புதிய அரசியலமைப்புக்கு எதிராக பவுத்த பீட மகா நாயக்கர்கள் போடும் முட்டுக்கட்டை!

புதிய அரசியலமைப்புக்கு எதிராக பவுத்த பீட மகா நாயக்கர்கள் போடும் முட்டுக்கட்டை!

இரங்கா ஜயசூரியா 

(அரசியல் விமர்சகர்  இரங்கா ஜயசூரியா ‘Constitutional obstructionism’ என்ற தலைப்பில் 24-10-2017 இல் வெளிவந்த டெயிலி மிரர் நாளேட்டில் ஒரு கட்டுரை வரைந்துள்ளார்.  வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கையில் இணைப்பாட்சி இல்லை, வட கிழக்கு இணைப்பில்லை பவுத்த மதத்துக்கு முதன்மை இடம் மற்றும் ஒற்றையாட்சியே தொடருகிறது எனத் தமிழர் தரப்பில் சிலர் கூச்சல் போடும் போது இல்லை அரசு முன்வைத்துள்ள இடைக்கால அறிக்கை நாட்டைக் கூறுபோடுவதற்கான அடித்தளம் என்றும் அரசு அதனைக் கைவிடுமாறும் கேட்டுப் பவுத்தமத மகா நாயக்கர்கள்  போர்க்கொடி தூக்கியுள்ளார்கள்.  இந்தக் கட்டுரை புதிய அரசியலமைப்புக்கு எதிராகப் பவுத்த பீட மகா நாயக்கர்கள் போடும் முட்டுக்கட்டை  பற்றி கடுமையாகச் சாடுகிறது)

அண்மைக்காலமாக பவுத்த மத மகா நாயக்க தேரர்கள் அரசாங்கத்துக்குத் தொந்தரவு கொடுப்பதில் புனிதமற்ற  பெருவிருப்பைக் காட்டுகிறார்கள். ஒருவேளை, இப்போதெல்லாம் சனாதிபதி மாளிகையில்  இருந்து யாரும்  தொலைபேசியில் அழைத்து மகாநாயக்க தேரர்கள் வழிக்கு வராவிட்டால் பவுத்த சங்கத்தை கூறுபோடுவேன்” என அச்சுறுத்துவதில்லை காரணமாக இருக்கலாம்.

இருப்பினும், இப்போதும் பவுத்த தேரர்கள் ஏறுமாறான போக்கையே தொடருகிறார்கள். கடந்த காலத்தில் பெரும்பான்மை பவுத்த தலைவர்கள்  பேச வேண்டியிருந்த போதும் உறுதியாகப் பேசாமல் வாய் மூடி இருந்துவிட்டார்கள். மவுண்ட்லேவியானாவில் றோகிங்யா முஸ்லிம் ஏதிலிகள் பவுத்த தேரர்கள்  தலைமை தாங்கிய  ஒரு கும்பலால் தாக்கப்பட்ட போது  எந்தவொரு தன்மானமுள்ள   மதத் தலைவரும் அதனைக் கண்டித்திருக்க வேண்டும். பெரும்பான்மை பவுத்தமதத்  தலைவர்கள் மனிதர்களுக்கு இருக்க வேண்டிய குறைந்தபட்ச மனிதாபிமானத்தையேனும் வெளிக்காட்டவில்லை. அதுமட்டும் அல்லாது கடந்த காலத்தில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான பல தாக்குதல்கல்களுக்கு எதிராகப் பேசவும் இல்லை.

அதே போல் முன்னாள் சனாதிபதி மகிந்த இராஜபக்சா மக்களின் அடிப்படைச் சுதந்திரத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு மக்களோடு எந்தவித கலந்தாலோசனையும் செய்யாது அரசியலமைப்புக்கு 18 ஆவது ச்ட்ட திருதத்தை அறிமுகப்படுதியபோது  சமூக அக்கறை கொண்ட ஒரு சில தேரர்களே அதற்கு எதிராகப் பேசினார்கள். மகா நாயக்க தேரர்கள் பேசவே இல்லை.


கடந்த வாரம்  மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பவுத்த பீடங்களைச் சார்ந்த கறக்க மகா சங்க சபை புதிய அரசியலமைப்புக்கு அல்லது இப்போது இருக்கும் அரசியலமைப்புக்கு ஏதாவது திருத்தம் செய்வதற்குத் தங்கள் எதிர்ப்பை அறிவித்துள்ளார்கள்.  அரசியலமைப்பை வரையும் நடைமுறையை நிறுத்துமாறு வற்புறுத்தியுள்ளார்கள். 


மிக அண்மைக் காலம் வரை வெள்ளை வான்கள் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்தன. வெலிக்கடைச் சிறைச்சாலையில் இருந்த சிறைக் கைதிகள்  விசாரணை நடவடிக்கைகள் ஏதுமின்றிச் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். ஊடகங்கள் தாக்கப்பட்டன.  ஊடகவியலாளர்கள் பட்டப்பகலில் கொல்லப் பட்டார்கள். அப்போதெல்லாம் கருணையைத் தாமே மனதார  விரும்பி ஏற்றுக்கொண்ட  மகா நாயக்க தேரர்கள்  சிறியளவிலாவது  தங்கள் உண்மையான உணர்வை வெளிப்படுத்தவில்லை.

எனவே,  அவர்கள் சடுதியாகக்  பொங்கியெழுந்து அரசியலமைப்புத்  தொடர்பாக அக்கறை காட்டுவது வேறு எதையோ சுட்டிக்காட்டுகிறது.  ஒரு ஆடம்பரமான பொம்மலாட்டம் நடைபெறுகிறது போல் தெரிகிறது.  அதனைப் புகழ்வாய்ந்த பொம்மலாட்டக்காரரான மகிந்த இராஜபக்சா திரைக்குப் பின்னால் இருந்து கொண்டு (கயிற்றை) ஆட்டுகிறார்.  பெரிய பவுத்த கோயில்களில் அண்மைக் காலமாக நடைபெறும்  பெருங்கூச்சல்களை இப்படித்தான் நோக்க வேண்டும். இப்படித்தான் பார்க்க  வேண்டும்.

கடந்த வாரம்  மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பவுத்த பீடங்களைச் சார்ந்த கறக்க மகா சங்க சபை புதிய அரசியலமைப்புக்கு அல்லது இப்போது இருக்கும் அரசியலமைப்புக்கு ஏதாவது திருத்தம் செய்வதற்குத் தங்கள் எதிர்ப்பை அறிவித்துள்ளார்கள்.  அரசியலமைப்பை வரையும் நடைமுறையை நிறுத்துமாறு வற்புறுத்தியுள்ளார்கள்.

பின்னர் இந்த வார முடிவில் கோட்டை கல்யாணி கறக சபை, கல்யாணி சமகிரி தர்ம மகா சங்கசபை  முன்மொழியப்படும் புதிய அரசியலமைப்பைத்  திரும்பப்பெறுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். சனநாயகம்  மதகுருமார்களால் மேற்கொள்ளப்படுவதில்லை. நாங்கள்  புரோகிதர்களின் ஆட்சியில் வாழவில்லை. எங்கே மதகுருமார்  ஆளுகிறார்களோ அங்கே மத்தியகால நரகத்தை 21 ஆவது நூற்றாண்டில் திறம்பட  மறுஉருவாக்கம் செய்துள்ளார்கள். வேறு எங்கேயும் போக வேண்டாம் இரான் மற்றும் சவுதி அரேபியா இரண்டையும் பாருங்கள்.  நவீனகாலத்தைப் புரிந்து கொண்ட மதகுருமார்கள் நவீனகாலத்துச் சமூகங்களில் ஏற்பட்ட மாற்றங்களைப் பற்றிப்பிடித்துள்ளார்கள். ஆன காரணத்தால் அதற்கான  பரிகாரங்களை செய்துள்ளார்கள்.  எடுத்துக்காட்டாக  சில ஆண்டுகளுக்கு முன்னர்  கன்ரபெரியின் முன்னாள் பேராயர் றோவன் வில்லியம்ஸ் “பிரித்தானியா இப்போது ‘கிறிஸ்தவ சமூகத்துக்கு பிந்திய காலத்தில் இருக்கிறது” எனக் கூறியிருக்கிறார்.

இதில் சுவையான அம்சம் என்னவென்றால் அவர் (றோவன் வில்லியம்ஸ) பிரித்தானியா “ஒரு கிறித்தவ நாடு என்ற  தகைமை பற்றி நாங்கள் அதிக தன்னம்பிக்கையோடு இருக்க வேண்டும்”  மற்றும் “இன்னும் அதிகமான தீவிர சீர்திருத்த நம்பிக்கையோடு” (“more evangelical”)  இருக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் டேவிட் கமரோன் கூறியதை மறுப்பதாக உள்ளது.


 மவுண்ட்லேவியானாவில் றோகிங்யா முஸ்லிம் ஏதிலிகள் மீது பவுத்த தேரர்கள்  தலைமை தாங்கிய  ஒரு கும்பலால் தாக்கப்பட்ட போது  எந்தவொரு தன்மானமுள்ள   மதத் தலைவரும்  அதனைக் கண்டித்திருக்க வேண்டும். பெரும்பான்மை பவுத்தமதத்  தலைவர்கள் மனிதர்களுக்கு இருக்க வேண்டிய குறைந்தபட்ச மனிதாபிமானத்தையேனும் வெளிக்காட்டவில்லை. அதுமட்டும் அல்லாது கடந்த காலத்தில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான பல தாக்குதல்கல்களுக்கு எதிராகப் பேசவும் இல்லை.


ஒரு அரசின்  அங்கீகாரத்துக்கு மதத்தை ஒரு அரசியல் மூலோபாயமாகப் பயன்படுத்துவது என்பது ஒன்றும் புதிதல்ல. இந்தப் போக்கு நாடுகள் சனநாயகத்தை குறைக்கவும் சமயம் மற்றும் இன அடிப்படையில் (மக்களை)  விலக்கி வைக்கவும் வழிவகுக்கும்.    விருப்பு வெறுப்பின்றிச் சொல்வதானால் இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்துக்குப் பின்னர் நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில் பவுத்த தேரர்கள் முட்டுக்கட்டையாக இருந்து வந்திருக்கிறார்கள். அவர்களது தீய செல்வாக்கை முதுகெலும்பில்லாத அரசியல்வாதிகள் (எஸ்டபிள்யூஆர்டி பண்டாரநாயக்கா “செவல பண்டா” என்று பொருத்தமாக அழைக்கப்பட்டார்) மேலும் மோசமாக்கியிருக்கிறார்கள். சமாதானம், வளமை இரண்டையும் அடைய அரசியல்வாதிகள் தவறிவிட்டார்கள். 1956 ஆம் ஆண்டு தொடக்கம் வலதுசாரி  பவுத்தம்  நாட்டின் சிறுபான்மை மக்களது சிக்கல்களைக் கழைய எடுத்த ஒவ்வொரு முயற்சியையும் வலதுசாரி பவுத்தம்  தடையாக இருந்துள்ளது. மீண்டும் மீண்டும் சிங்கள உயர் குழாத்தினால் அவமதிப்புக்கு உள்ளாக்கப்பட்டதன் விளைவாக (தமிழ்மக்கள் மத்தியில்)    வன்முறை உருவெடுத்தது. அதன் உச்சக் கட்டம்   மூன்று சகாப்தமாக நடந்த பயங்கரவாதப் போரில் முடிந்தது.

தொடர்ந்து (தமிழ்மக்களது) குறைகள் அலட்சியப்படுத்தப் பட்டால் வரலாறு மீளாது என்று நம்புவது அப்பாவித்தனமாகும். அதற்குக்  காலம் எடுக்கலாம். ஆனால் பிரபாகரனின் பேரிடர்ப்பாடு காரணமாக ஏற்பட்ட  பாரிய இழப்பை தமிழ்மக்கள் மறந்து போகும் போது இன்னொரு பிரபாகரன் (தோன்றி) அதனை முயற்சி செய்து பார்க்கக கூடும்.

பவுத்த தேரர்களின்  வரலாற்று முட்டுக்கட்டைகள் காரணமாக சிறிலங்காவில் வாழும் எல்லா இனத்தவர்களும்  துன்பப்பட்டார்கள். நாங்கள் உயிரிழப்பையும் நிறைவேறாத கனவுகளையும் விலையாகக் கொடுத்தோம்.

துரதிட்டவசமாக,  எல்லோருக்கும் தெரிந்த உண்மையைச் சொல்ல சிறிலங்காவில் முதுகெலும்புள்ள தலைவன் கிடையாது. அதுமட்டுமல்ல அரசின் அலுவல்களில் பவுத்த தேரர்களுக்குரிய பாத்திரத்தை வரையறை செய்ய வேண்டும்.

எல்லா மதங்களும் ஊடுருவும் தன்மை வாய்ந்தவை. அவை பழைய காலத்தில் வாழ்ந்த  பெருவாரியான மக்களைக் கொண்ட சமுதாயங்களை ஊடுருவுகின்றன. இதன் காரணமாகவே பொதுவுடமைவாதிகள் தேவாலயங்களையும் கோயில்களையும் மூடினார்கள். இன்றைய துருக்கியின் நிறுவனரும்  மதசார்பற்ற தலைவர்களில் ஒருவரான  Kemal Ataturk அரசையும் மதத்தையும் கண்டிப்போடு பிரித்து வைத்தார்.

சனாதிபதி மயித்திரிபால சிறிசேனா அல்லது பிரதமர் இரணில் விக்கிரமசிங்கி இருவரும்  மகா நாயக்க தேரர்கள் போடும்  முட்டுக்கட்டையை எதிர்த்துக் கூறுவதற்கு வேண்டிய அரசியல் துணிவு அற்றவர்களாகக் காணப்படுகிறார்கள்.  மாறாக பிரதமர் விக்கிரமசிங்கி  மல்வத்தை மகாநாயக்க தேரர் நாட்டிலேயே  இல்லாத போது ஊடகங்கள் இருப்பதாகச் சொல்லி மக்களைத்  தவறாக வழிநடத்தின என ஊடகங்கள் மீது பழிசுமத்தினார்.

பிரதமர் விக்கிரமசிங்கி மல்வத்தை மகா நாயக்கர் சார்பாக அல்ல அரசின் சார்பாகப் பேச வேண்டும். ஆனால் அதற்கான அரசியல் துணிவு  அவருக்கு இல்லாமல் இருக்கிறது. சிறிலங்காவுக்கு இன்று தேவைப்படுவது சேர் யோன் கொத்தலாவை போன்ற அரசியல் தடுமாற்றம் இல்லாத தலைவர்களே. அவர் உள்ளதை உள்ளவாறு (call a spade a spade) சொன்னார். அல்லது இரஞ்சன் விஜயரத்தின போன்று  தவிர்க்க முடியாத  பாதுகாப்புக் காரணமாக அரசியல் சில்லறை நுட்ப வேறுபாடுகளைத் தூர எறிந்துவிட்டு  நாட்டை அடக்குமுறையில் இருந்து காப்பாற்றினார்.

அரசியல் திண்மை இல்லாத காரணத்தால் இந்த அரசு கொள்கை தொடர்பாக எடுக்க வேண்டிய ஒவ்வொரு அரசியல் முடிவுகள் பற்றியும் ஏன் ஊசலாடுகிறது என்பது விளங்கவில்லை.  ஒரு அரசின் தலையாய  பணி நாட்டை ஆட்சி செய்வது,  அதன் நிமித்தம் அதன் கையில் உள்ள  சட்டம்,  நிருவாகம் மற்றும் இறுக்கமான அதிகாரங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தல் வேண்டும். சிறிலங்கா ஒரு முழுமையான சனநாயக நாடாக வரும் முன்னர் அது ஒரு முழுமையான சனநாயக நாடுபோல் நடந்து கொள்ளக் கூடாது. அப்படி நடந்து கொண்டால் சுற்றயலான (peripheral)  சக்திகள் அரசை சீர்குலைக்க வழிசெய்து விடும். சனநாயக நாடுகளுக்கும் அரசியல் சீர்மை (political nicety) பற்றிய எல்லைகள் உண்டு. எடுத்துக்காட்டாக  கத்தலோனியாவில் இஸ்பானிய நாட்டின் அனுபவத்தைக் குறிப்பிடலாம்.

நலன்விரும்பிக் குழுக்களை உதாசீனப்படுத்துவதாலோ அல்லது அவற்றைப் பற்றி அறியத்தரும் ஊடகத்துறை மீது பழிசுமத்துவதாலோ எந்தப் பலனும் இல்லை.  அரசியலமைப்பு உருவாக்கம் ஒரு அரசும் அதன் மக்களதும் அலுவல். அது மகா சங்கத்தின் தனிப்பட்ட விடயமல்ல. இதனை அரசு உரத்தும் துல்லியமாகவும் சொல்ல வேண்டும்.

பவுத்த கோயில்களுக்குக் கும்பிடப் போவதும் சில யானைகளை அன்பளிப்புச் செய்வது தற்காலிய அமைதியைத் தரக் கூடும். இருந்தும் அரசாங்கத்தை சில தனியாட்கள் கீழறுக்க  முயன்றால் அவர்களைப் புலனாய்வுத்துறை நேர்காணல் காண வேண்டியதாக இருக்கும். இதற்காக அரசாங்கம் தனது பலம்வாய்ந்த எல்லாப்  புலனாய்வுத் துறைகளையும் பொதுமக்களது அங்கீகாரத்தையும் முன்கூட்டித் திட்டமிடக்கூடிய ஆளுமைமிக்க ஒருவரின் கீழ்க் கொண்டு வரப்பட வேண்டும்.

இதற்குத் தோதானவர் சரத் பொன்சேகா  என்பது எனது எண்ணம்.

(தமிழாக்கம் – நக்கீரன்)

http://www.dailymirror.lk/article/Constitutional-obstructionism-139062.html

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply