Political Column 2008 (2)

யோர்ஜியா சொல்லித் தரும் அரசியல் பாடம்

நக்கீரன்

வலியோர்முன் தன்னை நினைக்க, தான் தன்னிலின்
மெலியார்மேல் செல்லும் இடத்து.  (அருளுடமை அதி. 25 – குறள் 250)

இதன் பொருள் – தன்னைவிட மெலிந்தவரைத் துன்புறுத்தச் செல்லும்போது தன்னிலும் வலியவர் தன்னைத் துன்புறுத்த வரும்போது அவர் முன் தான் அஞ்சி நிற்கும் நிலையை நினைக்க வேண்டும்.

கெட்ட காலத்துக்கு யோர்ஜியாவின் ஆட்சித்தலைவர் மிக்கேல் சாகாஷ்விலி (Mikheil Saakashvili) க்கு பொய்யாமொழிப் புலவர் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் தெரிநிதிருக்கவில்லை.

‘மெலியாரை வலியார் ஒறுத்தால் வலியாரை தெய்வம் ஒறுக்கும்’ என்ற பழமொழி கூட சாகாஷ்விலிக்குத் தெரிந்திருக்கவில்லை.

யோர்ஜியாவின் ஆட்சித்தலைவர் சாகாஷ்விலி ஒரு மெலிய மாகாணமான தென் ஒசெச்சியாவை (South Ossetia) பிடிக்க படையை அனுப்பி அதன் தலைநகர் Tskhinvali யை துவம்சம் செய்தபோது வலிய உருசியப் படை தனது படையைத் தாக்கி நிலைகுலைய வைக்கும் என்று அவர் கனவிலும் நினைக்கவில்லை. இது வேட்டியோடு போனவன் தனது கோவணத்தையும் பறிகொடுத்துவிட்டு வந்த கதையாகப் போய்விட்டது. உருசிய படை யோர்ஜியாவுக்குள் ஊடுருவி அதன் இரண்டில் ஒரு பங்கு நிலப்பரப்பை பிடித்து வைத்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 7 ஆம் நாள் 1990 ளில் பிரிந்து போன தென் ஒசெச்சியாவைத் தாக்கி அதன் தலைநகர் Tskhinvali  யை யோர்ஜிய படைகள் பிடித்தது. தென் ஒசெச்சியா யோர்ஜியாவின் ஆட்புலத்தில் ஒரு பகுதி என்பதுதான் யோர்ஜியா தனது படையெடுப்புக்குச் சொன்ன காரணம் ஆகும். இந்தப் படையெடுப்பில் ஒசெச்சியாவின் தலைநகர் தரைமட்டமாக்கப் பட்டது. 2,000 பொதுமக்கள் கொல்லப் பட்டார்கள். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உருசிய அமைதிப்படையைச் சேர்ந்த பலரை யோர்ஜிய அமைதிப் படையினர் சுட்டுக் கொன்றார்கள்.

யோர்ஜியா அரங்கேற்றிய படுயெடுப்பையும் படுகொலைகளையும் உருசிய ஆட்சித்தலைவர் டிமித்ரி மித்விடேவ் (Russian President Dmitry Medvedev) முழுமையான இன வடிகட்டல் என வருணித்தார். அத்தோடு அவர் அமைதி அடைந்துவிடவில்லை.

‘உருசிய குடிமக்கள் எங்கிருந்தாலும் அவர்களது உயிரையும் தன்மானத்தையும் பாதுகாக்க வேண்டியது எமது கடமை. அவர்களது கொலைக்குப் பொறுப்பானவர்கள் தண்டனையில் இருந்து தப்ப முடியாது. அவர்களுக்குரிய தண்டனை வழங்கப்படும். அதற்கான நடவடிக்கைகளையே உருசியா மேற்கொண்டுள்ளது’ என உருசிய ஆட்சித்தலைவர் வெட்டொன்று துண்டு இரண்டு என்ற பாணியில் தெரிவித்தார்.

“I must protect the life and dignity of Russian citizens wherever they are. We will not allow their deaths to go unpunished. Those responsible will receive a deserved punishment.”

அதேவேளை உருசிய பிரதமர் விலடிமிர் புட்டின் (Prime Minister Vladimir Putin) பேசும் போது ‘அமெரிக்கர்கள் சதாம் குசேன் பல ஷியா ஊர்களை அழித்ததற்காக அவரைத் தூக்கில் போட்டார்கள். ஆனால் இன்றைய யோர்ஜியா ஆட்சியாளர்கள் பத்து ஒசெச்சியன் ஊர்களை ஒரு மணி நேரத்தில் இந்த உலகத்தின் முகத்தில் இருந்து அழித்துத் துடைத்துவிட்டார்கள். யோர்ஜியப் படைகளது தாங்கிகள் குழந்தைகளையும் முதியவர்களையும் மிதித்துக் கொன்றன. பொதுமக்களை அடித்தளத்துக்குள் (cellars) வீசி எரியூட்டிக் கொன்றார்கள். இந்தக் கொடுமைகளைச் செய்த யோர்ஜிய தலைவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்’ குறிப்பிட்டார்.

தென் ஒசெச்சியாவின் மக்கள் தொகை 70,000 மட்டுமே. இதில் பெரும்பான்மையினர் ஒசெச்சியர்கள். இவர்களது பூர்வீகம் இரான் ஆகும். மதத்தால் முஸ்லிம்களான இவர்கள் பின்னர் கிறித்தவர்களாக மாறினார்கள். உருசியர்களது விழுக்காடு 3 மட்டுமே. ஆனால் உருசிய நாட்டுக் கடவைச் சீட்டைப் பெரும்பான்மையோர் வைத்திருக்கிறார்கள். ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில் தென் ஒசெச்சியா யோர்ஜியாவோடு இணைக்கப்பட்டது. வட ஒசெச்சியா உருசிய நாட்டை சேர்ந்தது.

யோர்ஜியாவின் படைகள் தென் ஒசெச்சியாவைத் தாக்கி அதைத் தனது கட்டுப்பாட்டுக்குள்; மீண்டும் கொண்டுவர எடுத்த முயற்சியை முடியடிக்க உருசியா யோர்ஜியா மீது படையெடுத்தது. யோர்ஜியா தலைநகர் திபிலிசியிலுள்ள (Tbilisi) இராணுவ விமானத் தளங்கள் மீது உருசிய போர் விமானங்கள் குண்டு வீச்சுக்களை நடத்தியுள்ளன.

தென் ஒசெச்சியா போல யோர்ஜியாவிலிருந்து பிரிந்த மற்றொரு மாகாணமான அப்ஹாஸியாவில் இருந்து உருசிய படைகளின் உதவியோடு அப்ஹாசியாப் படைகள் யோர்ஜியாவுக்குள் ஊடுருவி தனது எனச் சொந்தம் கொண்டாடிய முழனழசi பழசபந பகுதியை கைப்பற்றியது.

தென் ஒசெச்சியாவிலிருந்து தமது படைகளை திரும்பப் பெற்றுள்ளதாக யோர்ஜியாவின் உள்நாட்டமைச்சு தெரிவித்துள்ளது. ஆனால் உருசியா விடுவதாக இல்லை. யோர்ஜியா மீது மேற்கொண்ட படை நடவடிக்கை தொடர்ந்தது. அயந்து நாள் சண்டையின் பின் பிரான்ஸ் நாட்டு அதிபரது முயற்சியால் போர் நிறுத்த உடன்பாடு ஒன்று எழுதப்பட்டுள்ளது.

யேர்ஜியாவின் ஆட்சித்தலைவர் ஏன் வலிந்து தென் ஒசெச்சியா மீது தாக்குதல் தொடுத்தார்? உலகத்தின் கவனம் பீஜிங்கில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் நிலைகொண்டிருந்த போது தனது படையெடுப்பை மற்ற நாடுகள் கண்டு கொள்ளாது என அவர் கணக்குப் போட்டிருக்கலாம். மற்றது அமெரிக்க ஆதரவாளரான அவர், அமெரிக்கா தனது உதவிக்கு வரும் என எதிர்பார்த்திருக்கலாம். இராக்குக்கு எதிரான போரில் யோர்ஜியா 2,000 படையினரை அங்கு அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது. எதுவாக இருந்தாலும் சாகாஷ்விலி போட்ட கணக்குப் படுமோசமாகப் பிழைத்துவிட்டது.

2006 இல் இஸ்ரேலிய படைகள் லெபெனன் மீது குண்டுமாரி பொழிந்தும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியும் அந்த நாட்டை சுடுகாடாக ஆக்கியது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டார்கள். பல கோடி பெறுமதியான சொத்துக்கள் நாசமாக்கப்பட்டன. அப்போது அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் லெபெனன் மக்களுக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் சிந்தவில்லை. மாறாக இஸ்ரேல் தற்பாதுகாப்புத் தாக்குதலில் ஈடுபடுவதாகவும் அந்த உரிமை இஸ்ரேலுக்கு உண்டு என்றும் யோர்ஜ் புஷ் சொன்னார். கிழமைக் கணக்காக யோர்ஜ் புஷ் மட்டுமல்ல அய்யன்னா பாதுகாப்பு அவையும் கண்மூடிக் கிடந்தது.

தென் ஓசெச்சியா மீது யோர்ஜியா மேற்கொண்ட படையெடுப்பை மேற்குலக நாடுகள் கண்டிக்கவில்லை. படையெடுப்பைக் கைவிடும்படி யோர்ஜியாவிடம் வேண்டுகோள் விடுக்கவில்லை. மாறாக யோர்ஜியா மீது உருசியா மேற்கொண்ட பதில் தாக்குதலைக் கண்டித்தன. படையெடுப்பை உருசியா நிறுத்த வேண்டும் அல்லது வேண்டாத விளைவுகள் ஏற்படும் என்று யோர்ஜ் புஷ் எச்சரித்தார். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கொன்டலீசா றைஸ் ‘உருசியா உடனடியாக சண்டையை நிறுத்த வேண்டும்’ என்று மெல்லிதாக மிரட்டினார்.

இஸ்ரேலின் அப்பட்டமான படையெடுப்பைக் கண்டு கொள்ளாத அய்க்கிய நாடுகளின் பாதுகாப்பு அவை உருசியா யோர்ஜியா மீது படையெடுத்த போது காலை மாலை என ஒவ்வொரு நாளும் கூடி ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

யோர்ஜ் புஷ் உருசியாவின் பதிலடி ‘அளவுப்படி மிகையானது, கொடூரமானது’ என வருணித்தார். ‘இப்படியான படையெடுப்பு 21 ஆம் நூற்றாண்டில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அமெரிக்கா, மக்களால் தெரிவுசெய்யப்பட்ட யோர்ஜியா அரசு பக்கம் நிற்கிறது. யோர்ஜியாவின் இறைமை மற்றும் ஆட்புல ஒருமைப்பாடு (உருசியாவால்) மதிக்கப்பட வேண்டும்;. உருசிய அரசு தனது பாதையை பின்புறமாக திருப்ப வேண்டும்’ என்றார்.

துணை ஆட்சித்தலைவர் டிக் செனி (Dick Chenney) உருசியாவின் ஆக்கிரமிப்பு (aggression) தண்டிக்கவிடாமல் போகாது என்றார்.

இதனைப் படிப்பவர்கள் சாத்தான்கள் வேதம் ஓதுவதாக நினைப்பார்கள்.

உருசியாவின் பதிலடி கொடூரமானது என்றால் அமெரிக்காவின் இராக் மீதான சட்டத்துக்கு முரணான படையெடுப்பை என்படி வருணிப்பது? இதுவரை 1.4 மில்லியன் மக்கள் இராக்கில் இறந்துபட்டுப் போனார்கள். நான்கு மில்லியன் இராக்கியர் ஏதிலிகளாக அயல்நாடுகளில் அரசியல் அடைக்கலம் புகுந்துள்ளார்கள்.

ஒரு நாட்டின் எல்லைகள் என்பது கடவுளால் கீறப்பட்டவை அல்ல. போரில் வென்றவர்கள் எல்லையைக் கீறினார்கள். யோர்ஜியா மீது உருசியா மேற்கொண்ட பதில் தாக்குதல் ‘இறைமை மற்றும் ஆட்புல ஒருமைப்பாடு’ (Sovereignty and territorial integrity) கோட்பாட்டை நிர்முலமாக்கியுள்ளது. ஆக்கிரமிப்பாளர்கள் இதன் தார்ப்பரியத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

இன்று உலகத்தில் நடைபெறும் மோதல்களில் பெரும்பான்மையானவை சிறுபான்மை தேசிய இனங்களை பெரும்பான்மை தேசிய இனங்கள் ஆக்கிரமிப்பதால் நடைபெறுவன ஆகும். எடுத்துக்காட்டாக திபெத், கஷ்மீர், தமிழீழம், பலுஸ்தித்தான், குர்திஷ், சீனாவின் வட மேற்கு மாகாணமான  Xinjiang இல் வாழும் உய்க்கூர் (Uighur) முஸ்லிம்கள் போன்ற தேசிய இனங்களைக் குறிப்பிடலாம். கியூபெக் மக்கள் கூட தனிநாட்டுக் கோரிக்கையை இன்னும் கைவிடவில்லை.

உருசியப் படைகளுக்கு யோர்ஜிய படைகள் உறை போடவும் பற்றாது. உருசியா யோர்ஜியாவை விட 30 மடங்கு பெரிய நாடு. இது ஆட்சித்தலைவர் சாகாஷ்விலிவுக்குத் தெரியாது என்று யாரும் சொல்லமுடியாது. மேலும் யோர்ஜியா உருசியாவின் பின் வளவு. அந்த நாடு வட அட்லாந்திக் உடன்பாட்டு அமைப்பில் (NATO) சேருவதை உருசியா எதிர்த்துவருகிறது. உருசியாவின் அண்டை நாடுகளான போலந்து மற்றும் செக் குடியரசு நாடுகளில் அமெரிக்கா ஏவுகணைப் பாதுகாப்புக் கேடயத்தை உருவாக்கியுள்ளது. இது உருசிய – அமெரிக்க உறவில் விரிசலை தோற்றுவித்துள்ளது. அமெரிக்கா அது ‘போக்கிரி’ (rogue) நாடுகள் ஏவும் ஏவுகணைகளைத் தடுப்பதற்கு அமைக்கப்படும் பாதுகாப்புக் கேடயம் என்று சொன்னாலும் உருசியா அதனை நம்பத்தயாராயில்லை. அந்தப் பாதுகாப்பு ஏவுகணைக் கேடயம் உருசியாவை இலக்காகக் கொண்டது என உருசியா நினைக்கிறது.

யோர்ஜியா மீதான உருசிய தாக்குதல் மொஸ்கவுக்கும் வோஷிங்டனுக்கும் இடையிலான பதில் யுத்தம் (proxi war) என்றே பலர் கருதுகிறார்கள். இது மீண்டும் இரண்டு நாடுகளுக்கு இடையிலான பனிப்போரை தொடக்ககூடும். யோர்ஜியாவை நேட்டோ அமைப்புக்குள் இழுத்து அதனைத் தனது எல்லை வரை கொண்டுவரும் அமெரிக்க முயற்சியையிட்டு நீண்டகாலமாக உருசியா கொதித்துக் கொண்டிருந்தது யாவரும் அறிந்ததே.

எது எப்படியிருப்பினும் இறைமை, ஆட்புல ஒருமைப்பாடு என்ற மந்திரச் சொற்களைச் சொல்லிக் கொண்டு எண்ணிக்கையில் பெரிய தேசிய இனங்கள் எண்ணிக்கையில் சிறிய தேசிய இனங்களைத் தாக்கி தங்கள் பிடிக்குள் வைத்திருக்கலாம் என்ற கோட்பாட்டுக்கு யோர்ஜியா மீது உருசிய மேற்கொண்ட தாக்குதல் வேட்டு வைத்திருக்கிறது.

பெரிய தேசிய இனங்கள்; சிறிய தேசிய இனங்களைத் வலோத்காரமாக – அவர்களது ஒப்புதல் இன்றி – அவர்கள் மீது சவாரி செய்யும் அல்லது சவாரி செய்ய நினைக்கும் மேலாண்மைப் போக்கைக் கைவிட்டால் உலகில் மோதல்கள் அருகி அமைதி ஏற்பட வழி பிறக்கும். யோர்ஜியா சொல்லித் தரும் அரசியல் பாடம் இதுதான். (உலகத்தமிழர் – ஆகஸ்ட் 15, 2008)


கருப்பு யூலை சொல்லித்தரும் பாடம்!
நக்கீரன்

இது 25 ஆவது கருப்பு யூலை நினைவு ஆண்டாகும். தமிழ் மக்களைப் பொறுத்தளவில் கருப்பு யூலை தமிழர்களைப் பூண்டோடு அழிக்க சிங்கள – பவுத்த பேரினவாதிகள் திட்டமிட்டு மேற்கொண்ட இனப் படுகொலை (genocide) ஆகும்.

கருப்பு யூலை தமிழ்மக்களின் ஆழ்மனதில் ஆணி அடித்தது போல் மாறாத காயத்தை – தீராத வடுவை – ஏற்படுத்தியுள்ளது. அதனை எத்தனை ஊழி சென்றாலும் யாராலும் அழிக்க முடியாது.

கருப்பு யூலை சிங்கள இனத்தையும் தமிழ் இனத்தையும் மனம், வாக்கு, காயம் மூன்றினாலும் ஒன்று சேராதபடி நிரந்தரமாகப் பிரித்து வைத்து விட்டது. 1983 ஆம் ஆண்டோடு ஒப்பிடும் போது சிங்கள இனத்துக்கும் தமிழ் இனத்துக்கும் இடையில் உள்ள இடைவெளி இன்று பல மடங்கு அதிகரித்துள்ளது.

யூலை இனப்படுகொலை மூலம் தமிழர்களை நாட்டைவிட்டுத் துரத்த வேண்டும் என்பது அன்றைய ஜெயவர்த்தன அரசின் குறிக்கோளாகும். தமிழர்களை நாட்டை விட்டுத் துரத்துவதன் மூலம் அவர்களது எண்ணிக்கையைக் குறைத்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கிவிடலாம் என ஜெயவர்த்தனா கணக்குப் போட்டார். ஆன காரணத்தினால் தமிழர்கள் தொகை தொகையாக இலங்கையை விட்டு வெளியேறுவதை அவர் உள்ளுர வரவேற்றார். அன்றைய சிங்கள – பவுத்த இனவாதிகளது எண்ணமும் அதுவாகவே இருந்தது.

நல்ல காலமாக தமிழ்மக்கள் எல்லோரும் ஒட்டுமொத்தமாக நாட்டை விட்டுத் தப்பி ஓடவில்லை. ஓடியிருந்தால் ஜெயவர்த்தனாவின் குறிக்கோள் தன்பாட்டில் நிறைவேறியிருக்கும். இனச் சிக்கல் தானாகவே தீர்ந்திருக்கும்.

ஜெயவர்த்தனா போட்ட கணக்குக்கு எதிர்மாறாக புலம் பெயர்ந்த தமிழர்கள் வெளியில் இருந்தவாறு விடுதலைப் போராட்டத்திற்கு தோள் கொடுத்தார்கள். இன்று புலம்பெயர்ந்த தமிழர்கள் சிங்கள – பவுத்த இனவாதிகளுக்கு தொண்டையில் சிக்கிய முள்போல் இருக்கிறார்கள். அதனால்தான் வி. புலிகளை மட்டுமல்ல, வி.புலிகளை ஆதரிக்கும் தமிழர் அமைப்புக்களையும் தடைசெய்ய வேண்டும் என்று மேற்குலக நாடுகளின் காலில் விழாத குறையாகக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அதில் அவர்கள் பேரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் எல்லோருமே தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்குத் தோள் கொடுக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. கணிசமான தொகையினர் தாயக மண்ணையும் அங்கு அல்லல்பட்டு அழுது கண்ணீர் விடும் மக்களையும் மறந்துவிட்டார்கள்.
புலி பிடித்துக்கொண்டு போய் கட்டி வைத்து பணம் கேட்டு சித்திரவதை செய்தார்கள். அதற்குப் பயந்து ஓடி வந்துவிட்டேன் என்று ‘கதை” விட்டு குடியுரிமை பெற்றவர்களும் நாட்டை மறந்துவிட்டார்கள்.

“நாங்கள் தமிழ்க் கனடியர்கள் அல்ல. நாங்கள் கனடியர்கள். கனடிய எல்லையிலேயே போராட்டம், விடுதலை, தாயகம், தேசியம், தன்னுரிமை எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு வந்துவிட்டோம்” என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

இன்னும் சிலர் “நாங்கள் நாட்டை விட்டு ஓடிவந்திராவிட்டால் இத்தறுதி செத்துப் புதைத்த இடத்திலும் புல்லும் முளைத்திருக்கும், நல்ல காலம் தப்பி வந்துவிட்டோம். புதிய வாழ்வு ஒன்றைத் தொடங்க வாய்ப்பளித்த கனடாவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்” எனக் கூறுகிறார்கள். இதனை மனதுக்குள் சொல்லிக் கொண்டால் பருவாயில்லை. வெட்கமோ துக்கமோ இல்லாது காற்றலையில் வந்து சொல்கிறார்கள். “கனடாவுக்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவேறியதைக் கொண்டாடும் முகமாக குருதிக் கொடை கொடுங்கள்” என்று செய்தி அறிக்கை கூட விடுகிறார்கள்.

குருதிக் கொடை கட்டாயம் கொடுக்க வேண்டியதுதான். கனடிய குடிமக்கள் என்ற முறையில் அது எங்களது சமூகக் கடமை. அதற்காக ஆண்டு முழுதும் குருதி கொடுக்க வேண்டுமா? கனடா நாளன்று கொடுத்தால் போதாதா? அதற்குச் செலவிடப்படும் நேரத்தையும் உழைப்பையும் தாயகத்தில் இடம்பெயர்ந்து அல்லல்படும் அவலப்படும் மக்களுக்கு ஒரு நேரக் கஞ்சி கொடுக்க உண்டியல் ஏந்தி நாலு காசு சேர்த்திருக்கலாமே? அந்த மக்கள் கண்ணீர் விட்டு அழும் குரல் இவர்கள் காதுக்குக் கேட்கவில்லையா?

இதன் மூலம் இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்? நாங்கள் கெட்டிக்காரர்கள், வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் எமது அப்பு ஆச்சி ஆடி ஓடி விளையயாடிய எம் மண்ணிலேயே மானத்தோடு வாழ்வோம் அல்லது போராடி வீழ்வோம் என்று சபதமெடுத்து நிற்பவர்கள் வாழத்தெரியாதவர்கள், ஏமாளிகள், கையாலாகதவர்கள் என்று சொல்லாமல் சொல்கிறார்கள்.

சரி கனடாவுக்கு நன்றி சொல்கிறார்களே அதே கனடாதான் 2006 இல் வி.புலிகளை பயங்கரவாத இயக்கம் எனத் தடை செய்தது. 2008 இல் உலகத் தமிழர் இயக்கம் விடுதலைப் புலிகளின் மறைமுக முன்னணி அமைப்பு என்று சொல்லி பயங்கரவாதப் பட்டியலில் பட்டியல் இட்டது.

உலகத்தில் ஒரு சமூக அமைப்பை பயங்கரவாதப் பட்டியலில் இட்ட “பெருமை”யும் “புகழும்” கனடாவைத்தான் சாரும். இவற்றுக்குத்தான் இவர்கள் நன்றி சொல்கிறார்களா?

1995 இல் உ.தமிழர் பொறுப்பாளர் சுரேஷ் மாணிக்கவாசகம் பயங்கரவாதத்தில் ஈடுபடும் வி.புலிகள் அமைப்பில் ஒரு உறுப்பினர் என்று குற்றம்சாட்டி கைது செய்து இரண்டு ஆண்டுகள் சிறையில் கனடா அரசு அடைத்து வைத்து அழகு பார்த்தது. அதற்கும் நன்றியா? இன்றும் நாடு கடத்தல் உத்தரவு அவர் தலைமீது வாள்போல் தொங்கிக் கொண்டிருக்கிறதே!

ஜெயவர்த்தனாவின் பின் ஆட்சிக் கட்டில் ஏறிய சிங்கள – பவுத்த இனவாதிகளின் குறிக்கோளும் தமிழர்களைக் கொல்வதின் மூலம் அவர்களது எண்ணிக்கையை குறைப்பதுதான். பல விதத்தில் அவரையும் இவர்கள் மிஞ்சிவிட்டார்கள். அமைதிக்கான போர் என்ற முழக்கத்தோடு சனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா 1995 இல் வடக்கில் பாரிய படை நடவஎக்கைகளை மேற்கொண்டார். தமிழ்மக்களுக்கு எதிராகக் கொடிய போரை முடுக்கிவிட்டார்.

யாழ்ப்பாணக் குடாநாட்டைக் கைப்பற்றி சிங்கக் கொடியை சந்திரிகா குமாரதுங்கா பறக்கவிட்டார். தமிழ்மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டார்கள். இலட்சக் கணக்கில் வீடு வாசல்களை இழந்து இடம் பெயர்ந்து ஏதிலியானார்கள்.

இப்போது ஆட்சித்தலைவர் மகிந்தா இராசபக்சே ஜே.ஆர். ஜெயவர்த்தனாவையே “நல்லவன்” ஆக்கிவிட்டார். “ஜே.ஆர். ஜெயவர்த்தனா பருவாயில்லை” என்று சொல்ல வைத்துவிட்டார்.

1983 யூலை மாத இனப் படுகொலையில் 3,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள். இன்று சிங்களப் படையினால் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 75,000 யும் தாண்டிவிட்டது. வெள்ளை வானுக்குப் பயந்து நூற்றுக் கணக்கான வணிகர்கள், ஊடகவியலாளர்கள் என நாட்டை விட்டே வெளியேறி விட்டார்கள்

கருப்பு யூலை இனப் படுகொலைக்கு இரண்டு கிழமைகளுக்கு முன்னர் இலண்டனில் இருந்து வெளியாகும் Daily Telegraph (யூலை 11, 1983) ஜே.ஆர். ஜெயவர்த்தனாவை நேர்கண்டு ஒரு செய்தியை வெளியிட்டது.

“I am not worried about the opinion of the Tamil people.. now we cannot think of them, not about their lives or their opinion … Really if I starve the Tamils out, the Sinhala people will be happy.”

“நான் தமிழ்மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றிக் கவலைப் படவில்லை. அவர்கள் பற்றி நாம் இப்போது சிந்தி;துப் பார்க்க முடியாது. அவர்களது உயிர்கள் பற்றியோ நினைப்புப் பற்றியோ……… சொல்லப்போனால் நான் தமிழர்களைப் பட்டினி போட்டால் சிங்கள மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள்.”

கருப்பு யூலை இனப் படுகொலை தொடங்கி 5 நாள்கள் மட்டும் ஆட்சித் தலைவர் ஜெயவர்த்தனா வெளியில் தலைகாட்டவே இல்லை. பின்னர் தொலைக்காட்சியில் தோன்றிய போது அவர் தமிழ் மக்களை விளித்து ஒரு ஆறுதல் வார்த்தை கூடச் சொல்லவில்லை. மாறாக வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் பேசினார். “சிங்கள மக்களது கோரிக்கைகளையும் அவர்களது தேசிய மரியாதையையும் ஏற்றுக் கொள்ளும் காலம் வந்து விட்டது” (“The time had come to accede to the clamour and the national respect of the Sinhalese people”)  என ஜெயவர்த்தனா மார் தட்டினார்.

ஜெயவர்த்தனாவின் மனப்பான்மை இன்றும் தொடர்கிறது. மகிந்தா இராசபக்சே ஜெயவர்த்னாவைப் போலவே தமிழ்மக்களுக்குத் தாயகம் என்று ஒன்றில்லை, தமிழர்கள் ஒரு தேசிய இனம் அல்ல, தமிழர்களுக்கு தன்னாட்சி உரிமை கிடையாது, அரசியல் சட்டத்தின் 13 ஆவது திருத்தத்தின் கீழ்த்தான் எந்தத் தீர்வும் இருக்கும். நாட்டில் இனச் சிக்கல் என்று ஒன்று இல்லை. இருப்பதெல்லாம் வி.புலிகளின் பயங்கரவாதந்தான். வடக்கை முழுதாகத் தாக்கிப் பிடிப்பதன் மூலந்தான் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியும் என்கிறார்.

“வி.புலிகளோடு பேச்சு வார்த்தை இல்லை. வி.புலிகள் அரசோடு பேச வேண்டும் என்றால் ஆயுதங்களை அவர்கள் கீழே போட வேண்டும்” இப்படிக் கொக்கரிக்கிறார் ஆட்சித்தலைவர் மகிந்தா இராசபக்சே!

எத்தனை பொங்கு தமிழ் நிகழ்ச்சிகள் வைத்து உரத்த குரலில் தாயகம், தேசியம், தன்னாட்சி இதுவே நமது மூச்சுப் பேச்சும் என்று உலகத் தமிழர் செய்தி சொன்னாலும் அது மகிந்தா இராசபக்சேக்கு அல்லது அவரது மதி மந்தி(ரி) களுக்கோ புரிய மாட்டேன் என்கிறது. புரியும் மொழியில் சொன்னால்தான் புரியும்.

வடக்குக் – கிழக்கில் வாழும் தமிழ் மக்களது உயிர் உடமை இரண்டுக்கும் எள்ளளவும் பாதுகாப்பற்ற நிலைமையே தொடர்கிறது.

நாளாந்தம் சிங்களப் படை வன்னியில் மேற்கொள்ளும் வான் தாக்குதலுக்கும் எறிகணை வீச்சுக்கும் தமிழ் மக்கள் பலியாகி வருகிறார்கள். கடந்த ஒரு கிழமையில் மட்டும் மல்லாவி, துணுக்காய், நெடுங்கேணி போன்ற ஊர்களில் இருந்து ஒரு இலட்சத்துக்கும் அதிகமான தமிழ்மக்கள் இடம் பெயர்ந்துள்ளார்கள். அவர்கள் சாலை ஓரங்களிலும் மர நிழல்களிலும் வானமே கூரையாகப் படுத்து எழும்புகிறார்கள். ஒரு நேர உணவுக்கே அல்லல் படுகிறார்கள். மூதூர் கிழக்கிலும் இதே நிலைமைதான்.

இந்த மக்களைப் பட்டினியிலும் பசியிலும் இருந்து காப்பாற்றும் பொறுப்பு புலம் பெயர்ந்த தமிழர்களின் தலையான கடமையாகும்.

இருபத்து அய்ந்து ஆண்டுகள் கழிந்தும் கருப்பு யூலை இனப் படுகொலைகள் தொடர்கிறது. ஒவ்வொரு மாதமும் கருப்பு யூலைகள் ஆகிவிட்டன. கருப்பு யூலைகள் ஒழிய வேண்டும் என்றால் – எமது மக்கள் நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் வாழவேண்டும் என்றால் – எமது மண் விடுதலை பெற வேண்டும். கருப்பு யூலை சொல்லித் தரும் பாடம் அதுதான்.


காங்கிரஸ் அரசுக்கு இந்திய – அமெரிக்க அணுசக்தி உடன்பாடு எமனாக அமையுமா?

இந்த உலகில் எதுவும் நிச்சயமில்லை. பொன் பொருள், பட்டம் பதவி, உற்றா உறவினர் எவரும் சதமில்லை. அதனால்தான் “காதறுந்த ஊசியும் வராதுகாண் கடைவழிக்கே” என்று பட்டினத்து அடிகளார் பாடினார்.

வாழ்வு நிச்சயமில்லை என்பது அரசியலுக்கும் பொருந்தும். படை பட்டாளம் சூழ ஆட்சி செய்யும் அரசியல் தலைவர்கள் முடியும் குடையும் இழந்து ஒருகால் தெருவுக்கு வரலாம்.

2004 ஆம் ஆண்டு மே மாதத்தில் நடந்த தேர்தலில் அதிக இருக்கைகளைக் கைப்பற்றிய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி இடதுசாரிகளின் வெளி ஆதரவோடு ஆட்சிக் கட்டில் ஏறியது. இப்போது இடதுசாரிகள் காலை வாரிவிட்டதால் அதற்குக் கண்டம் ஏற்பட்டுள்ளது. வருகிற செவ்வாய்க்கிழமை (யூலை 22) நடைபெறும் பலப்பரீட்சையில் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களது தலைப்பா தப்புமா இல்லையா என்பது தெரிந்துவிடும். போதிய ஆதரவைப் பெற முடியாமல் ஆளும் காங்கிரஸ் கூட்டணி திணறுகிறது.

மத்தியில் முதன்முதலாக அமைந்த மொரார்ஜி தேசாய் தலைமையிலான காங்கிரஸ் அல்லாத அரசு, 28 மாதங்கள் (மார்ச் 1977 முதல் யூலை 1979 வரை) மட்டுமே ஆட்சியில் நீடித்தது நினைவிருக்கலாம்.

அமெரிக்காவுடன் காங்கிரஸ் அரசு 2005 இல் செய்துகொண்ட அணுசக்தி உடன்பாடே இப்போது அதற்கு எமனாக மாறியுள்ளது. இந்த உடன்பாடு இந்தியா அணு தொழில்நுட்பம் மற்றும் எரிபொருள் ஆகியவற்றை இறக்குமதி செய்ய வழிகோலும். ஆனால் இந்தியா அனைத்துலக அணுசக்தி முகவத்தோடும் (International Atomic Energy Agency (IAEA)  அணுசக்தி வழங்கல் குழுவோடும் உடன்பாடுகள் செய்து கொள்ள வேண்டும். மேலும் இந்திய அரசு தனது சிவில் அணு வசதிகளை அனைத்துலக பரிசோதனைக்கு திறந்துவி;ட வேண்டும்.

அணுசக்தி உடன்பாடு கைச்சாத்திடதைத் தொடர்ந்து மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிகள் கடந்த யூலை 8 ஆம் நாள் விலக்கிக் கொண்டதால் மக்களவையில் தனது பலத்தை வாக்கெடுப்பு மூலம் எண்பிக்க வேண்டிய கட்டாயத்திற்கு அய்க்கிய முற்போக்கு கூட்டணி தள்ளப் பட்டுள்ளது. இந்திய – அமெரிக்க அணுசக்தி உடன்பாடு இந்தியா மீதான அமெரிக்க செல்வாக்கை, குறிப்பாக வெளியுறவு பற்றிய செல்வாக்கை அதிகரிப்பதாக இடதுசாரிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.. கடந்த நான்கு ஆண்டுகளாக மத்திய அரசை இடதுசாரிகளின் ஓயாது மிரட்டி வந்தது தெரிந்ததே.

மக்களவையில் இடதுசாரிகளுக்கு 59 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இடதுசாரிகள் ஆதரவு விலக்கிக் கொண்டாலும் 39 உறுப்பினர்களைக் கொண்ட சமாஜ்வாடி கட்சியின் ஆதரவையும் 6 சுயேட்சைகளின் ஆதரவும் உள்ளதால் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிக்கு பெரும்பான்மை கிடைத்துவிடும் என்று சில் செய்திகள் கூறுகின்றன.

இந்தப் பலப் பரீட்சையில் மத்திய அரசு வெற்றிபெற வேண்டுமானால் 543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் 271 உறுப்பினர்களின் ஆதரவை அரசு பெற்றாக வேண்டும். சமாஜ்வாடி கட்சியின் 39 உறுப்பினர்களின் ஆதரவு உட்பட 261 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே தற்போது உள்ளது. இதேபோன்று அரசுக்கு எதிராக வாக்களிக்கும் நா.உறுப்பினர்;களின் எண்ணிக்கை தற்போது 255 மட்டுமே.

இந்த எண் விளையாட்டில் வெற்றி பெற அரசு சார்பில் சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகளுக்கு காங்கிரஸ் வலை விரித்து வருகிறது. அரசுக்கு ஆதரவளிக்க ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்ட்ரீய லோக்தள், மதச்சார்பற்ற ஜனதா தளம், தேசிய மாநாட்டு கட்சி மற்றும் சுயேட்சைகள் நிபந்தனைகளை விதிக்கிறார்கள். இடதுசாரி கட்சித் தலைவர்களும் இக்கட்சிகளின் தலைவர்களை தொடர்பு கொண்டு அரசை கவிழ்க்கும் முயற்சிக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர். கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைவர் பிரகாஷ் கரத் சாதிக் கட்சியான பகுஜன் சமபஜ் கட்சியின் தலைவி மாயாவதியின் ஆதரவைக் கேட்டு அவரது வீட்டுக்கே காவடி எடுத்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் ராஷ்ட்ரீய லோக்தள் தலைவர் அஜித்சிங்கை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

வரலாற்றின் பிழையான பக்கத்தில் நிற்பதில் கம்யூனிஸ்டுகள் மகா கெட்டிக்காரர்கள். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தபோது அதனைப் போலிச் சுதந்திரம் என வருணித்தார்கள்.

அரசுக்கு எதிரான கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் பிஜேபி மும்முரமாக இறங்கியுள்ளது. சிரோமணி அகாலிதள், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆகிய கட்சிகள் நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களிக்கப் போவதாக அறிவித்து விட்டன.

அஜித்சிங்கின் ராஷ்ட்ரீய லோக்தள், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதாதள், சிபுசோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா போன்ற கட்சிகள் இன்னும் முடிவை அறிவிக்காதது காங்கிரஸ் தலைவர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அய்ந்து உறுப்பினர்களைக் கொண்ட ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவர் அமைச்சர் பதவி தந்தால் மட்டுமே ஆதரவு என அறிவித்துள்ளார். ஒரு கொலை வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டதால்தான் அமைச்சர் பதவியை துறக்க வேண்டி நேரிட்டது.

இந்த கட்சிகளின் ஆதரவை பெறும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ள போதிலும் அதில் இன்னமும் வெற்றி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த ஆதரவை திரட்டுவது மிகவும் கடினம் என்பதால் அரசு தோல்வியைச் சந்திப்பது தவிர்க்க இயலாதது என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் இது போன்ற வாக்கெடுப்புகளில் கடைசி நேரத்தில் கூட எதுவும் நிகழலாம் என்பதால் இரண்டும் கெட்டான் எதிர்பார்ப்பு நீடிக்கிறது.

ஓடு மீன் ஓடி உறுமீன் வருமளவும் காத்திருந்த கொக்குகள் இப்போது தங்கள் கைவரிசையைக் காட்டத் தொடங்கிவிட்டன!

வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதில் ஒவ்வொரு நா.உறுப்பினரின் வாக்கு முக்கியம் என்பதால் சந்தையில் தங்கம் போல் அவர்களது விலை கிடு கிடு என ஏறிவிட்டது. நரசிம்ம ராவ் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற மக்களவை உறுப்பினர்களுக்குத் தலா 5 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு 1993 இல் எழுந்தது. இப்போது ஒரு நா.உறுப்பினரின் விலை 25 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது!

1999 ஆம் ஆண்டு பிஜேபி அரசு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் ஒரு வாக்கால் தோற்கடிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

பொருளாதார சீர்திருத்தம், தனியார்மயம், உலகமயமாக்கல் என்றெல்லாம் சொல்லும்போதே சனநாயகம் பணநாயகமாக மாறும் அபாயம் இருக்கிறது என்று எழுப்பப்பட்ட எச்சரிக்கைகள் இப்போது உண்மையாகி விட்டன.

காங்கிரஸ் கட்சியிலேயே நான்கு நா.உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களிக்கப் போவதாக திடீரென போர்க்கொடி து}க்கி உள்ளனர்.

தற்போதைய அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ள 17 உறுப்பினர்களைக் கொண்ட பகுஜன் சமாஜ்; கட்சி அரசுக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக அறிவித்துள்ளது. காங்கிரஸ் சமஜவாவாதக் கட்சியோடு நெருங்கி வந்ததே இந்த அதிரடி அறிவித்தலுக்குக் காரணமாகும்.
ஏற்கனவே கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பஜன்லாலின் மகன் குல்தீப் மிஷ்னோய் அரசை எதிர்த்து வாக்களிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

அசாமில் முதலமைச்சர் தருண் கோகோயின் எதிர்ப்பாளரான குலாம் உஸ்மானியும் அரசுக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

இவர் ஏற்கனவே நடந்த சனாதிபதி தேர்தலில் கட்சி கட்டளையை மீறி வாக்கெடுப்பை புறக்கணித்ததுடன், துணை சனாதிபதி தேர்தலில் கட்சி முடிவுக்கு எதிராக வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போல கர்நாடக மாநிலத்தை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.எல்.ஜாலப்பாவும் காங்கிரசுக்கு எதிராக ஓட்டளிக்கப் போவதாகக் கூறிக் காங்கிரசின் தலைவலியை அதிகரித்துள்ளார். இவரது மகனுக்கு வரும் மக்களவை தேர்தலில் போட்டியிட இருக்கை ஒதுக்கப் போவதாக பிஜேபி உறுதி அளித்திருப்பதை தொடர்ந்து அவர் அதிருப்தி நா.உறுப்பினராக மாறி இருப்பதாக கூறப்படுகிறது.

கடைசியாக கிடைத்த தகவலின்படி மாண்டியா தொகுதி நா.உறுப்பினரும் முன்னாள் மத்திய இணையமைச் சருமான நடிகர் அம்பரீம் கட்சி தாவப் போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பிஜேபி கர்நாடக மாநிலத்தில் சில காங்கிரஸ் எம்.பி.க்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பிஜேபியைப் போலவே பகுஜன் சமாஜ் கட்சியும் அரசுக்கு எதிராக நா.உறுப்பினர்களை ஒன்று திரட்டுவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

மத்திய அரசும், அரசுக்கு எதிரான கட்சிகளும் குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் சிறையில் இருக்கும் 4 நா.உறுப்பிர்கள் நீதிமன்ற அனுமதியோடு வாக்கெடுப்பில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்! ஆயுள் தண்டனை பெற்றுள்ள ராஷ்ட்ரீய ஜனதாதள கட்சியைச் சேர்ந்த முகமது சகாபுதீன், லோக் ஜனசக்தி கட்சியைச் சேர்ந்த சுரஜ் பண் ஆகியோர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள பாட்னா உயர்நீதி மன்றம் அனுமதி அளித்துள்ளது. இதேபோன்று உ.பி. நா.உறுப்பினர் அடிக் அகமதுக்கும் அலகாபாத் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஆனால், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி நா.உ. பப்பு யாதவ், சமாஜ்வாடி கட்சி நா.உ. .அப்சல் அன்சாரி, பகுஜன் சமாஜ் கட்சி நா.உ. உமாகாந்த் ஆகியோர் நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை.

தமிழகத்தைப் பொறுத்தளவில் காங்கிரஸ் (10), திமுக (16) பாமக (6) மதிமுக (2) ஆதரித்து வாக்களிக்கும். எஞ்சிய 2 மதிமுக நா.உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களிப்பார்கள். திமுக நா.உறுப்பினர் தயாநிதி மாறன் எந்தப் பக்கம் என்று தெரியவில்லை. மத்திய அரசை ஆதரித்து வாக்களிக்கும் மதிமுக நா.உறுப்பினர்கள் கட்சி தாவும் சட்டத்தின் கீழ் பதவி இழக்க நேரிடலாம்.

பரபரப்பான தில்லி அரசியல் சூழ்நிலைக்கிடையே ஒவ்வொரு கட்சியும் தங்கள் நா.உறுபினர்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்கத் தொடங்கிவிட்டன. வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு 2 நாள்களுக்கு முன்னதாக ஞாயிற்றுக்கிழமையன்று சோனியா காந்தியும், அத்வானியும் தத்தம் அணி எம்.பி.க்களுக்கு விருந்து அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்போதைய நா. உறுப்பினர்களின் சராசரி சொத்து மதிப்பு என்ன தெரியுமா? நமது உறுப்பினர்கள் தேர்தலின்போது அளித்த தரவுகளின்படி அவர்களது சராசரி சொத்து மதிப்பு ரூ. 1.64 கோடி. அதாவது, மாண்புமிகு நா. உறுப்பினர்களில் பெருவாரியானவர்கள் கோடீஸ்வரர்கள். அதுமட்டுமல்ல, அவர்களில் பலர் கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டவர்கள்.

பல்வேறு தொழில் நிறுவனங்கள் உருவாக்கியிருக்கும் அறக்கட்டளைகள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் இதுபோன்ற அறக்கட்டளைகள் மூலம் காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் பெற்றிருக்கும் நன்கொடை மட்டும் ரூ. 104 கோடி. மற்ற கட்சிகளின் பங்கு எவ்வளவு என்று தெரியவில்லை.

ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. நமது சார்பில் சட்டமியற்றும் ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் கட்சிகளும் நா. உறுப்பினர்களும் சராசரி இந்தியனின் பேராளனாகச் செயல்படவில்லை. கோடீஸ்வரர்களான இவர்கள் கோடீஸ்வரர்களின் குரலைத்தான் ஒலிக்கிறார்கள். அதன் விளைவுதான் இப்போது நடைபெறும் Corporate War  என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் தொழில் குழுமங்களுக்கிடையே ஆன போட்டி ஆகும்.

தாராளமயம் என்கிற பெயரில் தனியார் நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடுகள் அகற்றப்படும்வரை டாடா, பிர்லா, பஜாஜ், கோத்ரெஜ், டி .வி.எஸ், மோடி என்று எத்தனையோ இந்தியத் தொழில் குழுமங்கள் செயல்பட்டன. ஆனால் அவர்கள் யாருமே தங்களது பணபலத்தால் அரசியல் செல்வாக்குப் பெற்று ஆட்சி அதிகாரத்தின் மூலம் தங்களது தொழில் எதிரிகளை வீழ்த்தும் முயற்சியில் ஈடுபடவில்லை. தங்களது பணபலத்தால் அரசிடமிருந்து ஆதாயங்கள் பெற்றனரே தவிர அரசையே விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபடவில்லை.

இப்போது, ரிலையன்ஸ் குழுமத்தில் ஏற்பட்டுள்ள பிளவும், அம்பானி உடன்பிறப்புக்கள் மத்தியில் நடைபெறும் போட்டாபோட்டியும் இந்திய அரசின் தலையெழுத்தை யார் தீர்மானிக்கிறது என்கிற அளவுக்கு வளர்ந்திருக்கிறது.

அனில் அம்பானிக்கு நெருக்கமான சமாஜ்வாதி கட்சி, ஆளும் கூட்டணிக்கு ஆதரவளிப்பதற்கு விதித்திருக்கும் நிபந்தனைகளில் சில, அனில் அம்பானியின் தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு சாதகமாகவும் முகேஷ் அம்பானியின் நிறுவனத்தைப் பாதிக்கும் வகையிலும் இருப்பதாகக் கூறப்படுகிறது. முகேஷ் அம்பானிக்குச் சாதகமாக நடந்து கொண்டார் என்பதாலேயே பெட்ரோலியத் துறைச் செயலர் மாற்றப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

தனது தம்பியான அனில் அம்பானியின் செயல் அண்ணன் முகேஷ் அம்பானியை பிரதமரிடம் தஞ்சமடையச் செய்து அரசுக்கு எதிராக தான் செயல்பட மாட்டேன் என்கிற உறுதியை அளிக்க வைத்திருக்கிறது. இரு தரப்புமே தங்களது தொழில் யுத்தத்திற்கு அரசியல் குழப்பத்தை சாதகமாக்கிக் கொள்கிறார்கள் என்பதே உண்மை.

தங்களைக் காப்பாற்றிக் கொள்ளத் தொழில் குழுமங்கள் அரசியல்வாதிகளையும் அரசியல் கட்சிகள் தங்களது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளத் தொழிலதிபர்களையும் நாடுகின்றன. ஏற்கெனவே, அரசியல்வாதிகளுக்கும் கிரிமினல்களுக்கும் இடையேயான, “மாமன் – மைத்துனர்’ உறவு இணைபிரிக்க முடியாத பந்தபாசமாகிவிட்டது

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டால் மக்களவை கலைக்கப்பட்டு தேர்தல் நடைபெறும். கருத்துக் கணிப்பின்படி அதற்கு 33 விழுக்காடு ஆதரவு மட்டுமே உண்டு. இது அதற்கு 183 – 193 வரையிலான இருக்கைகளை பெற்றுக் கொடுக்கும். தேசிய சனநாயகக் கூட்டணிக்கு 32 விழுக்காடு ஆதரவு உண்டு. இது 179 – 189 இருக்கைகளைக் கைப்பற்ற உதவும். பகுஜன் சமாஜ் கட்சிக்கு (மாயாவதி) 56 இருக்கைகள் கிடைக்கும். மூன்றாம் அணிக்கு 52 – 62 இருக்கைகள் கிடைக்கும். இடதுசாரிகளுக்கு 37 – 47 இருக்கைகள் கிடைக்கும்.

பிரதமர் யார் என்பதில் அத்வானிக்கு 17 விழுக்காடு ஆதரவு இருக்கிறது. சோனியா காந்திக்கு 15 விழுக்காடு, ராகுல் காந்திக்கு 12 விழுக்காடு, முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு 11 விழுக்காடு ஆதரவு இருக்கிறது.

இந்திய – அமெரிக்க அணுசக்தி உடன்பாடு காரணமாக அரசு கவிழ நேரிட்டாலும் விலைவாசி உயர்வு, பணவீக்கம் (11.91 விழுக்காடு) ஊழல் போன்றவையே முக்கியம் என 52 விழுக்காடு வாக்காளர்கள் நினைக்கிறார்கள். இந்திய – அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டை 42 விழுக்காட்டினர் ஆதரிக்கின்றனர். எதிர்ப்போரது விழுக்காடு 23 மட்டுமே.

நம்பிக்கை வாக்கெடுப்பில் கவிழாது தப்பினால் மன்மோகன் அரசு அனைத்துலக அணுசக்தி முகவத்தோடு (International Atomic Energy Agency)   உடன்பாடுகள் செய்து கொள்ளும். தனது சிவில் அணு வசதிகளை அனைத்துலக பரிசோதனைக்குத் திறந்துவிடும். வாக்கெடுப்பில் தோற்றால் பத்து மாதங்கள் முன்னதாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு புதிய தேர்தல் நடைபெறும். (Ulagaththamilar – July 19,2008)


ஸ்ரீலங்கா இனவாத அரசு முன்னெடுக்கும் போருக்குப் பச்சைக் கொடி காட்டிய இந்தியா!

மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என்பது போல கொழும்புக்குசட சடுதியாகச் சென்று 36 மணித்தியாலங்களில் அரசதலைவர் இராசபக்சே உட்பட பலரோடு பேசிவிட்டு நாடு திரும்பிய மும்மூர்த்திகள் என்ன பேசினார்கள் அல்லது என்ன பேசவில்லை என்பது பற்றி தென் இலங்கை ஊடகங்கள் பேரளவு ஊகத்தின் அடிப்படையில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கின்றன.

தமிழ் ஊடகங்களைப் பொறுத்தளவில் மும்மூர்த்pகளின் வருகைக்குப் பின்னால் ஏதோ பெரிய மாற்றம் இருக்கும் என எழுதித் தள்ளின. மக்களைப் பொறுத்தளவிலும் ஏதோ இந்தியா ஒரு நாளும் இல்லாத திருநாளாக மண்வெட்டி கடகத்தோடு தமிழர்களுக்கு அள்ளிக் கொடுக்கப் போவதாக பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

தமிழ்மக்கள் ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியா தமிழர் நலம் பேணும் அல்லது நலம் விரும்பும் நாடல்ல. நாம்தான் இந்தியா மகாத்மா காந்தி பிறந்த தேசம் ஜவகர்லால் நேரு வாழ்ந்த நாடு என்று நினைக்கிறோம். இந்தியா அப்படி நினைப்பதில்லை. இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்த ஆண்டே 10 இலட்சம் தமிழ்மக்களது குடியுரிமை பறிக்கப்பட்டு நாடற்றவர்களாக ஆக்கப்பட்டார்கள். அடுத்த ஆண்டு (1949) அவர்களது வாக்குரிமை பறிக்கப்பட்டது. 1947 இல் நாடாளுமன்றத்துக்கு 7 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பிய மலைய மக்கள் 1952 இல் நடந்த தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியவில்லை. இவற்றை காந்தி, நேரு பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் வந்தவர்களும் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள். அறுபதுகளின் நடுப்பகுதியில் 6 இலட்சம் மலையகத் தமிழர்கள் சாஸ்திரி – ஸ்ரீமா பண்டாரநாயக்கா உடன்பாட்டின் கீழ் நாடு கடத்தப்பட்டார்கள். இதனால் மொத்த மக்கள் தொகையில் தமிழர்களது விழுக்காடு 26 இல் இருந்து 19 விழுக்காடு ஆகக் குறைந்தது.

தமிழ்மக்கள் இரண்டு மாயையில் இருந்து விடுபட வேண்டும் என்று தேசியத்தலைவர் பிரபாகரன் சொல்வார். ஒன்று ஆரியமாயை. இரண்டு இந்திய மாயை.

இந்தியாவின் ஆட்சி அதிகாரம் இந்தி பேசுகின்ற உத்தரபிரதேசதம், மத்திய பிரதேசம், பீகார், இராஜஸ்தான போன்ற வடமாநிலங்களின் கையில்தான் இருக்கிறது. அவர்களுக்கு தமிழர் நலன் என்பது எட்டிக்காய் போன்றது. தமிழ்நாட்டுத் தமிழர்கள் பற்றியே அவர்கள் கவலைப் படுவது கிடையாது. பின் இலங்கைத் தமிழர்களைப் பற்றி ஏன் கவலைப் படப் போகிறார்கள்? இலங்கை சுதந்திரம் பெற்று இதுநாள் வரை ஒரு தமிழர் இந்தியாவின் தூதுவராக அந்த நாட்டுக்கு அனுப்பப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்காவுக்குச் சென்ற மூன்று உயர் அதிகாரிகளில் இரண்டு பேர் மலையாளிகள். ஒருவர் வடமாநிலத்தவர். மலையாளிகளுக்கும் தமிழகத் தமிழர்களுக்கும் ஆகாது என்பது முல்லைப்பெரியார் அணைக்கட்டு பற்றிய இழுபாடு நல்ல எடுத்துக்காட்டாகும்.

சில மாதங்களுக்கு முன்னர் ஒரு செய்தியாளர் மாநாட்டில் பேசிய பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் வி.புலிகள் இந்தியாவின் பங்குச்சந்தையில் முதலீடு செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார். பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் அளவிற்கு புலிகள் பணபலம் உள்ளவர்கள் என்பதை நாராயணன் வாயால் கேட்க எமக்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.
கடந்த பல ஆண்டுகளாக இந்தியா – அது காங்கிரஸ் ஆட்சியாக இருந்தாலும் சரி அல்லது பா.ஜ. கட்சி ஆட்சியாக இருந்தாலும் சரி – ஈழத்தமிழர்களது விருப்பத்தை நிறைவு செய்யும் வண்ணம் ஒரு அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் இனச் சிக்கலுக்கு அமைதியான வழியில் – பேச்சுவார்த்தை மூலம் தீர்வு எட்டப்பட வேண்டும் என்று கிளிப்பிள்ளை மாதிரி ஒரே பல்லவியைப் பாடி வருகிறது. ஒரு சின்ன மாற்றம். முன்னர் தமிழ்மக்களது விருப்பத்தை நிறைவு செய்ய வேண்டும் என்று கேட்டு வந்த இந்தியா இப்போது இலங்கைத் தீவில் வாழும் சிங்கள, முஸ்லிம் மற்றும் தமிழர்களது அரசியல் விருப்புகளை நிறைவு செய்யும் ஒரு தீர்வை ஸ்ரீலங்கா முன்வைக்க வேண்டும் என்று சொல்கிறது. பெரும்பான்மை சிங்களவர்களது விருப்புகள் என்ன? அவர்கள் கையில்தானே ஆட்சிக் கயிறு இருக்கிறது?

ஸ்ரீலங்கா சென்ற இந்திய அதிகாரிகள் போரை நிறுத்தச் சொல்லவில்லை. வி.புலிகளுக்கு எதிரான போர் நடக்கும் முனைகள் பற்றிய விளக்கத்தை இராணுவ தளபதி சரத் பொன்சேகா மற்றும் கடற்படைத்தளபதி வசந்தா கரணகொட நிழற்படம் மூலம் கொடுத்தார்கள். விளைவு? ஸ்ரீலங்காவுக்குத் தேவையான யுத்த தளபாடங்கள் அனைத்தையும் தருவதாக இந்திய அதிகாரிகள் சொல்லிவிட்டார்கள். “நாமிருக்கப் பயமேன்? இந்தியா இருக்க சீனா, பாகிஸ்தானிடம் ஏன் ஆயுதம் வாங்க வேண்டும்? நாமே அவற்றைத் தருகிறோம்” என நாராயணன் முன்னர் பேசியிருநதது நினைவிருக்கலாம்.
இந்திய – இலங்கை உடன்பாட்டின் கீழ் ஒன்றிணைக்கப்பட்ட வட-கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டு அங்க தேர்தலும் நடந்து முடிந்து விட்டது. இந்தியா இதுபற்றி மூச்சே விடவில்லை.

இனச் சிக்கலுக்கு தீர்வு காண அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சி மநாடு குற்றுயிரும் குறை உயிருமாகக் கிடக்கிறது. தமிழர்களால் – மிதவாதத் தமிழ்க் கட்சிகளால் – புறக்கணிக்கப்பட் 13 ஆவது சட்ட திருத்தத்தை ஸ்ரீலங்கா நடைமுறைப் படுத்துகிறது. திருத்தத்தில் மாகாணங்களுக்கு ஒதுக்கப்பட்ட காவல்துறை மற்றும் காணி பற்றிய அதிகாரங்கள் பிடுங்கப்பட்ட நிலையிலும் இந்தியா அதனை வரவேற்றிருக்கிறது.

தமிழ்ப் பகுதிகளில் குண்டு வீசப்படுவதால் சாகும் தமிழர்களைப் பற்றி இந்தியா கவலை தெரிவிக்கவில்லை. அவசரகாலச் சட்டத்தின் கீழ் நடைபெறும் கைதுகள், சித்திரவதைகள், கொலைகள், கொள்ளைகள், ஆள்கடத்தல், காணாமல் போதல் பற்றி இந்தியா ஒரு வார்த்தை சொல்லவில்லை. மாறாக அய்க்கிய நாடு மனிதவுரிமை அவையில் ஸ்ரீலங்காவை ஆதரித்து வாக்களித்த 101 நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

இந்தியாவை எப்படி வழிக்குக் கொண்டுவரலாம்? வி.புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் ப. நடேசன் சொன்னது போல தமிழகத்தில் வாழும் 7 கோடி மக்கள் எழுச்சி பெறவேண்டும். தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கும் மதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள், திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம், தமிழர் தேசிய இயக்கம், திராவிட தமிழர் பேரவை ஒன்றுபட்டு ஒரே குரலில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து உரத்துக் குரல் கொடுக்க வேண்டும். அப்போதுதான் இந்தியாவின் கவனத்தை கொஞ்சமாவது எமது பக்கம் திருப்பலாம். (Thamilcholai – June 29, 2008)


வெள்ளை மாளிகையில் கறுப்பர் ஒருவர் ஆட்சித் தலைவரா?

ஒரு ஆண்டுக்கு முன்னர் ஒரு கறுப்பர் ஆட்சித் தலைவர் தேர்தலில் வென்று வெள்ளமாளிகையில் குடியேறுவார் என எவராவது எதிர்கூறல் கூறியிருந்தால் அது வெறும் பகற்கனவு என்று நினைத்திருப்பார்கள்.

இப்போது அந்தப் பகற் கனவு விரைவில் மெய்ப்படப் போகும் வாய்ப்பு ஒளிமயமாக உள்ளது.

2004 ஆம் ஆண்டு நொவெம்பர் 02 ஆம் நாள் இலிநோஸ் மாநிலத்தில் இருந்து மக்களாட்சி வேட்பாளராக அமெரிக்க மேலவைக்குப் போட்டியிட்டு பராக் ஒபாமா (Barack Obama)  வெற்றி பெற்றார். அதுவரை பராக் ஒபாமா என்ற பெயரை யாரும் கேட்டிருக்கவில்லை. உண்மையில் ஒபாமா அமெரிக்க மேலவைக்குத் தெரிவு செய்யப்படு முன்னர் மாநில மேலவையில் 7 ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்கிறார்.

அமெரிக்க நாட்டின் வரலாற்றை – குறிப்பாக கறுப்பு இனமக்களது வரலாற்றை – படித்தவர்கள் ஒரு கறுப்பர் அமெரிக்காவின் ஆட்சித்தலைவராக எக்காலத்திலும் வரமுடியாது என்றே எண்ணுவார்கள்.

அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகை 281,421,906 பேர். இதில் வெள்ளை இனத்தவர் எண்ணிக்கை 211,460,628 (75.1 விழுக்காடு) கறுப்பு அல்லது ஆபிரிக்க – அமெரிக்க இனத்தவர் தொகை 34,658,190 (12.4 விழுக்காடு). கறுப்பர்கள் சமூக, பொருளாதாரத் துறைகளில் இனப்பாகு பாட்டுக்கு உள்ளாக்கப்பட்ட சிறுபான்மை மக்களாவர். வெள்ளை இனத்தவரோடு ஒப்பிடும் போது அவர்களது கல்வி, வேலைவாய்ப்பு, வாழ்;க்கைத் தரம் கீழ்நோக்கி இருக்கிறது. இந்தப் பின்புலத்தில் ஒபாமா மக்களாட்சிக் கட்சி ஆட்சித்தலைவர் வேட்பாளாராகக் கடந்த யூன் 8, 2008 இல் தெரிவு செய்யப்பட்டது பெரிய வரலாற்றுச் சாதனை ஆகும்.

ஒபாமா ஆட்சித்தலைவர் பதவிக்கு எதிர்வரும் நொவெம்பர் மாதம் இடம் பெறும் தேர்தலில் வெற்றி பெற்றால் அது உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கப் போகிறது.

பரக் ஒபாமாவை கறுப்பு இன்தவர் என்றோ ஆபிரிக்க – அமெரிக்க இனத்தவர் என்றோ சொல்வது முற்றிலும் சரியாக இருக்காது. காரணம் அவரது தந்தையார் கென்யா நாட்டில் பிறந்த கறுப்பர்.; மதத்தால் முஸ்லிம். தாயார் வெள்ளை நிறத்தவர். சமயத்தால் கிறித்தவர். ஒபாமாவின் தந்தை ஹாவாட் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரம் படித்துக் கொண்டிருந்த போதுதான் ஒபாமாவின் தாயாரைக் காதல் மணம் செய்து கொண்டார். ஆனால் ஒபாமாவுக்கு 2 அகவை நிறையுமுன் மனைவியையும் மகனையும் விட்டுப் பிரிந்து போய்விட்டார். அதன்பின்; தந்தையார் ஒரேயொரு முறைதான் ஒபாமாவைப் பார்த்திருக்கிறார். அவர் 1982 இல் இயற்கை எய்தினார். இந்தோனிசிய நாட்டவரை மறுமணம் செய்து கொண்ட ஒபாமாவின் தாயார் 8 ஆண்டுகள்
இந்தோனிசியாவில் வாழ்ந்தார். ஒபாமாவுக்கு 10 அகவை நடக்கும்போது ஹவாய் மாநிலத்துக்குத் திரும்பினார். அங்கு ஒபாமாவை அவரது தாய்வழிப் பாட்டியும் பாட்டனும் எடுத்து வளர்த்தார்கள்.

தந்தை முஸ்லிம் ஆக இருந்தாலும் ஒபாமா கிறித்தவர். அவரது மனைவி பிள்ளைகளும் கிறித்தவர்கள். இவர்கள் United Church of Christ  என்ற தேவாலயத்தைச் சேர்ந்தவர்கள்.

ஒபாமாவின் முழுப் பெயர் ஒபாமா குசேன் ஒபாமா. இதை வைத்துக்கொண்டு அவர் ஒரு முஸ்லிம் என்று பரப்புரை செய்யப்பட்டது. ஆனால் அது மக்களிடம் எடுபடவில்லை.

அரசியல்வாதிக்குப் பேச்சுத்திறமை இருக்க வேண்டும் என்பார்கள். ஒபாமாவின் அரசியல் வெற்றிக்கு அவரது பேச்சுத் திறமை முக்கிய காரணியாகும். ஆங்கிலத்தில் ஆணித்தரமாகவும் மக்களைக் கவரும் வகையிலும் பேசுகிறார். உண்மைகளை எந்தப் பயமும் இன்றி – ஒளிவுமறைவின்றி – உண்மையாகப் பேசுகிறார். இது அவரது பலங்களில் ஒன்று. ஒபாமா நல்ல பேச்சாளர் என்ற பெயரோடு நல்ல எழுத்தாளர் என்ற பெயரையும் எடுத்திருக்கிறார். 2004 இல் மூன்று நூல்களை எழுதினார். அதற்கு அவர் பெற்றுக்கொண்ட ஊழியம் 1.9 மில்லியன் டொலர்கள். முதல் நூலின் பெயர் நம்பிக்கைக்கான துணிச்சல் (The Audacity of Hope) இந்த நூல் அவரது அரசியல் கோட்பாடுகளை விளக்குகிறது. இன்று இவரது நூல்கள் அமெரிக்காவில் அதிகளவில் விற்பனையாகின்றன.

ஒபாமா ஆகஸ்ட் 4, 1961 இல் பிறந்தார். கொலம்பியா பல்கலைக் கழகத்தில் கல்வி -கற்று இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் புகழ் வாய்ந்த ஹாவாட் சட்டக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றார். பின்னர் சிகாகோ சட்டப் பள்ளியில் அரசியல் சட்டம் படிப்பிக்கும் விரைவுரையாளராகப் பணியாற்றினார். அவரது மனைவியும் (Michelle Robinson)  ஒரு வழக்கறிஞர். ஹாவாட் சட்டக் கல்லூரிப் பட்டதாரி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் (Malia and Sasha) உண்டு.

ஒபாமா விரும்பியிருந்தால் கொழுத்த சம்பளத்தில் பெரிய சட்ட குழுமத்தில் வேலை பார்த்திருக்கலாம். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. குமுகாயம் தொடர்பான வழக்குகளில் தோன்றி சாதாரண மக்களுக்காக வாதாடினார்.
\
2005 ஆம் ஆண்டு உலகின் மிகவும் செல்வாக்குப் படைத்த 100 பிரமுகர்களில் ஒபாமாவும் ஒருவராக இனம் காணப்பட்டார். 2006 இல் அவர் ஆபிரிக்கக் கண்டத்துக்கு சென்றபோது இலட்சக்கணக்கான கறுப்பு இனமக்கள் அவருக்கு மகத்தான வரவேற்பு அளித்தார்கள்.

2004 ஆம் ஆண்டு நடந்த மக்களாட்சிக் கட்சியின் தேசிய மாநாட்டில் ஒபாமாதான் முக்கிய உரை நிகழ்த்தினார். அந்த உரை அவரை புகழின் உச்சத்துக்கு இட்டுச் சென்று நாடறிந்த அரசியல்வாதியாக்கியது.

ஒபாமாவுக்கு எவ்வளவு திறமை இருந்தாலும் பொதுநல உணர்வு இருந்தாலும் ஆட்சித்தலைவருக்கான தேர்தலில் அவர் கடுமையான போட்டியைச் சந்திக்க நேரிடும் என எதிர்பார்க்கலாம்.

ஆட்சித்தலைவர் ஆகத் தான் தெரிவு செய்யப்பட்டால் அமெரிக்க அரசியல், பொருளாதார, சமூக தளங்களில் பாரதூரமான தலைகீழ் மாற்றத்தைக் கொண்டுவரப் போவதாக ஒபாமா மேடை தோறும் பேசி வருகிறார். எடுத்துககாட்டாக ஏழை, எளிய மக்களின் வீடு, மருத்துவம், மருத்துவக் காப்புறுதி, வேலையின்மை போன்ற சிக்கல்களைத் தீர்த்து வைக்கப்போவதாகச் சொல்கிறார். வெள்ளை மாளிகையில் முகாம் இட்டிருக்கும் தரகர்களை அங்கிருந்து வெளியேற்றப் போவதாகச் சூளுரைத்துள்ளார். பதவி ஏற்றதும் முதல்வேலையாக இராக்கில் இருந்து அமெரிக்கப் படையை உடனடியாகத் திருப்பி அழைக்கப் போவதாகச் சொல்கிறார். புஷ் இராக் மீது படையெடுத்தபோது அந்தத் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த செனட்டர்களில் ஒபாமாவும் ஒருவர்.

நடைமுறையில் இது எவ்வளவு தூரம் சாத்தியம் என்பது தெரியவில்லை. குடியரசுக் கட்சி வேட்பாளர் யோன் மக்கெயின் (John McCain) அமெரிக்கப் படைகள் அடுத்த நூறு ஆண்டுகளுக்கு இராக்கில் நிலைகொண்டு இருக்கும் எனச் சொல்கிறார்.

ஆட்சித்தலைவர் புஷ் இரான் வழிக்கு வராவிட்டால் – அணுக்குண்டு தயாரிப்புக்கான முயற்சியைக் கைவிடாத பட்சத்தில் – அதன் மீது இராணுவத் தாக்குதல் நடத்தப் போவதாகப் பயமுறுத்தி வருகிறார். மறுபுறம் இரானின் அணுசக்தி சிக்கல்பற்றி அந்த நாட்டுத் தலைவர்களோடு பேசுவேன் என்கிறார் ஒபாமா.

ஒபாமாவின் வெளியுறவுக் கொள்கையில் முரண்பாடு இல்லாமல் இல்லை. உலக மட்டத்தில் ஒரு புதிய ஒழுங்கையும் நீதியையும் அமைதியையும் கொண்டுவரப் போவதாகவும் இராக்கில் இருந்து அமெரிக்கப் படைகளைத் திருப்பி அழைக்கப் போதவதாகவும் சூளுரைக்கும் ஒபாமா ஆப்கானிஸ்தானில் அல் கொய்தா தீவிரவாதிகளைக் குண்டு போட்டு ஒழித்துக்கட்டப் போவதாக மார் தட்டு;கிறார்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் (யூன் 10) அமெரிக்கா ஆப்கனிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் அல் கொல்தா தீவிரவாதிகளுக்கு ஆதரவாகப் போரிடும் பஸ்தூன் துணைப்படை (அல் கொய்தாவும் பெரும்பான்மை பஸ்தூனியர்களைக் கொண்ட அமைப்புத்தான்) மீது பதிலடியாக மேற்கொண்ட ஆட்டிலறி மற்றும் விமானத் தாக்குதலில் 11 பாகிஸ்தானிய படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு மட்டும் பொதுமேனி 50 பாகிஸ்தான் படைவீரர்கள் அமெரிக்கப் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். இது அமெரிக்காவின் வழக்கமான தான்தோன்றித்தனமான அகந்தையைக் காட்டுகிறது. இந்தத் தாக்குதலை ஒபாமா கண்டிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சென்ற ஆண்டு ஆகஸ்ட் முதல் நாள் ஒரு கூட்டத்தில் பேசும்போது ஒபாமா அமெரிக்கா பாகிஸ்தான் எல்லைக்குள் இருக்கும் இலக்குகளைக் குண்டு போட்டு அழிக்க வேண்டும் என்றார். “நான் நொவெம்பர் 2008 இல் நடைபெற இருக்கும் ஆட்சித்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றால் பாகிஸ்தான் எல்லைக்குள் இருக்கும் தீவிரவாதிகள் மீது – பாகிஸ்தான் ஆதரித்தாலும் சரி ஆதரிக்கவிட்டாலும் சரி – தாக்குதல் நடத்துவேன். எங்களுக்குப் பயங்கரவாதிகளது இலக்குகள் பற்றி சரியான உளவு கிடைத்து பாகிஸ்தான் ஆட்சித்தலைவர் நடவடிக்கை எடுக்கத் தவறினால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்” என்று சூளுரைத்தார்.

எனவே ஒபாமா தான் பதவிக்கு வந்தால் தலைகீழான மாற்றத்தைக் கொண்டு வருவேன் என்பது வாயளவில்தான் இருக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் நினைக்கிறார்கள். அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் பெரிய மாற்றம் எதுவும் நடைபெறும் என எதிர்பார்க்க முடியாது. அரசியல்வாதிகள் தேர்தலில் வெல்வதற்காக “தேவைப்பட்டால் நிலாவில்; இருந்து அரிசி கொண்டுவருவேன்” எனச் சொல்வார்கள். வாக்குறிகளை அள்ளி வீசுவதில் அரசியல்வாதிகளுக்கிடையே முதலாம் உலக நாடு மூன்றாம் உலக நாடு என்ற வேற்றுமை கிடையாது.

உலகத்தைக் கட்டி ஆளவேண்டும் என்ற ஆசையே அமெரிக்காவின் அடிப்படை வெளியுறவுக் கொள்கை ஆகும். ஒபாமா பதவிக்கு வந்தாலும் சரி வராவிட்டாலும் சரி இந்தக் கொள்கை தொடரும். இஸ்ரேல் நாட்டின் மிக நெருங்கிய நட்பு நாடாக அமெரிக்கா விளங்கும் என்று ஏற்கனவே ஒபாமா சொல்லிவிட்டார். அப்படியானால் இஸ்ரேலின் விருப்பப்படி அமெரிக்கா இராக்கைத் தனது பிடிக்குள் தொடர்ந்து வைத்திருக்கும். அண்மையில் இராக்கோடு அமெரிக்கா செய்து கொண்ட ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்கா 50 இராணுவ தளங்களை இராக்கில் நிறுவ இருக்கிறது. எண்ணெய் ஏற்றுமதியிலும் அமெரிக்காவுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.

ஒரு சுதந்திரமான இராக்கை அமெரிக்கா விரும்பாது. காரணம் சுதந்திரமான இராக் இஸ்ரேலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும். மத்திய கிழக்கில் இராக், இரான், சிரியா, ஹமாஸ், ஹெஸ்புல்லா, பாலஸ்தீனம் மத அடிப்படையில் ஒன்றுபடுவது அமெரிக்காவுக்குப் பெரிய அறைகூவலாக அமைந்துவிடும்.

அது மட்டுமல்ல புஷ் உட்பட வேறெந்த ஆட்சித்தலைவரும் எடுக்க முன்வராத ஒரு நடவடிக்கையைத் தான் எடுக்கப் போவதாக அமெரிக்க யூதர்களுக்கு ஒபாமா வாக்குறுதி அளித்திருக்கிறார். அமெரிக்கா இப்போது ரெல் அவியில் இருக்கும் தனது தூதரகத்தை ஜெரூசலத்துக்கு மாற்றும் என்கிறார். வலதுசாரி குடியரசுக் கட்சி வேட்பாளர் யோன் மக்கெயின் கூட இந்தளவு தூரம் செல்லவில்லை. ஜெரூசலம்தான் இஸ்ரேலின் தலைநகரம் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் வாழும் சுமார் ஒரு இலட்சம் தமிழர்கள் ஒபாமா – கிலாரி இருவரையும் தேர்தலில் ஆதரித்தார்கள். காரணம் இருவருமே தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்றிச் சார்பான கருத்துக்களைக் கூறியிருந்ததுதான். கிலாரி தமிழீழ விடுதலைப் புலிகளைப் பெயர் சொல்லிப் பேசினார். அவர் பேசியதாவது –

“The bottom line is you cannot lump all terrorists together .what the Tamil Tigers are fighting for in Sri Lanka, or the Basque separatists in Spain, or the insurgents in al-Anbar Province may not share all that much in terms of what is the philosophical or ideological underpinning….”

“அடிப்படை என்னவென்றால் எல்லாப் பயயங்கரவாதிகளையும் ஒன்றாகக் குவிக்க முடியாது. ஸ்ரீலங்காவில் போராடும் தமிழ்;ப் புலிகள் அல்லது இசுப்பானியாவில் போராடும் பாஸ்க் பிரிவினைவாதிகள் அல்லது அன்பார் மாகாணத்தில் போராடும் கிளர்ச்சிக்காரர்கள்; ஒரேமாதிரியான தத்துவத்தையோ அல்லது கோட்பாட்டையோ கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லமுடியாது….”

அதே நேரம் ஒபாமா கூறியிருப்பதாவது –

“The problem of the 20th Century is the problem of the colour line. This problem of the other afflicted places like Sri Lanka, Northern Ireland and the issue of race within the US..”

“இருபதாம் நூற்றாண்டின் சிக்கல் என்பது நிறம் பற்றியதாகும். இந்தச் சிக்கல் ஸ்ரீலங்கா, வட அயர்லாந்து மற்றும் அமெரிக்காவில் இனப்பாகுபாடு உருவில் இருக்கிறது.”

மொத்தத்தில் குடியரசுக் கட்சி வேட்பாளர் யோன் மக்கெயின் ஆட்சித்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றால் அது யோர்ஜ் புஷ் அவர்களது மூன்றாவது தொடர் ஆட்சியாக இருக்கும். ஒபாமா வெற்றிபெற்றால் தலை கீழ் மாற்றம் இல்லாவிட்டாலும் சிறிய அளவிலாவது மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. இந்த அடிப்படையிலாவது ஒபாமா தேர்தலில் வெற்றிவாகை சூடுவது வரவேற்கப்பட வேண்டிய மாற்றமாகும். (உலகத்தமிழர் – யூன் 13, 2008)


1958 இனக் கலவரம் தமிழ் இன அழிப்புக்கு ஒரு ஒத்திகை!

1958 ஆம் ஆண்டு சிங்கள அரசின் திட்டமிட்ட தூண்டுதலால் தமிழ்மக்கள் மீது கட்டவுழ்த்துவிடப்பட்ட இனக் கலவரம் அய்ம்பது ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

1958 காலப்பகுதியில் இலங்கை தமிழ் சிங்கள மக்களுக்கிடையே ஏற்பட்ட கலவரங்களையே தொகுப்பாக 1958 கலவரம் எனப்படுகின்றது.

1958 இல் வவுனியாவில் தமிழரசுக் கட்சி மாநாடு நடந்தது. நான் அப்போது திருகோணமலைக் கச்சேரியில் பணியில் இருந்தேன். தமிழரசுக் கட்சி மாநாட்டில் கலந்து கொள்ள வேளையோடு புறப்பட்டு வவுனியா வந்து சேர்ந்து விட்டேன்.

திருகோணமலையில் இருந்து வவுனியாவுக்கு தொடர்வண்டியில் வந்த தமிழரசுக் கட்சித் தொண்டர்கள் பொலநறுவையில் வைத்து சிங்களக் காடையர்களால் தாக்கப்பட்டார்கள்.

தாக்குதல் பொலநறுவையில் தோற்றம் பெற்றாலும் விரைவில் கொழும்புக்கும் பிற பகுதிகளுக்கும் பரவியது. 1958 ஆம் ஆண்டு தமிழ்மக்களுக்கு எதிராகக் கட்டவுழ்;த்துவிட்ட இனக் கலவரம் முதலும் அல்ல கடைசியும் அல்ல.

1958 க்குப் பின்னர் தமிழ்மக்களுக்கு எதிராகச் சிங்கள ஆட்சியாளர்களது ஆசியோடும் சிங்களப் படைகளின் ஒத்துழைப்போடும் சிங்களக் காடையினரால் மேற்கொள்ளப்பட்ட இனக் கலவரங்கள் 1977, 1979, 1981, 1983 இல் இடம்பெற்றன. 1983 இல் இடம்பெற்ற இனக் கலவரம் தமிழினக் கொலை என்ற அளவுக்கு உருமலர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.

1958 ஆம் ஆண்டு 25 மே இரவு மட்டும் சுமார் 70 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான சிங்கள வெறியர்களை கட்டுப்படுத்த முனைந்த பொலநறுவா பகுதியில் இருந்த காவல் நிலையத்தின் காவலர்களும் தாக்குதலுக்கு ஆளாகினர். மறுநாள் கலவரத்தை அடக்க அனுப்பப்பட்ட இராணுவம் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முடியாது தவித்தது.

கொழும்பில் கலவரம் மோசம் அடைந்தது. தமிழர்கள் தாக்கப்பட்டார்கள். அவர்களது உடைமைகள் கொள்ளை அடிக்கப்பட்டன. கல்லூரி வளாகங்களில் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் தஞ்சம் புகுந்தார்கள்.

மே 26 இல் நுவரேலியா மாநகர முன்னாள் மேயர் செனெவிரத்தனா மரணத்தைத் தொடர்ந்து கலவரம் உருவானது என்ற தவறான தகவலை பிரதமர் பண்டாரநாயக்கா வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு அறிவித்தார். உண்மையில் கலவரம் மூன்று நாட்களுக்கு முன்னரே தொடங்கி விட்டது. பண்டாரநாயக்காவின் வானொலிப் பேச்சு கலவரத்தை மேலும் உக்கிரப்படுத்துவதாக அமைந்தது. அவரது நோக்கமும் அதுவாகத்தான் இருந்தது.

வானொலியில் பண்டாரநாயக்கா பின்வருமாறு கூறினார் ‘இன நெருக்கடியை ஏற்படுத்தும் ஒரு கவலைக்குரிய சம்பவம் நடந்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம் பெற்ற சம்பவங்களில் சிலர் உயிர் இழந்துள்ளனர். அவர்களுள் டி.ஏ. செனவிரத்தின – முன்னாள் நுவரெலிய மாநகர முதல்வரும் ஒருவர். அங்கு நடந்த அந்த நிகழ்வினால் மற்றைய இடங்களிலும் சட்டவிரோதமான நடவடிக்கைகள் பரவியுள்ளன.’

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் மட்டக்களப்பில் சிங்களவர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் அதனால் தான் கலவரங்கள் வெடித்துள்ளன என்ற பண்டாரநாயக்காவின் பேச்சு கலவரங்கள் நடைபெறாத நாட்டின் மற்றைய இடங்களிலும் கலவரங்கள் வெடிக்க வழிகோலியது.

உண்மையில் டி.ஏ. செனவிரத்ன வேறு தனிப்பட்ட காரணங்களுக்காக – அவரது பெருந்தோட்ட காவல்காரனுடன் இருந்த பிணக்கின் நிமித்தமே கொலை செய்யப்பட்டார் என்று பின்பு தெரிய வந்தது.

1983 இனப் படுகொலையின் போதும் இதே பாணியில் ஜே.ஆர். ஜெயவர்த்தன பேசியது நினைவிருக்கலாம். ‘சண்டை வேண்டும் என்றால் சண்டை; சமாதானம் வேண்டும் என்றால் சமாதானம்’ என்று கூறி மறைமுகமாகத் தமிழர்களைச் சிங்களவர்கள் தாக்க வழி வகுத்தார்.

தமிழர்கள் தான் கலவரத்திற்குக் காரணம் என்ற பொய்யான பரப்புரை கொழும்பில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்த உதவியது. தமிழர்களது வீடுகள், கடைகள் சூறையாடப்பட்டு தீ வைக்கப்பட்டன.

பாணன்துறையில் பரப்பப்பட்ட வதந்தியின் காரணமாக இந்து கோவிலுக்கு தீ வைக்க சிங்களக் காடையர்கள் முனைந்தார்கள். மே 27 ஆம் நாள் பாணந்துறையில் இந்து ஆலயக் குருக்கள் உயிரோடு பெட்ரல் ஊத்திக் கொலை செய்தார்கள்.

சிங்கள வெறி கும்பல் ஆண்களில் காதணி அணிந்தவர்கள், சட்டையை வெளியே விட்டவாறு காற்சட்டை அணிந்தவர்கள், சிங்களச் செய்தித்தாள்களைப் படிக்க இயலாதவர்கள் என தமிழர்களை இனங்கண்டு தாக்கினர். இதில் ஆங்கிலம் மட்டுமே பேசத் தெரிந்த சிங்களர்களும் தாக்கப்பட்டனர். தமிழர்களது வீடு, கடைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

தமிழர்கள் கொலைசெய்ய்ப்பட்டதற்கு பழிவாங்கும் விதமாக கிழக்கு பகுதியில் தமிழர்களும் தாக்குதலை மேற்கொண்டனர். 56 அப்பாவி சிங்கள மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

நாட்டு நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே மே 28 அன்று அப்பொழுது இலங்கையின் ஆளுநர் நாயகமாக இருந்த சேர் ஒலிவர் குணதிலக அதிகாரத்தைத் தாம் ஏற்று அவசரகாலச் சட்டத்தைக் கொண்டு வந்தார்.

தமிழரசுக் கட்சி தடை செய்யப்பட்டது. தலைவர்கள் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டனர். 16,000 தமிழர்கள் அகதிகளாக கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு கப்பல்களில் அனுப்பி வைக்கப்பட்டார்கள். நாடு முழுவதிலிருந்தும் இராணுவம் விலக்கப்பட்டாலும் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து அது நிலை கொண்டிருந்தது.

இக் கலவரம் பற்றி இலங்கை ஒப்சேவர் பத்திரிகையின் ஆசிரியர் தார்ஸி வித்தாச்சி எழுதிய ஆங்கில நூலான ’58 இன் அவசரகாலம் இலங்கை இனக்கலவரம் பற்றிய கதை’ என்ற நூல் ஒன்றினை எழுதியுள்ளார்.

கலவரம் முடிந்து நாடாளுமன்றம் கூடியபோது அடங்காத் தமிழன் சுந்தரலிங்கம் இனிமேல் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தினால் காடுகளே சுடும் (Forest Will Fire ) என எச்சரித்தார். கலவரம் நடைபெற்ற பகுதிகளில் காடையர்களுடன் சேர்ந்து சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கலவரத்தைத் தூண்டிக்கொண்டிருந்த புகைப் படங்களையும் நாடாளுமன்றத்தில் காண்பித்தார்.

1958 ஆம் ஆண்டு இடம்பெற்ற இனக் கலவரதம் தமிழர்கள் – சிங்களர்கள் இடையில் இன அடிப்படையிலான விரிசலையும் மனக்காயங்களையும் உருவாக்கியது. இந்த காலப்பகுதியில் தேசியத் தலைவர் பிரபாகரன் சிறுவனாக இருந்தார். தமிழர்கள் மீதான இந்தத் தாக்குதலைப் பின்னர் கேட்டு அறிந்து கொண்டார். அது தன்னை மிகவும் பாதித்ததாக பிரபாகரன் குறிப்பிட்டுள்ளார்.

1956 இல் தனிச் சிங்களம் சட்டமாக்கப்படுவதை எதிர்த்து காலி முகத் திடலில் தந்தை செல்வநாயகம் தலைமையில் அறப்போர் நடந்த போது நிராயுதபாணிகளான தமிழர்கள் சிங்களக் குண்டர்களால் தாக்கப்பட்டார்கள். சிலர் அருகில் இருந்த பேரா ஏரிக்குள் தூக்கி வீசப்பட்டார்கள்.

அவற்றை எல்லாம் அன்றைய பிரதமர் எஸ்டபுள்யூஆர்டி பண்டாரநாயக்கா நாடாளுமன்ற உப்பரிகையில் இருந்து பார்த்து இரசித்தார்.

சிங்களம் மட்டும் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் நாடு முழுதும் தமிழர்களுக்கு எதிரான வன்முறை வெடித்தது. கொழும்பிலும் சுற்றுப் புறங்களிலும், நாட்டின் மற்றைய பகுதிகளிலும் தமிழ்மக்களது பாதுகாப்பு கேள்விக்குறியானது. ஒன்றுபட்ட இலங்கையில் ஒற்றையாட்சியின் கீழ் தமிழர்கள் சிங்களவரோடு சேர்ந்து வாழமுடியுமா, என்ற கேள்வி ; தமிழர் மனதில் வேர்விட்டது.

சேர் பொன்னம்பலம் இராமநாதன், சேர் பொன்னம்பலம் அருணாசலம் அடுத்து அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் தலைவர் ஜீஜீ பொன்னம்பலம் போன்றோர் முழு இலங்கையிலும் தமிழர்கள் சம உரிமையுடன் வாழவேண்டும் என்று விரும்பினார்கள். அவர்களது அரசியல் கோட்பாடும் நடவடிக்கைகளும் அதன் அடிப்படையிலேயே அமைந்திருந்தது.

1919 ஆம் ஆண்டு இலங்கையருக்குக் கூடிய அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று கோரி இலங்கைத் தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. இதனுடைய முதல் தலைவராக (1919 – 1922) பொன்னம்பலம் அருணாசலம் (1853 – 1924) விளங்கினார். ஆனால் சேர். ஜேம்ஸ் பீரிசும் S. T. சமரவிக்கிரமாவும் 1920 இல் நடக்க இருந்த தேர்தலில் மேற்கு மாகாணத்தில் ஒரு தமிழரை நிறுத்துவதாகச் செய்து கொண்ட உடன்பாட்டைக் கிழித்தெறிந்ததால்; அருணாசலம் உட்படத் தமிழ்த் தலைவர்கள் காங்கிரசில் இருந்து விலகினார்கள். பின்னர் தமிழர் மகாசபை என்ற அமைப்பை அவர்கள் உருவாக்கினார்கள். அதன் தலைவராக சேர் பொன்னம்பலம் அருணாசலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது தலைமையுரையில் தமிழர்கள் பாதுகாப்பாகவும் தன்மானத்துடனும் வாழ்வதற்கு தமிழகம் என்ற அரசு தேவை எனக் குறிப்பிட்டார். ஆனால் அவர் 1924 இல் இயற்கை எய்திய போது அவரது தமிழகக் கனவு அவரோடு புதைக்கப்பட்டு விட்டது.

1958 ஆம் ஆண்டுக் கலவரத்தின் எதிரொலியாக தென்னிலங்கையில் தொழில் காரணமாக நெடுங்காலம் வாழ்ந்து வந்த தமிழர்கள் வட – கிழக்கை நோக்கி நகரத்தொடங்கினார்கள். பெட்டிக் கடை வைத்திருந்தவர்கள் சரி, தோட்டம் துரவு வைத்திருந்தவர்கள் சரி படிப்படியாக தென்னிலங்கையில் இருந்து வெளியேறினார்கள்.

பருத்தித்துறைமுதல் – தெய்வேந்திரமுனை வரை வாழத் தமிழர்களுக்கு உரித்து இருக்கிறது என்று திருவாளர் ஜிஜி பொன்னம்பலம் மார்தட்டினாலும் நாட்டு நிலைமை வேறுவிதமாக இருந்தது. அதன் காரணமாக திருவாளர் பொன்னம்பலம் அரசியலில் இருந்து படிப்படியாக ஓரங்கட்டப்பட்டார். 1965 இல் நாடாளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில் பொன்னம்பலம் தோற்றுப் போனார்.

1962 இல் டீ.ர்.குயசஅநச என்பவர் ‘இலங்கை – பிரிவுபட்ட ஒரு நாடு’ என்ற ஒரு நூலை எழுதினார். அதற்கு சோல்பரி பிரபு முகவுரை எழுதினார். அதில் ‘எமது ஆணைக்குழு பிழைவிட்டு விட்டது’ என்பதை வெளிப்படையாகவே சோல்பரி பிரபு ஒத்துக் கொண்டுள்ளார்.

“Unhappily and for reasons indicated by Mr Farmer, the death of Mr D. S. Senanayake led to the eventual adoption of a different policy which he would never have countenanced. Needless to say, the consequences have been a bitter disappointment to myself and to my fellow Commissioners. While the Commission was in Ceylon, the speech of certain Sinhala politicians calling for the solidarity of the Sinhalese and threatening of the suppression of Tamils emphasized the need for constitutional safeguards on behalf of that and other minorities, despite the confidence felt by the Commission in Mr. D. S. Senanyake and any Government under his control.” – (Soulbury’s Foreword, B. H. Farmer, Ceylon: A Divided Nation.)
‘துக்கம் என்னவென்றால் பார்மர் சுட்டிக்காட்டிய காரணங்களுக்கு அமைய டி.எஸ. செனநாயக்காவின் மறைவு வேறுவிதமான கொள்கை மாற்றத்துக்கு இட்டுச் சென்றது. அவர் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் அவ்விதமான கொள்கை மாற்றத்தை ஏற்றுக்கொண்டிருக்கமாட்டார். இந்த விளைவுகள் எனக்கும் எனது சக ஆணையாளர்களுக்கும் கசப்பான ஏமாற்றமாக அமைந்துவிட்டது என்பதைச் சொல்லத் தேவையில்லை. ஆணைக்குழு இலங்கையில் இருந்தபோது சில சிங்கள அரசியல்வாதிகள் சிங்களவர்களது ஒற்றுமையை வலியுறுத்திய அதேவேளை தமிழர்களை அடக்கி ஆளவேண்டும் என அச்சுறுத்திப் பேசிய பேச்சுக்கள் தமிழர்களுக்கும் ஏனைய சிறுபான்மையினருக்கும் அரசியல் திட்டத்தில் பாதுகாப்பு வழங்கப்படல் வேண்டும் என்ற அவசியத்தை – டி.எஸ்.செனநாயக்கா மீதும் அவரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அரசுமீதும் ஆணைக்குழுவுக்கு இருந்த நம்பிக்கையை மீறி – ஆணைக்குழு உணர்ந்திருந்தது.

மேலும் அவர் ‘இலங்கையில் தமிழர் – சிங்கள இனங்களுக்கு இடையே இருந்த பகை உணர்ச்சி பற்றி (எமது) ஆணைக்குழுவுக்கு அக்கறை குறைந்த ஒரு அறிவே அப்போது இருந்தது. இந்த நாட்டில் பின்னர் நடந்த நிகழ்வுகளை அவதானிக்கும் போது எமது ஆணைக்குழுவானது அரசியல் யாப்பில் மாற்ற முடியாதவாறு அடிப்படை உரிமைகளை உத்தரவாதப்படுத்த, இந்தியா,பாகிஸ்தான், மலேசியா, நைஜீரியா போன்ற பல நாடுகளில் செய்யப்பட்டவாறு நடவடிக்கைகளை நாம் எடுக்கவில்லையே என்ற ஆதங்கம் எம்மை வாட்டுகிறது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

1958 இன் இனக்கலவரத்தைப் பார்த்த பிறகே அவருக்கு இந்த ஞானம் பிறந்தது போலத் தெரிகிறது.

மொத்தத்தில் 1958 இனக் கலவரம் தமிழ் இன அழிப்புக்கு ஒரு ஒத்திகையாயக அமைந்திருந்தது! (உலகத்தமிழர் – யூன் 06, 2008)


SRI LANKA IS KILLING TAMIL CIVILIANS UNDER THE CLOAK OF FIGHTING TERRORISM
V. Thangavelu, President TCWA

The civil war in Sri Lanka is one of the most protracted and bloodiest conflicts in South Asia. It has claimed more than 70,000 lives and displaced more than 1.2 million people. Unlawful killings and assassinations of Tamils by government agents; politically motivated killings; abductions for ransom, enforced disappearances; arbitrary arrests and detentions; denial of fair public trial; government corruption; lack of transparency, infringement of freedom of movement continues unabated with paralysis of the institutions empowered to investigate and prosecute and consequent impunity for abusers. The many ad hoc commissions of inquiry of the past two years have accomplished nothing, while disappearances and political killings continue; especially civilian deaths have multiplied in the violence-wracked north and east,

Repression has been employed against Tamil civilians, journalists and publishers, local and international NGO workers, human rights activists and business people. Some journalists, human rights activists and aid workers have been killed while others have been abducted or detained without charge.

With the advent of President Rajapakse to the pinnacle of power, repression of Tamils has become both the norm and the fashion. He seems to disbelieve the existence of an ethnic problem and tends to reduce the North-East crisis to a mere case of terrorism. Since his assumption of power, there have been more than 5,000 deaths and displacement of 300,000 civilians in the Northeast. More than 1,000 disappearances have been recorded within the government-controlled territory. The President has declared an all-out war to capture Tamil territory under the cloak of fighting terrorism.

International Human Rights Organisations like the International Commission of Jurists and Human Rights Watch (HRW) have expressed grave concern over the prevalent trend of disappearances and abductions and the culture of impunity at all levels of the government.

As STATE sponsors of terrorism, Sri Lanka’s record is far more gruesome than Cuba, Sudan, North Korea, Syria, and Iran.

There is a slow collapse of the rule of law, and national minorities and the opposition are being vilified as traitors and LTTE agents. Incidents of violence targeting civilians are on the increase. And with the government having mindlessly withdrawn from the Ceasefire Agreement the floodgates have been opened for an open season for civilian killings both in the north and the south.

It is time the international community, especially Canada, take decisive steps to pressure the GoSL to abandon the path of militarism and opt for a negotiated political settlement. The UN member states should go beyond expelling Sri Lanka from the Human Rights Council. During the Holocaust or Apartheid in South Africa, the international community did not act fast enough.

Canada can offer Sri Lanka many lessons in the art of good governance, that is, democracy, human rights, political pluralism and the rule of law. Canadian Prime Minister Harper recently noted that “throughout its history, the accommodation of minorities – regional, ethnic, linguistic or religious – has been critical to Canada’s overall health as a country. Our Government considers diversity to be one of Canada’s greatest strengths, and we are pleased to support initiatives to preserve and promote pluralism”.

A way out of the political quagmire and an end to the bloodshed is to recognize Tamil people’s moral and legal entitlement to STATEHOOD. Bruce Fein, the former Deputy Attorney General of US says, “The history of the persecution of the Tamil people “easily justifies Tamil statehood, with boundaries to be negotiated,” and points out, “The Declaration of Independence proclaims: “When a long train of abuses and usurpations, pursuing invariably the same Object, evinces a design to reduce [a people] under absolute Despotism, it is their right, it is their duty, to throw off such Government, and to provide new Guards for their future security.” [THE END]


போரில் வென்றவர்கள் புதிய எல்லைகளைக் கீறும் உரிமையைப் பெறுகிறார்கள்!
நக்கீரன்

பல மாதங்களாகத் தள்ளிப்போட்டு வந்த கொசோவோவின் ஒருதலைப் பட்சத் சுதந்திரப் பிரகடனம் ஒருவாறு அறிவித்தாகிவிட்டது.

கடந்த பெப்ரவரி மாதம் 17 ஆம் நாள் கொசோவோ நாடாளுமன்றம் கூடியபோது அந்த நாட்டின் தலைமை அமைச்சர் ஹாஷிம் தாசி (Hashim Thaci) சுதந்திரப் பிரகடனத்தை வாசித்தார். அந்தப் பிரகடனம் மிகவும் முக்கியமானது.

‘கொசோவோவை நாங்கள் ஒரு விடுதலை பெற்ற சுதந்திர நாடாகப் பிரகடனப் படுத்துகிறோம். கொசோவோவில் வாழும் எல்லா சமூகத்தினரதும் உரிமைகள் சுதந்திரங்கள் ஆகியவற்றைப் பேணிப்பாதுகாக்கவும் அவர்கள் ஆட்சியில் பங்கு கொள்ளும் உரிமையையும் உறுதி செய்கிறோம். சிறுபான்மை மக்களது உரிமைகள் பற்றிக் குறிப்பிடும் திட்டத்தின் இணைப்பு 12 யை முற்றாகப் பின்பற்றுவோம் என உறுதி கூறுகிறோம்…’

சேபியரது பெரும்பான்மை அரசின் அடக்குமுறை, இனச் சுத்திகரிப்பு போன்றவற்றில் இருந்து விடுபட்ட கொசோவோ தனது நாட்டில் இருக்கும் ஏனைய சிறுபான்மை மக்களது உரிமைகள், சுதந்திரங்களை உறுதி செய்ய முன்வந்ததில் வியப்பில்லை. அப்படி உறுதிசெய்ய முன்வராவிட்டால் கொடுங்கோல் செலுத்திய சேபியரது ஆட்சிக்கும் கொசோவியரது ஆட்சிக்கும் வேறுபாடு இல்லாது போய்விடும்.

இருபது இலக்கம் மக்கள் வாழும் கொசோவோவாவில் 120,000 ஆயிரம் சேபியர்கள் கொசோவோவின் வட பகுதியில் வாழ்கிறார்கள். இவர்களைப் பிரதிநித்துவப் படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரப் பிரகடனம் செய்யப்பட்ட போது அவையில் இருக்கவில்லை. நாடாளுமன்ற அமர்வை அவர்கள் புறக்கணித்து விட்டார்கள்.

கொசோவோவின் சுகப் பேற்றுக்கு உதவியாக அய்ரோப்பிய ஒன்றியம் காவல்துறை, நீதித்துறை மற்றும் நிருவாகத்துறையைச் சேர்ந்த 2,000 அதிகாரிகளை அனுப்பி வைத்துள்ளது. நேட்டோ படைகள் அங்கு அமைதியைத் தொடர்ந்து நிலைநாட்டும்.

கோசோவோவின் தலைநகர் பிறிஸ்ரினாவில் (Pristina) சுதந்திர நாளை மக்கள் அல்பேனிய, அமெரிக்க, பிரித்தானிய தேசியக் கொடிகளை அசைத்து ஆடிப் பாடிக் கொண்டாடி மகிழ்ந்தார்கள். அதே நேரத்தில் சேர்பியாவின் தலைநகர் பெல்கிறேட்டில் கொசோவோவின் சுதந்திரத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. இதனை எழுதிக் கொண்டிருக்கும் போது (வியாழக்கிழமை) பெல்கிறேட்டில் அமெரிக்காவிற்கு எதிரான பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. அமெரிக்காவின் தூதரகத்துக்குத் தீ வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் யூகோசிலோவிக்கிய குடியரசு கொசோவோ நாட்டோடு சேர்த்து இப்போது எட்டு நாடுகளாகப் பிரிக்கப்பட்டுவிட்டன. சேர்பியா, அல்பேனியா, குரோசியா, மொன்ரநீக்றோ, ஸ்லோவேனியா, பொஸ்னியா – ஹேர்ஸ்கொவினா, மசிடோனியா மற்றும் கொசோவோ ஆகியவையே அந்த எட்டு நாடுகளாகும்.

கொசோவோவின் தன்னிச்சையான சுதந்திரப் பிரகடனம் உலகம் முழுதும் எதிர்வலைகளையும் எதிர்ப்பலைகளையும் ஏற்படுத்தியுள்ளன.

சேர்பியா, உருசியா போன்ற நாடுகள் கொசோவோவின் சுதந்திரப் பிரகடனத்தை எதிர்க்கின்றன. கொசோவோவை ‘பொய்யான அரசு’ (false state) என வருணித்துள்ளன.

அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, பிரித்தானியா, ஆப்கனிஸ்தான் போன்ற நாடுகள் புதிய நாட்டை அங்கீகரித்துள்ளன. அய்ரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 27 நாடுகளில் ஸ்பெயின், கிறீஸ், உரோமனேயா, சைப்ரஸ், ஸ்லோவேனியா, சைப்ரஸ் நீங்கலாக ஏனைய நாடுகள் கொசோவோவை அங்கீகரித்துள்ளன.

கொசோவோவின் தன்னிச்சையான சுதந்திரப் பிரகடனத்தை அங்கீகரித்ததின் மூலம் அமெரிக்கா ஒரு வல்லரசுக்கு உரிய தனது அரசியல் மற்றும் படை பலத்தை எண்பி;த்துள்ளது. உலகில் இன்று அமெரிக்கா வைத்ததுதான் சட்டம். அதை யாரும் இலேசில் மீறிவிட முடியாது.

இன்று கொசோவோவின் தலைமை அமைச்சராக இருப்பவர் முன்னாள் கொசோவோ விடுதலைப் படையின் (Kosovo Liberation Army) தளபதி. கொசோவோ விடுதலைப் படை தொடக்கத்தில் அமெரிக்காவால் பயங்கரவாத இயக்கம் என முத்திரை குத்தப்பட்ட இயக்கம். ஹாஷிம் தாசி பயங்கரவாதி எனத் தேடப்பட்டவர். ஆனால் 1997 இல் அமெரிக்கா கொசோவோ விடுதலைப் படையை பயங்கரவாதப் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டது. இதிலிருந்து என்ன தெரிகிறது?

அமெரிக்கா ஒரு விடுதலை இயக்கத்தைப் பயங்கரவாத இயக்கம் என அழைக்கும். பிறிதொரு காலத்தில் அதனை விடுதலை இயக்கம் என அழைக்கும். எல்லாம் அந்த நாட்டின் அரசியல் -புவியியல் நலன்களைப் பொறுத்தது. பயங்கரவாதி யார், விடுதலைப் போராளி யார் என்பதையும் அமெரிக்காதான் தீர்மானிக்கிறது. ஏன் அய்க்கிய நாடுகள் அவைகூட அமெரிக்காவிற்கு அடக்கம் என்பதை ஈராக் மீது ஒருதலைப் பட்சமாக – அய்க்கிய நாடுகள் அவையின் அனுமதியின்றி – படையெடுத்த போது காண முடிந்தது.
உலகில் எத்தனையோ நாடுகளில் எண்ணிக்கையில் குறைவான தேசிய இனங்கள் இனப்படுகொலை, இனச் சுத்திகரிப்பு, அடக்குமுறை போன்றவற்றுக்கு எதிராகப் போராடுகின்றன. இருந்தும் ஒரு முஸ்லிம் நாடான கொசோவோ மீது அமெரிக்காவிற்கு மட்டும் ஏன் இந்த அதீத அக்கறை? சோழியன் குடுமி சும்மாவா ஆடியது?

கொசோவோ அல்பேனிய முஸ்லிம்களின் சுதந்திரப் போராட்டத்தைப் பயன்படுத்தி அல் கொய்தா சக்திகள் அய்ரோப்பாவில் நுழைந்துவிடக் கூடாது என்பது ஒரு காரணம். மற்றது அய்ரோப்பாவில் அமெரிக்கா தனது இரண்டு காலையும் சிக்காராக ஊன்ற ஒரு வாய்ப்பு.
அய்க்கிய நாடுகளின் 1999 ஆம் ஆண்டு எண் 1,244 தீர்மானத்தின் படி கொசோவோ சேர்பிய நாட்டின் இறையாண்மைக்கு உட்பட்ட அய்க்கிய நாடுகளின் பாதுகாப்பில் உள்ள நாடு. ஆனால் அதனை மீறி அமெரிக்காவின் ஆதரவோடு கொசோவோ தன்னிச்சையான சுதந்திரப் பிரகடனத்தைச் செய்துள்ளது. அதனை அய்க்கிய நாடுகள் அவை கண்டுகொள்ளவில்லை.
சேர்பியாவின் ஒரே நட்பு நாடான உருசியா கூட கொசோவோவின் தன்னிச்சையான சுதந்திரப் பிரகடனத்துக்கு எதிராக அறிக்கை விட்டு விட்டு அடங்கிப் போய்விட்டது. ஸ்டாலின் காலத்து உருசியா என்றால் கதை வேறு. இன்றுள்ள உருசியா வல்லரசு என்ற பட்டத்தை இழந்துவிட்ட நாடு. எதிர்த்துக் குரல் கொடுக்கத்தான் முடியுமே தவிர அமெரிக்காவோடு மோத முடியாது.

கொசோவோவின் ஒரு தலைப்பட்ச சுதந்திரப் பிரகடனத்தை எதிர்க்கும் நாடுகளைப் பார்த்தால் அவை ஒவ்வொன்றுக்கும் முதுகில் புண் இருக்கும் உண்மை புலப்படும். உருசியா, ஸ்பெயின், இந்தியா, சீனா, ஸ்ரீலங்கா போன்ற நாடுகளில் சுதந்திரம் கேட்டு சிறுபான்மை தேசிய இனங்கள் போராடி வருகின்றன. அந்த நாடுகளுக்கு முதுகில் புண் இருப்பதால் கொசோவோவை அங்கீகரிக்க மறுக்கின்றன.

திபெத் நாடு அகிம்சை வழியில் சீனாவின் மேலாண்மை மற்றும் அடக்குமுறைக்கு எதிராகக் கடந்த 58 ஆண்டுகளாக தலாய் லாமா தலைமையில் போராடி வருகிறது. . சீனாவின் அடக்கு முறைக்கு ஒரு இலக்கம் மக்கள் பலியாகியுள்ளார்கள். திபெத் மக்களது நாகரிகம், பண்பாடு, மொழி சிதைக்கப்பட்டுள்ளன. ஆனால் தலாய் லாமாவுக்கு அமெரிக்கா மாலை மரியாதை செய்கிறதேயொழியத் திபெத்தை சீனாவிடம் இருந்து மீட்டுக் கொடுப்பது பற்றிப் பேச்சே இல்லை. என்ன காரணம்? திபேத்தை விடுவிப்பதில் அமெரிக்காவிற்கு எந்தப் அரசியல் – புவியியல் நன்மையும் இல்லை. மற்றது சீனாவும் இன்று ஒரு உலக சண்டியன் என்ற இடத்தில் இருக்கிறது. அந்த நாட்டோடு மோத அமெரிக்கா அணியமாய் இல்லை.

கொசோவோவின் ஒரு தலைப்பட்ச சுதந்திரப் பிரகடனத்தை எதிர்த்து முதலில் அறிக்கைவிட்ட நாடுகளில் ஸ்ரீலங்காவும் ஒன்று.
ஸ்ரீலங்கா தமிழ்மக்களுக்கு எதிரான படையெடுப்பை நியாயப்படுத்த – இனப் படுகொலையை நியாயப்படுத்த – தனக்குள்ள இறையாண்மை மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டைக் காரணம் காட்டுகிறது. அதாவது ஒரு சுதந்திர நாட்டுக்கு தனது இறையாண்மை மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற எதையும் செய்ய உரிமை இருப்பதாக வாதாடுகிறது.
ஆனால் இந்தக் கோட்பாட்டை சேர்பியாவைப் பொறுத்தளவில் அமெரிக்கா ஏற்றுக் கொள்ளவில்லை. சேர்பியாவின் ஒரு பகுதியை அய்க்கிய நாடுகளது தீர்மானத்தை மீறி கொசோவோ மக்களுக்குப் பிரித்துக் கொடுத்துவிட்டது.
கொசோவோ மக்களுக்கு நாட்டைப் பிரித்துக் கொடுத்த அமெரிக்கா – அந்த நாட்டின் விடுதலைக்கு ஆயுதம் ஏந்திப் போராடிய கொசோவோ விடுதலைப் படையை பயங்கரவாதப் பட்டியலில் இருந்து எடுத்த அமெரிக்கா – அந்தப் படையின் தளபதியாக இருந்தவரை பயங்கரவாதி என முத்திரை குத்தியதை நீக்கிய அமெரிக்கா – தமிழீழத்தையும் பிரித்துக் கொடுக்க முன்வரலாம்தானே? எனப் பலர் கேட்கிறார்கள்.

இந்தக் கேள்வி நியாயமானது. ஆனால் இன்றைய உலக ஒழுங்கில் நீதி, நியாயத்துக்கு .இடமில்லை. ஆயுத பலம் இருக்கிறதா? ஆள், ஆயுத பலம் உள்ள நாடு வைத்ததுதான் இன்று சட்டம்! வல்லான் வெட்டியதே வாய்க்கால்!
சேர்பியா – கொசோவோ ஒரு புறம். மறுபுறம் ஸ்ரீலங்கா – தமிழீழம். இவை இரண்டுக்கும் இடையில் நிறைய ஒற்றுமை உண்டு.

  சேர்பியா கொசோவோ  ஸ்ரீலங்கா தமிழீழம்
பரப்பளவு102,350 சகிமீ10,912 சகிமீ46,730 சகிமீ18,880 சகிமீ
மக்கள் தொகை10.8 மில்லியன்2 மில்லியன்17 மில்லியன்3.2 மில்லியன்
மதம் கிறித்தவர்                65 விழுக்காடுமுஸ்லிம்                   90 விழுக்காடுபவுத்தம்                    70 விழுக்காடுஇந்து            85விழுக்காடு
போராட்ட காலம் 10 ஆண்டுகள் 25 ஆண்டுகள்
உயிரிழப்பு 10,000 ஆயிரம் 70,000 ஆயிரம்

 

 

 

 

 

மேற் கூறப்பட்ட ஒற்றுமைகளைவிட ஒரு பலத்த வேறுபாடு கொசோவோ தமிழீழம் இரண்டுக்கும் இடையில் இருக்கிறது. கொசோவோ அய்ரோப்பாவின் கொல்லைப் புறத்தில் இருக்கிறது. ஸ்ரீலங்கா தெற்காசியாவில் இருக்கிறது.
தெற்காசியாவின் பிரதேச வல்லரசு இந்தியா என்பது அமெரிக்கா உட்பட எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைக் கோட்பாடு.

ஒரு நாடு சுதந்திர நாடாக அங்கீகரிக்கப் படவேண்டும் என்றால் அந்த நாட்டுக்கு மூன்று தகுதிகள் இருக்க வேண்டும் என்று இந்தியாவின் வெளியுறவு அமைச்சு கூறுகிறது.

“India’s Ministry of External Affairs has issued a statement noting that as Kosovo does not meet all three conditions for recognition, namely “a defined territory, a duly constituted government in charge which is accepted by the people and which has effective control over an area of governance,” India is not offering recognition and would prefer the issue to be “resolved through peaceful means and through consultation and dialogue.”

‘கொசோவோ அங்கீகாரத்துக்கு வேண்டிய மூன்று நிபந்தனைகளை நிறைவு செய்யத் தவறியுள்ளது. அதாவது ‘வரையறை செய்யப்பட்ட நிலப்பரப்பு, அந்த நிலப்பரப்பின் மீது மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசின் ஆட்சி, ஆட்சி செய்யப்படும் நிலப்பரப்பின் மீது செயற்திறனுள்ள (அதிகார) கட்டுப்பாடு’ ஆகியன. எனவே இந்தியா அங்கீகாரம் அளிக்க முன்வராது. அதே நேரம் இந்தச் சிக்கல் அமைதி வழியில் எல்லோரும் கலந்து பேசி பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் என விரும்புகிறது.

எனவே கொசோவோ சுதந்திரத்துக்கு இந்தியா விதிக்கும் நிபந்தனைகளை தமிழீழம் நிறைவேறினால் இந்தியா தமிழீழத்தை அங்கீகரிக்கக் கூடும்.

போராட்டக் களத்தில் வெற்றி ஈட்டுவதன் மூலமே இந்தியா விதிக்கும் நிபந்தனைகளை நிறைவு செய்யலாம்.
It is useful to remember the axiom of statehood that “War is what dictates borders and winners get the right to draw the new lines.”
அரசுரிமைக்கு ஒரு வெளிப்படையான சித்தாந்தம் இருப்பதை நினைவில் வைத்துக்கொள்வது பயனுடையது. ‘போரே ஒரு நாட்டின் எல்லைகளை நிருணயிக்கிறது. போரில் வென்றவர்கள் புதிய எல்லைகளை வரையும் உரிமையைப் பெறுகிறார்கள்!’ (உலகத்தமிழர் – மே 2008)

Cyprus – One Island Two States

V. Thangavelu

Cyprus is the third largest island in the Mediterranean, after Sicily and Sardinia, with an area of  9.251 sq. km (3.572 sq. miles). It is situated in the Northeastern corner of the Mediterranean at a distance of 300 km north of Egypt, 90 km west of Syria, and 60 km south of Turkey. Greece lies 360 km north-west (Rhodes – Crete). Cyprus lies at a latitude of 34 33′-35 34′ North and longitude 32 -16′-34 37′ East. The 35th latitudinal parallel traverses it.
The country has two mountain ranges: the Pentadaktylos range which runs along almost the entire northern coast, and the Troodos massif in the central and south-western parts of the island. Cyprus’ coastal line is indented and rocky in the north with long sandy beaches in numerous coves in the south.
The north coastal plain, covered with olive and carob trees, is backed by the steep and narrow Pentadaktylos mountain range of limestone, rising to a height of 1.042 m. In the south, the extensive mountain massif of Troodos, covered with pine, dwarf oak, cypress and cedar, culminates in the peak of Mount Olympus, 1.953 m above sea level. Between the two ranges lies the fertile plain of Messaoria.
Cyprus has a Mediterranean climate, with its typical seasonal rhythm strongly marked in respect of temperature, rainfall and weather generally. Hot, dry summers from June to September and changeable winters from November to March are separated by short Autumn and Spring seasons of rapid change in weather patterns in October, April and May. Summer is a season of high temperatures and cloudless skies.
Snow hardly falls in the lowlands and on the Northern range, but is a frequent feature every winter on ground above 1.000 metres in the Troodos range. From December till April snow is usually in evidence there, but hardly continuous. Yet during the coldest months, it lies in considerable depth for several weeks, attracting skiers.
Cyprus has long been a crossing point between Europe, Asia and Africa and still has many traces of successive civilizations – Roman theatres and villas, Byzantine churches and monasteries, Crusader castles and pre-historic habitats. Because of its geographical position – attracting foreign invaders and colonizers throughout its history can be traced back to the sixth millennium B.C. But it was not destined to be the last act.
Cyprus is well known as the island of Aphrodite, the goddess of love and beauty, who, according to legend, was born there. Cyprus in the Greek language means “gypsum” which is one of the major exports of Cyprus.
The island’s main economic activities are tourism, clothing and craft exports and merchant shipping. Traditional crafts include embroidery, pottery and copper work.
The Republic of Cyprus gained its independence in 1960 when Britain relinquished its colonial rule.  It was admitted as a member of the UNO in the same year.
In 1960, the newly formed Government of Cyprus inherited an economy which exhibited most of the symptoms of underdevelopment. The productive base of the country was inadequate and economic activity was dependent upon unstable factors. Agriculture was the dominant sector in economic activity and accounted for 16% of GDP and 45% of gainful employment; manufacturing activity was essentially restricted to the processing of locally produced agricultural raw materials; tourism had not yet taken off; exports had the characteristic structure of underdeveloped countries, with primary commodities, such as minerals (53% of the total) and agricultural products (32%), dominating; unemployment was high, underemployment was widespread and mass emigration was taking place; financial capital was flowing out of the country, a clear indication of the existing uncertainty.

In view of the structural weaknesses of the economy, the Cyprus government adopted the basic principles of indicative planning, according to which private initiative is the basic motive force of the economy and the role of the state is to create the necessary physical and social infrastructure, create a stable and favourable economic environment, guide the private sector towards desired directions and administer social policy. The development strategy and the economic policies of the government were embodied in Five-Year Development Plans.

The years between independence and the Turkish invasion are characterised by sustained growth, accompanied by conditions of economic stability. GDP grew at an average annual rate of about 7% in real terms and that of per capita national income by almost 10% per annum. Agricultural production doubled, while industrial production and exports of goods and services more than trebled. Tourism became the largest single foreign exchange earner. Unemployment was very low and conditions of full employment were the characteristic of the early 70’s. Earnings of employees more than doubled in real terms. Investment in infrastructural projects like dams, roads, ports, airports, communications, etc., reached a very satisfactory level. The rate of inflation was contained to 2,4% on average per annum and the current account of the Balance of Payments was mostly kept in surplus. As a consequence, accumulated foreign debt by 1973 was low, at a level equivalent to 7,5% of GDP.

As a result of the economic dislocation, GDP dropped sharply and in 1975 it was 33% below the level of 1973 in real terms, despite the partial reactivation which took place in the meantime. The size of the economic catastrophe was reflected in the unemployment figure, which during the latter part of 1974 averaged 30% of the economically active population and led to conditions of poverty and increased dependence on the state, at a time when state revenues declined sharply. A small country, which even under normal circumstances was poor in natural resources was deprived of some of its most valuable ones. The dependence of the country on foreign sources for raw materials, consumer goods as well as financing increased. Shortages appeared in all sectors particularly in housing. A climate of political and economic uncertainty was created.
In 1974 the dictators who then ruled Greece staged an abortive coup against Archbishop Makarios, then President of Cyprus, and Turkey launched an invasion “to protect the Turkish population and restore constitutional order”.
The favourable results of 13 years of planned development were utterly disrupted by the Turkish invasion of 1974 when the Turkish army occupied about a third of the territory of the country and a third of the population became refugees. The displacement of such a large number of people and the seizure of their property and the country’s assets inevitably shattered the economy. Moreover, the area under occupation was the most productive and developed part of Cyprus, since it produced the bulk of citrus, the main export item at that time, was rich in mineral and quarrying materials, and attracted a heavy concentration of tourist facilities (66% of the total) and included the only deep water port of Famagusta, which handled more than 80% of general cargo. The closure of Nicosia International Airport, now in the buffer zone, was an additional blow.
In the Cyprus Republic of Northern 37% of the island is occupied by Turkish occupation in defiance of United Nations Resolutions of unequivocal substance. Only Turkey has recognized the Cyprus Turkey part of Cyprus.
Since Turkey occupied the Turkish Republic of Northern Cyprus in 1974, the Turkish Cypriot and Greek Cypriot communities have been separated by the so-called Green Line. And the Cyprus Problem has become a major dispute in the sensitive Middle East.
The separation of the two ethnic communities inhabiting the island began following the outbreak of communal strife in 1963. This separation was further solidified after the Turkish intervention in July 1974 that followed a Greek junta-supported coup attempt that gave the Turkish Cypriots de facto control in the North; Greek Cypriots control the only internationally recognized government.
On 15 November 1983 Turkish Cypriot “President” Rauf DENKTASH declared independence and the formation of a “Turkish Republic of Northern Cyprus” (TRNC). Turkish Cypriots proclaimed self-rule on 13 February 1975 and independence in 1983, but these proclamations are only recognized by Turkey.
Cyprus is an independent sovereign Republic with a presidential system of government. Under the 1960 Constitution, executive power is exercised by the President of the Republic, elected by universal suffrage for a five-year term of office. The President exercises executive power through a Council of Ministers appointed by him. Ministers may be chosen from outside the House of Representatives.  The current President of the Republic is Mr Glafkos Clerides
The legislative authority in the Republic is exercised by the House of Representatives now consisting of eighty members (56 of whom are to be Greek Cypriots and 24 Turkish Cypriots) elected by universal suffrage for a five-year term. At the time of its establishment, the House consisted of 50 members, 35 of whom were to be Greek Cypriots and 15 Turkish Cypriots. According to the Constitution, the ratio is 70% Greek Cypriots and 30% Turkish Cypriots.
Cyprus at a glance
Name   –    The Republic of Cyprus
Independence – 16 August 1960 (from UK
Capital city  –   Nicosia
Total area     –   9,251 Sq.kms (North Cyprus -3,396 Sq.kms)
Area – comparative –   Half the area of Northeast province ( 18,354 sq. km) or
about 0.6 times the size of Connecticut
Religions       –    Greek Orthodox 77%, Muslim 18%, other (includes
Maronite and Armenian Apostolic) 5%
Language  – Greek, Turkish, English
Population – Turkish Republic of    Northern Cyprus  – 280, 200)
Life expectancy at birth     – 77.98 years
Ethnicgroups    – Greek 77%, Turkish 18%,
other 5%  (estimate 2007)
============================================================
Following the withdrawal of the Turkish Cypriot members the House has been functioning only with the Greek Cypriot members. The Maronite, Armenian and Latin minorities also elect representatives who attend meetings without a right of participation in the deliberations. They are consulted in matters concerning particular affairs of their respective religious groups.
Talks held in 2002 by UN with Greek Cypriots and Turkish Cypriots for the unification of the island failed. In 2002 Cyprus was admitted as a member of the European Union.
At the presidential elections held in February 2008, Communist Party candidate Dimitris Chrstofias was elected by winning 53.4 %  votes cast. He has vowed to unite the divided country.
சிறிய சைப்பிரஸ் தீவில் இரண்டு சுதந்திர நாடுகள்!
கொசேவோவின் ஒரு தலைப் பட்சமான சுதந்திரப் பிரகடனம் பல நாடுகளின் அடி வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. குறிப்பாக பெரும்பான்மை தேசிய இனத்தவரின் மேலாண்மையையும் அடக்குமுறையையும் கொடுங்கோல் ஆட்சியையும் திணிக்கும் நாடுகள் மத்தியில் இந்தப் பயம் குடி கொண்டுள்ளது.
அதே சமயம் சுதந்திரத்துக்காக ஆயுதம் ஏந்தியோ ஏந்தாமலோ போராடும் சிறுபான்மை தேசிய இனங்கள் மத்தியில் எதிர்கால நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் உருவாக்கியுள்ளது.
கொசோவோவை ஒரு இறையாண்மை படைத்த நாடாக மேற்குலக நாடுகள் முண்டியடித்துக் கொண்டு அங்கீகாரம் வழங்கியது பன்னாட்டு அரசியலில் எதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பன்னாட்டு அரசியலில் பல முக்கியமான பாடங்களைப் புகட்டியுள்ளது.
முதலாவது பாடம் – அய்க்கிய நாடுகள் அவையின் தீர்மானங்கள் பெரிய நாடுகளை, குறிப்பாக மேற்குலக நாடுகளைக் கட்டுப்படுத்த உதவாது.
இரண்டாவது பாடம் – நாடுகள் தங்கள் வலிமை, தங்களது நட்பு நாடுகளின் வலிமை, பகை நாடுகளின் வலிமை ஆகியவற்றைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் என்ற கட்டாயம் எழுந்துள்ளது.
மூன்றாவது பாடம் – பயங்கரவாதத்துக்கு எதிரான போர் ஒருவருக்குப் பயங்கரவாதியாகத் தெரிபவர் இன்னொருவருக்கு விடுதலை வீரனாகக் காட்சி அளிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது.
நான்காவது பாடம் – ஒரு நாட்டின் இறைமை என்பது கட்டற்றது (Not Absolute) அன்று.
ஒரு நாட்டின் ஆட்புல ஒருமைப்பாடும் கல்வெட்டில் எழுதிய எழுத்துக்கள் அல்ல. எல்லைகளும் மீள வரைய முடியாதவை அல்ல. ஆனால் இந்த அரசியல் பாடங்களை ஸ்ரீலங்கா வேண்டுமென்றே படிக்க மறுக்கிறது.
ஸ்ரீலங்காவின் வெளியுறவு அமைச்சு ஒருபடி மேலே போய் கொசோவோ சுதந்திரம் அடைந்ததைப் பார்த்து ஒப்பாரி வைத்து அழுதுள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டந்தான் அதற்குக் காரணம்.
(அ) கொசோவோவின் சுதந்திரப் பிரகடனம் சேர்பிய பெரும்பான்மை மக்களின் ஒப்புதலுடன் செய்யப்படவில்லை.
(ஆ) யூன் 10, 2008 இல் நிறைவேற்றப்பட்ட அய்க்கிய நாடுகளின் பாகாப்பு அவையின் தீர்மானம் 1224 எல்லா நாடுகளது இறைமையையும் ஆட்புல ஒருமைப்பாட்டையும் உறுதிசெய்வதாகக் கூறுகிறது. ஆனால் அது மீறப்பட்டுள்ளது.
(இ) பாதுகாப்பு அவையின் தீர்மானத்தின் படி கொசோவோவின் எதிர்காலத் தகுதி பற்றி பேச்சு வார்த்தை மூலம் ஒரு அரசியல் தீர்வை எட்டுவது என்பது முற்றாகப் பேசி முடிவு எட்டப்படவில்லை.
(ஈ) கொசோவோவின் தன்னிச்சையான சுதந்திரப் பிரகடனம் பன்னாட்டு உறவுகளைப் பேணுவதில், பன்னாட்டு இறையாண்மை படைத்த நாடுகளை மதிப்பதில் தவறியுள்ளது.
(உ) பன்னாட்டு அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஆக கொசோவோ சுதந்திரப் பிரகடனம் அமைந்துள்ளது. “கொசோவோவின் ஒருதலைப் பட்சமான சுதந்திரப் பிரகடனம் பன்னாட்டு அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஆக அமைந்துள்ளது” என ஸ்ரீலங்கா ஒப்பாரி வைப்பது நகைப்புக்குரியது.
ஸ்ரீலங்கா ஒப்பாரி வைப்பது போல் இன, மொழி, பண்பாட்டு அடிப்படையில்புதிய நாடுகள் தோன்றியிருப்பது உலக அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கவில்லை. மாறாக அவை அமைதிக்கும் பாதுகாப்புக்கும் வழி கோலியுள்ளது. கடந்த கால உலக வரலாற்றை காய்தல் உவத்தில் இன்றிப் படிப்போர் புதிய நாடுகளின் தோற்றம் உலக அமைதியை உருவாக்க உதவியுள்ளது என்பதை ஒத்துக்கொள்வார்கள்!
அய்க்கிய நாடுகள் நிறுவப்பட்ட போது அதன் உறுப்புரிமை 50 மட்டுமே. இன்று அந்த எண்ணிக்கை 192 ஆக உயர்ந்துள்ளது. இதனால் உலக அமைதியும் பாதுகாப்பும் அதிகரித்துள்ளவேயொழிய குறையவில்லை!
குட்டிக் குட்டி நாடுகள், தமிழீழத்தைவிட அளவிலும் மக்கள் தொகையிலும் குறைந்த சுமார் 50 நாடுகள் சுதந்திர நாடுகளாக அய்க்கிய நாடுகள் அவையில் கொலு வீற்றிருக்கின்றன.சைப்பிரஸ் நாட்டைப் பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள். மத்திய தரைக்கடலில் காணப்படும் மூன்றாவது பெரிய தீவு சைப்பிரஸ். சைப்பிரஸ் என்றால் கிரேக்க மொழியில் செப்பு என்று பொருள்.
சைப்பிரஸ் துருக்கியின் தென்திசை கடலோரமாகவும் சிரியாவின் மேற்குக் கரையோரமாகவும் இருக்கிறது.
சைபிரஸ் பலநூற்றாண்டு காலமாக சைப்பிரஸ் தீவு பினீசியன்ஸ் மற்றும் கிரேக்கர்கள் ஆகியோரது கொலனி நாடாக இருந்து வந்தது. 1571 ஆம் ஆண்டு துருக்கி அதனைத் தாக்கிக் கைப்பற்றியது. அங்கு பெருவாரியான துருக்கியரைக் குடியேற்றி தனது கொலனி நாடாக வைத்துக் கொண்டது. முதலாவது உலகப் போர் வெடித்தபோது பிரித்தானியா சைப்பிரஸ் தீவைக் கைப்பற்றியது.

1925 இல் சைப்பிரஸ் பிரித்தானியாவின் கொலனி நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. கிரேக்கத்தைத் தாய்நாடாகக் கருதும் சைப்பிரசில் வாழ்ந்த கிரேக்க மக்கள் சுதந்திரம் கேட்டுப் போராடினார்கள். சைப்பிரஸ் தீவு கிரேகத்தோடு இணைக்க வேண்டும் என்றும் போராடினார்கள்.
1955 இல் சைப்பிரஸ் போராளிகளின் தேசிய அமைப்பு (EOKA) பிரித்தானியாவுக்கு எதிராக ஒரு கெரில்லா போரைத் தொடங்கியது. 1958 இல் ஆயர் மாகாறியோஸ் (Archibishop Markarios) கிரேக்கத்தோடு இணைவதற்குப் பதில் சைப்பிரஸ் ஒரு சுதந்திரநாடாக மலரவேண்டும் என்றார்.
இதே சமயம் சைப்பிரஸ் துருக்கியர்கள் சைப்பிரஸ் தீவு கிரேக்கர் – துருக்கியர் மக்களிடை பிரிக்கப்பட வேண்டும் எனக் கோரினார்கள். சைப்பிரஸ் தீவு 1960, ஓகஸ்ட் 16 இல் சுதந்திரம் அடைந்தது.
கிரேக்கர்களும் துருக்கியர்களும் இணைந்து ஒரு அரசியல் யாப்பை எழுதிக் கொண்டார்கள். ஆயர் மாகாறியோஸ் சைப்பிரஸ் தீவின் முதல் ஆட்சித் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். ஆனால் வெகுவிரைவில் கிரேக்கர்கள் – துருக்கியர் மத்தியில் சண்டை தொடங்கியது.
1965 இல் அய்க்கிய நாடுகளின் அவையின் அமைதிப்படை அங்கு அனுப்பப்பட்டது.
1974 ஆம் ஆண்டு யூலை 15 ஆம் நாள் ஆயர் மார்க்கோஸ் சைப்பிரஸ் தேசிய பாதுகாப்புப் படை நடத்திய புரட்சியில் பதவி கவிழ்க்கப்பட்டார்.
யூலை 20 இல் துருக்கி சைப்பிரஸ் தீவில் வாழும் துருக்கியரைக் காப்பாற்றும் தார்மீக உரிமை தனக்கு இருக்கிறது எனக் கூறிக் கொண்டு அதன் மீது படையெடுத்து சைப்பிரசின் வடபகுதியை அண்டிய 37 விழுக்காடு நிலப்பரப்பைக் கைப்பற்றியது.
இதனால் 180,000 கிரேக்கர்கள் வடக்கில் இருந்து தெற்குக்கு ஏதிலிகளாக இடம் பெயர்ந்தார்கள்.
1974 யூலை 22 இல் அய்க்கிய நாடுகள் அவை இரு தரப்பினருக்கும் இடையில் ஒரு போர் நிறுத்தத்தை கொண்டு வந்தது. துருக்கிப் படை சைப்பிரசில் நிலைகொள்ள அனுமதிக்கப்பட்டது.
அதே ஆண்டு டிசெம்பர் மாதத்தில் ஆயர் மாகாறியோஸ் மீண்டும் ஆட்சித் தலைவராகப் பதவி ஏற்றார். அடுத்த ஆண்டு சைப்பிரஸ் தீவு கிரேக்கர் பகுதி துருக்கியர் பகுதி என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இடையில் அய்க்கிய நாட்டு அவையின் அமைதிப் படை நிறுத்தப்பட்டது.
1983 நொவெம்பர் 15 இல் துருக்கி சைப்பிரஸ் “வட துருக்கி குடியரசு” எனத் தன்னை ஒரு தலைப்பட்சமாகப் பிரகடனப்படுத்தியது. ஆனால் அய்யன்னா பாதுகாப்பு அவை அதனை அங்கீகரிக்க மறுத்தது. துருக்கி மட்டும் அதனை அங்கீகரித்தது.
இரண்டு சைப்பிரசையும் இணைப்பதற்கு அய்யன்னா நடத்திய பேச்சு வார்த்தை வெற்றிபெறவில்லை. 2002 இல் கிரேக்க சைப்பிரஸ் அய்ரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்து கொண்டது.
இப்போது 2008, பெப்ரவரியில் கிரேக்க சைப்பிரஸ் ஆட்சித் தலைவர் தேர்தலில் பொதுவுடமைக் கட்சி சார்பில் போட்டியிட்ட Dimitris Christofias என்பவர் 53.4 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவர் சைப்பிரஸ் தீவின் இரண்டு பகுதிகளையும் இணைக்கப் போவதாகச் சூளுரைத்துள்ளார்.
சைப்பிரஸ் பற்றிய தரவுகள்
மொத்த நிலப்பரப்பு – 9,250 சகிமீ (3,355 சகிமீ வட சைப்பிரஸ்)
பருவம் – வெப்பமான கோடை குளிர்மையான மாரிவளங்கள் – செப்பு, கனிக்கல் (gypsum) மரப்பலகை, உப்பு, பளிங்குக் கல், செந்நிறக் களிமண்
மொத்த மக்கள் தொகை –  788,457 (யூலை 2007 மதிப்பீடு)
இனங்கள் – 77 விழுக்காடு கிரேக்கர், 18 விழுக்காடு துருக்கியர் எனையவர் 5 விழுக்காடு (2001) சமயம் – கிரேக்க பழமைவாத சமயம் 78 விழுக்காடு, முஸ்லிம் 18 விழுக்காடு ஏனையவர்கள் 4 விழுக்காடு
நாணயம் – யூறோ
மொழி – கிரேக்கம், ஆங்கிலம்
தலைநகர ் – நிக்கோசியா
உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் – 210,000 (30 ஆண்டுகளாக கிரேக்கர் மற்றும் துருக்கியர்)
கொசோவோ போலவே சைப்பிரசிலும் வெவ்வேறு இன, மொழி, சமயம் சார்ந்தோர் ஒன்றாக இருக்க முடியாத என்ற உண்மை தெரிகிறது. பிரிந்து சென்றால்தான் இரண்டு இனங்களுக்கு மத்தியில் நிரந்தர அமைதியை உருவாக்க முடியும். நிரந்தரப் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியும்.
இறைமை என்பது மக்களுக்குச் சொந்தமானது. இந்த உண்மையை மேற்குலக நாடுகள் கொசோவோ நாட்டைப் பொறுத்தளவில் ஒத்துக் கொண்டுள்ளன. தமிழீழ மக்களின் இறைமையையும் மேற்குலக நாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனைய நாடுகளுக்கும் அந்தக் கோட்பாடு விரிவு படுத்தப் பட வேண்டும்.
எலிவளை என்றாலும் தனிவளை வேண்டும் என்பார்கள்.
சுதந்திரத்துக்காகப் போராடி வரும் திபேத், தமிழீழம், பாஸ்க், கஷ்மீர், அசாம், நாகலாந்து, தாய்வான் போன்ற நாடுகளில் நேரடி வாக்கெடுப்பு நடத்தி மக்கள் அளிக்கும் தீர்ப்பின் அடிப்படையில் அந்த நாட்டு மக்களின் சுதந்திரம் அங்கீகரிக்கப்;பட வேண்டும். (Ulagath Thamizhar – February 29, 2008)

Will Kosovo’s UDI  Have A Domino effect?

V. Thangavelu

In an emergency session last Sunday (November 17th), Kosovo’s parliament unanimously endorsed a unilateral declaration of independence (UDI) from Serbia. “We, the leaders of the institutions of Kosovo, declare Kosovo a free and independent country. We express the will of the institutions and we express our commitment to protect and promote the rights and freedoms of all the communities in Kosovo and their participation in decision making” states the document which was read to parliament by Prime Minister Hashim Thaci. “We will abide by the obligations in Ahtisaari’s plan and we will fulfil these obligations in the future — especially Annex 12 of his plan, the one that deals with the rights of ethnic communities.”

The declaration also welcomed a contingent of 2,000 strong  EU judicial and police missions in Kosovo and urged NATO to continue with its current peacekeeping mission. It pledged that Kosovo will contribute to reconciliation in the Balkans and expressed a wish for “good relations with all our neighbours, especially Serbia”.

Celebrations were underway from Saturday in Pristina as people took to the streets to dance and wave the US. British, German and Albanian national flags. Kosovo imported 80 tons of firecrackers for the occasion. While fireworks lit the sky in Pristina, there was protest in Belgrade by hundreds of Serb nationalists against independence. As I write about 300,000  people gathered today (Thursday) to protest Kosovo’s UDI  in front of the US  embassy in Belgrade. The Serbian government-backed protesters have set fire to the US embassy.

Shortly after the vote in Pristina, an angry but pro-west Serbian Prime Minister Vojislav Kostunica denounced Kosovo as a “false state”  on national TV. He called on Serbian citizens “to come together and show the whole world that we do not acknowledge the creation of a false state on our territory”.

Kosovo’s UDI ended a long chapter in the bloody break-up of Yugoslavia. With Kosovo, eight states have been carved out of the former Socialist Federal Republic of Yugoslavia. They are Serbia, Albania, Montenegro, Slovenia, Croatia, Bosnia-Herzegovina, Macedonia and Kosovo. Under authoritarian communist leader Josip Broz Tito the lid was kept on ethnic tensions. The federation lasted for over 10 years after his death in 1980, but under Serbian nationalist leader Slobodan Milosevic it fell apart in bloodshed through the 1990s. NATO forces launched a bombing campaign against Serbia’s ethnic cleansing in Kosovo from March 24 to June 11, 1999, till Belgrade agreed to pull its forces from Kosovo. Kosovo was first a region and then a province within Serbia along with the province of Vojvodina with Novi Sad as its capital. Kosovo enjoyed near autonomy until Slobodan Milosevic responded by stripping Kosovo of its political autonomy, and leaving it only a nebulous territorial autonomy.

On May 24, 1992, the ‘Kosovo Albanian Republic’ elected Rugova its President.  He responded by ‘withdrawing peacefully’ from the Yugoslav federation and setting up a de facto state within the Yugoslav state. The Kosovo Albanians withdrew their children from government schools, stopped paying taxes, set up their own administration and to finance it collected taxes from 600,000 ethnic Albanians living and working in Europe and America. A part of the funds went for the purchase of arms. When Kosovo was left out of the Dayton agreement signed in 1997, Rugova began losing ground to KLA. After 1995 the inflow of arms swelled rapidly and  KLA grew by leaps and bounds. All through 1997, the KLA followed textbook methods of fomenting insurgency which claimed more than 15,000 casualties.

President Slobodan Milosovic stripped Kosovo of its autonomy to counter the threat of separation. In February 1998 he despatched the Serbian army to crack down on the KLA and to ethnically cleanse Kosovo. “The Serb army rather than hunt down armed groups blasted villages into rubble with 20-millimetre cannon, grenade launchers and .50-caliber machine guns. Those trapped in the houses died and many of those who fled were gunned down, according to witnesses. Many bodies, laid out at mass funerals, bore signs of mutilation and summary execution”. (New York Times)

An estimated 800,000 Albanian Muslims fled their homes and sought asylum in neighbouring Albania. The KLA was declared a terrorist organization and its leader Hashim Thaci a wanted terrorist!

The legality of a UDI is often the subject of intense debate and Kosovo is no exception.  UDI poses, at the very least, awkward questions in international law. Kosovo, under U.N. Security Council Resolution 1244 of 1999, is an international protectorate within a sovereign state, namely Serbia, and the UDI has been made without formal U.N. authorisation.

Unlike Kosovo,  East Timor became the first new sovereign state of the twenty-first century on May 20, 2002, with the blessings of the United Nations. In 1999, following an UN-sponsored act of self-determination, Indonesia relinquished control of the territory.
Kosovo’s UDI was in the offing for some time now, but the announcement has thrown the fragile Balkan peace into question. Beneath the various diplomatic utterances, there is real cause for concern. The creation of an independent Kosovo has led to the emergence of three Islamic states (The other two being Bosnia and Albania) in the heart of Europe.
President George W Bush was one of the first to recognise Kosovo. “The Kosovans are now independent” he said, but that provoked Serbia to immediately withdraw its Ambassador from Washington. The EU, the world’s most powerful trading bloc is divided over recognition. Out of the 27 EU countries 22, including UK. Germany, Italy and France, have recognized it. Smaller states like Greece, and Spain. Romania, Cyprus and Slovenia oppose recognition. Russia, for its part, is very angry and will resist Kosovan accession to the United Nations.
India’s Ministry of External Affairs has issued a statement noting that as Kosovo does not meet all three conditions for recognition, namely “a defined territory, a duly constituted government in charge which is accepted by the people and which has effective control over an area of governance,” India is not offering recognition and would prefer the issue to be “resolved through peaceful means and through consultation and dialogue.”
As for Canada, it is sitting on the fence not knowing whether to recognize or not the newly minted state of Kosovo. Quebec separation must be weighing heavily at the back of the minds of Canadian policymakers and strategists.
There is a common denominator among countries that are opposing recognition. The precedent set and the implications arising out of Kosovo’s UDI for various multi-ethnic countries are enormous.  Russia to Sri Lanka all have wounds in their backs and hands full with liberation wars.

Russia faces separatism in Chechnya and Georgia. China has occupied Tibet illegally using military force and threatens to bomb Taiwan if the latter declared UDI. Spain is grabbling with Basque separatists. India is fighting insurgency in Kashmir, Nagaland and Assam. And Sri Lanka is waging a costly war to prevent the emergence of an independent Thamil Eelam.
The urge to declare UDI may not stop with Kosovo. Instead, it will have a domino effect in all parts of the world where national minorities are fighting repressive majoritarian regimes for independence. A successful and internationally supported Kosovo UDI will be seen as an inspiration and a precedent by liberation organizations fighting for independence.
Kosovo’s UDI has triggered Russian majority provinces of South Ossetia and Abkhazia to ask for recognition. The break-away Georgian regions are planning to ask Russia and the UN to recognise their independence. President Eduard Kokoity of South Ossetian has said, his country has more political and legal jurisdiction than Kosovo to declare independence. It is thought that he may put his words into action.

Even the Serb-dominated region north of Kosovo may secede to join Serbia! If it does so, it will be a supreme irony for Kosovo to deny Serbians their right to self-determination!
The 11 Kosovo Serb and other ethnic-minority members boycotted Monday’s vote, and, if Prime Minister Hashim Thaci’s promise of strong protection for ethnic minorities is not fully honoured, it is likely that the ancient ethnic and other hatreds will result in repeat ethnic cleansing and war.

Kosovo’s UDI has predictably sent a shiver down the spine of every nation battling liberation wars. Sri Lanka lost no time in rejecting Kosovo’s independence as a “violation of the Charter of the United Nations and grave threat to international peace and security. The UDI by Kosovo could set an unmanageable precedent in the conduct of international relations, the established global order of sovereign States and could thus pose a grave threat to international peace and security.”

Sri Lanka has every reason to feel insecure and threatened by the example set by Kosovo since the parallel between Kosovo – Serbia and Thamil Eelam – Sri Lanka is very obvious.  President Rajapakse has unleashed an unprecedented war against the LTTE. He has spurned appeals by the international community to put a stop to the horrendous human rights violations and the culture of impunity and to seek a viable political solution that will address the aspirations of the Thamil people.  Instead, he has increased defence expenditure by nearly 20% to 166.4bn rupees ($1.48bn) from 139.6bn in 2007. Politically he is now held hostage by hard-line Sinhala – Buddhist chauvinistic parties like the JVP and JHU.

Kosovo is a country with an area of 10,912 sq km (4,213 sq. miles) with a population of 2 million. Thamil Eelam has an area of 18,880 sq. km (7,290 sq. miles) with a population of 3.2 million. A majority of Kosovans (90%) are Muslims while a majority of Tamils (85%) are Hindus.
Serbia, including Montenegro, is 102,350 sq. km (39,517 sq. miles) in an area with a population of 10.8 million of which 65% are Orthodox Christians and 19% Muslims. Sri Lanka, including Thamil Eelam is 65,610 sq.km (25,332 sq.miles) of which 70 % are Buddhists.

With so much similarity could Thamil Eelam follow the example of Kosovo? Unlike Thamil Eelam, Kosovo is a Balkan problem although the former has a better and stronger case than Kosovo.
In the end victory in war is the best guarantee of independence. Thamil Eelam should have secure borders and exercise sovereign control over territory.

It is useful to remember the axiom of statehood that “war is what dictates borders and winners get the right to draw the new lines.” (Tamil Canadian – February. 2008)

நிலத்தைப் பிடிக்கவே எல்லா யுத்தங்களும் மேற்கொள்ளப் படுகிறது

கடந்த திங்கட்கிழமை அதாவது 2008 ஆம் ஆண்டு பெப்ரவரி 04 ஆம் நாள் மணலாறு சிறிலங்காப் படையின் 223 ஆவது பிரிக்கேட் தலைமையகத்திற்கு அருகில் உள்ள கொப்பேக்கடுவச் சந்தியில் நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் பேருந்தில் பயணித்த 5 சிறிலங்காப் படையினர் உள்ளிட்ட 15 பேர் கொல்லப்பட்டனர். 17 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் அனுராதபுரம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதல் திங்கட்கிழமை பிற்பகல் 3.40 மணிக்கு நடத்தப்பட்டது. தாக்குதலில் சிக்கிய பேருந்து, அனுராதபுரத்தில் இருந்து மணலாறு நோக்கிச் சென்று கொண்டிருந்ததாகத் தெரியவந்துள்ளது.

மரம் ஒன்றில் பொருத்திவைக்கப்பட்ட கிளைமோர் குண்டின் மூலம் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக சிறிலங்காப் படைத்தரப்புப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

தாக்குதல் நடந்த இடம் கொப்பேக்கடுவச் சந்தி எனக் காரணத்தோடுதான் பெயர் வைத்திருக்கிறார்கள்.

லெவ்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேக்கடுவா என்று அழைக்கப்படுபவர் ஒரு சிங்கள இராணுவத் தளபதி. 1992 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் அராலியில் வி. புலிகள் நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் இவர் கொல்லப்பட்டார். இவரோடு மேஜர் ஜெனரல் விமலரத்தின மற்றும் கடற்படைத் தளபதி றியர் அட்மிரல் மோகன் ஜயமகா ஆகியோரும் கொல்லப்பட்டனர்.

வட-கிழக்கில் நடைபெற்ற திட்டமிட்ட பல சிங்களக் குடியேற்றத் திட்டங்களை ஆட்சியாளர்கள் சிங்கள இராணுவத்தின் உதவியோடு; நிறைவேற்றுவதை வழமையாகக் கொண்டிருக்கிறார்கள். இராணுவத்தைப் பயன்படுத்தி தமிழ்மக்களை அவர்களது பூர்வீக ஊர்களில் இருந்து ஆயுத முனையில் விரட்டிவிடடு பின்னர் தென் இலங்கையில் இருந்து கொண்டுவரப்பட்ட சிங்களவர்கள் அந்த இடங்களில் குடியமர்த்தப் படுவார்கள். இதற்கு மணல் ஆறு சிங்களக் குடியேற்றத் திட்டம் நல்ல எடுத்துக் காட்டாகும். மணல் ஆறு என்ற தமிழ்ப் பெயர் ஒரே நாளில் வெலி ஓயாவெனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

சென்ற பெப்ரவரி 4 ஆம் நாள் சிங்கள ஆட்சியாளர்கள் இலங்கை சுதந்திரம் அடைந்த 60 ஆண்டு நிறைவைப் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கொண்டாடினார்கள். ஆனால் தமிழர்கள் அதனைக் கரி நாளாகக் கொண்டாடினார்கள்.

1948 பெப்ரவரி 04 இல் இலங்கைக்கு சுதந்திரம் வழங்ப்பட்டது. அதே ஆண்டில் பத்து ஒரு இலட்சம் தோட்டத் தொழிலாளர்களது குடியுரிமை மற்றும் வாக்குரிமையைப் பறிக்கும் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.

‘இலங்கைக்குடியுரிமைச் சட்டம்’ ஒரே இரவில் பத்து இலட்சம் மலையகத் தமிழர்களை நாடற்றவர்களாகச் செய்து நடுத்தெருவில் விட்டது. அதனைத் தொடர்ந்து 1949 இல் குடியுரிமை உடையோருக்கே தேர்தலில் வாக்களிக்கும் உரிமை உண்டு எனத் தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இதனால் மலையகத் தமிழர்களது வாக்குரிமையும் பறிபோனது. மலையகத் தமிழர்கள் 1948 இல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற 7 தொகுதிகளையும் 1952 இல் இழந்தனர். மேலும் 14 தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிருணயிக்கும் வாக்குப் பலத்தையும் இழந்தனர். 1956 இல் தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டதற்கு மலையகத் தமிழர்கள் தங்கள் வாக்குரிமையை இழந்தது முக்கிய காரணியாகும்.

இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னும் பின்னும் வட – கிழக்கில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் முடுக்கிவிடப்பட்டன. இக் குடியேற்றத் திட்டங்களில் தென்னிலங்கையில் இருந்து கொண்டுவரப்பட்ட சிங்களவர்கள் ஆயிரக்கணக்கில் குடியேற்றப்பட்டார்கள். 1948 இன் பின்னர் இரண்டு முக்கிய குடியேற்றத்திடடங்கள் நடைமுறைப் படுத்;தப்பட்டது.

1. கல்லோயாத்திட்டம்
2. துரித மாகவலி அபிவிருத்தித்திட்டம்

1949 இல் பிரதமர் டி. எஸ். சேனநாயக்கா அவர்களால் ‘கல்லோயா ஆற்றுப்பள்ளத்தாக்கு அபிவிருத்தித்திட்டம்’ தொடக்கி வைக்கப்பட்டது. பட்டிப்பளை என்ற பாரம்பரியத் தமிழ்ப்பெயரே ‘கல்லோயா’ என மாற்றப்பட்டது. இந்நிலப்பரபில் 44 குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதில் 38 சிங்களக் குடியேற்றங்கள் ஆகும். மீதி 6 தமிழ்க் குடியேற்றங்கள் ஆகும். ஆனால் தமிழ்க் குடியேற்றவாசிகள் 1956, 1958 இல் ஏற்பட்ட இனக்கலவரங்களின் போது சிங்களவர்களால் விரட்டியடிக்கப்பட்டனர். சிலர் கொல்லப்பட்டனர். இதன்பின்னர் கல்லோயாப் பிரதேசம் முற்று முழதாகச் சிங்கள மயமாக்கப்பட்டது.

கிழக்கைப் போல் வடக்கில் சிங்களக் குடியேற்றங்கள் முதன்முதலில் தொடக்கப்பட்ட இடம் வன்னி மாவட்டம் ஆகும். இங்குள்ள பாவற்குளம் என்ற கிராமத்தில் 1956 இல் 595 சிங்களக் குடும்பங்களும் 463 தமிழ்க்குடும்பங்களும் அமர்த்தப்பட்டன. பின்னர் ஏற்பட்ட இனக்கலவரங்களால் தமிழ்க்குடும்பங்கள் விரட்டியடிக்கப்பட்டு இப்பிரதேசம் சிங்களமயமாக்கப்பட்டது.

எண்பதுகள் வரை சிங்களக் குடியேற்றத் திட்டங்கள் முடிக்குரிய வெற்றுக் காணிகளிலேயே பெரும்பாலும் இடம் பெற்றது. ஆனால் அதன்பின் தமிழர்களைத் துரத்திவிட்டு அவர்களுக்குச் சொந்தமான காணிகளில் சிங்களவர்களை குடியேற்றும் படலம் ஆரம்பமானது. அதில் மணலாறு ஒன்றாகும்.

1987 இல் இலங்கையின் வடகிழக்கில் உருவாக்கப்பட்ட குடியேற்றத்திட்டங்களில் துரித மாகவலி அபிவிருத்தித்திட்டம் முக்கியமானதாகும். இதற்கு உலக வங்கியிடமிருந்து பெருவாரி பணம் கடனாக வாங்கப்பட்டது.

1987 இல் இலங்கை – இந்திய ஒப்பந்தம் வட –கிழக்கு மாகாணங்கள் ஒன்றாக இணைக்கப்பட வேண்டும் எனக் கூறியது. இவ்வொப்பந்தம் நடைமுறைக்கு வருமுன்னர் 1988 இல் மணல் ஆறுப் பிரதேசம் அபிவிருத்திக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு சிங்களமக்கள் குடியமர்த்தப்பட்டனர்.

1987 நவம்பர் மாதம் அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்ட 13 ஆவது சட்டதிருத்தம் முடிக்குரிய காணிகளை மாகாண அரசுகளின் பொறுப்பில் விட, மகாவலி அபிவிருத்தித்திட்டம் மட்டும் மத்திய அரசிடமே இருந்தது.

1988 ஆம் ஆண்டு ஏப்ரில் 16 ஆம் நாள் ஸ்ரீலங்கா அரசு ஒரு சிறப்பு கெசட் ஒன்றை வெளியிட்டது. அதன் மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மணல் ஆறு வெலி ஓயா என நேரடி சிங்களப் பெயராக மாற்றப்பட்டது. வெலி ஓயா ஸ்ரீலங்காவின் 26 ஆவது மாவட்டமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. . இக்கால கட்டத்தில் காணி அமைச்சராக இருந்த காமினி திஸாநாயக்கா துரித மகாவலி மேம்பாட்டுத் திட்டத்துக்கும் பொறுப்பாக இருந்தார்.

ஏற்கனவே குறிப்பிட்ட கெசட்டின் கீழ் 42 கிராமங்களில் வாழ்ந்து வந்த 13,288 தமிழ்க் குடும்பங்கள் அவர்களது வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும் கென்ட் பாம், டொலர் பாம் உட்பட ஒவ்வொன்றும் 1,000 ஏக்கர் கொண்ட 14 பண்ணை உரிமையாளர்களும் வெளியேற்றப்பட்டனர். இந்தப் பண்ணைகள் 99 ஆண்டு நீண்ட கால குத்தகையில் பெற்று பெருந்தொகை பணம் செலவழித்து தமிழ் வணிகர்களால் மேம்படுத்தப்பட்டவை ஆகும்.

சிங்கள இராணுவம் தமிழ்க் குடும்பங்கள் தங்களது வீடு வாசல்களை விட்டு வெளியேறுவதற்கு 48 மணித்தியால அவகாசம் கொடுத்தது. மறுத்தால் அவர்கள் பலவந்தமாக வெளியேற்றப்படுவார்கள் என ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது.

வெளியேறாத தமிழ்க் குடும்பங்கள் சிங்கள இராணுவத்தினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டன. அப்படி வெளியேற்றப்பட்டவர்களில் மலையகத் தமிழ்க் குடும்பங்களும் அடங்கின. இந்தக் குடும்பங்கள் 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற இனக் கலவரத்தை அடுத்து முல்லைத்தீவு மாவட்டத்துக்கு ஓடிவந்தவர்கள் ஆவர்.

இதன்போது ஒதியமலைக் கிராமதைச் சேர்ந்த 29 தமிழர்கள் சிங்கள இராணுவத்தினால் கொல்லப்பட்டனர்.

வெலி ஓயாவில் முதல் கட்டமாக 1988 – 89 காலப் பகுதியில் 3,364 குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. இவர்களில் பெரும்பாலானோர் கிறிமினல் குற்றவாளிகள் ஆவர். பெரும்பகுதியினர் சிறைச்சாலைகளில் இருந்து நேரே வெலி ஓயாவுக்குக் கொண்டு சென்று குடியேற்றப்பட்டவர்கள். இரண்டாம் கட்டமாக 35,000 பேர் குடியமர்த்தப் பட்டார்கள்.

இந்தக் குடியேற்றங்களைப் பாதுகாக்க சிங்கள இராணுவ முகாம்கள் ஆங்காங்கே உருவாக்கப்பட்டன. வெலி ஓயா சிங்களக் குடியேற்றத்தின் வெற்றிக்குக் காரணமாக இருந்த சிங்கள இராணுவத் தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் ஜானக பேரேராவின் சேவையை மெச்சுமுகமாக தண்ணிமுறிப்பு என்ற தமிழ் ஊர் ஜானகபுர எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

1988 – 89 காலப்பகுதியில் இந்திய அமைதிப்படை வட – கிழக்கில் நிலை கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இராசீவ் காந்தியால் தலைவர் பிரபாகரனுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாது இழுத்தடிக்கப்பட்டன. தமிழ் மக்களுக்கு எதிரான இனவழிப்புய் போரை அதிபர் ஜே. ஆர். தங்கு தடையின்றிக் கட்டவுழ்த்து விட்டார். அவற்றைப் பார்த்து இந்தியா கைகட்டி வாய்பொத்தி சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. ஜே.ஆரின் அரசியல் சாணக்கியத்திற்கு முன்னால் இந்திய இராசதந்திரம் மண்டியிட்;டது. அந்தக் கட்டத்தில்தான் தியாகி திலீபன் அய்ந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரை உண்ணா நோன்புப் போராட்டத்தை யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட மன்னர்களின் தலைநகரான நல்லூரில ஆரம்பித்தான். அந்த அய்ந்து அம்சக் கோரிக்கைகளில் மணலாற்றில் முடுக்கி விடப்பட்டுள்ள சிங்களக் குடியேற்றம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பது ஒன்றாகும்.
வெலி ஓயாக் குடியேற்றத் திட்டத்தின் மூலம் இன்னொரு ‘சாதனை’யையும் ஸ்ரீலங்கா அரசு படைத்தது. வட தமிழீழத்துக்கும் தென் தமிழீழத்துக்கும் இடையிலான நிலத்தொடர்பை வெட்டியதே அந்தச் ‘சாதனை’யாகும்.

‘நிலத்தைப் பிடிக்கவே எல்லா யுத்தங்களும் மேற்கொள்ளப் படுகிறது’ என்பது வரலாற்று உண்மையாகும். மணல் ஆற்றுப் போர் முனை அதனையே பறைசாற்றுகிறது. (செஞ்சோலை வானொலி – 08-02-2008)

இந்திய மாயையில் இருந்து தமிழ்மக்கள் விடுபட வேண்டும்!

இலங்கையின் இனநெருக்கடி பற்றி இந்தியாவின் அணுகுமுறை என்ன? அதன் கோட்பாடு என்ன? இந்தியா அதில் தலையிடுமா? இது போன்ற கேள்விகளே இப்போது தமிழ் மக்களது மண்டையைக் குடைந்து கொண்டிருக்கின்றன.

இந்தக் கேள்விகளுக்கு அண்மையில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுணும் விடுத்துள்ள கூட்டறிக்கை பதிலாக அமைந்துள்ளது.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுணும் விடுத்துள்ள கூட்டறிக்கையில் ‘இலங்கையின் இனநெருக்கடிக்கு இராணுவ நடவடிக்கைகள் தீர்வாக அமையாது. ஒன்றுபட்ட இலங்கைக்குள் அனைத்து சமூகத்தினத்தினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை இலங்கை அரசு முன்வைக்க வேண்டும்’ எனச் சொல்லப்பட்டுள்ளது.

இப்படிச் சொல்லப்படுவது அல்லது வலியுறுத்தப்படுவது இது முதல் தடவையல்ல. இந்தியா கடந்த காலத்திலும் இந்தப் பாட்டைத்தான் பாடிக்கொண்டு வந்தது.

இரண்டு கிழமைகளுக்கு முன்னர் கூடப் புதுடெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களுடன் பேசும்போது இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி சுருதி பிசகாமல் அதே பாட்டைத்தான் பாடினார்.

‘இலங்கை இனப் பிரச்சினைக்கு இராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு காண்பதைவிட, அரசியல் தீர்வு காண்பதே அந்த நாட்டுக்கு நல்லது’ என்றார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையில், இலங்கை அரசுக்கு இந்தியா உதவுமா என்று செய்தியாளர்கள் அவரிடம் கேட்டபோது, ‘நமது அணுகுமுறை அடிப்படையானது. இலங்கை தனி இறையாண்மை கொண்ட, அண்டை நாடு என்ற முறையில் அந்த நாட்டுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்கிறோம். அந்த நாட்டில் நடைபெறும் சிக்கல்களைக் கையாள்வதற்கான அனைத்து உரிமைகளும் அந்நாட்டு அரசுக்கு உண்டு. இராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு காண்பதைவிட, அரசியல் தீர்வு காண்பதே அந்த நாட்டுக்கு நல்லது” என்றார் பாதுகாப்பு அமைச்சர்.
இதனிடையே, இலங்கைச் சிக்கல் தொடர்பாக இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் கருத்துத் தெரிவித்திருக்கிறார். அது ஊன்றிப் படிக்க வேண்டிய கருத்தாகும்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு செவ்வியளித்த பிரணாப் முகர்ஜி, ‘இலங்கைப் படைகளுக்கும் விடுதலைப் புலி பயங்கரவாதிகளுக்கும் இடையிலான சண்டை அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. பயங்கரவாதத்தைப் பொறுத்தவரை, அதை எந்த வகையிலும் ஏற்க முடியாது என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடு. எந்த ஒரு நாடு பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்தாலும் அந்த நாட்டின் அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க அவர்களுக்கு உரிமை உண்டு” என்று பிரணாப் முகர்ஜி திருவாய் மலர்ந்தார்.
‘அதே நேரத்தில், தமிழ் சிறுபான்மையினரின் நியாயமான கோரிக்கைகளை, அந்த நாட்டின் அரசியல் யாப்புக்கு உட்பட்டு நிறைவேற்ற இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது” என்றும் அவர் கூறியிருக்கிறார். இந்தியா விரும்புகிறது. இந்தியா வேண்டவில்லை.
இந்த இரண்டு அமைச்சர்கள் தெரிவித்திருக்கும் கருத்தைச் சுருக்கிக் கூறலாம்.
(1) ஸ்ரீலங்கா அண்டை நாடு. அதற்கு ஆயுதம் மற்றும் பொருளாதார உதவி செய்வது இந்தியாவின் கடமை.
(2) ஸ்ரீலங்கா இறைமையுள்ள நாடு.
(3) இனநெருக்கடி ஸ்ரீலங்காவின் உள்நாட்டுச் சிக்கல்.
(4) இந்தியா அதில் தலையிடாது.
(5) வி.புலிகள் பயங்கரவாதிகள்.
(6) ஸ்ரீலங்கா பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடுகிறது. அந்த உரிமை அந்த நாட்டுக்கு
உண்டு.
(7) தமிழ் சிறுபான்மையினரின் நியாயமான கோரிக்கைகளை ஸ்ரீலங்காவின் அரசியல்
சட்டத்துக்கு அமைய நிறைவேற்றி வைக்க வேண்டும்.
இப்போது இலங்கை அரசு நியமித்த அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு 20 ஆண்டுகளுக்கு முன்னர் நிறைவேற்றப்பட்ட 13 ஆவது திருத்தத்தை முழுதாக நடைமுறைப் படுத்துமாறு பரிந்துரை செய்துள்ளது. இந்தப் பரிந்துரை ஆட்சித் தலைவரின் ஆணைக்கு இணங்கச் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பரிந்துரையைப் பற்றிக் கருத்துத் தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் நவ்தேஜ் பின்வருமாறு கூறியருக்கிறார்.

‘இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள அதிகாரப்பகிர்வு வழிமுறைகள் மற்றும் ஆட்சிமொழி வழிமுறைகள் தொடர்பாக, அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு அளித்திருக்கும் இடைக்காலப் பரிந்துரைகள் தொடர்பாக இலங்கை அரசு இந்தியாவிடம் தெரியப்படுத்தியிருக்கிறது. இலங்கையில் உள்ள பிரச்சினைகளுக்கு இலங்கை மக்கள்தான் தீர்வு காண வேண்டும் என்பது இந்தியாவின் நிலைப்பாடாக இருந்து வருகிறது. அந்தத் தீர்வு, ஒன்றுபட்ட இலங்கைக்குள் அனைத்து சமூகத்தினரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும். இலங்கையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு இலங்கை அரசுடனும், அந்நாட்டு மக்களுடனும் இந்தியா தொடர்ந்து செயலாற்றும். அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகள் குழு அளித்திருக்கும் பரிந்துரைகள் அப்படிப்பட்ட தீர்வுக்கு பங்காற்றுவதாக இருக்கும் நிலையில், அது வரவேற்கத்தகுந்த முதல் நடவடிக்கை.’

வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் நவ்தேஜ் அவர்களது கருத்து இந்தியாவின் தலையீட்டால் 1987 இல் நிறைவேற்றப்பட்ட 13 ஆவது சட்ட திருத்தத்தை இருபது ஆண்டுகள் கழித்து அதனை முழுதாக நடை முறைப் படுத்தப் போவதாக ஸ்ரீலங்கா அரசு கூறியிருப்பது இநதி;யாவுக்கு அற்ப மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளதைக் காட்டுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ரீலங்கா ஒன்றுபட்ட அரசு தமிழ்மக்களது வேட்கையை நிறைவு செய்யும் வண்ணம் ஒரு தீர்வை முன்வைக்க வேண்டும் என்று இந்தியா கூறிவந்தது. இப்போது ‘ஒன்றுபட்ட இலங்கைக்குள் அனைத்து சமூகத்தினரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக தீர்வு இருக்க வேண்டும்’ என மாறிக் கூறுகிறது.

இந்த ‘ஒன்றுபட்ட இலங்கைக்குள் அனைத்து சமூகத்தினரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும்’ என்ற பல்லவியைத்தான் அனைத்துலக சமூகமும் பாடிக் கொண்டிருக்கிறது.

ஸ்ரீலங்கா சிங்கள – பவுத்த நாடு. அதில் பவுத்தத்துக்கே முதலிடம். அதன் ஆட்சிமுறை ஒற்றையாட்சி. வட – கிழக்கு தமிழர்களது தாயகம் அல்ல. தமிழர்களுக்குத் தன்னாட்சி உரிமை இல்லை. தமிழர்கள் ஒரு தேசிய இனம் அல்ல. இவைதான் மகிந்த சிந்தனை தெரிவிக்கும் கோட்பாடு.

சிங்கள சமூகத்துக்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் இடையே பாரிய இடைவெளி இருக்கிறது. இந்த அழகில் ‘ஒன்றுபட்ட இலங்கைக்குள் அனைத்து சமூகத்தினரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக தீர்வு’ எப்படிச் சாத்தியமாகும்? எந்தக் காலத்தில் சாத்தியமாகும்?

இந்தியா என்றதும் தமிழ்மக்கள் அது காந்தி, நேரு பிறந்த நாடு என்று நினைக்கிறார்கள். காசி – இராமேசுவரம் இரண்டுக்கும் யாத்திரை போவது பற்றி நினைக்கிறார்கள். ஆறு கோடி தமிழர்கள் வாழும் தமிழகத்தை நினைக்கிறார்கள். இந்தியாவை ஆள்பவர்கள் நம்மவர்கள் என்று நினைக்கிறார்கள். இவை யாவும் மாயை ஆகும்.

இந்தியாவை ஆள்பவர்கள் உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், இராஜந்தான், பீகார் போன்ற இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கையில்தான் ஆட்சி அதிஇலம் இருக்கிறது.

இந்திய ஆட்சியாளர்கள் தமிழ்நாட்டுத் தமிழர்களைக் கூட ஒரு பொருட்டாக எண்ணுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் சிங்களவர்கள் தமிழர்களைத் தாழ்வாகப் பார்ப்பது போல இந்திக்காரர்கள் தமிழ்நாட்டுத் தமிழர்களைத் தாழ்வாகப் பார்க்கிறார்கள். ‘மதறாசி’ என்று விளிப்பது ‘தெமிலோ’ என்று பழிப்பதற்குச் சமமாகும்.

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை எடுத்துக் கொண்டால் அது இப்போது உறையப் போடப்பட்டுள்ளது. என்ன காரணம்? இராமர் கட்டிய பாலத்தை இடிக்கக் கூடாது. இடிக்க விட மாட்டோம் என இந்துத்துவ சக்திகள் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள்.

இந்திய அரசியலில் கோமாளி என்ற பெயரெடுத்த ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் வேறு சிலரும் இராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாகப் பிரகடனம் செய்து பாதுகாக்குமாறு இந்திய அரசாங்கத்துக்கு உத்தரவிடக்கோரி கடந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்தனர். அவற்றை விசாரணைக்கு எடுத்த உச்சநீதிமன்றம் இராமர் பாலம் பகுதியில் கட்டுமானப் பணிகளை இடைநிறுத்திவைத்து, பாலத்தை இடிக்காமல் அகழ்வுப் பணியைத் தொடரும் படி கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் 31 ஆம் நாள் இடைக்கால ஆணையைப் பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் மத்திய அரசாங்கத்தின் தொல்பொருள் ஆய்வுத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இராமாயணத்தில் வரும் இராமர் மற்றும் கதாபாத்திரங்கள் உண்மையிலேயே இருந்ததற்கு வரலாற்று அடிப்படையிலோ அல்லது அறிவியல் அடிப்படையிலோ ஆதாரங்கள் எதுவுமில்லை என்றும் இராமாயணத்தில் வரும் நிகழ்ச்சிகள் நடந்ததற்கான ஆதாரங்களும் இல்லை என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மத அடிப்படையில் உணர்வுகளை மக்கள் மத்தியில் தூண்டிவிட்டு அரசியல் இலாபமடைவதற்கு காத்துக் கொண்டிருக்கும் இனவாத, மதவாத சக்திகளுக்கு தொல்பொருள் ஆய்வுத்துறையின் இம்மனு அவல் போல அமைந்துவிட்டது. அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் மத நிந்தனை செய்துவிட்டதாகவும் இந்துக்களது நாகரிகப் பாரம்பரியம் அவமதிக்கப்பட்டு விட்டதாகவும் அச்சக்திகள் கண்டனக் குரலெழுப்பத் தொடங்கின. பிரதமர் மன்மோகன் சிங்கும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியும் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி வேண்டுகோள் விடுத்தார். பாரதிய ஜனதா கட்சியினரும் பல்வேறு இந்துமதவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர்.

இதையடுத்து தொல்பொருள் ஆய்வுத்துறை தாக்கல் செய்தமனுவும் சேது சமுத்திரம் கப்பல் கால்வாய்த் திட்டம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வேறு ஒரு மனுவும் உச்சநீதிமன்றத்தில் திருப்பிப் பெறப்பட்டன. இராமர் பாலத்துக்கு சேதம் இல்லாமல் அகழ்வுப்பணியைத் தொடரும்படி ஏற்கெனவே வழங்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவு மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கும் என்று நீதிபதிகள் அறிவித்தனர். சேது சமுத்திரத் திட்டத்துக்கு மாற்றுப்பாதையை கண்டறியத் தயார் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான தொல்பொருள் ஆய்வுத்துறையைச் சேர்ந்த இரு மூத்த அதிகாரிகள் இடை நிறுத்தம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்வதை இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது. காரணம் நான்கு வட மாநிலங்களில் தேர்தல் வர இருக்கிறது. ஏற்கனவே குஜராத்திலும் சட்டிஸ்காரிலும் நடந்த தேர்தலில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவியுள்ளது.

சேது கால்வாய்த் திட்டம் 6 கோடி தமிழர்களது 150 ஆண்டு காலக் கனவு. அறிஞர் அண்ணாவின் கனவுத் திட்டம். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அல்ல. தி.மு.க. மற்றும் பா.மு.க. பங்கு கொண்டுள்ள கூட்டாச்சி நடக்கிறது. மொத்தம் 13 தமிழ் அமைச்சர்கள் மத்திய அமைச்சரவையில் இருக்கிறார்கள். மத்திய கப்பல் மற்றும் தரைவழிப் போக்குவரத்து அமைச்சர் டி.ஆர்.பாலு சேது கால்வாய்த் திட்டத்துக்கு பொறுப்பாக இருக்கிறார். இருந்தும் சேது கால்வாய்த் திட்டம் கேள்விக் குறியாகியுள்ளது. ஆறு கோடி தமிழர்களது உணர்வுகளை மத்திய அரசு அலட்சியப்படுத்தும் போது இலங்கைத் தமிழர்பற்றிச் சொல்லவா வேண்டும்?

தமிழ்மக்கள் இந்திய மாயையில் இருந்து விடுபட வேண்டும். (உலகத்தமிழர் – சனவரி 25, 2008)

தமிழகத்தில் விடுதலைப் புலிகளை ஆதரிப்போர் மீது சட்டம் பாயும்!

கடந்த சனவரி 25 இல் சென்னை அமைந்தகரையில் மொழிப்போர் மாவீரர்கள் நினைவு நாளில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு நடத்திய கருத்துரிமை மீட்பு மாநாட்டில் இலங்கைத் தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடிவரும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை மக்கள் இயக்கமாக அங்கீகரிக்கவேண்டும் எனவும் விடுதலைப்புலிகள் மீது பொருளாதாரத் தடையை விதித்துள்ள நாடுகள் அதை முற்றிலுமாக கைவிடவேண்டும் எனவும் இந்திய அரசு விடுதலைப்புலிகள் மீதான தடையை உடனே நீக்கவேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இலங்கை இராணுவத்தால் பலியானவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவதும், இரங்கல் தெரிவிப்பதும் சனநாயக உரிமையாகும். ஆனால் தடையைக் காரணம் காட்டி இரங்கல் தெரிவிக்க கூடாது என்று சிலர் அரசியல் ஆதாயத்திற்காக ஆவேசப்படுவது வேடிக்கையாக உள்ளது. இது சனநாயகத்திற்கும் மனிதநேயத்திற்கும் எதிரான போக்கு எனத் தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கல்வித்துறை அதிகாரங்களை பொதுப் பட்டியலில் இருந்து விலக்கி, மாநிலப் பட்டியலில் இணைக்கவேண்டும் செம்மொழியான தமிழ் மொழியை இந்திய அரசின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக இந்திய அரசு அறிவிக்கவேண்டும் தமிழை நீதிமன்ற வழக்கு மொழியாக நடைமுறைப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை துப்பாக்கி சூடு நடத்தி கொன்று வருவதை வன்மையாக கண்டிப்பதோடு இந்திய ஆட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக மீனவர்களைப் படுகொலை செய்வதன் மூலம் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக தொடர்ந்து அறைகூவல் விட்டு வரும் இலங்கை அரசின் போக்கை வேடிக்கை பார்ப்பது இந்திய அரசின் ஆளுமையை கேள்விக்குறி ஆக்கியுள்ளது, எனவே தமிழக மீனவர்களை பாதுகாக்க இந்திய அரசு முன்வரவேண்டும் என்ற தீர்மானங்களும் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
இவ்வாறு விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய கருத்துரிமை மீட்பு மாநாட்டில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாலும் இலங்கைத் தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடிவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களே காங்கிரஸ் கட்சி மற்றும் அ.தி.மு.கழகம் இரண்டினதும் கண்டனத்துக்கும் எரிச்சலுக்கும் உள்ளாகியுள்ளன.

பல்லாயிரக்கணக்கான தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்த கருத்துரிமை மீட்பு மாநாடு தமிழ்த் தேசியத்தின் வரலாற்றுப் பகைவர்கள் மத்தியில் அச்சத்தையும் எரிச்சலையும் உருவாக்கியது மட்டுமல்லாமல் தமிழக சட்டமன்றத்திலும் ஒலித்திருக்கிறது.

தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் தலைவர் திரு. எம். கிருஷ்ணசாமி முதல் அமைச்சர் கருணாநிதிக்கு சனவரி 28 இல் எழுதியுள்ள கடிதத்தில் அன்னை இந்திரா காந்தி மகனும் எங்கள் தலைவி அன்னை சோனியா காந்தியின் கணவருமான எங்கள் தலைவர் இராசீவ் காந்தி நம் தமிழ் மண்ணில் கொலை செய்யப்பட்டதை நாடு என்றென்றும் மறவாது. தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகளை ஆதரித்து சில அரசியல் கட்சிகளும் அரசியல் சாராத இயக்கங்களும் பேசி வருகின்றன. குறிப்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தொடர்ந்து பேசி வருகிறார். எங்களின் தலைவர் இராசீவ் காந்தி தமிழகத்தில் படுகொலை செய்யப்பட்டார். இதற்குக் காரணமான வி.புலிகள் இயக்கத்தை எந்த உரூபத்தில் யார் ஆதரித்தாலும் காங்கிரஸ் அதை அனுமதிக்காது. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசி வருபவர்கள மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் இதே கிருஷ்ணசாமி அன்னை இந்திராவைக் சுட்டுக் கொன்ற சீக்கிய மதத்தைச் சார்ந்தவரை தலைமை அமைச்சராக்கி காங்கிரஸ் அழகு பார்ப்பதை வசதியாக மறந்துவிட்டார். அவர்களுக்கு மாவீரர் பட்டம் கொடுத்து பொற்கோயிலில் வைத்து வழிபாடு செய்வதையும் மறந்துவிட்டார்.

தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசும் திருமாவளவன் போன்றவர்களைக் கைது செய்ய வேண்டும் அது போன்ற கூட்டங்கள் நடைபெறுவதைத் தடை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் – அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆவேசமாகப் பேசியதோடு தங்கள் எதிர்ப்பைக் காட்டுமுகமாக வெளிநடப்பும் செய்தனர்.

வெள்ளைக்காரன் காலத்தில் அந்நிய துணிகளைக் கொளுத்தியும் வரிகொடா இயக்கம் நடத்தியும் சட்டமறுப்புப் போராட்டங்களை நடத்திய கட்சி காங்கிரஸ் கட்சி. அதற்காக தேசத் துரோகக் குற்றம் சாட்டி பிரிட்டிஷ் அரசு காங்கிரஸ் தலைவர்களை சிறையில் அடைத்து சித்திரவதை செய்தது. வா.உ. சிதம்பரனார் சிறையில் செக்கிழுத்தார்.

ஆயுதம் தாங்கி வெள்ளை ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராடிய பகவத் சிங் சுகதேவ் ராஜகுரு வாஞ்சிநாதன் போன்றோர் தூக்கிலடப்பட்டனர். நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் அவர்கள் மாவீரர்களா காங்கிரஸ்காரர்களால் கொண்டாடப்பட்டனர். இந்தக் கட்சிதான் இன்று வி.புலிகளுக்கு வாய்மொழி ஆதரவு கொடுப்பது – இரங்கல் உரை ஆற்றுவது – சட்டத்துக்கு முரணானது என வாதிடுகிறது. இது வேடிக்கையாக மட்டும் அல்லாமல் வேதனையாகவும் இருக்கிறது.

கருத்துச் சுதந்தரம் என்பது குடிமக்களது அடிப்படைச் சுதந்திரம். அதனைச் சாதாரண சட்டங்கள் கட்டுப்படுத்த முடியாது.

கனடாவிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் வி.புலிகளை ஆதரித்துப் பேசுவது, எழுதுவது, மாவீரர்கள் நாள் கொண்டாடுவது, தமிழீழ தேசியக் கொடியைப் பொது இடங்களில் ஏற்றுவது போன்ற நடவடிக்கைகள் தடை செய்யப்படவில்லை. இங்குள்ள தமிழ்வானொலிகள், வானொளிகள் வி. புலிகளை ஆதரித்துச் செய்திகள் வெளியிடுகின்றன. காரணம் பேச்சுச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், கூட்டம் கூட்டும் சுதந்திரம் கனடிய யாப்பில் அடிப்படை சுதந்திரங்களாக வரையறை செய்யப்பட்டுள்ளன. வி. புலிகளுக்கு ஆயுதம் வாங்க நிதியுதவி செய்வது மட்டுமே குற்றமாகக் கருதப்படுகிறது. போரினால் பாதிக்கப்படும் மக்களுக்கு மனிதாபிமான உதவி வழங்கப்படுவது தடை செய்யப்படவில்லை. அப்படியான அமைப்புக்களுக்கும் தடை இல்லை.

இராசீவ் காந்தி கொலை செய்யப்பட்டதற்கு ஆவேசப்படும் காங்கிரஸ்காரர்கள் இந்திய அமைதிப்படை கொன்று குவித்த ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ்ப் பொதுமக்களையும் நினைத்துப் பார்க்க வேண்டும். கற்பழிக்கப்பட்ட தமிழச்சிகளை நினைத்துப் பார்க்க வேண்டும். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இடம்பெயர்ந்த 300,000 மக்களை நினைத்துப் பார்க்க வேண்டும். குண்டு போட்டு தகர்க்கப்பட்ட 50,000 வீடுகளை நினைத்துப் பார்க்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக வி. புலிகள் தலைவரைச் சுட்டுக் கொல்லுமாறு இந்திய இராணுவ தளபதிக்கு இலங்கைக்கான இந்தியத் தூதுவர் ஜே.என். டிக்ஷித் மூலம் ஆணை பிறப்பித்த இராசீவ் காந்தியை நினைத்துப் பார்க்க வேணடும். அனைத்துலகக் கடலில் பயணம் செய்த வி.புலிகளின் கப்பலை மடக்கிப் பிடித்து அதில் பயணம் செய்த கேணல் கிட்டு உட்பட பத்து வி.புலிகளின் தற்கொலைக்குக் காரணமாக இருந்த இந்திய கடற்படையை நினைத்துப் பார்க்க வேண்டும். இராசீவ் காந்தியின் உயிர்தான் வெல்லம் மற்றவர்களது உயிர் கிள்ளுக் கீரை என வாதிடுவது அல்லது நினைப்பது தவறானதாகும். அழுவதாக இருந்தால் எல்லோருக்கும் சேர்த்து அழுவோம்.

இந்தியா உலகின் மிகப் பெரிய மக்களாட்சி நாடு எனக் கூறப்படுகிறது. அப்படியானால் மக்களாட்சியின் இலக்கணத்துக்கு எடுத்துக்காட்டாக அது நடந்து கொள்ளவேண்டும். ‘கருத்துரிமை மீட்பு’ மாநாடுகள் நடத்த வேண்டிய அவலத்துக்கு இடம் வைக்கக் கூடாது. கனடா போன்ற நாடுகளைப் பார்த்தாவது மக்களாட்சி மாண்புகளைப் படித்துக் கொள்ள வேண்டும்.

வி.புலிகளை ஆதரித்துப் பேசுவது குற்றமா இல்லையா என்பதை ஆராய வழக்கறிஞர்கள் கொண்ட குழு அமைக்கப்படும் என்றும் தேவைப்பட்டால் அதற்கான தடைச் சட்டம் கொண்டுவரப் படும் என்றும் சட்ட மன்றத்தில் தெரிவித்த முதல்வர் கருணாநிதி இப்போது அப்படியான குழுவுக்கு அவசியம் இல்லை என்றும் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வோர், ஊர்வலங்கள் நடத்துவோர், உண்ணா நோன்புகள் மேற்கொள்வோர் மீது சட்ட விரோத தடுப்பு சட்டத்தின் கீழ் (Unlawful Prevention Act No 37 of  1967) கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

சட்டசபையில் இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் சபை விதி 110 இன் கீழ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் முதலமைச்சர் தலைமையில் நிதியமைச்சர் அன்பழகன், நான், தலைமைச் செயலாளர் எல்.கே. திரிபாதி, அட்வகேட் ஜெனரல் மாசிலாமணி, உள்துறை செயலாளர், சட்டத்துறை செயலாளர், டிஜிபி, எடிஜிபி, (புலனாய்வுத்துறை) ஆகியோரோடு விவாதித்தோம். இதற்காக புதிதாக சட்டம் கொண்டு வர வண்டுமா அல்லது ஏற்கனவே உள்ள சட்டங்களின்படி நடவடிக்கை எடுக்க இயலுமா என்றெல்லாம் கலந்தாலோசிக்கப்பட்டது. முடிவில் கீழ்க்காணும் முடிவுகள் எடுக்கப்பட்டது.

தடை செய்யப்பட்டுள்ள எந்த இயக்கமாயினும் அவற்றுக்கு ஆதரவாக மக்கள் மத்தியில் பரப்புரை செய்வதோ, செயல்படுவதோ, துண்டு அறிக்கைகள், சுவரொட்டிகள் வெளியிடுவதோ, ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், உண்ணாநோன்புகள் போன்ற நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதோ, அவற்றில் கலந்து கொள்வதோ சட்டப்படி குற்றமுடையதாகும்.

அத்தகைய குற்றமிழைப்போர் தனிப்பட்டவராயினும், சங்கம் அல்லது அமைப்பு அடிப்படையில் இயங்குவோராயினும் அவர்கள் அரசின் இந்த மேற்கண்ட நடவடிக்கைகள் ஏதேனும் ஒன்றில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மேல் குறிப்பிட்ட சட்டத்தின்படி நடவடிக்கைக்கு உள்ளாக்கப் படுவார்கள்.’

234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழக சட்டசபையில் தி.மு.க. வின் பலம் 95 ஆகும். எனவே பெரும்பான்மைக்கு வேண்டிய மேலதிக 22 உறுப்பினர்களுக்கு 35 உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சியைப் பெரிதும் நம்பியுள்ளது.

சட்டமன்றத்தில் திருமாவளவனைக் கைது செய்யக் கோரி காங்கிரஸ் வெளிநடப்புச் செய்ததைக் கண்டு மிரண்டு போன முதல்வர் கருணாநிதி பழைய சட்டம் ஒன்றை தூசி தட்டி தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரிப்போருக்கு எதிராகக் கையில் எடுத்துள்ளார். கொள்கை வேட்டி போன்றது பதவி தோளில் போடும் துண்டு போன்றது என்று அண்ணாவை மேற்கோள் காட்டி முதல்வர் கருணாநிதி மேடைகளில் அலங்காரமாகப் பேசினாலும் அவர் தனது ஆட்சியைக் காப்பாற்றுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிறார். இந்தத் தடைச் சட்டம் அதையே உணர்த்தி நிற்கிறது.

விடுதலைப்புலிகளை ஆதரிப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்ததற்காக முதலல்வர் கருணாநிதிக்கு தனது நன்றியை தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் தலைவர் எம். கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
.
எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் போது மக்களாட்சியின் மாண்புகள் பற்றிப் பேசுவதும் பேச்சுச் சுதந்திரம் பற்றிப் புகழ்ந்து பேசுவதும் ஆட்சிக் கட்டிலில் ஏறியவுடன் அவற்றை நசுக்கு அடக்குமுறைச் சட்டங்களைக் கையில் எடுப்பதும் அரசியல்வாதிகளுக்கு கை வந்த கலை. பொடா சட்டத்தைப் பயன்படுத்தி வைகோ, நெடுமாறன், சுப வீரபாண்டியன் போன்றோரைச் சிறையில் அடைத்த அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் அது போன்ற ஒரு சட்டத்தை இப்போது கையில் எடுக்கும் இன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும் வித்தியாசம் இல்லை.

மத்திய அரசின் வெளிநாட்டுக் கொள்கை எதுவோ அதுவே திமுக அரசின் கொள்கை என முதல்வர் அண்மையில் திருவாய்மலர்ந்திருந்தது நினைவு இருக்கலாம்.

விடுதலைப் புலிகளை எதிர்ப்பதில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும் நானும் ஒரே அணியில் இருக்கிறோம் என்று எந்த வெட்கமோ துக்கமோ இன்றி தமிழக சட்டமன்றத்தில் கருணாநிதி பேசியது நினைவு கூரத்தக்கது.

அரசியலில் கருணாநிதியும் ; ஜெயலலிலதாவும் கீரியும் பாம்பும் போல் இருந்தாலும் புலி எதிர்ப்பில் இருவரும் சாடியும் மூடியும் போல் இருக்கிறார்கள்.

இந் நிலையில் திருமாவளவன் மீண்டும் தனது நிலையை உறுதிபடுத்தியுள்ளார். நிருபர்களிடம் பேசிய அவர் ‘புலிகள் மீதான தடையை நீக்கி, வி. புலிகள் அமைப்பை விடுதலைப் போராட்ட அமைப்பாக அங்கீகரிக்க வேண்டும் என்று நான் சொன்னது எனது தனிப்பட்ட கருத்துரிமை, சனநாயக உரிமை. அதில் எந்தத் தவறும் இல்லை.
இதுதான் எங்கள் அமைப்பின் நிலை. அதற்காக எங்களை சட்டப்படி தண்டிக்க ஆட்சியாளர்கள் கருதினால் அதற்கும் நாங்கள் தயார்’ எனக் கூறியுள்ளார்.

யூனியர் விகடன் கிழமை இதழுக்கு தொல். திருமாவளவன் அளித்த செவ்வியில் ‘இந்தியாவில் இருந்து கொண்டு இன்னொரு தேசச் சிக்கலில் பிரச்னையில் இவ்வளவு தூரம் சலசலப்பு உண்டாக்குவது நியாயமா?’ என்ற கேள்விக்கு பின்வருமாறு பதில் அளித்துள்ளார்.

‘நான் பிறந்த மண்ணின் மீது பற்றுடையவன்தான். அதேசமயம் என் தாய் நாடு தவறு செய்தால் அதை உரிமையோடு தட்டிக்கேட்கும் பொறுப்பு ஒரு குடிமகனான எனக்கு உண்டு. கடலுக்கடியில் கண்ணிவெடிகளைப் போடுவது, இலங்கை அரசின் அடாவடி செயல்..! கடந்த பத்து வருடத்தில் 200 மீன்வர்களைக் கொன்றிருக்கும் இலங்கை அரசை நம் மத்திய அரசு கண்டித்திருக்க வேண்டும். ஆனால், எங்களைப் போன்றவர்கள் மீது செய்யாத குற்றத்தைச் செய்ததாகச் சொல்லியும் இலங்கைக்கு ஆயுதங்களைக் கடத்துவதாகச் சொல்லியும் பொய்க்குற்றம் சுமத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போதும் சொல்கிறேன்… என்னைப் பொறுத்த வரை புலிகளுக்கு ஆயுதம் கடத்தும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றால் அதற்காகப் பெருமைப்படுவேன்!’ (யூனியர் விகடன் – சனவரி 03, 2008)

தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் சக்திகள் ஒன்று திரண்டால் மட்டுமே தமிழக அரசின் அடக்குமுறையை எதிர்கொள்ள முடியும். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ்ப் பொதுவுடமைக் கட்சித் தலைவர் மணியரசன், தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பழ நெடுமாறன் போன்றோர் தங்களுக்குள் இருக்கும் சிறு சிறு வேற்றுமைகளைக் கைவிட்டு ஒரு அணியில் ஒரு குடையின் கீழ் ஒன்று திரளவேண்டும்.

தமிழக அரசியலில் இரண்டு அணிதான் உண்டு. ஒன்று விடுதலைப் புலிகள் தலைமை தாங்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்போர் அணி. மற்றது அதனை எதிர்ப்போர்.

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply