Political Column 2007 (4)

தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளிவிடும் அமெரிக்கா!

நக்கீரன்
மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி முஸ்லிம் பள்ளிக்கூடம் ஒன்றில் போரினால் இடம்பெயர்ந்து தங்கியிருந்த தமிழ்மக்கள் மீது இனந்தெரியாதவர்களால் மேற்கொண்ட கைக்குண்டு தாக்குதலில் 8 பொதுமக்கள் காயப்பட்டதாகவும் அவர்கள் மட்டக்களப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என காவல்துறை செய்திகள் தெரிவிக்கின்றன.

காத்தான்குடி முஸ்லிம்கள் 100 விழுக்காடு (37,815) பெரும்பான்மையாக வாழும் ஊராகும். மட்டக்களப்புக்குத் தெற்கே 7 கிமீ தொலைவில் உள்ளது.

நோர்வே ஏதிலி அவையின் அறிக்கைப்படி 2006 ஏப்பிரில் தொடங்கி திருகோணமலை – மட்டக்களப்பு மாவட்டங்களில் 314,378 பேர் இடம்பெயர்ந்துள்ளார்கள். அதில் 66,950 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 247,978 பேர் முகாம்களுக்கு வெளியில் வாழ்கிறார்கள். 2007 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 301,879 பேர் இடம்பெயர்ந்துள்ளார்கள்.

படுவாங்கரைப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த 125,000 மக்களில் வெள்ளாவெளியைச் சேர்ந்த 4,000 பேர் மீள்குடியமர்த்தப்பட இருக்கிறார்கள். இவர்களது வீடுகள் சிங்கள இராணுவத்தினாலும் சிங்களவர்களாலும் சூறையாடப்பட்டுள்ளன. இந்த மக்கள் மீள் குடியமர்வதற்குரிய பாதுகாப்பு சூழல் இல்லை என பன்னாட்டு நிவாரண அமைப்புக்கள் கருத்துத் தெரிவித்துள்ளன.

காத்தான்குடியில் இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதல் இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் புதிய பாதுகாப்பின்மையைத் தோற்றுவித்துள்ளது. அரச கட்டுப்பாட்டில் உள்ள  இடைத்தங்கல் முகாம்களில் வாழ்வது கூட பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளது.

இந்தக் கைக்குண்டு தாக்குதல் அமெரிக்க இராசாங்க துணை அமைச்சர் ரிச்சேட் பவுச்சரும் அங்கிலிக்கன் மதபீடத்தின் ஆன்மீகத் தலைவர் றோவன் வில்லியம்ஸ் ஆகியோர் ஸ்ரீலங்காவிற்கு வந்து போன கையோடு இடம்பெற்றுள்ளது.

ஸ்ரீலங்கா அரசு மனிதவுரிமைகளை மதித்து நடக்க வேண்டும், படையோடு இயங்கும் ஆயுதக் குழுக்களின் ஆயுதங்களைக் களைய வேண்டும், ஊடக சுதந்திரத்தை  உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று பவுச்சர் கேட்டுக் கொண்டார். அவற்றை மகிந்த இராசபக்சா காதில் போட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை. செவிடன் காதில் ஊதிய சங்குபோல் ஆகிவிட்டது. புலிகளுக்கு எதிரான போர் தொடரும் என அவர் பவுச்சரிடமே  தெரிவித்துள்ளார். இதில் வியப்படைவதற்கு ஒன்றுமில்லை.

ஸ்ரீலங்கா பற்றிய அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை தொட்டிலையும் ஆட்டிக் கொண்டு பிள்ளையையும் கிள்ளி விடும் கதையாகவே இருந்து வருகிறது.

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடும் நாடுகளுக்கு அமெரிக்க மக்கள் நிதியுதவி அளித்து வருகிறார்கள்.  அந்தத் திட்டத்திற்கு ஆடைடநnnரைஅ ஊhயடடநபெந ஊழசிழசயவழைn (ஆஊஊ)  என்று பெயர். அதன்கீழ் ஸ்ரீலங்காவிற்கு 590 மில்லியன் டொலர் வழங்குவதற்கு ஒரு முன்மொழிவு இருந்து வருகிறது. ஆனால் ஸ்ரீலங்காவின் வெளிப்படையான மனிதவுரிமை மீறல்கள் மோசமான பாதுகாப்பு நிலைமை அதனை வழங்குவதில் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளதாக கொழும்பில் பவுச்சர் தெரிவித்திருந்தார்.

இதே சமயம் இன்னொரு செய்தி வந்திருக்கிறது. அமெரிக்காவின்  ஸ்ரீலங்காவிற்கான ஆயுத விற்பனை சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு 40 மடங்கு அதிகரித்துள்ளது. இதனை வோஷிங்டனை மையமாகக் கொண்டு இயங்கும் பாதுகாப்புத் தரவுகளுக்கான மையத்தின் (வுhந ஊநவெநச கழச னுநகநளெந ஐகெழசஅயவழைn (ஊனுஐ) ஆய்வறிக்கை  அம்பலப்பயன்படுத்தியுள்ளது.

ஸ்ரீலங்காவிற்கான அமெரிக்காவின் ஆயுத விற்பனை 2006 இல் 1.4 மில்லியன் அமெரிக்க டொலர் ஆகயிருந்தது. அது இந்த ஆண்டு 60.8 மில்லியன் டொலராக உயர்ந்துள்ளது. அதாவது 40 மடங்கு அதிகரித்துள்ளது!

சிறார்களை படையணிகளில் சேர்ப்பது தொடர்பான அமெரிக்க அரசாங்கத்தின் 2006 ஆம் ஆண்டு அறிக்கை கடந்த மார்ச் 6 ஆம் நாள் வெளியிடப்பட்டது. சிறார்களை  படையில் சேர்ப்பதை அமெரிக்க அரசு தீவிரமாக எதிர்த்து வருகிறது. அப்படிச் சோத்து வரும் நாடுகளின் பட்டியலை அமெரிக்கா தயாரித்துள்ளது.

அந்த அறிக்கையில் 25 நாடுகளின் படையணிகளில் சிறார் சேர்ப்பு தொடர்பான தரவுகள் இடம்பெற்றிருந்தது. சிறிலங்காவில் அரசு  மற்றும் அரசுடன் சேர்ந்து இயங்கும் துணை ஆயுதக் குழுக்களினால் படையணிகளில் சிறார் கட்டாயமாகச சேர்க்கப்படுகின்ற புதிய தரவுகள் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

அமெரிக்காவினால் பட்டியலிடப்பட்ட 25 நாடுகளுக்கு அமெரிக்காவின் இராணுவ உதவி எத்தகையதாக இருக்கிறது என்பதை மேற்குறிப்பிட்ட பாதுகாப்புத் தரவுகளுக்கான தனியார் மையம் ஆய்வு செய்து அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவினால் பட்டியலிடப்பட்டுள்ள 25 நாடுகளில் 13 இல் 18 அகவைக்கும் குறைவானோர் அரசு மற்றும் அரசசார்பு ஆயுதக் குழுக்களின் படையணிகளில் கட்டாயமாகச் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

குறிப்பிட்ட 13 நாடுகளில் 9 நாடுகளில் சிறார்கள் படையணியில் பயன்படுத்தப்பட்டு  வருகின்றனர். இந்த 9 நாடுகளில் 8 நாடுகளுக்கு 2001 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா இராணுவ உதவி செய்து வருகிறது.

அமெரிக்க நாட்டின் சட்டத்தின் கீழ் (டுநயால டுயற) மனிதவுரிமைகளை மீறும் நாடுகளுக்கு ஆயுத விற்பனை, இராணுவப் பயிற்சி அளிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சு இந்தச் சட்டத்தைச் சட்டை செய்வதில்லை.

அமெரிக்காதான் இரட்டை வேடம் போடுகிறதென்றால் அதன் கூட்டாளி நாடான பிரித்தானியாவும் அதேமாதிரி நடந்து கொள்கிறது. கடந்த கிழமை சுனாமி நிதியுதவியின் ஒரு கூறாக ஸ்ரீலங்காவின் கடனை அடைக்க ஒப்புக்கொண்ட பிரித்தானியா அதிகரித்துவரும் மனிதவுரிமை மீறல்களையும் பாதுகாப்பு செலவினத்தையும் காரணம் காட்டி 3 மில்லியன் டொலர் நிதியுதவியை நிறுத்தி வைத்துள்ளது. இதையிட்டு மகிழ்ச்சி கொண்டாடுவதற்கு முன்னர் இன்;னொரு செய்தியும் வந்துள்ளது.

பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சு ஸ்ரீலங்காவிற்கு 7 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுத விற்பனைக்கான உரிமங்களை வழங்கியுள்ளது!

உலக ஒழுங்கில் இவ்வித இரட்டை வேடத்தை எல்லா நாடுகளுமே போடுகின்றன. ஆனால் உலக அமைதிபற்றியும் மனிதவுரிமைகள் பற்றியும் மக்களாட்சித் தத்துவம் பற்றியும் நாளும் பொழுதும் வாய் கிழியப் பேசும் அமெரிக்காவும் பிரித்தானியாவும் சொல்லொன்று செயலொன்றாக நடக்கும் போது சற்று ஏமாற்றமாக இருக்கிறது.

உலக அமைதி பற்றிப் பேசும் நாடுகளே போரில் மும்மரமாக ஈடுபட்டுள்ளன. போரில் மட்டுமல்ல ஆயுத உற்பத்தியிலும் அவற்றின் விற்பனையிலும் இதே நாடுகள்தான் முன்னணி வகிக்கின்றன!

உலகில் ஆண்டொன்றுக்கு 900 பில்லியன் டொலர் பெறுமதியான போர்த்தளபாடங்கள் விற்பனையாகின்றன.

துப்பாக்கிகள், தோட்டாக்கள், ஏவுகணைகள், போர் விமானங்கள், போர்க் கப்பல்கள், ரடார்கள் போன்றவற்றை அமெரிக்க ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன.

பயங்கரவாதத்துக்கு எதிரான போர் அறிவிக்கப்பட்ட பின்னர் ஆயுத – தளபாட உற்பத்தி மேலும் அதிகரித்துள்ளது.

புவியியல் அடிப்படையில் உலகம் முழுதும் (சீனா நீங்கலாக) ஆயுத ஏற்றுமதி செய்த விழுக்காடு ; பின்வருமாறு.

புவியியல்
1984
மூ
1994
மூ
2004
மூ
வட அமெரிக்கா
25.0
57.2
63.2
மேற்கு அய்ரோப்பா
26.5
26.3

கிழக்கு அய்ரோப்பா
39.3
8.6

அய்ரோப்பா


30.5

600 மில்லியன் சிறியளவு ஆயுதங்கள் உலகம் முழுதும் பயன்பாட்டில் உள்ளன. 98 நாடுகளில் இயங்கும் 1,135 நிறுவனங்கள் சிறியளவு ஆயுத உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. ஒக்ஸ்போம் (ழுஒகயஅ) அமைப்பு சிறியளவு ஆயுதங்களினால் ஆண்டில் 500,000 மக்கள் அதாவது ஒவ்வொரு மணித்துளிக்கு ஒருவர் இறந்துபடுவதாக மதிப்பிட்டுள்ளது!

1989 தொடக்கம் 1996 வரை அமெரிக்கா 257 பில்லியன் (25,700 கோடி) டொலர் பெறுமதியான ஆயுதங்களை மற்ற நாடுகளுக்கு விற்பனை செய்துள்ளது. 2001 ஆம் ஆண்டு விற்பனை செய்யப்பட்ட மொத்த ஆயுதங்களில் சரிபாதி அமெரிக்காவால் விற்பனை செய்யப்பட்டவை ஆகும். 2003 ஆம் ஆண்டு அமெரிக்கா உள்நாட்டு மோதல்கள் இடம்பெறும் 25 நாடுகளில் 18 நாடுகளுக்கு ஆயுத விற்பனை செய்துள்ளது. இதில் அங்கோலா, சாட், எத்தியோப்பியா, கொலம்பியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் அடக்கம்.

இரண்டாவது மூன்றாவது ஆயுத ஏற்றுமதி நாடுகளைவிட அமெரிக்க இரண்டரை மடங்கு அதிகமான ஆயுதங்களை ஏற்றுமதி செய்துள்ளது. பெரும்பாலும் வளர்முக நாடுகளுக்கே ஆயுத – தளபாடங்கள் விற்கப்படுகின்றன!

அமெரிக்க ஆயுதங்களை இறக்குமதி செய்த நாடுகளில் இராணுவ ஆட்சி நடைபெறும் நாடுகளும் அடங்கும். இன்னும் சொல்லப்போனால் அமெரிக்கா உள்நாட்டு மோதல்கள் நடைபெறும் (1999) நாடுகளில் 92 விழுக்காடு நாடுகளுக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்துள்ளது.

2001 ஆம் ஆண்டு மட்டும் 37.9 பில்லியன் டொலர்களை ஆயுத ஆய்வு மற்றும் மேம்பாட்டுக்கு (றுநயிழளெ சுநளநயசஉh யனெ னுநஎநடழிஅநவெ) அமெரிக்கா செலவு செய்துள்ளது. அமெரிக்காவின் பொருளாதாரம் ஆயுத விற்பனையில் பெரிதும் தங்கியிருக்கிறது.

அமெரிக்க ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் உலகில் செல்வாக்கும் பலமும் படைத்த  நிறுவனங்களாகும். அமெரிக்க அரசியலில் அவை அதிகளவு செல்வாக்குச் செலுத்துகின்றன. அவற்றின் முக்கிய அதிகாரிகள் அமெரிக்க பாதுகாப்பு, வாணிக, இராசாங்க அமைச்சுக்களின் ஆலோசனைக் குழுக்களில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

ஆட்சித்தலைவர் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களின் போது குடியரசு மற்றும் மக்களாட்சி கட்சிகள் இரண்டுக்கும் இலட்சக்கணக்கில் நிதியுதவி செய்கின்றன!

உலகில் அமைதி நிலவினால் ஆயுத உற்பத்தி நிறுவனங்களை இழுத்து மூட வேண்டி வரும். பிச்சைக்காரனுக்கு மேல் முழுதும் புண் தேவை. அதனை மருந்து போட்டு மாற்ற முனைந்தால் அவனது பிழைப்புக் கெட்டுவிடும். அந்தப் பிச்சைக்காரன் நிலையில்தான் அமெரிக்கா இருக்கிறது.
ஸ்ரீலங்கா பற்றிய அதன் அணுகுமுறை – இரட்டை வேடம் அதைத்தான் காட்டுகிறது.

தமிழ்மக்கள் எக்கேடு கெட்டுப் போனாலும் பருவாயில்லை. தனது பணப்பை நிரம்ப வேண்டும் என்பதில் அமெரிக்கா குறியாக இருக்கிறது!


மகிந்த இராசபக்சேயின் சாயம் வெளுக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை!
நக்கீரன்
கடந்த மூன்று மாதத்தில் (தை முதல் பங்குனி வரை) யாழ்குடாநாட்டில் மட்டும்  67 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். 68 பொதுமக்கள் காணாமல் போயுள்ளார்கள்.  29 பேர் கடத்தப்பட்டுள்ளார்கள். இந்தத் தகவலை யாழ்ப்பாண மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ளது.
படுகொலை, காணாமல் போதல், கடத்தல் போன்றவற்றை வெள்ளை வானில் செல்லும் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளும் சிறிலங்கா படையினரும் படையினரோடு சேர்ந்து இயங்கும் ஒட்டுக் குழுக்களும் அரங்கேற்றுகின்றன.
சிறிலங்கா இராணுவத்தினாலும், அவர்களுடன் சேர்ந்து இயதியங்கும் ஒட்டுக்  குழுக்களினாலும் விடுத்த கொலை அச்சுறுத்தல்கள் காரணமாக 70 க்கும் அதிகமான தமிழ் இளைஞர்கள் யாழ் மனித உரிமை ஆணையத்திடம் சரணடைந்திருக்கின்றனர். அவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு பின்னர் சிறைச்சாலையில் ஏனைய கைதிகளோடு கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று (புதன்கிழமை) முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் சிறிலங்கா வான்படையின் இரண்டு மிக் ரக வானூர்திகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.
கண்ணிவெடியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான செயற்கை உறுப்புக்களைத் தயாரித்து வழங்கும் ‘வெண்புறா’ நிறுவனத்தின் கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன.
வழக்கம் போல ஸ்ரீலங்கா விமானங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வி. புலிகளின் இலக்குகளை அழித்துள்ளதாகவும் அழிக்கப்பட்ட கட்டிடம் கடற்புலிகளின் தலைமையகம் என ஸ்ரீலங்கா அரசு பொய் சொல்லியுள்ளது.
இன்று (புதன்கிழமை) சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணி வவுனியா வடக்கு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நடத்திய தாக்குதலில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும்  கொல்லப்பட்டுள்ளனர்.
வவுனியா மருத்துவமனையில் வேலைபார்க்கும் மருத்துவர்களிடம் கோடிக்கணக்கில் கப்பம் கேட்டு கருணா குழு தொலைபேசியில் விடுத்த மிரட்டலை அடுத்து மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சில கிழமைகளுக்கு முன்னர் இதே குழுவினால் வவுனியா வழக்கறிஞர்கள் மிரட்டப்பட்ட போது அவர்கள் நீதிமன்ற அமர்வுகளைப் புறக்கணித்தார்கள்.
ஒரே நாளில் நடைபெற்ற மனிதவுரிமை மீறல்கள் பற்றி செய்தித்தாள்களில் வெளிவந்த செய்திகள் இவை. வெளிவராத செய்திகளும் இருக்கக் கூடும்.
இவ்வாறு நாள்தோறும் நடக்கும் கொலை, கடத்தல், காணமல் போதல், கப்பம் கேட்டல் போன்றவை பற்றி மகிந்த இராசபக்சேயோ அவரது அமைச்சர்களோ ஒரு துளி வெட்கப்படுவதாகவோ துக்கப்படுவதாகவோ தெரியவில்லை. மாறாக இந்த மனிதவுரிமை மீறல்களை நியாயப்படுத்தி இராசபக்சேயும் அவரது அமைச்சர் பட்டாளமும் பேசியும் எழுதியும் வருகிறார்கள்.
மகிந்த இராசாபக்சே தமிழீழ விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதம் எனப் பேசி வருகிறார். அதனை ஒழிப்பதே தனது அரசின் தலையாய கொள்கை என வெளிப்படையாக ஒளிவு மறைவின்றிச் சொல்லி வருகிறார்.
மகிந்த சிந்தனையின் படி இனச் சிக்கலுக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு இல்லை. இராணுவ பலத்தின் மூலமே தீர்வு. இது மட்டுமல்ல –
போர் நிறுத்த ஒப்பந்தம் செல்லுபடியாகாத – சட்டத்துக்கு முரணான ஒரு ஆவணம்.
தமிழர்கள் தனி தேசிய இனம் இல்லை.
வட – கிழக்கு இணைப்பில்லை.
தமிழ்மக்களது தாயகம் வட- கிழக்கு என்பதை ஏற்பதில்லை.
நோர்வேயின் அனுசரணை தேவையில்லை.
கண்காணிப்புக் குழுவினர் ஸ்ரீலங்காவில் இருந்து துரத்தப்பட வேண்டும்.
என்பவை மகிந்த சிந்தனையாகும். இவற்றுக்கு செயல் வடிவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
தென் தமிழீழம் மீது தொடர்ச்சியாக மேற்கொண்ட வலிந்த இராணுவ படையெடுப்பினால் பேரளவு நிலப்பரப்பு இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தொடர்ச்சியான விமான குண்டு வீச்சினாலும் செல் தாக்குதலினாலும் உயிர் இழப்புக்களும் பொதுச் சொத்துக்களும் நாசமாகியுள்ளன.
மானிட உரிமைக்கான கண்காணிப்பகம், செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் கத்தோலிக்க நிவாரண குழுக்கள் கடந்த சில கிழமைகளில் மட்டும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் தொகை 150,000 உயர்ந்துள்ளது என்றும் இடப்பெயர்வுக்கு ஆளான மொத்த மக்கள் தொகை 350,000 ஆக உயர்ந்துள்ளது எனவும் தெரிவிக்கின்றன.
வாகரையில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள் அவர்களது விருப்பத்துக்கு மாறாக கட்டாயப்படுத்தி மீள்குடியமர்த்தப் பட்டுள்ளனர். அதே நேரம் சம்பூரில் இருந்து விரட்டப்பட்ட 8,000 தமிழ்மக்கள்  தொடர்ந்து ஏதிலிகளாக கூடாரங்களில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களது மீள் குடியேற்றம் கேள்விக்குறியாகியுள்ளது.
மீள் குடியேற்றப்படும் மக்கள் கடற்கரையில் இருந்து 500 மீட்டர் தொலைவிலும்  . நெடுஞ்சாலைகளின் இரு பக்கத்தில் இருந்து 50 மீட்டர் தொலைவிலும் குடியமர்த்தப்பட்டு வருகிறார்கள்.
தமிழர்களுக்கு எதிராகத் திட்டமிட்டு நடத்திவரும் ஒட்டுமொத்தமான மனிதவுரிமை மீறல்களையும் இனவொழிப்பையும் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என ஸ்ரீலங்கா அரசு சொல்கிறது.
மனிதவுரிமை அமைப்புகளும் பன்னாட்டு சமூகமும் ஸ்ரீலங்கா அரசுக்கு எதிராக வைக்கும் குற்றச்சாட்டுக்கள் இரண்டு ஆகும்.
ஒன்று மனிதவுரிமை மீறல்கள். இரண்டு இனச் சிக்கலுக்குத் தீர்வாக ஸ்ரீலங்கா அரசு முன்வைக்காத அரசியல் திட்டம். இந்த இரண்டும் தொடர்பாக ஸ்ரீலங்கா அரசு ஒளித்து விளையாடுவதாகவே மனித உரிமை அமைப்புக்களும் பன்னாட்டு சமூகமும் எண்ணுகின்றன.
ஆளும் கட்சிகளில் ஒன்றான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இனச் சிக்கலுக்கு தீர்வு யோசனைகளை வைப்பதாகச் சொல்லியது. ஆனால் இதுவரை அது எந்தத் தீர்வையும் முன்வைக்காது காலத்தை கடத்திக் கொண்டு போகிறது.
நிபுணர்கள் குழு சமர்ப்பித்த ஏ அறிக்கையையும் பி அறிக்கையையும் பேராசிரியர் விதாரண இணைத்து ஒரு கலப்பு அறிக்கை தயாரி;த்ததாகத் தெரிகிறது. ஆனால் அதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை. இதோ வருகிறது அதோ வருகிறது என்று ஸ்ரீலங்கா அரசு சொல்லிக் கொண்டு வருகிறது.
மகிந்த இராசபக்சேயின் அரசுக்கு இணைத்தலைமை நாடுகள் உள்பட பல நாடுகள் வெளிப்படையாக எதிர்ப்புத் தெரிவிக்காவிட்டாலும் மறைமுகமாக அதனை வெளிப்படுத்தி வருகின்றன.
வி.புலிகள் கட்டுநாயக்க வான்படைத் தளத்தின் மீது குண்டு வீசியதை வைத்துக் கொண்டு ஸ்ரீலங்கா அரசு புலிகள் மீது கரி பூச எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன. வி.புலிகளது வான்படை தென்னாசியாவுக்கு மட்டுமல்ல முழு உலகத்துக்குமே பாரிய அச்சுறுத்தல் என்ற ஸ்ரீலங்காவின் பல்லவிக்கு அனுபல்லவி பாட எந்த நாடும் முன்வரவில்லை.
இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் வி.புலிகள் கட்டுநாயக்க விமான தளம் மீது நடத்திய தாக்குதல் பற்றிக் கேள்வி கேட்கப்பட்டபோது “அந்தத் தாக்குதலையும் நாம் தனித்துப் பார்க்கக் கூடாது. அங்கு நடைபெறும் ஒட்டுமொத்த வன்முறை நிகழ்வுகளையும் நாம் பார்க்க வேண்டும்” என்று பதில் அளித்திருக்கிறார். இது மகிந்த இராசபக்சேயுக்கு மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கும் என்பதில் அய்யமில்லை. இந்தியா மட்டுமல்ல கனடா, அமெரிக்கா, யப்பான் உட்பட வேறெந்த நாடும் புலிகளின் வான் தாக்குதலைக் கண்டிக்கவில்லை!
முன்னாள் வெளியுறவு அமைச்சர் கதிர்காமர் உட்பட தெரிந்தெடுக்கப்பட்ட 15 கொலைகள் தொடர்பாக விசாரித்து வரும் ஆணையத்தில் (ஊழஅஅளைளழைn ழக ஐஙெரசைல (ஊழுஐ) இருந்து இரண்டு உறுப்பினர்கள் விலகி விட்டார்கள். மகிந்த இராசபக்சே சமுதாய மதிப்புக்குரிய மனிதர்களைக் கொண்ட அனைத்துலக சுதந்திர குழுவொன்றையும் (ஐனெநிநனெநவெ ஐவெநசயெவழையெட புசழரி ழக நுஅiநெவெ Pநசளழளெ (ஐஐபுநுP) நியமித்துள்ளார். இந்த முயற்சிகள் பன்னாட்டு மனிதவுரிமை அமைப்புக்களால் வீசப்படும் மனிதவுரிமை மீறல் குற்றச்சாட்டில் இருந்து தப்ப ஸ்ரீலங்கா அரசு எடுத்திருக்கும் தற்காப்பு நடவடிக்கைகள் ஆகும்..
“இராணுவ தீர்ப்பு இறுதியில் எந்த முடிவுகளையும் பெற்றுத்தராது. ஸ்ரீலங்காவும் வி.புலிகளும் தொடர்ந்து பேசி இலங்கைத் தீவில் அமைதியை ஏற்படுத்து வேண்டும்” என இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிவுறுத்தியிருக்கிறார். சார்க் மாநாடு முடிந்த கையோடு நடந்த செய்தியாளர்களின் மாநாட்டிலேயே வெளியுறவு அமைச்சர் இவ்வாறு பேசியுள்ளார்.
சிங்களப் படைகளின் ஆக்கிரமிப்புப் படையெடுப்புக்களை பயங்கரவாதத்துக்கு எதிரான போர் எனச் சொல்லி மகிந்த இராசபக்சே அதனை நியாயப்படுத்தப் பார்க்கிறார்.
பயஙகரவாதத்துக்கு எதிரான போரில் மனிதவுரிமைகள் மீறப்படலாம் என்ற கோட்பாட்டை அவர் முன்வைத்துள்ளார்!
இதன் ஒரு அம்சமாகவே தில்லியில் நடந்த பிரதேச ஒத்துழைப்புக்கான தெற்காசிய அவையின் (ளுயுயுசுஊ) மாநாட்டில் மகிந்த இராசபக்சே “பயங்கரவாத ஒழிப்பு” வாளைக்  கையில் எடுத்தார். ஆனால் அவரது முயற்சி வெற்றிபெறவில்லை.
அதி தீவிர பவுத்த – சிங்கள பேரினவாதத்துக்கு கொடிபிடிக்கும் வுhந ஐளடயனெ என்ற நாளேடு மகிந்த சிந்தனையை பிரதிபலிப்பது போல் ஆசிரிய உரை தீட்டியுள்ளது.
“றுயச ளை ய pயஉமயபந றாநசந உழவெநவெள யசந iளெநியசயடிடந யனெ னளையளவநச ளை iநெஎவையடிடந. ர்நnஉநஇ வாந நெநன வழ யஎழனை வை. டீரவஇ ரகெழசவரயெவநடலஇ வாநசந யசளைந உநசவயin ளவைரயவழைளெ றாநசந ளவயவநள யசந டநகவ றiவா ழெ யடவநசயெவiஎந வழ றயச in னநயடiபெ றiவா அழளெவநசள வாயவ டிநடநைஎந in வநசசழசளைஅ. ஐக வாந றழசடன hயன ழெவ கழரபாவ ர்வைடநச றiவா அiபாவ யனெ அயin றந றழரடன hயஎந டிநநn டiஎiபெ in hநடட வழனயல. ர்யன வாந துஏP டிநநn யடடழறநன வழ நளவயடிடiளா வைள Pழட Pழவ சநபiஅநஇ ளுசi டுயமெய றழரடன hயஎந டிநநn hநடட ழn நயசவா. வுhந ளயஅந பழநள வழ வாந டுவுவுநுஇ றாiஉh ளை உயரளiபெ hநடடiளா ளரககநசiபௌ வழ வாந pநழிடந ரனெநச வைள தயஉமடிழழவ யனெ நடளநறாநசந.” (வுhந ஐளடயனெ – யுpசடை 02இ 2007)
“போர் என்பது ஒரு சிப்பம் மாதிரி. அதனில் உள்ள பொருள்களைப் பிரிக்க முடியாது. போர் அழிவும் தவிர்க்க முடியாதது. எனவே அதனைத் தவிர்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால், துரதிட்டவசமாக சில சூழ்நிலைகளில் பயங்கரவாதத்தில் நம்பிக்கை கொண்டுள்ள வேதாளங்களோடு சம்பந்தப்படும் போது அரசுகளுக்குப் போர் தவிர வேறு வழியில்லை. இந்த உலகம் இட்லரோடு மூர்க்கத்தனமாகப் போர் புரியாது இருந்திருந்தால் நாங்கள் இன்று நரகத்தில் இருந்திருப்போம். பொல் பொட் அரசு போல் ஒன்றை நிறுவ ஜேவிபி அனுமதிக்கப்பட்டிருந்தால் இந்தப் புவியே நரகம் ஆக மாறியிருக்கும். வி.புலிகளும் அவ்வாறே. அவர்கள் தங்களது காலணிக்குள்ளும் வெளியிலும் உள்ள மக்களுக்கு சொல்லொணாத் துன்பத்தை இழைக்கிறார்கள்.”
ஆரிய இனவெறி பிடித்த இட்லர் சிறுபான்மை யூத இனத்தை கொன்று குவித்தவன். ஜேவிபி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற ஆயுதமேந்தி மக்களைச் சுட்டுக் கொன்ற அமைப்பு. இந்தக் கும்பலோடு தமிழ் மக்களது வாழ்வுரிமையைத் தட்டிப்பறித்த சிங்கள-பவுத்த வெறியர்களோடு தற்பாதுகாப்பு அடிப்படையில் போராடும் வி.புலிகளை வுhந ஐளடயனெ நாளேடு ஆசிரியர் ஒப்பிட்டு எழுதுவது முற்றிலும் முட்டாள்தனமானது! அதில் அறிவு நாணயம் இல்லை.
இது இவ்வாறிருக்க ஸ்ரீலங்கா அரசு அமெரிக்காவிடம் இருந்து ஆடைடநnnரைஅ ஊhயடடநபெந ஊழசி  திட்டத்தின் கீழ் பொருளாதார உதவிநிதியாக 590 மில்லியன் (59 கோடி) அமெரிக்க டொலரைக் கேட்டிருக்கிறது. அமெரிக்கா சென்ற ஸ்ரீலங்கா வெளியுறவு அமைச்சர் ஸ்ரீலங்காவின் பொருளாதார மேம்பாட்டுக்கு அமெரிக்காவின் உதவி தேவைப்படுகிறது என்றும் ஸ்ரீலங்காவில் நடைபெறும் மனிதவுரிமை மீறல்கள் விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்றும் உறுதிமொழி வழங்கியுள்ளார்.
மனிதவுரிமை அமைப்புக்கள் ஸ்ரீலங்கா இராணுவத்தின் கண்மூடித்தனமான குண்டுத் தாக்குதல்களைக் கண்டித்து வருகின்றன. ஒட்டுக் குழுவான கருணா குழு சிறார்களைப் படையில் சேர்ப்பதற்கு அரசம் அரச படைகளும் ஒத்தாசையும் ஒத்துழைப்பும் வழங்குகின்றன என்று மானிட உரிமை கண்காணிப்பகம் வெளிப்படையாகக் குற்றம்சாட்டியுள்ளது.
ஸ்ரீலங்கா அரசு மனிதவுரிமை அமைப்புக்களின் வாயை மூடப்பார்க்கிறது, ஊடகவியலாளர்கள் மிரட்டப்படுகிறார்கள், ஊடக சுதந்திரம் நசுக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகளும் வீசப்படுகின்றன.
எதிர்வரும் யூன் மாதத்துக்கு முன்னர் ஸ்ரீலங்கா அரசு மில்லேனியம்; அமைப்பின் இயக்குநர் அவைக்கு தனது உட்கட்டுமானத் திட்டங்கள்பற்றிய விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். மில்லேனிய அமைப்பின் செலவினங்கள் அமெரிக்க காங்கிரசின் கண்காணிப்புக்கு அப்பாற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே நீர்ப்பாசனத்துக்கான நிதி ஒதுக்கீட்டை மில்லேனியம் அமைப்பு சுற்றுச்சூழல் காரணங்களுக்காக புறந்தள்ளிவிட்டது. பெயரைத் தெரிவிக்க விரும்பாத இந்த அமைப்பின் பேச்சாளர் ஒருவர் “ஸ்ரீலங்காவின் மனிதவுரிமை மீறல்கள் பற்றி உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டு வருகிறோம்” எனத் தெரிpவித்துள்ளார்.
மானிட உரிமைக் கண்காணிப்பகம் மனிதவுரிமை மீறல்களைப் புரியும் நாடுகளுக்கு அமெரிக்கா நிதியுதவி செய்வதைக் கடுமையாக எதிர்த்து வருகிறது. “அமெரிக்கா மனிதவுரிமைகள் பற்றி சில கோட்பாடுகளை வைத்திருக்கிறது. ஆனால் நடைமுறையில் அவற்றைக் கடைப்பிடிக்கத் தவறிவிடுகிறது. அப்படிச் செய்வதால்; மனிதவுரிமைகளை மீறலாம் என்ற செய்தி மற்ற நாடுகளுக்கும போய்விடுகிறது” என அந்த அமைப்புச் சுட்டிக் காட்டியுள்ளது.
பல நாள் கள்ளன் ஒரு நாள் பிடிபடுவார்ன். மனிதவுரிமைகளையும் ஊடக சுதந்திரத்தையும் காலில் போட்டு மிதி:க்கும் மகிந்த இராசபக்சே கையும் களவுமாகப் பிடிபடும் நாள் வெகு தூரத்தி;ல் இல்லை!  (உலகத்தமிழர் -ஏப்ரில் 06, 2007)


பிரித்தானியாவின் கண்களில் விரலை விட்டு ஆட்டும் இரான்!

ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம் என்பார்கள்.

பிரித்தானிய பேரரரசு அலைகடல் அனைத்தையும் கட்டி (டீசவையnniஉய சரடநள வாந றயஎநள) ஆண்ட காலம் ஒன்று இருந்தது. அப்போது பிரித்தானிய பேரரசில் ஞாயிறு ஒருபொழுதம் மறைவதில்லை என்று கூடச் சொல்லப்பட்டது.

இப்போது அந்தப் பேரரசு பல்லில்லாத கிழடுச் சிங்கம் போல் ஆகிவிட்டது. அதனால் இரான் அதன் கண்களில் விரலை விட்டு ஆட்டுகிறது!

கடந்த கிழமை (மார்ச்சு 23) மூன்றாவது உலக நாடான இரான் 15 பிரித்தானிய கடற்படையினரை தனது கடல் எல்லைக்குள் வைத்துக் கைது செய்துள்ளது. இவர்களில் ஒரு பெண் கடற்படை வீரரும் அடங்குவர்.

இரான் பிரித்தானிய கடற்படையினர் 0.5 கிமீ தொலைவு இரானின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததால் அவர்களை பிடிக்க நேர்ந்தது என்கிறது. அதற்குச் சான்றாக குயலந வுரசநெல என்ற பெண் கடற்படை வீரர் இரான் தொலைக்காட்சிக்குக் கொடுத்த ஒளிப்படச் செவ்வியைக் காட்டுகிறது.

அந்த ஒளிபடச் செவ்வியில் பிரித்தானிய கடற்படையினர் இரானிய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததை கருப்பு றிற முக்காடு அணிந்திருந்த குயலந வுரசநெல ஒப்புக்கொள்கிறார். நேற்கு இரானின் அரபு மொழி தொலைக்காட்சி ஒளிபரப்பில்; எஞ்சிய கடற்படையினரும் காட்டப்பட்டுள்ளார்கள்.

இந்தச் செவ்வியை தன்விருப்படி குயலந வுரசநெல  கொடுத்தாரா அல்லது கட்டாயத்தின் பேரில் கொடுத்தாரா என்பது தெரிவில்லை.
ஒளிப்படத்தை இரான் தனது தொலைக்காட்சியில் போட்டுக் காட்டியதற்கு பிரித்தானியா உத்தியோக அடிப்படையில் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

குயலந வுரசநெல என்ற பெண் கடற்படை வீரரை விடுவிக்கப் போவதாக இரானின் வெளியுறவு அமைச்சர்  ஆயழெரஉhநாச ஆழவவயமi அறிவித்தார். ஆனால் இதை எழுதிக்கொண்டிருக்கும் வரை (வியாழக்கிழமை) அவர் விடுவிக்கப்படவில்லை.

பிரித்தானியா தனது கடற்படையினர் இரான் கடல் எல்லையை அத்துமீறினார்கள் என்பதை மறுக்கிறது. தனது கடற்படையினர் இராக் கடல் எல்லைக்கு இப்பால் 1.7 கிமீ கடல் மைல் தொலைவில் வைத்தே கைது செய்யப்பட்டார்கள் என்றும் அவர்கள் எந்தக் குற்றத்தையும் இழைக்கவில்லை என்றும் பிரித்தானியா  அடித்துச் சொல்கிறது. இது தொடர்பாக பிரித்தானியா கைது செய்யப்பட்ட 15 கடற்படையினர் விடுவிக்கப்பட வேண்டும் என்று கேட்டு அய்க்கிய நாடுகள் பாதுகாப்பு அவையில் ஒரு வரைவு தீர்மானத்தை கொடுத்திருக்கிறது.

இரானும் சும்மா இருக்கவில்லை. கடல் எல்லை மீறப்பட்டதைக் கண்டித்து இரானின் வெளியுறவு அமைச்சர் அறிக்கை வெளியுட்டுள்ளார்.
இரான் பிரித்தானிய கடற்படையினரைக் iது செய்தது தொடர்பாக அய்க்கிய நாடுகள் அவையின் செயலாளர் பான் கி – மூன் (டீயn முi-அழழn) சவுதி அரேபிய தலைநகர் ரியாட்டில் நடந்த அராப் உச்சிமாநாட்டில் இரான் அதிகாரிகளோடு பேசியுள்ளார். அவரைப் போலவே அய்ரோப்பிய ஒன்றிய வெளியுறவு கொள்கை தலைவர் ஜேவியர் சொலானா (துயஎநைச ளுழடயயெ) இரான் அதிகாரிகளோடு பேச்சு வார்த்தை நடத்தினார். பிரித்தானியா கடற்படையினரை இரான் சட்டத்துக்கு முரணாக கைது செய்து தடுத்து வைத்துள்ளதாகக் அவர் குற்றம் சாட்டினார்.

இரான் – பிரித்தானியா நாடுகளுக்கு இடையில் மூண்டுள்ள மோதல் உலக அமைதிக்கு ஒரு பயமுறுத்தலாக இருக்கிறது.
அய்ரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா இரண்டும் கைது செய்து காவலில் வைக்கப்பட்டுள்ள பிரித்தானிய கடற்படையினர் விடுவிக்கப் படாவிட்டால் கடுமையான விளைவுகளை இரான் சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளன.
இன்று ஏற்பட்டுள்ள இந்தச் சிக்கல் 1979 ஆம் ஆண்டு நூற்றுக்கணக்கான அமெரிக்க அரசதந்திரிகள் இரானிய மாணவர்களால் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்த நிகழ்ச்சியை நினைவுக்குக் கொண்டு வருகிறது.

இன்றைய இரானின் ஆட்சித்தலைவர் ஆயாஅழரன யுhஅயனiநெதயன அந்த மாணவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
——————————————————————————————-

இரான் கடற்படையால் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் குயலந வுரசநெல தன் கைப்பட தனது தாய் தந்தை இருவருக்கும் மார்ச்சு 29 ஆம் நாள் எழுதிய கடிதம்.
————————————————————————————————————————————–
கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்க போர்க்கப்பல்கள் இரானுக்கு எச்சரிக்கை விடுப்பதுபோல் அராபிக் கடலில் ஒரு இராணுவ ஒத்திகையை நடாத்தியது.

அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் இஸ்ரேலில் உள்ள இராணுவக் கடும் போக்காளர்கள் இரானுக்கு விளங்கக் கூடிய மொழி படைபலம் ஒன்றே என நினைக்கிறார்கள்.

பிரித்தானிய முதல் அமைச்சர் ரோனி பிளேயர் பழைய நினைப்பில் இரான் பிரித்தானிய கடற்படையினரை உடனடியாக விடுவிக்காவிட்டால் அதன் மீது இராணுவ பலம் பயன்படுத்தப்படும் என்று நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.

ரோனி பிளேயருக்கு ஒத்து ஊதுவது போல வலதுசாரி செய்தித்தாள்களான ரைம்ஸ் (வுhந வுiஅநள)  மற்றும் வுhந வுநடநபசயிh பிரித்தானியா பயந்தாங்கொள்ளி போல் நடந்து கொள்வதை விடுத்து இரானுக்கு இராணுவ அடிப்படையில் ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் என்றும் அதற்கான காலக்கெடுவொன்றை நிருணயிக்க வேண்டும் என்றும் ஆசிரிய உரைகள் வரைந்துள்ளன.
ஆனால் அமெரிக்காவும் பிரித்தானியாவும்  இராக் மற்றும் ஆப்கனிஸ்தான் நாடுகளில் இராணுவ அடிப்படையில் மாட்டுப்பட்டுக் கொண்டு தவிப்பதால் இரானோடு இன்னொரு போர் முனையைத் திறப்பதன் அபாயத்தை அவர்கள் உணர்ந்திருக்கின்றன. இதனால் இரான் ஒரு குழுமாடு, மேற்குலக நாடுகளை வலிந்து போருக்கு அழைக்கிறது, பன்னாட்டு மக்கள் கருத்துக்கு செவிசாய்க்க மறுக்கிறது எனச் சித்திரித்துக் காட்டி அதன் முகத்தில்  கரி பூச முயல்கின்றன.

பிரித்தானிய கடற்படையினர் பிடிக்கப்பட்ட இடம் கடல் ஷாட் அல் – அரபு கடல்வழி (ளூயவவ யட- யுசயடி றயவநசறயல) ஆகும். இந்தக் கடல்வழி யாருக்குச் சொந்தம் என்ற புடுங்கல் காரணமாகவே இராக்கும் இரானும் 10 ஆண்டு காலமாகத் தங்களுக்குள் சண்டையிட்டன. இந்தக் கடல்வழிக்குள்தான் ரைகிரிஸ் மற்றும் யூபீரட்டிஸ் ஆறுகள் கலக்கின்றன.

இந்தக் கடல்வழி தொடர்பான இராக் – இரான் சண்டையில் அமெரிக்கா இராக் பக்கம் சாய்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அதற்குக் காரணம் அமெரிக்காவிற்கு சர்வாதிகாரி சதாம் குசேன் மீது இருந்து காதலல்ல –  இரானில் வெடித்த இஸ்லாமிய புரட்சித் தீ மேற்காசிய அரபு நாடுகளில் பரவுவதைத் தடுக்கவே சதாம் குசேன் இரான் மீது மேற்கொண்ட படையெடுப்பை அமெரிக்கா ஆதரித்தது.

சிறிது காலத்துக்கு முன்னர் இராக்கில் நிலைகொண்டுள்ள அமெரிக்க படைகள் 5 இரானிய அரசதந்திரிகளைக் கைது செய்தது. இந்தக் கைது அரசதந்திர உறவுகள் தொடர்பான வியன்னா கோட்பாட்டுக்கு முரணானது. ஆனால் அமெரிக்கா தான் மேற்கொண்ட கைதுகளை நியாயப்படுத்த கைது செய்யப்பட்டோர் அரச தந்திரிகள் அல்ல இரானின் புரட்சிக் காவல்படையைச் சேர்ந்தவர்கள் எனச்; சொல்கிறது. இப்போது இரான் பிரித்தானிய கடற்படையினரைக் கைது செய்தது அமெரிக்கா கைது செய்த தனது அரசதந்திரிகளை விடுவிப்பதற்கான பேரம் என நம்பப்படுகிறது.

அமெரிக்கா, பிரித்தானியா இரண்டு நாடுகளும் இராக் மீது படையெடுத்த போது உலகில் உள்ள அத்தனை சட்டங்களும், ஜெனிவா மரபுகளும் மீறப்பட்டன. அய்க்கிய நாடுகள் அவை என்ற ஒரு அமைப்பு இருப்பதையே இந்த இரண்டு நாடுகளும் கண்டு கொள்ளவில்லை. ஆனால் இப்போது இரான் பிரித்தானிய கடற்படையினரைக் கைது செய்தது போர்க் கைதிகள் பற்றிய ஜெனிவா மரபுகளுக்கு முரணானது என வாதிடுகின்றன.

அதாவது சட்டங்களும் மரபுகளும் தங்கள் நோக்கங்களுக்கு இடையூறாக இருக்கும் போது அவற்றை மீறுவதும் தேவைப்படும்போது அவற்றை மேற்கோள் காட்டுவதும் இந்த நாடுகளின் கொள்கையாக இருக்கிறது! இதற்குக் காரணம் பிரித்தானியா தனது கடற்படையினரை விடுவிக்க பலத்தைப் பயன்படுத்தினால் பன்னாட்டு நாடுகள் மத்தியில் அதற்கு ஆதரவு தேடுவதை நோக்கமாகக் கொண்டிருப்பதுதான்.

உண்மையில் இரானினால் கைதுசெய்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பிரித்தானிய படையினர் போர்க் கைதிகள் அல்ல. காரணம் இரான் – பிரித்தானிய நாடுகளுக்கு இடையில் போர்ப் பிரகடனம் எதுவும் செய்யப்படவில்லை. எனவே போர்க் கைதிகள் பற்றிய ஜெனிவா மரபுகள் இரான் பிரித்தானிய கடற்படையினரைக் கைது செய்த செயலுக்குப் பொருந்தாது.

இரான் பிரிதானிய படையினரைக் கைது செய்வது இதுதான் முதற்தடவை அல்ல –  இராக் மீது அமெரிக்க – பிரித்தானிய படைகள் படையெடுத்து அதனைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின்னர் 8 பிரித்தானிய படையினர் இரானால் கைது செய்யப்பட்டனர். தனது நாட்டுக்குள் பிரித்தானிய படையினர் ஊடுருவிய காரணத்துக்காகவே அவர்கள் கைது செய்யப்பட்டனர் என இரான் கூறியது.

கைது செய்யப்பட்ட பிரித்தானிய படையினரது கண்கள் கட்டப்பட்டு தொலைக்காட்சி முன்பாக நிறுத்தப்பட்டார்கள். ஆனால் பின்னர் எந்தக் கெடுதியும் செய்யப்படாது அனைவரும் விடுவிக்கப்பட்டார்கள்.

இப்போது இரான் பிரித்தானியாவின் கடற்படையினரைக் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டது சரியோ பிழையோ என்பதல்ல முக்கியம். இந்தச் சிக்கல் அமைதி வழியில், அரசதந்திர வழியில் தீர்த்து வைக்கப்பட வேண்டும்.

எடுத்ததெற்கெல்லாம் ஆயுதம் துர்க்கிப் பழகிப் போன பிரித்hனியா போன்ற முன்னாள் பேரரசு இரான் கைது செய்து தடுத்து வைத்திருக்கும் கடற்படையினரை விடுவிக்க ஆயுதம் தூக்குமா அல்லது அரசதந்திர வழியில் தீர்வு காணுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். (உலகத்தமிழர் – மார்ச்சு 30- ஏப்ரில் 06,2007

“நொண்டி வாத்து” ஆட்சித்தலைவர் ஆகிப்போன யோர்ஜ் புஷ்
நக்கீரன்

அவளைத் தொடுவானேன் கவலைப் படுவானேன் என்பது தமிழில் உள்ள பொருள் பொதிந்த பழமொழி.

இந்தப் பழமொழி அமெரிக்க ஆட்சித்தலைவர் யோர்ஜ் புஷ்சுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. தெரிந்திருந்தால் இராக் சேற்றில் காலை விட்டு மாட்டிக் கொண்டிருக்க மாட்டார்.

ஏதோ இராக் மீது படையெடுப்பது என்பது தேனிலாவுக்கு அல்லது சுற்றுலாவுக்குப் போவது போன்றதுதான் என புஷ் நினைத்திருக்க வேண்டும்.

உரோம பேரரசர் யூலியஸ் சீசர் “ஐ உயஅநஇ ஐ ளயறஇ ஐ உழஙெரநசநன”  எனக் கர்ச்சித்தது போல புஷ் அவர்களும் இராக்கு போனேன் கண்டேன் வென்றேன் என்று கர்ச்சிக்கலாம் என நினைத்தார். ஏன் நினைக்க மாட்டார்?

அமெரிக்கா இன்று உலகில் எஞ்சியுள்ள ஒரே வல்லரசு. படை பலம், ஆயுத பலம், பண பலம் மூளைவளம் படைத்த நாடு.

படை பலம் 14.5 இலட்சம். அதன் ஆண்டு வருவாய் 2 ½ திரில்லியன் (2500 பில்லியன்) டொலர். ஆண்டொன்றுக்குப் பாதுகாப்புக்குச் செலவழிக்கும் தொகை 441 பில்லியன்
படை பலம் பற்றி ஒரு பருந்துப் பார்வை இதோ:

தரப்படை 500,203
மறீன் 180,000
கடற்படை 375,521
வான்படை 358,612
கடலோரக் காவற்;படை 40,151

மொத்தம் 1,450,689

இன்னொரு செய்தி. அமெரிக்கா 144 கடல் கடந்த நாடுகளில் (யெர்மனி 69,395, யப்பான் 47,000, தென் கொரியா 32,714..) ஒன்றரை இலட்சம் படையினரை வைத்திருக்கிறது.

இராக்கில் 1,41,000 அமெரிக்க தரைப்படை இறக்கப்பட்டுள்ளது. மேலதிகமாக 30,000 படையினர் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

மேலே கூறியவாறு அமெரிக்கா ஆண்டொன்றுக்கு 441.6 பில்லியன் டொலர்களைப் பாதுகாப்புக்குச் செலவழிக்கிறது. இது அதன் மொத்த உள்ளுர் உற்பத்தியில் 3.7 விழுக்காடு ஆகும்.

2003 ஆம் ஆண்டு உலக நாடுகளது பாதுகாப்புச் செலவின் கூட்டுத்தொகை 956,000,000,000 மில்லியன் டொலர் (956 பில்லியன்) ஆகும். இதில் அமெரிக்கா 47 விழுக்காடு டொலரைச் (441.6 பில்லியன்) செலவழித்துள்ளது. அமெரிக்காவின் இராக் மற்றும் ஆப்கனிஸ்தான் படைச் செலவு இதில் சேர்க்கப்படவில்லை.

இராக்கில் கடந்த 4 ஆண்டுகளில் 350 பில்லியன் டொலர்களை அமெரிக்கா செலவழித்துள்ளது. ஆனால் உண்மையான செலவு இரண்டு திரிலியனை எட்டும் என்று சில படைத்துறை ஆய்வாளர்கள் நினைக்கிறார்கள். அமெரிக்கா இராக்கில் 106 படைத்தளங்களை வைத்துள்ளது. நிரந்தர தளங்களைக் கட்டுவதற்கு 236 மில்லியன் டொலர்களைச் செலவழித்துள்ளது.

தொடக்கத்தில் இராக் படையெடுப்புக்கு ஆதரவளித்த அமெரிக்க மக்கள் இன்று விரக்தியின் விளிம்பில் இருக்கிறார்கள்.

இராக் மீதான படையெடுப்பின் 4 ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி (மார்ச்சு 21, 2003) அமெரிக்கா முழுதும் கண்டன ஆ ர்ப்பாட்ட ஊர்வலங்கள் பரவலாக நடந்துள்ளன. நியூ யோர்க், வோஷிங்டன், லொஸ் ஏன்ஜலஸ் போன்ற முக்கிய நகரங்களில் இலட்சக்கணக்கான மக்கள் இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலங்களில் கலந்து கொண்டுள்ளார்கள்.

காலநிலை சீராக இல்லாத போதும் நியூ யோர்க்கில் நடந்த இராக் போருக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் 40,000 மக்கள் கலந்து கொண்டார்கள்.

அமெரிக்காவிற்கு வெளியில் பல அய்ரோப்பிய நாடுகளின் தலைநகரங்களிலும் பாரிய கண்டன ஆர்ப்பாட்டப் பேரணிகள் இடம்பெற்றன. இசுப்பானியா நாட்டின் தலைநகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் 100,000 மக்கள் கலந்து கொண்டார்கள்.

“எண்ணெய்க்குக் குருதி கொடுக்கோம் இரானில் போர் இல்லை”  (“ழே டிடழழன கழச ழடை. ழே றயச in ஐசயnஇ” )  “மேலதிகமாக ஒரு டொலர்தானும் இல்லை மேலதிகமாக ஒரு சாவும் இல்லை” (ழேவ ழநெ அழசந னழடடயசஇ nழைவ ழநெ அழசந னநயவா’) என ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊர்வலத்தில் முழங்கினார்கள். காங்கிரஸ் போருக்கு நிதி ஒதுக்கக் கூடாது, இராக் ஆக்கிரமிப்பு முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும், அமெரிக்கப் படையினர் இந்த ஆண்டு முடியும் முன்னர் நாடு திரும்ப வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒலி எழுப்பினார்கள்.

சிலர் ஆட்சித்தலைவர் யோர்ஜ் புஷ் மற்றும் துணை ஆட்சித்தலைவர் டிக் செனி போர்க்குற்த்துக்கு (றுயச ஊசiஅநள) நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேணடும் என்றும் இருவரது பதவிகளும் பறிக்கப்பட வேண்டும் என்றும் குரல் எழுப்பினார்கள்!

மக்களவை மற்றும் மேலவை இரண்டும் அமெரிக்க படையினர் இராக்கில் இருந்து திருப்பிக் கொள்ள வேண்டும் என்பது பற்றி சூடாக விவாதித்து வருகின்றன. ஆனால் மக்களாட்சிக் கட்சி உறுப்பினர்கள் இது தொடர்பாக கடைசிவரை உறுதியாக நிற்பார்களா என்ற அய்யம் பலரிடம் இருக்கிறது. மக்களாட்சி கட்சி உறுப்பினரில் பெரும்பாலோர் இராக் போருக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது ஆட்சித் தலைவர் பதவிக்குப் போட்டி போட முன்வந்திருக்கும் முன்னாள் ஆட்சித்தலைவர் பில் கிளின்டனின் துணைவியார் கிலாரி கிளின்டன் இதில் முக்கியமானவர்! தான் ஆட்சித்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் இராக்கில் அமெரிக்க படையினரை காலவரையின்றி நிறுத்தி வைக்கப் போவதாகச் சூளுரைத்துள்ளார்!

சென்ற கிழமை அமெரிக்க படையினரை மாச்சு 31, 2008 க்கு முன்னராகத் திருப்பிப் பெறவேண்டும் என்று மக்களாட்சிக் கட்சி மேலவையில் கொண்டுவந்த தீர்மானம் 50 – 48 என்ற வாக்கு வித்தியாசத்தில் நிறைவேறியது. இதன் அடிப்படையில் இராக் போருக்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டு வரைவுச் சட்டம் மேலவையில் கொண்டு வரப்படும் போது அது தோற்கடிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் வரைவுச் சட்டம் தோற்கடிக்கப்பட்டாலும் அது ஆட்சித்தலைவரின் கையைக் கட்டிப் போடுமா என்பது தெரியவில்லை.

இராக் போரை எதிர்க்கும் எதிர்ப்பாளர்கள் வலுவான காரணங்களை முன்வைக்கிறார்கள். இராக்கில் 3,200 அமெரிக்க படையினர் இதுவரை பலியாகி உள்ளனர். 33,000 படையினர் காயப்பட்டுள்ளனர்.

இராக் மக்களைப் பொறுத்தளவில் 100,000 பேர் இறந்துள்ளார்கள். இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நாட்டைவிட்டு வெளியேறி சிரியா (1.2 மில்லியன்) யோர்டான் (800,000) போன்ற நாடுகளில் புகலிடம் புகுந்துள்ளார்கள். உள்நாட்டில் 10 இலட்சம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளார்கள்.

யோர்ஜ் புஷ்சின் முதல் 5 ஆண்டு ஆட்சிக்கு அமோக ஆதரவு மக்கள் மத்தியிலும் நாடாளுமன்றத்திலும் இருந்தது. நாடாளுமன்றம் புஷ்சின் கட்சியான குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தது. இப்போது நிலைமை தலை கீழாகிவிட்டது.

இராக் போருக்கு எதிரான அலை நாடாளுமன்றத் தேர்தலில் மக்களாட்சிக் கட்சி மக்கள் அவையிலும் மேலவையிலும் பெரும்பான்மை பலம் பெறக் காரணமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

யோர்ஜ் புஷ் தனது 8 ஆண்டு ஆட்சியில் 6 ஆண்டை முடித்துவிட்டார். இன்னும் 2 ஆண்டுகளுக்கும் குறைவான காலமே அவருக்கு எஞ்சியிருக்கிறது. அதோடு அவரது கதை முடிவுக்கு வந்து விடும்.

இயல்பாக ஒரு ஆட்சித்தலைவரின் இரண்டாவது கட்ட ஆட்சி அதிகம் சோபிப்பது இல்லை. ஆட்சித்தலைவருக்கு பதவி விரைவில் முடியப் போகிறது என்ற பயம் தொத்திக் கொள்ளும். எனவே ஒரு நீண்ட கண்ணோட்டத்தோடு செயல்படுவதற்கு கால அவகாசம் அவருக்கு இருக்காது.

போதாக்குறைக்கு சென்ற ஆண்டு நடந்த தேர்தலில் யோர்ஜ் புஷ்சின் குடியரசுக் கட்சி தோல்வி அடைந்து விட்டது. அதற்கு முக்கிய காணரம் புஷ் இராக் மீது மேற்கொண்ட படையெடுப்பாகும். இப்போது கீழவை (மக்கள் அவை) மேலவை இரண்டும் மக்களாட்சிக் கட்சியின் கட்டுப்பாட்டுக்குள் போய்விட்டது.

இந்த அரசியல் மாற்றம் புஷ் ஒரு “நொண்டி வாத்து ஆட்சித்தலைவர்” (டுயஅந னரஉம pசநளனைநவெ) என்று எல்லோரும் பேசும் அளவுக்குக் கொண்டு சென்றுள்ளது.

இதனால்தான் 2009 ஆம் ஆண்டு நடக்க வேண்டிய தேர்தலுக்கு இப்போதே கட்சிகளும் கட்சி வேட்பாளர்களும் களம் இறங்கிவிட்டார்கள்!

இன்று தொலைக்காட்சியில் புஷ்சைப் பார்ப்பவர்கள் கடந்த ஆறு ஆண்டுகளில் மனிதர் பதினாறு அகவையைப் போக்கிவிட்டவர் போல் தெரிவதை அவதானிக்கத் தவற மாட்டார்கள்.

அமெரிக்கா இராக்கில் இருந்து 2008 ஆகஸ்ட் 31 க்குள் பின்வாங்க வேண்டும் என அமெரிக்க மக்கள் அவைத் தலைவி பெல்போசி (ஆள Pநடிழளi) சட்டவரவை முன்மொழிந்துள்ளார். ஆனால் அதற்கு முன்னரே (டிசெம்பர் 31, 2007) அமெரிக்க படைகள் பின்வாங்கப்பட வேண்டும் என வேறு பல உறுப்பினர்கள் நினைக்கிறார்கள்.

2003 ஆம் ஆண்டு இராக்கை அமெரிக்கா தாக்கியபோது அதற்கு ஆதரவாக அதற்கு 40 விழுக்காட்டினர் ஆதரவாக இருந்தனர். ஆனால் இன்று சிஎன்என் நடத்திய ஒரு கருத்துக் கணிப்பில் இராக் படையெடுப்புக்கு எதிரான கருத்து 60 விழுக்காட்டை எட்டியுள்ளது.

இராக்குக்கு மேலதிகமாக 124 பில்லியன் டொலர் நிதி ஒதுக்கீட்டை அமெரிக்க ஆட்சித்தலைவர் கேட்டுள்ளார். ஆனால் அமெரிக்க மக்கள் அவையில் பெரும்பான்மை பலம் கொண்ட மக்களாட்சிக் கட்சி அதனை எதிர்த்து வாக்களிக்க முயற்சி செய்து வருகிறது. இராக் போருக்கு மேலும் நிதி ஒதுக்குவது இராக்கை அமெரிக்க படை தொடர்ந்து ஆக்கிரமிக்கப்படுவதற்கு வழிகோலும் என்று மக்கள் அவை உறுப்பினர்கள் பலர் கருதுகிறார்கள்.

“படையினரது குடும்பங்களே பேசுங்கள்” (ஆடைசையல குயஅடைநைள ளுpநயம ழுரவ)  என்ற அமைப்புபின் நிறுவனர்களளில் ஒருவரான நான்சி லெஸ்சின் (யேnஉல டுநளளin) “ நாடாளுமன்றம் எப்படித் தொடர்ந்து சட்டத்துக்கு மாறான, அறத்துக்கு மாறான, வெல்லமுடியாத போருக்கு எமது பிள்ளைகளை அனுப்பி அவர்கள் கொல்லப்படுவதற்கு ஆதரவு வழங்கப் போகிறது” எனக் கடாவியுள்ளார்.

“யோர்ஜ் புஷ் இராக் போர்த் தந்திரத்தைப்பற்றி மறுசிந்தனை செய்வதற்கு நான்கு ஆண்டு போர், நான்கு ஆண்டு சாவுகள், ஆயிரக்காணக்கான அமெரிக்கர்கள் மற்றும் இராக்கி;யர் இறப்புக்கள் தேவைப்பட்டது எனக்குக் கவலை தருகிறது” என நியூ யோர்க் மக்களவை உறுப்பினர் சார்ல்ஸ் இறஞ்சல் (ஊhயசடநள சுயபெநட) நான்சி லெஸ்சிற்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். “மனச்சாட்சிக்குப்  போராடும் போராளிகளைக் கொண்ட உங்களது அமைப்பு மனித அழிவையும் வீண்பணச் செலவையும் ஏற்படுத்தியுள்ள இந்தப் போர் மிக விரைவில் முடிவுக்கு வரும் என நான் எதிர்பார்க்கிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சார்ல்ஸ் இறஞ்சல் எழுதியது போலவே வேறு சில உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்துக் கடிதம் எழுதியுள்ளார்கள்.

இராக் மக்கள்தான் தீவினை செய்தவர்கள். பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்கு உயிர் போகிறது என்பது போல் அவர்கள் நாளும் பொழுதும் 25, 50, 100 என்று செத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அமெரிக்காவின் வரலாறு எழுதப்படும் போது ஆட்சித்தலைவர் யோர்ஜ் புஷ் முன்னைய ஆட்சித்தலைவர்களோடு ஒப்பிடும் பொழுது அமெரிக்க நாட்டை ஒரு கொடிய போருக்கு இழுத்துச் சென்ற ஒரு போர் வெறியர் என்று வருணிக்கப்பட்டாலும் வியப்பேதும் இல்லை. அந்தளவு தூரம் புஷ் நாட்டு மக்களது வெறுப்பை தேடிக்கொண்டுள்ளார்.

ஆரிய இனத்தின் மேலாண்மையை நிலைநிறுத்த இரண்டாவது உலகப் போரைத் தொடக்கிப் பேரழிவுகளை ஏற்படுத்திய இட்லரோடு யோர்ஜ் புஷை ஒப்பிட முடியாவிட்டாலும் அவரின் தம்பி என்று இவரை அழைக்கலாம்! (உலகத்தமிழர் – மார்ச்சு 23 29)


குடுமியைத் தில்லிக்குக் கொடுத்துவிட்ட முதல்வர் கருணாநிதியால் எதைத்தான் சாதிக்க முடியும்?
நக்கீரன்
கொக்கு தலையில் வெண்ணெய் வைத்து அதைப் பிடிக்க நினைத்த புத்திசாலி போல தமிழக மீனவர்களை ஸ்ரீலங்கா கடற்படை தாக்கிக் கொல்வதில் இருந்து காப்பாற்ற தமிழ்நாட்டில் ஆளுக்கு ஆள் யோசனை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
சென்னையில் ஸ்ரீலங்கா தூதுவரது அலுவலகத்துக்கு முன்பாக தமிழக மீனவர்கள் மீது ஸ்ரீலங்கா கடற்படை நடத்தும் தாக்குதல்களைக் கண்டித்து ஆளும் கட்சியான திமுக மார்ச்சு 12 ஆம் நாள் ஒரு கண்டன ஊர்வலத்தை நடத்தியது. இந்தியா மற்றும் இலங்கைக் கிடையிலான கடற்பரப்பில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது ஸ்ரீலங்கா  கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதைக் கண்டித்தும் தமிழக மீனவர்கள்  தாக்கப்படுதல் கொல்லப்படுதல் தொடர்வதை இனியும் அனுமதிக்க முடியாது என்றும் ஊர்வலத்தில் வந்தவர்கள் முழக்கங்களை எழுப்பினார்கள்.
ஊர்வலத்திற்கு தமிழ்நாட்டின் மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி தலைமை தாங்கினார். தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் மகனும் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சருமான மு.க.ஸ்டாலின் உட்பட தமிழக அமைச்சர்கள் பெரும்பாலானவர்கள் இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். திமுக மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி ஸ்ரீலங்கா துணைத் தூதுவர் அம்சாவிடம் ஒரு விண்ணப்பத்தைக் கையளித்தார். அதனை வாங்கிக் கொண்ட துணைத் தூதுவர் தமிழக மீனவர்களை ஸ்ரீலங்கா கடற்படை தாக்கியதாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டுக்களை வன்மையாக மறுத்தார். ஸ்ரீலங்கா கடற்படை இந்திய கடல் எல்லைக்குள் நுழைவது கிடையாது என்று அடித்துச் சொன்னார்.
இந்த அம்சாதான் முல்லைத்தீவு செஞ்சோலை வளாகம் மீது ஸ்ரீலங்கா விமானக் குண்டுவீச்சில் 56 பள்ளிமாணவர்கள் இறந்த போதும் மறுத்தவர். குண்டு வீசப்பட்டது வி.புலிகளின் பயிற்சி முகாம் என்றும் இறந்தது வி.புலிகள் என்றும் வாய்கூசாமல் கூறினார். ஒரு சிங்களத் தூதுவர் பொய் சொல்வதைவிட ஒரு முஸ்லிம் பொய் சொன்னால் அது எடுபடும் என்ற நினைப்பில்தான் அம்சா என்பவரை சிங்கள அரசு துணைத்தூதுவராக நியமித்துள்ளது.
ஸ்ரீலங்கா துணைத் தூதுவரோடான சந்திப்பை அடுத்து மீனவர்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்க சிறிலங்கா அரசு தனது கடற்கலங்களில் இந்தியப் படையினரையும் இணைத்து காவல் நடவடிக்கையில் ஈடுபட சம்மதித்துள்ளதாக தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்ததார்.
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் இராமதாஸ் கச்சதீவை இந்தியா திரும்பப் பெற வேண்டும் என்று சொன்னார்.
விடுதலைச் சிறுத்தைகளது பொதுச் செயலாளர் திரு. தொல். திருமாவளவன் மார்ச்சு 6 ஆம் நாள் நடத்திய கண்டனக் கூட்டத்தில் பேசும் போது தமிழக மீனவர்கள் ஸ்ரீலங்கா கடற்படையால் தாக்கப்படுவதை இந்திய நடுவண் அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டார்.
திமுக, பாமக, மற்றும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழக மீனவர்கள் மீது ஸ்ரீலங்கா கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு ஸ்ரீலங்கா கடற்படை அத்து மீறுவதைத் தடுத்து நிறுத்த தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி;  5 பக்க முறைப்பாடு ஒன்றினை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் (மார்ச்சு 12) கொடுத்தனர்.
“தமிழக மீனவர்களை காப்பாற்ற, கச்சத்தீவை மீட்பது தான் ஒரே வழி’ என்று மக்களவையில்  பாமக  நாடாளுமன்ற உறுப்பினர் (புதுச்சேரி) வலியுறுத்தினார். “விடுதலைப் புலிகள் மீதுள்ள கோபத்தை இலங்கை அரசு தமிழக மீனவர்கள் மீது காட்டுவதைப் போலத் தோன்றுகிறது. இந்தப் பிரச்னையை தீர்ப்பதற்கு ஒரே வழி கச்சதீவை மீட்பது தான். இதுதான் தமிழக மீனவர்களை காப்பாற்றுவதற்கு ஒரு நிரந்தர தீர்வாக இருக்க முடியும். இலங்கைக்கு நல்லெண்ண அடிப்படையில் தான் கச்சதீவை இந்தியா கொடுத்தது” என்றார்.
தமிழக மீனவர்களைக் காக்கக் கடலில் கூட்டுக் காவல் என்ற சதித் திட்டத்தை இலங்கை அரசு முன்வைத்துள்ளது. இதை முளையிலேயே கிள்ளி எறிய முதல்வர் கருணாநிதி முனைய வேண்டும் எனத் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கூறினார்.
“இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதைத் தடுக்க இந்தியா மற்றும் இலங்கை கடற்படைகள் இணைந்து கூட்டு ரோந்து செல்லலாம், இது தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் என முதல்வர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார். இலங்கையின் வட கடல் பகுதியில் விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. இதை இலங்கை கடற்படையால் வெல்ல முடியவில்லை. எனவேதான் இந்திய கடற்படையை, விடுதலைப் புலிகளுடன் மோத விட்டு ஸ்ரீலங்கா அரசு  நழுவிக் கொள்ள முயலுகிறது. இலங்கை அரசின் இந்த சதித் திட்டத்தை முளையிலேயே கிள்ளி எறிய முனையாமல், அதற்கு ஆதரவு தரும் போக்கினை முதல்வர் கருணாநிதி கைவிட வேண்டும்” என்று கூறினார்.
தமிழகத்தில் தற்போது 45 ஆயிரம் கட்டுமரங்களும், 7 ஆயிரம் இயந்திரப் படகுகளும் பயனில் உள்ளன. இந்தப் படகுகள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லும்போது பல்வேறு சிக்கல்களைச் சந்திக்கின்றன.
புயல், சூறாவளி போன்ற இயற்கைச் சீற்றங்களாலும் எல்லை தாண்டிச் செல்லும் போது இலங்கை கடற்படையினரிடம் சிக்கி விடும் அபாயத்தையும் மீனவர்கள் சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. இதற்குத் தீர்வு காணும் வகையில் தமிழக மீனவர்களின் படகுகளில் 70 கோடி ரூபா செலவில் தந்தியில்லா (றசைநடநளள) கருவிகளைப் பொருத்த தமிழக அரசால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் இந்திய எல்லையைத் தாண்டிச் செல்ல நேரிடும்போது அதுகுறித்து மீனவர்களை எச்சரிக்கவும் இந்த வசதி உதவும்.
“தமிழக மீனவர்களை ஸ்ரீலங்கா கடற்படை சுட்டால் இந்திய கடற்படை திருப்பிச் சுடவேண்டும்” என்கிறார் திராவிட இயக்கப் பேரவையின் தலைவர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன். இதனை வலியுறுத்தி நாளை (வெள்ளிக்கிழமை) வள்ளுவர் கோட்டம் அருகே ஒரு ஆர்ப்பாட்ட பேரணி நடத்துகிறார்.
இந்த நிலையில் மீனவர் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தை தமிழக கூடுதல் டிஜிபி ஜெகன் மோகன் சேஷாத்ரி உள்ளிட்ட அதிகாரிகள் குழு மார்ச்சு 13 ஆம் நாள் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தியது. மார்ச்சு 14 ஆம் நாள் காலை இராமேஸ்வரம் மீனவர்களுடன் ஜெகன்மோகன் சேஷாத்ரி ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் சேஷாத்ரி பேசுகையில், தமிழக மீனவர்களின் படகுகளை எளிதில் அடையாளம் காண வசதியாக அனைத்துப் படகுகளுக்கும் ஒரே மாதிரியான வண்ணம் கொடுக்க முடிவு செய்யப்பட்டதாக அறிவித்தார். மேலும், கடலில் மீன் பிடிக்கச் செல்லும்போது தங்களது அடையாள அட்டை, படகுகளின் உரிமம் ஆகியவற்றை மீனவர்கள் தவறாமல் எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
நாகபட்டினம், இராமேஸ்வரம், இராமநாதபுரம் போன்ற இடங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த சில நாள்களாக பணிமறுப்புப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். எண்பது ஊர்களைச் சேர்ந்த மீனவர்கள் இந்தப் போராட்டத்தில் குதித்துள்ளார்கள். கிட்டத்தட்ட 9,000 மீன்பிடிப் படகுகள் முடங்கிக் கிடக்கின்றன.
“ஸ்ரீலங்கா கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் தமிழக மீனவர்களின் கைகள் வெறுமனே மீன்கள் மட்டும் பிடித்துக் கொண்டிருக்காது’ என முதல்வர் கருணாநிதி கடுமையாக எச்சரித்து (மார்ச்சு 5) ஒருகிழமை  கூட ஆகாத நிலையில் கச்சதீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது ஸ்ரீலங்கா கடற்படையினர் மார்ச்சு 9 ஆம் நாள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பாம்பனைச் சேர்ந்த கிறிஸ்தோபர் (35) குண்டு பாய்ந்து  பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இருவர் காயமடைந்தனர்.
இது ஒட்டக்கூத்தன் (முதல்வர் கருணாநிதி) பாட்டுக்கு ஸ்ரீலங்கா சிங்கள அரசு இரட்டைத் தாழ்;பாள் போட்டது போலாகிவிட்டது!
ஸ்ரீலங்கா மற்றம் இந்தியக் கடற்படைகளின் கூட்டுக் கண்காணிப்பை முதலில் வரவேற்ற தமிழக முதல்வர் இரண்டு நாள் கழித்து தனது முடிவை மாற்றிக் கொண்டார். “கூட்டு ரோந்து என்பது கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், நாம் நினைத்துப் பார்க்கும் சாதகமான விஷயத்தை விட பாதகம்தான் அதிகம் இருக்கும் என்று அனுபவ ரீதியாக உணரப்படுகிறது. எனவே தவளையும், எலியும் கூட்டுச் சேர்ந்து கால்களைக் கட்டிக் கொண்ட கதையாகி விடக்கூடாதே என்ற கவலையுடன் பலரும் இதை கருதுகிறார்கள்” என்றார். இந்த எதிர்ப்பையடுத்து “கூட்டு ரோந்து’ திட்டம் வெளிவந்த இரண்டு நாட்களுக்குள் மூடுவிழா கண்டு விட்டது.
இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் சண்டையிட்ட பட்டறிவு இருப்பதால், இந்தக் கருத்தையும் புறந்தள்ள  முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, ஆளும் கட்சி உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் கூட்டுக் கண்காணிப்புக்குத் தெரிவித்த ஆதரவை விலக்கிக் கொண்டனர். முதல்வர் கருணாநிதியும் தனது கருத்தை மாற்றிக் கொண்டார்.
ஆனால் முதல்வர் கருணாநிதிக்கு மேலும் சங்கடத்தைக் கொடுக்க விரும்பாத ஸ்ரீலங்கா அரசு கூட்டுக் கண்காணிப்புப் பற்றி அவர் கூறியது முற்றிலும் பொய்யானது என ஒரேயடியாகச் சொல்லிவிட்டது!
அது மட்டுமல்ல ஸ்ரீலங்கா கடற்படை எந்தக் காலத்திலும் எந்தக் கட்டத்திலும் இந்தியக் கடல் எல்லையைக் கடந்த தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியது கிடையாது என்றும்  கச்சதீவை அண்டி எந்தக் கடற்படைக் கப்பலும் சென்றது கிடையாது எனவும் சொல்லியது. மேலும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களை விடுதலைப் புலிகள்தான் செய்திருக்க வேண்டும் என்று சொல்லியது. அது தொடர்பாக நடத்தப்படும் எந்த விசாரணையிலும் தில்லி அரசோடு ஸ்ரீலங்கா ஒத்துழைக்கத் தயார் என்றும் தெரிவித்தது.
நல்லகாலமாக குறிப்பிட்ட மீனவர்கள் தாமாகவே தற்கொலை செய்து கொண்டார்கள் என்று ஸ்ரீலங்கா அரசு சொல்லாமல் விட்டு விட்டது! அதுவரை ஆறுதல் அடையலாம்.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படும் நிகழ்வுகள் தொடர்கதை போல் தொடர்வதையிட்டு மக்களவையில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்துப் பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரும் கேரளாவைச் சேர்ந்தவருமான ஏ.கே.அந்தோணி “இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையே நல்லுறவு நிலவுகிறது. எனவே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை சுட வேண்டிய காரணமோ, அவசியமோ இல்லை”  என்று ஸ்ரீலங்கா அரசுக்கு ஆதரவாகப் பேசினார்.
மேலும் பேசுகையில் “இது குறித்து ஸ்ரீலங்கா அரசுடன் மத்திய அரசு பேசியது. இதை மத்திய அரசு தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. கொழும்பில் உள்ள இந்தியத் தூதரக அலுவலகத்திற்கு இலங்கை பாதுகாப்பு அமைச்சர் இதுகுறித்து விவாதித்துள்ளார். இலங்கை அரசுக்குக் கிடைத்துள்ள தகவலின்படி அந்நாட்டு கடற்படை வீரர்கள் தமிழக மீனவர்களை சுடவில்லை என்று ஸ்ரீலங்கா அரசு கூறுகிறது. அது மட்டுமல்லாமல் விடுதலைப் புலிகள்தான் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஸ்ரீலங்கா அரசு கூறுகிறது. தமிழக மீனவர்களின் நலனைக் காக்க மத்திய அரசு தனது அதிகாரத்திற்குட்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்” எனப் பறைந்தார்.
இந்தியக் கடலில் தமிழக மீனவர்கள் மீது ஸ்ரீலங்கா படையினர் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த போது இலங்கைக்கான இந்திய தூதுவர் கொழும்பில் கிறிக்கட் ஆடிக் கொண்டிருந்தார் என்பது வேறு கதை.
தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது பற்றி மட்டும் அல்ல தமிழக உயர்நீதி மன்றத்தில் ஆங்கிலத்தோடு தமிழ்மொழி பயன்படுத்துவதற்கு ஒப்புதல் கேட்டு திமுக அரசு நடுவண் அரசுக்கு விடுத்த வேண்டுகோள் புறக்கணிக்கப்படடு விட்டது. இந்திய மாநிலங்களான பீகார், உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம் மற்றும் இராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இந்தி நீதிமன்ற மொழியாக இருக்கும் போது தமிழகத்தில் தமிழ்மொழி பயன்பாட்டுக்கு காங்கிரஸ் அரசு கைவிரித்திருப்பது வியப்பாக இருக்கிறது. வழக்கம் போல் முதல்வர் கருணாநிதி முடிவை மறு ஆய்வு செய்யுமாறு கடிதம் எழுதியுள்ளார். இந்திய அரச மொழிகள் சட்டத்தின் விதி 7 இன் கீழ் ஒரு மாநிலத்தின் ஆளுநர் ஆங்கிலத்தோடு இந்தி அல்லது அந்த மாநிலத்தின் அரசமொழி பயன்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மார்ச்சு மாதம் 13 ஆம் நாள் சென்னையில் கடல் சார் பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான சட்டவரைவை மக்களவையில் கப்பல்துறை அமைச்சர் டி.ஆர். பாலு கொண்டுவர முயன்றபோது அதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சண்டையில் ஈடுபட்டனர். அமைச்சர் பாலுவை நோக்கிப் பாய்ந்த அவர்கள் அவரது கையில் இருந்த சட்டவரைவைப்  பறித்துக் கிழிக்க முயன்றனர். இதையடுத்து திமுக மற்றும் தமிழகத்தைகச் சேர்ந்த நா.உறுப்பினர்கள் திரண்டு வந்து மார்க்சிஸ்ட் தோழர்களைத் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே பெரும் தள்ளுமுள்ளும், அடிதடியும் நடந்தது. இந்த நிகழ்வால் 6 முறை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
கொல்கத்தாவில் கடல் சார் பொறியியல் மற்றும் ஆய்வு நிலையம் தற்போது உள்ளது. இந்த நிலையில் கடல்சார் பல்கலைக்கழகம் ஒன்றை தமிழகத்தில் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதைத்தான் இந்திய தேசியம் அல்ல உலகளாவிய தேசியம் பேசும் தோழர்கள் எதிர்த்தார்கள்!
கடலில் மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் கொல்லப்படுகிறார்கள். அப்படிக் கொல்லும் ஸ்ரீலங்கா கடற்படைக்கு அரசுக்கு இந்தியா போர்க்கப்பலை அன்பளிப்பாகக் கொடுக்கிறது. வி.புலிகளைக் கண்காணிக்க படைத்துறை இரடார் கருவிகளை அன்பளிப்பாகக் கொடுக்கிறது. ஸ்ரீலங்கா வான்கடைக்கு பயிற்சி அளிக்கிறது.
கன்னடத்தில் தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள். கேரளத்தில் தமிழர்கள் உதைக்கப்படுகிறார்கள். வங்காளிகள் தமிழ் அமைச்சரை அடிக்கப் பாய்கிறார்கள். தமிழ்மொழியை நீதிமன்ற மொழியாக ஏற்றுக் கொள்ள இந்திக்காரன் மறுக்கிறான்.
இப்படி உதைப்பந்து போல் எல்லோரும் தமிழர்களை உதைக்கிறார்கள். என்ன காரணம்?
இந்திய அரசு இயந்திரம் இந்தி மொழி பேசுகின்ற உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், இராஜஸ்தான், பீகார், அரியாணா போன்ற அரசியல்வாதிகளது கையிலேயே இருக்கிறது. அவர்கள் இந்தியா என்றால் இந்திஸ்தான் என்றே நினைக்கிறார்கள். தமிழர்கள் தாக்கப்படுவது பற்றியோ கொல்லப்படுவது பற்றியோ அவர்களுக்குக் கவலை கிஞ்சி;த்தும் கிடையாது.
போதாக் குறைக்கு திராவிட நாடு கேட்டுப் போராடிய முதல்வர் கருணாநிதி “இந்திய நாட்டின் நலனைப் புறக்கணித்து விட்டு இலங்கைத் தமிழர் பிரச்சினையில், தமிழக அரசு நேரடியாக தலையிடாது. தேசப் பாதுகாப்பை விட்டு விட்டு, புறக்கணித்து விட்டு இலங்கைப் பிரச்சினையில் தமிழகம் நேரடியாகத் தலையிடும் என யாரும் கனவு கூட காண வேண்டாம்” என இந்திய தேசியம் பேசுகிறார்.
குடுமியை தில்லிக்குக் கொடுத்துவிட்ட முதல்வர் கருணாநிதியால் எதைத்தான் சாதிக்க முடியும் எனத் தமிழக மக்கள் நினைக்கிறார்கள்?    (உலகத்தமிழர் – மார்ச்சு 16,2007)


தமிழக மீனவர்களையாவது தமிழக முதல்வர் காப்பாற்ற வேண்டாமா?

நக்கீரன்

அண்மைக்காலமாக தமிழக மீனவர்கள் மீது ஸ்ரீலங்கா கடற்படை நடத்தும் கண்மூடித்தனமான தாக்குதல்கள் துப்பாக்கிச் சூட்டுக்கள் அதிகரித்து வருகின்றன.

பெப்ரவரி 14 இல் (2007)  நாகபட்டினம் கடற்கரைக்கு அப்பால் ஒன்பது இந்திய மீனவர்களை ஏற்றிச் சென்ற படகு மீது ஸ்ரீலங்கா கடற்படை துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியது. இதில் படகு பெரும் சேதமடைந்தது மட்டும் அல்லாமல் இலங்கைக் கடற்படையினர் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களைப் பறித்துச் சென்றுவிட்டனர்.

பெப்ரவரி 16 இல் அய்யம்பட்டினம் ஊரைச் சேர்ந்த மீனவர்களின் இரண்டு படகுகள் அழிக்கப்பட்டு அவர்களது வலைகளும் சேதப்படுத்தப்பட்டது. வழக்கம் போல்  அவர்கள் பிடித்திருந்த மீன்களை ஸ்ரீலங்கா கடற்படையினர் எடுத்துச் சென்றுவிட்டனர். அந்த மீனவர்கள் அனைவரும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கடலில் குதித்துத் தப்ப வேண்டியதாயிற்று.

பெப்ரவரி 24 இல் இராமநாதபுரம் மாவட்டதைச் சேர்ந்த அருள்தாஸ் மற்றும் மூன்று மீனவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டினம் கிராமக் கடற்கரைக்கு அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது ஸ்ரீலங்கா கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அருள்தாசிற்கு வலது முழங்காலில் காயம் ஏற்பட்டது.

அதே நாளன்று ஸ்ரீலங்கா கடற்படையினர் மேலும் 10 படகுகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தித் துரத்தியடித்தனர்.

பெப்ரவரி 26 இல் ஸ்ரீலங்கா இலங்கைக் கடற்படையினர் கலியபெருமாள், அஜீத்குமார் மற்றும் 5  பேர் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கலியபெருமாள் கொல்லப்பட்டார். அஜீத்குமார் காயமடைதார்.

தமிழக மீனவர்கள் ஸ்ரீலங்கா கடற்படை தொடர்ச்சியாக தாக்கப்பட்டும் கொல்லப்பட்டும் விரட்டியடிக்கப்பட்டும் வரும் அட்டூழியங்களைச் சுட்டிக் காட்டி தமிழக முதல்வர் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு ஒரு மடல் வரைந்துள்ளார். மடல் வரைவது இதுதான் முதல் தடவை அல்ல. மடல் எழுதுவதும், அவ்வப்போது வீரா வேசமாக வசனம் பேசுவதும் பின்னர் அதனை மறந்து விடுவதும் அவருக்கு வாடிக்கையாகப் போய்விட்டது.
“அத்து மீறி நுழைந்தால் கைது செய்வதுதானே? சுடச் சொல்லி எந்தச் சட்டம் சொல்கிறது? ஸ்ரீலங்கா அரசு தமிழகத்தின் பொறுமையைச் சோதிக்கிறது, இப்படியான கொலைகள் தொடர்ந்து இடம்பெற்றால் விளைவுகள் பாரதூரமாக இருக்கும் என்று மனோகரா பாணியில் முதல்வர் கருணாநிதி முன்னரும் படதடவை பேசியும் எழுதியும் வந்திருக்கிறார்.
முதல்வர் கருணாநிதிக்கு சூடு சொரணை இருக்குதோ இல்லையோ இப்படித் தமிழக மீனவர்கள் நடுக்கடலில் வைத்து ஸ்ரீலங்காவின் சிங்களக் கடற்படையினரால் காக்கை குருவிபோல் சுடப்பட்டு கொலைசெய்யப் படுவதைப் பார்க்க உலகளாவிய தமிழர்களுக்கு அவமானமாக இருக்கிறது. தலைக் குனிவாக இருக்கிறது.
ஸ்ரீலங்கா ஒரு சுண்டக்காய் நாடு. விடுதலைப் புலிகளிடமே ஸ்ரீலங்காவின் கடற்படை அடிவாங்கி வருகிறது. ஆனால் நூறு கோடி மக்களைக் கொண்டதும் உலகத்தின் 4 ஆவது பெரிய இராணுவத்தையும் உடைய இந்தியாவின் பெருங்குடி மக்கள் ஸ்ரீலங்காவின் கடற்படையினரால் கேட்டுக் கேள்வியின்றிச் சுட்டுத் தள்ளப்படுகிறார்கள்!
இம்முறை “இந்தக்கொடுமை பற்றி இந்தியப் பிரதமருக்கு பலமுறை கடிதங்கள் தமிழக அரசின் சார்பில் எழுதி விட்டோம். திரும்பத் திரும்ப தமிழக மீனவர்களைத் தாக்கும் செயல் நடைபெறுமேயானால், தமிழனுடைய கை அந்தக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் என்று மாத்திரம் கருத வேண்டாம்” எனத் தனது கடிதத்தில் முதல்வர் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

“திரும்பத் திரும்ப தமிழக மீனவர்களைத் தாக்கும் செயல் நடைபெறுமேயானால், தமிழனுடைய கை அந்தக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்குமென்று மாத்திரம் கருத வேண்டாம்” என முதல்வர் கருணாநிதி மனோகரா பாணியில் வீரம் கொப்பளிக்க மடல் வரைந்துள்ளார் என யாரும் மகிழ வேண்டாம்!

அதென்ன மனோகரா பராசக்தி பாணி என இளந்தலைமுறையினர் கடாவலாம்.  வேறொன்றும் இல்லை. கலைஞர் கருணாநிதி மனோகரா பராசக்தி போன்ற திரைப்படங்களில் அனல் தெறிக்கும் உரையாடலை எழுதியிருக்கிறார். அதை நடிகை சிவாஜி கணேசன் நடிகை கண்ணாம்பா போன்றோர் மூச்சு விடாமல் கனல் தெறிக்கப் பேசுவார்கள்!

என் அருமைச் செல்வமே! உன் தந்தையின் நன்மைக்குத்தான் உன் வீரக்கரங்களைக் கட்டிப் போட்டேன்!
இந்த விசமக்காரி முன் சிரம் தாழ்த்தி நின்றேன்! யாருக்காக?
பொறுமை பொறுமை என்று சொல்லி வந்தேனே அவரையே சிiறியில் போட்ட பிறகு பொறுமைக்கு எங்கிருக்கிறது பெருமை?
என் அருமை மனோகரா பொறுத்தது போதும்! பொங்கி எழு!
தாயின் ஆணை கிடைத்து விட்டது! புறப்படு மனோகரா புறப்படு!
மகாராசா எங்களுடைய குடும்பம் எப்படிச் சீரழிந்து விட்டது என்பதைப் பார்த்தீர்களா?
கட்டுண்டு தவிக்கும் மனோகரனைப் பாருங்கள் மகாராசா?
ஹா! …..ஹா! …ஹா!
ஏன் சிரிக்கிறீர்கள்? செவ்வாழைத் தோட்டத்தில் குதித்தாடும் குரங்குகளே! மானிட உருவில் வந்து இந்த மண்ணை வளைக்க வந்த மாபாபிகளே!
இப்படிச் சிரித்தவர்கள் வாழ்ந்ததில்லை! அழுதவர்கள் கெட்டதில்லை! என்று ஜெகம் சொல்லும் மந்திரத்தை மறந்து விட்டீர்களா? செப்படி வித்தையால் செங்கோலை முறியடிக்க வந்த சிறுநரிக் கூட்டமே!
கண்ணீரின் மகிமையை உணர முடியாத கயவர் கும்பலே!
மனோகராவில் நடிகை கண்ணாம்பாவின் நீண்ட முழக்கத்தின் ஒரு பகுதியைத்தான் நினைவுப் பெட்டகத்தில் இருந்து மீட்டுத் தந்திருக்கிறேன்.
“தமிழனுடைய கை அந்தக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்குமென்று மாத்திரம் கருத வேண்டாம்” என்று முதல்வர் கருணாநிதி எழுதியதை வைத்துக் கொண்டு இனிமேல் தமிழக மீனவர்கள் ஸ்ரீலங்கா கடற்படைக்கு எதிராக தங்கள் கையில் துப்பாக்கி ஏந்தப் போகிறார்கள் என்று நீங்கள் முடிவு கட்டினால் அது உங்களுடைய பிழை! நானுந்தான் கடிதத்தைப் படித்துவிட்டு முதலில் குழம்பிப் போனேன்!

துப்பாக்கியாவது கத்தரிக்காயாவது. முதல்வர் கருணாநிதிக்கு புறநானூற்று வீரம் பிடிக்கும். அதற்கு விரிவுரை பொழிப்புரை எல்லாம் எழுதத் தெரியும். ஆனால் உண்மையான வீரம் பிடிக்காது! அவர்  சொன்னது என்னவென்றால் இனித் தமிழனுடைய கை அந்தக் கடலில் மீன் பிடிக்காது என்பதுதான்!

கடலில் மீன் பிடிக்காவிட்டால் யாருடைய வயிறு காயும்? அதே ஏழை மீனவர்களது வயிறுதான்!
இவ்வாறு நடுக்கடலில் தமிழக மீனவர்கள் நடாத்தும் தாக்குதல்கள், கொலைகள்பற்றி இந்திய கடலோரக் கடற்படை கண்டுகொள்வதில்லை. வி.புலிகள் இந்தியாவிற்குள் ஊடுருவுகிறார்கள் என்று சொல்லிக் கொண்டு கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்தியக் கடலோரக் கடற்படை ஸ்ரீலங்கா கடற்படை இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தமிழக மீனவர்களைத் தாக்குவதை ஒருமுறைதானும் தடுத்ததில்லை! காரணம் அது இந்தியப் படை அல்ல இந்திப் படை!
கொழும்பில் இருக்கும் இந்தியத் தூதுவர் கவலைப்படுவதோ கண்டுகொள்வதோ இல்லை.
தில்லி அரசோ முற்றாகக் கண்டு கொள்வதில்லை. சாதாரணமாகவே தமிழர்கள் என்றாலே வடக்கில் இருக்கும் இந்திக்காரனுக்கு இளப்பம் அதிகம். அதிலும் சாகிறவர்கள் தமிழர்கள் அதிலும் சமூக ஏணியின் அடிமட்டத்தில் வாழும் வசதி வாய்ப்பற்ற வறிய மீனவர்கள் என்றால் தில்லியில் இருப்பவர்கள் ஏன் ஏறெடுத்துப் பார்க்கப் போகிறார்கள்?
தமிழக மீனவர்கள் எல்லை மீறி இலங்கைக் கடற்பரப்புக்குள் புகுந்தார்கள் என ஸ்ரீலங்கா அரசு சொல்கிறது. இந்தியக் கடல் எல்லைக்குள் புகுந்து தாக்குவததை அது ஒத்துக் கொள்வதில்லை. சரி, எல்லை மீறி வந்தார்கள் என்று சொன்னால் முதல்வர் கருணாநிதி கேட்பதுபோல் அவர்களைக் கைது செய்வதுதானே? அவர்களை காகம் குருவி சுடுவதைப்போல் சுட்டுக் கொல்ல எந்த நாட்டுச் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது?
இந்தக் கொலைத் தாக்குதல்களுக்கு எதிராக வேலை நிறுத்தம், உண்ணாவிரதப் போராட்டம், சாலை மறியல் எனப் போராட்டங்கள் நடாத்தி இராமேசுவரம், நாகபட்டினம், வேதாரண்யம் போன்ற கடலோர மீனவர்கள் களைத்தே போனார்கள். அவ்வப்போது ஆட்சியாளர்களாலும் அதிகாரிகளாலும் உறுதி மொழிகள் சில வழங்கப்பட்டாலும் அந்த உறதி மொழிகள் பின்னர் காப்பாற்றப்படுவதில்லை. காற்றோடு கலந்துவிடும்.
இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு கடந்த 21 ஆண்டுகளில் 112 தமிழக மீனவர்கள் பலியாகி இருக்கிறார்கள். 896 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். நூற்றுக்கணக்கான படகுகள் நாசமாக்கப்பட்டுள்ளன. கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான வலைகள் மீன்பிடி உபகரணங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதனை இந்திய அரசே ஒப்புக் கொண்டிருக்கிறது.
கச்சதீவு இராமேசுவரத்தில் இருந்து 12 மைல் தொலைவிலும், தமிழீழத்தில் இருந்து 13 மைல் தொலைவிலும் இருக்கிறது. கிழக்கு மேற்காக ஒரு மைல் தூரமும் வடக்குத் தெற்காக அரை மைல் தூரமும் கொண்டது. ஆனால் அதன் சிறப்பு அதனை அண்டிய கடற்பகுதி நிறைய மீன்வளம் கொண்டதாக உள்ளது.
கச்சதீவு கைமாறியதால் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்வதற்கு 13 கடல் மைல் தொலைவு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 9 கடல் மைல் தொலைவு பாறைகள் மட்டும்தான் இருக்கிறது. மீதம் இருக்கும் 4 கடல்மைல் தொலைவில் உள்ள கடல்பகுதியில்தான் தமிழக மீனவர்கள் மீன் பிடித்து வருகிறார்கள். அதற்கு அப்பால் 5 கடல் மைல் தொலைவில் உள்ள கச்சதீவுப் பகுதியில்தான் இறால் மற்றும் மீன் அதிகளவில் கிடைக்கின்றன. மீன் பிடிப்பதற்காக அந்த பகுதிக்குச் செல்லும் மீனவர்கள் மீதுதான் பெரும்பாலும் ஸ்ரீலங்கா கடற்படயினர் துப்பாக்கிச் சூடு நடத்திப் படுகொலை செய்கிறார்கள்.
1974 ஆம் ஆண்டு எழுதிக்கொண்ட உடன்படிக்கையின்படி கச்சதீவு ஸ்ரீலங்காவிற்கு இந்திரா காந்தி அம்மையாரால் தாரை வார்க்கப்பட்டாலும் அதனை அண்டிய பகுதியில் தமிழக மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடிக்க அனுமதிக்கப்படுவர் என்று விதி அந்த உடன்படிக்கையில் காணப்பட்டது. மீனவர்கள் மட்டுமல்ல தமிழக யாத்திரியர்களும் செல்லலாம் என்று சொல்லப்பட்டது. ஆனால் அந்த விதி ஸ்ரீலங்கா அரசு கேட்டுக் கொண்டதின் பேரில் பின்னர் நீக்கப்பட்டு விட்டது.
1976 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஒப்பந்தத்தின்படி கச்சதீவுப் பகுதிக்கு தமிழக மீனவர்கள் செல்லக்கூடாது, மீன்பிடிக்கவும் கூடாது, கச்சதீவு அந்தோனியார் திருவிழாவிற்கு யாத்திரியர்கள் போகக் கூடாது என இந்திய அரசு அறிவித்தது. அப்போது தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி நடந்து கொண்டிருந்தது.
கச்சதீவு ஸ்ரீலங்காவிற்கு கையளிக்கப்பட்டதை அப்போது ஆட்சியில் இருந்த தி.மு.க எதிர்த்தது. முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி அனைத்துக் கட்சியையும் கூட்டி தமிழகத்தின் எதிர்ப்பை நடுவண் அரசுக்குத் தெரிவித்தார். ஆனால் அந்த எதிர்ப்பை இந்திரா காந்தியோ அவரது காங்கிரஸ் அரசசோ சட்டை செய்யவே இல்லை.
1990 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த ஜெயலலிதாவின் அதிமுக அரசு “தமிழக மீனவர்களின் நலனைக் காக்க கச்சதீவை மீட்போம்” என்ற முழகத்தை முன்வைத்தது. 1991 ஆம் ஆண்டு ஆடி மாதம் 14 ஆம் நாள் கோட்டையில் கொடியை ஏற்றிவைத்து விட்டுப் பேசிய முதல்வர் ஜெயலலிதா கச்சதீவை என்ன விலைகொடுத்தும் மீட்கப் போவதாகச் சூளுரைத்தார்.
1991 ஆம் ஆண்டு ஐப்பசி 4 ஆம் நாள் தமிழக சட்டமன்றத்தில் கச்சதீவை ஸ்ரீலங்காவிடம் இருந்து மீட்கக் கோரும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆனால் நடைமுறையில் ஒன்றுமே உருப்படியாக நடைபெறவில்லை. தில்லி அந்தத் தீர்மானத்தைக் குப்பைக் கூடைக்குள் போட்டுவிட்டது.
கலைஞர் கருணாநிதி பதவி இழந்து எதிர்கட்சி இருக்கைகளில் இருக்க நேரிட்டபோது கச்சதீவை மீட்கும் போராட்டம்பற்றி அவ்வப்போது அறிவித்தார். ஆனால் மீண்டும் ஆட்சிக்கு வந்தபின்னர் கச்சதீவுச் சிக்கலைக் கலைஞர் கருணாநிதி முற்றாகக் கிடப்பில் போட்டு விடுவார். இதுதான் தமிழனுக்குச் சொந்தமான கச்சதீவு சிங்களவனது தீவாக மாறிப்போன சோகக் கதை.
கச்சதீவை ஸ்ரீலங்காவிடம் இருந்து மீட்கும்வரை இராமநாதபுரம், நாகபட்டினம், வேதாரணியம் போன்ற பகுதிகளில் வாழும் இலட்சக்கணக்கான மீனவர்களுக்கு பாக்கு நீரணையில் பாதுகாப்பு அடியோடு இல்லை.
தமிழக மீனவர்களுக்கு மட்டுமல்ல கருநாடக – கேரள மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கும் பாதுகாப்பு இல்லை. பங்களுர் தெருக்களில் தமிழர்கள் தமிழ் பேச முடியாது. அங்குள்ள திரையரங்குகளில் தமிழ்த் திரைப்படங்களைக் காட்ட முடியாது. கன்னட வெறியர்கள் திரைப்பட அரங்குகளுக்குத் தீ வைத்துக் கொளுத்துகிறார்கள். தமிழர்களுக்குச் சொந்தமான வாகனங்கள் சேதப்படுத்தப்படுகின்றன. இதில் சமூகவிரோதிகள் மட்டுமல்ல அரசியல்வாதிகளும் ஈடுபடுகிறார்கள். முன்னாள் கன்னட நடிகை சரோஜாதேவி ஆர்ப்பாட்டப் பேரணிகளுக்கு தலைமை தாங்குகிறார். அவர்களில் யாரும் இந்திய தேசியம் பற்றிப் பேசுவதில்லை. அது பற்றிக் கவலைப்படுவதாகவும் தெரியவில்லை. தங்கள் இனநலனுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று மேடை தோறும் முழங்கும் தமிழர்கள் கன்னட சுப்பர் ஸ்டார் ரஜினி நடித்த சிவாஜி படம் எப்பவரும் என்று வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கிறார்கள்!
தமிழக முதல்வர் கருணாநிதி தமிழர்களுக்கு எதிராக இன அடிப்படையில் நடத்தப்படும் தாக்குதல்கள் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்ல இந்திய தேசியத்துக்கு மற்ற எவரையும் விட சாமரை வீசுகிறார்.
“நாட்டின் நலனைப் புறக்கணித்து விட்டு இலங்கைத் தமிழர் பிரச்சினையில், தமிழக அரசு நேரடியாகத் தலையிடாது. தேசப் பாதுகாப்பை விட்டு விட்டு, புறக்கணித்து விட்டு இலங்கைப் பிரச்சினையில் தமிழகம் நேரடியாகத் தலையிடும் என யாரும் கனவு கூடக் காண வேண்டாம்” எனத் தமிழ் உணர்வாளர்களையும் தமிழ் தேசியவாதிகளையும் எச்சரிக்கிறார்.
மெத்தச் சரி. இலங்கைத் தமிழர் சிக்கலில் தமிழக அரசு தலையிட வேண்டாம். குறைந்த பட்சம் ஸ்ரீலங்கா கடற்படையால் தாக்கப்பட்டும் கொல்லப்பட்டும் வரும் தமிழக மீனவர்களையாவது இந்திய நாட்டு நலனுக்காக ஸ்ரீலங்கா கடற்படையிடம் இருந்து தமிழக முதல்வர் காப்பாற்ற வேண்டாமா? (உலகத்தமிழர் – மார்ச்சு 09, 2007


முதல்வர் கருணாநிதி வைகுண்டம் காட்டுவார் என்று யாரும் கனவு காண வேண்டாம்!

பிரதமர் மன்மோகன் சிங் முதல்வர் கருணாநிதியின் காதில் பூ வைக்கிறாரா? அல்லது மன்மோகன் சிங் கருணாநிதி இருவரும் சேர்ந்து எங்களது காதில் பூ வைக்கிறார்களா?

இலங்கையின் இறைமை மற்றும் ஆடபுல ஒற்றுமைக்கு ஊறு நேராதவகையில் ஒன்றுபட்ட நாட்டில் தமிழ் மக்கள் உரிமைகளோடு வாழ இந்தியா தொடர்ந்து ஸ்ரீலங்கா அரசை வற்புறுத்தும் என்பதே இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையாகும்.

மேலும் ஸ்ரீலங்காவோடு இந்தியா எந்தவித பாதுகாப்பு உடன்பாடும் செய்து கொள்ளாது. அழிவு ஆயுதங்களையும் விற்பனை செய்யாது என்ற உறுதி மொழியும் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் தமிழகத் தலைவர்களுக்கு அளிக்கப்பட்டது.

இலங்கை சிக்கல் குறித்து தமிழக முதல்வர் கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங் அவருக்கு எழுதிய கடிதத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட அப்பாவித் தமிழர்கள் பலியாகி வருவது குறித்து கவலை தெரிவித்து இது தொடர்பாக மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.

தமிழக முதல்வரின் மடலுக்கு கடந்த சனவரி 3 ஆம் திகதி; பிரதமர் மன்மோகன் சிங் எழுதிய பதில் பின்வருமாறு அமைந்திருந்தது.

“இலங்கையில் ஏற்பட்டு உள்ள சிக்கல் குறித்து தாங்கள் எழுதியுள்ள கடிதத்தை என் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளேன். இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள வன்முறை, குறிப்பாக பொதுமக்கள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்கள், இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற நிலைமை மத்திய அரசுக்கு ஆழ்ந்த வருத்தத்தையும், கவலையையும் ஏற்படுத்தி இருக்கிறது என்பதை இச்சந்தர்ப்பத்தில் தங்களுக்கு மீண்டும் உறுதிப்படுத்த நான் விரும்புகிறேன்.

தமிழ்ச் சமுதாயம் தொடர்ந்து இலங்கையில் சந்தித்து வரும் துயரச் சம்பவங்களுக்கு யார் காரணமாக இருந்தாலும் நாம் அவர்களை ஆதரிக்க முடியாது. இலங்கையில் ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு அமைதியான பேச்சு வார்த்தையின் மூலமே தீர்வு காணவேண்டும் என்கிற மத்திய அரசின் நிலை தொடர்கிறது. அதில் எவ்வித மாற்றமும் இல்லை.

வன்முறையால் அப்பாவிப் பொதுமக்களுக்கு ஏற்பட்டு உள்ள பாதுகாப்பற்ற நிலைமைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைத்திட இலங்கையிலுள்ள அனைத்துத் தரப்பினரும் முன் வரவேண்டுமென மத்திய அரசு வலியுறுத்த விரும்புகிறது.”

ஆளும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவி Nசுhனியா காந்திக்கு முதல்வர் கருணாநிதி எழுதிய கடிதத்துக்கும் இதே கருத்துப்பட பதில் எழுதப்பட்டிருந்தது.

ஆனால் இந்தியா கடந்த பெப்ரவரி மாதக் கடைசியில் வராக (ஏயசயாய) என்ற பாரிய கடலோரக் கண்காணிப்புப் போர்க் கப்பலை (ஐனெயைn ஊழயளவ புரயசன எநளளநட) ஸ்ரீலங்காவிற்கு அன்பளிப்பாக வழங்கியிருக்கிறது.
சிறிலங்கா கடற்படையின் 3 ஆவது பெரிய கப்பலாக இந்த வராக போர்க்கப்பல் விளங்கும். இதற்கு முன்னரும் (2000) இந்தியா இதே போன்ற சயூரா வகை கடல் கண்காணிப்புக் கப்பலை வழங்கி இருந்தது நினைவிருக்கலாம்.

இப்படி இந்தியா ஒரு பாரிய போர்க் கப்பலை ஸ்ரீலங்காவிற்கு வழங்கி இருப்பது ஒரு புறம் முயல்களோடு (தமிழர்கள்) ஓடிக்கொண்டு மறுபுறம் நாய்களோடு (சிங்களவர்கள்) சேர்ந்து வேட்டையாடுகிறதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
இது இவ்வாறிருக்க முதல்வர் கருணாநிதி அண்மையில் வி.புலிகளைச் சாடியும் வி.புலி ஆதரவாளர்களை எச்சரித்தும் இந்திய நலனே தனது நலனென்றும் விடுத்துள்ள அறிக்கை அவர் இலங்கைத் தமிழர் நலனில் உண்மையான – உளப்பூர்வமான – அக்கறை கொண்டுள்ளாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

சென்ற கிழமை கோவை பல்கலைக் கழகம் முதல்வர் கருணாநிதிக்கு பாரதியார் இலக்கியச் செம்மல் பட்டம் வழங்கி மேன்மைப்படுத்தி இருந்தது.

பாரதியார் அக்கிரகாரத்தில் பிறந்தாலும் தன்னைக் கடைசிவரை ஒரு பச்சைத் தமிழனாகவே நினைத்துக் கொண்டவர். தமிழ் மீதும் தமிழ் இனத்தின் மீதும் மாளாத காதல் கொண்டவர். தமிழ்த் தாய்க்கு வாழ்த்துப் பாடிய முதல் கவிஞர். தமிழ்த் தேசியத்துக்கு பள்ளியெழுச்சி; பாடிய முதல் பாவலன்.

“பூமிப்பந்தின் கீழ்ப்புறத்துள்ள பற்பல தீவிலும் பரவி இவ்வெளிய தமிச்சாத்p தடியுதை யுண்டும் காலுதை யுண்டும் கயிற்றடி யுண்டும் வருந்திடுஞ் செய்தி கேட்டு “விதியே விதியே என் தமிச்சாதியை என் செய நினைத்தாய் எனக்குரையாயோ?” என நொந்து பாடியவர். இவற்றையெல்லாம் முதல்வர் கருணாநிதி அறியாதவர் அல்ல. நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார்.

அண்மைக் காலமாக தமிழீழத் தமிழர்களுக்கு ஆதரவாக முதல்வர் குரல் கொடுத்து வருவதைக் கண்டு பூரித்துப் போன தமிழர்கள் இருக்கிறார்கள்.

சென்று ஆண்டு திராவிடர் கழகத் தலைவர் க. வீரமணி அவர்கள் தலைமையில் நடந்த தமிழீழ பாதுகாப்புக் கூட்டத்தில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக மற்றும் பாமக கட்சித் தலைவர்கள்; தெரிவித்த கருத்தே தனது கருத்து என்று சொல்லியிருந்தார்.

இலங்கையில் மலையகத்தில் வாழும் தமிழர்களும் விடுதலைப் புலிகளும் ஒன்று சேருவதை வறவேற்பதாக மலையக மக்கள் முன்னணி தலைவர் பெரியசாமி சந்திரசேகரன் அவர்களை சென்னையில் சந்தி;த்த பின்னர் தெரிவித்தார்.

முதல்வர் கருணாநிதி கொழும்பில் இருந்து வெளியாகும் தினக்குரல் நாளேட்டுக்கு அளித்த செவ்வியில் பின்வருமாறு கூறியிருந்தார்.

“இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு போதும் துரோகியாக மாட்டேன். இலங்கையில் அமைதி நிலையை ஏற்படுத்துவதற்கு இந்தியா காத்திரமான நடவடிக்கை எடுக்கவேண்டுமென மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம். தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள்
தொடர இடமளிக்கப்படக் கூடாதென்பதை தமிழகம் வலியுறுத்தும் எனவும் இலங்கையில் போர் ஓய்ந்து அமைதி திரும்பவேண்டும். அங்குள்ள மக்கள் ஒற்றுமையாகவும், நிம்மதியாகவும் வாழ வேண்டுமென்பதே எனது எதிர்பார்ப்பாகும்.

ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கோ, விடுதலைப் புலிகளுக்கோ திமுக அரசோ நானோ ஒரு போதும் எதிரிகளல்ல. இலங்கையில் தமிழ் மக்கள் நிம்மதியாகவும் சுபிட்சமாகவும் வாழ்வதைக் காண ஆசைப்படுகின்றேன். அந்த மண்ணில் சமாதானம் விரைவில் மலர வேண்டுமென்று எதிர்பார்க்கின்றேன்.”

சொல்வதோடு நில்லாமல் தமிழ்மக்களுக்கு நியாயம் வழங்க நடுவண் அரசு எல்லாவித நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் தமிழர்கள் சிங்கள இனவாதப் படையினரால் கொல்லப்படுவதைக் கண்டித்தும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் நாள் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார்.

தமிழ்த் தேசியக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை தில்லியில் நேரில் கண்டுபேச முதல்வர் கருணாநிதி ஏற்பாடு செய்து கொடுத்தார்.

மிக விரைவில் தமிழர்களுக்கு ஒரு நியாமான தீர்வு கிடைக்கும் என்று கூடச் சொன்னார்.

இந்தப் பின்னணியில் முதல்வர் கருணாநிதி திமுக முரசொலி ஏட்டில் உடன்பிறப்புக்களுக்கு எழுதிய மடலில் காணப்பட்ட சில கருத்துக்கள் தமிழீழ மக்களுக்கு ஏமாற்றத்தையும் கவலையையும் அளித்திருக்கிறது. அதுமட்டுமல்ல “இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு போதும் துரோகியாக மாட்டேன்” என்று உறுதி மொழியைiயும் அய்யத்துள்ளாக்கியுள்ளது.

“தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆயுதங்களை கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.

தடைபட்ட வி.புலிகளுக்கு எந்த அமைப்பாவது அல்லது கட்சிகளாவது ஆதரவு நல்கினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.

நாட்டின் நலனைப் புறக்கணித்து விட்டு இலங்கைத் தமிழர் பிரச்சினையில், தமிழக அரசு நேரடியாக தலையிடாது. தேசப் பாதுகாப்பை விட்டு விட்டு, புறக்கணித்து விட்டு இலங்கைப் பிரச்சினையில் தமிழகம் நேரடியாகத் தலையிடும் என யாரும் கனவு கூட காண வேண்டாம்” என அந்த மடலில் எழுதப்பட்டுள்ளது.

இப்படிக் காட்டமாக எழுதியதைப் படித்தவர்கள் எழுதியது அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவாக இருக்குமோ என ஒரு கணம் நினைத்திருப்பார்கள். .

கொழும்பில் மருதானையில் பஞ்சிகாவத்தை என்ற பெரிய வீதி இருக்கின்றது. அந்த வீதி நெடுகிலும் உந்து உதிரிப்பாகக் கடைகள் ஏராளம் இருக்கின்றன. இங்கு அலுமினியத் துண்டுகள், உருளைகள் (டியடட-டிநயசiபௌ) மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனையாகின்றன. இவை இந்தியா உட்பட பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்தோ அல்லது கடத்திக் கொண்டோ வரப்பட்டவை ஆகும். எனவே அவற்றைத் தமிழ்நாட்டில் இருந்து கடத்த வேண்டிய அவசியம் வி.புலிகளுக்கு இல்லை.

விடுதலைப் புலிகளைப் பற்றி இட்டுக்கட்டி இல்லாததும் பொல்லாததும் சொல்வதையும் எழுதுவதையும் பார்ப்பனர்களும் பார்ப்பன ஏடுகளும் ஒரு தெய்வீகக் கோட்பாடகவே வைத்திருக்கிறன்றன. அப்படி எழுதாவிட்டால் அவர்களுக்குப் பத்தியப்படாது. பொழுதும் விடியாது.

குறிப்hக சுப்பிரமணியம் சுவாமி, ஜெயலலிதா ‘துக்ளக் சோ, தினமலர் கிருஷ்ணமூர்த்தி, இந்து இராம் போன்றோர் விடுதலைப் புலிகளுக்கு எதிராக எப்போதும் பகைமை பாராட்டி வருகிறார்கள்.

சில ஆயுதங்களோடு வி.புலிகளின் படகு இந்திய கடல் எல்லைக்குள் வைத்துப் பிடிக்கப்பட்டது வி.புலிகளது எதிர்ப்பாளர்களுக்கு அவல் சாப்பிட்டது போல் ஆகிவிட்டது.

ஜெயலலிதா வி. புலிகள் தமிழ்நாட்டில் ஊடுருவி விட்டார்கள் என்று அறிக்கை விட்டார். அரசியல் கோமாளி சுப்பிரமணியன் சுவாமியைக் கேட்கவா வேண்டும்? அவரும் அறிக்கை விட்டு தனது அரிப்பைத் தீர்த்துக் கொண்டுவிட்டார். இந்து இராம் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாகத் தலையங்கம் தீட்டினார்.

துரும்பைத் தூணாக்கிக் காட்டும் தமிழினத்தின் பரம்பரை எதிரிகளான ஜெயலலிதா, அரசியல் கோமாளி சுப்பிரமணியம் சுவாமி, இந்து இராம் ஆகியோரது அறிக்கைகள், தலையங்கள், செய்திகளைப் படித்து அவற்றின் அடிப்படையில் முதல்வர் கருணாநிதி மடல் தீட்டியுள்ளார். தமிழ்ப் பகைவர்கள் அப்படித்தான் பேசுவார்கள். அப்படித்தான் எழுதுவார்கள். என்பது முதல்வர் கருணாநிதிக்குத் தெரியாமல் போனது வியப்பாக இருக்கிறது.

பிடிபட்ட படகு தமிழ்நாட்டை நோக்கி வரவில்லை என  இந்திய அதிகாரிகளே சொல்லிவிட்டார்கள். அந்தப் படகு இரணதீவில் இருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குப் பயணம் சென்று கொண்டிருந்த படகாகும். ஸ்ரீPலங்கா கடற்படையைத் தவிர்க்கு முகமாக இந்திய கடல் எல்லைக்குள் அந்தப் படகு சென்று விட்டது. இப்படி நான் சொல்லவில்லை. சென்னை காவல்துறை அதிகாரி (டிஐஜி) முகர்ஜி சொல்லி இருக்கிறார். அலுமினியத் துண்டுகள் ஆயுதங்கள் அல்ல. உருளைகளும் ஆயுதங்கள் அல்ல. இவை விற்பனைக்காக கடத்தல்காரர்களால் காலம் காலமாகக் கடத்தப்படுபவை.

இப்போது வி.புலிகளை வேட்டையாடுகிறோம் என்ற திரைக்குப் பின்னால் அகதி முகாம்களில் தங்கியிருக்கும் ஈழத் தமிழர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை கெடுபிடிகளைக் கட்டவிழ்;த்து விட்டுள்ளது. தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழர்கள் வீடுகளும் காவல்துறையின் சோதனைக்கு உள்ளாகியுள்ளன.

தமிழீழப் போராட்டம் குருதி சிந்திப் போராடும் போராட்டம். அது கிரிக்கெட் பந்து விளையாட்டல்ல. சேர, சோழ, பாண்டிய அரசர்கள் காலத்துக்குப் பின்னர் இப்போதுதான் தமிழர்களுக்கு எனச் சொந்தத் தரைப்படை, கடற்படை வான்படை இருக்கிறது. சோழரின் புலிக்கொடி காற்றில் பட்டொளி வீசிப் பறக்கும் கப்பல்கள் இப்போதுதான் மீண்டும் வங்கக் கடலில் பவனி வருகின்றன.

பாரதியார் “நாடகத்தில் காவியத்தில் காதலென்றால் நாட்டினர்தான் வியப்பெய்தி நன்றாம் என்பர் ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்றோரதத்திலே ஊரினிலே காதல் என்றால் உறுமுகின்றார்” எனப் பாடியது போல புறநானூற்றில் வீரம் என்றால் ஆகா என்கிறார் முதல்வர் கருணாநிதி. ஆனால் அண்டை நாட்டில் தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராடுவதை “வன்முறை. அதனை ஆதரிக்க முடியாது” என்கிறார்.

அது மட்டுமல்ல தமிழினத்தின் எட்டப்பர்களில் ஒருவரான ஆனந்தசங்கரியை வீட்டுக்கு வரவழைத்து தமிழக முதல்வர் 30 நிமிடங்கள் பேசியுள்ளார். ஆனந்தசங்கரி தனி மனிதர். தொண்டரில்லாத கடிதத் தலைப்புக் கட்சியின் தலைவர். சிங்களத் தலைவர்களின் செல்லப்பிள்ளை. இப்படிப்பட்ட ஒருவரை முதல்வர் எப்படிச் சந்தித்துப் பேசலாம்? இதன் மூலம் அவர் தமிழ்மக்களுக்கு என்ன செய்தியைச் சொல்ல விளைகிறார்?

தமிழீழ மீனவர்கள் இன்று நேற்றல்ல ஆண்டாண்டு காலமாக ஸ்ரீலங்கா கடற்படையால் தாக்கப்படுகிறார்கள். சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். அவர்களது படகுகள் உடைக்கப்படுகின்றன. வலைகள் அழிக்கப்படுகின்றன. அம்மா காலத்தில் அம்மாவும் அய்யா காலத்தில் அய்யாவும் தில்லிக்கு நூற்றக்கணக்கான கடிதம் எழுதினார்கள். பலன்தான் இல்லை. தாக்குதல்கள் தொடர்கின்றன.

கன்னடத்தில் தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள். தெருவில் தமிழ்ப் பேசினால் கன்னட வெறியர்கள் அவர்களை உதைக்கிறார்கள். தமிழ்த் திரைப்படங்கள் ஓடும் திரையரங்குகளுக்கு தீ வைத்துக் கொளுத்துகிறார்கள். இதைக் கேட்டு எங்கள் நெஞ்சம் பதறுகிறது!

முதல்வர் கருணாநிதியோ உரோம் பற்றி எரிகையில் பிடில் வாசித்த நீரோ மன்னன் போல் “இந்திய நாட்டின் நலனைப் புறக்கணித்து விட்டு இலங்கைத் தமிழர் பிரச்சினையில், தமிழக அரசு நேரடியாக தலையிடாது. தேசப் பாதுகாப்பை விட்டு விட்டு, புறக்கணித்து விட்டு இலங்கைப் பிரச்சினையில் தமிழகம் நேரடியாகத் தலையிடும் என யாரும் கனவு கூட காண வேண்டாம்” என இந்திய தேசியம் பேசுகிறார்.

வடக்கு வாழ்கிறது தெற்குத் தேய்கிறது என்று சொல்லித்தான் ஆட்சியைப் பிடித்தார்கள்.

இன்று காலம் மாறிவிட்டது. இந்திய தேசியத்தில் முதல்வர் கருணாநிதி குளிர் காய்கிறார்!

கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாத முதல்வர் கருணாநிதி தமிழீழத் தமிழர்களுக்கு வைகுண்டம் காட்டுவார் என்று யாரும் கனவு காண வேண்டாம்! (பரபரப்பு – மார்ச்சு 05,2007)

ஈரானைத் தாக்க புஷ் கொடுக்கை வரிந்து கட்டுகிறார்!


நக்கீரன்

ஈரான் மீது வான் தாக்குதல் நடத்தி ஈரானின் அணுசோதனை நிலையங்களை மட்டுமல்ல முழு ஈரானையே தவிடுபொடியாக்க அமெரிக்கா தயாராகி வருகிறதா? செய்தித்தாள்களில் வரும் செய்திகளை வைத்துப் பார்த்தால் அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது.

மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா என்பது பழமொழி. யோர்ஜ் புஷ்சும் அப்படித்தான். ஒரு கெட்ட நடவடிக்கையில் இறங்க நினைத்தால் யார் எதைச் சொன்னாலும் அதனை அவர் கடைசிவரை கைவிட மாட்டார்!
அமெரிக்காவில் இருந்து வெளிவரும் நேற ளுவயவநளஅயn (பெப்ரவரி 19) என்ற செய்தித்தாளின் நிருபர் னுயn Pடநளஉh அமெரிக்கா ஈரான் மீதான வான் தாக்குதலுக்கு வேண்டிய ஆயத்தங்களை செய்து முடித்து விட்டதாகவும் படையெடுப்பு எந்த நேரத்திலும் இடம்பெறலாம் என எழுதியுள்ளார். தாக்குதல் அணு நிலையங்களோடு நின்றுவிடாது. அதற்கு அப்பாலும் தாக்குதல் நடக்குமாம்.
ஈரானின் இராணுவ உட்கட்டுமானங்கள், வான்படைத் தளங்கள், கடற்படை மையங்கள், ஏவுகணைத் தளங்கள், கட்டுப்பாட்டு நிலையங்கள்  என்பவற்றின் மீது முதற்கட்ட தாக்குதலொன்றை நடத்த அமெரிக்க வான்படை திட்டமிட்டுள்ளதாக பி.பிசியும்  செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவிற்கு மற்ற நாடுகளோடு சொறியாமல் இருக்க முடியாது. இராக்கைத் தாக்கி அதனைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர மேற்கொண்ட முயற்சி இதுவரை வெற்றிபெறவில்லை. சொல்லப் போனால் அமெரிக்கா இராக்கில் கழுத்தளவு புதைந்துள்ளது. அமெரிக்கா இன்று அதனை முடிக்கவும் முடியாமல் வெளியேறவும் முடியாமல் திண்டாடுகிறது. இதனால்தான் ஈரான் மீதான அமெரிக்க படையெடுப்பு தாமதமாகியது.
கடந்த காலத்தில் அமெரிக்கா பல நாடுகள் மீது படையெடுத்திருக்கிறது. அல்லது தனது உளவு நிறுவனமான சிஅய்ஏ மூலம்; ஆட்சிகளைக் கவிழ்த்திருக்கிறது. பெரும்பாலும் தனக்குப் பிடிக்காத இடதுசாரிகள் ஆட்சி செய்யும் நாடுகள் மீதுதான் அமெரிக்கா படையெடுத்திருக்கிறது. அப்படிப் படையெடுக்கும் போது நோஞ்சான் நாடுகளை மட்டும் இனம் கண்டு அவற்றைத் தாக்குவது அமெரிக்க ஆட்சியாளரின் கொள்கையாக இருந்து வந்துள்ளது. பெரிய நாடுகளோடு (சீனா, உருசியா) அமெரிக்கா தனகுவது இல்லை.
ஈரான் மீதான படையெடுப்புக்கு அமெரிக்கா நான்கு ஆண்டுகளாக ஆயத்தம் செய்து வருகிறது. அந்தப் படையெடுப்புக்குப் பெயர் ழுpநசயவழைn ஐசயnயைn குசநநனழஅ என்பதாகும்.
அரேபிய வளைகுடாவுக்கு அமெரிக்கா பல போர்க் கப்பல்களை நகர்த்தி வருகிறது.  ருளுளு துழாn ஊ ளுவநnnளைஇ  ருளுளு னுறiபாவ னு நுளைநnhழறந  ருளுளு சுழயெடன சுநயபயnஇ ருளுளு ர்யசசல ளு வுசரஅயn யனெ ருளுளு வுhநழனழசந சுழழளநஎநடவஇ ருளுளு Niஅவைண   ஆகிய கப்பல்கள் ஏற்கனவே நகர்த்தப்பட்டுள்ளன.  ருளுளு டீழஒநசஇ  ருளுளு டீயவயயn இ ருளுளு முநயசளயசபந யனெ ருளுளு டீழnhழஅஅந சுiஉhயசன.இ ருளுளு Pநடநடரைஇ ருளுளு றுயளிஇ ருளுளு ஐறழ துiஅய  ஆகிய போர்க் கப்பல்கள் நகர்த்தப்படவுள்ளன. இவை ஒவ்வொன்றிலும் ஆயிரக்கணக்கான வீரர்கள், நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் (உசரளைந அளைளடநள) குண்டுகள், விமானங்கள், துருப்பு இறக்கிகள் (டுயனெiபெ உசயகவள) இருக்கின்றன.
இவற்றை வைத்துக் கொண்டு ஒரே ஒரு வான்வழி திடீர்த் தாக்குதலில் (சயனை) 10,000 இலக்குகளைப் பதம் பார்க்க முடியும். பத்தாயிரம் பொதுமக்கள் கொல்லப்படுவார்கள்.
பி-52 போர் விமானங்கள் ஒவ்வொன்றும் 150 – 300 இலக்குகளை ஒரு மீட்டர் வித்தியாசத்தில் ஒவ்வொன்றும் 20,000 கிலோ நிறையுள்ள குண்டுகளை வீசித் துல்லியமாகத் தாக்கும் ஆற்றல் வாய்ந்தவை. இந்த விமானங்கள் பதுங்கு குழிகளை 25 மீட்டர் வரை ஊடுருவித் தாக்கக்கூடிய குண்டுகளை வீசக் கூடியவை.
நட்டான்சிலுள்ள யுரேனியம் செறிவூட்டல் நிலையம் மற்றும் இஸ்பஹான் ஆர்க் புஷேர் ஆகிய பகுதிகளிலுள்ள அணுசக்தி மையங்கள்மீது அமெரிக்கா தாக்குதல்களை மேற்கொள்ளும்.

1978 இல் அமெரிக்க சார்பு ஷா மன்னர் ஆட்சி இஸ்லாமிய தீவிரவாதிகளால் கவிழ்க்கப்பட்டதை அடுத்து அமெரிக்கா ஈரான் மீது பகைமை பாராட்டி வருகிறது. ஈரானின் இஸ்லாமிய ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு அதன் எதிர்ப்பாளர்களுக்கு ஆயுத உதவியும் நிதியுதவியும் வழங்கி வருகிறது.
இராக்கில் விட்ட பிழையை யோர்ஜ் புஷ் ஈரானில் விட மாட்டார். ஈரானின் படைகள், அரசியல் தலைவர்கள் எல்லோரும் தாக்குதலுக்கு இலக்காவார்கள். சேர்பியா மற்றும் லெபனனில் மாதக் கணக்கில் போட்ட குண்டுகள் ஈரானில் ஒரே இரவில் வீசப்படும். ஈரான் திருப்பித் தாக்குவதற்கு வாய்ப்பே இருக்காது என்கிறார்கள் அமெரிக்க தளபதிகள்.
உண்மையில் ஈரான் தனது அணு ஆராய்ச்சித் திட்டம் மின்சக்தியை உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டதென்றும் அது முற்றிலும் அமைதி வழிமுறைக்கே பயன்படுத்தப்படும் என்று கூறிவருகிறது. அணுமின் நிலைகளை உருவாக்கி அதன் மூலம் பொதுப் பயன்பாட்டுக்கு மின்சக்தி உற்பத்தி செய்வதற்கு ஏனைய நாடுகளைப் போலத் தனக்கும் உரிமை உண்டென்று ஈரான் வாதாடுகிறது. தனது அணு ஆராய்ச்சித் திட்டத்தை பன்னாட்டு அணு ஆற்றல் நிறுவனத்தின் (ஐவெநசயெவழையெட யுவழஅiஉ நுநெசபல யுபநnஉல (ஐயுநுயு) கண்காணிப்புக்கு உட்படுத்தவும் தயார் என ஈரான் சொல்கிறது.
ஆனால் அமெரிக்கா வோ ஈரான் யூரேனியசெறிவாக்கல் செய்தால் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதற்கு அதிக காலம் செல்லாது எனச் சொல்கிறது.
“அணு ஆற்றல் தொழில் நுட்பத்தை வைத்திருப்பது எமது உரிமையாகும். நாங்கள் எதற்கும் தயாராக இருக்கிறோம். அமெரிக்காவின் பயமுறுத்தலுக்கு நாம் அஞ்சப் போவதில்லை. எங்களது அணுசக்தி உற்பத்தி குண்டுகள் செய்வதற்கல்ல, அதனை அமைதி நோக்குக்காகப் பயன்படுத்தவே ஆய்வு செய்கிறோம். அப்படிச் செய்ய ஈரான் நாட்டுக்கு உரிமை உண்டு” என ஈரானின் ஆட்;சித் தலைவர் கமூது அஃமதினெஜ்ஜாத்தும் (ஆயாஅழரன யுhஅயனiநெதயன ) தெரிவித்துள்ளார்.
மேலும்  “அமெரிக்கா அணு ஆராய்ச்சித் திட்டத்தைக் கைவிட்டால் நாங்களும் கைவிடத்தயார்” என ஈரானின் ஆட்சித்தலைவர் அஃமதினெஜ்ஜாத்  எதிர்வாதம் செய்கிறார். இதனால் பாதுகாப்பு சபை விரைவில் கூடி ஈரான் மீதான பொருளாதாரத் தடைபற்றி முடிவு எடுக்க இருக்கிறது.
பாதுகாப்புச் சபை பொருளாதாரத்தடை விதிக்க எண்ணினால் அதற்கு வீட்டோ அதிகாரம் படைத்த  உருசியாவின் ஆதரவு இருக்குமா?
அண்மையில் உருசிய ஆட்சித்தலைவர் புட்டின் அமெரிக்கா ஏனைய நாடுகளைப் பொருட்படுத்தாமல் தன்னிச்சையாக நடந்து கொள்கிறது, மற்ற நாடுகள் மீது ஏதாவது ஒரு நொண்டிச் சாட்டைச் சொல்லிக் கொண்டு படையெடுக்கிறது எனக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அதற்குக் காரணம் இருக்கிறது.

அமெரிக்கா அண்மையில் அய்ரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்து கொண்ட பல்கேரியா, ரோமேனியா (முன்னைய சோவியத் ஆதரவு நாடுகள்) நாடுகளில் வான் பாதுகாப்பு ஏவுகணைகளையும் ரடார்களையும்  நிறுவியுள்ளது. அவை தனக்கு எதிரான அமெரிக்க இராணுவ அச்சுறுத்தல் என உருசியா நினைக்கிறது. அவை ஈரானுக்கு எதிராகப் பயன்படுத்துவதற்கு நிறுவப்பட்டவை என அமெரிக்கா கூறுகிறது. ஆனால் அந்த வாதத்தை ஏற்றுக் கொள்ள உருசியா மறுக்கிறது.

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் கரைந்து போன சோவியத் ஒன்றியத்தை அடுத்து உருசியா இரண்டாவது உலக நாடு என்ற படிநிலையில் இருந்து மூன்றாவது உலகநாடு என்ற படிநிலைக்கு தரம் இறக்கப்பட்டது. ஆனால் இன்று உருசியா மீண்டும் ஒரு வல்லரசு நாட்டுக்கான படிநிலையை எட்டியுள்ளது. புட்டின் அமெரிக்காவை சாடியதற்கு உருசியா அடைந்துள்ள புதுய பொருளாதர வலிமை முக்கிய காரணியாகும்.
ஈரான் தனது அணு சோதனை நிலைகளைப் பரவலாக்கியுள்ளது. சிலவற்றைப் பூமிக்கு அடியில் புதைத்து வைத்திருக்கிறது. ஆனால் பென்டகன் திட்டவாளர்கள் அவற்றைத் தாக்கி அழிக்கலாம் எனவும் அதன் மூலம் ஈரானின் அணுசோதனைத் திட்டத்தை நிச்சயம் பின்னடைய வைக்க முடியும் என்று நம்புகிறார்கள்.
யுரேனியம் செறிவூட்டல் நடவடிக்கைகளை நிறுத்துமாறு அய்யன்னா .பாதுகாப்புச் சபை விதித்த காலக்கெடு  இன்றுடன் (வியாழக்கிழமை) முடிவுக்கு வந்துள்ளது. இக்காலக் கெடுவினுள் ஈரான் அய்யானா.வின் நிபந்தனைக்கு ஏற்ப அணுசெறிவாக்கல் திட்டத்தைக் கைவிடாவிட்டால் அந்நாட்டின் மீது கடுமையான தடைகளை விதிக்கப்போவதாக பாதுகாப்புச் சபை எச்சரித்திருந்தது. அய்யன்னாவின் பொதுச்செயலர் அந்த எச்சரிக்கையை ஈரானுக்கு நினைவூட்டியுள்ளார்.
ஈரானும் விட்டேனோ பார் “அமெரிக்கா தாக்கினால் திருப்பித் தாக்குவோம்” என்று சொல்கிறது. அதற்கான போர் பயிற்சிகளை ஈரானின் முப்படைகளும் மேற்கொண்டு வருகின்றன. உருசியாவிடம் இருந்து விமான எதிர்ப்பு ஏவுகணைகளை ஈரான வாங்கிக் குவித்துள்ளது.
ஈரான அமெரிக்காவின் வான்தாக்குதலுக்கு நின்று பிடிக்குமா? இல்லை சதாம் குசேன் வீரம் பேசியது போல் ஈரானின் ஆட்சித்தலைவர் மகமூது அஃமதினெஜ்ஜாத்  வெறுமனே வாய்ப்பறை அறைகிறாரா?

ஈரானை இராக்கோடு ஒப்பிட முடியாது. மக்கள் தொகையிலும் பரப்பளவிலும் இராக்கைவிட ஈரான பெரிய நாடு. ஈரானின் பழைய பெயர் பாரசீகம். ஈரான என்ற சொல் ஆரியன் என்ற சொல்லின் திரிபாகும். இங்கிருந்துதான் ஆரியர்களில் ஒரு தொகுதியினர் இந்தியாவுக்குள் 3,000 ஆண்டுகளுக்கு முன் நுழைந்தார்கள்.

நாடு – இஸ்லாமிய குடியரசு

மக்கள் தொகை – 68,278,826 ( யூலை 2003 மதிப்பீடு)

தலைநகரம் – தெகரான்

தேசிய இனங்கள் – பாரசீகர் (51 விழுக்காடு) அசெபஜ்ஜானியர் (24 விழுக்காடு)
குர்திஷ் (7 விழுக்காடு) அராபியர் (3 விழுக்காடு)
ஏனைய சிறபான்மை இனத்தவர் ( 15 விழுக்காடு)

சமயம் – இஸ்லாம். ஷியா (95 விழுக்காடு) சுன்னி (4 விழுக்காடு)

அமெரிக்கா ஈரான மீது தாக்குதல் நடத்தலாம் என ஈhனிய மக்கள் பெரும் அச்சத்துக்குள்ளாகியுள்ளனர். அண்டை நாடான இராக்மக்களிற்கு ஏற்பட்ட கதி தமக்கு வந்துவிடுமோவெனப் பெரும்பாலான ஈரானியர்கள் அஞ்சுவதாகத் தெரிகிறது.
யோர்ஜ் புஷ் 2002 ஆம் ஆண்டில் ஈரான், இராக் மற்றும்; வட கொரியா நாடுகள் “தீவினையின் அச்சு” (யுஒளை ழக நஎடை) என வருணித்திருந்தார். அய்ந்து ஆண்டுகள் கழித்து சதாம் குசேன் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு விட்டாலும் புதிய எதிரிகள் முளைத்திருப்பதாக அமெரிக்கா எண்ணுகிறது. குறிப்பாகச் சொன்னால் உருசியா மற்றும் சீனா தனது எதிகளாக மாறலாம் என அமெரிக்கா அச்சப்படுகிறது. இதனால் அமெரிக்காவும் உருசியாவும் மற்றுமொரு ஆயுத உற்பத்திப் போட்டியில் இறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பென்டகனின் புதிய தலைவர் றொபேட் கேட்ஸ் (சுழடிநசவ புயவநள) எதிர்காலத்த்pல் அமெரிக்கா எதிர்கொள்ளக் கூடிய போருக்கு முகம் கொடுக்க மிகப் பெரிய தரைப்படை, அதிரடிப்படை  தேவை எனச் சொல்கிறார்.

இன்ற உலக அமைதிக்கு அமெரிக்கா மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. அதன் பாதுகாப்புச் செலவு ஆண்டொன்றுக்கு 48,000 கோடியை (480 பில்லியன் டொலர்) எட்டுகிறது. இது முழு வரவு செலவுத் திட்டத்தில் 21 விழுக்காடு ஆகும்.
உலகில் உள்ள அத்தனை நாடுகளின் பாதுகாப்பு செலவின் கூட்டுத்தொகையை விட அதிகமானது.

யோர்ஜ் புஷ்ஷின் பதவிக் காலம் முடிய இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கின்றன. அவரைப் பொறுத்தளவில் போர் பொங்கல் சாப்பிடுவதற்கு ஒப்பானது. மனிதர் ஈரான், சிரியா, வட கொரியா போன்ற நாடுகளை ஒரு கை பார்த்துவிட்டுத்தான் போவார் போல் தெரிகிறது! (உலகத்தமிழர் – பெப்ரவரி 27-2007)

எமது மண் மீட்கப்பட்டால் ஒழிய எமக்கு விடிவில்லை
நக்கீரன்
தலையிடியும் வயிற்றுக் குத்தும் தனக்குத் தனக்கு வந்தால்தான் அவற்றின் வலி தெரியும் என்று சொல்வார்கள்.
நேற்றுவரை குடை நிழலிருந்து குஞ்சரம் ஊர்ந்த மூன்று முக்கிய அமைச்சர்கள் இன்று பதவிகள் பறிக்கப்பட்டு நடுத்தெருவில் விடப்பட்டுள்ளார்கள்!
கடந்த ஓராண்டுகாலமாக நாட்டில் தலைவிரித்தாடும் மனிதவுரிமை மீறல்கள் பற்றி வாழாவிருந்த முன்னாள் அமைச்சர்கள் மங்கள சமரவீரா, ஸ்ரீபதி சூரியாராச்சி, அனுரா பண்டாரநாயக்கா இன்று தங்களது மனிதவுரிமைகள் பறிக்கப்பட்டு விட்டதாகவும் தங்களது உயிருக்கு வி.புலிகளாலும் தென்னிலங்கை அரசியல் எதிரிகளாலும் ஆபத்து என அலறுகிறார்கள். அலறுவதோடு நின்றுவிடாமல் மனிதவுரிமை ஆணையத்திடம் முறையீடும் செய்துள்ளார்கள்.
பதவி பறிக்கப்பட்ட ஒரு சில மணி நேரத்துக்குள் அமைச்சர் மங்கள சமரவீராவிற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு திருப்பிப் பெறப்பட்டது. அமைச்சர் என்ற முறையில் அவரது பாதுகாப்புக்குக் கொடுக்கப்பட்ட குண்டு துளைக்காத சிற்றுர்ந்து சனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவால் எடுத்துக்கொண்டு போகப்பட்டது. துறைமுக அதிகார சபையைச் சேர்ந்த பாதுகாப்பு பணியாளர்களையும் விட்டு வைக்கவில்லை. அவர்களும் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டனர். இவற்றைவிடக் கேவலம் அவரது பாதுகாப்பு படலையில் பொருத்தப்பட்டிருந்த தொலைபேசி மற்றும் வளவைத் துப்பரவாக்கப் பயன்படுத்தும் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. “அய்க்கிய தேசியக் கட்சியின் ஆட்சியின் போது கூட அனுபவியாத தொந்தரவுகளையும் பயமுறுத்தல்களையும் இன்று நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்” என முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர ஆட்சித்தலைவர் இராசபக்சேக்கு அனுப்பி வைத்துள்ள 19 பக்க மடலில் புலம்பி அழுதிருக்கிறார்.
முன்னாள் அமைச்சர், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிப் பொருளாளர், கட்சியில் கட்சித்தலைவருக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் இருந்த ஒருவருக்கே இந்தக் கதி என்றால் சாதாரண பொதுமகனின் கதி என்ன? அதிலும் தமிழப் பொதுமகனின் கதி என்ன?
அனுரா பண்டாரநாயக்காவிடம் இருந்து பறிக்கப்பட்ட அமைச்சுப் பதவி அவருக்கு திருப்பிக் கொடுக்கப்படும் எனப் பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. அனுரா – மகிந்தா இருவரும் அலரிமாளிகைளில் சந்தித்து உரையாடியதைத் தொடர்ந்தே மீண்டும் அமைச்சுப் பதவி அவருக்குக் கொடுக்கப்படவுள்ளது.
“தொலைபேசியில் எனக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. அதனைச் செய்தவர்கள் மகிந்தா இராசபக்சேயைச் சுற்றி அமெரிக்க கடவுச்சீட்டு வைத்திருக்கும் பேர்வழிகள்தான்;” என்று அனுரா பண்டாரநாயக்கா தனியார் தொலைக்காட்சியில் தோன்றி பகிரங்கதாகக் குற்றம் சுமத்தி இருந்தார்.
“எனது தந்தை பிரதமர், எனது தயார் பிரதமர், எனது அக்கா ஆட்சித்தலைவர், நான் அமைச்சர், எதிர்க்கட்சித்தலைவர், அவைத்தலைவர் ஆக இருந்தவன்.  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறுவனரே என் தந்தையார்தான். எங்களது குடும்பத்துக்குச் சொந்தமான 3,000 ஏக்கர் காணியை நாட்டுமக்களுக்குக் கையளித்திருக்கிறோம். பண்டாரநாயக்காவின் குடும்பத்தை எந்தக் கொம்பனாலும் அரசியலில் இருந்து துரத்த முடியாது” என்று அனுரா வீரவசனம் பேசினார்.
என்ன பயன்? இரண்டு நாள் செல்லவில்லை அவர் வெட்கத்தைக் கக்கத்திலும் வாலைக் கால்களுக்கு இடையிலும் வைத்துக்கொண்டு மகிந்தா இராசபக்சே முன்னர் வழங்கிய உப்புச் சப்பில்லாத அமைச்சுப் பதவிக்காக மீண்டும் மகிந்தாவிடம் சரணாகதி அடைந்துள்ளார்!
கொறகல வளவுக் கல்லறையில் தூங்கும் அனுராவின் தந்தையும் தாயும் இந்தக் கண்றாவிக் காட்சியைப் பார்த்து நிச்சயம் நெளிந்திருப்பார்கள் என்பதில் அய்யமில்லை!
உண்மை என்னவென்றால் விளையாட்டுப் பிள்ளையான அனுரா பண்டாரநாயக்காவினால் அமைச்சர் என்ற பதவி, பந்தா இல்லாமல் உயிர் வாழ முடியாது!
வேடிக்கை என்னவென்றால் இந்த நாடகத்தில் எந்தப் பங்கும் இல்லாத வி. புலிகளது தலையும் உருட்டப்படுகிறது!
வி.புலிகளோடு சேர்ந்து தன்னைக் கொலை செய்யச் சதித்திட்டம் தீட்டினார்கள் என்று மகிந்தா இராசபக்சே முன்னாள் அமைச்சர்கள் மீது குற்றம் சாட்டுகிறார்!
“எனக்கு அளித்த பாதுகாப்பு புடுங்கப்பட்டதால் ஏற்கனவே வி. புலிகளது கொலைப் பட்டியலில் முதலில் இருக்கும் எனக்கு உயிர் ஆபத்து இருக்கிறது” என மங்கள சமரவீரா அழுது வடிகிறார்!
மங்கள சமரவீரா ஆட்சித்தலைவருக்கு எழுதிய 19 பக்க மடலில் மகிந்தா இராபச்சே அரசின் பல்வேறு மனிதவுரிமை மீறல்கள் பற்றி சரமாரியாகக் குற்றம் சாட்டியுள்ளார். முக்கியமாக ஆட்கடத்தல், ஊடகவியலாளர்கள் மீதான கெடுபிடிகள், வழிபாட்டுத் தலங்கள், பாடசாலைகள், மருத்துவமனைகள் மீது மேற்கொண்ட தாக்குதல்கள் பற்றி சமரவீரா குற்றம் சாட்டியுள்ளார்.
இதிலும் ஒரு வேடிக்கை என்னவென்றால் அய்ரோப்பிய ஒன்றிய நாடுகள் தனித்தனியாக வி.புலிகளைத் தடைசெய்யும் சட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றும்வரைதான் மனிதவுரிமை மீறல்கள் இடம்பெறுவதைத் தடுக்க நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும். அந்த நாடுகள் தடைச் சட்டத்தை நிறைவேற்றி விட்டபின்னர் மனிதவுரிமை மீறல்கள் தொடரலாம் என சமரவீர சொல்லாமல் சொல்கிறார்.
றூநn ஐ றயள வாந குழசநபைn ஆinளைவநசஇ ஐ ரசபநவெடல சநஙரநளவநன லழர யனெ ளுநஉசநவயசல ழக னுநகநளெந ஆச. புழவயடிhயலய சுயதயியமளய வாயவ ரவெடை iனெiஎனைரயட உழரவெசநைள றiவாin வாந நுரசழிநயn ருnழைn டநபளைடயவநள டயறள டியnniபெ வாந டுவுவுநு றந ளாழரடன வயமந ளவநிள வழ யஎழனை hரஅயn சiபாவள எழைடயவழைளெஇ யடினரஉவழைளெஇ hயசயளளiபெ வாந அநனயைஇ யவவயஉமiபெ pடயஉநள ழக றழசளாipஇ hழளிவையடள யனெ ளஉhழழடள நஎநn றாநn றந வயமந னநகநளெiஎந அடைவையசல யஉவழைn யபயiளெவ வாந டுவுவுநு.
மகிந்தா இராசபக்சேக்கு சமரவீர எழுதியுள்ள மடல் அரசின் பல மட்டங்களிலும் நடைபெறும் ஊழல்கள், அதிகாரப் போட்டிகள், வெட்டுக் குத்துக்கள் போன்றவற்றை அம்பலப்படுத்த உதவியுள்ளது.
மகிந்தாவும் அவரது உடன்பிறப்புக்களான பசில் இராசபக்சே மற்றும் கோதபாய இராசபக்சே ஆகியோரது கையில் இன்று முழு ஆட்சி அதிகாரமும் சிக்கிவிட்டது என்பதை மங்கள சமரவீராவின் மடல் உறுதி செய்கிறது.
மகிந்தா இராபச்சே கைகளில் மட்டும் 5 முழு அமைச்சுக்கள் இருக்கின்றன. ஆட்சித்தலைமை செயலகம், சமய விவகாரங்கள், நிதி, பாதுகாப்பு, தேசிய மேம்பாடு ஆகியவையே அந்த அமைச்சுக்கள். 2007 ஆம் ஆண்டு வரவு செலவு அறிக்கையில் இந்த 6 அமைச்சுக்கும் ரூபா 76,658,400 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இது மொத்த ஒதுக்கீட்டில் (ரூபா 131,942,000 மில்லியன்) 60 விழுக்காடாகும்! எஞ்சிய 106 அமைச்சுக்களுக்கும் 40 விழுக்காடு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
“எல்லாச் சாலைகளும் உரோம் நோக்கியே செல்கின்றன” என ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.
ஸ்ரீலங்காவைப் பொறுத்தவரை எல்லாச் சாலைகளும் இப்போது அம்பாந்தோட்டை நோக்கியே செல்கின்றன! அது சாலைகளாக இருக்கட்டும், வீடு கட்டும் திட்டங்கள் ஆகட்டும், விமான தளமாகட்டும், துறைமுக அபிவிருத்தி ஆகட்டும் எல்லாம் அம்பாந்தோட்டைக்கே கொண்டு செல்லப்படுகின்றன.
இது இவ்வாறிருக்க ஸ்ரீலங்காவிற்கு மூன்று நாள் செலவு மேற்கொண்ட பிரித்தானிய துணை வெளியுறவு மற்றும் பொதுநல விவகார அமைச்சர் கிம் ஹோவெல்ஸ் (முiஅ ர்ழறநடடள) கிழக்கில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு கொழும்பில் மகிந்தா இராசபக்சே, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா போன்றோர்களைப் பார்த்துப் பேசியிருக்கிறார்.

வழக்கம் போல ஸ்ரீலங்காவில் இடம்பெறும் மனிதவுரிமை மீறல்களையிட்டு கவலை தெரிவித்த பிரித்தானிய அமைச்சர் இனச் சிக்கலுக்கு இராணுவத் தீர்வு அல்ல அரசியல் தீர்வு காணப் படவேண்டும் என்று திருவாய்மலர்ந்துள்ளார்.

வெளிநாட்டு அரசியல்வாதிகள், தூதுவர்கள் எல்லோரும் இதே பல்லவியைத்தான் கடந்த 5 ஆண்டுகளாக கிளிப்பிள்ளை சொல்வது போல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்! இனிமேலும் இதையேதான் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

ஆனால் தமிழ் மக்களுக்கு எதிரான மனிதவுரிமை மீறல்கள் குறைந்தபாடில்லை. அது கூடிக்கொண்டே போகிறது. குறிப்பாக மகிந்தா இராசபக்சே ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழ்மக்கள் சொல்லொணாத அல்லல்கள், அனர்த்தங்கள், அவலங்கள் ஆகியவற்றை நாளும் பொழுதும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மகிந்தாவின் அரசு குண்டு வீச்சு, செல்தாக்குதல், கொலைகள், ஆட்கடத்தல், கைது, சிறை, சித்திரவதை, இடப்பெயர்வு, பொருளாதாரத் தடை, போக்குவரத்துத் தடை, மீன்பிடித்தடை, ஊரடங்குச் சட்டம் என வரலாறு காணாத அரச பயங்கரவாதத்தை தமிழர்களுக்கு எதிராகக் கட்டவுழ்த்து விட்டுள்ளது.

கடந்த ஆண்டு யாழ்ப்பாணத்தில் 527 பேர் காணாமல் போய் உள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதியப்பட்டுள்ளது.
இதில் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் 451 பேர், 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 76 பேர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 12 நாட்களில் 11 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 14 பேர் கடத்தப்பட்டிருப்பதாக யாழ். மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்டோர்களது விவரங்களும், மனித உரிமைகள் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்திலிருந்து இந்தக் கணக்கெடுப்பு இடம்பெற்றுள்ளது.

ஏப்ரல் மாதம் 25 பேர், மே மாதம் 32 பேர், யூன் மாதம் 16 பேர், யூலை மாதம் 34 பேர், ஆகஸ்ட் மாதம் முழு அளவிலான ஊரடங்குச் சட்டம் சிறிலங்காப் படையினரால் அமுல்படுத்தப்பட்டதனால் கணக்கெடுப்பு இடம்பெறவில்லை.

செப்தெம்பர் மாதம் 80 பேர், ஒக்தோபர் 51 பேர், நொவெம்பர் 25 பேர், டிசெம்பர் 17 பேருமாக மொத்தம் 280 பேர் கடந்த ஆண்டு சிறிலங்காப் படையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்த ஆண்டு சனவரி மாதத்தில் 37 பேரும், பெப்ரவரியில் 15 பேருமாக மொத்தம் 52 பேர் காணாமல் போய் உள்ளதாக அவர்களது உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் 12 தமிழ்ப் பொதுமக்கள் காணாமல் போயுள்ளனர் என்றும் 35 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் மனிதவுரிமை ஆணையம் அறிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 11 பேர் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு கிழமைகளில் 58 முறைப்பாடுகள் வவுனியா காவல்துறையில் பதியப்பட்டுள்ளது என காவல்துறை மனிதவுரிமை ஆணையத்துக்கு அறிவித்துள்ளது.

அதேவேளை, கொலை அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2 மாதங்களில் மட்டும் 59 பேர் யாழ் மனித உரிமை ஆணைக்குழுவில் சரணடைந்திருக்கிறார்கள். இவர்கள் யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
ஊர்காவற்துறை மீனவர்கள் இரவில் மீன்பிடிப்பதற்கு சிங்கள இராணுவம் தடை விதித்துள்ளது. இங்கு வாழும் 7,000 மக்களில் 90 விழுக்காட்டிகனர் கடலை நம்பி வாழ்பவர்கள் ஆவர்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகப் போய்க் கொண்டிருக்கிறது. அங்கு நடைபெறும் களவு, ஆட்கடத்தல், கொள்ளை, கொலை போன்றவற்றைத் தடுப்பதற்கு சட்டமா அதிபர் விளிப்புக் குழுக்களை அமைக்குமாறு இராணுவ கட்டளைத் தளபதிக்கும் காவல்துறைக்கும் பணிப்புரை பிறப்பித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் பயிரை வேலி மேயும் நிலைமை இருக்கும் போது இது எவ்வளவு தூரம் நடைமுறைச் சாத்தியம் என்பது கேள்விக்குறியாகும்.
கொழும்பில் மட்டும் கடந்த 12 மாதங்களில் 50 பேர் கடத்தப்பட்டுள்ளார்கள். அவர்களில் பெரும்பான்மையோர் தமிழர்கள். கடத்தப்பட்டவர்களில் 12 பேர் கொலைசெய்யப் பட்டுள்ளார்கள். பதினாறு பேர் உறவினர்களால் கப்பம் கொடுக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை பொதுமக்கள் கண்காணிப்பு ஆணையம் (ஊiஎடை ஆழnவைழசiபெ ஊழஅஅளைளழைn) தெரிவித்துள்ளது.
2005 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் தொடங்கி இதுவரை 3,600 தமிழ்ப் பொதுமக்கள் அரச பயங்கரவாதத்துக்குப் பலியாகியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தை 60,000 இராணுவத்தினரும் ஆயிரக்கணக்கான காவல்துறையினரும் ஆக்கிரமித்துள்ளனர். இருந்தும் அங்கு நாளாந்தம் மக்கள் கொல்லப்படுகிறார்கள். கடத்தப்படுகிறார்கள். இதன் பொருள் என்ன? வேலியே பயிரை மேய்கிறது என்பதுதானே பொருள்!
பாதுகாப்பு அமைச்சைத் தன்னோடு வைத்துக் கொண்டுள்ள நிறைவேற்று அதிகாரம் படைத்த ஆட்சித்தலைவர் மகிந்தா இராசபக்சா தனது மூக்கின் கீழே நடைபெறும்  இந்த மனிதவுரிமை மீறல்கள்பற்றி கிஞ்சித்தும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை! வெட்கப்படுவதாகவும் தெரியவில்லை!
மகிந்தா இராசபக்சே இனச் சிக்கலை பயங்கரவாதமாகவே பார்க்கிறார். வி. புலிகளை இராணவ பலம் கொண்டு ஒழித்துவிட்டு அல்லது பலவீனப்படுத்திவிட்டு ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் கீழ் அதிகாரப் பரவலாக்கல் மூலம் தான் விரும்பிய தீர்வைத் தமிழர்களது தொண்டைக்குழியில் திணிப்பதே அவரது குறிக்கோளாகும். அனைத்துலக நாடுகளைத் திருப்திப்படுத்த வி. புலிகளுடன் அரசு பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று இடைக்கிடை சொல்லி வருகிறார். அனைத்துலக நாடுகளும் நாங்கள் அடிப்பது போல அடிக்கிறோம் நீ அழுகிறமாதரி அழு என நடந்து கொள்கின்றன.
வட- தென் தமிழீழத்தில் இருந்து சிங்கள இராணுவம் விரட்டப் பட்டு எமது மண் மீட்கப்பட்டால் ஒழிய எமக்கு விடிவில்லை. (உலகத்தமிழர் – பெப்ரவரி 16-22-02-2007)

About editor 3016 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply