Political Column 2007 (3)

பிளவு பட்டுப்போன பாலஸ்தீனிய அதிகார அவை
நக்கீரன்
ஊh இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்று ஊரில் சொல்வார்கள். இப்போது பாலாஸ்தீனம் இரண்டு துண்டுகளாகப் பிரிக்கப்பட்டுவிட்டது.
காஸா பகுதி ஹாமாஸ் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேற்குக்கரை பாலஸ்தீனிய விடுதலை அமைப்பின் கட்டுப்பாட்டுள் சென்றுவிட்டது.
இப்படி பாலஸ்தீனியர்கள் தங்களுக்குள் முட்டி மோதிக் கொண்டு பிளவுபட்டு நிற்பதில் இஸ்ரேலுக்கு மெத்த மகிழ்ச்சி. இஸ்ரேலுக்கு மட்டுமல்ல அமெரிக்கா மற்றும் அய்ரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் அளவிடாத மகிழ்ச்சிதான்.
பாலஸ்தீன அதிகார அவைக்குக் கொடுக்கும் நிதியுதவியை நிறுத்தி வைத்திருந்த அமெரிக்கா மற்றும் அய்ரோப்பிய ஒன்றியம் இப்போது ஆட்;சித்தலைவர் மவ்மூட் அபாஸ் கட்டுப்பாட்டில் உள்ள மேற்குக் கரைக்கு மீளக் கொடுக்க முன்வந்துள்ளது. இஸ்ரேலும் பாலஸ்தீனிய மக்களிடம் இருந்து திரட்டிய சுங்கவரி போன்றவற்றை திரும்பிக்கொடுக்க முடிவு செய்துள்ளது.
மீண்டும் பாலஸ்தீனிய அதிகார அவைக்கு நிதியுதவியைக் கொடுப்பதன் மூலம் பாலஸ்தீனிய மக்களை அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அய்ரோப்பிய ஒன்றியம் பிரிக்க முயல்வதாக முன்னாள் அமெரிக்க ஆட்சித்தலைவர் ஜிமி காட்டர் குற்றம் சாட்டியுள்ளார். 2006 ஆம் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற ஹாமாசை புஷ் நிருவாகம் ஏற்க மறுத்தது ‘கிறிமினல்’ குற்றம் எனச் சாடியுள்ளார். அயர்லாந்து நாட்டில் நடந்த மனிதவுரிமை மாநாட்டிலேயே (குழசரஅ ழn ர்ரஅயn சுiபாவள) 83 அகவையைத் தாண்டிய காட்டர் தனது காட்டமான கருத்துக்களை வெளியிட்டார்.
யூன் மாத நடுப்பகுதியில் மவ்மூட் அப்பாசின் பட்டா இயக்கத்துக்கும் ஹாமாஸ் ஆயுததாரிகளுக்கும் இடையில் நடந்த சண்டையில் பட்டா இயக்கத்தை ஹாமாஸ் புறங்கண்டது. ஹாமாஸ் முழு காஸா பகுதியையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. அதே நேரம் பட்டா இயக்கம் மேற்குக்கரைப் பகுதி மீது வைத்திருக்கும் தனது பிடியை மேலும் இறுக்கியது. நாடாளுமன்றம் உட்பட பொதுக் கட்டிடங்களைக் பட்டா இயக்கம் கைப்பற்றியது.
யூன் 17 ஆம் நாள் ஆட்சித்தலைவர் அப்பாஸ் ஹாமாஸ் தலைமையிலான அய்க்கிய அரசைக் கலைத்துவிட்டு புதிய அரசை நிறுவினார். மேற்குக்கரைப் பகுதியில் 2. 6 மில்லியன் பாலஸ்தீனியர்களும் காஸா பகுதியில் 1. 3 மில்லியன் பாலஸ்தீனியர்களும் வாழ்கிறார்கள். இஸ்ரேல் காஸா பகுதிக்குள் அடிப்படை உணவு மற்றும் அத்தியாவசிய பொருள்களை எடுத்துச் செல்ல அனுமதித்துள்ளது.
பதவி பறி;க்கப்பட்ட பிரதமர் இஸ்மயில் ஹானியா காஸா பகுதியில் போட்டி அரசை நிறுவமாட்டோம் என அறிவித்துள்ளார்.
அமெரிக்கா தனக்கு ஆமாம் சாமி போடும் தலைவர்களைத்தான் ஆட்சியில் அமர்த்தி அழகு பார்க்கிறது. ஆப்கனிஸ்தானில் ஆட்சித்தலைவர் ஆக ஹாமிட் கஹாரி. இராக்கில் நூரி அல் மலிக்கி இருக்கிறார்கள். லெபனென் மற்றும் சோமாலியாவிலும் அமெரிக்க ஆதரவாளர்களே பதவியில் இருக்கிறார்கள்.  இப்போது பாலஸ்தீன அதிகார அவையிலும் அமெரிக்க ஆதரவு மவ்மூட் அப்பாஸ் ஆட்சியில் இருக்கிறார். அவரைப் பாலஸ்தீனியர்கள், குறிப்பாக ஹமாஸ் ஆதரவாளர்கள், அமெரிக்க அரசின் கையாளாகவே பார்க்கிறார்கள். அது மட்டுமல்ல பாலஸ்தீனிய மக்கள் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஆதரவான அரபு அரசுகள் ஆகியவற்றைத் தங்களது எதிரிகளாகவே பார்க்கிறார்கள்.
இஸ்ரேலுக்கு எதிரான பாலஸ்தீனிய மக்களது கிளர்ச்சியை அடக்க அமெரிக்கா 4,000 ஆயிரம் கோடி டொலர்களை இராணுவ உதவியாக வழங்கியது. இந்த நிதியுதவியைக் கொண்டு இஸ்ரேல் அதே அமெரிக்கவிடம் இருந்து கு-16 போர் விமானங்கள், பீரங்கிகள் பொருத்தப்பட்ட உலங்குவானூர்திகள,; துப்பாக்கிகள், தோட்டாக்கள் போன்றவற்றை வாங்கிக் குவித்தது.
காசா இஸ்ரேல், எகிப்து, கடல் இவற்றால் சூழப்பட்டுள்ளது. மேற்குக்கரையைத் பட்டா இயக்கம் தனது பிடிக்குள் வைத்திருந்தாலும் அங்கும் கணிசமான ஆதரவு ஹாமாசுக்கு இருக்கிறது. ஆனால் பட்டா இயக்கத்திடம் ஆயுதம் இருப்பதால் அந்த ஆதரவு வெளிப்படையாகத் தெரிவதற்கு வாய்ப்பில்லை. மேற்குக்கரை மற்றும் காசா பகுதி மீதான 40 ஆண்டு கால இஸரேலிய ஆக்கிரமிப்பு பாலஸ்தீனியரது பொருளாதரத்தை அடியோடு அழித்துவிட்டது. ஒரு பாலஸ்தீனிய குடிமகனது ஆண்டு வருவாய் 1,000 டொலர் மட்டுமே அல்லது நாளொன்றுக்கு 3 டொலர் மட்டுமே. மறுபுறம் இஸ்ரேல் குடிமகனது ஆண்டு வருமானம் 16,000 டொலர்கள் அல்லது ஒரு நாளைக்கு 48 டொலர்கள் ஆகும்.
ஆயிரக்கணக்கான பாலஸ்தீனிய மக்களது வீடுகள் குண்டு போட்டு அழிக்கப்பட்டன. புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டன. பாலஸ்தீனிய மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல்களை அமெரிக்கா, அய்ரோப்பிய ஒன்றியம் கண்டுகொள்ளவே இல்லை.
இரண்டாவது உலகப் போரின் பின்னர் பாலஸ்தீனம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அதுவே கடந்த அரை நூற்றாண்டு காலமாக மத்திய கிழக்கில் இடம்பெறும் மோதல்களுக்கு முக்கிய காரணமாகும்.
இஸ்ரேல் என்ற நாடு 58 ஆண்டுகளுக்கு முன்னர் உலகப் படத்தில் இல்லை. இஸ்ரேல் உருவாவுதற்கு சயனிஸ்ட் இயக்கம் யுதர்களுக்கு ஒரு தாயகம் வேண்டும் என்று புலம்பெயர்ந்த யூதர்களுக்கிடையே ஆதரவு திரட்டியதே காரணமாகும். நாசி ஆட்சியில் யூதர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டது இஸ்ரேல் நாட்டை உலகநாடுகள் அங்கீகரிக்க வழிகோலியது.
பரப்பளவு
மேற்குக்கரை – 5,970 சகிமீ (2,305 சமைல்)
காஸா – 365 சகிமீ (141 சமைல்)
இஸ்ரேல்    – 22,072 சகிமீ (8,522 சமைல்)
மக்கள் தொகை
மேற்குக்கரை – 2. 6 (2006)
காஸா – 1. 3 (2006)
இஸ்ரேல் – 6. 9 மில்லியன் (2006)
மொழி          –  அராபு, ஹீப்புரூ (ஹீப்புரு மொழியை பாலஸ்தீனியரும் பேசுகின்றனர்). ஆங்கிலம் பொதுமொழி.
——————————————————————————————————————————-
உலகமெங்கும் அலைக்கழிக்கப்பட்டு நாடோடிகளாகச் சுற்றித் திரிந்த யூதர்கள் தோராயமாக 2000 ஆண்டுகள் வரை கிறிஸ்தவரின் கொடுமைகளுக்கு ஆளாகி வந்துள்ளனர். ஜெர்மனியில் 1933 – 1945 காலப் பகுதியில் ஹிட்லரின் கொடுமைகளுக்கு ஆளான யூதர்களுள் அண்ணளவாக 50 லட்சம் பேர் சித்திரவதை செய்யப்பட்டு இறந்துள்ளனர். உலகில் சிதறி வாழ்ந்த அவர்களுக்கு ஆபிரிக்காவில் ஒரு நாட்டை உருவாக்க அமெரிக்கா மற்றும் பிரித்தானியா முன்வந்தன. ஆனால் அதனை யூதர்கள் நிராகரித்து விட்டார்கள். .
கிபி 1896 இல் தியோடர் ஹெர்ஸ்ல் (வுhநழனழச ர்நசணட ( 1860-1904) யூத மக்களுக்கு ஒரு தாயகம் வேண்டும் என்பதை விளக்கி னுநச துரனநளெவயயவ (யூத நாடு) என்ற பெயரில்  ஒரு நூலை எழுதினார். கி.பி.1897 இல் முதலில் 6 யூத செல்வந்தர்கள் இவரது நூலின் கருத்துக்களை ஆராய்ந்தனர். பின்னர் சுவிட்சர்லாந்தில் 29-31ஃ8ஃ1897 இல் கூடிய யூத அறிஞர்கள் மற்றும் செல்வந்தர்கள் 204 பேர் தங்களுக்கு பலஸ்தீனில் ஒரு தாயகம் வேண்டும் என்று முடிவெடுத்தனர்.
உலக யூத காங்கிரஸ் (வுhந றுழசடன துநறiளா ஊழபெசநளள) என அழைத்துக் கொண்ட அவர்கள் இத்திட்டத்தை அய்ந்;து ஆண்டுகளில் நிறைவேற்ற முடிவெடுத்தனர்.
இதைத் தொடர்ந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த பணம் தேவைப்பட்டதால் யூதர்களின் தேசிய நிதி (துநறiளா யேவழையெட குரனெ) என்ற பெயரில் நிதியம் ஒன்றைத் தொடங்கினர்.
நிலம் வாங்கவென நில வங்கி (டுயனெ டீயமெ) ஒன்றைத் தொடங்கினார். அதோடு தமக்கென ஹீப்று மொழியில் நாட்டுப் பண்ணையும் உருவாக்கினார்கள்.  தமிழில் நம்பிக்கை என்ற கருத்தை தரும் அதன் ஹீப்ரு பெயர் ர்யவமைஎயா என்பதாகும். இவையனைத்தையும் அவுஸ்திரிய நாட்டைச் சேர்ந்த தியோடர் ஹர்ஸ்ல் என்பவரே ஏற்பாடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடாந்து உலக நாடுகளிலிருந்து பாலஸ்தீன் நோக்கி யூதர்கள் வரலாயினர். அதன் விளைவாக 1917 இல்; பாலஸ்தீனின் மக்கள்;தொகை முஸ்லிம்கள் 567,000 – யூதர்கள் 70,000 மற்றும் கிறிஸ்தவர்கள் 63,000 என இருந்தது. 1917 இல் பாலஸ்தீன் பிரிட்டனின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நாடாக மாறியதுடன் அவர்களது படையும் அங்கு குவிக்கப்பட்டது.
அப்போது பிரித்தானியாவின் வெளிநாட்டு அலுவல்களுக்குச் செயலாளராக இருந்த ஆதர் பெல்ஃபர் என்பவர் ஒரு அறிவித்தலை வெளியிட்டார். அது 1917 நவம்பர் 2 ஆம் நாள் வெளியிடப்பட்டது. அந்த அறிவித்தலை வெளியிட பிரித்தானிய அரசுக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்கியவர் செயிம் வெய்ஸ்மேன் (1874-1952) என்ற உருசிய யூதராவார். இவர் யூத–சியனிஸ அமைப்பின் (1948-1952) தலைவராவார். பின்னர் ஜெரூஸலம் ஹீப்ரு பல்கலைக்கழகத்தின் தலைவராகவும் கடமையாற்றினார்.
இதைத் தொடர்ந்து பிரித்தானியாவின் எல்லா வகையான உதவி ஒத்தாசைகளுடனும் அவர்களது படைபலத்துடனும் யூதர்கள் பல நாடுகளிலிருந்து வந்து குடியேறலாயினர். வெகு விரைவில் பாலஸ்தீனியர்களை அவர்களது இருப்பிடங்களில் இருந்து துரத்தத் தொடங்கினார்கள்.
1948 இல் பாலஸ்தீனியர்களுக்குச் சொந்தமான 400 கும் அதிகமான ஊர்கள் யூத சியோனிஸவாதிகள் வசமாயின. அவற்றில் வாழ்ந்த முஸ்லிம்கள் சிலர் கொல்லப்பட்டனர். எஞ்சியவர்கள் அகதிகளாயினர்.
கி.பி.1922 இல் அமெரிக்கா அதன் இரு சபைகளிலும் யூதர்களுக்கான ஒரு நாடு பலஸ்தீன் மண்ணில் அமைவதற்கு ஆதரவான கூட்டுத் தீர்மானங்களை நிறைவேற்றியது. 1939-5-17 இல் பிரிட்டனின் காலனித்துவ நாடுகள் தொடர்பான அலுவல்களுக்குப் பொறுப்பான அமைச்சர் மெல்கம் மெக்டொனால்ட் என்பவர் சமர்ப்பித்த வெள்ளையறிக்கை ஒன்றில் இன்னும் 10 ஆண்டுகளுள யூதர்களையும் பலஸ்தீன அரபு மக்களையும் கொண்ட சுதந்திர பலஸ்தீன் நாடொன்றை தமது நாடு அமைக்கும் ஆவல் கொண்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.
உண்மையில் இது பாலஸ்தீனைக் கூறு போடும் திட்டமாகும். முழுக்க முழுக்க பாலஸ்தீன மக்களுக்குச் சொந்தமான பலஸ்தீனை யூதர்களுக்குப் பிரித்துக் கொடுக்கும் நிலை இதன் மூலம் உருவாகியது. இவ்வறிக்கை வெளியிடப்பட்ட போது பாலஸ்தீனில் குடியேறியிருந்த வெளிநாட்டு யூதர்கள் எண்ணிக்கை 445,000 ஆக உயர்ந்துவிட்டது. .
உண்மையில் பலஸ்தீன் துண்டாடப்படுவதில் தொடக்க முதல் இறுதிவரை முழு மூச்சாக யூதர்கள் சார்பாக நடந்து கொண்ட நாடு பிரித்தானியா ஆகும். இலங்கை உட்பட உலகின் பல நாடுகளில் சிக்கல்கள் தோன்றுவதற்குக் காரணமாக இருந்ததும் பிரித்தானியாவே!
ஐக்கிய நாடுகள் சபை அதன் பொதுச் சபையில் நிறைவேற்றிய எண் 181(ஐஐ) தீர்மானத்திற்கு ஒப்ப 1947 நவம்பர் 29 ஆம் நாள் பலஸ்தீன பூமி அதன் பூர்வீகக் குடிகளான பலஸ்தீனருக்கும் (45.53மூ) யூதர்களுக்கும் (56.47மூ;) இடையில் பிரித்துக் கொடுக்கப்படுவதை ஏற்றுக்கொண்டது. அத்துடன் ஜெரூஸலம் பன்னாட்டு நிலப்பரப்பாக அமைய வேண்டும் என்றும் அத்தீர்மானம் கூறிற்று.
பிரித்தானியா 1948-5-14 இல் பாலஸ்தீனத்தை விட்டு விலகுவதற்கு ஆயத்தமானது. அன்றிரவு 10 மணியளவில் யூத தேசிய சபை இரண்டும் இணைந்து இஸ்ரேல் என்றொரு நாட்டைப் பிரகடனப்படுத்தின. அதன் ஆட்சித்தலைவராக ஸாயிம் வெய்ஸ்மேன்னும் பிரதமராக டேவிட் பென் குரியனும் தெரிவு செய்யப்பட்டனர்.
இஸ்ரேல் நாட்டை அய்யன்னாவில் உறுப்புரிமை வகித்த 56 நாடுகளில் 33 நாடுகள் ஆதரவாகவும் 13 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. 10 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
இஸ்ரேல் உருவாகி சில மணிகளில் அமெரிக்கா அதனை அங்கீகரித்தது. அடுத்து சோவியத் ஒன்றியம் அங்கீகரித்தது.
இன்று இஸ்ரேல் உலகின் பலம் வாய்ந்த நாடொன்றாக உருவாகியுள்ளது. இந்த நிலைக்கு அதைக் கொண்டு வருவதில் அமெரிக்க அரசு அதிக அக்கறை எடுத்துக் கொண்டது. அதற்குக் காரணம் அமெரிக்காவில் வாழும் 10 மில்லியன் யூதர்களது பண பலமும் அரசியல் செல்வாக்கும் ஆகும்.
நாடில்லாது நாடோடிகளாக அலைந்த யூதர்களுக்கு ஒரு நாட்டை உருவாக்க எடுத்த முயற்சி பாலஸ்தீனியர்கள் தங்களது நாட்டை இழக்க வைத்துவிட்டது. பாலஸ்தீனிய நாட்டின் 80 விழுக்காடு இன்று யூதர்கள் கையில் போய்விட்டது.
மேற்குக்கரை மற்றும் காஸா எனப் பிரிக்கப்பட்ட பாலஸ்தீனியத்தின் எதிர்காலம் இன்றைய உலக ஒழுங்கில் அமெரிக்காவின் கைகளிலேயே இருக்கிறது.   (உலகத்தமிழர் – யூன் 24, 2007)


பாகிஸ்தானில் போர்க்கொடி தூக்கியுள்ள இஸ்லாமிய அடிப்படைவாதிகள்
பாகிஸ்தானில் அடிப்படை இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையே பலத்த மோதல் நிலை உருவாகியுள்ளது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள லால் மசூதியை இராணுவம் சுற்றி வளைத்துள்ளது. லால் மசூதிப் பகுதில் தங்கி இருக்கும் இல்லாமிய அடிப்படைவாதிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையில் மூன்று நாள்களாக நடந்த மோதலில் குறைந்தது 19 பேர் இறந்தார்கள். 150 க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயத்துக்கு உள்ளானார்கள். இவர்களில் 30 பேர் துப்பாக்கிக் குண்டுகளாலும் எனையோர் கண்ணீர் புகையாலும் பாதிப்படைந்துள்ளனர்.
மோதலில் பலியானவர்களில் 4 மாணவர்களும் படைவீரர் ஒருவரும் உள்ளடங்குவர். தொலைக்காட்சி படப்பிடிப்பாளர் ஒருவரும் பொதுமக்களும் இம்மோதலுக்குள் அகப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்க அலுவலகம் ஒன்றிற்கு அருகிலுள்ள காவல் நிலையமொன்றில் மாணவர்கள் தாக்குதலை மேற்கொண்ட பின்னரே மோதல்கள் உருவாகியது.
இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரண் அடையுமாறு பாதுகாப்புப் படையினர் கட்டளை பிறப்பித்துள்;ளனர். மசூதியை விட்டு வெளியேறியவர்களை காவல்துறை கைது செய்துள்ளது.
ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு மாணவர்கள் சரணடைந்தால் மாணவர்களுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படமாட்டாது எனத் தெரிவித்துள்ள உள்நாட்டு பதில் அமைச்சர் ஷவார் வோரைச். அவர்கள் மோதலுக்கு முயற்சித்தால் சுடப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளதுடன் ஒரு துப்பாக்கி ரவைக்கு இன்னுமொரு துப்பாக்கி ரவை பதிலாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
மசூதியைச் சுற்றிலும் முட்கம்பி வேலி போடப்பட்டுள்ளது. மின் வழங்கல் துண்டிக்கப்பட்டுள்ளது. சுற்றியுள்ள பகுதியில் போக்குவரத்துக்கள் தடை செய்யப்பட்டுள்ளது. 24 மணிநேர ஊரடங்கச் சட்டம் அறிpவிக்கப்பட்டுள்ளது. இப் பகுதியிலுள்ள ஊடகவியலாளர்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அரசுக்கும் இம் மாணவ அமைப்பின் தலைவர்களுக்கும் இடையில் சமரசத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் இமாம்கள் ஈடுபட்டு வருகின்றபோதும் இதற்கு சாதகமான அறிகுறி எதுவும் தென்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
பேச்சுக்கள் நடைபெறுவதற்கான சாத்தியங்கள் இங்கில்லை என மசூதிகளின் உட்பக்கத்திலிருந்து தொலைபேசி மூலம் ராய்ட்டருக்குத் தெரிவித்துள்ள மாணவர் அமைப்பின் பதில் தலைவர் அப்துல் ராஸிட் ஹாஸி முதலில் அரசு  தனது நடவடிக்கையினை நிறுத்தினால் மட்டுமே பேச்சுக்கள் தொடர்பாக சிந்திக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
லால் மசூதியின் தலைமை இமாம் மவுலானா அப்துல் அசீஸ் என்பவராவர். இவர் பர்தா உடையணிந்து மசூதியில் இருந்து வேளியேறிய போது (புதன்கிழமை) காவல்துறையால் கைது செய்யப்பட்டார். தீவிரவாத மாணவர்கள் ஒன்றில் சரண் அடைய வேண்டும் அல்லது தப்பி ஓடவேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்துள்ளார்.
“எனக்காக நீங்கள் உங்கள் உயிரை ஈகை செய்யக் கூடாது” என அவர் கேட்டுள்ளார்.
லால் மசூதி நடத்தும் பள்ளிகளிலேயே பாகிஸ்தானின் அரசியல்வாதிகள், பிரதமர்கள், அமைச்சர்கள், படைத்தளபதிகள் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைத்தார்கள்.
அண்மைக்காலமாக இந்த மசூதியே முஷ்ராவை கொலை செய்ய வேண்டும் எனற கூப்பாடுக்கு இருப்பிடமாக விளங்கி வந்தது.
முன்னர் பாகிஸ்தானிய படைகள் மசூதி வளாகத்தை ஊடுருவி உள்ளே நுழைய முற்பட்டால் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்படும் என அடிப்படைவாதிகளால் எச்சரிக்கை விடப்பட்டது. மாணவர்கள் “சாகத் தயாராக” இருப்பதாக வெளியில் வந்தவர்கள் தெரிவித்தார்கள்.
இந்த அடிப்படைவாதிகளுக்கு மக்களிடையே ஆதரவு இல்லை என்பது ஆறுதல் தரும் செய்தியாகும். இன்னும் சொல்லப் போனால் மக்கள் அரசு எடுத்த நடவடிக்கையை இட்டு மகிழ்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால் அடிப்படைவாதிகளது கோட்டையாகக் கருதப்படும் வட-மேற்கு எல்லைப்புற மாகாணத்தில் வாழும் மக்கள் மாணவர்களை ஆதரிக்கிறார்கள். மாணவர்களில் பெருமபாலோர் அந்த மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்.
மசூதியில் சுமார் 1,000 பேர் அளவில் அடைபட்டுக் கிடக்கிறார்கள். இவர்களில் சிலர் ஆயுதம் வைத்திருக்கிறார்கள். உள்ளே அடைப்பட்டுக் கிடப்பவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் மாணவிகள் ஆவர்.
இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பாகிஸ்தான் அரசு சாரியா சட்டத்தை இஸ்லாமாபாத்தில் நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை வைத்துள்ளார்கள். சிறிது காலமாகவே இந்த மாணவர்கள் சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டு சிகப்பு விளக்குப் பகுதிகளில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களை கைது செய்து தலிபான் பாணியில் தண்டனை வழங்கி வந்தார்கள்.
இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கை கால்களை வருடிப் பிடித்துவிடும் சீன அழகிகளை கடத்தியபோதுதான் நிலைமை கட்டு மீறிப் போவதாக அரசு நினைத்தது. தன் பங்குக்கு சீனா தனது நாட்டு குடிமக்கள் அடிப்படைவாதிகளால் கடத்தப்பட்டதற்கு கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தது.
சாரியா என்பது இஸ்லாமிய மதச் சட்டமாகும். இந்த அரபு மொழிச் சொல்லின் பொருள் வழி அல்லது பாதை என்பதாகும். சாரியா குரானையும் (இஸ்லாமின் புனித நூல்) ஹதித்தையும் (முகமது நபிகளின் பொன்மொழிகள்) இரண்டையும் அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்ட சட்டம் ஆகும்.
இந்தச் சட்டம் முஸ்லிம்களது நாளாந்த தனிப்பட்ட மற்றும் பொது வாழ்க்கையை முழுமையாக ஒழுங்குபடுத்துகிறது. அரசியல், பொருளியல், காப்பகம், வணிகம், உடன்படிக்கை, குடும்பம், பாலியல். துப்பரவு மற்றும் சமுதாயம் தொடர்பான சகலவற்றையும் சாரியா சட்டம் ஒழுங்குபடுத்துகிறது.
இஸ்லாமிய மதம் ஏனைய மதங்களில் இருந்து முற்றாக வேறுபடுகிறது. தொழுகைக்குரிய மசூதிகளே அரசியல் பற்றிப் பேசவும் வாதிக்கவும் தோதான இடமாகக் கருதப்படுகிறது. வெள்ளிக்கிழமைத் தொழுகைக்குப் பின்னரே முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள்.
கிறித்துவ சமயம், சமயத்தையும் அரசியலையும் கலப்பதில்லை. கிறித்துவ நாடுகளில் சமயமும் அரசும் பிரித்தே வைக்கப்பட்டுள்ளது.
இராணுவமும் துணை இராணுவமும் மசூதி வளாகத்தையும் அதன் அருகிலுள்ள பள்ளிக்கூடத்தையும் சுற்றி வளைத்துள்ளார்கள். மூன்று இடங்களில் மதிலை உடைத்து உள்புகுந்துள்ளனர்.
இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாக ஆட்சித் தலைவர் தளபதி பேரஸ் முஷாரவ் மீது கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு கிழமையாக அவர் தனது பதவியைக் காப்பாற்ற கடும் போராட்டம் நடத்திக் கொண்டுள்ளார். எதிர்க்கட்சியினரின் போர் முரசு கொட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.
நாட்டின் தலைமை நீதிபதிக்கு எதிரான பேரஸ் முஷ்ராவின் சண்டை அவரது படிமத்தை மழுங்கடித்துள்ளது.
எல்லாவற்றிற்கும் மேலாக இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு எதிராக முஷ்ராவ் கடும் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதால் அவரது மேற்குலக நட்பு நாடுகள் பொறுமை இழந்து வந்தன.
கஷ்மீரில் இந்தியப் படைகளுக்கு எதிரான தாக்குதல்களை முற்று முழுதாக இஸ்லாமிய அடிப்படைவாதிகளே நடாத்தி வருகிறார்கள். இவர்கள் பாகிஸ்தான் இராணுவத்தோடு நெருங்கிய உறவு வைத்துள்ளார்கள். அது மட்டும் அல்லாது பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கைக்கு ஏதுவாக இந்த அடிப்படைவாதிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள்.
லால் மசூதிச் சிக்கல் முஷ்ராவைத் தாக்க தூங்கிக் கிடந்த எதிர்க்கட்சிகளுக்கு பெரிய தடியைக் கொடுத்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் ஆறு மாதத்தில் ஆப்கனிஸ்தானில் தலிபான்கள் தங்கள் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியது மேற்கு நாட்டு தலைநகரங்களில் கவலையை அதிகரித்தது.
ஆனால் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்புப் படையினருக்கு கடந்த மூன்று நாள்களாக முஷ்ராவ் காட்டி வரும் பச்சைக்கொடி அவரது படிமத்தை மீண்டும் தூக்கி நிறுத்தியுள்ளது. பதவியில் எட்டு ஆண்டுகள் நீடித்துவிட்ட முஷ்ராவ் மேலும் தொடர்ந்து அந்தப் பதவியில் தொடரும் வாய்ப்பை அதிகரித்துள்ளது.
இரண்டாவது உலகப் போருக்குப் பின்னர் இஸ்லாமிய அடிப்படைவாதம் தலைதூக்கத் தொடங்கியது. மற்றைய மதங்களிலும் ஒரு மறுசிந்தனை ஏற்பட்டாலும் அது இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஒத்ததாக இருக்கவில்லை.
இன்றைய ஒற்றைத் துருவ வல்லரசு காலத்தில் அதற்கு எதிராக இஸ்லாமிய அடிப்படைவாதமே மோதிக் கொண்டிருக்கிறது.
மத்திய கிழக்கு, ஆபிரிக்கா, இந்தோனிசியா, மலேசியா, பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான் போன்ற நாடுகளில் இஸ்லாமிய அடிப்படைவாதம் பெரிய அரசியல் சக்தியாக எழுந்து நிற்கிறது.
1917 ஆம் ஆண்டு உருசியாவில் ஏற்பட்ட புரட்சி தீவிர இஸ்லாமிய இயக்கங்களுக்கு புத்துயில் கொடுத்தது.
இரண்டாவது உலகப் போரின் பின்னர் இஸ்லாமிய அடிப்படைவாதம் எதிர்ப் புரட்சி சக்திகளுக்கு ஆதரவு கொடுத்தன.
இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு இராணுவப் பயிற்சி கொடுத்து, ஆயுதம் வழங்கி அவர்களை ஆப்கனிஸ்தானில் உருசியாவுக்கு எதிpராக அமெரிக்கா ஏவிவிட்டது. இதற்காக சிஅய்ஏ கோடிக்கணக்கான டொலர்களைச் செலழித்தது.
1996 இல் காபுல் கைப்பற்றப்பட்டதற்கு முக்கிய காரணம் அமெரிக்காவுக்கும் தலிபானுக்கும் இடையில் செய்துகொண்ட இரகசிய உடன்படிக்கையாகும்.
இருந்தும் இன்று இரான் நீங்கலாக இஸ்லாமிய தீவிரவாதம் இஸ்லாமிய நாடுகளில் பரந்துபட்ட சமுதாய அடித்தளத்தை உருவாக்கத் தவறிவிட்டது.
பாகிஸ்தானில் இஸ்லாமிய அடிப்படைவாதக் கட்சிகள் 5 விழுக்காட்டு வாக்குகளுக்கு மேல் பெறமுடியவில்லை.
லால் மசூதியில் போர்க்கொடி தூக்கியுள்ள இஸ்லாமிய தீவிரவாதிகளை பாகிஸ்தானிய படைகள் அப்புறப்படுத்தும் போது அது பாகிந்தானுக்கு உள்ளும் உலகளாவிய மட்டத்திலும் இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு பெரிய பின்னடைவாக இருக்கும். (உலகத்தமிழர் – யூலை, 2007)

இழந்த வாழ்வுரிமையை மீண்டும் பெறும் டிகோ கார்சியா மக்கள்
மூர்த்தி சிறிதென்றாலும் கீர்த்தி பெரிதென்று பக்தர்கள் சொல்வார்கள்.
தீவு சிறிதென்றாலும் அதன் கேந்திர முக்கியத்துவம் பெரிது.
டிகோ கார்சியா. சாதாரண ஆளுக்கு மட்டுமல்ல புவியியல் படித்தவரது வாயில் கூட இலேசில் நுழைய முடியாத சொல். இது ஒரு ஆளின் பெயரல்ல. உலகப் பந்தின் ஒரு மூலையில் யார் பார்வையிலும் படாத ஒரு தீவின் பெயர்.
ஆனால் அமெரிக்காவைப் பொறுத்தளவில் இந்துப் பெருங்கடலில் உள்ள 66 சதுர கிமீ ; பரப்புடைய டிகோ கார்சியா தீவு உலகில் மிகவும் விலைமதிக்க முடியாத தொத்தாகும்.
டிகோ கார்சியா உட்பட சாகோஸ் (ஊhயபழள) தீவுகளில் வாழ்ந்த பழங்குடி மக்கள் 60 களிலும் 70 களிலும் அங்கிருந்து பிரித்தானியா அரசால் வெளியேற்றப்பட்டார்கள்.
வெளியேற்றப்பட்டதற்குக் காரணம் பிரித்தானிய அந்தத் தீவை அமெரிக்காவிற்கு நீண்ட கால வாரத்துக்கு (குத்தகைக்கு) 1966 இல் கொடுத்துவிட்டது. இந்தக் குத்தகை 2016 மட்டும் நீடிக்கும்.  இன்று டிகோ கார்சியா தெற்காசியாவில் உள்ள அமெரிக்காவின் மிகப் பெரிய படைத் தளமாகும்.
சாகோஸ் தீவுகள் பற்றிய முக்கிய தரவுகள் பின்வருமாறு.
முழுப்பெயர் – பிரித்தானிய இந்திய பெருங்கடல் ஆட்புலம் (டீசவைiளா ஐனெயைn ழுஉநயn வுநசசவைழசல)  சாகோஸ் தீவுகள் எனவும் அழைக்கப்படுகிறது. அதில் அடங்கியுள்ள 66 தீவுகளில் முக்கிய தீவு டிகோ கார்சியா.
இருப்பு – நிரைகோடு 72.25 பாகை கிழக்கு. குறுக்குக்கோடு 7.20 பாகை தெற்கு. இந்தத் தீவுகள் தென் இந்தியாவுக்கு 1,000 கல் தெற்கிலும் ஆபிரிக்காவுக்கும் இந்தோனிசியாவுக்கும் இடையிலும் இருக்கின்றன.
பரப்பரளவு – 54,400 சதுர கிமீ (பெரும்பாலும் பெருங்கடல்). நிலஅளவு 66 சதுர கிமீ மட்டுமே. கடலோர நீளம் 698 கிமீ. கடல் மட்டத்தில் இருந்து 2 மீட்டருக்கு மேல் உயரமான நிலம் இல்லை. குதிரை இலாடம் வடிவில் அமைந்துள்ள இந்தத் தீவு ஒரு இயற்கைத் துறைமுகம் ஆகும். அமெரிக்காவின் முழுக்கடற்படைக் கப்பல்களும் அங்கு தங்கி நிற்க முடியும். நீண்ட விமான ஓடுபாதைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன.
வளம் – தென்னை பெருமளவில் பயிரிடப்படுகிறது. தீவைச் சுற்றிய கடலில் 700 க்கும் அதிகமான மீனினங்கள் வாழ்கின்றன.
மக்கள்தொகை – 1965 இல் அங்கு வாழ்ந்த சுமார் 1,500 பேர் அமெரிக்கா படைத்தளம் அமைக்க வசதியாக மொரிசியஸ் மற்றும் சீசெல்ஸ் தீவுகளில் பலவந்தமாகக் குடியேற்றப்பட்டார்கள். இப்போது இந்தத் தீவுகளில் சுமார் 1,700 அமெரிக்க படையினரும் 1,500 உடன்படிக்கையாளர்களும் இருக்கிறார்கள்.
வரலாறு – 16 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தத் தீவுகள் முதலில் பிரஞ்சு நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின் ஒல்லாந்தர், பிரித்தானிய கிழக்கிந்திய கம்பனி எனக் கைமாறியது. மொரேசியஸ் தீவோடு இணை;க்கப்பட்டிருந்த சாமோஸ் தீவை 1965 இல் 3 மில்லியன் பவுணுக்கு பிரித்hனியா விலைக்கு வாங்கியது.
அறுபதுகளிலும் எழுபதுகளிலும் இந்துப் பெருங்கடலில் இருந்த 66 பவழப்பாறைத் தீவுகளில் வாழ்ந்த சுமார் 1,500 பேர் அங்கிருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்கள். 1776 இல் மடகஸ்க்கர், மொசாம்பிக் மற்றும் செனகல் நாடுகளில் இருந்த அடிமைகளை பிரஞ்சுக்காரர்கள் இந்தத் தீவுகளில் குடியமர்த்தினார்கள்.
டிகோ கார்சியாவை பிரித்தானியா அமெரிக்காவிற்கு 1966 ஆம் ஆண்டு குத்தகைக்கு எழுதிக் கொடுத்தது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரித்தானியரது ஆட்சிக்கு உள்பட்ட இந்த மக்கள் சொந்தமாக வீடு வாசல்கள் கட்டி வாழ்ந்தார்கள். ஒருவித கலப்பு மொழி (ஊயசநழடந) பேசிய இந்த மக்கள் தாங்கள் வாழ்ந்த தீவுகளை சொர்க்கம் என சித்திரித்தார்கள்!
ஆனால் இந்தத் தீவுகளில் முக்கிய தீவான டிகோ கார்சியாவில் பாரிய அமெரிக்க படைத்தளம் அமைப்பதற்காக சாக்கோசியா தீவுகளில் வாழ்ந்த பெரும்பான்மையான மக்கள் மொரீசியஸ் மற்றும் சீசெல்ஸ் நாடுகளுக்கு கட்டாயமாக அனுப்பப்பட்டார்கள்.
டிகோ கார்சியா பிரித்தானியாவிடம் இருந்து அமெரிக்காவிற்குக் கைமாறியதும் அமெரிக்க கடற்படையின் கட்டுமானப் பணியாளர்கள் டிகோ கோசியாவில் (1971 – 01 -23); வந்து இறங்கினார்கள். 1971 – 03- 09 இல் அமெரிக்க கடற்படைக் கப்பல் ழேசழெn ஊழரவெசல டிகோ கார்சியா வந்து நங்கூரம் இட்டது. அதில் இருந்து கடற்படைத்தளம் கட்டுவதற்கான கட்டுமானத் தளபாடங்கள் இறக்கப்பட்டன. 1971 -07 -28 இல் இந்த கட்டுமானப் பணி முடிவுற்றது.
1975 – 1976 ஆண்டுகளில் இந்தத் தளத்தை மேலும் வலுப்படுத்த அமெரிக்க காங்கிரஸ் 28.6 மில்லியன் டொலர்களை ஒதுக்கியது.
சாகோஸ் தீவுகளில் இருந்து கட்டாயமாக பிரித்தானியாவால் வெளியேற்றப்பட்ட மக்கள் சும்மா இருந்துவிடவில்லை. பிரித்தானிய நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்கள். நேற்று ( மே 23) அந்த மக்களுக்குச் சாதகமாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. தீர்ப்பைக் கேட்க திரளான சாகோசியர்கள் கூடியிருந்தார்கள். அவர்கள் தங்கள் தாயக மண்ணுக்குத் திரும்பிப் போகலாம் என்ற நீதிமன்றத் தீர்ப்பைக்கேட்டு ஆடிப்பாடினர்.
நாற்பது ஆண்டுகள் நாடின்றி, வீடுவாசலின்றி, தொழிலின்றி வறுமையில் வாடிய சுமார் 5,000 மக்கள் (வெளியேற்றப்பட்ட பின்னர் பிறந்தவர்களையும் சேர்த்து) தங்களை மீளக்குடியமர்த்துமாறு பிரித்தானிய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
மேன்முறையீட்டு நீதிமன்றம் டிகோ கார்சிய தீவுமக்கள் அவர்களது சொந்த மண்ணுக்குத் திரும்பக் கூடாது என 2004 ஆம் ஆண்டு பிரித்தானிய அரசு பிறப்பித்த கட்டளையை தலைகீழாகக் கவிழ்த்துத் தீர்ப்பளித்தது. அரச கட்டளை செல்லுபடியாகாது என்று கூறியதுமட்டுமல்ல அரசு தனது அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளது (யடிரளந ழக pழறநசள) எனவும் தீர்ப்பளித்துள்ளது.
சாகோசியர்களின் தலைவர்களில் ஒருவரான ஒலிவர் பன்கூல்ற் (ழுடiஎநச டீயnஉழரடவ)  பேசும்போது “நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு மட்டுமல்ல எங்களது தாயகத்தைவிட்டு வெளியேற்றப்பட்ட மக்கள் அனைவரும் அவ்வாறே மகிழ்ச்சி அடைகிறார்கள். நீதிக்கு இன்று சிறப்பான நாள். நாங்கள் எண்ணிக்கையில் மிகச் சிலராக இருந்த போதும் எங்களுக்கும் உரிமைகள் இருக்கிறது என்பதை பெரிய எண்ணிக்கையுள்ள மக்களுக்கு எடுத்துக்காட்டியுள்ளோம்.”
ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தத் தீவுமக்கள் தொடுத்த வழக்கில் பிரித்தானிய உயர் நீதிமன்றம் அவர்களது வெளியேற்றம் சட்ட முரணானது எனத் தீர்ப்பளித்தது. ஆனால் 2004 ஆம் ஆண்டு பிரித்தானிய அரசு இந்த மக்கள் மீண்டும் தங்கள் தாயகத்துக்குச் செல்வதை அவை கட்டளை அறிவித்தல் (ழுசனநச in ஊழரnஉடை)  மூலம் தடைசெய்து ஆணை பிறப்பி;த்தது.
நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் பிறப்பித்த இந்தக் கட்டளையைத்தான் மேன்முறையீட்டு நீதிமன்றம் இப்போது கவிழ்த்துள்ளது. மக்களாட்சிக் கோட்பாட்டுக்கு கேடு விழைவித்த பிரித்தானிய அரசின் கட்டளையை நீதிமன்றம் கவிழ்த்ததின் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது.
எனினும் இந்த மக்களுக்கு பிரித்தானிய அரசு இழப்பீடு கொடுத்து அவர்களை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்த நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அவர்கள் தங்கள் தாயகத்துக்குத் திரும்பிப் போக முடியும். அப்படிச் செய்யாவிட்டால் நீதிமன்றத் தீர்ப்பு வெறும் ஏட்டுச் சுரைக்காய் ஆகிவிடும்.
மொரிசியஸ் தீவுக்குச் சுதந்திரம் வழங்கு முன்னர் 1965 இல் இலண்டனில் நடந்த மாநாட்டில் சாகோசியாவை பிரித்தானியாவிற்கு விற்குமாறு பிரதமர் சீவூசகர் இராம்கூலம் மீது அழுத்தம் பயன்படுத்தப்பட்டது. அதன் விளைவாக பிரித்தானியா காசோ தீவுகளை அடிமாட்டு விலைக்கு (3 மில்லியன் பவுண்) வாங்கியது.
வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் அரசு மேன்முறையீட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து பிரபுக்கள் அவைக்கு (ர்ழரளந ழக டுழசனள) மேன்முறையீடு செய்வதையிட்டு ஆலோசிப்பதாகத் தெரிவித்தார். “இந்தத் தீர்ப்பு எங்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. அதனை எதிர்த்து மேன்முறையீடு செய்வதற்கான வேண்டுகோள் (டநயஎந வழ யிpநயட) புறக்கணிக்கப்பட்டுள்ளது. இருந்தும் வெளியுறவு அமைச்சர் பிரபுக்கள் அவைக்கு மேன்முறையீடு செய்யவேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்வார். அதற்கு இன்னும் ஒரு மாதம் இருக்கிறது” என்றார்.
கடந்த காலத்தில் பிரித்தானிய வெளியுறவு அமைச்சு இந்த மக்களுக்கு நீதி வழங்கக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்து வந்திருக்கிறது. அதற்காக சட்டத்தின் பொந்து சந்துகளில் புகுந்து அநாகரிகமாக முறையில் நடந்துள்ளது. எனவே மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பிரபுக்கள் அவைக்கு வெளியுறவு அமைச்சு மேன்முறையீடு செய்தால் அதையிட்டு வியப்படைய வேண்டியதில்லை.
சாகோஸ் தீவுமக்களின் தலைவரான பான்கூல்ட் மொரிசியஸ் தீவுக்கு அவரது குடும்பத்தோடு நாடு கடத்தப்பட்டவர்களில் ஒருவர். அவர் என்ன சொல்கிறார்?
“நாங்கள் சொர்க்கத்தில் இருந்தோம். எங்களுக்கு எமது வாழ்க்கைமுறையும் பண்பாடும் இருந்தது. எல்லோருக்கும் சொந்தவீடு இருந்தது. சொந்தத் தோட்டம் இருந்தது. தொழில் இருந்தது. நாங்கள் மொரிசியஸ் சமுதாயத்தோடு ஒன்றிவாழ முடியாது போய்விட்டது. காரணம அது எங்கள் பிறப்பிடம் அல்ல. எங்களது தீவுகளில் இருந்து ஏன் எங்களை விரட்டினார்கள் என்பது தெரியவில்லை. அது அநீதியானது. எனது தந்தையார் இறந்துவிட்டார். தாயார் தனது கடைசி நாள்களை தனது பிறப்பிடமான சாகோசில் கழிக்க விரும்பகிறார். எனது குழந்தைகளுக்கு எனது பிறப்பிடம் பற்றிச் சொல்லி இருக்கிறேன். அவர்களை அங்கு கூட்டிப் போவேன்.”
பல தலைமுறையாக சாக்கோசியர் தீவுகளில் வாழந்த சாக்கோசிய மக்கள் மீண்டும் தங்கள் தாயகத்துக்கு மீள்குடியேறுவதை அமெரிக்கா பாதுகாப்பைக் காரணம் காட்டி முழு மூச்சாக எதிர்க்கிறது. டிகோ கார்சியாவுக்கு மட்டுமல்ல அதைச் சுற்றியுள்ள எந்தத் தீவுக்கும் அவர்கள் திரும்புவதை அமெரிக்கா எதிர்க்கிறது.
அமெரிக்க வல்லாண்மைக்கு இந்த நிலைப்பாடு ஒன்றும் புதிதல்ல.
ஊருக்குத்தான் உபதேசம் கண்ணே உனக்கில்லையடி என் பெண்ணே என்று சொன்ன பாhதிரியார் மாதிரி மக்கள் ஆட்சி, சட்டத்தின் ஆட்சி, நீதி நியாயம் பற்றி வாய்கிழிய உபதேசிக்கும் அமெரிக்கா அவற்றை செயல்முறையில் கடைப்பிடிப்பதில்லை.
அமெரிக்காவிற்கு ஏன் டிகோ கார்சியா தீவு தேவைப்பட்டது? அங்கு ஏன் அமெரிக்கா ஒரு பாரிய படைத்தளத்தை உருவாக்க வேண்டும்? இதற்கான விடை சுலபமானது.
முதலாவது அரசியல் அடிப்படையில் பாரசீக வளைகுடாவில் இருந்து அமெரிக்கா மற்றும் அய்ரோப்பிய நாடுகள் எண்ணெய்யைக் கொண்டு செல்வதற்கு வேண்டிய கடற்பாதைகளுக்கு (அன்றைய) சோவியத் ஒன்றியம் அச்சுறுத்தலாக இருப்பதைத் தடுக்க வேண்டும். அரசியல் மட்டத்தில் இராக்கை ஆதரித்த சோவியத்தின்; செல்வாக்கை முறியடிக்க வேண்டும்.
இரண்டாவது இராணுவ அடிப்பபடையில் டிகோ கோர்சியாவில் உள்ள படைத்தளத்தில் இருந்து கொண்டு ஏவுகணைகள் மூலம் சோவியத்தைத் தாக்கலாம்.
1991 ஆம் ஆண்டு இடம்பெற்ற வளைகுடாப் போரில் டிகோ கார்சியா முக்கிய பங்கு வகித்தது. பி-52 குண்டுத்தாக்கு விமானங்களுக்கு தளமாக விளங்கிய டிகோ கார்சியாவில் இருந்து 1998-12-17 இல் 100 அதிதொலைவு ஏவுகணைகள் இராக் மீது அமெரிக்க இராணுவம் ஏவியது.
மீண்டும் 2001- 10- 07 இல் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஏவுகணைத் தாக்குதலுக்கு டிகோ கார்சியா பயன்படுத்தப்பட்டது. டிகோ கார்சியா தென் இராக்கில் இருந்து 3,000 கல் தொலைவில் இருக்கிறது. ஆப்பானிஸ்தானுக்கு அதைவிட சற்று அண்மையில் உள்ளது. பி – 52 விமானங்கள் எண்ணெய் நிரப்பாமல் தொடர்ந்து 8,800 கல் பறக்கக் கூடியன.
2006 இல் 1,000 அமெரிக்க படையினர், 40 பிரித்தானிய படையினர் டிகோ கார்சியாவில் இருக்கிறார்கள். மேலதிகமாக 2,400 தொழிலாளர்கள் பணி புரிகிறார்கள். இவர்களில் பலர் பிலிப்பீன் மற்றும் ஸ்ரீலங்கா நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
யோன் பில்ஜர் (துழாn Pடைபநச) என்பவர் டிகோ கார்சியாவில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்ட மக்களது அவலத்தைச் சித்திரித்து ஒரு குறும் படத்தை (ளுவநயடயiபெ ய யேவழைn) தயாரித்தார். அது சுழலயட வுநடநஎளைழைn ளுழஉநைவல அமைப்பின் சிறந்த குறும்படத்துக்கான பரிசைத் தட்டிக்கொண்டு போனது.
சுமார் 42 ஆண்டுகால இடைவிடாத போராட்டத்தின் பின்னர் இழந்த வாழ்வுரிமையை மீண்டும் டிகோ கார்சியா மக்கள் பெற்றுள்ளார்கள்.
ஆனால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஏற்றுக்கொள்ளுமா? அதனை நடைமுறைப்படுத்துமா? என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.
சமூக, பொருளாதார, அரசியல் மட்டத்தில் கடைசிப் படிக்கட்டில் வாழ்ந்த இந்த மக்களுக்கு தங்களை நாகரிகம் படைத்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பிரித்தானியாவும் அமெரிக்காவும் அநாகரிகமாக நடத்தியுள்ளன.  பிரித்தானியாவின் வரலாற்றில் டிகோ கார்சியா ஒரு பெரிய கருப்புப் புள்ளி. எத்தனை தலைமுறை சென்றாலும் அதனை அழிக்க முடியாது. (உலகத்தமிழர் – மே 25, 2007)


ஒரு பேரன், இரண்டு பிள்ளைகள் மூன்று கொலைகள்!

பட்டிமன்றத்தில் பேசுவதற்கு தலைப்பு இல்லாமல் தவித்தவர்களுக்கு இப்போது அவல் கிடைத்திருக்கிறது.

தாயா? தாலிகட்டிய மனைவியா? எனப் பட்டிமன்றம் நடத்தியவர்கள் இனிமேல் மகனா? பேரனா? என்ற தலைப்பில் வழக்குரைக்கலாம்!

தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் திரைப்படங்களில் ஊரை அடித்து உலையில் போடும் அரசியல்வாதிகளையும் அவர்களது அடியாட்களையும் அவற்றைக் கண்டுகொள்ளாது விட்டுவிடும் காவல்துறையையும் காட்டுவார்கள். அதனைப் பார்த்து விட்டு ‘இப்படியும் நடக்குமா?’ என்று அய்யப்பட்டவர்களுக்கு கடந்த மே 9 இல் மதுரையில் தினகரன் மற்றும் சன் தொலைக்காட்சி அலுவலகங்கள் பட்டப்பகலில் காவல்துறை நெட்டமரங்கள் போல் பார்த்துக்கொண்டிருக்கத் தாக்கப்பட்டதும் அதில் மூன்று உயிர்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டதும் திரைப்படங்களில் காட்டப்படுவது ஒன்றும் மிகையல்ல என்பதைக் காட்டிவிட்டது. .

ஒரு குடும்பத்தில் சண்டையைத் தோற்றுவிக்க ஒரு கருத்துக்கணிப்புப் போதும். தினகரன் நாளேட்டில் வெளிவந்த கருத்துக் கணிப்பு முதல்வர் குடும்பத்தில் மோதலை உருவாக்கவும் தயாநிதி மாறனது அமைச்சர் பதவி பறிபோகவும் காலாக அமைந்துவிட்டது! படுவேகத்தில் கெட்டிக்கார அமைச்சர் என்ற நல்ல பெயரெடுத்து வானத்துக்கு உயர்ந்த மாறன் அதே வேகத்தில் தரையில் விழுந்துவிட்டார்! ரூபாய்க்கு இந்தியா முழுதம் ‘ஹலோ’ சொல்ல வைத்தவர் இப்படிச் சறுக்குவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

கருத்துக்கணிப்பில் ஒரு கேள்வி. முதல்வர் கருணாநிதியின் வாரிசு யார்? கருணாநிதியின் வாரிசு மு.க. ஸ்டாலின்தான் என்பது பழைய செய்தி. கருணாநிதியின் பொன்விழாவின் போது ஸ்டாலின் துணை முதல்வராக முடிசூட்டப்படுவார் என்ற வதந்தி அரசியல் வட்டாரத்தில் உலா வந்துகொண்டிருந்தது. நிலைமை அப்படி இருக்க இப்படி ஒரு கேள்வியா?

தயாநிதி மாறன் திமுக தலைவர்கள் மத்தியில் ஒரு வித்தியாசமான படிமத்தோடு வலம் வந்தார். வேட்டி சால்வைக்குப் பதில் வெளிநாட்டுக் கோட்டு சூட்டு கழுத்துப் பட்டியோடு காட்சியளித்தார். பில் கேட்ஸ் உட்பட வெளிநாட்டு தொழில் அதிபர்களுடன் சரிசமமாகப் பழகினார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிக்காரர்கள் கேள்விகளுக்கு எல்லாம் சரளமான ஆங்கிலத்தில் பதில் அளித்தார். பிரதமர் மான்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி ஆகியோரது பாராட்டுதல்களைப் பெற்றார். சும்மா சொல்லக்கூடாது. தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த தயாநிதிமாறன் இந்திய அளவில் “திறமையான அமைச்சர்” எனப் போற்றப்பட்டார்!

இந்த இடத்தில் முதல்வர் கருணாநிதி குடும்பம் பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும். .

திரவாரூர் திருக்குவளையில் பிறந்த முத்துவேலர் கருணாநிதி (03-06-1924) தனது 20 ஆவது அகவையில் பத்மாவதி என்பவரை மணந்து கொண்டார். பத்மாவதி இசைச் சித்தர் சி.எஸ். சிதம்பரம் ஜெயராமனின் உடன்பிறப்பு. நோயினால் இவர் இறந்தபோது தயாளுவை கருணாநிதி மணந்து கொண்டார். பின்னர் 1969 ஆம் ஆண்டு தன்னோடு நாடகத்தில் (காகிதப் பூ) நடித்துக் கொண்டிருந்த இராசாத்தியை மணந்து கொண்டார்.

கருணாநிதி – பத்மாவதி இருவருக்கும் 1948 இ.ல் முத்து பிறந்தார். எம்ஜிஆருக்குப் போட்டியாக .முத்துவை திரைப்படங்களில் நடிக்க கருணாநிதி எடுத்த முயற்சி வெற்றிபெறவில்லை. கருணாநிதி கதை வசனம் எழுதித் தயாரித்த பிள்ளையோ பிள்ளை படத்தில் எம்ஜிஆர் போல் முத்து நடிக்க முனைந்து தோல்வி கண்டார். தொடர்ந்து அஞ்சுகம் பிச்சர்ஸ் பூக்காரி, சமையல்காரன், இங்கேயும் மனிதர்கள் போன்ற படங்களில் நடித்துவிட்டுக் காணாமல் போய் விட்டார். சமையல்காரன் படத்தில் வாலி எழுதி எம்.எஸ். விசுவநாதன் இசையமைத்த “நான் பாடிடும் கவிதையின் சந்தம் அந்தப் பாவையின் பார்வைக்குச் சொந்தம்“ பாடலை இனிமையான குரலில் பாடியிருந்தார். குடிப்பழக்கத்துக்கு அடிமையாகிவிட்ட முத்துவை கருணாநிதி தள்ளி வைத்தார்.

தயாளுக்குப் பிறந்த பிள்ளைகளே அழகிரி, ஸ்டாலின், செல்வி, தமிழரசு. கனிமொழி இராசாத்தியின் ஒரே மகள். அழகிரி குடும்பத்தில் ஒரு “கருப்பு ஆடு” எனப் பார்க்கப்படுகிறார். மதுரைக்கு அவர் அனுப்பட்டதற்கு அதுதான் காரணம்.

முரசொலி மாறன், செல்வம் இருவரும் கருணாநிதியின் அக்கா பிள்ளைகள். சொர்ணம் மற்றும் அமிர்தம் இன்னொரு அக்கா பிள்ளைகள்.

மாறனின் (1934-2003) தாயார் இறந்தபின் கருணாநிதி அவரை வளர்த்தெடுத்தார். முரசொலி இதழுக்கு ஆசிரியராக மாறன் இருந்ததால் அந்தப் பெயர் முன்னொட்டாக ஒட்டிக் கொண்டது.

1975 ஆம் ஆண்டு மிசா சட்டத்தின் கீழ் மாறன் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார். திமுகவுக்கும் தனக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்று எழுதிக் கொடுத்தால் விட்டுவிடுவதாகச் சொன்னதை மாறன் நிராகரித்தார்.

கருணாநிதிக்கு தனது மருமகன் மாறன் மீது தனிப் பற்று இருந்தது. அவரை அமைச்சராக்கி அழகு பார்த்தார். தனது “மனட்சாட்சி” என்று பாராட்டி மகிழ்ந்தார்.

தனக்கு அல்லது ஸ்டாலினுக்குப் போட்டியாக வருபவர்களைக் கட்சியைவிட்டு தூக்கி எறிவதை கருணாநிதி வழக்கமாக வைத்திருக்கிறார். எம்ஜிஆரின் திரைப்படச் செல்வாக்கைக் குறைப்பதற்கே முத்துவை கருணாநிதி நடிக்க வைத்தார். கட்சிக் கணக்கைக் காட்டுமாறு கேட்ட எம்ஜிஆரை திமுகவில் இருந்து 1972 ஆம் ஆண்டு வெளியேற்றினார். அடுத்து வைகோ புலிகளோடு சேர்ந்து தன்னைக் கொல்லச் சதிசெய்கிறார் எனப் பழி சுமத்தி அவரையும் (1993) வெளியேற்றினார். இப்போது தயாநிதி மாறன் தனது குடும்பத்துக்குப் போட்டியாக முளைத்துவிட்டதாக எண்ணி வெளியேற்றப்பட்டுள்ளார்.

1972 இல் திமுக இல் இருந்து வெளியேற்றப்பட்ட எம்ஜிஆர் 1977 இல் ஆட்சியைப் பிடித்து முதலமைச்சர் ஆனார். அடுத்தடுத்து மூன்று முறை ஆட்சியைக் கைப்பறிய எம்ஜிஆர் 1987 இல் இறந்தார். அது மட்டும் கருணாநிதியால் அரசியலில் தலைதூக்க முடியவில்லை.

பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை 2007 ஆம் ஆண்டின் மிகப் பெரிய கோடீசுவரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 36 பேர் இந்தியர்கள் ஆவர்.

வழக்கம் போல மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர் பில் கேட்ஸ்தான் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.

பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 36 மகா கோடீசுவரர்கள் இடம் பெற்றுள்ளனர். சன் டிவி அதிபர் கலாநிதி மாறனுக்கு 349 ஆவது இடம் கிடைத்துள்ளது. அவரது சொத்து மதிப்பு ரூ. 11,700 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு தமிழன் கோடீசுவரனாக இருப்பதையிட்டு தமிழர் பெருமைப்பட்டே ஆகவேண்டும்!

சன் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு (ளுரn வுஏ நேவறழசம) 14 தொலைக்காட்சிகள், 4 தென்னிந்திய மொழி நாளேடுகள், 2 தமிழ் நாளேடுகள், சுமங்கலி கேபிள், 4 பண்பலை வானொலிகள், 4 தமிழ் இதழ்கள் இருக்கின்றன. சன் தொலைக்காட்சியைப் பார்ப்போர் எண்ணிக்கை 46.7 விழுக்காடு.

கருணாநிதியின் விருப்பத்துக்கு மாறாகத் திரனகரன் நாளேட்டை 300 கோடிக்கு சன் நிறுவனம் வாங்கியதாகச் சொல்லப்படுகிறது.

2005 ஆம் ஆண்டில் சன் தொலைக்காட்சி ஈட்டிய வருவாய் ரூபா 301 கோடி. நிகர வருவாய் 78 கோடி. அதன் மிகு பெறுமதி 467.73 கோடி.

சன் தொலைக்காட்சியில் 89.99 விழுக்காடு பங்கு மாறனுக்குச் சொந்தமானது. சென்னைப் பல்கலைக் கழகப் பட்டதாரியான மாறன் ளுஉசயவெழn பல்கலைக் கழகத்தில் படித்து ஆடீயு பட்டம் வாங்கியுள்ளார்.

1991 ஆம் ஆண்டு பூமாலை என்ற ஒளிநாடாவை வெளியிட்ட கலாநிதிமாறன் 1993 இல் சன் தொலைக்காட்சியைத் தொடங்கினார்.

கருணாநிதி – மாறன் குடும்பத்துக்கு இடையிலான மோதல் திடீரென ஏற்பட்டதாகச் சொல்லமுடியாது. அதற்கான கால்கோள் 2005 ஆம் ஆண்டு நொவெம்பர் மாதத்தில் போடப்பட்டது. தயாளு தனது பெயரில் இருந்த 15 விழுக்காட்டுப் பங்கை சன் நிறுவனத்துக்கு விற்றுவிட்டார். மாறனுக்கு ஒப்ப தனது மகன் ஸ்டாலினுக்கு சன் தொலைக்காட்சி முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பது அவரது ஆதங்கம் என்று சொல்லப்படுகிறது. வரி நீங்கலாக கிடைத்த 10 கோடியில் 5 கோடியில் கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை என்ற பெயரில் ஒரு அறக்கட்டளை தொடக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையில் இருந்து மாதம் மாதம் வரும் 2 ½ இலட்ச ரூபாய் வட்டி ஏழை எளிய மக்களுக்கு உதவியாகக் கொடுக்கப்படுகிறது.

மார்ச் 01, 2007 ஸ்டாலின் பிறந்த நாள்.  அன்று தினகரன் முதல் பக்கத்தில் ஒரு குரங்கின் படத்தை “குரங்கின் பிறந்த நாள்” என்று போட்டுவிட்டு  உள்ளே ளுயn னுநைபழ  விலங்குக் காட்சியகத்தில் எப்படி ஒரு குரங்கு தன் 47 ஆவது பிறந்த நாளை கொண்டாடியது என விலாவாரியாக எழுதியிருந்தார்கள். திமுக கட்சிக்காரர்கள் ஸ்டாலினை தினகரன் கிண்டல் செய்வதாகவே நினைத்தார்கள்.

சென்னையில் கஸ்ப ராஜ் அடிகளும் கனிமொழியும் சேர்ந்து கோலாகலமாக நடத்திய சங்கமம் கலை நிகழ்ச்சியை சன் தொலைக்காட்சி இருட்டடிப்புச் செய்துவிட்டது.

கருணாநிதி மூன்றுமுறை வேண்டாம் என்று சொல்லியும் தயாநிதி மாறன் கருத்துக் கணிப்பை வெளியிட்டு விட்டார். கருணாநிதியின் சினத்தைக் கிளறியவற்றில் இந்தக் கருத்துக் கணிப்பு முக்கியமானது.

தமிழகத்தில் கோலாகலமாக நடைபெற்ற தமிழக முதல்வர் கருணாநிதியின் பொன் விழா நிகழ்ச்சிக்குப் பிரதமர் மன்மோகன் சிங்இ இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி உட்பட பல முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஆனால் விமான நிலையத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கையும் காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தியையும் வரவேற்ற தயாநிதி மாறன் சட்டமன்றத்திலும் சென்னை தீவுத்திடலிலும் நடைபெற்ற பொன் விழாவில் பங்கேற்கவில்லை. தயாநிதி மாறனின் உடன்பிறப்பு கலாநிதி மாறனும் வரவில்லை.

தயாநிதி மாறன். தமிழகத்தில் நடைபெறும் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் கருணாநிதியுடன் நெருக்கமாகக் காணப்படுவது வழக்கம். கலைஞரை வேறு யாரும் அண்டவிடாதபடி ஒரு பாதுகாப்பு வளையம் வைத்திருந்தார். அது திமுக உயர்மட்டத் தலைவர்களுக்கு எரிச்சலைக் கொடுத்தது.

சென்னைத் தீவுத் திடலில் கருணாநிதிக்கு நடந்த பாராட்டு விழாவை நேரடியாக ஒளிபரப்புவதற்கு சன் தொலைக்காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
பொன்விழாவில் கலந்து கொள்ள குடும்பத்தோடு சென்னை வந்த மு.க.அழகிரி கருணாநிதியைச் சந்தித்துப் பேசினார். அப்போது மத்திய அமைச்சர் பதவியிலிருந்து தயாநிதியை நீக்குமாறு அழகிரி வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

தென்மாவட்ட மாவட்டங்களில் அழகிரி ஒரு சிற்றரசர் போல் இருந்து வருகிறார். கட்சியிலோ அரசிலோ எந்தப் பொறுப்பிலும் இல்லாத அழகிரியின் பிறந்தநாள் கொண்டாட்டம் மதுரையைக் கலக்கியது. காவல்துறை மற்றும் அரச அதிகாரிகள் வரிசையில் நின்று வாழ்த்துத் தெரிவித்தார்கள்.

மதுரை எரிந்து கொண்டிருந்த போது தயாநிதி மாறன் தில்லியில் இருந்தார். செய்தியைக் கேட்டவுடன் உள்துறை செயலாளர் மாலதியைத் தொடர்பு கொண்டு திட்டி இருக்கிறார். பிரதமர், ஆட்சித்தலைவர், காங்கிரஸ் கட்சித் தலைவர்களிடம் முறையிடப் போவதாக மிரட்டி இருக்கிறார். இவை கட்சிக் கட்டுப்பாட்டு மீறல் என திமுக குற்றம் சாட்டியுள்ளது.

அதே சமயம் முரசொலி செல்வம் கருணாநிதிக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். ‘தயாநிதிமாறன் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் விளைவுகள் கசப்பாக அமையும். அப்படி நீங்கள் செய்யும் பட்சத்தில் மதுரை வன்முறை சம்பவங்களை வைத்து அவர்கள் தரப்பும் சிபிஅய்யிடம் எல்லாவற்றையும் விளக்க ஆரம்பித்தால், அது தி.மு.கவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்’ என்ற தொனியில் அழகிரியை மறைமுகமாக சிபு சோரனுடன் ஒப்பிட்டு எழுதியிருந்தார். அதோடு நிற்காமல் அமைச்சர் பொன்முடியை நேரில் சந்தித்து  அதே தொனியில் வாதிட்டிருக்கிறார்.

‘முரசொலி’யின் முக்கிய பொறுப்பை வகிப்பது செல்வம்தான்! தற்போது குடும்பத்துக்குள் வெடித்த சண்டையில் மாறன் குடும்பத்துப் பக்கம் முழுமையாக நிற்கிறார். கருநாடக “உதயா” தொலைக்காட்சியின் நிருவாகத்தைக் கவனிப்பதோடு  தயாநிதி – கலாநிதி உடன்பிறப்புக்களுக்கு முக்கிய ஆலோசகராகவும் விளங்குகிறார்.

ஆற்காட்டு வீரசாமி தன்னிடம் “என்ன நினைச்சுக்கிட்டிருக்கீங்க? நீங்கள்லாம் பண்றது என்ன என்பது எனக்குத் தெரியாதா? இதை நான் சும்மா விடமாட்டேன். டெல்லியில் எனக்குப் பவர் இருக்கு. இந்த விஷயத்தை ஜனாதிபதிக்குக் கொண்டு போவேன்… சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு விஷயத்தைச் சொல்லுவேன்… சன் டி.வி யில் தி.மு.க. ரவுடிகள் என்று குறிப்பிடுவதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை…”என்;று தயாநிதி சீறியதாகச் சொன்னாராம்

சென்ற திங்கட்கிழமை ( மே 14) கூடிய திமுக நிருவாகக் குழு தயாநிதி மாறனை அமைச்சர் பதவியில் இருந்து விலக்க முடிவுசெய்தது. கட்சியின் முடிவுக்கு காத்திருக்க விரும்பாத தயாநிதி மாறன் அமைச்சர் பதவியைத் துறந்துவிட்டார்.

கருணாநிதி குடும்பத்தில் தோன்றிய சண்டை காரணமாக மதுரையில் தீயில் வெந்து மடிந்த மூன்று தினகரன் ஊழியர்கள் மறக்கப்பட்டு விட்டார்கள். அந்தப்படுகொலைகளைச் செய்தவர்களை கருணாநிதி இன்றுவரை கண்டிக்கவில்லை. கொலைகாரர்களை உசுப்பி விட்ட அழகிரி கைது செய்யப்படவில்லை.

தினகரன் – அலுவலகம் தாக்கப்பட்டபோது ஊழலுக்குப் பெயர்போன தமிழ்நாடு காவல்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றிருக்கிறது. அது காவல்துறை அல்ல ஆட்சியாளர்கள் சொல்வதைச் செய்யும் ஏவல்துறை.

தமிழ்நாட்டில் கொலைக் குற்றம் சுமத்தப்பட்ட காஞ்சி சங்கராச்சாரி, அழகிரி, சரவணபவன் இராசகோபால் போன்றோர் பிணை வாங்கிக்கொண்டு வெளியில் ஆண்டுக்கணக்காக உலா வருகிறார்கள்.

இநதப் பின்னணியில் திமுக இல் குடும்ப ஆட்சி இல்லை என கருணாநிதி சொல்லியிருப்பது பெரிய நகைச்சுவையாகும். திமுக ஒரு சனநாயகக் கட்சி அல்ல. அதன் நிருவாகக் குழு, செயல்குழு, பொதுக்குழு என்பதெல்லாம் வெறும் பொம்மை அமைப்புக்கள். திமுக என்றால் திருக்குவளை முத்துவேலர் கருணாநிதி என்பதுதான் பொருள். பாட்டும் அவரே இசையும் அவரே.

தான் தொடர்ந்து 24 மணிநேரம் மகிழ்ச்சியாக இருந்தது கிடையாது என அண்மையில் கருணாநிதி குறிப்பிட்டார். உண்மைதான். ஒரு கருத்துக்கணிப்புக்கு உடன்பிறப்புக்கள் 3 பேரை எரியூட்டிக் கொலை செய்தால் மகிழ்ச்சி எங்கிருந்து வரும்?

மக்களுக்கு இன்றிருக்கும் கவலை எல்லாம் கலைஞர் கருணாநிதி உயிரோடு இருக்கும் போது குடும்பத்துக்குள் இவ்வளவு குத்துவெட்டென்றால் அவர் கண்ணை மூடிய பின் நிலைமை என்ன? நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. (உலகத்தமிழர் – மே 18,2007)

About editor 3123 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply