திருமகள் பக்கம்
ஸ்ரீ வெங்கேடேசா ஸ்ரீனிவாசா நீ திருமலையில்…………………..
தமிழ்நாட்டுக்குப் போகிற அடியார்கள் நிச்சயம் திருப்பதி வெங்கடேசுவரர் கோயிலுக்குச் சென்று காணிக்கை செலுத்திக் கும்பிட்டுத் திரும்பாமல் வரமாட்டார்கள். முடிந்தால் மொட்டையும் அடித்துக் கொள்வார்கள். அந்தளவு புகழ்பெற்ற கோயில் திருப்பதி ஆகும். புகழ், பணம் இரண்டிலும் பழனி முருகன், மதுரை மீனாட்சி, காஞ்சி காமாட்சி, செந்தில் குமரன் ஆகியோர் வெங்கடேசுவரரைக் கிட்ட நெருங்க முடியாது!
கடல் மட்டத்துக்கு 3,200 அடி உயரத்தில் 10.33 சதுர மைல் பரப்பில் திருப்பதி அமைந்துள்ளது. திராவிட கட்டிடக் கலையைப் பின்பற்றியே கோயில் அமைந்துள்ளது. இங்கு விஷ்ணு வராக அவதார வடிவில் காட்சி அளிக்கிறார்.
திருப்பதி, ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஊராகும். திருமலையின் அடிவாரத்தில்தான் வெங்கடேசுவரர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலே திருப்பதி நகரின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் எனலாம். ஏழுமலை என்று அழைக்கப்படும் இம் மலையில் அமைந்துள்ள இக் கோயில் தமிழ் மன்னர்களால் கட்டப்பட்டது. இந்துக் கோயில்கள் எல்லாவற்றிலும் வருவாய் கூடிய இக் கோயில் உலகில் அதிகமான மக்கள் வந்து செல்லும் வழிபாட்டு மையமாகக் கருதப்படுகின்றது. இங்கு ஆண்டொன்றுக்கு 16 – 20 கோடி மக்கள் சாமி கும்பிட வருகிறார்கள்.
ஆந்திராவில் உள்ள முதன்மையான மூன்று பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஸ்ரீP வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகமும் இந்த நகரிலேயே அமைந்துள்ளது.
சங்கம் மருவிய (கிபி 2 ஆம் நூற்றாண்டு) காலப் பகுதிகளில் இயற்றப்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற தமிழ்க் காப்பியங்கள் திருப்பதியை திருவேங்கடம் எனக் குறிப்பிடுகின்றன. இம்மலையே தமிழகத்தின் வடக்கு எல்லையாக இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
தொல்காப்பியத்திற்கு சிறப்புப் பாயிரம் எழுதிய பனம்பாரனார் தமிழ்கூறு நல்லுகத்தின் எல்லையைக் குறிப்பிடும்போது “வடவேங்கடம் தென்குமரி ஆயிடை….” என்கிறார்.
திருப்பதி வெங்கடேசுவரர் கோயிலைப் பல்லவர், சோழர், பாண்டியர் மற்றும் விஜயநகர மன்னர்கள் ஆதரித்து வந்துள்ளார்கள்.
திருப்பதி வெங்கடேசுவரர் ஆண் கடவுள் அல்ல. பெண் கடவுள்தான் என்கிறார் பிரபல வேத பண்டிதர் அக்னி ஹோத்ரம் இராமானுஜ தாதாச்சாரி. மலை மீது வாழ்ந்த மக்கள் வழிப்பட்டு வந்த காளியைப் பார்ப்பனர்கள், வெங்கடாசலபதியாக்கி விட்டார்கள் என்கிறார். அதனால்தான் வெங்கடாசலபதியின் மனைவியான பத்மாவதி ‘பகவானுக்கு’ அருகே இல்லாமல், மலைக்குக் கீழே சற்றுத் தொலைவில் திருச்சானூர் எனுமிடத்தில் இருக்கிறாராம்! பெண்ணுக்குப் பக்கத்திலேயே எப்படிப் பெண்ணை ‘ஜோடி’யாக வைக்க முடியும் என்று கேள்வி எழுப்புகிறார் தாதாச்சாரி.
திருப்பதி கோயில் வழிபாடு 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆச்சாரியார் இராமனுஜர் வகுத்துக் கொடுத்த பூசை முறைமைப்படிதான் நடைபெறுகிறது. பூசை காலை 3.00 மணிக்குப் திருப்பள்ளியெழுச்சியோடு (சுப்பிரபாதம்) தொடங்கி வெங்கடேசுவரை நள்ளிரவு 1.00 மணிக்கு தூங்க (ஏகாந்த சேவா) வைப்பதோடு முடிவடைகிறது.
இன்னொரு வேடிக்கை. திருப்பதியில் ஒவ்வொரு நாளும் காலையில் வெங்கடேசுவரருக்கும் பத்மாவதிக்கும் புரோகிதர்கள் வேத மந்திரங்களை ஓதி ‘திருக்கல்யாணம்’ நடத்துகிறார்கள். இதனை ஆண்டுக்கணக்கில் காத்திருந்து கூடுதல் கட்டணம் செலுத்திப் பக்தர்கள் திருமணக் காட்சியைத் தரிசிக்கிறார்கள். அண்மையில் மணமகனையும் மணமகளையும் சென்னையில் உள்ள தீவுத் திடலுக்குக் கொண்டு வந்து கட்டணம் இல்லாமல் பார்க்க திருப்பதி அறங்காவல் அவை (தேவஸ்தானம்) ஏற்பாடு செய்திருந்தது.
அண்மையில் திருப்பதி வெங்கடேசுவரருக்கு 45 கோடி ரூபாய் மதிப்புள்ள வைர முடியை (கிரீடம்) கருநாடக மாநிலச் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி காணிக்கையாக வழங்கினார். மூன்று அர்ச்சகர்கள் அதைத் தூக்கி வெங்கடேசுவரரின் தலையில் வைத்தார்களாம்!
இரண்டரை அடி உயரம் கொண்ட இந்த முடி, 34 கிலோ 800 கிராம் எடையுடன் தங்கத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், ஆப்ரிக்க நாட்டு 35,700 வைரக் கற்களும் 819 பச்சைக் கற்களும் பதிக்கப்பட்டுள்ளன. இந்த முடியைப் பொற்கொல்லர்கள் இணக்க ஒன்பது மாதங்கள் எடுத்தது. வைர முடியின் கீழ் பாகத்தில் தாமரைப் பூ வடிவத்தின் மையப்பகுதியில் திருநாமம் போன்ற வடிவத்தில் பொருத்தப்பட்டிருக்கும் ஒரு பச்சைக்கல் ஆப்ரிக்க நாட்டில் ஒரு கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்புடையது என அமைச்சர் ஜெனார்த்தன ரெட்டி தேவஸ்தான சபையின் தலைவர் ஆதிகேசவலு நாயுடு, நிருவாக அதிகாரிகள் இரமணாச்சாரி, தர்மாரெட்டி ஆகியோரிடம் தெரிவித்தார்.
பக்தர்கள் ஏழுமலையானக்கு ரூ. 45 கோடியில் வைர முடி காணிக்கையாகச் செலுத்துவது இது ஏழாவது முறை எனக் கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேறு எந்தக் கோயிலுக்கும் திருப்பதி அளவில் கோடி கிடைப்பதில்லை. உலகில் வத்திக்கன் தேவாலயத்தை அடுத்து இந்தக் கோயிலுக்குக் கிடைக்கும் வருமானம் அதிகமாம். சிலர் திருப்பதி வத்திக்கனை முந்தி விட்டதென்று சொல்கிறார்கள்.
பக்தர்கள் பணமாக உண்டியலில் போடும் காணிக்கை மணித்தியாலத்துக்கு ஒருமுறை காப்பகத்தில் வரவு வைக்கப்படுகிறது. வைரம், தங்கம், வெள்ளி போன்றவற்றைக் கிலோக் கணக்கில் பக்தர்கள் கொடுக்கிறார்கள். நடிக, நடிகைகள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் போன்றோரது கருப்புப் பணம் திருப்பதி உண்டியலை நிரப்புவதாகச் சொல்கிறார்கள்.
பக்த கோடிகளால் கிடைக்கும் கோடிக்கணக்கான நன்கொடைகளை விட இன்னொரு கொடையும் ஆலய நிருவாகத்திற்கு பணத்தை அள்ளிக் கொடுக்கிறது. அது பக்தர்களின் மயிர்! திருப்பதி கோயில் வீணாகப் போகும் மயிரைக் காசாக்குகிறது. மயிர் ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருவாய் ஆண்டொன்றுக்கு ரூ.310 கோடி ஆகும்.
வேலை கிடைக்க வேண்டுமா? வணிகம் பெருக வேண்டுமா? வெளிநாடு போக வேண்டுமா? தீராத நோய்கள் தீர வேண்டுமா? காதல் நிறை வேண்டுமா? பிள்ளை பெற்றுக்கொள்ள வேண்டுமா? தேர்வில் தேற வேண்டுமா? தேர்தலில் வெல்ல வேண்டாமா? எதுவானாலும் கவலை வேண்டாம். உங்கள் சிக்கல்களைத் தீர்த்துக்கொள்ள எளிய வழி உங்கள் மயிரை திருப்பதிக்கு வந்து மழுங்க வழித்துக் கொள்வது.தான். ஏற்கெனவே மொட்டையடித்தவர்கள் பயன் பெற்றுளார்கள். பயன்பெற்றவர்கள் மீண்டும் மொட்டையடிக்கப் போகிறார்கள்.
மயிரை மழுங்க வழித்துவிட்டு, மொட்டைத் தலையுடன் திரிந்தால் கேட்டதைக் கொடுப்பார் கடவுள் என்ற பக்தர்களின் நம்பிக்கை முட்டாள்தனமானது எனச் சொல்வது கடவுள், மத எதிர்ப்பாளர்கள் மட்டும் இல்லை. கோயில் நிருவாகம்தான். இல்லையென்றால் பக்தர்கள் கடவுளுக்கு அன்புடனும், பயபக்தியுடனும் கொடுக்கும் மயிர்க் காணிக்கையை விற்று அவர்கள் காசாக்குவார்களா?
மதங்கள், கோயில்கள், தேவாலயங்கள் ஒடுக்குமுறை நிறுவனங்களாக மட்டுமல்ல சிறந்த வணிக நிறுவனங்களாகவும் இருக்கின்றன என்பதற்கு மயிர் வியாபாரம் ஒரு சின்னச் சான்றுதான். பக்தர்கள் இவற்றைச் சிந்தித்துப் பார்ப்பதில்லை.
நாளொன்றுக்கு உண்டியல் மூலம் மட்டும் ஒரு கோடி ரூபாய் வருமானம் வருகிறது. ஒராண்டில் மொத்த வருமானம் ரூ.1,500 கோடி. இலட்டு விற்பனை மூலம் மட்டும் ரூ.28 கோடி.
மொட்டை போட்டுக் கொள்ளும் பக்தர்களின் மயிர் ஆண்டொன்றுக்கு 400 தொன் வரை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் பெறுமதி ரூ.310 கோடி என்று மதிப்பிடப்படுகிறது. முக்கிய இறக்குமதி நாடுகளாக சீனா, அமெரிக்கா மற்றும் அய்ரோப்பிய நாடுகள் இருக்கின்றன.
திருப்பதி ஏழுமலையான் அணிவதற்குப் பக்தர்கள் காணிக்கையாக அளித்த தங்க நகைகளின் மதிப்பு தோராயமாக ரூ.32,000 கோடி. நிலம் ரூ.15,000 கோடி. கடடிடங்கள் ரூ.1,500 கோடி. பணம் ரூ.20,000 கோடி. மொத்தம் ரூ. 67,000 கோடி. (இந்தியா ருடே – 4.10.2006)
இருந்தும் வெங்கடேசுவரர் சொத்து வரி கட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. திருப்பதி நகர மேம்பாட்டு அதிகார சபைக்கு ரூ.5 கோடியும் திருப்பதி மாநகர சபைக்கு ரூ.19 கோடியும் நிலுவையில் இருக்கிறதாம்!
சரி. இத்தனை பணக்காரக் கடவுள் இருக்கிற நாட்டில் பாலும் தேனும் ஓட வேண்டாமா? மக்கள் பத்துவிதக் கறியோடு சோறும் சுண்டக் காய்ச்சிய பாலும் பழமும் உண்டு உறங்க வேண்டாமா?
அதுதான் இல்லை. இந்தியாவில் வறுமை காரணமாக 20 கோடி மக்கள் உணவின்றிப் பட்டினிகிடக்கிறார்கள் என்று அண்மையில் மக்களின் உணவு நிலை குறித்து மும்பை நவதான்யா அறக்கட்டளை என்ற தனியார் தொண்டுநிறுவனம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. ஆண்டுக்கு ஆண்டு பட்டினி கிடப்பவர்கள் அதிகரித்து வருகிறதாம்.
மேலும் இந்தியாவில் உள்ள குழந்தைகளில் 5 கோடியே 70 லட்சம் குழந்தைகள் போதுமான உடல் எடை இல்லாமல் உள்ளனர். குழந்தைகளின் எடை குறைவுக்கு அவர்களுக்குப் போதுமான ஊட்டச்சத்து இல்லாததே காரணம் என்கிறார்கள்! உலகில் வேறெந்த நாட்டிலும் இந்த அளவுக்கு எடை குறைவான குழந்தைகள் இல்லை.
1991 ஆம் அண்டு கணக்கெடுப்பின்படி இந்தியனின் உணவு அளவு ஆண்டுக்கு 189 கிலோ என்றிருந்தது. 2001 ஆம் ஆண்டு அது 152 கிலோவாகக் குறைந்துவிட்டது.
தற்போது பருப்பும், அரிசியும் பல மடங்கு விலை அதிகரித்துள்ளதால் வறுமையில் உள்ளவர்கள், ஏழைகள் சாப்பிடும் உணவின் அளவு மேலும் குறைந்திருக்கும்.
“இத்தனைக்கும் இந்தியாவில் ஏழை, எளிய மக்கள் நலனுக்காக நடப்பு நிதியாண்டில் ஒதுக்கப்பட்டுள்ள தொகை எவ்வளவு தெரியுமா? 32 ஆயிரத்து 600 கோடி ரூபாய். இந்தத் தொகை முழுமையாக உண்மையான ஏழைகளை சென்றடைகிறதா? என்பதே நமது கேள்வியாக இருக்கிறது” என்கிறது கருத்து கணிப்பு நடத்திய தொண்டு நிறுவனம்.
இந்தியாவுக்கு மேலும் பல பெருமைகள் உண்டு. நீரிழிவு நோயாளிகள் அதிகம் உள்ள 10 நாடுகளில் இந்தியாவுக்கு முதலிடம். அடுத்து சீனா, அமெரிக்கா, இந்தோனேசியா, யப்பான், பாகிஸ்தான், உருஷ்யா, பிரேஸில், இத்தாலி, பங்களாதேஷ்.
தொழுநோயாளிகள், எலும்புருக்கி நோயாளிகளின் எண்ணிக்கையிலும் இந்தியாவுக்குத்தான் “தங்கப் பதக்கம்”! இந்தியா உலகின் அதிக எய்ட்ஸ் நோயாளிகள் உள்ள நாடு என அழைக்கப்படும் தென் ஆப்பிரிக்காவை நெருங்கி வருகிறதாம்! வாழ்க பாரதமாதா! (Namnadu – September,2009)
கருணாநிதி தமிழினத் துரோகி என்ற பட்டத்தை மிக எளிதாகத் தட்டிக் கொண்டுள்ளார்!
செத்த பாம்பை அடிக்பானேன் என ஊரில் கேட்பார்கள். எனக்கும் செத்த பாம்பை அடிப்பதில் உடன்பாடில்லை. தமிழக முதல்வர் கருணாநிதி ஒரு செத்த பாம்பு. அவரை அடிப்பதிலும் எனக்கு உடன்பாடில்லை.
கருணாநிதி தமிழகத்தின் மூத்த அரசியல்வாதி. கடந்த 70 ஆண்டுகளாக பொது வாழ்வில் ஈடுபட்டு வருகிறார். அய்ந்துமுறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டவர். இருந்தும் உலகத்தமிழர் அவரைத் தோளில் தூக்கிக் கொண்டாடாது காலில் போட்டு மிதிக்கிறார்கள். துரோகி என்று பட்டம் சூட்டுகிறார்கள்.
கருணாநிதி நல்ல இலக்கியவாதி. ஏராளமான நூல்களை எழுதிக் குவித்திருக்கிறார். இலக்கியவாதி கருணாநிதியோடு எமக்குச் சண்டையில்லை.
ஆனால் அரசியல்வாதி கருணாநிதி இன்று அண்ணன் இராவணனைக் காட்டிக் கொடுத்த விபீடணன், கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்த எட்டப்பன் வரிசையில் வைத்துப் பேசப்படும் துரோகியாகச் சித்திரிக்கப்படுகிறார்.
தமிழீழப் போராட்டம் பற்றி அவர் முன்பின் முரணாகப் பேசுவதும் தமிழீழ உணர்வாளர்களைக் கைது செய்து சிறையில் அடைத்து அழகு பார்ப்பதும் அவருக்குத் துரோகிப் பட்டத்தை வாங்கிக் கொடுத்திருக்கிறது.
கடந்த காலத்தில் தமிழீழப் போராட்டம் பற்றி எக்கச்சக்கமான குத்துக் கரணங்களை கருணாநிதி அடித்திருக்கிறார். இப்போது கருணாநிதி முன்னுக்குப் பின் முரணாகப் பேசிக் குட்டையை நாளும் பொழுதும் குழப்பி வருகிறார். அவர் தமிழீழம் பற்றிச் அரசியல் சிந்தாந்த அடிப்படையில் ஒருபோதும் ஆழமாகச் சிந்தித்ததே இல்லை. ஒரு கோட்பாட்டை உருவாக்கவே இல்லை. பிரபாகரன் ஒரு சர்வாதிகாரி, சகோதர யுத்தம் செய்தார் என மேலோட்டமாகப் பேசியும் எழுதியும் வந்தார்.
கருணாநிதி ‘எனக்கு வன்முறை பிடிக்காது” என்பார். ஆனால் ஆஷ்துரையைச் சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதனை சுத்த வீரன் என்பார்.
1991 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வி.புலிகளுக்குக் கொடுத்த ஆதரவை திமுக விலகிக் கொண்டுவிட்டது என்பார். மறுகணம் தமிழீழம் மலர்ந்தால் அதையிட்டு மகிழ்ச்சி அடையும் முதல் ஆள் நான் என்பார். தமிழருக்காக உயிரையும் கொடுக்கத் தயார் என்பார்.
கருணாநிதி அனைத்துக் கட்சி கூட்டம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகல், சட்ட சபையில் தீர்மானம், மனிதச் சங்கிலி, தில்லியில் பிரதமருடன் சந்திப்பு, மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டம், தந்தி, கடிதம்;, உண்ணாவிரதம் எனத் தொடர் நாடகம் நடத்தினார்.
இலங்கையில் போரை நிறுத்தாவிட்டால் இந்தியா தனது தூதரக உறவை துண்டித்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி (பிரதமருக்கு) தந்தி கொடுப்பார். மறுகணம் மத்திய அரசின் நிலைப்பாடு திருப்தி அளிக்கிறது என்பார்.
“பதவி தோளில் போடும் துண்டு, கொள்கை நாம் உடுக்கும் வேட்டி” என்று அண்ணா சொல்லியதை மேற்கோள் காட்டிக் கருணாநிதி பேசுவார். ஆனால் தனது பிள்ளை, பேரப்பிள்ளைகளுக்கு அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொடுக்க தில்லியில் நாள்கணக்கில் முகாம் இட்டு வெற்றியோடு திரும்புவார்.
பாரதிய ஜனதா கட்சியினரைப் பண்டாரங்கள், பரதேசிகள் எனத் திட்டிவிட்டு “அரசியலில் தீண்டாமை இல்லை” என்று சொல்லிக்கொண்டு பதவிக்காக அவர்களோடு கை கோர்த்து விடுவார்.
திருமாவளவன் உண்ணா நோன்பு இருந்தால் தன்னிச்சையாகச் செய்கிறார் என ஒப்பாரி வைப்பார். பின்னர் தானே இலங்கையில் போர் நிறுத்தப்பட வேண்டும் என்று சொல்லி சாகும் வரை அண்ணா நினைவாலயத்தில் உண்ணா நோன்பு இருப்பார். “போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு விட்டது” என்று சிதம்பரம் தொலைபேசியில் சொல்ல உண்ணா நோன்பு 5 மணித்தியாலத்தையும் எட்டாத நிலையில் அதனைக் கைவிட்டு மதிய உணவுக்கு வீட்டுக்குப் போய்விடுவார்!
தமிழகத்தை உலுக்கும் வண்ணம் மருத்துவர் இராமதாஸ் போராட்ட அறிவித்தால் செய்தால் ‘இராமதாஸ் எனது ஆட்சியைக் கவிழ்க்கச் சதி செய்கிறார்” எனக் கூக்குரல் இடுவார். இதனால் கருணாநிதிக்கு அறளை பிறந்து விட்டது என்று பலர் நினைக்கிறார்கள்.
கருணாநிதி தமிழினத் தலைவர் என்ற பட்டத்தை போராடித்தான் பெற்றார். ஆனால் தமிழினத் துரோகி என்ற பட்டத்தை மிக எளிதாகத் தட்டிக் கொண்டுவிட்டார்!
இதை எழுதிக் கொண்டிருக்கும் போது சென்னையில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் நடத்தும் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான மாநாடு எழுச்சியோடு நடந்து கொண்டிருக்கிறது. மாநாட்டு நிகழ்ச்சிகளை கனடிய தமிழ் வானொலி நேரடி ஒலிபரப்பிக் கொண்டிருக்கிறது. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் வெளியிட்ட உலகத் தமிழர் பிரகடனத்தை வைக்கோ படித்தார். பின்னர் மக்கள் தீப்பந்தங்களைக் கையில் ஏந்தியவண்ணம் வைகோ படிக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.
இந்த மாநாட்டுக்கு வழக்கம் போல் கருணாநிதி பல முட்டுக்கட்டைகள் போட்டார். தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாகச் செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என செய்தித்தாள்கள் மூலம் எச்சரிக்கை விடுத்தார்.
தடை செய்யப்பட்ட இயக்கங்களின் தலைவர்களின் படங்கள், கொடி மற்றும் இலச்சினைகளைப் பொது விளம்பரங்களுக்குப் பயன்படுத்தல் மற்றும் செய்தித்தாள், தொலைக்காட்சிகளில் வெளியிடுதல், காண்பித்தல், பொதுக் கூட்டங்கள், மாநாடு, பேரணி போன்றவற்றை நடத்துபவர்கள் யாராயினும் எந்த அமைப்பைச் சார்ந்தவர்களாயினும் 1967 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (ருடெயறகரட யுஉவiஎவைநைள (Pசநஎநவெழைn) யுஉவ) தண்டனைக்குரிய குற்றங்களாகும். மீறுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு செய்தித்தாள்களில் விளம்பரம் செய்து மிரட்டியது.
ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பிரகடன நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வைகோ, ராமதாஸ், நெடுமாறன், பாண்டியன் ஆகியோர் கைதாகலாம் என்று கூட எதிர்பார்க்கப்பட்டது.
மிசா, தடா, பொடா போன்ற ஆள் தூக்கி சட்டங்களை கடந்த காலங்களில் எதிர்த்து வந்த திமுக தற்போது காங்கிரசை மகிழ்விக்கவும் காங்கிரஸ் எதிர்ப்புப் பிரச்சாரத்தை முடக்கவும் பதவிகளைக் காப்பாற்றவும் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இயக்குநர் சீமான், மதிமுக . கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் ஆகியோர் மீது தேசியப் பாதுகாப்பு சட்டத்தை கருணாநிதி ஏவுகிறார். இதையிட்டு அவர் துளியும் வெட்கப்படுவதோ துக்கப்படுவதோ கிடையாது!
இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடைபெற்றதைத் தொடர்ந்து தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த போராட்டங்களில் வெளிப்படையாக விடுதலைப் புலிகளுக்கும் தேசியத் தலைவர் பிரபாகரனுக்கும் ஆதரவு தெரிவிக்கப்பட்டதுடன் அந்த இயக்கத்தின் கொடிகள் மற்றும் பிரபாகரனின் படத்துடன் பேரணிகளும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.
திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் அமைப்பு சென்னை, அமைந்தகரையில் திருமாவளவனின் பிறந்தநாளை “எழும் ஈழம்” என்று ஆகஸ்ட் 17-ல் கொண்டாடினார்கள். தமிழகம் முழுவதும் தலைவர் பிரபாகரன் படம், புலி இலச்சினை, புலிகள் ஆதரவு சுவரொட்டிகளையும் தட்டிகளையும் வைத்திருந்தனர். ஆனால் அவற்றை காவல்துறையினர் அப்புறப்படுத்தினார்கள். குறிப்பாக ஈழம் என்ற பெயரை அழித்தார்கள்.
தடைசெய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக தட்டிகள், சுவர் ஒட்டிகள் ஒட்டிய விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழ்த் தேசியத்தின் முதல் எதிரியான காங்கிரஸ் மாநில பொதுச் செயலர் சி. ஞானசேகரன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் இயக்கங்கள், தலைவர்கள் ஆகியோரைப் பார்த்து கருணாநிதி மிரளுகிறார். அவர்கள் மீது சட்டம் பாயும் என எச்சரிக்கிறார். ஆனால் இதே கருணாநிதி கடந்த ஆண்டு என்ன சொன்னார்? உச்சநீதிமன்றத் தீர்ப்பை எடுத்துக் காட்டி அன்று ‘முரசொலி’யில் இப்படி எழுதினார்.
தடைசெய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசுவது குற்றமாகாது. அந்த இயக்கத்துக்கு உதவிகள் செய்வதுதான் குற்றம் என்று பொடா சட்டப் பிரிவுகளின் அடிப்படையிலேயே உச்சநீதிமன்றம் 16.12.2003 இல் தீர்ப்பளித்தது. தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ். ராஜேந்திர பாபு மற்றும் ஜி.பி. மாத்தூர் ஆகியோர் வழங்கியிருந்தனர். இந்தத் தீர்ப்பின் அடிப்படையிலேதான் ஜெயலலிதா ஆட்சியில் பொடாவில் கைது செய்யப்பட்டிருந்த பழ. நெடுமாறன், வைகோ. உள்ளிட்டோர் சுமார் ஒன்றரையாண்டு சிறைவாசத்துக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டனர். உச்சநீதி மன்றத்தின் இந்தத் தீர்ப்பை சட்டமன்றத்தில் ஜெயலலிதா, தவறாக சுட்டிக் காட்டினார். திமுக ஆட்சியில் அவர் மீது உரிமை மீறல் பிரச்சினையும் கொண்டு வரப்பட்டது. மீண்டும் ஜெயலலிதா, தனது தவறான கருத்தை தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் வலியுறுத்தினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி ‘முரசொலி’ ஏட்டில் (பிப்.19, 2008) விளக்கமாக விடுத்துள்ள அறிக்கையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் பகுதிகளையே எடுத்துக் காட்டிப் பதில் எழுதினார்.
“உள்நோக்கத்துடன் செய்யப்பட்டிருந்தால் மட்டுமே பொடாச் சட்டம் 3(1) பிரிவின் கீழ் குற்றமாகக் கருதப்படும். கிரிமினல் நோக்கத்துடன் செய்யப்பட்டிருந்தால் மட்டுமே அது பயங்கரவாதச் செயலாகக் கருதப்படும் என்று நாடாளுமன்றம் வகுத்துள்ளபோது ஒரு நபர், ‘பகிரங்கமாக அறிவிப்பதாலோ’ (பொடாவின் 20வது பிரிவு) அல்லது, “ஆதரவைக் கோரினாலோ” அல்லது “ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தாலோ, நிர்வகித்தாலோ” அல்லது “ஏற்பாடு செய்வதினாலோ” அல்லது “ஒரு கூட்டத்தில் பேசினாலோ” (பொடாவின் 21 ஆவது பிரிவு), ஒரு (பயங்கரவாத) அமைப்பின் எந்தவிதமான நடவடிக்கைக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும் நோக்கம் அல்லது திட்டம் அல்லது பயங்கர வாதச் செயலை செய்ய உதவும் திட்டம் எதுவும் அவருக்கு இல்லாத நிலையில் அந்த நபர் குற்றம் இழைத்துள்ளார் என்று எப்படிக் கூற முடியும்? அப்படி இல்லை என்று நாங்கள் தெளிவாக இருக்கிறோம்” (‘முரசொலி’ பெப்ரவரி .19, 2008)
கொடூரமான ‘பொடா’ சட்டத்தின் கீழேயே தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவதோ, கூட்டம் நடத்துவதோ, குற்றமாகாது என்று வாதிட்ட அதே கருணாநிதிதான் இன்று 1968 ஆம் ஆண்டு சட்டத்தைக் காட்டி கருத்துரிமைக்கு வேட்டு வைத்துத் தனது தில்லி காங்கிரஸ் எசமானர்களை மகிழ்விக்கத் துடிக்கிறார்.
திமுக அரசு ஏடுகளில் வெளியிட்டுள்ள முழுப் பக்க விளம்பரம்.
“தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசுவது, தடை செய்யப்பட்ட இயக்கங்களின் தலைவர்களின் படங்கள், கொடி மற்றும் இலட்சினைகளைப் பொது விளம்பரங்களுக்கு உபயோகித்தல் மற்றும் பத்திரிகை, தொலைக் காட்சிகளில் பிரசுரித்தல், காண்பித்தல் ஆகியவை Unlawful Activities (Prevention) Act 1967 படி தண்டனைக்குரிய குற்றங்களாகும். எனவே, பொதுக் கூட்டங்கள், மாநாடு, பேரணி போன்றவற்றை நடத்துபவர்கள் யாராயினும், எந்த அமைப்பைச் சார்ந்தவர்களாயினும் இதை மனதில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. மீறுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் எச்சரிக்கப்படுகிறது. – தலைமைச் செயலாளர், தமிழ்நாடு அரசு.”
இந்திய காங்கிரஸ் இனப் படுகொலைக்குத் துணை போனாலும் தமிழர்களுக்காக கண்ணீர் விட்டு அழுதாலும் குற்றம் என்று காங்கிரஸ் கூறினால் கருணாநிதி காங்கிரசின் பக்கம் நின்று தமிழின உணர்வை நசுக்குவார்!
“இலங்கைப் பிரச்சினையிலும் கூட சுமூக நிலை ஏற்படக் கூடாது என்று வேண்டித் தவம் இருந்தவர்கள் யார் யார் என்பது எனக்குத் தெரியும். இப்போது சுமூக நிலை திரும்பிய பின்னரும் கூட கிளறி விட்டுக் கொண்டிருப்பவர்களையும் யார் யார் என்று எனக்குத் தெரியும். தமிழ்ப் பகுதியில் சகச நிலை திரும்பி விட்டது” எனக் கருணாநிதி திமிரோடு பேசியிருக்கிறார். மூன்று இலட்சம் மக்கள் போதிய உணவு, உடை, உறையுள், மருந்து இன்றி மழையில் நனைந்து அல்லல் படுவது கருணாநிதிக்கு இயல்பு நிலையாகத் தெரிகிறது!
தமிழ்நாடு சட்ட சபையில் பேசிய கருணாநிதி “தமிழீழம்” இனிச் சாத்தியமில்லை. தமிழர்கள் மேற்கொண்டு தங்கள் வாழ்வாதாரத்துக்கும் சமவுரிமைக்கும் மொழிச் சமத்துவத்துக்கும் பி;ராந்திய மட்டத்தில் அதிகாரப் பரவலாக்கலுக்கும் பெருமுயற்சி செய்ய வேண்டும். இதுதான் சாத்தியம். தமிழீழம் சாத்தியமில்லை. ஈழத்தமிழர்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்க வேண்டுமேயானால் சிங்களவர்களுக்கு எதிராக ஆத்திரமூட்டும் பேச்சுக்களைப் பேசக் கூடாது. நீக்குப் போக்குடன் நடந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அது சிங்களவர்களுக்கு கோபத்தை அதிகரித்துத் தமிழர்களது நலன்களை மேலும் பாதிக்கச் செய்யும். திமுக கழகத்தின் நிறுவனர் அறிஞர் அண்ணா தனித் திராவிட நாட்டை உருவாக்கும் முக்கிய கோரிக்கையை; கைவிட்டார். கட்சி தடைசெய்யப்படுவதைத் தவிர்க்கவே அவர் அப்படிச் செய்தார்” என்றார்.
இது வால் அறுந்த நரி வாலில்லாமல் திரிய வெட்கப்பட்டு மற்ற நரிகளைப் பார்த்து “நீங்களும் என்னைப் போலவே வாலை அறுத்துவிடுங்கள்” என்று சொன்ன கதையாக இருக்கிறது. கருணாநிதி இன்னொரு பொய்யைச் சொல்கிறார். பிரிவினைக்கான சட்டம் திமுகவை தடை செய்யவில்லை. பிரிவினை கேட்கும் கட்சி தேர்தலில் நிற்க முடியாது என்று மட்டும் சட்டம் சொல்லியது. மேலும் திராவிட நாட்டுக் கோரிக்கையை அண்ணா கைவிட்டாலும் அதற்கான காரணங்கள் நீடிக்கிறது என்று சொன்னார்.
எது எப்படி இருப்பினும் கல்லறைக்குள் தூங்கும் அறிஞர் அண்ணா கருணாநிதியின் துரோகத்தை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்.
இப்போதுதான் தெரிகிறது சிங்களக் கடற்படையால் தமிழக மீனவர்கள் நாய்கள் போல் சுட்டுக் கொல்லப்படுவதையிட்டு கருணாநிதி ஏன் வாய் பொத்தி, கண் மூடி நேக்குப் போக்காக நடந்து கொள்கிறார் என்று. தட்டிக் கேட்டால் சிங்களவனுக்குக் கெட்ட கோபம் வரும் என்று கருணாநிதி அஞ்சுகிறார்.
தமிழ், தமிழர், தமிழ்ப் பண்பாடு, தமிழர் வீரம், தமிழர் மானம் எனக் கூறி ஆட்சியில் அமர்ந்து கொண்டு தமிழ் இனத்துக்குக் கருணாநிதி தொடர்ந்து துரோகம் செய்து வருகிறார்.
இப்போது தமிழீழம் சாத்தியமில்லை எனச் சொல்லும் கருணாநிதி 1985 ஆம் ஆண்டு ரெசோ மாநாட்டில் இனச் சிக்கலுக்குத் தனித் தமிழீழமே சரியான தீர்வு என்ற தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார்.
அண்மையில் கூட “இலங்கைத் தமிழர்கள் பெற வேண்டிய ஈழத்தை பெற்றுத் தருவதற்கு முயற்சி செய்வோம்” என்றார். “தமிழருக்காக உயிரையும் கொடுப்பேன்” என்றார். உண்மை என்னவென்றால் கருணாநிதி தமிழருக்காக ஒரு மயிரைக்கூட இழக்கத் தயாரில்லை.
“தமிழர்கள் இன்னமும் ஏதிலிகளாக, சொந்த மண்ணிலேயே சோற்றுக்குப் பரிதவித்து, முள் வேலிக்குள் ஆடுமாடுகளைவிடக் கேவலமான கொடுமையின் கோரத் தாண்டவத்தில் பிடிபட்டு நித்தம் வேதனையால், வெட்கத்தால், அவமானத்தால், செத்தொழிந்து வரும் செய்தி எம்மை இரத்தக் கண்ணீர் விட்டு அழச் செய்கிறது” எனச் சுட்டிக்காட்டினால் சிங்களவனுக்குக் கோபம் வரும் என்பதற்காக கருணாநிதி வாய் மூடிக் கிடக்கிறார்.
கருணாநிதியை காடு வா வா என்கிறது வீடு போ போ என்கிறது. தனது மாலைக் காலத்தில் ஏதோ தமிழீழத் தமிழர்களது உரிமைகளைப் பெற்றுக் கொடுத்தோம் என்ற பெயரோடும் புகழோடும் கண்ணைமூடுவார் என்று நாம் எதிர்பார்த்தால் மனிதர் எல்லோரது வயிற்றெரிச்லையும் திட்டுக்களையும் கட்டிக் கொண்டுதான் போவேன் எனப் பந்தயம் பிடிக்கிறார். (Ulagathamilar – August 21,2009)
கருணாநிதி தமிழினத் துரோகி என்ற பட்டத்தை மிக எளிதாகத் தட்டிக் கொண்டுள்ளார்!
செத்த பாம்பை அடிக்பானேன் என ஊரில் கேட்பார்கள். எனக்கும் செத்த பாம்பை அடிப்பதில் உடன்பாடில்லை. தமிழக முதல்வர் கருணாநிதி ஒரு செத்த பாம்பு. அவரை அடிப்பதிலும் எனக்கு உடன்பாடில்லை.
கருணாநிதி தமிழகத்தின் மூத்த அரசியல்வாதி. கடந்த 70 ஆண்டுகளாக பொது வாழ்வில் ஈடுபட்டு வருகிறார். அய்ந்துமுறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டவர். இருந்தும் உலகத்தமிழர் அவரைத் தோளில் தூக்கிக் கொண்டாடாது காலில் போட்டு மிதிக்கிறார்கள். துரோகி என்று பட்டம் சூட்டுகிறார்கள்.
கருணாநிதி நல்ல இலக்கியவாதி. ஏராளமான நூல்களை எழுதிக் குவித்திருக்கிறார். இலக்கியவாதி கருணாநிதியோடு எமக்குச் சண்டையில்லை.
ஆனால் அரசியல்வாதி கருணாநிதி இன்று அண்ணன் இராவணனைக் காட்டிக் கொடுத்த விபீடணன், கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்த எட்டப்பன் வரிசையில் வைத்துப் பேசப்படும் துரோகியாகச் சித்திரிக்கப்படுகிறார்.
தமிழீழப் போராட்டம் பற்றி அவர் முன்பின் முரணாகப் பேசுவதும் தமிழீழ உணர்வாளர்களைக் கைது செய்து சிறையில் அடைத்து அழகு பார்ப்பதும் அவருக்குத் துரோகிப் பட்டத்தை வாங்கிக் கொடுத்திருக்கிறது.
கடந்த காலத்தில் தமிழீழப் போராட்டம் பற்றி எக்கச்சக்கமான குத்துக் கரணங்களை கருணாநிதி அடித்திருக்கிறார். இப்போது கருணாநிதி முன்னுக்குப் பின் முரணாகப் பேசிக் குட்டையை நாளும் பொழுதும் குழப்பி வருகிறார். அவர் தமிழீழம் பற்றிச் அரசியல் சிந்தாந்த அடிப்படையில் ஒருபோதும் ஆழமாகச் சிந்தித்ததே இல்லை. ஒரு கோட்பாட்டை உருவாக்கவே இல்லை. பிரபாகரன் ஒரு சர்வாதிகாரி, சகோதர யுத்தம் செய்தார் என மேலோட்டமாகப் பேசியும் எழுதியும் வந்தார்.
கருணாநிதி ‘எனக்கு வன்முறை பிடிக்காது” என்பார். ஆனால் ஆஷ்துரையைச் சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதனை சுத்த வீரன் என்பார்.
1991 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வி.புலிகளுக்குக் கொடுத்த ஆதரவை திமுக விலக்கிக் கொண்டுவிட்டது என்பார். மறுகணம் தமிழீழம் மலர்ந்தால் அதையிட்டு மகிழ்ச்சி அடையும் முதல் ஆள் நான் என்பார். தமிழருக்காக உயிரையும் கொடுக்கத் தயார் என்பார்.
கருணாநிதி அனைத்துக் கட்சி கூட்டம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகல், சட்ட சபையில் தீர்மானம், மனிதச் சங்கிலி, தில்லியில் பிரதமருடன் சந்திப்பு, மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டம், தந்தி, கடிதம்;, உண்ணாவிரதம் எனத் தொடர் நாடகம் நடத்தினார்.
இலங்கையில் போரை நிறுத்தாவிட்டால் இந்தியா தனது தூதரக உறவை துண்டித்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி (பிரதமருக்கு) தந்தி கொடுப்பார். மறுகணம் மத்திய அரசின் நிலைப்பாடு திருப்தி அளிக்கிறது என்பார்.
“பதவி தோளில் போடும் துண்டு, கொள்கை நாம் உடுக்கும் வேட்டி” என்று அண்ணா சொல்லியதை மேற்கோள் காட்டிக் கருணாநிதி பேசுவார். ஆனால் தனது பிள்ளை, பேரப்பிள்ளைகளுக்கு அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொடுக்க தில்லியில் நாள்கணக்கில் முகாம் இட்டு வெற்றியோடு திரும்புவார்.
பாரதிய ஜனதா கட்சியினரைப் பண்டாரங்கள், பரதேசிகள் எனத் திட்டிவிட்டு “அரசியலில் தீண்டாமை இல்லை” என்று சொல்லிக்கொண்டு பதவிக்காக அவர்களோடு கை கோர்த்து விடுவார்.
திருமாவளவன் உண்ணா நோன்பு இருந்தால் தன்னிச்சையாகச் செய்கிறார் என ஒப்பாரி வைப்பார். பின்னர் தானே இலங்கையில் போர் நிறுத்தப்பட வேண்டும் என்று சொல்லி சாகும் வரை அண்ணா நினைவாலயத்தில் உண்ணா நோன்பு இருப்பார். “போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு விட்டது” என்று சிதம்பரம் தொலைபேசியில் சொல்ல உண்ணா நோன்பு 5 மணித்தியாலத்தையும் எட்டாத நிலையில் அதனைக் கைவிட்டு மதிய உணவுக்கு வீட்டுக்குப் போய்விடுவார்!
தமிழகத்தை உலுக்கும் வண்ணம் மருத்துவர் இராமதாஸ் போராட்ட அறிவித்தால் செய்தால் ‘இராமதாஸ் எனது ஆட்சியைக் கவிழ்க்கச் சதி செய்கிறார்” எனக் கூக்குரல் இடுவார். இதனால் கருணாநிதிக்கு அறளை பிறந்து விட்டது என்று பலர் நினைக்கிறார்கள்.
கருணாநிதி தமிழினத் தலைவர் என்ற பட்டத்தை போராடித்தான் பெற்றார். ஆனால் தமிழினத் துரோகி என்ற பட்டத்தை மிக எளிதாகத் தட்டிக் கொண்டுவிட்டார்!
இதை எழுதிக் கொண்டிருக்கும் போது சென்னையில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் நடத்தும் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான மாநாடு எழுச்சியோடு நடந்து கொண்டிருக்கிறது. மாநாட்டு நிகழ்ச்சிகளை கனடிய தமிழ் வானொலி நேரடி ஒலிபரப்பிக் கொண்டிருக்கிறது. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் வெளியிட்ட உலகத் தமிழர் பிரகடனத்தை வைக்கோ படித்தார். பின்னர் மக்கள் தீப்பந்தங்களைக் கையில் ஏந்தியவண்ணம் வைகோ படிக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.
இந்த மாநாட்டுக்கு வழக்கம் போல் கருணாநிதி பல முட்டுக்கட்டைகள் போட்டார். தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாகச் செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என செய்தித்தாள்கள் மூலம் எச்சரிக்கை விடுத்தார்.
தடை செய்யப்பட்ட இயக்கங்களின் தலைவர்களின் படங்கள், கொடி மற்றும் இலச்சினைகளைப் பொது விளம்பரங்களுக்குப் பயன்படுத்தல் மற்றும் செய்தித்தாள், தொலைக்காட்சிகளில் வெளியிடுதல், காண்பித்தல், பொதுக் கூட்டங்கள், மாநாடு, பேரணி போன்றவற்றை நடத்துபவர்கள் யாராயினும் எந்த அமைப்பைச் சார்ந்தவர்களாயினும் 1967 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (Unlawful Activities (Prevention) Act தண்டனைக்குரிய குற்றங்களாகும். மீறுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு செய்தித்தாள்களில் விளம்பரம் செய்து மிரட்டியது.
ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பிரகடன நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வைகோ, ராமதாஸ், நெடுமாறன், பாண்டியன் ஆகியோர் கைதாகலாம் என்று கூட எதிர்பார்க்கப்பட்டது.
மிசா, தடா, பொடா போன்ற ஆள் தூக்கி சட்டங்களை கடந்த காலங்களில் எதிர்த்து வந்த திமுக தற்போது காங்கிரசை மகிழ்விக்கவும் காங்கிரஸ் எதிர்ப்புப் பிரச்சாரத்தை முடக்கவும் பதவிகளைக் காப்பாற்றவும் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இயக்குநர் சீமான், மதிமுக . கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் ஆகியோர் மீது தேசியப் பாதுகாப்பு சட்டத்தை கருணாநிதி ஏவுகிறார். இதையிட்டு அவர் துளியும் வெட்கப்படுவதோ துக்கப்படுவதோ கிடையாது!
இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடைபெற்றதைத் தொடர்ந்து தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த போராட்டங்களில் வெளிப்படையாக விடுதலைப் புலிகளுக்கும் தேசியத் தலைவர் பிரபாகரனுக்கும் ஆதரவு தெரிவிக்கப்பட்டதுடன் அந்த இயக்கத்தின் கொடிகள் மற்றும் பிரபாகரனின் படத்துடன் பேரணிகளும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.
திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் அமைப்பு சென்னை, அமைந்தகரையில் திருமாவளவனின் பிறந்தநாளை “எழும் ஈழம்” என்று ஆகஸ்ட் 17-ல் கொண்டாடினார்கள். தமிழகம் முழுவதும் தலைவர் பிரபாகரன் படம், புலி இலச்சினை, புலிகள் ஆதரவு சுவரொட்டிகளையும் தட்டிகளையும் வைத்திருந்தனர். ஆனால் அவற்றை காவல்துறையினர் அப்புறப்படுத்தினார்கள். குறிப்பாக ஈழம் என்ற பெயரை அழித்தார்கள்.
தடைசெய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக தட்டிகள், சுவர் ஒட்டிகள் ஒட்டிய விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழ்த் தேசியத்தின் முதல் எதிரியான காங்கிரஸ் மாநில பொதுச் செயலர் சி. ஞானசேகரன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் இயக்கங்கள், தலைவர்கள் ஆகியோரைப் பார்த்து கருணாநிதி மிரளுகிறார். அவர்கள் மீது சட்டம் பாயும் என எச்சரிக்கிறார். ஆனால் இதே கருணாநிதி கடந்த ஆண்டு என்ன சொன்னார்? உச்சநீதிமன்றத் தீர்ப்பை எடுத்துக் காட்டி அன்று ‘முரசொலி’யில் இப்படி எழுதினார்.
தடைசெய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசுவது குற்றமாகாது. அந்த இயக்கத்துக்கு உதவிகள் செய்வதுதான் குற்றம் என்று பொடா சட்டப் பிரிவுகளின் அடிப்படையிலேயே உச்சநீதிமன்றம் 16.12.2003 இல் தீர்ப்பளித்தது. தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ். ராஜேந்திர பாபு மற்றும் ஜி.பி. மாத்தூர் ஆகியோர் வழங்கியிருந்தனர். இந்தத் தீர்ப்பின் அடிப்படையிலேதான் ஜெயலலிதா ஆட்சியில் பொடாவில் கைது செய்யப்பட்டிருந்த பழ. நெடுமாறன், வைகோ. உள்ளிட்டோர் சுமார் ஒன்றரையாண்டு சிறைவாசத்துக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டனர். உச்சநீதி மன்றத்தின் இந்தத் தீர்ப்பை சட்டமன்றத்தில் ஜெயலலிதா, தவறாக சுட்டிக் காட்டினார். திமுக ஆட்சியில் அவர் மீது உரிமை மீறல் பிரச்சினையும் கொண்டு வரப்பட்டது. மீண்டும் ஜெயலலிதா, தனது தவறான கருத்தை தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் வலியுறுத்தினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி ‘முரசொலி’ ஏட்டில் (பிப்.19, 2008) விளக்கமாக விடுத்துள்ள அறிக்கையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் பகுதிகளையே எடுத்துக் காட்டிப் பதில் எழுதினார்.
“உள்நோக்கத்துடன் செய்யப்பட்டிருந்தால் மட்டுமே பொடாச் சட்டம் 3(1) பிரிவின் கீழ் குற்றமாகக் கருதப்படும். கிரிமினல் நோக்கத்துடன் செய்யப்பட்டிருந்தால் மட்டுமே அது பயங்கரவாதச் செயலாகக் கருதப்படும் என்று நாடாளுமன்றம் வகுத்துள்ளபோது ஒரு நபர், ‘பகிரங்கமாக அறிவிப்பதாலோ’ (பொடாவின் 20வது பிரிவு) அல்லது, “ஆதரவைக் கோரினாலோ” அல்லது “ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தாலோ, நிர்வகித்தாலோ” அல்லது “ஏற்பாடு செய்வதினாலோ” அல்லது “ஒரு கூட்டத்தில் பேசினாலோ” (பொடாவின் 21 ஆவது பிரிவு), ஒரு (பயங்கரவாத) அமைப்பின் எந்தவிதமான நடவடிக்கைக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும் நோக்கம் அல்லது திட்டம் அல்லது பயங்கர வாதச் செயலை செய்ய உதவும் திட்டம் எதுவும் அவருக்கு இல்லாத நிலையில் அந்த நபர் குற்றம் இழைத்துள்ளார் என்று எப்படிக் கூற முடியும்? அப்படி இல்லை என்று நாங்கள் தெளிவாக இருக்கிறோம்” (‘முரசொலி’ பெப்ரவரி .19, 2008)
கொடூரமான ‘பொடா’ சட்டத்தின் கீழேயே தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவதோ, கூட்டம் நடத்துவதோ, குற்றமாகாது என்று வாதிட்ட அதே கருணாநிதிதான் இன்று 1968 ஆம் ஆண்டு சட்டத்தைக் காட்டி கருத்துரிமைக்கு வேட்டு வைத்துத் தனது தில்லி காங்கிரஸ் எசமானர்களை மகிழ்விக்கத் துடிக்கிறார்.
திமுக அரசு ஏடுகளில் வெளியிட்டுள்ள முழுப் பக்க விளம்பரம்.
“தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசுவது, தடை செய்யப்பட்ட இயக்கங்களின் தலைவர்களின் படங்கள், கொடி மற்றும் இலட்சினைகளைப் பொது விளம்பரங்களுக்கு உபயோகித்தல் மற்றும் பத்திரிகை, தொலைக் காட்சிகளில் பிரசுரித்தல், காண்பித்தல் ஆகியவை Unlawful Activities (Prevention) 1967 படி தண்டனைக்குரிய குற்றங்களாகும். எனவே, பொதுக் கூட்டங்கள், மாநாடு, பேரணி போன்றவற்றை நடத்துபவர்கள் யாராயினும், எந்த அமைப்பைச் சார்ந்தவர்களாயினும் இதை மனதில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. மீறுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் எச்சரிக்கப்படுகிறது. – தலைமைச் செயலாளர், தமிழ்நாடு அரசு.”
இந்திய காங்கிரஸ் இனப் படுகொலைக்குத் துணை போனாலும் தமிழர்களுக்காக கண்ணீர் விட்டு அழுதாலும் குற்றம் என்று காங்கிரஸ் கூறினால் கருணாநிதி காங்கிரசின் பக்கம் நின்று தமிழின உணர்வை நசுக்குவார்!
“இலங்கைப் பிரச்சினையிலும் கூட சுமூக நிலை ஏற்படக் கூடாது என்று வேண்டித் தவம் இருந்தவர்கள் யார் யார் என்பது எனக்குத் தெரியும். இப்போது சுமூக நிலை திரும்பிய பின்னரும் கூட கிளறி விட்டுக் கொண்டிருப்பவர்களையும் யார் யார் என்று எனக்குத் தெரியும். தமிழ்ப் பகுதியில் சகச நிலை திரும்பி விட்டது” எனக் கருணாநிதி திமிரோடு பேசியிருக்கிறார். மூன்று இலட்சம் மக்கள் போதிய உணவு, உடை, உறையுள், மருந்து இன்றி மழையில் நனைந்து அல்லல் படுவது கருணாநிதிக்கு இயல்பு நிலையாகத் தெரிகிறது!
தமிழ்நாடு சட்ட சபையில் பேசிய கருணாநிதி “தமிழீழம்” இனிச் சாத்தியமில்லை. தமிழர்கள் மேற்கொண்டு தங்கள் வாழ்வாதாரத்துக்கும் சமவுரிமைக்கும் மொழிச் சமத்துவத்துக்கும் பி;ராந்திய மட்டத்தில் அதிகாரப் பரவலாக்கலுக்கும் பெருமுயற்சி செய்ய வேண்டும். இதுதான் சாத்தியம். தமிழீழம் சாத்தியமில்லை. ஈழத்தமிழர்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்க வேண்டுமேயானால் சிங்களவர்களுக்கு எதிராக ஆத்திரமூட்டும் பேச்சுக்களைப் பேசக் கூடாது. நீக்குப் போக்குடன் நடந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அது சிங்களவர்களுக்கு கோபத்தை அதிகரித்துத் தமிழர்களது நலன்களை மேலும் பாதிக்கச் செய்யும். திமுக கழகத்தின் நிறுவனர் அறிஞர் அண்ணா தனித் திராவிட நாட்டை உருவாக்கும் முக்கிய கோரிக்கையை; கைவிட்டார். கட்சி தடைசெய்யப்படுவதைத் தவிர்க்கவே அவர் அப்படிச் செய்தார்” என்றார்.
இது வால் அறுந்த நரி வாலில்லாமல் திரிய வெட்கப்பட்டு மற்ற நரிகளைப் பார்த்து “நீங்களும் என்னைப் போலவே வாலை அறுத்துவிடுங்கள்” என்று சொன்ன கதையாக இருக்கிறது. கருணாநிதி இன்னொரு பொய்யைச் சொல்கிறார். பிரிவினைக்கான சட்டம் திமுகவை தடை செய்யவில்லை. பிரிவினை கேட்கும் கட்சி தேர்தலில் நிற்க முடியாது என்று மட்டும் சட்டம் சொல்லியது. மேலும் திராவிட நாட்டுக் கோரிக்கையை அண்ணா கைவிட்டாலும் அதற்கான காரணங்கள் நீடிக்கிறது என்று சொன்னார்.
எது எப்படி இருப்பினும் கல்லறைக்குள் தூங்கும் அறிஞர் அண்ணா கருணாநிதியின் துரோகத்தை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்.
இப்போதுதான் தெரிகிறது சிங்களக் கடற்படையால் தமிழக மீனவர்கள் நாய்கள் போல் சுட்டுக் கொல்லப்படுவதையிட்டு கருணாநிதி ஏன் வாய் பொத்தி, கண் மூடி நேக்குப் போக்காக நடந்து கொள்கிறார் என்று. தட்டிக் கேட்டால் சிங்களவனுக்குக் கெட்ட கோபம் வரும் என்று கருணாநிதி அஞ்சுகிறார்.
தமிழ், தமிழர், தமிழ்ப் பண்பாடு, தமிழர் வீரம், தமிழர் மானம் எனக் கூறி ஆட்சியில் அமர்ந்து கொண்டு தமிழ் இனத்துக்குக் கருணாநிதி தொடர்ந்து துரோகம் செய்து வருகிறார்.
இப்போது தமிழீழம் சாத்தியமில்லை எனச் சொல்லும் கருணாநிதி 1985 ஆம் ஆண்டு ரெசோ மாநாட்டில் இனச் சிக்கலுக்குத் தனித் தமிழீழமே சரியான தீர்வு என்ற தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார்.
அண்மையில் கூட “இலங்கைத் தமிழர்கள் பெற வேண்டிய ஈழத்தை பெற்றுத் தருவதற்கு முயற்சி செய்வோம்” என்றார். “தமிழருக்காக உயிரையும் கொடுப்பேன்” என்றார். உண்மை என்னவென்றால் கருணாநிதி தமிழருக்காக ஒரு மயிரைக்கூட இழக்கத் தயாரில்லை.
“தமிழர்கள் இன்னமும் ஏதிலிகளாக, சொந்த மண்ணிலேயே சோற்றுக்குப் பரிதவித்து, முள் வேலிக்குள் ஆடுமாடுகளைவிடக் கேவலமான கொடுமையின் கோரத் தாண்டவத்தில் பிடிபட்டு நித்தம் வேதனையால், வெட்கத்தால், அவமானத்தால், செத்தொழிந்து வரும் செய்தி எம்மை இரத்தக் கண்ணீர் விட்டு அழச் செய்கிறது” எனச் சுட்டிக்காட்டினால் சிங்களவனுக்குக் கோபம் வரும் என்பதற்காக கருணாநிதி வாய் மூடிக் கிடக்கிறார்.
கருணாநிதியை காடு வா வா என்கிறது வீடு போ போ என்கிறது. தனது மாலைக் காலத்தில் ஏதோ தமிழீழத் தமிழர்களது உரிமைகளைப் பெற்றுக் கொடுத்தோம் என்ற பெயரோடும் புகழோடும் கண்ணைமூடுவார் என்று நாம் எதிர்பார்த்தால் மனிதர் எல்லோரது வயிற்றெரிச்லையும் திட்டுக்களையும் கட்டிக் கொண்டுதான் போவேன் எனப் பந்தயம் பிடிக்கிறார்.
வடக்கில் நடந்த தேர்தலில் சிங்கள இனவாதக் கட்சிகளைத் தமிழ் மக்கள் நிராகரித்தனர்
ஊர்க் குருவி உயர உயரப் பறந்தாலும் பருந்தாக முடியாது!
காக்கை கங்கையில் மூழ்கிக் குளித்தாலும் நிறம் மாறாது!
அணில்பிள்ளை கிளிமொழி பேசவே பேசாது!
ஆல் பலா ஆக முடியாது!
வான்கோழி தோகைமயிலாக முடியாது!
நரி பரியாக முடியாது!
இவை போன்றே ஈழ மக்கள் சனநாயக முன்னணி என்னதான் தலை கீழாக நின்றாலும் தமிழ்மக்களது மனங்களையும் உள்ளங்களையும் வெல்ல முடியாது. சிங்கள ஆட்சியாளரிடம் சலுகைகளுக்காக கையேந்தும் அதன் தலைவர் டக்லஸ் தேவானந்தாவை விபீடணன், எட்டப்பன், காக்கைவன்னியன் ஆகியோரது வரிசையில் வைத்துத்தான் மக்கள் பார்க்கிறார்கள்!
ஆள் அம்பு என்ன? ஆளும் கட்சியின் அரவணைப்பு என்ன? பணபலம் என்ன? அதிகார பலம் என்ன? எல்லாம் இருந்தும் யாழ்ப்பாண மாநகர சபைத் தேர்தலில் இபிடிபி கட்சி சார்பில் போட்டியிட்ட 20 பேரில் 9 பேர்தான் நீந்திக் கரை சேர்ந்துள்ளார்கள். மீதி 11 பேர் தேர்தல் ஆற்றில் மூழ்கிவிட்டார்கள்! வவுனியாவில் அவர் கைகோர்த்திருந்த அய்க்கிய மக்கள் சுதந்திர முன்னணி மூக்குடைபட்டு மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுத் படுதோல்வி அடைந்துள்ளது. அந்தக் கட்சியில் போட்டியிட்டு வென்ற இரண்டு பேரில் ஒருவர் சிங்களவர். மற்றவர் முஸ்லிம்.
யாழ்ப்பாணத்தில் இபிடிபி – அய்க்கிய மக்கள் சுதந்திர முன்னணி இரண்டின் மானத்தை முஸ்லிம் வாக்காளர்கள்தான் காப்பாற்றியிருக்கிறார்கள். அவற்றின் சார்பில் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்கள் நால்வர் மாநகர சபை உறுப்பினர்களாக தெரிவு செய்யப் பட்டுள்ளனர். சுயேட்சையாகப் போட்டியிட்டு வென்ற சுபியானையும் சேர்த்து மொத்தம் அய்ந்து முஸ்லிம்கள் இம்முறை தெரிவாகியுள்ளனர். வுவுனியா நகரசபைக்கு முதல்முறையாக ஒரு சிங்களவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம், அனுராதபுரம், கொழும்பு, குருநாகலை போன்ற நகரங்களில் இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்கு அமைக்கப்பட்ட கொத்தணி வாக்குச் சாவடிகளில் ஏறத்தாள 3,100 வாக்குகள் விழுந்துள்ளன. அந்த வாக்குகள் மூன்று இருக்கைகளைப் பெற்றுக் கொடுத்துள்ளன.
இபிடிபி – அய்க்கிய மக்கள் முன்னணி இரண்டுக்கும் விழுந்த 10,602 மொத்த வாக்குளில் (50.67 விழுக்காடு) முஸ்லிம் வாக்காளர்களது 3,100 வாக்குகளைக் கழித்தால் இபிடிக்கு விழுந்த வாக்குகள் வெறுமனே 7,602 மட்டுமே. ஆனால் தமிழரசுக் கட்சிக்குக் கிடைத்த வாக்குகள் 8,008 (38.28) ஆகும். எனவே பெரும்பான்மைத் தமிழர்களது வாக்குகள் தமிழரசுக் கட்சிக்கே கிடைத்துள்ளன.
இதனால்தான்; யாழ்ப்பாண மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைத் தேர்தல்களின் பெறுபேறுகளைப் பார்க்கும் பொழுது தனிப்பட்ட முறையில் யாழ். மாநகர சபைத் தேர்தலில் தான் தோல்வியடைந்திருப்பதாகவும், வவுனியா நகர சபைத் தேர்தலில் படுதோல்வி அடைந்திருப்பதாகவும் டக்ளஸ் தேவானந்தா ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளார்.
1995 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தை சிங்கள இராணுவம் கைப்பற்றிய பின்னர் அங்கே டக்லஸ் தேவானந்தா தனிக்காட்டு இராசாவாக வலம் வந்தார். அவர் வைத்ததுதான் சட்டம். அவரது கூலிப்படை மக்களைத் துப்பாக்கி முனiயில் அடக்கி ஒடுக்கி வைத்திருந்தது.
யாழ்ப்பாண மாநகர சபை தேர்தல் முடிவுகள்
கட்சி | கிடைத்த வாக்குகள் | விழுக்காடு | இருக்கைகள் |
அய்க்கிய மக்கள் சுதந்திர முன்னணி | 10,602 | 50.67 | 13 |
தமிழரசுக் கட்சி | 8,008 | 38.28 | 8 |
சுயேட்சைக் குழு (1) | 1,175 | 5.62 | 1 |
தமிழர்விடுதலைக் கூட்டணி | 1,007 | 4.81 | 1 |
அய்க்கிய தேசியக் கட்சி | 83 | 0.40 | |
சுயேட்சைக் குழு (2) | 47 | 0.22 | |
செல்லுபடியான வாக்குகள் | 20,992 | 93.90 | |
பழுதான வாக்குகள் | 1,68 | 6.10 | |
பதிவான மொத்த வாக்குகள் | 22,280 | 100.00 | |
பதிவு செய்யப்பட்ட வாக்குகள் | 100,417 |
(மூலம்– தேர்தல் திணைக்களம்)
வவுனியா மாநகர சபை தேர்தல் முடிவுகள்
கட்சி | கிடைத்த வாக்குகள் | விழுக்காடு | இருக்கைகள் |
தமிழரசுக் கட்சி | 4,279 | 34.30 | 5 |
சனநாயக மக்கள் விடுதலை முன்னணி | 4,136 | 32.19 | 3 |
அய்க்கிய மக்கள் சுதந்திர முன்னணி | 3.045 | 23.70 | 2 |
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் | 587 | 4.57 | 1 |
அய்க்கிய தேசியக் கட்சி | 228 | 1.77 | |
ஏனையவை | 17 | 0.13 |
(மூலம்– தேர்தல் திணைக்களம்)
இந்தத் தேர்தல் ஒரு இயல்பான சூழ்நிலையில், மக்கள் மீள்குடியேற்றப்பட்ட பின்னர், ஊரடங்க உத்தரவு விலக்கப்பட்ட பின்னர், இராணுவம் முகாம்களுக்குள் முடக்கப்பட்ட பின்னர், இபிடிபி ஒட்டுக் குழுவின் ஆயுதங்கள் களைந்த பின்னர், கெடுபிடிகள் மிரட்டல் இல்லாது நடந்திருந்தால் தமிழரசுக் கட்சி நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும். பயமுறுத்தல்,மிரட்டல் காரணமாக மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க முடியாது போய்விட்டது.
கொழும்புத்துறை, பாசையூர், குருநகர், நாவாந்துறை ஆகிய பகுதி மக்கள் தேர்தலுக்கு முதல் நாளும் மிரட்டப்பட்டார்கள். தேர்தலில் ஆளும் கட்சிக்கு வாக்களிக்காது விட்டால் மீன்பிடித் தடை மீண்டும் வரும், ஏ9 பாதை நிரந்தரமாக மூடப்படும் போன்ற அச்சுறுத்தல்கள் இபிடிபி கட்சியியால் விடுக்கப்பட்டது.
யாழ்ப்பாண மாநகரசபைத் தேர்தலில் வி.புலிகள் மீது வசைபாடிவரும் மகிந்த இராசபக்சேக்கு ஆலவட்டம் பிடிக்கும் ஆனந்தசங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணி நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டுப் படுதோல்வி அடைந்துள்ளது. வெறுமனே 1,107 (4.81) வாக்குகள் பெற்று கண்ணே கண்ணு ஒண்ணே ஒன்று என ஒரு இருக்கையை வென்றுள்ளது. அதைவிடச் சோகம் ஆனந்தசங்கரிக்குக் கிடைத்த விருப்பு வாக்குகள் வெறுமனே 424 தான். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் முடியப்பு ரெமிடியசுக்குக் கிடைத்த விருப்பு வாக்குகள் 4,223 ஆகும்! ஈபிடிபி தமது முதன்மை வேட்பாளராக அறிவித்திருந்த கைலாயபிள்ளை தெய்வேந்திரன் விருப்பு வாக்குகள் பட்டியலில் தோல்வியைத் தழுவியுள்ளார்!
2004 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் சுயேட்சைக் குழுவாகப் போட்டியிட்ட ஆனந்தசங்கரிக்கு விழுந்த வாக்குகள் வெறுமனே 5,156 (1.82 விழுக்காடு)தான். அவரும் அவரோடு போட்டியிட்டவர்களும் கட்டுக்காசைக் கோட்டைவிட்டார்கள். இன்று தமிழர் விடுதலைக் கூட்டணி என்பது கடிதத் தலைப்பில் மட்டும் வாழும் கட்சியாகும். ஆனந்தசங்கரியே அதன் தலைவர், அவரே செயலர், அவரே பொருளாளர்! ஆனால் பேச்சு மட்டும் பல்லக்கு! தனக்குப் பின்னால் ஆனை சேனை அணிவகுத்து இருப்பது போல் பேசுவார்! அவரைத் தமிழ்மக்கள் ஒரு அரசியல் அழுகுதொழு நோயாளியாகப் பார்ப்பதையிட்டு அவர் கவலைப்படுவதில்லை.
2004 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அவர் தோற்றாலும் சிங்கள அரசு கொடுத்த வீட்டில்தான் இன்றுவரை ஆனந்தசங்கரி வாழ்ந்து வருகிறார். அவர் இராசபக்சே அரசுக்கு லாலி பாடுவதற்கு இதுவும் ஒரு காரணம்.
சிங்கள இராணுவம் இடித்த கோயில்களை மீளக் கட்டுதல், சில்லறை வேலைகளுக்கு ஆட் சேர்த்தல், ஆசிரிய நியமனம், இடமாற்றம் இவைதான் அமைச்சராக இருந்து கொண்டு தேவானந்தா தமிழ்மக்களுக்கு சிங்கள கொடுங்கோல் அரசிடம் கெஞ்சிக் கும்பிட்டுப் பெற்றுக் கொடுத்த சலுகைகள் ஆகும்.
இந்தத் தேர்தல் மூலம் விடுதலைப் புலிகளின் கதையை முடிக்க நினைத்த ஆட்சித்தலைவர் மகிந்த இராசபக்சேயின் எத்தனம் பலிக்கவில்லை.
வவுனியா முகாம்களில் 300,000 இலட்சம் மக்கள் முட்கம்பி வேலிக்குள் ஆடு மாடுகள் போல் அடைத்து இராணுவத்தைக் காவல் வைத்துள்ள மகிந்த இராசபக்சேக்கு இத் தேர்தலில் தமிழ்மக்கள் முகத்தில் கரி பூசியுள்ளார்கள்.
தென்னிலங்கையில் வெற்றி மேல் வெற்றி குவித்துவரும் மகிந்த இராசபக்சே வடக்கில் மூக்குடை பட்டுள்ளார். வடக்கும் தெற்கும் அரசியலில் இரு துருவங்களாக இருப்தை தேர்தல் முடிவுகள் எண்பித்துள்ளன.
யாழ்ப்பாணத்தில் மீன்பிடித் தடையை நீக்கிவிட்டதாக அரசு பரப்புரை செய்தாலும் அது உண்மை அல்ல என்பது எல்லோருக்கும் தெரியும். “பாஸ்” முறை தொடர்கிறது. இரவில் மட்டுமே மீன்பிடிக்கலாம் என்ற கட்டுப்பாடு நீடிக்கிறது. காங்கேசன்துறைக்கும் மயிலிட்டிக்கும் இடையிலான கடலில் மீன்பிடி பாதுகாப்பு வலயத்தைக் காரணம் காட்டி முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. மீனவர்கள் 8 கிமீ தொலை நடந்து குசுமான்துறை சென்றே மீன்பிடிக்க நிர்ப்பதந்திக்கப் படுகிறார்கள். அதே சமயம் சிங்கள மீனவர்கள் இந்தக் கடலில் சுதந்திரமாக மீன் பிடிக்க அனுமதிக்கப் பட்டுள்ளார்கள். இதனால் அங்கு தமிழ் – சிங்கள மீனவர்களுக்கு இடையில் மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன.
யாழ்ப்பாண மாநரசபைத் தேர்தலில் 22 விழுக்காட்டினரும் வுனியாவில் 52 விழுக்காடடினருமே வாக்களித்துள்ளார்கள். மக்கள் பயம் மற்றும் அக்கறையின்மை காரணமாக வாக்களிக்காது இருந்துவிட்டார்கள்.
இபிடிபியின் தோல்விக்குக் காரணம் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையை நடத்திய சிங்கள – பவுத்த வெறியவரான மகிந்த இராசபக்சேக்கு டக்லஸ் தேவானந்தா சாமரம் வீசியதுதான். இதை தேவானந்தா உணர்ந்திருந்தார். அதனால்தான் தனது கட்சியின் சார்பில் வீணைச் சின்னத்தில் போட்டியிட நினைத்தார். ஆனால் இராசபக்சே அவரை வெருட்டி தனது கட்சியில் கேட்க வைத்து விட்டார்.
யாழ்ப்பாணத்தில் பொங்குதமிழ் நிகழ்ச்சி நடத்திய வி.புலி ஆதரவாளர்கள் பலர் அடையாளம் காணப்பட்டு கொல்லப்பட்டார்கள். ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டார்கள். இந்தக் கொலைகளுக்குப் பின்னால் டக்லஸ் தேவானந்தாவின் இபிடிபி ஆயுதக் குழு செயல்பட்டது. 2000 ஆம் ஆண்டு மயில்வாகனம் விமலராசனின் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டவர் நெப்போலியன் என்ற இபிடிபி உறுப்பினர். ஊடகவியலாளர் தருமரத்தினம் சிவராம் கொலையில் பிடிபட்டவர் புளட் தலைவர் தருமலிங்கம் சித்தார்த்தனின் தனிச் செயலாளர் ஆவார்!
தமிழ்மக்களிடையே தேர்தல் பற்றிய அலட்சியம் இருந்ததென்பதை கொழும்பில் இருந்து வெளியாகும் அய்லன்ட் நாளேடு தனது தலையங்கத்தில் ஒத்துக் கொண்டுள்ளது. அய்லன்ட் நாளேடு சிங்கள – பவுத்த பேரினவாதத்துக்கு தூபதீபம் காட்டும் ஏடாகும்.
“யாழ்ப்பாணத்தில் மிகக் குறைந்தளவு வாக்குகள் பதிவாகியுள்ளது. அதன் மூலம் அரசுக்குத் தெளிவான செய்தி சொல்லப்பட்டுள்ளது. மக்களுக்கு இப்போது அவசரமாகத் தேவைப்படுவது தேர்தல் அரசியல் அல்ல. போரினால் சீரழிந்த தங்கள் வாழ்வாதாரத்தை மீள்கட்டியெழுப்புவதே ஆகும்” என அய்லன்ட் ஏடு குறிப்பிட்டுள்ளது.
ஆனைக் கட்சி இந்தத் தேர்தலில் மீண்டும் எழுந்திருக்க முடியாதவாறு பலத்த அடிவாங்கியுள்ளது. யாழ்ப்பாணத்தில் எண்ணி 47 வாக்குகளையும் வவுனியாவில் 228 வாக்குகளையும் பெற்றுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றது தென்னிலங்கை சிங்கள இனவாதிகளுக்கு ஒரு கண் திறப்பாக அமைந்துள்ளது. வி.புலிகள் அழித்தொழிக்கப்பட்டு விட்டார்கள் அவர்கள் சார்பாக இயங்கி வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் வெல்ல முடியாது என்ற எண்ணத்தை மக்கள் முறியடித்துள்ளார்கள்.
தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்துவிட்டால் அய்க்கிய இலங்கையை உருவாக்கிவிடலாம் என்ற கனவு இந்தத் தேர்தல் மூலம் கலைக்கப்பட்டுள்ளது.
அரசின் பாரிய பொய்ப் பரப்புரைiயைத் தமிழ்மக்கள் விழுங்க மறுத்துவிட்டார்கள். தமிழ்மக்கள் மகிந்த இராசபக்சே ஒரு சிங்கள – பவுத்த இனவெறியர் என்பதை நன்கு அறிந்து வைத்துள்ளார்கள். அவர்களை ஏமாற்ற முடியாது. அரசு தமிழ்மக்களை மூன்றாம் தர மக்களாகவே நடத்துகிறது என்ற உண்மையையும் அவர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளார்கள். அதே நேரத்தில் டக்லஸ் தேவானந்தாவை சிங்கள அரசின் கால்களை நக்கி வாழும் எடுபிடி என்றும் அறிந்து வைத்துள்ளார்கள்.
அடுத்துவரும் தேர்தல்களில் தமிழ்மக்கள் மகிந்த இராசபக்சேயை புறம்தள்ளினால் மகிந்தர் தேசியத் தலைவர் அல்ல அவர் சிங்களவரின் தலைவர் என்பது மேலும் ஒரு முறை அய்யத்துக்கு அப்பால் எண்பிக்கப்பட்டு விடும்.
ஆனால் இவற்றையெல்லாம் மகிந்த இராபச்சே புரிந்து கொள்வாரா? அல்லது தீக்கோழி போல் மண்ணுக்குள் தலையை வைப்பாரா? என்பதுதான் கேள்வி ஆகும்.
மகிந்த இராசபக்சே தான் பதவிக்கு வந்த 3 மாதங்களில் ஒரு அரசியல் தீர்வுத்திட்டத்தை முன்வைக்கப் போவதாகத் தேர்தல் பரப்புரையின் போது சொன்னார். ஆனால் ஆண்டு நான்காகியும் இன்னும் அவர் ஒரு அரசியல் தீர்வுத்திட்டத்தை முன்வைக்காது தமிழ்மக்களைப் பேய்க்காட்டி வருகிறார். இப்போது தீர்வு அடுத்த ஆட்சித்தலைவர் தேர்தலுக்குப் பின்னரே எனச் சொல்லிவிட்டார். அதுவும் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் ஒற்றையாட்சியின் அடிப்படையில்தான் தீர்வு எனக் கூறுகிறார். இதனை தமிழ்மக்கள் ஏற்றுக் கொள்ளப்ப போவதில்லை.
நடந்து முடிந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்கு, குறிப்பாக வவுனியா நகரசபை, புலம் பெயர்ந்த தமிழ் அமைப்புக்களின் பங்களிப்பும் ஓரளவு காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனை தர்மலிங்கம் சித்தார்த்தன் ஒத்துக் கொண்டுள்ளார். எல்லா அமைப்புக்களும் ஆதரித்திருந்தால் யாழ்ப்பாண நகரசபையையும் கைப்பற்றி இருக்கலாம். குறிப்பாக பிரித்தானியா தமிழர் பேரவை, உலகத் தமிழர் பேரவை, ஒபாமாவுக்க ஆதரவான தமிழர்கள் வாயே திறக்கவில்லை.
மனிதவளம், பொருள்வளம் போன்றவை எப்போதுமே மட்டுப்படுத்தப்பட்டவை ஆகும். அதனை எங்கே எதில் முதலீடு செய்தால் அதிகளவு பலன் கிடைக்கும் என்பதை நாம் எண்ணிப் பார்த்து செயல்பட வேண்டும். உணர்வு வேண்டும் ஆனால் அதைவிட வினை செய்தற்குரிய இடம், பொருள் ஏவல் ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கும் அரசியல் மதிநுட்பம் வேண்டும்.
தமிழ்மக்களது வாழ்வுரிமையைப் பறித்தவர்களை, குருதி கொட்டி உயிராய் வளர்த்த எமது தாயக் கனவைக் கலைத்தவர்களை எதிர்வரும் தேர்தல்களில் தமிழ்மக்கள் பழிக்குப் பழி வாங்க வேண்டும். (உலகத்தமிழர் – ஓகஸ்ட் 14, 2009)
கடனில் தத்தளிக்கும் மகிந்த இராசபக்சே அரசு நீந்திக் கரைசேருமா அல்லது மூழ்குமா?
கேட்டது 1.91 பில்லியன் டொலர். கொடுத்தது 2.6 பில்லியன் டொலர். யார் இந்த வள்ளல் என்று கேட்கிறீர்களா? வேறு யாருமில்லை. பன்னாட்டு நாணய நிதியம்தான் ஸ்ரீலங்கா கேட்ட கடனைவிட தாராளமனதுடன் பன்னாட்டு நாணய நிதியம் 690 மில்லியன் கூடுதலாக வழங்கியுள்ளது.
மனிதவுரிமை மீறல்களுக்குப் பெயர் போன ஸ்ரீலங்காவுக்கு கடன் கொடுக்கக் கூடாது என அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தன. குறிப்பாக அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இதனால் நாணய நிதியம் கடன் கொடுப்பதை நிறுத்தி வைத்திருந்தது.
மனிதவுரிமைக்காக உலக மட்டத்தில் குரல் கொடுத்துவரும் பன்னாட்டு மன்னிப்புச் சபை, மனித உரிமைக் கண்காணிப்பகம் போன்ற அமைப்புக்கள் ஸ்ரீலங்கா அரசுக்கு பன்னாட்டு நாணய நிதியம் கடன் கொடுக்கக் கூடாது என உறுதியாகக் கேட்டுக் கொண்டன. அவ்வாறே புலம் பெயர் தமிழர்கள் நேரடியாகவும் கடிதங்கள் மூலமும் வரலாறு காணாத இனப்படுகொலையை நடத்தி முடித்திருக்கும் ஸ்ரீலங்காவுக்கு கடன் கொடுக்கக் கூடாது எனக் கேட்டார்கள்.
“வன்னி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 2.83 மில்லியன் மக்களை விடுதலை செய்யும் பணி தொடங்கும் வரையில் சிறிலங்காவை உலக நாடுகள் புறக்கணிக்க வேண்டும்” என்று “இலண்டன் ரைம்ஸ் ஆன்லைன்” வேண்டுகோள் விடுத்தது.
ஆனால் இவை யாவும் பன்னாட்டு நாணய நிதியம் காதில் விழுத்திக் கொள்ளவே இல்லை. எல்லாம் செவிடன் காதில் சங்கு ஊதிய கதையாக முடிந்து விட்டது. சாதாரணமாகக் குடிகாரனுக்கு யாரும் கடன் கொடுக்க மாட்டார்கள். ஆனால் பன்னாட்டு நாணய நிதியம் குடிகாரனையும் கொலைகாரனையும் பார்த்துத்தான் கடன் கொடுக்கிறது!
ஸ்ரீலங்காவுக்கு பன்னாட்டு நாணய நிதியம் இந்த நிதியைப் பெற்றுக் கொடுத்ததில் பெரிய பங்கு இந்தியாவுக்கு உண்டு. கடந்த மே மாதத்தில் அமெரிக்க வெளியுறவுச் செயலர் கிலாரி கிளின்டன் ஸ்ரீலங்காவுக்கு கடன் கொடுப்பதற்கான நேரம் இதுவல்ல என்று கூறியிருந்தார். ஆனால் அவர் இந்த மாதம் (யூலை 20) இந்தியாவுக்குப் பயணம் செய்து பிரதமர் மன்மோகன் சிங் அவர்களோடு ஸ்ரீலங்கா பற்றி பேச்சு வார்த்தை நடத்தினார். அதன் பின்னர்தான் அமெரிக்கா தனது முந்திய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது.
ஸ்ரீலங்காவிற்று பன்னாட்டு நாணய நிறுவனம் கடன் கொடுக்கத் தவறினால் அது சீனா பக்கம் மேலும் சாய்ந்துவிடும் அபாயம் இருப்பதாக இந்தியப் பிரதமர் கிலாரியிடம் தெரிவித்ததாகவும் அதைத் தொடர்ந்தே அமெரிக்கா தனது எதிர்ப்பைக் கைவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
ஸ்ரீலங்காவிற்கு கடன் கொடுக்கும் தீர்மானம் யூலை 29, 2009 அன்று பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்று குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்துக்கான வாக்கெடுப்பின் போது அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகள் கலந்து கொள்ளவில்லை.
பன்னாட்டு நாணய நிதியத்தின் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுவது தொடர்பான வாக்குகளைப் பொறுத்தவரையில் அமெரிக்கா (17 விழுக்காடு), பிரித்தானியா (5 விழுக்காடு), பிரான்ஸ் (5 விழுக்காடு) ஆகிய மூன்று நாடுகளுமாக 27 விழுக்காடு வாக்குகளையே கொண்டிருக்கின்றன. இதனால் ஏனைய நாடுகளின் ஆதரவுடன் கடனை வழங்குவதற்கான தீர்மானத்துக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது.
ஸ்ரீலங்காவுக்கு 2.6 பில்லியன் டொலர் கடன் வழங்குவதென நாணய நிதியம் எடுத்த முடிவு பற்றிக் கருத்துத் தெரிவித்த மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் ஆசிய பிரிவுக்கான இயக்குநர் பிராட் ஆடம்ஸ் “இருப்பத்தாறு ஆண்டுகளுக்கும் மேலான இனப் போரில் ஏற்பட்ட மனித உரிமை மீறல் தவறுகளை ஸ்ரீலங்கா அரசு நிவர்த்தி செய்து கொண்ட பின்னரே இந்தக் கடன் தொகை வழங்கப்பட்டிருக்க வேண்டும். இன்னும் 2 லட்சத்து 83 ஆயிரம் மக்களை சிறிலங்கா அரசு முள்வேலி போட்ட முகாம்களில் அடைத்து வைத்திருக்கிறது. இது முற்றிலும் மனித உரிமைகளை மீறும் செயலாகும்.
மேலும், ஊடகவியலாளர்கள், சமூக பணிப்பாளர்கள் உள்ளிட்டோர் மீதான தாக்குதல்கள் குறித்து விரிவாக விசாரிக்கப்பட வேண்டும். ஆனால் இவையெல்லாம் செய்யப்படாமலேயே மிகப் பெரிய கடன் தொகையை வழங்க பன்னாட்டு நாணய நிதியம் முன்வந்திருப்பது வேதனைக்குரியது, கண்டனத்துக்குரியது, துரதிட்டமானது.
ஆயிரக்கணக்கான மக்களை முகாம் என்ற பெயரில் அடைத்து வைத்திருக்கும் ஒரு அரசுக்கு, கேட்ட கடனைவிட மேலதிகமாக 690 மில்லியன் டொலரை கொடுத்திருப்பது கெட்ட நடத்தைக்குப் பரிசு வழங்குவது போன்றது. இது மோசமான முன் எடுத்துக் காட்டாகி விடும் (“To approve a loan, especially $600 million more than the government even asked for, while they have hundreds of thousands of people penned up in these camps is a reward for bad behaviour and a bad example”) எனவே பன்னாட்டு நாணய நிதியம் தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்” என்றும் அவர் வேண்டிக் கொண்டார்.
இதேவேளை “சிறிலங்காவுக்குக் கடன் வழங்குவதற்கன தருணம் இதுவல்ல” எனத் தெரிவித்திருக்கும் பிரித்தானிய அரசுப் பேச்சாளர் ஒருவர், “3 லட்சம் தமிழர்களை முகாம்களில் பலவந்தமாகத் தடுத்துவைத்துள்ள சிறிலங்கா அரசு, போர் முடிவுக்கு வந்துள்ள போதிலும் இராணுவத்துக்கே தனது நிதிவளத்தில் பெரும் பகுதியைச் செலவிடுகின்றது” எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
போர் முடிவுக்கு வந்த பின்னர் கூட வி.புலிகளை அடையாளம் காண்பதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் பசி, தாகம், பட்டினி, பிணி போன்றவற்றால் அல்லல்படுகிறார்கள். தமிழ் மக்களுக்கு மீள்குடியமர்வு இப்போது இல்லை என்று கையை விரிக்கும் இராசபக்சே அரசு மணலாற்றில் சிங்களவர்களைத் துரித கெதியில் குடியமர்த்த நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழ் இளைஞர்கள் நாடு முழுதும் கேட்டுக் கேள்வியின்றி கைது செய்யப்படுகிறார்கள். யாழ்ப்பாணக் குடாநாட்டில் மீன்பிடித் தடை முற்றாக நீக்கப்படவில்லை. ஊடகவியலாளர்கள் பயமுறுத்தப்படுகிறார்கள். ஊரடங்கு உத்தரவு நீடிக்கிறது. மக்களது பேச்சுச் சுதந்திரம் நடமாடும் சுதந்திரம் நசுக்கப்படுகிறது.
கிழக்கில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் மேற்கொண்டுள்ள பணிகளைக் குறைக்குமாறு சிறிலங்கா அரசின் கட்டளைக்கு அமைய அந்த அமைப்பு தனது அலுவலகங்களை மூடிவிட்டது. அதே நேரம் புல்மோட்டை, குச்சவெளி போன்ற முகாம்களில் 7,000 மேலான மக்கள் போதிய உணவு, உடை மருந்து இல்லாது அவதிப்படுகிறார்கள். வவுனியா முகாம்களைப் பராமரிக்கவும் தன்னிடம் பணம் இல்லை என்று இராசபக்சே அரசு ஒப்பாரி வைக்கிறது.
இந்தப் பின்னணியில் பன்னாட்டு நாணய நிதியம் மனிதவுரிமைகளைத் தைரியமாகவும் வெளிப்படையாகவும் காலில் போட்டு மிதிக்கும் ஸ்ரீலங்காவிற்கு 2.6 மில்லியன் டொலர்களை அள்ளிக் கொடுத்திருப்பது பலரது புருவத்தை உயர்த்த வைத்துள்ளது. முடாக் குடிகாரனுக்கு மேலும் ஊத்திக் கொடுத்த கதையாக இது இருக்கிறது.
பன்னாட்டு நாணய நிதியத்தின் செய்தி அறிக்கையின் படி இந்தக் கடன் பின்வரும் காரணங்களுக்குகாகக் கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
1) ஸ்ரீலங்காவின் கையிருப்பு நிதியை மீள்கட்டியெழுப்புவதன் மூலம் ஒரு நெருக்கடியைத் தவிர்ப்பது.
2) மோதலுக்குப் பிந்திய காலத்தில் மீள்கட்டியெழுப்பும் முயற்சிகளுக்கு உதவுதல்.
3) வறிய மக்கள், பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய மக்கள் ஆகியோருக்கு உதவுதல் முக்கிய நோக்கங்களாகும்.
இந்தக் கடன் இருபது மாத காலத்தில் எட்டுத் தடவையில் கொடுக்கப்படும். முதல் தடவையாக 322.1 மில்லியன் டொலர்கள் வழங்கப்படும்.
பன்னாட்டு நாணய நிதியம் அடுத்த 2014 ஆம் ஆண்டுவரை குறைந்த வருவாய் உடைய நாடுகளுக்கு 17 பில்லியன் டொலர்களை குறைந்த வட்டிக்குக் கடனாகக் கொடுக்க இருக்கிறது. அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் மட்டும் 8 பில்லியனை நாணய நிதியம் கடனாக வழங்கவுள்ளது.
ஸ்ரீலங்காவின் பொருளாதாரம் போர் காரணமாகவும் உலக பொருளதார சரிவு, ஏற்றுமதிப் பொருட்களின் விலை வீழ்ச்சி மற்றும் முதலீடுகளின்; வெளியேற்றம் காரணமாகவும் நலிந்து போய்விட்டது. இதனால் ஏற்பட்ட வரவு – செலவுப் பற்றாக் குறையைச் சமாளிக்க ஸ்ரீலங்கா பன்னாட்டுச் சந்தையில் கடன் வாங்கி வந்தது. இருந்தும் வெளிநாட்டு நாணய கையிருப்பின் வீழ்ச்சியை இதன் மூலம் தூக்கி நிறுத்த முடியவில்லை. ஒன்றரை மாத இறக்குமதிக்கு மட்டும் வெளிநாட்டுக் கையிருப்பு நிதி போதுமானதாக இருந்தது.
பன்னாட்டு நாணய நிதியத்திடம் இருந்து கடன் வாங்க மாட்டோம், அதன் நிபந்தனைகளுக்கு இணங்க மாட்டோம் என ஆட்சித் தவைர் மகிந்தா இராசபக்சே தொடங்கி அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், மத்திய காப்பகத்தின் ஆளுநர் என எல்லோரும் மார்தட்டினார்கள். ஆனால் வெள்ளம் தலைக்கு மேல் போகப் போகும் எதார்த்தத்தை உணர்ந்தபின் பன்னாட்டு நாணய நிதியம் போட்ட நிபந்தனைகளை ஒப்புக் கொண்டு ஸ்ரீலங்கா அரசு கடனைப் பெற்றுக் கொண்டுள்ளது.
இதேவேளை கடனை வழங்குவது தொடர்பாக பன்னாட்டு நாணய நிதியம் நிபந்தனைகள் எதனையும் விதிக்கவில்லை என அனைத்துலக வாணிக அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் “வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் பன்னாட்டு நாணய நிதியம் அதிகளவிலான கடனை வழங்க முன்வந்துள்ளது. இது எமக்குக் கிடைத்த பெருவெற்றியாகும். நாம் 1.9 பில்லியன் அமெரிக்க டொலரைக் கடனாக கேட்டபோது அது 2.6 பில்லியன் அமெரிக்க டொலரை வழங்கியுள்ளது” என அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இப்படி அமைச்சர் பீரிஸ் மார்தட்டிக் கொண்டாலும் இந்தக் கடனுக்கு நாணய நிதியம் நிச்சயம் நிபந்தனைகளை விதித்திருக்கும். நிபந்தனை இல்லாத கடன் உலகில் இல்லை. ஆனால் அதனை வெளியிட நாணய நிதியம் மறுத்துவிட்டது. இருந்தும் சில நிபந்தனைகள் ஊடகங்களில் கசிந்துள்ளன.
ஸ்ரீலங்கா அரசு பல சமூகக் கொடுப்பனவுகளையும் மானியங்களையும் குறைக்குமாறு நிர்ப்பந்திக்கப்படும் என்பதில் எந்ந அய்யமும் இல்லை. இதே சமயம் வருவாயைப் பெருக்க வரிகளைக் கூட்ட வேண்டியும் வரும்.
இலங்கை பெட்றோலிய குழுமம், இலங்கை மின்சார சபை இரண்டும் தற்போது பெரு நட்டத்தில் ஒடிக் கொண்டிருக்கின்றன. எனவே இந்த அமைப்புக்களுக்கு அரசு வழங்கும் மானியம் நிறுத்தப்பட வேண்டும் என நாணய நிதியம் நிபந்தனை விதித்துள்ளது. அதனால் பெட்றல் விலையையும் மின்சாரக் கட்டணத்தையும் உயர்த்த வேண்டி வரும். அது பணவீக்கத்தை உருவாக்கி புதிய நெருக்கடியை தோற்றுவிக்கலாம்.
மேலும் இராணுவத்துக்கான செலவு குறைக்கப்பட வேண்டும் வரவு – செலவுத் திட்டத்தில் ஏற்படும் பற்றாக்குறை 2011 ஆம் ஆண்டில் 6 விழுக்காடாகக் குறைக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. நூற்றுப் பதின் மூன்று அமைச்சர்களைக் கொண்டஅமைச்சரவையின் எண்ணிக்கை குறைக்கப்படுமா என்பது தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும் இந்த நிபந்தனைகள் மகிந்த இராசபக்சே அரசின் அரசியல் செல்வாக்கைக் குறைத்து விடும். அந்த அச்சம் காரணமாகவே ஆட்சித் தலைவர் தேர்தலை 2010 இல் வைத்துவிட இராசபக்சே முடிவு செய்துள்ளார்.
பொதுவாக பன்னாட்டு நாணய நிதியம் அல்லது உலக வங்கி ஆகியவற்றில் இருந்து கடன் பெற்ற பெரும்பாலான நாடுகள் கரையேறுவதில்லை. ஆபிரிக்க நாடுகள் பல வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கவே இல்லை.
பன்னாட்டு நாணய நிதியம் இந்தக் கடனைக் கொடுத்ததற்கு முக்கிய காரணம் தன்நலந்தான். ஸ்ரீலங்கா கடன்கார நாடுகளுக்குச் செலுத்த வேண்டிய முதலையும் வட்டியையும் ஒழுங்காகக் கொடுக்க வேண்டும் என்பதை பன்னாட்டு நாணய நிதியம் இந்தக் கடன் கொடுப்பனவு மூலம் உறுதி செய்துள்ளது.
சிங்கள – பவுத்த வெறிபிடித்த இராசபக்சே அரசு இனச் சிக்கலுக்கு இன்னும் ஒரு தீர்வை முன்வைக்கவில்லை. இனச் சிக்கல் தீராமல் பொருளாதார மேம்பாடு சாத்தியமில்லை. இதனால் கடனில் தத்தளிக்கும் மகிந்த இராசபக்சே அரசு நீந்திக் கரைசேருமா அல்லது மூழ்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். (உலகத்தமிழர் – யூலை 31,2009)
தேர்தலில் தமிழின எதிரிகளையும் துரோகிகளையும் தோற்கடித்து அவர்களுக்குப் பாடம் படிப்பியுங்கள்
கடந்த இரண்டு ஆண்டுகளாக வன்னிப் பெரு நிலப்பரப்பில் பாரிய படையெடுப்பு நடத்தி வரலாறு காணாத இனப் படுகொலையையும் பொருள் அழிவையும் மனித அவலத்தையும் அரங்கேற்றியதோடு அதனைக் கொண்டாடு முகமாக கொழும்பில் வெடிகொளுத்தி இராணுவ அணிவகுப்பை நடத்தி மகிழ்ந்த மகிந்த இராசபக்சே அவசர அவசரமாக யாழ்ப்பாண மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபை இரண்டுக்கும் தேர்தலை அறிவித்துள்ளார்.
தமிழரின் அடிப்படைக் கோரிக்கைகளான தமிழர் தேசியம், தமிழர் தாயகம், தமிழரின் தன்னாட்சி உரிமை ஆகியவற்றை மகிந்த இராசபக்சே புறந்தள்ளியுள்ளார். ஒற்றை ஆட்சி யாப்பில் மாற்றம் இல்லை, எந்தத் தீர்வென்றாலும் அது 13 ஆவது சட்ட திருத்தத்துக்கு உட்பட்டதாகவே இருக்கும் என இராசபக்சே மார்தட்டுகிறார். அந்தத் தீர்வும் 2010 இல் நடைபெற இருக்கும் ஆட்சித்தலைவர் தேர்தலுக்குப் பின்னர்தான் என்றும் சொல்லிவிட்டார்.
வடக்கில் கொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல், செய்தித்தாள்களுக்கு பயமுறுத்தல் போன்ற பல்வேறு மனிதவுரிமை மீறல்கள் மற்றும் மக்கள் சுதந்திரமாக வாய்திறந்து பேச முடியாத அச்சச் சூழ்நிலையில் இத்தேர்தல் நடைபெற இருக்கிறது.
தமிழ்மக்களின் ஆயுதப் போராட்டத்தை முறியடித்துவிட்ட மிதப்பில் “இனி, எமது அகராதியில் முடியாது என்ற வார்த்தையே இல்லை” என்று மார் தட்டும் இராசபக்சேக்கு பௌத்த விகாரைகளில் பௌத்த தேரர்களால் புகழ்மாலைகள் சூட்டப்படுகின்றன. சிங்களப் படை வீரர்களுக்குச் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. ‘உலகின் தர்மதுவீபம் என்ற விருதை நான் பெற்றுக் கொள்வதற்கான தகுதியை அடைந்துவிட்டேன்” என மார்தட்டும் இரசபக்சே தமிழ்மன்னன் எல்லாளனை போரில் வென்ற துட்டகைமுனுவோடு தன்னை ஒப்பிட்டுப் பேசுகிறார்.
மகிந்தா இராசபக்சேக்கும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய இராசபக்சேக்கும் கொழும்பு பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கக் காத்திருக்கிறது.
போரை முடிவுக்குக் கொண்டுவந்த முப்படைத் தளபதிகளுக்கும் நான்கு நட்சத்திர தகைமைப் பதவி உயர்வு கொடுக்கப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா ஜெனரலாகவும் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட அட்மிரலாகவும், விமானப் படைத் தளபதி ஏர் மார்ஷல் ரொஷான் குணதிலக கடற்படைத் தளபதியாகும் (Air Chief Mardhall) பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மக்களாட்சி முறைமையில் தேர்தல் ஒரு அம்சமாக இருந்தாலும் ஸ்ரீலங்காவில் நடைபெறும் தேர்தல்கள் துப்பாக்கி முனையில் அரச வளங்களைப் பயன்படுத்தி நடத்தப்படுகிறது.
ஓகஸ்ட் 8 ஆம் நாள் நடைபெற இருக்கும் இந்தத் தேர்தலின் மூலம் தனது அரசு உலக அரங்கில் மக்களாட்சியை மதித்து நடக்கும் அரசு என்றும் தமிழ்மக்களை வி.புலிகளின் பிடியில் இருந்து விடுவித்து வடக்கில் இயல்பு நிலையைக் கொண்டுவந்து விட்டோம் என்னும் ஒரு மாயத் தோற்றத்தை உலக மட்டத்தில் உருவாக்க மகிந்தா இராசபச்சே எத்தனிக்கிறார்.
போரினால் ஏற்பட்ட வடுக்கள் இன்னும் ஆறவில்லை. கொட்டிய குருதி காயவில்லை. இறுதிக் கட்டப் போரில் 40,000 பொதுமக்கள் சிங்களப் படையினரால் கொல்லப் பட்டுள்ளார்கள். அதைவிட அதிகமான தொகையினர் படுகாயப் படுத்தப்பட்டார்கள்.
பல ஆயிரம் உயிர்கள் பலி எடுக்கப்பட்டு தமிழ் மக்களின் சடலங்கள் மலை மலையாக வன்னிப் கோர்க்களத்தில் குவிக்கப்பட்டன. தமிழர்கள் கொட்டிய குருதிப் புனலில் குளித்தவனை – தமிழினத்தை அழித்தவனை – போர்க்குற்றங்களுக்காகக் குற்றவாளிக் கூண்டிலேற்றி விசாரிக்கப்பட வேண்டியவனை, நாசி இட்லரைவிட கொடூரமானவனை, தமிழர் தாயகத்தை ஒருபோதும் அமைய விடமாட்டேன் எனக் கொக்கரிக்கும் எதிரி இராசபக்சேயோடு எந்த வெட்கமோ துக்கமோ இல்லாது கூட்டணி வைத்திருக்கும் டக்லஸ் தேவானந்தாவின் கோர முகத்திரையை கிழித்தெறிய மக்கள் முன்வரவேண்டும். இந்தத் தேர்தல் எதிரிகளையும் துரோகிகளையும் தோற்கடித்து அவர்களுக்கு மறக்க முடியாத பாடத்தைப் படிப்பித்துக் கொடுக்கத் தமிழ் மக்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பை அளித்துள்ளது.
சிங்களப் படையினரின் கொலை வெறிக்குத் தப்பி ஓடிய 85 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 2,63,000 ஆயிரம் மக்கள் தங்கள் சொந்த மண்ணிலேயே நாசி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு போதிய உணவு, மருந்து, தண்ணீர் இல்லாது ஆடு மாடுகள் போல் முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் சிறை வைக்கப்பட்டுள்ளார்கள். அவ்வாறே யாழ்ப்பாணத்தில் 12 முகாம்களில் 11,064 பேரும் திருகோணமலையில் 2 முகாம்களில் 6,642 பேரும் மன்னாரில் 3 முகாம்களில் 845 பேரும் ஆண்டுக் கணக்காக அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
ஆளும் கட்சி பிரமுகர்களுக்கும் அரச ஊடகங்களுக்கும் ‘இந்து’ இராம் போன்ற தமிழின எதிரிகளுக்கும் இந்த நாசி முகாம்களுக்குச் சென்றுவர அனுமதியளிக்கும் அரசு, உதவி வழங்கும் பன்னாhட்டு அமைப்புக்களையோ எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையோ முகாம்களுக்கு செல்ல அனுமதி மறுத்துள்ளது. இந்த முகாம்களில் உள்ள மக்கள் உறவினர்களிடம் பேசுவதற்குக் கூட அரசு அனுமதி மறுத்துள்ளது. விதி விலக்காக ஆட்சியாளர்களின் காலில் விழுந்து எழும்பும் சிவநாதன் கிஷோருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கிஷோரைப் பின்பற்றி ஸ்ரீகாந்தாவும் இராசபக்சேயின் காலில் விழச் சம்மதித்துவிட்டார். அதற்கு முன்னோடியாக இராசபச்சேயோடு விருந்துண்டு மகிழ்ந்துள்ளார்.
1995 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணக் குடாநாட்டை சிங்களப் படை வல்வளைப்புச் செய்த பின்னர் கடந்த 14 ஆண்டுகளாக யாழ்ப்பாணக் குடாநாடு 40,000 சிங்களப் படைகளின் இராணுவ அடக்குமுறைக்கு ஒரு திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. அங்கு 15 பேருக்கு ஒரு இராணுத்தினன் நிறுத்தப்பட்டுள்ளான். அப்படி இருந்தும் அங்கு ஆள்க் கடத்தல், கொலை, கொள்ளை, கப்பம், கைது, சிறைவைத்தல் எனபவற்றைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. காரணம் சிங்கள இராணுவமும் அதனோடு சேர்ந்து இயங்கும் ஒட்டுக் குழுக்களுமே இந்த அரச பயங்கரவாதத்தை அரங்கேற்றுகின்றன.
கடந்த 3 ஆண்டுகளில் 11 ஊடகவியலாளர்கள் கொல்லப்ட்டுள்ளார்கள். இதில் 9 பேர் தமிழர்கள். இரண்டு பேர் சிங்களவர்கள்.
பிபிசி செய்தியாளர் மயில்வாகனம் விமலராசன் ஒக்தோபர் 19, 2000 அன்று யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு வலயத்திற்குள் இருந்த அவரது வீட்டில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக இபிடிபி கட்சியைச் சேர்ந்த நெப்போலியன் என்று அழைக்கப்படும் கைது செய்யப்பட்டான். பின்னர் அவன் நாட்டை விட்டுப் பிரித்தானியாவுக்கு ஓடித் தப்பிவிட்டான்.
மே 02, 2008 இல் உதயன் நாளேட்டின் அலுவலகத்துக்குள் ரி-56 துப்பாக்கியோடு உட்புகுந்த ஒட்டுக்குழுவைச் சேர்ந்த 5 ஆயுததாரிகள் பஸ்தியான் யோர்ஜ் சகாயதாஸ் என அழைக்கப்படும் சுரேஷ் மற்றும் வழங்கல் பிரிவின் பொறுப்பாளர் உதயகுமார் ஆகியோரைச் சுட்டுக் கொன்றார்கள். இதே போல் யூலை 27, 2006 அன்று மனோஜன்ராஜ் எனப்படும் தினக்குரல் செய்தித்தாளின் வழங்கலாளர் அச்சுவேலியில் கண்ணிவெடியில் கொல்லப்பட்டார். ஓகஸ்ட்த் 21, 2006 இல் நமது ஈழநாடு குழுமத்தின் முகாமை இயக்குநர் சின்னத்தம்பி சிவமாகாராசா (68) தெல்லிப்பளையில் வைத்துக் கொலை செய்யப்பட்டார். ஏப்ரில் 16, 2007 இல் உதயன் நாளேட்டின் நிருபர் செல்வராசா இராஜிவர்மன் யாழ்ப்பாணத்தில் வைத்துச் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
நாடு முழுதும் ஆயிரக் கணக்கான இளைஞர்கள் கைது செய்யப்பட்டு தெனிலங்கை தடுப்பு முகாம்களிலும் சிறைச் சாலைகளிலும் ஆண்டுக்கணக்காக சிறை வைக்கப்பட்டுள்ளார்கள். சிலர் 13 ஆண்டுளுக்கு மேலாக எந்தவித நீதி விசாரணையும் இன்றி சிறை வைக்கப் பட்டுள்ளார்கள்.
யாழ்ப்பாணத்தில் மக்களது நடமாடும் சுதந்திரம் ஊரடங்கச் சட்டத்தின் கீழ் கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. மீனவர்கள், கமக்காரர்கள் போன்றோரது வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டுள்ளது. உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் தமிழர்கள் அவர்களது வீடு வாசல்கள், தோட்டம் துரவுகளில் இருந்து சிங்கள – பவுத்த வெறிபிடித்த அரசினால் விரட்டி அடிக்கப்பட்டுள்ளார்கள்.
சிங்களப் படையினரும், காவல்துறையினரும் இணைந்து சிறிலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கும் பக்கச்சார்பாக செயற்படுவதாக, யாழ்ப்பாண மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடுகின்ற அரசியல் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் குற்றம் சுமத்தியுள்ளன.
யாழ் நகரில் தமிழரசுக் கட்சி வேட்பாளர் தாக்கப்பட்டுள்ளார். அவரிடம் இருந்த துண்டு வெளியீடுகள், சுவரொட்டிகள் என்பனவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகள் இரண்டின் அலுவலகங்கள் இரவோடிரவாக தாக்கப்பட்டதுடன் கட்சி கொடிகளும் அறுத்து எறியப்பட்டுள்ளதுடன் சுவரொட்டிகளும் அகற்றப்பட்டுள்ளன.
படையினரும் காவல்துறையினரும் இணைந்து அரசாங்க கட்சி வேட்பாளர்களின் பரப்புரைச் சுவரொட்டிகளை ஒட்டிவருவதுடன், துண்டுப்பிரசுரங்களை வழங்கி வருகின்றனர். காவல்துறை உயர் அதிகாரிகள் போட்டியிடும் கட்சிகளின் சுவரொட்டிகளை அகற்றுமாறு உத்தரவிட்டாலும் தமிழ் அரசு கட்சிகளின் சுவரொட்டிகளை மாத்திரம் அகற்றிவிட்டு ஆளும் கட்சியின் சுவரொட்டிகளை காவல்துறையும் படையினரும் விட்டுவைத்துள்ளனர்.
யாழ்ப்பாணம், வவுனியா இரண்டுக்கும் ஆன தேர்தலில் அரச வளங்கள் பயன்படுத்தப் படுவதாகவும் யாழ்ப்பாணம், வவுனியாவில் சட்டவிரோதமான ஆயுதக்குழுக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் இதனால், வேட்பாளர்கள் தங்களின் சுதந்திரமான பரப்புரை நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாதுள்ளதாகவும் எனவே, நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்தவேண்டுமென்றால் இவ்வாறான சட்டவிரோத ஆயுதக்குழுக்களின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அய்க்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கவை நேரில் சந்தித்துக் கேட்டுள்ளார்.
இவை தெற்கிலும் கிழக்கிலும் நடந்த தேர்தல்களில் ஆளும் கட்சி செய்த தேர்தல் தில்லுமுல்லுகள் வடக்கிலும் அரங்கேற இருப்பதற்குக் கட்டியம் கூறுகின்றன.
மேலும் போர் முடிந்தாலும் இலங்கை முழுதும் தமிழர்கள் தொடர்ந்து கேட்டுக் கேள்வியின்றிக் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளில் அடைக்கப்படுகிறார்கள். வன்னிமண்ணில் கடைசிவரை இருந்து மக்களுக்கு மருத்துவம் செய்த 5 தமிழ் மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
வன்னியில் மக்களோடு மக்களாக இருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய இராசபக்சேயின் உத்தரவின்படி கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு மகிந்தா இராசபக்சே அரசு அளிக்கும் ‘மரியாதை’ இதுவாகும்.
பத்தாயிரம் முன்னாள் போராளிகள், தமிழர் புனர்வாழ்வுக் கழகத் தொண்டர்கள் கைது செய்யப்பட்டு சிங்களப் பகுதிகளில் உள்ள இரகசிய முகாம்களில் அடைக்கப் பட்டுள்ளார்கள்.
வெளிநாடுகளில் இருந்து ஸ்ரீலங்கா செல்லும் புலம்பெயர் தமிழர்கள் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டு 4 ஆவது மாடியில் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அவர்களிடம் இருந்த இலட்சக் கணக்கில் பணத்தைக் கறந்து கொண்டு அவர்கள் விடுவிக்கப் படுகிறார்கள்.
மொத்தத்தில் தமிழர்கள் மிகவும் கேவலமான முறையில் திமிர் பிடித்த சிங்கள – பௌத்த பேரினவாத அரசினால் நடத்தப்படுகிறார்கள். அவர்களது அடிப்படை உரிமைகள் காலில் போட்டு மிதிக்கப்படுகின்றன.
இந்த அழகில் மகிந்த இராசபக்சேயின் அய்க்கிய மக்கள் சுதந்திர கூட்டணி இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறது. இந்தக் கூட்டணியோடு சிங்களவர்கள் வீசும் அமைச்சர் பதவி என்னும் எலும்புத்துண்டை சுவைத்துக்கொண்டு அவர்கள் காலால் இட்ட வேலையைத் தலையால் செய்வதே பிறவி எடுத்ததன் பயன் என நடந்து கொள்ளும் டக்லஸ் தேவானந்தாவின் இபிடிபி கட்சி வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுகிறது.
மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என வீரம் பேசிய தேவானந்தா இப்போது வீரத்தைத் தேர்தலில் களத்தில் போட்டுவிட்டார். தமிழினப் படுகொலையைக் கச்சிதமாக நடத்தி முடித்த கடைந்தெடுத்த ஒரு சிங்கள – பவுத்த பேரினவாதக் கட்சியோடு தனது சுய அடையாளத்தைக் கைவிட்டு வெட்கமோ துக்கமோ இன்றித் தேர்தல் கூட்டு வைத்துள்ளார். நக்குகிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கம் என்பது பழமொழி. இந்தப் பழமொழிக்கு தேவானந்தா இலக்கணமாகத் திகழ்கிறார்.
பாவம் டக்லஸ் தேவானந்தா வெகு விரைவில் இபிடிபியைக் கலைத்துவிட்டு அய்க்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் கருணா போல் சங்கமாகப் போகிறார். காரணம் “ஈழம் என்ற சொல் எனக்குப் பிடிக்காது அதனை இனி அனுமதிக்கவும் முடியாது” எனப் படியளக்கும் எசமானர் வெட்டொன்று துண்டிரண்டாகச் சொல்லிவிட்டார். பிச்சைக்காரர்கள் எதையும் தேர்ந்தெடுக்க முடியாது (Beggars cannot be choosers) என்பார்கள். அரசியல் கொத்தடிமைகளும் அப்படித்தான்.
தனிமனித கட்சி நடத்தும் ஆனந்தசங்கரியாரும் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார். இவர் தேவானந்தாவுக்கு சற்றும் இளைத்தவர் அல்ல. போர்க் காலத்தில் மகிந்த இராசபக்சேக்கு சாமரம் வீசியவர். அவரைத் தட்டிக் கொடுத்து போற்றி பாடியவர். வி.புலிகளுக்கு எதிரான போருக்கும் தமிழ் மக்கள் மீது மகிந்த இராசபக்சே நடத்திய இனப் படுகொலைக்கும் அதனால் ஏற்பட்ட அவலத்துக்கும் பச்சைக் கொடி காட்டியவர். தேசியத் தலைவரை கொன்று அவரது உடலைத் தெருத்தெருவாக இழுத்துவர வேண்டும் என்று சூளுரைத்த அரசியல் குட்டநோயாளி (political leper) .
சந்தடி சாக்கடியில் மகிந்த இராசபக்சேயின் அரசு போலவே போர் வெற்றியை வெடிகொளுத்திக் கொண்டாடிய அய்க்கிய தேசியக் கட்சியும் தமிழர்கள் மடையர்கள் என்ற எண்ணத்தில் தேர்தலில் குதித்துள்ளது.
தமிழர்களின் குருதி நனைந்த கையோடு ஆளும் கட்சி அமைச்சர்கள் யாழ்ப்பாணத்துக்குப் படையெடுத்த வண்ணம் உள்ளார்கள். மீன்பிடி தடை நீக்கம், ஏ9 பாதை திறப்பு, பட்டதாரி ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பு என வாக்கு வேட்டைக்காகப் பல்வேறு வாக்குறுதிகள் வாரி இறைக்கப்படுகின்றன.
யாழ். மாநகர சபைக்கு 1998 ஆம் ஆண்டு இறுதியாகத் தேர்தல் நடைபெற்றது. இப்போது 11 ஆண்டுகள் கழித்து மக்கள் இன்னொரு தேர்தலைச் சந்திக்கிறார்கள்.
யாழ்ப்பாண மாநகர சபைத் தேர்தலில் 100,417 வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். ஆனால் இவர்களில் 40 விழுக்காட்டினர் வவுனியா தடுப்பு முகாம்களில் அல்லது புலம்பெயர் நாடுகளில் வாழ்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாண மாநகர சபைக்கு 23 அங்கத்தவர்களைத் தெரிவு செய்வதற்கு 67 வக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. நான்கு அரசியல் கட்சிகள் மற்றும் 2 சுயேட்சைக் குழுக்களைச் சேர்ந்த 174 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதேவேளை, புத்தளம், வவுனியா, அனுராதபுரம் மற்றும் கொழும்பு மாவட்டங்களிலுள்ள இடம்பெயர்ந்த வாக்காளர்கள் வாக்களிக்கும் முகமாக கொத்தணி வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புத்தளத்தில் மட்டும் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் 7,000 பேர் இருக்கின்றனர். இந்த 7000 வாக்குகள் தேர்தல் பெறுபேறுகளில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியவை ஆகும்.
இதேவேளை வவுனியா நகர சபைத் தேர்தலில் 24,626 வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இந்த நகர சபைக்கு 12 உறுப்பினர்களைத் தெரிவு செய்யப்படுவர். அதற்காக 18 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆறு அரசியல் கட்சிகளும் 3 சுயேட்சைக் குழுக்களையும் சார்ந்த 135 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். வவுனியா மாநகர சபைக்கு 2000 ஆம் ஆண்டு இறுதியாகத் தேர்தல் நடைபெற்றது.
ஒரே பார்வையில யாழ்ப்பாணம், வவுனியா தேர்தல் களம்
சபை | வாக்காளர் எண்ணிக்கை | வாக்குச் சாவடி | உறுப்பினர் | கட்சி | சுயேட்சை | வேட்பாளர் |
யாழ்ப்பாணம் | 100,447 | 97 | 23 | 4 | 2 | 174 |
வவுனியா | 125,043 | 85 | 34 | 10 | 5 | 309 |
மேலே கூறியவாறு யாழ்ப்பாண மாநகர சபை மற்றும் வவுனியா நகரசபை வாழ் தமி;ழ் வாக்காளர்களுக்கு தமிழினத்தின் விடுதலை வேட்கையை வெளிப்படுத்தவும் எதிரிகளுக்கும் துரோகிகளுக்குப் பாடம் படிப்பிக்கவும் ஒரு அரிய வாய்ப்புக் கிடைத்துள்ளது.
ஒரு சுதந்திரமான தேர்தல் நடைபெறுவதற்கு வாய்ப்பில்லாது சிங்கள இராணுவத்தினதும் அதன் கூலிப்படையான இபிடிபி யின் துப்பாக்கிககளின் முனையில் தேர்தல் நடைபெற்றாலும் அடக்குமுறைக்கு அடிபணியாது ஒடுக்குமுறைக்குத் தலைகுனியாது தன்மானத்தை விலைபேசாது துணிச்சலோடு மக்கள் தமிழின எதிரிகளையும் துரோகிகளையும் இத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும். குறிப்பாக இபிடிபி மகிந்த இராசபக்சேயின் அய்க்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி இரண்டையும் தோற்கடித்து தமிழின எதிரிகளுக்குத் தக்க பாடம் படிப்பிக்க வேண்டும்.
தமிழரின் அடிப்படை கோரிக்கைகளான தமிழர் தேசியம், தமிழர் தாயகம், தமிழரின் தன்னாட்சி உரிமை ஆகியவற்றை மகிந்த இராசபக்சே புறந்தள்ளியுள்ளார். ஒற்றை ஆட்சி யாப்பில் மாற்றம் இல்லை, எந்தத் தீர்வென்றாலும் அது 13 ஆவது சட்ட திருத்தத்துக்கு உட்பட்டதாகவே இருக்கும் என இராசபக்சே மார்தட்டுகிறார். அந்தத் தீர்வும் 2010 இல் நடைபெற இருக்கும் ஆட்சித்தலைவர் தேர்தலுக்குப் பின்னர்தான் என்றும் சொல்லிவிட்டார்.
எனவே ஓகஸ்ட் 8 ஆம் நாள் நடைபெற இருக்கும் தேர்தலில் தமிழரசுக் கட்சி (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களை வெற்றியடையச் செய்வதன் மூலம் தமிழ் மக்கள் தங்கள் வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என எமது உறவுகளைக் கேட்டுக்கொள்கிறோம். (Ulagathamilar -July 24,2009)
சீனாவின் பிடிக்குள் சிக்கித் தவிக்கும் உய்க்குர் மக்கள்!
ஜி8 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இத்தாலி நாட்டுக்குப் பயணம் செய்திருந்த சீனாவின் ஆட்சித்தலைவர் கு ஜிந்தாவோ (Hu Gintao) தனது பயணத்தை அவசர அவசரமாக முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளார்.
உலகத் தலைவர்களின் ஒரு முக்கிய மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற சீனாவின் ஆட்சித்தலைவர் தனது பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு அவசர அவசரமாக ஏன் நாடு திரும்ப வேண்டும்?
சீனாவின் வடமேற்கு தன்னாட்சி மாகாணமான சிங்ஜியாங் மாகாணத்தின் (Xinjiang Province) தலைநகர் உரும்கியில் (Urumqi) கடந்த 5 ஆம் நாள் அங்கு வாழும் சிறுபான்மை முஸ்லிம் இனத்தவரான உய்க்குர் மக்களுக்கும் (Uighur Muslims) ஹன் இன சீனர்களுக்கும் இடையில் வன்முறைகள் வெடித்தன. இந்த மோதலில் பொல்லுகள், கத்திகள், கம்புகள், உருக்குக் குழாய்கள் தாங்கிய 2000 – 3000 உய்க்குர் – சீனர்கள் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொண்டார்கள். 156 பேர் கொல்லப்பட்டனர். 816 பேர் காயப்பட்டனர். காவல்துறை அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டார்.
பெரும்பான்மை சீனக் கலகக்காரர்களால் சிறுபான்மை முஸ்லிம்களுக்குச் சொந்தமான 203 கடைகள் தீயிடப்பட்டன. 300 க்கும் அதிகமான வண்டிகள் எரியூட்டப்பட்டன. 14 வீடுகளும் சேதப்படுத்தப்பட்டன. தீக்கிரையாக்கப்பட்ட பல்வகை கட்டிடங்களின் நிலப்பரப்பு 56 ஆயிரம் சதுர மீட்டரை எட்டியது. காவல்துறையினர் 1,434 பேரை அய்யத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.
கலகக்காரர்களைக் கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர்.
இரவு நேர ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
இனக் கலவரம் நடந்த மறுநாள் திங்கட்கிழமை (யூன் 06) உள்ளூர் போக்குவரத்தும் சமூக ஒழுங்கும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன என செய்திகள் தெரிவிக்கின்றன.
கலவரத்தை அடக்க சீன அரசு தலைநகர் உரும்கிக்கு பல்லாயிரக்கணக்கான படையினரை அனுப்பி வைத்தது. இரு சாராருக்கும் இடையில் மீண்டும் வன்முறைகள் வெடிப்பதைத் தடுக்கப் படையினர் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
சிங்ஜியாங் மாகாணம் எண்ணெய், இயற்கை வாயு மற்றும் இரும்பு, நிலக்கரி, ஈயம் முதலிய கனிவளங்கள் கொண்டது. எண்ணெய் மட்டும் அண்ணளவாக 20,000 – 40,000 மில்லியன் தொன் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
சோவியத் நாட்டில் இருந்த பல நாடுகள் பிரிந்து போனது போல உய்க்குர் மக்களும் பிரிந்து தனிநாடு அமைப்பதைத் தடுப்பதில் சீனா அக்கறை காட்டிவருகிறது.
சிங்ஜியாங் மாகாணத்தின் எல்லைகள் வடக்கே மொங்கோலியா, தெற்கே திபெத், மேற்கே பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகள் ஆகியவற்றோடு இருக்கின்றன. இந்த மாகாணத்தில் பெரும்பகுதி வனாந்திரமாக இருந்தாலும் இங்கே 320 ஆறுகள், 100 ஏரிகள், பத்தாயிரத்துக்கும் அதிகமான பனிப்பாறைகள் (glaciers) காணப்படுகின்றன.
சிங்ஜியாங் மாகாணம் திபெத் மாதிரி தனிநாடு கோரிப் போராட்டம் நடைபெறும் மாநிலம் ஆகும். அங்கு முஸ்லிம்கள் அதிகம் வாழ்கிறார்கள். அவர்கள் மத அடிப்படையிலும் இன அடிப்படையிலும் பெரும்பான்மை சீனர்களிடம் இருந்து வேறுபட்டவர்கள் ஆவார். பெரும்பான்மை உய்க்குர் மக்கள் சிங்ஜியாங்கை கிழக்கு துருக்கிஸ்தான் என்றே அழைக்கின்றனர்.
சிங்ஜியாங் மாகாணம் துருக்கி மன்னர்களினதும் அரபியர்களுடய ஆட்சிக்குள்ளும் இருந்துள்ளது. 1757-59 காலப்பகுதியில் மன்சுஸ் (Manchus) படையெடுப்பின் போது சீனாவிடம் அது விழுந்தது. இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து ஏற்பட்ட காலனித்துவ ஆட்சிமுறை மாற்றங்களுடன் 1949 இல் பீஜிங் (Beijing) சிங்ஜியாங் மீதான கட்டுப்பாட்டை இழந்தது. இச்சூழலில் ஏறக்குறையப் பத்து ஆண்டுகளாக ஓரு தனி நாடாக இருந்து வந்த சிங்ஜியாங் மாகாணம் 1960 இல் சீனாவின் பிடிக்குள் மீண்டும் சிக்கிக் கொண்டது. அதன் பின்னர் அங்கு பொருளாதார மேம்பாடு என்ற போர்வையில் ஹன் சீனர்களைக் குடியமர்த்தத் தொடங்கிய சீனா அந்த மாகாணத்தின் இன அடிப்படையிலான மக்கள் தொகை விழுக்காட்டை தலைகீழாக மாற்றிவிடடது.
இந்த இனக்கலவரம் Shaoguan என்ற நகரில் உள்ள பொம்மை தயாரிப்பு தொழிற்சாலையிலேயே தொடங்கியது. பின்னர் கலவரம் தலைநகர் உரும்கிக்குப் பரவியது. வேலை இழந்த ஹன் சீனர் ஒருவர் தனது இணையதளத்தில் ஹன் இனச் சீன இளம் பெண்களை உய்க்குர் இனத்தவர்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினார்கள் என்பதே கலவரம் வெடிப்பதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.
வேறு செய்திகள் கடந்த யூன் மாதம் Shaoguan என்ற நகரில் உள்ள பொம்மை தயாரிப்பு தொழிற்சாலையில் தொழிலாளர் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் அந்த நிகழ்வை அரசு கையாண்டவிதத்தை எதிர்த்து கடந்த ஞாயிற்றுக்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்த போது தான் சீனர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே மோதல் வெடித்தது என்கின்றன.
எவ்வித வன்முறைகளும் இல்லாது அமைதியாகவே கவனயீர்ப்பு போராட்டத்தினைத் தாம் முன்னெடுத்ததாகவும் சீன அதிரடிப்படையே தம்மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியதாகவும் உய்க்குர் இனத்தவர் தெரிவிக்கின்றனர்.
இக்கலவரத்தைச் சுட்டிக்காட்டிப் பெருந்தொகையான உய்க்குர் இன முஸ்லீம்களை சீனா கொன்று குவித்துள்ளதாகவும் இதனை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கேட்டு வோஷிங்டனை தலைமையகமாகக் கொண்ட உலக உய்க்குர் பேரவை (World Uighur Congress) யின் துணைத் தலைவர் அலிம் செய்டொப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆனால் முஸ்லிம் இனத்தவரான உய்க்குர்களுக்கும் ஹன் இன சீனர்களுக்கும் இடையில் கடந்த காலத்திலும் கலவரங்கள் வெடித்துள்ளன. உய்க்குர்களில் ஒரு சாரார் தனிநாடு கேட்டுப் போராடி வருகிறார்கள். தாங்கள் பெரும்பான்மை ஹன் சீனர்களால் அடக்கி ஒடுக்கப்படுவதாக இவர்கள் முறையிடுகிறார்கள்.
சீனா ஒரு பொதுவுடமை நாடு. பொதுவுடமை நாடுகளில் இனமோதலுக்கு இடம் இல்லை என்றுதான் எல்லோரும் எதிர்பார்ப்பார்கள். ஆனால் மண்ணாசை என்று வரும் போது இந்தக் காலத்துப் பொதுவுடமைவாதிகளுக்கும் பழங்காலத்து மன்னர்களுக்கும் வேற்றுமையே இல்லை. இருசாராரும் ஒரே மாதிரி நடந்து கொள்கிறார்கள்.
“உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் – நீங்கள் இழப்பதற்கு உங்கள் அடிமைச் சங்கிலியை விட வேறொன்றும் இல்லை” (Workers of the world unite you have nothing to lose except your chains) என்ற முழக்கம் 1848 ஆம் ஆண்டு Karl Marx மற்றும் Fredrick Engels இருவராலும் தயாரிக்கப்பட்ட பொதுவுடமை அறிக்கையில் இடம்பெற்றிருந்தது. உண்மையில் இந்த அறிக்கையை காரல் மார்க்ஸ் தனது கைப்பட எழுதியிருந்தார். அதனை பிரட்ரிக் ஈன்ஜல்ஸ் சரிபார்த்துத் திருத்தியிருந்தார். இந்த முழக்கமே சோவியத் நாட்டின் அரச முழக்கமாக (Пролетарии всех стран соединяйтесь!) இருந்தது. நாணயத்தில் கூட அது அச்சடிக்கப்பட்டது. மார்க்சின் கல்லறையில் இது எழுதப்பட்டுள்ளது. இன்று இந்த அறிக்கை கனவாய் பழங்கதையாய் போய்விட்டது என்பது வேறு கதை.
அன்றும் சரி இன்றும் சரி உலகில் நடக்கிற போர்களுக்கு நிலத்தைப் பிடிக்கும் ஆசைதான் முக்கிய காரணம். அடுத்து சமயம் ஒரு காரணமாக இருந்து வந்துள்ளது.
வேலிக்கு ஓணான் சாட்சி என்பது போல உருசியா சிங்ஜியாங் தன்னாட்சி மாகாணம் சீனாவின் பிரிக்க முடியாத நிலப் பகுதி என்றும் அங்கே பிரிவினைவாதிகளுக்கு இடம் இல்லையென்றும் அங்கு நடந்த கலவரம் முற்றிலும் அந்த நாட்டின் உள்நாட்டு விவகாரம் என்றும் உருசிய வெளியுறவு அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் “உரும்கியில் நடந்த கலவரத்தில் ஈடுபட்டிருந்த சிலருக்கு அல்கைதாவுடனும் பிற வெளிநாட்டு ஆயுதக் குழுக்களுடனும் தொடர்பு இருப்பதற்கு தமக்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக” சீனாவின் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. அனால் அதற்கான சான்றுகளை அமைச்சகம் சார்பாகப் பேசியவர் வெளியிடவில்லை. சீனாவின் சமூக இறுக்கப்பாடு குலையாமல் பாதுகாக்கும் அரசின் முயற்சிகளுக்கு அனைத்துலக சமூகம் ஆதரவளிக்கும் என்று தான் நம்புவதாக அவர் கூறினார்.
கலகக்காரர்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்திய சீன அரசு செய்தித் தணிக்கையை நடைமுறைப்படுத்தியுள்ளது. ஆனால் செய்திகள் மின்னஞ்சல் வழியாகவும் இணையதளங்கள் மற்றும் வலைப்பூக்கள் மூலமாகவும் வெளியுலகுக்குக் கசிவதை சீனாவால் தடுக்க முடியவில்லை.
கடந்த ஏப்ரில் – மே மாதங்களில் திபேத்தில் சீனாவுக்கு எதிராகக் கலவரம் வெடித்தது நினைவிருக்கலாம். அப்போதும் சீனா கலவரத்துக்கு வெளிநாட்டு சக்திகளே காரணம் எனக் குற்றம் சாட்டியது.
இந்தக் கலவரத்துக்குப் பிரிவினைவாத அமைப்பான உலக உய்க்குர் காங்கிரஸ் தலைவர் ரெபியா காதர் (Rebiya Kadeer) தான் சூத்திரதாரி எனச் சீனா குற்றஞ்சாட்டியுள்ளது. காதர் இப்போது அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார். தொடக்க கட்ட ஆய்வில் இந்தக் கலவரத்தை காதர் தான் தூண்டிவிட்டதாக தெரியவந்து உள்ளது என்று சிங்ஜியாங் காவல்துறை கூறுகிறது.
“இந்த அமைப்பு, மனித உரிமை மற்றும் மக்களாட்சிமுறைமையைப் பயன்படுத்தி, பயங்கரவாதத்தை மூடிமறைத்து, பன்னாட்டுச் சமூகத்தை ஏமாற்றுகின்றது. இந்த வன்முறை சம்பவத்தின் மூலம், இவ்வமைப்பின் மனித உரிமை மற்றும் அமைதி எனக் கூறப்படும் உண்மைத் தன்மை, வெளிப்படுத்தப்பட்டது” என்று சீன சமூக அறிவியல் கழகத்தின் எல்லைப் பகுதி ஆய்வு மையத்தின் துணை ஆய்வாளர் செய்தியாளருக்கு செவ்வியளித்த போது தெரிவித்தார்.
ஆனால் உய்க்குர் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் தில்ஷத் ரஷித் சுவீடன் நாட்டில் இருந்து தொலைபேசி மூலம் அளித்த செவ்வியில் “இந்தக் கலவரத்தை தூண்டிவிட்டதாக தேவையில்லாது எங்கள் மீது பழி போடுகிறார்கள். இன அடிப்படையில் காட்டப்படும் பாபாடும் இன ஒடுக்குமுறையும் தான் கலவரத்துக்குக் காரணம் ஆகும்” என்று கூறியுள்ளார்.
இதே உய்க்குர் இனத்தைச் சேர்ந்த 13 பேர் ஆப்கனிஸ்தானில் கைது செய்யப்பட்டு குவந்தமானா வளைகுடா முகாமில் அமெரிக்காவால் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். இவர்களில் 9 பேர் பலோ (Paluo) என்ற தீவுக்கும் 4 பேர் பெர்முடாவுக்கும் (Burmuda) அனுப்பி வைக்கப்பட்டார்கள். பலோ தீவு சீனாவுக்குப் பதில் தைவானை அங்கீகரித்துள்ளது.
சீனாவில் 35 மில்லியன் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். முழசீனாவிலும் 55 க்கும் அதிகமான சிறுபான்மை இனத்தவர்கள் வாழ்கிறார்கள். இவர்கள் மொத்த மக்கள் தொகையில் 10 விழுக்காட்டினர் ஆவர். சிங்ஜியாங் மாகாணத்தில் மட்டும் 90 இலட்சம் உய்க்குர்கள் வாழ்கிறார்கள். அவர்களது அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் அவர்களை அரசு அடக்கி ஒடுக்கி வைத்துள்ளது.
உய்க்கர்களின் போராட்டம் பயங்கரவாதம் என்று சீனர்கள் முத்திரை குத்தினாலும் உலக உய்க்குர் பேரவையைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவின் செல்லப்பிள்ளையாக இருந்து வருகிறார்கள்.
நீலநிறக் கண்களும் மண்நிற முடியும் உடைய உய்க்குர் மக்கள் துருக்கி நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். ஆனால் இன்று இவர்களைவிட ஹன் சீனர்கள் அங்கு பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். குறிப்பாக தலைநகர் உரும்கியில் வாழும் 22 இலட்சம் மக்களில் பெரும்பான்மையினர் ஹன் சீனர்கள்தான். இரு இனத்தவர்களுக்கும் இடையில் பகைமையும் அவநம்பிக்கையும் நிலவுகிறது. இதன் காரணமாக தலைநகர் உரும்கியில் எப்போதும் இராணுவ ஆட்சி தான் நடைமுறையில் உள்ளது.
இந்த இனக் கலவரம் சீனாவின் முகத்தில் கரியைப் பூசியுள்ளது. சீனப் பொதுவுடமைக் கட்சியின் பல இலக்குகளில் சமூக இணக்கம் (“Harmonious Society”) முக்கியமானது. அந்த இலக்கு வெகு தூரத்தில் உள்ளது என்பதை இந்த இனக்கலவரம் எடுத்துக் காட்டிவிட்டது. அது மட்டுமல்லாமல் சீனா தனது 60 ஆண்டு பொதுவுடமை ஆட்சியைக் கொண்டாடும் வேளை பார்த்து இந்தக் இனக் கலவரம் இடம்பெற்றிருப்பது சீனாவுக்கு உலக அரங்கில் பெரிய சங்கடத்தையும் தலைக்குனிவையும் ஏற்படுத்தியுள்ளன.
இன்றைய உலக ஒழுங்கில் அடக்கி ஆளும் பெரும்பான்மை தேசிய இனங்களின் பிடியிலிருந்து சிறுபான்மை தேசிய இனங்கள் பிரிந்து போவதை சீனா, உருசியா, இந்தியா, பாகிஸ்தான், சுடான், துருக்கி, இராக், யோர்ஜியா, ஸ்ரீலங்கா போன்ற நாடுகள் தீவிராமாக எதிர்க்கின்றன.
சீனாவைப் போலவே இந்தியாவில் கஷ்மீர், அசாம், நாகலாந்து மக்களின் தனிநாட்டுக் கோரிக்கை படைபலம் கொண்டு அடக்கப்படுகிறது. பாகிஸ்தானில் பலுச்சிஸ்தான் மக்களின் தனிநாட்டுக் கோரிக்கை ஆயுதமுனையில் ஒடுக்கப்படுகிறது. உருசியாவில் செச்சீனியா மக்களின் தனிநாட்டுக் கோரிக்கை படைபலம் கொண்டு நசுக்கப்படுகிறது.
அய்யன்னாவைப் பொறுத்தளவில் இறைமையுள்ள நாடுகளின் உள் விவகாரங்களில் அது தலையிடாது – தலையிடக் கூடாது என்ற கோட்பாடு விதியாகவுள்ளது.
இதனால் உலகளாவிய அளவில் சுதந்திரத்துக்காகப் போராடும் சிறுபான்மை தேசிய இனங்கள் பெரும்பான்மை தேசிய இனங்களின் அடக்குமுறைக்கு தொடர்ந்து ஆளாகி வருகின்றன.
சிங்ஜியாங் மாகாணத்தில் இடம்பெற்ற இனக் கலவரமும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற உய்க்குர் மக்களின் உயிர் உடமை அழிவுகளும் இந்த உண்மையையே எடுத்துக் காட்டுகின்றது. (உலகத்தமிழர் – யூலை 03,2009)
கிறீன்லாந்தின் சுதந்திரம் சிறிய தேசிய இனங்களுக்குப் பெரிய நம்பிக்கை கொடுப்பதாக உள்ளது!
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே!
யார் இப்படிப் பள்ளுப்பாடுவது? ஏலவே அய்யன்னா அவையில் 193 நாடுகள் இருக்கின்றன. மேலும் ஒரு நாடா?
ஆமாம். மேலும் ஒரு நாடு சுதந்திரத்திற்கான பயணத்தில் முதல் அடியை எடுத்து வைத்துள்ளது.
அந்த நாடு நாம் புவியியல் பாடத்தில் படித்த கிறீன்லாந்து தீவு.
கிறீன்லாந்து நாடு பற்றி உங்களுக்கு நிறையத் தெரியும் என நினைக்கிறேன். வட துருவப் பெருங்கடல் – அத்லாந்திப் பெருங்கடல் இந்த இரண்டுக்கும் இடையில் உள்ள கிறீன்லாந்து உலகிலேயே பென்னம் பெரிய தீவு ஆகும்.
எவ்வளவு பெரிதென்று கேட்கிறீர்களா? 2.2 மில்லியன் சதுர கிமீ பரப்பளவு கொண்ட தீவு. 81 விழுக்காடு பனிக்கட்டி உறைந்து கிடக்கும் நிலப்பரவை நீக்கிப் பார்த்தாலும் அதன் நிகர பரப்பளவு 410,000 சதுர கிமீ தேறும்!
அது சரி மக்கள் தொகை எவ்வளவு என்றுதானே கேட்கிறீர்கள்? அப்படிப் பெரிய தொகை இல்லை. வெறுமனே 56,326 மக்கள்தான் வாழ்கிறார்கள். ஆனால் அவர்கள் நூறு விழுக்காடு எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள்.
தீவு பதினெட்டு மாநகரசபைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநகரசபைக்கும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மேயர் தலைமை தாங்குகிறார்.
கிறீன்லாந்து கடுமையான குளிர் நாடு. கோடை காலத்தில் மட்டும் அதன் வெட்பநிலை 10 பாகை செல்சியசை எட்டுகிறது.
கிறீன்லாந்து டென்மார்க், யப்பான், சீனா போன்ற நாடுகளுக்கு மீன், இலால் போன்ற கடலுணவுகளை ஏற்றுமதி செய்கிறது. அதன் மூலம் ஆண்டொன்றுக்கு 480 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருவாயகப் பெற்றுக்கொள்கிறது.
ஒரே பார்வையில் கிறீன்லாந்து:
பெயர் – Naalakkersuisut
துலை நகர் – நூக் (Nuuk)
அரசியல் முறைமை – மன்னரின் ஆட்சிக்கு உட்பட்ட மக்களாட்சி
நாணயம் – Danish Kroen
ஆட்சி மொழி – கிறீன்லாந்த், டனிஷ்
வாணிகத்துக்கான
பங்கு நாடுகள் – டென்மார்க், யப்பான், சுவீடன், நோர்வே
முக்கிய கைத்தொழில்கள் – மீன்பிடி (இறால்), தங்கம், இரும்பு, வைரம், யூரேனியம்
மொத்த உள்ளுர் உற்பத்திப் பெறுமதி – 1.1 பில்லியன் டொலர்கள்
வளர்ச்சி விழுக்காடு – 2 விழுக்காடு
கடந்த செவ்வாய்க்கிழமை (யூன் 23) கிறீன்லாந்து மக்கள் கொலனியல் நாடான டென்மார்க்கின் பிடியில் இருந்து சுதந்திரம் பெறுவதற்கு ஆன நேரடித் தேர்தலில் மக்கள் வாங்களித்தார்கள். இதனைத் தொடர்ந்து முழுச் சுதந்திரத்துக்கான வாயில் இலகுவாக இருக்கும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
தேர்தலில் பெரும்பான்மை மக்கள் (75 விழுக்காடு) சுதந்திரத்துக்கு ஆதரவாக வாக்களித்தார்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் முடிவுகள் வெளிவந்ததை அடுத்து மக்கள் வீதிகளில் வெடிகொளுத்தி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள்.
தேர்தல் முடிவுகளைப் பற்றிக் குறிப்பிட்ட ஹான்ஸ் எனொக்சென் (Hanns Enoksen) உலக அரங்கில் இனுயித் (Inuit) மக்கள் தங்களது மூன்று நூற்றாண்டு அடிமைத்தனத்தை ஒழித்து முழுச் சுதந்திரத்தை அனுபவிக்க வழிவகுக்கும் என்றார்.
கிறீன்லாந்து சுதந்திரம் கொடுப்பதால் டென்மார்க்குக்கு என்ன இலாபம்? “இது பணப் பற்றியது அல்ல. இது கிறீன்லாந்து மக்களின் அரசியல் வேட்கையை – அவர்கள் தங்களது தலைவிதியை தாமே தீர்மானிக்கும் உரிமையைக் கொடுப்பதாகும்” என்கிறார் டென்மார்க் நாட்டின் பிரதமர் Lars Lokke Rasmussen ஒரு செவ்வியில். இந்தப் பெருந்தன்மை அரசியல் முதிர்ச்சி எல்லா அரசியல்வாதிகளுக்கும் வரவேண்டும்.
இன்னுமொரு மாற்றம். கிறீன்லாந்து தீவு என்ற பெயர் மாறப் போகிறது. இனிமேல் Naalakkersuisut என்ற இனுய்ட் மொழியால் வழங்கப்படும். ஒரு பழைய டேனிஷ் ஆவணத்தில் அந்தப் பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததாம்!
இனுயிட் மக்கள் வேறு யாருமில்லை. நாங்கள் புவியியலில் படித்த எஸ்கிமோ மக்கள்தான் இவர்கள். இனுயிட் மக்களுக்கு அய்ரோப்பியர் வைத்த பெயர்தான் எஸ்கிமோ!
வட துருவத்தில் 154,000 இனுிட் மக்கள் வாழ்கிறார்கள். கனடாவில் 45,000 பேர் (0.15 விழுக்காடு) வாழ்கிறார்கள்.
“இன்று தொடக்கம் கிறீன்லாந்துக்கும் டென்மார்க்குக்கும் இடையிலான உறவில் சமத்துவம் நிலவும்” என்கிறார் அதன் புதிய பிரதமர் Kuupik Kleist சுதந்திரத்துக்கான அவசரம் எதற்காக என்று கேட்கிறீர்களா? உலகம் வெட்பமடைந்து வருவதால் கிறீன்லாந்தின் பனிப்பாறைகள் உருகிவருகின்றன. இதனால் நிலத்தின் அடியில் புதையுண்டு கிடக்கும் எண்ணெய் மற்றும் கனிப்பொருட்களைத் தோண்டி எடுக்க வழிபிறக்கும் என கிறீன்லாந்து அரசு நம்புகிறது.
கிறீன்லாந்தின் கடல் எல்லையில் இருந்து 150 கிமீ (100 மைல்) தொலைவில் 1,100 மீட்டருக்குக் (3,630 அடி) கீழ் நிலத்தடியில் எண்ணெய் வளம் இருக்கிறதாம். அளவில் அது வட கடலில் (North Sea) காணப்படும் எண்ணெய் வளக் கையிருப்பை ஒத்ததாக இருக்குமாம்.
எண்ணெயைத் துகழ்ந்து எடுப்பது இலேசுப்பட்ட செயல் இல்லாவிட்டாலும் எண்ணெய் இருக்கும் பட்சத்தில் அது கிறீன்லாந்தின் தலைவிதியையே மாற்றி அமைத்துவிடும் என்கிறார்கள்.
டென்மார்க் 1721 ஆம் ஆண்டு கிறீன்லாந்தைக் கைப்பற்றித் தனது பிடிக்குள் கொண்டுவந்தது. 1979 ஆம் ஆண்டு கிறீன்லாந்துக்கு உள்ளாட்சி (Home Rule) வழங்கப்பட்டாலும் அரசின் தலைவராக டென்மார்க்கின் அரசியார் (Queen Margretha 11) தொடர்ந்து இருந்து வருகிறார்.
செவ்வாய்க்கிழமை நடந்த தேர்தல் காவல்துறை மற்றும் நீதித்துறை இரண்டும் அடுத்த ஆண்டு (2010) யூன் மாதம் தொடக்கம் அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துசேர வழிவகுத்துள்ளது. அது மட்டுமல்ல இனுய்ட் மக்கள் பேசும் இனுய்ட் மொழி நாட்டின் அரசமொழியாக ஆக்கப்படும். மக்களுக்கு பன்னாட்டு மட்டத்தில் சுதந்திரமான மக்கள் என்ற சட்ட பூர்வமான தகைமை கொடுக்கப்படும்.
உள்ளாட்சி உடன்பாட்டின் அடிப்படையில் டென்மார்க் கிறீன்லாந்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் தொடர்பான முடிவுகளை எடுக்கும் போது கிறீன்லாந்து அரசைக் கலந்தாலோசிக்கும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
டென்மார்க் ஆண்டொன்றுக்கு 3.2 பில்லியன் டானிஷ் கிறவுன்ஸ் (Danish crowns) தொகையை மானியமாக கிறீன்லாந்துக்குக் கொடுக்கும். இது 540 மில்லியன் அமெரிக்க டொலருக்குச் சமமாகும். ஆனால் இந்த மானியம் நாளடைவில் குறைக்கப்பட்டு முற்றிலும் இல்லாது செய்யப்படும்.
கிறீன்லாந்து முழுச் சுதந்திர நாடாக திகழும் போது உலகிலேயே மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட அடர்த்தி நாடாகவும் பிரான்ஸ் நாட்டைவிட மூன்று மடங்கு பெரிய நாடாகவும் விளங்கும்.
கிறீன்லாந்து முழுச் சுதந்திர நாடாகத் தோற்றம் பெறுமுன் பல தடைகளைத் தாண்ட வேண்டி வரும். மீன்பிடி ஒன்றே இப்போது வருவாய் உள்ள கைத்தொழிலாக விளங்குகிறது. வேலையில்லாதோர் தொகை அதிகமாக இருக்கிறது. உள்கட்டுமானங்கள் நொடிந்த நிலையில் உள்ளன. கற்பித்தல் முறை நன்றாக இல்லை. உள்ளுர் அரசியல்வாதிகள் பெருமளவு ஊழலிலும் வேண்டப்படுவர்களுக்கும் உறவினர்களுக்கும் பட்டம் பதவி வழங்குவதிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
தீவின் சமூக சிக்கல்களுக்கும் பஞ்சமில்லை. கள் குடிப்பது பரந்துபட்டுக் காணப்படுகிறது. தற்கொலைகளும் மலிந்து காணப்படுகிறது. இந்தக் குறைபாடுகள் கனடாவில் வாழும் தொல்குடி மக்களிடமும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
கிறீன்லாந்து நாட்டின் மீது மற்ற நாடுகளும் ஒரு கண் வைத்துள்ளன. குறிப்பாக அமெரிக்கா கண் வைத்துள்ளது. அமெரிக்கா 1950 முதல் கிறீன்லாந்தின் வட எல்லையில் ஒரு படைத்தளம் வைத்துள்ளது. இந்தப் படைத்தளம் கிறீன்லாந்துக்கு உறுத்தலாக இருந்து வருகிறது. அங்கு வாழ்ந்த மக்கள் ஏற்கனவே வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளார்கள்.
சில ஆண்டுகளுக்கு காலத்துக்கு முன்னர் வெடிக்காத ஒரு நீரகவாயுக் குண்டு காணாமல் போய்விட்டது. இதுவும் மக்களுக்குத் தலையிடியாகவுள்ளது.
இரண்டாவது உலகப் போரின் பின் அமெரிக்கா, டென்மார்க்குக்கு நூறு மில்லியன் அமெரிக்க டொலர் கொடுத்து கிறீன்லாந்தை வாங்க அணியமாக இருந்ததாம்!
கிறீன்லாந்தின் கொடி சிவப்பு – வெள்ளை நிறத்தினால் ஆனது. இது கடல், வானம், ஞாயிறு ஆகியவற்றைக் குறிக்கிறது.
மொத்தத்தில் கிறீன்லாந்தின் சுதந்திரம் சிறிய தேசிய இனங்களுக்குப் பெரிய நம்பிக்கை கொடுப்பதாக உள்ளது! (Ulagaththamilar – June 26,2009)
என்னையே இவ்வாறு நடாத்தியுள்ளார்கள் என்றால்? பொப் றேயின் காலம் கடந்த ஞானம்!
போன மச்சான் திரும்பி வந்தார் பூமணத்தோடே என்பது பழமொழி. ஆனால் ஸ்ரீலங்காவுக்கு செலவு மேற்கொண்ட ரொறன்ரோ மத்திய நாடாளுமன்ற உறுப்பினரும் லிபரல் கட்சியின் வெளியுறவு விமர்ச்சகருமான பொப் றே கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து வேண்டுமட்டும் அவமானப்பட்ட பின்னர் கனடாவுக்குத் திரும்பி வந்துள்ளார்.
கடந்த யூன் மாதம் 09 ஆம் நாள் மாலை ஒட்டாவிலுள்ள ஸ்ரீலங்கா தூதுவர் வழங்கிய விசாவோடு தில்லியில் இருந்து விமானத்தில் கொழும்புக்குப் பொப் றே பயணமானார். அவரோடு கனடா தூதரக அதிகாரிகள் இருவர் பயணப்பட்டனர்.
பொப் றே ஸ்ரீலங்கா வருவது குறித்து முன்கூட்டியே தகவல் அறிந்த ஸ்ரீலங்காவின் தேசிய புலனாய்வுத் துறை தேசிய பாதுகாப்புக் கருதி அவரை ஸ்ரீலங்காவிற்குள் அனுமதிக்கக்கூடாது என்று குடிவரவு அதிகாரிகளுக்கு எச்சரித்து இருந்தது.
அதன்படி கட்டுநாயக்கா பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய பொப் றே யை அதிகாரிகள் 12 மணித்தியாலம் அங்கேயே தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
இது குறித்து ஸ்ரீலங்கா குடிவரவு – குடியகல்வு திணைக்கள ஆணையர் அபேயக்கோன் ‘பொப் றே இந்த நேரத்தில் ஸ்ரீலங்காவிற்கு வருவது தேசியப் பாதுகாப்புக்கு நல்லதல்ல என்று உளவுத்துறை அரசுக்கு எச்சரித்ததால் அவர் இலண்டன் செல்லும் அடுத்த விமானத்திலேயே வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பப்பட்டதாகத்’ தெரிவித்தார்.
விமானநிலையத்தில் வைத்து ‘ஸ்ரீலங்கா நிலைவரம் குறித்து உண்மையான விவரங்களை அறியாமல் அறிக்கைகள் வெளியிட்டுள்ளேன், இதற்காக வருந்துகிறேன்’; என அறிக்கையொன்றில் கையெழுத்திடுமாறு கேட்டனர். ஆனால் நான் மறுத்து விட்டேன். அதில் ஸ்ரீலங்கா இராணுவமும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய இராசபக்சாவும் நான் விடுதலைப்புலிகளின் ஆதரவாளன், பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான பேர்வழி என முட்டாள்தனமான கருத்தை முன்வைத்தனர்’ என்கிறார் பொப் றே.
கடந்த மே மாதம் 28 ஆம் நாள் கொழும்பில் உள்ள கனடா தூதரகம் சிங்கள வெறியர்களின் தாக்குதலுக்கு இலக்கானது தெரிந்ததே. விடுதலைப் புலிகளுக்கு கனடா ஆதரவு தெரிவிப்பதாகக் கூறி சிங்கள வெறியர்கள் கற்களை வீசித் தாக்கியும் கனடிய தூதரகத்தின் சுவர்களில் எதிர்ப்பு வாசகங்களை எழுதியும் பாதுகாப்பு ஒளிப்படக் கருவிக்கு வர்ணம் பூசியும் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.
இது திட்டமிட்ட இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல் என்று தெரிவித்துள்ள கனடா அது மிகவும் கண்டித்தக்கது எனக் குறிப்பிட்டிருக்கிறது. மேலும் ஸ்ரீலங்காவில் உள்ள கனடா தூதரகத்தைப் பாதுகாக்கக் காவல்துறை போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கனடா சுட்டிக்காட்டிய தோடு ஸ்ரீலங்கா அரசு விரிவான விசாரணை நடத்தவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தது. ஆனால் எதிர்பார்த்தது போல அதற்கு ஸ்ரீலங்கா அரசு செவிசாய்க்க மறுத்துவிட்டது.
பொப் றே மட்டுமே நாடுகடத்தப்பட்ட முதல் ஆள் அல்ல. இதற்கு முன்னரும் சனல் 4 தொலைக்காட்சிக்காக செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட ஊடகவியலாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டிருந்தார்கள்.
‘எனது நாடு கடத்தலில் இருந்து என்ன தெரிகிறது என்றால், இலங்கை பேசுவதற்குப் பயப்படுகிறது, விவாதிப்பதற்கு பயப்படுகிறது, சந்திப்புகளுக்குப் பயப்படுகிறது என்பனவே. அவர்களைப் பார்த்து வெட்கக்கேடு, அவமானம் என்று மட்டுமே என்னால் கூறமுடியும். என்னையே இவ்வாறு நடாத்தியுள்ளார்கள் என்றால், எதிர்த்துப் பேசமுடியாத, தமது கருத்துக்களை பொது அறிக்கைகளாக வெளியிட முடியாத அப்பாவி மக்களை அவர்கள் எவ்வாறு நடாத்தியிருப்பார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள், விளங்கும்’ என பொப் றே பொரிந்து தள்ளியிருந்தார். தமிழ்க் கனடியர்களைப் பொறுத்தளவில் இது காலம் கடந்த ஞானம் ஆகும்.
மேலும் தன்னை வெறியேற்றியது ஸ்ரீலங்கா அரசுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் செயல் எனத் தெரிவித்தார். ‘என்னைப்பற்றி பொய்யான குறைபாடும் அவதூறும் பரப்பும் நோக்குடனேயே ஸ்ரீலங்கா அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. ஆனால் இந்த முடிவானது 30 ஆண்டு காலமாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சமூக சேவை செய்யும் என்னைப்பற்றித் தப்பான அபிப்பிராயம் ஒன்றையும் பரப்பாது, மாறாக அவர்களின் சுய நடத்தையையே இது பிரதிபலிக்கப்போகிறது’ எனப் பொப் றே சொன்னார்.
முட்டாளுக்கும் புத்திசாலிக்கும் என்ன வேற்றுமை? முட்டாள் நெருப்புச் சுடும் என்பதை கையை வைத்துத்தான் தெரிந்து கொள்கிறான். புத்திசாலி மற்றவர்களது பட்டறிவின் மூலம் நெருப்புச் சுடும் என்பதைத் தெரிந்து கொள்கிறான்.
பொப் றே இலங்கைக்குப் புதியவரல்ல. இலங்கை தொடர்பாக பத்து ஆண்டுகளுக்கு மேலாக அவர் தொடர்புபட்டிருந்தார். இலங்கை முழுதும் பயணம் செய்துள்ளார். அனைத்துக் கட்சிகளினதும் தலைவர்களைச் சந்தித்து உரையாடியுள்ளார்.
அமைதிப் பேச்சுக் காலத்தில் கிளிநொச்சி சென்று விடுதலைப்புலிகளின் தலைவர்களைச் சந்தித்துள்ளார். அவர்கள் விருந்தில் கலந்து கொண்டுள்ளார்.
இலங்கை சென்ற போதும் கனடாவிலும் இனச் சிக்கலுக்கு அமைதி வழியில் தீர்வு காண முயன்றவர். அதற்காக அனைத்து வகையான கருத்துகளைக் கொண்டவர்களையும் சந்தித்துள்ளார்.
அமைதிக் காலத்தில் வௌ;வேறு நாடுகளின் தலை நகரங்களில் நடந்த பேச்சு வார்த்தைகளின் போது பொப் றே தவறாது கலந்து கொண்டவர்.
கனடிய இணைப்பாட்சி அரசியல் முறைமை போன்ற ஒரு ஆட்சிமுறையை ஸ்ரீலங்காவிற்கு விற்பதற்கு கனடிய அரசு அமைதிப் பேச்சு இடம்பெற்ற காலத்தில் ‘குழசரஅ குநனநசயவழைn’ என்ற அமைப்பை உருவாக்கியது. அதன் முதல் தலைவராக பொப் றே நியமிக்கப்பட்டார்.
பொப் றே இணைப்பாட்சி அரசியல் முறைமையை அறிமுகப்படுத்த எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. இராசபக்சே அரசு அதனை ஏறெடுத்துப் பார்க்க மறுத்தது.
ஸ்ரீலங்கா அரசு பொப் றேயை விடுதலைப் புலிகளின் ஆதரவாளன் எனக் கூறுவது ‘அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்ற கதை போன்றது.
பொப் றே தான் ஒரு வி.புலிகளது ஆதரவாளன் என்று எப்போதுமே சொல்லியது கிடையாது. அதை அவரே சொல்லியிருக்கிறார். இப்போதும் அதையே தன்னிலை விளக்கம் அளிக்கும் விதத்தில் சொல்கிறார்.
‘விடுதலைப்புலிகளின் வன்முறை தந்திரோபாயங்கள் சரியானவை என ஒரு போதும் நான் கருதியதில்லை. பல சந்தர்ப்பங்களில் நாடாளுமன்ற விவாதங்களில் கூட இதனைத் தெரிவித்துள்ளேன்.
இலங்கை இராணுவப் பேச்சாளர் கூறுவது போல நான் விடுதலைப்புலிகளின் ஆதரவாளன் என்பது பொய். எனது கடந்த கால செயற்பாடுகள் நான் மிதவாத தமிழ் மற்றும் மாற்றுக் கருத்துகளுக்கு ஆதரவாக செயற்பட்டதைப் புலப்படுத்தும்.
விடுதலைப்புலிகளின் தந்திரோபாயங்களின் ஒரு பகுதியான மனித உரிமை மீறல்களை நான் தொடர்ச்சியாகக் கண்டித்து வந்துள்ளேன். கனடாவிலும், வெளிநாட்டிலும் தயக்கமின்றி கருத்துத் தெரிவித்து வந்துள்ளேன்.
முன்னாள் இலங்கை வெளிவிவகார அமைச்சர் இலட்சுமன் கதிர்காமர் மற்றும் சமாதான செயலகத்தைச் சேர்ந்த கேதீஸ் லோகநாதன் ஆகியோரின் நினைவு நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளேன். இருவரும் எனக்கு நெருக்கமான நண்பர்கள்.
எனது கண்ணோட்டம் பற்றி விளங்கிக் கொண்டபடியால்தான் ஸ்ரீலங்கா எனக்கு விசாவை முதலில் வழங்கியது. கொடுமை, தீவிரவாதம் என்பவற்றை எதிர்த்து எனது வாழ்நாள் முழுவதும் போராடிவிட்டேன். எனது செயல்கள், பேச்சுக்கள், அறிக்கைகள் யாவும் அனைவரின் பார்வைக்காகவும் உள்ளன’ என்கிறார் பொப் றே.
ஸ்ரீலங்கா அரசு ஒரு ‘மக்களாட்சி முறைமைக்கு எடுத்துக்காட்டு’ எனப் புகழாரம் சூட்டிய பொப் றேயை ஸ்ரீலங்கா ஏன் இப்படி அவமானப் படுத்தியது?
எல்லாம் ‘ஆறு கடக்கு மட்டும் அண்ணனும் தம்பியும் ஆறு கடந்தால், நீ யார்? நான் யார்’ என்ற கதைதான்.
ஒரு காலத்தில் வி.புலிகளைத் தடை செய்யுமாறு ஸ்ரீலங்கா அரசு கனடா உட்பட பல நாடுகளைக் கெஞ்சிக் கூத்தாடிக் கேட்டுக்கொண்டது. இப்போது அந்தத் தேவையில்லை.
வி. புலிகளை ஒழித்து விட்டோம் என்ற மிதப்பில் ஸ்ரீலங்கா அரசு இருக்கிறது. இனிக் கனடா போன்ற நாடுகளின் உதவி தேவையில்லை. எனவேதான் ஸ்ரீலங்கா அரசு திமிரோடு நடந்து கொள்கிறது.
நிதியுதவிக்கும் மேற்கு நாடுகளிடம் கையேந்தும் நிலையில் இராசபக்சா அரசு இல்லை. கோடிக் கணக்கில் கொட்டிக் கொடுக்க சீனா, இரான், லிபியா, இந்தியா இருக்கின்றன. எனவேதான் இராசபக்சா அரசு கனடாவை வேண்டு மட்டும் அவமானப் படுத்துகிறது.
பொப் றே விமான நிலையத்தில் 12 மணித்தியாலம் தடுத்து நிறுத்தப்பட்டு ஒரு சாதாரண கிறிமினல் போல் விசாரணை நடத்திய பின்னர் நாடு கடத்தியதை கனடிய அரசு கண்டித்துள்ளது.
கண் கெட்டபின் ஞாயிறு வணக்கம் செய்து என்ன புண்ணியம்? படிச்சுப் படிச்சுச் சொன்னோம். இருந்தும் கனடா கேட்கவில்லை. தடியைக் கொடுத்து அடிவாங்கியுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கம் எனக் கூறி கனடா அதைத் தடை செய்ததன் மூலம் ‘இந்தப் போர் தமிழர்களுக்கு எதிரான போர் அல்ல பயங்கரவாதத்துக்கு எதிரான போர்’ என்ற முகமூடியை ஸ்ரீலங்கா அணிந்து கொள்வதற்கு கனடா துணை போனது.
பொப் றே சரி கனடிய அரசு சரி ஸ்ரீலங்கா அரசின் சிங்கள – பவுத்த இனவாத கோர முகத்தைப் பார்க்கத் தவறிவிட்டன. ஸ்ரீலங்கா அரசு கட்டவிழ்த்து விட்ட அரச பயங்கரவாதத்தைக் கண்டு கொள்ள மறுத்துவிட்டன.
இலங்கையில் நடைபெற்றது ஒடுக்குகின்ற சிங்கள பேரினவாத அரசுக்கு எதிராக ஒடுக்கப்படும் தமிழ்மக்களது ஆயுதப் போராட்டம் என்பதை மெத்தப் படித்த அரசியல்வாதி பொப் றே சரி, கனடா சரி புரிந்துகொள்ள மறுத்துவிட்டன.
வி.புலிகள் இயக்கத்துக்குப் பயங்கரவாத முத்திரை குத்திய மேற்குலக நாடுகளும் கண்டுகொள்ள மறுத்துவிட்டன.
வி.புலிகள் இயக்கம் சிங்கள – பவுத்த இனவெறி அரசு தமிழினத்துக்கு எதிராக மேற்கொண்ட இன,மொழி, பண்பாட்டு அழிப்புக்கு எதிராக ஆயுதம் தூக்கிய விடுதலை இயக்கம் என்பதை உலகம் உணர மறுத்துவிட்டது.
தமிழ்மக்களை வி.புலிகளின் பிடியில் இருந்து மீட்கவே இந்தப் போர் என்ற ஸ்ரீலங்காவின் பரப்புரையை அனைத்துலக சமூகம் நம்பி ஏமாந்து போய்விட்டது.
தமிழீழ நாட்டின் விடுதலைக்குத் தளபதிகளும் போராளிகளும் தமிழ்மக்களும் கொடுத்த விலை, கொட்டிய குருதி, சிந்திய கண்ணீர் வீண் போகக் கூடாது. தமிழீழ விடுதலைக்கான போராட்டம் வேறு வடிவில் வேறு தளத்தில் – நிலத்தில் இருந்து புலத்தில் – தொடர வேண்டும். (உலகத்தமிழர் – யூன் 19,2009)
அய்யன்னா ஒரு மண் குதிரை ஆற்றைக் கடக்க உதவாது!
உரோம் பற்றி எரியும் போது வீணை வாசித்த நீரோ மன்னன் போல் வன்னியில் மக்கள் வானிலிருந்து குண்டுகள் போட்டும் ஆயிரக்கணக்கான செல்கள் ஏவியும் தமிழ்மக்களை வகைதொகையின்றிச் சிங்களப் படைகள் கொன்று குவித்த போது அய்யனா சும்மா இருப்பதே சுகம் என்று இருந்து விட்டது.
அய்யன்னாவின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அறிக்கைகளை விடுவதோடு திருப்தி அடைந்து விட்டார். போர்க்களத்தில் சிக்கியிருந்த 25,000 மக்களையும் காயம்பட்ட 30,000 மக்களையும் காப்பாற்றுமாறு உலகளாவிய தமிழர்கள் விடுத்த வேண்டுகோள் பான் கீ மூனின் காதுகளில் விழவே இல்லை. விளைவு 20,000 மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.
போர் முடிந்து துப்பாக்கிகள் மவுனித்த பின்னர்தான் போரினால் ஏற்பட்ட அழிவுகளை பான் கீ மூன் கொழும்பு சென்று அதிலும் உலங்கு வானூர்தியில் வட்டமிட்டுச் சுற்றிப் பார்த்துவிட்டுத் திரும்பினார்.
அவர் சென்ற போது தெற்கில் சிங்கள ஆட்சியாளர்களும் சிங்களவர்களும் “வெற்றி விழா” க் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். தமிழ்மக்கள் தடுப்பு முகாம்களில் போதிய உணவு, மருந்து, தண்ணீர் இன்றி நரகத்தில் இருக்கும் நேரம் பார்த்துத்தான் பா கீ மூன் கொழும்பு சென்றது குறிப்பிடத்தக்கது.
வன்னிப் போர்க்களத்தில் சிங்களப் படையினால் கொல்லப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களைக் காப்பாற்ற அய்யன்னா அவை தவறிவிட்டது. இது அதன் பலவீனத்தைக் காட்டுகிறது. அதனால்தான் தமிழ்மக்கள் தங்கள் உயிர்களை அநியாயமாக இழக்க நேரிட்டது.
இதே போன்றுதான் ரூவண்டாவில், பொஸ்னியாவில், காஸாவில் மற்றும் டாவூரில் இனப் படுகொலை நடந்த போது அய்யன்னா சும்மா இருந்து விட்டது. அங்கேயும் அப்பாவிப் பொது மக்கள் கொல்லப்பட்டார்கள். ஆண், பெண், குழந்தைகள் என எல்லோரும் கொல்லப்பட்டார்கள். எஞ்சியோர் இடம்பெயர்ந்தார்கள்.
புலம் பெயர்ந்த தமிழர்கள், அரசியல்வாதிகள், மனிதவுரிமை அமைப்புக்கள், அரச சார்பற்ற உதவி அமைப்புக்கள் என எல்லோரும் ஸ்ரீலங்கா அரசினால் திட்டமிட்டு நடத்தப்படும் இனப்படுகொலையைக் கண்டித்து ஒங்கிக் குரல் கொடுத்தார்கள். அய்யன்னாவையும் எச்சரித்தார்கள். ஆனாலட பலன் இல்லாது போய்விட்டது.
ஸ்ரீலங்காவின் இராணுவம் தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்துகிறது எனச் சொன்னார்கள். போரில் உணவையும் மருந்தையும் ஆயதங்களாக சிங்கள இராணுவம் பயன்படுத்துகிறது என்று குற்றம் சாட்டினார்கள். எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்குபோல் ஆகிவிட்டது.
போர் முனiயில் இருந்து மக்களை அகற்றுமாறும் அவர்களை இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் செல்லுமாறு பான் கீ மூன் அடிக்கடி சொன்னார். அதன் மூலம் அந்த மக்களை வெறிபிடித்த சிங்கள இராணுவத்தின் பிடிக்குள் தள்ளவே அவர் முயற்சித்தார்.
இப்போது கூட இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதி;க்குச் சென்ற மக்கள் சிறை பிடிக்கப்பட்டு திறந்தவெளிச் சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டுள்ளார்கள். சிறிய கூடாரங்களில் நூற்றுக் கணக்கான மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் எழுத்தில் வடிக்க முடியாத துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் முகம் கொடுத்துக் கொண்டு வாழ்கிறார்கள்.
முதியோர் பட்டினியாலும் நோயினாலும் நாளாந்தம் இறந்து கொண்டிருக்கிறார்கள். வவுனியா மருத்துவ மனை காயம்பட்ட மக்களால் நிரம்பி வழிகிறது. மருந்தும் இல்லை உண்ண உணவும் இல்லை என்ற பரிதாப நிலை காணப்படுகிறது.
உறவினர்கள் சிறைப்பிடித்து முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் மக்களைப் பார்க்கச் சிங்கள இராணுவம் அனுமதி மறுக்கிறது. அனுமதி கொடுக்கும் போது அயந்து மணித்துளியே கொடுக்கப்படுகிறது.
இராணுவ முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டோருக்கு உணவும் மருந்தும் கொடுக்க அணியமாக அரச சார்பற்ற நிறுவனங்கள் இருந்த போதும் அவற்றின் மனிதாபிமானப் பணிக்கு சிங்கள அரசு தடை போட்டுள்ளது. அதன் மூலம் சிங்கள அரசு வைக்கல் பட்டடை நாய்போல் நடந்து கொள்கிறது. தன்னாலும் உதவி வழங்க முடியாது. அரச சார்பற்ற அமைப்புக்களையும் உதவி செய்ய விடுவதாக இல்லை.
இந்தத் தடையைக் கூட அய்யன்னாவால் விலக்க முடியாது இருக்கிறது. இது அய்யனாவின் கையாலாகத் தன்மையைத் துல்லியமாகக் காட்டுகிறது.
போர்முனையில் கொன்றொழிக்கப்பட்ட மக்கள் தொகையைக் கூட பான் கி மூன் வெளியிடாது மறைத்துவிட்டார். அய்யன்னா வானிலிருந்து எடுத்த செய்மதிப் படங்களை வைத்து கொல்லப்பட்ட மக்களது எண்ணிக்கையை நிச்சயமாக அறிந்திருக்கும். இருந்தும் அது மூடி மறைக்கப் பட்டுவிட்டது.
அய்யன்னா அமைப்பு என்பது ஒரு சில நாடுகளின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. ஸ்ரீலங்கா வின் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் பற்றிப் பாதுகாப்புச் சபையில் விவாதிக்க அய்க்கிய இராச்சியமும் பிரான்சும் சுவீடனும் தீர்மானம் கொண்டுவர விரும்பிய போது சீனா அதற்கு முட்டுக்கட்டை போட்டது. அது தனது வெட்டு வாக்கைப் பயன்படுத்தப் போவதாகக் கூறி அதனைத் தடுத்துவிட்டது.
பாதுகாப்பு அவையில் 5 நிரந்தர உறுப்பினர்களும் 10 சாதாரண உறுப்பினர்களும் இருக்கிறார்கள். நிரந்தர உறுப்பினர்களான அமெரிக்கா, உருசியா, சீனா, பிரான்ஸ், அய்க்கிய இராச்சியம் ஆகிய நாடுகளுக்கே வெட்டு வாக்கு உரிமை இருக்கிறது. சீனா தனது புவியியல் – வாணிக – பாகாப்பு நலன்களுக்காக பாதுகாப்பு சபையில் ஸ்ரீலங்காவிற்குச் சார்பாக நடந்து கொள்கிறது.
அய்யன்னாவின் மனிதவுரிமை அவையும் அய்யன்னா போலவே ஒரு கையாலாகாத அமைப்பாக மாறிவிட்டது.
அய்யன்னா மனிதவுரிமை அவையில் 47 நாடுகள் உறுப்புரிமை வகிக்கின்றன. ஏதாவது தீர்மானம் விவாதிக்கப்பட வேண்டும் என்றால் குறைந்தது 16 நாடுகள் அத் தீர்மானத்தில் கையெழுத்திட வேண்டும்.
சுவிஸ்தலாந்து ஸ்ரீலங்காவில்; இருதரப்பும் இழைத்த போர்க்குற்றங்கள் மனிதவுரிமை மீறல்கள் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று கொண்டு வந்த தீர்மானம் கைவிடப்பட்டு ஸ்ரீலங்கா முன்மொழிந்த தீர்மானம் 29 – 12 என்ற வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது. யப்பான் உட்பட 6 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
ஸ்ரீலங்கா அரசைப் பாராட்டி அய்யன்னா மனிதவுரிமை அவை நிறைவேற்றிய தீர்மானம் வெட்கப்பட வேண்டிய ஒன்று எனப் பல மனிதவுரிமை அமைப்புக்கள் சாடியிருந்தன.
வாக்கெடுப்பு முடிவு ஏமாற்றத்தைத் தருகிறது. அது மனிதவுரிமை அவையின் கையாலாகாத்தன்மையைக் காட்டுகிறது என்று மன்னிப்பு சபை சாடியுள்ளது.
இலண்டன் மனிதவுரிமை கண்காணிப்பகத்தின் (HRW) இயக்குநர் Tom Porteous அய்யன்னா மனிதவுரிமை அவை படு தோல்வியைச் சந்தித்துள்ளது” எனக் கூறியுள்ளார்.
உண்மையில் ஸ்ரீலங்கா படைகள் போர்க்குற்றம் செய்யவில்லை என்றால் அது பற்றிய விசாரணையை ஏன் ஸ்ரீலங்கா எதிர்க்க வேண்டும் என்ற கேள்வியை யாரும் எண்ணிப்பார்த்ததாகத் தெரியவில்லை. யார் காதிலும் விழுந்ததாகவும் தெரியவில்லை.
இந்தத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்த நாடுகள் மனிதவுரிமை பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாமல் தங்கள் தங்கள் நாட்டின் புவியியல் – பொருளாதார நலத்தைக் கருத்தில் கொண்டே வாக்களித்துள்ளன.
சுவிஸ்லாந்து நாடு கொண்டுவந்த தீர்மானம் நிறைவேறியிருந்தால் உருசியா, இந்தியா போன்ற நாடுகள் நாளை தங்களது உள்நாட்டுச் சிக்கலிலும் அய்யன்னா மனிதவுரிமை அவை தலையிடக் கூடும் என எண்ணி இருக்க வேண்டும். இந்த அச்சம் காரணமாகவே அந்த நாடுகள் ஸ்ரீலங்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்துள்ளன.
அமெரிக்காவின் பொருளாதாரப் பின்னடைவு அதே சமயம் பொருளாதரத் துறையில் சீனாவின் அசுர வளர்ச்சி உலக ஒழுங்கில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.
உலகில் சீனாவின் பொருளதாரம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்காவில் ஒரு திரில்லியன் (1,000 பில்லியன்) டொலர்களை திறைச்சேரி உண்டியலில் வைத்துள்ளது. அதனை மீளப் பெற சீனா முயற்சித்தால் அமெரிக்காவின் பொருளாதாரம் மேலும் சிக்கலுக்குள்ளாகும். அந்தப் பயம் அமெரிக்காவிற்கு இருக்கிறது.
உலகம் அமெரிக்க வல்லரசை மையமாகக் கொண்டு சுழன்ற காலம் போய் சீனாவைச் சுற்றியும் சுழலத் தொடங்கியுள்ளது.
இதனால்தான் ஸ்ரீலங்கா அமெரிக்கா, அய்க்கிய இராச்சியம், பிரான்ஸ் போன்ற நாடுகளது எதிர்ப்பைச் சட்டை செய்யாது சீனாவின் பக்கம் சாய்ந்துள்ளது.
கடந்த ஆண்டு சீனா உதவிநிதியாக ஒரு பில்லியன் டொலர்களை ஸ்ரீலங்காவிற்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே நேரம் அமெரிக்கா 7 மில்லியனை மட்டும் உதவி நிதியாக வழங்கியுள்ளது.
இன்றைய உலக ஒழுங்கில் நீதி நியாயம் போன்றவற்றை எதிர்பார்க்க முடியாது. வல்லான் வெட்டியதே வாய்க்கால் என உலகம் நினைக்கிறது.
எமது விடுதலைப் போராட்டத்துக்கு இந்தியாவை ஆளும் காங்கிரஸ் கட்சியே தடையாக இருந்து வருகிறது.
இந்தியாவே ஸ்ரீலங்காவின் பின்னால் ஒளிந்து கொண்டு வி.புலிகளுக்கு எதிரா போரை நடத்தி அதில் வெற்றியும் கண்டுள்ளது. அதன் காரணமாகவே இந்தியாவின் போரை ஸ்ரீலங்கா நடத்தியது என மகிந்த இராசபக்சாவே வெளிப்படையாகச் சொல்கிறார்.
எனவே இந்திய வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்.
அந்த மாற்றத்தை ஏற்படுத்த தமிழ்நாட்டுத் தமிழர்களாலேயே முடியும். அவர்களால்தான் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்து அதன் வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
அய்யன்னாவையோ கனடா உட்பட மேற்குலக நாடுகளையோ முழுதாக நம்பிப் பயனில்லை.
எங்களைப் பொறுத்தளவில் அவை மண்குதிரைகள். ஆற்றைக் கடக்க உதவாது. (உலகத்தமிழர் – யூன் 04. 2009)
ஈழப்போர் 5 துக்குப் புலத்தில் களம் அமைப்போம்!
ஈழப்போர் 4 முடிவுக்கு வந்துள்ளது. துப்பாக்கிகள் மவுனிக்கப்பட்டு விட்டன. மூன்று இலட்சம் மக்கள் சிங்கள பேரினவாத அரசினால் முகாம்களில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். சிறு சிறு கூடாரங்களில் மக்கள் நெருக்கமாக அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குப் போதிய உணவு இல்லை. மருந்து இல்லை. குளிக்கத் தண்ணீர் இல்லை. அவர்கள் மனிதர்கள் போலல்லாது விலங்குகள் போல் நடத்தப்படுகிறார்கள். அவர்களின் வாழ்வு சீரழிக்கப்பட்டு சின்னாபின்னமாக்கப் பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகச் சிங்களப்படைகள் வன்னிப் பெருநிலத்தின் மீது மேற்கொண்ட கொடிய இன அழிப்புப் போர் காரணமாக மக்கள் சொந்த வாழ்விடங்களில் இருந்து விரட்டியடிக்கபட்டு அவர்களது வீடுவாசல்கள் சொத்துக்கள் அழிக்கப்பட்டு அவர்களது நெல் வயல்கள், தென்னந் தோப்புக்கள,; மாட்டுப் பண்ணைகள், ஆட்டுப்பண்கைள், கோழிப் பண்ணைகள் என சகல வருமான மூலங்களும் சிங்களப் படைகளால் அழிக்கப்பட்டு வாழ் விடங்களில் இருந்து விரட்டியடிக்கப் பட்டுள்ளார்கள்.
முதியோர் பட்டினியாலும் நோயினாலும் நாளாந்தம் இறந்து கொண்டிருக்கிறார்கள்.
உறவினர்கள் சிறைப்பிடித்து முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் மக்களைப் பார்க்கச் சிங்கள இராணுவம் அனுமதி மறுக்கிறது. அனுமதி கொடுக்கும் போது அயந்து மணித்துளியே கொடுக்கப்படுகிறது.
சிங்கள முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டோருக்கு உணவும் மருந்தும் கொடுக்க அணியமாக இருக்கும் அரச சார்பற்ற நிறுவனங்களது மனிதாபிமானப் பணிக்கு சிங்கள அரசு தடை போட்டுள்ளது.
அரச சார்பாற்ற நிறுவனங்கள் தங்கள் பணியைச் செய்ய அனுமதிக்குமாறு உலக நாடுகள், மனிதவுரிமை அமைப்புக்கள் விடுத்த வேண்டுகோளை சிங்கள அரசு வழக்கம் போல் புறக்கணித்துள்ளது.
சிங்கள அரசு தானும் உதவிசெய்யாது உதவிசெய்ய அணியமாக இருக்கும் அரசசார்பற்ற அமைப்புக்களுக்குத் தடைவிதித்து வைக்கல் பட்டறை நாய்போல் நடந்து கொள்கிறது.
மேலும் போராளிகளும் வி.புலிகளின் ஆதரவாளர்கள் என்று கருதப்படுவோரும் சிங்களப் பகுதிகளுக்குக் கொண்டு சென்று சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஆயிரக்கணக்கான இளைஞர்கள் காணாமல் போயுள்ளார்கள். வி.புலிகளின் அரசியல் மற்றும் நீதித்துறை போன்றவற்றில் பணிபுரிந்தோர் கைது செய்யப்பட்டுக் கொழும்பு நாலாவது மாடிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இலங்கையின் பல பாகங்களிலும் இளைஞர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
போர்க்காலத்தில் குண்டு மழைக்கு இடையிலும் தங்கள் உயிரை ஒரு பொருட்டாக மதிக்காது கடமைசெய்த மூன்று மருத்துவர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இன்றல்ல நேற்றல்ல. நீண்ட காலத்துக்கு முன்னரே தந்தை செல்வநாயகம் சிங்களவர் – தமிழர் இடையே உள்ள உறவை ஒரு பழமொழி மூலம் கூறியிருந்தார்.
சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒன்று சேராது என்பதுதான் தந்தை செல்வநாயகம் கூறிய பழமொழி ஆகும்.
சிங்கள இராணுவம் போரின் இறுதிக் கட்டத்தில் 20,000 மக்களைக் கொன்று குவித்தது. அதன் பிணவாடை கூட இன்னும் அடங்கவில்லை. வன்னிப் பெருநிலப்பரப்பு இழவு வீடாகக் காட்சியளிக்கிறது. ஆனால் தென்னிலங்கையில் சிங்களவர் இராணுவ அணிவகுப்போடு வெற்றிவிழாக் கொண்டாடி மகிழ்கிறது.
இவை எதனைக் காட்டுகிறது? நடந்து முடிந்த நான்காவது ஈழப்போரும் அதன் பின் நடக்கும் அடக்குமுறையும் பழிவாங்கலும் இலங்கைத் தீவில் சிங்களவர்களும் தமிழர்களும் ஒன்றாக வாழமுடியாது என்பதையே துல்லியமாகக் காட்டுகிறது. இதில் எதுவித அய்யமும் இல்லை.
இந்தச் சூழ்நிலையில் தமிழீழத்தின் விடியலுக்காக நாம் அடுத்து அரசியல் – பொருளாதார, இராசதந்திரத் தளங்களில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி நாம் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும்.
எமது போராட்ட வரலாற்றின் வளர்ச்சியில் மைல் கற்கள் என்று கருதப்படும் மூன்று நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. அவையாவன,
அ) மே 14, 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையில் ஈழத் தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமையையும் வடக்குக் கிழக்கு இணைந்த பாரம்பரிய தாயகத்தின் சுதந்திரத்தையும் இறைமையையும் வலியுறுத்தி, தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் சுதந்திர, இறைமையுள்ள, மதச் சார்பற்ற, சோசலிசத் தமிழீழ நாட்டைப் புதுப்பித்து மீளமைக்க (restoration and reconstitution) வேண்டும் என்ற தீர்மானம்.
ஆ) 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மேல் கூறப்பட்ட சுதந்திரத் தமிழீழக் கோட்பாட்டை முன்வைத்து தமிழ்மக்களின் ஆணை கேட்டுப் போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு மக்கள் அளித்த ஒப்புதல்.
இ) 1985 ஆம் ஆண்டு இடம்பெற்ற திம்புப் பேச்சு வார்த்தையின் போது தமிழர் தரப்பு முன்வைத்த இலங்கைத் தமிழர்கள் ஒரு தேசிய இனம், வடக்கும் – கிழக்கும் தமிழர்களின் தாயகம், தமிழ்த் தேசியத்தின் தன்னாட்சி உரிமை ஆகியவற்றை ஏற்றுக் கொள்ளுதல்.
இவற்றின் அடிப்படையிலேயே இனச் சிக்கலுக்குத் தீர்வு காணவேண்டும் என உலகளாவிய தமிழ்மக்கள் போராட்டம் நடத்த வேண்டும். அதற்கு முன்னோடியாக உலகளாவிய தமிழ்மக்களைச் சார்ப்பு படுத்தும் அமைப்புக்களை ஒருங்கிணைத்து உலகத் தமிழர் பேரவை அல்லது அதையொத்த பெயரில் ஒரு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அதன் நடவடிக்கைகள் பின்வருமாறு இருக்க வேண்டும்.
1) சிங்கள இராணுவ முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 300,000 மக்களை ஸ்ரீலங்கா அரசு உடனடியாக அவர்களது வாழ்விடங்களில் மீள் குடியமர்த்தல்.
2) இந்த மக்களுக்கு உணவு, மருந்து, தண்ணீர், உறையுள் வசதிகள் செய்து கொடுக்க அரச சார்பற்ற அமைப்புக்களை அனுமதிக்குமாறு வற்புறுத்தல். .
3) சிங்கள அரசியல் மற்றும் இராணுவ ஆட்சியாளர்கள் மீது போர்க் குற்றம் சுமத்தி அனைத்துலக நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்டு விசாரணை செய்து தண்டிக்கப்பட வேண்டும்.
4) மேலே (1) கூறப்பட்ட உலகத் தமிழர் பேரவை நாடுகடந்த தமிழீழ அரசை (வுhயஅடை நுநடயஅ புழஎநசnஅநவெ in நஒடைந) உருவாக்குதல்.
5) வட – கிழக்கில் சிங்களக் குடியேற்றம் இடம்பெறுவதைத் தடுத்து நிறுத்தல். .
6) பன்னாட்டு நிதியம் வழங்க இருக்கும் 1.9 பில்லியன் டொலர் கடனைத் தடுத்தல்.
7) வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் நோர்வேயில் தமிழர்கள் நடத்திய நேரடி வாக்கெடுப்புப் போல் ஏனைய நாடுகளிலும் நடத்தல்.
8) ஸ்ரீலங்கா உற்பத்திப் பொருட்களை அடியோடு புறக்கணித்தல்.
9) வட – கிழக்கில் இருந்து சிங்கள இராணுவத்தை வெளியேற்றல்.
உலகத் தமிழர் பேரவையின் உறுப்புரிமை பெறும் அமைப்புக்கள் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தையும் திம்புக் கோட்பாடுகளையும் ஆதரிப்பனவாக இருக்க வேண்டும்.
மே 30 இல் (சனிக்கிழமை) கனடிய தமிழர் பேரவை மக்களின் கருத்தறிய ஒரு கூட்டத்தைக் கூட்டியிருந்தது. அரங்கம் நிறைந்த மக்கள் அதில் கலந்து கொண்டார்கள்.
கேள்வி நேரத்தில் ஒரு உறவு கனடிய தமிழர் பேரவையின் யாப்பில் தமிழீழம் என்ற சொல்லே இல்லை அதற்கான காரணம் என்ன என்று கேட்டார். அதற்குத் தலைவர் அளித்த பதில் ஏமாற்றம் தருவதாக இருந்தது. தமிழீழம் வேண்டுமா இல்லையா என்ற நேரடி வாக்கெடுப்பு ஒன்றை நடத்தப் போவதாகவும் அதன் முடிவு சாதகமாக இருக்கும் பட்சத்தில் யாப்பில் திருத்தம் செய்யப்படும் எனப் பதில் அளித்தார்.
இதிலிருந்து ஒரு உண்மை தெரிகிறது. கனடிய தமிழர் பேரவைக்கு சுதந்திர தமிழீழத்தில் நம்பிக்கை இல்லை. தமிழீழ தேசியத்தில் நம்பிக்கை இல்லை. அப்படி இல்லை நம்பிக்கை இருக்கிறது என்று சொன்னாலும் அதை வெளிப்படையாகச் சொல்ல வல்லமை இல்லை. நேரடி வாக்கெடுப்புக்கும் தமிழீழமே இனச்சிக்கலுக்குச் சரியான தீர்வு என்று சொல்வதற்கும் என்ன தொடர்பு?
யாரைப் பார்த்து க.த.பேரவை பயப்படுகிறது? அல்லது யாரைத் திருப்திப்படுத்த க.த.பேரவை முயற்சிக்கிறது?
தலைவர்கள் என்போர் மக்களை வழிநடத்திச் செல்லவேண்டும். மக்கள் தலைவர்களை வழிநடத்தக் கூடாது.
ஒரு அமைப்பை ஒரு தொடர்வண்டிக்கு ஒப்பிட்டால் அதன் யந்திரம்தான் தலைமை. பெட்டிகள்தான் மக்கள். யந்திரம் பெட்டிகளை இழுத்துச் செல்ல வேண்டும். பெட்டிகள் யந்திரத்தை இழுக்கக் கூடாது.
தமிழீழம் பற்றிய குறிப்பு யாப்பில் சேர்க்கப்படாது போனதற்கு அது தொடர்பான தீர்மானம் பொதுச் சபையில் தோற்கடிக்கப்பட்டதே காரணம் எனத் தெரிகிறது. இது க.த.பேரவையில் மிதவாதிகள் கை ஓங்கியிருப்பதைக் காட்டுகிறது. அது தமிழ்த் தேசியத்துக்கு நல்லதல்ல.
இதே கனடிய தமிழர் பேரவைதான் புலிக்கொடியைப் பிடிக்க வேண்டாம் அது எமக்கு ‘அசவுரியம்” ஆக இருக்கிறது எனத் தொலைக்காட்சியிலும் வனொலியிலும் எந்த வெட்கமோ துக்கமோ இன்றிச் சொன்னது. முதல் சங்கிலிப் போராட்டத்தில் புலிக்கொடிக்கு க.த.பேரவை தடை போட்டது. ஆனால் பின்னர் நடந்த மனிதசங்கிலிப் போராட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் மக்கள், குறிப்பாக யோர்க் பல்கலைக் கழக மாணவர்கள் புலிக்கொடி ஏந்தி வீதியில் இறங்கிப் போராடினார்கள்.
இவ்வளவிற்கும் புலிக்கொடியைப் பிடிப்பது சட்டத்துக்கு முரணானது இல்லை என்று கனடிய காவல்துறையே சட்டவாளர்களிடம் ஆலோசனை கேட்டுச் சொல்லிவிட்டது.
ஆனால் கடவுள் விடை கொடுத்தாலும் பூசாரி விடைகொடான் என்ற மாதிரி க.த.பேரவை நடந்து கொள்கிறது. இதை இராசதந்திரம் அல்லது உத்தி என்று சொல்லலாம். ஆனால் மற்றவர்கள் அதனை விட்டுக்கொடுப்பு அல்லது சரணாகதிப் போக்கு என நினைக்கிறார்கள்.
தமிழீழம் வேண்டும் ஆனால் அதற்கு வெளிப்படையாகப் போராடக் கூடாது என்பவர்கள் விதைக்காமல் அறுவடை செய்ய விரும்புகிறார்கள். இடிமின்னல் இல்லாது மழை பெய்ய வேண்டும் என நினைக்கிறார்கள். முட்டையை உடைக்காமல் பொரியல் சாப்பிட விரும்புகிறார்கள். தடி முறியக் கூடாது ஆனால் பாம்பு சாக வேண்டும் என எண்ணுகிறார்கள்.
தற்காலிக பாதுகாப்புக்குச் சுதந்திரத்தைப் பலிகொடுப்பவர்கள் சுதந்திரம் பாதுகாப்பு இரண்டுக்குமே தகுதியற்றவர்கள் (Those who would sacrifice Liberty for SECURITY deserve neither liberty nor security) என்ற பொன்மொழியை நினைவூட்ட விரும்புகிறேன். (Muzhakkam – June 05, 2009)
13 ஆவது சட்ட திருத்தம் தமிழர்களுக்கு இராஜீவ் காந்தி வாங்கிக் கொடுத்த கோவணம்!
‘பழையபடி வேதாளம் முருக்க மரத்தில்” என்பது பழமொழி. இளைய தலைமுறையினருக்கு இந்த வேதாளம்பற்றி ஒன்றும் தெரியாது என்று நினைக்கிறேன். எனவே அந்தக் கதையின் சுருக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
முன்னொரு காலத்தில் விக்கிரமாதித்தன் என்ற மன்னன் உச்சினியை ஆண்டு வந்தான். அப்போது உச்சினியில் வாழ்ந்துவந்த சாந்தசீல மகாரிஷி உச்சினி காளி கோயிலுக்கு வடக்கே பூமியில் யாக குண்டம் வெட்டி அதில் ஒரு பிணத்தை வளர்த்தி, அதன் மார்பிலேர ஓமாக்கினி மூட்டி நெடுங்காலம் கொடூர வேள்வி செய்தான்.
காளிதேவி அவன் முன் தோன்றி ‘உனக்கு என்ன வரம் வேண்டும்” என்று கேட்டாள். ‘எனக்கு விக்கிரமாதித்தனின் சிங்காசனம் வேண்டும்’ என்றான்.
‘சாந்தசீலனே! நீ நினைத்தபடியே வரம் தருகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை . எனக்கு மகிட மன்னர்களின் ஆயிரம் தலைகளைப் பலி தந்தாயானால் நீ கேட்ட வரம் தருவேன்” என்று சொல்லி மறைந்தாள்.
சாந்தசீலன் 999 தலைகளை பலிகொடுத்து விட்டான். இன்னும் ஒரு தலை கொடுக்க வேண்டும். விக்கிரமாதித்தன் தலையைக் கொடுக்க சதித் திட்டம் தீட்டுகிறான்.
மன்னனுக்கு நாள்தோறும் சாந்தசீலர் மாம்பழம் ஒன்று கொடுத்து வந்தார். ஒரு நாள் அந்த மாம்பழத்தின் உள்ளே இருந்து இரத்தினக் கற்கள் சொரிந்தது. மற்ற மாம்பழங்களைப் பிரித்துப் பார்த்தபோதும் அவற்றில் இருந்தும் இரதத்தினக் கற்கள் சொரிந்தன. மன்னனுக்கு ஒரே வியப்பு. சாந்தசீலரை அழைத்து அதன் மந்திரத்தைக் (இரகசியம்) கேட்டான்.
‘எனக்கு ஒரு காரியம் ஆகவேண்டும். அதைச் செய்வதாக வாக்குறுதி தந்தால் சொல்கிறேன்” என்று சாந்தசீலர் சொல்ல ‘அப்படியே செய்கிறேன்” என்று மன்னன் சொன்னான்.
‘நீர் கிருஷ்ணபட்ச சதுர்த்தி தினத்தன்று நான் சொல்லூம் மயானத்துக்கு நீங்கள் வரவேண்டும்” என்று சாந்தசீலர் சொல்ல மன்னன் குறித்த இடத்துக்குச் குறித்த நாளில் சென்றான்.
‘இந்தக் காட்டின் நடுவே ஒரு உயர்ந்த முருக்க மரம் இருக்கிறது. அதில் ஒரு வேதாளம் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது. அது யார் கையிலும் அகப்படாது. நீர் தந்திரம் செய்து அதனைப் பிடித்துக் கொண்டு வந்து என் முன்னே விட வேண்டும்.’
விக்கிரமாதித்தன் அந்த முருக்க மரத்தையும் அதில் தொங்கும் வேதாளத்தையும் தேடிப் பிடிக்கக் காடெல்லாம் அலைந்து ஒருவாறு அதனைப் பிடித்துக் கொண்டு ஊர் திரும்பினான்.
அப்Nபுhது அந்த வேதாளம் சொல்லியது ‘ஊர் போய் சேர நேரம் பிடிக்கும். அதற்கிடையில் உமக்கு ஒரு கதை சொல்கிறேன். அதற்கு நீர் சரியான விடை சொல்ல வேண்டும். சொல்லவிட்டால் உமது தலை வெடித்துப் போக சாபம் இடுவேன்.”
வேதாளம் கதை சொல்லியது. அது கேட்ட கேள்விக்கு விக்கிரமாதித்ததன் சரியான விடை சொன்னான். ஆனால் வேதாளம் கட்டவிழ்த்துக் கொண்டு பழையபடி முருக்கமரத்தில் ஏறிக் கொண்டது. இப்படி வேதாளம் மொத்தம் 23 கதைகளைச் சொல்லியது. ஒவ்வொரு கதை சொல்லி முடித்ததும் வேதாளம் பழையபடி முருக்கமரத்தில் ஏறிவிடும்.
இந்த வேதாளம் போலவே போர் முடிந்து விட்டதால் மீண்டும் 13 ஆவது திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவது பற்றிய பேச்சு அடிபடுகிறது.
தமிழர்களது தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை ஆகியவற்றை நிராகரித்துவிட்ட மகிந்தா இராசபச்சே ஆட்சிக்கு வந்த காலம் தொடக்கம் 13 ஆவது திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவது பற்றிப் பேசிக் கொண்டுவருகிறார்.
இந்தியாவும் இனச்சிக்கலுக்கு இராணுவத் தீர்வு தீர்வாகாது ஸ்ரீலங்கா அரசு தமிழ்மக்களின் வேட்கைகளை நிறைவு செய்யக் கூடிய ஒரு அரசயில் தீர்வை முன்வைக்கப்பட வேண்டும் என்று சொல்லி வந்தது.
பின்னர் “தமிழ்மக்களின் வேட்கைகளை நிறைவு செய்யக் கூடிய” என்ற சொற்பதம் நீக்கப்பட்டு எல்லா மக்களதும் வேட்கைகளை நிறைவு செய்யக் கூடிய அரசியல் தீர்வை ஸ்ரீலங்கா முன் வைக்க வேண்டும் என்று இந்தியா கூறத் தொடங்கியது. பெரும்பான்மை சிங்களவர்களுக்கு தீர்க்கப்படாத வேட்கை ஏதாவது இருக்கிறதா?” இருக்கிறது என இந்தியா சொல்கிறது.
அந்த அரசியல் தீர்வு எது என்பதை இந்தியா சொல்லவில்லை. ஆனால் இப்போது அந்தத் தீர்வு ராஜீவ் காந்தி – ஜெயவர்த்தனா உடன்பாட்டின் அடிப்படையில் காணப் படவேண்டும் எனக் கூறத் தொடங்கியுள்ளது. அதாவது 13 ஆவது சட்டத் திருத்தத்தினை ஸ்ரீலங்கா நடைமுறைப்படுத்த வேண்டும் என இந்தியா கேட்கிறது.
சென்னை தீவுத் திடலில் மே 10, 2009 திமுக தலைமையிலான சனநாயக முற்போக்குக் கூட்டணியின் தேர்தல் பரப்புரைப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய சோனியா காந்தி “இலங்கைத் தமிழர்கள் சம உரிமை பெற்று சம நிறையுடன் வாழ இலங்கையின் ஒற்றுமைக்கு உட்பட்டு இராஜீவ் காந்தி – ஜெயவர்த்தனா உடன்பாட்டின் அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும்” என்று சொன்னார்.
இதன் மூலம் ஒரு உண்மை வெளியாகியுள்ளது. மகிந்தா இராசபக்சே இனச் சிக்கல் 13 ஆவது சட்ட திருத்தத்தின் அடிப்படையில் தீர்த்துவைக்கப்படும் என்று சொல்லி வந்தது இந்தியாவின் ஆசியோடுதான் என்பது வெளிச்சமாகியுள்ளது.
பேராசிரியர் விதாரண தலைமையிலான அனைத்துக் கட்சி பிரதிநித்துவக் குழு இடைக்கால பரிந்துரைகளைச் சமர்ப்பித்த போது அதனை புறந்தள்ளிய மகிந்த இராசபக்சே 13 ஆவது சட்ட திருத்தத்தின் அடிப்படையில் பரிந்துரை செய்யுமாறு கேட்டது நினைவு கூரத்தக்கது.
13 ஆவது சட்ட திருத்தத்தின் அடிப்படையில் இனச் சிக்கலுக்கு தீர்வு காண முடியாது என்று முன்னாள் ஆட்சித் தலைவர் சந்திரிகா உட்பட பல சிங்களத் தலைவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதன் காரணமாகவே சந்திரிகா 1995 ஆம் ஆண்டு ஒரு அரசியல் யாப்பு வரைவு ஒன்றை நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.
இப்போது ஸ்ரீலங்காவில் நடைமுறையில் உள்ள யாப்பு ஒற்றை ஆட்சி யாப்பாகும். 13 ஆவது சட்ட திருத்தம் அந்த யாப்புக்கு உட்பட்டே செய்யப்பட்டுள்ளது.
எனவே 13 ஆவது சட்ட திருத்தத்தின் கீழ் இனச் சிக்கலுக்கு தீர்வு காண முயற்சிப்பது குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்ட நினைப்பது போன்றது.
13 ஆவது சட்ட திருத்தம் ஜே.ஆர். ஜெயவர்த்தனா ஆட்சிக் காலத்தில் ஆகஸ்ட் 1987 இல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன் நோக்கம் இந்திய – இலங்கை உடன்பாட்டை நடைமுறைப்படுத்துவது ஆகும். அதாவது மாகாண சபைகளுக்கு அதிகாரப் பரவலாக்கல் செய்வதாகும். அப்போதே வி.புலிகள் அந்த சட்ட திருத்தத்தை முற்றாக நிராகரித்திருந்தார்கள். “தமிழ்மக்கள் மீது மேலாண்மை. அடக்குமுறை மற்றும் சுரண்டல் ஆகியவற்றை நீட்டிப்பதே அதன் நோக்கம் (“perpetuation of the domination, oppression and exploitation of the Tamil masses by the racist Sinhala state,” ) என வி.புலிகள் அதனை வருணித்தார்கள்.
பிரபல அரசியல் யாப்பு சட்டவாளரான நடேசன் சத்தியேந்திரா 13 ஆவது சட்ட திருத்தம் “ஒரு கேலி இசைநாடகம் (உழஅiஉ ழிநசய) எனச் சாடினார். மேலும்-
(1) மாகாண சபைக்கு பரவலாக்கப்படும் சட்டவாக்க அதிகாரங்களைத் திருத்தும் உரிமையை நாடாளுமன்றமே வைத்துக் கொள்கிறது.
(2) நாடாளுமன்றத்தில் சிங்களவர்கள் எப்போதுமே பெரும்பான்மையாக இருப்பதால் அவர்களது கொடுங்கோன்மை தொடர 13 ஆவது சட்ட திருத்தம் வழிவகுக்கிறது.
சுமனசிறி லியனகே என்பவர் பேரதேனியா பல்கலைக் கழகத்தில் அரசியல் பொருளாதரம் படிப்பிக்கும் பேராசிரியர். அவர் 13 ஆவது சட்ட திருத்தம் முழுதாக நடைமுறைப்படுத்துவது ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கை என்றாலும் அது 1987 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 13 ஆவது சட்ட திருத்தத்துக்குக் குறைவாகவே இருக்கும். காரணம் உச்ச நீதிமன்றம் கிழக்கு மாகாணத்தை வட மாகாணத்தில் இருந்து பிரித்துவிட்டது என்கிறார்.
மேலும் தொடக்கத்தில் மாகாண சபைகளுக்கு பரவலாக்கிய அதிகாரங்கள் பலவற்றை நாடாளுமன்றம் திருப்பிப் பெற்றுவிட்டது. முன்னரை விட இப்போது மாகாண சபைகள் குறைந்தளவு பள்ளிக்கூடங்கள், மருத்துவ மனைகள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றை வைத்துள்ளது. அது மட்டும் அல்லாது காணி, காவல்துறை தொடர்பான அதிகாரப் பரவலாக்கல் இன்னும் செய்யப்படவில்லை.
சட்டவாளர் சத்தியேந்திராவின் எண்ணப்படி 13 ஆவது சட்ட திருத்தத்தின் கீழ் மாகாண சபையின் நிறைவேற்று அதிகாரங்கள் மகாண ஆளுநரிடமே கையளிக்கப்பட்டுள்ளது. அந்த ஆளுநர் ஆட்சித்தலைவரால் நியமிக்கப்படும் ஒருவராவர். ஆட்சித்தலைவரின் விருப்புக்கு இணங்கவே ஆளுநர் பதவியில் இருப்பார். அவர் தனது கடமைகளை ஆட்சித்தலைவரின் நம்பிக்கையாளராகவும் அவரின் கீழ்ப்படிவான வேலைக்காரராகவும் இருப்பார். இதுதான் அரசியல் மற்றும் யாப்பின் கீழ் ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களாகும்.
மறைந்த எழுத்தாளர் தர்மரத்தினம் சிவராம் இந்திய – இலங்கை உடன்பாடு பற்றிக் குறிப்பிடும் போது “தமிழர்களுக்கு அது ஒரு கோவணத்தைக் கூடக் கொடுக்கவில்லை” என்றார்.
கடந்த ஆண்டு கிழக்கு மாகாண சபைக்குத் துப்பாக்கி முனையில் அரசு தேர்தலை நடத்தியது. அதன் முதலமைச்சராக பிள்ளையான் என்ற பொம்மையை வைத்திருக்கிறார்கள். மாகாண சபைக்கு ஒரு சிற்றூழியரை நியமிக்கக் கூடத் தனக்கு அதிகாரம் இல்லை என்று பிள்ளையான் ஒப்பாரி வைக்கிறார். முழு அதிகாரமும் ஆளுநர் தளபதி மோகன் விஜயவிக்கிரம (Rear Admiral Mohan Wijewickrema) கைகளிலேயே இருக்கிறது.
வடக்கில் மாகாண சபை உருவானால் அதற்கும் ஒரு சிங்கள இராணுவ தளபதியே ஆளுநராக நியமிக்கப்படுவார் என்பதில் எந்த அய்யமும் இல்லை.
இந்த நியமனங்கள் மூலம் சிங்கள ஆட்சியாளர் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வட – கிழக்கு மாகாணங்களை இராணுவப் பிடிக்குள் தொடர்ந்து வைத்திருக்க நினைக்கிறது என்பது தெளிவாகும்.
இனச் சிக்கலுக்குத் தீர்வு திம்பு பேச்சு வார்த்தைகளின் போது தமிழர் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட 4 அம்ச கோரிக்கைகளின் அடிப்படையில் காணப்பட வேண்டும்.
(1) தேசியம் (2) தாயகம் (3) தன்னாட்சி உரிமை (4) ஸ்ரீலங்காவில் வாழும் மலையக மக்களுக்கு குடியுரிமை.
.இவற்றுக்குக் குறைந்த எந்தத் தீர்வும் இனச் சிக்கலுக்குத் தீர்வாகாது. (உலகத்தமிழர் – மே 15, 2009)
Leave a Reply
You must be logged in to post a comment.