ள பற்றுறுதியை வெளிக்காட்டியுள்ளனர்.  இது அவர்களது அரசியல்  வேட்கையையும் முதிர்ச்சியையும் காட்டுகின்றது. மக்களது இந்தத் தீர்ப்பே த.தே.கூ ஓடு சிங்கள அரசைப் பேச வைத்துள்ளது. தமிழர்களது அரசியல் சிக்கலை மீண்டும் முன்னிலைப்படுத்தியுள்ளது.

புலத்தில் 2009 ஆண்டு நடந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான நேரடிவாக்கெடுப்பு

(referendum) நா.க.த. அரசுக்கான தேர்தல், மக்கள் அவைகளுக்கான தேர்தல் ஆகியவை எமது போராட்டத்தை மக்கள் மயப்படுத்தி மக்களாட்சி முறைமைக்கு அமைந்த கட்டுமானங்களை உருவாக்க உதவியுள்ளது.

எதிர்வரும் யு+லை மாதம் 20 ஆம் நாள் பிறப்பெடுக்கும் சுதந்திர  தென் சூடான் நாட்டின் தொடக்க விழாவுக்கு நா.க.த. அரசு அழைக்கப்பட்டிருப்பதும் அந்த நாட்டில் ஒரு தூதரகத்தைத் தொடக்க அனுமதி வழங்கி இருப்பதும் வரவேற்கத்தக்க நல்ல முன்னேற்றமாகும்.

அமெரிக்கா, பிரித்தானியா, அய்ரோப்பிய ஒன்றியம் போன்றவற்றில் எமக்குச் சாதகமான அசைவுகள் தென்படுகின்றன.  முள்ளிவாய்க்காலில் நடந்த போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பன்னாட்டு மனித உரிமைச் சட்டங்கள் மற்றும் மானிட உரிமைச் சட்டங்கள் மீறப்பட்டன என்று சொல்லப்படும் குற்றச்சாட்டுகள்

(alleged violations of international human rights and humanitarian law during the final stages of the conflict in Sri Lanka) பற்றி  அய்யன்னாவின் நிபுணர்கள் குழுவால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையையும் அவர்கள் சமர்ப்பித்துள்ள 220 பக்க அறிக்கையும் குறிப்பிடலாம்.

என்னைப் பொறுத்தவரையில் எமது மக்களுக்கான தீர்வு தாய்நிலம், புலம்,  ஏழு கோடி தமிழர்கள் வாழும் தமிழ்நாடு இந்த மூன்றும் ஒரே  நேர்க்கோட்டில் வரும்போதுதான் ஏற்படும்.

வி.புலிகளின் ஆயுதப் போராட்டம் முறியடிக்கப்பட்டதற்கு இந்தியா சிறிலங்கா அரசுக்கு வழங்கிய ஆயுத, புலனாய்வு, நிதி, பயிற்சி போன்றவையே காரணமாகும். எனவே இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்றால் அதனைத் தமிழ்நாட்டு மக்களால்தான் செய்ய முடியும்.  தமிழ்நாட்டு அரசினால் மட்டுமே முடியும். இந்தியா என்ற பூட்டிற்கான திறவு கோல் தமிழ்நாட்டில்தான் உண்டு.

இந்தியா என்றதும் சன்னதம் கொள்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் இன்றைய உலக ஒழுங்கில் இந்தியாவின் ஒத்துழைப்பின்றி, உதவியின்றி எமக்கு எந்தத் தீர்வும் சாத்தியமில்லை.

இந்தியாதான் தெற்காசியாவின் பெரியண்ணன் அல்லது சண்டியன். அந்த உண்மையை ஈழப்போர்

4 இல் கண்டோம்.  வி.புலித் தலைவர்களை முள்ளிவாய்க்காலில் இருந்து பத்திரமாக வெளிக் கொணர்வது, போர் நிறுத்தம் ஒன்றை அறிவிப்பது இந்த இரண்டையும் இந்தியாவே நிராகரித்தது.

எனவே ஆக்கபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் ஆழமாகச் சிந்தித்து ஒற்றுமையுடன் நாம் செயலாற்ற வேண்டும். எந்தக் கட்டத்திலும் எமது நம்பிக்கையை நாம் இழக்கக் கூடாது.  முள்ளிவாய்க்கால் அழிவை நாம் விடுதலைக்குக் கொடுக்கப்பட்ட விலையாகப் பார்க்க வேண்டும். இரண்டு இலட்சம் மக்களது சாவும் முப்பதினாயிரம் போராளிகளது ஈகையும் வீண் போகக் கூடாது. காலம் ஒரு நாள் கனியும் எமது கவலைகள் யாவும் தீரும் என்ற நம்பிக்கையோடு பயணிப்போம்.  அய்ரிஷ் போராட்டம் 120 ஆண்டுகள் நீடித்தது என்பது வரலாறு.  எனவே தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்போம். ஓடாத மானும் போராடாத இனமும் வாழ்ந்ததாக வரலாறு இல்லை.

அருமை உடைத்தென்று அசவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.                               (குறள் 611)

நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்.  வாய்ப்புக்கு நன்றி. வணக்கம்.  (“இன்றைய சிறிலங்காவில் தமிழ் மக்களின் எதிர்காலமும், அதற்கான தீர்வுகளும்” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தாடல் களத்தில் படிக்கப்பட்ட கட்டுரை – ஏப்ரில் 23, 2011)


சிங்கள அரசின் ஒடுக்கு முறைகளால் தமிழ் – சிங்கள இனங்களுக்கு இடையிலான முரண்பாடு கூர்மை அடைந்து வருகிறது

ஆக்கம்: நக்கீரன்

திருப்பதி வெங்கடாசலபதியைக் கும்பிடப்போன மகிந்தா இராசபக்சேயை செய்தியாளர்கள் இலங்கையில் வாழும் தமிழர்கள் நிலை பற்றிக் கேள்வி கேட்டார்கள். அதற்குப் பதிலளித்த இராசபக்சே தமிழர்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை போருக்குப் பின்னர் அவர்கள் அமைதியாக வாழ்கிறார்கள் எனப் பதில் அளித்தார். இந்தப் பதில் வழக்கமாக அவர் சொல்லும் பதில்தான். ஆனால் போர் முடிவுக்கு வந்தாலும் தமிழ் – சிங்களம் இரண்டு இனங்களுக்கு இடையில் இருந்து வரும் இன முரண்பாடு தொடர்ந்தும் கூர்மை அடைந்து வருகிறது. அதற்கான சான்று இப்போது இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் நடந்து முடிந்த துடுப்பாட்டப் போட்டி படம்பிடித்துக் காட்டியுள்ளது.

சிறிலங்காவின் வெற்றியைக் கொண்டாடத் தெற்கில் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் சிறிலங்கா தோற்றபோது கொழும்பில் மயான அமைதி நிலவியது. அதே நேரம் யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் வெற்றியை வெடி கொளுத்திக் கொண்டாடினார்கள்.

யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் வெற்றியைக் கொண்டாடியவர்கள் இராணுவத்தினராலும் காவல்துறையினராலும் தாக்கப்பட்டுள்ளார்கள். வல்வெட்டித்துறையில் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்திய அணியின் வெற்றியைத் தொடர்ந்து மலையக இந்திய வம்சாவளித் தமிழர்கள் வசிக்கும் குடியிருப்புக்களை சிங்களக் காடையர்கள் தாக்கியுள்ளனர். இதனால் அட்டன், சமநலகம, கிஜ்ரா புர பகுதிகளில் பல வீடுகள் சேதமடைந்துள்ளன. தாக்குதலுக்குள்ளான மூன்று தமிழ் இளைஞர்கள் டிக்கோயா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்படி நடவடிக்கை எடுக்கத்தவறினால் கடை அடைப்புப் போராட்டத்தில் குதிக்கப்போவதாக அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அறிவித்துள்ளார்.

இலண்டனில் கூட குடிவெறியில் இருந்த சிங்களவர்கள் தமிழர்களைத் தாக்கியிருக்கிறார்கள். சிறிலங்கா அணி போட்டியில் வென்றிருந்தால் சிங்கள இனவெறியர்களைப் பிடித்திருக்க முடியாது.

சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர்களைத் தங்கள் பிறவி எதிரிகளாகவே பார்க்கிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சிறிலங்கா இராணுவம் வி.புலிகளின் பயங்கரவாதத்தைத் தோற்கடித்து வெற்றிவாகை சூடியது. அது போல உலகக் கிண்ணப் போட்டியிலும் சிறிலங்கா அணி இந்திய அணியைத் தோற்கடித்து வெற்றிவாகை சூடும். அந்த வெற்றி பிரபாகரனைத் தோற்கடித்தமைக்குச் சமமாகும் என முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா சிறையில் இருந்தவாறு கூறியிருக்கிறார்.

சரத் பொன்சேகாவை மிஞ்சும் வண்ணம் அய்யன்னாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா துடுப்பாட்டப் போட்டியில் இந்தியாவைத் தோற்கடித்து விட்டால் புலிகளுக்கு எதிரான போரில் உயிர் தியாகம் செய்த படையினருக்கு அவர்கள் செலுத்தும் காணிக்கை, அது பயங்காரவாதத்தை வெற்றி கொண்டதற்கு ஒப்பாகும், அந்த வெற்றியை இராணுவத்தினருக்கு கௌரவமளித்து சமர்ப்பணம் செய்வோம் எனப் போர் வெறியூட்டும் தோரணையில் கூறி உள்ளார். அப்படியானால், இந்தியா ஒரு பயங்கரவாத நாடா? அல்லது இந்திய துடுப்பாட்டு வீரர்கள் வி. புலிப் பயங்கரவாதிகளா? என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராசா கேள்வி எழுப்பியுள்ளார்.

நடந்து முடிந்த ஈழப் போர் நான்கில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். சரண் அடைந்த தளபதிகள் போராளிகள் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள். போர் முடிந்த பின்னரும் தமிழ் மக்கள் அடக்கி ஆளப்பட்டு அழித்தொழிக்கப் படுகிறார்கள்.

யாழ்ப்பாணத்தில் மட்டும் கடந்த ஒரு மாத காலத்தில் 50 பேர் காணாமல் போயுள்ளார்கள். எப்படி? வடக்கில் 50,000 இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. அதையும் மீறி கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் நடைபெறுகிறது.

மறுவாழ்வு முகாம்களில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்படும் முன்னாள் வி.புலிப் போராளிகள் தொடர்ந்தும் இராணுவத்தால் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்? இது தமிழ் இனத்துக்கும் சிங்கள இனத்துக்கும் இடையில் உள்ள அவநம்பிக்கையையே உறுதிப்படுத்துகிறது.

இலங்கையில் 17 பல்கலைக் கழகங்கள் இருக்கின்றன. இதில் 3 தவிர எஞ்சிய 14 பல்கலைக் கழகங்களும் தென்னிலங்கையில் இருக்கின்றன. சிங்கள அரசு தென்னிலங்கையில் உள்ள 14 பல்கலைக் கழகங்களில் 7 பல்கலைக்கழகங்களை பன்னாட்டுத் தரத்துக்கு மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் வட – கிழக்கில் உள்ள ஒரு பல்கலைக் கழகம் தன்னும் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை.

கல்வித் துறையில் மட்டுமல்ல ஏனைய துறைகளிலும் தமிழ்மக்கள் மாற்றாந்தாய் மனப் பான்மையோடு நடத்தப்படுகிறார்கள்.

மக்களால் தெரிவு செய்யப்படுகிற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒத்த உரிமை இருக்க வேண்டும். ஆனால் ஆட்சி அதிகாரம் முழுவதையும் தன் கையில் வைத்துக் கொண்டுள்ள சிங்கள அரசு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை மரியாதையோடு நடத்துவதில்லை. ஏதிலி முகாம்களைப் பார்வையிட அவர்களுக்கு அனுமதியில்லை. அதே போல் முன்னாள் போராளிகளை அடைத்து வைத்திருக்கும் முகாம்களுக்குச் சென்று அவர்களைச் சந்திக்க தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதியில்லை. ஒரு சாதாரண சிங்கள இராணுவ அதிகாரி அவர்களைத் தடுக்கலாம் என்ற நிலை நிலவுகிறது. வட – கிழக்கு மாவட்டங்களில் இடம்பெறும் அபிவிருத்திக் கூட்டங்களுக்கு அவர்கள் அழைக்கப்படுவதில்லை.

கடந்த ஆண்டு சிறிலங்கா நிருவாக சேவைக்கு நடத்தப்பட்ட தேர்வில் 250 பேர் நேர்முகத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். இதில் ஒருவர் கூட தமிழர் இல்லை. இறுதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 135 பேர்களில் ஒரேயொரு முஸ்லிம் மட்டும் தெரிவானார்.

அம்பாரை மாவட்டத்தில் உள்ள மாவட்ட செயலகங்களுக்கு அண்மையில் நியமிக்கப்பட்ட 29 பேரில் ஒரேயொருவர் மட்டும் தமிழர் ஆவர். அம்பாரை மாவட்டம் தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டமாகும். மட்டக்களப்பு மாவட்டத்தில் கடைநிலை பதவிகளுக்கு சிங்களவர்கள நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.

அம்பாரை மாவட்டத்தில் 147 தற்காலிக மேலதிக கல்வி இயக்குநர்கள் பணியில் உள்ளார்கள். ஆனால் இவர்களில் எவரும் நிரந்தரமாக்கப்படவில்லை. ஏனைய மாவட்டங்களில் 2 ஆண்டுகள் பணியில் இருந்தால் போதும். அவர்கள் நிரந்தரமாக்கப்பட்டு விடுவார்கள்.

1948 இல் நாடு சுதந்திரம் அடைந்த பொழுது பொது சேவையில் 24.8 விழுக்காட்டினர் தமி்ழர்கள் ஆவர். அதன் பின்னர் இந்த விழுக்காடு தேயத் தொடங்கியது. 1970 -77 காலப்பகுதியில் இந்த விழுக்காடு 11.10 விழுக்காடாகக் குறைந்து 1978-81 இல் 5.70 விழுக்காடாகத் தேய்ந்தது. இது தமிழர்களது மொத்த மக்கள் விழுக்காட்டை (19.5) விட மிகக் குறைவானதாகும்.

இன அடிப்படையில் மட்டுமல்ல சமய அடிப்படையிலும் தமிழ்மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள். சென்ற ஆண்டு ஒக்தோபர் மாதத்தில் திருகோணமலையில் உள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற கன்னியா வெந்நீர் ஊற்றுக் கிணறுகள் இரவோடு இரவாக திருகோணமலை அரச அதிபர் ஓய்வு பெற்ற இராணுவ தளபதி இரஞ்சித் டி சில்வா அவர்களால் கைப்பற்றப்பட்டது. திருகோணமலை நகர ஊராட்சி மன்றத்தால புதிதாக எழுதி வைக்கப்பட்ட பழைய அறிவித்தல் பலகையை பொறுத்துக்கொள்ள முடியாத அரச அதிபரே இந்தக் கைங்கரியத்தைக் கச்சிதமாக செய்து முடித்தவர். இங்கேதான் இந்துக்கள் தங்களது அந்தியேட்டிச் சடங்குகளை செய்து வந்தாகள். இப்போது அந்த இடம் தொல்லியல் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இங்கு ஒரு பவுத்த விகாரை கட்டப்பட்டு ஒரு பவுத்த தேரரும் குடியிருக்கி்றார்.

திருகோணமலை வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள இலங்கைத் துறைமுகத்துவார கிராமத்தின் குஞ்சிதபாத மலையில் பாலமுருகன் ஆலயம் இடிக்கப்பட்டு பௌத்த விகாரை கட்டப்பட்டிருக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியான பட்டிப்பளை பகுதி போர்ச் சூழலில் பாதிக்கப்பட்டு அங்கு உள்ள தாந்தாமலை என்னும் முருகன் ஆலயம் இந்துக்களின் பண்டைய வழிபாட்டிடும் ஆகும். ஆனால் அண்மையில் சிங்களவர்கள் சிலர் சென்று இராணுவ உதவியுடன் அங்கு புத்தரின் சிலையை வைப்பதற்கு முற்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் புராண இதிகாசத்துடன் தொடர்புபட்ட குரங்கு மாலைபோட்ட மலை உடைக்கப்பட்டு வீதிப் புனரமைப்புக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதே சமயம் சிங்கள அரசு உலகில் மிகப் பெரிய புத்தர் சிலையை வவுனியாவில் அமைக்கவுள்ளது. சமாதி நிலையில் அமையவுள்ள இந்தப் புத்தர் சிலையை கல்வி, பண்பாடு, சமூக சேவைகளுக்கான அனைத்துலக நட்புறவு சங்கத்தின் உதவியுடன் சிறிலங்கா அரசாங்கம் நிறுவவுள்ளது. சிறிலங்காவின் தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் சேனாரத் திசநாயக்கவின் துணையுடன் இந்தப் பாரிய புத்தர் சிலையை அமைக்கவுள்ளதாக கல்வி, பண்பாடு, சமூக சேவைகளுக்கான அனைத்துலக நட்புறவு சங்கத்தின் நிறுவுனர் பிலப்பிட்டிய பஞ்ஞதிஸ்ஸ தேரர் தெரிவித்தார். போரில் பங்கேற்ற சிறிலங்காப் படையினரை போற்றி மேன்மைப்படுத்தும் வகையிலேயே இந்தப் புத்தர் சிலை அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த புத்தர் சிலை அமைக்கும் திட்டத்துக்கு 1000 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது. 522 அடி உயரம் கொண்டதாக அமையவுள்ள இந்தப் புத்தர் சிலை உலகிலேயே அதிக உயரம் கொண்ட புத்தர் சிலையாக இருக்கும். சீனாவின் லுசான் பகுதியில் அமைந்துள்ள 420 அடி உயரப் புத்தர் சிலையே தற்போது உலகில் மிக உயர்ந்த புத்தர் சிலை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புத்தர் சிலை அமைந்துள்ள பீடத்துடன் சேர்த்து 502 அடி உயரமானது. சிறிலங்காவில் மிக உயர்ந்த புத்தர் சிலை குருநாகலில் உள்ளது. இது 88 அடி உயரம் கொண்டது குறிப்பிடத்தக்கது. பௌத்த மதத்தை பின்பற்றாத, தமிழர்கள் அதிகம் வாழும்- தமிழரின் பாரம்பரிய பிரதேசமான வவுனியாவில் இந்தப் புத்தர் சிலையை சிறிலங்கா அரசாங்கம் அமைக்கவுள்ளது. இது தமிழர் பகுதிகளில் பவுத்த மேலாதிக்கத்தை உருவாக்குவதற்கான சிறிலங்கா அரசின் திட்டமிட்ட முயற்சி ஆகும்.

சிங்கள அரசின் ஒடுக்கு முறைகளால் தமிழ் – சிங்கள இனங்களுக்கு இடையிலான முரண்பாடு கூர்மை அடைந்து வருகிறது.

ஒரு மக்களாட்சி முறைமையில் குடிமக்கள் அனைவரும் இன, மொழி, சமய வேறுபாடின்றி சமத்துவமாக நடத்தப்பட வேண்டும். எண்ணச் சுதந்திரம் பேச்சுரிமை உறுதிப்படுத்தப் பட வேண்டும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் (Rule of Law) என்ற கோட்பாடு கடைப்பிடிக்கப் படவேண்டும்.

சிறிலங்காவில் இன்று மக்களாட்சிக்குப் பதில் மகிந்த இராசபக்சேயின் குடும்ப ஆட்சியே கோலோச்சுகிறது. நாடு கடந்த தமிழீழு ஆரசு போன்ற தமிழ் அமைப்புக்கள் முன்னரைவிட வீச்சோடு தமிழ்மக்கள் மூன்றாம்தர குடிமக்களாக நடத்தப்படுவதைப் பன்னாட்டு சமூகத்தின் கவனத்துக்குக் கொண்டுவரவேண்டும். லிபிய மக்களுக்கு ஒரு நீதி தமிழ்மக்களுக்கு இன்னொரு நீதியா என உரத்துக் கேட்க வேண்டும். அதற்கான காலம் இது. திருப்பதி வெங்கடாசலபதியைக் கும்பிடப்போன மகிந்தா இராசபக்சேயை செய்தியாளர்கள் இலங்கையில் வாழும் தமிழர்கள் நிலை பற்றிக் கேள்வி கேட்டார்கள். அதற்குப் பதிலளித்த இராசபக்சே தமிழர்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை போருக்குப் பின்னர் அவர்கள் அமைதியாக வாழ்கிறார்கள் எனப் பதில் அளித்தார். இந்தப் பதில் வழக்கமாக அவர் சொல்லும் பதில்தான். ஆனால் போர் முடிவுக்கு வந்தாலும் தமிழ் – சிங்களம் இரண்டு இனங்களுக்கு இடையில் இருந்து வரும் இன முரண்பாடு தொடர்ந்தும் கூர்மை அடைந்து வருகிறது. அதற்கான சான்று இப்போது இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் நடந்து முடிந்த துடுப்பாட்டப் போட்டி படம்பிடித்துக் காட்டியுள்ளது.

சிறிலங்காவின் வெற்றியைக் கொண்டாடத் தெற்கில் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் சிறிலங்கா தோற்றபோது கொழும்பில் மயான அமைதி நிலவியது. அதே நேரம் யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் வெற்றியை வெடி கொளுத்திக் கொண்டாடினார்கள்.

யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் வெற்றியைக் கொண்டாடியவர்கள் இராணுவத்தினராலும் காவல்துறையினராலும் தாக்கப்பட்டுள்ளார்கள். வல்வெட்டித்துறையில் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்திய அணியின் வெற்றியைத் தொடர்ந்து மலையக இந்திய வம்சாவளித் தமிழர்கள் வசிக்கும் குடியிருப்புக்களை சிங்களக் காடையர்கள் தாக்கியுள்ளனர். இதனால் அட்டன், சமநலகம, கிஜ்ரா புர பகுதிகளில் பல வீடுகள் சேதமடைந்துள்ளன. தாக்குதலுக்குள்ளான மூன்று தமிழ் இளைஞர்கள் டிக்கோயா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்படி நடவடிக்கை எடுக்கத்தவறினால் கடை அடைப்புப் போராட்டத்தில் குதிக்கப்போவதாக அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அறிவித்துள்ளார்.

இலண்டனில் கூட குடிவெறியில் இருந்த சிங்களவர்கள் தமிழர்களைத் தாக்கியிருக்கிறார்கள். சிறிலங்கா அணி போட்டியில் வென்றிருந்தால் சிங்கள இனவெறியர்களைப் பிடித்திருக்க முடியாது.

சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர்களைத் தங்கள் பிறவி எதிரிகளாகவே பார்க்கிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சிறிலங்கா இராணுவம் வி.புலிகளின் பயங்கரவாதத்தைத் தோற்கடித்து வெற்றிவாகை சூடியது. அது போல உலகக் கிண்ணப் போட்டியிலும் சிறிலங்கா அணி இந்திய அணியைத் தோற்கடித்து வெற்றிவாகை சூடும். அந்த வெற்றி பிரபாகரனைத் தோற்கடித்தமைக்குச் சமமாகும் என முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா சிறையில் இருந்தவாறு கூறியிருக்கிறார்.

சரத் பொன்சேகாவை மிஞ்சும் வண்ணம் அய்யன்னாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா துடுப்பாட்டப் போட்டியில் இந்தியாவைத் தோற்கடித்து விட்டால் புலிகளுக்கு எதிரான போரில் உயிர் தியாகம் செய்த படையினருக்கு அவர்கள் செலுத்தும் காணிக்கை, அது பயங்காரவாதத்தை வெற்றி கொண்டதற்கு ஒப்பாகும், அந்த வெற்றியை இராணுவத்தினருக்கு கௌரவமளித்து சமர்ப்பணம் செய்வோம் எனப் போர் வெறியூட்டும் தோரணையில் கூறி உள்ளார். அப்படியானால், இந்தியா ஒரு பயங்கரவாத நாடா? அல்லது இந்திய துடுப்பாட்டு வீரர்கள் வி. புலிப் பயங்கரவாதிகளா? என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராசா கேள்வி எழுப்பியுள்ளார்.

நடந்து முடிந்த ஈழப் போர் நான்கில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். சரண் அடைந்த தளபதிகள் போராளிகள் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள். போர் முடிந்த பின்னரும் தமிழ் மக்கள் அடக்கி ஆளப்பட்டு அழித்தொழிக்கப் படுகிறார்கள்.

யாழ்ப்பாணத்தில் மட்டும் கடந்த ஒரு மாத காலத்தில் 50 பேர் காணாமல் போயுள்ளார்கள். எப்படி? வடக்கில் 50,000 இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. அதையும் மீறி கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் நடைபெறுகிறது.

மறுவாழ்வு முகாம்களில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்படும் முன்னாள் வி.புலிப் போராளிகள் தொடர்ந்தும் இராணுவத்தால் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்? இது தமிழ் இனத்துக்கும் சிங்கள இனத்துக்கும் இடையில் உள்ள அவநம்பிக்கையையே உறுதிப்படுத்துகிறது.

இலங்கையில் 17 பல்கலைக் கழகங்கள் இருக்கின்றன. இதில் 3 தவிர எஞ்சிய 14 பல்கலைக் கழகங்களும் தென்னிலங்கையில் இருக்கின்றன. சிங்கள அரசு தென்னிலங்கையில் உள்ள 14 பல்கலைக் கழகங்களில் 7 பல்கலைக்கழகங்களை பன்னாட்டுத் தரத்துக்கு மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் வட – கிழக்கில் உள்ள ஒரு பல்கலைக் கழகம் தன்னும் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை.

கல்வித் துறையில் மட்டுமல்ல ஏனைய துறைகளிலும் தமிழ்மக்கள் மாற்றாந்தாய் மனப் பான்மையோடு நடத்தப்படுகிறார்கள்.

மக்களால் தெரிவு செய்யப்படுகிற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒத்த உரிமை இருக்க வேண்டும். ஆனால் ஆட்சி அதிகாரம் முழுவதையும் தன் கையில் வைத்துக் கொண்டுள்ள சிங்கள அரசு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை மரியாதையோடு நடத்துவதில்லை. ஏதிலி முகாம்களைப் பார்வையிட அவர்களுக்கு அனுமதியில்லை. அதே போல் முன்னாள் போராளிகளை அடைத்து வைத்திருக்கும் முகாம்களுக்குச் சென்று அவர்களைச் சந்திக்க தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதியில்லை. ஒரு சாதாரண சிங்கள இராணுவ அதிகாரி அவர்களைத் தடுக்கலாம் என்ற நிலை நிலவுகிறது. வட – கிழக்கு மாவட்டங்களில் இடம்பெறும் அபிவிருத்திக் கூட்டங்களுக்கு அவர்கள் அழைக்கப்படுவதில்லை.

கடந்த ஆண்டு சிறிலங்கா நிருவாக சேவைக்கு நடத்தப்பட்ட தேர்வில் 250 பேர் நேர்முகத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். இதில் ஒருவர் கூட தமிழர் இல்லை. இறுதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 135 பேர்களில் ஒரேயொரு முஸ்லிம் மட்டும் தெரிவானார்.

அம்பாரை மாவட்டத்தில் உள்ள மாவட்ட செயலகங்களுக்கு அண்மையில் நியமிக்கப்பட்ட 29 பேரில் ஒரேயொருவர் மட்டும் தமிழர் ஆவர். அம்பாரை மாவட்டம் தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டமாகும். மட்டக்களப்பு மாவட்டத்தில் கடைநிலை பதவிகளுக்கு சிங்களவர்கள நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.

அம்பாரை மாவட்டத்தில் 147 தற்காலிக மேலதிக கல்வி இயக்குநர்கள் பணியில் உள்ளார்கள். ஆனால் இவர்களில் எவரும் நிரந்தரமாக்கப்படவில்லை. ஏனைய மாவட்டங்களில் 2 ஆண்டுகள் பணியில் இருந்தால் போதும். அவர்கள் நிரந்தரமாக்கப்பட்டு விடுவார்கள்.

1948 இல் நாடு சுதந்திரம் அடைந்த பொழுது பொது சேவையில் 24.8 விழுக்காட்டினர் தமி்ழர்கள் ஆவர். அதன் பின்னர் இந்த விழுக்காடு தேயத் தொடங்கியது. 1970 -77 காலப்பகுதியில் இந்த விழுக்காடு 11.10 விழுக்காடாகக் குறைந்து 1978-81 இல் 5.70 விழுக்காடாகத் தேய்ந்தது. இது தமிழர்களது மொத்த மக்கள் விழுக்காட்டை (19.5) விட மிகக் குறைவானதாகும்.

இன அடிப்படையில் மட்டுமல்ல சமய அடிப்படையிலும் தமிழ்மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள். சென்ற ஆண்டு ஒக்தோபர் மாதத்தில் திருகோணமலையில் உள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற கன்னியா வெந்நீர் ஊற்றுக் கிணறுகள் இரவோடு இரவாக திருகோணமலை அரச அதிபர் ஓய்வு பெற்ற இராணுவ தளபதி இரஞ்சித் டி சில்வா அவர்களால் கைப்பற்றப்பட்டது. திருகோணமலை நகர ஊராட்சி மன்றத்தால புதிதாக எழுதி வைக்கப்பட்ட பழைய அறிவித்தல் பலகையை பொறுத்துக்கொள்ள முடியாத அரச அதிபரே இந்தக் கைங்கரியத்தைக் கச்சிதமாக செய்து முடித்தவர். இங்கேதான் இந்துக்கள் தங்களது அந்தியேட்டிச் சடங்குகளை செய்து வந்தாகள். இப்போது அந்த இடம் தொல்லியல் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இங்கு ஒரு பவுத்த விகாரை கட்டப்பட்டு ஒரு பவுத்த தேரரும் குடியிருக்கி்றார்.

திருகோணமலை வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள இலங்கைத் துறைமுகத்துவார கிராமத்தின் குஞ்சிதபாத மலையில் பாலமுருகன் ஆலயம் இடிக்கப்பட்டு பௌத்த விகாரை கட்டப்பட்டிருக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியான பட்டிப்பளை பகுதி போர்ச் சூழலில் பாதிக்கப்பட்டு அங்கு உள்ள தாந்தாமலை என்னும் முருகன் ஆலயம் இந்துக்களின் பண்டைய வழிபாட்டிடும் ஆகும். ஆனால் அண்மையில் சிங்களவர்கள் சிலர் சென்று இராணுவ உதவியுடன் அங்கு புத்தரின் சிலையை வைப்பதற்கு முற்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் புராண இதிகாசத்துடன் தொடர்புபட்ட குரங்கு மாலைபோட்ட மலை உடைக்கப்பட்டு வீதிப் புனரமைப்புக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதே சமயம் சிங்கள அரசு உலகில் மிகப் பெரிய புத்தர் சிலையை வவுனியாவில் அமைக்கவுள்ளது. சமாதி நிலையில் அமையவுள்ள இந்தப் புத்தர் சிலையை கல்வி, பண்பாடு, சமூக சேவைகளுக்கான அனைத்துலக நட்புறவு சங்கத்தின் உதவியுடன் சிறிலங்கா அரசாங்கம் நிறுவவுள்ளது. சிறிலங்காவின் தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் சேனாரத் திசநாயக்கவின் துணையுடன் இந்தப் பாரிய புத்தர் சிலையை அமைக்கவுள்ளதாக கல்வி, பண்பாடு, சமூக சேவைகளுக்கான அனைத்துலக நட்புறவு சங்கத்தின் நிறுவுனர் பிலப்பிட்டிய பஞ்ஞதிஸ்ஸ தேரர் தெரிவித்தார். போரில் பங்கேற்ற சிறிலங்காப் படையினரை போற்றி மேன்மைப்படுத்தும் வகையிலேயே இந்தப் புத்தர் சிலை அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த புத்தர் சிலை அமைக்கும் திட்டத்துக்கு 1000 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது. 522 அடி உயரம் கொண்டதாக அமையவுள்ள இந்தப் புத்தர் சிலை உலகிலேயே அதிக உயரம் கொண்ட புத்தர் சிலையாக இருக்கும். சீனாவின் லுசான் பகுதியில் அமைந்துள்ள 420 அடி உயரப் புத்தர் சிலையே தற்போது உலகில் மிக உயர்ந்த புத்தர் சிலை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புத்தர் சிலை அமைந்துள்ள பீடத்துடன் சேர்த்து 502 அடி உயரமானது. சிறிலங்காவில் மிக உயர்ந்த புத்தர் சிலை குருநாகலில் உள்ளது. இது 88 அடி உயரம் கொண்டது குறிப்பிடத்தக்கது. பௌத்த மதத்தை பின்பற்றாத, தமிழர்கள் அதிகம் வாழும்- தமிழரின் பாரம்பரிய பிரதேசமான வவுனியாவில் இந்தப் புத்தர் சிலையை சிறிலங்கா அரசாங்கம் அமைக்கவுள்ளது. இது தமிழர் பகுதிகளில் பவுத்த மேலாதிக்கத்தை உருவாக்குவதற்கான சிறிலங்கா அரசின் திட்டமிட்ட முயற்சி ஆகும்.

சிங்கள அரசின் ஒடுக்கு முறைகளால் தமிழ் – சிங்கள இனங்களுக்கு இடையிலான முரண்பாடு கூர்மை அடைந்து வருகிறது.

ஒரு மக்களாட்சி முறைமையில் குடிமக்கள் அனைவரும் இன, மொழி, சமய வேறுபாடின்றி சமத்துவமாக நடத்தப்பட வேண்டும். எண்ணச் சுதந்திரம் பேச்சுரிமை உறுதிப்படுத்தப் பட வேண்டும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் (Rule of Law) என்ற கோட்பாடு கடைப்பிடிக்கப் படவேண்டும்.

சிறிலங்காவில் இன்று மக்களாட்சிக்குப் பதில் மகிந்த இராசபக்சேயின் குடும்ப ஆட்சியே கோலோச்சுகிறது. நாடு கடந்த தமிழீழு ஆரசு போன்ற தமிழ் அமைப்புக்கள் முன்னரைவிட வீச்சோடு தமிழ்மக்கள் மூன்றாம்தர குடிமக்களாக நடத்தப்படுவதைப் பன்னாட்டு சமூகத்தின் கவனத்துக்குக் கொண்டுவரவேண்டும். லிபிய மக்களுக்கு ஒரு நீதி தமிழ்மக்களுக்கு இன்னொரு நீதியா என உரத்துக் கேட்க வேண்டும். அதற்கான காலம் இது.

மூலம்: தமிழ் கனேடியன்
பிரசுரித்த நாள்: Apr 05, 2011 0:36:07 GMT


அய்யன்னா நிபுணர் குழுவுக்கு முறைப்பாடுகள் சமர்ப்பிக்க வேண்டிய கெடு முடிய  இன்னும் 22 நாள்களே எஞ்சியிருக்கின்றன

நக்கீரன்

அய்க்கிய நாடுகள் அவையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப்  போரின் போது பன்னாட்டு மனித உரிமைச் சட்டங்கள் மற்றும்  மானிட உரிமைச் சட்டங்கள் மீறப்பட்டன என்று சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக (alleged violations of international human rights and humanitarian law)  தமக்கு ஆலோசனை வழங்கும் வகையில் நிபுணர் குழு ஒன்றை நியமித்துள்ளது தெரிந்ததே. இப்படியான ஒரு நிபுணர் குழு அமைக்கப் போவதாக  பான் கீ மூன் முதல் முறையாக மார்ச்சு 05, 2010 இல் அறிவித்திருந்தார்.

இந்தோனேசியாவைச் சேர்ந்த மர்சுகி டாருஸ்மன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக்குழுவில் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த யஸ்மின் சூக்கா, அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவன் இரட்னர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த நிபுணர் குழு கடந்த யூன் 21 ஆம் நாள் நியமிக்கப்பட்து. அப்போது பான் கீ மூன் விடுத்த அறிக்கையில்  பொறுப்புடமை (Accountability) ஒன்றுதான்  சிறீ லங்காவில் நிரந்தர அமைதிக்கும் நல்லிணக்கத்துக்கும் அவசியமான அடித்தளமாக இருக்கிறதாக தான் நம்புவதாகவும் இந்த  நிபுணர் குழு மூலம் அய்யன்னா அதற்கான ஆக்கபூர்வமான பங்களிப்பை செலுத்த முடியும் என்று குறிப்பிட்டார்.

அய்யன்னா நிபுணர் குழுவின் பணிகள் நான்கு மாதங்கள் கழித்து கடந்த செப்தெம்பர் 18 ஆம் நாளே தொடங்கியது.

இந்த நிபுணர் குழு, 2009 ஆம் ஆண்டு மே மாதம் இலங்கைக்குப் பயணம்  செய்த  அய்க்கிய நாடுகள் அவையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மற்றும் சிறீ லங்காவின் ஆட்சித்தலைவர் மகிந்த இராசபக்சே இருவரும் விடுத்த  கூட்டு அறிக்கையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைகளின் நடைமுறை தொடர்பாக  ஆராயவுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பிலான விசாரணைகளின் போது பன்னாட்டுச் சட்டங்கள் பின்பற்றப்பட்டனவா? என்பது தொடர்பாகவும் இந்தக்குழு ஆராயும்.

இலங்கை அதிகாரிகளுடன் இணைந்து செயற்பட முனையும் இந்தக்குழு அதன் பணிகளை நான்கு மாதங்களுக்குள் நிறைவு செய்துகொள்ளும் எனக் குறிப்பிட்டுள்ள பேச்சாளர் நெசிர்கி, தேவையேற்படின் இந்தக்குழுவின் காலம் நீடிக்கப்படும் என்றும்  தெரிவிததார்.

இலங்கையில் அமைதியும், நல்லிணக்கமும் ஏற்பட பான் கீ மூன் நியமித்த இந்த நிபுணர் குழு தனது பங்களிப்பைப் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்தக் குழு உண்மை கண்டறியும் குழுவாக இருக்கமாட்டாது எனத் தெரிவித்துள்ள அய்யன்னா பேச்சாளர், செயலாளர் நாயகத்துக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஆலோசனை வழங்கும் உரிமை மட்டும் இதற்கு உண்டு எனக்  குறிப்பிட்டுள்ளார்.

தமது  அறிக்கையின் எந்த விடயங்களைப் பொதுமக்களுக்கு வெளியிடுவது? எந்த விடயங்களைச் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்குத் தெரிவிப்பது என்பது தொடர்பாக இந்தக்குழுவே தீர்மானிக்கும் எனப்  பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்தக்குழு இலங்கை அதிகாரிகளுடன் இணைந்து செயற்பட விரும்புகிறது. ஆனால் இலங்கைக்குச் செல்லும் நோக்கம் அதற்கு இல்லை என நெசிர்கி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் என்ன நடைபெற்றது என்பது தொடர்பாக விசாரணை செய்யவேண்டியது இலங்கையின் பொறுப்பு  என்பதே பான் கீ மூனின் நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் இந்த நிபுணர் குழுவின் பணிகளுக்கான நிதி, பான் கீ மூனின் உடனடி தேவைகளுக்கான நிதியில் இருந்து பெறப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் குழு அமைக்கப்படுவதைத் தடுக்க  சிறீ லங்கா அரசு பகீரத முயற்சிகள் செய்து   பலத்த எதிர்ப்புக்கள் தெரிவித்த  போதும் அதனை மீறி அய்யன்னா அவையின் செயலாளர் நாயகம் இந்தக் குழுவை அமைத்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது. இது இராசதந்திர மட்டத்தில் சிறீ லங்கா அரசுக்குக் கிடைத்த படுதோல்வி ஆகும். தமிழர் தரப்புக்குக் கிடைத்த பெரு வெற்றியாகும்.

அய்யன்னா நியமித்த நிபுணர் குழுவை எதிர்த்து சிறீ லங்கா அமைச்சர் ஒருவர் கடந்த யூலை மாத முற்பகுதியில் அய்யன்னாவின் கொழும்பு தூதுவராலயத்துக்கு முன் பவுத்த தேரர்கள் புடை சூழ  சாகும்வரை உண்ணா நோன்பு இருந்தார். அவரது ஆதரவாளர்கள் அய்யன்னா தூதுவராலயத்தை நாள்க்கணக்கில் முற்றுகை இட்டு முடக்கினார்கள். இதனால் தூதுவராலய ஊழியர்கள் பாதுகாப்புக் கருதி அங்கிருந்து வெளியேற  நேர்ந்தது.

இந்தக் குழு அமைக்கப்படுவதற்கு 118 அணிசேரா நாடுகளைக் கொண்ட அணிசேரா அமைப்பும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தது. பின்னர் அந்த எதிர்ப்பு கைவிடப்பட்டது. இந்த அணிசேரா நாடுகளின் அமைப்பில் சிறீ லங்கா இருப்பது குறிப்பிடத்தக்கது.  இந்த நிபுணர் குழுவை எதிர்த்து உருசிய வெளியுறவு அமைச்சு அறிக்கை விட்டது.  அதில் அய்யன்னா பாதுகாப்பு அவை மற்றும் பொதுச் சபை இரண்டையும் மீறி பான் கீ மூன் செயல்படுவதாக  குற்றம் சாட்டப்பட்டது.

சிறீ லங்கா அரசு நிபுணர் குழு உறுப்பினர்கள் நாட்டுக்குள் நுழைவதற்குத் தடைபோட்டுள்ளது.  இந்தக் குழுவுடன் எந்தவொரு  தொடர்பையும் பேணப்போவதில்லை என  சிறீ லங்கா அரசு தெரிவித்துள்ளது.

அணிசேரா நாடுகளுக்கு விளக்கமளிக்கும் வகையில் அய்க்கிய நாடுகள் செயலாளர் நாயகம்  பான் கீ மூன்  அணி சேராநாடுகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார். இந்தக் குழு, இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் குறித்து தமக்கு அறிவுறுத்தும்  குழு மாத்திரமே என்றும் அதற்கு விசாரணை மேற்கொள்ளும்  அல்லது உண்மையைக் கண்டறியும் (not an investigative or fact-finding panel ) அதிகாரம் கிடையாது  எனப் பான் கீ மூன் விளக்கம் அளித்தார். அத்துடன் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி அதன் கீழேயே இந்தக்  குழுவை நியமித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அய்க்கிய நாடுகளின் நிபுணர்கள் குழு  நான்கு மாதங்கள் வரை விசாரணைகளை நடத்தும்.  இது தொடர்பாக நிபுணர் குழு விடுத்த அறிக்கையில் பின்வரும் தரவுகள் கொடுக்கப்பட்டுள்ளது.

1) முறைப்பாட்டாளர்கள் எழுத்து மூலம் பத்துப் பக்கங்களுக்கு மேற்படாத முறைப்பாட்டை சமர்ப்பிக்கலாம். ஒருவர் ஒரு முறைப்பாட்டை மட்டும் சமர்ப்பிக்கலாம்.  முறைப்பாட்டில் குறிப்பிடப்படும் சாட்சிகளின் தொடர்பு விபரங்கள் கொடுக்கப்பட வேண்டும். முறைப்பாடு எந்த மொழியில் இருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்படாவிட்டாலும் ஆங்கில மொழியில் அனுப்புவதே நல்லது. ஆங்கிலம் தெரியாதோர் தமிழில் எழுதி அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அனுப்புதல் வேண்டும்.

2) முறைப்பாடு சிறீ லங்காவில் நடந்த போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பன்னாட்டு மனித உரிமைச் சட்டங்கள் மற்றும்  மானிட உரிமைச் சட்டங்கள் மீறப்பட்டன என்று சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் (alleged violations of international human rights and humanitarian law during the final stages of the conflict in Sri Lanka) பற்றியதாக இருக்க வேண்டும்.

3)  யாரும், அவர் எந்த நாட்டையோ இனத்தையோ சார்ந்தவராக இருப்பினும் முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்கலாம். குறிப்பாக-

அ)  நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள்
ஆ)  உறவுகள் பாதிக்கப்பட்டவர்கள்
இ)  மனித உரிமை மீறல், இன அழிப்பு பற்றித் தெரிந்த அனைவரும்
ஈ)  அரச சார்பற்ற நாட்டு அல்லது பன்னாட்டு அமைப்புக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்
உ)  ஊர்ச் சங்கங்கள்
ஊ)   மாணவர் அமைப்புகள்
எ)   தொழில்சார் வல்லுனர்கள்
ஏ)   வணிக வாரியங்கள்
ஒ)  இதர சங்கங்கள்
ஓ) பிற மொழி நண்பர்கள், அமைப்புகள்,

4)  ஒருவர் ஒரு மின்னஞ்சல் மட்டுமே அனுப்பலாம்.  அனுப்பவேண்ட்டிய முகவரி:   panelofexpertsregistry@un.org.  இந்த மின்னஞ்சலை    வேறு யாரும் பார்க்க முடியாது.

    5) காலக்கெடு:          டிசெம்பர் 15, 2010 ( December 15, 2010)

7) முறைப்பாட்டாளர்களின் முறைப்பாடு இரகசியமாக வைக்கப்படும்.

கீழ்க்கண்ட இணைய  தளங்களில் மேலதிக தரவுகள் தரப்பட்டுள்ளன. அதனைப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

http://www.facebook.com/group.php?gid=222716130480http://www.yarl.com/forum3/index.php?showtopic=77243

முறைப்பாட்டாளர்கள் விரும்பின் அந்தந்த நாட்டு தமிழ் அமைப்புகளுக்கு ஒரு படியை அனுப்பலாம். கனடாவைத் தளமாகக் கொண்ட போரினால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைக்குமான நடுவத்திற்கு ஒரு படியை அனுப்பி (un@cwvhr.org) வைக்கலாம்.

சிறீ லங்காவின் கடும் எதிர்ப்பையும் மீறி நியமிக்கப் பட்டுள்ள இந்தக் குழுவின் முன் போரினால் பாதிக்கப்பட்டவர்களும் அவர்களின் உறவினர்களும் பொது அமைப்புக்களும் தங்களது முறைப்பாடுகளைப் பதிவு செய்வது அவசியம். இந்தக் குழுவின் அதிகாரங்கள் சிறீ லங்காவில் நடந்த போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பன்னாட்டு மனிதவுரிமை மற்றும் போர் பற்றிய மானிட சட்ட மீறல்கள் பற்றி அய்யன்னா அவையின் செயலாளர் நாயகம் அவர்களுக்கு ஆலோசனை வழங்கும் என மட்டுப்படுத்தப் பட்டிருந்தாலும் அதன் பரிந்துரைகள் ஒரு முழு அளவிலான போர்க்  குற்ற விசாரணைக்கு வழிசமைக்கும் வாய்ப்பு இருக்கிறது.

எனவே உங்கள் சமர்ப்பித்தல்களின் இறுதியில்  நிபுணர் குழு கீழ்க்கண்டவற்றையும் அய்யன்னா அவைச்  செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு பரிந்துரை செய்யுமாறு கேட்கலாம்.

1) சிறீ லங்காவில் இடம்பெற்ற  மனித உரிமை மற்றும்  பன்னாட்டு மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டமை தொடர்பில் இழைக்கப்பட்ட  போர்க்குற்றங்களையும் விசாரிக்க ஒரு சுதந்திரமான குழுவை (The institution of an independent War Crimes Inquiry panel) அமைத்தல்.

2) வட – கிழக்கில் வாழும் தமிழ்மக்களது உண்மையான விருப்பத்தை அறிந்து கொள்ள  அய்யன்னாவின் கண்காணிப்பில் ஒரு நேரடி வாக்கெடுப்பு(UN supervised referendum on  right of self-determination of Thamils in the North and East to asceratain the politicaal aspirations)நடத்தல் வேண்டும்.

எனவே இந்த அரிய வாய்ப்பைத் தமிழ்மக்கள் நழுவ விடக்கூடாது. அய்யன்னா செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்களால்  நியமிக்கப்பட்ட இந்த நிபுணர் குழுவே தமிழீழ மக்களது விடுதலைப் போராட்டத்தையும் அந்தப் போரில் ஏற்பட்ட உயிர், உடமை இழப்புக்களையும் அனைத்துலக மயப்படுத்தப்பட வழிசமைத்துள்ளது. தாய் தந்தையர்களை, மனைவி பிள்ளைகளை,  உடன் பிறப்புக்களை, உற்றார்  உறவினர்களை இழந்தவர்கள்,  உடல் உறுப்புக்களை இழந்து நடைப்பிணமாக்கப் பட்டவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்,  சொந்த வீடு வாசல்களை இழந்தவர்கள், சொத்துக்கள் சூறையாடப்பட்டவர்கள்,  மொத்தமாக சிங்கள ஆட்சியாளர்களால் பாதிக்கப்பட்ட அனைவரும்  இந்த வாய்பைப் தக்கவாறு பயன்படுத்த வேண்டும்.

அய்ரோப்பா, கனடா, மலேசியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா நாடுகளில் வாழ்வோர் அவரவர் நாட்டில் இயங்கும் மக்கள் அமைப்புக்கள் ஊடாக  வேண்டிய  உதவிகளை பெற்றுக் கொள்ளலாம்.

இது தொடர்பாகச் செயற்படும் உலகத் தமிழர் பேரவை (info@globaltamilforum.org)  பிரித்தானிய பேரவை  அவுஸ்திரேலிய தமிழர் பேரவை, தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு (mte.france@gmail.com – 00 33 615 88 4221)  கனடா போரினால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைக்குமான நடுவம் (un@cwvhr.org – 416-628-1408) போன்ற அமைப்புகளோடு தொடர்பு கொண்டு முறைப்பாடுகளைச் சமர்ப்பிப்பதற்கான உதவிகளையும் ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ளலாம்.

முறைப்பாடுகள் சமர்ப்பிக்க வேண்டிய கெடு முடிய இன்னும் 22 நாள்களே எஞ்சியிருக்கின்றன என்பதால் விரைந்து வினைசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.  (December,  2010)


மே 19 முடிவல்ல! மற்றொரு போராட்டத்தின் தொடக்கம்!

நக்கீரன்

மே 19 தமிழீழ மக்களது குருதி படிந்த நாள்.  நான்காவது தமிழீழப் போர் முடிவுக்கு வந்த நாள். வரலாற்றில் மறக்க முடியாத வலிகளைச் சுமந்த நாள்.

மே 19  தமிழீழ மக்களின் மனதில் ஏற்படுத்திய வலி காலத்தால் துடைக்க முடியாத ஒன்று. எங்களது மக்கள் குண்டு போட்டும் செல் அடித்தும் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டார்கள். ஆண், பெண், குழந்தைகள் என எல்லோருமே கொல்லப்பட்டார்கள். பதுங்கு குழிகளில் பதுங்கியிருந்த மக்களை சிங்கள இராணுவம்  புல்டோசர் கொண்டு மண்ணால் மூடியது.  இறந்த குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்களின் உடல்கள் எங்கும் சிதறுண்டு கிடந்தன. அதனை நாய், நரிகள் சாப்பிட்டன. முள்ளிவாய்க்கால் முழுவதுமே பிணவாடை வீசியது.  சரண் அடைந்தவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் சித்திரவதை செய்யப்படட பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

முள்ளிவாய்க்கால் மருத்துவமனைகள் பீரங்கி கொண்டு தாக்கப்பட்டன. மருந்துவமனைகள் தாக்குதலுக்கான இலக்குகளே என்று பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய இராசபக்சே கொக்கரித்தார்.  மக்களுக்கு போதிய உணவு, மருந்து வழங்கப்படவில்லை. அய்யன்னா அதிகாரிகளும் செஞ்சிலுவை ஊழியர்களும் வெளியேற்றப்பட்டார்கள்.

சாட்சியமில்லாத இந்த இனப்படுகொலையை உலக நாடுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன. உலக அமைதிக்காக உருவாக்கப்பட்ட அய்யன்னா மவுனம் காத்தது. அய்யன்னாவின்  செயலாளர் நாயகம் பான் கி மூன் இனப்படுகொலை நடந்து முடிந்த பின்னர் முள்ளிவாய்க்காலை உலங்குவானூர்தியில் மேலே இருந்து சுற்றிப் பார்த்தாரேயொழிய அந்த இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்த முயற்சிக்கவில்லை.

மே 25, 2009 அன்று பான் கி – மூன் விடுதலைப்புலிகளுக்கு எதிராக சிறிலங்கா இராணுவம் இறுதித் தாக்குதல் நடத்திய இடத்தைப் உலங்கு வானூர்தியில் இருந்து பார்வையிட்ட பின்னர் இடம்பெயர்ந்து வாழும் மக்களின் நிலை கவலையளிப்பதாகக் கூறினார்.  ” நடைபெற்ற போரில் கனரக ஆயுதங்களின் பயன்பாடிற்கான தெளிவான ஆதாரங்களை நான் காணவில்லை. இடம்பெயர்ந்து வாழும் மக்களின் நிலைகண்டு மிகுந்த கவலை அடைந்துள்ளேன். உலகம் முழுவதிலும் உள்ள இதனை ஒத்த பகுதிகளுக்கு நான் பயணம் மேற்கொண்டுள்ளேன், ஆனால் இங்கு (சிறீ லங்கா) கண்டதை போல நான் எங்கும் கண்டதில்லை. பலர் தமது உறவுகளை இழந்துள்ளனர். இது ஏற்றுக்கொள்ள முடியாத நிலைமை” என்று பாம்பும் சாக வேண்டும் தடியும் முறியக் கூடாது என்ற பாணியில் திருவாய் மலர்ந்தார்.

போரில் மொத்தம் 1,300 பேர் இறந்தார்கள் என்றும் அவர்கள் எல்லோரும் புலிகள் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் என்றும் சிறிலங்கா அரசு கூறியது.  மேலும் இந்தப் போரில் பொதுமக்களில் எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை (”Zero Tolerance Casualties”)  என்றும் கூசாமல் பொய் சொன்னது.  ஆனால் அய்யன்னாவின் அப்போதைய‌ அறிக்கை 7,000 பொதும‌க்க‌ள் இற‌ந்த‌தாகக் கூறிய‌து. பிரித்தானிய,  பிரெஞ்சு  ஊட‌க‌ங்க‌ள் 20,000 பொதும‌க்க‌ள் இற‌ந்த‌தாகக் கூறின‌. போர்க் கால‌க‌ட்ட‌த்தில் அய்யன்னாவின் பிர‌திநிதியாக‌ இல‌ங்கையில் இருந்த‌ கோர்ட‌ன் வைசு 40,000 பொது ம‌க்க‌ள் இந்த‌ப் போரில் கொல்ல‌ப்ப‌ட்ட‌தாக‌க் கூறினார்.  அல்ஜ‌சீரா தொலைக்காட்சி 70,000 பொதும‌க்க‌ள் இற‌ந்ததாக‌க்  கூறிய‌து.

ச‌ன‌வரி 15,  2010 அன்று ட‌ப்ளின் ம‌க்க‌ள் தீர்ப்பாய‌ம் “இல‌ங்கையில் ந‌ட‌ந்த‌ இறுதிக் க‌ட்ட‌ப் போரில் ம‌னித‌ உரிமை மீற‌ல்க‌ளும் போர்க்குற்ற‌ங்க‌ளும் நிக‌ழ்ந்துள்ள‌ன‌. மேலும் இல‌ங்கையில் இன‌ப்ப‌டுகொலை ந‌டைபெற்ற‌த‌ற்கான‌ சாத்திய‌க்கூறுக‌ள் உள்ள‌ன‌. இதை உறுதிப்படுத்த மேலதிக விசாரணைகள் தேவை” என்று   மக்கள் தீர்ப்பாயத்தின் அறிக்கை கூறியது.

இதனைத் தொடர்ந்து 2010 மார்ச் மாத‌ம் லூயிசு ஆர்ப்ப‌ர் த‌லைமையிலான‌ ப‌ன்னாட்டு நெருக்க‌டி குழும‌ம்(International Crisis  Group) த‌ன‌து அறிக்கையை வெளியிட்ட‌து. அதில் போர்க்குற்ற‌ம் தொட‌ர்பான‌ ஒரு விசார‌ணை தேவை என்ற‌ கோரிக்கை முன்வைக்க‌ப்ப‌ட்ட‌து. இதைத் தொட‌ர்ந்து ம‌னித‌ உரிமை க‌ண்காணிப்ப‌க‌ம், ப‌ன்னாட்டு ம‌னித‌ உரிமை அமைப்புக‌ள், ப‌ன்னாட்டு ம‌ன்னிப்பு சபை (Amnesty International)  எல்லாம் த‌ங்க‌ளிட‌ம் உள்ள‌ போர்க்குற்ற‌ம் தொட‌ர்பான‌ சாட்சிய‌ங்க‌ளை ஒவ்வொன்றாக‌ வெளியிட்டன. இந்த அழுத்தங்கள் காரணமாக  அய்யனாவின் செயலாளர் நாயகம் பான் கி – மூன் யூன் 3, 2010 அன்று  சிறிலங்கவில் ந‌ட‌ந்த‌ போர்க்குற்ற‌ங்க‌ள் தொட‌ர்பாக‌ விசாரிக்க‌  மூன்று பேர் கொண்ட‌ ஒரு வல்லுநர் குழுவை நிய‌மித்தார்.

பான் கி-மூன் நியமித்த வல்லுநர் குழு சிறிலங்கா அரசு போர்க் குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்துள்ளதற்கு  நம்பத்தகுந்த சான்றுகள் உள்ளதாக கூறும் அறிக்கையொன்றினை மார்ச்சு 31 இல் சமர்ப்பித்தது.  இந்தப் போர் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது அதற்கான ஆயத்தங்களை சிறிலங்கா அரசு எப்படிச் செய்தது என்பதை அந்த அறிக்கை புட்டுக்காட்டியுள்ளது.

1) இந்தியாவின் த‌லையீடும், இந்திய‌ க‌ட‌ல்ப‌குதியில் இந்தியா த‌ன‌து போர்க்க‌ப்ப‌ல்க‌ளை நிறுத்திப்  புலிக‌ளைக் க‌ண்காணித்து வ‌ந்த‌தும் செய்ம‌தி மூல‌ம் கிடைக்கும் த‌க‌வ‌ல்க‌ளை சிறிலங்காவுக்குக் கொடுத்து உத‌விய‌து மிக‌ முக்கிய‌மான‌ ஒன்றாகும்.

2) ப‌ய‌ங்க‌ரவாத‌த்திற்கு எதிரான‌ போர் என்ற‌ பெய‌ரில் சிறிலங்கா இந்த‌ப் போரைச் செய்த‌தால் உல‌க‌ நாடுக‌ளின் த‌லையீடுக‌ள் இல்லாம‌ல் இருந்த‌து.


இலங்கை அர‌சின் இறுதிக‌ட்ட‌ப் போருக்கான‌ த‌யாரிப்பு

1) பயங்கரவாத‌த்தை தடுக்கும் ச‌ட்ட‌ம் (Prevention of Terrorism Act)

2) அவச‌ர‌காலச் ச‌ட்ட‌ விதிகள் (Emergency Regulations )

3)  ஆட்சித்தலைவரின் அதிகாரத்தின் மூலமாக‌ அவ‌ர‌து குடும்ப‌த்தைச் சேர்ந்த‌

300 குடும்ப‌ உறுப்பின‌ர்க‌ள் முக்கிய‌மான‌ அர‌ச‌ ப‌த‌விக‌ளில் அம‌ர்த்த‌ப்ப‌ட்டார்க‌ள் (எடுத்துக்காட்டு – கோத்த‌ப‌யா இராச‌ப‌க்சே பாதுகாப்பு அமைச்சுச்  செய‌ல‌ராக‌வும்  ப‌சில் இராச‌ப‌க்சே அதிப‌ரின் ஆலோச‌க‌ராவும் நிய‌மிக்க‌ப்ப‌ட்ட‌து)

4) போர் நிறுத்த‌ கால‌ க‌ட்ட‌த்தில் 66 ம‌னித‌ உரிமை ஆர்வலர்க‌ள் அர‌ச‌ ப‌டையால் ப‌டுகொலை செய்ய‌ப்ப‌ட்டார்க‌ள்.

5) செப்தெம்பர் 8, 2008 அன்று யாருக்கும் பாதுகாப்பு வ‌ழ‌ங்க‌ முடியாத‌ கார‌ண‌த்தினால் போர் ந‌டைபெறும் ப‌குதியில் இருந்த‌ அனைத்து ம‌னித‌ உரிமை அமைப்புக‌ளும் வ‌ன்னிப்ப‌குதியை விட்டு வெளியேறுமாறு சிறிலங்கா அர‌சு கட்டாயப்படுத்தியது.

அய்யன்னா வல்லுநர்  குழுவின் அறிக்கை இல‌ங்கை அர‌சு ம‌னித‌ குல‌த்திற்கு எதிரான குற்ற‌ங்க‌ளைச் செய்துள்ள‌து என‌ குற்ற‌ம் சாட்டியுள்ள‌து.

1) அப்பாவி பொதும‌க்க‌ளைக் கொன்றது

2)வெள்ளைக் கொடி ஏந்தி ச‌ர‌ண‌டைய‌ வ‌ந்த‌வ‌ர்க‌ளைச் சுட்டுக்  கொன்ற‌து

3) கைது செய்த‌ போர்க்குற்ற‌வாளிக‌ளைக் கொன்ற‌து.

மேலும்  இல‌ங்கை அர‌சு ப‌ன்னாட்டுப் போர் விதிக‌ளை மீறியுள்ள‌தாக‌வும் அய்யன்னா வல்லுநர் குழு குற்ற‌ம் சாட்டியுள்ள‌து.

1) இல‌ங்கை அர‌சு ப‌ன்னாட்டு ம‌னித‌ உரிமை விதிக‌ளையும் மீறியுள்ள‌து. ச‌ன‌வரி 29 வ‌ரை ஐ.நா அதிகாரிக‌ள் இருவ‌ர் போர்ப்ப‌குதியில் இருந்தார்க‌ள். அவ‌ர்க‌ள் இறுதியாக‌ போர்ப்ப‌குதியை விட்டு வெளியேறும் பொழுது நில‌மெங்கும் ம‌க்க‌ளின் பிண‌ங்க‌ள் இருந்த‌தால் வான் நோக்கி பார்த்தவாறே ந‌ட‌ந்து வ‌ந்த‌தாக‌வும், ஆனால் ம‌ர‌ங்க‌ளில் எல்லாம் வெடித்துச் சித‌றிய‌ குழந்தைக‌ளின் உட‌ல் பாக‌ங்க‌ள் இருந்த‌தாக‌வும் அவ‌ர்க‌ள் கூறினார்க‌ள்.

2) போரில்லாப் ப‌குதி என்று கூறிய‌ இட‌த்தில் வ‌ந்து குவிந்த‌ ம‌க்க‌ளைக் கொன்ற‌து.

3) பொதும‌க்க‌ள் மீது க‌ன‌ர‌க‌ ஆயுத‌ங்க‌ள் பாவித்த‌து.

4) ம‌ருத்து‌வ‌ம‌னையின் க‌ழிவ‌றை வாயில் முத‌ற்கொண்டு நோயாளிக‌ளால் நிர‌ம்பிய‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளின் மீது குண்டுவீசிய‌து.

இறுதிக் கால‌ங்க‌ளில் ம‌ய‌க்க‌ம‌ருந்து கொடுக்க‌ப்ப‌டாம‌ல் 40,000 அறுவை வைத்தியம் அங்கு ந‌டைபெற்ற‌தாக‌வும் கையுறைக‌ள் இல்லாத‌தால் ம‌ருத்துவ‌ர்க‌ள் வெறும் கைக‌ளினாலேயே அறுவை வைத்தியம் செய்த‌தாக‌வும் மேலும் “blade” இல்லாத‌தால் ஒருமுறை ப‌ய‌ன்ப‌டுத்திய‌ “blade” யையே ம‌றுமுறை அவ‌ர்க‌ள் பயன்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த‌ ம‌ருத்துவ‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்கு ம‌ய‌க்க‌ ம‌ருந்துக‌ளும் சில‌ முக்கிய‌மான‌ ம‌ருந்துக‌ளும் தேவை என‌ அர‌சிட‌ம் கோரிக்கை வைக்க‌ அர‌சோ இவ‌ர்க‌ளுக்கு த‌லைவ‌லிக்கு கொடுக்க‌ப்ப‌டும் சில‌ மாத்திரைக‌ளை ம‌ட்டுமே கொடுத்த‌து. மேலும் ம‌னித‌நேய‌ அடிப்ப‌டையில் ப‌ணிபுரிந்த‌ மூன்று ம‌ருத்துவ‌ர்க‌ளை இல‌ங்கை அர‌சு கைது செய்தது. இவை  எல்லாம் ப‌ன்னாட்டு ம‌னித‌ உரிமைக‌ளை மீறிய‌ செயல்க‌ளாகும் என‌ அறிக்கை கூறுகின்ற‌து.

மே 13, 2009 அன்று அய்யன்னா போர்ப் ப‌குதியில் 1,00,000 ம‌க்க‌ள் ம‌ட்டுமே இருப்ப‌தாக‌ கூறிய‌து. இந்திய‌  நாடாளும‌ன்ற‌த்தில் பிர‌ணாப் முக‌ர்ஜி வெறும் 70,000 ம‌க்க‌ள் ம‌ட்டுமே போர்ப்ப‌குதியில் இருப்ப‌தாக‌க்  கூறினார். இன்னும் ஒரு ப‌டி மேலே போய் இல‌ங்கை அர‌சோ வெறும் 10,000 பேர் ம‌ட்டுமே இருப்ப‌தாகக் கூறிய‌து. ஆனால் ப‌ன்னாட்டு செஞ்சிலுவைச் ச‌ங்க‌மோ காய‌ம‌டைந்து இருந்த‌ 14,000 பொதும‌க்க‌ளைத் த‌ன‌து க‌ப்ப‌ல் மூல‌ம் இல‌ங்கையின் ம‌ற்றொரு ப‌குதிக்கு வைத்தியத்திற்காக‌ கூட்டிச்சென்ற‌தாகக் கூறிய‌து. இவ‌ர்க‌ளில் 5,000 பொதும‌க்க‌ள் காலையோ, கையையோ இழ‌ந்த‌வ‌ர்க‌ளாவ‌ர். மேலும் இவ‌ர்க‌ளை எல்லாம் “போரில்லாப் ப‌குதி” என்று அர‌சு அறிவித்த‌ ப‌குதியில் இருந்தே கொண்டு சென்றோம் என‌ செஞ்சிலுவைச் ச‌ங்க‌ம் கூறிய‌து. உல‌க‌ உண‌வுத் திட்ட‌ அலுவ‌ல‌க‌ம் போர்ப்ப‌குதியில் 4,20,000 பொதும‌க்க‌ள் இருக்கின்றார்க‌ள் என்றும் அவ‌ர்க‌ளுக்கு தேவையான‌ உண‌வை எடுத்துச் செல்ல‌வும் அர‌சிட‌ம் அனும‌தி கோரிய‌து. ஆனால் அர‌சு 1,00,000 ம‌க்க‌ளுக்கு தேவையான‌ உணவை எடுத்துச் செல்வ‌த‌ற்கு ம‌ட்டுமே அனும‌தி அளித்த‌து. அதாவ‌து ஒருவ‌ருக்குத் தேவையான‌ உண‌வு நான்கு பேருக்கு கொடுக்க‌ப்ப‌ட்ட‌து. இத‌னால் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் ப‌சியால் இற‌ந்தார்க‌ள்.

ஐ.நா நிபுண‌ர் குழுவின் கோரிக்கைக‌ள்

1) போர்க்குற்ற‌ம், ம‌னித‌ குல‌த்திற்கு எதிரான‌ குற்ற‌ங்க‌ள் ந‌டைபெற்ற‌த‌ற்கான‌ ஆதார‌ங்க‌ள் கிடைத்துள்ள‌தால் இவை ப‌ற்றி ஒரு சுயேட்சையான‌ ப‌ன்னாட்டு விசார‌ணைக்குழு விசாரிக்க‌ வேண்டும்.

2) த‌ற்பொழுதும் அங்கு ந‌டைபெற்றுக்கொண்டிருக்கும் வ‌ன்முறைக‌ள் நிறுத்த‌ப்ப‌ட‌வேண்டும்.

3) விசாரணை ப‌ன்னாட்டு ச‌ட்ட‌ விதிக‌ளின்ப‌டி ந‌டைபெற‌ வேண்டும்.

4) அய்யன்னாவும் இந்த‌ச் சிக்கலில் சில‌ த‌வ‌றுக‌ளைச் செய்துள்ள‌து.

5)  மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட வேண்டும் என்ற வாதம் வலுப்பட்டுள்ளது.

புலம்பெயர் தமிழர்களும் மனித உரிமை அமைப்புக்களும் கொடுத்த அழுத்தம் காரணமாகவே பான் கி – மூன் மூவர் கொண்ட வல்லுநர் குழுவை அமைத்தார். இப்போது அந்தக் குழு கொடுத்த அறிக்கை சிறிலங்கா அரசு போர்க்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்துள்ளதாக் குற்றம்சாட்டுகிறது.  அதற்கான சாட்சியம் இருப்பதாகச் சொல்கிறது. ஆனால் அந்த அறிக்கையையிட்டு மேலதிக நடவடிக்கை எடுக்கத் தனக்கு அதிகாரம் இல்லை என்று பான் கி – மூன் கையை விரித்துள்ளார். சிறிலங்கா அரசு, பாதுகாப்பு அவை, பொதுச் சபை,  அய்யன்னாவின் மனித உரிமைக்கான சபை அல்லது பன்னாட்டு அமைப்பு ஆகியவற்றின் சம்மதம் இன்றி ஒரு பன்னாட்டு விசாரணை ஆணயத்தை அமைக்க முடியாது என்கிறார்.

சிறிலங்கா பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தை  உருவாக்கப்பட்ட அய்யன்னாவின் உடன்பாட்டில் கையெழுத்து இடவில்லை. அதனால் அந்த நீதிமன்றம் பாதுகாப்பு அவை சொன்னால் ஒழிய நடவடிக்கை எடுக்காது. மேலும் பாதுகாப்பு அவையில் உருசியா, சீனா இரண்டு நாடுகளின் வீட்டோ வாக்கு வேறு இருக்கிறது.

(Without consent of Sri Lanka’s government or a decision by the U.N. Security Council, General Assembly, Human Rights Council or other international body, Ban will not move to set up a formal investigation of the civilian deaths. Sri Lanka is not a member of the International Criminal Court, which means the Hague-based court would require a referral by the U.N. Security Council to investigate any possible war crimes there. Veto powers Russia and China, as well as India, are among the council members opposed to formal Security Council involvement in the case of Sri Lanka, diplomats told Reuters.)

அதே சமயம் பல மனித உரிமை அமைப்புக்கள் ஒரு சுதந்திரமான விசாரணைக் குழுவை அமைக்க  பான் கி – மூன் அவர்களுக்கு அதிகாரம் இருக்கிறதாகச் சொல்கின்றன.

போரின்போது சிங்கள இராணுவம் தடைசெய்யப்பட்ட இரசாயனக் குண்டுகள், கொத்துக் குண்டுகள் போன்றவற்றைப் பயன்படுத்தி குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார், பெண்கள், ஆண்கள் என அகவை,   பால் வேறுபாடின்றி

40,000 தமிழ்மக்களை மூன்று நாட்களில் கொன்றொழித்தது. சரண் அடைந்த தளபதிகளையும் போராளிகளையும் பொதுமக்களையும் சித்திரவதை செய்து சுட்டுக்கொன்றது. பெண்போராளிகளும், பெண்களும் கும்பல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்கள்.

எனவே எதிர்வரும் மே 18 இல் அய்யன்னா தலைமையக முன்றலில் நடைபெற இருக்கும் கவன ஈர்ப்புப் போராட்டம் இரண்டு முக்கிய குறிக்கோள்களைக் கொண்டுள்ளது.

(1) முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மாவீரர்களையும் படுகொலை செய்யப்பட்ட மக்களையும்  நினைவு கூர்ந்து அவர்களது கனவுகளை நினைவாக்குவோம் என உறுதிமொழி எடுத்தல்.

(2) சிறிலங்கா அரசுக்கு எதிராக அய்யன்னா வல்லுநர் குழு அறிக்கையின் அடிப்படையில் போர்க்குற்ற விசாரணை நடைபெற வேண்டும்.  மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட வேண்டும்  என அய்யன்னா பாதுகாப்பு அவை, பொதுச் சபை, அய்யன்னாவின் மனித உரிமைக்கான சபை, பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம், பன்னாட்டு சமூகம் ஆகியவற்றை வற்புறுத்தல்.

தமிழீழ விடுதலைக்கு நாம் பாரிய விலை கொடுத்துள்ளோம். குறிப்பாக முள்ளிவாய்க்காலில் எமது உறவுகள் கொட்டிய குருதி வீண் போகக் கூடாது.  அவர்களைக் கொன்றவர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும்.

நாசி இட்லரது ஆட்சியில் 400,000 அப்பாவி யூதமக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்குக் கழுவாய் தேடும் வகையில் பன்னாட்டு சமூகம்  இஸ்ரேல் என்ற ஒரு தனிநாட்டை சரியாக  63  ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கியது.

பாசீச மகிந்த இராசபக்சே ஆட்சியில் 200,000 அப்பாவி தமிழ்மக்கள் கொல்லபட்டதற்குக் கழுவாய் தேடிட தமிழ்மக்களது நீண்ட நாள் கோரிக்கையான சுதந்திர தமிழீழத்தை மீள் உருவாக்கப் பன்னாட்டு சமூகம் முன் வரவேண்டும்.

இனியொரு விதி செய்வோம். நீதியின் கதவுகள் திறக்கு மட்டும் தொடர்ந்து போராடுவோம்.  விடுதலை நெருப்பை ஓயவிடாது வளர்ப்போம்.

மே 18 முடிவல்ல,  மற்றொரு போராட்டத்தின் தொடக்கம்! (May, 2011)


திரு அக்னி

நான்தான் சொன்னேனே தமிழக ஊடகங்கள் தமிழ் இலக்கணப்படி எழுதுவதில்லை. குறிப்பாக சந்தி இலக்கணத்தை

பின்பற்றுவதில்லை.

“ஆங்கிலத்தில் எழுத்துக்கூட்டல் (spelling) தொல்லை, தமிழில் சந்தித் தொல்லை. ஆங்கிலத்தில் ஒலிப்பது போல் எழுதுவது இல்லை; ஒலிப்பது ஒரு முறையாகவும், எழுதுவது ஒரு முறையாகவும் உள்ளது. தமிழில் சொற்களுக்கு இடையே சில மெய்யெழுத்துகளைச் சேர்த்துச் சேர்த்து எழுதுதல் வேண்டும்; மெய்யெழுத்தை எங்கே சேர்ப்பது, எங்கே சேர்க்கக் கூடாது என்பது தெரிவதில்லை” –இது பலரது இடர்ப்பாடு.

தமிழில் சந்தி இருப்பதற்குக் காரணம், பழங்காலத்தில் பார்த்துக் கற்ற கல்வி குறைவு; கேட்டுக் கற்ற கல்வியே மிகுதி. பார்த்துக் கற்கும் கல்வி மிகுந்துள்ள இக்காலத்தில், சந்தி ஒலிகள் வேண்டாதவையாக உள்ளன. இருப்பினும் பார்க்கும் கண்களுக்கு, சொற்கள் தனித்தனியே தோன்றுமே தவிர, கேட்கும் செவிக்குத் தனித்தனியே ஒலிப்பதில்லை. ‘செவி செல்வம்’ எனும் இரண்டு சொற்களைத் தனித்தனியே எழுதிப் பார்க்க இயலும்; ஆனால் ஒலிக்கும்போது ‘செவிச் செல்வம்’ என்று சேர்த்து ஒலிக்காமலிருக்க இயலாது. அது போன்றே ‘சொல்லி கொடுத்தான்’ எனும் இரு சொற்களையும் ஒலிக்கும்போது ‘சொல்லிக் கொடுத்தான்’ என்று இடையில் ‘க்’ சேர்த்தே ஒலிக்க வேண்டும். இத்தகைய மாறுதல்களையே சந்தி இலக்கணம் கூறும்.

ஓடி + போனான் = ஓடிப்போனான் என்று வரும்.

இங்கு இரண்டு சொற்கள் சேரும்போது, இரண்டுக்கும்இடையில் ப் என்ற மெய் எழுத்து தோன்றி இருக்கிறது. இவ்வாறுஇரண்டு சொற்கள் சேரும்போது பல வகையான மாற்றங்கள்ஏற்படும்.

இரண்டு சொற்கள் சேரும்போது ஏற்படும் மாற்றங்கள்நான்கு வகைகளில் அமையும்.

கதவு + மூடியது = கதவுமூடியது – இயல்பாக இருக்கிறது.

மாலை + பொழுது = மாலைப்பொழுது – ஒரு மெய்எழுத்துத் தோன்றியது.

மரம் + நிழல் = மரநிழல் – ஓர் எழுத்துக் கெட்டது (அழிந்தது)

கல் + சிலை = கற்சிலை – ல் என்ற எழுத்து ற் என்ற எழுத்தாகத் திரிந்தது (மாறியது).

எனவே இரண்டு சொற்கள் சேரும்போது இயல்பாக வருதல்,தோன்றுதல், திரிதல், கெடுதல் ஆகிய நான்கு வகைகளிலும்வரும் என அறியலாம். இங்கு இரண்டு சொற்கள் இருக்கின்றன.முதல் சொல்லை நிலைமொழி என்றும், இரண்டாம் சொல்லை வருமொழி என்றும் கூறுவர். இந்த மாற்றங்கள் நிலைமொழியின் இறுதி எழுத்துக்கும் வருமொழியின் முதல் எழுத்துக்கும் ஏற்ப அமையும். எனவே ஒரு சொல்லின் முதல் எழுத்தையும் இறுதி எழுத்தையும் பற்றி அறிய வேண்டியது அவசியம் ஆகிறது.

உயிர் எழுத்து, மெய் எழுத்து, உயிர்மெய் எழுத்து ஆகியமூன்று வகை எழுத்துகள் சொற்களில் வரும். சந்தி  இலக்கணத்தில் உயிர் எழுத்து, மெய் எழுத்து என்ற இருவகை எழுத்துகளை மட்டுமே கொண்டு இலக்கணம் சொல்லப்படும். உயிர்மெய் எழுத்து, உயிர் எழுத்தும் மெய்எழுத்தும் சேர்ந்து உருவானது ஆகும். அதை மெய் எழுத்து, உயிர் எழுத்து என்றுபிரித்துக்கொண்டு சந்தி இலக்கணத்தில் பயன்படுத்த வேண்டும்.

எடுத்துக்காட்டாக ல் என்ற சொல்லின் முதலில் உள்ள ப என்ற உயிர்மெய்எழுத்து,

ப் + அ என்ற இரண்டு எழுத்துகள் சேர்ந்தது.

பாம்பு என்ற சொல்லின் இறுதியில் உள்ள பு என்ற உயிர்மெய்எழுத்து,

ப் + உ என்ற இரண்டு எழுத்துகள் சேர்ந்தது.எனவே சொற்களைப் பின்வருமாறு பிரிக்கலாம். டை – உயிர் எழுத்தில் தொடங்கும் சொல். மாடு – மெய் எழுத்தில் தொடங்கும் சொல். பழம் – மெய் எழுத்தில் முடியும் சொல். கிளி – உயிர் எழுத்தில் முடியும் சொல்.

நீங்கள் குறிப்பிடும் கருணாநிதி போர் குற்றவாளி –ஜெயலலிதா அந்தவகையானது.

தமிழ் இன்றளவும் நிலைத்து நிற்பதற்கு அதன் இலக்கணக் கட்டுப்பாடே காரணம். அதனை மீறுவது பிழை. தோட்டத்துக்கு வேலி போல மொழிக்கு இலக்கண வரம்பு மிக மிக அவசியம்.

நக்கீரன்


From: M A N I T H A M [mailto:manitham@gmail.com]
Sent: Sunday, July 03, 2011 1:09 PM
To: Thanga
Subject: Re: மனிதம் வெளியீடு – அச்சாகி வரும் புத்தகத்தின் முன் அட்டைப் பக்கம் – உங்களின் பார்வைக்காக மட்டும்…..

அய்யா, தமிழ் இலக்கனப்படி நீங்கள் சொல்லுவது சரியாக இருக்கும். ஆனால், பல்வேறு இணைய தள செய்திகளை பார்க்கும் போது, நமது புத்தக தலைப்பை “போர் குற்றவாளி” என  விட்டு விடலாமா என எண்ணத் தோன்றுகிறது. கீழே பி.பி.சி. யின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பார்க்கவும்.

கருணாநிதி போர் குற்றவாளி -ஜெயலலிதா

http://www.bbc.co.uk/tamil/news/story/2010/07/100701_jayasayskauriscriminal.shtml

கருணாநிதி ஒரு “போர் குற்றவாளி”: ஜெயலலிதா

http://www.tamilwin.com/view.php?2bb269z1b2ecFJpgA00eccGmjp20cd315Lso3cd332IX944b42PTQc84a4eIQGZjdd0ee3D2cid0

அமெரிக்காவை போர் குற்றவாளி என்கிறது சிறிலங்கா அரசு!

http://www.thinakkathir.com/?p=2688

அக்னி

2011/7/3 Thanga <athangav@sympatico.ca>

நான் ஆங்கில மொழியில்தான் கற்றேன். தமிழை ஒரு பாடமாகத்தான் படித்தேன்.

தமிழ் தாய்மொழி என்ற காரணத்தால் பின் நானாகவே நிறைய வாசித்து எழுதப் பேசப் பழகினேன்.

ஆங்கிலத்தில் எழுதுவதைவிட தமிழில் என்னால் எனக்கே உரிய தனிநடையில் எழுதமுடிகிறது.

தமிழை விட ஆங்கிலம் கடினமான மொழி. அதன் இலக்கணம் மேலும் கடினமானது. இது எனது பட்டறிவு.

என்னிடம் தொல்காப்பியம் தொடங்கி ஆறுமுக நாவலர் எழுதிய இலக்கண நூல்கள் இருக்கிறது.

தமிழில் பிழையில்லாது எழுதுவது எப்படி? நல்ல தமிழில் எழுதவேண்டுமா? என்ற நூல்களை அவ்வப்போது

படிக்கிறேன். இவற்றைப் படித்த பின்னர் இலக்கியம் இனிக்கும் என்பதைத் தெரிந்து கொண்டேன்.

நிலைமொழி இறுதியில் வருமொழி வல்லினத்தில் வந்தால் வலி மிகும் என்பது பொது விதி.

விதிவிலக்கு உண்டு. செடிகொடி வேறு  பொருள் செடிக்கொடி வேறு பொருள்.

தமிழில் சந்தி இலக்கணம் ஒரு தனிப் பிரிவு. பெரும்பாலானவர்கள் சந்தி இலக்கணப் பிழையோடுதான் எழுதுகிறார்கள்.

தமிழக எழுத்தாளர்கள் ர, ற பிழைவிடுகிறார்கள்.

நக்கீரன்


கனடிய நாடாளுமன்றத்தில் முதல்த்  தமிழ்க் குரல்!

“கனடிய நாடாளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில் புதிய மக்களாட்சிக் கட்சி; (NDP)  சார்பில் ஸ்காபரோ றூச் றிவர் தொகுதி வேட்பாளராகப் போட்டியிட்ட இராதிகா சிற்சபைஈசன் 4,963 அதிகப்படியான  வாக்குகளால் வெற்றிபெற்றார். கடந்த இருபத்து மூன்று ஆண்டுகள் லிபரல் கட்சியின் கோட்டையாக விளங்கிய ஸ்காபரோ றூச் றிவர் தொகுதியை முதல் முயற்சியிலேயே  கைப்பற்றியதன் மூலம் இராதிகா  வரலாறு படைத்துள்ளார். தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகள் பின்வருமாறு.  

வேட்பாளர்                                          கட்சி                    வாக்குகள்        விழுக்காடு

இராதிகா சிற்சபைஈசன்           புதிய மக்களாட்சி      18,856                       40.5

மார்லீன் கலியொட்                    பழமைவாத                13,893                      29.9

ராணா சர்க்கர்                              தாராள                         12,723                        27.4

யோர்ஜ் சிங்                                 பசுமை                               689                         1.5

மார்க் பலக்                                  சுயேட்சை                         358                        0.8

இந்தத் தொகுதியில் மொத்தம் 130,980  பேர் வாழ்கிறார்கள். இவர்களில் 88,445 பேர் (68 விழுக்காடு) குடிவரவாளர்கள் ஆவர். இதில் தெற்காசிய மற்றும்  சீன சமூகங்கள் 61 விழுக்காடாகும்.  வாக்காளர் தொகை 83,057 ஆகும். இதில் தமிழர்களது வாக்குப்பலம் 14,000 (15%) ஆகும். இராதிகாவின் வெற்றிக்குத்  தமிழர்களது வாக்குப் பலத்தை விட புதிய மக்களாட்சிக் கட்சிக்கு  கனடா முழுதும் வீசிய ஆதரவு அலைதான் காரணம் எனலாம். இந்தக் கட்சி 310  தொகுதிகளில் 102  இல் வெற்றி பெற்று முக்கிய எதிர்க்கட்சியாக விளங்குகிறது.  2008 இல் நடந்த தேர்தலில் இந்தக் கட்சி 37 தொகுதிகளில் மட்டும் வெற்றிபெற்றது. கியூபெக் மாகாணத்தில் கடந்த முறை (2008) இல் ஒரே ஒரு இருக்கையை (மொத்தம் 75)  வைத்திருந்த புதிய மக்களாட்சி கட்சி இம்முறை 57  தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

தேர்தலின்போது தீவிர வலதுசாரிக் கட்சியான பழமைவாதக் கட்சி குடிவரவாளர்களுக்கு எதிராக, குறிப்பிட்டுச் சொல்லப் போனால் சன் சீ கப்பலில் வந்த தமிழ் ஏதிலிகளுக்கு எதிராக கீழ்த்தரமான பரப்புரையை மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தொலைக்காட்சி விளம்பரத்தில் தமிழ் ஏதிலிகள் “ஆட்கடத்தல்காரர்கள்” “கிறிமினல்ஸ்” “புலிகள்” “பயங்கரவாதிகள்” என வருணிக்கப்பட்டார்கள். வெள்ளை நிறத்தவர்களது வாக்குகளைக் கவரவே இந்தக் கட்சி இவ்வாறு பரப்புரை செய்தது.

கடந்த நாடாளுமன்றத்தில் சி 49 சட்டமூலம் கொண்டுவரப்பட்ட போது அதனை எதிர்க்கட்சிகள் தோற்கடித்தன. இந்த சட்ட மூலம்  ஆட்கடத்தல்காரர்களை இலக்குவைக்கும் ஒரு சட்டமாக முன்வைக்கப்பட்டாலும்  பெரும்பாலான விதிகள் ஆட்கடத்தல்காரர்களைத் தண்டிக்காமல் ஏதிலிகளைத் தண்டிக்கிறது. சட்டமூலம் சி-49 இன் கீழ்  ஏதிலிகள், ஏதிலிச் சிறார்கள் உட்பட, ஒரு ஆண்டுக்குக் கட்டாயமாகத் தடுத்து வைக்கப்படுவர். இவர்களுக்குச் சுதந்திரமான மறு ஆய்வு இருக்கும் சாத்தியம் இல்லை. மேலும் அவர்களது குடும்ப மீள் இணைவுக்கும் 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். மேலும் வெளிநாட்டுக்குப் பயணம் செய்வதற்கான  உரிமையும் மறுக்கப்படுகிறது. சட்டமூலம் சி-49 இன் கீழ் ஏதிலிகள் மூன்று முறை தண்டிக்கப்படுவார்கள்.  முதல்முறையாக அவர்களது ஒடுக்குமுறையாளர்களால்,  இரண்டாவது முறையாக ஆட்கடத்தல்காரர்களால் இறுதியாகக் கனடாவால்.

சட்டமூலம் சி-49 கனடாவின் பட்டயம் மற்றும் பன்னாட்டு மனிதவுரிமைகள் பற்றிய கடப்பாடுகளை மீறுகிறது என மன்னிப்புப் சபை, மனிதவுரிமை கண்காணிப்பகம், தேவாலயங்கள் கண்டித்துள்ளன.  இருந்தும் இந்தச் சட்டத்தை புதிய நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றப் போவதாக பழமைவாதக் கட்சி சூளுரைத்துள்ளது. 167  தொகுதிகளில் வென்ற அந்தக் கட்சிக்கு இப்போது நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மை பலம் இருப்பது சுட்டிக்காட்டத்தக்கது.

அகவை 29 நிறைவெய்திய இராதிகா சிற்சபைஈசன் இளையவர். புதிய இளம் தலைமுறையைச் சேர்ந்தவர். கால்டன் பல்கலைக் கழகத்தில் (Carleton University)   வணிகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். குவீன்ஸ் பல்கலைக் கழகத்தில் (Queen’s University)  தொழிற்துறை உறவில்  (Industrial  Relationship)  முதுகலைப் பட்டம் வாங்கியவர். பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்த போது பல்கலைக் கழக மாணவர் அமைப்புக்களில் சேர்ந்து உழைத்தவர். அய்ந்து வயதில் கனடாவுக்குக் குடியேறிய இராதிகா தமிழைச் சரளமாகப் பேசுகிறார். தமிழை மூன்று பேருந்துகள் பிடித்துச் சென்று படித்ததாகச் சொல்கிறார். வீட்டில் எல்லோரும் தமிழிலேயே உரையாடுகிறார்கள்.

2008-2009 காலப் பகுதியில்  எமது உடன் பிறப்புக்கள், சொந்தங்கள், உறவுகள் குண்டுகள் போட்டுக் கொத்துக் கொத்தாகக் கொன்று குவிக்கப்பட்டபோது ” உதவுங்கள்” ” உதவுங்கள்”  என்று பல மணித்தியாலங்கள், நாட்கள், கிழமைகள் இரவு பகல், பனி மழை, கடுங்குளிர் ஆகியவற்றின் மத்தியில் வீதிகளில் இறங்கி  குரல் கொடுத்த பல ஆயிரம் கனடிய  தமிழர்களில் இராதிகாவும் ஒருவர்.  “வீதிகளில் தவம் கிடந்தோம் – அழுது புரண்டோம் – யார் வந்தார்கள்? எமது மக்கள் வேதனையின் உச்சிக்குத் தள்ளப்பட்ட போது பழமைவாதக் கட்சி அரசு கொஞ்சமும் இரங்கவில்லை” எனக் குற்றம் சாட்டுகிறார் இராதிகா.

இப்போது இராதிகாவின் நாடாளுமன்ற நுழைவு எமது சிக்கல்பற்றி நாடாளுமன்றத்தின் உள்ளே நின்று கொண்டு பேசும் நல் வாய்ப்பை நல்கியுள்ளது. புதிய மக்களாட்சிக் கட்சித் தலைவர் யக் லேய்ட்ரன் இராதிகாவை தமிழர்தொடர்பான தேசிய மதியுரைஞராக நியமித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இராதிகாவின் நாடாளுமன்ற நுழைவு மட்டும் அல்லாது தாயகத் தமிழர்களுக்கும் குரல் கொடுத்து வரும் புதிய மக்களாட்சிக் கட்சி பலமான எதிர்க்கட்சியாக விளங்குவது அரசியலில் தமிழர்களுக்கு ஒரு சாதகமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

தேர்தலில் பழமைவாதக் கட்சி சார்பில் ஸ்காபரோ தென்மேற்குத் தொகுதியில் போட்டியிட்ட இன்னொரு தமிழர் (இரா) கவன் பரஞ்சோதி 1,285 வாக்குகளால் வெற்றி வாய்ப்பை இழந்தார். அவரை 31 அகவை நிறைந்த புதிய மக்களாட்சி கட்சி வேட்பாளர் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Sri Lanka  is a  “democracy” in name only

Indrajith

Anyone who surveys the politico-economic scenario of Sri Lanka will be alarmed at  President Rajapakse and his siblings iron grip on power. Rajapakse brothers exercise control over every aspect of peoples life today.

Despite the end of the country’s ethnic conflict in 2009, defence spending  hit LKR 230 billion (US$ 2.1 billion) for 2012, up from 215 billion this year. Sri Lanka’s 2012 budget reveals further  expansion of  the  security forces and  their  families. Measures aimed at the military included a one-off cash grant of 100,000 rupees, to any military or police officer who parented a third child. This payment is clearly intended to boost  the Sinhala population.

Out of  the 230 billion rupees allocated to defence, 203 billion or 88 percent will be spent on salaries, food and uniforms.

The Rajapakse  siblings including  the President control the Ministry of Finance and Planning, Ports and Highways, Civil Aviation, Economic Development, and Defence and Urban Development. The total allocation for these ministries is over a third of the Budget (39%). Furthermore, given the considerable centralization of  powers   the Rajapakse brothers will exercise  control over most other ministries  as well in addition to the  lion’s share of the Budget.

A critical reading of the budget reveals the mounting powers of Gotabhaya Rajapakse who is virtually the Minister for Defence. He is the real power behind the throne although holding  supposedly an innocuous civilian post. Politics is taboo to civil servants but Gotabhaya is a notable exception. He  acts like a super politician.

It is,  therefore, little wonder  he was invited to deliver the key note speech at the Inaugural National Conference on Reconciliation: “The Way Forward for Post Conflict Sri Lanka”  by G.L. Peiris, Minister of Foreign Affairs and an ace acrobatic  in politics.

Gotabhaya Rajapakse among other things claimed “Sri Lanka today is not only one of the most secure and stable countries in Asia but in the entire world.” To drive his point he cited the Humanitarian Operation concluded in May, 2009.  “The return of peace, the restoration of freedom and democracy, and the prospect of a resurgent economy have all been made possible by the success of the Humanitarian Operation that put an end to the terrorist activities of the   LTTE” he  bragged.

One may rightly disagree with him, but you have to marvel at the audacity with which he makes such bombastic claims. The UN experts panel appointed by the Secretary-General Ban Ki-moon  to advise him on “issues of accountability” from the end of Sri Lanka’s  three decades old war.

The U.N.-appointed panel has found “credible allegations” that tens of thousands of civilians were killed and war crimes were committed in the final months of Sri Lanka’s war with the Liberation Tigers of Tamil Eelam, and urged the investigation and prosecution of those responsible. “The panel found credible allegations, which if proven, indicate that a wide range of serious violations of international humanitarian law and international human rights law were committed both by the Government of Sri Lanka and the LTTE, some of which would amount to war crimes.”

Beside the Panel Sri Lankan government faces multiple allegations, primarily from international  rights groups and Tamil Diaspora, that its troops committed war crimes and were responsible for tens of thousands of civilian deaths.

Ch.4 produced damning video evidence that surrendered or captured LTTE cadres were stripped naked,  blindfolded and shot from behind at point blank range by Sinhalese soldiers. UN experts confirmed that the video was authentic, but the Sri Lankan government, notably Gotabhaya Rajapakse dismissed  Ch.4 video  as “total fabrication.” The latest to join the chorus is the LLRC which also says the video is a “total fabrication”. On what grounds only god knows.

There are irrefutable video, photographic, satellite images, oral evidence to indict President Rajapakse and his commanders of war crimes, though  the Sri Lankan government is in a state of total denial.  After May, 2009  Sri Lanka faced multiple allegations, primarily from rights groups  like AI, HRW, ICG and  other organisations, that its troops committed war crimes and were responsible for tens of thousands of civilian deaths. But,  by deftly playing Western critics off China and India, and the Asian giants against each other, it forestalled any action and engineered a post-war resolution from the U.N. Human Rights Council praising its victory over “terrorism.”  The government then and now rejected the charges as baseless, and argues it had every right to fight a  ruthless terrorist group the United Nations, United States, and 30 other countries had put on their terrorism lists.

Now let us take a closer look at the tall claims by Gotabhaya Rajapakse that ” the countrymen irrespective of ethnicity, religion or political affiliation, are reaping the rewards of peace, and that freedom of movement, restoration of democracy and improvement of the country’s economy are significant achievements with the return of  peace. Perhaps the most heartening outcome of the dawn of peace has been the freedom of movement that all Sri Lankans finally enjoy.”

Richard Armitage is a former US Deputy Secretary of State. He is no friend of the LTTE or the Tamil people. At the conference  held in Tokyo  in April 2003 but  boycotted by the LTTE Armistice demanded  that LTTE renounce violence – an undemocratic and unrealistic suggestion. He also pledged US military support to the Sri Lankan government in its fight against the LTTE.

Recently, Richard Armitage participated in a panel meeting conducted at the release of the report   held in an undisclosed location that discussed  the peace process and the evaluation report.   Apart from Messrs Armitage, Solheim and Narayan Swamy, the other speakers were former Minister and government peace negotiator  Milinda Moragoda,  Prof. Gunnar M. Sørbø, (team leader for the evaluation), Dr Jonathan Goodhand (Reader in Conflict and Development Studies, SOAS and deputy team leader for the evaluation) and Dr Suthaharan Nadarajah (lecturer with Centre for International Studies and Diplomacy, SOAS – who was not involved in the evaluation). The panel was chaired by Ms. Frances Harrison, Head of News at Amnesty International and former senior BBC correspondent.

Mr. Armitage told the meeting “Much to my dismay the government of Sri Lanka is still caught up in a CHAUVANISTIC  attitude” a charge the Tamils have continuously levelled against all past Sinhala governments. Continuing Mr. Armitage said “I don’t think they have been far sighted enough in their approach to the North and East. There has been a somewhat lessening of violence there, somewhat lessening of the abductions and things of this nature, but not sufficient. From the US point of view we are quite dismayed  at the lack of progress in HUMAN FREEDOMS, HUMAN RIGHTS etc, and I made that view known [to SL President Rajapakse].

“But what to do about it is the question. [Firstly] the international community is generally coalesced around the fact that the north and the east particularly NEED PROTECTION, and the government of Sri Lanka has to move in that direction. … That is the united message the international community gives.

“Second, I don’t think President Rajapakse is going to be widely welcomed internationally – across the board – until there is some movement. Maybe that’s the wrong strategy, but that’s the way things are going.”

As a former diplomat Mr.Armitage can say only this much in public.  Nonetheless,  it is a damning  indictment against the Sri Lankan government   whatever Gotabhaya Rajapakse’s claims to the restoration of peace, freedom and democracy.

Mr. Gibson Bateman, an international consultant based in New York City, writing  under the caption “Fear and Loathing in Post-War Sri Lanka” (The Mantle – November 11, 2011) has criticised the Sri Lankan government record on  human rights and accuses the regime of seeing everything through the prism of “national security.”  Here are extracts from his article.

“Today, the Sri Lankan government refuses to mention human rights. As such, the regime sees everything through the prism of “national security.” Talking about minority rights, human rights, documenting human rights violations (both past and present), and educating Sri Lankans about the basic principles of human rights are not priorities for President Rajapakse and the United People’s Freedom Alliance.

“Even though the war ended, the country’s North and East remain HEAVILY MILITARIZED. Because of the war, many families in the North are now female-headed households, making some families especially vulnerable; many women now have to worry about their more traditional domestic duties while also figuring out how to earn enough money to provide for their families. Furthermore, with development projects in the North currently focused on infrastructure (like road-building), few jobs are even suitable for women. Reports of violence against women, sexual harassment, and rape are not uncommon. In many cases, Sri Lankan soldiers are the alleged perpetrators.

“Aside from all of this, the government is building a number of war memorials along the A-9 road, which runs from Vavuniya to Jaffna in Northern Sri Lanka. This is in addition to the large number of Buddhist temples, which are also being built in the North. It is unclear why Northern Sri Lanka (where the vast majority of people are Tamil and the predominant religion is Hindu), would need a large number of Buddhist temples.

“Few countries have more history with emergency laws than Sri Lanka. The country’s experience with such decrees goes back to 1947 when, during the final days of British rule, the fading colonial power passed the Pubic Security Ordinance (P.S.O.) in an attempt to suppress political dissent on the island. Since that time, the P.S.O. has given the president the authority to announce state of emergency whenever he sees fit. Over the years, some presidents have added to the original laws, widening the scope of executive power. In the event of a conflict, Emergency Regulations, which are passed by the president without need of parliamentary approval, supersede other existing laws.

“Sri Lanka has been governed under Emergency Regulations for most of the past thirty years. The emergency laws facilitated the establishment of military checkpoints throughout the country, where governmental authorities were given sweeping powers to search and detain LTTE suspects. A suspect could remain in a detention center for up to 21 months without appearing in a court of law. The laws even allowed for people to be displaced from their land.”

According to Human Rights Watch “Sri Lanka’s Emergency Regulations granted the authorities sweeping powers of search, arrest, and detention, which have led to serious human rights violations, including arbitrary detentions, torture, and enforced disappearances. Thousands of people have been detained over the years in official and unofficial detention centers under emergency regulations, many without charge for years, in violation of international law.”

Recently, these regulations were lifted, but they were simultaneously replaced with regulations under the equally draconian piece of legislation styled ” Prevention of Anti Terrorism Act (P.T.A).” It was a cosmetic change to hoodwink the international community.

Basically,  the P.T.A.  enacted in 1979  and made permanent in 1982  shackles  citizens’ civil and political freedoms under the  charade of fighting terrorism and combating political violence. The important thing to remember is that the Emergency Regulations and the Prevention of Terrorism Act have given the government two separate (although similar) legal frameworks to justify systematic human rights violations perpetrated against  Tamils (and sometimes Sinhalese) for decades.

In  Mullaitheevu and many other places in the North, Tamils are not allowed to enter the sea, while their Sinhala counterparts from the south are allowed to fish in their areas without any restrictions.  Tamil  people say that all petitions to government services and establishments have to be given in Sinhala only since 2009. In the heart of Kilinochchi town, the erstwhile administrative capital of Tamil rebels, streets sport Sinhalese names such as Mahinda Rajapakse Mawatha, and Aluth mawatte (The new road).

Three roads close to the A9 highway in Kanakarayankulam have been given Sinhala names – Kosala Perera road, Anura Perera road, and Rev.Yatiravana Vimala Thero Street. The first two names are those of  Sinhalese soldiers and the last one is the name of a Buddhist monk.

Brad Adams of Human Rights watch has noted that the end of the state of emergency is insignificant if the government enjoys  the same powers  it had during the conflict. Adams further asserts that, “The government should repeal all its abusive detention laws and make all laws and regulations related to detention public, instead of engaging in token measures for PR purposes.”

One of the pillars of democracy is media freedom. But Rajapakse siblings have succeeded in muzzling  the media to the extent  about 34 journalists (31 Tamils) have been killed since 1995. An equal number has bolted  Gotabhaya Rajapakse’s democratic and peaceful paradise and sought asylum in the Western countries. The dastardly killing of Lasantha Wickrematunge, editor Sunday Leader,  in broad day light and in the centre of Colombo remain unsolved.  The attack on  Deputy Editor of The Nation newspaper Keith Noyahr,  the assault on journalist Namal Perera together with his friend Mahendra Ratnaweera on a busy highway on June 30, 2008, knifing  of former Rivira Editor Upali Tennakoon remain unsolved. In August 2009, eight months after Wickrematunge’s murder, Tamil journalist Jayaprakash Tissainayagam was sentenced to 20 years in prison found guilty of aiding terrorism in two of his articles he wrote during the time of CFA.

The wife of  Navy Ruwan a gang leader abducted recently  claims she overhead one of the abductors in the vehicle saying that he needs to take a call to “Gotabhaya Sir,” in an apparent reference to Defence Secretary Gotabhaya Rajapakse. Navy Ruwan was named by media reports as a close associate of Defence Ministry Advisor Duminda Silva MP who shot and killed Bharatha Lakshman Premachndra on 08, October 2011.

Journalist and cartoonist  Prageeth Eknaligoda  who was critical of the government disappeared on 24th January 2010 is an example where  the right to life has become a huge joke in Sri Lanka.

Under-world leader Dematagoda Chaminda has told the CID recently that a group of persons led by him had dumped the body of journalist Prageeth Eknaligoda in the sea off the Negombo lagoon. Chaminda had said that he was not aware of whose body he had dumped in the sea until that evening when the boss (Duminda Silva) had said it was a web journalist during a party at Jaic Hilton and that he had later found out that the dead person was Prageeth Eknaligoda.

Dematagoda Chaminda had observed that several bodies had been dumped in the sea on the boss’ orders. The bodies had been wrapped in gunny bags and tied to heavy granite stones. He had added that on every occasion when the bodies were dumped, the boss had told him that they were orders by the big boss (Defence Secretary).

The former  Attorney General Mohanm Peiris, however,  speaking during the Convention Against Torture in Geneva said that information has been received that Prageeth Eknaligoda was living in a foreign country after receiving political asylum. Only Gotabhaya Rajapakse under whom the army and police intelligence agencies operate  knows the truth of all disappearances and killings!

President Rajapakse and his brothers are fooling no one.  Sri Lanka is not China  and if the government continues to ignore human rights and to repress both Tamils and Sinhalese,  it is unlikely as pointed out by Mr.Armitage that the international community will look the other way. Sri Lanka will not placate the West with facile sleight of hand and  it is naïve for  Gotabhaya Rajapakse to think otherwise.

In short, genuine peace, democracy  and freedom  for Tamil people in Sri Lanka remains illusory.  Sri Lanka  is a “democracy” in name only. In practice, it has been a majoritarian Sinhala hegemonic state  based on language, race and religion after 1956 to date.  Mahinda Rajapakse openly declared that his government elected by the majority Sinhala – Buddhist voters will govern according to their wishes only.


About editor 2999 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply